| Thread Review (Newest First) |
| Posted by Mathan - 07-24-2004, 06:58 PM |
|
<img src='http://cinesouth.com/images/new/23072004-SP1image1.jpg' border='0' alt='user posted image'> Thanx: CineSouth |
| Posted by Mathan - 03-23-2004, 07:00 PM |
|
மௌனவிரதம் நான்கு துறவிகள் தியனம் செய்ய செல்கிறார்கள்.. அடைமழை பெய்தாலும் விடாது தியானம் மவுனமாய் அப்படின்னு... முதல் நாள் பகலில் பிரச்சினை இல்லை... இரவு விளக்கு மத்தியில் வைத்து அதன் வெளிச்சத்தில தொடர்ந்தது தியானம். சற்றே வேகமாக வீசிய காற்றில் விளக்கு அணைந்து விடுவது போல் தோன்ற.. முதல் துறவி : அச்சச்சோ.... அணைந்திடும் போல இருக்கே... இரண்டாம் துறவி: முட்டாள் நாம் பேசக்கூடாது. மூன்றாம் துறவி: அட பைத்தியங்களா... பேசக்கூடாது என்று பேசுகிறீர்களே... மௌனமாய் சிரித்த நான்காம் துறவி சொன்னார்:நான் தான் கடைசி வரை பேசவே இல்லை நன்றி - ஐயப்பன் |
| Posted by Mathan - 03-22-2004, 12:44 PM |
|
பெண்களின் நிராகரிப்பும் ஆண்களின் நிராகரிப்பும் வேற்றுமைகள் ஒரு ஆணை நிராகரிக்க, பெண்கள் சொல்லும் தலையாய பத்து காரணங்கள் (அதன் உண்மையான அர்த்தத்துடன்) 10) உன்னை என் சகோதரன் போல நினைத்துக்கொண்டிருக்கிறேன். (நீ அசிங்கமாக இருக்கிறாய்) 9) நமக்குள் ஒரளவுக்கு வயசு வித்தியாசம் இருக்கிறது (நீ என் அப்பா மாதிரி இருக்கிறாய், அல்லது உனக்கு வழுக்கை விழுந்துவிட்டது) 8) உன் மேல் எனக்கு "அதுமாதிரி" கவர்ச்சி இல்லை (நீ மிகவும் அசிங்கமாக இருக்கிறாய்) 7) என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது (எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்) 6) எனக்கு ஏற்கெனவே ஒரு ஆண் நண்பன் இருக்கிறான் (உன்னைப் பார்த்தால் என் வீட்டுப் பூனையும் அருண் ஐஸ்கிரீமுமே மேல்) 5) நான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு ஆளை காதலிப்பதை விரும்புவதில்லை (நீ உலகத்திலேயே, அல்லது இந்த பேரண்டத்திலேயே ஒரே ஒரு ஆண்மகனாக இருந்தாலும் உன்னை காதலிக்க மாட்டேன், ஒரே கட்டிடத்தில் இருக்கிறோம் என்பதற்காக காதலித்துவிடுவேனா?) 4) நீ காரணமில்லை, நான்தான் காரணம் ( நீதான் காரணம்) 3) இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக்கொண்டிருக்கிறேன் (மகா அலுப்படிக்கும் என் வேலையே உன்னை விட பரவாயில்லை) 2) நான் திருமனம் செய்து கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் (உன்னைப் போன்ற ஆட்கள் இருப்பதால்தான்) எல்லாவற்றிலும் தலையாய சொல்லப்படும் காரணம்..... 