உலக நடப்பு

ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்கப்போகும் முகமட் மொக்பர் - சில குறிப்புகள்

14 hours 12 minutes ago

Published By: RAJEEBAN

20 MAY, 2024 | 12:18 PM
image
 

ஈரானின் துணை ஜனாதிபதி முகமட் மொக்பெர் ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகின்றன.

ஈரானின் சட்டவிதிமுறைகளின் படி ஜனாதிபதியொருவர் உயிரிழந்து 50 நாட்களிற்குள் ஜனாதிபதி தேர்தல்இடம்பெறவேண்டும் .

1955ம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி பிறந்த மொக்பெர் ஈரானின் மததலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு மிகவும் நெருக்கமானவர்.

ஈரான் குறித்த அனைத்து இறுதி முடிவையும் எடுப்பவர் ஆயத்துல்லா அலி கமேனி என்பது குறிப்பிடத்தக்கது.

2021 இல் ரைசி தெரிவு செய்யப்பட்டவேளை மொக்பெர் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த ஒக்டோபரில் மொஸ்கோவிற்கு  விஜயம் மேற்கொண்டு ரஸ்ய இராணுவத்திற்கு மேலும்  ஏவுகணைகள் ஆளில்லாவிமானங்களை வழங்குவதற்கு இணங்கிய ஈரானிய குழுவில் மொக்பெர் இடம்பெற்றிருந்தார் என விடயமறிந்த வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளன.

ஆன்மீக தலைவருடன் தொடர்புபட்டமுதலீட்டு நிதியத்தின் தலைவராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.

அணு அல்லது கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகள் தொடர்பிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவித்து 2010 இல் ஐரோப்பிய ஒன்றியம் மொக்பெருக்கு எதிராக தடைகளை விதித்தது - பின்னர் அந்த தடைகளை நீக்கியது.

https://www.virakesari.lk/article/184027

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.

18 hours 56 minutes ago

காஸா மீது மேற்கொண்ட தாக்குதல்க்கள் மூலம் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை மேற்கொண்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இதே காரணத்துக்காக காஸா தலைவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இஸ்ரேல் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

 

பிரெஞ்சுச் செய்தி மூலம் . https://www.lefigaro.fr/international/la-cour-penale-internationale-emet-un-mandat-d-arret-contre-netanyahu-pour-crimes-contre-l-humanite-20240520

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு

1 day 1 hour ago

 

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
20 May, 2024 | 10:52 AM
image

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமான மெஹர் செய்திச் சேவை இன்று திங்கட்கிழமை (20) உறுதிப்படுத்தியுள்ளது.

அசர்பைஜானில் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் மூலம் ஈரான் புறப்பட்டார்.

இந்நிலையில், கடுமையான பனிமூட்டத்தில் மலைப்பகுதியை கடக்கும்போது நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) ஹெலிகொப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானது.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகொப்டரில் பயணித்த வெளிவிவகார அமைச்சர் உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

441064051_1560368327856441_2518658397608

441010377_763001795649237_57627958426549

440904631_1125192872085382_6502087550577



https://www.virakesari.lk/article/184010

 

 

காஸாவில் போரைத் தொடரும் நெதன்யாகுவுக்கு அமைச்சர் திடீர் மிரட்டல் - ஜூன் 8 வரை கெடு

1 day 15 hours ago
இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (இடது) மற்றும் அமைச்சர் பென்னி காண்ட்ஸ் (வலது) கட்டுரை தகவல்
  • எழுதியவர், கிறிஸ்டி கூனே
  • பதவி, பிபிசி செய்தி
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

காஸா பகுதியில் போருக்குப் பிந்தைய திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வகுக்காவிட்டால் பதவி விலகுவதாக இஸ்ரேலிய போர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பென்னி காண்ட்ஸ் மிரட்டல் விடுத்துள்ளார்.

ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஆறு இலக்குகளை முன்வைத்த பென்னி காண்ட்ஸ், அவற்றை அடைவதற்கான காலக்கெடுவை ஜூன் 8 வரை நிர்ணயித்தார்.

காஸாவில் ஹமாஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருதல், அங்கு ஒரு பன்னாட்டு சிவில் நிர்வாகத்தை நிறுவுதல், காஸாவில் ஹமாஸால் கைப்பற்றப்பட்ட அனைத்து இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பணயக் கைதிகளையும் மீட்பது மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் இடம்பெயர்ந்த பாலத்தீன குடிமக்கள் வடக்கு காஸாவுக்கு திரும்புவது உட்பட ஆறு "மூலோபாய இலக்குகள்" அதில் முன்வைக்கப்பட்டுள்ளன.

"நீங்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை தள்ளி வைத்து தேசியத்தை முன் நிறுத்தினால், நாங்கள் உங்களுடன் தோள் கொடுத்து பக்கபலமாக நிற்போம். ஆனால் நீங்கள் வெறியர்களின் பாதையைத் தேர்ந்தெடுத்து ஒட்டுமொத்த தேசத்தையும் படுகுழிக்கு இட்டுச் சென்றால், நாங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்." என்று அறிவித்துள்ளார்.

காண்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையை நிராகரித்த நெதன்யாகு, அமைச்சரின் கருத்துகள் மோசமான, வலிமையற்ற வார்த்தைகள் என்றும் இது இஸ்ரேல் தோல்வியுற்றதாக பொருள்படும் என்றும் குறிப்பிட்டார்.

காஸாவில் உள்ள அகதிகள் முகாம்களில் ஒன்றான ரஃபா மற்றும் வடக்கு நகரமான ஜபாலியாவில் இஸ்ரேலியப் படைகள் செயல்பட்டு வருகிறது.

ஹமாஸ் படையினர் இங்கு இல்லை என்று இஸ்ரேல் முன்பு குறிப்பிட்ட பகுதியில் அதன் ராணுவம் முகாம் அமைத்து மீண்டும் செயல்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

காஸா :  பதவி விலகுவதாக நெதன்யாகுவுக்கு மிரட்டல் விடுத்த இஸ்ரேல் போர் குழு அமைச்சர் 

பட மூலாதாரம்,REUTERS

 

இஸ்ரேலின் மற்றொரு போர் குழு உறுப்பினரான பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், `காஸாவை ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்க இஸ்ரேலுக்கு எந்தத் திட்டமும் இல்லை’ என்று பகிரங்கமாக அறிவிக்குமாறு நெதன்யாகுவை வலியுறுத்தினார். அவரின் அறிக்கைக்கு சில நாட்களுக்குப் பிறகு காண்ட்ஸ் பதவி விலகுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த பிரச்னை குறித்து பல மாதங்களாக கேள்வி எழுப்பியும் நெதன்யாகு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கேலண்ட் கூறியுள்ளார்.

`காஸாவில் ராணுவக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது இஸ்ரேலின் பாதுகாப்பு அபாயங்களை அதிகரிக்கும்’ என்பதே கேலண்ட் மற்றும் காண்ட்ஸின் ஒருமித்த கருத்து. அதே சமயம் இஸ்ரேல் அரசாங்கத்தில் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணியின் தீவிர வலதுசாரி உறுப்பினர்கள் உட்பட்டோர் ஹமாஸைத் தோற்கடிக்க தொடர்ச்சியான ராணுவ கட்டுப்பாடு அவசியம் என்று நம்புகிறார்கள்.

சனிக்கிழமை அன்று ஒரு தொலைக்காட்சி உரையில், காண்ட்ஸ் நெதன்யாகுவை குறிப்பிட்டு "இஸ்ரேல் மக்கள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களின் நிலைப்பாடு என்ன? சியோனிசமா (இஸ்ரேலின் தேசிய சித்தாந்தம்) இழிவான செயல்பாடா? ஒற்றுமையா பிரிவினையா? பொறுப்பா அக்கிரமமா? வெற்றியா பேரழிவா? நீங்கள் எதை தேர்வு செய்யப் போகிறீர்கள் ? " என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இரான் மற்றும் அதன் கூட்டாளி நாடுகளுக்கு எதிராக மேற்கு நாடுகளுடன் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான விரிவான செயல்முறை வகுக்க வேண்டும். அதன் பகுதியாக, சவுதி அரேபியா உடனான உறவுகளை இயல்பாக்குவதற்கு இஸ்ரேல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்” என்று காண்ட்ஸ் குறிப்பிட்டார்.

போர்க்குழு அமைச்சர் காண்ட்ஸின் உரைக்கு பதிலளித்த நெதன்யாகு, "காண்ட்ஸின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அது போரின் முடிவு மற்றும் இஸ்ரேலின் தோல்விக்கு வழிவகுக்கும். பெரும்பாலான பணயக் கைதிகளை கைவிட நேரிடும். ஹமாஸை அப்படியே விட்டுவிட்டு பாலத்தீன அரசை நிறுவவும் வழிவகுக்கும்" என்று கூறினார்.

காஸாவிற்கு அருகில் உள்ள இஸ்ரேலிய பகுதி மீது கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேலின் போர் அமைச்சரவை நிறுவப்பட்டது. காஸாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் 35,386 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி, நெதன்யாகுவிடம் தனிப்பட்ட முறையில், போருக்கு பிந்தைய நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தியதாக ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய ராணுவம் ஜபாலியா போன்ற வடக்கு காஸாவின் சில பகுதிகளுக்கு மீண்டும் திரும்பியுள்ளது. அப்பகுதிகளில் ஹமாஸ் படை இல்லை என்று அறிவித்த பின்னர் தற்போது ராணுவம் சென்றுள்ளது.

 
இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"காஸாவில் எதிர்கால மாற்று அரசாங்கத்திற்கான அடித்தளம் அமைக்கப்படும் அதே வேளையில், அங்கு பொதுமக்களுக்கான விவகாரங்களை நிர்வகிக்க கூடிய அமெரிக்க, ஐரோப்பிய, அரபு மற்றும் பாலத்தீன நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் இஸ்ரேல் பாதுகாப்பு கட்டுப்பாட்டை ஓரளவுக்கு பராமரிக்க முடியும்” என்று காண்ட்ஸ் விவரித்துள்ளார்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ஜபாலியாவில் தாங்கள் பாலத்தீன ஆயுதக் குழுக்களுடன் சண்டையிட்டதாகக் கூறினர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன மருத்துவர்கள் தெரிவித்தனர். `ஜபாலியா மீது இஸ்ரேலின் மிருகத்தனமான தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர்’ என்று ஹமாஸ் தரப்பு கூறியது.

கடந்த வாரம், இஸ்ரேல் ரஃபாவில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது. ஹமாஸின் கடைசி புகலிடங்களை தகர்க்க ராணுவப் படை நகரத்திற்குள் நுழைய வேண்டும் என்று கூறியது. சனிக்கிழமை அன்று, அது நகரின் கிழக்கில் உள்ள இலக்குகள் மீது வான்வழி தாக்குதல்களை தொடங்கியது.

சனிக்கிழமை மாலை, இஸ்ரேல் வடக்கு காஸாவின் சில பகுதிகளில் பொதுமக்கள் வெளியேறும்படி உத்தரவுகளை வெளியிட்டது, ஆயுதக் குழுக்கள் அதன் எல்லையை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியதாக கூறியது.

 
இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி முகமையின் (UNRWA) தலைவர் பிலிப் லாஸரினி காஸாவின் சூழலை விவரிக்கையில், ``சுமார் 800,000 பாலத்தீனர்கள் இப்போது ரஃபாவை விட்டு வெளியேறி, சிதைந்து போயிருக்கும் கான் யூனிஸ் நகரத்திலோ அல்லது கடற்கரை ஓரத்திலோ தஞ்சம் புகுந்துள்ளனர். காஸாவில் போர் தொடங்கியதில் இருந்து, பாலத்தீனர்கள் பாதுகாப்பைத் தேடி பலமுறை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது”

"மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் போது, அவர்கள் செல்லும் பாதைகள் பாதுகாப்பானதாக இல்லை. அதே சமயம் ஒவ்வொரு முறையும் வெளியேற்றப்படும் போது, அவர்கள் தங்களிடம் உள்ள சில உடமைகளை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மெத்தைகள், கூடாரங்கள், சமையல் பாத்திரங்கள் மற்றும் அடிப்படை பொருட்களை கொண்டு செல்லவோ அல்லது போக்குவரத்துக்கு பணம் செலுத்தவோ முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.”

"காஸாவில் உள்ள மக்கள் 'பாதுகாப்பான' பகுதிகளுக்குச் செல்லலாமே என்று கேள்வி எழுப்புவது தவறானது. ஒவ்வொரு முறையும் அவர்கள் பயணிக்கும் போது, அவர்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை." என்று பிலிப் லாஸரினி விளக்கினார்.

அமெரிக்க அதிபர் பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலில் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். குடிமக்களைப் பாதுகாக்கும் திட்டம் இல்லாத நிலையில், ரஃபா மீதான எந்தவொரு முழு அளவிலான இஸ்ரேலிய தாக்குதலுக்கும் பைடன் நிர்வாகத்தின் எதிர்ப்பை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன், சல்லிவன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பது குறித்தும், பாலத்தீன அரசு அந்தஸ்தை அடைவது குறித்தும் அவர்கள் விவாதித்ததாக சவுதி அரசு ஊடகம் தெரிவித்தது.

https://www.bbc.com/tamil/articles/cv22513ljgzo

இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்

1 day 15 hours ago
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

55 நிமிடங்களுக்கு முன்னர்

இரான் அதிபரின் வாகனத் தொகுதியில் இடம் பெற்றிருந்த 3 ஹெலிகாப்டர்களில் ஒன்று விபத்தில் சிக்கிவிட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

தரையில் மோதியதாக இரான் அரசு ஊடகம் கூறும் அந்த ஹெலிகாப்டரில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்தாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

மீட்புக்குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்திருப்பதாகவும், மோசமான வானிலை காரணமாக அந்த இடத்தை அடைவதில் சிரமம் இருப்பதாகவும் இரான் உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிதி தெரிவித்துள்ளார்.

கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினருடன் இருந்த ஃபார்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் தெரிவித்தார்.

 

அவரது கூற்றுப்படி, மலை மற்றும் மரங்கள் நிறைந்த அந்த பகுதியில் 5 மீட்டர் தொலைவு வரை மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடிகிறது. உள்ளது.

ஹெலிகாப்டர் தரையில் மோதிய இடம், தப்ரிஸ் நகரத்திலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வர்செகான் நகருக்கு அருகில் உள்ளது.

தப்ரிஸ் நகரம் இரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

உள்ளூர் ஊடக செய்திகளின்படி, அஜர்பைஜானில் கிஸ் கலாசி மற்றும் கோடாஃபரின் அணைகளைத் திறந்து வைத்த பிறகு, தப்ரிஸ் நகரத்தை நோக்கி அதிபர் ரைசி சென்று கொண்டிருந்தார்.

கடும் மூடுபனி காரணமாக விமானம் தரையிறங்கியிருக்கலாம் அல்லது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கருதப்படும் பகுதியில் வெறுங்கண்ணால் மிகக் குறைந்த தொலைவையே பார்க்க முடிவதாக குறைந்துள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அவசரகால மீட்புக் குழுவினருடன் இருக்கும் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர், தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் விமானத்தை கண்டுபிடிப்பது கடினம் என்று கூறுகிறார்.

முரண்பட்ட தகவல்கள்

என்ன நடந்தது என்பது குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், இந்த சம்பவம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை.

இரண்டு ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக தங்கள் இலக்கை சென்றடைந்ததாக ஈரானிய செய்தி நிறுவனமான தஸ்னிம் கூறுகிறது.

மற்றொரு ஹெலிகாப்டரில் ரைசி மட்டுமல்ல, இரானின் வெளியுறவு அமைச்சரும் பயணித்தார் என்று தஸ்னிம் செய்தி கூறுகிறது.

