உலக நடப்பு

அவுஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள்!

2 weeks 6 days ago
Over 100 whales die after mass stranding in Australia

அவுஸ்திரேலிய கடற்கரையில் 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில், குறித்த திமிங்கிலங்கள் நேற்று (25) காலை கரை ஒதுங்கியுள்ளன.

இவ்வாறு கரை ஒதுங்கிய திமிங்கிலங்களைக் காப்பாற்றுவதற்கு, கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rescuers hopeful whales returned to sea as spotter plane deployed to Toby  Inlet to monitor after mass beaching | The West Australian

அத்துடன் கரை ஒதுங்கிய 26 திமிங்கிலங்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய திமிங்கிலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Hundreds of whales dead after mass stranding on New Zealand coast | CNN

https://thinakkural.lk/article/300286

மிட்சுகோ டோட்டோரி: ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவரான விமானப் பணிப்பெண் - சராசரி பெண்ணின் சாதனைக் கதை

2 weeks 6 days ago
ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவர் மிட்சுகோ டோட்டோரி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மிட்சுகோ டோட்டோரி கட்டுரை தகவல்
  • எழுதியவர், மரிகோ ஓய்
  • பதவி, வணிகச் செய்தியாளர்
  • 33 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த ஜனவரி மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸின் (JAL) புதிய தலைவராக மிட்சுகோ டோட்டோரி (Mitsuko Tottori) நியமிக்கப்படார். அவரது நியமனம், அந்நாட்டின் பெருநிறுவனத் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஜப்பான் ஏர்லைன்ஸின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டோட்டோரியின் வாழ்க்கைப் பயணம் உத்வேகமானது. ஆரம்பத்தில் ஒரு சிறிய அளவிலான விமான நிறுவனத்தில் கேபின் குழு உறுப்பினராக (விமானப் பணிப்பெண்ணாக) அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

தற்போது ஜப்பான் ஊடகங்கள் டோட்டோரியின் நியமனம் பற்றி வெளியிட்டுள்ள தலைப்புச் செய்திகளில் 'முதல் பெண் தலைவர்' மற்றும் 'முதல் முன்னாள் விமானப் பணிப்பெண்' , 'அசாதாரண நியமனம்' என்று பலவாறு குறிப்பிட்டு வருகின்றனர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மிகச் சிறிய விமான நிறுவனமான ஜப்பான் ஏர் சிஸ்டம் (JAS) என்னும் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக டோட்டோரி பணிபுரிந்தார்.

அதைக் குறிப்பிட்டு, 'இவரெல்லாம் ஒரு விமான நிறுவனத்தின் தலைவரா?' எனும் தொனியில் விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ள ஒரு வலைதளம் அவரை 'ஒரு அந்நிய மூலக்கூறு' என்றும் 'ஒரு விகாரம்' என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.

டோக்கியோவில் இருந்து பிபிசியிடம் உரையாடிய டோட்டோரி, "அந்நிய விவகாரம்’ பற்றியெல்லாம் தனக்குத் தெரியாது," என்று கூறி சிரிக்கிறார்.

 
இவ்வளவு விமர்சனங்கள் ஏன்?
ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவர் மிட்சுகோ டோட்டோரி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டோட்டோரி மிகவும் சாதரணமான பெண்கள் ஜூனியர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் விமான நிறுவனங்கள் வழக்கமாக உயர்மட்ட பதவிகளுக்கு வசதியான மேல்தட்டு பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும். டோட்டோரி இந்த ‘எலைட் (மேல்தட்டு)’ வரையறைக்குள் இல்லை.

இதற்கு முன் ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவர்களாகப் பதவி வகித்த 10 பேரில் ஏழு பேர் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள். ஆனால், டோட்டோரி மிகவும் சாதரணமான பெண்கள் ஜூனியர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்.

ஜப்பானை பொறுத்தவரையில், 1%-க்கும் குறைவான முன்னணி நிறுவனங்களில்தான் பெண்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். டோட்டோரியின் நியமனத்தைத் தொடர்ந்து, ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்த 1% நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

மேலும் பேசிய டோட்டோரி, "நான் என்னை முதல் பெண் தலைவர் என்றோ தலைவரான முதல் விமான பணிப்பெண் என்றோ முன்னிறுத்த விரும்பவில்லை. நான் ஒரு தனிநபராகப் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால் என் மீது இவ்வளவு பேர் இந்த அளவு கவனம் செலுத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை," என்கிறார்.

"மேலும், பெருநிறுவன பிரமுகர்கள் என்னை எப்படி நினைக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், பொதுமக்களும் சக ஊழியர்களும் என்னை அப்படிப் பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்," என்றும் கூறுகிறார்.

 
ஜப்பான் மக்களின் அன்பைப் பெற்ற விமானப் பணிப்பெண்கள்
ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவர் மிட்சுகோ டோட்டோரி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விபத்து

அண்மையில், ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று தரையிறங்கும்போது கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியது. விமானத்தில் இருந்து பயணிகளை வெற்றிகரமாக வெளியேற்றியதற்காக ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானப் பணிப்பெண்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டனர். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு டோட்டோரியின் நியமனம் அறிவிக்கப்பட்டது.

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 516, ஓடுபாதையில் காவல்படை விமானம் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் கடலோர காவல்படை விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களில் ஐந்து பேர் இறந்தனர் மற்றும் கேப்டன் படுகாயமடைந்தார்.

இருப்பினும், விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில், ஏர்பஸ் A350-900 விமானத்தில் இருந்த 379 பேரும் பத்திரமாக உயிர் தப்பினர். விமானப் பணிப்பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட தீவிரமான பயிற்சிதான் இந்த விபத்தில் இருந்து பயணிகள் காப்பாற்றப்படக் காரணம் என மக்கள் பாராட்டினர்.

முன்னாள் விமானப் பணிப்பெண்ணான, டோட்டோரி விமானப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர். ஆரம்பக் காலகட்டத்தில் அவர் பணியில் இணைந்ததும் முதலில் கற்றுக் கொண்டது விமானப் பாதுகாப்பு பற்றித்தான்.

கடந்த 1985ஆம் ஆண்டில், அவர் விமான பணிப்பெண்ணாகப் பணியில் சேர்ந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான வரலாற்றின் மிக மோசமான விமான விபத்தில் சிக்கியது. ஒசுடாகா மலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 520 பேர் உயிரிழந்தனர்.

அந்த நேரத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் பணியாற்றிய ஒவ்வொரு ஊழியருக்கும் ஒசுடாகா மலைக்குச் செல்லவும் அங்கு விபத்து நடந்ததை நேரில் பார்த்த மக்களிடம் பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டது."

"நாங்கள் எங்கள் பாதுகாப்பு மேம்பாட்டு மையத்தில் விபத்துப் பகுதியில் கிடந்த விமானப் பாகங்களையும் காட்சிப்படுத்தினோம், ஒரு பெரிய விபத்தைப் பற்றி ஒரு புத்தகத்தில் படிப்பதற்குப் பதிலாக எங்கள் சொந்தக் கண்களால் பார்த்தோம். விமான விபத்தின் நேரடிக் காட்சிகள், இழப்பு அனைத்தையும் எங்களால் அன்றைய தினத்தில் உணர முடிந்தது," என்று டோட்டோரி கூறினார்.

 
மாறிவரும் ஜப்பான் ஏர்லைன்ஸ்-இன் முகம்
ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவர் மிட்சுகோ டோட்டோரி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த 2010ஆம் ஆண்டு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவாலாகும் நிலைமையில் இருந்தது.

உயர் பதவியில் அவர் நியமனம் செய்யப்பட்டது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், 2010இல் ஜப்பான் ஏர்லைன்ஸ் திவாலானதில் இருந்து அதன் நிலைமை வேகமாக மாறி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய பெருநிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும், அரசாங்கம் கொடுத்த நிதி ஆதரவின் காரணமாக விமான நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டது. ஒரு புதிய செயற்குழு மற்றும் நிர்வாகத்துடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் பெரிய மறுசீரமைப்புக்கு உட்பட்டது.

மேலும், அந்நிறுவனத்தின் அப்போதைய 77 வயதான ஓய்வு பெற்ற அதிகாரியும் புத்த துறவியுமான கசுவோ இனாமோரியின் (Kazuo Inamori) நடவடிக்கைகளால்தான் ஜப்பான் ஏர்லைன்ஸ் புத்தாக்கம் பெற்றது. நிறுவன ஊழியர்கள் அவரை ஒரு மீட்பராகப் பார்த்தனர்.

அவர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். அவரது புரட்சிகரமான நிர்வாகம் இல்லாமல் டோட்டோரி போன்ற ஒருவர் ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவராகி இருக்க வாய்ப்பில்லை.