1) நாம் நண்பர்களாக இருப்போம் (நான் உன் கூடவே இருந்து நான் சந்திக்கும் ஆண்களைப் பற்றி எல்லாம் புகழ்ந்து உன்னை வெறுப்பேற்றத்தான்) **** பெண்ணை நிராகரிக்க ஆண்கள் சொல்லும் காரணங்களில் தலையாயவை 10) உன்னை என் சகோதரி போல நினைக்கிறேன் ( நீ அசிங்கமாக இருக்கிறாய்) 9) நமக்குள் சிறிதளவு வயது வித்தியாசம் இருக்கிறது (நீ அசிங்கமாக இருக்கிறாய்) 8) உன் மேல் எனக்கு "அதுமாதிரி" கவர்ச்சி இல்லை (நீ அசிங்கமாக இருக்கிறாய்) 7) என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது (நீ அசிங்கமாக இருக்கிறாய்) 6) எனக்கு ஏற்கெனவே ஒரு பெண் நண்பி இருக்கிறான் (நீ அசிங்கமாக இருக்கிறாய்) 5) நான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு பெண்ணைக் காதலிப்பதை விரும்புவதில்லை (நீ அசிங்கமாக இருக்கிறாய்) 4) நீ காரணமில்லை, நான்தான் காரணம் (நீ அசிங்கமாக இருக்கிறாய்) 3) இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக்கொண்டிருக்கிறேன் (நீ அசிங்கமாக இருக்கிறாய்) 2) நான் திருமனம் செய்து கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் (நீ அசிங்கமாக இருக்கிறாய்) எல்லாவற்றிலும் தலையாய சொல்லப்படும் காரணம்..... 1) நாம் நண்பர்களாக இருப்போம் (நீ உண்மையிலேயே படு அசிங்கமாக இருக்கிறாய் ) நன்றி - திண்ணை |
| Posted by Rajan - 03-21-2004, 05:04 PM |
|
|
| Posted by Rajan - 03-21-2004, 05:00 PM |
|
தாத்தா உங்களுக்கு இங்கேயும் அகதியாக வரலாமாம்[ihttp://www.floridatoday.com/space/explore/probes/mg][/img] |
| Posted by Mathan - 03-16-2004, 10:25 PM |
|
கம்ப்யூட்டர் நினைத்துக்கொள்கிறது .. ! கம்ப்யூட்டர் மனிதனைப் பற்றி என்ன நினைத்துக்கொள்கிறது என்று நண்பர் ஒருவர் கிண்டலுக்காக இதை அனுப்பியிருந்தார் .. ! நீங்களும் கொஞ்சம் பாருங்கள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <img src='http://www.orch.rub.de/~muthu/pictures/jokes/ShowLetter.jpg' border='0' alt='user posted image'> நன்றி - முத்து |
| Posted by Mathan - 03-15-2004, 08:36 PM |
|
<b>நேற்றுப் பயம் சாப்பிட்டேன் .....! </b> பள்ளியில் ஆசிரியர் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார் .. ஒரு பையனை அழைத்து ஒரு தமிழ்ப் புத்தகம் கொடுத்து வாசிக்கச் சொன்னார் .. பையனுக்ககோ ழ , ள , ல தகறாறு. பழம் சாப்பிட்டேன் என்பதை பயம் சாப்பிட்டேன் என்று வாசித்தான் ... கழுகு என்பதை கயிகு என்றான் .. ஆசிரியர் பலமுறை முயற்சி செய்தார் அவனைச் சரியாக உச்சரிக்கவைக்க அவரால் முடியவேயில்லை .. கோபத்துடன் பையனுக்கு இரண்டு அடி கொடுத்து அவன் அப்பாவைக் கூட்டிவரச் சொன்னார் ... அவன் அப்பா வந்தவுடன் பிரச்சனையைச் சொல்லி நீங்கள்தான் இனிமேல் அவனுக்கு வீட்டில் உச்சரிக்கப் பழகித் தரவேண்டும் என்றார் .. கேடுவிட்டு ஆசிரியரிடம் சாதாரணமாகச் சொன்னார் அப்பா, " .சார் ... இதுதான் பிரச்சனையா ..? பையன் மேல தப்பு இல்ல... எங்க பயக்க வயக்கமே இப்படித்தான் ... நன்றி - முத்து |
| Posted by Mathan - 03-11-2004, 08:44 PM |
|
<b>நல்ல பெடியன் - விஜயாலயன் </b> எங்கள் வீட்டில் ஒரு வானொலிப்பெட்டி. எனக்கும் அதற்கும் பல தொடர்புகள் உள்ளன. நான் பிறந்த அதே 1976 ஆம் ஆண்டுதான் அதை வாங்கினார்களாம். நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது இரவு நேரங்களில் அப்பா அந்த வானொலிப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு வீட்டு முன் விறாந்தைக்கு சென்று விடுவார் (பிள்ளைகளின் படிப்பைக் குழப்பக்கூடாதென்று). நான் நைசாகப்போய் அப்பாவின் மடியில் தூங்கிவிடுவேன். நான் கடைக்குட்டி என்பதால் என்னை யாரும் படியென்று விரட்டமாட்டார்கள். இலங்கை வானொலியில் முஸ்லிம் நிகழ்ச்சிகள், செய்தி, பிபிசி தமிழோசை, நாடகங்கள் என்று பல நிகழ்ச்சிகளை ஒலித்து நள்ளிரவில் ஓயும் அந்த வானொலி. 1982 இல் தொலைக்காட்சிப்பெட்டி வீட்டிற்கு வந்ததும் அது ஒலிக்கும் நேரம் குறைந்தது. ஆனாலும் வீட்டுவிறாந்தையில் அதுதான் தொடர்ந்தும் கதாநாயகன். நாட்டில் போர் தொடங்கி மின் விநியோகம் தடைப்பட்டதும் தொலைக்காட்சிப்பெட்டி மூலைக்குள் முடங்கியது. வானொலிப்பெட்டிதான் நாட்டில் நடப்பதை அறிய ஒரே வழியானது. பிபிசி, வெரித்தாஸ், உள்ளூர் செய்திகள் என்று நேரத்துக்கு நேரம் அலைவரிசை மாறும். மேலும் போர் உக்கிரமடைய மின்கலங்களுக்கும் (battery) தடைவிதித்தார்கள். அப்பொழுது எனது கைவண்ணம் ஆரம்பித்தது. வானொலிப்பெட்டியைக் பலமுறை கழற்றி அதற்குள் மாறுதல்கள் செய்து மிதிவண்டி மின்பிறப்பாக்கி (cycle dynamo) மூலம் இயங்கச்செய்தேன். மாலையானதும் மிதிவண்டியை தலைகீழாக நிறுத்தி அதனருகில் இருந்து கைகளால் மிதியை (pedal) பிடித்து சுற்றி செய்திகள் கேட்டோம். அந்தச்செய்திகள்தான் அன்றாட வாழ்வின் இயக்கங்களைத் தீர்மானித்தன. பின்னர் நான் பல்கலைக்கழகம் சென்று இலத்திரனியற் பொறியியல் படித்துகொண்டு இருக்கும்போது ஊரிலிருந்து என்னைப்பார்க்க வந்த அம்மா சொன்னார் "தம்பி, அந்த றேடியோ பழுதாகிப்போய், கமலத்தின் அண்ணன்தான் அதை திருத்தித்தந்தவன். அவன் நல்ல பெடியன். திருத்தினதுக்கு காசுகூட எடுக்கேல்லை. ஏதோ "ஐசி" (IC) மாத்திறதிற்கெண்டு 1500 ரூபாவை மட்டும்தான் எடுத்தான்". எனது இலத்திரனியல் அறிவில் சந்தேகம் ஏற்பட்டது. பலமுறை நான் கழற்றிப் பார்த்தபோதெல்லாம் என் கண்ணிற்கு மட்டும் ஏன் ஒரு "ஐசி"யும் தென்பட்டிருக்கவில்லை? அதைவிட 1976 இல் வாங்கிய வானொலிப்பெட்டியில் "ஐசி" வந்தது எப்படி? நான் ஊர் போகும் நாளிற்காய் காத்திருக்கிறேன். அந்த நல்ல பெடியனைச் சந்தித்து எங்கள் வானொலிப்பெட்டியில் உள்ள "ஐசி" ஒன்றைக்காட்டுமாறு கேட்பதற்கு. |
