| Thread Review (Newest First) |
| Posted by வெண்ணிலா - 07-25-2004, 07:15 AM |
| <b>நகைச்சுவைகள் நன்றாக இருக்கின்றன</b> |
| Posted by தமிழன் - 07-25-2004, 12:33 AM |
|
மேலே இடப்பட்டுள்ள நகைச்சுகை "உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்" திரைப்படத்தில் எழுத்துக்கட்டத்திற்கு முன்னர் வரும் நகைச்சுவை. தமிழன் |
| Posted by Paranee - 11-01-2003, 09:14 AM |
|
ஆஹா தணிக்கை கூட நகைச்சுவை அளிக்கின்றார் சாமியின் நகைச்சுவையை உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் திரைப்படத்தில் படமாக்கிவிட்டார்கள். எதுவாகினும்அதை நினைவுகூர்ந்தமைக்கு நன்றிகள். யாழ் அண்ணா றால்கூட அழகாகத்தான் இருக்கின்றதே அப்படியே தொடர்வோம் |
| Posted by yarl - 11-01-2003, 09:04 AM |
றால் ஆக்கிவிட்டீர்களா<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|
| Posted by தணிக்கை - 11-01-2003, 08:37 AM |
| றாழ் சொன்ன கதை சிறு பிள்ளைகளின் பாடப்புத்தகத்தில் இருந்தது என நினைக்கிறேன். |
| Posted by yarl - 11-01-2003, 07:38 AM |
| கிட்டத்தட்ட உங்கள் வயதுதான் |
| Posted by sOliyAn - 11-01-2003, 12:51 AM |
Quote:இதே போல் யாழில் அன்று சுமார் 30 வருடங்களுக்கு முதல் என நினைக்கிறேன்.சுந்திரி என ஒரு பத்திரிகை வெளிவந்தது அதில் ஒரு நகைச்சுவை இன்றும் ஞாபகமிருக்கிறது.யாழ்! 30 வருசத்துக்கு முதலே சஞ்சிகை வாசித்தீர்களென்றால்.. இப்போ எத்தனை வயது?! :mrgreen: |
| Posted by vasisutha - 10-31-2003, 09:56 PM |
பாவம் மீனவன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|
| Posted by yarl - 10-31-2003, 07:51 PM |
|
இதே போல் யாழில் அன்று சுமார் 30 வருடங்களுக்கு முதல் என நினைக்கிறேன்.சுந்திரி என ஒரு பத்திரிகை வெளிவந்தது அதில் ஒரு நகைச்சுவை இன்றும் ஞாபகமிருக்கிறது. ஒரு மீனவன் தூண்டிலில் மீன் அகப்படவில்லை.கடவுளுக்கு நேர்ந்துகொண்டான் .முதல் பிடிபடும் மீன் கடவுளுக்கு காணிக்கையாக்குவதாக.... நேர்நத மறுகணமே மீன் பிடிபட்டது.வழக்கத்திற்கு மாறாக நீண்ட பெரிய சதைப்பிடிப்பான மீன்.மீனவனுக்கு அதை கடவுளுககு கொடுக்க மனமில்லை.தான் எடுக்கும் உத்தேசத்தில் சந்தோசமாய் இதை யாரும் கடவுளுக்கு கொடுப்பானா என சொன்னாhன். மீன் பழையபடி கை நழுவி கடலில் விழுந்து தப்பித்துக்கொண்டது. மீனவன் ;"கடவுளுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது என ஏக்கமாக சொன்னாhன். |
| Posted by sOliyAn - 10-31-2003, 06:35 PM |
| மூன்றாவது புத்திசாலிக்குத்தான் எனது பாராட்டுகள்.. |
| Posted by சாமி - 10-30-2003, 04:41 PM |
|
மூன்று பேர் சேர்ந்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கினர். "பரிசு விழுந்தால் கடவுளுக்கு சம பங்கு தருவோம்' என்று முடிவு செய்தனர்; பரிசு விழுந்தது. ஆனால், கடவுளுக்கு பங்கு தரக் கூடாது; என்ன செய்வது என்று யோசித்தனர். "தரையில் சின்ன வட்டம் வரைவோம்; எல்லாப் பணத்தையும், மேல் நோக்கி எறிவோம். சின்ன வட்டத்துக்குள் விழுவது எல்லாம் கடவுளுக்கு' என்றான் முதல் கஞ்சன். "மிகப்பெரிய வட்டம் வரைவோம். நடுவில் நின்று பணத்தை மேல் நோக்கி வீசுவோம். வட்டத்துக்கு வெளியே விழும் பணம் கடவுளுக்கு' என்றான் இரண்டாவது கஞ்சன். இவர்களை விட பலே ஆள் மூன்றாவது கஞ்சன். "பணத்தை மேலே எறிவோம்; மேலே நின்று விடுகிற பணம் மட்டும் கடவுளுக்கு; கீழே விழுகிற பணம் எல்லாம் நமக்கு' என்று தீர்வு கூறினான். நன்றி: தினமலர் |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->