| Thread Review (Newest First) |
| Posted by ப்ரியசகி - 12-16-2005, 07:41 PM |
|
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->MUGATHTHAR எழுதியது: அட பெரிய சென்ரிமென்ட் கதையை சுண்டல் போட்டிருக்கிறார் இதைப்பாத்து சிரிச்சன் எங்கிறீயள் எனக்கெண்டால் 2நாள் சாப்பாடே இறங்கேலை அதுகள் ஊரைவிட்டு ஓடினமாதிரி என்னாலை ஓட முடியேலையே............ என்னாது......... பொன்னம்மாக்காவை விட்டு ஆரோடையோ ஓடப் போறியளா?? இது நல்லா இல்லை ஆமா!!! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆமா...நீங்கள் சொன்னதும் அங்கிள் ஏதோ கேட்டுடுவார் எண்றாப்போல.....முதல்ல ஆமாவா.. இல்லையா? ஒண்டை சொல்லி பழகுங்கோ தூயன்..சீ தூயவன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by தூயவன் - 12-16-2005, 03:54 PM |
MUGATHTHAR Wrote:அட பெரிய சென்ரிமென்ட் கதையை சுண்டல் போட்டிருக்கிறார் இதைப்பாத்து சிரிச்சன் எங்கிறீயள் எனக்கெண்டால் 2நாள் சாப்பாடே இறங்கேலை அதுகள் ஊரைவிட்டு ஓடினமாதிரி என்னாலை ஓட முடியேலையே............ என்னாது......... பொன்னம்மாக்காவை விட்டு ஆரோடையோ ஓடப் போறியளா?? இது நல்லா இல்லை ஆமா!!! :oops: :oops: |
| Posted by MUGATHTHAR - 12-15-2005, 05:55 PM |
Jenany Wrote:மனசு ரொம்ப கவலையா இருந்திச்சு. இதை பார்த்திட்டு எல்லாம் மறந்து சிரித்து விட்டேன் அட பெரிய சென்ரிமென்ட் கதையை சுண்டல் போட்டிருக்கிறார் இதைப்பாத்து சிரிச்சன் எங்கிறீயள் எனக்கெண்டால் 2நாள் சாப்பாடே இறங்கேலை அதுகள் ஊரைவிட்டு ஓடினமாதிரி என்னாலை ஓட முடியேலையே............ |
| Posted by Jenany - 12-15-2005, 03:20 PM |
அடடா கதை சூப்பரா இருக்கு சுண்டல்........ மனசு ரொம்ப கவலையா இருந்திச்சு. இதை பார்த்திட்டு எல்லாம் மறந்து சிரித்து விட்டேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|
| Posted by Luckylook - 12-15-2005, 12:22 PM |
| தலைவா கிளைமேக்ஸ் "கிழக்கே போகும் ரயில்" போல் உள்ளதே? |
| Posted by தூயவன் - 12-15-2005, 05:17 AM |
Danklas Wrote:வேதனை, வேதனை, வேதனை,, வெட்கம், அவமானம்,,,, எனது (கொறுனா, ஈபிடிபி, ஈஎண்டிஎல்.எவ்,புளெட்,ஒட்டுப்படைகள்) ஒட்டுப்படைப்படை உறுப்பினர்களை மையாமாக வைத்து வரையப்பட்டிருக்கும் இவ் கற்பனை கதையினை தோனி, அதிரடி, வலிப்பு இனையத்தளங்கள் சார்ப்பாகவும், றீபிசி, கிழிஞ்சவாணி வானொலிகள் சார்பாகவும் வன்மையாக கண்டிப்பதோடு, மேலும் இப்படியான (கழுதை, நரி, குரங்கு, பண்டி சம்பந்தப்பட்ட) அறிக்கைகள், கதைகளை பிரசுரித்தால் சுண்டல் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அதாவுல்லாவின் சார்பில் அமைச்சர் ஒட்டுன்னி துக்குளஸ் சா டக் கூறிக்கொள்கிறேன்,,, :evil: :evil: :evil: அது தான் தலைப்பிலேயே மன்னிக்கச் சொல்லி கேட்டிட்டானில்லோ? பிறகேன் புலம்பிக் கொண்டு இருக்கின்றியள்? :evil: :evil: |
