![]() |
|
ஈழத்தவரின் மண்! திரைப்படம்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: ஈழத்தவரின் மண்! திரைப்படம்! (/showthread.php?tid=2568) |
- AJeevan - 02-18-2006 <b>மண்</b> <img src='http://www.virakesari.lk/VIRA/Cinema/images/man_1.png' border='0' alt='user posted image'> நேற்று இரவு <b>மண்</b> திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மண் திரைப்பட இயக்குனர் புதியவன் இசையமைப்பளார் விஜய் மற்றும் திரைப்பட கதாநாயகன் ஆகியோர் சுவிஸுக்கு வந்திருந்தனர். நல்லதொரு முயற்சி. - Shan - 02-19-2006 <img src='http://img483.imageshack.us/img483/1217/11wj2.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img470.imageshack.us/img470/3999/29kg.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img483.imageshack.us/img483/8643/38ei.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img470.imageshack.us/img470/2471/49hi.jpg' border='0' alt='user posted image'> இணைப்புகளை சரி செய்துள்ளேன் - மதன் - jsrbavaan - 02-19-2006 கொழும்பில எப்ப திரையிடுவினம்? - Shan - 02-23-2006 நன்றி மதன். கொழும்பில் மண் திரைப்படத்தின் பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் 4ம்திகதி (மார்ச் மாதம்) நடைபெறஉள்ளது. மண் இறுவெட்டு ஐரோப்பா எங்கும் தற்போது வெளியாகியுள்ளது! - Shan - 02-28-2006 மண் படத்திற்கு ஜேர்மனியில் அமோக ஆதரவு. - Shan - 03-02-2006 [size=24][color=red]தென்னிந்திய திரையில் மண்ணிற்கு அங்கிகாரம்! [size=18]தென்னிந்திய திரையல் மண் திரைப்படத்தை திரையிட தென்னிந்திய விநியோகஸ்தர்கள் முன்வந்துள்ளனர். மண் படத்தின் இந்திய உரிமையை வாங்கியவர்கள் மார்ச் இறுதிப் பகுதியில் சென்னை மற்றும் தமிழ் நாடெங்கும் திரையிட உள்ளனர். இதை விட முதன் முதலாக நம்மவர் படமான மண்ணை மலையாள திரைகளிலும் திரையுட உள்ளனர். மலையாள பட உரிமையயை வாங்கியுள்ள நிறுவனம் இந்த படத்தை ஏப்பிரல் முதல் மாத பகுதியல் அங்கு வெளியட உள்ளனர். இது மண் படத்திற்கும் அதில் பணியாற்றிய அத்தனை ஈழ கலைஞர்களுக்கும் கிடைத்த ஒரு மாபெரும் அங்கீகாரம். இலங்கை உரிமை கூட தற்போது விற்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவலில் படம் வெளியாகும் அதே சமயம் இலங்கையில் 18 திரை அரங்குகளில் ஒரே சமயத்தில் மண் வெளி வர உள்ளது. - இளைஞன் - 03-02-2006 கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இத் திரைப்பட உருவாக்கத்தில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களுக்கும், தொழில்நுட்பவியலாளர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியளிக்க வாழ்த்துக்கள். மண் திரைப்படத்திற்கு வருகிற நல்ல விமர்சனங்களையும் முடிந்தால் இங்கே இணையுங்கள். நன்றி - Shan - 03-02-2006 [size=24]இலங்கை நடிகை அகில இந்திய சிறந்த நடிகை விருதை பெறுவாரா? மண் படத்தின் கதா நாயகியின் நடிப்பை பார்த்த சந்திரமுகி புகழ் பட தொகுப்பாளர் சுரேஸ் அர்ஸ் நிச்சயம் சிறந்த நடிகை விருது இவருக்குதாக் என அடித்து கூறியுள்ளார். மண் படத்தை அகில இந்திய திரைப்பட விருதுக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் இந்த படம் நிச்சயம் ஒரு விருதைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஒளித் தொகுப்பை செய்யும் போதே தான் இதை முடிவு செய்து விட்டதாகவும் பின்னர் இந்த படத்தை திரையில் பார்த்த போது தனது நம்பிக்கை வீண்போகது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த படத்தை பார்த்த கலைப் புலி தாணு ஆரம்ப பாடசாலை தரத்தில் ஒரு படத்தை எதிர் பார்த்து வந்த தனக்கு ஒரு பல்கலைக்கழக தரத்தில் இந்த படம் இருப்பதை கண்டு வியந்து பாராட்டியுள்ளதுடன், இந்தியாவில் நிச்சயம் இது நல்ல வரவேற்பை பெறும் என்று கூறியுள்ளார். இந்த படத்தை பார்த்த பின்; அவர் தானாகவே முன்வந்து படத்தை இந்தியாவில் திரையிட உதவியுள்ளார். - Shan - 03-02-2006 <img src='http://img230.imageshack.us/img230/2296/paper19qr.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img79.imageshack.us/img79/3450/paper27en.jpg' border='0' alt='user posted image'> - Shan - 03-07-2006 கடந்த சனிக்கிழமை 4ம் திகதி பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் மண் பட பாடல் இறுவெட்டு வெளீயீடு நடை பெற்றது. பெருந் திரளான மக்கள் சமூகம் அளித்திருந்தனர். படத்தின் பாடல்களை ரசித்துடன் படத்தின் குறுங் காட்சிகளையும் கண்டு ரசித்தனர். அங்கு வந்திருந்த 500 இற்கும் மேற்பட்ட ரசிகர்கள் படம் எப்போது திரைக்கு வரும் என்று ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர். - sanjee05 - 03-07-2006 கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.உங்கள் முயற்சிகள் வெற்றியளிக்க வாழ்த்துக்கள். - Shan - 03-08-2006 8வது ஆசியப் பெண்கள் திரைப்பட விழாவில் மண்! http://www.tonguesonfire.com/2006/mann.htm - Shan - 03-08-2006 http://www.geocities.com/mannthefilm/mannpromo1.html - Shan - 03-17-2006 London Preview Show! மண் படத்தின் விசேட காட்சிகள் ஞாயிறு மதியம் 2.00 மணிக்கு ஹரோவில் உள்ள ஸபாரி சனிமாவில் காண்பிக்கப்பட உள்ளது.! - Shan - 03-27-2006 Date: Mon, 20 Mar 2006 08:46:33 +0000 From: "Joseph Jeyakumar" To: puthiyavanr@yahoo.co.uk Subject: Re:film Plain Text Attachment [ Download File | Save to Yahoo! Briefcase ] Hi Puthiyavan, It was a great evening except an unwanted tour of Harrow we had for more than half hour. You would have been thrilled to here so many +ve comments and wishes to your film. We are very proud of you all. It was a great challenge and you really have done it. South Indian films spend so much money in their films but can't beat yours. I'm not saying these words to "butter" you, it's my honest opinion. I don't think anyone will believe that it was your third film if they see it for the first time. This film industry is also very important to our society to educate and for entertainment. As media is so powerful you can achieve a lot. In my opinion South Indian films are doing more harm through the violence to the minds of the young people and it's a fact. I overheard that there will be an other show. Can you tel me when and where, so that I can tell my friends about it with my comments. Many many congratulations, keep up the good work. Joseph - Shan - 03-27-2006 மண் படத்தின் லண்டன் காட்சிகள் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதலாவது காட்சியின் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர். அனைவரும் புதியவின் திரைப்படத்தை பாராட்டியதுடன் தொடர்ந்த படைப்புகளுக்கு தமது ஆதரவை நல்குவதாக உத்தரவாதம் கொடுத்துள்ளனர். அநேக ரசிகர்களின் வேண்டுகோளை அடுத்து எதிர்வரும் ஞாயிறு 2 ஏப்பிரல் மாதம் 1.45 இற்கு மீண்டும் ஒரு காட்சி ஹரோ சபாரியல் நடைபெற உள்ளது. - கந்தப்பு - 03-30-2006 இப்படத்தில் நடித்த சந்திரசேகர், தமிழக வாரச்சஞ்சிகை ஒன்றுக்கு பேட்டி கொடுக்கும்போது ' நான் மண் என்ற சிங்களப்படத்தில் நடித்தேன்' என்றார். அவருக்கு எது தமிழ், சிங்களம் என்று தெரியவில்லை போல இருக்கிறது. சிலவேளை இப்படத்துக்கு ஆங்கிலப்பெயரில் பெயர் வைத்திருந்தால் தமிழ்படம் என்று சொல்லியிருப்பாரோ? : :? - putthan - 03-30-2006 என்ன கந்தப்பு டயலக்கை அடிக்கடி மாத்துறீங்க? - Shan - 03-30-2006 குமுதம் பத்திரிகைக்கு சந்திரசேகர் கொடுத்த பேட்டியில் தமிழன் தமிழனுக்கே இடம் கொடுக்கிறான் இல்லை, ஆனால் இலங்கையிலிருந்து தனக்கு சந்தர்பம் கொடுத்துள்ளனர். மண் என்ற படத்தில் தானக்கு இலங்கையர்கள் கூப்பிட்டு தன்னை மதித்து சந்தர்பம் தந்தார்கள் என்று பெருமையுடன் கூறினார். ஆனால் குமுதம் பத்திரிகைக்கு இலங்கையில் யார் தமிழ் படம் எடுகப்போகிறாரகள். அது சிஙக்ள படம் தான் என்ற கற்பனையில் எழுதியள்ளனர். இது பற்றி சந்தழர சேகரிடம் கேட்டபோது அவங்க மட பசங்க அங்க அறிவே அவ்வளவு தான் சரர், என்று மனம் வெதும்பினார். குமுதம் மட்டுமல்ல அனேக இந்திய பத்திரிகைகளைப் பொறுத்த வரை அவர்களை பொறுத்தவரை இலங்கையில் சினிமா என்றால் சிங்கள சினிமாவைத்தான் தெரியும்! தரமான தமிழ் படங்கள் இனி அங்கிருந்து வரும் போதுதான் தமிழ் சினிமாவும் இலங்கையில் உள்ளது என்பது புலப்படும். தமிழகத்தில் மண் திரையிடுகையில் நிச்சயம் மண் அந்த குறையை நிரப்பும் என நம்புவோம்! - sinnakuddy - 03-30-2006 பாரதியார் சிங்கள தீவுக்கு பாலம் அமைப்போம் என்று சொல்லி கொடுத்தபடியால்...இப்பவும் அப்பிடி...... இதில் பாரதியாரை பற்றி குறை கூறுவதற்கு எந்த தகுதியில்லாத நான்...ஏன் கூறியிருப்பாரென்று...வாத பிரதிவாதத்துடன் தெளிவடைவதற்க்காகவே....இக்கருத்தை வைத்துள்ளேன்... :?: |