| Posted by Mathan - 03-11-2004, 07:21 PM |
| குருவி, இதை தொடர்ந்து தர்க்கித்து இழுத்து செல்ல விரும்பவில்லை. படிப்பவர்கள் தீர்மானிக்கட்டும். |
| Posted by kuruvikal - 03-11-2004, 03:43 PM |
|
மொழி என்பது தொடர்பாடலுக்குகான ஊடகமே அன்றி தனிநபர் 'விலாசம்' காட்டும் சாதனம் அல்ல...ஏதோ தலைமயிர் வெட்ட சிங்களம் பேச வேண்டும் என்றால் பண்டிதமணிச் சிங்களம் பேச வேண்டும் என்பது போல இருக்கு....இது நகைச்சுவை அல்ல நக்கல்.....! நாம் என்ன தமிழ் அல்லது ஆங்கில பட்டதாரிகளா.....தமிழில் ஆங்கிலத்தில் பண்டிதமணிகளாய் உரையாட...ஏதோ தெரிந்ததைக் கொண்டு பிழையென்று அறியாமலே பேசுகிறோம் எழுதுகிறோம்...இதையே ஒரு பண்டிதமணி பார்ப்பாரேயானால்...அவருக்குச் சிரிப்புத்தான் வரக்கூடும்...! அதற்காக நாம் ஓடி ஒதுங்க முடியுமா.....???! ஒன்றை சிலர் அறிந்து கொள்ள வேண்டும் உந்த நக்கல்கள் எல்லாம் தாண்டி வந்தவர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள்....நகைச்சுவைக்கும் நக்கலுக்கும் தெளிவான வடிவம் இருக்கு....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
|
| Posted by Mathan - 03-11-2004, 03:01 PM |
| இதை தர்கத்துக்காக சொல்லவில்லை. எனது தனிப்பட்டகருத்து. அவருக்கு பண்டித சிங்களம் தெரியவேண்டியதில்லை தெரிந்தவரை பேசலாம். ஆனால் சரியாக தெரியாதபோது எதற்கு அசட்டு தைரியம்? மொழி தெரியாதபோது எதற்கு தெரிந்ததாக காட்டிக் கொள்ள வேண்டும். |
| Posted by kuruvikal - 03-10-2004, 11:26 PM |
|
இது நகைச் சுவை என்பதிலும் பார்க்க அவரின் தைரியம் என்பதாகத்தான் படுகிறது....இது ஏதோ மற்றாக்கள் பிழைவிடாமல் சிங்களம் கதைக்கிறது போலக் காட்டிறதாத்தான் தெரியுது....சிங்களம் என்ன அவருக்குத் தாய் மொழியே...பண்டிதச் சிங்களம் பேச....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இது நகைச்சுவையில்லை இதுதான் உண்மை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
| Posted by Mathan - 03-10-2004, 10:26 PM |
|
தான் அறியாச் சிங்களம்... - விஜயாலயன் "தான் அறியாச் சிங்களம், தன் பிடரிக்குச் சேதம்". இது எங்கள் நாட்டில் வழக்கிலுள்ள ஒரு பழமொழி. தனக்குத்தெரியாத ஒரு வேலையைச் செய்ய ஆரம்பிக்கும் ஒருவரை எச்சரிக்கப் பயன்படுத்தும் ஒரு பழமொழியாகவே இதனைப் பயன்படுத்துவார்கள். இந்தப் பழமொழிக்குப் பின்னால் சுவையான (உண்மையில் சோகமான) ஒரு கதையிருக்கக்கூடும் என்று சிறுவயதில் நான் யோசித்ததுண்டு. கவுண்டமணியிடம் செந்தில் உதைபடுவதை நகைச்சுவையாக பார்த்துப்பழகியதால் யாரோ பிடரியில் அடி வாங்கியிருந்தாலும் அதுவும் நகைச்சுவை என்றே சிந்தித்திருக்கிறேன். ஆனால் பின்னாளில் என் பிடரிக்கே சேதம் வரக்கூடும் என்று நான் நினைத்துப் பார்த்ததேயில்லை. சிங்களவர்களின் ஊரான களுத்துறையில் பிறந்தாலும் ஒரு வயதிலேயே யாழ்ப்பாணத்திற்கே திரும்ப வேண்டியேற்பட்டதால் வீட்டில் எனக்கு மட்டும் சிங்களத்தில் கதைக்கத் தெரியாதிருந்தது. ஆனாலும் மொழிகளைத் தெரிந்திருப்பது நல்லது என்று எனது அப்பா சிங்கள எழுத்துக்களைச் சொல்லிக்கொடுத்தார். பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் ஒரு சிங்கள வகுப்பிற்குப் போய் பாலர்வகுப்பு சிங்களப்புத்தகங்களை படித்தேன். பள்ளிக்கூடத்தில் எனது வகுப்பில் எனக்கு மட்டுமே மூன்று மொழிகளையும் (தமிழ், ஆங்கிலம், சிங்களம்) எழுதத் தெரியுமென்ற புளுகத்தில் கிடைத்த இடத்திலெல்லாம் மூன்று மொழிகளிலும் எழுதிக்கொள்வேன். காலம் மாறி கொழும்பிற்கு வந்து மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, சக தமிழ் மாணவர்களிலும் பார்க்க எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே சிங்களம் தெரியுன்று ஒரு அசட்டுத் தைரியம் என்னுடன் ஒட்டிக்கொண்டது. அப்பொழுது நான் கல்கிசையில் இருந்த அண்ணா வீட்டில் தங்கியிருந்தேன். ஒரு நாள் முடிவெட்ட வேண்டுமென்று வீட்டிலிருந்து வெளிக்கிட்டேன். சிங்களம் ஒழுங்காகக் கதைக்கக்கூடிய அப்பா அல்லது அண்ணாவுடன் போயிருக்கலாம். ஆனாலும் எனக்குத்தான் சிங்களம் அதிகம் தெரியும் என்ற நினைப்பு இருந்ததே. நடந்துபோய் கல்கிசைச்சந்தியிலிருந்த சலூனுக்குள் புகுந்துவிட்டேன். முடிவெட்டுபவர்கள் எல்லாரும் வேலையாக இருந்தார்கள். அதுவும் நல்லதுக்குத்தான் என்று நினைத்துக்கொண்டு ஓரமாக ஒரு கதிரையில் இருந்துகொண்டேன். ஊர் ஞாபகத்தில் பத்திரிகை படிக்கலாமென்று சுற்றிப்பார்த்தால் தமிழ்ப் பத்திரிகைகள் ஒன்றையும் காணவில்லை. சரி, உட்கார்ந்திருக்கும்போது முடிவெட்டுபவருக்கு என்ன சொல்ல வேண்டுமென்று யோசிக்க ஆரம்பித்தேன். நான் படித்த பாலர்வகுப்புச் சிங்களப்புத்தகங்களில் முடிவெட்டுவது பற்றிய வசனங்கள் எதுவுமே படித்திருக்கவில்லை என்பது அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்து பயமுறுத்தியது. நைசாக வீட்டிற்கு திரும்பிப் போய்விடலாமோ என்று நினைத்தால், வீட்டில்தான் முடிவெட்டப்போகிறேன் என்று சொல்லிப்புறப்பட்டு விட்டு "மொழி தெரியாததால் முடிவெட்டவில்லை" என்று சொல்லித்திரும்ப தன்மானம் இடங்கொடுக்கவில்லை. ஒருவழியாக தலைமயிருக்கு "ஹிச கெச" என்றும் வெட்டுவதற்கு "கபன்ன" என்றும் ஞாபகத்திற்கு வந்தது. கொஞ்சம் தைரியம் வந்துசேர்ந்தது. "ஹிச கெச கபன்ன ஓன" (தலைமயிர் வெட்ட வேண்டும்) என்று