| Thread Review (Newest First) |
| Posted by SUNDHAL - 11-18-2005, 04:23 AM |
Vasampu Wrote:Sundhal wrote: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :oops: |
| Posted by Vasampu - 11-18-2005, 12:18 AM |
|
Sundhal wrote: போடுவார்கள்..நகைச்சுவைய நகைச்சுவையா மட்டும் பாக்கனும்பா.. ஏன் கங் இத பாத்தால் கூட சிரிச்சிட்டு போவார்......... ஆமா சுண்டல் கங்குலி இதைப் பார்த்தால் சிரிச்சுட்டுத் தான் போவார். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by vasisutha - 11-18-2005, 12:07 AM |
Vasampu Wrote:ஐயோ வசி ஆரம்பத்தைக் கவனிக்கவில்லையா?? கற்பனை முகில் என்று எழுதியிருப்பதை. அத்தடன் உப்படி எழுத சுண்டலுக்கு பொறுமையில்லை. ஆனால் இறுதியாக எமுதியுள்ள இந்த <b>(ஹலோ..போதும் நிறுத்துங்க..சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு! ஒருத்தர் மாட்டுனாப் போதும். ரொம்பத்தான் ஓவரா நக்கலடிச்சே ஓய்ச்சுருவீங்களே! இனி கங்குலி பத்தி பேசப்படாது சொல்லிட்டேன்.)</b> வாக்கியம் மட்டும் சுண்டலினுடையது தெரியும் வசம்பு.. சும்மா சுண்டலை நக்கலடிச்சேன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|
| Posted by vasisutha - 11-18-2005, 12:05 AM |
Quote:போடுவார்கள்..நகைச்சுவைய நகைச்சுவையா மட்டும் பாக்கனும்பா.. யாரு சொன்னம் இப்ப சிரிக்க மாட்டம் என்று.. உலகத்தைப் பற்றி எடுத்துச்சொன்னேன் சுண்டல்.. மற்றபடி நகைச்சுவை நல்லாத்தான் இருக்கு.. :wink: |
| Posted by Vasampu - 11-18-2005, 12:04 AM |
| ஐயோ வசி ஆரம்பத்தைக் கவனிக்கவில்லையா?? கற்பனை முகில் என்று எழுதியிருப்பதை. அத்தடன் உப்படி எழுத சுண்டலுக்கு பொறுமையில்லை. ஆனால் இறுதியாக எமுதியுள்ள இந்த <b>(ஹலோ..போதும் நிறுத்துங்க..சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு! ஒருத்தர் மாட்டுனாப் போதும். ரொம்பத்தான் ஓவரா நக்கலடிச்சே ஓய்ச்சுருவீங்களே! இனி கங்குலி பத்தி பேசப்படாது சொல்லிட்டேன்.)</b> வாக்கியம் மட்டும் சுண்டலினுடையது |
| Posted by SUNDHAL - 11-18-2005, 12:01 AM |
|
போடுவார்கள்..நகைச்சுவைய நகைச்சுவையா மட்டும் பாக்கனும்பா.. ஏன் கங்குளி இத பாத்தால் கூட சிரிச்சிட்டு போவார்......... |
| Posted by vasisutha - 11-17-2005, 11:55 PM |
SUNDHAL Wrote:கங்குலிக்கு இருக்கிற தல கனத்துக்கு இது ஒன்டும் ஒவரா தொரியல எனக்கு.... எல்லாம் பக்கத்தில இருந்து பார்த்த மாதிரி எழுதிறீங்கள்.. சரி சுண்டல் அந்தாள் தலைக்கனம் புடிச்சவர் தான்.. ஆனால் சச்சின் டென்டுல்கர் சரியாக விளையாடாவிட்டால் அவருக்கும் இதே கதிதான்.. அவரைப்பற்றியும் இப்படி நகைச்சுவை போடுவார்கள்.. |
| Posted by vasisutha - 11-17-2005, 11:51 PM |
|
பாத்தீங்களா வசம்பு நான் சொன்னன் இது சுண்டல் தான் எழுதினவர் என்று.. இப்ப நம்பிறீங்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by SUNDHAL - 11-17-2005, 11:49 PM |
|
கங்குலிக்கு இருக்கிற தல கனத்துக்கு இது ஒன்டும் ஒவரா தொரியல எனக்கு.... வpளையாடுகின்ன சக வீரர்களை மதிக்கத்nதிரியாத ஒருவர். இல்லை என்றால் வீரர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெற்று இருந்து இருப்பார்.......... தான் அரச குடும்பத்தை சேர்ந்தவன் என்டதுக்காhக மற்ற வீரர்களை அடிமையாக்கி நடத்த பாத்தார் ஜயோ பாவம். அதுமட்டும் அல்ல கங்குலி வீரர்களை வடக்த்தைய வீரர்கள். தென்னிந்திய வீரர்க்ள என்று பிரித்துப்பாக்கு வழக்கமும் உடையவர்..... |
| Posted by Vasampu - 11-17-2005, 08:38 PM |
|
<b>யோவ் வசி</b> என்னையா ஆச்சு உமக்கு. சுண்டல் எப்போதையா சொந்தமாய் ஆக்கம் போட்டது????? எல்லாமே சுட்டுத்தானே போடுறது. <b>அவர் சுட்டுப் போட்டதிலே இது கொஞ்சம் ஓவர்தான். இது தானய்யா உலகம்.</b> |
| Posted by vasisutha - 11-17-2005, 06:48 PM |
|
ஒருத்தன் நல்லா விளையாடும் போது தலைமேல தூக்கிவைச்சு ஆகா ஓகோ என்று கொண்டாடுறது.. பிறகு தூக்கிப்போட்டு மிதிக்கிறது.. :roll: இதெல்லாம் ஒரு நகைச்சுவை என்று எழுதிறீங்களே சுண்டல் இப்படி எழுதுறத விட்டுவிடுங்கள்..pls.. |
| Posted by SUNDHAL - 11-17-2005, 05:51 PM |
|
ஒரு புலியின் கதை! கற்பனை : முகில் "உனக்கு முட்டை தெரியும்! நூறுக்கு எத்தனை முட்டை வரும்னு தெரியுமா' என்று கேட்டபடி பச்சைக் குழந்தை ஒன்று தொட்டிலிலிருந்து சிரிக்கிறது. "இனி சதுரமான பந்தை வைச்சு விளையாண்டாதான் நீ மேட்சுக்கு மேட்ச் பிப்டியாவது அடிக்க முடியும். உடனே ஐ.சி.சி.ரூலை மாத்து....' என ஒரு சாமியார் முகத்தில் குங்குமத்தை அள்ளி வீசுகிறார். "அதிகமா வாய் பேசுற கேப்டனும் அதிகமா சிங்கிள் டிஜிட்ல அவுட் ஆகுற பேட்ஸ்மேனும் டீம்ல நிலைச்சதா சரித்திரமே இல்லை' என அசரீரியாக ஒலிக்கிறது ரஜினியின் குரல். "லெக் ஸ்டெம்புக்கும் , மிடில் ஸ்டெம்புக்கும் நடுவுல எத்தனை ஸ்டெம்ப்ஸ் இருக்கும்? பதில் சொல்லப் போறீயா இல்லையா?' என்று கேட்டபடி ஒரு பேட்டை கிரெக் சாப்பல் சுழட்டி எறிய, அலறி அடித்து எழுந்திருக்கிறார் முன்ன்ன்னாள் கேப்டன் கங்குலி. ""அடச் சீ கனவா! ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டாங்கப்பா! நிம்மதியா அஞ்சு நிமிஷம் தூங்கக் கூட முடியல, தூங்குனா நிரந்தரமா வீட்டுல படுத்து தூங்கச் சொல்லிருவாங்களோன்னு பயமா இருக்குது. பேசாம வேறு ஏதாவது நாட்டு டீம்ல இடம் கிடைக்குதான்னு ச்சும்மா ட்ரை பண்ணிப் பாப்போமா! என கங்குலி கடுமையாய் யோசித்துக் கொண்டிருக்கும் போதே எஸ்.எம்.எஸ். ஒன்று செல்லை வந்தடைகிறது. அதில்... ""தேசிய கீதம் பாட , நூடுல்ஸ் பண்ண , பல் தேய்க்க, பத்து வரி பார்த்து எழுத , ஒரு பலூனை ஊதி வெடிக்க வைக்க இதுக்கெல்லாம் எவ்வளவு நேரம் ஆகுமோ அவ்வளவுதான் ஆகும் கங்குலி பெவிலியன்ல இருந்து பேட்டோட வந்துட்டுப் போறதுக்கும் . கங்குலி- எதிரணியினர் விரும்பும் இணையற்ற கேப்டன்.. ப்டன்.. டன்..ன்!'' டென்சனாகி எஸ்.எம்.எûஸ காலி பண்ணுகிறார். போன் அடிக்கிறது. எடுக்கிறார். "" சார், எல்லாரும் ரெடி ஆகிட்டோம். நீங்க வந்தா ஷாட் எடுத்துரலாம். ஒரு அரை மணி நேர வேலைதான். வந்துட்டீங்கன்னா, இன்னும் ரெண்டு நாள்ல விளம்பரம் டீவியில வர ஆரம்பிச்சுரும்!'' என எதிர்முனையில் ஒலிக்க , வழக்கமான கெத்துடன் கங்குலி, ""ஓ.. என்ன மேன் இது.. ரொம்ப தொல்லையாய்ப் போச்சு... ஓ.கே. வந்து நடிச்சுத் தொலைக்கிறேன்!''என போனை வைக்கிறார். "ஆஹா நமக்கு இன்னும் மாஸ் இருக்கு டோய்! விளம்பர வருமானம் குறையவே இல்ல. இதை எப்படியாவது தக்க வைச்சுக்கணும் ' என நினைத்துக் கொண்டே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கிளம்புகிறார். அங்கே.... கங்குலி: என்ன மேன், கோக்கா, பெப்ஸியா என்ன ப்ராடக்ட்? டைரக்டர்: டிரிங்ஸ் இல்லீங்க! கங்குலி: அப்ப என்ன புது கார், பைக்..இல்ல ஏதாவது பிஸ்கட் விளம்பரமா? டைரக்டர்: இல்லீங்க சார், இது சேர் விளம்பரங்க ! நான் ஸீனைச் சொல்லுறேன் கவனமாக் கேளுங்க ! அதுக்கு முன்னாடி மேக் அப் போட்டுக்கிட்டு வந்துருங்க ! இந்த விளம்பரத்துல உங்க கூட டோனியும் நடிக்கிறாரு. கங்குலி: ஓ அப்படியா.. ரொம்ப ஜூனியர் அவன் ...அவன் கூடல்லாம் நடிக்க வேண்டியிருக்கு. சரி என்ன செய்ய அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். ஆமா எப்பவும் ஒரிஜினல் கெட்-அப்ல பண்ணுறதுதான வழக்கம், எதுக்கயா மேக் அப்? டைரக்டர்: உங்களை வைச்சுத்தான் ப்ராடெக்ட் பிக்-அப் ஆகப் போகுது. அதுக்கு கெட்-அப் முக்கியம். அப்பத்தான் ரியலா இருக்குங்க! ப்ளீஸ் போட்டுக்கிட்டு வாங்க! (பத்து நிமிடம் கழித்து, மேக்-அப் அறையிலிருந்து டென்சனாக கத்தியபடி ஓடி வருகிறார் கங்குலி) கங்குலி: யோவ் டைரக்டர்..என்னையா இது.. தலையில் நரைச்ச முடி விக் வைச்சு, வெள்ளை மீசை வைச்சு கிழவன் மாதிரி ஆக்கச் சொல்லியிருக்க... என்ன ஸீன் எடுக்கப் போற..சொல்லு! டைரக்டர் : டோனி உங்ககிட்ட ஓடி வந்து, "தாத்தா அந்தக் காலத்துல நீங்க கிரிக்கெட் விளையாண்ட கதையைச் சொல்லுங்களேன்'னு கேட்பாரு! நீங்களும் பழைய நினைவுகளில மூழ்குவீங்க ! அப்ப ப்ளாஷ்பேக்ல நீங்க ஒரு காலத்துல அடிச்ச சூப்பர் ஷாட்டையெல்லாம் காட்டுறோம் . கண்களின் ஓரத்துல நினைவுகள் ஆனந்தக் கண்ணீரா கசிய நீங்க அப்படியே அந்த ஈஸி சேர்ல சாயறீங்க...உடனே பின்னணில "எடக் மடக் ஈஸி சேர்! நினைவுகள் என்றும் உங்கள் வசம் !'னு குரல் ஒலிக்கும்! கங்குலி: முடிவே பண்ணிட்டீங்களா..ஆளாளுக்கு அலம்பல் பண்ணுறீங்க! நான் என்ன கேணையனா..இந்த விளம்பரத்துல நடிக்க முடியாது. வேற ஆளைப் பார்த்துக்கோ! எனச் சொல்லி விட்டு அங்கிருந்து படு கோபமாகக் கிளம்புகிறார் கங்குலி. மைதானத்திற்குள் நுழைகிறார். அங்கே சச்சின், டிராவிட், பதான் நெட் பிராக்டீஸ் பண்ணிக் கொண்டிருக்க , உடன் கோச் சாப்பலும் நிற்கிறார். கங்குலி: என்ன பாய்ஸ் ..எப்படி இருக்கீங்க ? சாப்பல் : ஹே மேன், ஹூ ஆர் யூ? கங்குலி<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->மனதிற்குள் ) மவனே ரொம்பத்தான் ரவுசு. நக்கல் பண்ணுறியாடி. இருடி . உன்னை பின்னால் கவனிச்சுக்கிறேன். ஏதாவது பேசுனா நீ அதையே பெரிசு பண்ணிருவே !(குழைவாக) ஹலோ சார்! எப்படி இருக்கீங்க?சாப்பல்: யார் நீ? கிரவுண்ட்ல பால் பொறுக்கிப் போடுற பையனா.. கங்குலி: (பல்லைக்கடித்துக் கொண்டு) என்ன சச்சின், சார் செம ஜோக் அடிக்காருல்ல! சச்சின்: உங்களை நான் எங்கேயோ பார்த்த நியாபகம் இருக்கு . இப்ப ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டிருக்கேன். டிஸ்டர்ப் பண்ணாதீங்க ! பதான்: சார், கொஞ்சம் ஓரமா நிக்கறீங்களா...பந்து போடணும். டிராவிட்: தம்பி, கொஞ்சம் ஓரமா நில்லுப்பா! பந்து படாத இடத்துல பட்டுடப் போகுது! இந்தப் பந்து பட்டா வலி உயிர் போகும்.ஓரமாப் போப்பா! கங்குலி: (மனதிற்குள்) அடப்பாவிகளா டோட்டலா நம்ம யாருன்னே மறந்துட்டாங்களே.. இதை இப்படியே விடக்கூடாது.(சத்தமாக சிரித்தபடி) ஹை..கைஸ்! என்னைத் தெரியலையா..நான் தான் ..சவுரவ்..கேப்டன்.. சாப்பல்: (மற்றவர்களிடம்) பாய்ஸ்...மழை வர்ற மாதிரி இருக்கு ..பிராக்டிஸ் ஓவர் போகலாம்! கங்குலி: பாய்ஸ்..நில்லுங்க ...நான்தான் சவுரவ்..லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன் உங்க பழைய கேப்டன்...நில்லுங்க.. யாரும் கவனிக்காமல் செல்ல , கங்குலி அவர்கள் முன் ஓடிச் சென்று , கைகளில் ஒரு பேட்டை எடுத்து அதை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு , வாயில் ஒரு பந்தைக் கவ்விக் கொண்டு , "மூன்றாம்பிறை' கமல் மாதிரி ஆடி, ஓடிக் காண்பிக்கிறார். "அய்யோ பாவம்' என பரிதாபப்பட்ட டிராவிட் அந்த பேட்டில் தன் ஆட்டோகிராஃபை போட்டுவிட்டுச் செல்கிறார். அழும் நிலைக்கு வந்துவிடுகிறார் கங்குலி. அப்போது எங்கேயோ ஒரு குரல் பாடுகிறது... ""ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! பொலபொலவென குறைந்து போன ஸ்ட்ரைக் ரேட், ரன் ரேட் ஞாபகம் வருதே! ஏதோ ஒன்றைத் தொலைத்ததைப் போல ஏதோ ஒன்றை இழந்ததைப் போல காமெண்டேட்டர் வேலை கிடைத்தது போல உதடுகள் ஓரம் வர்ணனை வருதே!'' எனப் பாடல் ஒலிக்க.. ""டேய் எவண்டா அவன்..தைரியம் இருந்தா மூஞ்சிக்கு நேர வந்து பாடுடா! சிங்கம்டா! என கர்ஜிக்கிறார் கங்குலி. ""இல்லீங்கண்ணே! நீங்க பெங்கால் டைகர்! அதையும் மறந்துட்டீங்களா! என எங்கிருந்தோ ஒரு குரல் ஒலிக்க , பதிலேதும் பேசாமல் இடத்தைக் காலி பண்ணுகிறார் கங்குலி. கங்குலி வீட்டிற்கு வருகிறார். கூரியர் ஒன்று வருகிறது. அதில்.. "டியர் சவுரவ்.. நாங்கள் சங்கம் ஒன்றை நடத்தி வருகிறோம். அதில் இணைவதற்கான முழுத் தகுதியும் தற்போது உங்களுக்கு இருக்கிறது. சங்கத்தில் சேர ஆரம்பக்கட்டணம் ஏதுமில்லை. வருடக்கட்டணம் ரூ.100 மட்டும். விரைவில் சங்க உறுப்பினர்களுக்கென பென்சன் திட்டமொன்றையும் ஆரம்பிக்கப் போகிறோம். சங்கத்தில் சேர அணுக வேண்டிய முகவரி : கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றோர் & ஒடுக்கப்பட்டோர் சங்கம்,007,சைபர் ரோடு, புதுதில்லி. இப்படிக்கு, தலைவர்: முகமது அசாரூதின் ஆலோசகர்: அஜய் ஜடேஜா பொருளாளர்: வினோத் காம்ப்ளி படித்து முடித்து விட்டு உச்ச கட்ட டென்சனில் அந்தப் பேப்பரை சுக்கு நூறாக்குகிறார் கங்குலி. (ஹலோ..போதும் நிறுத்துங்க..சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு! ஒருத்தர் மாட்டுனாப் போதும். ரொம்பத்தான் ஓவரா நக்கலடிச்சே ஓய்ச்சுருவீங்களே! இனி கங்குலி பத்தி பேசப்படாது சொல்லிட்டேன்.) |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->மனதிற்குள் ) மவனே ரொம்பத்தான் ரவுசு. நக்கல் பண்ணுறியாடி. இருடி . உன்னை பின்னால் கவனிச்சுக்கிறேன். ஏதாவது பேசுனா நீ அதையே பெரிசு பண்ணிருவே !(குழைவாக) ஹலோ சார்! எப்படி இருக்கீங்க?