Yarl Forum
சிவகாசி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: சிவகாசி (/showthread.php?tid=2984)

Pages: 1 2


- Mathan - 11-06-2005

Vishnu Wrote:ஆகா.... நான் இன்னும் படம் பார்க்கல..... ஏன் இதுவும் சண்டை படம் தானோ??

அம்மா-தங்கச்சி சென்டிமென்ட், சண்டை கலந்த படம். ஒரு படத்தை தியேட்டருக்கு சென்று திரும்ப திரும்ப பார்த்து பலநாள் ஓட வைப்பதில் முக்கியமானவர்கள் சி சென்டர் ரசிகர்கள். அவர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட படம் போலதான் தெரிகின்றது.


- வினித் - 11-07-2005

நடிகர் விஜய் நடித்த சிவகாசி படம் ஒரு தியேட்டரில் ஒரே நாளில் 7 லட்சம் ரூபாய் வசூல் செய்தது.
தீபாவளி படங்களில் சிவகாசி சக்கைபோடு போடு கிறது. கோவை ஏரியாவுக்கு மட்டும் 27 பிரிண்ட் போடப்பட்டது. மம்முட்டி மோகன் லால் நடித்த நேரடி மலை யாளப் படங்கள் கேரளாவில் ரிலீசின்போது 35 பிரிண்ட் போடுவர். நேரடி தமிழ்ப்படமான சிவகாசி 27 பிரிண்ட் போடப்பட்டது. 22 பிரிண்ட் போடப்பட்ட திருப்பாச்சி தான் இதற்கு முன் அங்கு அதிக பிரிண்ட் போட்ட படமாகும். மைNருக்கு 20 ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாடுகளுக்கு 60 ஆக மொத்தம் 300-க்கு மேல் பிரிண்ட் போடப்பட்டது.

சென்னை அடுத்த கொளத்தூர் தியேட்டரில் திரையிட்ட முதல்நாள் மட்டும் 7 லட்சம் ரூபாய் வலே; செய்தது. இதற்கு முன் சந்திரமுகியின் ஐந்தே கால் லட்சம் ரூபாய் வலே; அங்கு முதலிடத்திலிருந்தது அதை சிவகாசி முந்தியது. படத்தை வாங்கியப்பணம் முதல் வாரத்திலேயே வந்து விடும் என்கிறார் மதுரை விநியோகஸ்தர். என்.எஸ்.சி. ஏரியாவுக்கு வாங்கியவரோ 2 வாரத்தில் அந்தப் பணம் வந்துவிடும் என்கிறார்.

இந்த வெற்றிக்கு காரணம் என்ன? டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேரனிடம் கேட்டபோது

பெண்களுக்கு விஜய்யை பிடிக்கும். திருப்பாச்சி படத்தில் தங்கச்சி செண்டிமெண்ட் சொல்லப்பட்டது இதில் அம்மா செண்டிமெண்ட் என்றார். ஹீரோ விஜய்யிடம் கேட்டபோதுஇந்த வெற்றி ரொம்ப சந்தோஷமாக இருக் கிறது. மனிஷனுக்கு கோடி கோடியாக பணம் வரலாம் அதைவிட சந்தோஷம் தருவது வெற்றிதான். படம் எடுத்த தயாரிப்பாளர் ரிலீசின்போது சந்தோஷமாக இருக்கிறார். விநியோகஸ்தர்களோ 2 வாரத்தில் பணம் வந்துவிடும் என்ற சந்தோஷத்தில் இருக்கின்றனர். தியேட்டர்காரர்களும் போன் செய்து தம்பி இதேமாதிரி படங்கள் செய்யுங் கள் என்கின்றனர். ரசிகர்கள் ஒவ்வொருவரும் பட்டாசு கொளுத்தியது போல் சந்தோஷப்படுகிறார்கள். இந்த தீபாவளி எனக்கு ஸ்பெஷல் தீபாவளிதான் என்றார்.

மனைவி சங்கீதா மகன் ஜெய்சன் சஞ்சய் மகள் திவ்யா ஷாஷாவுடன் சிவகாசி படத்தை முதல்நாள் முதல் காட்சியை தேவி தியேட்டரில் விஜய் பார்த்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகரன் ஷோபா இருவரும் உதயம் தியேட்டரில் பார்த்தனர். பேத்தி திவ்யா பிறந்த யோகம் விஜய்க்கு அடிச்சிருக்கு என்ற குஷியில் இருக்கிறார் எஸ்.ஏ.சி
dinakaran.com


- Mathan - 11-08-2005

சிவகாசி விமர்சனம்

<img src='http://img485.imageshack.us/img485/7876/sivakasi014ox4if.jpg' border='0' alt='user posted image'>

முத்தப்பாவுக்கும் உடையப்பாவுக்கும் ஒரே ஃபைட்டுப்பா! கதையை இப்படி ஆரம்பித்தால் சுவாரஸ்யம் கெட்டுப்போய்விடும் என்பதற்காக சென்னையில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். அதுவும் கமகமக்கும் காதலோடு. 180 கிலோ வில்லனை சுண்டு விரலால் துரத்தி அடிக்கிறார் விஜய். ச்சும்மா ஒரு ஃபைட்டு வைக்கணும், அவ்வளவுதான் என்கிற ரீதியில் இருக்கிறது அந்த சண்டை. அதன்பின் அசினுக்கும் விஜய்க்கும் நடக்கிற செல்ல சண்டைதான் இடைவேளை வரைக்கும். ஜாலியோ ஜாலி.

அடிக்கடி விஜய் முன் தோன்றி, ÔÔசண்டை உனக்கும் எனக்கும்தான். அதுக்காக என் தங்கச்சிக்கு ஏன் தொல்லை கொடுத்தே?ÕÕ என்கிறார் அசின். அப்புறம் அவருக்கு ஒரு தங்கையே இல்லை. எல்லாம் ஒரு ÔஇதுÕக்குதான் என்று தெரிய வருகிறது விஜய்க்கு. பிறகென்ன..? இரண்டு டூயட்டுகள் இலவசம்!

அப்பா அம்மாவோடுதான் என் வீட்டுக்கு பெண் கேட்டு வரணும் என்ற அசினின் செல்லக்கட்டளைக்கு பணிந்த விஜய், 15 வருடம் கழித்து தன் சொந்த ஊருக்கு போக, நடந்தது என்ன? வேகம்...வேகம்...வேகம்!

அங்கே அண்ணன் உடையப்பா(பிரகாஷ்ராஜ்) பெற்ற அம்மாவை மாட்டு தொழுவத்திலும், கூட பிறந்த தங்கையை ஊரை விட்டு விரட்டியும் வைத்து கொடுமைபடுத்துவதை பார்க்கிறார். ரத்தம் கொதிக்கிறது. தான் யார் என்ற விஷயத்தை சொல்லாமலே, அம்மாவுக்கும் தங்கைக்கும் ராஜ வாழ்க்கை கொடுக்கிறார். சொத்தில் பாதியை மீட்டு தங்கைக்கு எழுதி வைக்கிறார். கடைசியில் உடையப்பா என்ன ஆனார்? போங்கங்க.. கடைசி ரீலில் அவரு திருந்திடுவாருங்கிறது தெரியாதாக்கும்?

<img src='http://img485.imageshack.us/img485/3003/1171gw.jpg' border='0' alt='user posted image'>

விஜய்க்கும் பிரகாஷ்ராஜுக்கும் நடக்கிற யுத்தம் உண்மையிலேயே விறுவிறு ரகம். வெள்ளை பேப்பரை மடித்து கையில் கொடுத்து பத்து லட்சத்தை அடித்துவிட்டு போகும் விஜய், தங்கையையே பிரகாஷ்ராஜுக்கு எதிராக எலக்ஷனில் நிற்க வைத்து ஜெயிக்க வைப்பது மேலும் விறுவிறு! பிரச்சாரத்திற்காக பணம் கொடுத்து நடிகை நயன்தாராவை வரவழைப்பது பிரகாஷ்ராஜ். ஆனால் வோட்டுகளை அள்ளிக் கொண்டு போவது விஜய் கோஷ்டி. இப்படி சின்ன சின்ன சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமேயில்லை.

கஞ்சா கருப்பு சிரிக்க வைத்திருக்கிறார். தூள் படத்தில் வந்த அதே சொர்ணாக்கா. அதே கூச்சல்... எரிச்சல்!

<img src='http://img485.imageshack.us/img485/701/1206oa.jpg' border='0' alt='user posted image'>

கதையிலும் வசனங்களிலும் அப்படியே ரஜினி ஃபார்முலா. பின்னணி கோரஸ் அதையே வழிமொழிகிறது. விட்டால், சூப்பர் ஸ்டார் நாற்காலியை வலுக்கட்டாயமாக பிடுங்கி கொள்வார் போலிருக்கிறது விஜய்.

ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட வந்தாலும் நயன்தாராவுக்கு ஜே போடுகிறது ரசிகர் கூட்டம்.

இசை ஸ்ரீகாந்த் தேவா. பாடல்களில் ஆறுக்கு இரண்டு பழுதில்லை. Ôஎன் தெய்வத்துக்கே மாறு வேஷமாÕ பாடல் மட்டும் மனசை தத்தளிக்க வைக்கிறது.

சிவகாசி- முதல் பாதி மழையில் நனைந்த பட்டாசு. இரண்டாம் பாதி நாட்டாமை தலை முண்டாசு!

தமிழ் சினிமா


- வினித் - 11-13-2005

வசூலில் சாதனை படைக்கும் சிவகாசி ஒரே வாரத்தில் ரூ.2 கோடி வசூல் மழை பொழிந்திருக்கிறது
இந்த வருடம் தீபாவளிக்கு விஜய் நடித்த `சிவகாசி', விக்ரம் நடித்த `மஜா', ஸ்ரீகாந்த் நடித்த `பம்பரக்கண்ணாலே', தனுஷ் நடித்த `அது ஒரு கனாகாலம்', மது நடித்த `பெருசு' ஆகிய படங்கள் 5 ரிலீஸ் ஆகின.

இந்த படங்களில் `சிவகாசி', `மஜா' படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கின்றன. இந்த படங்கள் வசூலில் சாதனை படைத்து வருவதாக பட வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

`சிவகாசி' படம் ரிலீஸ் ஆன 2 வாரங்களிலேயே, படத்துக்காக முதலீடு செய்த பணம் கைக்கு வந்து விட்டது. இனி வரும் பணம் லாபமாக இருக்கும் என்று பட வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கௌத்தூர் கங்கா தியேட்டரில் ஒரு நாள் உச்சகட்ட வசூல் இதுவரை ரூ.5 லட்சமாக இருந்தது. ஆனால், `சிவகாசி' படத்துக்கு இந்த தியேட்டரில் ஒரே நாளில் ரூ.7 லட்சம் வசூல் ஆகி உள்ளது. இது சாதனை என்று அந்த தியேட்டர் நிர்வாகம் கூறுகிறது. இது போல சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டை வெற்றி தியேட்டரிலும் ஒரே நாளில் ரூ.5 லட்சம் வசூல் கொடுத்து `சிவகாசி' சாதனை படைத்துள்ளது.

மதுரை பகுதி வினியோக உரிமை ரூ.1 கோடி. ஆனால் ஒரே வாரத்தில் `சிவகாசி' ரூ.2 கோடி வசூல் மழை பொழிந்திருக்கிறது. இதனால் அங்கு இந்த படத்தை வாங்கியவர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

கோவை ஏரியாவில் ஒரே வாரத்தில் `சிவகாசி' ரூ.1 கோடி வசூல் செய்து இருக்கிறது. திருச்சியில் ரூ.50 லட்சம் வசூல் கிடைத்து இருக்கிறது.

`சிவகாசி' படத்துக்கு 300-க்கும் அதிகமான பிரிண்டுகள் போடப்பட்டன. கேரளாவுக்கு மட்டும் 30 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளன. அங்கும் நன்றாக ஓடுகிறது. `சிவகாசி' படம் விஜய்யின் மற்ற படங்களை விட வசூலில் அதிக சாதனை படைத்து வருவதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுபோல விக்ரம் நடித்துள்ள `மஜா' படமும் வசூலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்த படத்துக்கும் 300-க்கும் அதிகமான பிரிண்டுகள் போடப்பட்டு திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் நன்றாக ஓடுகிறது.
www.lankasri.com