Yarl Forum
அகப்பையில் அவள் அசிங்கமாமோ..??! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: அகப்பையில் அவள் அசிங்கமாமோ..??! (/showthread.php?tid=3548)

Pages: 1 2


- tamilini - 08-29-2005

Quote:ஏன் அக்கா ஆணும் பெண்ணும் சமம் இல்லையென குருவியண்ணா சொன்னவாரா முந்தி எங்காவது
_________________
இல்லைங்க தங்கை சண்டைக்கு வராதீங்க. வசி சொன்னமாதிரி குருவிஅண்ணா பெண்களைப்பத்தி இப்படி எழுதினது இல்லை அது தான் சொன்னம்.
நல்ல மாற்றம்.

Quote:ஆஆ எப்பவும் பொண்ணுங்களை திட்டிகிட்டே இருக்கும் நம்மட குருவியா இந்த கவிதை எழுதியது?
என்னால் நம்பவே முடியவில்லை..
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:


- வெண்ணிலா - 08-29-2005

tamilini Wrote:
Quote:ஏன் அக்கா ஆணும் பெண்ணும் சமம் இல்லையென குருவியண்ணா சொன்னவாரா முந்தி எங்காவது
_________________
இல்லைங்க தங்கை சண்டைக்கு வராதீங்க. வசி சொன்னமாதிரி குருவிஅண்ணா பெண்களைப்பத்தி இப்படி எழுதினது இல்லை அது தான் சொன்னம்.
நல்ல மாற்றம்.


மலரண்ணி மாத்திட்டா போல இருக்கு அக்கா. அண்ணாவின் மாற்றம் இப்படியே தொடர வாழ்த்துக்கள் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 08-30-2005

நன்றாக இருக்கு கவிதை குருவி அண்ணா...பறந்து போனனிங்கள் வந்துட்டிங்களா தோப்புக்கு..அல்ல இன்னும் பறந்துட்டு இருக்கிறிங்களா?


- Mathan - 08-30-2005

காதல் வந்ததும் குருவி மாறிவிட்டார், அல்லது காதல் மாற்றிவிட்டது.


- ANUMANTHAN - 08-30-2005

மிக மிக அருமை வாழ்த்துக்கள்!

குருவிகள் கோபப்பட்டு என்னசெய்யவது கள்ளிப்பால் கொடுக்கும் கழுதைகளுக்கு விளங்கவேண்டுமே!


- kuruvikal - 08-31-2005

vennila Wrote:
tamilini Wrote:
Quote:ஆணும் பெண்ணும்
அகிலத்தில் சமன்
அதுவே உண்மை...!
அறிந்து கொள் - இல்லை
அகலத் திறந்திருக்கு புதைகுழி
அதற்குள் அடங்கிக் கொள்
அகிலத்தில்
அர்த்தமுள்ள
ஆண் பெண் சமத்துவமாய் வாழட்டும்..!
அர்த்தான கவிதை. இப்படி உருப்படியான பல கவிதைகள் வரட்டும் எதிர்பார்க்கிறோம். ம் ஆணும் பெண்ணும் சமன் என்று குருவியின் வாயால வருது. :wink:

ஏன் அக்கா ஆணும் பெண்ணும் சமம் இல்லையென குருவியண்ணா சொன்னவாரா முந்தி எங்காவது :roll:

அப்படிக் கேளுங்க...தங்கையே...சமூகத்தால் கைவிடப்பட்ட ஆண்களுக்காக பெண்களுக்காக வாதாடுதல் தவறா..! குற்றவாளிக்காக வாதாடும் சட்டத்தரணிக்குத்தான் அவனை சுத்தவாளி ஆக்க வேண்டிய கடமை...உண்மையைச் சொல்ல வேண்டிய கடமை..அதிகம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 08-31-2005

அதெப்படி குருவி பல இடங்களில் தவறுகள் இருபக்கம் இருக்கும் போது பெண்கள் மட்டும் தவறாய் தெரிஞ்சாங்க அப்ப இந்த சமத்துவம் நீங்க பேசவில்லையாக்கும். வக்கீலுகளின் முதல் வேலையே பொய் சொல்லக்கற்றுக்கொள்றதாமே? இத்தனை நாள் இந்த வக்கீல் இதைத்தான் செய்தவராக்கும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 08-31-2005

