உலக நடப்பு

75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு நாடுகளில் வெள்ளப்பெருக்கு!

1 month ago
36752-728x375.jpg 75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு நாடுகளில் வெள்ளப்பெருக்கு!

75 ஆண்டுகளுக்குப் பின்னர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் கடுமையான வெள்ளப் பேரழிவைச் சந்தித்துள்ளன.

இதன் காரணமாக ஓமன் மாநிலத்தில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிராந்தியங்களில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனுடன், துபாய் உட்பட எமிரேட்டின் ஏழு பகுதிகளிலும் வெள்ளம் பதிவாகியுள்ளது.

அத்துடன் புகழ்பெற்ற துபாய் மால், மால் ஆஃப் தி எமிரேட்ஸ், முழங்கால் அளவு தண்ணீரில் உள்ளதுடன் அதன் மேம்பட்ட சுரங்கப்பாதை நிலையங்கள் மற்றும் சாலைகள் கூட வெள்ளத்தில் மூழ்கின

இதன் விளைவாக, அதிகாரிகள் அதன் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த வேண்டியிருந்ததுடன் பல விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

மேலும் எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளை துபாய் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் துபாய்க்கான நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1378524

பதவி விலகவுள்ள சிங்கப்பூர் பிரதமர்!

1 month ago

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம் (மே) 15ஆம் திகதியுடன் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சிங்கப்பூரீன் 3வது பிரதமரான இவர், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது.

அண்மைக் காலமாக இந்த கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக 02 பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். பிரதமர் லீ சியென் லூங்கும் அடுத்த மாதம் (மே) 15ஆம் திகதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/299288

ஆபாச நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் ரூ.1 கோடி கொடுத்த வழக்கை உலகம் உற்றுநோக்குவது ஏன்? - முழு விவரம்

1 month ago
டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாம் காப்ரால்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 16 ஏப்ரல் 2024

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான முதல் குற்றவியல் விசாரணை தற்போது நடந்து வருகிறது.

அண்மையில் டிரம்ப் இரண்டு தனித்தனி நியூயார்க் சிவில் வழக்கு விசாரணைகளில் நீதிபதிகளை எதிர்கொண்டார். ஆனால் அவர் மீதான குற்றவியல் விசாரணைகள் சற்று வித்தியாசமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் மீது, 2016 தேர்தலுக்கு முன்னர், ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக 34 மோசடி வழக்குகள் சுமத்தப்பட்டன.

இவ்வழக்கில், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் `கிரிமினல்’ ரகம் அல்ல என்று வாதிட்ட அவர், தான் குற்றமற்றவர் என்றும் தெரிவித்துள்ளார்.

எட்டு வாரங்கள் நடைபெறவிருக்கும் இவ்வழக்கின் விசாரணை, குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்பின் பரப்புரையில் விளைவுகளை ஏற்படுத்தும். பரப்புரையில் ஈடுபடுவதிலிருந்து அவர் அடிக்கடி விலகியிருக்க நேரிடும்.

 
டொனால்ட் ட்ரம்ப், ஸ்டார்மி டேனியல்ஸ், அமெரிக்கா, நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஸ்டார்மி டேனியல்ஸ்
டிரம்ப் எதிர்கொள்ளும் வழக்கு என்ன?

கடந்த 2006-ஆம் ஆண்டு டொனால்ட டிரம்ப் உடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016-ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்க தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக டேனியல்ஸ் கூறியுள்ளார்.

டிரம்ப் தனது முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞரும் ஆலோசகருமான மைக்கேல் கோஹனுக்கு ‘சட்டச் செலவுகள்’ என பதிவு செய்து பணம் அளித்த விவகாரத்தையே இந்த விசாரணை மையமாகக் கொண்டுள்ளது.

டிரம்புடனான தொடர்பு குறித்து மௌனமாக இருப்பதற்காக, டேனியல்ஸுக்கு 1,30,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாய்) செலுத்துமாறு தனக்கு டிரம்ப் உத்தரவிட்டதாக கோஹென் கூறுகிறார். சட்டச் செலவுகள் என்று பதிவு செய்து அந்த பணத்தை தனக்கு ட்ரம்ப் கொடுத்ததாகவும் கோஹென் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செயலை 2016 தேர்தலில் "சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்தும்" முயற்சி என்று வழக்கறிஞர்கள் விவரித்துள்ளனர்.

வெளியே பேசாமல் இருப்பதற்கான பணம் (Hush Money) செலுத்துவது சட்டவிரோதமானது அல்ல. ஆனால் மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம், டிரம்ப் ஆபாச நடிகைக்கு அளித்த பணத்தை, ‘சட்டச் செலவுகள்’ என்று குறிப்பிட்டு கோஹனுக்குச் செலுத்தியது தவறு என்று குற்றம்சாட்டுகிறது.

மொத்தத்தில், பொய்யான வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்ததாக டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

 
டொனால்ட் ட்ரம்ப், ஸ்டார்மி டேனியல்ஸ், அமெரிக்கா, நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மைக்கேல் கோஹன்
டிரம்பின் தேர்தல் பரப்புரை பாதிக்கப்படுமா?

எதிர்வரும் 2024 தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளராகக் கருதப்படும் ட்ரம்ப், பகலில் நீதிமன்றத்தில் இருக்கவும், இரவில் பிரசாரம் செய்யவும் உறுதிபூண்டிருந்தார். சட்டப்படி அவர் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும்.

இருப்பினும், அவர் வரும் மே 17-ஆம் தேதி தனது மகனின் உயர்நிலைப் பள்ளி பட்டமளிப்பு விழா நடக்கும் நாளில் விசாரணையில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார். விசாரணை நாளுக்கு சில தினங்கள் முன்னர் இதுகுறித்து முடிவு எடுப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு ட்ரம்ப் இவ்வாறு நடந்து கொண்டதில்லை. சமீபத்தில் முடிவடைந்த இரண்டு சிவில் வழக்குகளிலும் அவர் அவ்வப்போது விசாரணைக்கு வந்துவிடுவார். அவர் விருப்பப்படி நீதிமன்றத்துக்கு வந்துப் போவார். ஆனால் இம்முறை நடக்கும் விசாரணையில், அவர் ஒரு குற்றவியல் பிரதிவாதி என்பதால், ட்ரம்ப் செயல்பாட்டில் மாற்றம் தெரிகிறது.

ட்ரம்ப் தனது குற்றவியல் விசாரணையில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். அவ்வாறு செய்யாவிட்டால், அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்படலாம்.

நீதிமன்றத்திற்கு வராமலிருப்பதை ஞாயப்படுத்த சில வரையறுக்கப்பட்ட காரணிகள் உள்ளன. மற்றொரு விசாரணைக்குச் செல்ல அல்லது ஒரு முக்கியமான நிகழ்வுக்குச் செல்ல ட்ரம்பை நீதிபதி அனுமதிக்க முடியும்.

ஆனால் விசாரணையில் ஆஜராகாமல் தவிர்ப்பது பெரிய குற்றமாகப் பார்க்கப்படும் என்று முன்னாள் வழக்கறிஞரும் வெஸ்ட் கோஸ்ட் ட்ரையல் வழக்கறிஞர்களின் தலைவருமான நேமா ரஹ்மானி கூறினார்.

மேலும், “ஜூரியாக இருக்கப் பொதுவாக யாரும் விரும்புவதில்லை. ஆனால் ஜூரியாக இருக்கும் போது, வழக்கில் ஒரு தரப்பினர் தங்கள் நேரத்தை மதிக்காமல் இருப்பதை கண்டால், அது தண்டனை பெறுவதற்கான உறுதியான வழி," என்றும் அவர் கூறினார்.

முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஏற்கெனவே குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியை வென்றுவிட்ட நிலையில், தற்போது குடியரசுக் கட்சி வேட்பாளராக கருதப்படுகிறார். இனி அவர் கவலைப்பட வேண்டியது நவம்பர் மாதப் பொதுத் தேர்தல் பற்றி மட்டுமே.

ஆனால் தற்போது நடக்கும் ஆறு முதல் எட்டு வார விசாரணை அவரது பரப்புரைக்கு இடையூறாகவும், அதிபர் ஜோ பைடனை எதிர்கொள்வதில் சிக்கலாகவும் அமையும். மேலும், வழக்குச் செலவுகள் அவரது பரப்புரை நிதியையும் பாதிக்கும்.

 
டொனால்ட் ட்ரம்ப், ஸ்டார்மி டேனியல்ஸ், அமெரிக்கா, நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விசாரணை எப்படி நடக்கும்?

கடந்த ஆண்டு, டிரம்புக்கு எதிரான வரி மோசடி விசாரணையை மேற்பார்வையிட்ட மான்ஹாட்டன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹுவான் மெர்சன், 16 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அமர்வில் செயல்படுகிறார். ஆனால், ஒரு முன்னாள் அமெரிக்க அதிபரின் குற்றவியல் விசாரணை நீதிபதியாக அவர் இருப்பது இதுவே முதல் முறையாகும். இது அவரது வாழ்நாளில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இருக்கும்.

முன்னதாக ட்ரம்ப், “நீதிபதி என்னை வெறுக்கிறார். எனவே அவர் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும்” என்று வாதிட்டார். ஆனால், நீதிபதி மெர்சன் இந்த வாதத்தை நிராகரித்துவிட்டார்.

ட்ரம்ப் தனது பல்வேறு வழக்குகளுக்காக பல சட்ட வல்லுனர்கள் குழுவை அமர்த்தியுள்ளார். அவரை இங்கு பிரதிநிதித்துவப்படுத்துவது சூசன் நெசெல்ஸ் மற்றும் டோட் பிளான்ச் தலைமையிலான குழுவாகும்.

ட்ரம்ப் மீது குற்றம்சாட்டிய முதல் நபரான மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக், வழக்குத் தொடர எட்டு அனுபவமுள்ள வழக்குரைஞர்களைக் கொண்ட குழுவைக் கூட்டியுள்ளார். வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் தங்கள் வாதத்தை முன்வைக்க குறைந்தபட்சம் 15 முதல் 17 நாட்கள் தேவைப்படும் என்றும், சில நிபந்தனைகளில் இரு தரப்பினரும் உடன்படவில்லை என்றால் இன்னும் அதிக அவகாசம் தேவைப்படலாம் என்றும் கூறியுள்ளனர்.

ட்ரம்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் கோஹன் அரசு தரப்பு சாட்சியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது கடந்த காலம் குறித்த தீவிரமான குறுக்கு விசாரணைகளை அவர் எதிர்கொள்ள நேரிடும்.

இதற்கிடையில், ட்ரம்ப் தன்மீதான குற்றச்சாட்டுகள் ‘ஆதாரமற்றவை’ என்றும் ‘அரசியல் நோக்கம் கொண்டவை’ என்றும் வாதிட்டார். ஆனால் இந்தக் கூற்றுகளை நிரூபிக்க அவர் எந்த ஆதாரங்களையும் வழங்கவில்லை.

நீதிபதி மெர்சனின் விதிகளின்படி, புதன்கிழமைகள் அல்லது ஏப்ரல் 29 அன்று நீதிமன்றம் இயங்காது. ட்ரம்பின் சட்டக் குழுவின் சில உறுப்பினர்கள் அனுசரிக்கும் யூதர்களின் பாஸ்கா பண்டிகையை முன்னிட்டும் விசாரணை இடைநிறுத்தப்படலாம்.

 
டொனால்ட் ட்ரம்ப், ஸ்டார்மி டேனியல்ஸ், அமெரிக்கா, நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீதிபதிகள் எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள்?

நியூயார்க் குற்றவியல் விசாரணைகளுக்கு ஆறு மாற்று நீதிபதிகள் உட்பட 12 நீதிபதிகள். விசாரணை தொடங்குவதற்கு முன்னர், நீதிபதிகளாகப் பொறுப்பேற்க உள்ளவர்கள், பலவிதமான கேள்விகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர். ட்ரம்ப் பற்றிய செய்திகளை எங்கிருந்து தெரிந்துகொள்கிறார்கள், என்பது தொடங்கி, அவர்கள் முன்னர் டிரம்ப் பேரணியில் கலந்து கொண்டார்களா என்பது வரை பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

ட்ரம்பின் புத்தகங்களில் ஏதேனும் ஒன்றைப் படித்தீர்களா அல்லது கோஹனின் பேச்சுகளில் ஏதாவது கேட்டிருக்கிறீர்களா என்றும் அவர்களிடம் கேட்கப்படுகிறது.

ரஹ்மானியின் கூற்றுப்படி, நீதிபதிகளின் தேர்வு விசாரணையின் பெரும்பகுதியை எடுத்துக்கொள்ளக்கூடும். ஏனெனில் "டொனால்ட் ட்ரம்ப் யார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரைப் பற்றி அனைவருக்குமே ஒரு கருத்து உள்ளது," என்கிறார்.

"யாரும் எந்தச் சார்புகளுமற்று நீதிமன்ற அறைக்குள் வருவதில்லை," என்றும் ரஹ்மானி கூறினார். எனவே, பாரபட்சமற்ற ஒரு நீதிபதிக் குழுவைத் தேர்வு செய்ய, வாதப் பிரதிவாதக் குழுக்கள் 500 நீதிபதிகளில் இருந்து சல்லரை போட்டுத் தேடலாம்.

நீதிபதி மெர்சன் கேள்விகள் கேட்பதற்கான நேரத்தை வரையறுக்கக்கூடும்.

ஸ்டார்மி டேனியல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரம்ப் விசாரணை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுமா?

அமெரிக்காவில், நீதிமன்ற விசாரணைகளின்போது ஒளி-ஒலி பதிவுகள் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் நியூயார்க்கும் ஒன்றாகும்.

நீதிமன்ற அறைகளுக்குள் கேமராக்களை அனுமதிப்பது நீதிபதிகளின் சொந்த விருப்பம் சார்ந்தது. பெரும்பாலான நாட்களில் டிரம்பின் சிவில் மோசடி விசாரணையில் இருந்து ஒரு சில காணொளிகள் கிடைத்தன. ஆனால் ஆரம்பக்கட்ட விசாரணையின்போது நீதிபதி மெர்ச்சன் தனது நீதிமன்ற அறையில் கேமராக்களை அனுமதிக்கவில்லை. எனவே இந்த விசாரணையிலும் கேமராக்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புகள் குறைவு.

எனவே, இந்த வழக்கின்மீது பரவலான ஆர்வம் இருந்தபோதும் விசாரணையை நேரில் பார்க்க மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்குள் வெகுசில பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

எஞ்சியுள்ள மக்கள், ஊடகச் செய்திகள் மூலமாகவும், ஓவியங்கள் மூலமாகவும், டிரம்பின் சமூக வலைதளப் பதிவுகள் மூலமகவுமே இவ்வழக்கைப் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/cyx6kk6gp3do

இரான் சிறைபிடித்த கப்பலில் உள்ள 4 தமிழர்கள் யார்? தற்போதைய நிலை என்ன?

