![]() |
|
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி? (/showthread.php?tid=4604) |
- kuruvikal - 04-01-2005 tamilini Wrote:அடப்பாவிகளா..எத்தனை பேர் கிளம்பியிருக்கிறியள். ஏன் குருவிகளை நாங்க என்ன பிடிச்ச வைச்சிருக்கிறம். :evil: :twisted: அதுதானே... குருவிகள யாரும் பிடிச்சு வைச்சிருக்கத்தான் முடியுமா... அதுகள் பறந்திடாதுகள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 04-01-2005 tamilini Wrote:அண்ணை அது தானே சொன்னன் வயோதிப மடத்தில் கடமை உணர்வு இருக்கும். உரிமையுடன் அன்பு பாசம் அரவணைப்புக்கிடைக்குமா..?? வயோதிப மடம் போய்பாருங்கள் எவ்வளவு மன அழுத்தத்தின் மத்தியல் இருக்கிறார்கள் என்பது புரியும். :? எங்கட கொள்கை இது தான். யாரும் எமக்கு சேவை செய்கிற நிலை வந்தால் உயிரை விடுறது தான். வாழ்ந்து தினம் தினம் உறவுகளை கஸ்டப்படுத்திறதை விட. செத்து என்றோ ஒரு நாள் நினைவில் வருவது மேல். :wink: அப்படியெல்லாம் சொல்லாதேங்க... மற்றவர்களுக்கு சேவை செய்ய வேணும் தங்கள் அன்பைக் கொடுக்க வேணும் என்று வயோதிப மடங்களை நடத்திறவங்களும் இருக்காங்க...அன்னை திரேசா போல.... என்றாலும் உங்களைக் கண்போல் கடைசி வரை வைத்துக் காப்பாற்றும் துணை இருப்பது நல்லதுதான்...அதைத் தேடிக்க வேண்டும் என்ற உங்க வாதம் சரியாத்தான் தோன்றும் சாதாரண மனிதர்களுக்கு....! ஆனால் ஒரு உயரிய இலட்சியத்திற்காய் பயணிப்பவனுக்கு....இது சரியாகுமா...??! உதாரணத்துக்கு...அன்னை திரேசாவ எடுத்துக்கோங்களேன்...! :wink:
- tamilini - 04-01-2005 அன்னை திரிசோ சேவைக்கு வெளிக்கிட்டா சரி. அதற்காய் எல்லாரும் துணைவேண்டாம் என்று வெளிக்கிட்டால் சேவையைப்பெறுவது யார். அப்படி சேவைக்கு என வெளிக்கிட்டவர்களை எந்த இதுவும் பிரிக்க கூடாது என்பதும் சரி தான் துணை அது இது என்று அவர்களிற்கு இடையு}று தேவையற்றது தான். அவரவர் புத்தியில் எட்டவேணும். யார் வாழ்க்கை எப்படிப்போகும் என்று யாருக்கு தெரியும். :wink: - kuruvikal - 04-01-2005 உலகில் இத்தனை கோடிக்குள் ஒரு திரேசாதான் வந்தாங்க...அப்படி உயரிய இலட்சியத்தை வரைபவங்களுக்கு துணை என்பது அவங்க வாழும் சமூகமாத்தானே இருக்கும்...! ஆக ஆண் - பெண் துணை தேடல் என்பது சாதாரண மனிதர்களுக்கு அவர்களுக்கான வாழ்வுக்கால ஆதாரங்துக்காகவும் அன்புப் பரிமாற்றத்துக்கும் மேலாக இனவிருத்தியின் தேவை கருதியதும் என்பதையும் சேர்த்துச் சொல்லுங்க...! :wink:
- tamilini - 04-01-2005 இருக்கலாம். நடைமுறைவாழ்விற்கு இனவிருத்தியும் அவசியம் தானே. அதைவிட தன்நம்பிக்கை உள்ளவங்க. தனியாய் வாழலாம். ஏதோ ஒரு தேவையை எதிர்பார்த்து துணை தேடினம் என்றால். அந்த தேவை தமக்கு அவசியம் இல்லை என்றால். தனியாய் வாழலாம் வாழ முடியும் அப்படித்தான் நினைக்கிறம்.