விபத்து நடந்ததாக கூறப்படும் பகுதியில் பனிமூட்டம் நிலவுவதாக ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

யார் இந்த இப்ராஹிம் ரைசி?
  • இரான் இப்ராஹிம் ரைசி தீவிர பழமைவாத அரசியல் கருத்துகளைக் கொண்ட கடுமையான மத குருவாகக் கருதப்படுகிறார்.
  • 63 வயதான ரைசி, 25 வயதில் இரான் தலைநகர் தெஹ்ரானில் துணை வழக்கறிஞரானார்.
  • 2014ம் ஆண்டில் இரானின் வழக்கறிஞர் ஜெனரலாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் அரசு வழக்கறிஞராகவும், பின்னர் மாநில இன்ஸ்பெக்டரேட் அமைப்பின் தலைவராகவும், நீதித்துறையின் முதல் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
  • ரைசி 2017ம் ஆண்டில் முதல் முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டு அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். அந்த தேர்தலில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
  • 2019 ஆம் ஆண்டில், அயதுல்லா கமேனி அவரை நீதித்துறையின் சக்தி வாய்ந்த பதவிக்கு நியமித்தார்.
  • அவர் ஜூன் 2021 இல் இரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இனப்படுகொலையை நிராகரிக்கும் இலங்கை அரசாங்கம் சர்வதேச தலையீடுகளில் ஈடுபடுவதுடன் திட்டமிட்டு பிழையான தகவல்களை பரப்புகின்றது - பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்

1 day 20 hours ago

Published By: RAJEEBAN   19 MAY, 2024 | 10:28 AM

image
 

இனப்படுகொலையை நிராகரிக்கும் இலங்கை அரசாங்கம் சர்வதேச தலையீடுகளில் ஈடுபடுவதுடன்  திட்டமிட்டு பிழையான தகவல்களை வெளியிடுதல் பரப்புதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது என கனடா பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்  தெரிவித்துள்ளார்.

partick_2024_may.jpg

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

partic_brow_mull2024.jpg

தமிழ் இனப்படுகொலை தினம் என குறிப்பிடப்படும் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 வருடத்தை இன்றைய தினம் குறிக்கின்றது என பட்ரிக் பிரவுண் குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு ஆயுதமோதலின் இறுதி தருணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்ற இனப்படுகொலையில் பலியானவர்கள் உயிர்பிழைத்தவர்களை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் நினைவுகூரும் இந்த தருணத்தில் நான் எனது ஆதரவை அவர்களிற்கு வெளியிடுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

mulliva_canda.jpg

இந்த குற்றங்களிற்கும் யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்களிற்கும் கண்மூடித்தனமான தடுத்துவைத்தல் சித்திரவதைகள்  நீதி பொறுப்புக்கூரலை உறுதி செய்வதற்கான எந்த நேர்மையான நடவடிக்கைகளையும் இன்றுவரை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

patric_mull2024.jpg

இதனை விட மோசமான விடயம் என்னவென்றால் இடம்பெற்ற இனப்படுகொலையை நிராகரிக்கும் இலங்கை அரசாங்கம் சர்வதேச தலையீடுகள் திட்டமிட்டு பிழையான தகவல்களை வெளியிடுதல் பரப்புதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/183929

மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தியில் கனடா பிரதமர்

2 days 1 hour ago
மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது - இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கனடா ஏற்கனவே தடைகளை விதித்துள்ளது - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தியில் கனடா பிரதமர்

Published By: RAJEEBAN  19 MAY, 2024 | 07:49 AM

image
 

சர்வதேச அளவில் மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது என தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

15 வருடங்களிற்கு முன்னர் இலங்கையின் உள்நாட்டு மோதல் முடிவிற்கு வந்தது  முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர்.

இன்றுவரை பலர் காணாமல்போயுள்ளனர் காயமடைந்துள்ளனர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இன்று நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் அர்த்தமற்ற நீண்டகால வன்முறை ஏற்படுத்திய வேதனை வலியுடன் வாழும் அவர்களின் அன்புக்குரியவர்களை நாங்கள் கௌரவிக்கின்றோம்.

இரண்டு வருடங்களிற்கு முன்னர் மே 18ம் திகதியை தமிழர்கள் இனப்படுகொலை நினைவேந்தல் தினமாக அங்கீகரிப்பதற்கான தீர்மானத்திற்கு கனடா நாடாளுமன்றம் ஏகமனதாக வாக்களித்தது.

மோதல்களின் போது இடம்பெற்ற குற்றங்களிற்காகவும் இலங்கையின் அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் துயரங்களிற்காகவும்  நாங்கள் எப்போதும் நீதியையும் பொறுப்புக்கூறலையும் பரப்புரை செய்கின்றோம்.

2023 இல்  இலங்கையின் ஆயுதமோதலின் போது மனித உரிமைகளை மீறிய  இலங்கை இராணுவ அதிகாரிகள் நால்வருக்கு எதிராக நாங்கள் தடைகளை விதித்தோம்.

இலங்கையில் மனித உரிமைகளை கனடா வலுவான விதத்தில் பாதுகாக்க முயல்கின்றது.

2022 ஒக்டோபரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றும் நடவடிக்கைகளில் எங்கள் சர்வதேச சகாக்களுடன் இணைந்து ஈடுபட்டுள்ளோம். இந்த தீர்மானம் இலங்கையில் அதிகளவான நல்லிணக்கம் நீதி பொறுப்புக்கூறல் மனித உரிமைகள் ஆகியவற்றிற்கு வேண்டுகோள் விடுக்கின்றது.

இலங்கை அரசாங்கத்தை மத நம்பிக்கை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றிற்கான சுதந்திரத்தை மதிக்குமாறு நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்துகின்றோம். இவை நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு அவசியான விழுமியங்களாகும்.

இன்றைய நாள் மனித உரிமைகள் நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கு குரல்கொடுக்கும் ஆதரவளிக்கும் எங்களின் கூட்டு கடப்பாட்டை நினைவுபடுத்துகின்றது. 

சர்வதேச அளவில் மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது.

https://www.virakesari.lk/article/183923

தமிழர்களிற்கு நீதியை வழங்குவது தொடர்பில் பிரிட்டன் தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் - பிரிட்டனின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கம் டெபனயர்

2 days 15 hours ago

Published By: RAJEEBAN   18 MAY, 2024 | 05:45 PM

image

ஆயுதமோதலின் இறுதிநாட்களில் தமிழர்களிற்கு எதிராக இடம்பெற்ற படுகொலைகளிற்கு நீதியும் பொறுப்புக்கூறலும் அவசியம் என பிரிட்டனின் தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கம் டெபனயர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதிதருணங்களில்  கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களையும் இடம்பெற்ற பரந்துபட்ட மனித உரிமை மீறல்களையும் நாங்கள் இன்று நினைவுகூருகின்றோம் என என டிஜிட்டல் கலாச்சாரம் ஊடகம் விளையாட்டு நிழல் அமைச்சர் தங்கம் டெபனெயர் தெரிவித்துள்ளார்.

இன்று எனது சிந்தனைகள் தாங்கள் எதிர்கொண்ட அநீதிகள் காரணமாக தொடர்ந்தும் வேதனையுடன் வாழும் பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் அவர்களின் அன்புக்குரியவர்கள் குறித்து காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் என்பது எப்படி  இழந்தவர்களை நினைகூரும் நாளோ அதேபோன்று குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் நாள் என டிஜிட்டல் கலாச்சாரம் ஊடகம் விளையாட்டு நிழல் அமைச்சர் தங்கம் டெபனெயர் தெரிவித்துள்ளார்.

மோதல் முடிவிற்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கு 15 வருடங்கள் கிடைத்தன எனினும் அர்த்தபூர்வமான விசாரணையை அது  முன்னெடுக்காமல் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் தமிழ் மக்களிற்கு நீதியை வழங்குவது குறித்த உத்தரவாதங்களை நிறைவேற்ற தவறிவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஸ் அரசாங்கம் தமிழ் மக்களிற்கு ஆதரவை வழங்கவேண்டும் இலங்கை அரசாங்கம் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன். 

யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவது தொடர்பான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது ஆராய்வதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/183895

உளவு பார்ப்பதில் சீனாவின் சவாலை சமாளிக்க முடியாமல் திணறும் மேற்குலகம்

2 days 15 hours ago
சீனா
கட்டுரை தகவல்
  • எழுதியவர், கோர்டன் கோரேரா
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சீனா மீது கவனம் செலுத்த வேண்டும் என்று மேற்குலகத்தைச் சேர்ந்த நாடுகள் நீண்ட காலமாகவே பேசி வருகின்றன. இந்நிலையில் இந்த வாரம், பிரிட்டனின் அரசாங்க தகவல் தொடர்பு தலைமையக(GCHQ) உளவு முகமையின் தலைவர், “இது ஒரு சகாப்தத்தின் சவால்” என்று விவரித்துள்ளார்.

மேற்குலக நாடுகளில் சீனாவுக்கு ஆதரவாக உளவு பார்த்தல் மற்றும் ஹேக்கிங் செய்வதாக பலரும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. ஹாங்காங் உளவு முகமைகளுக்கு உதவி வருவதாக பிரிட்டனில் மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமையன்று சீன தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது பிரிட்டன் வெளியுறவுத்துறை.

அதிகாரம் மற்றும் செல்வாக்கு விஷயத்தில் சீனா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இடையில் போட்டி நிலவி வரும் நிலையில், அது பொதுவெளிக்கு வந்துள்ளதற்கான அறிகுறியே இந்த கைதுகள்.

அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் சீனாவை பின்னுக்கு தள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. ஆனால், மூத்த அதிகாரிகள் மேற்கு நாடுகள் சீனாவின் சவாலை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், உளவுத்துறை சார்ந்து பின்தங்கிவிட்டதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இது மேற்கு நாடுகளில் சீன உளவு அச்சுறுத்தலை அதிகரித்துள்ளதாகவும், இரு தரப்பிலும் தீவிரமான தவறுகளுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

 
சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சீனா குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், இப்போது வரையிலும் அதன் மீது கண்காணிப்பை பலப்படுத்த மேற்குநாடுகள் போராடின வருகின்றன.

ஒரு புதிய சர்வதேச ஒழுங்கை உருவாக்க முயற்சித்துவரும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் உறுதியே மேற்கத்திய அதிகாரிகளை கவலை கொள்ள செய்துள்ளது.

பிபிசியின் புதிய சீனா - மேற்கு நாடுகள் என்ற தொடருக்காக பிரிட்டனின் வெளிநாட்டு உளவு முகமையான எம்ஐ6 அமைப்பின் தலைவர் சர் ரிச்சர்ட் மூர் அளித்த அரிதான பேட்டி ஒன்றில், “ சீனா உலகின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் அமெரிக்காவின் இடத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறது” என்றார்.

என்னதான் சீனா குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், இப்போது வரையிலும் அதன் மீது கண்காணிப்பை பலப்படுத்த மேற்கு நாடுகள் போராடி வருகின்றன.

மேற்குலக நாடுகளின் கவனம் இதர பிரச்னைகளில் இருந்த வேளையில், உலகின் முக்கிய சக்தியாக சீனா உருவெடுத்தது என்று கூறுகிறார் எம்ஐ6 அமைப்பின் இரண்டாம் நிலை தலைவராக இருந்த நைகல் இன்க்ஸ்டர். இவர் 2006ஆம் ஆண்டு அந்த அமைப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.

2000களில் பெய்ஜிங் உலக அரங்கில் தன்னை உயர்த்துவதில் மும்முரமாக இருந்த வேளையில், மேற்கத்திய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் சிந்தனையும், உளவுத்துறைகளின் கவனமும், ஆப்கானிஸ்தான், இராக் ஆகிய நாடுகளில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் இராணுவ தலையீடுகளில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன.

 
சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சீனா சைபர் உளவு மூலமாகவும், அல்லது நிறுவனங்களில் நேரடியாக ஆட்களை ஊடுருவ செய்வதன் மூலமாகவும் உளவு பார்ப்பதாக மேற்குலக உளவு அமைப்புகள் கூறுகின்றன.

சமீபத்தில், மீண்டும் எழுச்சி பெற்றுள்ள ரஷ்யா மற்றும் இஸ்ரேல்-காஸா போர் உலகிற்கு கூடுதல் அவசர சவால்களாக தோன்றியுள்ளன என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.

அதே நேரத்தில், சீனா ஏற்படுத்தும் பாதுகாப்பு அபாயத்தை விட, அதன் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்தும் வாய்ப்பை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து அழுத்தம் உள்ளது.

இதனால் அரசியல் தலைவர்கள் தங்கள் உளவுத்துறை தலைவர்கள் அடிக்கடி சீனாவை பற்றி குறிப்பிட வேண்டாம் என்று விரும்புகின்றனர். வணிக நிறுவனங்களும் கூட தங்கள் ரகசியங்கள் குறிவைக்கப்படுவதை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை.

"பொருளாதாரம் மற்றும் வணிக நலன்களின் திசையில்தான் காற்று வீசும்" என்கிறார் நைகல் இன்க்ஸ்டர்.

ஏற்கனவே 2000 களில் தொழில்துறை சார்ந்த உளவுப்பணியில் சீன உளவுத்துறை ஈடுபட்டிருந்தது என்று கூறும் அவர், அப்போதும் மேற்கத்திய நிறுவனங்கள் அமைதியாகவே இருந்தன என்கிறார்.

"அதை எதிர்ப்பது அல்லது வெளிப்படுத்துவது சீனாவின் சந்தைகளில் தங்கள் நிலையை பாதிக்கும் என்ற அச்சத்தில் அவர்கள் அதைப் பற்றி கேள்வி எழுப்ப விரும்பவில்லை," என்று அவர் கூறுகிறார்.

மேற்குலகின் பாணியில் இருந்து சீனா வேறு மாதிரியான பாணியில் உளவு பார்ப்பது மற்றொரு பெரிய சவாலாக உள்ளது. இது அதன் செயல்பாட்டை அடையாளம் காண்பதையும், எதிர்கொள்வதையும் கடினமாக்கியுள்ளது.

முன்னாள் மேற்குலக உளவாளி ஒருவர், ஒருமுறை சீனா "தவறான வகையில்" உளவு பார்ப்பதாக சீனப் பிரதிநிதி ஒருவரிடம் கூறியதாகக் தெரிவித்தார்.

அதாவது, மேற்கத்திய நாடுகள் தங்கள் எதிரிகளைப் புரிந்துகொள்ள உதவும் வகையான உளவுத்தகவல்களை சேகரிப்பதில் கவனம் செலுத்த விரும்புகின்றன. ஆனால் சீன உளவாளிகளுக்கு அதில் வெவ்வேறு முன்னுரிமைகள் உள்ளன.

எஃப்.பி.ஐ.-இன் எதிர்உளவு அதிகாரி ரோமன் ரோஜாவ்ஸ்கி கூறுகையில், "ஆட்சியின் நிலைத்தன்மையே அவர்களின் முதல் குறிக்கோள்" என்று விளக்கினார்.

அதற்கு பொருளாதார வளர்ச்சியை தருவது அவசியமாகும். எனவே சீனாவின் உளவாளிகள் மேற்கத்திய தொழில்நுட்பத்தைப் பெறுவதை ஒரு சிறந்த தேசிய பாதுகாப்புத் தேவையாகக் கருதுகின்றனர்.

பெய்ஜிங் உளவாளிகள் தாங்கள் சேகரித்த தகவல்களை சீன அரசு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாக மேற்கத்திய உளவாளிகள் கூறுகிறார்கள். ஆனால், மேற்குலக உளவுத்துறை முகமைகள் தங்கள் சொந்த உள்நாட்டு நிறுவனங்களுடன் அவற்றை பகிர்ந்து கொள்வதில்லை.

 
சீனா

பட மூலாதாரம்,FBI

படக்குறிப்பு,கடந்த அக்டோபரில் முதன்முதலாக கலிபோர்னியாவில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஃபைவ் ஐஸ் உளவுத்துறை-பகிர்வு கூட்டணியின் கூட்டம் வெளிப்படையாக நடந்தது.

ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்பின் (ASIO) தலைவரான மைக் பர்கெஸ், "எங்கள் 74 ஆண்டுகால வரலாற்றில், இதுவரை நாங்கள் இருந்ததை விட எங்களது நிறுவனம் தற்போது மிகவும் பிஸியாக உள்ளது" என்று என்னிடம் கூறினார்.

"நான் இதர நாடுகளை மிகவும் அரிதாகவே குறிப்பிட்டு அவர்கள் உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டுகிறேன். காரணம் உளவு என்று வரும்போது நாங்களும் அவர்களுக்கு அதையேதான் செய்கிறோம்” என்று கூறுகிறார் பர்கெஸ்.

"வணிக உளவு பார்ப்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம், அதனால்தான் சீனா இந்த விஷயத்தில் சிறப்பு கவனத்தை பெறுகிறது."

மேற்கத்திய நட்பு நாடுகள் இந்த அச்சுறுத்தலைப் புரிந்துகொள்வதில் தாமதம் காட்டியுள்ளன என்பதை அவர் ஒப்புக்கொண்டார். "இது நீண்ட காலமாக நடந்து வருகிறது என்று நான் நினைக்கிறேன், கூட்டாக நாங்கள் அதை தவறவிட்டு விட்டோம்," என்று அவர் ஒப்புக்கொள்கிறார்.

கடந்த அக்டோபரில் முதன்முதலாக கலிபோர்னியாவில் வெளிப்படையாக நடந்த அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஃபைவ் ஐஸ் என்று அழைக்கப்படும் உளவுத்துறை-பகிர்வு கூட்டணியின் பாதுகாப்புத் தலைவர்களின் கூட்டத்தில் நான் இருந்தேன்.

