Yarl Forum
த்ரிஷா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: த்ரிஷா (/showthread.php?tid=5713)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27


- Mathan - 02-15-2005

அவாவா? எந்த அவா? நேக்கு ஒரு அவாவும் கிடையாது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 02-15-2005

Quote:அவாவா? எந்த அவா? நேக்கு ஒரு அவாவும் கிடையாது
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மதன் அவா வரத்தான் காட்டனும் என்றன். :mrgreen:


- Mathan - 02-15-2005

அப்ப சரி ஐயர் ஆத்து பக்கம் அவாவை தேடி பாக்கிறன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 02-15-2005

ஏன் இவா சாமில நடிச்சவுடன்.. அவாவம் ஐயர் ஆத்துப்பக்கமோ..?ஃ :wink:


- Mathan - 02-16-2005

இல்லை நீங்க "அவா" என்றூ சொன்னதால் அப்படி சொன்னேன்


- kavithan - 02-17-2005

Quote:பாவம் வசி படத்தை பார்த்து ரசிக்கட்டும் ஏன் போட்டு குடுக்குறீங்க கவிதன்
_________________
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Quote:நல்ல பொருத்தம், யான் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறவேண்டும் என்றுதான் பொருத்தம் பார்க்க இங்கு இணைத்துள்ளேன்

ஓ.. யாராவது செய்து பாத்து பொருத்தம் இல்லை என்று தாடிவைத்து தண்ணியடித்து அலையட்டும் என்றா... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Quote:அவாவா? எந்த அவா? நேக்கு ஒரு அவாவும் கிடையாது.
_________________

ஓ.. இவா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 02-18-2005

த்ரிஷாவை முந்துவாரா ஸ்ரேயா?

<img src='http://cinesouth.com/images/new/24022005-NSV0image1.jpg' border='0' alt='user posted image'>

வர்ஷம் படத்தில் மழை சீன்களில் சீன் காட்டிய த்ரிஷாவை உண்டு இல்லை என்று பண்ணிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா.

த்ரிஷா நடித்த வர்ஷம் தெலுங்குப் படம் தான் இப்போது தமிழில் மழை என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுதிறது. தெலுங்கில் த்ரிஷா காட்டிய அதீதமான கவர்ச்சி பெரிதும் பேசப்பட்டது.

குறிப்பாக மழைக் குளியல் காட்சிகளில் த்ரிஷா கவர்ச்சியின் 'கலங்கரை விளக்கமாக' திகழ்ந்து, ஆந்திரா மணவாடுகளை உசுப்பேத்தினார். த்ரிஷாவின் கவர்ச்சிக்காகவே படு ஓட்டம் ஓடியது.

தாராள விஷயத்தில் த்ரிஷாவுக்கெல்லாம் த்ரிஷாவாக விளங்குபவர் ஸ்ரேயா. தெலுங்கில் அவர் செய்த ரோலை தமிழில் செய்யும் ஸ்ரேயா, மழை படத்தில் கலக்கி எடுத்து வருகிறார்.

தனது மகன் சரணின் மூலம் மழை படத்தை தயாரிக்கும் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், முதலில் த்ரிஷாவைத்தான் நடிக்கக் கூப்பிட்டுள்ளார். ஆனால் தெலுங்கில் காட்டியது போல எல்லாம் தமிழில் கவர்ச்சி காட்ட முடியாது என்ற தனது பாலிஸியைக் கூறி ஸாரி சொல்லி விட்டார் த்ரிஷா.

இதையடுத்துத் தான் ஸ்ரேயாவைப் பிடித்துப் போட்டனர். ஸ்ரேயாவை புக் செய்யும் போதே த்ரிஷா மறுத்ததையும், அவர் 'நடுங்கும்' வகையில் தூக்கல் கவர்ச்சி வேண்டும் என்று சொல்லி அதற்கு ஸ்ரேயாவிடம் உத்தரவாதத்தையும் வாங்கிக் கொண்டனர்.


படத்தில் ஜெயம் ரவி தான் ஹீரோ. ஒரு பாடலுக்கு மழையில் நனைந்தபடி ஹீரோயினுக்கு லிப்டுலிப் கிஸ் தர வேண்டும் ஹீரோ. ஆனால், ஹீரோ ரவி சொதப்பியெடுக்க, அந்தக் காட்சியில் தானே முன் வந்து மௌத் கிஸ் கொடுத்து சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் ரொங்க வைத்தார் ஸ்ரேயா.

மேற்படி விஷயங்களில் கலக்கி வருகிறாராம் ஸ்ரேயா. கதைப்படி நாயகனும், நாயகியும் சந்திக்கும்போதெல்லாம் மழை பெய்யுமாம். சாதா தூறல் காட்சிக்கே நம் டைரக்டர்கள், ஹீரோயினை வெள்ளை உடை அணிய விட்டு ஆட்டம் போட்டு கலக்க வைப்பார்கள்.

இந்தப் படத்திலோ அவ்வப்போது மழை, அடிக்கடி மழை, எடுத்ததற்கெல்லாம் மழை. கவர்ச்சிக்கு கேட்க வேண்டுமா!

மழைக் காட்சிக்காக சூட்டிங்கில் அடிக்கடி தண்ணீரை மேலே ஊற்றிக் கொண்ட இருந்ததால் ஸ்ரேயாவுக்கு 'ஜல்ப்பு' பிடித்து விட்டதாம். இதனால் வெந்நீரை ரெடி செய்து பதமான ஹீட்டில் அதை மழையாக பெய்ய வைத்து காட்சிகளை எடுத்து வருகிறார்களாம். ஸ்ரேயாவுக்காக வெந்நீர் மழை பெய்து கொண்டிருக்கிறது சூட்டிங் நடக்கும் செட்டில்.

ஸ்ரேயா, த்ரிஷா விஷயத்தில் இன்னொரு வேடிக்கையும் உண்டு. ஸ்ரேயா நடித்த முதல் தமிழ்ப் படம் எனக்கு 20 உனக்கு 18. இதில் த்ரிஷாதான் நாயகி. அவருடன் இரண்டாவது நாயகியாக நடித்திருப்பார் ஸ்ரேயா.

ஹீரோயின் என்று கூட்டி வந்துதான் இயக்குனர் ஜோதிகிருஷ்ணா ஸ்ரேயாவை அதில் நடிக்க வைத்துள்ளார். ஆனால் இடையில் புகுந்த த்ரிஷா, முதல் ஹீரோயினாகி விட்டார், ஸ்ரேயா பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

இப்போது த்ரிஷா மறுத்த படத்தில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா.

ThatsTamil


- Mathan - 03-03-2005

<img src='http://cinesouth.com/images/new/28022005-TGS0image1.jpg' border='0' alt='user posted image'>

ஹீரோக்களை முந்தும் த்ரிஷா சம்பளம்

வேலியில் போகிற ஓணானை வேட்டியில் பிடித்து விடுவதில் கெட்டிக்காரர்கள் நம் தயாரிப்பாளர்கள். முற்பகலில் நடிகர்களின் சம்பளத்தை ஏற்றிவிட்டு பிற்பகல் சத்யாகிரகமிருக்கும் சந்தர்ப்பவாதிகள். இவர்கள் ஏற்றிவிட்டு இறக்க முடியாமல் தவிக்கும் சம்பள பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் த்ரிஷா.

'திருப்பாச்சி' வரை தமிழில் த்ரிஷா வாங்கிக்கொண்டிருந்த சம்பளம் 25 முதல் 30 லட்சங்கள். தெலுங்கில் இவர் நடித்த 'வர்ஷம்' ஹிட். 'நு ஒஸ்தானன்டே நேனு ஒத்தன்டானா' சூப்பர் ஹிட். தயாரிப்பாளர்கள் பரபரவென சம்பளத்தை உயர்த்தி எழுபது லட்சத்திற்கு கொண்டு வந்தனர்.

தமிழில் அதிகபட்சம் முப்பது லட்சம் என்பதால், தமிழ் புரொடியூசர்களை கண்டால் கசப்பு மிட்டாய் தின்ற குழந்தையாக முகத்தை திருப்பிக் கொள்கிறார் த்ரிஷா. இவர் மகேஷ்பாபுவுடன் நடிக்கும் 'அத்துடு' படத்திற்கு சம்பளம் 70 லட்சங்கள். இதற்கு கீழ் பத்துகாசு குறைந்தாலும் இந்த சோளக்கொல்லை பொம்மை ஆக்ட் கொடுப்பதில்லை.

இவரை புகழின் உச்சியில் கொண்டு சென்ற 'நு ஒஸ்தானன்டே நேனு ஒத்தன்டானா' பட தயாரிப்பாளர் எம்.எஸ். ராஜூ த்ரிஷாவை அணுகியிருக்கிறார். தான் அடுத்து தயாரிக்கும் 'பவுர்ணமி' படத்திலும் நடித்துத்தர வேண்டும் என்று கேட்க, த்ரிஷா காட்டியது ஏழு விரல்களை. திடீர் அட்டாக்கிற்கு ஆளான ராஜூவுக்கு வேறு வழியில்லை. எழுபது லட்சத்திற்கு 'புக்' செய்துவிட்டு திரும்பியிருக்கிறார்.

மூன்று பாடல்கள், நான்கு சீன்களில் தலைகாட்ட எழுபது லட்சமா? தமிழ் ஹீரோக்கள் ஸ்ரீகாந்த், பிரசாந்த், அர்ஜூன், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களின் கேள்வி இது. படம் முழுக்க வில்லனை துரத்தி அடிக்கும் இவர்களுக்கே இந்த சம்பளமில்லை.

காலம் செய்த கோலம்?

Cine South


- KULAKADDAN - 03-03-2005

என்ன திரிஷாவின் செய்தியுடன் யாரோ ஓருவரது படம்........இது நதியாவா............


- Mathan - 03-03-2005

ம் நதியாதான். பழைய கனவுக்கன்னி


- KULAKADDAN - 03-03-2005

நதியா நதியா நைல் நதியா..... பாட்டு ஞாபகம் வறேல்லயோ........


- Mathan - 03-03-2005

இல்லை. தற்போது வேறு பாடல்கள். அது தவர அந்த பாடலை கேட்டும் நீண்டடட நாட்களாகிவிட்டது. இணையத்தில் MP3 or WMA வடிவில் இருக்கின்றதா?


- KULAKADDAN - 03-03-2005

தெரியலை.....நதியா படத்தை பாத்தவுடன் ஞாபகம் வந்தது முதல் வரி தான்....
அந்த காலத்தில் நதியா காப்பு....தலை அலங்காரம்......கிளிப்.......எண்டு ஒரு அலையே இருந்தது....தெரியும்.....


- shiyam - 03-03-2005

நல்லூர் திருவிழாவிலை நதியா கடகம் நீத்துபெட்டி பாய் எணடெல்லாம் வித்தவை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-03-2005

Quote:நல்லூர் திருவிழாவிலை நதியா கடகம் நீத்துபெட்டி பாய் எணடெல்லாம் வித்தவை
_________________
மேட் பை சியாம் அண்ணா அப்படியா.. பறவாய் இல்லையே நம்மாக்களும் விளையாடியிருக்கிறார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நான் இந்தியா சென்ற பொழுது பார்த்தன். அப்ப அண்ணி என்றொரு தொடர் பிரபலமாய் இருந்தது (உண்மையா அந்தம்மா நல்லா நடிச்சாங்க) அவங்க பேரில சாறியைக்கண்டன். சிரிப்பு தான் வந்திச்சு. :|


- shiyam - 03-03-2005

போராட்டம் ஒன்று இல்லாட்டி இப்பிடித்தான் எங்கடையளும் தெளிவில்லாமல் தென்னிந்திய நடிகர் நடிகைகளிற்கு ரசிகர் மன்றம் அமைத்து கையிலை பச்சை குத்தி கொண்டு திரிஞ்சிருப்பினம் :oops:


- Mathan - 03-03-2005

சூர்யா த்ரிஷா இணையும் படம்

<img src='http://cinesouth.com/images/new/03032005-THN11image1.jpg' border='0' alt='user posted image'>

"என்ன, இந்தப் பக்கம் ஆளையே காணோம்?"

த்ரிஷாவை பார்த்தால் சென்னைவாசிகள் கேட்கும் கேள்வி இது. மாதத்தில் இருபத்தைந்து நாள்கள் ஹைதராபாத்தில்தான் இருக்கிறார் த்ரிஷா. இப்போது நடித்துக்கொண்டிருப்பது மகேஷ்பாபுவுடன் தெலுங்குப்படம் 'அத்தடு'.

ஆளைக்காணோம் என்று கேள்பவர்களின் வாயை அடைக்க, புதுப்படம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறார் த்ரிஷா. ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் இது.

த்ரிஷா அறிமுகமான படம் 'லேசா லேசா' என்றாலும், முந்திக்கொண்டு ரிலீஸானது 'மௌனம் பேசியதே'. அமீர் இயக்கிய இந்தப்படத்தில் சூர்யாதான் ஹீரோ. மிஸ். சென்னை, முன்னணி மாடல் என்று திரைக்கு வரும் முன்பே பிரபலமாகியிருந்த த்ரிஷாவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 'மௌனம் பேசியதே' பேசாமலே அனைத்தையும் கவிழ்த்துவிட்டது. படம், அதன் இயக்குனர், இசை, ஹீரோ சூர்யா என அனைத்துத் தரப்பினரும் பாராட்டப்பட்டனர், த்ரிஷாவை தவிர! பிரபல பத்திரிகைகளும் அவரை கண்டுகொள்ளவில்லை.

இப்போது காலம் திரும்பியுள்ளது. தமிழிலும் தெலுங்கிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகை த்ரிஷா. 'மௌனம் பேசியதே'யில் கிடைக்காத பாராட்டைப் பெற தயாராகி வருகிறார் த்ரிஷா.

இந்தப்படத்தை தயாரிப்பவர் ஹரியின் குரு சரண்.

சினி சவுத்


கோலா விளம்பரத்தில் த்ரிஷா: சிம்ரன் இடத்தில் த்ரிஷா - vasisutha - 03-07-2005

<b>கோலா விளம்பரத்தில் த்ரிஷா: சிம்ரன் இடத்தில் த்ரிஷா</b>


தெலுங்கில் ஏக பிசியாய் இருக்கும் த்ரிஷா, கோலாவின் புது டிரண்டாக அறிமுகம் ஆகவுள்ள ஆரஞ்ச் ஃபேண்ட்டா விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
<img src='http://img109.exs.cx/img109/3451/trisha19uw.jpg' border='0' alt='user posted image'>


இடையழகி சிம்ரன் விட்டுட்டுப்போன இடத்தை நிரப்ப கோலா நிறுவனம் த்ரிஷாவை அணுக, த்ரிஷாவோ டபுள் ஓகே சொன்னாராம்.


ஆரஞ்ச் நிற பூக்களைப்போல் புன்னகைப் பூத்து ஆரஞ்சு நிற ஃபேண்ட்டாவிற்காக போஸ் கொடுக்க இப்பொழுது, விளம்பரப் பலகையில் ஊர் முழுவதும் வலம்வர தொடங்கிவிட்டார் த்ரிஷா.

<img src='http://img109.exs.cx/img109/1589/trisha30kr.jpg' border='0' alt='user posted image'>


கொளுத்தும் வெயிலுக்கு இதமாய் சென்னைக்கு குளிர்ச்சியாய் ஆரஞ்ச் ஃபேண்ட்டா கொடுக்கிறதாய் கோலா நிறுவனத்தினர் சொன்னாங்க. சரின்னு நானும் விளம்பரத்தில் நடிக்க ஒத்துக்கிட்டேன் என பொன் நகையோடு சொன்னவரிடம் உங்கள் காட்டுல தொடர் மழைதான்னு கேட்க, காற்றுள்ள போதே தூற்றிக்கணும் என்ற பொன்மொழியை சொல்லி ஆரஞ்ச் பழரசமாய் மின்னி மறைந்தார் த்ரிஷா.
<img src='http://img109.exs.cx/img109/2301/trisha49vi.jpg' border='0' alt='user posted image'>

கோடையில தாகம் தீர்க்க வருது ஆரஞ்ச் ஃபேண்ட்டா \ அந்த ஃபேண்ட்டாவிற்கு மேலும் பெரிசா குளிரை கொடுக்கப் போறது நம்ம த்ரிஷா \என சொல்லி நாமும் எஸ்கேப் ஆனோம்.


thanx vikatan.com


- Mathan - 03-07-2005

நன்றி வசி. இனி Orange Fanta தான் குடிக்கணும் அதை குடிச்சா slim & cute கிடைக்கும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 03-07-2005

திரிசா காட்டில் மழை பெய்யுதோ இல்லயோ....களத்தில திரிஷா மழை ஒயாது...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->