Yarl Forum
மகளீர் தினம் எதற்கு.. ?? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: மகளீர் தினம் எதற்கு.. ?? (/showthread.php?tid=4834)

Pages: 1 2 3 4 5 6


- shobana - 03-08-2005

யாராவது முழுமையான ஒரு பதில் தாங்களேன் ஏன் மகளீர் தினம் கொண்டாடப்படுகிறது என


- Mathan - 03-08-2005

[size=14][b]இது ஏற்கனவே களத்தில் பிரசுரிக்கப்பட்டதுதான். இருந்தாலும் அவசியம் கருதி மீண்டும் இங்கு இடுகின்றேன்.

நன்றி - லாவண்யா

<img src='http://www.nilacharal.com/stage/kathai/images/kat42a1.gif' border='0' alt='user posted image'>

பகுதி-1 http://www.nilacharal.com/stage/kathai/ima...ges/kat42a1.gif


- Mathan - 03-08-2005

<img src='http://www.nilacharal.com/stage/kathai/images/kat42a2.gif' border='0' alt='user posted image'>

பகுதி-2 http://www.nilacharal.com/stage/kathai/ima...ges/kat42a2.gif


- Mathan - 03-08-2005

<img src='http://www.nilacharal.com/stage/kathai/images/kat42a3.gif' border='0' alt='user posted image'>

பகுதி-3 http://www.nilacharal.com/stage/kathai/ima...ges/kat42a3.gif


- Mathan - 03-08-2005

<img src='http://www.nilacharal.com/stage/kathai/images/kat42a4.gif' border='0' alt='user posted image'>

பகுதி -4 http://www.nilacharal.com/stage/kathai/ima...ges/kat42a4.gif


- shiyam - 03-08-2005

[
shobana Wrote:யாராவது முழுமையான ஒரு பதில் தாங்களேன் ஏன் மகளீர் தினம் கொண்டாடப்படுகிறது என
[/quote]சர்வதேச மகளிர் தினம் மார்ச் மாதம் 8ம் திகதியில் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவுஸ்திரேலியாவைப் பொறுத்த மட்டில் முதல் முறையாக 1928ம் ஆண்டு மார்ச் 25ந் திகதியன்று ஆ.று.ஆ என்று அழைக்கப்பட்ட ஆடைடவையவெ றுழஅநn’ள ஆழஎநஅநவெ என்ற இயக்கத்தால் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. அப்பேரணியில் பெண்களுக்கும்ää ஆண்களைப் போல சமஊதியம்ää எட்டுமணி நேரவேலைää மற்றும் வேலைத்தள வசதிகள் என்ற கோரிக்கைகள் வற்புறுத்தப்பட்டன.

பெண்ணியம்ää பெண் விடுதலைää பெண்ணுரிமை என்ற கருத்தாக்கங்கள் குறித்துச் சற்று ஆழமாகப் பார்ப்பதற்கு இச்சந்தர்ப்பத்தை நாமும் பயன்படுத்த விரும்புகின்றோம். ஆண்களுக்கான சட்டபூர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கோடு எழுந்த 'முதலாளியப்" பெண்ணியம்ää குடும்பம் உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்த மார்க்கசியப் பெண்ணியம்;;ää தந்தைவழிச் சமூக மதிப்பீடுகளுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம்ää இவை அனைத்தும் ~பெண்| என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி உடற்கூற்றை அடித்தளமாக அதாவது டீழைடழபiஉயட குழரனெயவழைn ஐ அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளை ஒன்றெனக் கொண்டு அந்த உயிரிகளைப் ~பெண்| எனக் கண்டன. ஒட்டு மொத்தமான பெண்களின் விடுதலையை இந்தப் பெண்ணிய இயக்கங்கள் வலியுறுத்தின. பெண் என்றால் யார்? பெண் என்ற சொல்லின் பொருள் என்ன? எந்த ஒரு சொல்லுக்கும்ää பொருள் என்பது ஒரு தனித்துவமான பண்பைக் காட்டுவதல்ல. சொல் என்பது ஒரு தனித்துவமான பொருளுடன்ää தீர்மானமான உறவைக் கொண்டுள்ளது என்று சொல்வதைக் காட்டிலும்ää சிக்கலான பல பண்புகளின் வலைப் பின்னலாக அது விரிவு பெறுகின்றது என்பதே சரியாகும். இதன் அடிப்படையிற்தான் நாம் ‘பெண்’ என்ற சொல்லின் கருத்தை அணுக வேண்டும்.

