| Thread Review (Newest First) |
| Posted by Niththila - 02-11-2006, 01:20 PM |
நன்றி மதன் அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நான் தமிழ் மணம் அதிகம் வாசிக்கிறதில்லை நேரமில்லாமை ஒரு காரணம் அடுத்தது சில உளறல்களை வாசிச்சு ஏன் பிரஷரை கூட்டோணும் எண்டுதான் :wink: பொதுவா எனது ஓய்வு நேரத்தில யாழிற்கு மட்டும் தான் வாறனான் இங்க சண்டை பிடிக்கவே நேரம் காணாம இருக்கு இதுக்க எப்படி வேற இடங்களுக்கு போறது :wink: உண்மையில உங்கட இணைப்பு நல்ல நகைச்சுவையா இருக்கு அது சரி இப்படி பல அக்கவுன்ட் வைச்சு அதை மெய்ன்டெய்ன் பண்ணவும் கருத்து எழுதவும் எப்படி நேரம் கிடைக்குது :roll: |
| Posted by kuruvikal - 02-11-2006, 11:48 AM |
சரி சரி ஏதோ நடக்கட்டும்.. தமிழின் பெயரால் நல்லது நடத்திச்சினம் எண்டா வரவேற்கலாம்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
| Posted by Mathan - 02-11-2006, 11:33 AM |
kuruvikal Wrote:தமிழ்மண நிர்வாகத்தை குறை சொல்ல முடியாது..காரணம்..நீங்கள் சொல்லுற பின்னூட்டல்களில் அதிகம் அநாகரிகமாக எழுதுபவர்கள் ஈழத்தமிழர்கள்..! உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமா...???! வேண்டாம்..! இன்னும் சிலர் ஈமெயில் ஐடிகள் மூலம் தங்களுக்குள் அறிமுகம் ஆகிக்கொண்டு.. அறிமுகமானவர்கள்..தங்கள் பதிவுக்கு பின்னூட்டம் விட்டுவிட்டவர்கள் என்று தேடித்தேடி பின்னூட்டம் என்று என்னவோ விடுகினம்..உருப்படியா நடப்பவை நடந்திருந்தா தமிழ்மணமும் ஒத்துழைச்சிருக்கும்..! நிறைய முதிர்ச்சியற்ற தன்மை தமிழில் எழுதுபவர்களிடம் உண்டு...! உதாரணத்துக்கு ஒரு பெண் பெயரில் ஈமெயில் ஐடி வச்சிருந்தால் அதுக்கு வரும் ஈமெயில்களின் எண்ணிக்கை எம் எஸ் என் சட் இணைப்புக்கான உத்தரவாதம் கேட்டு வரும் அழைப்புக்கள் அதிகம்..இது எழுத்தாளர்களுக்கான திறமையை வெளிக்கொணரும் ஆரோக்கியமான சூழலுக்கான நல்ல பண்பாகத் தென்படவில்லை..! :wink: தமிழ்மண நிர்வாகத்தை குறை சொல்லவில்லை. அனைத்து இடங்களிலும் அந்தந்த நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு அமைய சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுகின்றது என்பதையே குறிப்பிட்டேன். அதை விட்டு விடுங்கள். எம்.எஸ்.என் ஐடி கேட்டு வரும் அழைப்புக்கள் என்றால் அதில் பாரபட்சமே இல்லை அது எல்லா இடத்திலையும் தாராளமாக நடக்கின்றது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|
| Posted by Shankarlaal - 02-11-2006, 11:28 AM |
| அட இப்படியும் ஒன்று இருக்கா? எனக்கு இவ்வளவு நாளும் விசயம் தெரியாம போச்சு. நான் இன்னும் மூன்று அக்கவுண்ட் தொடங்கப்போகிறேன். தகவலுக்கு நன்றி. |
| Posted by kuruvikal - 02-11-2006, 11:00 AM |
Mathan Wrote:எவை "நல்ல" பதிவுகள் என்று குறிப்பிட விரும்பவில்லை. ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பார்வை தானே. நான் நல்ல பதிவு என குறிப்பிடுவது உங்களுக்கு தவறாக படலாம் அது இன்னொரு விவாதத்திற்கு வழிவகுத்துவிடும். சரி நல்லதை விடுங்கள்..! தமிழ்மண நிர்வாகத்தை குறை சொல்ல முடியாது..காரணம்..நீங்கள் சொல்லுற பின்னூட்டல்களில் அதிகம் அநாகரிகமாக எழுதுபவர்கள் ஈழத்தமிழர்கள்..! உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமா...???! வேண்டாம்..! இன்னும் சிலர் ஈமெயில் ஐடிகள் மூலம் தங்களுக்குள் அறிமுகம் ஆகிக்கொண்டு.. அறிமுகமானவர்கள்..தங்கள் பதிவுக்கு பின்னூட்டம் விட்டுவிட்டவர்கள் என்று தேடித்தேடி பின்னூட்டம் என்று என்னவோ விடுகினம்..