| Posted by SUNDHAL - 12-15-2005, 03:22 AM |
|
[quote=கீதா]ஆகா சுண்டல் அண்ணா கழுதையின் கதைÜட போட வெளிக்கிட்டாரா என்னும் என்னும் எல்லாக் கதைகளையும் போடுங்கள் சுட்டு நாங்கள் ஆவலுடன் வாசிக்க இருக்கிறோம் சுண்டல் கண்ணா :oops: :oops: :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by கீதா - 12-14-2005, 07:51 PM |
ஆகா சுண்டல் அண்ணா கழுதையின் கதைÜட போட வெளிக்கிட்டாரா என்னும் என்னும் எல்லாக் கதைகளையும் போடுங்கள் சுட்டு நாங்கள் ஆவலுடன் வாசிக்க இருக்கிறோம் சுண்டல் கண்ணா சீ அண்ணா நன்றி உங்கள் சுட்டுப்போட்ட கழுதைக்கதைக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by Danklas - 12-14-2005, 05:01 PM |
|
வேதனை, வேதனை, வேதனை,, வெட்கம், அவமானம்,,,, எனது (கொறுனா, ஈபிடிபி, ஈஎண்டிஎல்.எவ்,புளெட்,ஒட்டுப்படைகள்) ஒட்டுப்படைப்படை உறுப்பினர்களை மையாமாக வைத்து வரையப்பட்டிருக்கும் இவ் கற்பனை கதையினை தோனி, அதிரடி, வலிப்பு இனையத்தளங்கள் சார்ப்பாகவும், றீபிசி, கிழிஞ்சவாணி வானொலிகள் சார்பாகவும் வன்மையாக கண்டிப்பதோடு, மேலும் இப்படியான (கழுதை, நரி, குரங்கு, பண்டி சம்பந்தப்பட்ட) அறிக்கைகள், கதைகளை பிரசுரித்தால் சுண்டல் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அதாவுல்லாவின் சார்பில் அமைச்சர் ஒட்டுன்னி துக்குளஸ் சா டக் கூறிக்கொள்கிறேன்,,, :evil: :evil: :evil: மேலும் இந்த கதையின் ஹீரோ, ஹீரோயின் காரக்டர்களை உன்னிப்பாக அவதானிக்கும் பொழுது டக்கிளஸ்-மகேஸ், கொறுனா- திருமதி கொறுனா, கதாப்பாத்திரங்களை மையாமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாக புலனாய் தகவல் கிடைத்துள்ளது,, ஆகையால் மிகவும் வன்மையாக ஆத்திரமாக மீண்டும் எனது கண்டனத்தை றீபிசி ஊடக தெரிவித்துக்கொள்கிறேன்,,, :evil: :evil: |
| Posted by SUNDHAL - 12-14-2005, 04:26 PM |
|
அடபாவிங்களா என்ன கய்தை ஆக்கிட்டிங்களா?? வேணாம் சொல்லிட்டன் அழுதிடுவன்.......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|
| Posted by அருவி - 12-14-2005, 09:54 AM |
MUGATHTHAR Wrote:Rama Wrote:உங்களின் ஆதரவு தேடி உங்கு தான் வந்திட்டுதோ? முகத்தார் நீங்கதானே போட்டுக்குடுத்தனீங்க, இப்ப ஒன்றும் தெரியாதவர்மாதிரி கேக்கிறீங்க கேள்வி.. |
| Posted by MUGATHTHAR - 12-14-2005, 08:24 AM |
Rama Wrote:உங்களின் ஆதரவு தேடி உங்கு தான் வந்திட்டுதோ? ஆ........அதெப்பிடி கழுதைக்கு தங்கடை சொந்தக்காரர் அவுஸ்ரேலியாவிலை இருக்கிற விசயம் தெரிஞ்சுது பிள்ளை.... |
| Posted by RaMa - 12-14-2005, 08:03 AM |
| சுண்டல் சுட்ட கழுதை கதை சூப்பராய் இருக்கு. அப்படியே தாண்டவளத்தில் ஒடி ப்ளைட் எடுத்தாக கேள்வி. கவனம் உங்களின் ஆதரவு தேடி உங்கு தான் வந்திட்டுதோ? :roll: :roll: |
| Posted by Mathuran - 12-13-2005, 06:08 PM |
|