பெண்ணியம் -குநஅinளைஅ- என்பது பெண்ணை ஒரு ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடாகும். குநுஆஐNஐளுஆ என்கின்ற ஆங்கிலச் சொல் கி.பி. 19ம் நூற்றாண்டில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. 18ம் நூற்றாண்டிலேயே ஆங்காங்கு பெண் விடுதலைச் சிந்தனை எழுச்சி பெற்றிருந்தது உண்மைதானென்றாலும்ää பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக வலுப்பெற்றது 19ம் நூற்றாண்டிற்தான். இந்தக் கோட்பாட்டின் தோற்றம் பற்றியும் இரண்டு வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

முதலாளித்துவத்திற்கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியர்களை எதிர்க்கும் நோக்கில்ää அதன் ஒரு பகுதியாகää ஆணாதிக்கத்துக்கு எதிராகவும் பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப் பட்டது. இதுதான் பெண்ணியத்தின் வேர் என்றும் அதிலிருந்துதான் பின்பு பெண்ணியம் ஒரு தனிக்கோடாட்பாடாக உருவாகியது என்று மார்க்கசியப் பெண்ணிய வாதிகள் கூறுகின்றார்கள்.

ஆனால் Pரசந குநஅinளைவள என்று சொல்லக் கூடிய தூய பெண்ணியவாதிகள் இக்கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை. இவர்கள் பெண்ணியமென்பது 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலைநாடுகளில்ää பகுத்தறிவின் அடிப்படையில் ஆண்களுக்குச் சமமான உரிமைகளை வேண்டிப் பெண்கள் எழுப்பிய குரலில் தோற்றம் பெற்றது என்று வாதிடுகின்றார்கள். தோற்றம் குறித்துக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் மீது ஏவி விடப்பட்டிருந்த அடக்குமுறைகளுக்கு எதிராகää தீர்க்கமாக எழுப்பிய குரலே பெண்ணியத்திற்கு எழுச்சியூட்டியது என்ற கருத்தில் வேறுபாடில்லை.

மேற்கத்திய நாடுகள் போலவே கிழக்கத்தைய நாடுகளிலும் ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் வேரூன்றி நிற்கின்றன. இச்சமுதாயக் கொடுமைகள் குறித்து அறிவதற்குத் தமிழ் இலக்கியங்கள் உதவுகின்றன. உதாரணத்திற்குப் புறநானூற்றில் ஒரு பாடலைப் பார்ப்போம். பூதபாண்டியனின் மனைவியான பெருங்கோப்பெண்டு பாடிய இந்தப்பாடலை இதுவரை காலமும் வந்த ஆய்வுகள் பலவும் கணவன் மீது மனைவி கொண்ட அன்பினைக் காட்டுவதாகவே சொல்லி வந்துள்ளன. ஆனால் இந்தப் பாடலை ஒரு பெண்ணியப் பார்வையில் பார்க்கும் போதுதான்ää அக்காலத்துச் சமுதாயக் கொடுமைகள் தெளிவாகப் புலனாகின்றன.
<span style='font-size:25pt;line-height:100%'>நன்றி தமிழ்நாதம் கொம்மில் சபேசன் எழுதியது</span>


- eelapirean - 03-08-2005

மகளீர் தினம் கொண்டாடாட்டி என்ன அன்னையர் தினம் வரும் தானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-08-2005

இணைப்புகளிற்கு நன்றிகள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 03-08-2005

படித்தமைக்கு நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 03-08-2005

:oops:ம் அப்படி என்றால் மார்ச் 8 ஐ மகளீர் தினம் என்று கு}றுவதைவிட பெண்கள் எழுச்சி நாள் என்று தானே கு}றவேண்டும். எழுச்சி செய்ததன் பலனை பெற்றுவிட்டார்களா..?? அதற்குள் அந்த எழுச்சிக்கு ஒரு கொண்டாட்டம். :?


- vasanthan - 03-08-2005

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அப்படிக்கூற முடியாது ஏன் தெரியுமா? ஒக்ரோபர் 10 தான் பெண்கள் எழுச்சி நாளாகா(மாலதியக்காவின் நினைவுநாள்)பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள் அது தெரியாத உங்களுக்கு?! :evil:


- Mathan - 03-08-2005

tamilini Wrote::oops:ம் அப்படி என்றால் மார்ச் 8 ஐ மகளீர் தினம் என்று கு}றுவதைவிட பெண்கள் எழுச்சி நாள் என்று தானே கு}றவேண்டும். எழுச்சி செய்ததன் பலனை பெற்றுவிட்டார்களா..?? அதற்குள் அந்த எழுச்சிக்கு ஒரு கொண்டாட்டம். :?

நீங்க முழுமையாக எனது இணைப்பை படிக்கவில்லை போல் இருக்கின்றது :roll:


- shobana - 03-08-2005

உங்கள் அனைவருடைய கருத்துக்களுக்கும் நன்றி இப்போது ஏன் மகளீர் தினம் கொண்டாடுகிறார்கள் என விளங்கிச்சு
நன்றிகள்


- tamilini - 03-08-2005

Mathan Wrote:
tamilini Wrote::oops:ம் அப்படி என்றால் மார்ச் 8 ஐ மகளீர் தினம் என்று கு}றுவதைவிட பெண்கள் எழுச்சி நாள் என்று தானே கு}றவேண்டும். எழுச்சி செய்ததன் பலனை பெற்றுவிட்டார்களா..?? அதற்குள் அந்த எழுச்சிக்கு ஒரு கொண்டாட்டம். :?

நீங்க முழுமையாக எனது இணைப்பை படிக்கவில்லை போல் இருக்கின்றது :roll:

முழுமையாக படிச்சன்.. மற்றவை பெண்களை மதிக்க வேணும் என்றதிற்காக மகளீர் தினம் கொண்டாடி பலன் இல்லை.. அதற்குரிய விழிப்புணர்வை பெண்ணியம் பேசுபவர்கள். ஏற்படுத்தினால் தான் உண்டு.. வருடத்தில் ஒரு நாள் இதை சொல்லுவினமாம்.. அது காலப்போக்கில சரியாகிடுமாம்.. அது நடைமுறைக்கு சரிவராது. பெண்கள் பற்றிய தவறான கருத்துக்களை.. அடிமை. அடக்குமுறையை.. விழிப்புணர்வுகள்.. செயல்கள் மு}லம் நிவர்த்தி செய்யலாம். வருடத்திற்க ஒருமுறை வாற மகளீர் எழுச்சி தினத்த்தால் செய்யமுடியாது என்கிறம்.. நாங்கள.. காந்தியை நினைவுகு}ருவதில் தவறில்லை.. பெண்கள் வழிபடபட வேண்டியவர்கள் அல்லர்.. நினைவுகு}ருறதிற்கும் ஒன்றும் இல்லை.. பெண்கள் எழுச்சி மகளீர் தினமானது போலத்தான் இதுவும்.. எழுச்சி என்னும் போது.. அதன் பொருள் வேறையாயும்.. தினம் என்னும் போது வேறையாயும் உணர்கிறேhம்


- KULAKADDAN - 03-08-2005

பெண்கள் தினம்
பெண்கள் தினம் என்று மார்ச் மாதம் 8ம் திகதியைப் பிரகடனப்படுத்திப் பெண்களுக்குப் பெருமையைச் சேர்த்திருக்கின்றார்கள் ஆண்கள். “அங்கவீனம் உற்றோர் நாள்” கறுப்பர் நாள், “முதியோர் நாள்”, “தாய் நாள்”, “தந்தை நாள்??” என்பது போல் பெண்களுக்காக ஒருநாள். எல்லா சிறுபான்மை பாதிக்கப்பட்டவர்களுக்கும் விசேடமாக ஒருநாள். தம் வலியை மறந்து அவர்கள் சந்தோஷித்திருக்க. முதியோர் இல்லத்தில் பிள்ளைகளால் விடப்பட்ட முதியோரிற்கும், கை விடப்பட்ட அப்பாவிற்கும், அம்மாவிற்கும், இன்னும் அங்கவீனம் உற்றவர்களுக்கும், பெண்களுக்கும் ஒரு விசேட நாள் இதற்காகப் பெண்ணாப் பிறந்த பலர் பெருமை கொள்கின்றார்கள். இந்த நாளில் மட்டும் பெண்களின் சாதனைகள் நினைவு கூரப்படுகின்றன. (மற்றைய நேரங்களில் மறந்து போனதால்)

ஆண்களுக்காக ஒரு விசேஷ நாள் ஏன் இல்லாமல் போனது? கணவனாக, அரசிலயல்வாதியாக, தொழில்அதிபராக எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் தோல்வியைத் தழுவிக்கொண்டிருக்கும் இந்த ஆண்களை குஷிப்படுத்த ஒரு விசேட நாள் ஏன் வைக்க நாம் மறந்தோம். அழகான இந்த உலகத்தை பாதை விலக்கி, ஆதாள பாளத்திற்குள் கொண்டு செல்லும் இந்த பெரும்பான்மை ஆண்களின் இயலாத்தனத்தை ஒருநாள் அவர்கள் நாளாகப் பிரகடணப்படுத்திக் கொண்டாடுவதன் மூலம் ஆண்கள் கொஞ்சம் மகிழ்ந்து போவார்கள் அல்லவா? ஆண்கள் பலவீனமானவர்கள் உடலால் அல்ல மனதால். திருமணமாகிக் குடும்பம் என்ற கட்டுக்குள் வந்தவுடன் தாயில் சார்ந்திருந்த ஆண் மகன் மனைவியில் சாரத் தொடங்குகின்றான். தான் உட்கொள்ளும் உணவைச் சமைப்பது கூட அவனால் முடியாமல் போகின்றது. அவன் உடைகள், உடமைகள் இருக்கும் இடம் அவனுக்குத் தெரிவதில்லை. குழந்தை வளர்ப்பு? ஊகூம் கேட்க வேண்டியதில்லை. மனைவியை இழந்து போகும் ஆண்களுக்கு ஒரு பெண் துணையின்றிக் குடும்பத்தைக் கட்டிக்காக்க முடிவதில்லை. அவனுக்கு உடனேயே மறுமணம் தேவைப்படுகின்றது. இதுவும் ஒருவகை அங்கவீனம் தானே? இப்படி இருக்கும் போது அவர்களை இந்த உலகம் கண்டு கொள்ளாமல் போகலாமா?

97:3 வீதத்தில் ஆண் பெண் உடல் வலிமையில் 3 சதவீதப் பெண்கள் மட்டுமே ஹோர்மோர்களின் தரத்தில் ஆண்களுக்கு இணையாக இருக்கின்றார்கள். இருந்தும் ஒப்பீட்டளவில் உடல் உழைப்பிலும், மனவலிமையிலும் பெண்கள் மிகவும் உச்சத்தில் இருக்கின்றார்கள். பெண்கள் உலகத்தில் தற்போது ஆண்களின் தேவை மிகவும் மருகி வருகின்றது. ஆண்களின் அசட்டைத்தனம், மிதமிகுந்த தலைக்கனம் கூடிய தன்நம்பிக்கை, அலட்சியம் போன்றவற்றால் பெண்களிடையே ஓரினச்சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது. இது பெண்களின் உலகத்தில் ஆண்களின் தேவையை முற்றாக ஒழித்து விடக் கூடும். இனப்பெருக்கம் வேண்டி ஆண்களின் விந்தினை மட்டுமே பெண்கள் செயற்கையாகப் பெற்றுக்கொள்ளும் நிலைக்கும் வரக்கூடும். “ஆண்கள் ஜாக்கிரதை”
ஆண் உலகை துணிவோடு எதிர்நோக்கும் பெண்களுக்கு இந்த “பெண்கள் தினம்” ஒரு பொருட்டல்ல. மதம், கலாச்சாரம், சமூகம் பொன்றவற்றால் தினம் தினம் நசுக்கப்படும் பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒருநாள் அல்ல பல நாட்கள் தேவை. அந்தக் குரல் கொடுப்பு அவர்களின் இந்த ஒடுக்கப்பட்ட வாழ்க்கை முறையில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வருமெனின். வெறுமனே பொழுது போக்கிற்காக ஒருநாளைப் பெண்களுக்காகப் பிரகடனப்படுத்தி விட்டு தினம் தினம் ஒடுக்குமுறைக்குள் ஆளாகி வரும் பெண்களைக் கண்டு கொள்ளாத அமைப்புக்களின் பெண்கள் தினக் கொண்டாட்டமும் அறிக்கையும் எதற்காக?

கறுப்பி


- tamilini - 03-08-2005

Quote:ஆண் உலகை துணிவோடு எதிர்நோக்கும் பெண்களுக்கு இந்த “பெண்கள் தினம்” ஒரு பொருட்டல்ல. மதம், கலாச்சாரம், சமூகம் பொன்றவற்றால் தினம் தினம் நசுக்கப்படும் பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒருநாள் அல்ல பல நாட்கள் தேவை. அந்தக் குரல் கொடுப்பு அவர்களின் இந்த ஒடுக்கப்பட்ட வாழ்க்கை முறையில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வருமெனின். வெறுமனே பொழுது போக்கிற்காக ஒருநாளைப் பெண்களுக்காகப் பிரகடனப்படுத்தி விட்டு தினம் தினம் ஒடுக்குமுறைக்குள் ஆளாகி வரும் பெண்களைக் கண்டு கொள்ளாத அமைப்புக்களின் பெண்கள் தினக் கொண்டாட்டமும் அறிக்கையும் எதற்காக?
Idea Idea Idea

அதை விட பெண்களிற்கு என தனியாக ஒரு நாள் கொண்டாடுவதன் மு}லம்.. பெண்ணை ஆணில் இருந்து வேறுபடுத்திக்காட்டுவதாய் போகிறது.. சமநிலை ஆணும் பெண்ணும் சமன் என்று.. சொல்லும் நிலை கு}ட இதனால் பாதிக்கப்படுறதே.. பெண் ஆணை விட எந்த விதத்திலுமு; குறைந்தவள் அல்ல என்றால்.. இந்த மகளீர் தினம் எதற்கு..?? :wink:


- sayanthan - 03-08-2005

Quote:காதல் என்பது ஆத்மாத்தமான ஒரு உண்ர்வு..
ம்..!


- KULAKADDAN - 03-08-2005

Tuesday, March 08, 2005
பெண்கள் தினம்...
வணக்கம்!
இன்று அனைத்துலகப் பெண்கள் தினம்.(இதற்கெல்லாம் வாழ்த்துச் சொல்லலாமா?)
வருடா வருடம் வந்து போகும் ஒரு நாள்.
பெண்களுக்கு இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு நாள் வேண்டும் என்று ஆண்கள் ‘ஜோக்’ அடிக்கக் காரணமான நாள்.
பெண் விடுதலையைப் பற்றி ஏதாவது கதைப்பது வழக்கம்.
பெண் விடுதலையென்பது ஆணிலிருந்து விடுபடல் அல்லது ஆண்மையிலிருந்து விடுபடல் என்பது போன்ற தோற்றப்பாடுடைய விவாதங்களிலிருந்து, பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பது வரை பலதரப்பட்ட தளங்களில் பலதரப்பட்ட கோணங்களில் விவாதங்கள் நடந்து விட்டன; நடந்து கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் கதைத்ததையே திருப்பித்திருப்பிக் கதைக்க வேண்டிய நிலை.
இன்னும் எவ்வளவு காலமானாலும் பெண் விடுதலையைப் பற்றிக் கதைப்பதற்கு நிறைய விசயங்கள் இருந்து கொண்டேயிருக்கும் என்பதில் ஐயமில்லை.


வலைப்பதியும் நபர்களில் குறிப்பிட்டளவு பெண்கள் இருந்தாலும் இத்தொகை போதாது என்றே நினைக்கிறேன். ஆனாலும் இவர்களிற் பலர் மிகக் காத்திரமான பதிவுகளைத் தருகிறார்கள். இன்னும் நிறையப் பெண்கள் எழுத வரவேண்டும் என்பது என் அவா. இனிவரும் காலங்களில் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

இந்நிலையில் விசயம் தெரிந்தவர்கள் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட பெண்களைப் பற்றிய பதிவுகளை எழுதலாம். மாலன் செய்துள்ளார்.

ஈழத்தில் (குறிப்பாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில்) மார்ச்-08 ஐ விட, ஒக்டோபர்-10 இல் வரும் ‘தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்’ இற்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்றைய தினமே பெண்களுக்கான சிறப்புத் தினமாகத் திகழ்கிறது.

பெண்ணானவள் அனைத்துத் தளங்களிலும் விடுதலை பெற்று, தான் தானாகவே வாழ ஆசித்து முடிக்கிறேன்.
வசந்தன்


- shanthy - 03-09-2005

http://www.yarl.com/articles.php?articleId=208

http://www.yarl.com/forum/viewtopic.php?t=950


- Vasampu - 03-09-2005

உந்தப் பிரைச்சினைகள் ஒண்டும் வராமலிருக்கத்தான் சித்திரை 1 ஐ மட்டும் கொண்டாடுறனான். அதானுங்க அப்பா(வி) ஆண்கள் தினம்.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->