 
'இது பெண்களுக்கான நம்பிக்கை'
ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவர் மிட்சுகோ டோட்டோரி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜப்பான் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவரான கசுவோ இனாமோரி

கடந்த 2012ஆம் ஆண்டு ஒரு நேர்காணலின் போது இனாமோரியிடம் நான் பேசினேன், மனதில் பட்டதைப் பேசினார். அவர் தன் வார்த்தைகளைத் துளியும் பொருட்படுத்தவில்லை. ஜப்பான் ஏர்லைன்ஸ் `தனது வாடிக்கையாளர்களைப் பற்றிக் கவலைப்படாத ஒரு திமிர்பிடித்த நிறுவனம்` என்று கூறினார்.

இனாமோரியின் தலைமையின் கீழ், நிறுவனம் அதிகாரத்துவ பதவிகளில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், விமானிகள், பொறியாளர்கள் போன்ற முன்னணி நடவடிக்கைகளில் இருக்கும் ஊழியர்களை உயர்த்தியது.

"இந்த நிறுவனம் ஒரு தனியார் நிறுவனம் போன்று உணர்வை ஏற்படுத்தவில்லை. இதனால், நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். முன்னாள் அரசு அதிகாரிகள் பலர் சுலபமான அதிகார பலத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தில் உயர் பதவிகளில் அமர்ந்திருந்தனர்," என்று 2022இல் இனாமோரி என்னிடம் குறிப்பிட்டார்.

அதன்பிறகு ஜப்பான் ஏர்லைன்ஸ் நீண்ட தூரத்தைக் கடந்து வந்திருக்கிறது. தற்போது அதற்கு முதல் பெண் தலைவரும் கிடைத்துவிட்டார்.

நாட்டில் பெண் தலைமை நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டளவில் நிர்ணயித்த இலக்கை அடையத் தவறிய பின்னர், எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் முக்கிய வணிகங்களில் மூன்றில் ஒரு பங்கு தலைமைப் பதவிகள் பெண்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவித்துள்ளது.

"இது கார்ப்பரேட் தலைமை நிர்வாகிகளின் மனநிலையைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு மேலாளராக ஆவதற்கு பெண்களுக்கு நம்பிக்கை இருப்பதும் முக்கியம். யார் என்ன நினைத்தால் நமக்கென்ன?" என்கிறார் டோட்டோரி.

"எனது நியமனம், மற்ற பெண்கள் முன்பு முயற்சி செய்யப் பயந்த விஷயங்களை முயல ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்," என்கிறார் டோட்டோரி நம்பிக்கையுடன்.

https://www.bbc.com/tamil/articles/cq5ner5wr8wo

சுதந்திரப் பலஸ்தீனத்துக்காக அமெரிக்காவில் தீவிரப் போர்!

3 weeks ago

யூத மாணவர்களும் பங்கெடுப்பு அதிரும் அமெரிக்கப் பல்கலைகள்.


சுதந்திரப் பலஸ்தீனம் உருவாக்கப்படவேண்டும். பலஸ்தீனர்களின் வளங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி, அமெரிக்காவில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

பல்லாயிரம் யூத மாணவர்களின் பங்கெடுப்புடன் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் இந்தப் போராட்டங்கள் உலகின் கவனத்தை வெகுவாகவே ஈர்த்துள்ளதுடன், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் அமெரிக்க அதிபர் பைடனின் அரசாங்கத்துக்கு கனதியான அழுத்தத்தை வலியுறுத்தி வருவதாகவும் சொல்லப்படுகின்றது.


அமரிக்காவின் கொலம்பிய பல்கலைக்கழகத்துக்கு முன்பாகவும், நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லொஸ் வெகாஸ் பல்கலைக்கழகங்களுக்கு முன்பாகவும் இடைத்தங்கல் முகாம்களை அமைத்து போராட்டக்காரர்கள் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஸாவில் இஸ்ரேலின் தாக்குதலை தங்களது பல்கலைக்கழகங்கள் கண்டிக்க வேண்டும். இஸ்ரேலுக்கு வழங்கும் தீவிரமான ஆதரவை அமெரிக்கா கைவிடவேண்டும்.

அத்துடன், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழகங்கள் விலகியிருக்கவேண் டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். (ச)

https://newuthayan.com/article/சுதந்திரப்_பலஸ்தீனத்துக்காக_அமெரிக்காவில்_தீவிரப்_போர்!

மாலைதீவுத் தேர்தல்; சீனா விசுவாசி மொய்சு வெற்றி!

3 weeks ago

மாலைதீவு நாடாளுமன்றத் தேர்தலில், சீன ஆதரவாளரான மொய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று வரலாறு படைத்திருக்கின்றது.


மொய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள இந்த இமாலய வெற்றி மாலைதீவுக்குள் மொய்சுவின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதுடன், பிராந்திய இயக்கவியலில் ஒரு முக்கியமான மாற்றத்தை நிகழ்த்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாலைதீவு இந்தியாவின் ஆதிக்கத்திலிருந்து வெளியேறி சீன நிலைப்பாட்டில், பயணிப்பதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர் என்பதை வெளிக்காட்டும் வகையில் இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (ச)

 

https://newuthayan.com/article/மாலைதீவுத்_தேர்தல்;_சீனா_விசுவாசி_மொய்சு_வெற்றி!

அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது - அமெரிக்க அதிகாரிகள் தகவல்

3 weeks ago

அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது - அமெரிக்க அதிகாரிகள் தகவல்

Published By: Rajeeban

25 Apr, 2024 | 10:36 AM
image

அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை ரஸ்ய படையினருக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்ச்சில் அமெரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கிய உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியின் ஒரு பகுதியான இந்த ஏவுகணைகள் இந்த மாதமே உக்ரைனை சென்றடைந்துள்ளன.

இந்த ஏவுகணைகளை ஆகக்குறைந்தது ஒரு தடவையாவது உக்ரைன் பயன்படுத்தியுள்ளது - கிரிமியாவில் நிலை கொண்டுள்ள படையினருக்குஎதிராக பயன்படுத்தியுள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க முன்னர் ஏடிசிஎம்எஸ் ஏவுகணைகளை உக்ரைனிற்கு வழங்கியிருந்தது எனினும் அந்த ஏவுகணையை விட வலுவான ஏவுகணையை வழங்க தயக்கம் கொண்டிருந்தது.

எனினும் உக்ரைனிற்கு நீண்டதூர ஏவுகணைகளை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி இரகசியமாக அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த ஏவுகணைகள் 300 கிலோமீற்றர் செல்லக்கூடியவை.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந்த ஏவுகணைகள் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய முடியும் என இராஜாங்க திணைக்கள அதிகாரியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தனது நடவடிக்கை பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த விடயத்தினை பகிரங்கப்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டதால் அமெரிக்கா  இதனை பகிரங்கப்படுத்தவில்லை.

அமெரிக்கா எத்தனை ஏவுகணைகளை அனுப்பியுள்ளது என்பது தெளிவாகவில்லை எனினும் இந்த ஏவுகணைகள் போர்முனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அமெரிக்காவின்  பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலிவன் தெரிவித்துள்ளார்

அவை மாற்றத்தை ஏற்படுத்தும் ஆனால்  நான் முன்னர் சொன்னதை போல இலகுவான தீர்வுகள் எவையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கிரிமியாவில் உள்ள  விமானதளத்தை தாக்குவதற்கு புதிய ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தியுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவரை  மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/181908

அமெரிக்கா ரூ.5 லட்சம் கோடி ராணுவ உதவி: யுக்ரேன் எத்தகைய ஆயுதங்கள் பெறும்? போரின் போக்கு மாறுமா?

3 weeks 1 day ago
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கிறிஸ் பார்ட்ரிட்ஜ்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

யுக்ரேனுக்கான 61 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான இராணுவ நிதியுதவியை அமெரிக்க அளிக்கவுள்ளது. இதன் மூலம் யுக்ரேன் எந்த மாதிரியான ஆயுதங்களை பெறப் போகிறது? ரஷ்ய ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் யுக்ரேன் முயற்சிக்கு இது எப்படி கைகொடுக்கும்?

வான் பாதுகாப்பு அமைப்புகள், நடுத்தர முதல் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகள் ஆகியவை யுக்ரேனுக்குத் தேவையான மிக முக்கியமான ஆயுதங்கள் ஆகும். இந்த மூன்று ஆயுதங்களையும் வாங்கவே அமெரிக்காவின் நிதியுதவி பயன்படுத்தப்படக் கூடும்.

ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வான் பாதுகாப்பு

வான் வழியாக ரஷ்ய அச்சுறுத்தலைத் தடுப்பது நகரங்களின் பாதுகாப்பிற்கும் ஆற்றல் ஆலைகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்பை பாதுகாக்கவும் இன்றியமையாதது. கடந்த வாரம் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, இந்த ஆண்டு மட்டும் தனது நாடு கிட்டத்தட்ட 1,200 ரஷ்ய ஏவுகணைகள், 1,500 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 8,500 வழிகாட்டி வெடிகுண்டுகள் ஆகியவற்றால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

யுக்ரேனில் பல்வேறு மேற்கத்திய நாடுகள் விநியோகித்த ஆயுத அமைப்புகள் உள்ளன. தோள்பட்டையில் இருந்து ஏவப்படும் ஸ்டிங்கர் குறுகிய தூர ஏவுகணைகள் முதல் மேம்பட்ட மற்றும் மிகவும் விலையுயர்ந்த - பேட்ரியாட் அமைப்பு வரை உள்ளன. குறைந்தது இன்னும் ஏழு பேட்ரியாட் ஆயுத அமைப்புகள் அல்லது அதற்கு இணையான ராணுவ உபகரணங்கள் தேவை என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

ரஷ்யாவின் கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் - மேம்படுத்தப்பட்ட S-300 மற்றும் S-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் - இரானில் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஷாஹெத்-136 ட்ரோன்கள் ஆகியவை பெரியளவில் ஏவப்படுவதால் அவற்றை எதிர்கொள்வது யுக்ரேனுக்கு கடினமானதாக இருக்கிறது.

வான் பாதுகாப்பு அமைப்பை முறியடிப்பதற்கான ஒரு உன்னதமான தந்திரம், அவற்றை ஏமாற்றி திசை திருப்பும் வகையில் இலக்குகளை தாக்குவதாகும். அவற்றின் ரேடார் கண்காணிப்பு அமைப்புகளை ஏமாற்றுவது மற்றும் ஏவுகணை இருப்பை குறைப்பது ஆகியவை ஆகும்.

 
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடுத்தர முதல் நீண்ட தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள்

எப்படியிருப்பினும் களத்தில் நடக்கும் போர் மிக முக்கியமானது.

கடந்த அக்டோபர் முதல், யுக்ரேன் தனது கிழக்குப் பகுதியில் கிட்டத்தட்ட 583 சதுர கிலோமீட்டர் (225 சதுர மைல்) பகுதியை ரஷ்ய படைகளிடம் இழந்துள்ளது. பெரும்பாலும் பீரங்கிகளின் பற்றாக்குறை காரணமாக இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஒரு மொபைல் தளத்திலிருந்து வழிகாட்டப்பட்ட ஆயுதங்களை வழங்குவதன் மூலம், ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ராக்கெட் சிஸ்டம்ஸ் (HIMARS) யுக்ரேன் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம், இலக்கை அடைந்து, ரஷ்யப் படைகளின் லாஞ்சரைக் கண்டுபிடித்து அழிக்க முடியும்.

எனவே யுக்ரேனில், மேற்கத்திய தயாரிப்பான HIMARSஅமைப்பின் அதிக செயல்திறனை எதிர்பார்க்கலாம். மேலும் அதிக டாங்கிகள் மற்றும் நடுத்தர ஆயுத தளவாடங்களின் திறனையும் எதிர்பார்க்கலாம்.

அமெரிக்க இராணுவ தந்திரோபாய ஏவுகணை அமைப்புகளின் (ATACMS) நீண்ட தூரம் தாக்கக் கூடிய அமைப்புகளும் யுக்ரேன் வந்தடைய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. பழைய ATACMS இராணுவ ஆயுத அமைப்புகள் கடந்த ஆண்டின் பிற்பகுதி முதலே யுக்ரேனிடனம் உள்ளன. ஆனால் தற்போது கட்டமைக்கப்பட்டுள்ள மேமப்டுத்தப்பட்ட ஆயுதங்கள் 300கிமீ (186 மைல்கள்) வரை தாக்குதல் நடத்தும் திறனுடையது.

இது ரஷ்யாவின் ஒரு பெரிய கடற்படை தளமாக இருக்கும் கிரைமியா வரையிலும் தாக்கக் கூடியது.

 
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பீரங்கி குண்டுகள்

மேலும் இரண்டு ஆயுதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. M777 ஹோவிட்சர்களுக்கு 155மிமீ பீரங்கி குண்டுகளை தொடர்ந்து உட்செலுத்த வேண்டும். பிப்ரவரி 2022 முதல், அமெரிக்கா இதுபோன்ற 20,00,000 குண்டுகளை யுக்ரேனுக்கு அனுப்பியுள்ளது. மேலும் இந்த சமீபத்திய இராணுவ உதவித் தொகுப்பில் இன்னும் பல எண்ணற்ற குண்டுகள் அனுப்பப்படும்.

"மிகவும் வலுவான தளவாட நெட்வொர்க்" என்று அழைப்பதற்கு ஏற்ப அமெரிக்கா ஆயுதங்களை விரைவாக வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. "நாங்கள் கடந்த காலத்தில் செய்தது போல், சில நாட்களுக்குள் இந்த இராணுவ உதவித் தொகுப்பை வழங்க முடியும்," என்று பென்டகன் செய்தி செயலாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் கூறினார்.

இராணுவ உபகரணங்கள் அனைத்தும் யுக்ரேனுக்கு மிக அருகில் நகர்த்தப்பட்டிருக்கலாம். அவை ஒப்படைக்கப்பட்ட உடன் அதிகாரப்பூர்வமாக யுக்ரேனின் சொத்தாக மாறும். ஆனால் ரஷ்யப் படைகள் கிழக்கில் தங்கள் தாக்குதலைத் தொடர்வதால், முன்னணி ராணுவ படைகளுக்கு தேவையான பீரங்கி உபகரணங்கள் வந்தடைய பல நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம்.

 
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

F-16 போர் விமானங்கள்

இந்த போர் விமானங்கள் தற்போதைய இராணுவ உதவி தொகுப்பில் இல்லை எனினும், முந்தைய இராணுவ தொகுப்பில் இருந்து அவை விரைவில் சேவைக்கு வரவுள்ளது. யுக்ரேனிய விமானிகள் மற்றும் பணியாளர்கள் தற்போது ருமேனியாவில் F-16 ஜெட் விமானங்களை இயக்கும் பயிற்சியைத் தொடர்கின்றனர்.

இந்த விமானங்கள் பல்வேறு செயல்பாட்டை மேற்கொள்ளக் கூடியது. வலுவான வான்வழி தாக்குதல், வானிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கும் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளது. யுக்ரேனிய வான் பாதுகாப்பை இவை வலுப்படுத்தும். டென்மார்க், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா சில மாதங்களில் யுக்ரேனுக்கு டஜன்கணக்கான "வைப்பர்களை" வழங்க உள்ளன.

இந்த போர் விமானங்கள்,போர்க் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது, ஆனால் யுக்ரேனிய தலைநகரான கீவுக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அம்சமாக இருக்கும். F-16 ரக போர் விமானங்களால் போர்க்களத்தில் எந்தவொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது, அவற்றை ரஷ்யப் படைகள் சுட்டு வீழ்த்தும் என்று ரஷ்யா கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cjr7eq1q8yno

கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கனேடிய பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர்

3 weeks 1 day ago

சித்திரவதை குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை (Deshabandu Tennakoon) சந்தித்ததற்காக கனேடிய (Canada) பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றின் செய்தியின்படி, இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பீல் பிராந்திய பொலிஸ் தலைவர் நிஷான் துரையப்பா (Nishan Duraiappah), டிசம்பர் 29, 2023இல் தலைநகர் கொழும்பில் (Colombo) உள்ள பொலிஸ் தலைமையகத்தில் இலங்கையின் மூத்த அதிகாரிகளுடன் சீருடையுடன் இருந்ததை காட்டியுள்ளது.

புகைப்படங்களில் இருந்த சட்ட அமுலாக்க அதிகாரிகளில் ஒருவரான இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு, ஒரு நபரை "இரக்கமின்றி" தாக்கியதற்காக, இலங்கை நீதிமன்றம் ஏற்கனவே இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கோரிக்கை நிராகரிப்பு 

2023ஆம் ஆண்டு டிசம்பர் 14இல், திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை தென்னக்கோன் கைது செய்து கொடூரமாக தாக்கியுள்ளார் என்று இலங்கையின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கனேடிய பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர் | Canadian Peel Regional Police Chief Criticism

கனடாவின் பொலிஸ் அதிபர் ஒருவர், இலங்கையில் பல முறைகேடுகளுக்கு காரணமான அதே நிறுவனத்திடம் இருந்து மரியாதையை பெறுவதைப் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று மருத்துவர் துசியன் நந்தகுமார் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், சர்வதேச ஊடகமொன்றின் நேர்காணலுக்கான கோரிக்கையை துரையப்பா நிராகரித்துள்ளார். எனினும், பீல் பிராந்திய பொலிஸ் பேச்சாளர், துரையப்பாவின் இலங்கை பயணத்தை "தனிப்பட்டது என்றும் பீல் பிராந்திய பொலிஸ் துறைக்கும் இலங்கையில் உள்ள எந்தவொரு அமைப்புக்கும் இடையில் ஒத்துழைப்பும் இல்லை” என்று கூறியுள்ளார்

இருப்பினும், துரையப்பா தனது பீல் பொலிஸ் சீருடையை அணிந்து பலமுறை புகைப்படங்களில் காட்சியளித்துள்ளார்.

கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கனடாவின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான ரதிகா சிற்சபேசன், ஒருவர் சீருடை அணிந்தால், "நீங்கள் தலைவராக உள்ள அமைப்பை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்" என்றே அர்த்தம் என்று கூறியுள்ளார்.

கூடுதல் சந்திப்புகள்

 

இது, ஒரு கனேடியனாக, பீல் பகுதியில் வளர்ந்தவள் என்ற முறையில் தனக்கும், பீலில் தொடர்ந்து வாழும் தமிழர்களாக அடையாளம் காணும் அனைத்து மக்களுக்கும் மிகவும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது என்பதே தமது கருத்து" என்று சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.

துரையப்பா தனது குடும்ப விடுமுறைக்காக அவர் பிறந்த நாட்டிற்குச் சென்றிருந்தபோது, இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக பீல் பேச்சாளர் தெரிவித்துள்ளார். துரையப்பா தென்னகோனை நேரடியாகச் சந்தித்தாரா என்று கேட்டபோது, பேச்சாளர் அதனை உறுதிப்படுத்தவில்லை. அவர்கள் ஒன்றாக நிற்பதையும் விருந்தினர் புத்தகத்தில் கையொப்பமிடும்போது துரையப்பாவின் பின்னால் தென்னக்கோன் நிற்பதையும் புகைப்படம் காட்டுகிறது.

கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கனேடிய பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர் | Canadian Peel Regional Police Chief Criticism

புகைப்படம் எடுக்கப்பட்ட நிகழ்வு ஒரே கூட்டமா அல்லது துரையப்பாவும் தென்னகோனும் ஒன்றாக புகைப்படம் எடுக்கப்பட்ட தருணத்திற்கு வெளியே சந்தித்தார்களா என்பது உட்பட ஏதேனும் கூடுதல் சந்திப்புகள் நடைபெற்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதற்கிடையில், அண்மைய தீர்ப்பு உட்பட தென்னகோன் பற்றிய தகவல்களை முன்கூட்டியே துரையப்பாவுக்கு, வழங்கியதாக கனேடிய பொலிஸ் தெரிவித்துள்ளது.

கனேடிய அரசாங்கம் இந்த விஜயத்தை ஏற்பாடு செய்யவில்லை, இது தனிப்பட்ட விஜயமாக கருதப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பீல் பிராந்திய பொலிஸாருடன், ரோயல் கனேடிய பொலிஸின் நெருங்கிய பணி உறவைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்கான அதன் இணைப்பு அதிகாரி துரையப்பாவுக்கு இலங்கையில் உள்ள பொலிஸ் அமைப்புகளை சந்திக்கும் ஏற்பாடுகளை வழங்க முன்வந்துள்ளார் என்று ரோயல் கனேடிய பொலிஸ் பேச்சாளர் ஊடகத்தின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

https://tamilwin.com/article/canadian-peel-regional-police-chief-criticism-1713930656?itm_source=parsely-api

ஜெர்மனியில் சீனாவுக்கு உளவு பார்த்த 3 பேர் கைது

3 weeks 1 day ago
ஜெர்மனியில் சீனாவுக்கு உளவு பார்த்த 3 பேர் கைது

2100083-spy-300x180.webpஜெர்மனியின் டஸ்ஸல்டோர்ப் நகரில் வசித்து வந்த தம்பதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். பின்னர் ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் அவர்கள் போர்க்கப்பல்களின் எந்திரங்கள் தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்தனர்.

இதற்கிடையே சீன பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒருவருடன் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனி ராணுவ தொழில்நுட்பங்களை அவருக்கு அறிவித்தனர்.இதனையடுத்து சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக 2 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் தற்போது சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியில் சீனாவுக்கு உளவு பார்த்த 3 பேர் கைது – குறியீடு (kuriyeedu.com)

ஆப்கானிஸ்த்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியபோது நடந்த படுகொலைகளில் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்க வீரர்களால் நடத்தப்பட்டவை

3 weeks 1 day ago

ஆப்கானிஸ்த்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியபோது நடந்த படுகொலைகளில் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்க வீரர்களால் நடத்தப்பட்டவை

 

2021 ஆம் ஆண்டு ஆவணியில் அமெரிக்கப்படை அவசர அவசரமாக ஆப்கானிஸ்த்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த பொழுது, அவர்களுடன் பணியாற்றிய ஆப்கானியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் அமெரிக்கப் படைகளுடன் விமானம் ஏறித் தப்பித்துக்கொள்ள காபூல் விமான நிலையத்தைச் சுற்றி முற்றுகையிட்டு நின்றனர். 

இந்தச் சனக்கூட்டத்தை அவதானித்த ஐஸிஸ் பயங்கரவாதிகள், மக்கள் கூட்டத்திற்கு நடுவே தற்கொலைத் தாக்குதல் ஒன்றினை நடத்த பலர் கொல்லப்பட்டார்கள். இவர்களுள் 13 அமெரிக்கத் துருப்பினரும், 170 ஆப்கானியர்களும் அடங்கும். இத்தாக்குதல் குறித்த ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்திய இரு இராணுவ வல்லுனர்கள் கொல்லப்பட்ட அனைவரும் குண்டுத்தாக்குதலில் நேரடியாகவும், குண்டுச்சிதரல்களால் பின்னரும் கொல்லப்பட்டனர் என்றும், அமெரிக்கத் துருப்பினரின் துப்பாக்கித் தாக்குதலிலோ அல்லது இங்கிலாந்துத் துருப்பினரின் தாக்குதலிலோ கொல்லப்படவில்லை என்றும் விசாரணைகளை நிறைவுசெய்திருந்தனர்.

ஆனால், கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த ஆப்கானியர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், பலரின் உடல்களில் துப்பாக்கிச் சன்னங்களைத் தாம்   பார்த்ததாகக் கூறியிருந்தனர். இதனையும் மறுத்த அமெரிக்க அரசாங்கம், துருப்பினர் வான் நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை மட்டுமே சுட்டதாகவும் மக்களை நோக்கியல்ல என்றும் கூறியிருந்தது.

ஆனால், தற்போது கிடைத்திருக்கும் சாட்சியங்களின்படி, கொல்லப்பட்டவர்களில் அரைவாசிப் பேருக்கும் மேலானவர்கள் அமெரிக்கத் துருப்பினரின் நேரடித் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருப்பது தெரியவருகிறது. தாக்குதல் நடந்தவேளை தனது GO PRO கமெராவில் குறைந்தது 5 நிமிடங்களுக்கு மேலாக அங்கு நடந்தவற்றை ஒரு அமெரிக்க வீரர் படமாக்கியிருக்கிறார். அத்துடன் இன்னும் இரு வீரர்கள் அமெரிக்கத் துருப்புக்கள் மக்கள் மீது சுட்டதைத் தாம் கண்டதாகக் கூறுகிறார்கள். இவர்களை விடவும் காயமடைந்தவர்களையும் கொல்லப்பட்டவர்களையும் பரிசோதித்த மருத்துவர்கள் மீண்டும் ஒருமுறை இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். 

இதுகுறித்த மேலதிக விபரங்களும், அந்த ஐந்து நிமிட நேர ஒளிப்படமும் சி என் என் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

https://edition.cnn.com/2024/04/24/world/new-evidence-challenges-pentagon-account-kabul-airport-attack-intl/index.html

 

 

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்

3 weeks 1 day ago

Published By: RAJEEBAN   24 APR, 2024 | 11:01 AM

image
 

அமெரிக்காவின் பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கொலம்பிய பல்கலைகழகம் வகுப்பறை கற்றல் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது. நியுயோர்க் பல்கலைகழகத்திலும் யால் பல்கலைகழகத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

america_students_pro44.jpg

இதேவேளை அமெரிக்காவின் பல பல்கலைகழகங்கள் ஹமாசிற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்தினால் உருவாகியுள்ள பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

கொலம்பிய பல்கலைகழகத்தின் வெளியே முகாமிட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டனர்.

அதேவேளை ஏனைய பல்கலைகழகங்களில் கொலம்பிய பல்கலைகழகத்தில் ஏற்பட்ட நிலை உருவாகியுள்ளது.