ஆகா என்னமா சிந்திச்சு முத்துக்களா உதிர்ந்திருக்கீங்க. நான் கறுப்பு நீ? செருப்பு. நான் தெம்மாங்கு. நீ தேவாங்கு. நான் புலி நீ. புளி. |
| Posted by SUNDHAL - 12-13-2005, 05:43 PM |
| ஜயோ நான் எங்க கற்பனை பன்னன் நான் just சுட்டு போட்டேன்ப்பா....கற்பனை பன்னது இந்தியாவில் இருந்து முகில்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by Selvamuthu - 12-13-2005, 04:57 PM |
|
கன்பனை நன்று. கழுதைகள் கல்யாணம் என்றாலும் கண்ணீர் வராத குறை. இந்தக் கழுதைகளைப் பார்த்து எந்தக்கழுதையாவது பாடம் கற்றுக்கொள்ளட்டும் என்றுதான் இக்கதையை அவுஸ்திரேலியாவிலிருந்து கற்பனை செய்தீர்களா? |
| Posted by SUNDHAL - 12-13-2005, 02:26 PM |
|
கழுதைகள் மன்னிக்கவும்! (கோர்ட்டில் கேஸ் போட வேண்டாம்) கற்பனை: முகில் ஆட்டையாம்பட்டி என்றொரு அழகிய குக்கிராமம். (இந்தக் கிராமம் தமிழ்நாட்டில் இல்லை. ஏன் இந்தியாவிலேயே இல்லை. இது ஒரு வெர்ச்சுவல் கிராமம் என்று வைத்துக் கொள்வோமே!) இது திரு மற்றும் திருமதி என்ற இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றி வரும் கதை. அவர்களின் மழலைக் காலத்தில் ஆரம்பித்து இளமைக் காலத்தில் தொடர்வதாய் உருவாக்கப்பட்ட கதை. திருவுக்கு அப்போது ஒரு வயது இருக்கும். திருமதிக்கு வயது ஆறு மாதமிருக்கும். இரண்டு பேருமே செம அழகாக இருப்பார்கள். ஊரே கொண்டாடும் அழகு எனச் சொல்லலாம். (திரு ஓர் ஆண் கழுதை, திருமதி ஒரு பெண் கழுதை என்பதை இங்கே சொல்லிவிடுகிறேன்.) இப்படி எல்லாச் சுவர்களிலும் திரு தன் முதுகு ரேகையை பதித்து விட, அதற்கு மேல் தன் முதுகு ரேகையை அதில் பதிக்க அருவருப்படைந்து அவஸ்தைப்படும் திருமதி. இப்படி திருவின் மேல் திருமதிக்கு விறுவிறுவென வெறுப்பு வளர்ந்து கொண்டே போனது. இரண்டு வருடங்கள் போனது. அன்று தான் உண்டு கொண்டிருந்த ஒரு வாரப் பத்திரிகையில் ஒரு பேப்பரை திருமதிக்கு கொடுத்தான் திரு. ஆனால் திருமதி அதை வாங்கிக் கொள்ளவில்லை. "வேண்டாம்' என மறுத்தபோது திருமதியின் முகத்தில் வெளிப்பட்டது வெட்கம் கலந்த கோபமா, அல்லது வெறுப்பு கலந்த ஆத்திரமா எனத் திருவால் புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம் அந்தப் பேப்பரில் இருந்த வார்த்தைகள் "ஓடிப்போகலாமா?'' தினம் தினம் திருமதி செல்லும் பாதையில் ஒரு ஒற்றை ரோஜாவோடு காத்திருக்கும் திரு. ஒருநாளும் அந்த ரோஜாவை வாங்கிக்கொண்டதில்லை திருமதி. அதுக்காக கவலைப்பட்டுக்கொண்டு கண்ணீர் விட்டதில்லை திரு. என்ன செய்வான்? வேறென்ன.. ரோஜாவைத் தின்று விடுவான். ஆட்டையாம்பட்டியில் அந்த வருடம் கோடைக்காலத்தைத் தாண்டியும் மழை ஒரு எஸ்.எம்.எஸ். கூட அனுப்பவில்லை. விவசாயம் படுத்துவிட்டது. கண்மாய் நிர்வாணமாய் கிடந்தது. கள்ளிச் செடிகளும், கருவேலம் மரங்களும்தான் பாக்கியிருந்தன. "எப்பா பதினைஞ்சு வருசங்கழிச்சு இப்படி பஞ்சம் பல்லைக் காட்டுது. நம்ம ஊரு எல்லைச்சாமிக்கு வர்ற வெள்ளிக்கிழமை பொங்க வைச்சு பூசாரி கிட்ட குறி கேட்டுருவோம்!' எனப் பஞ்சாயத்துப் பெரிசு தன் பஞ்ச் தீர்ப்பை வழங்கினார். "ஏஏஏய்ய்ய்..