Post a New Reply
Reply to thread: ஆக்ஷன் எடுங்க சிவபெருமானே..!
Username:
Post Subject:
Post Icon:
Your Message:
Smilies
Smile Wink Cool Big Grin
Tongue Rolleyes Shy Sad
At Angel Angry Blush
Confused Dodgy Exclamation Heart
Huh Idea Sleepy Undecided
[get more]
Post Options:
Thread Subscription:
Specify the type of notification and thread subscription you'd like to have to this thread. (Registered users only)




Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)


Thread Review (Newest First)
Posted by raahul - 09-18-2004, 12:29 PM
வசி !!!!
மிக அருமை நீங்கள் வாசித்ததை களத்தில் இணைத்ததற்கு மிக்க நன்றி
Posted by sarihalim - 09-18-2004, 09:20 AM
அருமையான அர்த்தம் நிறைந்த கற்பனை. இணைத்ததற்கு நன்றி வசி....
Posted by ragupathyragavan - 09-18-2004, 07:20 AM
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Posted by வெண்ணிலா - 09-18-2004, 04:31 AM
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Posted by kavithan - 09-18-2004, 02:40 AM
சூப்பர் வசி அருமையாக இருக்கு........ ரொம்ப நன்றி
Posted by kuruvikal - 09-18-2004, 01:45 AM
தேடி எடுத்தாலும் சுப்பரா இருக்கு... நன்றிகள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Posted by tamilini - 09-17-2004, 11:25 PM
ஆகா சு}ப்பரோ சு}ப்பர் .... கலக்கீட்டாங்க போங்க.. இங்கு இணைத்ததிற்கு நன்றிகள் வசி...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Posted by vasisutha - 09-17-2004, 10:53 PM
<b>ஆக்ஷன் எடுங்க சிவபெருமானே..!</b>

கைலாய மலை. சிவனும் பார்வதியும் கம்பீரமாக வீற்றிருக்க, பக்கத்திலேயே பிள்ளையார், முருகன், நாரதர்.


<b>பார்வதி:</b> ''சுவாமி... இத்தோடு இந்த செஷனை முடித்துக் கொள்வோம். சன் டி.வியில் 'கோலங்கள்' போடுகிற நேரம் வந்துவிட்டது. நேற்று அபிக்கும் அவள் கணவனுக்கும் சண்டை ஆரம்பித்த சஸ்பென்ஸில் முடித்துவிட்டார்கள். என்ன நடக்குமோ என்று ஒரே டென்ஷனாக இருக்கிறது. நான் போக வேண்டும்...''

<b>சிவன் (உஷ்ணமாகி) :</b> ''ப்பார்வதீ! வர வர உனது சீரியல் பித்து எல்லை மீறிப்போகிறது. பூலோக மாதர்களுக்குச் சற்றும் குறையாமல் மெகா சீரியல்களில் மூழ்கி, பல நேரங்களில் கேஸ் ஸ்டவ்வைக்கூட மூட மறந்துவிடுகிறாய். இப்படியே போனால் நமக்குள் சண்டை வந்து, மறுபடியும் நீ உன் அப்பா வீட்டுக்குப் போக வேண்டிவரும்... ஜாக்கிரதை!''

<b>அப்போது ஓடிவரும் ஒரு சேவகர்:</b> ''பிரபோ... பிரபோ! பூலோக நகராம் கோடம்பாக்கத்தில் இருந்து உங்களைப் பார்க்க ஒரு படையே வந்து கொண்டிருக்கிறது!''

<b>சிவன்:</b>''வரச்சொல்!''

<img src='http://www.vikatan.com/av/2004/sep/26092004/p146.jpg' border='0' alt='user posted image'>


<b>நாரதர் (பதற்றத்துடன்):</b> ''ஆஹா... பிரபோ! அவர்கள் திருட்டு வி.சி.டியை ஒழித்துக் கட்டுவதற்காக ஆவேசங் கொண்டு அலைவதாக எனக்கு நியூஸ் வந்தது. ஒருவேளை அதற்காகத்தான் வந்திருப்பார்கள். உடனடியாக, நேற்று நான் கைலாய பஜாரிலிருந்து வாங்கி வந்த மதுர, வசூல்ராஜா, குடைக்குள் மழை சி.டிக்களை ஒளித்து வைத்துவிடுங்கள்...'' என்று பதற, அதற்குள் காற்றில் வருகிறது ஒரு கரகர குரல்... ''என் இனிய தமிழ்க் கடவுளே...''

படை திரட்டிப் பிரசன்னமாகிறார் பாரதிராஜா.