நியுயோர்க் பல்கலைகழகத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்  பல்கலைகழத்திற்கு வெளியே முகாமிட்டுள்ளனர்.

america_students_pro1.jpg

முதலில் அவர்களை வெளியேற சொன்னோம்  எனினும் நிலைமை குழப்பகரமானதாக மாறிய பின்னர் பொலிஸாரை அழைத்தோம் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மிரட்டும் கோசங்கள் மற்றும் யூத எதிர்ப்பு கோசங்களை கேட்க முடிந்ததாக  பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் வளாகத்திற்குள் மாணவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸாருக்கு பல்கலைகழகம் அனுமதிப்பது கடும் கண்டணத்திற்குரியது என நியுயோர்க் பல்கலைகழக சட்டககல்லூரி மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

america_students_pro.jpg

ஆர்ப்பாட்டங்கள்காரணமாக மாணவர்கள் மத்தியிலான பதற்றமும் அதிகரித்து காணப்படுகின்றது.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை தங்களது பல்கலைகழகங்கள் கண்டிக்கவேண்டும் இஸ்ரேலிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் இருந்து விலகியிருக்கவேண்டும் என பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

இதேவேளை இஸ்ரேலிற்கு எதிரான விமர்சனங்கள் அனேகமாக யூதஎதிர்ப்பை அடிப்படையாக கொண்டவையாக காணப்படுகின்றன என தெரிவித்துள்ள இஸ்ரேலிய மாணவர்கள் தாங்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வதுடன் ஹமாஸ் இன்னமும் பணயக்கைதிகளை விடுதலை செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொலம்பிய பல்கலைகழகத்திலும் பதற்ற நிலை அதிகமாக காணப்படுகின்றது.

 

america_students_pro_3.jpg

https://www.virakesari.lk/article/181819

போரில் 5 இலட்சம் இராணுவ வீரர்களைப் பறிகொடுத்த உக்ரேன்

3 weeks 1 day ago
Ukraine-Army-750x375.webp போரில் 5 இலட்சம் இராணுவ வீரர்களைப் பறிகொடுத்த உக்ரேன்.

ரஷ்யா உடனான போரில் உக்ரேன் இதுவரை 5 இலட்சம் இராணுவ வீரர்களை பறிகொடுத்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்யாவின் இராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு கருத்துத் தெரிவிக்கையில் ”போர் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை உக்ரேன் இராணுவமானது சுமார் 5 லட்சம் இராணுவ வீரர்களை இழந்துள்ளன.

அத்துடன் உக்ரேன் இராணுவத்தின் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரோன்கள், 1,000 ஏவுகணைகள், சுமார் 900 விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களை ரஷ்யா அழித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1379493

நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு பிரித்தானிய நாடாளுமன்றம் அங்கீகாரம்!

3 weeks 1 day ago
02-8-750x375.jpg நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு பிரித்தானிய நாடாளுமன்றம் அங்கீகாரம்!

பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவாண்டா நாட்டுக்கு அனுப்புவது குறித்தான, ருவாண்டா நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

இதன்மூலம், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள், இன்னும் 10 முதல் 12 வாரங்களுக்குள் விமானம் மூலம் ருவாண்டா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்கள்.

இதனை செயற்படுத்துவதற்காக பிரித்தானிய அரசாங்கம், வாடகை விமானங்களை ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இவ்வாறு சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை அனுப்பி வைக்க தடுப்புக்காவல் இடத்தை அதிகரித்துள்ளதுடன், வழக்கறிஞர்களையும் பணிக்கமர்த்தியுள்ளது.

குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவாண்டா நாட்டிற்கு அனுப்புவது தொடர்பாக ருவாண்டா நாடு கடத்தல் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சட்டமூலம் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் இருந்தது.

இந்நிலையில்தான் இன்று செவ்வாய்க்கிழமை, இந்த சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

பல்வேறு நாடுகளிலிருந்து சிறிய படகுகள் பிரித்தானியாவுக்குள் நுழையும் நபர்கள், அங்கு அகதிகளாக வசிக்க உரிமை கோரலாம்.

இதனால் பல்வேறு நாடுகளிலிருந்தும் பிரித்தானியாவுக்கள் வருபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

2021ஆம் ஆண்டுக்கு முன்னதாக 4 ஆண்டுகளில் மட்டும் 299 பேர் மாத்திரம் பிரித்தானியாவுக்கு சென்றுள்ள நிலையில், 2022ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 45,774 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், இதனை கட்டுப்படுத்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உரிய சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் ரிஷி சுனக் இந்த விடயத்தில் உறுதியாக இருந்தார்.

இதனிடையே, பணம் பெற்றுக் கொண்டு மக்களை சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் கும்பலைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளையும் பிரித்தானிய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

மேலும் இங்கிலாந்துக்கு வரும் அல்பேனிய நாட்டினரை அவர்களுடைய நாட்டிற்கே திருப்பி அனுப்புவதற்கும் லண்டன் அந்த நாட்டுடன் ஒப்பந்தம் போட்டது.

https://athavannews.com/2024/1379480

இஸ்ரேலின் யூத பழமைவாத ராணுவப் பிரிவு மீது தடை விதிக்க அமெரிக்கா திட்டம் - காஸாவில் என்ன நடந்தது?

3 weeks 2 days ago
இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அல்ஹரேத் அல்ஹாப்ஷ்னேஹ்
  • பதவி, பிபிசி அரபு சேவை
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரேலிய ராணுவத்தில் உள்ள யூத பழமைவாத படைப் பிரிவான நெட்ஸா யெஹூதா (Netzah Yehuda) என்ற படைப்பிரிவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கத் திட்டமிடுவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதற்கு இஸ்ரேலிய அரசியல்வாதிகள் கோபமாக எதிர்வினையாற்றியுள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏக்சியோஸ் (Axios) செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவு அமலுக்கு வந்தால், ஓர் இஸ்ரேலிய ராணுவப் பிரிவின் மீது அமெரிக்க அரசு தடை விதிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.

இதுகுறித்து பதிலளித்த இஸ்ரேல் ராணுவம், நெட்ஸா யெஹூதா படை மீது ‘அமெரிக்கத் தடைகள் பற்றி எதுவும் தெரியாது’ என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) கூறியது. மேலும், அந்தப் படை ‘சர்வதேசச் சட்டத்தின் கொள்கைகளின்படி செயல்படும் ஒரு போர்ப் பிரிவு’ என்றும் கூறியது.

"இது தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அது மறுபரிசீலனை செய்யப்படும்," என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியிருக்கிறது. மேலும், “எந்தவொரு அசாதாரணமான சம்பவம் நடந்திருந்தாலும் அதை நடைமுறை அளவிலும், சட்டத்தின் படியும் விசாரிக்கத் தொடர்ந்து பணியாற்றும்," என்றும் கூறியது.

நெட்ஸா யெஹுதா மீது அமெரிக்கா தடை விதித்தால், அந்தப் பிரிவுக்கு அமெரிக்க ராணுவ உதவி அல்லது பயிற்சிகள் கிடைக்காது என அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாலத்தீனயர்களுக்கு எதிராக இந்தப் படைப்பிரிவு நடத்திய தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளின் முடிவுகளை அமெரிக்கா இஸ்ரேலிடம் பலமுறை கோரியதாக, இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய பொது ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல், பாலத்தீனம், யூதர்கள், நெட்ஸா யெஹூதா, மனித உரிமை மீறல், அமெரிக்கா, போர்

பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேலில் பழமைவாத யூதக் குழுவினாரன ‘ஹரேடி யூத’ சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் கட்டாய ராணுவச் சேவையில் சேர மறுக்கிறார்கள்
இஸ்ரேலின் காட்டமான எதிர்வினை

அமெரிக்கத் தடைகள் குறித்த இந்தச் செய்தியறிக்கைகளுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோபமாக எதிர்வினை ஆற்றியிருக்கிறார்.

இந்தத் தடைகள் அமலுக்கு வந்தால், அவை ‘அபத்தத்தின் உச்சமாகவும், தார்மீக வீழ்ச்சியாகவும்’ இருக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

இஸ்ரேல் அரசின் போர்க்குழு அமைச்சர் பென்னி காண்ட்ஸ், இந்த இஸ்ரேலிய ராணுவப் பிரிவின் மீது அமெரிக்கா தடைகளை விதிப்பது ஒரு ‘ஆபத்தான முன்னுதாரணம்’ என்று கூறினார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடனான ஒரு தொலைபேசி உரையாடலில், அமெரிக்கா இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

நெட்ஸா யெஹூதா படையின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது, நடந்துவரும் போரின் போது ‘இஸ்ரேலின் சட்டபூர்வமான நிலைப்பாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும்’ என்று காண்ட்ஸ் கூறினார்.

“ராணுவப் படைப் பிரிவுகள் சர்வதேச சட்டத்தின் உத்தரவுகளுக்கு உட்பட்டவை என்பதால் அவற்றின் மேல் தடைகளை விதிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை," என்று அவர் கூறினார்.

அமெரிக்கா பரிசீலித்துவரும் தடைகளுக்கு எதிர்வினையாற்றிய இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர், இஸ்ரேல் மூலம் பாலத்தீன அதிகார அமைப்புக்கு வழங்கப்பட்ட அனைத்து நிதியையும் பறிமுதல் செய்ய அழைப்பு விடுத்தார்.

பாலத்தீன வங்கிகளுக்கு எதிராகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு அவர் இஸ்ரேலிய பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.