1 month ago
எம்.எஸ்.சி ஏரிஸ்

பட மூலாதாரம்,MSC

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 16 ஏப்ரல் 2024

இரான் சிறைபிடித்த கப்பலில் இருக்கும் இந்தியர்களை விரைவில் மீட்க வேண்டும் என்று அவர்களின் குடும்பங்கள் கோருகின்றனர். இந்திய வெளியுறவுத் துறையின் கோரிக்கைக்கு இணங்க கப்பலில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்கு ஒரு மணி நேரம் செல்போன் அனுமதி திங்கள்கிழமை மாலை வழங்கப்பட்டது.

இந்தியா நோக்கி வந்துக் கொண்டிருந்த சரக்கு கப்பலை நடுக்கடலில் இரான் கடந்த 13ம் தேதி சிறைபிடித்தது. அந்தக் கப்பலில் சிக்கியுள்ள 25 மாலுமிகளில் 17 பேர் இந்தியர்கள், அதில் நான்கு பேர் தமிழர்கள். இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையில் மோதல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேலிய தொழிலதிபருடன் தொடர்புடைய இந்த கப்பலை இரான் சிறைப்பிடித்துள்ளது. போர் சூழலில் சிறைபிடிக்கபட்டிருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு வர வேண்டும் என்று அவர்களின் குடும்பங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கப்பலில் உள்ள தமிழர்களின் நிலை என்ன?

கப்பலில் சிக்கியுள்ள தமிழர் ஒருவரின் சகோதரர் மைக்கேல், பிபிசி தமிழிடம் பேசும் போது, “நேற்று ஒரு மணி நேரம் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. எனது சகோதரனுடன் பேசினோம். துன்புறுத்தல்கள் எதுவும் இல்லை. கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போது, வழக்கமாக என்ன நடவடிக்கைகள் இருக்குமோ அவை நடைபெற்று வருகின்றன. உணவுப் பொருட்கள் போதிய அளவு உள்ளன. கப்பல் முழுவதும் இரானின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. யாரிடமும் செல்போன், லேப்டாப் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை.

இராக்கிலிருந்து இந்தியாவில் மும்பை அருகே ஜவஹர்லால் நேரு துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த கப்பல், அபுதாபியை தாண்டிய பிறகு இரானால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு இரானுக்கு நல்ல உறவுகள் இருப்பதால் தான் அவர்களுடன் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடிந்தது. போர் அல்லாத சூழலில் இப்படி நடந்திருப்பதால் அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை இல்லை. ஆனால் இப்போது நிலைமைகள் அப்படி இல்லை. 17 பேரையும் விடுவிப்பது குறித்து அரசு உறுதியளிக்க வேண்டும், எப்படி திருப்பி கூட்டி வரப் போகிறார்கள் என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் ” என்று கூறுகிறார்.

 
எம்.எஸ்.சி ஏரிஸ்

பட மூலாதாரம்,STRAIT OF HORMUZ

படக்குறிப்பு,ஹெலிகாப்டரில் இருந்து எம்.எஸ்.சி ஏரிஸ் கப்பல் மீது துருப்புகள் தாக்குதல் நடத்தும் காட்சிகள்

28 வயதான அவரது சகோதரர் மெக்கானிக்கல் பொறியியல், பின்பு கடல்சார் பொறியியல் படித்துள்ளார். ஐந்து வருடங்களாக கப்பலில் பணிபுரிந்து வருகிறார். ஜனவரி மாதம் இறுதியில் தமிழ்நாடு வந்திருந்த அவர், பிப்ரவரியில் இந்த கப்பல் பயணத்தை தொடங்கினார்.

தூத்துக்குடி ஆலந்தலை கிராமத்தை சேர்ந்தவரும், புன்னக்காயல் கிராமத்தை சேர்ந்தவரும் இந்த கப்பலில் உள்ளனர். மேலும் தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவரும், கடலூரை சேர்ந்த மற்றொருவரும் என நான்கு தமிழர்கள் உள்ளனர். இவர்களை மீட்க வேண்டும் என்று தூத்துக்குடி மாலுமிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தது.

மாலுமிகளின் குடும்பங்கள் தமிழக அரசை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர்.

வெளிநாடுவாழ் தமிழர்கள் நல ஆணைய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், “கப்பலில் உள்ள தமிழர்களில் இரண்டு பேர் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள், ஒருவர் கடலூர், மற்றொருவர் மன்னார்குடியை சேர்ந்தவர். இதில் கடலூரை சேர்ந்தவருடன் குடும்பத்தினரால் இன்னும் தொடர்புக் கொள்ள இயலவில்லை. இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத்துறையின் இந்தியன் மிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளோம். நேற்று ஒரு மணி நேரம் செல்போன் மூலம் குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

கேரளாவை சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேரும் இந்த கப்பலில் சிக்கியுள்ளனர்.

 
எம்.எஸ்.சி ஏரிஸ்

பட மூலாதாரம்,MSC

படக்குறிப்பு,போர்த்துகீசிய கொடியுடன் மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்த எம்.எஸ்.சி ஏரிஸ் கப்பல், இஸ்ரேலிய பணக்காரர் இயால் ஓஃபருடன் தொடர்புடையது.
கப்பல் எங்கு கைப்பற்றப்பட்டது?

அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே, ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் இருந்து 50 மைல் (80 கி.மீ.) தொலைவில் எம்.எஸ்.சி ஏரிஸ் (MSCAries) என்ற கப்பலை இரானிய சிறப்புப் படையினர் கைப்பற்றினர். இந்த தகவல் அந்த கப்பல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்த்துக்கீசிய கொடியுடன் மும்பை அருகே ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்த கப்பல், இஸ்ரேலிய பணக்காரர் இயால் ஓஃபருடன் தொடர்புடையது. இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு இந்த கப்பலை இரான் கைப்பற்றியுள்ளது.

கடைசியாக உள்ள கண்காணிப்பு தரவுகளின்படி, ஐக்கிய அரபு அமீரக கடற்கரையில் எம்.எஸ்.சி. ஏரிஸ் கப்பல், 18 மணிநேரத்திற்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கி சென்றதைக் காட்டியது. அதன்பின் அதன் கண்காணிப்புத் தரவு முடங்கியதாகத் தெரிகிறது. இப்பகுதியில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களில் இத்தகைய முடக்கம் வழக்கமானது.

தற்போது இந்த கப்பல், இரானின் பந்தர் அப்பாஸ் கரைக்கு அருகில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 
எம்.எஸ்.சி ஏரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,எம்.எஸ்.சி ஏரிஸ் கப்பலை இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) கடற்படைக் கிளை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
கப்பலை சிறைபிடித்தது யார்?

இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) கடற்படைக் கிளை எம்.எஸ்.சி ஏரிஸ் கப்பலைக் சிறைபிடித்துள்ளதாக, அந்நாட்டின் அரசு செய்தி ஊடகமான இர்னா தெரிவித்துள்ளது. அக்கப்பல், “இஸ்ரேலுடன் தொடர்புடையது" என்றும் அது தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "இரானிய புரட்சிகர காவலர் படையை உடனடியாக பயங்கரவாத அமைப்பாக அறிவித்து, இரானுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்தார்.

இதுதொடர்பாக, X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அந்த சரக்குக் கப்பல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினருக்குச் சொந்தமானது எனத் தெரிவித்தார். 2019ஆம் ஆண்டிலிருந்து அப்பிரதேசத்தில் பல கப்பல்களை இரானிய படைகள் சிறைபிடித்துள்ளன.

 
எம்.எஸ்.சி ஏரிஸ்

பட மூலாதாரம்,DR. S. JAISHANKAR / X

படக்குறிப்பு,இந்த விவகாரம் குறித்து இந்தி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் - அப்துல்லா ஹியனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறையின் நடவடிக்கைகள்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் - அப்துல்லா ஹியனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்த உரையாடலுக்கு பின் இரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கப்பலில் உள்ள 17 இந்தியர்களின் நிலைமை குறித்து ஜெய்சங்கர் கவலை தெரிவித்ததாகவும், உதவி கேட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. "சிறைப்பிடிக்கப்பட்டுள்ள கப்பலின் விவரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம், விரைவில் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், விரைவில் சிக்கியுள்ள குழுவினரை சந்திக்கக் கூடும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தனது X பக்கத்தில், “எம் எஸ் சி ஏரிஸ் கப்பலின் இந்திய குழுவினர் 17 பேரை விடுவிக்கும் விவகாரம் குறித்து இரானிய வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேசினேன். பிராந்தியத்தில் நிலவும் நிலைமைகள் குறித்து பேசினேன். நிலைமைகளை தீவிரப்படுத்தாமல், கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினேன். ” என்று பதிவிட்டார்.

அதே போன்று, இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சருடனும் இந்த விவகாரம் குறித்து பேசியதாக அவர் தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்திய தூதரக அதிகாரிகள் கப்பலில் உள்ள இந்தியர்களை சந்திக்க வேண்டும் என்று இரானிடம் கோரியிருந்தனர். ‘விரைவில்’ அனுமதி அளிக்கப்படும் என்று இரான் கூறியிருந்தது. கப்பலில் சிக்கியவர்கள் தங்கள் குடும்பங்களுடன் திங்கள்கிழமை பேசினர்.

 
எம்.எஸ்.சி ஏரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,எம்.எஸ்.சி ஏரிஸ் கப்பல் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது அமெரிக்க வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை அறிக்கை

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஏட்ரியன் வாட்சன் கூறுகையில், இந்தக் குழுவில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் எஸ்டோனியா குடிமக்கள் உள்ளனர்."கப்பலையும் அதிலுள்ள சர்வதேச பணியாளர்களையும் உடனடியாக விடுவிக்க இரானுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்" என்று ஏட்ரியன் வாட்சன் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

"ஆத்திரமூட்டும் நடவடிக்கை இல்லாமல் ஒரு கப்பலைக் கைப்பற்றுவது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும். மேலும், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர காவலர்களால் நடத்தப்பட்ட கடற்கொள்ளை” என அவர் தெரிவித்துள்ளார்.

"இது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். மேலும் இரானை இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்க வைக்க எங்கள் கூட்டாளர்களுடன் நாங்கள் பணியாற்றுவோம்" என அவர் கூறியுள்ளார்.

இரான் - இஸ்ரேல் இடையே மோதல் ஏன்?

ஏப்ரல் 1ஆம் தேதியன்று டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரக கட்டடத்தில் நடைபெற்ற தாக்குதலில், இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் மூத்தத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலை இரான் குற்றம்சாட்டி வருகிறது.

டமாஸ்கஸ்-ல் உள்ள இரானிய தூதரகத்தை தாக்கிய சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது தனது இரான் நேரடி தாக்குதல் நடத்தியது. சனிக்கிழமை இரவு முதல் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி இரான் தாக்குதல் தொடுத்துள்ளது. இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சிக்கலான உறவுகளின் சமீபத்திய அத்தியாயம் இது.

https://www.bbc.com/tamil/articles/cpvgwezwy3po

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் - ஐநா அமைப்பு கவலை

1 month ago
16 APR, 2024 | 03:39 PM
image
 

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.

சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/181235

பதிலடி கொடுத்தால், அதை தனியாக செய்வீர்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

1 month ago

பல தசாப்தங்களாக உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான அமெரிக்க இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு நெருங்கிய கூட்டாளிக்கு இது ஒரு அசாதாரண செய்தியாகும்.

ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு காசாவில் இஸ்ரேல் தன்னிச்சையாகச் செயல்பட்டு -- அதன் இராணுவ நடவடிக்கைகள் வெகுதூரம் சென்றுவிட்டன என்று அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு - ஈரானுக்கு எதிரான தாக்குதல் இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா பங்கேற்காது என்று பிடென் நிர்வாகம் தெளிவுபடுத்தியது. மத்திய கிழக்கில் ஒரு பரந்த போருக்கு அஞ்சுகிறது.

மேலும்: இஸ்ரேல்-காசா நேரடி அறிவிப்புகள்: இஸ்ரேலிய போர் அமைச்சரவை திங்கள்கிழமை மீண்டும் கூடவுள்ளது

"இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கும் சுதந்திரம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்" என்று ஈரானின் தாக்குதல் முடிவடைந்த சிறிது நேரத்திலேயே ஒரு மூத்த நிர்வாக அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார். "இது ஒரு நீண்டகால கொள்கை, அது இன்னும் உள்ளது."

தாக்குதல் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவுமா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, அந்த அதிகாரி இல்லை என்று கூறினார்.

"நாங்கள் அத்தகைய ஒரு காரியத்தில் பங்கேற்பதை கற்பனை செய்ய மாட்டோம்," என்று அந்த நபர் கூறினார்.

 

இரண்டாவது அமெரிக்க அதிகாரியின் கூற்றுப்படி, அந்த செய்தி இஸ்ரேலின் உயர் அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் ஆகியோருக்கு இடையே ஒரு தனிப்பட்ட தொலைபேசி அழைப்பில் நேரடியாக வழங்கப்பட்டது.

இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு ஆதரவை தெரிவிப்பதோடு, இஸ்ரேலின் சார்பாக ஒரு சாத்தியமான எதிர் தாக்குதலில் சேர அமெரிக்கா திட்டமிடவில்லை என்பதை ஆஸ்டின் மிகவும் "நேரடி" முறையில் தெளிவுபடுத்தியதாக அந்த அதிகாரி கூறினார்.

மூலம் : https://www.yahoo.com/news/us-israel-strike-back-iran-162024611.html

 

 

 

டூசைன்ட் லூவெர்ச்சர்: பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்து புரட்சி செய்த 'கருப்பு நெப்போலியன்'

1 month ago
பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்த ‘கருப்பு நெப்போலியன்

பட மூலாதாரம்,PUBLIC DOMAIN

படக்குறிப்பு,19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வரையப்பட்ட ஒரு ஓவியத்தில் டூசைன்ட் லூவெர்ச்சர். கட்டுரை தகவல்
  • எழுதியவர், எடிசன் வீகா
  • பதவி, பிபிசி செய்திகள், பிரேசில்
  • 14 ஏப்ரல் 2024

டூசைன்ட் லூவெர்ச்சர், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு நம்ப முடியாத சாதனையைச் செய்தார். ஒரு முன்னாள் அடிமையாகவும், அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களின் மகனாகவும், அவர் ஒரு வெற்றிகரமான புரட்சிக்குக் காரணமாக இருந்தார்.

பிராந்தியத்தில் உள்ள அனைத்து அடிமைகளையும் விடுவிக்க அந்தப் புரட்சி வழிவகுத்தது. அமெரிக்காவில் அவ்வாறு நடந்தது அதுவே முதல் முறை.

