Post a New Reply
Reply to thread: அரசியல் கடி & லொள்ளு.
Username:
Post Subject:
Post Icon:
Your Message:
Smilies
Smile Wink Cool Big Grin
Tongue Rolleyes Shy Sad
At Angel Angry Blush
Confused Dodgy Exclamation Heart
Huh Idea Sleepy Undecided
[get more]
Post Options:
Thread Subscription:
Specify the type of notification and thread subscription you'd like to have to this thread. (Registered users only)




Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)


Thread Review (Newest First)
Posted by anpagam - 05-04-2004, 10:15 AM
''ஜெயலலிதாவுக்கு பிடித்துள்ள நோய் பிடிவாதம். பிடிவாதம் தலைக்கு ஏறி நிற்கிறது. தேர்தலில் அவரைத் தோற்கடித்து அதை இறக்க வேண்டும்'' (இந்திய கம்யூ. செயலாளர் நல்லகண்ணு)

''அத்வானிக்கு "செலக்டிவ் அம்னீசியா' என்றார் ஜெயலலிதா. ஆனால் அதே அத்வானியுடன் இன்று கூட்டு சேர்ந்துள்ளார். ஜெயலலிதாவுக்கும் "செலக்டிவ் அம்னீசியா' இருக்குமோ?'' (நடிகர் சரத்குமார்)

''ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கும் ஜெயலலிதாவின் ஆட்சியில் நாட்டிலேயே கடைசி இடத்தில் தமிழகம் இருக்கிறது. அடடா.. என்ன ஒரு உழைப்பு'' (காங்கிரஸ் தலைவர் வாசன்)

தற்ஸ்தமிழில்...
Posted by anpagam - 05-02-2004, 10:02 AM
<img src='http://www.thinakural.com/2004/May/01/moorthy.gif' border='0' alt='user posted image'>
thinakkural
Posted by anpagam - 05-02-2004, 09:54 AM
தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை தமது அரசு உணந்து வருவதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதினத்தில்...
Posted by anpagam - 05-02-2004, 09:37 AM
""எம்ஜிஆரை கோமாளி என்றும் இந்திரா காந்தியை சேலை கட்டிய ஹிட்லர் என்றும் ராஜாஜியை குல்லுகப் பட்டர் என்றும் குதர்க்கமாய் அழைத்தவர் கருணாநிதி. தனக்கு வாக்களிக்காத மக்கள் மீது வசை மாறிப் பொழியவும் தயங்காதவர்'' (முதல்வர் ஜெயலலிதா)

""எம்ஜிஆர் காலத்தில் டான்ஸ் ஆட வந்த ஜெயலலிதா எங்களைப் பார்த்து கயவர்கள் என்று சொல்கிறார்'' (திமுக தலைவர் கருணாநிதி)

தற்ஸ்தமிழில்...
Posted by anpagam - 04-30-2004, 10:48 PM
<img src='http://www.dinakaran.com/daily/2004/May/01/politics/C184_vajb2.jpg' border='0' alt='user posted image'>
நான் 6 ஆண்டுகள் ஆட்சி நடத்திவிட்டேன். இனி எனது அரசு வீழ்வது பற்றி நான் கவலைப்படவில்லை என்று பிரதமர் வாஜபாய் விரக்தியுடன் கூறினார்.

தினகரனில்...
Posted by anpagam - 04-30-2004, 07:57 AM
''ராமதாஸ் என்ற பெயருக்கு அனுமன் என்ற பொருளும் உண்டு. அனுமன் எப்படி மரத்துக்கு மரம் தாவுமோ அதே போலத்தான் ராமதாசும் தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியைவிட்டு கூட்டணி தாவுவார்'' (பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன்)

''இனிமேல் கூட்டணி மாற மாட்டேன் கூட்டணி மாறாவிட்டால் என் கட்சி தோற்கும் என்ற நிலை வந்தாலும் கூட கூட்டணி மாற மாட்டேன்'' (பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்)

Thatstamil இல் இருந்து...
Posted by vanathi - 04-26-2004, 07:35 PM
எல்லாரும் அதைத்தானே செய்யினம்.
Posted by anpagam - 04-26-2004, 12:54 PM
''ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட பா.ஜ.க. ரம்பா போன்ற கவர்ச்சி நடிகைகளை அழைத்து வந்து தொடையைக் காட்டி பிரசாரம் செய்வது கேவலமானது'' (திமுக ஆதரவாளரான நடிகர் தியாகு)
Posted by anpagam - 04-26-2004, 12:48 PM
ஒளிவு மறைவின்றி

கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசிக்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் அவரின் வீடு அமைந்துள்ள வீதி வழியாகத் தினசரி ஒரு பிச்சைக்காரரைக், காண்பதுண்டு. சக்கர வண்டிýயில் வரும் வலது குறைந்த இப்பிச்சைக்காரருடன் அந்த ஊழியர் சில வேளைகளில் சிறிது நேரம் உரையாடுவார். இந்த வகையில் இவருடன் பிச்சைக்காரருக்கு நெருங்கிய பரிச்சயம் ஏற்பட்டு விட்டது.