உருப்படியா நடப்பவை நடந்திருந்தா தமிழ்மணமும் ஒத்துழைச்சிருக்கும்..! நிறைய முதிர்ச்சியற்ற தன்மை தமிழில் எழுதுபவர்களிடம் உண்டு...! உதாரணத்துக்கு ஒரு பெண் பெயரில் ஈமெயில் ஐடி வச்சிருந்தால் அதுக்கு வரும் ஈமெயில்களின் எண்ணிக்கை எம் எஸ் என் சட் இணைப்புக்கான உத்தரவாதம் கேட்டு வரும் அழைப்புக்கள் அதிகம்..இது எழுத்தாளர்களுக்கான திறமையை வெளிக்கொணரும் ஆரோக்கியமான சூழலுக்கான நல்ல பண்பாகத் தென்படவில்லை..! :wink: hock:
|
| Posted by Mathan - 02-11-2006, 10:42 AM |
|
எவை "நல்ல" பதிவுகள் என்று குறிப்பிட விரும்பவில்லை. ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பார்வை தானே. நான் நல்ல பதிவு என குறிப்பிடுவது உங்களுக்கு தவறாக படலாம் அது இன்னொரு விவாதத்திற்கு வழிவகுத்துவிடும். சிலரின் ஏடாகூடமான புதிய வலைப்பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள் அங்கும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அது தவிர வலைப்பதிவுகளை தொகுக்கும் தமிழ்மணத்தின் கொள்கைகளும் சுதந்திரத்தை மட்டுப்படுத்துகின்றது. இது கருத்துகளம், வலைப்பதிவு உட்பட அனைத்து இடங்களிலும் நடப்பது தான். |
| Posted by kuruvikal - 02-11-2006, 10:25 AM |
Mathan Wrote:வலைப்பதிவுகளை நான் இப்போது படிப்பது குறைவு. முன்பு தொடர்ச்சியாக படித்த காலங்களில் பல நல்ல பதிவுகளை கண்டிருக்கின்றேன். இன்னமும் பல நல்ல பதிவுகள் உண்டென நம்புகின்றேன். நாங்களும் அதிகம் படிப்பதில்லை...நீங்கள் எதை நல்லது என்று குறிப்பிடுகிறீர்களோ தெரியாது பருமட்டாக நோக்கின் "கொசிப் ஐரம்" தான் அதிகம்...ஒரு சில 10க்குள் உள்ள வலைப்பதிவுகளின் உரிமையாளர்கள் மட்டுமே ஆக்க பூர்வமா எழுதினம்...! அதுமட்டுமில்லாமல் அங்கும் கூட இருந்து வந்த கருத்துச் சுதந்திரம் தற்போது வலைப்பதிவாளர்களின் அல்லது வலை தேடிகளின் தொந்தரவால் வரையறுக்கப்பட்டுள்ளது..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by Mathan - 02-11-2006, 10:16 AM |
|
வலைப்பதிவுகளை நான் இப்போது படிப்பது குறைவு. முன்பு தொடர்ச்சியாக படித்த காலங்களில் பல நல்ல பதிவுகளை கண்டிருக்கின்றேன். இன்னமும் பல நல்ல பதிவுகள் உண்டென நம்புகின்றேன். கருத்துக்களை வெளிப்படுத்தும் ஊடகங்கள் அதிகம் பேரை ஈர்க்கும் போது அதில் பிரச்சனைகளும் மோதல்களும் அதிகமாவது வாடிக்கை தான். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த கருத்துகளங்கள் ஜனரஞ்கமானவுடன் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கவில்லையா. அது போல கருத்துக்களத்திற்கு அடுத்து வந்த ஊடகமான வலைப்பதிவுகளுக்குள்ளேயும் சண்டை சச்சரவுகளும் உள்நுழைவது கவலைக்குரிய ஒன்று தான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|
| Posted by kuruvikal - 02-11-2006, 09:57 AM |
Mathan Wrote:வலைப்பதிவொன்றில் இந்த பதிவை படித்த போது சிரிப்பு தாங்க முடியவில்லை. இதில் சில விடயங்கள் கருத்து களத்திற்கும் பொருந்தும் என்பதால் இங்கே இணைத்திருக்கின்றேன். வாசித்து சிரியுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நீங்கள் அதைப் பார்த்துச் சிரிக்கிறீங்கள்...இங்கை யாரோ...தமிழ்மணத்தில வாற வலைப்பூக்களில என்னமா புரட்சியா எழுதிறாங்க எண்டு புகழ்பாடினதை நினைச்சு சிரிப்பு அடக்க முடியல்ல..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by kuruvikal - 02-11-2006, 09:55 AM |
இதையேன் நகைச்சுவைக்க போட்டீங்கள்..இதுதான் நடக்குது அங்க...! உண்மையைத்தான் சொல்லினம்..! இன்னும் சங்கதியள் நடக்குது..வேணாம்..நமக்கே ஊர் வம்பை..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by Mathan - 02-11-2006, 09:53 AM |
| வலைப்பதிவொன்றில் இந்த பதிவை படித்த போது சிரிப்பு தாங்க முடியவில்லை. இதில் சில விடயங்கள் கருத்து களத்திற்கும் பொருந்தும் என்பதால் இங்கே இணைத்திருக்கின்றேன். வாசித்து சிரியுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by Mathan - 02-11-2006, 09:50 AM |
|
தமிழ் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி? தமிழ்மணத்தில் நிகழும் குடுமிப்பிடி சண்டைகளை பார்த்து மண்டை குழம்பியதாலும் எனக்கும் சமீபத்தில் இப்படி ஒரு அனுபவம் எற்பட்டதாலும் சர்வைவல் டெக்னிக் கொடுக்கச் சொல்லி என் நண்பன் ஆழம் அருமைநாயகத்தை வேண்டினேன். அவன் பல வருடங்களாக தமிழ்வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன்தான். .எங்கள் உரையாடலை அப்படியே கொடுத்துள்ளேன். "முதல்ல உன்கிட்ட எத்தனை பிளாக்கர் அக்கவுண்ட் இருக்கு?" என்றான். "ஏன்? ஒண்ணுதான்" என்றேன். "போடா லூசு, குறைஞ்சது நாலு அக்கவுண்டாவது வேண்டும்" "எதுக்கு?" "ஒரு மெயின் அக்கவுண்ட் வையி..அதுல ஆழமா அறிவுபூர்வமான கட்டுரைகளை எழுதனும்..படிக்கிறவங்க நீ எவ்ளோ பெரிய அறிவாளின்னு நெனைக்கற அளவிற்கு அதில எழுதனும்" "ம்" "அப்புறம் பின்னூட்டம் இடுறதுக்கு தனி அக்கவுண்ட்" "எதுக்கு, அதே பேர்ல பின்னூட்டம் இடலாமே" "சேச்சே,சில நேரம் தரம் தாழ்ந்து எழுத வேண்டி இருக்கும்..அதுக்கு அதே பேரை யூஸ் பண்ணா உன் இமேஜ் என்னாவது? " "ஓ" "ஆமா,ஆனா இந்த பேரை யூஸ் பண்ணும்போது ஜாக்கிரதையா இருக்கணும்.சில பேரு ஐ.பி. செக் வைப்பான்.அதுக்காக முடிஞ்ச அளவு உங்கள் பதிவுலேயே நீங்களே பின்னூட்டம் இட்டு யாரையாவது கிண்டல் பண்ணலாம்." "சரி மூன்றாவது அக்கவுண்ட் எதுக்கு" "ஆழமாகவும் அகலமாகவும் எழுதி போரடிச்சா விஜய் சாரும் நானும், நயன்தாரா என் தங்கம் என்றெல்லாம் எழுதலாம்.பர்சனாலிட்டி கிலாஷ் பிரச்சினையை தவிர்க்கலாம்" "சரி நாலாவது அக்கவுண்ட்" "அதை போலி டோண்டு உங்க பேரில வெச்சிருப்பான்.அதை கண்டுக்காதீங்க" "அட... இதுவெல்லாம் எழுதறவங்களுக்கு...எங்களை மாதிரி ஆட்களுக்கு என்ன ஐடியா?" "குறும்பும் பண்ணணும்.ஆனா எல்லார்க்கும் நல்ல பிள்ளைன்னு பேர் எடுக்கணுமா?" "..." "சென்சிட்டிவ்வான பிரச்சினைகளில் எனக்கு கருத்தே இல்லைனு நம்ப பதிவுல போட்டுட்டு யாராவது குறும்பா கருத்து சொல்லக்கூடியவங்க பதிவுல போய் சூப்பர்,எல்லா கருத்தையும் ஏற்க முடியாவிட்டாலும் உங்கள் பதிவை போற்றுகிறேன் என்றெல்லாம் புகழ வேண்டும்.உடனே நீங்க எந்த கருத்தை ஏற்கறீங்க எதை மறுக்கறீங்கன்னு புரியாமல் மக்கள் குழம்புவாங்கள்ள" ",,,,," "இதுல ஒரு வம்பு என்னன்னா உங்க ஆளு எக்கச்சக்கமா மாட்டிட்டார்னா நீங்க அங்க பின்னூட்ட சப்போர்ட் கொடுக்க முடியாது.ஆனா உங்க மறைமுக ஆதரவை தெரிவிக்க நீங்க உங்க பதிவுல கம்பு சுத்தியாகணும்.இது கொஞ்சம் கஷ்டம்.தெறமை வேணும்" தன் கட்டிலுக்கு அடியில் இருந்து "நெட்ஓர்க்கிங் ஃபண்டமெண்டல்ஸ்", "உள்குத்து மேட் ஈஸீ",ஆகிய புத்தகங்களை எடுத்து கொடுத்தான் அருமைநாயகம். இதற்கே தலைசுத்திபோன நான் அப்புறம் வருகிறேன் என்று கூறி நடையை கட்டினேன். நன்றி - முத்து / ஒரு தமிழனின் பார்வை |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
hock: 
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->