<b>நாரதர் (மெதுவாக):</b> ''சுவாமி... கறுப்பு ஜீன்ஸில் வெறுப்பாக நிற்கிறாரே, அவர்தான் டைரக்டர் பாரதிராஜா. பக்கத்தில் கரடித் தலைமுடியோடு காட்டமாக நிற்பது ஆல்ரவுண்டர் விஜய டி.ராஜேந்தர். கையிலே ஃப்ரூட் பொக்கேயுடன் நிற்பது புதுமைப்பித்தர் பார்த்திபன். இந்தப் பக்கம் கதர் சட்டைக்குக் கஞ்சி போட்ட விறைப்பை மெயின்ட்டெயின் பண்ணுவது கவிப்பேரரசு வைரமுத்து, அவருக்குப் பக்கத்தில்...''

<b>சிவன் (மெதுவாக):</b> ''தெரியும் நாரதரே... எத்தனை படங்களில் பார்த்திருக்கிறேன்! ஹீரோயின்களின் உதட்டைப் பஞ்சர் பண்ணுவாரே... கமல்தானே! (சத்தமாக) வெல்கம் டு கைலாயமலை! இப்படி திடுதிப்னு தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்திருக்கிறீர்களே, இங்கேயும் ஏதாவது கலைவிழா நடத்தி கலெக்ஷன் பார்க்கும் திட்டமா? ஸ்பான்சர் பிடித்துத் தர தேவர்களின் உதவி ஏதேனும் தேவைப்படுகிறதா?''

<b>பாரதிராஜா:</b> ''போற போக்கைப் பார்த்தா, வெறுமனே கலைவிழா மட்டும் நடத்தித்தான் எங்க பொழப்பை ஓட்டணும் போலிருக்கு. எங்க குறையை எந்தக் கோயில்ல போய் சொல்றதுன்னு தெரியாமத் தான் உங்ககிட்டே ஓடி வந்திருக்கோம் சாமி... நீங்கதான் காப்பாத்தணும். எஸ், யூ மஸ்ட் சேவ் அஸ்!''

<b>விஜய டி.ஆர்.:</b>''சாமீ... பல கோடி போட்டு எடுக்கிறோம் படம். தெருக்கோடியில திருட்டு வி.சி.டி. வித்துப் பண்றான் அடம். தேருன்னா புடிக்கணும் வடம். தெருக்குழாய்னா வைக்கணும் குடம்...''

<b>முருகன் (பயந்துபோய்):</b> ''டாடி, யார் இது? இப்படிப் பயமுறுத்துகிறாரே!''

<b>பார்த்திபன் (குறுக்கிட்டு):</b> ''மை லார்ட்... ஸாரி, காட்! வி.சி.டி., நடுவுல ஒரு எழுத்தை எடுத்துட்டா வி.டி. ஆமா... வி.டி. மாதிரி இதுவும் ஒரு நோய்தான். தமிழ் சினிமாவை அரிக்கிற நோய். 'குடைக்குள் மழை' ஷூட்டிங்ல திடீர்னு ஒருத்தர் வந்து, 'சார், காமிராவைக் கொஞ்சம் தள்ளி வைங்க... இடிக்குதுல்ல'ங் கறார். விசாரிச்சா வி.சி.டி. பார்ட்டி! அந்தளவுக்கு ஆகிப் போச்சு..!

<b>விஜய டி.ஆர்:</b> ''அட, இது பரவாயில்லய்யா! அன்னிக்கு பண்ருட்டி போற மப்சல் பஸ்ல 'மன்மதன்' படம் போட்ருக்காங்க. இப்பத்தான் ஷூட்டிங்கே நடந்துட்டிருக்கு... அதுக்குள்ளே திருட்டு வி.சி.டியான்னு மடக்கி விசாரிச்சா, ஷூட் பண்ணின வரைக்கும் சுட்டு வி.சி.டி. போட்ருக்காங்க. ஓடி முடிஞ்சதும், 'மற்றவை அடுத்த ட்ரிப் பில்'னு கார்டு வேற போடறானுங்களாம். ஏய், இதுதான் இப்ப நிலைமை. இன்னிக்கு சனிக்கிழமை...''

<b>வைரமுத்து (தொண்டையைக் கனைத்தபடி</b> ''ஆம்... திருட்டு வி.சி.... தமிழ் சினிமாவின் இருட்டு வி.சி.டி! விஞ்ஞான வளர்ச்சிக்குப் பூங்கொத்து கொடுப்போம்... அதுவே சினிமாவுக்கு வீழ்ச்சியானால் கோடரி எடுப்போம்! கோடம்பாக்கமே எழு! ஓடு... எரிமலை யைக்குடி! கோட்டையை இடி, வி.சி.டி. அழி... ஏற்று உன் கொடி!''