ஒரு நாள் அந்தப் பிச்சைக்காரர் இவருடன் மனம் விட்டுப் பேசினார். 'உங்களுடன் பழகியதில் நீங்கள் நம்பிக்கையானவர் என்பதை நான் கண்டு பிடிýத்து விட்டேன். உங்களுக்குப் பணம் தேவைப்பட்டால் கூýறுங்கள். மாதம் மூýன்று வீத வட்டிý தந்தால் போதும். என்னிடம் மூýன்று இலட்ச ரூýபா இருக்கிறது. நான் இன்னும் கல்யாணம் செய்யவில்லை. சீக்கிரம் கல்யாணம் செய்ய நினைத்திருக்கிறேன்" என்றார் பிச்சைக்காரன்.

பிச்சைக்காரரிடம் உள்ள தொகையைக் கேட்டவுடன் ஊழியருக்குத் தலை சுற்றத் தொடங்கிவிட்டதாம்.

தினக்குரலில் இருந்து
Posted by anpagam - 04-25-2004, 03:08 PM
<img src='http://www.vikatan.com/jv/2004/apr/28042004/p12.gif' border='0' alt='user posted image'>
tnx:vikatan
Posted by anpagam - 04-25-2004, 03:02 PM
என்ன தலைவரே... எம்.பி. ஸீட் கொடுக்கிறதாச் சொன்னாலும்
அந்த நடிகை வேணாம்னு சொல்லிட்டுப் போறாங்க?

எம்.பி\யா நடிக்கிறதுக்கு மொத்தமா ஐந்து வருட கால்ஷீட்
கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க!
------------------------------------
எஸ்.எஸ்.ராஜசேகர்


எங்கள் தலைவர் மேல அழுகின தக்காளி,
முட்டை வீச காத்திருக்கும் எதிர்க்கட்சி தோழர்களுக்கு
ஒரு அன்பான வேண்டுகோள்... நடிகை புவனாஸ்ரீ வந்து பேசிவிட்டுப்
போன பிறகு நீங்கள் வீசலாம். அதுவரை எங்கள் தலைவர்
ஜென்டில்மேனாக தோற்றமளிக்க தயவுசெய்து ஒத்துழைக்கவும்...
----------------------------------------
எஸ்.எஸ்.பூங்கதிர்


தலைவர் போற வழியெல்லாம் கவர்ச்சி நடிகைகளை
நிறுத்தி வெச்சிருக்கியே... ஏன்?

அவரை வரவேற்க அலங்காரவளைவுகள் நிறைய இருக்கணும்னு
நீங்கதானே சொன்னீங்க..!
-------------------------------------------
தஞ்சை தாமு


தலைவர் ஏன் ரொம்ப சந்தோஷமா இருக்கார்?

அழகான கவர்ச்சி நடிகைங்களோடு
ரதி யாத்திரை நடத்த பர்மிஷன் கிடைச்சுடுச்சாம்!
----------------------------------------
ரிஷிவந்தியா


தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் நட்சத்திரம்,
நான்கு தேசிய விருது வாங்கியவர், மக்கள் திலகம், நடிகர் திலகம்,
சூப்பர் ஸ்டார், கமல் ஆகியோருடன் ஜோடியாக நடித்தவரும்
பிரபல நடிகை, கனவுக்கன்னி ஸ்ரீதேவிக்கு டூப் போட்ட
நடிகை சாந்தி நம்முடைய கட்சியில் சேருகிறார் என்பதை
மகிழ்ச்சியோடு சொல்கிறேன்...
--------------------------------------------------
என்.எம். சத்தியானந்தன்


என்னது... கவர்ச்சி நடிகை கஜகஜாஸ்ரீயால
நம்ம தலைவருக்கு வேட்பாளர் பதவி போயிடுச்சா... ஏன்?

ஆமாண்ணே... மேடையில பிரசாரம் பண்ணிட்டிருக்கும்போது,
திடீர்னு நடிகை மேடைக்கு வந்ததுமே தலைவரு
சினிமா தியேட்டர் ஞாபகத்துல விசில் அடிச்சு, கைதட்டிக்
கலாட்டா பண்ணிட்டாராம்! அதைப் பார்த்த கட்சி மேலிடம்
உடனே அவரை நீக்கிடுச்சு..!
---------------------------------------
கார். சலீம்



தலைவரே, நடிகைகளைச் சேர்த்தது தப்பாப் போச்சு...
ஏன்?

அவங்கள்லாம் தனக்கு வயசு பதினாறுனு சொன்னதால, உங்களுக்கே
வோட்டு இல்லை. எங்ககிட்ட எப்படி வோட்டுக் கேக்கறீங்கனு
மக்கள் நக்கலா கேட்கிறாங்க!
---------------------------------------------
வந்தவாசி பா. ஜெயக்குமார்

tnx:a.vikatan
Posted by anpagam - 04-25-2004, 01:52 PM
''ஏழைகள் வயிற்றில் எரியும் தீயைத் தான் இந்தியா ஒளிர்வதாக பா.ஜ.கவினர் சொல்வதாக நினைக்கிறேன்'' (முன்னாள் பிரதமர் வி.பி.சிங்)

''15 ஆண்டுகளுக்கு சினிமா எடுப்பதை நிறுத்தி வைத்தால் தான் தமிழகம் உருப்படும் என்று ராமதாஸ் கூறியிருக்கிறார். 20 வருஷத்துக்கு பா.ம.கவை தடை செய்து வைத்தால் தான் வெட்டப்பட்ட மரங்கள் எல்லாம் வளரும்'' (நாடக நடிகரும் பா.ஜ.க. அபிமானியுமான எஸ்.வி.சேகர்)
Thatstamil இல் இருந்து...
Posted by anpagam - 04-25-2004, 01:48 PM
''சோ மாதிரியான கோழிகள் எல்லாம் தாங்கள் கூவுவதால் தான், பொழுதே விடிகிறது என்று
நெடுங்காலமாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்'' (திமுக நாளிதழான முரசொலியில்)
Posted by anpagam - 04-22-2004, 11:01 PM
சபாநாயகர் தெரிவுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் கூச்சலும் குழப்பமும்
(காவலுர் கவிதன் வெள்ளிக்கிழமை, 23 ஏப்பிரல் 2004, 0:19 ஈழம்) (புதினம்)
...................... ........ ........
............ ....................
.......ஹெல உறுமயவின் சார்பில் பேச அழைக்கப்பட்டபோது, இரு பௌத்த பிக்குகள் ஒரே நேரத்தில் எழுந்து புறப்பட்டனர். அதனால் யார் பேசுவது என்ற சர்ச்சை எழுந்தது. விரும்பியவர் யாரும் பேசமுடியாது, கட்சித் தலைவரே பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்ட போது, ஐ.தே.மு.க்கு சார்பாக வாக்களித்த பிக்குகளுக்கும், ஐ.ம.சு.மு.க்கு ஆதரவாக வாக்களித்த பிக்குகளுக்கும் இடையில், யாருடைய பக்கமிருந்து பேசுவதற்குப் போவது என்பதில் கருத்து வேறுபாடு எழுந்தது.

இறுதியில் ஐ.தே.மு.யின் சார்பில் போட்டியிட்ட லொக்கு பண்டாரவிற்கு வாக்களித்த பிக்கு பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டு, முன்னே சென்றார். உடனே ஐ.ம.சு.மு.யினர் பலத்த எதிர்ப்பும் கூச்சலுமிட்டு, பௌத்த பிக்குகளைக் கேவலப்படுத்தும் வகையில் ஏசினார்கள். ஐ.ம.சு.மு.யின் சில உறுப்பினர்கள், அந்தப் பிக்குகளை நோக்கி பத்திரிகைகளையும் பைல்களையும் கடுதாசிகளையும் வீசினார்கள்.

பௌத்த பீடத்திற்கு எதிராக அவதூறாக ஐ.ம.சு.மு.யினர் காரசாரமாகச் சத்தமிட, முன்னே பேசுவதற்கு எத்தனித்த அதிவண.அத்துரலிய ரத்தன தேரர் பெரிய சத்தமாகச் சொன்னார்: 'இப்படி ஹெல உறுமயவிற்கு எதிராக இவ்வளவு அவமரியாதை தரும் ஐ.ம.சு.மு.க்கு ஹெல உறுமயவின் ஆதரவு எப்படிக் கிடைக்கும்" என்று.

அந்தப் பிக்கு எவ்வளவு கூறியும், அவரது உரை முடியும்வரை ஐ.ம.சு.மு.யினரின் காட்டுக் கூச்சல் ஓயவில்லை. பிக்குவின் உரையை யாரும் கேட்கவிடாது சத்தமிட்டுக்கொண்டே இருந்தார்கள் அவர்கள்.

முன்னர் சபாநாயகருக்கான வாக்களிப்பு இடம்பெற்ற நேரத்தில், பெண்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி.பவித்ரா வன்னியாராச்சி, வாக்குப்பெட்டிக்கு மேலே ஏறியமர்ந்துகொண்டு, ஐ.தே.மு. அங்கத்தவர்கள் வாக்களிக்க முடியாது தடுத்து, பத்திரத்தைக் கிழித்தெறிய முற்பட்டதாலும் குழப்பங்கள் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, சந்திரிகாவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்தவர்கள் மிகவும் ஆக்ரோசமாகக் காணப்பட்டதாகவும், கேவலமான வார்த்தைகளால் ஏசியும், கூச்சல் போட்டும், பேப்பர்களை வீசியெறிந்தும் பலவித குழப்பங்களிலும் ஈடுபட்டதனால், பாராளுமன்றத்தில் மிகுந்த களேபரங்கள் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8)
Posted by AJeevan - 04-22-2004, 12:10 PM
<b>ஒரு சர்தார்ஜி ஜோக்?</b>
[Image: sartaj.jpg]
ஒரு சர்தார்ஜிக்கு ஃபோட்டோகிராஃபர் ஆகவேண்டும் என்று ஆசை. ஒரு ஃபோட்டோ ஸ்டூடியோவில் வேலை பார்த்துத் தொழில் கற்றுக்கொண்டார். ஒருநாள் வேலையை ராஜினாமா செய்து தனியாகத் தொழிலை ஆரம்பித்தார். முதல்நாளே ஒரு சாவு வீட்டில் படமெடுக்க வேண்டிய நிலை. பிணத்தைச் சுற்றிச்சுற்றி வந்தவர் முகத்தை ஃபோகஸ் செய்தார். அடுத்த நிமிடம் உதைகள் விழுந்தன. காரணம்? அவர் சத்தமாக சொன்ன வார்த்தை : "ஸ்மைல் ப்ளீஸ்".
Kumudam.com
Posted by anpagam - 04-22-2004, 07:51 AM
''நடிகர் சிவாஜி கணேசனைக் கொன்னதே கருணாநிதி தான். கருணாநிதியைக் கைது செய்ததை சன் டி.வியில் போட்டானுங்க. அதை சிவாஜி பார்த்துட்டு நெஞ்சை பிடிச்சிக்கிட்டு என்னோட நடிப்புத் திறமையை ஒரே நாளில் கருணாநிதி தோற்கடிச்சிட்டாரே என கூறியபடி செத்துப் போய்விட்டார்'' (திமுகவிலிருந்து அதிமுகவுக்குத் தாவிய நடிகர் பாண்டியன்)
Posted by anpagam - 04-21-2004, 01:49 PM
ஆண்டாளம்மா.. ஜெயலலிதா

ஜெயலலிதாவை மலடி என்று வர்ணித்து கருணாநிதி தனது வயிற்றெரிச்சலை அள்ளிக் கொட்டியிருப்பதாக பொதுப் பணித்துறை அமைச்சரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

பெண்கள் மத்தியில் முன்னுதாரணமாகத் திகழ்கிறார் புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா.

எங்கள் அம்மாவை வராது வந்த மாமணியை நம்மில் ஒருவராக வாழ்ந்து வரும் காவியத் தலைவியை மலடி என்றும் பிள்ளை பெறாதவர் என்றும் இயற்கையாக கண்ணீர் விடத் தெரியாதவர் என்றும் கருணாநிதி விமர்சித்து வயிற்றெரிச்சலை வாரிக் கொட்டியுள்ளார்.

நான் திருப்பி அடித்தால் யாரும் தாங்க முடியாது என்று கைகளைத் தூக்கக் கூட முடியாத தள்ளாத வயதில்இ இவர் கொக்கரிக்கிறார் என்றால் இவரது இறுமாப்பை என்னவென்று சொல்வது?

கலியுக ஆண்டாளாக வாழ்ந்து வரும் எங்கள் தலைவியைப் பற்றி ஒன்றும் தெரியாத கருணாநிதி இனியும் அப்படிப் பேசினால் மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார் ஓ.பி.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
Posted by anpagam - 04-21-2004, 01:41 PM
''நடிகர் நடிகைகளை அழைத்து வந்து டான்ஸ் ஆட வைத்து ஓட்டு கேட்கிறது அதிமுக. ஜெயலலிதாவே வந்து ஆடினாலும் இந்தத் தேர்தலில் அவருக்கு ஓட்டு கிடைக்கப் போவதில்லை'' (பா.ம.க. பிரமுகர் காடுவெட்டி குரு)

''ரஜினி ரசிகர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலைப் பார்த்தால் மரம் வெட்டி கட்சியாக இருந்த பா.ம.க. இப்போது மனித வெட்டி கட்சியாகிவிட்டதாகத் தெரிகிறது'' (இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன்)

Thatstamil இல் இருந்து...
Posted by shanmuhi - 04-14-2004, 06:47 PM
:roll:
Posted by anpagam - 04-14-2004, 12:43 PM
''தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கும் பாதுகாப்பாக இருப்பது நான்தான்'' ( ஜெயலலிதா)
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Thatstamil இல் இருந்து