மனதிற்குள் உருப்போட்டுக்கொண்டேன். எனது முறை வந்ததும் "வாடிவென்ன" (உட்காருங்கள்) என்றதும் போய் உட்கார்ந்துகொண்டேன். "கொண்டய கபன்ன ஓனத" என்று கேட்டார் முடிவெட்டுபவர். இதென்ன கொண்டையில்லாத என்னைப்பார்த்து 'கொண்டையை வெட்டவா' என்று கேட்கிறாரே என்று யோசித்ததில் அவருக்கு கண்பார்வை சரியில்லையோ என்ற சந்தேகம் வந்தது. "நா, நா. ஹிச கெச கபன்ன ஓன" என்றேன் நான். *** கொண்டய கபன்ன ஓனத - முடி வெட்ட வேண்டுமா, பேச்சு வழக்கில் ("ஹிச கெச கபன்ன ஓன" யாரும் சொல்வதில்லை) நா - இல்லை *** குழப்பம் அங்கேதான் தொடங்கியது. முடிவெட்டுபவர் என்னை ஒரு மாதிரிப் பார்த்தார். இதென்னடா இவன் என்னைப்பார்த்து முழிக்கிறான், ஒரு வேளை அவரும் சிங்களம் சரியாகத் தெரியாத தமிழனோ என்று யோசித்தேன். ஆனாலும் விடக்கூடாது அவருக்கு எனது சிங்களப்புலமையை காட்டத்தான் வேண்டுமென்று முடிவெடுத்தேன். அந்த நபர் அடுத்ததாக ஏதோ சிங்களத்தில் கேட்டார். முடியை எப்படி வெட்டவேண்டுமென்று கேட்கிறார் என்று மட்டும் விளங்கியது. சிறுவயதிலிருந்தே தலைமுடியை கொஞ்சம் நீளமாகவே வைத்திருந்து பழகியதால் (ஒரு முறை குட்டையாக வெட்டி பரீட்சை மண்டபத்தில் மேற்பார்வையாளர் எனது அடையாள அட்டையில் இருப்பது யாரென்று குடைந்தது தனிக்கதை), கொஞ்சமாக வெட்டினால் போதும் என்று தெரிந்த சிங்களத்தில் ஏதோ சொன்னேன். முடிவெட்டுபவரில் ஏற்பட்டிருந்த வெறுப்பாலும் உண்மையில் அப்போது எனக்கு சிங்களம் அவ்வளவாகத் தெரிந்திருக்காததாலும் என்ன சொன்னேன் என்பது இப்போது ஞாபகத்திலில்லை. துணியால் போர்த்திவிட்டு முடிவெட்டும் இயந்திரத்தைக் கையிலெடுத்தார். அவர் எந்த அடியை இயந்திரத்தில் பொருத்தினார் என்பதை நான் கவனிக்கவில்லை. எனது தலையின் இடதுபக்கத்தில் சதிசெய்ய ஆரம்பித்தார் அந்த முடிவெட்டுபவர். நான் என்ன ஏது என்று யோசிப்பதற்குள் கற்றை கற்றையாக முடி வெட்டப்பட்டுவிட்டது. இனிமேல் சொல்லி என்ன, வெட்டிய முடியை திரும்ப ஒட்டவா முடியும், என்று பேசாமலேயே இருந்துவிட்டேன். தான் அறியாச் சிங்களம், தன் பிடரிக்குச் எப்படிச் சேதமாகும் என்பது அப்போதுதான் சரியாக விளங்கியது. கொஞ்சம் வெட்டச்சொல்வதாக நினைத்து கொஞ்சத்தை விட்டுவிட்டு வெட்டச்சொல்லிவிட்டேன் என்பது அப்போதுதான் தெரிந்தது. வீட்டிற்கு வந்தபோது என்ன இது என்று கேட்டவர்களுக்கு "கொழும்பு ஸ்டைலில வெட்டிப்பார்த்தேன்" என்று சொல்லிச் சமாளித்துக்கொண்டேன். ஆனாலும் சூடு கண்ட பூனையாக அந்தச் சம்பவத்தின் பின் இன்றுவரை, சிங்களம் சரளமாகப்பேசமுடிந்த பின்னரும் கூட, முடிவெட்ட சிங்கள சலூன்களுக்குப் போனதேயில்லை. பிடரியை கவனமாக வைத்திருக்க வேண்டும்தானே? |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: