![]() |
|
கந்தரின் புல(ப)ம்பல் மடம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: கந்தரின் புல(ப)ம்பல் மடம் (/showthread.php?tid=7226) |
கந்தரின் புல(ப)ம்பல் ம - Kanthar - 04-08-2004 புலத்தில இருந்து எழுதுறதை புலம்பல் எண்டு சொல்லுறவையும் உண்டு. எனக்கெண்டால் பம்பலா எழுதினம் போலத்தான் கிடக்கு. எப்பிடியோ மடத்தடியில இருந்து கதைக்குமாப்போல வராது........... யாழ் களத்தில இதை ஒரு வேச்சுவல் மடமாய் நினைச்சுக்கொண்டு............ எழுதுவம்................... புலம்பலோ...... பம்பலோ........ - kiRukkan - 04-08-2004 அம்மானின் கதைகள் எமக்கிங்கே பம்பல் - மட்டு அம்மானின் காட்சி கண்டு சிலர் புலம்பல் - sOliyAn - 04-08-2004 இந்த முகத்தைப் பார்த்தால் புலம்பலும் வராது.. பம்பலும் வராது.. கொட்டைப் பெட்டியும் புகையிலைத் துண்டும்தான் வருது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 04-08-2004 சேதுவின் உளவு போல கந்தரின் புலம்பல்? அரசியல்வாடை அடிக்குமா கந்தர்? - Kanthar - 04-08-2004 kiRukkan Wrote:அம்மானின் கதைகள் எமக்கிங்கே பம்பல் - மட்டு Karuna Amman told 'The Island' newspaper <b>He said that he wants a stake in any future peace talks between the government and the LTTE. </b> உங்கை இருக்கிறவை உதுக்கு என்ன சொல்லுவினம்.........கிறுக்கர் - Mathan - 04-08-2004 அரசியல் வாடை ஆரம்பித்து விட்டது, - Kanthar - 04-08-2004 sOliyAn Wrote:இந்த முகத்தைப் பார்த்தால் புலம்பலும் வராது.. பம்பலும் வராது.. கொட்டைப் பெட்டியும் புகையிலைத் துண்டும்தான் வருது. <!--emo& ஒழுங்க நிண்டு சொன்னாத்தான் கேக்கும் .......எங்களுக்கு சோழியர் - Kanthar - 04-08-2004 BBC Wrote:சேதுவின் உளவு போல கந்தரின் புலம்பல்? அவரவர் பாக்கிற பார்வையை பொறுத்தது கந்தற்ரை பேச்சு புலம்பலா......... பம்பலா...... - PAAMARAN - 04-08-2004 ரணிலோட சந்திரிக்கா ரூ அவேஸ் பேசினாப்போல அண்ணாச்சி அதுக்குள்ள என்ன பூனைக்குட்டியோ... - Mathan - 04-08-2004 பாமரன் நீங்களும் கந்தரை போல படம் போடலாமே :!: - PAAMARAN - 04-08-2004 ஏனுங்க படம் எல்லாம் ஆயுசு குறைச்சுடக்கூடாது பாருங்க அதுதாங்க - vallai - 04-08-2004 PAAMARAN Wrote:ஏனுங்க படம் எல்லாம் நீங்கள் ஆயுசு குறைஞ்சு போடுமெண்டு போடேல்லை நான் என்ரை படத்தைப் பார்த்து ஆரும் அற்பாயுசிலை போயிடக்கூடாது எண்டு போடேலை - vallai - 04-08-2004 Kanthar Wrote:kiRukkan Wrote:அம்மானின் கதைகள் எமக்கிங்கே பம்பல் - மட்டு உதைத்தான் டக்ளசும் கேட்டவர் சித்தார்த்தனும் புறணி சொல்லிக் கொண்டு திரிஞ்சவர் அப்ப உவர் பெடிக்கு ஏன் உந்த ஞானோதயம் வரேல்லை - Paranee - 04-08-2004 இப்ப நீங்கள் புல பம்பல் சொல்ல வாறீங்களா ? அல்லது புலம்ப வாறீங்களா ? - manimaran - 04-08-2004 Kanthar Wrote:கந்தற்ரை பேச்சு புலம்பலா......... பம்பலா...... அலம்பல்.... - Kanthar - 04-08-2004 manimaran Wrote:Kanthar Wrote:கந்தற்ரை பேச்சு புலம்பலா......... பம்பலா...... என்ரை திரவியம் உதுவும் நல்லாத்தான் இருக்கு புலம்பல் பம்பல் இரண்டும் இல்லை கந்தற்ரை அலம்பல் எண்டுறியள். உங்களுக்கு ஒண்டு தெரியுமோ உடம்பு வருத்தத்தின்ர குணம்குறிய மற்றவை சொல்லேக்கில்லை அப்பிடி எங்களுக்கு இருக்கிற மாதிரி இருக்கும். மன வியாதிக்கு அறிகுறிகளை சொல்ல அப்படி மற்றவைக்குதான் இருக்கு எண்டு நினைக்கிற உலகத்தில மணிமாறன் நீங்கள் என்ன விதிவிலக்கோ. களத்தில கனபேர் உதுகளைத்தான் கனகாலமா செய்யினம் - Kanthar - 04-08-2004 Paranee Wrote:இப்ப நீங்கள் புலத்தில பம்பலா கதைப்பம் - Kanthar - 04-08-2004 vallai Wrote:Kanthar Wrote:kiRukkan Wrote:அம்மானின் கதைகள் எமக்கிங்கே பம்பல் - மட்டு ஏகம் எண்டால் என்ன? ஒன்று அதை தவிர வேறை ஒண்டும் இருக்கக்கூடாது. அப்பிடி சொல்லுறதும் அப்பிடி செய்யுறதும் நீதியும் இல்லை தருமமும் இல்லை. வடக்கில டக்கிளஸ் வந்திருக்கு, கிழக்கில பரராசசிங்கத்தார் வரேல்லை. இதிலதான் உங்கட வாதம் அடிபட்டு போகுது.... போனமாசம் மூண்டாம் தியதியில் இருந்து உள்ளுக்கிள்ளையே ஏகம் இல்லை..... மற்றவை எப்பிடி உதை ஏற்பினம்.????????????????? - Eelavan - 04-08-2004 ம்ம் நல்ல கதைதான் வடக்கில் டக்ளஸ் ம் கிழக்கில் பரராஜசிங்கமும் மாத்திரம் போட்டியிட்டு இருவரில் ஒருவர் வெற்றி பெற்றிருந்தால் நீங்கள் சொல்வது சரி வெறும் 18000 பெருடைய வாக்கில்(அதில் எத்தனை உண்மை என்பது உங்களுக்கே தெரியும்)பாராளுமன்றம் போனவரும் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவேண்டும் தான் அது தேசியமட்டத்தில் நடக்கும் பேச்சுவார்த்தையில் அல்ல உள்ளூராச்சி சபைகளையும் அவற்றினது நிர்வாகப் பிரிவினதும் விடயங்களைப் பிரித்துக் கொடுப்பதற்கு ஒரு பேச்சுவார்த்தை நடக்கும் அப்போது அவர் பங்குபற்றலாம் தமிழ்தேசியத்தையும் ஏக பிரதிநிதிக் கொள்கைகளையும் எதிர்த்தவர்கள் டக்ளஸ் சங்கரி சித்தார்த்தன் இவர்களில் வென்ற டக்ளஸிற்குக் கிடைத்த விருப்பு வாக்குகள் 9405 முன்னைநாள் அமைச்சர் யாழ் மக்களின் காவலன் தான் பிரதேசவாதத்தை ஊட்டி வளர்த்த தீவுப்பகுதிகளில் கூடவா பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடியவில்லை நீங்கள் சொல்லும் மூன்றாம் திகதியில் தான் தமிழ் மக்களின் அபிலாசைகள் உலகறிய எடுத்துக் கூறப்பட்டு பிரதேசவாதம் தூக்கியெறியப்பட்டு ஒரே தலைமை சுயநிர்ணய உரிமை என்பதுதான் வடக்கு கிழக்கு மக்களின் விருப்பம் என்பது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது - Kanthar - 04-09-2004 தம்பி ஈழவன் திரும்பியும் கேக்கிறன் ஏகம் எண்டால் என்ன? வியாபார உலகத்திலதான் ஏக விநியோகித்தர் (Sole Agent)எண்டு அடிக்கடி சொல்லுறவை. அதின்ற அர்த்தம் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில குறிப்பிட்ட ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட வியாபார நிறுவனம் விநியோகம் அல்லது விற்பனை செய்யும் முறை. இப்ப உதை அரசியலில பாவிக்கினம். உது பிழை. தமிழ் மக்களின் முதன்மைப் பிரதிநிதி எண்டலாம், தலைமைப் பிரதிநிதி எண்டலாம்........ ஏகப் பிரதிநிதி (Sole Representative) எண்டால் தேர்தலே தேவை இராது....ஆனால் தேர்தலில் நிண்டுதான் மக்களின் பிரதிநிதி ஆக முடியும் |