Post a New Reply
Reply to thread: பெருமாளுக்கு பிடியாணை? காமாட்சி மயக்கம்!
Username:
Post Subject:
Post Icon:
Your Message:
Smilies
Smile Wink Cool Big Grin
Tongue Rolleyes Shy Sad
At Angel Angry Blush
Confused Dodgy Exclamation Heart
Huh Idea Sleepy Undecided
[get more]
Post Options:
Thread Subscription:
Specify the type of notification and thread subscription you'd like to have to this thread. (Registered users only)




Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)


Thread Review (Newest First)
Posted by Vaanampaadi - 01-25-2005, 07:37 PM
பெருமாளுக்கு பிடியாணை? காமாட்சி மயக்கம்!
23.1.2005

நக்கீரன்

இடம் - காஞ்சி வரதராசப் பெருமாள் கோயில் கருவறை

காலம் - உச்சிப் பொழுது

பாத்திரங்கள் - காஞ்சி வரதராசர் காஞ்சி காமாட்சி.

(திரை விலகுகிறது)

(புகழ்பெற்ற காஞ்சி வரதராசப் பெருமாள் நாடியில் கைவைத்துக் கொண்டு ஒரே சோகமாக இருக்கிறார்.
அப்போது பக்கத்துக் கோயிலில் குடியிருக்கும் காஞ்சி காமாட்சி அம்மன் ஓசைப்படாமல் அடிமேல் அடியெடுத்து திருக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுளைகிறார்.
வரதராசப் பெருமாள் இருந்த கோலத்தைப் பார்த்து சற்றே திடுக்கிட்டு....)

காமாட்சி -'தேவரீர்! இது என்ன கோலம்? எப்போதும் கலகலப்பாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் நீங்கள் இன்று இப்படி நாடிக்கு கைகொடுத்துக் கொண்டு கப்பல் தாண்டவன் மாதிரி ஒரே சோகமாக இருக்கிறீர்களே? அப்படி என்னதான் தலைபோகிற விடயம் நடந்து விட்டது?

பெருமாள் - ஏன் கேட்கமாட்டாய்? நான் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு இருப்பது உனக்குத் தெரியதா?

காமாட்சி - எனக்கு எப்படித் தெரியும்? சொன்னால்தானே தெரியும்!

பெருமாள் - அப்ப நீ அன்றாடம் செய்தித்தாள்களை படிப்பதில்லையா?

காமாட்சி - ஐயோ! நான் இப்போதெல்லாம் செய்தித்தாள்களை கையால் கூடத் தொடுவதில்லை. செய்தித்தாளை விரித்தால் அங்கே கொலை இங்கே கொலை என்று ஒரே கொலைச் செய்திகள்! எனக்கு பயமாக இருக்கிறது!

பெருமாள் - என்னுடைய சன்னிதி வளாகத்தில் மேலாளர் சங்கரராமன் பட்டப் பகலில் அதுவும் ஒரு வெள்ளிக்கிழமை அப்புவின் கூலிப்படையால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டதைத்தானே சொல்கிறாய்?

காமாட்சி - ஆமாம். அதற்குப் பின்னர் அரசியல்வாதி ஆலடி அருணாவை ஒரு கூலிப்படை வீதியில் வைத்து வீச்சரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது. அப்புறம் ஆளும்கட்சி எம்எல்ஏ சுதர்சனம் என்பவரை வடநாட்டு கொள்ளையர் வீடு புகுந்து சுட்டுக் கொன்று போட்டான்கள். அதுசரி மேலாளர் சங்கரராமனை அப்புவின் கூலிப்படை வெட்டிக் கொன்றாலும் காஞ்சி காமகோடிபீட ஜெயேந்திரர் சரஸ்வதி சங்கராச்சாரியார் சொல்லித்தான் கொன்றதாக அரச சாட்சியாக மாறிய ஒப்பந்தகாரர் இரவி சுப்பிரமணியம் சொல்கிறானே? ஜெயேந்திரர் சொல்லி விஜேய்ந்திரர் தம்பி இரகு 50 இலட்சம் கொடுக்கப்பட்டதாக அதே இரவி சுப்பிரமணியம் வாக்கு மூலம் கொடுத்துள்ளானே?

பெருமாள் - மெல்லப் பேசு. இப்போதுதான் செய்தித்தாள் எதுவும் படிப்பதில்லை என்றாய் ......................இந்த சங்கராச்சாரியார்களால் எங்களது மானம் மட்டுமல்ல மொத்தமாக இந்து மதத்தின் மானமும் காற்றில் போய்விட்டது. இந்தப் பெரியார் அண்ணாத்துரை போன்றவர்களால் ஏற்கனவே இந்தக் காவிச் சட்டைக்கு மதிப்பில்லாமல் இருந்தது. இப்போது மிச்சசொச்சமாக இருந்த மதிப்பும் போய்விட்டது!

காமாட்சி - இதற்கெல்லாம் கவலைப்பட முடியுமா? நீங்களே ஒவ்வொரு அவதாரம் எடுத்த போதெல்லாம் நரகாசுரன்ää இரணியன்ää இராவணன்ää மாபலி என்று கொன்று இருக்கிறீர்களே? உங்கள் பக்தர்கள் உங்கள் முன்மாதிரியை அடியொட்டி நடக்கிறார்கள் என்று நினைக்கிறேன்!

பெருமாள் - நீ நினைக்கிறது போதும். நான் அரக்கார்களை அழித்து தேவர்களைக் காப்பாற்றினேன்! இது நிலத்தேவர்களே இன்னொரு நிலத் தேவரை அடியாட்களை வைத்து செய்த கொலையாச்சே? சரி சரி எதற்கு வீண் தர்க்கம். இனி நடக்க வேண்டியதைப் பற்றிப் பேசுவோம். நேற்று காலை சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்த காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் என் சன்னிதிக்கு வந்தான். பூசை செய்ய தேங்காய்ää வெற்றிலைபாக்குää பழங்கள்ää மாலை ஆகியவற்றோடு பயபக்தியோடு வருகிறான் என்று பார்த்தால் பூசைத் தட்டின் நடுவே குற்றப் பத்திரிகைக் கட்டு!

'பெருமாளே உன் சன்னதியில் கொலை நடந்துள்ளது. அதனால் தான் குற்றப்பத்திரிகையை உன் காலடியில் வைக்கிறேன். சத்தியத்துக்கும் அநியாயத்துக்கும் இடையில் நடக்கும் போட்டி இது. உண்மையில் தப்பு நடந்திருந்தால் அவர்களை தண்டித்துவிடு. தவறு செய்யாவிட்டால் விடுதலை செய்துவிடு. உன் சன்னதியில் நடந்த கொலைக்கு நீதான் கண்கண்ட சாட்சி. இதற்கு நீயே தீர்ப்பு எழுதிவிடு' என்று மனமுருக வேண்டினான். பின்னர் தாயார் சன்னதியிலும் இதே டயலக் பேசி வேண்டுதல் செய்து கொண்டான்.

காமாட்சி - எனக்கும்தான் வழக்கில் இருந்து தப்ப நாள் முழுதும் தியானம்ää பூசை. அபிசேகம்ää யாகம் செய்கிறார்கள். அதற்கெல்லாம் நான் ஏமாந்து விடுவேனா என்ன? தினை விதைத்தவன் தினையை அறுப்பான். வினை விதைத்தவன் வினையை அறுப்பான். அதுதான் தெய்வ நீதி!

பெருமாள் - நானும் உன் கட்சிதான். ஆனால் இன்று காலை வெளிவந்த செய்தித்தாளில் இந்தக் கருணாநிதிää முன்னாள் முதல்வர்ää கிண்டலும் கேலியுமாக ஒரு அறிக்கை விட்டு என் மானத்தை வாங்கி இருக்கிறான்! அந்த அறிக்கையில் எக்கச்சக்கமான கேள்விகள்! சங்கரராமன் கொலைக்கு நான்தான் ஐ விட்னஸ் என்கிறான். 'இந்த வழக்கில் துப்பு துலக்கி சமர்ப்பித்த ஆவணங்களைக்கூட நம்பாமல்ää சாட்சிகளின் வாக்குமூலத்தை நம்பாமல் ஆண்டவன் காலடியில் குற்றப்பத்திரிகையை வைத்து நீ தண்டித்துவிடு என்று ஒரு எஸ்.பி வேண்டுகிறார். நேரில் பார்த்த சாட்சி என்றால் வரதராஜ பெருமாளுக்கு சம்மன் வருமா? ' என்று ஒரே கிண்டல்!

காமாட்சி - அப்படியா?

பெருமாள் - என்ன அப்படியா? என்று கேட்கிறாய். இந்தா இந்தச் செய்தித்தாளைப் படித்துப்பார்த்துவிட்டு அப்புறம் பேசு!

(பெருமாள் கலைஞர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை பிரசுரமான தினகரன் செய்தித்தாளை எடுத்துக் கொடுக்கிறார். காமாட்சி கவனமாகப் படிக்கிறார்)



நேரில் பார்த்த சாட்சி என்றால் வரதராஜ பெருமாளுக்கு சம்மன் வருமா?

கருணாநிதி கேள்வி



காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் நேரில் பார்த்த சாட்சி என்றால் வரதராஜ பெருமாளுக்கு சம்மன் வருமா? என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கருமமே கண்ணாக இருந்து காஞ்சி சங்கரராமன் கொலை தொடர்பாக இரண்டு சங்கராச்சாரியார்கள் உள்பட 25 பேர் மீது குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு தொடரக் கைது செய்துää அதிர்ச்சி தரக்கூடிய பல செய்திகளை அம்பலத்திற்குக் கொண்டு வந்த காஞ்சி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார்ää இந்த பிரபலமான வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையை நல்லநாள் பார்த்துää நல்ல நேரத்தில் தாக்கல் செய்யவேண்டுமென்பதில் மிகக்குறியாக இருந்துää பக்ரீத் விடுமுறை நாளாக இருந்தாலுங்கூடää அன்றைக்கு ஒரு சிறப்பு நேர்வாக நீதிமன்றத்தில் நீதிபதியிடம் வழங்கியுள்ளார். என்ற செய்தி தொலைக்காட்சிகளிலும்ää நாளிதழ்களிலும் விரிவாக முக்கியத்துவம் அளிக்கப்பெற்று வெளிவந்துள்ளது..

மத உணர்வுää அரசியல் மாயம் இவற்றைப் பின்னணியாக கொண்டுää மதச்சார்புடைய சில கட்சிகள் இந்த வழக்கு பற்றிய பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாலுங்கூட அந்த உணர்வுகளுக்கு அணுவளவும் இந்த அரசும் அன்னியமானதல்ல என்பதை நிலைநாட்டும் வண்ணம்ää குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிகழ்ச்சியும் அதனைத் தாக்கல் செய்த காவல்துறை கண்காணிப்பாளர் அதிகாரி பிரேம்குமார் செவ்வியும் அமைந்துள்ளது என்றே ஐதீகத்திலும்ää வைதீகத்திலும் அழுத்தமான நம்பிக்கை வைத்தோர் ஆறுதல் பெறுவார்கள்.

நல்ல நாள்ää நல்லநேரம் பார்த்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீஸ் அதிகாரிää நீதிமன்றம் செல்வதற்கு முன்புää வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்றுää அந்த குற்றப்பத்திரிகைக் கட்டினைப் பெருமாள் சன்னதியில் வைத்து ப10ஜை செய்துவிட்டுத்தான் எடுத்துப் போயிருக்கிறார் என்பது சங்கரமடத்தில் உள்ளவர்களின் பக்தி அனுசாரத்திற்கு அவர் ஒன்றும் சளைத்தவரல்ல என்பதை சவால்விட்டு சொல்வதாக அமைந்துள்ளது என்றே பக்த சிரோன்மணிகளால் பாராட்டப்படும்.

அது மட்டுமல்லää குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டதையொட்டி அந்த அதிகாh பத்திரிகை நிருபர்களுக்கு அளித்த பேட்டிதான் மிக மிக முக்கியமானது.

நடிகைகள்ää கதாசிரியைகள் உள்ளிட்ட 40 பெண்களையும் சேர்த்து அரசு தரப்பு சாட்சிகள் 370பேர் என்று பட்டியலிடப்பட்டு அந்தச் சாட்சிகள்ää எந்தெந்த விஷயம் பற்றி சாட்சியமளிப்பார்கள் என்பதையும் காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் விவரமாக நிருபர்களிடம் சொல்லியிருக்கிறார். அது ஏடுகளில் விரிவாக வெளியிடப்பட்டிருக்கிறது.

வழக்கு சம்பந்தமான ஒவ்வொரு குற்றப்பிரிவு பற்றியும் மூன்றாண்டு சிறைமுதல் தூக்கு வரையில் தண்டனை கிடைக்கும் என்பதையும் செவ்வியில் தெரிவித்துள்ள அதிகாரி பிரேம்குமார்ää இந்த வழக்கில் வரதராஜபெருமாள்தான் முக்கியமான சாட்சி என்றும் நேரில் பார்த்த சாட்சி என்றும் இந்த வழக்கே வரதராஜபெருமாளுக்கும் சங்கர மடத்துக்குமிடையே நடப்பதுதான் என்றும் தெளிவுபடக் கூறியுள்ளார்.

இந்தப் பேட்டி சங்கரமடத்தையும் மீறிய பக்திரசம் சொட்டுவதாக இருந்தாலும் ஒரு சாதாரண பாமரனுக்கு ஏற்படுகிற சந்தேகத்திற்கு என்ன பதில் கிடைக்குமென்று தெரியவில்லை.

பட்டியலிடப்பட்டுள்ள 370 சாட்சிகள் சம்மன் அனுப்பப்பெற்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்களேயானால்ää போலீஸ் அதிகாh பிரேம்குமாரால் முக்கியமான சாட்சி என்றும்ää நேரில் பார்த்த ' ஐவிட்னஸ்' என்றும் கூறப்பட்டுள்ள வரதராஜப்பெருமாளின் சாட்சியத்தை அலட்சியப்படுத்த முடியுமா?

சங்கரராமன் கொல்லப்பட்ட காட்சியை நேரில் பார்த்ததாக வரதராஜப்பெருமாள் சொல்லும்போதுää அப்படியொரு கொலை உமக்கு நேராக நடைபெறும் போதுää அதைத் தடுக்க வேண்டுமென்ற எண்ணம் உமக்கு ஏற்படவில்லையா? அப்படி ஏற்பட்டதா? சங்கரராமனும் உமது பக்தர்தானே? அவர் சாவைத்தடுத்து நிறுத்தியிருக்கக்கூடாதா? தடுத்தீரா? தடுக்கவில்லையென்றால அதற்குரிய காரணம் என்ன? என்ற குறுக்கு கேள்விக்களுக்கெல்லாம் வரதராஜப்பெருமாள் முக்கிய சாட்சியாக நின்று பதில் சொல்ல வேண்டியிருக்குமே!

இதையெல்லாம் யோசிக்காமலா பெருமாள் முன்னே குற்றப்பத்திரிகையை வைத்துää அர்ச்சனைää ப10ஜைகள் செய்துää அவரையும் முக்கிய சாட்சியென்று அதுவும் கண்ணால்கண்ட என்று சொல்லியிருப்பார்கள?

எனவே இந்த வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்க வரதராசருக்கு வருமா சம்மன் என்று எதிர்பார்ப்பதில் தவறு ஏதுமில்லை.

(செய்தியைப் படித்து முடித்ததும் காமாட்சி மூர்ச்சை ஆகி விழப் போகிறார். விழப்போன அவரை பாய்ந்து சென்று பெருமாள் கைத்தாங்கலாக பிடித்துக் கொள்கிறார்) (திரை விழுகிறது)