இந்தச் செயல்முறை அடிமைத்தனத்தில் இருந்து காலனியை மீட்டெடுத்து, அதற்கு சுதந்திரம் வழங்கியது. லத்தீன் அமெரிக்காவின் முதல் சுதந்திர நாடாக அந்த காலனி மாறியது. இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புரட்சிக்குக் காரணமாக இருந்தவர்தான், டூசைன்ட் லூவெர்ச்சர் (1743-1803).

அவர் ‘ஹைதியன் புரட்சி’ (Haitian revolution) என்று அழைக்கப்படும் புரட்சியின் முக்கியத் தலைவராக இருந்தார். பின்னர் செயின்ட்-டொமிங்கு என்ற அந்த பிரெஞ்சு காலனியின் ஆளுநரானார். இந்த பிரெஞ்சு காலனிதான் சுதந்திரத்திற்குப் பிறகு ஹைதி என்று அழைக்கப்பட்டது.

 
புரட்சி தொடங்கியது எப்படி?
பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்த ‘கருப்பு நெப்போலியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹைதிய விடுதலை இயக்கப் புரட்சி மிகப்பெரிய அடிமைக் கிளர்ச்சியாகக் கருதப்படுகிறது.

இந்தப் புரட்சியின்போது, அடிமை ஆட்சி பிரதேசம் முழுவதும் ஒழிக்கப்பட்டது. அடிமைகளின் கிளர்ச்சி ஆகஸ்ட் 22, 1791இல் தொடங்கியது.

அவர்கள் அடிமைத்தனத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். மெஸ்டிசோஸ், பிரஞ்சு, ஸ்பானிஷ், பிரிட்டிஷ் மற்றும் தீவின் பிற மக்களிடம் இருந்து சிறிது சிறிதாக ஆதரவுகளைத் திரட்டினர். புரட்சியாளர்கள் ஒரு தந்திரமாக, ஏராளமான கரும்பு வயல்களுக்கு தீ வைத்தனர்.

பண்டைய ரோமில் ஸ்பார்டகஸ் (கி.மு.109- கி.மு.71) நடத்திய புரட்சிக்கு (ஆனால் அது தோல்வியில் முடிந்தது) பிறகு ஹைதிய விடுதலை இயக்கப் புரட்சி மிகப்பெரிய அடிமைக் கிளர்ச்சியாகக் கருதப்படுகிறது. உடனடி விளைவாக, இது மற்ற அமெரிக்க காலனிகளின் அடிமை பிரபுத்துவங்களிலும் மற்றும் ஐரோப்பிய காலனித்துவ பெருநகரங்களிலும் ஓர் அச்சத்தைத் தூண்டியது.

மோதலின் தொடக்கத்தில் இருந்தே லூவெர்ச்சர் ஒரு தலைவராகச் செயல்பட்டார். அவர் மக்களிடையே தாக்கம் செலுத்தக் கூடியவராகவும், கிளர்ச்சியாளர்களுக்கு கட்டளையிடுவதில் திறமையானவராகவும் இருந்தார்.

நன்கு கற்றறிந்தவர், 1789 புரட்சிக்குப் பிறகு பிரான்ஸ் எதிர்கொண்ட சிக்கலான வரலாற்றுத் தருணத்தை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. தங்கள் இனம் சுதந்திரத்தை அடைவதற்கான சிறந்த தருணம் அதுதான் என்பதைப் புரிந்துகொண்டார்.

‘கருப்பு நெப்போலியன்’ என்ற புனைப்பெயர் பிரெஞ்சு அரசியல்வாதியும் எழுத்தாளருமான ஃபிராங்கோயிஸ்-ரெனே டி சாட்யூப்ரியாண்ட் என்பவர் தனது ‘மெமோயர்ஸ் ஃப்ரம் பியோண்ட் தி கிரேவ்’ என்ற புத்தகத்தில் (1848இல் வெளியிடப்பட்டது) உருவாக்கப்பட்டது.

தான் 1833இல் எழுதிய ஒரு கடிதத்தில் (அவரது புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது) சாட்யூப்ரியாண்ட், “கறுப்பு நெப்போலியன் டூசைன்ட் லூவெர்ச்சர், வெள்ளை நெப்போலியனால் கொல்லப்பட்டார் " என்று குறிப்பிட்டார்.

லூவெர்ச்சரை பற்றி ஒரு புத்தகத்தை எழுதிய பிரெஞ்சு வரலாற்றாசிரியர் ஜீன் லூயிஸ் டொனாடியூ, ஜீன் ஆஃப்ரிக் ஊடகத்திடம் பேசியபோது, "கருப்பு மற்றும் வெள்ளை நெப்போலியன்கள், இருவருமே லட்சியவாதிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகள்.

நெப்போலியன் போனபார்ட் தன்னை 'நிரந்தர தலைவராக' அறிவித்துக் கொள்வதற்கு முன்பாகவே டூசைன்ட் லூவெர்ச்சர் தன்னை ‘நிரந்தர ஆளுநராக’ அறிவித்துக் கொண்டார்" என்று கூறினார்.

 
வெற்றிகரமான புரட்சி
பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்த ‘கருப்பு நெப்போலியன்

பட மூலாதாரம்,PUBLIC DOMAIN

படக்குறிப்பு,ஹைதிய புரட்சியின் ஓர் அத்தியாயம் ஓவியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

“டூசைன்ட் லூவெர்ச்சர் ஒரு சிறிய, சில சலுகைகளை மட்டுமே பெற்ற ஒரு சாதியைச் சேர்ந்தவர்" என்று வரலாற்றாசிரியர் சிஎல்ஆர் ஜேம்ஸ் தனது ‘தி பிளாக் ஜேகோபின்ஸ்' (The Black Jacobins, 1938) புத்தகத்தில் கூறுகிறார்.

"அவரது தந்தை, ஒரு சிறிய ஆப்பிரிக்க குழுவின் தலைவரின் மகனாக இருந்தார். போரில் பிடிபட்டார், ஒரு அடிமையாக விற்கப்பட்டு, அடிமைக் கப்பலில் பயணம் செய்தார். ஒரு குடியேற்றவாசியால் அவர் விலைக்கு வாங்கப்பட்டார்.

இந்தக் கறுப்பின மனிதர் ஓர் அசாதாரண நபர் என்பதை அந்த முதலாளி உணர்ந்தார். தோட்டத்தில் அவருக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. ஐந்து அடிமைகளைப் பயன்படுத்தி ஒரு நிலத்தைப் பயிரிட்டார். பின்னர் அவர் ஒரு கத்தோலிக்கராக மாறினார். பின்னர் திருமணம் செய்துகொண்டார். டூசைன்ட் அவருக்கு பிறந்த எட்டு குழந்தைகளில் மூத்தவர்," என்று ஜேம்ஸ் கூறுகிறார்.

பிரான்சுவா டொமினிக் டூசைன்ட் என்ற பெயருடன் அவர் பிறந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு லூவெர்ச்சர் என்ற குடும்பப்பெயர் சேர்க்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாசாரத்தின் தேசிய அருங்காட்சியகத்தின் தகவல்படி, அவர் 1776இல் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அடிமை உழைப்பு மூலம் தனது காபி தோட்டத்தில் ஓரளவு செல்வத்தைப் பெற்றார்.

கடந்த 1791ஆம் ஆண்டில், செயிண்ட்-டோமிங்குவின் அடிமை மக்களிடையே ஒரு புரட்சி உருவானது. தொடக்கத்தில் லூவெர்ச்சர் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு எதிராகத்தான் இருந்தார். ஆனால் பின்னர் அவர் தனது மனதை மாற்றிக்கொண்டு பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தினார்.

"ஹைதியன் புரட்சி வெற்றியடைந்தது என்பதை இங்கு முன்னிலைப்படுத்த வேண்டியது அவசியம். அவர் மிகவும் வெற்றிகரமான தலைவராக இருந்தார், அவர் அமெரிக்காவின் முதல் அடிமைத்தன ஒழிப்பு புரட்சியை முன்னெடுத்தார் மற்றும் ஹைதியின் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளித்தார்.

எடுத்துக்காட்டாக, பிரேசிலிலோ அல்லது தெற்கு அமெரிக்காவிலோ இதுபோன்ற ஏதாவது நடக்கலாம் என்று அஞ்சும் அமெரிக்காவின் அடிமைகளை வைத்திருக்கும் அனைத்து உயரடுக்குகளுக்கும் ஹைதி ஓர் உண்மையான எச்சரிக்கையாக மாறியது," என்று சாவோ பாவுலோ நகரின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான அலெக்ஸாண்ட்ரே மார்குசி விளக்கினார்.

அவரைப் பொறுத்தவரை, இந்த அச்சத்தின் காரணமாக "ஹைதி தொடர்ச்சியான சர்வதேச புறக்கணிப்புகளைச் சந்தித்தது. இது போருக்குப் பிந்தைய பொருளாதார மீட்சியைத் தடுத்தது. நாட்டின் பொருளாதார சிக்கல்களை விளக்குவதற்கு இது ஓரளவு உதவுகிறது," என்று வரலாற்றாசிரியர் கூறினார்.

 
மிகப்பெரிய மேற்கத்திய படைகளுக்கு எதிராக
பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்த ‘கருப்பு நெப்போலியன்

பட மூலாதாரம்,PUBLIC DOMAIN

படக்குறிப்பு,'கருப்பு நெப்போலியன்' டூசைன்ட் லூவெர்ச்சர்.

"புரட்சிகர செயல்முறை வெற்றி பெற்றது. 1794ஆம் ஆண்டில், பிரெஞ்சு புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில், பிரான்ஸ் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் அடிமைத்தனத்தை ஒழித்தது.

ஆனால் இது நடந்தபோது, ஹைதியில் உள்ள கறுப்பின ஆப்பிரிக்க தொழிலாளர்கள் ஏற்கெனவே சுதந்திரமாக இருந்தனர். மேலும் அவர்கள் லூவர்ச்சரின் தலைமையின் கீழ் துல்லியமாக விடுவிக்கப்பட்டனர்,” என்று பிரேசிலில் உள்ள மெக்கென்சி பிரஸ்பைடிரியன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான வரலாற்றாசிரியரும் சமூகவியலாளருமான வெஸ்லி சந்தனா கூறினார்.

“1793 மற்றும் 1794க்கு இடையில் அனைவரும் சுதந்திரமாக இருந்தனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அடிமைத்தனம் முடிந்துவிட்டது என்று பிரெஞ்சு பெருநகரம் அறிவிக்கத் தேவை இருக்கவில்லை. அதற்கு முன்பே அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வர லூவர்ச்சர்ரால் முடிந்தது,” என்று அவர் கூறினார்.

அதாவது லூவெர்ச்சரின் மரணத்திற்குப் பிறகு, ஹைதியின் சுதந்திரம் 1804இல் மட்டுமே அடையப்பட்டது. முழு செயல்முறையும் அவர் தலைமையில் ஒரு புரட்சிகர தருணம் என்று சந்தனா நினைவு கூர்ந்தார்.

பிரெஞ்சு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தங்களைத் துண்டித்துக் கொள்ள விரும்பும் உள்ளூர் பணக்கார வெள்ளையர்களின் உதவியையும் அவர் நாடினார்.

வரலாற்றாசிரியர் லூயிஸ் ஜெரால்டோ சில்வா, ஃபெடரல் யுனிவர்சிட்டி ஆஃப் பரானாவின் பேராசிரியர், "வரலாற்றில் பின்னோக்கிப் பார்ப்பது மூலம், அந்த நிகழ்வுகளால் அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு என்ன பாதிப்பு என்பதைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவாது," என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "புரட்சி வெற்றி பெற்றது. லூவெர்ச்சர் அந்தக் காலத்தின் மிகப்பெரிய மேற்கத்திய படைகளான பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களை எதிர்கொண்டார்.

முடிந்தவரை ஹிஸ்பானியோலாவின் பண்டைய தீவின் மேற்குப் பகுதியில் பெருநகரத்தின் அதிகாரத்தை மீட்டெடுக்க பிரான்ஸ் முயன்றது. அடிமை வர்த்தகம் மற்றும் அடிமைத்தனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான ஒரு தோல்வியுற்ற முயற்சியும் அதில் இருந்தது" என்று கூறுகிறார்.

மேலும், "மலேரியா, காலரா, கரீபியனின் மோசமான வெப்பம் ஆகியவற்றின் காரணமாக, சக்திவாய்ந்த பிரெஞ்சு ராணுவம் கறுப்பர் இன மக்களிடம் போரில் தோற்றது" என்று அவர் விவரித்தார்.

இன்றைய ஹைதி
பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்த ‘கருப்பு நெப்போலியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இன்று ஹைதி ஏழ்மையான மற்றும் வளர்ச்சியடையாத நாடு என்பதற்குக் காரணம் அங்கிருக்கும் மோசமான அரசாங்கம், திடீர் அதிகார மாற்றங்களுடன் போராளிகளின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்தான். மேற்கத்திய தப்பெண்ணங்கள் மற்றும் இனவெறி காரணமல்ல,” என்று வரலாற்றாசிரியர் சில்வா விளக்குகிறார்.

"ஹைதியின் தற்போதைய சூழ்நிலையும் முதலாளித்துவ வளர்ச்சியின் மோசமான சமத்துவமின்மையுடன் தொடர்புடையது," என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், "ஹைதியின் இன்றைய பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் சரிவு அப்போதைய ஹைதியின் வலிமையையும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கவில்லை. இதே ஹைதிதான் ஜனவரி 1804இல், அமெரிக்காவிற்குப் பிறகு புதிய உலகின் இரண்டாவது அரசமைப்பு குடியரசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது என்பது மிகவும் முக்கியமானது,” என்று சில்வா கூறுகிறார்.

அப்போது அனைத்து குடிமக்களும் கறுப்பர்களாக இருக்கும் உலகின் முதல் மற்றும் ஒரே குடியரசாக இருந்தது ஹைதி.

"கருப்பின இயக்கத்தின் பார்வையில், புரட்சி மற்றும் லூவெர்ச்சர் இரண்டும் மிக முக்கியமான வரலாற்று குறியீடுகள். எனவே அது பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலேயர்களின் அனைத்து வகையான படையெடுப்புகளையும் அல்லது அதிகாரத்தைப் பராமரிக்கும் அளவையும் அகற்றும் அளவிற்கு வெற்றி பெற்றது,” என்று கூறுகிறார் சமூகவியலாளர் பாலோ நிக்கோலி ராமிரெஸ்.

"எதிர்ப்பின் அடிப்படையில், இதுவொரு வெற்றிதான். இருப்பினும், முன்னாள் கறுப்பின அடிமைகளின் புரட்சியாக இருந்ததால், தப்பெண்ணங்கள் ஆதிக்கம் செலுத்தியது. இன்றும் ஹைதியில் அது நிலவுகிறது என்பது தெளிவாகிறது.