 
இஸ்ரேல், பாலத்தீனம், யூதர்கள், நெட்ஸா யெஹூதா, மனித உரிமை மீறல், அமெரிக்கா, போர்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,இந்தத் தடைகள் அமலுக்கு வந்தால், அவை ‘அபத்தத்தின் உச்சமாகவும், தார்மீக வீழ்ச்சியாகவும்’ இருக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்
எதிர்ப்புக் குரல்கள்

நெட்ஸா யெஹூதா படைப்பிரிவுக்கு எதிரான எந்தவொரு தடையும் "பாலத்தீன அதிகாரத்தில் இருக்கும் இஸ்ரேலின் எதிரிகளை ஆதரிப்பதாக" இருக்கும் என்று பென்-க்விர் கூறினார்.

இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சர் காடி ஐசென்கோட், நெட்ஸா யெஹூதா படைப்பிரிவின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது ‘அடிப்படையில் தவறானது’ என்று கூறினார்.

இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், இந்த நடவடிக்கை ‘பைத்தியக்காரத்தனமானது மற்றும் பாலத்தீன அரசை உருவாக்கும் முடிவை இஸ்ரேல் மீது திணிக்கும் முயற்சி’ என்று விவரித்தார்.

இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் யேர் லாபிட், "இஸ்ரேலிய அரசாங்கத்தின் சட்டவிரோத கொள்கை மற்றும் அரசியல் தோல்வியால் முதலில் பாதிக்கப்படுவது இஸ்ரேலிய ராணுவமும் அதன் தலைவர்களும்தான்," என்றார். ஆனாலும் அவர் நெட்ஸா யெஹூதா படைப்பிரிவின் மீதான பொருளாதாரத் தடைகள் ‘தவறானவை, தடுக்கப்படவேண்டியவை’ என்றார்

ஆனால் இவை அனைத்திற்கும் எதிரான கருத்தைத் தெரிவித்த இஸ்ரேலிய தொழிலாளர் கட்சியின் தலைவரான மெராவ் மைகெலி, நெட்ஸா யெஹூதா படைப்பிரிவை கலைக்க அழைப்பு விடுத்தார். இப்படையின் ‘மூர்க்கத்தனமான, ஊழல் மலிந்த’ செயல்பாடுகள் ‘பல வருடங்களாக அனைவருக்குக் தெரிந்ததே’ என்றார்.

 
இஸ்ரேல், பாலத்தீனம், யூதர்கள், நெட்ஸா யெஹூதா, மனித உரிமை மீறல், அமெரிக்கா, போர்

பட மூலாதாரம்,NAHAL HAREDI

இஸ்ரேல், பாலத்தீனம், யூதர்கள், நெட்ஸா யெஹூதா, மனித உரிமை மீறல், அமெரிக்கா, போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆயிரக்கணக்கான ஹரேடி வீரர்களைக் கொண்ட நெட்ஸா யெஹூதா படைப்பிரிவு உருவாக்கப்பட்டது
‘நெட்ஸா யெஹூதா’ படைப்பிரிவில் இருப்பது யார்?

இஸ்ரேலில் ராணுவ சேவை கட்டாயமாகும். ஆண்கள் சுமார் மூன்று ஆண்டுகளும், பெண்கள் இரண்டு ஆண்டுகளும் கட்டாய ராணுவச் சேவை செய்யவேண்டும்.

ஆனால், யூத மத நம்பிக்கையில் வேரூன்றிய பழமைவாத யூதக் குழுவினாரன ‘ஹரேடி யூத’ சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் கட்டாய ராணுவச் சேவையில் சேர மறுக்கிறார்கள்.

ஏனெனில், அவர்கள் தோரா (ஹீப்ரு யூத பைபிளின் முதல் ஐந்து புத்தகங்கள்) மற்றும் மத புத்தகங்களின் விளக்கங்களை கற்றுக்கொள்வதில் தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள், என்று தலைமை ராபி (யூத மதகுரு) யிட்சாக் யோசெப் கூறுகிறார்.

இருப்பினும், அனைத்து இளம் ஹரேடி யூதர்களும் மதக் கல்லூரியில் சேருவதில்லை. சிலர் தங்கள் மதக்கல்வி பாதிக்காததை உறுதி செய்துகொண்டு, சிறப்பு நிபந்தனைகளோடு ராணுவத்தில் சேர்கிறார்கள்.

கடந்த 1999-ஆம் ஆண்டு, ‘நஹால் ஹரேடி’ என்ற லாப நோக்கற்ற அமைப்பு செயல்படத் துவங்கியது. இதில் ஹரேடி யூத மதகுருக்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இஸ்ரேலிய ராணுவத்துடன் இணைந்து மதப்பள்ளிகளில் படிக்காத இளம் ஹரேடிகளுக்கு அவ்வமைப்பில் இடமளித்தனர்.

இந்த ஒத்துழைப்பின் விளைவாக ஆயிரக்கணக்கான ஹரேடி வீரர்களைக் கொண்ட நெட்ஸா யெஹூதா படைப்பிரிவு உருவாக்கப்பட்டது.

நஹால் ஹரேடி அமைப்பு, ‘ஹரேடி ஆண்கள் தங்கள் ஹரேடி வாழ்க்கை முறையை சமரசம் செய்துகொள்ளாமல் இஸ்ரேலிய ராணுவத்தில் மதிப்புமிக்க பதவிகளில் பணியாற்ற உதவும் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறது,’ என்று கூறுகிறது.

ஆனால், கடந்த சில மாதங்களில், ஹரேடி யூதர்களுக்கு கட்டாய ராணுவத்தில் சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது மற்ற இஸ்ரேலிய பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
இஸ்ரேல், பாலத்தீனம், யூதர்கள், நெட்ஸா யெஹூதா, மனித உரிமை மீறல், அமெரிக்கா, போர்

பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES

படக்குறிப்பு,நெட்ஸா யெஹூதா துருப்புக்கள் 2007-இல் யூத பாலைவனத்தில் உள்ள பழங்கால மலைக் கோட்டையான மசாடாவில் பிரார்த்தனை செய்கின்றனர்
நெட்ஸா யெஹூதா தோன்றிய வரலாறு

கடந்த 1999-ஆம் ஆண்டு, 30 ஹரேடி வீரர்களைக் கொண்ட முதல் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஹரேடிகளை ராணுவத்தில் அறிமுகப்படுத்தும் யோசனையை முன்வைத்த பொதுமக்கள் அமைப்பின் பெயரால் இப்படை ‘நஹல் ஹரேடி’, ‘நெட்சா யெஹுதா’ அல்லது ‘பட்டாலியன் 97’ என்று பெயரிடப்பட்டது.

இஸ்ரேலிய ராணுவம் முதல் ஹரேடி போர் படைப்பிரிவினை உருவாக்கி, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலத்தீனப் பகுதியான மேற்குக் கரையில் இருக்கும் ரமல்லா மற்றும் ஜெனின் ஆகிய நகரங்களில் செயல்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டில், ஹீப்ரு செய்தித்தாளான ‘யெடியோத் அஹ்ரோனோத்’, இஸ்ரேலிய ராணுவம் நெட்ஸா யெஹூதா படைப்பிரிவினை ரமல்லாவிலிருந்து ஜெனினுக்கு மாற்ற முடிவு செய்ததாகத் தெரிவித்தது.

இந்த மாற்றம் ‘தொடர் தோல்விகள்’ அமல்படுத்தப்பட்டது என்று அச்செய்தித்தாள் தெரிவித்தபிறகு, ஒரு இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர், அம்மாற்றம் ‘செயல்பாட்டுக் காரணங்களுக்காக’ செய்யப்பட்டது என்று கூறினார்.

 
இஸ்ரேல், பாலத்தீனம், யூதர்கள், நெட்ஸா யெஹூதா, மனித உரிமை மீறல், அமெரிக்கா, போர்

பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES

படக்குறிப்பு,தற்போது, நெட்சா யெஹூதா படைப்பிரிவில் சுமார் 1,000 வீரர்கள் உள்ளனர். இவர்கள் பயிற்சியிலோ அல்லது போர்ப் பணியிலோ உள்ளனர்
நெட்ஸா யெஹூதா படையில் எத்தனை வீரர்கள் உள்ளனர்?

கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்குக் கரையில் இருந்த நெட்ஸா யெஹூதா படைப்பிரிவினை இஸ்ரேல் பட்டாலியனை இடம் மாற்றியது. ஆனாலும் இந்த மாற்றம் அப்படை வீரர்களின் நடத்தை காரணமாக இந்த மாற்றம் செய்யப்படவில்லை என்று இஸ்ரேலிய ராணுவம் கூறிவருகிறது.

அதிலிருந்து இப்படை இஸ்ரேலின் வடக்கில் இயங்கி வருகிறது.

இந்த ஆண்டின் துவக்கத்தில், ஜெருசலேம் போஸ்ட் செய்தித்தாளின் ஓர் அறிக்கையின்படி, காஸாவில் நடக்கும் போரில் இந்தப் படைப்பிரிவு சண்டையிடத் தொடங்கியது.

