Yarl Forum
Pinnacle வீடீயோ தொகுப்பு கற்றுக்கொள்வோம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: வீடியோ தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=26)
+--- Thread: Pinnacle வீடீயோ தொகுப்பு கற்றுக்கொள்வோம் (/showthread.php?tid=3986)

Pages: 1 2 3 4


- வியாசன் - 07-05-2005

நீங்கள் காட்சிகளில் தேவையற்றதை அகற்ற போனீர்களே அதேபோல் மௌசினால் ஒரு காட்சியை தெரிவுசெய்து விட்டு அதற்கு மேல் உள்ள பெட்டியில் மற்ற முனைக்கு மௌசை கொண்டு சென்றால் ஒரு ஒலிபெருக்கியின் படம் தோன்றும் அதை அழுத்தினால் மேல் காட்டப்பட்ட படம் தோன்றும்
1 இலக்கம் இடப்பட்டது உங்கள் காட்சிகளுடன் வந்த ஒலி நான் அம்புக்குறியிட்டு காட்டியதை நீங்கள் முழுவதுமாக கீழே கொண்டு சென்றால் உங்கள் காட்சியிலுள்ள ஒலி கேட்கமுடியாது.
விது நான் சொல்வதற்கு முன்னரே கண்டுபிடித்துவிட்டீர்கள்
இதை நகர்த்தி ஒலி அளவை கூட்டலாம் குறைக்கலாம் என்பதை நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ப்போகிறீர்களா? களத்து உறவுகள் விவேகமானவர்கள் நெருப்பு மாதிரி
2 இலக்கமிடப்பட்டது நீங்கள் புதிதாக சேர்த்த இசையை கூட்டிக்குறைப்பது எப்படி சேர்ப்பது என்பதை பிறகு சொல்கிறேன்.
3 இலக்கமிடப்பட்டது நீங்கள் உங்கள் ஒலியை நவீன
Surround முறையில் அமைக்கலாம் அல்லது Streo
முறையில் அமைப்பதற்கான தெரிவு செய்யுமிடம்.


- வியாசன் - 07-05-2005

நண்பர்களே நாங்கள் இப்பொது ஒரு படம் தயாரிக்கின்றோம் யாழ் கிரியேசன்ஸ் மோகனின் அப்புவுக்கு மப்பு என்ற படம் தயாரிக்கின்றோம் (அப்பு கோவிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் தலைப்பை வைத்துவிட்டேன்)
நாங்கள் தயாரிக்கின்ற படத்தில் காட்சிகளுக்கிடையில் எப்படி
சேர்ப்பது என்று பார்ப்போம்.
<img src='http://img301.imageshack.us/img301/7524/unbenannt90vu.jpg' border='0' alt='user posted image'>


- வியாசன் - 07-05-2005

நீங்கள் ஞாபகத்தில் வைத்தக் கொள்ளுங்கள் இதையெல்லாம் நான் Edit பகுதியில்தான் செய்து கொண்டிருக்கின்றேன். நான் சிவப்பினால் குறியிட்டதை மௌசினால் அழுத்துங்கள் பக்கத்தில் நிறைய Effect வரும் விரும்பிய ஒன்றை தெரிவுசெய்து மௌசினால் இழுத்து வந்து இரண்டு காட்சிகளுக்கிடையில் விட்டால் போதும்


- வியாசன் - 07-05-2005

அப்புக்கு மப்பு படத்துக்கு Title அமைக்க என்ன செய்ய வேண்டுமென்பதை பார்ப்போமா?
<img src='http://img301.imageshack.us/img301/4885/unbenannt117fh.jpg' border='0' alt='user posted image'>


- வியாசன் - 07-05-2005

Title அமைப்பதற்கு Toolbox என்ற தலைப்பை அழுத்தி Create Title
என்ற பகுதிக்குள் போங்கள்


- வியாசன் - 07-05-2005

அங்கு என்ற பகுதியை தெரிவுசெய்யுங்கள்

<img src='http://img301.imageshack.us/img301/5699/unbenannt129ky.jpg' border='0' alt='user posted image'>


- வியாசன் - 07-05-2005

<img src='http://img301.imageshack.us/img301/2664/unbenannt109ea.jpg' border='0' alt='user posted image'>


- வியாசன் - 07-05-2005

1 இலக்கமிடப்பட்ட இடத்திலுள்ள அம்புக்குறிகளை தெரிவு செய்வதன் மூலம் எழுத்துக்களை மேல் நோக்கியோ பக்கவாட்டிலோ ஓட வைக்கமுடியும்.
2 இலக்கமிடப்பட்டதை தெரிவு செய்வதன்மூலம் அவர்கள் கொடுத்துள்ள வண்ணங்களை மாற்றி உங்கள் எண்ணப்படி வண்ணத்தை சேர்க்முடீயும்.

இங்கு உங்களுக்கு தேவையான Title அமைத்து நீங்கள் C:/ ஒரு Folder ஐ உருவாக்கி சேமித்துவைத்துக்கொண்டால் உதவியாக இருக்கும்.


- வியாசன் - 07-05-2005

<img src='http://img136.imageshack.us/img136/3669/unbenannt142cl.jpg' border='0' alt='user posted image'>


- வியாசன் - 07-05-2005

இலக்கம் 1 குறிப்பிட்ட படத்தை அழுத்தினால் மேலேயுள்ள திரைவரும் அதில் நான் வட்டத்தால் குறிப்பிட்டுள்ளதை அழுத்தி நீங்கள் எந்த பெயரில் Folder உருவாக்கி Titlt
சேமித்து வைத்துள்ளீர்களோ அதை திறந்து ஒரு தெரிவுசெய்து மௌசினால் இழுத்து வந்து
2 இலக்கமிடப்பட்டுள்ள இடத்தில் விடுங்கள். பக்கவாட்டுக்கு மௌசை கொண்டு சென்றால் ஒரு அம்புக்குறி வரும் அதன்மூலம் பக்கவாட்டில் இழுப்தன் மூலம் நேரத்தை கூட்டிக்குறைக்க முடியும்.
நீங்கள் படக்காட்சிகளுக்கு எப்படி Effect சேர்த்தீர்களோ அப்படி Effect இழுத்து வந்து Title ன் பக்கவாட்டில் விடுவதன் மூலம் வந்து போவதை அழகாக்க முடீயும்


- Thiyaham - 07-05-2005

Pinnacle studio plus 9.3

பினாக்கிள் இல்லாதவர்கள் இந்த இணைப்பில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

http://www.pinnaclesys.com/WebVideo/studio...io9_3_Trial.exe




இதற்க்குரிய Crackஐ இங்கு பெற்றுக்கொள்ளலாம்

http://legalwarez.free.fr/pinnacle/Crack_P..._Studio_9.3.rar


- Mathan - 07-05-2005

விளக்கத்திற்கு நன்றி வியாசன்.

மென்பொருள் இணைப்பிற்கு நன்றி தியாகம்.


- ஊமை - 07-05-2005

எங்கு Pinnacle Studio 9 Plus + GreenScreen எடுக்கலாம் என யாராவது சொல்ல முடியுமா?

இங்கும் Pinnacle பற்றி பேசப்படுகிறது விரும்பியவர்கள் பார்த்து பயன் பெறுங்கள்.


- வியாசன் - 07-05-2005

தம்பி ஊமை அவசரப்படுகிறீர் பச்சை அல்லது நீல பின்னணி காட்சிகளை அகற்றலாம்.
அது Pinnacle Studio plus வில் இருக்கிறது. மதனுடைய பாராட்டு வசிட்டர் வாயால் பாராட்டு வாங்கியது போல


- வியாசன் - 07-05-2005

இப்பொது நாங்கள் அப்புவுக்கு மப்பு என்ற படத்துக்கு இசை பாடல் என்பவற்றை எப்படி சேர்ப்பது என்று பார்ப்போம்.
<img src='http://img165.imageshack.us/img165/8862/unbenannt159cs.jpg' border='0' alt='user posted image'>


- வியாசன் - 07-05-2005

1 ஒலிபெருக்கியை அழுத்துங்கள்
2 நீங்கள் பாடல் வைத்திருக்கின்ற இடத்தை தெரிவு
செய்யுங்கள்
3 தேவையான பாடலை தெரிவு செய்யுங்கள் நான் மாமரத்து
புூ என்ற பாடலை தெரிவு செய்துள்ளேன். தெரிவு
செய்ததை அப்படியே மௌசினால் இழுத்து வந்து நான்
மாமரத்து புூ பாடலை விட்ட இடத்தில் விடுங்கள்
MP3 பாடலை பயன்படுத்தினால்
உங்களுக்கு இடப்பிரச்சனை குறைவாக இருக்கும்.


- வியாசன் - 07-05-2005

இனியும் நான் ஊமையின் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை. பின்னணி காட்சிகளை மாற்றி அமைத்தலை பார்ப்போம். Pinnacle Studio 9 Plus தான் இந்த வசதி இருக்கிறது
Studio 9 இல்லை
<img src='http://img165.imageshack.us/img165/6207/unbenannt164wz.jpg' border='0' alt='user posted image'>


- வியாசன் - 07-05-2005

மேலே நான் காட்டியபடி உங்களுடைய பின்னணி காட்சியை முதலில் தெரிவு செய்து மேலே காட்டியபடி சேருங்கள்
அதே போல பின்னணி அகற்ற வேண்டிய காட்சிகளை
2 என்று குறிப்பிட்டுள்ளேன் அதையும் இழுத்துவந்த அம்புக்குறியிட்ட இடத்தில் விடுங்கள்
அப்படியே போய் சூட்கேஸ் படத்தில் கமராவை தெரிவு செய்து அழுத்துங்கள்


- வியாசன் - 07-05-2005

<img src='http://img104.imageshack.us/img104/4287/unbenannt173ws.jpg' border='0' alt='user posted image'>


- வியாசன் - 07-05-2005

சூட்கேசை அழுத்துவதற்கு முன்னர் நீங்கள் பின்னணி அகற்ற வேண்டிய காட்சியை மௌசினால் அழுத்தி அதை நீலமாக்குங்கள
சூட்கேசை அழுத்தியதும் இப்படி படம் வரும் முதலில்
1 இலக்கமிட்டதை அழுத்துங்கள்
2 இலக்கமிட்டதை அழுத்துங்கள்
3 ஐ நகர்த்தி செல்லுங்கள
மொனிற்றரில் படம் சேர்க்கப்பட்டதை காணக்கூடியதாக உள்ளது.
4 குறிப்பிட்டவற்றில் உள்ளவற்றை நகர்த்தி படத்தின் விளிம்புகளை சரிப்படுத்துங்கள்