- kuruvikal - 04-01-2005 பெரும்பாலும் அன்புத் தேவைக்காகத்தான் பலரும் துணை தேடுகிறார்கள்.. அந்த வகையில் கணவன் - மனைவி ஆனால் தான் அது கிடைக்கும் என்பது எப்போதும் சரியாக அமைவதில்லையே... கண்வன் - மனைவிக்குள் அமைதியின்மை வந்து உள்ள அன்பும் பரிமாறப்படாதபோது... அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அன்பைக் கொடுக்க ஒரு இடமாக ஏன் ஒரு சமூக சேவை நிலையம் இல்லை....??! இப்படியான பலர் "சிங்கிள் மதர், பாதர்" என்று இங்கு மேற்கிலையே இருக்கிறார்கள்... இப்போ சுனாமியால் பலர் தங்கள் துணையை இழந்துள்ளார்கள்...இவர்களுக்கான அன்பை ஆதரவை...யார் அளிப்பது..???! அவர்களாகத்தான் தேடிக்க வேண்டும் என்றால்...அதற்கு மேலே சொன்ன துணை தேடல் வழிகள் பொருந்துமா...???! தமிழர்களுக்குள் எம்மைப் போல் இளைஞர்களும் யுவதிகளும் மட்டும் அடங்கவில்லை...பல தரப்பினரும் அடங்குகின்றனர் என்பதை கருத்தில் கொண்டு...இந்த வாக்கெடுப்பை கருத்தை கொண்டு சென்றால் சிறப்பாக இருக்கும்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 04-01-2005 Kalai Wrote:சாதகம் பார்த்து திருமணம் செய்யிற காலம் எல்லாம் மலையேறிப்போச்சு. காதலித்துச் சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல் என்பது நல்ல திட்டம் தான் ஆனால் இது நடைமுறையில் சாத்தியப் படாத மற்றும் எங்கள் கலாச்சாரத்துக்கு ஒத்துவராத விடயம். அதால சிறந்த வழி காதலித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல். சாதகம் பார்த்துதான் இப்போதும் பெரும்பாலான திருமணங்கள் ஈழ தமிழரிடையே நடக்கின்றன. ஆணா பெண்னோ ஒருவர் சாதகம் பார்க்காமல் திருமணம் செய்ய விரும்பினாலும் மறுதரப்பு அப்படி செய்ய ஒத்துழைக்க வேண்டுமே. காதலித்து திருமணம் செய்து வாழ்தல் நல்ல வழிதான் ஆனால் காதலிப்பத்தற்கு ஒருவரை தெரிந்திருக்க வேண்டும் புரிந்துணர்வு வேண்டும் இதற்கு ஆண் பெண் பேசி பழக சமுகம் பெரும்பாலும் அனுமதிப்பதில்லையே? - Mathan - 04-01-2005 [quote=AJeevan] <b>இதெல்லா வழிகளிலும் நடந்தே சரிவராததுகளும் இருக்கு சரி வந்ததும் இருக்கு எல்லாம் விதி?</b> அப்படியும் நடக்கின்றதுதான் ஆனால் அதற்காக விதியே என்று இருந்து விட முடியுமா? ஒருவர் தலைகவசம் (கெல்மட்) அணித்து மோட்டார் சைக்கிள் ஓட்டி செல்லும் போது விபத்தில் தலையில் காயமடைந்து இறந்து விடுகின்றார். அந்த சம்பவத்தை வைத்து தலை கவசம் அணிந்தால் என்ன அணியாவிட்டால் என்ன என்ற முடிவிற்கு வர முடியுமா? நம்மால் முயன்ற வரை கவசம் அணிந்து விபத்தின் பாதிப்புகளை தவிர்த்து கொள்ளலாம் அல்லவா? அது போல் திருமணம் செய்ய முன்பு வாழ்க்கை துணை பொருத்தமானவரா என்று அறிந்து கொள்வது நல்லது. சாதகம் பார்ப்பதில் இதை எப்படி அறிந்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை. - Mathan - 04-01-2005 tamilini Wrote:Quote:காதலித்து சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல்இதென்ன மதன் புதிசாய் இருக்கு..?? :wink: உண்மையிலே தெரியாதா தமிழினி? பலர் அதற்கு வாக்களித்திருக்கின்றார்கள். மேற்குலகில் இது நடப்பது தானே? Living Together Before Marriage என்று சொல்வார்களே? - Mathan - 04-01-2005 kuruvikal Wrote:வாழ்க்கைக்கு துணை...அதாவது நீங்க கருதிற... பெடியனுக்கு பெட்டை... பெட்டைக்கு பெடி... அவசியம் தானா... ஏன் ஒரு மனிதன் தனித்து இந்த உலகி வளமாக தொந்தரவுகள் இல்லாம வாழுறது கஸ்டமா...இல்ல உங்களுக்குப் பிடிக்கவில்லையா... சின்னனில இருந்து என்ன துணையாவா வந்தம் பூமிக்கு வாழ...தனியத்தனியத் தானே வந்தம்...! இடை நடுவில... ஏன் இந்தத் துணை என்று சுமையை ஏத்துறீங்க... அது அவசியம் தானா சொல்லுங்க...! :wink: <!--emo& தனித்தும் வாழலாம் அதற்கு நல்ல மன உறுதி வேண்டும். அத்துடன் தனித்து வாழ்வதில் நமது சமுதாயத்தில் பல சிரமங்கள் இருக்கின்றன, சேர்ந்து வாழ்வதில் சுமையேதும் இல்லை என்பது என் கருத்து. - Kalai - 04-01-2005 Quote:சாதகம் பார்த்துதான் இப்போதும் பெரும்பாலான திருமணங்கள் ஈழ தமிழரிடையே நடக்கின்றன. ஆணா பெண்னோ ஒருவர் சாதகம் பார்க்காமல் திருமணம் செய்ய விரும்பினாலும் மறுதரப்பு அப்படி செய்ய ஒத்துழைக்க வேண்டுமே. சிலர் இப்பவும் பழமைவாதம் பேசிக்கொண்டிருந்தாலும் காலப்போக்கில அவர்கள் எல்லாம் மாறிவிடுவார்கள். இப்போது ஆண்பெண் கதைத்து பழகிறத தப்பாய் யாரும் எடுப்பதில்லை. ஆனால் காதல் என்று வரும்போதுதான் பிரச்சினையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள. இன்னும் ஒரு தலைமுறைக்குப் பிறகு இதெல்லாம் மாறிவிடும் என்று நம்புகிறேன். எப்ப இந்த மூடநம்பிக்கைகளும் சாதியமும் இல்லாமற் போகுதோ அப்பத்தான் காதற் திருமணத்திற்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கும். - kuruvikal - 04-01-2005 இப்போதென்றல்ல...இப்ப பலகாலத்துக்கு முன்னாள் இருந்தே ஆண் - பெண் கதைக்கிறத யாரும் தப்பாப் பாக்கிறதில்ல...இருந்தாலும் முன்னர் அப்படிப் பார்க்காதவர்கள் திருமணத்தின் பின்னர் தன் கணவனோ மனைவியோ மற்றவர்களுடன் கதைப்பதைப் பலர் சந்தேகத்தோடு பார்ப்பது நடைமுறையில் இருக்கு....அது மேற்கில் இருந்து கிழக்கு வரை இருக்கு... அதையும் போக்கினால் நல்லது...கதைக்கிறதால கற்புப் போயிடும் என்ற சனங்கள் இருக்கத்தான் செய்யுதுகள்..கற்பென்பது தனி நபர் ஒழுக்கம்...ஒழுக்கம் என்பது உயிரினும் மேலானது...அதுவும் ஆறறிவு படைத்த மனிதனை மனிதனாக காட்ட அவசியமும் கூட...! அது சாதாரணமாக ஆணும் பெண்ணும் கதைப்பதால் பறிபோயிடாது...அவரவர் தங்கள் தங்கள் ஒழுக்கதுக்கான எல்லைகளை மீறாத வரை...! சிலர் அப்படி எல்லை மீற எண்ணுவோரையும் மீறாமல் வழி நடத்தக் கூடிய பக்குவத்தில் இருப்பார்கள்...சிலர் அதைக் கடந்து இருப்பார்கள்...! எனவே தனி நபர்தான் தீர்மானிக்க வேண்டும்...தனது எல்லை எதுவரை இருக்க வேண்டும் என்பதை...! இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்த்தால் இருவரும் மனதால் தம்மைத் தாமே புரிந்து கொண்டு காதலித்து... திருமணம் ஆகிய பந்தததுள் வந்து இல்லறத்தை நடத்துவதே பாதுகாப்பானதும் சிறந்ததும் ஆகும்....!
- kuruvikal - 04-01-2005 இப்போதென்றல்ல...இப்ப பலகாலத்துக்கு முன்னாள் இருந்தே ஆண் - பெண் கதைக்கிறத யாரும் தப்பாப் பாக்கிறதில்ல...இருந்தாலும் முன்னர் அப்படிப் பார்க்காதவர்கள் திருமணத்தின் பின்னர் தன் கணவனோ மனைவியோ மற்றவர்களுடன் கதைப்பதைப் பலர் சந்தேகத்தோடு பார்ப்பது நடைமுறையில் இருக்கு....அது மேற்கில் இருந்து கிழக்கு வரை இருக்கு... அதையும் போக்கினால் நல்லது...கதைக்கிறதால கற்புப் போயிடும் என்ற சனங்கள் இருக்கத்தான் செய்யுதுகள்..கற்பென்பது தனி நபர் ஒழுக்கம்...ஒழுக்கம் என்பது உயிரினும் மேலானது...அதுவும் ஆறறிவு படைத்த மனிதனை மனிதனாக காட்ட அவசியமும் கூட...! அது சாதாரணமாக ஆணும் பெண்ணும் கதைப்பதால் பறிபோயிடாது...அவரவர் தங்கள் தங்கள் ஒழுக்கதுக்கான எல்லைகளை மீறாத வரை...! சிலர் அப்படி எல்லை மீற எண்ணுவோரையும் மீறாமல் வழி நடத்தக் கூடிய பக்குவத்தில் இருப்பார்கள்...சிலர் அதைக் கடந்து இருப்பார்கள்...! எனவே தனி நபர்தான் தீர்மானிக்க வேண்டும்...தனது எல்லை எதுவரை இருக்க வேண்டும் என்பதை...! இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்த்தால் இருவரும் மனதால் தம்மைத் தாமும் ஒருவரை ஒருவரும் புரிந்து கொண்டு காதலித்து... திருமணம் ஆகிய பந்தததுள் வந்து இல்லறத்தை நடத்துவதே பாதுகாப்பானதும் நீடித்து நிலைக்ககூடிய அன்பைப் பெற சிறந்ததும் ஆகும்....!
- Mathan - 04-01-2005 Kalai Wrote:எப்ப இந்த மூடநம்பிக்கைகளும் சாதியமும் இல்லாமற் போகுதோ அப்பத்தான் காதற் திருமணத்திற்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கும். சாதகம் போன்ற மூடநம்பிக்கைகள் ஒழிந்தாலே போதும். சாதீயம் இலைமறைகாயாக தான் இருக்கின்றது. ஈழத்தமிழைடையே இந்தியா அளவுக்கு வர்க்க பேதம் ஏதும் இல்லை. - Mathan - 04-01-2005 kuruvikal Wrote:இப்போதென்றல்ல...இப்ப பலகாலத்துக்கு முன்னாள் இருந்தே ஆண் - பெண் கதைக்கிறத யாரும் தப்பாப் பாக்கிறதில்ல...இருந்தாலும் முன்னர் அப்படிப் பார்க்காதவர்கள் திருமணத்தின் பின்னர் தன் கணவனோ மனைவியோ மற்றவர்களுடன் கதைப்பதைப் பலர் சந்தேகத்தோடு பார்ப்பது நடைமுறையில் இருக்கு என்னை கேட்டால் ஆண் பெண் சாதாரணமாக பேசி பழகும் அளவிற்கு நமது சமூகம் பக்குவமடையவில்லை என்றே சொல்வேன். பெற்றோர் வற்புறுத்தலால் சாதகம் பார்த்து மணம் புரியும் இளையோர்கள் கூட திருமணத்தின் பின் சந்தேகப்படுவதாக தெரியவில்லை, பழமைவாத கருத்துக்களில் ஊறி இருப்போரும் பொருந்தா திருமணம் செய்வோரும்தான் பெரும்பாலும் சந்தேகப்படுகின்றார்கள். - Mathan - 04-01-2005 shiyam Wrote:ஓஅப்ப அவைவேற்றுகிரக வாசிகளா என்ன கணறாவியோ நினைத்தாலே அருவருப்பா இருக்கு நான் வேலை செய்யிற இடத்திலை ஒருத்தர் என்னை காதலித்து தர்ம அடி வாங்கினவர்.அப்பமற்றவர்கள் பிடித்துவிட்டார்கள் பின்னர் உனக்கு விருப்பமில்லாட்டி நாகரீகமாக மறுத்திருக்கலாமே ஏன்காட்டான்மாதிரி அடித்தனி என்றனர் நான் சொன்னேன் எங்கள் சமுகத்தில் உப்பிடி கேட்பதே அனாகரீகம் அதில் பிறகென்ன நாகரீகம் வேண்டி கிடக்கு ஊராய் இருந்தால் நடக்கிறதே வேறை என்று.அன்றிலிருந்து அந்த வெள்ளை எட்நின்றுதான் வணக்கம் சொல்லுவார் <!--emo& அவரை மறுத்துவிட்டு விஷயத்தை முடித்திருக்கலாம் அடிப்பது அளவுக்கு மீறியது என்பது எனது கருத்து. அவர் அதனையும் கேட்காமல் விட்டிருந்தால் புகார் செய்திருக்கலாம். அடிவாங்கியவர் சட்ட ரீதியாக அதை எதிர் கொண்டிருந்தால் பிரைச்சனைக்குள் மாட்டியிருப்பீர்கள். - Kalai - 04-02-2005 Quote:சாதகம் போன்ற மூடநம்பிக்கைகள் ஒழிந்தாலே போதும். சாதீயம் இலைமறைகாயாக தான் இருக்கின்றது. ஈழத்தமிழைடையே இந்தியா அளவுக்கு வர்க்க பேதம் ஏதும் இல்லை. இந்தியா அளவுக்கு இல்லாவிட்டாலும் சாதகத்தை விட சாதியத்தில் எமது சமூகம் இறுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாகவே எண்ணுகிறேன். காதலித்திருந்தால் சாதகம் பார்க்க வேண்டிய அவசியமில்லை ஆனால் சாதி ரொம்ப முக்கியம் இன்று பலர் கதைப்பதை இன்றும் என்னாற் கேட்க முடிகிறது. <b>"சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"</b> தமிழர்கள் எப்படி திருமணம் செய்ய? - Mathan - 05-29-2005 மண மாக்கட் "திருமணத்திற்கு" வரைவிலக்கணம் கூறும்போது "தனித்து வாழக் கூடிய தன்மை கொண்ட இருவர் சேர்ந்து வாழ்வது" என்று சொல்வார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் மேற்கூறிய விடயம் எத்தனை பேருக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை. எத்தனைபேர் எவ்வளவோ சிக்கல்கள் இருந்தும் இது எனது குடும்பம் என்று வாழ்ந்து வருகிறார்கள். அதைவிட எத்தனைபேர் உள, உடல் ரீதியாக தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டும், தொடர்ந்து குடும்பமாக சந்தோசமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்கிறார்கள். இப்போ சொல்லப்பட்ட விடயம் அனைத்தும் இரு பாலாருக்கும் பொதுவானதே. என்னடா இவன் குடும்பத்தைக் குலைக்கிறதற்கு வழி கோலுறான் என்று சிலர் இல்லை பலர் நினைப்பீர்கள். எனது நோக்கம் அதுவல்ல அதைவிட தமிழ்க் குடும்பத்தினைக் குலைப்பது என்பது எளிதில் இயலாத காரியம் (?) . ஆனால் அதுவெல்லாம் இப்போ அக்கறைப் படத்தேவை இல்லாத விடயம். அதைவிட மேல் எழுதியவற்றிற்கும் இனி வரப் போவதற்கும் சம்பந்தமே இல்லை. "பிறகேன் எழுதுகிறாய்'' என்று கேட்பீர்கள். வேறொன்றும் இல்லை "எங்கள்" திருமணம் குறித்து மிகவும் குளம்பிப்போய் உள்ளதால் உங்களையும் ஒரு "குளப்பு" குளப்பி விடுவோமே என்பதே என் நோக்கம். குளப்பம் என்னவெனில் எங்கள் திருமணங்கள் "மலிவானதாகப்" போய்க்கொண்டு இருக்கிறதா என்பதுதான். திருமணம் என்பது இரண்டு முறைகளின் ஊடாகத்தான் நடைபெறுகிறது. முதலாவது காதல் இரண்டாவது காதல் அல்லாதது (டேய். . .டேய். . . ) காதல்த் திருமணங்கள் அவ்வளவு சிக்கல்களினை ஏற்படுத்துவதில்லை. (ஒன்று இரண்டினைத் தவிர) காதல் அல்லாத திருமணங்கள் இருக்கிறதல்லவா அதில் தான் பெரும் சிக்கல் இருக்கிறது. அதாவது மாப்பிள்ளையினைத் தெரிவு செய்யும் முறை அல்லது பொம்பிளையை தெரிவு செய்யும் முறை. இதில் அனேகமாக பெற்றோரினது தலையீடு மட்டுமே காணப்படும் ஆனால் பிள்ளைக்கு புகைப்படம் காண்பிக்கப் படும் வாய்ப்பும் உண்டு. மாப்பிள்ளை வெளிநாடா, உள்ளுரா, என்ன வேலை செய்கிறார் என்பதுதான் முதற் கட்டக் கேள்விகளாக இருக்கும். பின் பெற்றோர் யார்? என்ன சாதி? என்ன செய்யினம்? இப்படிக் கேள்விகள் வரும். ஆக குறிப்பிட்ட வயது வர ஒன்றைப் பிடித்துக் கட்டிக் கொடுத்து அவர்கள் தார்மீகக் கடமைகளை முடித்து விடவேண்டும். என்பதில் தான் அக்கறை உண்டு அவர்களுக்கு. தனிப்பட்ட அந்த இருவர் தொடர்பான அக்கறை இன்றி, சரி பேசினோம், கட்டிக் கொடுத்தோம் என்ற போக்கில் இப்போ பல திருமணங்கள் நடந்தேறுகின்றன. எனக்குத் தெரிய திருமண நாள்வரை மாப்பிள்ளையின் முகம் தெரியாது இருந்த ஒரு பெண்ணும் இருக்கிறாள். (இப்படியானவர்கள் மிக அரிதுதான்) ஏன் என்று திருமணப் பேச்சு வார்த்தைக் காலத்திலேயே பெண்ணின் தந்தையிடம் கேட்டேன். ( பெண் நாட்டில் இருந்தவேளை) அவள் "நீங்கள் பாருங்கோ அப்பா! நான் இல்லை எண்டோ சொல்லப் போறன்'' என்று சொன்னதாகச் சொல்லி மகளைக் குறித்துப் பெருமைப்பட்டார். நான் கவலைப்பட்டேன். இன்று எத்தனைபேர் திருமணம் குறித்து "அக்கறையாக'' இருக்கிறார்கள். போன வாரம் ஒருவர் என்னிடம் இப்படிச் சொன்னார். "இஞ்ச! ஊரில ஒரு பிள்ளை இருக்கிது எக்கவுன்ஸ் டிபாற்மென்ட் ஒண்டில வேலை செய்யுது. ஆரும் கேட்டாச் சொல்லும், இங்க வந்தாலும் வேலை செய்யிறதுக்குப் பிரச்சனை இருக்காது" என்று. இதை அவர் சொன்னபோது நான் ஏதோ கார் ஒன்று விற்பனைக்கு வந்துவிட்டது போலத்தான் உணர்ந்தேன். அதனால் "எப்பயாவது Offerல வரேக்க சொல்லுங்கோ அப்ப பாக்கிறன்'' என்று சிரித்து விட்டு வந்தேன் (அந்தப் பெண் அவருக்கு மூன்றாவது நபராக இருந்தபடியால் நான் அப்படிப் பேசியது கோபத்தினை ஏற்படுத்தவில்லை). அவர் எனக்குப் பின்னால் வந்தவரிடம் இது பற்றிப்பேசிக் கொண்டு இருந்தார். அவர் இப்படி வருவோர் போவோரிடம் எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏதோ விதத்தில் ஒரு சங்கடத்தினை எனக்கு அது ஏற்படுத்தியது. பெண்ணோ ஆணோ ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உணர்வுகள் இருக்கும் அல்லவா அந்த உணர்வுகள் ஒன்று சேர இருக்கும் இருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் ஒத்துப்போக வேண்டும் அல்லவா! இதை எல்லாம் குறித்து அக்கறைப் படாமல், வெறுமனே லண்டன் என்று திருமணத்திற்காக ஒரு பெண் அல்லது ஆண் இங்கு வருகிறார் ஆயின், அவர் காதல் யார் மீது? எனக்கேதோ லண்டன் மீது என்றே படுகிறது. வாழ்க்கை வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டதா? மனித உணர்வுகளுக்கு இருந்த மரியாதை மரணித்து விட்டதா? இல்லை இதுதான் நடைமுறை வாழ்க்கையா? இது எங்களுக்கு மட்டும்தானா? இது எங்கள் கலாசாரம் சம்பந்தப்பட்டதா? இதற்கெல்லாம் பதில் தேடி அலைந்து கொண்டு இருக்கிறேன். அதுவரைக்கும் நீங்களும் நான் இவ்வளவு நேரமும் கூறிய அனைத்துப் பிரச்சனைகள் குறித்து கொஞ்சம் யோசிங்க! முடிந்தால் எனக்கும் ஏதாவது உதவி செய்யுங்கள் நன்றி எல்லாளன் - Mathan - 05-29-2005 தமிழர்கள் எப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்? தற்போதைய திருமண முறை சரியானதா? - tamilini - 05-29-2005 காதலும் இருக்கவேணும். பெற்றோர்கள் அதை சம்மதித்து பேசியும் செய்யணும். இது தான் நல்ல ஒரு குடும்பத்திற்கு அழகாய் அமையும். காதலிச்சு பெற்றோர் சம்மதம் இன்றி செய்து பிறகு திண்டாடி கஸ்டப்படுறவையும் இருக்கினம். பெற்றோர் செய்து வைச்சு காதல் இல்லாமல் கடமைக்காக வாழுறவையும் இருக்கினம். :mrgreen: :mrgreen: :wink: |