லெபனான், சிரியா மற்றும் காஸாவில் நெட்சா யெஹூதா படையினரை உள்ளடக்கிய ‘க்ஃபிர்’ (Kfir) படை சண்டையிடும் என்று இஸ்ரேலின் முன்னாள் ராணுவத் தளபதி அவிவ் கொச்சாவி கூறினார்.

தற்போது, நெட்சா யெஹூதா படைப்பிரிவில் சுமார் 1,000 வீரர்கள் உள்ளனர். இவர்கள் பயிற்சியிலோ அல்லது போர்ப் பணியிலோ உள்ளனர்.

இந்தப் படைப்பிரிவின் வீரர்கள் இஸ்ரேல் ராணுவத்தில் மொத்தம் இரண்டு ஆண்டுகள் 8 மாதங்கள் பணியாற்றுகின்றனர்.

‘டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ செய்தித்தாளின் அறிக்கையின்படி, இந்தப் படையின் ஆண் வீரர்கள், பெண் துருப்புகளுடன் தொடர்பு கொள்வதில்லை. மேலும் அவர்களுக்கு தொழுகை மற்றும் மதநூல்கள் படிப்பதற்கு கூடுதல் நேரம் கொடுக்கப்படுகிறது.

 
இஸ்ரேல், பாலத்தீனம், யூதர்கள், நெட்ஸா யெஹூதா, மனித உரிமை மீறல், அமெரிக்கா, போர்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,போஸ்டரில் இருப்பவர் 79 வயதான பாலஸ்தீன-அமெரிக்கர் உமர் அசாத். இவரை நெட்ஸா யெஹூதா படையினர் கொலை செய்ததாகக் குற்றம் எழுந்தது
அமெரிக்கா ஏன் பொருளாதாரத் தடை விதிக்க நினைக்கிறது?

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 79 வயதான பாலத்தீன-அமெரிக்கர் உமர் அசாத்தை நெட்ஸா யெஹூதா படைப்பிரிவின் உறுப்பினர்கள் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அவர் ஒரு சோதனைச் சாவடி அருகே கைது செய்யப்பட்டார். ஆசாத்தின் குடும்பத்தினர், ராணுவ வீரர்கள் அவரது கைகளை மற்றும் வாயைக் கட்டி, தரையில் கிடத்தியதாகக் கூறினர். பின்னர் அவர் தரையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இச்சம்பவத்தை விசாரித்த இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், இதனை “படைகளின் தார்மீக தோல்வி, அவர்களது தவறான முடிவு, மற்றும் மனித கண்ணியத்தின் மதிப்பை கடுமையாக பாதிக்கும் செயல்," என்று அறிவித்தன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நெட்ஸா யெஹூதா படைப்பிரிவின் தளபதி கண்டிக்கப்பட்டார். அப்படையின் நிறுவனத் தளபதி மற்றும் சிப்பாய்களின் படைப்பிரிவு தளபதி பணியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனால், இப்படையின் வீரர்களுக்கு எதிரான குற்றவியல் விசாரணை அவர்களை விசாரிக்காமலேயே மூடப்பட்டது.

பாலத்தீன குடிமக்களுக்கு எதிரான பல வன்முறைச் சம்பவங்களில் அப்படையினர் ஈடுபட்டதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத்துறை 2022-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நெட்ஸா யெஹுதா படைப்பிரிவினை விசாரிக்கத் துவங்கியது. இந்த விசாரணைகளில் உமர் அசாத் கொல்லப்பட்ட சம்பவமும் அடங்கும் என்று ‘ஹாரெட்ஸ்’ செய்தித்தாள் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி காஸா பகுதியை இஸ்ரேலிய ராணுவம் தாக்கத் துவங்கியதில் இருந்து, பாலத்தீனர்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்கள் காரணமாக, தனிப்பட்ட இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிராக அமெரிக்கா மூன்று தடைகளை விதித்துள்ளது.

 
இஸ்ரேல், பாலத்தீனம், யூதர்கள், நெட்ஸா யெஹூதா, மனித உரிமை மீறல், அமெரிக்கா, போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தச் சட்டத்தை முன்மொழிந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் லேஹியின் நினைவாக இச்சட்டத்திற்கு பெயரிடப்பட்டது
அமெரிக்கா அமல்படுத்த விரும்பும் லேஹி விதிகள் என்றால் என்ன?

அமெரிக்க வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு அமெரிக்க உதவி செய்வதை லேஹி விதிகள் தடை செய்கிறது.

தடை செய்யப்பட்ட உதவி வகைகளில், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பயிற்சித் திட்டங்களும் அடங்கும்.

இத்தகைய மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அரசாங்கங்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட்டால், அமெரிக்க வெளிநாட்டு உதவி மீண்டும் துவங்கப்படலாம்.

லேஹி விதிகள் "வெளிநாட்டுப் படைப்பிரிவுகள் தீவிர மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டதுபற்றி நம்பத்தகுந்த தகவல் இருந்தால், அப்படைப் பிரிவுகளுக்கு வழங்கப்படும் நிதிக்கும் பொருந்தும்," என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகிறது.

அமெரிக்கா கொண்டுவர விரும்பும் விசாரணைகளில் அரசியல், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிற பிரச்சினைகளும் அடங்கும்.

அமெரிக்க அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் பொது மற்றும் ரகசியப் பதிவுகளை மதிப்பாய்வு செய்வர்.

அமெரிக்க அரசாங்கம் ‘சித்ரவதை, சட்டத்தை மீறிய கொலை, வலிந்து காணாமல் ஆக்கப்படுவது மற்றும் சட்டத்தின் போர்வையில் நடத்தப்படும் பாலியல் வன்புணர்வு ஆகியவற்றை தீவிர மனித உரிமை மீறலாகக் கருதுகிறது. இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்படும்போது லேஹி விதிகள் அமலுக்கு வரும்.

1990-களின் பிற்பகுதியில் இந்தச் சட்டத்தை முன்மொழிந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் லேஹியின் நினைவாக இச்சட்டத்திற்கு பெயரிடப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/cd1dg56dzwxo

அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹாரி

3 weeks 4 days ago

 

அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹாரி
20 Apr, 2024 | 03:40 PM
image

பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரியணையில் ஐந்தாவது இடத்தில் உள்ள இளவரசர் ஹாரி தன்னை ஒரு அமெரிக்க குடிமகன் எனக் கூறியுள்ளார்.

பிரித்தானிய மன்னரான சார்ல்ஸின் மகனான ஹாரி, 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்திருலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேறினார். 

தற்போது, அமெரிக்காவில்  கலிபோர்னியாவில் மனைவி மேகன் மார்க்கல், குழந்தைகள் ஆர்ச்சி, லில்லிபெட் ஆகியோருடன் வசித்து வருகிறார். 

2019 இல் அமெரிக்காவில், `Travalyst' என்றொரு பயணம் சார்ந்த நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார்.  அந்தச் சமயத்தில், ஹாரி அந்த நிறுவனத்தின் ஆவணங்களில் தனது வசிப்பிடமாகவும், சொந்த நாடாகவும் பிரிட்டனைக் குறிப்பிட்டிருந்தார்

ஹரி தற்போது அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையில், தனது புது நாடாக அமெரிக்காவைக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பான ஆவணங்கள் வெளியாகியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

 

 

https://www.virakesari.lk/article/181521

 

சீனாவில் வேகமாக மண்ணுக்குள் புதையும் நகரங்கள் - கோடிக்கணக்கான மக்கள் என்ன ஆவார்கள்?

3 weeks 4 days ago
சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,குவாங்சி மாகாணத்தில் ஒரு கட்டிடம் இடிந்து விழும் காட்சி கட்டுரை தகவல்
  • எழுதியவர், மேட் மெக்ராத்
  • பதவி, சுற்றுசூழல் செய்தியாளர்
  • 20 ஏப்ரல் 2024
    புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்

சீனாவின் பெரிய முக்கியமான நகரங்களில் பாதி, பூமிக்குள் புதைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் பெரியளவில் சுரண்டப்படுவதும், வேகமாக நகரமயமாக்கம் செய்யப்பட்டு விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுவதும் பூமியின் நிலைத்தன்மையை பாதிப்பதால், நிலப்புதைவு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

சில நகரங்கள் வேகமாக பூமிக்குள் புதைந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆறில் ஒரு நகரம் ஆண்டுக்கு 10 மி.மீ. அளவுக்கு பூமிக்குள் புதைந்து வருவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவில் சில தசாப்தங்களாக வேகமான நகரமயமாக்கல் மேற்கொள்ளப்படுகிறது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நிலத்தடி நீர் அதிக அளவில் சுரண்டப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடலோர நகரங்களில், இவ்வாறு நிலப் புதைவு ஏற்பட்டால், கடல் மட்டம் உயர்ந்து லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

நிலப் புதைவை எதிர்கொள்வது சீனாவுக்கு புதிதல்ல. இந்த பிரச்னையை எதிர்கொள்வதில் சீனா நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. ஷாங்காய் மற்றும் டியான்ஜின் ஆகிய இரண்டு நகரங்களும் 1920களில் பூமிக்குள் தாழ்ந்து போனதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஷாங்காய் கடந்த நூற்றாண்டில் 3 மீட்டருக்கும் அதிகமாக பூமிக்குள் புதைந்து உள்ளது.

தற்போதைய நவீன காலகட்டத்தில் சீனாவில் பல்வேறு நகரங்கள் நிலப் புதைவு நிகழ்வை சந்தித்துள்ளன. சமீபத்திய தசாப்தங்களில், அங்கு வேகமாக நகரமயமாக்கலின் விரிவடைதல் பணிகள் நடந்து வருவதே இதற்கு காரணம் என சொல்கின்றனர்.

இந்த சிக்கலின் அளவைப் புரிந்து கொள்ள, பல சீனப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 82 நகரங்களை ஆய்வு செய்துள்ளது.

நாடு முழுவதும், செங்குத்து நில இயக்கங்களை அளவிட சென்டினல்-1 செயற்கைக்கோள்களின் தரவைப் பயன்படுத்தி உள்ளனர். 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், 45% நகர்ப்புறங்களில் ஆண்டுக்கு 3 மி.மீ.க்கு மேல் நிலப்புதைவு ஏற்பட்டுள்ளதை அக்குழு கண்டறிந்துள்ளது.

சுமார் 16% நகர்ப்புற நிலங்கள் ஆண்டுக்கு 10 மில்லி மீட்டரை விட அதிகமாக நிலத்துக்குள் புதைப்படுவதை, "விரைவாகப் புதைந்து வருகிறது" என்று விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர். அதாவது, 6.7 கோடி மக்கள் வேகமாக நிலப் புதைவு நேரிடும் பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்கள் என்ன ஆவார்கள்? அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
சீனாவில் மண்ணுக்குள் புதையும் நகரங்கள்
படக்குறிப்பு,சீனாவில் நிலப்புதைவால் பாதிக்கப்படும் இடங்கள்

நிலப்புதைவால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் ஐந்து பிராந்தியங்களில் உள்ள நகரங்கள் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன.

நிலப் புதைவின் அளவு புவியியல் மற்றும் கட்டிடங்களின் எடை உட்பட பல காரணிகளால் மாறுபடும். இருப்பினும் ஆய்வாளர்களின் கூற்று படி, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது தான் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. நகரங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் தங்கள் தேவைகளுக்காக அதிக அளவில் நிலத்தடி நீரை சார்ந்து இருக்கின்றனர்.

ஏற்கனவே ஹூஸ்டன், மெக்சிகோ சிட்டி மற்றும் டெல்லி உட்பட உலகின் பல முக்கிய நகர்ப்புறங்களில் நிலப்புதைவு பிரச்னை இருந்து வருகிறது. சீனாவில் 1,600 க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கிணறுகளின் அளவீடுகளை வைத்து பார்க்கும் போது, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது நிலப்புதைவுக்கு வழிவகுப்பதை உறுதிப்படுத்துவதாக ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.

 
சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சீனாவின் நிலக்கரி உற்பத்தி பகுதிகளில் நீண்டகாலமாகவே நிலப்புதைவு பிரச்னைகள் நிலவி வருகிறது.

கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் நிக்கோல்ஸ் கூறுகையில், "நிலத்தடி நீர் சுரண்டப்படுவது தான் நிலப்புதைவுக்கு முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

"புவியியல் ரீதியாக பார்த்தால், சீனாவில் சமீப காலமாக வண்டல் படிந்து வரும் பகுதிகளில் ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். எனவே நிலத்தடி நீரை எடுக்கும் போது, மணல் படலம் அழிக்கப்பட்டு, நிலத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்படுகிறது. அதன் விளைவாக நிலப் புதைவு ஏற்படுகிறது" என்கிறார் அவர்.

நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகள், கனிமங்கள் மற்றும் நிலக்கரி சுரங்கம் ஆகியவை நிலப் புதைவு ஏற்படுவதற்கான பிற காரணிகளாகும்.

சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நிலப்புதைவால் சீனாவில் உள்ள நகரம் ஒன்றின் சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம்.

நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் ஒன்றான பிங்டிங்ஷானின் வடக்குப் பகுதியில், ஆண்டுக்கு 109 மிமீ அளவில் மிக வேகமாக நிலம் தாழ்ந்து வருகிறது.

காலநிலை மாற்றத்தாலும் நிலப்புதைவாலும் கடல் மட்ட உயர்வு ஏற்பட்டு நகர்ப்புற மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம். இது மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

2020 ஆம் ஆண்டில், சீனாவின் சுமார் 6% பகுதி, ஒப்பீட்டளவில் கடல் மட்டத்திற்கு கீழே இருந்தது. அதிக கார்பன் உமிழ்வு சூழ்நிலை ஏற்பட்டால் 100 ஆண்டுகளில், இந்த அளவு 26% ஆக உயரும். கடல் மட்டம் அதிகரிப்பதை விட நிலம் புதைவது வேகமாக நடந்து வருகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், நிலப் புதைவின் வேகத்தை குறைக்கும் பயனுள்ள உத்திகள் இருப்பதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

கடந்த காலங்களில் ஜப்பானில் உள்ள ஒசாகா மற்றும் டோக்கியோ உட்பட ஆசியாவின் பிற முக்கிய நகர்ப்புறப் பகுதிகளை நிலப்புதைவு பிரச்னைகள் பாதித்துள்ளன. "20 ஆம் நூற்றாண்டில் டோக்கியோ துறைமுகப் பகுதியைச் சுற்றி ஐந்து மீட்டர் வரை பூமிக்குள் புதைந்து உள்ளது" என்று பேராசிரியர் நிக்கோல்ஸ் கூறினார்.

"ஆனால் 1970 களில், அந்த பகுதிகளில் வசித்த மக்களுக்கு மற்ற பகுதிகளில் இருந்து நல்ல குழாய் நீர் வழங்கப்பட்டது. இதனால் அங்கு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறைந்தது. மேலும் இது தொடர்பாக ஒரு சட்டமும் அங்கு பின்பற்றப்பட்டது. இதனால் அங்கு நிலப் புதைவு ஏற்படுவது குறைந்தது." என்றார்.

இந்த ஆய்வு சயின்ஸ் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c6pyz3zz7kzo

நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகொப்டர் – இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி !

3 weeks 5 days ago
கென்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறி விபத்து

கென்யாவில் இராணுவ ஹெலிகொப்டர் நடுவானில் வெடித்துச் சிதறிய விபத்தில் இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எல்கியோ மராக்வேட் என்ற பகுதியிலிருந்து இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று நைரொபி நோக்கி கிளம்பியுள்ளது.

அதில் பிரான்சிஸ் ஒமோண்டி ஒகோலா என்ற கென்யா நாட்டு இராணுவ தளபதி உட்பட 12 பேர் பயணித்துள்ளனர்.

அந்நாட்டு நேரப்படி நேற்று மதியம் 2.20 மணியளவில் அந்த விமானம் கிளம்பியது. ஆனால், கிளம்பிய சற்று நேரத்திலேயே அந்த ஹெலிகொப்டர் நடுவானில் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.

இந்த விபத்தில் ஒகோலா உட்பட 10 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கென்யா நாட்டு ராணுவ தளபதி பிரான்சிஸ் ஒமோண்டி ஒகோலா உட்பட 10 பேர் உயிரிழப்பு

இதையடுத்து மீட்பு பணிகளை தொடக்கியுள்ள அந்நாட்டு அரசு, விபத்து குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணைக்குழு அமைத்துள்ளது.

கென்யா இராணுவத்தின் துணை தலைமை தளபதியாக இருந்த ஒகோலா கடந்த ஏப்ரல் மாதம் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவரது மறைவுக்கு கென்யா நாட்டு ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் கடந்த சில மாதங்களாகவே கிளர்ச்சி படைகளின் தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன. இதனைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஒகோலா அந்தப் பகுதிக்குச் சென்றதாக இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் விபத்தா, அல்லது சதிவேலையா என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

https://thinakkural.lk/article/299717

ஈரானுக்கு ஆதரவான இராணுவத் தளம் மீது மிகப்பெரும் தாக்குதல்

3 weeks 5 days ago

ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை.

அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய பதிலடி

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.

iran-vs-israel-war-update-today

 

இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

iran-vs-israel-war-update-today

 

அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail

ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் தீக்குளிப்பு

3 weeks 6 days ago

ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர்.

https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae

கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்!

3 weeks 6 days ago

கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்!

’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.

அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது.

மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

 

https://thinakkural.lk/article/299459

ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்

3 weeks 6 days ago

இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன.

https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault

 

 

https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC

 

Checked
Fri, 05/17/2024 - 00:15
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe