Post a New Reply
Reply to thread: கோயிஞ்சாமி
Username:
Post Subject:
Post Icon:
Your Message:
Smilies
Smile Wink Cool Big Grin
Tongue Rolleyes Shy Sad
At Angel Angry Blush
Confused Dodgy Exclamation Heart
Huh Idea Sleepy Undecided
[get more]
Post Options:
Thread Subscription:
Specify the type of notification and thread subscription you'd like to have to this thread. (Registered users only)

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Thread Review (Newest First)
Posted by வெண்ணிலா - 10-05-2005, 10:28 AM
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posted by Birundan - 10-05-2005, 10:18 AM
அதே கோயிஞ்சாமி - Part II

கனேஷ் அவர்களின் இந்த பதிவின் கோயிஞ்சாமி தொடர்ச்சி இது

தம்பி கனேஷ¤ கனவுல வந்த அதே கோயிஞ்சாமி , அவர் கனவை முடிச்சுட்டு நம்ம கனவுல வந்தாரு..வந்து, வீ எம் ,வீ எம்... கனேசுனு ஒரு வலைப்புகாரர் இருக்காரே அவரு கனவுல போயி 10 கேள்வி கேட்டேன்.,..தம்பிக்கு ஒன்னுக்கு கூட பதில் தெரியல... என்ன மாதிரியே அவருங் கோயிஞ்சாமியா இருக்காரு. ..இந்தாப்பா அதே பத்து கேள்வி , எப்படியும் கனேசு, பதிவா போடுவாரு..அவரு போட்ட ஒடனே நீ பதில் எழுதி உன் வலைப்பூவுல பதிவா போடு..அவரு கருத்துபெட்டில போடாதே ..அங்கே லின்க் மட்டும் கொடுனு கண்டிப்பா சொல்லிட்டாரு..அப்படி பன்னலனா, கூடிய சீக்கிரம் ஏதாச்சும் உளறிட்டு ..அப்புறம் எல்லாரு முன்னாடியும் வந்து பொது மன்னிப்பு கேட்க கடவாய் னு சாபம் கொடுத்துடுவேன்னு சொன்னாரு..கோயிஞ்சாமி சாபம் நமக்கு எதுக்கு.. அதான் அங்கே கருத்து பெட்டில போடாம், இதோ இங்கே போட்டுட்டேன்...கோயிஞ்சாமி வாழ்க!!சரி பதிலுக்கு போவலாம..அப்புறம் கோயிஞ்சாமிக்கு இது தான் கடைசி கனவு விசிட்டாம்..சோ, அடுத்து யாராச்சும் கோயிஞ்சாமி கனவுல வந்தாரு சொன்னா நம்பறதுக்கில்லை...சொல்லிட்டேன்.. கோயிஞ் சாபத்துக்கு ஆளாகாதீங்க..

1. உலகத்தில் இருக்கிற எல்லா நாடும் கடன்ல இருக்குன்னா (அட நம்ம அமெரிக்கா உட்பட) பணமெல்லாம் உண்மையிலேயே எங்க தான் போகுது?

வீ ம் கிட்ட முதல்ல 300 ரூ இருந்துச்சு.. அது தான் உலகத்துல மொத்த காசுனு வெச்சுக்குவோம்..ஒரு நாளு கனேசு வீ எம் கிட்ட 100 ரூ கடன் கேட்டாரு.. வீ எம் கிட்ட பணம் இல்லை..அவரு என்ன பன்னாரு சின்னவர் கிட்ட 200 கடன் வாங்கி 100 ரூ கனேசுக்கு கொடுத்தாரு, வீ எம் கேட்டப்ப சின்னவரு கிட்டயும் பனம் இல்லை..ஆனா வீ எம் கேட்டுட்டாரேனு முகமூடி கிட்ட இருந்து 200 ரூ வாங்கி கொடுத்தாரு.. சின்னவரு கேட்கறதுக்கு 10 நிமிசம் முன்னாடி தான் பனமே இல்லாத முகமூடி வீ எம் கிட்ட இருந்து 300 ரூ கடனா வாங்கினாரு.. இப்போ வீ எம் கிட்ட 100 , கனேசு கிட்ட 100 , சின்னவர் கிட்ட 0, முகமூடி கிட்ட 100 ரூ இருக்கு , மொத்தம் 300 ரூ.. ஆனா பாருங்க எல்லோரும் கடன் பட்டிருக்காங்க..