இதனால் ஹைதி புவியியல் ரீதியாக மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தனிமைப்படுத்தப்பட்டது. இது எண்ணற்ற சமூக பிரச்னைகளை ஏற்படுத்துகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

புரட்சி ஏற்பட்டபோது, "ஹைதி மற்ற நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாக மாறியது," என்று சமூகவியலாளர் பாலோ கூறுகிறார்.

"இந்த விதி முழு கண்டத்திற்கும் பொருந்தும். இது அடிமட்டத்தில் இருந்து வந்த ஒரு புரட்சி. இன்றுவரை ஒரு குறிப்பிட்ட வழியில், ஹைதியில் முதலீடு செய்வதில் பல நாடுகள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.

ஏனெனில் அந்த நாட்டில் அதிகாரம் செலுத்துபவர்கள் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ஒருவகையில், அவர்கள் லூவர்ச்சரின் வாரிசுகள்,” என்று அவர் கூறுகிறார்.

 
கருப்பு நெப்போலியனின் மறைவு
பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்த ‘கருப்பு நெப்போலியன்

பட மூலாதாரம்,PUBLIC DOMAIN

படக்குறிப்பு,லூவெர்ச்சர் சிறையில் இறந்ததை சித்தரிக்கும் ஓவியம்.

“லூவெர்ச்சர் ஹைதியில் மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதிலும், ஆப்பிரிக்காவிலும் சுதந்திரம் மற்றும் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சின்னமாக மாறினார் என்று மார்குசி கூறுகிறார்.

"ஆப்பிரிக்காவில் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அவரது உருவம் மற்ற இடங்களில் விடுதலை இயக்கங்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய ஒரு கறுப்பினத் தலைவரின் உதாரணமாக நினைவுகூரப்பட்டது," என்று வரலாற்றாசிரியர் கூறினார்.

"இவை அனைத்தும் அவரது உருவத்தைச் சுற்றி ஒரு கட்டுக்கதையை உருவாக்குவதன் ஒரு பகுதி. ஆனால் அதை முழுமையாக நம்பாமல் இருப்பதும் முக்கியம். அடிமைத்தனம் இல்லாத ஹைதியை அவர் கற்பனை செய்தார். ஆனால் அவரது அரசியல் திட்டம் நாட்டின் நில உடைமையாளர்களின் நலன்களுடன் இணக்கமாக இருந்தது.

இது உண்மையில் புரட்சிகர செயல்பாட்டின்போது இந்த உயரடுக்கினருடன் கூட்டணியைத் தக்கவைக்க அவரை அனுமதித்த ஒரு காரணியாகும்," என்று மார்குசி விளக்கினார்.

ஓர் உதாரணம் என்னவென்றால், வரலாற்றாசிரியர் நினைவு கூர்ந்தபடி, ஹைதியில் அவர் உருவாக்க உதவிய ஒரு விவசாய சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.

"நிலம் தொடர்ந்து பெரிய நில உரிமையாளர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும், மேலும் பெரும்பான்மையான மக்கள் கூலித் தொழிலாளர்களாக இருப்பார்கள்," என்று அவர் விவரித்தார்.

"ஹைதியின் செல்வமும் பொருளாதார வளர்ச்சியும் பெரிய விவசாய ஏற்றுமதி இருப்புகளைப் பராமரிப்பதைச் சார்ந்துள்ளது என்று அவர் நம்பினார், இது சுதந்திர ஹைதியில் பல சமூக ஏற்றத்தாழ்வுகள் தொடர உதவியது," என்று அவர் கூறினார்.

கடந்த 1802ஆம் ஆண்டில், அப்போதைய பிரெஞ்சு தூதர் நெப்போலியன் போனபார்டே (1769-1821) தனது மைத்துனரான ஜெனரல் சார்லஸ் லெக்லெர்க்கை (1772-1802) ஹிஸ்பானியோலா தீவுக்கு அனுப்பினார்.

காலனியின் கட்டுப்பாட்டை மீட்டெடுத்து அடிமைத்தனத்தை மீண்டும் நிலைநாட்டுவதே அவரது இலக்காக இருந்தது. பின்னர் செயின்ட்-டோமிங்குவின் ஆளுநராக இருந்த லூவெர்ச்சரை பதவி நீக்கம் செய்ய ஜெனரல் திட்டமிட்டார். அவர் அதைவிட அதிகமாகச் சாதித்தார்.

தலைவர் லூவெர்ச்சரையும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்து பிரான்சுக்கு அனுப்பினார். ஏப்ரல் 7, 1803இல் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட லூவெர்ச்சர் சிறையில் இறந்தார்.

 
ஹைதியின் பிற தலைவர்கள்
பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்த ‘கருப்பு நெப்போலியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹைதியில் உள்ள லூவெர்ச்சரின் சிலை.

கரீபியன் தீவுகளில், அவரது ஆதரவாளர்கள் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போர் தொடுத்தனர். பல தோல்விகள் மற்றும் உயிரிழப்புகளுக்குப் பிறகு, அதே ஆண்டின் இறுதியில் ஐரோப்பிய துருப்புகள் வெளியேறின.

ஜனவரி 1, 1804இல் ஹைதி ஒரு சுதந்திர நாடானது, இருப்பினும் பிரான்சின் அங்கீகாரம் 21 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வந்தது. வரலாற்றாசிரியர் சந்தனா, “வரலாற்றில் ஹைதி என்பது அமெரிக்காவில் நடந்த அரசியல் புரட்சியின் ஒரு ஆகச் சிறந்த குறிப்பு," என்று கூறுகிறார்.

"லூவெர்ச்சர் ஒரு மிக முக்கியமான அரசியல் தலைவராக இருந்தார், பல இயக்கங்களை ஊக்குவிப்பதற்கும், செல்வாக்கு செலுத்துவதற்கும் பொறுப்பானவர். அவரது தலைமை, போராடுவதற்கான அவரது திறன் மற்றும் அவரது துணிச்சலுக்காக அவர் நினைவுகூரப்படுகிறார்," என்று அவர் கூறினார்.

"அவரது உருவம் இன்றும் ஹைதியில் எதிர்ப்பின் அடையாளமாக, ஒரு தேசிய அடையாளமாக எதிரொலிக்கிறது" என்று ராமிரெஸ் கூறுகிறார். இருப்பினும், லூவெர்ச்சர் ஒரு தனிப் போராளி அல்ல என்பதையும், புரட்சியில் பல ஹீரோக்கள் இருந்தனர் என்பதையும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

"அவர் மட்டுமல்ல, ஓகேய், ரேமண்ட், கிறிஸ்டோபே, டெஸ்ஸாலின்ஸ் போன்ற தலைவர்களும்கூட சமகால ஹைதியில் மதிக்கப்படுகிறார்கள். இந்த நபர்களுக்கு சிலைகள், ஓவியங்கள் மற்றும் பல்வேறு நினைவுச் சின்னங்கள் உள்ளன. ஹைதிய புரட்சியின் வலிமையையும் அர்த்தத்தையும் மேற்குலகம் புரிந்து கொள்ளவில்லை, பார்க்கவும் இல்லை. ஆனால் இந்த நினைவுச் சின்னங்கள் ஹைதியர்களுக்கு பெருமை சேர்க்கிறது,” என்று சில்வா கூறுகிறார்.

“லூவெர்ச்சரை அமெரிக்காவின் மிகப் பெரிய கறுப்பினப் புரட்சியாளராகக் குறிப்பிடுவது தனிமனிதனையும் அவர் வாழ்ந்த சமூகத்தையும் புரிந்துகொள்ள உதவுவதைவிட அதிகமான பிரச்னைகளை, கட்டுக்கதைகளை உருவாக்குகிறது," என்று வரலாற்றாசிரியர் சில்வா கருத்து தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை புரட்சியாளர் லூவெர்ச்சர், மற்ற மனிதர்களைப் போலவே, சாதாரணமான ஒரு நபர். நமக்கு இருக்கும் கவலைகள், மகிழ்ச்சிகள், உணர்ச்சிகள் என அனைத்தும் அவருக்கும் இருந்தன.

ஹைதிய புரட்சியின் வெற்றியில் லூவெர்ச்சரின் செல்வாக்கையும் மார்குசி ஒப்பிட்டுப் பார்க்கிறார், “ஒரு ராணுவ மற்றும் ராஜதந்திரத் தலைவராக அவரது தனிப்பட்ட பங்கை மீறிய தொடர்ச்சியான காரணிகளால் இது வெற்றிகரமாக இருந்தது.

வெற்றிக்குக் காரணமாக முக்கியமான பல முன்னாள் அடிமைப் போராளித் தலைவர்களும் இருந்தனர், ஆனால் வரலாற்றில் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்" என்று வரலாற்றாசிரியர் நினைவு கூர்ந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2jd8zye9jvo

இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்

1 month 1 week ago

இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்

தனது இராணுவத் தளபதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பழிவாங்க, இஸ்ரேல் மீது ஈரான் தற்போது பல ட்ரோன்களைக் கொண்டு தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது.

நூற்றிற்கு மேற்பட்ட ட்ரோன்களும், பலிஸ்ட்டிக் ஏவுகனைகளும் இத்தாக்குதலில் பாவிக்கப்பட்டிருக்கின்றன.

இஸ்ரேல் பதிலடித்தாக்குதலை ஆரம்பிக்கும்போது, அயல் நாடுகள் எவராவது இஸ்ரேலிய விமானங்கள் பறப்பதற்கு தமது வான்பரப்பை திறந்துவிட்டால் அந்த நாடுகளையும் தாக்குவோம் என்று ஈரான் எச்சரித்திருக்கிறது.

ட்ரோன்கள் இன்னும் இஸ்ரேல் வந்து சேரவில்லை. இஸ்ரேல் அவற்றை அவதானிக்கின்றதாம். அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு உடவுவோம் என்று கூறியிருக்கிறது

https://edition.cnn.com/middleeast/live-news/israel-hamas-war-gaza-news-04-13-24/index.html

மத்திய கிழக்கில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் இஸ்ரேலுக்கு உதவும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. ஈரானைத் தோற்கடிப்போம் என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது. 

மேலும், ஏவப்பட்ட ட்ரோன்களில் சிலவற்றை அமெரிக்கா இடைமறித்திருக்கிறது.

இஸ்ரேலிய ஏவுகணை எதிர்ப்பு நிலை மீது ஹிஸ்புள்ளா ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலிய மக்களை பாதுகாப்பான பகுதிகள் என்று அறியப்பட்ட இடங்கள் நோக்கி நகருமாறு அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

ஒரே வங்கியில் ரூ.3.30 லட்சம் கோடி மோசடி கடன் வாங்கி இந்த தொழிலதிபர் ஏமாற்றியது எப்படி?

1 month 1 week ago
ரூ.3.30 லட்சம் கோடி வங்கி மோசடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிபிசி வியட்நாம்
  • பதவி, பாங்காக்கில் இருந்து
  • 13 ஏப்ரல் 2024, 15:38 GMT
    புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்

வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள காலனித்துவ கால நீதிமன்றத்தில், ஒரு அதிசயக் காட்சி அரங்கேறியது. அப்போது நீதிமன்ற அறை முழுவதும் ஒரு பெயர் எதிரொலித்தது. அது ட்ரூங் மை லான்.

வியட்நாமின் மிகவும் பரபரப்பான வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, உலகின் மிகப்பெரிய வங்கி மோசடிகளில் ஒன்றைத் திட்டமிட்டதற்காக செவ்வாயன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட 67 வயதான வியட்நாமிய ரியல் எஸ்டேட் அதிபரின் சுரண்டல்களை வெளிப்படுத்தியது.

அத்தகைய வழக்கில் மரண தண்டனை என்பது வழக்கத்திற்கு மாறாக கடுமையான தண்டனையாகும். வியட்நாமில் ஒயிட் காலர் (White collar crime) குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மிகச் சில பெண்களில் ட்ரூங் மை லானும் ஒருவர். முடிவை மேல்முறையீடு செய்ய அவருக்கு வாய்ப்பு உள்ளது.

ட்ரூங் மை லான், சைகான் வணிக வங்கியில் (Saigon Commercial Bank- எஸ்சிபி) 11 வருடங்களாக சுமார் 44 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 3,30,000 கோடிகள்) கடனாகப் பெற்றதற்காக தண்டிக்கப்பட்டார். இதில் 27 பில்லியன் டாலர்களை திரும்பப் பெற முடியாது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இது 2023இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6%க்கு சமம்.

பொதுவாக மெத்தனமாக இருக்கும் கம்யூனிஸ்ட் அதிகாரிகள் இந்த வழக்கை வெளிப்படையாக விவாதித்து, ஊடகங்களுக்கு சிக்கலான விவரங்களை அளித்து பலரை ஆச்சரியப்படுத்தினர்.

சாட்சியமளிக்க 2,700 பேர் அழைக்கப்பட்டதாகவும், 10 அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சுமார் 200 வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மொத்தம் 6 டன் எடையுள்ள 104 பெட்டிகளில் ஆதாரம் இருந்தது. 85 பிரதிவாதிகள் ட்ரூங் மை லானுடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. நால்வர் ஆயுள் தண்டனை பெற்றனர். மீதமுள்ளவர்களுக்கு 20 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ட்ரூங் மை லானின் கணவர் மற்றும் மருமகள் முறையே ஒன்பது மற்றும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றனர்.

வியட்நாமில் நீண்டகால அனுபவமுள்ள ஓய்வுபெற்ற அமெரிக்க அரசுத் துறை அதிகாரி டேவிட் பிரவுன் கூறுகையில், "கம்யூனிஸ்ட் காலத்தில் இதுபோன்ற ஒரு விசாரணை இதுவரை இருந்ததில்லை. இந்த அளவில் நிச்சயமாக எந்த வழக்கும் விசாரிக்கப்பட்டது இல்லை" என்றார்.

ஆனால் இந்த நீதிமன்ற வழக்கின் மைய நபரைப் பற்றி நமக்கு தெரிந்த விவரங்கள் என்ன?

மரண தண்டனை விதிக்கப்பட்ட வியட்நாமிய பெண்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,வியட்நாமின் மிகப்பெரிய வங்கி ஒன்றில் 11 ஆண்டுகளாக நடந்த நிதி மோசடிக்காக ட்ரூங் மை லான் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
ஏழ்மையிலிருந்து உச்சத்திற்கு...

ஹோ சி மின் நகரில் ஒரு சீன-வியட்நாமிய குடும்பத்தில் ஒரு எளிய பின்னணியில் இருந்து நிதி ஊழலின் மையத்திற்குச் சென்ற ட்ரூங் மை லானின் பயணம், பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது.