கவிஞரின் கணீர்க்குரல் கேட்டு பிள்ளையார் திடுக்கிட, பார்வதி, சிவனிடம் மெதுவாக, ''நாதா... இந்த ஜிப்பாக்காரரையும் அந்த தாடிக்காரரையும் பார்த்துப் பிள்ளைகள் பயப்படு கின்றன. இவர்களைச் சீக்கிரம் பேசி அனுப்பிவிடுங் கள். இல்லையென்றால் தேவையில்லாத குழப்பங்கள் வந்துவிடும்...''

<b>சிவன்:</b> ''சரி சரி... சீக்கிரம் செட்டில் பண்ணி அனுப்பி விடுகிறேன்.''

<b>கமல்:</b>''ஆ... ஹரியும் சிவனும் ஒண்ணு, சினிமாக் காரன் வாயில மண்ணுனு பழமொழியை மாத்திச் சொல்ற உரிமை எனக்கு இருக்கு. எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. கடவுளுக்கு என் மேல நம்பிக்கை கிடையாதுனு சொன்னா இன்னும் பொருத்தமா இருக்கும். திருட்டு வி.சி.டி. விவகாரங்கறதால நானும் கொஞ்சம் திருட்டுத்தனமா கடவுளைப் பார்க்க வந்திருக்கேன்...''

<b>நாரதர்:</b>''சரி கமல்... சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்!''

<b>கமல்:</b>''சினிமாவோட பரிணாம வளர்ச்சியில திருட்டு வி.சி.டி'யும் ஒண்ணுனு சொன்னா செவுள்ளயே அடிப்பேன். மனிதன் பரிணாம வளர்ச்சி யில திரும்பவும் குரங்காகறான்னு சொன்னா, கோபம் வந்து குமட்டுல குத்துவீங்கள்ல... அது மாதிரிதான் இது! இந்த விஷயத்துல சாமிகள் நீங்கள்லாம் இப்படிப் பிடிச்சு வெச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து இருந்தா, நாங்கள்லாம் கோவணம் கட்டிட்டுப் பழனிக்குப் போக வேண்டியதுதான். நடிகைக்குக் கோவணம் கட்டினால் கிளாமர்னு சொல்லலாம். எங்களுக் குக் கட்டினால் அது அசிங்கம்... கலாசாரச் சீரழிவு!''

<b>பார்த்திபன்:</b>''மிஸ்டர் சிவன், நீங்க உடனடியா ஏதாவது ஆக்ஷன் எடுக் கலைன்னா இங்கேயே வி.சி.டி. மாதிரி செட் போட்டு அதுல உட் கார்ந்து சுத்திக்கிட்டே உண்ணும் விரதம் இருப்போம்!''

<b>சிவன் (டென்ஷனாகி):</b> இதோ பாருங்கள் மானிட ஸ்டார்களே... நானும் நாரதர் மூலம்
லேட்டஸ்ட் படங்களையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். ஒரே அடிதடி... இரைச்சல்! 'மன்மதராசா...', 'மச்சான் பேரு மதுர', 'உக்கடத்து பப்படமே', 'உம்மா உம்மம்மா' என கும்மாங்குத்து சத்தம் காதைப் பிளக்கிறது. பத்தாததற்கு ஆளாளுக்கு பஞ்ச் டயலாக் பேசியே கொல்கிறீர்கள்!''

<b>பிள்ளையார்:</b>''அதோடு பூலோகத்தில் தியேட்டருக்குப்போய்ப் படம் பார்ப்பதே பெரிய சர்க்கஸாக அல்லவா இருக்கிறது! எனது மூஞ்சூறு வாகனத்தை நிறுத்த, பார்க்கிங் பார்ட்டிகள் பத்து ரூபாய் வசூலிக்கிறார்கள். டிக்கெட் விலையோ, நடிகர்களின் சம்பளம் மாதிரியே ஒரு நாளைக்கு ஒரு தினுசாக இருக்கிறது!''

<b>சிவன்:</b>''என்ன கமல், உங்களைப் போன்ற அறிவாளிகள் இதையெல்லாம் முதலில் ஒழிக்காமல், திருட்டு வி.சி.டியை மட்டும் ஒழிக்க நினைத்தால் எப்படி?''

<b>கமல்:</b> ''நல்ல படம், கெட்ட படம், சுமாரான படம், ஓடுற படம், ஓடாத படம், லோபட்ஜெட் படம், ஹை'பட்ஜெட் படம், கமர்ஷியல் படம், கலைப் படம், ஆ... அந்தப் படம் இந்தப் படம் இதுல என் படம், எந்தப் படம்னு எனக்குத் தெரியும். மத்தவங்க படத்தைப் பத்திச் சொன்னா உறவுகள் கெட்டுப் போயிடும்... வாணாம், உட்ருங்க!''

