![]() |
|
AIDS - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: AIDS (/showthread.php?tid=4838) Pages:
1
2
|
- kuruvikal - 03-09-2005 Mathan Wrote:Mathan Wrote:இது தவிர சலூனில் முகச்சவரம் செய்யும் போது, கண்ணீரில் இருந்து மற்றும் முத்தமிடும்போது எயிட்ஸ் பரவும் வாய்ப்புகள் குறித்து சொல்லுங்களேன். எச் ஐ வி தொற்றுள்ளவருக்கு முகச்சவரம் செய்த சவரக்கத்தியில் சவரம் செய்யும் போது தற்செயலாக காயம் ஏற்பட்டு அதன் மூலம் வெளிவரும் குருதி or உடற்பாயம் மற்றவருக்கு சவரம் செய்யும் போது முன்னர் போல் காயம் ஏற்பட்டு அதன் மூலம் குருதிக் கலப்பு நிகழ்ந்தால் எச் ஐ வி தொற்றக் கூடிய வகையில் பரவ வாய்ப்புண்டு...அதற்காக ஆதாரப்பதிவுகள் உண்டு...! கண்ணீர்...உமிழ் நீரில் எச் ஐ வி இருக்க முடியும் என்றாலும் தொற்றக் கூடிய அளவில் இருக்க வாய்ப்பில்லை...! ஆனால் உதட்டோடு உதடு முத்தமிடும் போது காயம் ஏற்பட்டு குருதிக் கலப்பு நிகழ்ந்தால் எச் ஐ வி தொற்றும்...!
- Mathan - 03-09-2005 எச்சரிக்கையாகதான் இருக்க வேண்டும் :!: தகவலுக்கு நன்றி - hari - 03-09-2005 இதுக்குதான் இங்கிலிஸ் கிஸ் வேண்டாம் என்கிறது! - Mathan - 03-09-2005 ஹரி முடி வெட்டும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றும் அகு French Kiss என்று நினைத்தேன். - hari - 03-09-2005 பயப்படவேண்டாம் மதன் French Kissஇல் எயிட்ஸ் பரவாதாம், ஆராச்சியாளர்கள் சொல்லியிருக்கினம் ஆனால் கவனம் இங்கிலிஸ் கிஸ்! பொல்லாத சாமான் :!: - tamilini - 03-09-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tharma - 03-09-2005 மிக்க நன்றி குருவியாரே.என்னிடம் எனது மருமகள் (அக்காவின் மகள்)கேட்டாள் எனக்கு சரியான திடமான பதில் தெரியவில்லை அது தான் களத்தில் போட்டுவிட்டேன் - kuruvikal - 03-09-2005 hari Wrote:பயப்படவேண்டாம் மதன் French Kiss இல் எயிட்ஸ் பரவாதாம், ஆராச்சியாளர்கள் சொல்லியிருக்கினம் ஆனால் கவனம் இங்கிலிஸ் கிஸ்! பொல்லாத சாமான் :!: ஏன் கண்டதுக்கும் கிஸ் பண்ணப் போறீங்க... உங்க மனைவிக்கு குடுங்கோ....அன்பும் நெருக்கமும் கூடும்...ஆபத்தும் இல்லை....!என்ன உங்க மனைவிக்கு எச் ஐ வி இல்லை என்பதை திருமணத்துக்கு முன்னாடியே உறுதி செய்து கொள்ளுங்க....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kirubans - 03-09-2005 குருவிகளின் விளக்கம் முற்றிலும் சரியானது. அதாவது HIV வைரஸ் கிருமிகள் நுளம்பின் உமிழ்நீரில் பெருகமாட்டா. மேலதிக தகவல்கள். ------------------- HIV கிருமிகள் தொற்றும் முறைகள் 1. பாலியல் உறவு (ஓரினச் சேர்க்கை மிகவும் பாதகமானது) 2. தொற்று நீக்காத ஊசிகளின் பாவனை (ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களை ஊசி மூலம் உடம்பில் ஏற்றுதல்) 3. AIDS உள்ள பாலூட்டும் தாயார் மூலம் குழந்தைகளுக்கு 4. AIDS உள்ள கற்பிணிப் பெண்களிடமிருந்து வயிற்றில் வளரும் சிசுக்களுக்கு 5. குருதிமாற்றம் AIDS பரவும் முறைகளைப் பற்றிப் பல பிழையான கருத்துக்கள் நிலவுகின்றன. பின்வரும் முறைகள் மூலம் AIDS ஒருபோதும் பரவாது. 1. உமிழ் நீர், கண்ணீர், வியர்வை : உமிழ்நீரிலும், கண்ணீரிலும் மிகச் சிறிய அளவு எயிட்ஸ் கிருமிகள் இருந்தாலும் அவை மேலும் பலவற்றை உருவாக்கமாட்டா. வியர்வையில் எயிட்ஸ் கிருமிகள் அறவே இல்லை. 2. நுளம்பு போன்ற பூச்சிகள் : எயிட்ஸ் கிருமிகள் பூச்சிகளால் பரவமாட்டா 3. பொதுக் கழிப்பிடங்கள், கழிவறைகள் மூலம் எயிட்ஸ் தொற்றாது. 4. நீச்சல் குளங்களாலும் தொற்ற வாய்ப்பில்லை 5. ஒருவரை ஒருவர் தொடுதல், தழுவுதல், கைலாகு கொடுத்தல் மூலம் தொற்று ஏற்படாது. 6. எயிட்ஸ் உள்ளவருக்கு அருகில் இருப்பது, ஒரே உணவகத்தில் உண்பது என்பன கிருமிகளைப் பரவச் செய்யாது. - kirubans - 03-09-2005 நுளம்பும் எயிட்ஸும் ---------------------- நுளம்புகள் இரத்தம் குடித்து உயிர்வாழ்வதால் அவை எயிட்ஸை பரப்பக்கூடும் என்று தப்பான அபிப்பிராயம் உள்ளது. கீழ்வரும் விளக்கம் இந்தத் தப்பபிப்பிராயத்தை போக்க உதவும். நுளம்புகள் கடிக்கும்போது, அவை கடிபடுபவருக்குக் குருதியைச் செலுத்துவதில்லை. மாறாக குருதியை உறிஞ்சுகின்றன. எனவே நுளம்பின் குருதியோ, அது முன்பு கடித்தவர்களின் குருதியோ புதிதாகக் கடிபடுபவரிடம் செல்லாது. எனினும் நுளம்புகள் தமது உமிழ்நீரை ஒருவரைக் கடிக்கும்போது உட்செலுத்துகின்றன. இந்த உமிழ்நீரினால்தான் மஞ்சள் காய்ச்சல், மற்றும் மலேரியாவை உண்டுபண்ணும் கிருமிகள் (பக்ரீரியாக்கள்) தொற்றுகின்றன. ஆனால் எயிட்ஸ் கிருமிகள் நுளம்பின் உமிழ்நீரில் பெருக வாய்ப்பில்லாததாலும், அவை அதிக நேரம் உமிழ்நீரில் உயிர் வாழமுடியாததாலும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நுளம்புகள் மூலம் பரவ வாய்ப்பில்லை. மேலும் நுளம்புலள் ஒருவரிடமிருந்து இரதம் உறிஞ்சிய பின்னர் உடனடியாக இன்னுமொருவரைக் கடிக்கமாட்டா. பொதுவாக அவை உறிஞ்சிய இரத்தம் சமிபாடு அடையும்வரை வேறுவரைக் கடிப்பதில்லை. - Mathan - 04-01-2005 எயிட்ஸ் - உயிரியலாயுதமாக உருவாக்கப்பட்டதா ?? http://thatstamil.indiainfo.com/visai/feb05/nool.html - kuruvikal - 04-01-2005 மனித சனத்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த HIV ஐ உருவாக்கி இருக்கலாம்... எது எப்படியோ...அது வந்தது ஒரு வகையில் நன்மையும் கூட...என்ன கல்வி அறிவில்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்களும்....பெரியவர்கள் செய்யும் தவறுக்காக வயிற்றில் வளரும் குழந்தை முதல் பால் குடிக்கும் குழந்தை வரை அழிக்கப்படுவதும்தான் அபந்தம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
|