![]() |
|
கம்பன் ஒரு வம்பன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: கம்பன் ஒரு வம்பன் (/showthread.php?tid=4662) |
- kirubans - 03-27-2005 kuruvikal Wrote:பிழையிருந்தாத் திருத்திறது...அதைவிட்டிட்டு...ஒரு நக்கல்...அதில உங்களுக்கே சரியா விடை தெரியல்ல...இதைத்தான் சொல்லுறது தானும் கொடுக்கான் கொடுக்கிறவனையும் விடான் நிலை என்று....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> விடயம் தெரியாவிட்டால், நாம் தெரிந்த மாதிரி எழுதுவதில்லை. அது போல சரியாகத் தெரியாவிட்டால் முந்திரிக் கொட்டை மாதிரி எதையும் அவிட்டும் விடுவதில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kirubans - 03-27-2005 இளங்கோ சங்கம் மருவிய காலத்தில் (கி.பி. 100 -600) இருந்தவர். அவர் சேரலாதன் என்ற மன்னனின் மகனாகப் பிறந்தார். இவருடைய சகோதரன் சேரன் செங்குட்டுவன் ஆவான். இளங்கோ, செங்குட்டுவன் மற்றும் புலவர் கூலவாணிகன் சாத்தனார் (மணிமேகலையைப் பாடியவர்) ஆகியோர் இயற்கையைத் தரிசிக்க மதுரைப் பக்கம் உள்ள பெரியாற்றுப் பக்கமாகச் சென்ற வேளை, அருகிலுள்ள கிராமத்தில் உலவிய ஒரு கதையைச் செவிமடுத்தனர். ஒற்றை முலையுடைய ஒரு பெண் வேங்கை மரமொன்றின் கீழ் 15 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் இருந்த இறந்த கதைதான் அது. ஊர் மக்கள் அப் பெண்ணை பத்தினித் தெய்வம் என்று வழிபட்டனர். கதை கேட்டு உருகிய செங்குட்டுவன், கூலவாணிகன் சாத்தனாரை மேலதிக தகவல்களைப் பெற்றுவருமாறு கேட்டான். கூலவாணிகனும் மேலதிக தகவல்களைப் பெற்றுவந்து அப்பெண்ணின் பெயர் கண்ணகி என்று சொல்லி அவளின் துன்பக் கதையை செங்குட்டுவனுக்கும், இளங்கோவுக்கும் கூறினான். மன்னன் சேரலாதனுக்கும் இது தெரிய வரவே, அவர் கண்ணகியின் கதையை வைத்து காவியம் படைக்கும்படி இளங்கோவைக் கேட்டார். இப்படித்தான் சிலப்பதிகாரம் என்ற பெரும் புராணம் உருவானது. - kirubans - 03-27-2005 ஆக, இளங்கோ சிலப்பதிகாரம் எழுதியதோடு வேறு ஏதாவது எழுதியும் இருக்கலாம். ஆனால் அவர் அம்பிகாபதி, அமராவதி கதையை எழுதவில்லை (அந்தக் காலகட்டத்திற்கு முன்பே இறந்து போனார்). அம்பிகாபதி, அமராவதி கதை என்ன புராணத்தில் (ஒரு தலைப்பு இருக்க வேண்டுமே) வருகிறது, யார் எழுதியது என்பது சத்தியமாக எனக்குத் தெரியாது. பழந்தமிழ் இலக்கிய விற்பன்னர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். பரமார்த்த குருவிகளுக்கு ஞாபகம் வரவில்லை என்பதைவிட தெரியாது என்பதே உண்மை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 03-27-2005 Quote:பரமார்த்த குருவிகளுக்கு ஞாபகம் வரவில்லை என்பதைவிட தெரியாது என்பதே உண்மை.யாரது..?? களக்குருவியாரோ..?? :mrgreen: அம்பிகாபதி அமராவதி கதை தெரிந்தவர்கள் சொஞ்சம் சொல்லுங்களேன். நமக்கு தெரியாது. :? - Siriththiran - 03-27-2005 கம்பனின் மகன்தான் அம்பிகாவதி. (சோழ?) மன்னனின் மகள் அமராவதி. இருவரும் காதலர்கள். நூறு செய்யுள் தொடர்ந்து பாடினால் தனது மகளை அம்பிகாவதிக்கு திருமணம் செய்ய சம்மதிப்பதாக மன்னன் அறிவித்தார். அம்பிகாவதி பாட அமராவதி ஒவ்வொரு பூ ஒரு செய்யுளுக்கு எடுத்து வைப்பதாகவும், அதில் முதலில் பாடிய காப்புக்கும் ஒரு பூவை தவறுதலாக <i>அமராவதி</i> போட்டதால் <i>அம்பிகாவதி</i> 99 தனது செய்யுளை நிறுத்தி விட்டதாக வரலாற்றுக் கதைகள் உண்டு. <span style='font-size:16pt;line-height:100%'>திருத்தப்பட்டுள்ளது- இராவணன்</span> - kirubans - 03-27-2005 கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் அம்பிகாபதி என்பவரால் இயற்றப்பட்ட அம்பிகாபதி கோவை அம்பிகாபதி, அமராவதி கதையை சொல்லுவதாக இருக்கலாம். http://www.tamilar.org/tamil-literaturechrono.asp அம்பிகாபதி எனும் படம் தியாகராஜ பாகவதர் நடித்து 1937இல் வெளிவந்து சக்கை போட்டதாம். அதனால் அம்பிகாபதி கதை பிரபல்யம் அடந்திருக்கலாம். கதையின்படி அம்பிகாபதி கம்பரின் மகன், அமராவதி இளவரசி. இருவருக்கும் காதல். அரசனுக்கு விருப்பமில்லை. கட்டிக்கொடுப்பதற்கு நிபந்தனை வைக்கிறார். குறிப்பிட்ட தொகை (100?) பாடல்களை தொடர்ந்து இயற்றிப்பாடுவது என்பதுதான் நிபந்தனை. அமராவதி ஒவ்வொரு பாடல் முடிவிலும் ஒவ்வொரு பூக்களாக எறிகிறாள். இதுதான் பாடல்களை எண்ணுவதற்குப் பாவிக்கப்பட்ட முறை. அமராவதி பிழையாக ஒன்றைக் கூட எறிந்ததால், அம்பிகாபதி ஒரு பாடல் குறையப் பாடி முடிக்க வேண்டி வந்து விட்டது. மரண தண்டனை கிடைக்கிறது. காதல் காவியமாகிவிட்டது. படத்தைப் பார்க்கவும் இல்லை, புராணத்தைப் படிக்கவுமில்ல்லை, எல்லாம் கேள்விப்பட்ட சங்கதிதான். - kirubans - 03-27-2005 Siriththiran Wrote:கம்பனின் மகன்தான் அம்பிகாவதி. (சோழ?) மன்னனின் மகள் அமராவதி. இருவரும் காதலர்கள். நூறு செய்யுள் தொடர்ந்து பாடினால் தனது மகளை அம்பிகாவதிக்கு திருமணம் செய்ய சம்மதிப்பதாக மன்னன் அறிவித்தார். அம்பிகாவதி பாட அமராவதி ஒவ்வொரு பூ ஒரு செய்யுளுக்கு எடுத்து வைப்பதாகவும், அதில் முதலில் பாடிய காப்புக்கும் ஒரு பூவை தவறுதலாக அம்பிகாவதி போட்டதால் அமராவதி 99 தனது செய்யுளை நிறுத்தி விட்டதாக வரலாற்றுக் கதைகள் உண்டு. சரியாகச் சொல்லியுள்ளார் - Siriththiran - 03-27-2005 . கம்பனும் மகன் அம்பிகாவதியும் மன்னனுடன் விருந்தில் இருக்கும் போது மன்னனின் மகள் பரிமாற அங்கு வருகிறார். அமராவதி நடந்து வருவதை பார்த்த அம்பிகாவதி ""இட்ட அடி நோவ எடுத்த அடி கொப்பளிக்க.."" எனப் படத்தொடங்கிவிட மன்னன் கோபம் கொண்டு கம்பனை பார்க்க கம்பன் '' கொட்டிக் கிழங்கோ கிழங்கு எனக் கூவினாள்..."" என அம்பிகாவதியின் பாடலுக்கு தெருவில் கொடிக்கிழங்கு விற்கும் பெண்ணுக்கு அந்த பாடலை மாற்றிப் பாடியதாகவும் மற்றொரு கதை உண்டு. கிருபன் சொன்னதுபோல இது அம்பிகாவதி திரைப்படத்தை சார்ந்து நாம் அறிந்து கொண்டவைதான் மெய்யான வரலாற்று ஆய்வாக கருத வேண்டாம் - Vasampu - 03-27-2005 பின்பு சிவாஜி - பானுமதி இணைந்து நடித்த அம்பிகாவதி படமும் வந்து சக்கை போடு போட்டது. இப்படத்தில் தான் சௌந்தரராஜன் சிந்தனை செய் மனமே எனத் தொடங்கும் பாடலை மூச்சு விடாமல் பாடியிருந்தார். சோழமன்னன் அம்பிகாபதியை வெறும் 100 பாடல்கள் பாடும்படி கேட்கவில்லை. சிற்றின்பம் கலக்காமல் 100 பாடல்கள் பாடும் படியே கேட்டான். அதற்கமைய அம்பிகாபதி பாடுவதாக அமைந்ததே மேற்கூறிய பாடல். :roll: :roll: :roll: :roll: - tamilini - 03-27-2005 என்ன இது ஒரு பாடலை கூடப்பாடியிருக்கலாமே.. :mrgreen: - Vasampu - 03-27-2005 kirubans Wrote:[quote=Siriththiran]கம்பனின் மகன்தான் அம்பிகாவதி. (சோழ?) மன்னனின் மகள் அமராவதி. இருவரும் காதலர்கள். நூறு செய்யுள் தொடர்ந்து பாடினால் தனது மகளை அம்பிகாவதிக்கு திருமணம் செய்ய சம்மதிப்பதாக மன்னன் அறிவித்தார். அம்பிகாவதி பாட அமராவதி ஒவ்வொரு பூ ஒரு செய்யுளுக்கு எடுத்து வைப்பதாகவும், அதில் முதலில் பாடிய காப்புக்கும் ஒரு பூவை தவறுதலாக அம்பிகாவதி எது சரி நன்றாக வாசித்துப் பாரும் கிருபன்ஸ் - Vasampu - 03-27-2005 tamilini Wrote:என்ன இது ஒரு பாடலை கூடப்பாடியிருக்கலாமே.. :mrgreen: எல்லாம் பெண்ணின் அவசர புத்தியால் வந்த வினை. :roll: :roll:
- tamilini - 03-27-2005 சரி பாடிய பாடல்கள் எழுத்து வடிவில இல்லையா எண்ணியிருக்கலாமே.. அதைவிட 99 பாடல் பாடியவருக்கு ஒரு பாடல் மேலதிகமாய் பாடமுடியலையா..??? :evil: :x - Vasampu - 03-27-2005 போட்டிக்கு பாடுபவர் எண்ணிக் கொண்டிருக்க முடியாது. நடுவர்கள்தான் இதைச் செய்ய முடியும். அமராவதி விநாயகரைத் தொழும் காப்பையும் ஒரு பாடலாகக் கருதி 100 பாடல்கள் பாடிவிட்டீர்களென அம்பிகாவதியிடம் கூற அம்பிகாவதி உடனே அமராவதியை வர்ணித்து ஒரு சிற்றின்பப் பாடல் பாடி விடுகின்றான். பிறகு என்ன செய்ய முடியும்????? - tamilini - 03-27-2005 ஓ அப்படியா.. அப்ப துதியோட கணக்குச்சரி தானே.. பிறகென்ன.. அதுக்கென்ன அவசரம் உடனை அவாவை வர்ணித்துப்பாட..?? :mrgreen: - Vasampu - 03-27-2005 தான் வெற்றி பெற்றதை தெரிவித்த தன் காதலிக்கு பரிசாக அவளை வர்ணித்து பாடியிருக்கலாம் தானே??? மரணத்தை எதிர் நோக்க வேண்டியவனுக்கு மணமாலை பரிசு எனத் தெரிந்தால் எவ்வளவு உற்சாகத்திலிருப்பானென காதலிக்கும் உங்களுக்கு கூட புரியாதது விந்தையே.
- kirubans - 03-27-2005 Vasampu Wrote:kirubans Wrote:[quote=Siriththiran]கம்பனின் மகன்தான் அம்பிகாவதி. (சோழ?) மன்னனின் மகள் அமராவதி. இருவரும் காதலர்கள். நூறு செய்யுள் தொடர்ந்து பாடினால் தனது மகளை அம்பிகாவதிக்கு திருமணம் செய்ய சம்மதிப்பதாக மன்னன் அறிவித்தார். அம்பிகாவதி பாட அமராவதி ஒவ்வொரு பூ ஒரு செய்யுளுக்கு எடுத்து வைப்பதாகவும், அதில் முதலில் பாடிய காப்புக்கும் ஒரு பூவை தவறுதலாக அம்பிகாவதி நான் எண்ணிக்கையைத்தான் பார்த்தேன். அதில்தான் சந்தேகம் இருந்தது. - kirubans - 03-28-2005 Vasampu Wrote:tamilini Wrote:என்ன இது ஒரு பாடலை கூடப்பாடியிருக்கலாமே.. :mrgreen: விநாயகர் காப்பைச் சேர்க்கக் கூடாது என்று எல்லா ஆண்களுக்கும் தெரியுமாக்கும். விதிகளை அறிந்து கொள்ள அந்த அந்தத் துறையில் தேர்ச்சி பெறவேண்டும். இது ஆணுக்கும் பொருந்தும், பெண்ணுக்கும் பொருந்தும். - Vasampu - 03-28-2005 ஆம் அமராவதி இளவரசி என்ற முறையில் சகலவற்றிலும் பாண்டித்தியம் பெற்றிருப்பார். அவர் தவறால் தானே அம்பிகாவதி மரணத்தை தழுவினான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll:
- kirubans - 03-28-2005 Vasampu Wrote:ஆம் அமராவதி இளவரசி என்ற முறையில் சகலவற்றிலும் பாண்டித்தியம் பெற்றிருப்பார். அவர் தவறால் தானே அம்பிகாவதி மரணத்தை தழுவினான். அமராவதியின் தவறால்தான் அம்பிகாபதி மரணித்தான், ஆனாலும், இளவரசி என்றால் எல்லாவற்றிலும் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டியதில்லை. எவ்வளவுதான் எண்ணெயைப் பிரட்டி மண்ணில் உருண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் (ஆணாயினும், பெண்ணாயினும் சரி) |