2. நாய்க்கு வழங்கப்படும் உணவு சுவையாகவும் முன்பை விட தரமானதாகவும் இருக்குதுன்னு விளம்பரப்படுத்தறாங்களே அப்ப தரத்தையும் சுவையையும் மதிப்பிடுபவர்கள் யார்?
விளம்பரத்தை பார்த்து வாங்கறவங்க சாப்பிட போறதில்லை (சாப்பிட்டாலும் வெளியே சொல்லமாட்டாங்க).. சாப்பிட போற திருவாளர் டாமி, திருமதி ஜிம்மி விளம்பரம் பார்த்து புரிஞ்சுக்க போறது இல்லை.. (சொல்ல நினைத்தாலும் , சொல்ல வழியில்லை, பாவம்) ..அப்புறம் என்ன ..ச இஷ்டத்துக்கு அடிச்சு விட வேண்டியது தானே..

டாமி : என்ன ஜிம்மி இந்த பிஸ்கேட் சூப்பரா இருக்கு.. போன வாரம கொடுத்தியே அதை விட இது சூப்பரு..

ஜிம்மி: அக்க்கூ,ம்.. இதுல ஒன்னும் கொறச்சல் இல்லை.. எவ்ளோ நாளா சொல்லிட்டிருக்கேன்..இந்த கழுத்து பெல்ட் தேஞ்சு போச்சுனு..அதை ஏதாச்சும் மாத்தி தர வழி செஞ்சீங்களா?? ஒன்னுத்துக்கும் ஒதவாத மனுசா...

3. ஏரோப்ளேன்ல கருப்பு பெட்டின்னு ஓண்ணு இருக்குதுல்ல. எவ்ளோ பெரிய ஆக்ஸிடெண்ட் நடந்தாலும் அந்த பெட்டிக்கு ஒண்ணும் ஆவுறதில்லை. அப்போ ஏன் அந்த பெட்டி செஞ்ச உலோகத்திலேயே முழு ஏரோப்ளேன்னைச் செய்யக் கூடாது?

அப்புறம் ஏரோப்ளேன் ஆக்ஸிடென்ட்டே ஆகாதே.... கஷ்டப்பட்டு கண்டுபிடித்த இந்த கருப்பு பெட்டிக்கு வேலையே இருக்காதே... அதுனாலே தான்.. நாம செய்யற ஒரு காரியத்தால, ஒரு நல்ல கண்டுபிடிப்பு பாழாபோக கூடாதில்லையா.. ?

5. ஆரஞ்சு பழம் முதல்ல வந்ததா கலர் முதல்ல வந்ததா?

அது அந்த கடைல எப்படி அடுக்கி வெச்சிருக்காங்கனு பொறுத்தது.. இல்லை .. இல்லை..பழக்கடை முதல்ல இருக்கா , இல்லை கூல் டிரிங்கஸ் கடை முதல்ல இருக்கா என்பதை பொறுத்தது..

ஒரு வாரத்துக்கு முன்னால, விச்சு, பா. ராமா, ரம்யா அக்கா, ஷ்ரேயா அக்கா கடைத்தெருவில போனாங்க.. டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் ல போயி ஏதோ ஷாப்பிங்க் பன்னாங்க..ஷ்ரேயா அக்கா ரொம்ப தாகமா இருக்கு கலர் குடிக்கலாமானு கேட்டாங்க.. இல்லை.. ஒரு ஆரஞ்சுப்பழ ஜீஸ் வாங்கி சாப்பிடலாமுனு விச்சு சொன்னாரு.. சரினு ஆர்டர் பன்னாங்க..

ரம்யாஅக்காவும், பா. ராமாவும் பெட் கட்டினாங்க.. எது முதல்ல வரும்னு... பா ராமா நெனைச்சாரு கலர் சீக்கிரம் வரும்..ஆரஞ்சு பழம் ஜீஸ் பிழிஞ்சு தர லேட்டாகுமுனு.. அதனால கலர்னு தைரியமா 1000 ரூ பெட் கட்டிட்டாரு..ஆரஞ்சு ஜூரம்யா அக்கா ஜெயிச்சுட்டாங்க.. அக்கா ரொம்ப உஷாரு... எப்படி தெரியுமா ? கெஸ் பன்னுங்க.. எது எப்படியோ , உங்களுக்கு பதில் : எதுவேனும்னாலும் வரலாம்..

6. ஒரு அம்னிஷியா நோயாளி நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டால் அவருக்கு அம்னிஷியா இருந்தது தெரியுமா?

சொந்தகாரங்க.. நன்பருங்க .. அப்புறம் ..அவர ஆஸ்பிட்டல்ல வந்து பார்த்தவங்க.. கேள்விப்பட்டவங்க எல்லோருக்கும் நிச்சயமா அவருக்கு அம்னிசியா இருந்தது தெரியும்... .. மத்தவங்களுக்கு யாராச்சும் சொன்னாத்தான் தெரியும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

7. ஒரு ஆண் லேடிபேர்டை என்னன்னு கூப்பிடணும்?

எப்படி கூப்பிட்டாலும் அது என்னவோ நம்மள மதிச்சு திரும்பி பார்க்க போறதில்ல..அப்புறம் ஏன் கூப்பிடனும்?

8. முடிக்கப்பட்ட கட்டிடத்தை ஏன் "building"னு சொல்றோம்?

முடிக்கப்பட்ட கட்டடம்னு ஒன்னும் இல்லையே... இன்னைக்கு 1 மாடி, 6 வருஷம் கழிச்சு ஒரு எம் எல் ஏ ஆனா 3 மாடி, அப்படியே ஒரு மந்திரி பதவி வந்தா 5 மாடி .. முதலமைச்சார் ஆனா 6 ... பிரதமர் ஆனா 7 ..அதுவே ஒரு உ. பி. ச வா யாராச்சும் தத்தெடுத்தா 8 .. 9 .. 10 கணக்கே இல்லை.. still building.. அதுனால தான் அதை அப்படி சொல்றாங்க.. forward thinking <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

9. 130 கி.மீ வேகத்தில யாரும் வாகனங்களைச் செலுத்தக்கூடாதுன்னா ஏன் ஸ்பீடோமீட்டர்ல 130 கி.மீ வேகம்னு ஒண்ணு இருக்கணும்?

கனேசு , நல்லா யோசிச்சு பாருங்க .. அன்னைக்கு நீங்க , நானு அப்புறம் நம்ம குழலி , சாமி செடியக்கா எல்லோரும் கார் ல போறப்ப.. நம்ம குழலி ஒரு கட்டத்துல படு வேகமா போக.. அக்கா மெதுவா போப்பா னு அலற..நாம எல்லாரும் உயிரை கைல பிடிச்சுட்டு இருக்கு... நீ என்ன சொன்னே???குழலி என்ன இது 100கி மி ஸ்பீட்ல போறீங்க.. மெதுவா போ ..மெதுவா போ.. சொல்லல??எப்படி சொன்னீங்க? வண்டி வீல் சுத்தறத வெச்சா சொன்னீங்க..? இல்லையே.. ஸ்பீடோமீட்டர பார்த்துதானே..அதான்..130 ல போறோம் னு ஸ்பீடேமீட்டர் இருந்தாதானே தெரியும்??

10. குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னா ஏன் எல்லா பாரிலும் பார்க்கிங் வசதி இருக்கு?

குடிச்சுட்டு வண்டிய ஓட்டக்கூடாதுனு தானே சொன்னாங்க.. வண்டி ஓட்டிட்டு வர எல்லோரும் குடித்தே ஆகனும்னு சொன்னாங்களா??அன்னைகு நீங்க, ஞான்ஸ் போனீங்க.. ஞான்ஸ் புல்லாயிட்டாரு.. நீங்க நல்ல புள்ள , தொடல... வண்டிய ஓட்டிட்டு வந்தது யாரு??? அப்புறம் அந்த பார்க்கிங் இல்லைனா ..என்ன பன்னியிருப்பீங்க..??

4. இந்த காப்பிரைட் காப்பிரைட்னு சொல்றாங்களே அதோட காப்பிரைட் யாருகிட்ட இருக்கு?

இது தான் எனக்கே கொஞ்சம் பதில் தெரியல..இருந்தாலும் கோயிஞ்சாமி க்கு 9 விடை சொன்னதாலே சந்தோசமாகிட்டாரு..பாராட்டிட்டு இதுக்கு அவ் அவரே பதில் சொன்னாரு.. ஆனா யாருக்கும் சொல்லாதேனு சொன்னாரு..,. இருந்தாலும்..நம்ம வலைப்பூ தம்பி நீங்க..சொல்லாம இருக்க முடியுமா.. பட் .. ப்ளீஸ் யாருக்கும் சொல்லாதீங்க தம்பி..அது நம்ம கோயிஞ்சாமி கிட்ட தான் இருக்கா.. அப்புறம் அதுக்கு பார்ட்னர்ஷிப் இருக்காம்..

நன்றி>அரட்டைஅரங்கம்
Posted by அனிதா - 10-05-2005, 09:08 AM
SUNDHAL Wrote:
vennila Wrote:இந்த கோயிஞ்சாமி பற்றி இதற்குள் போட்டிருக்கலாமே.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=6456&start=0

கோயிஞ்சாமியால் கேட்கப்பட்ட 10 கேல்வியும் சூப்பராக இருக்கு. ஆமா யார் இந்த கோயிஞ்சாமி? :roll: :roll:

சின்னப்புவோட சித்தப்பா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posted by SUNDHAL - 10-05-2005, 01:38 AM
vennila Wrote:இந்த கோயிஞ்சாமி பற்றி இதற்குள் போட்டிருக்கலாமே.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=6456&start=0

கோயிஞ்சாமியால் கேட்கப்பட்ட 10 கேல்வியும் சூப்பராக இருக்கு. ஆமா யார் இந்த கோயிஞ்சாமி? :roll: :roll:

சின்னப்புவோட சித்தப்பா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posted by ANUMANTHAN - 10-04-2005, 06:24 PM
இதோ கோயிஞ்சாமிக்கான பதில்கள்!
கேள்வி ஒழுங்கின்படி...

1.பணம் வேறையெங்கே மண்ணோடு மண்ணாய்போட்டுது!

2. வேறயார்? நாய்வைத்தியர்தான்.

3.வானூர்தி வீழும்போது (சனத்தொகையை குறைக்க) பிரயாணிகளை சாடிக்கவேண்டுமே அதனால் அப்படி செய்யஏலாது!

4.காப்பிரைட்டு செய்தவன்கிட்டதான் காப்பிரைட்இருக்கும்!

5.''ஆரஞ்சு பழம்''என்பதால் ஆரஞ்சுகலர்தான் முதல் வருது!

6.இக்கேள்விக்கு நீர் மட்டுமே பதில்கூறலாம்! அல்லது வேறுயாருக்காவது அம்னீஷியா வந்து சுகமடைந்தவர்கள் பதில் சொல்வார்கள்.

7.''லேடிபேர்டைமான்'' என்று கூப்பிடலாம்.

8.கட்டிகுறையில விட்ட கட்டிடத்தையும் ஆங்கிலத்தில் அப்படித்தான் சொல்வார்கள்.

9.சாவைநோக்கி(தற்கொலைசெய்ய)போகும்போது 130லும் ஓடலாம்.

10.வண்டியை நிற்பாட்டத்தான்.

முக்கியமாக இப்பதில் கோயிஞ்சாமிக்குமட்டுந்தான்!
Posted by வெண்ணிலா - 10-04-2005, 05:12 PM
இந்த கோயிஞ்சாமி பற்றி இதற்குள் போட்டிருக்கலாமே.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=6456&start=0

கோயிஞ்சாமியால் கேட்கப்பட்ட 10 கேல்வியும் சூப்பராக இருக்கு. ஆமா யார் இந்த கோயிஞ்சாமி? :roll: :roll:
Posted by Birundan - 10-04-2005, 03:57 PM
கோயிஞ்சாமி !!

நேத்து ராத்திரி ஒரு கனவு. கனவுல யாரோ மறைஞ்சு மறைஞ்சு வர்றாங்க. நல்லா உத்து பாக்கறேன். அட நம்ம கோயிஞ்சாமி. எனக்கு ரொம்ப குஷியாயிடுச்சு. கோயிஞ்சாமினா ஜோக்கா சொல்லிக்கிட்டே இருப்பார். கனவுல கூட நமக்கு ஆண்டவன் பயமுறுத்தற மாதிரி விஷயங்கள தர்றதில்லைன்னு ஒரே சந்தோஷம். நான் நினைச்சது கோயிஞ்சாமிக்கு எப்படி தெரிஞ்சதுன்னு தெரியல சும்மா கேள்விகளா அள்ளி வீசுறாரு. அவ்வளவும் இண்டலிஜெண்ட் கேள்விகள். ஒரு கேள்விக்கும் எனக்கு விடை தெரியல. உங்களுக்கு தெரியுதான்னு பாருங்க...

1. உலகத்தில் இருக்கிற எல்லா நாடும் கடன்ல இருக்குன்னா (அட நம்ம அமெரிக்கா உட்பட) பணமெல்லாம் உண்மையிலேயே எங்க தான் போகுது?

2. நாய்க்கு வழங்கப்படும் உணவு சுவையாகவும் முன்பை விட தரமானதாகவும் இருக்குதுன்னு விளம்பரப்படுத்தறாங்களே அப்ப தரத்தையும் சுவையையும் மதிப்பிடுபவர்கள் யார்?

3. ஏரோப்ளேன்ல கருப்பு பெட்டின்னு ஓண்ணு இருக்குதுல்ல. எவ்ளோ பெரிய ஆக்ஸிடெண்ட் நடந்தாலும் அந்த பெட்டிக்கு ஒண்ணும் ஆவுறதில்லை. அப்போ ஏன் அந்த பெட்டி செஞ்ச உலோகத்திலேயே முழு ஏரோப்ளேன்னைச் செய்யக் கூடாது?

4. இந்த காப்பிரைட் காப்பிரைட்னு சொல்றாங்களே அதோட காப்பிரைட் யாருகிட்ட இருக்கு?

5. ஆரஞ்சு பழம் முதல்ல வந்ததா கலர் முதல்ல வந்ததா?

6. ஒரு அம்னிஷியா நோயாளி நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டால் அவருக்கு அம்னிஷியா இருந்தது தெரியுமா?

7. ஒரு ஆண் லேடிபேர்டை என்னன்னு கூப்பிடணும்?

8. முடிக்கப்பட்ட கட்டிடத்தை ஏன் "building"னு சொல்றோம்?

9. 130 கி.மீ வேகத்தில யாரும் வாகனங்களைச் செலுத்தக்கூடாதுன்னா ஏன் ஸ்பீடோமீட்டர்ல 130 கி.மீ வேகம்னு ஒண்ணு இருக்கணும்?

10. குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னா ஏன் எல்லா பாரிலும் பார்க்கிங் வசதி இருக்கு?

கண்டிப்பா உங்க விடைகளைச் சொல்லுங்க. அப்புறம் கோயிஞ்சாமி பதிவு போடும் போது வந்து திட்டினாருங்க. அவரு உண்மையிலேயே அறிவாளி தானாம். கனவில வந்தது தான் நிசமாம். முகில் போன்ற ஆளுங்க எழுதுற மாதிரி அவர் ஒண்ணும் முட்டாள் இல்லையாம்.

நன்றி>கனேஷ்