| Thread Review (Newest First) |
| Posted by Luckylook - 12-15-2005, 12:41 PM |
|
நேர்காணலுக்கு போன வடிவேலு.... நம்ம வடிவேலு ஒரு டூபாக்கூர் சாப்டுவேர் இன்ஜினியர்(அதாவது சாப்டுவேர் துறையில் வேலை செய்ததாக பொய் கூறி நேர்காணலுக்கு சென்றவர்). அவருடைய நேர்காணல் அனுபவத்தை செல்கிறார். சரி எல்லாரும் சாப்டுவேரு தெரியுமுனு டுபாக்கூர் விட்டுட்டு லட்ச லட்சமா சம்பளம் வாங்குறாங்க நமக்கு தான் அலமரத்து வேரு, புலியமரத்து வேரு, நன்னாரி வேரு எல்லாம் தெரியுமில்லை. அவ்வளவு பெரிய வேர் பாத்த நமக்கு சாப்டுவேரு என்ன பெரிய வேரா ஒரு கை பாக்கலாம் அப்படின்னு, நம்ப பரமேசு ரெசியுமில்ல ரெசுயும் அதை திருடி போட்டேன்பா ஒரு கம்பெனில அப்ளை பண்னேன். நம்ம நேரம் கப்புனு இண்டர்வியூவுக்கு கூப்பிட்டுவிட்டங்கபா. நானும் சரி ஒரு ரவுண்டுதானேனு போனேன். உள்ள போனா 5 பேருபா மாத்தி மாத்தி கேள்வி கேட்டங்கபா ஏதோ என்னால முடிந்த வரைக்கும் பதில் சொன்னேன்பா. அப்பால் ஒரு ஒரு மணி நேரம் கழித்து அவனுங்களா டையர்டுஆயி சரி 4ஆவது floorக்கு போன்னு சென்னங்க. சரி நானும் அனது அயிபோச்சி என்னத்தான் நடக்குது பாக்கலாம் அப்படின்னு 4 ஆவது floorக்கு போனேன். அங்க வெட்டிப்பசங்க 8 பேருபா சும்மா அவனுங்களால எவ்வளவு கேள்வி கேக்க முடியுமே அவ்வளவு கேள்வி கேட்டங்க. அதுல திடிர்னு ஒருத்தன் HRருக்கு போன் போட்டு மச்சான் கடலை போட்டது போதும்டா இங்க ஒருத்தன் வகையா சிக்கி இருக்கான் வந்து வறுத்துட்டு போடான்னு சொன்னான். அவனும் வந்தான் அவன் பங்குக்கு ஒரு ஒரு மணி நேரம் அத்தா என்ன பண்றாங்க, அப்பன் என்ன பண்றாங்க, நீ ஏன் பழைய கம்பெனியவிட்டு வர, எங்க கம்பெனில ஏன் சேருறா அப்படி இப்படின்னு வருத்து எடுத்தான்பா. சரி இவ்வளவு கேட்டனுங்களே வேலையகுடுப்பனுங்கனு பாத்தா "we will get back to you" செல்லிடாங்கப்பா. டேய் கேள்வியை மட்டும் இப்ப கேட்டிங்க வேலை மட்டும் என்னடா "get back to you" அப்படின்னு கேக்களாமுனு வாய் எடுத்தேன்பா. ஏன்ணே கேக்கவேண்டியது தானே. அது இல்லடா கோவாலு கேக்கலாமுனு நினைச்சப்போ அந்த இண்டரிவியு எடுத்த ஒருத்தன் ஒக்காலி எதுவுமே தெரியவில்லை என்றாலும் என்னாமா சமாளிக்கறான்பா பேசாம இவனன project Manager ஆக்கிடலாம் அப்படின்னு சொன்னான்பா. என்னால தாங்கமுடியலைபா.... |