நாஞ் சாமி வந்திருக்கேன்..ஊருல நல்ல காரியம் ஏதோ தடங்கலாயிடுச்சு. பெரும் தெய்வக் குத்தம் ஆயிடுச்சு! மழை தண்ணீ வேணுமுன்னா இளங் கழுதைகளுக்கு கண்ணாலம் செஞ்சு வைக்கிறதுதான் ஒரே பரிகாரம். வர்ற பவுர்ணமி அன்னிக்கு கண்ணாலம் நடக்காட்டி அடுத்த ஏழு வருசங்களுக்கு பஞ்சந்தேன்..பட்டினிதேன்!' எனப் பூசாரி கூறிய வாக்கு திருமதியை பூச்சாண்டி காட்டியது. காரணம் ஊரிலுள்ள ஒரே இளம் பெண் கழுதை அவள் மட்டும்தான். கல்யாணம் சரி. இதற்காக வெளியூரில் அல்லது வெளிநாட்டிலா அவளுக்கு மாப்பிள்ளை தேடப் போகிறார்கள். திரு மட்டும்தான் ஒரே சாய்ஸ்! நினைக்க நினைக்க எரிச்சலாக வந்தது. போயும் போயும் அவனுக்கா வாழ்க்கைப் பட வேண்டுமென நினைத்த திருமதி அன்று இரவே ஊரை விட்டு ஓடிப்போக முடிவு செய்தாள். பதுங்கிப் பதுங்கி தெருத்தெருவாக ஒதுங்கி ஒதுங்கி அவள் நழுவிக் கொண்டிருக்கும்போதே பார்த்துவிட்டான் திரு. அவள் ஓட, அவன் துரத்த..அதற்கு மேல் துரத்த முடியாமல் சோர்ந்து போய் தன் சாதகத்தை ஆரம்பித்துவிட்டான் திரு. ஊரே ஒன்றுகூடி விரட்டிப் பிடித்தனர் இருவரையும். "ஏலேய்..இன்னொரு தெய்வக்குத்தம் நடக்கப் பாத்துச்சுலே! கழுதைய்ங்க தப்பிச்சுப் போயிருந்துச்சுன்னா வேற கழுதைய்களுக்கு நாம எங்கிட்டுப் போறது? இந்தக் கல்யாணச் சோடிகளை நம்மூரு எல்லைச் சாமி கோயில்லயே கட்டிப் போட்டு, காவலா ஒரு ஆளையும் போடுங்கவே!' என்று ஊர்ப்பெருசு ஒருவர் கூற திருமதிக்கு தலை சுற்றியது. "ஒரு பொம்பளையோட மனசு இன்னொரு பொம்பளைக்குத்தான் புரியும். நம்ம மனசைப் புரிஞ்சுக்குற மாதிரி இங்க எவளுமே இல்லையே' தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் திருமதி. அவளைச் சந்தோஷமாக உரசியபடி பல்லைக் காட்டிக் கொண்டிருந்தான் திரு. கல்யாண நாள் வந்தது. தனக்கு பட்டுவேட்டி சட்டை கிடைக்கும், அவளுக்குச் சின்னாளபட்டிச் சேலை கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருந்த திருவின் நினைப்பில் அரை லாரி மண் விழுந்தது. சிக்கனமாக தண்ணீரைச் செலவழித்து குளிப்பாட்டி விட்டனர். ஏழெட்டு பூக்களால் கட்டப்பட்ட மாலைகள் இரண்டு. (மொத்தமே ஏழெட்டு பூக்கள்தாங்க!) திருமதியின் நெற்றியில் பெரிதாக வைக்கப்பட்ட பொட்டு. ஊரே கூடி நின்றது. ஒரு மஞ்சள் கயிறுடன் பூசாரி தயாராக இருந்தார். கொஞ்சமாவது வெட்கப்படுவாள் மணப்பெண் என எதிர்பார்த்து ஏமாந்தான் திரு. "கழுதைக்கு வாக்கப்பட்டா கனைச்சுத் தானே ஆகணும்' என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் திருமதி. நையாண்டி மேளம் கொட்ட, வெற்றிலைக் கறை படிந்த வாயோடு புன்னகைத்து திருவின் சார்பில் திருமதிக்குத் தாலி கட்டினார் பூசாரி. அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதற்குப் பதிலாக பூசாரியை மிதித்து அவர் வலியால் அலறுவதைப் பார்க்க வேண்டும் எனத் துடித்தாள் திருமதி. வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியது போல் பெருமிதத்துடன் நின்று கொண்டிருந்தான் திரு. கல்யாணச் சாப்பாடு என அல்லோகலகல்லோகலப் பட்டுக் கொண்டிருந்தது. திருவுக்கும் திருமதிக்கும் கழுத்தில் போடப்பட்ட அந்த "மெகா' மாலைதான் கல்யாணச் சாப்பாடு. சாப்பிட்ட மக்களெல்லாம் ஏப்பம் விட்ட வாயோடு மழை வருகிறதா இல்லையா என வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, சூரியனால் வியர்வை மழை பொழிந்து கொண்டிருந்தது. ஒரு வாரமாயிற்று. "கழுதைக்குக் தெரியுமா காதலோட வாசனை' எனத் திரு வெறுக்குமளவுக்கு சண்டித்தனம் செய்து கொண்டிருந்தாள் திருமதி. "தாலி கட்டின புருஷனை மதிக்க மாட்டீங்கியே! நீயெல்லாம் ஒரு பொம்பளையா?' கோபமாகக் கத்தினான் திரு. "இது தாலிக் கயிறில்ல...என் கழுத்துல ஏறுன தூக்குக்கயிறு!' பதிலுக்குக் கத்தினாள் திருமதி. இதுவே வாடிக்கையாயிற்று. "மழை பெஞ்சிடுச்சுன்னா இந்தத் தாலியைக் கழட்டி வீசிரலாம். இல்லை சாஸ்திரத்துக்கு கல்யாணம் தான் பண்ணியாச்சே. இனிமே இவன் கூட வாழப் பிடிக்கலன்னு டைவர்ஸ் அப்ளை பண்ணலாமா' என்றெல்லாம் யோசித்தாள் திருமதி. மழை வந்த பாடில்லை. மூன்று மாதங்கள் கழிந்தது. இடைப்பட்ட நாட்களில் திரு-திருமதி ஆதர்ச தம்பதிகளாக மாறிப் போயினர். "சோடின்னா இதான்யா சோடி' எனச் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் வைத்தால் தீர்ப்பு சொல்லுமளவுக்கு மாறிப் போயினர். மேகம் கருத்தது. ரம்பா, மேனகா, ஊர்வசி என்ற பெயர் கொண்ட மூன்று புயல்கள் அடுத்தடுத்து கரையைக் கடந்தது. கண்மாய் மட்டுமல்ல ஆட்டையாம்பட்டியே நிறைந்து போனது. எங்கு பார்த்தாலும் வெள்ளம். "ஏஏய்ய்ய்... மழை நிக்கணும்னா அந்தக் கழுத கழுத்துல கெடக்குற தாலியைக் கழட்டணும். தானா நிக்கும் மழ' இடுப்பளவு நீரில் ஆவேசமாக வாக்குச் சொன்னார் பூசாரி. "நானாடா உங்களைக் கண்ணாலம் பண்ணிவைக்கச் சொன்னேன். யேய் நீங்க நெனைச்சா கட்டுறத்துக்கும் தேவையில்லாட்டி எடுக்கறதுக்கும் என் தாலி என்ன சினிமா ஷூட்டிங்குக்கு போட்ட செட்டா! புருசன் உசிரோட இருக்கறப்ப தன் தாலியைக் கழட்டிக் கொடுக்க கலாச்சாரத்தைக் கட்டிக் காக்குற எந்தப் பொம்பளையும் சம்மதிக்க மாட்டா! முட்டாப் பசங்களா உங்களால முடிஞ்சதைப் பண்ணிக்கோங்கடா' உள்ளுக்குள்ளேயே குமுறினாள் திருமதி. சிறிசு முதல் பெருசு வரை ஊரே திரண்டு தேடியது திருமதியை. மழை கொட்டிக் கொண்டிருந்தது. ஊரைத் தாண்டி தண்டவாளத்தின் மேல் ஒரு நிம்மதியான பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடிக் கொண்டிருந்தனர் அந்தக் காதல் ஜோடிகள். கழுத்தில் மஞ்சள் கயிறோடு திருமதி உங்கள் ஊருக்கும் தஞ்சம் புக வரலாம். பார்த்தால் பாவம் அவர்களை வாழ விடுங்கள்! |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&