Yarl Forum
Boys - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: Boys (/showthread.php?tid=8154)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12

- veera - 10-28-2003

பல தடவைகளில் விமர்சனங்களைக் காதால் கேட்டபோது எரிச்சலடைந்து சத்தம் வரும் உபகரணத்தை இழுத்து மூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.சம்பந்தப்பட்டவர்களுக்கு யாரும் சட்டிக்காட்டினால் அதனைப் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை.

உண்மையில் அஜீவன் என்ற இயக்குனரிடம் இருக்கும் ஒரு ஆழ்ந்த சிந்தனையை அவராகவே வாய் திறந்தாலும் விமர்சனங்களின் பின்னர் யாரும் நம்பப்போவதில்லை.

அதே நேரம் படத்தினை எடுக்க முன்னர் உங்கள் கருத்துக்களைக் கூறி விட்டால் படமெடுப்பதன் சுவாரஸ்யமும் எதிர்பார்ப்பும் குறைந்து விடும் எனும் நியாயமான காரணங்களினால் நீங்கள் உங்கள் சிந்தனைகளை வெளியிடுவதில்லை.

இதைப் புரிந்து கொள்ளாத சிலர் தங்கள் வாய்க்கு வந்தபடி றொபட்சன் றிச்சட்சன்களை ஆதாரங்காட்டி விமர்சனக் கருத்துத் திணிப்புக்களை செய்வது உண்மையிலேயே கண்டிக்கப்பட வேண்டியது.

எச்சில் போர்வையாக இருக்கட்டும்,நிழல் யுத்தமாக இருக்கட்டும் அது அஜீவன் என்ற சிற்பி செதுக்கிய சித்திரம்.

அங்கு ஒரு ராஜா உருவாவதும் ஒரு ராணி மக்கள் மனதில் நிலைத்து நிற்பதும் அந்த சிற்பியின் கைவண்ணம்.

சமீபத்தில் பிதாமகன் டிரெய்லர்களை சண் தொலைக்காட்சியில் பார்த்தபோது நடிகர்கள் எப்படி நடந்து வரவேண்டும் என்பதைக் கூட இயக்குனர்கள் சொல்லிக்கொடுப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

அண்மையில் மன்மதரசா பாடலினைப் பாடிய பாடகியின் பேட்டியொன்றின் போது பாடலின் இறுதி வரியான 'என'ன கணக்குப் பண்ணேன்டா' எனும் வரியைத் தான் பல வடிவங்களில் பாடிக்காட்டியதாகவும் அதில் ஒன்றுதான் இயக்குனருக்குப் பிடித்ததாகவும் அதனை அவர் படத்தில் 3 தடவை Loop செய்ததாகவும் கூறினார்.

எனவே இயக்குனர்களின் ஆழ்ந்த சிந்தனையில் அவருக்கு திருப்தியில்லாமல் கோடிக்கணக்கில் தயாரிப்பாளர்கள் பணம் போடப்போவதுமில்லை.இயக்குனர் தனது நேரத்தினை வீணடிக்கப்போவதுமில்லை.

<b>ஏதோ சினிமா என்பது சமூகச் சீர்திருத்தப் பள்ளி என்னும் பார்வையில் முக்தி நிலையடைந்த விமர்சகர்கள் போன்று சினிமா விமர்சனம் செய்யும் போது மனச்சாட்சி யென்று ஒன்று இவர்களை உறுத்துவதில்லையோ தெரியாது.</b>

ar rehman ஒரு ஜீனியஸ் என்று மேற்குலகின் பெரும் இசையமைப்பாளர்கள் வர்ணிப்பது தவறு என்று இந்த முக்திகள் விமர்சிக்கின்றனர்.

மற்றவர்களை விமர்சிக்கவும் ஒரு ஞானம் வேண்டும்.அது தனியே நாம் வளர்ந்து வந்த 20 வருட கால இளையராஜாவின் ஞானமாக மாத்திரம் இருந்துவிட்டால் உங்கள் விமர்சனங்கள் பக்க சார்பானவை தான்.

அப்படியானால் நவீனம் என்று ஒன்றிற்கு அவசியமே இல்லை.