ஒரு அசாதாரண நிகழ்வாக, இந்த ஐந்து நாடுகளின் உளவுத்துறை தலைவர்களும் வெளிப்படையாக சீனா மேற்கொண்டு வரும் வணிக உளவு குறித்து எச்சரிக்கை விடுத்தனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த கூட்டம், சீனா குறித்த எச்சரிக்கைகளின் அளவை அதிகரிப்பதற்கான மிகவும் திட்டமிட்ட முயற்சியாகும். காரணம் இன்னமும் பல நிறுவனங்களும் அமைப்புகளும் இந்த எச்சரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்ற அச்சம் உள்ளது.

இதற்காக சிலிக்கான் வேலி தேர்வு செய்யப்பட்டதும் கூட காரணத்துடன் முடிவு செய்யப்பட்டதே. டெக் நிறுவனங்கள் நிறைந்த அந்த பகுதியில் , சைபர் உளவு மூலமாகவும், நிறுவனங்களில் ஆட்களை ஊடுருவ செய்வதன் மூலமாகவும் தொழில்நுட்பத்தை திருடும் சீனாவின் செயல் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த செயல்களுக்கான சீனாவின் ஆதாரங்கள் வேறு அளவில் உள்ளன. ஒரு மேற்கத்திய உளவுத்துறை அதிகாரியின் தகவலின்படி, சீனாவில் உளவு மற்றும் பாதுகாப்புத் துறையின் கீழ் சுமார் 6,00,000 பேர் பணிபுரிவதாக மதிப்பிட்டுள்ளார். இது உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகம்.

 
சீனா

மேற்கத்திய பாதுகாப்பு சேவைகள் ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக விசாரிக்க முடியாது. பிரிட்டிஷ் உளவுத்துறை நிறுவனமான எம்ஐ6 கூற்றுப்படி, பிரிட்டனில் மட்டும் 20,000 க்கும் மேற்பட்டவர்கள், சீன உளவாளிகளால் லிங்க்டு-இன் போன்ற தொழில்முறை நெட்வொர்க்கிங் தளங்கள் வழியாக உறவுகளை வளர்ப்பதற்காக அணுகப்பட்டுள்ளனர்.

"அவர்கள் உண்மையில் வேறொரு நாட்டைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை அறியாமல் இருக்கலாம். ஆனால் இறுதியில் அவர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தின் எதிர்காலத்தையே அழிக்கக் கூடிய தகவல்களைக் அவர்களுக்கு பகிர்ந்துகொண்டிருப்பார்கள்" என்று எம்ஐ5 - இன் தலைவர் கென் மெக்கலம் கலிபோர்னியா கூட்டத்தில் என்னிடம் கூறினார்.

சீனா உள்நாட்டு கண்காணிப்பில் கவனம் செலுத்தும் அதே வேளையில், வெளிநாட்டில் அதன் நடவடிக்கைகள் மீதான விமர்சனத்தை மட்டுப்படுத்தவும் அதன் உளவாளிகளை பயன்படுத்துகிறது.

சமீபத்தில், மேற்கத்திய அரசியலை குறிவைத்து இயங்கி வந்த சீன உளவாளிகள் பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவில் விசாரணை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சீனாவின் "வெளிநாட்டு காவல் நிலையங்கள்" இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. மேற்கு நாடுகளில் உள்ள சீன அதிருப்தியாளர்களைப் கண்காணிப்பதற்காக, பெய்ஜிங்கின் உளவுத்துறை அதிகாரிகள் பொதுவாக உளவாளிகளை களத்தில் நேரடியாக பயன்படுத்துவதை விட, தனியார் புலனாய்வாளர்களை பணியமர்த்துவது அல்லது அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது போன்று தொலைதூரத்தில் இருந்தே செயல்படுகிறார்கள் என்று கூறுகின்றனர் பாதுகாப்பு அதிகாரிகள்.

உண்மையில், 2000களின் முற்பகுதியில் பிரிட்டன் அரசாங்க அமைப்புகளை இலக்காகக் கொண்ட முதல் இணைய நிகழ்வுகள் ரஷ்யாவிலிருந்து அல்ல, சீனாவிலிருந்து வந்தவை. அவை திபெத்திய மற்றும் உய்குர் குழுக்கள் போன்ற வெளிநாட்டு எதிர்ப்பாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டவை.

அரசியல் தலையீடுகள் பற்றி கவலைப்படுவதில் தற்போது ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. 2016 ஆம் ஆண்டிலிருந்து, தேர்தல்களில் வேட்பாளர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளைக் கண்டறியத் தொடங்கியதாக ASIO அமைப்பு கூறுகிறது.

"அவர்கள் இங்கு தங்கள் விருப்பங்களை புகுத்த முயற்சிக்கிறார்கள், அதை செய்வதற்கு திறன் படைத்தவர்களும் கூட. அவர்கள் அதை மறைமுகமான வழிகளில் செய்வதை நாங்கள் விரும்பவில்லை" என்று மைக் பர்கெஸ் பிபிசியிடம் கூறினார். இதை எதிர்கொள்ளும் வகையில், 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா புதிய சட்டங்களை இயற்றியது.

 
சீனா
படக்குறிப்பு,பிரிட்டனைச் சேர்ந்த வழக்குரைஞர் கிறிஸ்டின் லீ

ஜனவரி 2022 இல், பெய்ஜிங்கின் விருப்பங்களை முன்னெடுப்பதற்காக, பிரிட்டனைச் சேர்ந்த வழக்குரைஞர் கிறிஸ்டின் லீ பல பிரிட்டிஷ் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதாகக் குற்றம் சாட்டி எம்ஐ5 ஒரு அசாதாரண எச்சரிக்கையை வெளியிட்டது.

அவர் தற்போது எம்ஐ5க்கு எதிராக ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் தான் பிரிட்டன் ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. இது வெளிநாடுகளின் தலையீடு மற்றும் பிற செயல்பாடுகளைச் சமாளிக்க புதிய அதிகாரங்களை வழங்கியது. ஆனாலும் , இவை தாமதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சீனா மேற்குலகை உளவு பார்ப்பது போலவே, மேற்குலகமும் சீனாவை உளவு பார்க்கிறது. ஆனால் எம்ஐ6 மற்றும் சிஐஏ போன்ற மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகளுக்கு சீனாவில் உளவுத்தகவலை சேகரிப்பது தனித்தன்மை வாய்ந்த சவாலாக உள்ளது.

நாட்டிற்குள் கண்காணிப்பின் பரவலான தன்மை, டிஜிட்டல் கண்காணிப்பு உள்ளிட்டவை மனித நுண்ணறிவின் பாரம்பரிய மாதிரி - உளவாளிகளை நேருக்கு நேர் சந்திப்பதை - கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக ஆக்குகிறது.

சீனா ஒரு தசாப்தத்திற்கு முன்னர் சிஐஏ உளவாளிகளின் பெரிய வலையமைப்பு ஒன்றை துடைத்தெடுத்தது. மேலும் தகவல் தொடர்புகளை இடைமறித்து டிஜிட்டல் நுண்ணறிவை சேகரிக்கும் பிரிட்டனின் அரசாங்க தகவல் தொடர்பு தலைமையகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமைக்கு தொழில்நுட்ப ரீதியாக இது கடினமான இலக்காகும்.

ஏனெனில் சீனா மேற்கத்திய தொழில்நுட்பத்தை விட, அதன் சொந்த தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.

"சீனாவின் பொலிட்பீரோ எப்படி சிந்திக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்று ஒரு மேற்கத்திய அதிகாரி ஒப்புக்கொண்டார்.

இது புரிதலுக்கு வழிவகுக்கும் மற்றும் இது கடுமையான அபாயங்களைக் கொண்டுள்ளது. பனிப்போரில், மாஸ்கோ எவ்வளவு பாதுகாப்பற்றதாக உணர்ந்தது என்பதை மேற்கு நாடுகள் புரிந்து கொள்ளத் தவறிய காலங்கள் இருந்தன. இதன் விளைவாக இரு தரப்பும் விரும்பாத ஒரு பேரழிவுப் போரை நெருங்கின.

தைவான் மீதான கட்டுப்பாட்டை மீட்பதற்கான சீனாவின் விருப்பத்தின் மீது, இன்றும் இதேபோன்ற தவறான கணக்கீடுகளின் அபாயங்கள் உள்ளன. தென் சீனக் கடலிலும் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

 
சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான அதிக இராணுவ மற்றும் இராஜதந்திர தொடர்பு சமீபத்திய மாதங்களில் சூட்டைக் குறைத்திருந்தாலும், நீண்ட காலப் பாதை தொடர்ந்து எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டிருக்கிறது.

"நாம் வாழும் மிகவும் ஆபத்தான, போட்டி நிறைந்த இந்த உலகில், எப்போதும் மோதலைப் பற்றி கவலைப்பட வேண்டும், அதைத் தவிர்ப்பதற்கான பாதையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்" என்று எம்ஐ6 இன் தலைவர் சர் ரிச்சர்ட் மூர் என்னிடம் கூறினார்.

"குறிப்பாக நீங்கள் எப்போதும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத அதிகாரம் கொண்டிருக்கும்போது, எனது சேவை அங்குதான் வருகிறது."

எம்ஐ6-இன் பணியே, சாத்தியமான அபாயங்கள் வழியாக செல்ல தேவையான உளவுத்தகவல்களை வழங்குவது என்று அவர் கூறுகிறார்.

"வரையறையின்படி தவறான புரிதல்கள் எப்போதுமே ஆபத்தானவை - உங்களிடம் தகவல் தொடர்புக்கான வழிகள் திறந்திருப்பதும், நீங்கள் போட்டியிடும் நபர்களின் நோக்கங்களைப் பற்றிய நுண்ணறிவு இருப்பதும் எப்போதும் சிறந்தது" என்கிறார் அவர்.

இது தகவல் தொடர்புக்கான வழிகள் திறந்திருப்பதை உறுதிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பாக எம்ஐ6 உளவு ஸ்தாபனம், சீன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. தற்போது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் சில ராணுவத் தொடர்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன என்ற உண்மை பரவலாக வரவேற்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான அதிக இராணுவ மற்றும் இராஜதந்திர தொடர்பு சமீபத்திய மாதங்களில் சூட்டைக் குறைத்திருந்தாலும், நீண்ட காலப் பாதை தொடர்ந்து எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டிருக்கிறது.

உளவு பார்ப்பது பற்றிய அனைத்து வெளிப்பாடுகளும் இரு தரப்பிலும் உள்ள பொதுமக்களிடையே அவநம்பிக்கையையும் அச்சத்தையும் தூண்டுகிறது. இது நெருக்கடி நிலையில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஒருவரையொருவர் புரிந்துகொண்டு பயணிப்பதற்கான வழியைக் கண்டறிவது, இருதரப்பு உறவின் மோதல் போக்கிலிருந்து விலகுவதற்கு இன்றியமையாத ஒன்றாகும்.

https://www.bbc.com/tamil/articles/c03dllppx7wo

பிரித்தானியாவில் ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை இனி வெளியாகாது!

2 days 23 hours ago
03-4.jpg?resize=750,375&ssl=1 பிரித்தானியாவில் ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை இனி வெளியாகாது!

பிரித்தானியாவில் 86 ஆண்டுகளாக வெளியாகிய ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை, இனி வெளியாகாது என அதன் தலைமை ஆசிரியர் இவா மெக்கெவிக் (Eva Mackevic) தெரிவித்துள்ளார்.

நிதிநெருக்கடி காரணமாக ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) பதிப்பினை இத்துடன் முடித்துக் கொள்வதாக, இவா மெக்கெவிக் (Eva Mackevic) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனது பதிவில், துரதிர்ஷ்டவசமாக நிதிசார்ந்த பிரச்னைகளை நிறுவனத்தால் தாங்க முடியவில்லை என்பதால் பதிப்பினை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. தனது சக ஊழியர்களுக்கும், பத்திரிகையின் எழுத்தாளர்களுக்கும், பல ஆண்டுகளாக ஒத்துழைத்த பிரதிநிதிகளுக்கும் மற்றும் நட்பு நிறுவனங்களுக்கும் நன்றி” என தனது வருத்தத்தினையும் அவர் தெரிவித்துள்ளார்.

ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) 1922 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் டெவிட் வாலஸ் மற்றும் அவரது மனைவி லிலா பெல் வாலஸ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.

சிறிது காலத்திலேயே புகழ் பெற்ற ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) 1929 ஆம் ஆண்டுகளில், இது கணிசமான வாசகர்களையும் கணிசமான வருவாயையும் பெற்றிருந்தது.

1929 இல் 2 இலட்சத்து 90 ஆயிரம் வாசகர்களைப் பெற்ற readers digest சஞ்சிகை அந்த ஆண்டில், 9 இலட்சம் அமெரிக்க டொலர் வருமானத்தையும் ஈட்டியது.

அதில், சுகாதார ஆலோசனைகள், நிதி ஆலோசனைகள் மற்றும் சமையல் குறிப்புகள் போன்றவை இடம்பெற்றிருந்தன.

ரீடர்ஸ் டைஜஸ்ட்டின் உலகளாவிய பதிப்புகள் 70க்கும் அதிகமான 21 மொழிகளில் 49 பதிப்புகளோடு, கூடுதலாக 40 மில்லியன் மக்களைச் சென்றடைந்தது.

ஒரு காலகட்டத்தில் இவ்விதழ் உலகின் 10.5 மில்லியன் எண்ணிக்கையில் விற்பனையைக் கொண்டிருந்தது. இது உலகின் மிகப்பெரிய அளவிலான விற்பனையாகும் இதழாக இருந்தது.

அத்துடன் readers digest சஞ்சிகை சீனா, மெக்ஸிகோ, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் பெரு போன்ற நாடுகளில் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி கொண்டிருந்த இதழாகவும் விளங்கியது.

மொத்தம் 23 மில்லியன் பதிப்புகளுடன் சர்வதேச அளவிலான விற்பனையை கொண்டிருந்த readers digest சஞ்சிகை, பிரித்தானியாவில் தனது முதல் வெளியீட்டை 1938 இல் ஆரம்பித்திருந்தது.

2000 ஆம் ஆண்டில் மாதத்திற்கு சுமார் ஒரு மில்லியன் பிரதிகள் வெளியிடப்பட்டதென்றும், அதன்பின்னர் கடுமையாக வீழ்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது, கடும் நிதிநெருக்கடி காரணமாக, தன் பிரிட்டிஷ் பதிப்புக்கள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

https://athavannews.com/2024/1382884

ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததீர்மானம் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் ஆதரவு தெரிவித்து உரை

3 days ago

Published By: RAJEEBAN   18 MAY, 2024 | 08:35 AM

image
 

ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தினை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.

ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் மற்றும் ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என அங்கீகரிக்கவேண்டும் என கோரும் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அதனை வரவேற்றுள்ளனர்.

தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு உரைகள் ஆற்றப்பட்ட பின்னர் அமெரிக்க காங்கிரஸ்; உறுப்பினர்கள் காங்கிரஸ் நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டனர் .

இந்த நிகழ்வில் அமெரிக்காவை சேர்ந்த 100க்கும் அதிகமான தமிழர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

240517_US_Referendum_event8.jpg

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 வருடத்தினை நினைவேந்துவதற்கு உலகம்எங்கிலும் உள்ள ஈழத்தமிழர்கள் தயாராகிவந்த நிலையிலேயே இந்த தீர்மானம்  அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த தீர்மானம் இழப்பை நினைகூருகின்றது ஆனால் தமிழர்களை எதிர்கால வன்முறைகள் பாரபட்சங்களில் இருந்து பாதுகாக்க முயல்கின்றது என தீர்மானத்தை அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பித்த சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர் வில்லே நிக்கல் தெரிவித்தார்.

எனது தீர்மானம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அங்கீகரிக்கின்றது, ஜனநாயக வழிமுறைகள் மூலம் சுயநிர்ணய உரிமைக்கான தமிழர்களின் உரிமையை வலியுறுத்துகின்றது என தெரிவித்த அவர் இலங்கையில் தொடரும் பதற்றங்களிற்கு அமைதியான ஜனநாயக தீர்வுகள் அவசியம் என்பதை தீர்மானம் வலியுறுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார்.

இந்த தீர்மானம் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பை முன்வைக்கின்றது. இவ்வாறான அணுகுமுறை உலகின் பல பகுதிகளில் பின்பற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இலங்கையின் வரலாற்றின் இருள்படிந்த அத்தியாயங்களின் முடிவை நாங்கள் நினைவுகூரும் அதேவேளை நாங்கள் எதிர்காலத்தை நோக்கியும் சிந்திக்கவேண்டும் என குறிப்பிட்ட வில்லியம் நிக்கெல் இந்த எதிர்காலம் அனைத்து மக்களினதும் உரிமைகளும் கௌரவமும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக காணப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

எங்களால் இதனை செய்ய முடியும் நாங்கள் இணைந்து நிற்போம் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிப்பதற்கு தமிழர்களிற்கு உள்ள உரிமையை மதிக்கும் ஜனநாயக அமைதி தீர்விற்காக பரப்புரை செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கான ஆதரவு மெதுவாக ஆனால் நிச்சயமாக அதிகரிப்பதை நாங்கள் காணமுடிகின்றது. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்  ஈழத்தமிழர்கள் விவகாரத்திற்கு அமெரிக்க காங்கிரஸின் இரு கட்சிகளினதும் ஆதரவு உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த முக்கியமான தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் உள்ள எனது சகாக்களை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்த அவர் இது முன்னுதாரணத்தின் மூலம் தலைமை வகிப்பதற்கான சிறந்த உதாரணம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளிற்காக குரல்கொடுப்பதற்கான தமிழ்மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை தமிழர்களின் கதை போராட்டங்களின் கதைகளில் ஒன்று என தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் டொம் டேவிஸ் எங்கு அநீதி நிலவினாலும் அது நீதிக்கு அச்சுறுத்தலே என மார்ட்டின் லூதர் கிங் தெரிவித்ததை நினைவுபடுத்துகின்றேன் எனவும் தெரிவித்தார்.

jhon_davis.jpg

தமிழர்களிற்கு எதிரான அநீதி உலகில் நீதிக்கான அச்சுறுத்தல் என குறிப்பிட்ட அவர் 2009 இனப்படுகொலைக்கு இட்டுச்சென்ற துயரமான சம்பவங்கள் பாராபட்சத்தின் கொடுமைகளை நினைவுபடுத்துகின்றன எனவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/183839

பிரித்தானிய நகரம் ஒன்றின் முதல்வராக இலங்கை தமிழர் பதவியேற்பு

3 days 7 hours ago

பிரித்தானிய (British) நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து (Sri Lanka) ஏதிலியாக சென்ற தமிழர் பதவியேற்றுள்ளார்.

தொழில் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் (Elango Elavalakan) என்பவரே இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.

"நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த பெரிய நகரத்தின் முதல்வராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று இளவழகன் கூறியுள்ளார்.

வேட்புமனு

 

இவருக்கான வேட்புமனுவை சபையின் தலைவர் நீல் மெக்டொனால்ட் (Neil MacDonald) முன்மொழிந்துள்ளார்.

"போர் மற்றும் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடிய ஒரு ஏதிலியின் இந்த அறிவிப்பு, ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கி இங்குள்ள சமூகத்திற்கு அவர் பங்களித்த ஒரு செய்தியை எடுத்துச்செல்லும்” என்று அவர் கூறியுள்ளார்.

/sri-lankan-tamil-first-hindu-mayor-british-city

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த பதவியேற்பின்போது இப்ஸ்விச் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் அதில் கலந்து கொண்டுள்ளனர்.

 

பன்முகத்தன்மை

இந்நிலையில், இந்து ஒருவர் முதல்வராக வருவது நகரத்தின் பெரும் பன்முகத்தன்மையையும் பன்முக கலாசாரத்தையும் காட்டுகிறது என்று நகர இந்து சமாசத்தின் தலைவரான சச்சின் கராலே கூறியுள்ளார்.

முன்னதாக இலங்கையை விட்டு வெளியேறிய இளவழகன் இந்தியா, உகண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் பணிபுரிந்த பின்னர் இங்கிலாந்துக்கு சென்றுள்ளார்.

/sri-lankan-tamil-first-hindu-mayor-british-city

 

அவர் ஆரம்பத்தில் கிழக்கு லண்டனில் உள்ள இல்ஃபோர்டுக்கு (Ilford)) குடிபெயர்ந்ததோடு 2006இல் இப்ஸ்விச்சிற்குச் சென்றுள்ளார்.

இந்தநிலையில் இளவழகன் 2014இல் செயின்ட் ஜோன்ஸ் தொகுதிக்கான தொழில் கட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/sri-lankan-tamil-first-hindu-mayor-british-city-1715913118?itm_source=parsely-detail

தமிழ்வின் மேல் உள்ளவாறு பல்லு தீட்டுது

யாழ் முஸ்லிம் பின்வருமாறு பல்லு தீட்டுது 

இலங்கையிலிருந்து அகதியாக சென்றவர், பிரித்தானியாவில் முதல்வராக பதவியேற்பு.

 

66869d00-12ea-11ef-9aa9-01d820713846.jpeg

 

 
பிரித்தானிய நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து அகதியாக சென்ற இலங்கையர் பதவியேற்றுள்ளார்.

 

 

தொழில் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் என்பவரே இப்ஸ்விச்  மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.

 

"நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த பெரிய நகரத்தின் முதல்வராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று இளவழகன் கூறியுள்ளார்.

 

இவருக்கான வேட்புமனுவை சபையின் தலைவர் நீல் மெக்டொனால்ட் முன்மொழிந்துள்ளார்.

 

"போர் மற்றும் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடிய ஒரு அகதியின் இந்த அறிவிப்பு, ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கி இங்குள்ள சமூகத்திற்கு அவர் பங்களித்த ஒரு செய்தியை எடுத்துச்செல்லும்” என்று அவர் கூறியுள்ளார்.

 

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த பதவியேற்பின்போது இப்ஸ்விச் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் அதில் கலந்து கொண்டுள்ளனர்.

 

இந்நிலையில், இந்து ஒருவர் முதல்வராக வருவது நகரத்தின் பெரும் பன்முகத்தன்மையையும் பன்முக கலாசாரத்தையும் காட்டுகிறது என்று நகர இந்து சமாசத்தின் தலைவரான சச்சின் கராலே கூறியுள்ளார்.

 

முன்னதாக இலங்கையை விட்டு வெளியேறிய இளவழகன் இந்தியா, உகண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் பணிபுரிந்த பின்னர் இங்கிலாந்துக்கு சென்றுள்ளார்.

 

அவர் ஆரம்பத்தில் கிழக்கு லண்டனில் உள்ள இல்ஃபோர்டுக்கு குடிபெயர்ந்ததோடு 2006இல் இப்ஸ்விச்சிற்குச் சென்றுள்ளார்.

 

இந்தநிலையில் இளவழகன் 2014இல் செயின்ட் ஜோன்ஸ் தொகுதிக்கான தொழில் கட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_320.html

ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் - தென்னாபிரிக்கா வேண்டுகோள்

3 days 18 hours ago

Published By: RAJEEBAN

17 MAY, 2024 | 12:41 PM
image
 

ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் கைவிடவேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என தென்னாபிரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

தென்னாபிரிக்க சட்டத்தரணிகள் எழுத்துமூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஏழு மாத காசா யுத்தம் 35000 பேரை கொலை செய்துள்ளதுடன் காசாவை தரைமட்டமாக்கியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

துயரம் என்பது மிகமோசமானதாக காணப்படுவதால் உணவு மருந்து போன்றவற்றை காசாவிற்குள் கொண்டு செல்வதற்கு யுத்தநிறுத்தம் அவசியமாகின்றது என தென்னாபிரிக்கா சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் தரைத்தாக்குதலை ரபா எதிர்கொண்டுள்ளது, இது பாலஸ்தீனியர்களின் வாழ்க்கையின் அடித்தளத்தையே அழித்துவிடும் என தென்னாபிரிக்க சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/183769

யுக்ரேனை தொடர்ந்து ரஷ்யாவின் அடுத்த குறி ஜார்ஜியாவா? வீதிகளில் இறங்கிப் போராடும் மக்கள்

3 days 18 hours ago
ஜார்ஜியா, ரஷ்யா, யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கடெரினா கின்குலோவா
  • பதவி, பிபிசி உலக சேவை
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜார்ஜியா நாட்டில், 'ரஷ்யா சட்டம்' என்று அழைக்கப்படும் 'வெளிநாட்டுச் செல்வாக்கு' பற்றிய புதிய சட்டத்திற்கு எதிராக வெகுஜன மக்களின் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மற்றொருபுறம் ரஷ்யாவில் இருந்து விலகி ஐரோப்பாவை நோக்கி நகரும் முயற்சிகள், தற்போது யுக்ரேனுக்கு நேர்ந்திருக்கும் போர் மற்றும் ஆக்கிரமிப்பை ஜார்ஜியாவிலும் ஏற்படுத்தும் என்ற கவலைகளும் அந்நாட்டில் அதிகரித்து வருகின்றன.

கிழக்கு ஐரோப்பாவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் இடையிலுள்ள பகுதியான தெற்கு காகசஸ் பகுதியில் அமைந்துள்ள நாடு ஜார்ஜியா. இதன் மக்கள்தொகை 37 லட்சம். இது முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு பகுதி. இந்நாடு இன்றைய ரஷ்யாவின் செல்வாக்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக நீண்டகாலமாகக் கருதப்பட்டு வருகிறது. 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த பின், அதன் பல கூட்டமைப்பு நாடுகள் எந்த அரசியல் அமைப்பைத் தேர்ந்தெடுப்பது, எந்த சர்வதேசக் கூட்டணிகளில் சேர்வது என்ற அடிப்படையில் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க ஒரு வரலாற்று வாய்ப்பை வழங்கியது.

எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா போன்ற பால்டிக் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் சேரும் முடிவை ரஷ்யா ஏற்றுக்கொண்டது.

ஆனால் யுக்ரேனின் கதை வேறு. ரஷ்யா தன் செல்வாக்கு மண்டலத்தின் பகுதியாக நீண்ட காலமாகக் கருதிய ஒரு மிகப் பெரிய நாடு யுக்ரேன். 2014இல் ஐரோப்பிய சார்பு மக்கள் போரட்டங்களுக்குப் பிறகு, ரஷ்யாவின் நெருக்கமான பொருளாதார ஒன்றியத்தில் இருந்து விலகிச் செல்ல யுக்ரேன் முடிவு செய்தது.

இதனால் கிரைமியா மற்றும் கிழக்கு யுக்ரேனின் சில பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்தது. அதற்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது யுக்ரேன் மீது ரஷ்யா ஒரு முழு அளவிலான போரை நடத்தி வருகிறது. மேலும் பல யுக்ரேனிய பகுதிகள் ரஷ்ய ஆதிக்கத்தின் கீழ் உள்ளன.

ஜார்ஜியாவும் இதேபோன்ற கதியைச் சந்திக்கக் கூடுமா?

 
ஜார்ஜியாவில் எதற்காகப் போரட்டம் நடக்கிறது?
ஜார்ஜியா, ரஷ்யா, யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜார்ஜியாவின் சர்ச்சைக்குரிய 'ரஷ்யா சட்டம்' தற்போதைய போராட்டங்களைத் தூண்டியிருக்கிறது.

இந்த வாரத் துவக்கத்தில், ஜார்ஜியாவின் நாடாளுமன்றம் ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றியது. அதில் வெளிநாட்டிலிருந்து 20%-க்கும் அதிகமான நிதியைப் பெறும் சில நிறுவனங்கள் தங்களை`வெளிநாட்டுச் செல்வாக்கின் முகவர்களாகப்` பதிவு செய்ய வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. நிதி சம்பந்தமான தகவல்களை வெளியிட வேண்டுமென்றும், விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்தச் சட்டம் கூறுகிறது.

ஜார்ஜியாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சுயாதீன ஊடகங்களும் வெளிநாட்டிலிருந்து மானியங்கள் மற்றும் பிற நிதிகளுக்கு விண்ணப்பிப்பது பொதுவானது என்று, ஜார்ஜியாவின் தலைநகரான டிபிலிசியில் உள்ள பிபிசி நிருபர் நினா அக்மெடெலி கூறுகிறார். இந்த அமைப்புகளின் பணி, நாட்டின் குடிமைச் சமூகத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக மாறியுள்ளது.

ஜார்ஜியாவை ஆளும் கட்சியான 'ஜார்ஜிய கனவு' (Georgian Dream), நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை முன்மொழிந்தது. ஆனால் இது அரசின் மீதான விமர்சனங்களை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்படவில்லை, மாறாக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதையும், பல்வேறு அமைப்புகளுக்குப் பின்னால் யார் இருக்கக்கூடும் என்பது குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றது.

ஆனால் திபிலிசியில் உள்ள இலியா பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கை பேராசிரியரான ஹான்ஸ் குட்ப்ராட், இந்த மசோதா 'பெயருக்கு மட்டும்தான்' வெளிப்படைத்தன்மை பற்றியது என்று கூறுகிறார்.

"இது பொதுச் சமூகத்தின் மீதான பலமுனைத் தாக்குதலின் ஒரு பகுதியாகும். இது ஜார்ஜியாவில் சில காலமாகவே நடந்து வருகிறது. இந்தச் சட்டம் 'யாரை வேண்டுமானாலும் அடக்குமுறைக்கு உள்ளாக்கும்' சட்டமாகும். நீங்கள் விரும்பாத எந்தவொரு குடிமைச் சமூக அமைப்பையும் அடக்குமுறைக்கு உள்ளாக்க அனுமதிக்கும் வகையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது,” என்று குட்ப்ராட் கூறுகிறார். இவர் 1990களில் இருந்து காகசஸ் பகுதியைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து வருகிறார்.

இந்தச் சட்டம் இறுதியாக நிறைவேற்றப்பட்டபோது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா எச்சரிக்கை செய்தன. "இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வது ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதையில் பயணிக்கும் ஜார்ஜியாவின் முன்னேற்றத்தைப் பாதிக்கும்," என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் இந்தச் சட்டத்தை 'எதேச்சதிகாரமானது' மற்றும் 'ரஷ்ய-பின்புலமுடையது' என்று கண்டித்து திபிலிசியின் தெருக்களில் இறங்கிப் போராடினர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் சம்பவித்தது.

சர்வாதிகார சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக ஜார்ஜியா இருந்த வரலாற்றைக் குறிப்பிட்டு பிபிசியிடம் பேசிய ஒரு போராட்டக்காரர், "நாங்கள் எந்தக் குழியிலிருந்து வெளியே வந்தோமோ அதற்குள் மீண்டும் தள்ளப்படக்கூடாது என்பதற்காகப் போராடி வருகிறோம்," என்றார்.

 
போராட்டத்துக்கும் ரஷ்யாவுக்கும் என்ன தொடர்பு?
ஜார்ஜியா, ரஷ்யா, யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,'ஜார்ஜியன் ட்ரீம்' கட்சியின் கௌரவத் தலைவர், பிட்ஜினா இவானிஷ்விலி என்ற கோடீஸ்வரர் ஆவார்.

இந்த ஜார்ஜிய சட்டம், தனது எதிர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்த ரஷ்யா பயன்படுத்தும் ஒரு சட்டத்தை ஒத்திருக்கிறது. வரும் அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் அடுத்த ஜார்ஜிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்படது.

இந்தத் தேர்தல், 2012 முதல் ஜார்ஜியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் 'ஜார்ஜியன் ட்ரீம்' கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்கக்கூடும். இக்கட்சியின் கொள்கைகள், ரஷ்யாவை போலவே ஒரு அரசியல் குழுவின் கைகளில் அதிகாரத்தைக் குவிப்பதாகக் கருதப்படுகிறது.

'ஜார்ஜியன் ட்ரீம்' கட்சியின் கௌரவத் தலைவர், ஃபிட்ஜினா இவானிஷ்விலி என்ற கோடீஸ்வரர். அவருடைய சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.40,905 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது (4.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்). இது ஜார்ஜியாவின் பட்ஜெட்டைவிட அதிகம், மற்றும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% ஆகும். அவரது பல வணிகங்கள் ரஷ்யாவுடன் நெருக்கமாக உள்ளன.

"ஜார்ஜியா அரசின் எதேச்சதிகாரப் போக்கு அதிகரித்து வருவதாகவும், குடிமைச் சமூகத்தை அடக்கும் செயல்முறையில் ரஷ்யாவை பின்பற்றப் பார்ப்பதாகவும் நான் நினைக்கிறேன்," என்கிறார் பொலிட்டிகோ என்ற ஊடக நிறுவனத்தின் தெற்கு காகசஸ் நிருபர் கேப்ரியல் கேவின்.

"அதே நேரத்தில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இவானிஷ்விலிக்கு இதுகுறித்து அறிவுரை வழங்க வேண்டியிருந்தது என்று நான் நினைக்கவில்லை. இந்த விஷயத்தில் இவானிஷ்விலிக்கு உந்துதல் தேவையில்லை. ஏனெனில் புதினைப் போலவே வெளிநாட்டுச் செல்வாக்கின் அச்சுறுத்தலைப் பற்றி அவர் அதே அச்சங்களை அனுபவிக்கிறார்," என்றார் அவர்.