tamilini Wrote:அதெப்படி குருவி பல இடங்களில் தவறுகள் இருபக்கம் இருக்கும் போது பெண்கள் மட்டும் தவறாய் தெரிஞ்சாங்க அப்ப இந்த சமத்துவம் நீங்க பேசவில்லையாக்கும். வக்கீலுகளின் முதல் வேலையே பொய் சொல்லக்கற்றுக்கொள்றதாமே? இத்தனை நாள் இந்த வக்கீல் இதைத்தான் செய்தவராக்கும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இருக்குங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 08-31-2005

tamilini Wrote:அதெப்படி குருவி பல இடங்களில் தவறுகள் இருபக்கம் இருக்கும் போது பெண்கள் மட்டும் தவறாய் தெரிஞ்சாங்க அப்ப இந்த சமத்துவம் நீங்க பேசவில்லையாக்கும். வக்கீலுகளின் முதல் வேலையே பொய் சொல்லக்கற்றுக்கொள்றதாமே? இத்தனை நாள் இந்த வக்கீல் இதைத்தான் செய்தவராக்கும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


குருவியண்ணா வக்கீலா? சொல்லவேயில்லை. :roll:


- kuruvikal - 08-31-2005

vennila Wrote:
tamilini Wrote:அதெப்படி குருவி பல இடங்களில் தவறுகள் இருபக்கம் இருக்கும் போது பெண்கள் மட்டும் தவறாய் தெரிஞ்சாங்க அப்ப இந்த சமத்துவம் நீங்க பேசவில்லையாக்கும். வக்கீலுகளின் முதல் வேலையே பொய் சொல்லக்கற்றுக்கொள்றதாமே? இத்தனை நாள் இந்த வக்கீல் இதைத்தான் செய்தவராக்கும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

குருவியண்ணா வக்கீலா? சொல்லவேயில்லை. :roll:

ஐயோ... வக்கீலா..சும்மா சொன்னம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 08-31-2005

kuruvikal Wrote:
vennila Wrote:
tamilini Wrote:அதெப்படி குருவி பல இடங்களில் தவறுகள் இருபக்கம் இருக்கும் போது பெண்கள் மட்டும் தவறாய் தெரிஞ்சாங்க அப்ப இந்த சமத்துவம் நீங்க பேசவில்லையாக்கும். வக்கீலுகளின் முதல் வேலையே பொய் சொல்லக்கற்றுக்கொள்றதாமே? இத்தனை நாள் இந்த வக்கீல் இதைத்தான் செய்தவராக்கும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

குருவியண்ணா வக்கீலா? சொல்லவேயில்லை. :roll:

ஐயோ... வக்கீலா..சும்மா சொன்னம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பொய் தானே. சரி சொன்ன அக்காவே வரட்டும் கேட்பம். :wink:


- kirubans - 09-04-2005

குருவிகளின் கவிதைகளை வாசித்த கொழுவியின் விமர்சனத்தைக் கீழே தருகின்றேன். நான் காசு கொடுத்து வாங்கும் புத்தகங்களில் உள்ள கவிதைகளை மட்டுமே படிப்பதால் என் கருத்துக்களை எழுதவில்லை. மன்னியுங்கள்.



எழுத்துப் பொறுக்கி குருவிகள்

தீராநதி, உயிர்மை, காலச்சுவடு, கணையாழி இதழ்களில் வருகின்ற கவிதைகளை படித்து படித்து போர் அடித்து விட்டது. வித்தியாசமான புதிய முயற்சிகளை உள்ளடக்கிய கவிதைகள் தேடி கொழுவிகள் அலைந்தனர்.

அகப்பட்டது யாழ் இணையத்திலிருந்து சில பல நல்ல இதுநாள் வரை எங்கேனும் வாசித்தறியாத நல்ல கவிதைகள்.

மாந்தோப்பு என்ற இடத்திலிருக்கின்ற குருவிகள் என்னும் அதி உன்னத கவிஞன் எழுதிய கவிதைகளை படித்த மாத்திரத்திலேயே கொழுவிக்கும் குழப்பிக்கும் பிடித்து விட்டது.

மரபுக்கவிதை புதுக்கவிதை என கவிதைகளை பலவகையாக பிரிக்கலாம். ஆனால் குருவிகளின் கவிதைகளை மொத்தம் 30 வகையான பிரிவுகளில் வேறுபடுத்தலாம். இதுவே அவரது கவிதைகளின் சிறப்பும் ஆகிறது.

அவையாவன

ஆனாக் கவிதைகள், ஆவன்னா கவிதைகள் முதலான உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாம்.

ஆனாக்கவிதைகளிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கவிதையாக தரவேண்டும் என கொழுவியும் குழப்பியும் விரும்பினாலும் நல்ல இலக்கியங்களை படிக்க காத்திருக்கும் வலை மேய்பவர்களின் ஆவல் கருதி முழுவதையும் தர எண்ணுகிறோம்.

முதலில் ஒரு வானாக் கவிதை படியுங்கள்.

வாழ்வெனும் வீதியில் பயணம்
வழக்கங்கள் மாறா விதிகள்
வழமையானால் இல்லை அவதிகள்
வழமைக்கு மாறாய் விதிகள்
வடிவமைத்து வடிவாய் வாழினும்
வரும் வாழ்வும் இனிதே பயணிக்கும்..!
வழமை நாம் விரும்பினும்
வழமைகள் மாற்றி
வரும் வாகனங்கள் வீதியில் சகஜம்
வந்தவை தரும் விபத்துக்கள்
வந்த பின் வருத்தம் தான் மிஞ்சும்
வருமுன் காப்போம் விதிகள்...!

வந்த விதி வழி அப்பாவியாய்
வடிவாய் வீதி வழி நீயும் வந்ததால்
வாழ்க்கைப் பாதையில் சந்தித்தாய்
வகை வகையாய் விபத்துக்கள்
வந்தவை எதுவும் புதிதல்ல
வருந்தவும் அங்கு இடமில்லை
வருந்த உன்னில் எதுவுமில்லை
வருந்தித் தொலைக்காதே உன் வசந்தம்
வாடா உன் முகம் என்றும் வேண்டும்
வரமது தந்திடு அரு மலரே...!

வசந்தம் வந்த வேளையில்
வந்தாய் என் வாழ்வின் ஒரே வசந்தமாய்
வடிவாய் உன்னை அழைத்துச் செல்வேன்
வருங்கால வீதி தன்னில் கரம் பிடித்தே
வருந்தாமல் வை ஒரு நம்பிக்கை
வரும் என் கை உன்னை நாடியே..!
வரும் மரணம் கூட
வழி மறிக்கா
வகையான அன்பு வழி
வரும் எங்கள் வாழ்வில் கடைசிவரை
வருத்தமின்றி வா
வகையாய் குதூகலிப்போம்
வான வீதியில் வாழ்ந்திடும்
வண்ணச் சிட்டுக்களாய்....!

வானாக்கவிதையின்
வனப்பிலே
வழிந்தோடிய
வளர் தமிழை (அடச் சே.. கொழுவிக்கும் குழப்பிக்கும் குருவிகளின் தாக்கம் இருக்கிறது) பருகிய நீங்கள் இனி குருவி எழுதிய ஒரு ஊனாக் கவிதை படியுங்கள்.

உதிர்ந்த வார்த்தையொன்று
உள்ளத்தைக் கிழித்தது
உண்மை அன்பு தேடி
உன்னை உண்மையாய் நாடி
உலகமே நீ என்று கண்டதற்கு
உன் காணிக்கை இதுதானா....??!
உண்மையாய் இக்கணம்
உலகமே வெறுக்கிறது
உன் நினைவு வாட்டுகிறது
உறக்கம் தொலைகிறது
உண்மை என்ன...?!
உன்னில் என்ன அவநம்பிக்கை
உன்னை ஊரே ஏய்க்குதோ
உன் கண்களை மறைக்குதோ..??!
உயிரே...
உனக்கொரு வேண்டுகோள்
உள்ளத்தில் நீயே முதலாய்
உன் வார்த்தைகளால்
உன் நிலை தாழ்த்தாதே...!
உண்மை அன்புக்கு
உலகில் இடமில்லை
உண்மை என்று உணர்ந்து
உலகை வெறுத்தவன்
உன் வார்த்தைகளால்
உண்மையில் உறுதியாகிறான்...!
உண்மைக்காய்
உறங்கி விழித்தவன் - இவன்
உளறுவதாய் என்னாதே - இன்னும்
உலகை உணர்கிறான்
உள்ளங்கள் உணர்கிறான்...!
உண்மையில் அன்பு
உன்னிடத்தில் உண்டா...??!
உலகில் உண்டா....??!
உண்டு
உன்னால் அதை
உள்ளம் கொண்டு தெளிக்கக் கூட முடியவில்லை
உண்மைக் காரணம்....
உண்மைகள் என்று
உலகம் உன்னை ஏய்ப்பதால்
உன்னை நீயே உணர மறுப்பதால்
உண்மைத் தேடல் இன்றி
உறுதி இழந்ததால்....!
உண்மையில் இவன்
உறுதியின் உறைவிடம் - இருந்தும்
உண்மை அன்புக்கு
உள்ளது அடைக்கலம்
உனக்கு மட்டுமே என்றும் அது...!

இனி நாங்கள் தரவிருப்பது குரவி எழுதிய ஒரு ஈனாக் கவிதை(ஈனக்கவிதை அல்ல).. ஈஈதோ..

இயற்கையை ரசித்தவன்
இன்பத்தை ருசித்தவன்
இருப்பவைக்காய் ஆசை வளர்த்தவன்
இழப்பதையே வெறுத்தவன்
இருளுக்குள் ஒளி தேடியவன்
இனிய விடியலுகாய் ஏங்கியவன்
இருப்பவர் எல்லாம் இன்பமாய் வாழ
இலட்சியம் வளர்த்தவன்
இனிய உலகுக்காய்
இனிய கனவு ரசித்தவன்
இனியவளே மலரே உன்
இதயத்தை அளந்ததும்
இயல்பை இழந்துவிட்டான்
இரவும் பகலும் உன் நினைவுகளால்
இந்து சமுத்திரமானான்
இயற்கை எங்கனும் உன்னுருவம்
இயல்பாய் வரையும் ஓவியனானான்
"இன்பத்துக்கு வழியெது
இனியவளின் வார்த்தையது"
இப்படியொரு தத்துவனானான்
இருப்பு இவனுக்கு வெறுப்பு
இன்று அதுவே கடமையாக்கினான்
இனிப்பாய் ஒரு வரி
இயல்பாய் அறியாதவன்
இன்று வரிகளில் தேன் சொரிகிறான்.....
இப்படி இப்படி எத்தனை மாற்றங்கள்
இவை எப்படி இவனுக்குள்
இன்னும் காரணம் அறிந்ததில்லை
இதன் மாயமும் புரியவில்லை
இருப்பவை எல்லாம் இன்பமாய்
இனியவளே உன் ரசிகனாய்
இவன் காண்பதெல்லாம் சொர்க்கமாய்
இவை பிரமையும் அல்ல
இன்றைய நிஜங்களாய்
இனிய நாளைய நினைவுகளாய்
இவன் இள மனதோடு பதிவாகுது
இவையே நாளை
இவன் வரலாறாகும்...!

நமது குருவிகள் லேசுப்பட்ட ஆள் இல்லை. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் தொடத் தயங்கும் விடயங்களையும் எழுத்துக்களையும் தொடுவார். பின்னே.. பாருங்கள் அவர் ஒரு பேயன்னா (பேயன் அல்ல) கவிதையும் எழுதியுள்ளார்.

பேசா மலரே
பேசினாய் முதல் வார்த்தை
பேச்சிற்கு நாலு வார்த்தை
பேதைக் குருவியிவன்
போதை தீர....!
போ... மலரே
போன காலம் மெளனத்தால்
போனதே வீணா...
பேரன்பு உனை மலரவைக்க
போனதோ வீராப்பு
போனதை எண்ணி வருந்தி
பேசினாயோ அன்பு வார்த்தை..!
பேசியது தேனினும் இனிப்பாய்
பேசாச் செவிகூடச் சுவை அறிந்து
போதை கொண்டு
பேச்சுக்கு அடிமையாகிறது....!
பேசாமல் தொடர்வாயோ
பேச்செனும் அமுதம் தினமும் ஊட்டாயோ..??!
போதை எனித் தீராது
பேசியதும் இங்கினி
போகாது வீணே...!
பேதையெனினும் போதையெனினும்
போகும் அவை
பேதையிவன் மூச்சில் கலந்து...!
பேச்சின் மொழியும்
பேதையே உன் ஞாபகம் தந்து
போகும் இவன் இறுதி மூச்சுவரை...!
பேசியதை இங்கு பேசியதற்காய்
பேசாமல் பேசிடு என்ன
பேச்சதில் நீயும் மலர்வாய்
பேதையிவன் நெஞ்சில்
பேரழகு மலராய்...!

என்ன.. குருவிகளின் ஆனா ஆவன்னா கவிதைகளில் குளித்தீர்களா..? நல்ல இலக்கியங்களை படித்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ளலாம். தெரிந்து கொண்டீர்களா?

மீண்டும் சந்திப்போம்.
பிற்குறிப்பு கவிதைகளின் முழு உரிமையுமும் குருவிகளுக்கே சொந்தம். ஆனாவை ஆவன்னா என்றோ ஊனாவை ஊவன்னா என்றோ மாற்ற யாருக்கும் அனுமதியில்லை.

கொழுவி.
http://koluvithaluvi.blogspot.com/2005/06/...og-post_06.html


- KULAKADDAN - 09-04-2005

கிருபன், ஏற்கனவே இது பலமுறை இங்கு வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் ஏன்?


- kuruvikal - 09-05-2005

kirubans Wrote:குருவிகளின் கவிதைகளை வாசித்த கொழுவியின் விமர்சனத்தைக் கீழே தருகின்றேன். நான் காசு கொடுத்து வாங்கும் புத்தகங்களில் உள்ள கவிதைகளை மட்டுமே படிப்பதால் என் கருத்துக்களை எழுதவில்லை. மன்னியுங்கள்.

உண்மையைச் சொன்னால் நாங்கள் காசுக் கவிதைகள் படிப்பதில்லை... தரமான கவிதைகளைக் காண்டால் படிப்போம்.... இப்படியான கவிதைகள் வேண்டுமா... தரமான சஞ்சிகைகள்...பத்திரிகைகள்... மற்றும் சாதாரண கல்விசார்/சாரா நிறுவன மாணவர்களின் சஞ்சிகைகளில்...இன்னும் தரமான இணையத்தளங்களில் இவை தாராளமாகக் கிடைக்கின்றன...! தமிழுக்கு குறைவில்லா வரை கவிதைகளுக்கும் குறைவில்லை...!

கவிதைகள் சிந்தனையில் பிறந்து கற்பனையில் கலந்து உணர்வினில் வளர்ந்து வெளிவருபவை...! கவிஞன் என்பவன் மக்கள் சொத்து மக்கள் அங்கீகாரம்...அவன் படைப்புக்களும் மக்கள் சொத்தே....அதைக் காசுக்கு விற்றல்...மக்களை ஏமாற்றுவது போன்றது...! நாங்கள் எவர் கவிதையையும் அது வைரமுத்து ஆகட்டும் இல்லை எங்கள் புதுவை ஆகட்டும் காசு கொடுத்து வாசிக்கப் போவதில்லை...!

நன்றி... கொழுவி என்று எவரோ கண்ணுக்குத் தெரியாதவர் முன்வைத்திருக்கும் விமர்சனத்தில் தேவையானத்தை...நாங்கள் எப்பவோ உள்வாங்கிக் கொண்டு...மிகுதியை கழித்தும் விட்டோம்... விமர்சனத்தை இன்னும் நாலு பேரைக் கூட்டி வைத்து விமர்சிக்கவில்லையே...! விமர்சகனுக்குரிய மரியாதையை வழங்கித்தான் இருக்கிறோம்...அதுதான் என்னவோ...கொழுவியின் கொழுவல் ஆரம்பத்தோடே மட்டுப்படுத்தப்பட்டு விட்டது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- kuruvikal - 09-05-2005

KULAKADDAN Wrote:கிருபன், ஏற்கனவே இது பலமுறை இங்கு வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் ஏன்?

மீண்டும் மீண்டும் குருவிகளுக்கு ஒன்றையே சுட்டிக்காட்ட விரும்புகிறார்கள் போல...அதுதான் "பொறுக்கி" என்பதை...! அதுவும் வளமான விமர்சனம் தான் வளமாக நோக்கினால்.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 09-05-2005

இந்த தலைப்பிலும் உராய்வு தலைப்பிலும் மோதல்களை தொடர்ந்து வளர்த்தாமல் அப்படியே விட்டுவிடலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து,


- kuruvikal - 09-05-2005

நீங்கள் சொல்லுவது மிகவும் சரி மதன்...கடைப்பிடிப்போம்..! ஏதோ வினவ ஏதோ புரிந்து கொள்ளப்படுகிறது எனவே..அந்த ஏதோ தொடர்வதைத் தவிர்ப்பது நன்று..! Idea


- vasisutha - 09-05-2005

Mathan Wrote:இந்த தலைப்பிலும் உராய்வு தலைப்பிலும் மோதல்களை தொடர்ந்து வளர்த்தாமல் அப்படியே விட்டுவிடலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து,

<b>சரி</b><!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
குருவி ஒரு கவிதை சொல்லுங்கோ கேட்போம் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kirubans - 09-05-2005

KULAKADDAN Wrote:கிருபன், ஏற்கனவே இது பலமுறை இங்கு வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் ஏன்?

மன்னிக்கவும். நான் கவனிக்கவில்லை. தேவையில்லை என்றால் நீக்கிவிடுகின்றேன்.

கருத்து மோதலுக்காக இங்கு இணைக்கவில்லை. உராய்வுப் பகுதியில் கவிதையை விமர்சிக்காமல் வேறு விடயங்களை அலசுவதால், கொழுவியின் கவிதை விமர்சனத்தை இணைத்தேன்.