<b>நாரதர்:</b> ''ஐயகோ... மண்டைக்குள் கிர்ரடிக்கிறதே! சரி, அதை விடுங்கள். சிம்ரன் திரும்பவும் நடிக்க வரப் போவ தாகக் கேள்விப்பட்டேனே! அவர் வந்தால், வளைந்த இண்டஸ்ட்ரியைப் பெண்டு நிமிர்த்தி வளமையாக்குவார், இல்லையா..?''

வைரமுத்து கவிதை பாட தொண்டையைச் செருமும்போதே, 'சம்போ சிவ சம்போ...' என்று குரல் கேட்கிறது. பார்த்தால் தனியே வந்து கொண்டிருக்கிறார் ரஜினி.

<b>நாரதர்:</b> ''பிரபோ... தனி வழியில் வருகிறாரே! அவர்தான் தமிழ் நாட்டின்சூப்பர் ஸ்டார்! நம்கைலாய மலைப் பக்கமாக இமயமலையில்தான் அடிக்கடிச் சுற்றிக் கொண்டிருப்பார்.''

<b>ரஜினி:</b> ''சாமீ, டார்ச்சர்... டார்ச்சர், ஒரே டார்ச்சர்! திருட்டு வி.சி.டிக்காரங்க தினம் தினம் போன் பண்ணி ஜக்கு பாயை நீங்க எடுக்கிறீங்களா. இல்லே, நாங்களே எடுக்கவானு மிரட்டறாங்க... உங்க பக்தனுக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா சாமீ...''

<b>சிவன்:</b>''அடடா... நீயே சீக்கிரமாக ஜக்குபாயை எடுக்கவேண்டியதுதானே, சூப்பர் பக்தா?''

<b>ரஜினி:</b>''எப்டி... எப்டி சாமீ? இது வரைக்கும் டைட்டில் மட்டும்தான் டிஸ்கஷன் முடிஞ்சிருக்கு.கே.எஸ்.ரவிகுமார் போன்ல சிக்கமாட்டேங்கறாரு. தனியா உட்கார்ந்து கதை யோசிச்சா மண்டை காயுது. அரசியல்வாதிகளைப் பார்த்து பொக்கே கொடுக்கறது, பிரஸ்மீட் வைக்கறதுனு டைம் பாஸ் பண்ற நம்ம ஐடியாக்கள் எல்லாருக்கும் புரிஞ்சுடுச்சு. அவனவன் ஓடறான். அதான், அப்படியே கோயில் கோயிலா சுத்திட்டிருக்கேன்...''

<b>பாரதிராஜா (தடாலடி யாகக் குறுக்கிட்டு): </b> ''திருட்டு வி.சி.டி. பிரச்னைக்குத் தீர்வு கேட்டு வந்தா இங்கேயும் ரப்ச்சர்! எங்களுக்கு ஒரு தீர்வு சொல்லாத சிவனை எதிர்த்து இங்கேயே உண்ணாவிரதம் இருக்கப் போறோம். எல்லாம் அப்படி அப்படியே உட்காருங்கப்பா...''

<b>ரஜினி:</b> ''நோ...நோ... நான் இங்கே உட்கார மாட்டேன். பூலோகம்தான் என் ஸ்பாட்! என் உண்ணாவிரதம், தனி உண்ணாவிரதம்...''

<b>சிவன்:</b> ''உங்க சினிமா உலகப் பிரச்னையில் என் தலையைஏன் உருட்டுகிறீர்கள்? உடனே கிளம்புங்கள்!''

<b>விஜய டி.ஆர்.:</b> முன்னாடி வெச்ச எங்க கால... இனி வாங்க மாட்டோம் பின்னால! சொல்லுங்க சாமீ உங்க முடிவு... வி.சி.டிக்குப் பொறக்கட்டும் ஒரு விடிவு! கிளம்பிட்டோம் உண்ணாவிரதப் போருக்கு... சிவ சாமி! உங்க ஆதரவு யாருக்கு...?''

<b>நாரதர்:</b>''ஆத்தாடி, பிரபோ! அரசியல் ஆரம்பித்துவிட்டது. எகிறி எஸ்கேப் ஆகிடுங்க!''

நாரதரின் அலறல் முடிந்த விநாடி, சிவன் ஃபேமிலி விஷ்ஷ்க்க்!

thanks to
vikatan.com