 
உலக அரசியலில் ஜார்ஜியா எவ்வளவு முக்கியமானது?
ஜார்ஜியா, ரஷ்யா, யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் சம்பவித்தது

ஜார்ஜியா அமைந்துள்ள தெற்கு காகசஸ் பகுதி 'ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான நுழைவாயில்' என்று விவரிக்கப்படுகிறது. இது பண்டைய உலகின் வர்த்தகப் பாதைகளின் தாயகம். இது இன்று வரை முக்கியமாக இருந்து வருகிறது. வரலாற்று ரீதியாக, இரான், துருக்கி மற்றும் ரஷ்யா போன்ற வல்லரசுகள் இந்தப் பிராந்தியத்திற்காகச் சண்டையிட்டன. மேலும் இப்பகுதியில் செல்வாக்கு செலுத்துவதற்காகத் தொடர்ந்து போட்டியிடுகின்றன. சமீபகாலமாக, சீனா மற்றும் மேற்கத்திய சக்திகளும்கூட இப்பகுதியின்மீது அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.

ஜார்ஜியா 19ஆம் நூற்றாண்டில் ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு எப்போதும் சிக்கலாகவே இருந்து வருகிறது. ஏனெனில், ஜார்ஜியா வரலாற்றின் சில காலகட்டங்களில் ரஷ்யாவுடனும், மற்று காலகட்டங்களில் மற்ற நாடுகளுடனும் வெருக்கமாக இருந்து வந்துள்ளது.

கடந்த 1918இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து 1991 வரை ஜார்ஜியா ரஷ்யா ஆதிக்கம் செலுத்திய சோவியத் யூனியனின் பகுதியாக இருந்தது. 1980களில் தேசிய அடையாள மறுமலர்ச்சியை அனுபவித்த முதல் சோவியத் குடியரசுகளில் ஜார்ஜியாவும் ஒன்று. இது நாடு தழுவிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அமைந்தது. அது சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

கடந்த 2003இல் நடந்த 'ரோஜாப் புரட்சி'யின் மூலம் (Rose Revolution) ஜனநாயக மாற்றத்தை அனுபவித்த முதல் முன்னாள் சோவியத் நாடு ஜார்ஜியா.

இது ஜார்ஜியாவின் சோவியத் எதேச்சாதிகார வரலாற்றை அசைக்க முயன்றது. இது ரஷ்யாவை நேருக்கு நேர் பார்க்காத ஓர் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் சேர்வதை நோக்கி ஜார்ஜியாவை தீவிரமாக வழிநடத்த முயன்றது. 2008ஆம் ஆண்டில், ரஷ்யா ஜார்ஜியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. இன்றும் ரஷ்ய படைகள் திபிலிசியில் இருந்து சுமார் 130கி.மீ. தூரத்தில் நிறித்தி வைக்கப்பட்டுள்ளன.

 
யுக்ரேனுடனான ஒப்பீடுகள் சரியா?
ஜார்ஜியா, ரஷ்யா, யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த 2008ஆம் ஆண்டு ஜார்ஜியாவின் சில பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்தது.

கடந்த சில வாரங்களாக, பல ஆய்வாளர்கள் 'வரலாறு திரும்புவதை' பற்றிப் பேசி வருகின்றனர். ஓர் அரசின் எதேச்சாதிகாரப் போக்குகள் தீவிரமடைகின்றன, அதன் ஜனநாயகப் போக்கில் இருந்து திசை திரும்புகிறது, அங்கு எதிர்ப்புகள் வெடிக்கின்றன, இறுதியில் ரஷ்யா அங்கு நுழைந்து காலூன்றுகிறது.

இதுபோன்ற நிகழ்வுகள் 2013-2014இல் யுக்ரேனில் நடந்தன. 2022இல் மோசமடைந்தன. 1945க்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போர் வெடித்தது. ஆனால் ஜார்ஜியாவின் விஷயத்தில் பெரிய வேறுபாடுகள் உள்ளன.

முதலாவதாக, ஜார்ஜியா 2003 மற்றும் 2008க்கு இடையில் யுக்ரேன் பாணியிலான நிகழ்வுகளை அனுபவித்தது. அதைத் தொடர்ந்து எதிர்ப்புகள் நிகழ்ந்தன. ரஷ்ய படையெடுப்பு நிகழ்ந்தது. அதன் 20% நிலப்பரப்பு ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது.

இங்கு உண்மையான கேள்வி என்னவென்றால்: ஜார்ஜியாவின் ரஷ்ய-நட்பு அரசாங்கம் கட்டுப்பாட்டை இழந்தால் ரஷ்யா ஜார்ஜியாவை மேலும் ஆக்கிரமிக்குமா?

இந்தச் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது. ஆனால் 'ஜார்ஜியன் ட்ரீம்' கட்சி தன் கட்டுப்பாட்டை இழப்பதும் சந்தேகம்தான்.

பிபிசி நிருபர் நினா அக்மெடெலி கூறுவது போல, ஜார்ஜியா ஒரு பிளவுபட்ட சமூகம். அங்கு பெரும்பான்மையான மக்கள் நிலமை மோசமடைவதைப் பற்றிக் கவலைப்படுகின்றனர். சிலர் உண்மையிலேயே ஆளும் கட்சியை ஆதரிக்கின்றனர். ஜார்ஜியா போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு ரஷ்யாவுடன் ஒட்டிக்கொள்வது ஒரு நடைமுறைத் தேர்வு என்று சிலர் நம்புகிறார்கள். அதன் பொருளாதாரம் அதன் பரந்த அண்டை நாடுகளுடனான வர்த்தகத்தை நம்பியுள்ளது, ரஷ்யாவை எதிர்த்துப் போரிடுவதைக் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஜார்ஜியாவின் ராணுவம் மிகச் சிறியது, என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

சர்ச்சைக்குரிய 'வெளிநாட்டு செல்வாக்கு' சட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக இவானிஷ்விலி ஓர் அரிய பொது உரையை நிகழ்த்தினார். அதில் ரஷ்யாவுடனான மோதலில் ஜார்ஜியா மக்களைப் பலிகொடுக்க நினைக்கும் மேற்கு நாடுகளின் முயற்சியைத் தடுக்க இந்தச் சட்டம் அவசியம் என்று கூறினார்.

திபிலிசியின் தெருக்கள் போரட்டக்காரர்களால் நிறைந்துள்ளன. அவர்களில் பலர் 35 வயதிற்கு உட்பட்டவர்கள். ஜார்ஜியாவின் எதிர்காலம் ஒரு நூலிழையில் தொங்குகிறது. அங்கு, ரஷ்யா போன்ற ஒரு நாட்டில் வாழும் சாத்தியத்தை நினைத்துப் பலரும் அதிர்ச்சியடைகிறார்கள். யுக்ரேன் எதிர்கொண்ட அழிவு மற்றும் உயிரிழப்பு போன்றவற்றைப் அனுபவிக்கும் சாத்தியத்தை நினைத்துப் பலரும் பயப்படுகிறார்கள்.

https://www.bbc.com/tamil/articles/crgym3z4x47o

புதின் - ஜின்பிங் சந்திப்பு - யுக்ரேன் போர் பற்றிய நிலைப்பாடுகள் மாறுமா?

4 days 15 hours ago
சீனா, ரஷ்யா, விளாதிமிர் புதின், ஷி ஜின்பிங், யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், லாரா பிக்கர்
  • பதவி, பிபிசி சீனா செய்தியாளர்
  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சீனாவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்கிறார்.

புதின் ஐந்தாவது முறை ரஷ்யாவின் அதிபராகப் பதவியேற்றபின்னர் இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். யுக்ரேன் மீது அவர் படையெடுப்பினைத் துவங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சீனா ரஷ்யாவுக்கு முக்கிய நட்பு நாடாக இருந்துவருகிறது. சீனா யுக்ரேன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போரைக் கண்டிக்க மறுத்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபத்திற்கு ஆளான ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகிறது.

இன்று (வியாழன், மே 16) நடந்துவரும் இந்தச் சந்திப்பில் ஷி ஜின்பிங்-உடன் யுக்ரேன் போரைப் பற்றி பேசியதாக புதின் தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல்-காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவது மிகவும் அவசரமான குறிக்கோள் என்று இரண்டு தலைவர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

இருப்பினும், புதின் இதற்கு மேலும் ஆதரவை எதிர்பார்க்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் அதற்கான விலையைக் கொடுக்க சீனா தயாராக உள்ளதா?

சீனா, ரஷ்யா, விளாதிமிர் புதின், ஷி ஜின்பிங், யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,POOL

படக்குறிப்பு,மே 16, வியாழன் அன்று புதின்-ஜின்பிங் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படம்
சீனா-ரஷ்யா உறவு எப்படியிருக்கிறது?

கடந்த வாரம் ஐந்தாவது முறை ரஷ்ய அதிபராகப் பதவியேற்ற பின்னர் புதின் தனது முதல் வெளிநாட்டு பயணத்திற்குச் சீனாவைத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை. இந்த இருநாள் அரசுமுறைப் பயணம் அவர்களின் உறவு 'எப்போதும் இல்லாத உயர்ந்த நிலையை' எட்டியதால் வருகிறது என்று சீன அரசு ஊடகத்திடம் தெரிவித்தார். அவர் சீனத் தற்காப்புக் கலைகள் மற்றும் சீனத் தத்துவத்தின் மீது தனக்கிருக்கும் ஆர்வத்தைப் பற்றிப் பேசினார். மேலும் அவரது குடும்பத்தில் சிலர் சீனாவின் மாண்டரின் மொழியைக் கற்று வருவதாகவும் கூறினார்.

"இன்று நிலவிவரும் கடினமான சர்வதேசச் சூழ்நிலையில், எங்கள் உறவுகள் இன்னும் வலுவடைந்து வருகின்றன," என்று அவர் கூறினார்.

ஆனால் புதின் சீனாவுடனான தனது நட்பைப் பற்றித் தற்பெருமை பேசும் அதேசமயம், ஷி ஜின்பிங் கவலைப்படுவதற்குக் காரணங்களும் இருக்கலாம்.

ரஷ்யாவுடன் வணிக உறவுகளில் இருக்கும் பெய்ஜிங் மற்றும் ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட சீன வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக, புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் தற்போதுள்ள பொருளாதாரக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க உதவுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

சீனா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்கவில்லை என்றாலும், போருக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா நம்புகிறது.

பெய்ஜிங்கிற்கு சமீபத்தில் பயணித்த அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன், பனிப்போருக்குப் பிறகு ஐரோப்பிய பாதுகாப்புக்கு 'பெரும் அச்சுறுத்தலைத் தூண்டுவது சீனா தான்' என்று பிபிசியிடம் கூறினார்.

சீனா, ரஷ்யா, விளாதிமிர் புதின், ஷி ஜின்பிங், யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஷி ஜின்பிங், புதின் மீது அதிக அழுத்தத்தை செலுத்துமாறு பலர் வலியுறுத்தி வருகின்றனர்

ஆனால் யுக்ரேன் மீதான அதன் நிலைப்பாடு நடுநிலையானது என்று சீனா கூறி வருகிறது. மேலும் அது ரஷ்யாவிற்கு விற்கும் தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்கள் போர் தவிர்த்த வணிகரீதியான பயன்பாடுகளையும் கொண்டுள்ளதால் அவை விதிகளை மீறவில்லை என்கிறது.

இருந்தபோதிலும், கடந்த வாரம் ஷி ஜின்பிங் பிரான்ஸுக்குச் சென்றிருந்த போதும் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. சீனாவுக்கு நற்பெயர் வாங்குவதற்காக ஃபிரான்சுக்குச் சென்றிருந்த அவரது நோக்கத்தை இது திசைதிருப்பியது.

சீனா மீது சந்தேகம் தெரிவிப்பவர்களும், சீனா மீது இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்களும் தங்களது வாதங்களை இன்னும் சத்தமாக முன்வைத்து வருகின்றனர். ஷி ஜின்பிங், புதின் மீது அதிக அழுத்தத்தை செலுத்துமாறு அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஐரோப்பிய ஒன்றியமும் சீனா மீது அதன் சொந்தத் தடைகளை விதிக்கப் பரிசீலித்து வருகிறது.

அதேசமயம் சீனாவின் பொருளாதாரம் இப்போது மந்தமாக இருக்கிறது. தனது வர்த்தக பங்காளிகள் தன்மீது செலுத்தும் இந்த அழுத்தத்தை அதனால் தாங்கிக்கொள்ள முடியாது. உள்நாட்டில் தேவை பலவீனமாக இருப்பதால் வெளிநாட்டுச் சந்தைகள் சீனாவுக்கு அவசியமாகும்.

இவை அனைத்தும் ஷி ஜின்பிங்கை ஒரு சங்கடமான சூழ்நிலையில் தள்ளுகின்றன.

 
சீனா, ரஷ்யா, விளாதிமிர் புதின், ஷி ஜின்பிங், யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சீனா, ரஷ்யாவுடனான தனது மூலோபாயக் கூட்டணியின் 'வரம்பற்ற தன்மையை' அவ்வளவு முக்கியமானதல்ல என்பதுபோலக் காட்டிக்கொள்கிறது
'வரம்புகள் இல்லாத நட்பு' என்னவானது?

ரஷ்யா யுக்ரேனை ஆக்கிரமிப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு, புதினும் ஷின்பிங்கும் இருநாட்டு ஒத்துழைப்பை ஆழப்படுத்த 'வரம்புகள் இல்லாத' கூட்டாண்மையை அறிவித்தனர். மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இரு நாடுகளுக்கும் இது அவசியமானதாக இருந்தது.

அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கை மறுவடிவமைப்பதில் ரஷ்யா முக்குயப் பங்காற்றும் என்று சீனா கருதுகிறது. இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் செழித்து வருகிறது. 'பவர் ஆஃப் சைபீரியா' குழாய் வழியாக தொடர்ந்து வழங்கப்பட்டுவரும் எரிவாயு ஏற்றுமதி உட்பட மலிவான ரஷ்ய எரிசக்தி சீனாவிற்கு நன்மையாக உள்ளது.

ஆயினும்கூட, யுக்ரேன் போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இந்தக் கூட்டணி அவ்வளவு 'வரம்புகள் இல்லாததாகத்' தோன்றவில்லை. ஒன்று, இந்த வார்த்தை இருநாட்டு அரச ஊடகங்களில் இருந்து கிட்டத்தட்ட மறைந்து விட்டது, என்று பிபிசி பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.

சீனா, ரஷ்யாவுடனான தனது மூலோபாயக் கூட்டணியின் 'வரம்பற்ற தன்மையை' அவ்வளவு முக்கியமானதல்ல என்பதுபோலக் காட்டிக்கொள்கிறது, என்கிறார் 'கார்னகி எண்டோமென்ட்' சிந்தனைக் குழுவின் மூத்த ஆய்வாளரான ஜாவோ டோங்.

"மேற்கத்திய செல்வாக்கைக் குறைக்கும் இலக்கை சீனா ஆதரிக்கும் அதே வேளையில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல் உட்பட ரஷ்யாவின் சில தந்திரோபாயங்களுடன் சீனா உடன்படவில்லை. ரஷ்யாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினால் வரும் களங்கத்தை சீனா நன்கு அறிந்திருக்கிறது. உலக அரங்கில் தனது சட்டபூர்வமான தன்மையை மேம்படுத்துவதற்கான உத்திகளை அது தொடர்ந்து செம்மைப்படுத்தி வருகிறது," என்றார்.

சமீபத்தில் ஐரோப்பா சென்றிருந்த ஷி ஜின்பிங் "சீனா நெருக்கடியை உருவாக்கவில்லை, அதில் பங்கேற்கவும் இல்லை" என்று கூறினார். இதையே சீனா தனது சொந்த குடிமக்களுக்கும் சொல்லி வருகிறது.

 
சீனா, ரஷ்யா, விளாதிமிர் புதின், ஷி ஜின்பிங், யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பினைத் துவங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிறது
ஷி ஜின்பிங் அமைதித் தூதுவரா?

ஆனால் சீனாவின் இந்த நடுநிலை நிலைப்பாடு, யுக்ரேன் மீதான அனுதாபம் என்று அர்த்தப்படாது. சீனாவின் வெகுவாகத் தணிக்கை செய்யப்பட்ட ஊடகங்களிலிருந்து இது எளிதில் தெரியும்.

சீன அரசு ஊடகம் இன்னும் ரஷ்யாவின் படையெடுப்பை நியாயப்படுத்துகிறது. அதனை 'அமெரிக்க-ஆதரவு நேட்டோ விரிவாக்கத்திற்கு எதிராக ரஷ்யாவின் துரிதமான பதிலடி' என்று கூறுகிறது.

ஆனால், சீனாவில் மாறுபட்ட குரல்களும் உள்ளன. சீனாவின் பொதுமக்களில் சிலர், ரஷ்யாவுடனான 'வரம்பற்ற உறவை' ஆதரிக்க எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறார்கள் என்பதில் விரிசல் தோன்றக்கூடும் என்று சந்தேகம் எழுப்பப்படுகிறது.

ஃபுடான் பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வு மையத்தின் இயக்குநராக இருக்கும் ஃபெங் யுஜுன் சமீபத்தில் 'தி எகனாமிஸ்ட்' இதழில், 'ரஷ்யா யுக்ரேனில் தோல்வியடைவது உறுதி' என்று எழுதியிருந்தார்.

சீனாவில் இது ஒரு துணிச்சலான கருத்து.

ஆனால், ஷி ஜின்பிங், தான் ஒரு அமைதித் தூதுவராக இருப்பதற்கான சமிக்ஞைகளைக் கொடுத்திருக்கிறார்.

கடந்த மார்ச் மாதம், மாஸ்கோவிற்கு அரசுமுறைப் பயணமாகச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு, அவர் யுக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சீனா "எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறது" என்று கூறினார். அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான தனது 12-அம்ச அமைதித் திட்டத்தையும் சீனா வெளியிட்டது.

இருந்தும், புதின்-ஜின்பிங் சந்திப்பால், இந்தக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் வராது.

ஆனால் மேற்கத்திய நாடுகள் சீனா-ரஷ்யா கூட்டணியால் பொறுமையிழந்து வருகின்றன. அமைதி காப்பாளராக இருக்கும் ஷி ஜின்பிங்கின் முயற்சிகள் இதுவரை பலிக்கவில்லை. முன்பு 'தோழன்' என்றும் 'அன்பான நண்பன்' என்றும் அவர் அழைத்த, சர்வதேச வெறுப்பைச் சம்பாதித்த ரஷ்யா போன்ற நாட்டோடு 'தோளோடு தோள்' நிற்பது எவ்வளவு அபாயகரமானது என்பதை அவர் சிந்திப்பார்.

https://www.bbc.com/tamil/articles/c0jkj9q95pgo

வானில் பறக்கும் ஆறுகள்: கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்த வல்ல இவற்றைப் பின்தொடரும் விஞ்ஞானிகள்

4 days 17 hours ago
வளிமண்டல நதிகள்: புயல்கள் கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்தும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,US AIR FORCE

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சோஃபி ஹர்டாக்
  • பதவி,‎
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

'வளிமண்டல நதிகள்' அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. அவை மேலும் வலுவடைந்து வருகின்றன. அடுத்து எவ்விடத்தைத் தாக்கும் என்று கணிக்க விஞ்ஞானிகள் வானத்தில் அவற்றைத் துரத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம், ஆன்னா வில்சன் 'கல்ஃப்ஸ்ட்ரீம் IV ஜெட்' விமானத்தில் அமர்ந்து, வடக்கு பசிபிக் பெருங்கடலின் மேல் இருந்த வெள்ளை மேகங்களின் அமைதியான தோற்றத்தைக் கண்டார்.

வளிமண்டல விஞ்ஞானி மற்றும் தீவிர வானிலை நிபுணரான வில்சன் தனது ஹெட்ஃபோன்கள் மூலம் அவரது சக ஊழியர் `கவுண்டவுன்` எண்ணுவதைக் கேட்டார். விமானத்தின் பின்பகுதியில், மற்றொரு சக ஊழியர் மெலிதான, உருளை வடிவக் கருவிகளை ஒரு குழாய் மூலம் கீழே இருந்த புயலில் இறக்கி, அது அமெரிக்காவின் மேற்குக் கரையை நெருங்கும்போது அதன் வலிமை எவ்வளவு இருக்கும் என்று அளவிட்டார்.

அவர்கள் கண்காணிக்கும் புயல் 'வளிமண்டல நதி' என்றழைக்கப்படும் ஒரு வகையைச் சேர்ந்தது. இந்த வானிலை நிகழ்வு சமீபத்திய ஆண்டுகளில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் சிலநேரம் அவை ஏற்படுத்தும் பேரழிவு தாக்கத்தைப் புரிந்துகொள்ள முயன்று வருகிறாரகள். காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டல நதிகள் பெரிதாகவும், அடிக்கடி நிகழ்பவையாகவும் தீவிரமானதாகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் அவை ஏற்படுத்தும் சேதங்களும் மோசமாகி வருகின்றன.

பெரும்பாலும் வானத்தில் பறக்கும் நதிகள் என்று விவரிக்கப்படும், வளிமண்டல நதிகள் கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய நீராவி ரிப்பன்களாகும். ஒவ்வொன்றும் பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் அகலம் கொண்டவை. மிசிசிப்பி ஆற்றைவிட 27 மடங்கு தண்ணீரைக் கொண்டு செல்பவை.

சூடான கடல்களின் நீர் ஆவியாகி, மேலே உயர்ந்து, குளிர்ச்சியான அட்சரேகைகளுக்கு நகரும்போது, இவை உருவாகின்றன. கலிபோர்னியா போன்ற ஒரு கடற்கரையை இந்த நீராவி அடையும்போது, அது ஒரு மலையில் பாய்ந்து, குளிர்ந்து, மழையாகவோ அல்லது பனியாகவோ கீழே வருகிறது. இது மலைப்பகுதிகளில் வழிந்து நிலச்சரிவுகள், பெருமழை, வெள்ளம், மற்றும் கொடிய பனிச்சரிவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு வலுவானவை.

 
'புயல் வேட்டைக்காரர்கள்'
வளிமண்டல நதிகள்: புயல்கள் கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்தும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,'வளிமண்டல நதிகள்' ஏற்படுத்தும் சேதங்களும் மோசமாகி வருகின்றன

அமெரிக்காவின் மேற்குக்கரையில், இந்த வளிமண்டல நதிகள் அதீத மழை, மிக வெப்பமான புயல்கள், பெருவெள்ளம், தீவிர கடலோர காற்று மற்றும் நிலச்சரிவுகளை உருவாக்கின்றன. அவை குழுக்களாக வரலாம் - அப்போது அவை `குடும்பங்கள்` என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் பல வெகு சில நாட்களின் இடைவெளியில் நிகழ்கின்றன.

முன்பு ஆன்னா வில்சனும் அவரது சகாக்களும் ஒரு 'வளிமண்டல நதி' புயலுக்கு மேலே பறந்தவாறு ஆய்வு செய்வதாக முன்பு குறிப்பிட்டோம் அல்லவா! அந்தப் புயல்களின் குடும்பம் உண்மையில் நான்கு வளிமண்டல நதிகளால் உருவாக்கப்பட்டது. அது பின்னர் கலிபோர்னியாவில் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தியது. இதனால் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரேகானில் வெள்ளம் ஏற்பட்டது.

ஒவ்வொரு வளிமண்டல நதியும் எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரே மாதிரியானவை என்கிறார் கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகத்தின் கடலியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கள ஆராய்ச்சி மேலாளராக இருக்கும் வில்சன். "அது எங்கே நிலச்சரிவை உண்டாக்கப் போகிறது? அது எவ்வளவு வலுவாக இருக்கும்? எவ்வளவு காலம் நீடிக்கும்? இவற்றுக்குப் பதிலளிப்பத்தில் நாங்கள் மேம்பட்டு வருகிறோம்," என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்க விமானப்படை, தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (நோவா ப- Noaa) மற்றும் பிற அமைப்புகளின் கூட்டுத் திட்டமான வளிமண்டல நதி மறுசீரமைப்பு அல்லது ஏஆர் ரீகானின் (Atmospheric River Reconnaissance - AR Recon) ஒரு பகுதியாகத்தான் கடந்த ஜனவரி மாதம் வில்சன் புயலுக்குள் பயணித்தார். சூறாவளிகளைக் கண்காணிப்பதற்காக பொதுவாக பயன்படுத்தப்படும் 'சூறாவளி வேட்டைக்காரன்' ('hurricane hunter') எனப்படும் NOAA கல்ஃப்ஸ்ட்ரீம் ஜெட், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விமானப்படை விமானங்கள் ஆகியவற்றை விஞ்ஞானிகள் குழு வளிமண்டல நதிகளுக்கு மேல் செலுத்துகிறார்கள். அவற்றிலிருந்து `டிராப்சோன்ட்ஸ்` எனப்படும் கருவிகளை புயல்களில் நுழைத்துச் சோதனைகளை நடத்துகிறார்கள்.

"வளிமண்டல நதிகள் சுவாரஸ்யமானவை. ஆனால் நீங்கள் உண்மையில் அவற்றைப் பார்க்க முடியாது, ஏனெனில் அவை வெறும் நீராவி," என்று வில்சன் கூறுகிறார். "அவை உண்மையில் மேற்பரப்புக்கு நெருக்கமாக உள்ளன. அவை பொதுவாக வளிமண்டலத்தின் மிகத் தாழ்ந்த பகுதிகளில் கூடுகின்றன," என்கிறார்.

இந்தச் செயல்முறையின் போது அவர்கள் மேக மூட்டத்தின் கீழ் பயணிக்க முனைகிறார்கள், என்கிறார் வில்சன். இது செயற்கைக்கோள்கள் போன்ற வழக்கமான வானிலை கண்காணிப்புக் கருவிகளில் இருந்து அவற்றை மறைக்கிறது. "செயற்கைக்கோள்கள் மேற்பரப்பிற்கு அருகில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது மிகவும் கடினம். எனவே நமது சென்சார்களை கீழே இறக்கி, வெப்பநிலை, காற்றழுத்தம், காற்று, மற்றும் ஈரப்பதம் ஆகிய அடிப்படை வானிலை அளவீடுகளைப் பெறுகிறோம்," என்று அவர் கூறுகிறார்.

 
'ஆபத்தானவை, ஆனால் நன்மையும் உண்டு'
வளிமண்டல நதிகள்: புயல்கள் கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்தும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,ANNA WILSON

படக்குறிப்பு,ஆன்னா வில்சன்

கடந்த 2023ஆம் ஆண்டு இலையுதிர்காலம் மற்றும் 2024ஆம் ஆண்டு வசந்த காலத்துக்கு இடையில் வாஷிங்டன், ஓரிகான் மற்றும் கலிபோர்னியா ஆகிய பகுதிகளைத் தாக்கிய 51 வளிமண்டல நதிகளின் ஒரு பகுதிதான் வில்சன் மற்றும் அவரது குழுவினர் ஜனவரி மாதம் கண்காணித்து வந்த புயல்கள்.

முந்தைய பருவத்தைவிட 13 புயல்கள் அதிகமாக உருவாகின. அத்தகைய புயல் எப்போது, எங்கே வரும், அது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அறிவது, பூமியில் உள்ள மக்களுக்கு என்ன நேரப் போகிறது என்பதைத் தயாரிக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக, சரியான நீர்த்தேக்கங்களைச் சரியான நேரத்தில் காலி செய்ய உதவுகிறது. ஆனால் வில்சன் மற்றும் அவரது சகாக்கள் 2016இல் இந்தப் பணியைச் செய்யத் துவங்கினர். இது வளிமண்டல நதிகளை நன்கு புரிந்து கொள்வதற்கான பரந்த அறிவியல் முயற்சியின் ஒரு பகுதி. அவற்றின் ஆச்சரியமான நன்மைகளையும் அறிந்துகொள்ள இது முயல்கிறது.

தீவிர வானிலை நிபுணர்கள் சுட்டிக்காட்டுவது போல, வளிமண்டல நதிகள் அழிவுகரமானவை மாத்திரமே அல்ல. மாறாக, அவை உயிர்களுக்கு ஆதரவாகவும் இருக்கும்.

"நமக்கு வளிமண்டல நதிகள் அவசியம். அவை இல்லாவிட்டால் அமெரிக்காவின் மேற்கில் வறட்சி ஏற்படும்," என்று வில்சன் கூறுகிறார். அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் நிகழும் மூன்றில் இரண்டு பங்கு வறட்சிகள் வளிமண்டல நதிகளால் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன. அவை `வறட்சி நிவாரணிகள்` என்று அழைக்கப்படுகின்றன.

"வளிமண்டல நதிகள் நன்மையும் பயக்கின்றன," என்று கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் வளிமண்டல விஞ்ஞானி பின் குவான் ஒப்புக்கொள்கிறார். "நாங்கள் அவற்றின் அபாயகரமான பக்கத்தை முன்னிலைப்படுத்த முனைகிறோம். ஆனால் அவை கலிபோர்னியா போன்ற வறண்ட பகுதிகளில் முக்கியமான நீர் விநியோகத்தை வழங்குகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்," என்கிறார். ஒட்டுமொத்தமாக, கலிபோர்னியாவின் மழை மற்றும் பனியில் 50% வரை அவை உருவாக்குபவைதான்.

அமெரிக்கா மற்றும் கனடாவின் மேற்குக் கரையில், வளிமண்டல நதிகள் ஹவாய் அருகே தோன்றியவை என்று நம்பப்படுவதால், அவை `பைனாப்பிள் எக்ஸ்பிரஸ்` என்று அழைக்கப்படுகின்றன. இருப்பினும், வளிமண்டல நதிகள் உலகளாவிய நிகழ்வு என்பதால் வல்லுநர்களிடையே இந்தப் பெயர் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது என்று குவான் கூறுகிறார்.

மேலும் மேற்குக்கரையைத் தாக்கும் பல வளிமண்டல நதிகள் உண்மையில் ஹவாய்க்கு வெகு தொலைவில் உருவாகின்றன. 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், வழக்கத்திற்கு மாறாக, ஒரு நீண்ட வளிமண்டல நதி ஜப்பானில் இருந்து வாஷிங்டன் வரை சுமார் 8,000கி.மீ. நீண்டது.

கடந்த 2019ஆம் ஆண்டில், ஆராய்ச்சியாளர்கள் வளிமண்டல நதிகளின் தீவிரத்தை தரவரிசைப்படுத்த ஒன்று (பலவீனமான, மிதமான மழைப்பொழிவு) முதல் ஐந்து (விதிவிலக்கான, அபாயகரமானவை) வரை ஓர் அளவீட்டை உருவாக்கினர்.

ஸ்கிரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியானோகிராஃபியின் நீரியல் நிபுணரான கியான் காவ் கூறுகையில், "மிதமான வளிமண்டல நதிகள் நீர் விநியோகத்திற்குப் பயனுள்ளதாகக் கருதப்படுகின்றன. இவை மிகவும் தீவிரமானவை மட்டுமே ஆபத்தானவை. எனவே நன்மை தீமை இரண்டையும் கொண்டுள்ளன," என்கிறார்.

 
முன்னறிவிப்புகள் ஏன் முக்கியமானவை?
வளிமண்டல நதிகள்: புயல்கள் கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்தும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,RICH HENNING/NOAA

படக்குறிப்பு,வளிமண்டல ஆறுகள் கண்ணுக்கு தெரியாதவை. மேக மூட்டத்தின் கீழ் பயணிக்க முனைபவை. இது 2023இல் நோவா விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம்

வளிமண்டல நதிகளைக் கணிப்பது அவற்றின் அழிவுகரமான பக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானது, ஆனால் அது கடினமாது, என்று காவ் கூறுகிறார். ஆரம்பத்தில், அவை கடலுக்கு மேல் உருவாகின்றன. அங்கு அவற்றைக் கவனிப்பதற்கான வழிகள் குறைவு. பின்னர் அவை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்கின்றன.

மேலும் அந்தப் பயணத்தின்போது, அவை நின்று போகலாம், தீவிரமடையலாம், பலவீனமடையலாம், வெப்பமடையலாம் அல்லது குளிர்ச்சியடையலாம், பிற வளிமண்டல நதிகள், அல்லது அவற்றின் எச்சங்களுடன் தொடர்பு கொள்ளலாம். இந்த மாற்றங்கள் ஏதேனும் அவற்றின் தாக்கத்தைப் பாதிக்கும் என்று அவர் கூறுகிறார்.

பெரும் மழை வரும்பட்சத்தில் நீர்த்தேக்கங்களைக் காலி செய்யலாமா என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய, வானிலை மற்றும் நீர் முன்னறிவிப்பு பயன்படுத்தப்படுகின்றன.

"இந்த வளிமண்டல நதிகளை நாம் முன்கூட்டியே சிறப்பாகக் கணிக்க முடிந்தால், அவற்றை இன்னும் துல்லியமாக, நீண்ட காலத்துடன் கணிக்க முடிந்தால், செயல்பாட்டு முடிவுகளை எடுக்க நமக்கு அதிக நேரம் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, நாம் நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டுமா வேண்டாமா என்பது குறித்த முடிவுகளை எடுப்பது," என்கிறார் காவ்.

மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு முந்தைய குறுகிய கால முன்னறிவிப்புகள் மிகவும் துல்லியமானவை, என்கிறார் காவ். நீண்டகால முன்னறிவிப்புகளின் துல்லியம் குறைகிறது என்று அவர் கூறுகிறார்.

"இரண்டு வாரங்களுக்கு அப்பால் உள்ள முன்னறிவிப்புகளை மேம்படுத்த ஆராய்ச்சியாளர்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார்கள்," என்று அவர் கூறுகிறார். ஏனெனில் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் தயார்படுத்துவது மக்களுக்குக் கூடுதல் நேரத்தை வழங்கும்.