<b>இன்று சுரதாவின் தமிழ் எழுத்துரு முயற்சிகளும்,களத்தின் கருத்தாடல் வசதியும்,
அஜீவனின் கமராத் திறமைகளும் அவ்வளவு ஏன் பாலசிங்கம் பிரபாகரன்,சுரேஸ்,சிவாந்தி என்று தொடர்ந்து செல்லும் சாதனை முயற்சிகளும் கூடத் தேவையே இல்லை.</b>

குற்றாலீஸ்வரன் ஆங்கிலக் கால்வாயைக் கடந்திருக்கவும் தேவையில்லை.அதிக உடற் பருமன் கால்கள் ஊனம் ஆனால் நானும் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பேன் என்று அண்மையில் நீச்சல் சாதனை புரிந்த சீனரும் இந்த உலகத்திற்குத் தேவையில்லை ?

விமர்சன முக்திகளைப் போன்று மேற்குலக வியப்புக்களை வாயைப் பிளந்து அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியது தான்.

<b>விமர்சகர்களுக்கு ஒரு பொறுப்பு உண்டு</b>.அது உங்கள் விறுப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட தார்மீகப் பொறுப்பு.முடிந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் கருத்துத்திணிப்புக்கள் செய்யாமல் ஒதுங்கியிருங்கள்.

இன்று சங்கரின் பாய்ஸ்...நாளை அஜீவனின் நிழல் யுத்தம் அதற்கும் பிறகு இன்னுமொருவன் .. விமர்சனங்களில் துவண்டு கொண்டேயிருப்பான்.

ஆனால் விமர்சன முக்திகள் காலையாட்டிக்கொண்டு வயிறு வளர்த்துக்கொண்டு இருப்பார்கள்.இதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் எல்லாம் சும்மா இருக்கவும் வேண்டும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

கலாட்டா கணபதியை,ஆளுக்கொரு ஆசையை,வடக்கு வாசைலைப் போன்ற சித்திரங்களை விமர்சிக்காத இந்த முக்திகள் <b>பாய்ஸ்,சண்டியர்,திருமலை,பிதாமகனை </b>விமர்சிப்பார்கள் இது ஏன் என்று புரியாத அளவுக்கு கேட்போர் இருப்பார்கள் என்று முக்திகள் நினைக்கின்றார்கள் போன்றும். :oops:

- yarl - 10-28-2003

நல்லதொரு விமர்சனம்.

பிதாமகன் பட முன்னோட்டம் நானும் பார்த்திருந்தேன் .நல்லதொரு team work என்று தெரிகிறது .அதைவிட டைரக்கடர் பாலாவின் ஆளுமை திகைக்கவைக்கிறது.

இந்த இயக்குனர் பற்றி ஒருமுறை
ஐபிசி ரவி அருணாச்சலம் ஒருமுறை நந்தா பற்றி எழுதியபோது இவர் நம்மவர் படம் என கூறியது ஞாபகம் வருகிறது.அந்தளவிற்கு கதையிலும் சிரத்தை எடுத்து எம்மை சிதைக்காமல் நந்தா தந்திருந்தவர். பிதாமகன் நன்றாகவிருக்கும் என எனது பார்வை.

உங்களது விமர்சனத்தை படிக்கும்போது எனக்கு என்னவோ திரு ஆழிககுமரனின் ஞாபகம்தான் வந்தது.பலசாதனைகளுக்கு இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சா சுழி போட்டவர்.இவர் தனது விபத்தில் இயலாத கால்களுடன்
நீங்கள கூறிய அதே ஆங்கிலக்கால்வாயை கடக்கும் முயற்சியில் ஈடுபட பயிற்சியில் ஈடுபட்டபோதே மரணமானார்.
மறந்துவிட்டோம்.<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- AJeevan - 10-28-2003

வீரா, சிலர் திரைப்படங்கைளை விமர்சிப்பதை விட்டு கமியூனிசவாதம், பொருள்முதல் வாதம் இனவாதம் இபபடியான வாதங்களோடு.................. யாருக்கும் புரியாத சில வார்தைகளையும், பார்ப்பனவாதிகள் போன்ற வார்த்தைகளால் வெறுப்பு தனங்களையும் , மேலத்தேசங்களில் ஏந்தி ................ கொண்டு மேலைத் தேசங்களை அவர்களுக்கு புரியாத தமிழில் ஏசிக் கொண்டும் வேற்றுமைகளை உருவாக்கி வாழ்கிறார்கள்.

திரைப்படத்தை விமர்சிக்காமல் தரைப்படத்தை விமர்சிப்பவர்கள் இவர்கள்...............

- kuruvikal - 10-28-2003

அட சங்கர் சொல்ல நினைக்காததையே விமர்சனம் எண்டு விமர்சனதாரர் சொல்லுவினம் போல...இவையைவிட்டா இன்னும் சிறபான பாய்ஸ் எடுப்பினம் போல...! அதுசரி விமர்சனமும் இப்ப விளம்பரமாச்சு...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

- AJeevan - 10-28-2003

kuruvikal Wrote:அட சங்கர் சொல்ல நினைக்காததையே விமர்சனம் எண்டு விமர்சனதாரர் சொல்லுவினம் போல...இவையைவிட்டா இன்னும் சிறபான பாய்ஸ் எடுப்பினம் போல...! அதுசரி விமர்சனமும் இப்ப விளம்பரமாச்சு...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

kuruvikal Wrote:ஒருவர் சினிமாவை அதன் கருத்துக் வெளிக்கொணரும் வடிவத்தைக் கொண்டு எதிர்கிறார் என்பதற்காக அவர் சினிமாவை எதிர்க்கின்றார் என்பது சரியாகாது...ஒரு விமர்சகன் என்பவன் உண்மையான சினிமாப்பக்தியாளனாக இருந்துதான் விமர்சிக்க வேண்டும் என்பதல்ல வெறும் பார்வையாளனாக இருந்து சமூகத்திற்கு சினிமாவில் உள்ள தீங்குகளை வெளிப்படுத்துவது ஒன்றும் தவறில்லை....அதேவேளை அங்குள்ள நல்லவற்றையும் சுட்டிக்காட்டத் தவறக்கூடாது...! உங்கள் கருத்திலிருந்து எங்கள் பார்வையில் சாந்தியக்கா ஒரு சினிமாப்பைத்தியமில்லாத பார்வையாளராக இருந்துதான் கருத்துப் பகர்கிறார் எனத் தோன்றுகிறது....ஏன் நாங்களும் சினிமா பார்க்கின்றோம் அதற்காக எல்லாப் படங்களையும் தரமென ஏற்றுக் கொள்கிறோமா....ஆனால் ஒரு தயாரிப்பாளனுக்கு அவனின் படம் முற்றுமுழுதாக பயனுள்ளதான கலைப்படைப்பாகவே தோன்றும்....பார்வையாளன் எதிர்க்கிறான் என்பதற்காக அவனை சினிமா எதிர்ப்பாளன் என அத்தயாரிப்பாளர் கருதமுடியுமா....???!!!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<span style='font-size:25pt;line-height:100%'>இப்படியான கருத்துகளை எழுதும் நீங்கள், புலம் பெயர் குறும்படங்கள் பற்றி எதுவித கருத்தும் தெரிவிக்காதது ஏன்?</span>

- aathipan - 10-28-2003

இந்தப்படத்தை நான் இரண்டு தடவை பார்த்துவிட்டேன். இப்போது இதைதியெட்டர்களில்இருந்து எடுத்தும் விட்டார்கள். மழை ஓய்ந்தும் தூவானம் ஓயாததுபோல இனனும் இதன் பாதிப்பு இங்;கும் அடங்கவில்லை. தீபாவளிப்படங்களுடன் இதன் ஆட்டம் முற்றாக அடங்கிவிடும். பாவம் சங்கர். கொஞ்சம் ரிஸ்க் எடுத்;து இருக்கிறார்.

போய்ஸ் படம் கேவலம் என்று ஒதுக்க முடியாது. பார்க்கவேண்டிய படம்தான். இதன்மேலுள்ள கண்டனமே இதை வெற்றிகரமாக ஓடவைத்துள்ளது. அலைகள் ஓய்வதில்லை படம் வந்தபோதும் இதேபோன்ற ஒரு எதிர்ப்பே வந்துள்ளது. பள்ளிசெல்லும் குழந்ததைகளுக்கு பாரதிராஜா காதல் செய்ய சொல்லிக்கொடுத்து கெடுத்துவிட்டார் என் குறைபட்டார்கள். ஆனால் அந்தப்படம் இன்று ஒரு இலக்கியமாகவே போற்றப்படுகிறது. தமிழ்சினிமாவின் பாதையில் இது ஒரு நிலை. இதை கேவலப்படுத்துவதில் பயன் இல்லை. ஓரு ஆங்கிலப்படத்;தை பார்த்;த உணர்வுதான்; எனக்கு ஏற்பட்டது. சிலகாட்சிகள் வரம்பை மீறுகின்;றது என்பது உண்மை. அவற்றை முதலிலேயே சங்கர் நீக்கியிருக்கலாம். சரி அப்படியே இறக்கிவிடலாம் என நினைத்தாரோ என்னவோ.

ஒரு காட்சி தாய்மையை கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிட்டது. அப்படி யாரும் நடந்;து கொள்மாட்டார்கள் என்றே என் எண்ணம்.

ரங்கனாதன் தெருவில் இடம்பெறும் காட்சிகள் உண்மைதான். இதைத்தடுக்கவே அங்;கு தனி போலிஸ் மையம் உள்ளது. இது கோவில் திருவிழாக்களிலும் நடைபெறுவது தான். அதை படமாக காட்டிவிட்டாகளே என்று கண்டனம். சரிசரி படம் பார்க்காதவர்களே நீங்கள் பார்க்காது இருந்துவிட வேண்டாம். நல்ல பாடல்கள் உள்ளன. காட்சி அமைப்பு அற்புதும்.

- nalayiny - 10-28-2003

தேசத்தை படி
சேர்ந்து நட
தேகம் சிலிற்கும்.

எம்மில் பலர் வளற்சியடைந்த நாடுகிளில் வாழ்ந்தாலும். இன்னமும் யாழ்ப்பாணத்து கிடுகுவேலிகளுக்கள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதனால் தான் நாம் பலவற்றில் உண்மை நிலை தெரியாது தோத்துப்போகிறோம்.

- kuruvikal - 10-28-2003

<!--QuoteBegin-AJeevan+-->QUOTE(AJeevan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->அட சங்கர் சொல்ல நினைக்காததையே விமர்சனம் எண்டு விமர்சனதாரர் சொல்லுவினம் போல...இவையைவிட்டா இன்னும் சிறபான பாய்ஸ் எடுப்பினம் போல...! அதுசரி விமர்சனமும் இப்ப விளம்பரமாச்சு...!
:twisted:  Tongue  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஒருவர் சினிமாவை அதன் கருத்துக் வெளிக்கொணரும் வடிவத்தைக் கொண்டு எதிர்கிறார் என்பதற்காக அவர் சினிமாவை எதிர்க்கின்றார் என்பது சரியாகாது...ஒரு விமர்சகன் என்பவன் உண்மையான சினிமாப்பக்தியாளனாக இருந்துதான் விமர்சிக்க வேண்டும் என்பதல்ல வெறும் பார்வையாளனாக இருந்து சமூகத்திற்கு சினிமாவில் உள்ள தீங்குகளை வெளிப்படுத்துவது ஒன்றும் தவறில்லை....அதேவேளை அங்குள்ள நல்லவற்றையும் சுட்டிக்காட்டத் தவறக்கூடாது...! உங்கள் கருத்திலிருந்து எங்கள் பார்வையில் சாந்தியக்கா ஒரு சினிமாப்பைத்தியமில்லாத பார்வையாளராக இருந்துதான் கருத்துப் பகர்கிறார் எனத் தோன்றுகிறது....ஏன் நாங்களும் சினிமா பார்க்கின்றோம் அதற்காக எல்லாப் படங்களையும் தரமென ஏற்றுக் கொள்கிறோமா....ஆனால் ஒரு தயாரிப்பாளனுக்கு அவனின் படம் முற்றுமுழுதாக பயனுள்ளதான கலைப்படைப்பாகவே தோன்றும்....பார்வையாளன் எதிர்க்கிறான் என்பதற்காக அவனை சினிமா எதிர்ப்பாளன் என அத்தயாரிப்பாளர் கருதமுடியுமா....???!!!
:twisted:  Tongue  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='font-size:25pt;line-height:100%'>இப்படியான கருத்துகளை எழுதும் நீங்கள், புலம் பெயர் குறும்படங்கள் பற்றி எதுவித கருத்தும் தெரிவிக்காதது ஏன்?</span>
1.புலம்பெயர் குறும்படங்கள் தொட்டில் குழந்தைகள்...அவற்றை இப்பவே விமர்சனத்தால் சாடுவதோ அல்லது அபரிமிதமாகக் காட்டுவதோ குழந்தையே வேண்டாம் கருக்கலைப்பே போதும் என்ற நிலையைத்தான் தோற்றுவிக்கும்...!

2.புலம்பெயர் குறும்படங்கள் இன்னும் சமூகத்தின் பரந்த வீச்சை எட்டவில்லை...குறிப்பாக இந்திய சினிமாவைப் பார்த்தால் இந்தியாவிலிருந்து கனடா மாணவர்களின் இசை நிகழ்ச்சி மேடை வரை செல்வாக்குச் செய்கிறது...ஆனால் குறும்படங்கள் அந்த அளவில் இல்லை அவை வளரும் மொட்டுக்கள்.....முளையிலேயே கிள்ள வேண்டுமா...மலர்ந்து நான்கு திக்கும் மணம் பரப்ப அனுமதிக்க வேண்டாமோ...?!

3.குறும்படங்கள் ஆபாசம் சமூகச் சீரழிவுக்காட்சிகள் என்று தாங்கி வர அதற்குள் இடமளிக்க எமது புலம்பெயர் கலைஞர்கள் தயாராக இல்லை...அப்படி தாங்கி வந்தாலும் அது சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே போய்ச்சேரும்...அதாவது குறும்படங்களால் சமூகச் சீரழிவு என்றவகையிலான விழிப்பூட்டல் அவசியமற்றதாக உள்ளது....!காரணம் குறும்பட வரம்புக்குள் நிதானமாக நின்று கருத்துணரும் பக்குவத்தில் பலரசிகர்கள் இன்னும் இல்லை....என்பது உண்மையே....!

4.புலம் பெயர் குறும்படங்கள் கண்களில் செல்வாக்குச் செலுத்தவல்ல அழகிகளை அல்லது அழகர்களை நம்பி வருவதில்லை சமூகத்தின் நலனில் செல்வாக்குச் செலுத்திடும் உண்மையான கதை,கலைஞனை நம்பியே வருகின்றன.

5.குறும்படங்கள் பற்றிய அதிக விளம்பரமின்மையால் அவற்றைப்பற்றி அறியமுடியாதிருக்கின்றது...அது மட்டுமல்லாமல் அவற்றிற்கென்று தனியான இணையப்பக்கங்கள் இயக்குவதே எமக்குத் தெரியவில்லை.....!பிறகெப்படி குறும்படங்கள் பற்றி அறிவது....! விமர்சிப்பது....!குறும்படங்கள் பற்றி கொழும்பில் வீரகேசரியில் தினக்குரலில் காணலாம் ஆனால் அது ஒரு மூலைகுள் சின்னதாக இருக்க நடுப்பக்கத்தில் சினிமா உட்கார்ந்து கண்ணைக்கவரும் வண்ணம் காட்டும்...இதற்கிடையில் அவற்றைப்பற்றி வாசிப்பது எப்படி....?!

6.குறும்படக்கள் பற்றிய விமர்சனங்களுக்கு சமூகத்தில் முன்னுரிமை இன்மை.....உதாரணம் யாழ்களம்....பாய்ஸ் எத்தனை பக்க விமர்சனத்தைத் தாங்கியுள்ளது...ஆனால் அஜீவனின் எச்சில் போர்வை....?! பிறகெப்படி விமர்சனம் எழுத மனம் வரும்....நாமெழுதி யார் பாக்கிறது...இப்படியான சிந்தனைக்கே வழிசமைக்கிறது...!

இப்படியும் இப்படிப்பலவும்....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

- AJeevan - 10-28-2003

kuruvikal Wrote:
AJeevan Wrote:[quote=kuruvikal]அட சங்கர் சொல்ல நினைக்காததையே விமர்சனம் எண்டு விமர்சனதாரர் சொல்லுவினம் போல...இவையைவிட்டா இன்னும் சிறபான பாய்ஸ் எடுப்பினம் போல...! அதுசரி விமர்சனமும் இப்ப விளம்பரமாச்சு...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

kuruvikal Wrote:ஒருவர் சினிமாவை அதன் கருத்துக் வெளிக்கொணரும் வடிவத்தைக் கொண்டு எதிர்கிறார் என்பதற்காக அவர் சினிமாவை எதிர்க்கின்றார் என்பது சரியாகாது...ஒரு விமர்சகன் என்பவன் உண்மையான சினிமாப்பக்தியாளனாக இருந்துதான் விமர்சிக்க வேண்டும் என்பதல்ல வெறும் பார்வையாளனாக இருந்து சமூகத்திற்கு சினிமாவில் உள்ள தீங்குகளை வெளிப்படுத்துவது ஒன்றும் தவறில்லை....அதேவேளை அங்குள்ள நல்லவற்றையும் சுட்டிக்காட்டத் தவறக்கூடாது...! உங்கள் கருத்திலிருந்து எங்கள் பார்வையில் சாந்தியக்கா ஒரு சினிமாப்பைத்தியமில்லாத பார்வையாளராக இருந்துதான் கருத்துப் பகர்கிறார் எனத் தோன்றுகிறது....ஏன் நாங்களும் சினிமா பார்க்கின்றோம் அதற்காக எல்லாப் படங்களையும் தரமென ஏற்றுக் கொள்கிறோமா....ஆனால் ஒரு தயாரிப்பாளனுக்கு அவனின் படம் முற்றுமுழுதாக பயனுள்ளதான கலைப்படைப்பாகவே தோன்றும்....பார்வையாளன் எதிர்க்கிறான் என்பதற்காக அவனை சினிமா எதிர்ப்பாளன் என அத்தயாரிப்பாளர் கருதமுடியுமா....???!!!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<span style='font-size:25pt;line-height:100%'>இப்படியான கருத்துகளை எழுதும் நீங்கள், புலம் பெயர் குறும்படங்கள் பற்றி எதுவித கருத்தும் தெரிவிக்காதது ஏன்?</span>
1.புலம்பெயர் குறும்படங்கள் தொட்டில் குழந்தைகள்...அவற்றை இப்பவே விமர்சனத்தால் சாடுவதோ அல்லது அபரிமிதமாகக் காட்டுவதோ குழந்தையே வேண்டாம் கருக்கலைப்பே போதும் என்ற நிலையைத்தான் தோற்றுவிக்கும்...!

2.புலம்பெயர் குறும்படங்கள் இன்னும் சமூகத்தின் பரந்த வீச்சை எட்டவில்லை...குறிப்பாக இந்திய சினிமாவைப் பார்த்தால் இந்தியாவிலிருந்து கனடா மாணவர்களின் இசை நிகழ்ச்சி மேடை வரை செல்வாக்குச் செய்கிறது...ஆனால் குறும்படங்கள் அந்த அளவில் இல்லை அவை வளரும் மொட்டுக்கள்.....முளையிலேயே கிள்ள வேண்டுமா...மலர்ந்து நான்கு திக்கும் மணம் பரப்ப அனுமதிக்க வேண்டாமோ...?!

3.குறும்படங்கள் ஆபாசம் சமூகச் சீரழிவுக்காட்சிகள் என்று தாங்கி வர அதற்குள் இடமளிக்க எமது புலம்பெயர் கலைஞர்கள் தயாராக இல்லை...அப்படி தாங்கி வந்தாலும் அது சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே போய்ச்சேரும்...அதாவது குறும்படங்களால் சமூகச் சீரழிவு என்றவகையிலான விழிப்பூட்டல் அவசியமற்றதாக உள்ளது....!காரணம் குறும்பட வரம்புக்குள் நிதானமாக நின்று கருத்துணரும் பக்குவத்தில் பலரசிகர்கள் இன்னும் இல்லை....என்பது உண்மையே....!

4.புலம் பெயர் குறும்படங்கள் கண்களில் செல்வாக்குச் செலுத்தவல்ல அழகிகளை அல்லது அழகர்களை நம்பி வருவதில்லை சமூகத்தின் நலனில் செல்வாக்குச் செலுத்திடும் உண்மையான கதை,கலைஞனை நம்பியே வருகின்றன.

5.குறும்படங்கள் பற்றிய அதிக விளம்பரமின்மையால் அவற்றைப்பற்றி அறியமுடியாதிருக்கின்றது...அது மட்டுமல்லாமல் அவற்றிற்கென்று தனியான இணையப்பக்கங்கள் இயக்குவதே எமக்குத் தெரியவில்லை.....!பிறகெப்படி குறும்படங்கள் பற்றி அறிவது....! விமர்சிப்பது....!குறும்படங்கள் பற்றி கொழும்பில் வீரகேசரியில் தினக்குரலில் காணலாம் ஆனால் அது ஒரு மூலைகுள் சின்னதாக இருக்க நடுப்பக்கத்தில் சினிமா உட்கார்ந்து கண்ணைக்கவரும் வண்ணம் காட்டும்...இதற்கிடையில் அவற்றைப்பற்றி வாசிப்பது எப்படி....?!

6.குறும்படக்கள் பற்றிய விமர்சனங்களுக்கு சமூகத்தில் முன்னுரிமை இன்மை.....உதாரணம் யாழ்களம்....பாய்ஸ் எத்தனை பக்க விமர்சனத்தைத் தாங்கியுள்ளது...ஆனால் அஜீவனின் எச்சில் போர்வை....?! பிறகெப்படி விமர்சனம் எழுத மனம் வரும்....நாமெழுதி யார் பாக்கிறது...இப்படியான சிந்தனைக்கே வழிசமைக்கிறது...!

இப்படியும் இப்படிப்பலவும்....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

இப்படியான கருத்துகள் வந்ததில் அகமகிழ்ந்து நிற்கிறேன். எழுத்து வல்லமை உள்ளவர்கள் எழுதும் போது அதன் அழகே தனி, குருவிகள்.

குறும்படங்களையும் சாடுங்கள்,அதேபோல் தேவையானதை பாராட்டுங்கள்,குற்றங்களை கூறுங்கள்.
அதுவே ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

சிறுதுளி பெரு வெள்ளம். நான்கு பேரால் தொடங்கப்பட்ட போராட்டம் , முழு உலகையே கவர்ந்து நிற்கிறதே.......................

எங்கும் ஆரம்பிப்பதுதான் சிரமம்.உங்களைப் போன்றவர்கள் நாமெழுதி யார் பார்ப்பது என்று எழுதுவதற்கே சிரமப்படும் போது எமக்கும் நாம் செய்து யார் பார்ப்பது என்ற நிலை ஏற்படுகிறதே?

நாங்கள் ஒரு சினிமாவை உருவாக்குவதில் பிரச்சனையில்லை.அதைப் பார்க்க வைப்பதில்தான் பிரச்சனை வருகிறது என்று தோன்றுகிறது................

"குறும்பட வரம்புக்குள் நிதானமாக நின்று கருத்துணரும் பக்குவத்தில் பலரசிகர்கள் இன்னும் இல்லை....என்பது உண்மையே...."
என்ற கருத்தை தகர்க்க எழுத்தாளர்களால் முடியும்.

பேனாவால் பேச முடியாதை யாராலும் பேச முடியாது.சில பேனாக்கள் எழுதவே மறுக்கின்றனவே.................. இவை தம்மை மேன்மைப்படுத்திக் கொள்ள மட்டுமே எழுதுகின்றனவா?.....................

நட்புடன்,
அஜீவன்

- anpagam - 11-09-2003

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen:

- anpagam - 11-09-2003

மேல சின்ன பிளை விட்டுட்டன் முழுதும் வாசிக்காமல் சிரித்துபோட்ன்.
மேலும் நல்லாக எல்லோரும் கசக்கி பிளிந்துள்ளீர்கள். ழூளையைச் சொன்னனான் எண்டாலும் எங்கிட பொடியலில (பாய்ஸ்) நல்ல கரிசனம் தான்...

நல்லதொரு பொக்கிசம் இந்த யாழ் கருத்துக்களம்

- AJeevan - 11-12-2003

<img src='http://www.nowrunning.com/comingsoon/boys/banner1.jpg' border='0' alt='user posted image'>
பாய்ஸில் முன்னாவாக நடித்த சித்தார்த் அடுத்து மணிரத்னத்தின் 'ஆயுத எழுத்து' படத்தில் நடிக்கிறார்.

இலங்கைக்கு பாய்ஸ் ஐம்பதாவது நாள் விழாவுக்குச் சென்றிருந்தபோது பீட்டில்ஸ் பாடகர்கள் போல வர வேற்பு இருந்தது. பெண்கள் அவர்கள் மேல் மயங்கி விழுந்தார்கள். ஸ்ரீலங்காவில் வசூலில் சாதனை படைத்திருக்கிறது.

அமெரிக்காவில் தேவதாஸை விட அதிக வசூல்...

'புரியவே இல்லை சார்' என்றார்.

'புரிவதற்கு உனக்கு இன்னும் கொஞ்சம் வயசாக வேண்டும்' என்றேன்.

விகடனில் சுஜாதா..............

நீங்கள் களைப்படைந்தால்<img src='http://www.yarl.com/forum/images/icon/icon16.gif' border='0' alt='user posted image'> அழுத்திப் பாருங்கள்:- (முதலில் save பண்ண வேண்டும்)
http://www.messagemates.com/getmate.asp?mm...arl=608&ver=001

"art is an expression"
AJeevan

- vasisutha - 11-12-2003

பாவம் சுஜாதா நாங்கள் மறந்தாலும் அவர் மறக்கவில்லை.
பின்னே சும்மாவா கதை வசனம் அவராச்சே.. :-)
அவர் எழுதும் ஒவ்வொரு கட்டுரையிலும் பாய்சை சேர்க்காமல் எழுதுவதில்லை இப்பொழுது.

இதோ பாருங்கள் அமெரிக்காவிலும் இலங்கையிலும்
படம் ஓடுது இப்ப என்ன சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது சுஜாதா :mrgreen: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 11-13-2003

'Boys' கொஞ்சம் Modern அதுதான் அங்க எடுபடேல்லப் போல...எங்க தமிழ் நாட்டில....!
அங்க வழமையா Girls தான் Modern....! நினைப்பு....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- vasisutha - 11-13-2003

ஙே..ஙே..ஙே Confusedhock: Confusedhock:
படத்தில சித்தார்த் என்ற பெடியன் நல்ல
மொடர்னாய்( உடுப்பில்லாமல்) ஒரு கட்டத்தில வாறார் சுூப்பராய் இருக்கு ஹாஹாஹா!

- tamilchellam - 11-13-2003

? ? ? ? ?
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

நட்புடன்,
தமிழ்செல்லம்.

- anpagam - 11-13-2003

அர்ரா அர்ரா அப்படி போடுங்கோ....

- yarl - 11-13-2003

[quote=AJeevan]<img src='http://www.nowrunning.com/comingsoon/boys/banner1.jpg' border='0' alt='user posted image'>
இலங்கைக்கு பாய்ஸ் ஐம்பதாவது நாள் விழாவுக்குச் சென்றிருந்தபோது பீட்டில்ஸ் பாடகர்கள் போல வர வேற்பு இருந்தது. பெண்கள் அவர்கள் மேல் மயங்கி விழுந்தார்கள். "art is an expression"
AJeevan

இது இன்று நேற்றைய கதையல்ல..எம்ஜிஆர் இலங்கைக்கு அன்று சரோஜாதேவியுடன் வந்தபோதும் நடந்திருக்கிறது

- Paranee - 11-13-2003

இதில் ஒருவர் நடிகை தேவயானியின் சகோதரன் என்று ஓரு புத்தகத்தில் படித்தேன். யாரது ?

- anpagam - 11-14-2003

பாவம் Girls கொஞ்சகாலம் கற்பனையில் கனவுகாணமுடியாமல் போய்விட்டது <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
look here <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> Girls i'm happy <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
http://www.tamilwebonline.com/wed/