![]() |
|
பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53) +--- Thread: பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள் (/showthread.php?tid=1981) Pages:
1
2
|
- tamilini - 12-19-2005 உந்த தலையாட்டி பற்றி ஆக்கள் சொல்லக்கேட்டிருக்கிறன் கண்டதில்லை. அந்த தலையாட்டியள் யார் எங்க எங்க ஊரில இருக்கிற எட்டப்பர்கள் தானே?? :roll: :roll: - sathiri - 12-19-2005 Quote:உந்த தலையாட்டி பற்றி ஆக்கள் சொல்லக்கேட்டிருக்கிறன் கண்டதில்லை. அந்த தலையாட்டியள் யார் எங்க எங்க ஊரில இருக்கிற எட்டப்பர்கள் தானே?? எட்டப்பர்கள் எண்றில்லை சிலரை பலவந்தமாக பிடித்து அடித்தும் அப்பிடி வைத்திருப்பார்கள் யாரையாவது தலையாட்டி காட்டி குடுக்காட்டிலும்: அவைக்கு அடிவிழும் அதோடை அவைக்கும் உங்களிலை ஏதும் தனிப்பட்ட கோவமெண்டாலும் தலையாட்டிட்டு போடுவினம் அதுவேறை பிரச்சனை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [/quote]
- Rasikai - 12-19-2005 ஓமோம் சாத்திரி சொன்னமாதிரித்தான் எட்டப்பர்கள் என்று இல்லை. ஒரு ரவுண்டப் பில் பிடிக்கிற ஆக்களையும் அடுத்த ரவுண்டப்புக்கு கொண்டு வருவினம். ஒருக்கா உப்புடித்தான் திருகோணமலை சண்முகா இந்துக்கல்லூரி திறப்பு விழாவுக்கு திருகோணமலை எம் பி யை கூப்பிட்டு இருந்தவை அப்ப அவரும் வந்து திறப்பு விழாக்கு ஒபின் பண்ணி பேசிக்கொண்டு இருக்கும் போது யாரோ குண்டு வைத்துவிட்டார்கள். அதுல மாட்டுப் பட்டது திருகோணமலை பொடியன் ஒருவன் அடுத்த ரவுண்டப்புக்கு அவனைத்தான் கொண்டு வந்த என்று சொன்னார்கள் எனக்கு சரியாத் தெரியவில்லை. - Snegethy - 12-19-2005 சாத்திரியண்ணா நீங்க யாருக்கும் தப்புத்தப்பா சாத்திரம் சொல்லி உங்களைப் பாரத்தும் யாரும் தலையை ஆட்டினவையோ<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 12-19-2005 Quote:எட்டப்பர்கள் எண்றில்லை சிலரை பலவந்தமாக பிடித்து அடித்தும் அப்பிடி வைத்திருப்பார்கள் யாரையாவது தலையாட்டி காட்டி குடுக்காட்டிலும்: அவைக்கு அடிவிழும் அதோடை அவைக்கும் உங்களிலை ஏதும் தனிப்பட்ட கோவமெண்டாலும் தலையாட்டிட்டு போடுவினம் அதுவேறை பிரச்சனைஅடப்பாவமே அப்ப தாங்கள் தப்பிக்கவும் தலையாட்டிறதா?? நான் நினைச்சன் கூலிப்படைகளாயிருக்குமோ என்டு. எத்தனை கொடுமை. :evil: :evil: - kuruvikal - 12-20-2005 tamilini Wrote:உந்த தலையாட்டி பற்றி ஆக்கள் சொல்லக்கேட்டிருக்கிறன் கண்டதில்லை. அந்த தலையாட்டியள் யார் எங்க எங்க ஊரில இருக்கிற எட்டப்பர்கள் தானே?? :roll: :roll: தலையாட்டிக்கே தலையாட்டியைத் தெரியுமோ...??! அதுபோக.. கட்டுநாயக்கா வாற வழியெல்லாம் தலையாட்டி இருக்குது...கொழும்பில சென்றிக்கு சென்றி இருக்குது...அதுவும் தெரியாதோ.. பேப்பரில படிச்சதில்லையா..! வவுனியா தாண்டேக்க தலையாடியைத் தெரியல்லையோ...!:wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 12-20-2005 ரசிகை நீங்களும் திருகோணமலையிலை மாட்டுப்பட்டிருக்கிறியள் என்ன............. நானும் டெலிக்கொமிலை வேலை செய்யேக்கை திருகோணமலை கோட்டைக்குள்ளுக்குத்தான் ரவர் இருக்குது அங்கு நாங்கள் போகேக்கை வெளியிடத்துக்கு கோல் எடுக்க அதுக்கை இருக்கிற ஆமிக்காரன்கள் வருவங்கள் சிலவேளை நாங்கள் நேரம்போனால் முடியாது எண்டுட்டு வந்திடுவம் ஒருநாள் ரவுண்டப் முத்தவெளி ஸ்ரேடியத்துக்கு கொண்டு போட்டாங்கள் லைனிலை போறம் தலையாட்டி சும்மா விட்டுட்டான் ஆனா பக்கதிலை நின்ட ஆமிக்காரன் எங்கள் 2பேரைப் பிடிச்சிட்டான் அவனுக்குதான் நாங்கள் பிறியாக்கோல் குடுக்கேலை பஸ்சுக்கை ஏத்தியாச்சு டக்கெண்டு பக்கத்தில் வந்த டெலிக்கொம் பெடியளுட்டை சொல்லிவிட்டம் அவங்கள் வெளியிலை போய் இன்ஜினியரிட்டை சொல்லி பிரகேடியரோடை டெலிபோனிலை கதைச்சு அவர் வைலைசிலை மசேச்சை குடுத்தபடியால் காம்புக்கு கொண்டு போக முன்னமே விட்டுட்டாங்கள் கடவுள்தான் காப்பாத்தினது.... அதுக்கு பிறகு ஆமிக்காரங்கள் யார் கோல் கேட்டு வந்தாலும் மாட்டன் எண்டே சொல்லுறதேயில்லை.................. - Snegethy - 12-20-2005 சாத்திரியண்ணா வவுனியாப் பக்கம் போனதே இல்லை. தலையாட்டியளிட்ட நான் ஒருநாளும் மாட்டுப்பட்தில்லை.ஆனால் ஒரு நாள் ஐந்தாம் வகுப்பெனறு நினைக்கிறன் விடிய ஆறு மணிக்கு வகுப்பிருந்தது.வீட்ட விட்ட வெளியல வந்தா நீட்டுக்கு நிறை பேர் குந்தியிருக்கினம் கொஞ்ச ஆமிக்காரர் முன்னால நிண்டு கதைக்கினம்.நாங்கள் நாலு பேர் ரியூசனுக்குப் போகோணும்.அவன் விட்டாத்தானே.ஒரு ஆமி சொன்னான் உங்க எல்லா இடமும் செக்கிங் நடக்குது இண்டைக்கு நீங்கள் இதை தாண்டி போக ஏலாது திரும்ப போங்கோ எண்டு.அண்டைக்கு முக்கியமான வகுப்பு வேற எங்களுக்கு கவலையாப் போச்சு.பிறகு ஒரு நாள் மாலுசந்தியில சுடுபாடு நடந்தது பின்ன பள்ளிக்கூடம் போன பிள்ளையள் எல்லாரையும் மறிச்சுக்கொண்டு போய் கிறவுண்டுல விட்டுட்டாங்கள்.எங்களுக்கு பயம் ..ஒரு நாளும் பள்ளிக்கூட சீருடையோட ஒருதரையும் உப்பிடி மறிக்கிறது இல்லை. கொஞ்ச நேரத்தில பெடியஙங்கள் எல்லாரையும் தலையதட்டி வரும் வரைக்கும் நிக்கச் சொல்லிப்போட்டு எங்களை வேற பாதையால போகச் சொல்லி விட்டிட்டாங்கள். - Rasikai - 12-20-2005 MUGATHTHAR Wrote:ரசிகை நீங்களும் திருகோணமலையிலை மாட்டுப்பட்டிருக்கிறியள் என்ன.....................ஓம் முகத்தார். 4 வருடங்கள் திருகோணமலை வாசம் தான். யாழ்ல சுதந்திரமாக இருந்துட்டு வந்து திருகோணமலைல ஆமிட கட்டுப்பாட்டுல இருக்க ரொம்பவே கஷ்டமாக இருந்துச்சு.
- Snegethy - 12-20-2005 முகம்ஸ் திருகோணமலை ஆகிக்காரர் கொஞ்சம் வில்லங்கம் பிடிச்சவைதான் போல.அங்க எஞ்சினியர்ஸ் குவாட்டர்ஸ்க்கு பக்கத்தில ஆமி காம்ப் எல்லோ.நான் லீவுக்கு அங்க வந்து நிக்கிறனான்.ஆமிக்காரர் வாசல்ல நிப்பாங்கள் நான் என்ன விட பெரிய சைக்கிளை ஓடிக்கொண்டு வந்தா கேற்றடில வந்து வழியை மறிச்சுக்கொண்டு நிப்பாங்கள்.சொக்லற் நீட்டுவாங்கள்.விட்டாக் காணும் என்று ஓடிடுவன். நீங்க அவங்களுக்கு ரெலிபோன் கதைக்க விட்டு தப்பீட்டிங்கள்.எங்கட மாமா மொறட்டுவாவில இருந்து லீவுக்கு வந்து நிண்டவராம்.ஆமிக்காறர் வாகனம் தள்ள வரச் சொல்லக் கூட்டிக் கொண்டு போனவங்கள்.இப்ப 18 வருசமாச்சு இருக்கிறாரா இல்லையெண்டே தெரியாது. |