இங்குதான் AR Recon விமானங்களின் பங்கு வருகிறது. மற்ற கருவிகள் அடைய முடியாத வளிமண்டல நதிகளுக்குள் இவை பார்க்கின்றன.

 
மேம்பட்ட தரவுகளின் அவசியம் என்ன?
வளிமண்டல நதிகள்: புயல்கள் கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்தும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,US AIR FORCE

படக்குறிப்பு,தொழில்நுட்ப சார்ஜென்ட் லாரி பேங்க்ஸ் 2023இல் வளிமண்டல நதிகள் பணியின்போது ஒரு டிராப்சோன்டை சரிபார்க்கிறார்

வில்சனின் குழுவைப் பொறுத்தவரை, புயல்களைப் பின்தொடரும் ஒவ்வொரு விமானப் பயணமும் காலையில் ஒரு முன்னறிவிப்புக் கூட்டத்துடன் துவங்குகிறது. அந்தக் கூட்டத்தில் வரவிருக்கும் நாட்களில் அமெரிக்காவில் மழை மற்றும் பனிப்பொழிவு பற்றிய முன்னறிவிப்புகளைப் பற்றி விவாதிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் மழை அல்லது பனிப்பொழிவைக் உருவாக்கவிருக்கும் வளிமண்டல நதியைப்பற்றிய கூடுதல் தரவுகளைக்கொண்டு மேம்படுத்தப்படக்கூடிய தகவல்கள் அந்தக் கூட்டத்தில் அடையாளம் காணப்படுகின்றன. அவர்கள் பின்னர் அந்த வளிமண்டல நதிக்குப் பறந்து சென்று, தேவையான தரவுகளைத் தங்கள் கருவிகள் மூலம் சேகரிக்கின்றனர்.

"இந்த விமானங்களின் நோக்கம், செயற்கைக்கோள்கள் இவற்றைப் பார்ப்பதில் சிரமப்படும்போது, தரவுகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதாகும்," என்று வில்சன் கூறுகிறார்.

ஒவ்வொரு கல்ஃப்ஸ்ட்ரீம் விமானப் பயணமும் சுமார் எட்டு மணிநேரம் நீடிக்கும். மேலும் வில்சன் சொல்வது போல், உங்கள் சொந்த உணவைக் கொண்டு வருவது ஒரு முக்கியமான நடைமுறை தயாரிப்பு. கருவிகள் விமானத்தில் இருக்கும் குழுவிற்கு தரவுகளை அனுப்புகின்றன. விமானத்தில் இருப்பவர்கள் அதைச் சரிபார்த்து உலகளாவிய தொலைத்தொடர்பு அமைப்புக்கு அனுப்புகிறார்கள். இது உலகளாவிய வானிலை தொடர்பான தரவுகளைச் சேகரித்து விநியோகிக்கும் ஒரு வானிலை அமைப்புச் சேவை.

செயற்கைக்கோள்கள் உட்படப் பல நூறு மில்லியன் பிற அவதானிப்புகளுடன் தரவுகளைப் பயன்படுத்தும் முன்கணிப்பு மாதிரிகள் இந்தத் தரவுகளை எடுத்துக்கொள்கின்றன. இப்போது மிகவும் துல்லியமான முன்னறிவிப்புகள், டிராப்சோன்ட் கருவிகளின் தரவு மூலம் மேம்படுத்தப்பட்டு, நீர்த்தேக்க நிர்வாகிகள் மற்றும் அவசரகால நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

டிராப்சோன்ட் (Dropsonde) கருவிகள் தரும் தரவுகள் உண்மையில் முன்னறிவிப்புகளை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய பகுப்பாய்வு ஒன்று எதிர்காத்தில் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜெட் மற்றும் விமானப்படை விமானங்கள் இரண்டையும் உள்ளடக்கிய தினசரி விமானப் பயணங்களைப் பரிந்துரைக்கிறது.

முடிந்தவரை அதிகமான தரவுகளைச் சேகரிக்க இது பரிந்துரைக்கப்படுகிறது. தகவல் சேகரிப்பதற்கும், வானிலை மாதிரிகள் உருவாக்கும் அமைப்புகளில் வேலை செய்வதற்கும், முன்னறிவிப்புகளை மேம்படுத்துவதற்கும், தனிப்பட்ட புயல்கள் பற்றிய புரிதலை ஆழப்படுத்துவதற்கும் இந்தக் குழு மற்ற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறது.

 
ஒரே நேரத்தில் பல பேரழிவுகள்
வளிமண்டல நதிகள்: புயல்கள் கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்தும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கலிபோர்னியாவை தாக்கிய ஒரு வளிமண்டல நதியால் ஏற்பட்ட வெள்ளம்

வளிமண்டல நதிகளைப் புரிந்துகொள்வதற்கான இந்த முயற்சி மிக அவசரமான தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் வளிமண்டல நதிககளின் தன்மை மாறி வருவதாகவும், அவை அடிக்கடி நிகழ்வதாகவும், அழிவுகரமானதாக மாறி வருவதாகவும் கூறுகின்றனர்.

மெங்கியான் லூ, ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நீர்நிலையியல் மற்றும் நீர் வளங்கள் துறையில் இணைப் பேராசிரியராக உள்ளார். அவரும் அவரது குழுவும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓர் உலகளாவிய ஆய்வை வெளியிட்டனர். இது வளிமண்டல நதிகளின் எதிர்காலத் தீவிரம், எண்ணிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய மழை மற்றும் பனிப்பொழிவை உலகம் முழுவதும் நடக்கும் என்கிறது. அவர்களின் கணிப்புகள்படி, வளிமண்டல நதிகளின் உலகளாவிய எண்ணிக்கை இந்த நூற்றாண்டின் இறுதியில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். ஆனால் நிலத்தில் இதன் அர்த்தம் என்னவென்பது பிராந்தியத்திற்குப் பிராந்தியம் மாறுபடும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

"பொதுவாக, அடிக்கடி நிகழும் வலிமையான வளிமண்டல நதிகள், அடிக்கடி மற்றும் வலுவான மழையைக் கொண்டு வருகின்றன. ஆனால் அனைத்து வளிமண்டல நதிகளும் மழையாக மாறும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் காலநிலை அமைப்புகள் நேரானவை அல்ல, மிகக் குழப்பமானவை," என்று லூ கூறுகிறார்.

காலநிலை மாற்றத்தால் வளிமண்டலம் வெப்பமடைவதால், அது ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்கும். "இதன் விளைவாக அடிக்கடி நிகழும் வலுவான வளிமண்டல நதிகளை எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறுகிறார்.

வெப்பம் மற்றும் ஈரப்பதத்தைக் கொண்டு செல்வதில் அவற்றின் பங்கு காரணமாக, காலநிலை தொடர்ந்து வெப்பமடைவதால் வளிமண்டல நதிகள் எவ்வாறு மாறும் என்பதை அறிவது புவி வெப்பமடைதலின் பரந்த தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு அவசியம் என்று லூ கூறுகிறார். உதாரணமாக, வளிமண்டல ஆறுகள் வெப்பத்தைக் கொண்டு வருவதால் மேற்கு அன்டார்டிகாவில் பனியை உருகத் தூண்டுகின்றன.

வளர்ந்து வரும் ஆராய்ச்சி அமைப்பு உலகம் முழுவதும் அவற்றின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. கிழக்கு ஆசியாவில், அவை வெப்பமான பருவங்களில் 90% தீவிர மழைப்பொழிவு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்துகின்றன. வளிமண்டல நதிகள் ஒரு பகுதிக்கு பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல்களையும், மற்றொரு பகுதிக்கு மழை மற்றும் கடுமையான வெள்ளங்களையும் கொண்டு வரக்கூடும் என்பதால், அவை பல இடங்களில் ஒரே நேரத்தில் பேரழிவு தரும் வானிலையை உருவாக்கக்கூடும்.

அவை காட்டுத்தீ போன்ற பிற பேரழிவுகளையும் உருவாக்கலாம். தாவரங்கள் இல்லாததால் மண் அரிப்பு ஏற்பட்டு நிலச்சரிவை ஏற்படுத்துகின்றன. அவை வேகமாக தாவர வளர்ச்சியைத் தூண்டும், இது அடுத்த காட்டுத்தீக்கு எரிபொருளாக மாறும். அடுத்த பருவத்தில் எரிந்த பகுதிகளில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது ஒரு சுழற்சியாக மாறும் என ஆராய்ச்சி கூறுகிறது.

 
அடுத்து என்ன செய்ய வேண்டும்?
வளிமண்டல நதிகள்: புயல்கள் கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்தும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த ஜனவரி மாதம் ஒரு வளிமண்டல நதி கலிபோர்னியாவில் உள்ள சாண்டா யெனெஸ் பள்ளத்தாக்கிற்குள் நகர்கிறது

அடுத்தடுத்து உருவாகும் வளிமண்டல நதிகள் முடிவில்லாத மழையைக் கொண்டு வருகின்றன. இது அடிக்கடி நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி வரை, ஒன்பது வளிமண்டல நதிகள் கலிபோர்னியாவை வரிசையாகத் தாக்கின. இதன் விளைவாக வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மின்சாரத் தடை ஏற்பட்டது. ஒரு ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியபடி. இத்தகைய வளிமண்டல நதிகளின் நிகழ்வுகளுக்கு இடையில் நனைந்த மண் வறண்டு போகாது, இதனால் வெள்ளம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

"அமெரிக்காவின் மேற்கில் நிகழும் வெள்ளச் சேதங்களில் 90% வளிமண்டல நதிகள் ஏற்படுத்தியவை. இதன் மொத்த மதிப்பு ஓராண்டுக்கு 100 கோடி இந்திய ரூபாய். இந்த எண்ணிக்கை இந்த நூற்றாண்டின் இறுதியில் இரண்டு அல்லது மூன்று மடங்காக ஆகலாம்," என்று குவான் கூறுகிறார்.

அவை எப்போதும் நீராவியை மட்டும் எடுத்துச் செல்வதில்லை. 2021ஆம் ஆண்டில், அவை ஆப்பிரிக்காவில் இருந்து சஹாரா பாலைவனத்தின் தூசியை ஐரோப்பாவிற்கு ஓட்டிச் சென்று, ஆல்ப்ஸ் மலையின் பனியை இருட்டாக்கி, அதன் பிரதிபலிப்பைக் குறைத்து, வெப்பத்தைக் கொண்டு வந்து, பனியின் ஆழத்தை 50% குறைத்தன.

வளிமண்டல நதிகளை நாம் எவ்வாறு சமாளிக்க முடியும்?

காலநிலை மாற்றம் அவற்றை எவ்வாறு மாற்றுகிறது என்பதை நாம் அடையாளம் காண வேண்டும் என்றும், புவி வெப்பமடைதலை எதிர்த்துப் போராட இன்னும் நிலையான வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவ் கூறுகிறார். முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், பொது விழிப்புணர்வு மற்றும் மிகவும் துல்லியமான மற்றும் அதிநவீன வானிலை முன்னறிவிப்புகளும் நம்மைத் தயார்படுத்துவதில் முக்கியமானவை என்று அவர் கூறுகிறார். அத்துடன் வளிமண்டல நதிகளை முதலில் உருவாக்க எந்த வானிலை மற்றும் காலநிலை நிலைமைகள் உதவுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என்கிறார்.

இதற்கிடையில், ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான டிராப்சோன்ட்கள் இந்த மர்மமான புயல்களைக் கண்காணிக்கின்றன. அவற்றை மேலும் கணிக்கக்கூடிய தரவுகளைச் சேகரிக்கின்றன என்பதை அறிவது குறைந்தபட்சம் ஆறுதலாக இருக்கலாம்.

இந்தப் பணி தனக்கு நம்பிக்கை அளிப்பதாகவும், குறிப்பாக கலிபோர்னியாவில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையம் போன்ற நிலத்தில் பதில் அளிப்பவர்களுடன் பணிபுரிவது நம்பிக்கையை அளிப்பதாகவும் ஆன்னா வில்சன் கூறுகிறார். "உடனடியாக பொருந்தக்கூடிய ஒரு பணியைச் செய்வது ஒரு விஞ்ஞானிக்கு மிகவும் அற்புதமான உணர்வு. இது மக்களுக்கு மிக அவசியமானதாக இருக்கிறது," என்று அவர் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cyj3jmgj4mxo

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்லோவாக்கியாவின் பிரதமர்.

5 days 12 hours ago

இந்த படுகொலை முயற்சி அரசியல் உள்நோக்கம் கொண்டது மற்றும் சந்தேக நபர் ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அதைச் செய்ய முடிவெடுத்தார், ”என்று உள்துறை அமைச்சர் Matúš Šutaj Eštok, Banská Bystrica மருத்துவமனைக்கு வெளியே ஒரு செய்தி மாநாட்டில் கூறினார், அங்கு பிரதமர் சிகிச்சை பெற்றார்.

https://www.cnn.com/europe/live-news/robert-fico-slovakia-prime-minister-shooting-05-15-24/index.html

61b96ffc-59f0-46f7-bc63-b54d7c3a8069.JPG

நாங்கள் இம்முறை தனியாக இரண்டாவது நக்பாவை எதிர்கொள்கின்றோம் - பாலஸ்தீன மக்கள் கருத்து

5 days 14 hours ago

Published By: RAJEEBAN

15 MAY, 2024 | 01:00 PM
image
 

நாங்கள் இரண்டாவது நக்பாவை எதிர்நோக்கியுள்ளோம் என தெரிவிக்கும் பாலஸ்தீனியர்கள் எனினும் இம்முறை தனித்து விடப்பட்டுள்ளதாகவும் தனியாக அதனை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பாலஸ்தீனியர்கள் 1948 ம்ஆண்டு பலவந்தமாக இடம்பெயரச்செய்ப்பட்டு இன்றுடன் 76 ஆண்டுகள்பூர்த்தியாகியுள்ளன.

எனினும் அன்று இஸ்ரேலிற்கு எதிராக அராபிய நாடுகள் ஒரணியில்காணப்பட்டன.

எனினும் காசாவில் இடம்பெறும் யுத்தங்களும் மேற்குகரையில் இஸ்ரேலின் இராணுவ ஆக்கிரமிப்பும் இரண்டாவது நக்பா அரங்கேறுகின்றது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் என தெரிவித்துள்ள பாலஸ்தீன மக்கள் ஆனால் இம்முறை நாங்கள் அதனை தனியாக எதிர்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

சிலர் 1948ம் ஆண்டுஅராபிய இஸ்ரேலிய யுத்தத்தைநினைவுகூர்ந்துள்ளதுடன்  சமூகத்தின் அனைத்துர தரப்பினரும் பாலஸ்தீனத்திற்காக போரடி உயிர்நீத்தனர் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த யுத்தத்தில் சியோனிஸ்ட்களிற்கு எதிராக பாலஸ்தீனியர்களுடன் இணைந்து ஈராக்கிய படையினர் போரிட்டனர் என அடிப் நசல் என்பவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அராபிய இராணுவம் என்பதே இல்லை அனைவரும் தங்கள் சொந்த நலன்களை பாதுகாக்க விரும்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/183601

காட்டுத் தீ : கனடாவின் எண்ணெய் வளமிக்க பகுதிக்கு அச்சுறுத்தல்

5 days 14 hours ago

Published By: DIGITAL DESK 3    15 MAY, 2024 | 11:04 AM

image

கனடாவின் எண்ணெய் வளம் மிக்க போர்ட் மெக்முரே பகுதியில் (Fort McMurray) பாரிய காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது.

இதன் காரணமாக நான்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள சுமார் 6,000 மக்களை  வெளியேறுமாறு செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

வரட்சி மற்றும் பலத்த காற்றினால் ஆல்பர்ட்டாவின் மேற்கு மாகாணத்தில் கடந்த வாரம் முதல் காட்டுத் தீ தீவிரமடைந்துள்ளது.

தற்போது காட்டுத் தீ தென்மேற்கே சுமார் 13 கிலோ மீற்றர் (8 மைல்) தொலைவில் உள்ளது. அங்கு மணிக்கு 40 கிலோ மீற்றர் (24.8 மைல்) வேகத்தில் காற்று வீசியுள்ளது.

பலத்த காற்று வீசுவது துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு சாதகமானதாக இல்லை.  காற்றின் வேகம் குறையும் வரை காட்டு தீ நகரத்தை நோக்கி தொடர்ந்து பரவி வரும் என  ஆல்பர்ட்டா காட்டுத் தீ தகவல் தொடர்பு அதிகாரி ஜோசி செயின்ட்-ஓங்கே தெரிவித்துள்ளார்.

காட்டுத் தீ தீவிரமடைந்துள்ளதால் வானம் புகையால் சூழப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தீயணைப்பு வீரர்கள் தீ பரவும்  பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 10,000 ஹெக்டயர் பரப்பிலான வனப்பகுதிகளில் தீ பற்றி எரிந்து வருகிறது.

அபாசண்ட், பீக்கன் ஹில், ப்ரேரி க்ரீக் மற்றும் கிரேலிங் ஆகிய பகுதிகளிர் வசிப்பவர்கள் மாலை 4 மணிக்குள் வெளியேற வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில், போர்ட் மெக்முரேயில் பரவி பாரிய காட்டுத்தீ 90,000 குடியிருப்பாளர்களை வெளியேற்ற கட்டாயப்படுத்தியது.  ஒரு நாளைக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

GNlp3h6WYAAl71D.jpg

GNlUBffXsAA4obO.jpg

GNlUDQmWkAAl2O_.jpg

https://www.virakesari.lk/article/183580

சிங்கப்பூரில் 59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வருகிறது - புதிய பிரதமர் யார்?

5 days 19 hours ago
சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டெஸ்ஸா வாங்
  • பதவி, பிபிசி செய்தியாளர், சிங்கப்பூரிலிருந்து
  • 19 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் (Lee Hsien Loong) பதவியிலிருந்து வலகுகிறார். அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் (Lawrence Wong) இன்று இரவு (புதன்கிழமை, மே 15) லீ முறைப்படி ஆட்சியை ஒப்படைப்பார்.

இது சிங்கப்பூரின் வரலாற்றில் 59 ஆண்டுகள் நீடித்த ஓர் அரசியல் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.

1965-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறியதில் இருந்து, சிங்கப்பூருக்கு மூன்று பிரதமர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆட்சியில் இருக்கும் மக்கள் செயல் கட்சியைச் (People's Action Party - PAP) சேர்ந்தவர்கள்.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ (Lee Kuan Yew). அவர், தற்போது பதவி விலகும் லீ சியென் லூங்-கின் தந்தை, நவீன சிங்கப்பூரின் நிறுவனராகக் பரவலாகக் கருதப்பட்டவர். 25 ஆண்டுகள் அந்நாட்டை வழிநடத்தியவர்.

லீ சியென் லூங் ஒரு மூத்த அமைச்சராக அமைச்சரவையில் நீடிப்பார் என்றாலும், இந்த மாற்றம், சிங்கப்பூரின் அரசியல் அவரது குடும்பத்தின் நிழலில் இருந்து வெளியேறுகிறது என்பதைக் குறிக்கிறது, என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த வார இறுதியில் பிரதமர் என்ற முறையில் உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் அளித்த தனது இறுதிப் பேட்டியில், சிங்கப்பூர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

"மற்ற எல்லோரையும் முந்த வேண்டும் என நான் முயற்சிக்கவில்லை. அனைவரையும் என்னுடன் சேர்ந்து ஓட வைக்க முயற்சித்தேன்," என்று அவர் கூறினார். "நாங்கள் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்," என்றார்.

அவர் தனது தந்தை, மற்றும் அவருக்கு முன் இருந்த மற்றொரு பிரதமரான கோ சோக் டோங்க் (Goh Chok Tong) ஆகியோரது செயல்முறையிலிருந்து வேறுபட்ட பாணியில் 'காரியங்களை தன் வழியில் செய்ய' முயற்சித்ததாக அவர் மேலும் கூறினார்.

லீ சியென் லூங் 1984-இல் தனது தந்தை ஆட்சியில் இருக்கும்போதே பின்வரிசை உறுப்பினராக அரசியலில் சேர்ந்தார். சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமரான கோ சோக் டோங்க்-இன் கீழ் அவரது பதவி உயர்ந்தது. 2004-இல் அவர் அரசுக்குத் தலைமையேற்றார்.

அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப வருடங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன. அரசியல் விமர்சகர்கள் லீ குடும்பத்தினர் குடும்ப அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்குவதாகக் கூறினர். அதை லீ குடும்பத்தினர் தொடர்ந்து மறுத்து வந்தனர். தனிப்பட்ட உரையாடல்களில், சில சிங்கப்பூர் மக்கள் 'fami-Lee politics' என்று இதைக் கேலி செய்தனர்.

ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரின் தலைவராக லீ சியென் லூங் தனது முத்திரையை பதித்தார்.

அவரது மேற்பார்வையின் கீழ், சிங்கப்பூரின் பொருளாதாரம் பன்முகப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்தது. அந்நாடு ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது. கடந்த 20 ஆண்டுகளில் அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per capita) இரு மடங்குக்குக் மேல் அதிகரித்துள்ளது. பல பொருளாதார மந்தநிலைகள், உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் கோவிட் பெருந்தொற்றின் போதெல்லாம் நாட்டைத் திறமையாக வழிநடத்திய பெருமை லீ சியென் லூங்-இன் அரசாங்கத்திற்கு உண்டு.

 
சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,லீ சியென் லூங்-இன் ஆட்சியில் சிங்கப்பூர் ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது
லீ சியென் லூங்-இன் அரசியல் பாதை

சர்வதேசப் புவிசார் அரசியலில், இப்பிராந்தியத்தில் இழுபறியிலிருந்த, அமெரிக்கா-சீனா போட்டியை லீ சியென் லூங் கவனமாக சமநிலைப்படுத்தினார். LGBTQ குழுக்கள் பல ஆண்டுகளாகப் பரப்புரை செய்ததைத் தொடர்ந்து அவரது அரசாங்கம் சர்ச்சைக்குரிய ஓரினச் சேர்க்கை எதிர்ப்பு சட்டத்தை (anti-gay sex law) ரத்து செய்தது. இருப்பினும் சிங்கப்பூரில் பேச்சு சுதந்திரம் தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அவரது அரசியல் பரம்பரை மற்றும் மென்மையான, அறிவார்ந்த தோற்றம் ஆகியவற்றால், லீ சியென் லூங் பொதுவாக சிங்கப்பூர் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர். சிங்கப்பூரின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகள் குறித்த கணக்கெடுப்பில் அவர் முதலிடத்தைப் பிடித்தார். அவரது தொகுதி, தேர்தல்களில் அதிக வாக்குச் சதவீதத்தைப் பெறுகிறது.

ஆனால் அவர் விமர்சனங்களிலிருந்தோ சர்ச்சைகளிலிருந்தோ தப்பவில்லை.

2000-களின் பிற்பகுதியில், தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை அனுமதிக்க அவரது அரசாங்கம் முடிவு செய்தது. இது ஆழ்ந்த அதிருப்தியைத் தூண்டியது. சிங்கப்பூர் செல்வச் செழிப்பாக மாறியதும், சமூக சமத்துவமின்மை அதிகரித்து வருமான இடைவெளி அதிகரித்தது. லீ சியென் லூங்-கின் கீழ், மக்கள் செயல் கட்சி 2011 மற்றும் 2020 இல் அதன் மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தைப் பெற்றது.

ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் சிங்கப்பூர் ஆளுகை நிபுணரான டொனால்ட் லோ, "லீ சியென் லூங் பதித்த முக்கிய முத்திரை, அவர் பொருளாதாரத்தை மேம்படுத்திய விதம் தான்," என்று குறிப்பிட்டார்.

"ஆனால் அவரது பதவிக்காலத்தின் முதல் பாதியில், அந்த மேம்பாட்டுக்காக அதிகரித்து வந்த ஏற்றத்தாழ்வு, அதிக எண்ணிக்கையில் குடியேறிய வெளிநாட்டினர், வேலைவாய்ப்புகளுக்கான போட்டி, நெரிசல், மற்றும் குடியுரிமை அடையாள இழப்பு ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டியிருந்தது," என்கிறார் அவர்.

அரசியல் விமர்சகர் சுதிர் வடகேத், லீ சியென் லூங்-இன் அரசாங்கம் "சிங்கப்பூரை ஒரு உலகளாவிய நகரமாக மாற்றுவதற்குத் தேவையான அதீத குடியேற்றத்தைச் சமாளிக்கத் தயாராக இருக்கவில்லை," என்றார்.

சிங்கப்பூர் மக்களிடம் இருந்து இதற்கான ஏற்பினைப் பெறாததால் இது இன்றுவரை இருக்கும் 'மிக மோசமான இனவெறி மற்றும் வெறுப்புக்கு' வித்திட்டது, என்று வடகேத் கூறினார். அவர் 'ஜோம்' என்ற சுதந்திர செய்தி இதழை நடத்துகிறார். சிங்கப்பூர் மக்கள் 'இனவெறி' தீவிரமடைந்து வரும் ஒரு பிரச்னையாக உணர்கிறார்கள் என்றும், கோவிட் பெருந்த்தொறின் போது இது தீவிரமடைந்தது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.

நீண்ட காலமாக நிலவிவரும் பிரச்னையான பொது வீட்டுக் கட்டடங்கள் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்னையை லீயின் அரசாங்கம் போதுமான அளவில் தீர்க்கவில்லை என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் இந்தக் கட்டடங்களில் தான் வசிக்கின்றனர். பலரும் தங்களது சேமிப்புகளை முதலீடு செய்து அரசாங்கத்திடமிருந்து 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் மதிப்பு அவர்களுக்கு வயதாகும்போது குறையும்.

இந்தப் பிரச்னைகளை ஒப்புக்கொண்டு, அரசாங்கம் முன்மொழியப்பட்ட சட்டங்கள் மூலமும் கடுமையான விதிகள் மூலமும் அவற்றைத் தீர்க்க முயற்சித்துள்ளது.

 
சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொது வெளியில் நடந்த குடும்பச்சண்டை

தனிப்பட்ட முறையில், லீ சியென் லூங்-இன் தந்தை லீ குவான் யூ இறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, அவருக்கு சொந்தமான வீட்டைச் சுற்றி நடந்த ஒரு குடும்பச் சண்டை 2016-இல் பொதுவெளிக்கு வந்தது. பிரதமர் லீ சியென் லூங் தனது உடன்பிறப்புகளுடன் பல ஆண்டுகளாக ஒரு பொதுச்சண்டையில் ஈடுபட்டார். தங்கள் நாட்டின் மிக உயர்ந்த குடும்பத்தின் இந்தச் சொத்துச் சண்டையை சிங்கப்பூர் மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

ஒரு கட்டத்தில், லீ சியென் லூங்-இன் உடன்பிறப்புகள் அவரை 'மரியாதையை இழந்த மகன்' என்று அழைத்தனர். மேலும் அவர் ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்குவதற்காக தங்கள் தந்தையின் பாரம்பரியத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார்கள். அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், 'அரசின் நிர்வாக அமைப்புகளை' தங்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். அவரது சகோதரர் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலர், துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி, சுயமாக நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழ்கின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் லீ சியென் லூங் மறுத்துள்ளார். மேலும், தனது குழந்தைகளுக்கு அரசியலில் சேர விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 
சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய பிரதமர் லாரன்ஸ் வோங் யார்?

லீ சியென் லூங் இப்போது தனது பதவியை, முன்னாள் பொருளாதார நிபுணரும் அரசு ஊழியருமான லாரன்ஸ் வோங்-இடம் ஒப்படைக்க உள்ளார். வோங் ஒரு கட்டத்தில் லீ-யின் முதன்மை தனிச் செயலாளராகப் பணியாற்றிய்வர்.

இது லாரன்ஸ் வோங்கிற்கு மட்டுமின்றி சிங்கப்பூருக்கும் புதிய சூழ்நிலை ஆகும். சிங்கப்பூரின் 59 ஆண்டுகல சுதந்திர வரலாற்றில் 45 ஆண்டுகள் லீ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக இருந்திருக்கிறார். "அடுத்து பிரதமராகக் காத்திருக்கும் லீ குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இல்லாத முதல் பிரதமர் வோங் ஆவார். இது சிங்கப்பூர் சாதாரணமான ஒரு ஜனநாயகமாக மாறும் அறிகுறியாகும்," என்று டொனால்ட் லோ கூறினார்.

"சிங்கப்பூர் மீது லீ குடும்பத்தினர் எப்போதும் ஒரு அளவுக்கதிகமான செல்வாக்கைக் கொண்டிருந்தனர். இது மாறுவது ஒரு பரந்த சமூக அரசியல் மாற்றத்திற்கு நல்லது," என்று வடகெத் கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வோங் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்ட போது, அவரை அடுத்த பிரதமராக்கும் முடிவு அவருக்கு தந்தி மூலம் அனுப்பபட்டது. இது மக்கள் செயல் கட்சிக்கே உரித்தான ஒரு செயல்முறையாகும்.

ஆனால் ஆரம்பத்தில், 51 வயதான வோங் வெளிப்படையான ஒரு தேர்வாக இருக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்னர்,மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறை தலைவர்கள் அறிமுகமான போது, அவர் பிரபலமற்றவராகப் பார்க்கப்பட்டார்.

மற்றொரு அமைச்சரான ஹெங் ஸ்வீ கீட் (Heng Swee Keat), அவரது வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி ஓய்வு பெறும் முன்பு வரை அவரைத்தான் பிரதமராக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

கோவிட் பெருந்த்தொற்று சிங்கப்பூரைத் தாக்கியபோது, லாரன்ஸ் வோங் முக்கியப் பொறுப்பில் இருப்பார் என்பது தெளிவானது. அரசாங்கப் பணிக்குழுவின் இணைத் தலைவராக இருந்த அவர், சிங்கப்பூர் மக்களுக்குப் பரிச்சயமான முகமாக மாறினார். வாராந்திர செய்தியாளர் சந்திப்புகளில் சிக்கலான கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளை நிதானமாக விளக்கினார்.

அவரது குழுவும், உள்ளூர் ஊடகங்களும் வோங்-இன் பிம்பத்தை ஒரு சாதரண மனிதராகப் பரப்பியிருக்கின்றன. பெரும்பாலான சிங்கப்பூர் மக்களைப் போலவே, அவர் ஒரு பொது வீட்டுக் குடியிருப்பில் வளர்ந்தார். மேலும் சிங்கப்பூரின் மேல்தட்டுப் பள்ளியில் பயிலாமல் உள்ளூர் பள்ளியில் படித்த முதல் பிரதமரும் வோங் தான்.

 
சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
'திறந்த மனம் கொண்ட பழமைவாதி'

லாரென்ஸ் வோங் அரசியலில் நுழைந்த போது ஒற்றுமையை முன்னிறுத்தினார். ஒரு நாடு தழுவிய ஆலோசனையை நடத்தி, மூத்த குடிமக்கள் மற்றும் ஏழைகளுக்கு அதிக ஆதரவுடன் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரை உருவாக்குவதாக உறுதியளித்தார். 'தி எகனாமிஸ்ட்' பத்திரிகைக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சிங்கப்பூரின் குடிமக்கள் சிறுபான்மையினராக மாற மாட்டார்கள் என்றும், குடியேற்றம் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

சிங்கப்பூரின் மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கைப் பிரச்னைகளில் ஒன்றான அமெரிக்க-சீனா உறவுமுறையில் தற்போதிருக்கும் நிலையில் இருந்து எந்தவொரு மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் அரசு எந்த வல்லரசு நாட்டுக்கும் சார்பாக இல்லை, மாறாக, 'சிங்கப்பூர் சார்பாக' இருப்பதாக அவர் கூறினார்.

சிங்க்கப்பூர் ஆளுகை வல்லுநரான டொனால்ட் லோ லாரன்ஸ் வோங்க்-ஐ 'திறந்த மனம் கொண்ட பழமைவாதி' என்று விவரித்தார். அவர் மாற்றங்களைச் செய்வதற்கு ஏற்றவராக இருப்பார், ஆனால் அவற்றை 'அதிரடியாக' இல்லாமல் 'மெதுவாக, சிறிதுசிறிதாக' அறிமுகப்படுத்துவார், என்றார்.

அதனால்தான், அரசியல் தொடர்ச்சியை வலியுறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மக்கள் செயல் கட்சி செய்திருக்கும் பாதுகாப்பான தேர்வாக ஆய்வாளர்கள் லாரன்ஸ் வோங்-ஐப் பார்க்கிறார்கள். அவரும் இந்தப் பண்பை முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாகச் சமிக்ஞை செய்திருக்கிறார்.

"தொடர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை முக்கிய விஷயங்களாகும். குறிப்பாக இந்த அரசாங்கத்தின் இறுதிக் காலத்தை நெருங்கி வரும் இந்த நேரத்தில்," என்று திங்களன்று தனது அமைச்சரவையை வெளியிட்டபோது வோங் கூறினார்.

அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டார். இது வோங்கின் மிகப்பெரிய அரசியல் பரீட்சையாக இருக்கும். லீ சியென் லூங்-இன் காலத்துக்குப் பிறகு சிங்கப்பூர் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொதுத் தேர்தலில் வோங் முதன்முறையாகப் போட்டியிடுவது முக்கியமான ஒன்றாக இருக்கும். .

https://www.bbc.com/tamil/articles/cd131z29zvko

Checked
Tue, 05/21/2024 - 04:08
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe