Yarl Forum
சிறீலங்காவின் பாராளுமன்ற அரசியல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: சிறீலங்காவின் பாராளுமன்ற அரசியல் (/showthread.php?tid=7062)

Pages: 1 2


சிறீலங்காவின் பாராளு - Kanani - 06-09-2004

<b>வெட்கித் தலைகுனிய வைக்கும்
சிறீலங்காவின் பாராளுமன்ற அரசியல்</b>


புதிய பாராளுமன்றம் இன்று நான்காவது தடவையாகக் கூடுகிறது. தேர்தல் நடைபெற்ற பின்னர், அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியை, ஆளுநர், ஆட்சியமைக்கும்படி அழைத்து, கிட்டத்தட்ட 60 நாட்களுக்கும் மேல் சென்றுவிட்ட நிலையில், இதுவரை ஆளும்கட்சி பரிதாபமாக அத்தனை குட்டிக் கட்சிகளிடமும் கையேந்தும் நிலையேற்பட்டுள்ளது.

எந்தெந்த அமைச்சுக்களில் என்னென்ன பொறுப்புக்களைத் தந்தால் யார் யார் கட்சி மாறத் தயாராக இருக்கிறார்கள் என்பதை பச்சையாக-பகிரங்கமாக பேரம்பேசி, அதற்கும் மசியாதவர்களை, அடித்து மிரட்டியோ, பண ஆசை காட்டியோ, அல்லது கேவலமான கட்டுக்கதைகளைப் பரப்பி பெயரையும் செல்வாக்கையும் பாழடிப்பதன் மூலமோ, மிகக் கேவலமான சாக்கடை ஜனநாயகத்தை ஒரு நாட்டின் ஜனாதிபதியே முன்னின்று முன்னெடுக்கும் அவலநிலை சிறீலங்காவிற்கு உருவாகியுள்ளது.

முன்னரெல்லாம் இத்தகைய இழுக்குகளும் கேவலங்களும் நிகழ்ந்தபோது, தட்டிக்கேட்க பெரும்பான்மைச் சமூகத்தில் பௌத்த பீடங்கள் இருந்தன. ஆனால் இம்முறை பௌத்த பிக்குகளும் அரசியலுக்குள் நுழைந்து, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் எடுத்துள்ள நிலையில், பௌத்த பீடங்களும் அரசியல் சாயம் புூசப்பட்டு, நாட்டின் அரசியல் அநீதிகளைத் தட்டிக் கேட்க யாருமற்ற துயரநிலை தோன்றியுள்ளது.

113 என்ற மந்திர இலக்கத்தை எப்படியாவது இம்முறை நாடாளுமன்றத்தில் காட்டிவிடுவது என்று எத்தனையோ வழிகளில் சந்திரிகா கட்சியினர் முயன்றாலும், இறுதிவரை முக்கால்வழி து}ரமே அவர்களால் செல்ல முடிந்திருக்கிறது.

பகிரங்கமாக இந்தப் பதவி தந்தால் வருகிறேன் என்று கேட்டுப் பெற்றே ஒருசிலர் சொந்த நலனுக்காகக் கட்சி தாவினார்கள். முதலில் தேர்தலுக்குப் பின்னர் 105 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு ஆசனத்தையும் சேர்த்து 106 ஆசனங்களை வைத்துக்கொண்டு, 113 ஆசனங்களை எப்படியும் காட்டுகிறோம் என்று நாடாளுமன்றம் நுழைந்தார்கள் மஹிந்தவும் மைந்தர்களும்.

என்ன திருகுதாளங்கள் செய்தும் இந்த 113ஐ நிரூபித்தே விடுவது என்ற ஒழுக்கங்கெட்ட அரசியலில், ஜனநாயகம் என்ற அழகான பெயரைச் சொல்லிக்கொண்டே செயலில் இறங்கினார்கள் சந்திரிகா கூட்டத்தினர்.

இறுதியாகப் பாராளுமன்றம் கூடியபோது அரசாங்கத் தரப்புக்குப் பகிரங்கமாகக் கட்சி மாறிய முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பைலாவைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் ஏனைய மூன்று 'நீக்கப்பட்ட" எம்பிக்களும் கட்சி பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அந்த 3 எம்.பி.க்களும் கட்சி தாவும் பட்சத்தில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 112 ஆசனங்களோடு இன்னுமொரு ஆசனத்திற்காகத் தவமிருக்கும் நிலை உருவாகும்.

இரண்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், பணம், பதவி, கொலை மிரட்டல், கடத்தல், பெயரையும் செல்வாக்கையும் மழுங்கடிக்க கேவலமான பரப்புரைகள் என்று எத்தனை வழிவகைகளைப் பாவித்தும், 113 என்ற மந்திர இலக்கத்தை இன்னும் இவர்களால் அடைய முடியவில்லை.

இன்றோ நாளையோ இணைவது உறுதி என்று ஆளும் கட்சி குஷியாக இருக்க, விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆறுமுகம் தொண்டமான், ஆளும் கட்சியுடன் எந்தத் தொடுசலுமில்லை என்று அடித்துச் சொல்லிவிட்டார். அந்த எட்டு ஆசனங்களும் அரோகரா.

முஸ்லிம் காங்கிரஸ் பணிந்து வராது என்பதால், பலவித முயற்சிகள். அமைச்சுப் பதவி ஆசைகள், பணத்தொகை, மிரட்டல் எதுவும் சரிவரவில்லை என்பதால், கட்சிக்குள்ளேயே குழப்பத்தை உருவாக்கி, யார் மூலம் தேசிய ஆசனத்தைப் பெற்று நாடாளுமன்றம் நுழைந்தார்களோ அவருக்கெதிராகவே அவர்களைக் கிளர்ந்தெழ வைத்ததால், நால்வர் இப்போது முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியேறியுள்ளார்கள். இருந்தும் என்ன, மந்திர இலக்கம் மதித்து நடக்க மறுக்கிறது.

ஒரு பலமற்ற ஆளும் கட்சியும், மிகப் பலமான எதிர்க்கட்சியும் கொண்ட பாராளுமன்றம் இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இன்று கூடுகிறது. எதிர்க்கட்சியில் தோன்றிய பல உட்கட்சிக் குழப்பங்கள் தீர்ந்து, மிகவும் தெளிவான நிலைப்பாட்டோடு இன்று அவர்கள் பாராளுமன்றம் நுழைகிறார்கள்.

எக்காரணம் கொண்டாவது, டிரோன் பெர்னான்டோ வழியில் யாராவது ஒருவர் எதிர்க்கட்சியிலிருந்து தாவிவர மாட்டாரா என்று ஆளும் கட்சி அவரவர் பாணியில் கனவு காண்கிறது.

ஹெல உறுமயவிலிருந்து ஒருவர் கட்சி தாவினாலும் என்ற பகற்கனவும் இருக்கிறது.

இந்த இரண்டு சந்தர்ப்பவாதங்களையும் வெறும் கற்பனையாக மட்டும் ஆளும் கட்சி பார்க்கவில்லை. தனித்தனியாக அக்கட்சி அங்கத்தவர்களை அணுகி, இரகசிய ஆசை வார்த்தைகளும் உறுதிமொழிகளும் கவர்ச்சித் திட்டங்களும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டே வருகிறது.

எங்கே ஒருவர் தாவுவதற்கான வாய்ப்பு உருவாகிறதோ, அப்போது தமது மந்திர இலக்கத்தை எட்டிப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடனும், அப்படி மந்திர இலக்கத்தை எட்டிப் பிடிக்காதவிடத்து, அடுத்த அமர்வு வரை தனது சர்வவல்லமை பொருந்திய அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களது ஐனாதிபதி தங்களைப் பாதுகாத்து வேலியாக நிற்பார் என்ற இறுமாப்புடனும் நாளைய அமர்வுக்குத் தயாராகிறது பெரும்பான்மையற்ற ஆளும் கட்சி.

சிறீலங்கா வரலாற்றில் இவ்வளவு கீழ்த்தரமான அரசியல் நிகழ்வுகள் இடம்பெறுவது இதுவே முதற்தடவை. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், மிகக் கோரமான போர், மிகக் கேவலமான சாக்கடை அரசியல், மிகக் கீழ்த்தரமான பதவிப் பேரங்கள், பகிரங்கமாக அமைச்சுப் பதவிகளுக்கான சண்டைகள், மிக அதிகமான அரசியல் திருப்பங்கள், மிக அதிகமான மாற்றங்கள் அனைத்தையும், இந்தக் குட்டித் தீவான சிறீலங்கா சந்தித்திருப்பது சந்திரிகாவின் ஆட்சியில் மட்டுமே நடந்தேறியிருக்கிறது.

மொத்தத்தில், சிறீலங்காவைக் களேபரம் பண்ணிய சந்திரிகா என்ற வல்லூறு, சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய ஜனநாயக விரோதி என்பதே உண்மை.

நன்றி
குயின்ரஸ் துரைசிங்கம்- கனடா


- Kanani - 06-09-2004

<b>நாடாளுமன்றில் காடைத்தனம்!
ஆளுங்கட்சி எம்.பிக்கள் அட்டகாசம்!!
பிக்குவைத் துாக்கிப் பிடித்து பந்தாடிய கேவலம்!!
செங்கோலைத் துாக்கிக் கொண்டு ஓடினார் பிரதிஅமைச்சர் </b>

நாடாளுமன்றம் நேற்றுக் கூடியபோது அங்கு பெரும் அமளிதுமளி ஏற்பட்டதுடன் காடைத்தனமும் இடம்பெற்றது.
ஆளுங்கட்சி எம்.பிக்கள் பண்பாடு அற்றமுறையில் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்று அல்லோலகல்லோலப்பட்டது.
ஹெல உறுமயவின் புதிய எம்.பியாகச் சத்தியப்பிரமாணம் செய்யவந்த வணக்கத்துக்குரிய தேரர் ஒருவரை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலவந்த மாகத் து}க்கி அங்குமிங்குமாக இழுத்தடித்துப் பந்தாடினர்.

ஆளுங்கட்சி உறுப்பினர்களின் இந்த அட்டகாசத்தின் போது புதிய எம்.பியான தேரரின் ஆடைகளைக் களையவும் முயற்சிக்கப்பட்டது. இந்தக் களேபரத்தின் நடுவே சபாபீடத்திலிருந்த செங்கோலைத் து}க்கிக்கொண்டு ஓடிய ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவர் அதனை எங்கோ ஒளித்து விட்டார். பின்னர் பிற்பகலில் அது மீட்கப்பட்டது.

இலங்கை நாடாளுமன்றத்தின் வர லாற்றில் மோசமான குழப்பம் என்று கொள்ளப்படும் இந்த அட்டகாசத்தின் மத்தியில் பிரஸ்தாப தேரர் நாடாளு மன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமா ணம் செய்துகொண்டார்.
ஆளுங்கட்சியினரின் அடாவடித் தனங்களாலும் எதிர்க்கட்சியினரின் பதில் நடவடிக்கைகளாலும் நாடாளு மன்றம் நேற்று அமளிதுமளிப்பட்டது.

அமைச்சர்களும் உறுப்பினர்களும் முஷ்டியை முறுக்கிக்கொண்டு இழுபறிப்பட்டனர்.
பௌத்த மதகுருவின் புனித அங்கியை துச்சாதனன் பாணியில் களைய முயன்றனர் ஆளும் கட்சியினர். பதவிப் பிரமாணம் செய்யவந்த பௌத்த குருவானவரை பந்தாடுவது போல் அங்கும் இங்கும் து}க்கி இழுத் தடித்தனர் அவர்கள். இந்தக் களேபர நிலையைப் பயன்படுத்திய அமைச் சர் ஒருவர் செங்கோலைத் து}க்கிக் கொண்டு சபையைவிட்டு ஓடினார். இத னால் சபை அமர்வும் ஒத்திவைக்கப் பட்டது.
செங்கோல் இன்றியே தேசிய ஹெல உறுமய உறுப்பினரான அக்மீ மன தயாரத்ன தேரர் - கூச்சல் குழப் பங்களுக்கு மத்தியில் - புதிய எம். பியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

நேற்றுக்காலை பத்து மணிக்கு சபாநாயகர் டபிள்யுூ.கே.எம்.லொக்கு பண்டார தலைமையில் சபை கூடியது.
வழமையான சபை நடவடிக்கை களின் பின் புதிதாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள வேண்டிய நேரம் வந்தது.
அப்போது தேசிய ஹெல உறு மய உறுப்பினரான வண ரத்தொளுவ ரத்னசீத தேரர் தமது பதவியை இராஜி னாமாச் செய்துள்ளதால் அவ்விடத் திற்கு நியமிக்கப்பட்ட வண.அக்மீமன தயாரத்ன தேரர் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என சபாநாயகர் அறி வித்தார்.
இதனை ஆளுங்கட்சியின் பிர தான அமைப்பாளரும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் ஜே.வி.பியின் விமல் வீரவன்ஸவும் கடுமையாக ஆட்சேபித்தனர்.

தன்னைப் பலவந்தப்படுத்தியே ராஜினாமாச் செய்யவைத்தனர் என ரத்தொளுவ ரத்னசீக கூறுகிறார். ஆகவே, இந்த இராஜினாவை ஏற்றுக் கொள்வதை நாம் ஆட்சேபிக்கின்றோம். பலவந்தமாகப் பெறப்பட்ட இராஜி னாமா செல்லுபடியாகாது. எனவே, தனது இடத்திற்கு வேறு ஒருவரை நியமிக்க முடியாது. சத்தியப்பிரமா ணம் செய்யவும் அனுமதிக்க முடி யாது என அவர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு ஒன்றைப் பெற்றுள்ளார்.
நீதிமன்றத்தின் தடை உத்தரவை யும் மீறி புதியவர் ஒருவர் பதவிப் பிரமாணம் செய்ய முடியாது; இதனை அனுமதிக்க முடியாது|| என அமைச் சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே ஆட்சேபனை கிளப்பினார்.
ஆனால், நீதிமன்றத்தின் தடை உத்தரவு இதுவரை தனக்குக் கிடைக்கவில்லை. நீதிமன்ற உத்த ரவு கிடைக்காத வரை தன்னால் எது வும் செய்ய முடியாது எனச் சபாநாய கர் பதிலளித்தார்.
அப்போது ஆளும் தரப்பினர்கள் கூச்சல் எழுப்பி குழப்பம் செய்தனர்.
இவற்றைப் பொருட்படுத்தாமல் அக்மீமன தயாரத்ன தேரரைப் பத விப்பிரமாணம் செய்ய அழைத்தார் சபாநாயகர்.
சபாநாயகரின் கட்டளைக்கமைய படைக்கல சேவிதர் அக்மீமன தேரரை சபாபீடம் நோக்கி அழைத்தார்.

அப்போது திடீரென ஆசனத்தில் இருந்து பாய்ந்து வந்த விளையாட் டுத்துறை அமைச்சர் ஜீவன் குமார துங்க தேரரைக் கட்டிப்பிடித்து மல்லுக் கட்டி இடைமறித்தார். அவருடன் ஜே. வி.பி. உறுப்பினர்களும் சேர்ந்துகொண் டனர். சபை நடுவில் பெரும் கூட்;டம் கூடியது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சபை நடுவே விரைந்து தேரரைப் பாதுகாப் பாக சபாபீடத்தின் முன் அழைத்துச் செல்ல முயன்றனர்.
இதனால், இருதரப்பினருக்கும் இடையில் இழுபறிகள் ஏற்பட்டன. அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, முன் னாள் சபாநாயகர் மைக்கல் ஜோசப் பெரேராவின் சட்டையைப் பிடித்துக் கொண்டார். அந்தச் சமயத்தில் அடி விழும் சத்தம் ஒன்று கேட்டது.
எங்கே யார் யாருக்கு அடித்தார் என்பது எவருக்கும் புரியவில்லை. இரு தரப்பு இழுபறிகளுக்கு மத்தியிலும் கைப்பரிமாறல்கள் இடம்பெற்றன.

சத்தியப்பிரமாணம் செய்ய வந்த தேரர் இரண்டு பக்கத்திற்கும் நடு வில் சிக்கி இழுபட்டார். அவருடைய காவி உடையும் அலங்கோலமாக இழு பட்டுத் தொங்கியது அமைச்சர்களும் உறுப்பினர்களும் முட்டி மோதிக் கொண்டனர்.
இப்படி சபை அல்லோலகல் லோலப்பட்டபோது முன்னாள் அமைச் சர் மகேஸ்வரன் எதிர்க்கட்சி ஆச னங்களுக்கு ஊடாக அக்மீமன தயா ரத்ன தேர ரைப் பாதுகாப்பாக சபா பீடத்திற்கு அழைத்து வந்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களும் ஜே.வி.பியினரும் சபாபீடத்தை சுற்றிவளைத்துக் கொண்டு தேரரை சபை பீடத்திற்கு செல்ல விடாமல் தடுத்து மல்லுக் கட்டினர். அப்போது கலாசார தேசிய விழுமியங்கள் அமைச்சர் விஜித ஹேரத் (ஜே.வி.பி.) அக்மீமன தேர ரின் காவியைப் பிடித்து இழுத்தார். அமைச்சரின் கைகளில் பாதி தேரரின் உடலில் மீதிஎன்று எப்படியோ காவி உடை களையப்படாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாதுகாத்துவிட்டனர். சந்தடிகளுக்கு மத்தியில் தேரர் பத விப் பிரமாணம் செய்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மோதல்களைத் தடுப்பதில் படைப் பல சேவிதரும் உதவியாளர்களும் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சபாபீடத்தில் இருந்த செங்கோலைத் து}க்கிக்கொண்டு சபைக்கு வெளியே ஓட்டம் பிடித் தார்.
இதனைத் து}ர இருந்து அவதா னித்த பிரதி படைக்கல சேவிதர் பிரதியமைச்சரை விரட்டிச் சென்றார். என்றாலும் அவரால் செங்கோலைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்நிலையில், சபையில் மேலும் அமளிதுமளிக் குழப்பம் ஏற்பட்டது. செங்கோலை மீண்டும் சபாபீடத்தில் கொண்டுவந்து வைக்கும்படி சபாநாய கர் பலமுறை அறிவித்தும் அதனை ஆளும்கட்சியினர் எவரும் ஏற்க வில்லை.
சபாபீடத்தில் செங்கோல் இல்லா மலேயே எதிர்க்கட்சியினரும் படைக் கல சேவிதர், நாடாளுமன்ற செயலா ளர் நாயகம் ஆகியோர் சூழ நிற்க அக்மீமன தயாரத்ன தேரர் கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
முன்னாள் அமைச்சர் ரவி கருணா நாயக்க, தேரருக்கு பக்கபலமாக நின்றார். அப்போதும் ஆளும்கட்சியி னர் சபை நடுவில் இருந்து ஆரவா ரம் செய்துகொண்டே இருந்தனர்.
சபையில் அமைதி குலைந்தது.
செங்கோலைக் கொண்டுவந்து வைக்கும்படி சபாநாயகர் பலமுறை வேண்டுகோள் விடுத்தார் பயனில்லை. எனவே, சபையை பத்து நிமிடங்க ளுக்கு ஒத்திவைப்பதாக அறிவித் தார். அப்போது மணி காலை 10.35.
பதினைந்து நிமிடங்களின் பின் சபாநாயகர் மீண்டும் சபைக்கு வந் தார். அப்போதும் செங்கோல் கொண்டு வந்து வைக்கப்படவில்லை. எனவே, மீண்டும் சபையை ஒத்திவைப்பதா கக் கூறி, கட்சித் தலைவர்கள் கூட் டத்தில் இதனைப் பேசித் தீர்க்க லாம் என்று தெரிவித்து சபாநாயகர் எழுந்து சென்றார்.

பிற்பகல் 2.17 மணியளவில் சபை கூடியது. அப்போது செங்கோல் சபை யில் இருந்தது. சபையை ஜூலை 20 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக சபா நாயகர் அறிவித்தார்.
மேலும், மூன்று புதிய எம்.பிக் கள் நேற்று சத்தியப்பிரமாணம் செய் வதற்குக் காத்திருந்தனர். ஆனால், முதலாவது பிக்கு எம்.பியின் சத்தி யப்பிரமாணத்தோடு சபை அமளிது மளிப்பட்டு அடுத்த அமர்வு ஜூலை 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப் பட்டதால் அம்மூவரும் அதுவரைக் காத்திருக்க வேண்டியேற்பட்டுள்ளது.

நன்றி உதயன் 09-05-2004


- kuruvikal - 06-09-2004

புலியும் புலியும் அடிபடுகுதெண்டு காட்டூண் போட்டவையைக் காணேல்ல...இப்ப சிங்கமும் சிங்கமும் இழுபறிப்படுறதப் போட...இதென்ன இன்னும் இருக்குப் பாருங்கோ....உள்ள காடையள் தானே அரசியல்வாதிகள்...இதெல்லாம் அமெரிக்க சன நாய் அகத்தில சகஜமப்பா....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


இனப்பிச்சனையில் சிங் - kuruvikal - 06-21-2004

இலங்கையின் வரலாற்றை திருத்தி எழுதினால்தான் இனவாதம் முடிவுக்கு வரும்: பிரபல சிங்கள பேராசிரியர் சுஷரித்த ஹம்லத்

இலங்கையின் வரலாற்றை திருத்தி எழுதினால்தான் இனவாதம் முடிவுக்கு வருமென பிரபல சிங்களப் பேராசிரியரான சுஷரித்த ஹம்லத் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு சிங்கள நூல்களின் வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் விரோதம் இருப்பதாகவே நீண்ட காலமாக வரலாறுகளில் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது என்று இங்கு சுட்டிக்காட்டிய அவர், எனினும் இவ்வாறான வரலாற்றுப் பதிவுகள் பொய்யானவை எனவும், முன்னைய காலங்களில் தமிழ் மொழிதான் சிங்கள மொழியின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்திருந்தது என்றும் குறிப்பிட்டார்.

மொழி ஆய்வு மற்றும் தொல்பொருள் ஆய்வுகளில் இருந்து எடுக்கப்பட்ட உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள் ஆங்கில மொழியில் இடம்பெற்றிருந்தமையால் சிங்களவர்களும், தமிழர்களும் அதன் உண்மைத்தன்மையினை புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றனர்,

இதுவே உண்மை எனவும் தெரிவித்துள்ள, பேராசிரியர் சுஷரித்த ஹம்லத், இவ்வாறு திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றினை திருத்தி எழுதுவதன் மூலமே இலங்கையில் நிலவும் இனக் குரோதத்தினை முடிவுக்குக் கொண்டுவரமுடியும் எனவும் அவர் மேலும்; தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு, தமிழர் தாயகம் தொடர்ந்தும் தென்னிலங்கையுடன் இணைந்து இருப்பதா? அல்லது பிரிந்து செல்வதா? என்பது தொடர்பாக வடக்கு கிழக்கு மக்களிடம் கருத்துக் கணிப்பினை மேற்கொள்ள வேண்டும் எனவும் அங்கு கருத்துத் தெரிவித்த சிங்களப் பேராசிரியரான சுஷரித்த ஹம்லத், இதன்போது தமிழ் மக்கள் அளிக்கும் ஆணையினை சிங்கள அரசியல்வாதிகளும், சர்வதேச சமுகமும் உரிய மதிப்பளித்து நடக்க வேண்டுமெனவும்; கோரிக்கை விடுத்துள்ளார்.

puthinam.com


- Kanani - 06-23-2004

<b> ஜனாதிபதி சந்திரிகா கூட்டணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ரவுூப் ஹக்கீம் மீண்டும் முரண்பாடான அறிவிப்பு </b>
[ காவலு}ர் கவிதன் ] [ செவ்வாய்க்கிழமை, 22 யுூன் 2004, 21:40 ஈழம் ]

சிறீலங்கா வாழ் மக்கள் ஜனாதிபதி சந்திரிகா கூட்டணியின் ஆட்சியை தேர்தலில் அங்கீகரித்திருப்பதனால், அவர்களுக்கு தமது கட்சியின் ஆதரவைக் கொடுப்பது தவறில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்திலிருந்து தமது கட்சியின் ஆதரவு ஐ.தே.முன்னணிக்கே என்று தெரிவித்து வந்தாலும், இடையிடையே ஐ.ம.சு.முன்னணிக்கும் தனது ஆதரவை சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் வழங்கவுள்ளதாகவும் ரவுூப் ஹக்கீம் அவ்வப்போது தெரிவித்து வந்தார்.

சில வாரங்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவை ஐ.ம.சு.மு. கட்சிக்கு வழங்கிவரும் நிலையில், ரவுூப் ஹக்கீம் தனது ஆதரவை அதே கட்சிக்கு வழங்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இது தவிர, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரவுூப் ஹக்கீம் மீது மிக மோசமான பாலியல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியபோது, அக்குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதற்குக் காரணமாக இருந்தவர் ஜனாதிபதி சந்திரிகாவே என்று ஹக்கீம் பகிரங்கமாக ஜனாதிபதியைச் சாடியிருந்தார்.

சென்ற வாரம் ஐக்கிய தேசிய முன்னணி உட்பட, ஆளும் கட்சி தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் இணைந்து சபாநாயகருக்கு பாராளுமன்ற ஒழுங்காற்று நிலை குறித்த மகஐரொன்றைக் கையளித்தபோது, ரவுூப் ஹக்கீமும் அதிலே ஆளும் கட்சிக்கெதிராகக் கையொப்பமிட்டிருந்தார்.

இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஐ.ம.சு.முன்னணிக்கு தனது ஆதரவை வழங்க வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், வழமைபோன்று ரவுூப் ஹக்கீம் மீண்டும் தனது கருத்தை சில நாட்களுக்குள் மாற்றிக்கொண்டு, தனது கட்சியின் ஆதரவை ஆளும் சந்திரிகா கூட்டணிக்கு வழங்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

கொழும்பில் வெளியாகும் சிங்கள தினசரிகள் சில, ரவுூப் ஹக்கீமின் இத்தகைய முரண்பாடான நடவடிக்கைகள், முடிவுகள் குறித்து காரசாரமாக விமர்சித்திருப்பதுடன், கேலிச் சித்திரங்களும் தீட்டியுள்ளன.

நன்றி புதினம்


- vallai - 06-24-2004

கணனிக் குருவியள் அருமந்த கருத்துகளை அள்ளியந்து போடுதுகள்


- tamilini - 06-24-2004

ஆகா....... கணனிக் குருவியள் நல்லாய் இருக்கு! வல்லை அண்ணை! :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 06-25-2004

ஏன் வல்லையார்... நீங்கள் எப்ப தொடக்கம் உந்தப் புலனாய்வு வேலையில இறங்கினியள்...அங்கால தாத்தா M16 (மோட்ட வே இல்ல) கூப்பிடுறார்...மப்புப்பாட்டி எண்டு உங்களக் கைவிட்டிட்டாரோ....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 06-25-2004

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vallai - 06-27-2004

புலனாய்வோ கள்ளாய்வோ எங்கை ரகசியம் இருந்தாலும் அங்கை முனி நிற்கும்


- tamilini - 06-28-2004

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vallai - 06-29-2004

இவ்வளவுநாளும் மோகன் பூட்டிப்புட்டி வைச்சிருந்து ஒருநாளைக்குப் பன்ரண்டு மணித்தியாலம் தான் துறந்துவிடுறது இப்ப நீங்கள் வந்தாப்பிறகுதான் 24 மணித்தியாலம் ரவுண்ட் த குளொக் சேவிஸ்


- Kanani - 06-30-2004

<b>சிஹல உறுமய இரண்டாகப் பிளந்தது </b>

[ கொழும்பிலிருந்து ஏழிசைவாணர் ] [ புதன்கிழமை, 30 யுூன் 2004, 19:57 ஈழம் ]

இலங்கைப் பாராளுமன்றத்தில் அங்கும் வகிக்கும் கட்சியான சிஹல உறுமய இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் மகாநாடொன்று இன்று காலை கொழும்பு பொது நு}லக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வேரகந்தொட்ட சீலானந்த தேரரும்;, சித்சிரி விக்கிரமசிங்க தேரரும் இந்தப் பத்திரிகையாளர் மகாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த தேரோக்கள், சிஹல உறுமய தர்மராஜ்ய கொள்கையை மீறிச் செல்வதாக குற்றம் சாட்டினர்.

சிஹல உறுமய பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் பௌத்த கொள்கைக்கு அப்பால் செயற்படுவதாகவும் மதமாற்ற தடைச் சட்ட மூலம் குறித்து இவர்கள் மௌனம் சாதிப்பதாவும் தெரிவித்தனர்.

தேர்தல் காலத்தில் பௌத்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேண்டும் என்பதற்காக தாம் அரசுடன் இணையத் தயாராகவிருப்பதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.

நன்றி புதினம்


- Kanani - 07-01-2004

<b>கருணாவைப் பகடைக்காயாக்கி ஜனாதிபதி சந்திரிகா சூதாட்டம் - ஐ.தே.கட்சி </b>

[ யாழ். உதயன் ] [ வியாழக்கிழமை, 01 யுூலை 2004, 8:33 ஈழம் ]

தனது பங்காளிக்கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாண முடியாத அரசு கருணாவை பகடைக்காயாகப் பயன்படுத்தி புதிய சூதாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது என ஐக்கிய தேசியக்கட்சி துணைப்பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்றுக்காலை ஐ.தே.க. தலைமையகமான சிறீகோத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் அவர் அங்கு தெரிவித்ததாவது:

ஜனாதிபதி சந்திரிகா சமாதானப் பேச்சை ஆரம்பிப்பதுபோல பம்மாத்துக் காட்டுகின்றார். நாட்டு மக்களை மட்டுமன்றி நோர்வே அனுசரணையாளர்களையும் அவர் ஏமாற்றி வருகின்றார்.

உள்வீட்டுச் சிக்கல்களைத் தீர்க்க முடியாத அரசாங்கம் இப்போது தமிழ் மக்களால் ஓரங்கட்டப்பட்டுள்ள கருணாவை வைத்துக்கொண்டு புதிய சூதாட்டத்தில் இறங்கி மக்களைத் திசை திருப்ப முனைகின்றது.

கருணா எங்கே இருக்கிறார் என்பது அரசுக்குத் தெரியாது என்கிறார்கள். ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவோ கருணாவுடன் தொடர்பு வைத்துள்ளார், பேசுகின்றார். அப்படியானால் தேடப்பட்டு வரும் தீவிரவாதி ஒருவருடன் அமைச்சர் ஒருவர் தொடர்பு வைத்துள்ளார். அதனை அரசுக்கும் மறைக்கின்றார் என்றால் அதே அமைச்சருக்கு எதிராக இந்த அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது. அது அவர்களால் முடியாது. காரணம் அவர்கள் கருணாவைத்துக் கொண்டே காலம் கடத்தப்பார்க்கின்றனர்.

அவர்களுடைய ஆட்சியில் ஒரு போதும் சமாதானப்பேச்சு இடம்பெற மாட்டாது என மேலும் அவர் அங்கு தெரிவித்தார்.

நன்றி புதினம்


- kuruvikal - 07-03-2004

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அநுரா தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் சிறிலங்காவின் சபாநாயகர் லொக்கு பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணையினை நாடாளுமன்றத்தில் சமரப்பிக்கவுள்ளதாக அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நீதிமன்றத்தின் அனுமதியையும் மீறி ஜாதிக ஹெல உறுமயவின் அக்கீமன தயாரட்ன தேரரை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வதற்கு சபாநாயகர் லொக்கு பண்டார அனுமதி வழங்கியதன் மூலம் நீதிமன்றின் ஆணையை சபாநாயகர்; அவமதித்துள்ளதோடு, நாடாளுமன்றத்தையும் அவர் முறையாக நடத்தவில்லை எனவும் அனுரா பண்டாரநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

puthinam.com


- Kanani - 08-04-2004

<b>இடைக்கால நிர்வாக சபை யோசனைகளின் அடிப்படையில் புலிகளுடன் பேசப்போவதாக ஒருபோதும் அறிவிக்கவில்லை: ஜனாதிபதி </b>

இடைக்கால நிர்வாக சபை யோசனைகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசப்போவதாக தான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்ற போதே, ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடைக்கால நிர்வாக யோசனைகளின் அடிப்படையில் விடுதலைப் புலிகளுடன் ஜனாதிபதி பேசினால், கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து தாம் வெளியேறப்போவதாக ஜே.வி.பி. வெளியிட்ட கருத்துத் தொடர்பாக இக்கூட்டத்தில் கடுமையாக அதிருப்தி தெரிவித்த ஜனாதிபதி, இடைக்கால நிர்வாக யோசனைகளின் அடிப்படையில் பேசப்போவதாக தாம் ஒருபோதும் தெரிவிக்காத நிலையில் ஜே.வி.பி. இவ்வாறு பேசியது குறித்து கடுமையாக விசனமடைந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இடைக்கால நிர்வாக சபை அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஜனாதிபதி தயாராகவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்ததை இக்கூட்டத்தில் ஜே.வி.பி. சுட்டிக்காட்டிய போது, இடைக்கால நிர்வாக யோசனைகளில் அடிப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேசப் போவதாக தானோ, ஜனாதிபதி செயலகமோ ஒருபோதும் உத்தியோகபுூர்வமாகத் தெரிவித்திருக்கவில்லை என்று ஜே.வி.பி.யினருக்கு ஜனாதிபதி பதிலளித்ததாகவும் தெரிய வருகிறது.

இக்கூட்டத்தின்போது ஜனாதிபதி ஜே.வி.பி.யினருடன் மிகவும் கடுமையாகவே நடந்;து கொண்டதாகவும், இடையில் தமக்கு வேறு பணியிருப்பதாகக் கூறி அவர் கூட்டத்திலிருந்து வெளியியேறி விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன
---------------------------------------
<b>
இடைக்கால தன்னாட்சி அலகை ஏற்றுப் பேச்சு நடாத்த மறுப்பதாக வெளியான செய்தியை மறுக்கிறது ஜனாதிபதி செயலகம் </b>


விடுதலைப் புலிகளால் கையளிக்கப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனையின் அடிப்படையில் பேச்சுக்களை நடாத்த ஜனாதிபதி மறுத்துள்ளதாக சிறீலங்காவின் தேசிய ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.

அந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்றும், தான் அப்படி எதுவும் கூறவில்லை என்றும் மறுதலித்துள்ளார் மைத்திரிபால சிறிசேன.

இடைக்கால தன்னாட்சி அலகின் கீழ் பேச்சுநடாத்துவது குறித்த ஜனாதிபதியின் கருத்தில் மாற்றமில்லை என்றே தான் குறிப்பிட்டதாகவும், அது முற்றிலும் திரிவுபடுத்தப்பட்டு, ஜனாதிபதி இதற்கு மறுப்புத் தெரிவித்தது போல செய்தி வெளியாகியுள்ளது என்றும் குறிப்பிடும் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சிறிசேன, இத்தகைய செய்தியை ஜனாதிபதி செயலகம் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

---------------------------------

<b>ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இராஜினாமா செய்துள்ளார். </b>

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து விலகியுள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைப்பளு காரணமாகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் என்று அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு தகுதியான ஒருவரை சிறிலங்கா சுதந்திரக் கட்சி விரைவில் நியமிக்கும் என்று ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

வேலைப்பளு காரணமாக தனது தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக சந்திரிகா வெளியே கூறினாலும், இதற்கு நிட்சயமாக உட்காரணங்கள் ஒருசில இருக்கலாம் என்று இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன.



செய்திகள் புதினத்திலிருந்து

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39062000/jpg/_39062789_ktunga_ap2b.jpg' border='0' alt='user posted image'>

நான் என்ன சொல்கிறேன்...என்ன செய்கிறேன் என்பது எனக்கே தெரியாது....மக்களுக்கு எப்படி தெளிவிருக்கும் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 08-04-2004

Quote:நான் என்ன சொல்கிறேன்...என்ன செய்கிறேன் என்பது எனக்கே தெரியாது....மக்களுக்கு எப்படி தெளிவிருக்கும்
இது கணணி சொன்னதா இல்லை.. அம்மையார் சொன்னாவா....?ஃ


- Kanani - 08-04-2004

படத்திலிருப்பவர்தான்.........
அது சத்தியமா நானில்லை


- vasisutha - 08-04-2004

Quote:நான் என்ன சொல்கிறேன்...என்ன செய்கிறேன் என்பது எனக்கே தெரியாது....மக்களுக்கு எப்படி தெளிவிருக்கும்


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 08-04-2004

Quote:படத்திலிருப்பவர்தான்.........
அது சத்தியமா நானில்லை
_________________

அப்ப சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எல்லாத்தையும் இப்படி சொல்லிப்போட்டு செய்தால் சரி தானே