வியட்நாமின் டோய் மோய் என்று அழைக்கப்படும் பொருளாதார சீர்திருத்த சகாப்தத்தின் போது அவர் தனது தாயுடன் சந்தை விற்பனையாளராக ஒரு சாதாரண பின்னணியில் இருந்து, ரியல் எஸ்டேட் துறையில் இறங்கினார். 1990களில், அவர் கணிசமான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் விற்பனையில் ஈடுபட்டிருந்தார், இது அவரது புத்திசாலித்தனமான வணிகச் செயல்பாட்டிற்கு ஒரு சான்றாகும்.

இருப்பினும், சைகான் வணிக வங்கியுடனான அவரது ஈடுபாடு தான் அவரை கவனத்தில் கொள்ளச் செய்தது. ஷெல் நிறுவனங்கள் மற்றும் ப்ராக்ஸிகள் மூலம், வங்கியின் 90 சதவீதத்தை திறம்பட கட்டுப்படுத்தி, தனிப்பட்ட உரிமைகள் தொடர்பான விதிமுறைகளை ட்ரூங் மை லான் மீறியதாக வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த வங்கி சாம்ராஜ்ஜியத்திற்குள் தான் மோசடி நடந்துள்ளது எனவும், ட்ரூங் மை லான் தனிப்பட்ட லாபத்திற்காக திகைக்க வைக்கும் அளவுக்கு பணத்தை மோசடி செய்தார் எனவும் கூறப்பட்டுள்ளது. அவரது கடன்கள் வங்கியின் மொத்த கடன்களில் 93% ஆகும். வழக்குரைஞர்களின் கூற்றுப்படி, பிப்ரவரி 2019 முதல் மூன்று ஆண்டுகளில் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட வியட்நாமிய பெண்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,1990களில், அவர் கணிசமான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.

அவர் தனது டிரைவருக்கு 108 டிரில்லியன் வியட்நாமிய ரூபாயை, இந்திய மதிப்பில் 30,000 கோடி ரூபாய் ரொக்கத்தை வங்கியில் இருந்து எடுத்து, அதை தனது வீட்டின் அடித்தளத்தில் சேமிக்க உத்தரவிட்டார்.

அவ்வாறு சேமிக்கப்பட்ட மொத்த வியட்நாமிய ரூபாய் நோட்டுகளின் எடை இரண்டு டன்களாக இருக்கும், இது பல வியட்நாமியர்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுவாக, தனிநபர்கள் கடன் வாங்கும்போது ஒரு சிக்கலான செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் அத்தகைய நிதிகளின் ஒரு பகுதியை அணுகுவதற்கு இணை (Collateral) வழங்கப்பட வேண்டும்.

தனது கடன்கள் ஒருபோதும் ஆராயப்படாமல் இருக்க தாராளமாக லஞ்சம் கொடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் மத்திய வங்கியின் தலைமை ஆய்வாளராக இருந்தார், அவர் சுமார் 37.5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

 
‘என்னுடைய உலகம் சரிந்தது’
மரண தண்டனை விதிக்கப்பட்ட வியட்நாமிய பெண்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹோ சி மின் நகரில் இந்த வழக்கின் விசாரணை நடந்தது.

ட்ரூங் மை லான், பண மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், பத்திர மோசடி உட்பட மற்ற குற்றச்சாட்டுகளில் குறைந்தது இரண்டு கூடுதல் வழக்குகளுக்கான விசாரணை இன்னும் அவருக்கு காத்திருக்கிறது.

42,000க்கும் மேற்பட்ட நபர்கள், 27 முதல் 60 வயது வரை மற்றும் பல்வேறு பின்னணியில் இருந்து வந்தவர்கள், இந்த திட்டங்களுக்கு பலியாயினர். எஸ்சிபி வங்கியின் மூலம் விற்கப்பட்ட மோசடி பத்திரங்களை வாங்கினர்.

அவர்களில் ஒருவர் 48 வயதான டாங் ட்ரூங் லாங் (Dang Trung Long). வியட்நாமின் பரபரப்பான ஹோ சி மின் நகரில், ரியல் எஸ்டேட் துறையில் சொத்துகளை விற்பதில் முடிவில்லாத பல மணிநேரங்களை அவர் அர்ப்பணித்தார்.

இரண்டு தசாப்தங்களாக இடைவிடாத உழைப்பால், அவர் 1.7 பில்லியன் வியட்நாமிய டாங்குகளை (இந்திய மதிப்பில் 52.5 லட்சம்) சேமித்தார். சராசரி மாத வருமானம் 25,000 ரூபாயைத் தாண்டாத ஒரு நாட்டில் இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

"எனது ஒரே மகளுக்கு சிறந்த கல்வியைத் தருவதற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமித்தேன், ஆனால் இந்த மோசடியால், நான் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்," என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.

"என் உலகம் சரிந்துவிட்டது, என் மகளின் கனவு உடைந்துவிட்டது. எல்லாவற்றையும் மீண்டும் கட்டியெழுப்பும் அளவுக்கு எனக்கு உடலில் வலு இருக்கிறதா எனத் தெரியவில்லை" என்றார்.

 
பதிலில்லா கேள்விகள்
நுயென் பு ட்ரோங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் நுயென் பு ட்ரோங் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

ட்ரூங் மை லானின் முதல் வழக்கு விசாரணை வெளிவந்த போது, இதுபோன்ற ஒரு திட்டம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கண்டறியப்படாமல் நீடிக்க முடிக்க முடிந்தது எப்படி என்ற கேள்விகள் எழுந்தன.

சிங்கப்பூரில் உள்ள ஐஎஸ்இஏஎஸ்- யூசப் இஷாக் இன்ஸ்டிட்யூட்டில் வியட்நாம் ஆய்வுத் திட்டத்தை நடத்தும் லே ஹாங் ஹிப், "நான் குழப்பத்தில் இருக்கிறேன்" என்கிறார்.

"ஏனென்றால் அது ஒரு ரகசியம் அல்ல. ட்ரூங் மை லானும் அவரது வான் தின் பாட் குழுவும் எஸ்சிபி வங்கியை தங்கள் சொந்த உண்டியலாகப் பயன்படுத்தி, மிக முக்கியமான இடங்களில் ரியல் எஸ்டேட் சொத்துகளை பெருமளவில் கையகப்படுத்திய விஷயம் சந்தையில் நன்கு அறியப்பட்ட ஒன்றாக இருந்தது.

அவருக்கு எங்கிருந்து பணத்தைப் பெற வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஏனென்றால் அது மிகவும் பொதுவான நடைமுறை. எஸ்சிபி மட்டும் இந்த நடைமுறையைப் பயன்படுத்தப்படும் வங்கி அல்ல. எனவே இதுபோன்ற பல வழக்குகள் இருப்பதால் அரசாங்கம் குழப்பம் அடைந்திருக்கலாம்" என்கிறார் அவர்.

வணிகம் மற்றும் அரசியலில் உள்ள சக்தி வாய்ந்த நபர்கள் ட்ரூங் மை லானை சட்டத்தில் இருந்து பாதுகாத்து, நாட்டின் வங்கித் துறையை பாதித்த உள்ளூர் ஊழலைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர் என்று ஊகிக்கிறார் டேவிட் பிரவுன்.

ஆயினும்கூட, இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ஒரு பரந்த கதை வெளிப்பட்டது. விசாரணையானது ட்ரூங் மை லானின் குற்றச் செயல்களைப் பற்றியது மட்டுமல்ல, வியட்நாமின் அரசியல் நிலப்பரப்பில் அதிகாரத்திற்கான ஒரு பெரிய போராட்டத்தையும் அது பிரதிநிதித்துவப்படுத்தியது.

கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் நுயென் பு ட்ரோங் (Nguyen Phu Trong), ஊழலுக்கு எதிரான பிரசாரத்திற்கு தலைமை தாங்கி, ஹோ சி மின் நகரத்தில் செல்வாக்கு மிக்க நபர்களின் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை கட்டுப்படுத்த முயன்றார்.

இந்த பிரசாரத்தால் இரண்டு ஜனாதிபதிகள் மற்றும் இரண்டு துணைப் பிரதமர்கள் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த அதிகாரப் போராட்டத்தில் ட்ரூங் மை லானை வழக்கு விசாரணை ஒரு போர்க்களமாக மாறியது. இது கட்சியின் பழமைவாத கொள்கைகள் மற்றும் வியட்நாமின் பொருளாதார அபிலாஷைகளின் உண்மைகளுக்கு இடையிலான பதற்றத்தின் அடையாளமாகும்.

தொழில்நுட்பம் மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரத்திற்கு நாடு மாற முற்பட்டபோது, ஊழலை எதிர்த்துப் போராடும் முரண்பாடு, பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் போது, வியட்நாமின் எழுச்சியைத் தூண்டிய இயந்திரத்தையே சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

"அதுதான் முரண்பாடு" என்கிறார் லு ஹாங் ஹிப். "அவர்களின் வளர்ச்சி மாதிரி நீண்ட காலமாக ஊழல் நடைமுறைகளை நம்பியிருக்கிறது. ஊழல் என்பது இங்கு இயந்திரங்களை வேலை செய்ய வைக்கும் கிரீஸ் போல. அவர்கள் கிரீஸ் போடுவதை நிறுத்தினால், அரசு இயந்திரங்கள் இனி வேலை செய்யாமல் போகலாம்" என்கிறார் அவர்.

ட்ரூங் மை லானின் சோதனையானது, வேகமாக மாறிவரும் வியட்நாமில் அதிகாரம், லட்சியம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான தொடர்புகளின் அடையாளமாகும்.

நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன், ட்ரூங் மை லானின் கதை நீதிமன்றத்தின் சுவர்களுக்கு அப்பால் எதிரொலித்தது. வியட்நாம் தேசம் அதன் மோசமான கடந்த காலத்தையும் அதன் நிச்சயமற்ற எதிர்காலத்தையும் பற்றி கவலைப்பட அது ஒரு காரணமாக அமைந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cqvn22d6lpwo

வட கொரியாவுக்கு அணு ஆயுதங்களை தயாரித்தவர் தென் கொரியாவில் எம்.பியானது எப்படி?

1 month 1 week ago
வட கொரியாவின் ஏவுகணை ஆராய்ச்சியாளர் தென் கொரிய எம்.பியானது எப்படி?

பட மூலாதாரம்,PPP

படக்குறிப்பு,37 வயதான பார்க் சூங்-வோ வட கொரியாவின் அணு ஆயுத ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஃபிரான்சஸ் மாவோ, சங்மி ஹான்
  • பதவி, பிபிசி
  • 38 நிமிடங்களுக்கு முன்னர்

பார்க் சூங்-குவோன் ஓர் இளைஞராக, தனது தாயகமான வட கொரியா, மேற்கு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வெடிக்கச் செய்த அணு ஏவுகணைகளை உருவாக்க உதவினார்.

இப்போது அவர் அதன் ஜனநாயக அண்டை நாடான தென் கொரியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக இந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் சர்வாதிகார ஆட்சியிலிருந்து தாராளவாத ஜனநாயக நாடுகளுக்கு இடம்பெயரும்போது, அவர்கள் சிறந்த வாழ்க்கை, வாய்ப்புகள் பற்றி கனவு காண்கிறார்கள். ஓர் அகதி எம்.பியாக முடியுமா அல்லது ஒருநாள் அதிபராகத்தான் முடியுமா? அது சாத்தியமானது தான்.

ஆனால் ஒரு வட கொரியருக்கு இது அசாதாரணமானது. 37 வயதான பார்க், வட கொரியாவிலிருந்து தப்பித்து, தென் கொரியாவில் நாடாளுமன்ற உறுப்பினரான நான்காவது நபராவார்.

"நான் ஒன்றுமே இல்லாமல் தென் கொரியாவிற்கு வந்தேன். இப்போது நான் அரசியல் அரங்கில் நுழைந்துள்ளேன்" என்று அவர் இந்த வார தொடக்கத்தில் பிபிசியிடம் கூறினார்.

"இவை அனைத்தையும் நமது தாராளவாத ஜனநாயகத்தின் சக்தியாக நான் பார்க்கிறேன். எங்கள் குடிமக்களால் இது சாத்தியமானது என்று நான் நினைக்கிறேன். இது ஓர் அதிசயம் மற்றும் ஆசீர்வாதம்.”

வட கொரியாவை உற்றுநோக்குபவர்களுக்கு இது முன்னேற்றத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

"சட்டப்படி எதற்கும் அனுமதிக்கப்படாத நாட்டில் வாழ்ந்தவர்களை விட ஜனநாயக பிரதிநிதித்துவம் மற்றும் அரசியல் ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை யார் புரிந்துகொண்டிருப்பார்கள்?" என, வட கொரிய வாழ்க்கை குறித்து ஆய்வு செய்த கார்ல்ட்டன் பல்கலைக்கழக இணை பேராசிரியர் சாண்ட்ரா ஃபாஹி தெரிவித்தார்.

வட கொரியாவிலிருந்து தப்பித்தது எப்படி?
வட கொரியாவின் ஏவுகணை ஆராய்ச்சியாளர் தென் கொரிய எம்.பியானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தென் கொரியா அதிபர் யூன் சுக்-யோ

தன் 23 வயதில், ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்பு வட கொரிய அரசின் பிடியில் இருந்து பார்க் தப்பினார். பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களிடம் தனது திட்டங்களைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட அவர் மூச்சுவிடவில்லை. அது மிகவும் ஆபத்தானது என்றும் குடும்பத்தினர் இதுகுறித்து அறிந்திருந்தால் அது அவர்களை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

அவர் தனது கடைசி மூன்று ஆண்டுகளை தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் கழித்தார். வட கொரியாவின் அணு ஆயுத தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு அடுத்த தலைமுறையாகக் கருதப்படும் உயர்நிலை மாணவர்களில் அவர் ஒருவர்.

அவர் 1990-களில் வட கொரியாவில் வளர்ந்தார். பல லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் உயிரிழந்த, குடிமக்கள் நம்பிக்கையற்ற நிலையில் கறுப்புச் சந்தையை நாடிய காலமாக அது இருந்தது.

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சமயத்தில், “வட கொரியா ஆட்சி எப்படி முற்றிலும் தவறாகவும் ஊழல் நிறைந்ததாகவும் உள்ளது என உணர்ந்ததாக" கொரிய ஊடகத்திடம் அவர் தெரிவித்தார்.

எனவே தன் திட்டத்தை வெளிப்படுத்தாமல் காத்திருந்தார்.

ஏப்ரல் 2009-ல் ஒருநாளில் தன்னை வெளிப்படுத்தினார். அந்த நாளில் தான், தன் பல ஆண்டு கடின உழைப்பால் அவர் உருவாக்கிய கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வட கொரியா வெற்றிகரமாக செலுத்தியது. ஒட்டுமொத்த நாடும் “கொண்டாட்ட மனநிலையில் இருந்தது"; கொண்டாட்ட கூச்சல்களுக்கு நடுவே அவர் சத்தமின்றி வெளியேறினார்.

அங்கிருந்து அவர் வெளியேறுவது நிச்சயமாக கடினமான முடிவுதான். அங்கிருந்து சீனாவுக்கு செல்ல மிக வேகமான, ஆனால் செலவுகரமான வழியை அவர் தேர்ந்தெடுத்தார். அதற்கு 10 மில்லியன் வான் (5,800 பவுண்ட்; 7,300 டாலர்கள்) செலவானது. செலவைவிட தரகரால் அவருக்கு வழங்கப்பட்ட போலி பாஸ்போர்ட் முறைகேடானதாக இருந்தது.

ஆனால், அச்சமயத்தில் தான் விடுதலையடைந்ததாக உணர்ந்ததாக அவர் என்.கே. நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நினைவுகூர்ந்தார். அந்நாட்களில் சீனாவின் பக்கத்தில் உள்ள துமன் நதிக்கரையில் சுதந்திரம் மற்றும் இழப்பு என இரண்டு உணர்வுகளையும் அவர் கொண்டிருந்தார். அந்த உணர்வு, அவரை “சர்வதேச அநாதையாக" உணரச் செய்தது.

அவருடைய வாழ்க்கையை மாற்றிய மற்றொரு தருணம், அவர் தென் கொரியா பாஸ்போர்ட்டை பெற்றது. தன் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணங்களுள் ஒன்று என அவர் அதை குறிப்பிடுகிறார்.

 
எம்.பியானது எப்படி?
வட கொரியாவின் ஏவுகணை ஆராய்ச்சியாளர் தென் கொரிய எம்.பியானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தே யாங்-ஹோ

1990களில் இருந்து வடகொரியாவிலிருந்து சுமார் 35,000 பேர் தென் கொரியாவுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருடன் ஒப்பிடுகையில், பார்க் தன் புதிய வாழ்க்கையை மிக வேகமாக தழுவிக்கொண்டார், தன் மேல்தட்டு பின்னணி மற்றும் கல்வி காரணமாக அவர் சவாலை பிரச்னைகள் இன்றி சமாளித்தார்.

தென் கொரியாவின் மிகவும் புகழ்வாய்ந்த பல்கலைக்கழகமான சியோல் தேசிய பல்கலைக்கழகத்தால் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அங்கு அவர் பொருளறிவியல் மற்றும் பொறியியலில் பிஹெச்.டி பட்டம் பெற்றார். பின்னர், தென்கொரியாவின் அதிகாரம் வாய்ந்த தொழில் நிறுவனமான ஹூண்டாய் ஸ்டீல் நிறுவனத்தில் உயர்மதிப்பு மிக்க பணியில் சேர்ந்தார்.

பின்னர், தென் கொரியா அதிபரின் கட்சியிலிருந்து அவருக்கு வாய்ப்பு கதவைத் தட்டியது.

தான் அரசியலில் இணைவது குறித்து சிந்தித்ததே இல்லை என பார்க் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், மக்கள் அதிகார கட்சி (People Power Party) தன்னிடம் வந்தபோது மக்கள் சேவை மூலம் திருப்பி ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்ததாக அவர் கூறினார்.

விகிதாச்சார வாக்களிப்புப் பதவிகளுக்கான ஆளுங்கட்சியின் பட்டியலில் இரண்டாம் பிரதிநிதியாக அவர் இருந்தார். வாக்குப்பதிவு எவ்வளவு சாதகமற்றதாக இருந்தாலும், அவர் புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் உறுதியான இடத்தைப் பெற்றார். ஆனால், அக்கட்சிக்கும் அதிபர் யூன் சுக்-யோலுக்கும் தேர்தல் முடிவுகள் மோசமானதாக இருந்தது.

ஆனால், பார்க் தேர்தலில் முன்னிலையில் இருந்தார். இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பியாக அவருக்கு பல பெரிய திட்டங்கள் உள்ளன.

தென் கொரியாவின் முந்தைய நாடாளுமன்றங்களில் வட கொரியாவைச் சேர்ந்த இருவர் பதவியில் இருந்தனர். அவர்களுள் தே யாங்-ஹோ, ஆடம்பரமான கங்நாம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் முன்பு, பிரிட்டனுக்கான வட கொரியா தூதராக இருந்தார். அவர் 2016-ம் ஆண்டில் லண்டனில் இருந்த போது வடகொரியாவிலிருந்து வெளியேறினார்.

மற்றொரு நபர் வலதுசாரி செயற்பாட்டாளர் ஜி சியோங்-ஹோ. 1996-ம் ஆண்டில், இளைஞராக அவரும் பசியால் வாடிய அவருடைய குடும்பத்தினரும் ரயிலில் இருந்து நிலக்கரியை திருடியபோது தன் இடது கையையும் காலையும் இழந்தார். அச்சமயத்தில் பசியால் மயக்கமடைந்த அவர் ரயில் பெட்டிகளுக்கிடையே விழுந்தார்; ரயில் சக்கரங்கள் அவர் மீது ஏறியது. பின்னர், அவர் ஊன்றுகோல் உதவியுடன் வடகொரியாவிலிருந்து தப்பினார்.

வடகொரியாவிலிருந்து தப்பியவர்களின் நிலையை மேம்படுத்த அவர்கள் நீண்டகாலமாக பணியாற்றியுள்ளனர்.

 
வட கொரியா குறித்த நிலைப்பாடு
வட கொரியாவின் ஏவுகணை ஆராய்ச்சியாளர் தென் கொரிய எம்.பியானது எப்படி?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,கிம் ஜோங் உன்

தென் கொரியாவுக்கு வந்தவுடன் தங்களின் வாழ்க்கை புதிதாக மாறியுள்ளதாக பெரும்பாலானோர் கூறினாலும், அங்கு இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக கருத்தும் நிலவுகிறது.

அதுதான் 2020-ம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட ஜி சியோங்-ஹோ-வை ஊக்கப்படுத்தியது. அவர் வட கொரிய மக்களின் உரிமைகளை நிறைவேற்றுவதாக பிரசாரத்தில் ஈடுபட்டார். வடகொரியாவிலிருந்து தப்பியவர்கள் கடத்தலில் ஈடுபட்டதாக தென் கொரிய அதிகாரிகள் அவர்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பிய சமபவமும் நடைபெற்றுள்ளது.

ஓராண்டுக்கு முன் வறுமையில் இருந்த வடகொரிய தாய் மற்றும் மகள், சியோலில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் பசியால் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

தென் கொரியாவுக்கு வரும் வடகொரிய மக்களுக்கான ஆதரவை மேம்படுத்துவதே தன் முதல் இலக்கு என பார்க் தெரிவித்தார். மேலும், நீண்ட கால இலக்குகளையும் அவர் கொண்டுள்ளார். தென் கொரியாவுக்கு வரும் வடகொரியர்களின் எண்ணிக்கை, கொரோனா கால எல்லை மூடலால் கணிசமாக குறைந்துள்ளதால், அவர்களுக்கான பட்ஜெட்டை மறு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என அவர் கூறுகிறார்.

வடகொரியா-தென் கொரியா மக்களுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துவதிலும் தன் அடையாளத்தைப் பதிக்க அவர் நினைக்கிறார்.

கிம் ஜோங் உன் ஏவுகணை சோதனைகளை அதிகரித்துள்ள நிலையில், வட கொரியாவை ராணுவ ரீதியிலான தென் கொரிய அதிபரின் அணுகுமுறையை அவர் மனதார ஆதரிக்கிறார்.

தென் கொரிய அதிபர் யூன் அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் நெருங்கிய உறவுகளை பேணி வருவதால், வட கொரியா எதிர்வினையாற்றுவதாக சிலர் கூறினாலும், பார்க் அக்கருத்தை நிராகரிக்கிறார்.

“யூன் அரசாங்கம் வந்ததிலிருந்து, போர் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல - முந்தைய நிர்வாகத்தின் கீழ் அச்சுறுத்தல்கள் வலுவாக இருந்தன,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

முன்னாள் அதிபர் மூன் ஜே-இன் நிர்வாகத்தின் போது வட கொரியாவின் ஏவுகணை சோதனைகள் மற்றும் ஆயுத மேம்பாடு அதிகரித்ததை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"வட கொரியாவின் ஆத்திரமூட்டல்களைத் தடுப்பது மிக முக்கியமானது, அது போர் அச்சுறுத்தலைக் குறைக்க வழிவகுக்கும்" என்கிறார் அவர்.

தீபகற்பத்தின் இரு பகுதிகள் மீண்டும் ஒன்றிணையும் என அவர் நம்புகிறார். இந்த ஆண்டு கிம் ஜோங்-உன் அந்த வாய்ப்பை முறியடிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்த போதிலும் இவ்வாறு அவர் கருதுகிறார்.

ஆனால் பார்க் தயங்கவில்லை. தென் கொரிய அரசாங்கத்தில் "ஒரு பாலமாக திகழும் ஒரு பாத்திரத்தை வகிக்க" அவர் உறுதியாக இருக்கிறார்.

"தென் கொரியர்கள் வட கொரியாவின் ஆட்சியையும் அதன் மக்களையும் தனித்தனியாகப் பார்க்கவும் ஒற்றுமைக்கு உகந்த மனநிலையை வளர்க்கவும் உதவ விரும்புகிறேன்." என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cz5d71yvx1ro

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வணிகவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதல் - நால்வர் பலி

1 month 1 week ago

Published By: RAJEEBAN    13 APR, 2024 | 01:58 PM

image
 

அவுஸ்திரேலியாவில் வணிகவளாகமொன்றில் நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திகுத்து தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிட்னியின் பொன்டி ஜங்சன் எனப்படும் பகுதியில் இந்த வன்முறை சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

வணிக வளாகமொன்றிற்குள் நபர் ஒருவர் கத்தியுடன் காணப்படுவதாக பொதுமக்களை எச்சரித்துள்ள காவல்துறையினர் பாரிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அந்த பகுதியிலிருந்து பொதுமக்கள் தப்பிவெளியேறிய வண்ணமுள்ளனர்.

BBOcHh9L.jpg

அவசரசேவை பிரிவினரின் வாகனங்கள் அந்த பகுதிக்கு விரைகின்றன.

பலர் கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

தாக்குதலை மேற்கொண்ட நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இந்த தாக்குதலில் மேலும் சிலர் தொடர்புபட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள காவல்துறையினர் மற்றுமொரு சந்தேகநபரை தேடிவருகின்றனர்.

வெஸ்ட்பீல்ட் வணிக வளாகத்தில் ஆண் ஒருவர் கத்தியுடன் ஓடி திரிந்து தாக்குதலை மேற்கொண்டார் காயமடைந்தவர்களில் குழந்தையொன்றும் தாயும் உள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வணிக வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஜேசன் என்ற நபர் பெரிய வாளுடன் நபர் ஒருவரை பார்த்ததாகவும் அவர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

வணிக வளாகம் மூடப்பட்டுள்ளது பாதுகாப்பாக பதுங்கியிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இந்த தாக்குதலில் மேலும் சிலர் தொடர்புபட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள காவல்துறையினர் மற்றுமொரு சந்தேகநபரை தேடிவருகின்றனர்.

7hWzf0B-.jpg

வெஸ்ட்பீல்ட் வணிகவளாகத்தில் ஆண் ஒருவர் கத்தியுடன் ஓடி திரிந்து தாக்குதலை மேற்கொண்டார் காயமடைந்தவர்களில் குழந்தையொன்றும் தாயும் உள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வணிகவளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஜேசன் என்ற நபர் பெரிய வாளுடன் நபர் ஒருவரை பார்த்ததாகவும் அவர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

வணிகவளாகம் மூடப்பட்டுள்ளது பாதுகாப்பாக பதுங்கியிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

https://www.virakesari.lk/article/181048

சீனாவை இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் – அமெரிக்கா

1 month 1 week ago
1712913410214104-750x375.jpg சீனாவை இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் – அமெரிக்கா

சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்கா வலியுத்தியுள்ளது.

ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, இந்தோ பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்கா வலியுத்தியுள்ளது.

குறித்த சந்திப்பு வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது, பிலிப்பனைஸ் ஜனாதிபதி ஜூனியர் பெர்டினன்ட் மார்க்கோஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை வரவேற்று, ஜனாதிபதி, ஜோ பைடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1377934

தென்கொரிய பொதுத்தேர்தல் - ஆளும் கட்சி படுதோல்வி

1 month 1 week ago
11 APR, 2024 | 12:20 PM
image
 

தென்கொரிய பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வியடைந்துள்ளது.

எதிர்கட்சியான ஜனநாயக கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

300 ஆசனங்களிற்கான தேர்தலில் எதிர்கட்சியான  ஜனநாயக கட்சியும் சிறிய கட்சிகளும் இணைந்து 192 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.

இந்த தேர்தல் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் ஆட்சி குறித்த சர்வஜனவாக்கெடுப்பாக கருதப்பட்டது.தேர்தல் முடிவுகளை தொடர்ந்து அவரது கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் பிரதமரும் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180972

ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட தயாராகின்றது அமெரிக்கா?

1 month 1 week ago

Published By: RAJEEBAN   11 APR, 2024 | 11:37 AM

image
 

விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகர்  ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை கைவிடவேண்டும் என்ற அவுஸ்திரேலியாவின் வேண்டுகோளை பரிசீலித்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

 அமெரிக்காவின் இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தியமைக்காக விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகருக்கு எதிராக வழக்கு தொடர்வது  குறித்து அமெரிக்கா கடந்த ஒரு தசாப்தகாலமாக தீவிரகவனம் செலுத்திவருகின்றது.

பிரிட்டனின் சிறையிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்நோக்கியுள்ள அவுஸ்திரேலிய பிரஜையான ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதை கைவிடவேண்டும் என அவுஸ்திரேலியாதொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவருகின்றது.

இந்த நிலையில் இதுகுறித்த கேள்வி;க்கு பதில் அளித்துள்ள ஜோ பைடன் அவுஸ்திரேலியாவின் வேண்டுகோளை பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பைடன் நிர்வாகம் ஜூலியன் அசஞ்சேயை விசாரணைக்கு உட்படுத்துவதை கைவிட தயாராகின்றது என்பதற்கான அறிகுறிகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன எனினும் இது ஜனாதிபதி தேர்தலில் பைடனிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஜூலியன் அசஞ்சே  இரகசிய ஆவணங்களை தவறாக கையாண்டதை ஏற்றுக்கொண்டால் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படலாம் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் சில நாட்களிற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது.

ஜூலியன் அசஞ்சே பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்டு ஐந்து வருடங்களாகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/180968

காஸா யுத்தம்: ஜேர்மனிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு

1 month 1 week ago

Published By: SETHU    08 APR, 2024 | 06:33 PM

image
 

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம், பலஸ்தீனர்களின் இனப்படுகொலைக்கு ஜேர்மனி உதவுவதாக குற்றம் சுமத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் நிக்கரகுவா வழக்குத் தொடுத்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதை நிறுத்துமாறு ஜேர்மனிக்கு உத்தரவிட வேண்டும் என நிக்கரகுவா கோரியுள்ளது.

நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. 

ஒருபுறம், பலஸ்தீன சிறார்கள், பெண்கள், ஆண்களுக்கு வான்வழி விநியோகம் உட்பட மனிதாபிமான உதவிகளை வழங்கிக் கொண்டே மறுபுறம், அவர்களைக் கொல்வதற்கான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு ஜேர்மனிக் வழங்குகிறது என நிக்கரகுவா சட்டத்தரணி டேனியல் முவெல்லர் நீதிமன்றத்தில் கூறினார்.

இனப்படுகொலைக்கு இந்த ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவதற்கான ஆபத்துள்ளது என்பதை ஜேர்மனி அறிந்துள்ளது என மற்றொரு சட்டத்தரணி அலெய்ன் பெலெட் கூறினார். 

ஜேர்மனி சர்வதேச நீதிமன்றத்தில் நாளை தனது வாதத்தை முன்வைக்கவுள்ளது.

https://www.virakesari.lk/article/180761

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் - அவுஸ்திரேலியா

1 month 1 week ago

Published By: RAJEEBAN    10 APR, 2024 | 10:13 AM

image
 

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் இதனை தெரிவித்துள்ளார். எனினும் பாலஸ்தீன தேசத்தின் ஆட்சியில் ஹமாசிற்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய வன்முறையை முடிவிற்கு கொண்டுவருவதற்கு இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அருகருகில் வசிக்கும் இரண்டு நாடு தீர்வே ஒரே நம்பிக்கை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக இந்த அணுகுமுறையை பின்பற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் தவறியமையும் பாலஸ்தீனதேசம் குறித்த விடயத்தில் ஈடுபாட்டை காண்பிப்பதற்கு நெட்டன்யாகு அரசாங்கம் தவறியமையும் பரந்துபட்ட அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இரண்டு தேசத்தினை நோக்கிய செயற்பாடாக பாலஸ்தீன தேசம் குறித்து சர்வதேசசமூகம் தற்போது சிந்திக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பது எதிரிக்கு வெகுமதி அளிக்கும் செயல் என்பது தவறான கருத்து இஸ்ரேலின் பாதுகாப்பு என்பது இரண்டுதேச கொள்கைகயிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டுதேச கொள்கையை ஏற்றுக்கொள்வது  ஹமாசினை பலவீனப்படுத்த உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180872

இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்

1 month 1 week ago
இஸ்ரேல் vs இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அக்பர் உசேன்
  • பதவி, பிபிசி செய்தி பங்களா
  • 9 ஏப்ரல் 2024, 11:55 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இரான் ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையைச் (IRGC) சேர்ந்த ஏழு பேர் மற்றும் ஆறு சிரிய குடிமக்கள் கொல்லப்பட்டதாக சிரியாவுக்கான இரான் தூதர் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம், இந்த தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுக்க விரும்புகிறது. அதேவேளை, மத்திய கிழக்கில் ஒரு போரைத் தொடங்கும் வகையில் எதையும் செய்யவும் இரான் விரும்பவில்லை.

இரான் பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி, இரான் ஆளில்லா விமானங்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகளின் உதவியுடன் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் சிபிஎஸ் செய்தி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இரான் எப்போது, எங்கு இந்தத் தாக்குதலை நடத்தும் என்பது அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. ரமலான் மாதத்தின் கடைசி வாரத்திற்கு இடையில் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இரானுக்குள் இருந்து ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுமா அல்லது இராக் மற்றும் சிரியாவின் மண் இதற்குப் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து அமெரிக்க உளவு நிறுவனத்திற்கும் அதிகம் தெரியவில்லை.

இதற்கிடையில், இரான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. இது நடந்தால், மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் தொடங்கும்.

 
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.

இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்?

இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலால், இரானுக்கு நேரடியான பாதிப்புகள் ஏற்படும். மறுபுறம், இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு இரான் பதிலளிக்கத் தவறினால், அதன் இராணுவத் திறன்களும் கேள்விக்குட்படுத்தப்படும்.

இதன் விளைவு, இரானை பலவீனமாகக் கருதும் இஸ்ரேல் எதிர்காலத்தில் அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் செயல்படும்.

இரான் முன் உள்ள சவால், அது தன்னை பலவீனமாக காட்டிக்கொள்ளக் கூடாது. எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும் திறமை தன்னிடம் உள்ளது என்பதை அது நிரூபிக்க வேண்டும்.

ஆனால் சிரமம் என்னவென்றால், மத்திய கிழக்கில் ஒரு பெரிய போரைத் தொடங்காமல் இரான் இஸ்ரேலுக்கு எவ்வாறு பதிலளிக்க முடியும்? மற்றொரு கேள்வி என்னவென்றால், இஸ்ரேலைத் தாக்கும் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதாரத் திறன் இரானுக்கு இருக்கிறதா?

இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபடும் திறன் இரானுக்கு இல்லை என்று மத்திய கிழக்கு விவகார ஆய்வாளரும் எழுத்தாளருமான அலி சத்ரசாதே பிபிசியிடம் தெரிவித்தார்.

“இரான், தங்கள் நாட்டு மக்களுக்காகவாவது கண்டிப்பாக இஸ்ரேலுக்கு பதிலளிக்க வேண்டும். இது தவிர, தனது நட்பு நாடுகளுடன் நம்பகத்தன்மையைப் பராமரிக்க இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இரான், இஸ்ரேல் மீது எவ்வளவு கோபமாக இருந்தாலும் பரவாயில்லை. இஸ்ரேலுக்கு எதிராக இரான் எந்த ஒரு வலுவான பதிலடியையும் கொடுக்கும் சாத்தியம் குறைவு. எனவே இரான் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்." என்கிறார் அலி சத்ரசாதே.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது இரானின் முன்னுரிமை அணுகுண்டு தயாரிப்பதே. ஒரு சில பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி 100 இஸ்ரேலியர்களைக் கொல்வதை விட அணுகுண்டு தயாரிப்பில் முன்னேறுவது தான் அந்நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் எதிர்காலத்தில் இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் தாக்குதலையும் இரான் தடுத்து நிறுத்தும்” என்றார்.

 
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம்.

ஹெஸ்புல்லாவின் நிலைப்பாடு என்ன?

காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, பல இரான் ஆதரவு குழுக்கள் சிரியா, இராக், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இஸ்ரேலிய குழுக்களைத் தாக்கியுள்ளன. இருப்பினும், அவர்களின் செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்கள் இஸ்ரேலுடன் நேரடிப் போரில் ஈடுபட விரும்பவில்லை.

"இரான் ஆதரவு குழுக்கள் இஸ்ரேலிய தூதரகத்தை தாக்குவது பற்றி யோசிக்கக் கூட மாட்டார்கள், அவ்வாறு தாக்குவது மிகவும் கடினம்." என்கிறார் அலி சத்ரசாதே.

உலகிலேயே மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதக் குழுவாக உள்ளது ஹெஸ்புல்லா. இது ஒரு நாட்டின் இராணுவ அமைப்பு இல்லை என்றாலும், இதில் இருபதாயிரம் முதல் ஐம்பதாயிரம் போராளிகள் உள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் நன்கு பயிற்சி பெற்றவர்கள். சிரியப் போரில் பங்கேற்றதன் மூலம், போர்க்கள அனுபவத்தைப் பெற்றுள்ளார்கள்.

இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லாவிடம் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

இருந்த போதிலும், இரான் சார்பாக ஹெஸ்புல்லா இனி இஸ்ரேலுடன் நேரடிப் போரில் ஈடுபடாது என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஹெஸ்புல்லா இஸ்ரேலின் வலையில் விழ விரும்பவில்லை என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். ஏனெனில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போரை விரிவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்கிறார் என்பது நன்றாகவே தெரியும்.

இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பொறுத்தே நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலமும் உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இஸ்ரேலுடன் நேரடிப் போரை நடத்தாமல் ஒரு குறியீட்டு பதிலடியை தான் இரான் எதிர்பார்க்கிறது என்று மத்திய கிழக்கு நிபுணர் சத்ரசாதே நம்புகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இராக்கில் இரானின் உயர்மட்ட தளபதி காசிம் சுலேமானி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு 'கடுமையான பழிவாங்கும் நடவடிக்கை' எடுக்கப்படும் என இரான் அச்சுறுத்தியது, ஆனால் உண்மையில் அது நடக்கவில்லை.

சுலேமானியின் படுகொலைக்கு பதிலளிக்கும் விதமாக, இராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது இரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. ஆனால் அந்த தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை.

தாக்குதலுக்கு முன்னதாகவே ஏவுகணைகள் குறித்து அமெரிக்க ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வர்ஜீனியா டெக்கின் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் அண்ட் இன்டர்நேஷனல் அஃபர்ஸைச் சேர்ந்த யூசுப் அஸிஸி பிபிசியிடம், “திரைக்குப் பின்னால் இரானுக்குள் இரு சக்திகள் இருக்கின்றன. அவற்றுக்கு இடையே ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, இரான் அணுசக்தி நாடாக மாறுவதன் மூலம் இஸ்ரேலின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒரு பக்கம் விரும்புகிறது, மறுபுறம் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கி பதிலடி கொடுக்க விரும்புகிறது.

இந்தச் சூழ்நிலையில் பொறுமையாக இருந்து, அணுசக்தியை மேம்படுத்துவதுதான் இரானின் முன்னுரிமையாக இருக்கலாம் என்கிறார் அவர்.

 
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்
மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்

மத்திய கிழக்கில் பெரிய போர் எதுவும் வெடிப்பதை இரான் விரும்பவில்லை. இரானுக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று, அமெரிக்க வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களைத் தாக்கும் ஆயுதக் குழுக்களுக்கு அது தொடர்ந்து ஆதரவளிக்கிறது.

இரண்டாவதாக இரான் தனது அணுசக்தி திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்த விரும்புகின்றன.

செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, அமெரிக்க அதிகாரிகள் இரானை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

இது தவிர, இராக் மற்றும் சிரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது ராணுவ வீரர்கள் மீது இரான் ஆதரவு குழுக்கள் நடத்தக் கூடிய தாக்குதல்கள் குறித்தும் அமெரிக்கா கண்காணித்து வருகிறது.

எவ்வாறாயினும், சிரியா மற்றும் இராக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது இரான் ஆதரவு குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்து அமெரிக்க உளவுத் துறையால் இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

இரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் துணைத் தலைவர் முகமது ஜம்ஷிதி தனது சமூக ஊடகப் பக்கத்தில், "உங்களுக்கு தீங்கு ஏற்படாத வண்ணம், விலகி இருங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

தனது சமூக ஊடகச் செய்திக்குப் பிறகு, அமெரிக்க தளங்களைத் தாக்க வேண்டாம் என்று இரானிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டதாக ஜம்ஷிதி கூறினார்.

இரானிடம் இருந்து அமெரிக்காவிற்கு எழுத்துப்பூர்வ செய்தி வந்துள்ளதாக அமெரிக்க செய்தி சேனலான சிபிஎஸ் (CBS) உறுதிப்படுத்தியுள்ளது.

இரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு எச்சரிக்கை கடிதத்தையும் அமெரிக்கா எழுதியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இஸ்ரேலிய தாக்குதல்களை ஒரு சாக்காகப் பயன்படுத்தி அமெரிக்க நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்று வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

ஒருபுறம், எதிர்காலத்தில் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் துணியக்கூடாது என்று இரான் விரும்புகிறது, மறுபுறம் மத்திய கிழக்கில் புதிய போரைத் தொடங்கவும் இரான் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் இரான் குழப்பத்தில் உள்ளது.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் சர்வதேச உறவுகளின் பேராசிரியர் ஃபவாஸ் கெர்ஜஸ் பிபிசியிடம் பேசுகையில், “இரான் உண்மையில் ஒரு 'காகிதப் புலி' என்பதை உலகிற்கு காட்ட, இஸ்ரேல் ஒரு பதற்றத்தை உருவாக்க விரும்புகிறது” என்று கூறினார்.

"இந்த விஷயத்தில் இரான் பதிலளிக்கவில்லை என்றால், அது ஒரு 'காகிதப் புலி' தான் என்றும், பதிலடி கொடுக்கும் திறன் அதற்கு இல்லை என்ற செய்தியை உலகிற்கு அனுப்பும்," என்று ஒரு பெயர் கூற விரும்பாத அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

 
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சில ஆண்டுகளுக்கு முன்பு இரானின் உயர்மட்ட தளபதி காசிம் சுலேமானி இராக்கில் படுகொலை செய்யப்பட்டார்.

இப்போது இரான் என்ன செய்யும்?

இந்த சூழ்நிலையில், இஸ்ரேலிய தூதரகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு யூத நிறுவனங்களை இரான் தாக்கக் கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸின் மத்திய கிழக்கு நிபுணர் எலியட் ஆப்ராம்ஸ், “இஸ்ரேலுடன் முழு அளவிலான போரை இரான் விரும்பவில்லை. இருப்பினும், இஸ்ரேலின் நலன்கள் தொடர்பான பல்வேறு இடங்களை அது தாக்கக் கூடும்”, என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இரான் தனது அணுசக்தி திட்டத்தை விரைவுபடுத்துவதன் மூலம் பதிலடி கொடுக்க முடியும். யுரேனியத்தை சிறப்பாக செறிவூட்டுவதன் மூலம், அணு குண்டுகளை தயாரிக்க அதை பயன்படுத்த முடியும் அல்லது இரான் அணு ஆயுதங்களை மறுவடிவமைப்பு செய்யத் தொடங்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஆனால் இந்த நடவடிக்கை இரானுக்கு பாதகமாக அமையக்கூடும் என்று பல பார்வையாளர்கள் நம்புகிறார்கள். இரான் இதைச் செய்தால், அமெரிக்காவும் இஸ்ரேலும் அதைத் தாக்க முன்வரும்.

வாஷிங்டனை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான சிஎஸ்ஐஎஸ் அமைப்பின் (Center for Strategic and International Studies) மத்திய கிழக்கு நிபுணர் ஜான் ஆல்டர்மேன், இஸ்ரேலிய தூதரகத்தை தாக்குவது போன்ற நடவடிக்கைகளை இரான் எடுக்காது என்று நம்புகிறார்.

“இஸ்ரேலுக்கு பாடம் கற்பிப்பதில் இரானுக்கு விருப்பமில்லை. அதற்கு பதிலாக, தாங்கள் பலவீனமாக இல்லை என்பதை அதன் நட்பு நாடுகளுக்கு காட்டவே இரான் விரும்புகிறது" என்று ஜான் கூறுகிறார்.

இரான் இனி எந்தப் பாதையில் செல்லும்? இந்த விவகாரம் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் முடிவைப் பொறுத்து தான் அமையும்.

https://www.bbc.com/tamil/articles/c3g7dr79gzjo

கனடா தேர்தலில் இந்திய தலையீடா? - மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு

1 month 1 week ago
08 APR, 2024 | 09:55 AM
image
 

புதுடெல்லி: கனடா தேர்தலில் இந்தியாவின் தலையீடு இருந்ததாக அந்த நாட்டு உளவுத் துறை குற்றம் சாட்டி உள்ளது. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

கடந்த 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் சீனாவின் தலையீடு இருந்தது. இதன் காரணமாகவே தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றிபெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

சீனா தலையீடு: கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது சுமார் 11-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக சீன உளவுத் துறை பெரும் தொகையை செலவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு கனடா பொதுத்தேர்தலின்போது சீன தூதரகங்கள் சார்பில் பெரும் தொகை வாரியிறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்த கனடா அரசு சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த சூழலில் கனடா தேர்தலில் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யாவின் தலையீடும் இருந்ததாக அந்த நாட்டு உளவுத் துறை குற்றம் சாட்டி உள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: கனடா பொதுத்தேர்தல்களில் இந்தியாவின் தலையீடு இருந்ததாக அந்த நாட்டு அரசு குற்றம் சாட்டி உள்ளது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஆகும். எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களிலும் இந்தியா தலையிடுவது கிடையாது. இந்த கொள்கையை நாங்கள் கண்டிப்புடன் பின்பற்றி வருகிறோம்.

உண்மையைச் சொல்வதென்றால் இந்தியாவின் உள்விவகாரங்களில் கனடா தொடர்ந்து தலையிட்டு வருகிறது. இந்தியா மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

கனடா அரசு நியமித்த சிறப்பு ஆணையம் வரும் மே 3-ம் தேதி தனது முதல் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இதில் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் விரிவான அறிக்கையை ஆணையம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/180663

காஸாவில் போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவு: ஹமாஸை அழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?

1 month 1 week ago
போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், மெரிலின் தாமஸ் மற்றும் ஜேக் ஹார்ட்டன்
  • பதவி, பிபிசி வெரிஃபை
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அக்டோபர் 7 அன்று காஸா வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, சுமார் 1200 பேரைக் கொன்றனர், நூற்றுக்கணக்கான மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். இத்தாக்குதல் நடந்து ஆறு மாதங்களாகி விட்டன.

இதற்குப் பதிலடியாக, பணயக் கைதிகளை ஹமாஸ் பிடியிலிருந்து விடுவித்து அவர்களை வீடு திரும்பச் செய்வோம் என்றும் “ஹமாஸை அழித்து ஒழிப்போம்” என்றும் இஸ்ரேல் உறுதியளித்தது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தொடரும் போரில், குறைந்தது 33,000 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் காஸா பகுதியின் பெரும்பகுதி அழிக்கப்பட்டதாகவும், ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் ஆயுதக்குழுவின் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றதுடன், காஸாவில் பூமிக்கடியில் ஹமாஸ் தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தும் பரந்த சுரங்கப்பாதை வலையமைப்பை அழித்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

பிபிசி வெரிஃபை (BBC Verify) இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை ஆய்வு செய்தது. மேலும், இஸ்ரேலின் கூற்றுகளுக்குப் பின்னால் உள்ள ஆதாரங்களை ஆய்வு செய்தது.

 
போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

யாஹ்யா சின்வார் உட்பட பல முக்கிய ஹமாஸ் தலைவர்கள் காஸாவில் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது.

எத்தனை ஹமாஸ் தலைவர்கள் இறந்தார்கள்?

அக்டோபர் 7 ஆம் தேதிக்கு முன்னர், காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுமார் 30 ஆயிரம் பேர் இருந்ததாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் தளபதிகளை மேற்கோள் காட்டி கூறப்பட்டது.

ஹமாஸின் மிகப்பெரிய தலைவர் இஸ்மாயில் ஹனியா உட்பட பல மூத்த அரசியல் பிரமுகர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். ஆனால், அதன் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பலர் காஸாவிற்குள் இருப்பதாக நம்பப்படுகிறது.

போர் தொடங்கியதில் இருந்து சுமார் 13 ஆயிரம் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை கொன்றுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த தரவு எவ்வாறு சேகரிக்கப்பட்டது என்பதை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.

கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஹமாஸ் தலைவர்களின் பெயர்களையும் இஸ்ரேல் வெளியிட்டது.

அக்டோபர் மாதம் முதல் இதுபோன்ற 113 பேரின் பெயர்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் போரின் முதல் மூன்று மாதங்களில் உயிரிழந்தனர். இதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் வரை காஸாவில் எந்த மூத்த ஹமாஸ் தலைவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கவில்லை.

மார்ச் 26 அன்று, ஹமாஸின் ராணுவப் பிரிவின் துணைத் தளபதி மர்வான் இசாவை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.

இஸ்ரேலில் மிகவும் தேடப்படும் நபராகக் கருதப்படும் இசா, இப்போர் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட ஹமாஸின் மூத்தத் தலைவர் ஆவார்.

அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாக அமெரிக்கா கூறியது. ஆனால் ஹமாஸ் இசாவின் மரணத்தை உறுதிப்படுத்தவில்லை.

கொல்லப்பட்ட மூத்த ஹமாஸ் தலைவர்களின் பெயர்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது. ஆனால், இவர்கள் ஹமாஸின் உறுப்பினர்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியாது.

இப்பட்டியலில் ஹமாஸ் குழுவில் அல்லாதவர்கள் சிலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அவர்களுள் ஒருவர் ஒருவர் முஸ்தஃபா துரையா. இவர், தெற்கு காஸாவில் சுயாதீன பத்திரிக்கையாளராக பணிபுரிந்து கொண்டிருந்த போது, ஜனவரி மாதம் அவரது வாகனம் இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளானது.

மேலும், இப்பட்டியலில் சிலரது பெயர்கள் இருமுறை குறிப்பிடப்பட்டிருந்தன. அதனால், அவர்களின் பெயர்களை மொத்த எண்ணிக்கையில் சேர்க்கவில்லை.

காஸாவிற்கு வெளியே உள்ள ஹமாஸின் அரசியல் தலைவரான சலே அல்-அரூரி இந்த ஆண்டு ஜனவரியில் பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றது.

எனினும், யாஹ்யா சின்வார் உட்பட காஸாவில் உள்ள பல முக்கிய ஹமாஸ் தலைவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புவதாக நாங்கள் பேசிய நிபுணர்கள் தெரிவித்தனர்.

“ஹமாஸின் உயர்மட்ட தலைவர்களை இஸ்ரேல் ராணுவத்தால் அடைய முடியவில்லை” என, சர்வதேச நெருக்கடிக் குழுவில் இஸ்ரேல்-பாலத்தீன விவகாரங்கள் குறித்த மூத்த ஆய்வாளர் மைரவ் சோன்ஸ்சீன் கூறினார்.

"ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்து அப்பிரதேசத்தை விடுவிப்பதையும் இஸ்ரேலால் இன்னும் சாதிக்க முடியவில்லை" என்று அவர் கூறுகிறார்.

 
போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?

பட மூலாதாரம்,REUTERS

காஸாவில் எத்தனை பணயக்கைதிகள் எஞ்சியுள்ளனர்?

இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 7 ஆம் தேதி 253 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இவர்களுள், தனித்தனி ஒப்பந்தங்கள் அல்லது கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்களின் கீழ் 109 பேர் விடுவிக்கப்பட்டனர்.

மூன்று பேரை இஸ்ரேல் ராணுவம் நேரடியாக ராணுவ நடவடிக்கை மூலம் காப்பாற்றியது.

பணயக் கைதிகள் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் ஒப்புக்கொண்ட மூவரும் இவர்களில் அடங்குவர்.

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களுள் உயிருடன் உள்ளவர்களில், இளையவரின் வயது 18 என்றும், மூத்தவரின் வயது 85 என்றும் கூறப்படுகிறது.

மீதமுள்ள 130 பணயக்கைதிகளில், இஸ்ரேலின் கூற்றுப்படி, 34 பேர் இறந்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்களால் கொல்லப்பட்ட பணயக்கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக ஹமாஸ் கூறுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியாது.

ஹமாஸால் பிடிக்கப்பட்ட இரண்டு இளம் பணயக்கைதிகள் ஏரியல் மற்றும் ஃபிர். இருவரும் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நேரத்தில், முறையே 4 வயது மற்றும் 9 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது. இருவரும் இப்போது இவ்வுலகில் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் மரணம் உறுதி செய்யப்படவில்லை.

 
போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஹமாஸ் தனது சுரங்கப்பாதை வலையமைப்பு 500 கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளதாக கூறுகிறது, எனினும் இதை உறுதிப்படுத்த முடியாது.

ஹமாஸின் சுரங்கப்பாதை வலையமைப்பு எந்தளவுக்கு அழிக்கப்பட்டது?

ஹமாஸை அழிப்பதாக உறுதியளித்ததோடு, காஸாவில் பூமிக்கடியில் அக்குழுவினரின் மிகப்பெரிய சுரங்கப்பாதை வலையமைப்பையும் அழிப்பதாக இஸ்ரேல் உறுதியளித்தது.

ஹமாஸ் இந்த சுரங்கப்பாதைகள் வழியாக உணவு மற்றும் மக்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது வழக்கம்.

இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ், "காஸா முனையை பொதுமக்களுக்கான ஒரு அடுக்கு என்றும், மற்றொரு அடுக்கு ஹமாஸ் என்றும் நினைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஹமாஸ் உருவாக்கிய அந்த இரண்டாவது அடுக்கை அடைய முயற்சிக்கிறோம்" என கடந்த அக்டோபரில் தெரிவித்தார்.

காஸாவின் சுரங்கப்பாதை வலையமைப்பு சுமார் 500 கிலோமீட்டர் வரை நீண்டுள்ளது என்று ஹமாஸ் முன்னதாக கூறியிருந்தது. இருப்பினும், இந்த தகவலை சுயாதீனமாக சரிபார்க்க வழி இல்லை.

இதுவரை எத்தனை சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டுள்ளன, அவை மொத்த எண்ணிக்கையில் எவ்வளவு என்று இஸ்ரேல் ராணுவத்திடம் கேட்டோம். அதற்கு, "காஸாவில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளை பெருமளவில் அழித்துள்ளதாக" இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

ஹமாஸ் சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை இஸ்ரேல் ராணுவம் பல சந்தர்ப்பங்களில் வெளியிட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, காஸா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் அடியில் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதியின் வீடியோ காட்சிகளை நவம்பரில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது.

இஸ்ரேல் ராணுவத்தின்படி, அது ஹமாஸின் கட்டளை மையமாக பயன்படுத்தப்பட்டது.

இஸ்ரேல் ராணுவம் இதுவரை எத்தனை நீண்ட சுரங்கப்பாதைகளை கண்டறிந்துள்ளது என்பதை அறிய, காஸாவின் சுரங்கப்பாதைகள் தொடர்பாக அக்டோபர் 7, 2023 மற்றும் மார்ச் 26, 2024 வரை அதன் சமூக ஊடக தளங்களிலும், டெலிகிராமிலும் வெளியிடப்பட்ட செய்திகளை பிபிசி சரிபார்த்தது.

இதில், 198 செய்திகளில், சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான தகவல்கள் இருந்தன. மற்றொரு 141 செய்திகள், சுரங்கப்பாதையை அழித்தது அல்லது செயலிழக்கச் செய்தது குறித்துக் கூறுகின்றன.

இந்த செய்திகளில் பெரும்பாலானவை சுரங்கப்பாதைகளின் இருப்பிடம் தொடர்பான துல்லியமான விவரங்களை வழங்கவில்லை. எனவே, இஸ்ரேல் ராணுவம் எத்தனை சுரங்கங்களை கண்டுபிடித்தது அல்லது அழித்தது என்பதை உறுதிப்படுத்த முடியாது.

காஸாவில் பூமிக்கடியில் உள்ள இந்த வலைப்பின்னல் அமைப்பிலான சுரங்கப்பாதை பாதைகளில் வெவ்வேறு அளவுகளில் அறைகள், அத்துடன் சுரங்கப்பாதை மேற்பரப்பை சந்திக்கும் ஒரு புள்ளி உட்பட பல கூறுகளால் ஆனது.

நாங்கள் பகுப்பாய்வு செய்த செய்திகளில், 36 செய்திகள், மொத்தம் 400 சுரங்கவாயிற்குழிகள் மீதான தாக்குதல்களைக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இஸ்ரேலின் ரீச்மேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சுரங்கப்பாதை வழி போர்களில் நிபுணருமான டாக்டர். டாப்னே ரிச்மண்ட், ஒரு சுரங்கவாயிற்குழியை சுரங்கப்பாதையுடன் ஒன்றாக தொடர்புப்படுத்துவது தவறாக வழிநடத்தும் என்று கூறுகிறார்.

இந்த சுரங்கவாயிற்குழிகளை அழித்த பிறகும் சுரங்கப்பாதை வலையமைப்பு அப்படியே உள்ளது என்று அவர் கூறுகிறார். "இந்தப் போரில் சுரங்கப்பாதைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார்.

 
போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

காஸாவில் பெரும்பாலான கட்டடங்கள் அழிக்கப்பட்டன.

பாலத்தீனர்களுக்கு ஏற்பட்ட இழப்பு

காஸாவில் வாழும் பாலத்தீனர்கள் இஸ்ரேலின் போர் நோக்கங்களுக்காக பெரும் விலை கொடுக்க வேண்டியதாயிற்று.

ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 5 அன்று அமைச்சகம் வெளியிட்ட தரவின் படி, கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதைக் காட்டுகிறது.

ஹமாஸ் இலக்குகளை அழிக்க இஸ்ரேலிய படைகளின் முயற்சிகளுக்கு மத்தியில் பலர் இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, காஸாவில் உள்ள 17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

குடியிருப்புப் பகுதிகள் பாழடைந்து, பரபரப்பாக இருந்த சாலைகள் தற்போது ஒன்றும் இல்லாமல் ஆகியுள்ளன.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 7 முதல், காஸாவின் 56 சதவீத கட்டடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றிலும் இடிக்கப்பட்டுள்ளன என்று செயற்கைக்கோள் தரவுகளின் பகுப்பாய்வு காட்டுகிறது.

போர் தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகும், இஸ்ரேல் தனது போர் நோக்கங்களை அடைந்துவிட்டதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c19x999dmlzo

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் படகு விபத்து- 90 பேர் உயிரிழப்பு!

1 month 1 week ago
1712545039-More-than-90-killed-as-boat-s தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் படகு விபத்து- 90 பேர் உயிரிழப்பு!

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொசாம்பிக் கடற்கரையில் இடம்பெற்ற படகு விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

விபத்து ஏற்படும் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிக ஆட்களை அழைத்துச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1376989

Checked
Mon, 05/20/2024 - 22:01
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe