உலக நடப்பு

பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை!

2 months 1 week ago
spacer.png பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை!

பிரான்ஸில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடாக பிரானஸ்  மாறியுள்ளது.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு அமர்வில் 780 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 72 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தமையைத் தொடர்ந்து குறித்த மசோதா  வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் மசோதா  நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும்  பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1372228

டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவு என்பதை காண்பிப்பதற்கு போலி செயற்கை நுண்ணறிவு படங்கள்

2 months 1 week ago
டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவு என்பதை காண்பிப்பதற்கு போலி செயற்கை நுண்ணறிவு படங்கள் – டிரம்பின் ஆதரவாளர்கள் சர்ச்சை நடவடிக்கை 3-7.jpg

போலியான செயற்கை நுண்ணறிவு படங்களை உருவாக்கி டிரம்பின்  ஆதரவாளர்கள் கறுப்பின வாக்காளர்களை இலக்குவைத்துவருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவளிக்கின்றனர்  என்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் டிரம்புடன் கறுப்பினத்தவர்கள் காணப்படும் போலிவீடியோக்கள் படங்களை  டிரம்பின் ஆதரவாளர்கள் உருவாக்குவது தெரியவந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

2020 தேர்தலில் பைடன் வெற்றிபெறுவதற்கு கறுப்பினத்தவர்களின் ஆதரவு முக்கியமானதாக காணப்பட்ட நிலையில் டிரம்ப் தற்போது அவர்களின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளில் வெளிப்படையாக ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறான போலியான படங்கள் கறுப்பினத்தவர்களின் ஆதரவு  டிரம்பிற்குள்ளது என்பதை காண்பிப்பதற்கு பயன்படுத்தப்படுவதாக பிளக்வோட்டர்ஸ் மட்டர் அமைப்பின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்

இவ்வாறான படங்கள் உண்மையானவை என நான் தெரிவிக்கவில்லை என இந்த படங்களை உருவாக்கி ஒருவர் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி டிரம்ப் ஆதரவாளர்கள் உருவாக்கும் போலி படங்கள் அமெரிக்க தேர்தலிற்கு முந்தைய புதிய போக்காக காணப்படுகின்றது.

அமெரிக்க வாக்காளர்களே இவற்றை உருவாக்கி பயன்படுத்திவருகின்றனர்.

இவ்வாறான படங்களை உருவாக்கியவர்களில் மார்க்கை குழுவினர்களும் உள்ளனர் இவர்கள் டிரம்ப் கறுப்பின பெண்களுடன் காணப்படுவது போன்ற படத்தை உருவாக்கி முகநூலில் பதிவிட்டனர்.இந்த குழுவினரை ஒரு மில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கின்றனர்.

முதல் பார்வைக்கு அது உண்மையான படம் போல தோன்றினாலும் உற்றுப்பார்த்தால் பல உண்மைகள் புலனாகும்.

 

https://akkinikkunchu.com/?p=270254

ஆழ்கடலில் மூழ்கிய கப்பலில் ரூ.1.66 லட்சம் கோடி தங்கப் புதையல் - யாருக்குச் சொந்தம் என்பதில் போட்டாபோட்டி

2 months 1 week ago
சான் ஜோஸ்: ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதையலுடன் மூழ்கிய கப்பலை கண்டுபிடிக்க களமிறங்கும் கொலம்பியா

பட மூலாதாரம்,COLOMBIAN GOVERNMENT

படக்குறிப்பு,

கொலம்பிய ஆட்சித்தலைவர் குஸ்டாவோ பெட்ரோ, இக்கப்பலை மீட்டெடுப்பது தனது நிர்வாகத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாண்டியாகோ வனேகஸ்
  • பதவி, பிபிசி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய `சான் ஜோஸ்`என்ற கப்பலில் தங்கம், வெள்ளி, நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் அடங்கிய சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான பொக்கிஷம் இருப்பதாக நம்பப்படுகிறது. அக்கப்பலில் உள்ள பொக்கிஷத்தைக் கைப்பற்ற ஆழ்கடலில் உயர் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கொலம்பிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இக்கப்பல் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. இந்த கப்பலில் உள்ள பொக்கிஷம், உலகிலேயே அதிகம் தேடப்படும் பொக்கிஷங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கப்பலின் பாகங்களை கண்டுபிடிக்க ஆழ்கடலில் “புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய” “உயர்மட்ட” ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக கொலம்பிய அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது.

சான் ஜோஸ் என்பது 40 மீட்டர் நீளமுள்ள ஸ்பானியக் கப்பலாகும். இந்த கப்பல் கொலம்பியாவின் கார்டஜீனா நகருக்கு அருகிலுள்ள தீவுக்கூட்டமான ரொசாரியோ தீவுகளைச் சுற்றி 1708-ல் மூழ்கியது.

2015-ம் ஆண்டு, அக்கப்பல் 600 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக கொலம்பிய அரசு அறிவித்தது.

ஸ்பானிய மன்னரின் இறப்புக்குப் பிறகு, வாரிசுப் போரின் ஒரு பகுதியாக, சார்லஸ் வேகரின் கீழ் இருந்த பிரிட்டிஷ் படைக்கும் ஸ்பெயின் படைக்கும் மோதல் மூண்டதாக, கடல்சார் மானுடவியல் பேராசிரியர் ரிக்கார்டோ பொரேரோ தெரிவிக்கிறார். அப்போது, சான் ஜோஸ் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

கப்பலில் என்ன இருக்கிறது?
சான் ஜோஸ்: ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதையலுடன் மூழ்கிய கப்பலை கண்டுபிடிக்க களமிறங்கும் கொலம்பியா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

இந்த கப்பல் விபத்தில் 600 பேர் உயிரிழந்தனர்.

20 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1.66 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்கள் இக்கப்பலில் உள்ளதாக வரலாற்றாய்வாளர்கள் நம்புகின்றனர்.

“கப்பல்கள் வடிவமைப்பு 20-ம் நூற்றாண்டு வரை மனித கண்டுபிடிப்புகளிலேயே மிக சிக்கலான தொழில்நுட்பம் கொண்டதாகும். தற்போதுள்ள உலகமயமாக்கலுக்கு இந்த தொழில்நுட்பம் பல வழிகளில் வடிவம் கொடுத்திருக்கிறது. இதனை போர்க்கப்பலாகவும் வணிக கப்பலாகவும் பல வழிகளில் பயன்படுத்த முடியும்” என்கிறார் ரிக்கார்டோ பொரேரோ.

இந்த கப்பல் 40 மீட்டர் நீளம் கொண்டது. 64 பீரங்கிகள் அதில் இருந்தன. கப்பலில் சுமார் 600 பேர் இருந்தனர்.

“17-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 18-ம் நூற்றாண்டிலும் இக்கப்பல் உயர் தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட கப்பலாக இருந்தது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்தும் அக்கப்பல் சரக்குகளை ஏற்றிச் சென்றிருக்கிறது” என்கிறார் அவர்.

இக்கப்பல், கொலம்பியாவின் சொத்தாக 2020-ல் அறிவிக்கப்பட்டது. அதனால் தான், அதன் மதிப்பை பண அடிப்படையில் கணக்கிடக் கூடாது என்று அரசாங்கம் பாதுகாக்கிறது.

எனினும், அக்கப்பலின் ஒருபகுதியை சொந்தமாக வைத்திருப்பதாக கூறும் அமெரிக்காவை சேர்ந்த புதையல்களை தேடும் வேட்டை நிறுவனம் ஒன்று, அப்புதையல் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருக்கலாம் என்று ஊகித்துள்ளது .

இக்கப்பலில் எடுத்துச் செல்லப்பட்ட சரக்குகள் குறித்த விவரங்கள், காப்பக ஆதாரங்களிலிருந்தே அறியவருகின்றன. மாறாக, கப்பல் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து அதனை நேரடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

2022-ம் ஆண்டில், தேசிய கடற்படை மற்றும் கொலம்பியாவின் தேசிய கடல்சார் இயக்குநரகம் ஆகியவை மேற்கொண்ட ஆய்வில் கப்பலில் இருந்த பொருட்களின் புகைப்படங்கள் வெளியாகின. அப்புகைப்படத்தில் பீரங்கிகள், சில நாணயங்கள் மற்றும் சீன மேஜைப் பாத்திரங்கள் சிலவற்றைக் காண முடிந்தது.

"ஜாடிகள், பாத்திரங்கள், ஊசிகள், கண்ணாடிகள், பீங்கான்கள், சில நாணயங்கள் உள்ளிட்டவை அதில் காணப்படுகின்றன" என, கொலம்பிய மானுடவியல் மற்றும் வரலாற்று நிறுவனத்தின் இயக்குனர் (ICANH) அலெனா கைசிடோ பிபிசி முண்டோவிடம் விளக்குகிறார்.

600 மீட்டர் ஆழத்தில் உள்ள கப்பலில் என்ன இருக்கிறது என்பது பற்றிய கூடுதல் விவரங்களை அறிவதுதான் கொலம்பியா அறிவித்துள்ள புதிய ஆராய்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.

 
ரோபோட் தொழில்நுட்பம்
சான் ஜோஸ்: ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதையலுடன் மூழ்கிய கப்பலை கண்டுபிடிக்க களமிறங்கும் கொலம்பியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தாண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு இடையில் நடத்தப்படும் இந்த ஆய்வில், பிரிட்டன் தயாரிப்பு மற்றும் ஸ்வீடன் வடிவமைப்புடன் கூடிய ரிமோட் வாயிலாக இயக்கப்படும் ரோபோட் பயன்படுத்தப்படும் என, கொலம்பிய கலாசார அமைச்சர் ஜுவான் டேவிட் கொரியா தெரிவித்தார்.

தண்ணீரை விட்டு வெளியேறும்போது இந்த பொருட்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கவனிப்பதே இதன் நோக்கம்.

"தண்ணீரில் அப்பொருட்கள் 300 ஆண்டுகளாக மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும். எனவே, வெளியே எடுக்கப்பட்டவுடன் அவை முழுமையாக உடைந்துவிடும்" என்று அலெனா கைசிடோ பிபிசி முண்டோவிடம் விளக்கினார்.

"இந்த வகையான பொருட்களை எவ்வாறு கையாள்வது, எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், ஒருகட்டத்தில் அப்பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்படும்” என்று அவர் கூறுகிறார்.

மீட்கப்பட்டவுடன் அவை கார்டஜீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்படும். அதற்கென அருங்காட்சியகம் அமைப்பது குறித்து சிந்திக்கப்படுகிறது.

இப்போதைக்கு, கொலம்பிய அதிகாரிகள் அக்கப்பலில் இருந்து அதிகளவு தங்கம் மற்றும் வெள்ளி எடுக்கப்படுவதாக கூறப்படும் தகவலை நிராகரித்துள்ளனர்.

2017-ம் ஆண்டு சீனக் கப்பல் கட்டும் தளத்திலிருந்து 13 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கொலம்பிய அரசு வாங்கிய ஏ.ஆர்.சி கரிப் என்ற கப்பலில் இருந்து ஆய்வு செய்யப்படும் கப்பலுக்கு ரோபோட் இறக்கப்படும்.

"இந்த கப்பல் அலை, காற்று மற்றும் கடலின் ஆறு திசைகளில் உள்ள அனைத்து இயக்கங்களையும் துல்லியமான புள்ளியில் வைத்திருக்கும் திறன் கொண்டது" என்று கடற்படை அதிகாரி ஹெர்மன் லியோன் ஸ்பானிய செய்தி முகமையான EFE-யிடம் விளக்கினார்.

இந்த ஆய்வு, கலாசார அமைச்சகம், கொலம்பிய மானுடவியல் மற்றும் வரலாறு நிறுவனம், தேசிய கடற்படை (ICANH) மற்றும் தேசிய கடல்சார் இயக்குநரகம், அனைத்து பொது நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சியாக இருக்கும்.

ஜுவான் மானுவல் சாண்டோஸின் அரசாங்கத்தின் போது கொலம்பிய அரசு ஒரு பொது-தனியார் கூட்டணியை உருவாக்குவதற்கான தொடக்கத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது இது ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. அதன்படி, இப்போது புதையலைப் பிரித்து ஆய்வு நிறுவனத்திற்கும் ஒரு பங்கு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தாண்டு மேற்கொள்ளப்படும் முதல் கட்ட ஆய்வில், அரசுக்கு சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும்.

கடலின் அடிப்பகுதியில் என்ன இருக்கிறது என்பது பற்றி அறியப்பட்ட புதிய தகவல்களின் அடிப்படையில், "18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே கடல்சார் வர்த்தகத்தின் வரலாறு பற்றிய பல அறிவியல் ஆராய்ச்சி கேள்விகளுக்கு பதில்கள் இதன் மூலம் கிடைக்கும் என கொலம்பியா நம்புகிறது" என, கலாசார அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

 
சான் ஜோஸ்: ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதையலுடன் மூழ்கிய கப்பலை கண்டுபிடிக்க களமிறங்கும் கொலம்பியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கொலம்பியாவின் கலாசார அமைச்சர் இந்த ஆய்வுத் திட்டத்தில் மிக உயர்ந்த அதிகாரிகளில் ஒருவர்.

விமர்சனங்கள்

இந்த திட்டத்தில் சில “முரண்பாடுகளும்” “இடைவெளிகளும்” இருப்பதாக, யூனிவர்சிட்டி நெட்வர்க் ஆப் சப்மெர்ஜ்ட் கல்ச்சுரல் ஹெரிட்டேஜ் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கப்பலில் இருந்து பொருட்களை பிரித்தெடுப்பதற்கு "சரியான அறிவியல் ரீதியிலான நியாயம்" இல்லை என்றும் இது பாதுகாப்பு கொள்கைக்கு எதிரானது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

"இந்த ஆய்வு தற்போதைய அரசாங்கத்தின் சம்பிரதாய நடைமுறை மட்டுமே" என்கின்றனர்.

மேலும், "இதுகுறித்து எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை. 2015, 2016-க்கு இடைப்பட்ட காலத்தில் புதையல் தேடும் நிறுவனமான மெரிடைம் ஆர்க்கியாலஜி கன்ஸல்டண்ட்ஸ் நிறுவனம் வழங்கிய தகவல்களும் வெளியிடப்படவில்லை. இது இந்த ஆய்வில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும்" என்கின்றனர் விமர்சகர்கள்.

ICANH-ன் இயக்குனர் அலெனா கைசிடோ பிபிசி முண்டோவிடம், ”அரசின் சட்ட பாதுகாப்பு முகமையின் ஆலோசனையின் பேரில், தற்போதைய ஆராய்ச்சி திட்டமானது, கப்பல் குறித்து மெரிடைம் ஆர்க்கியாலஜி கன்ஸல்டண்ட்ஸ் நிறுவனம் வழங்கிய எந்த அறிக்கையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது” என தெளிவுபடுத்தினார்.

புதையல் யாருக்கு? 3 பேர் உரிமை கோருவதால் சிக்கல்

இந்த ஆழ்கடல் அறிவியல் ஆராய்ச்சியை அரசாங்கம் அறிவித்த அதே நேரத்தில், தி ஹேக் நகரில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றம் கொலம்பியாவிற்கும் ’சீ சர்ச் ஆர்மடா’ என்ற அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையே இக்கப்பல் தொடர்பான சர்வதேச வழக்குகளை முறையாக விசாரிக்கத் தொடங்கியது.

’சீ சர்ச் ஆர்மடா’ நிறுவனம் இதுகுறித்து கூறுகையில், கொலம்பியாவிற்கு முன்பே இக்கப்பலை கண்டுபிடித்ததாகவும், எனவே, அக்கப்பலின் பாதி மதிப்புக்கு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலரை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.

இந்த வழக்கில் கொலம்பியாவின் பாதுகாப்பை ஏற்க வேண்டிய நிறுவனமான தேசிய சட்டப் பாதுகாப்பு முகமையின் இயக்குநர், இந்தக் கூற்றை "கொடூரமானது" மற்றும் "அற்பமானது " என்று விவரித்தார்

கொலம்பிய சட்டங்கள் இக்கப்பலை "கைப்பற்ற முடியாதது" என்று கூறுகிறது. ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து யாருடையது என்பது பற்றிய சர்ச்சைகளை இச்சட்டங்கள் தடுக்கவில்லை.

2015-ம் ஆண்டில், ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர், "இக்கப்பல் அரச கப்பல் என்பதால் அதை ஸ்பெயின் விட்டுக் கொடுக்காது" என்று கூறினார். எவ்வாறாயினும், இரு அரசாங்கங்களும் சர்ச்சைக்கு இணக்கமான மற்றும் ராஜதந்திர தீர்வை அடைவதற்கான தங்கள் நோக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

பிப்ரவரி 23 அன்று, கொலம்பியாவிற்கான ஸ்பெயின் தூதர், கொலம்பியாவிற்கு "இதுதொடர்பாக இருதரப்பு ஒப்பந்தத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை" வழங்குவதற்கு தனது நாட்டு அரசாங்கத்திடமிருந்து அறிவுறுத்தல்கள் இருப்பதாகக் கூறினார்.

"நாங்கள் பலருடன் வரலாற்றைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். குறிப்பாக ஸ்பெயினுடன், பொலிவியாவுடன், கிரனாடா ராஜ்ஜியத்தைச் சேர்ந்த மக்களுடன், நாங்கள் வரலாற்றைப் பகிர்ந்து கொள்கிறோம்" என்று அவர் விளக்குகிறார்.

பொலிவியன் பூர்வீக குரா குரா (Qhara Qhara) சமூகமும் அக்கப்பலின் ஒரு பகுதியைக் கோருகிறது, வன்முறை மற்றும் சுரண்டல் மூலம் கப்பலில் உள்ள போடோசி சுரங்கங்களிலிருந்து பெறப்பட்டது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c8v3m15llq2o

ரோத்ஸ்சைல்ட்ஸ்: இந்த யூத குடும்பம் 'இஸ்ரேல்' உருவாக என்ன செய்தது?

2 months 1 week ago
ரோத்ஸ்சைல்ட்ஸ்: பிரிட்டன் போன்ற வல்லரசுகளுக்கே கடன் கொடுத்த இந்த யூத குடும்பம் 'இஸ்ரேல்' உருவாக என்ன செய்தது?
ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

லார்ட் ஜேக்கப் ரோத்ஸ்சைல்ட், இந்த வாரம் தனது 87ஆம் வயதில் இறந்தார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஏஞ்சல் பெர்முடெஸ்
  • பதவி, பிபிசி நியூஸ் வேர்ல்டு
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

திட்டமிட்டபடி அனைத்து விஷயங்களும் நடந்திருந்தால், மேயர் ஆம்ஷெல் ஒரு ரப்பியாக (யூத மதகுரு) இருந்திருப்பார். ஆனால் விதி அவரது திட்டங்களை மாற்றியது. ஒரு ஜெப ஆலயத்தை நடத்துவதற்கு பதிலாக, உலகின் மிகவும் பிரபலமான ரோத்ஸ்சைல்ட் & கோ எனும் தனியார் வங்கி சாம்ராஜ்யத்தை அவர் நிறுவினார்.

ஃபிராங்க்ஃபர்ட் நகரின் யூத கெட்டோவான ஜூடென்காஸ்ஸில் மேயர் ஆம்ஷெலின் மூதாதையர் ஒருவரின் வீட்டை வேறுபடுத்திக் காட்டிய சிவப்பு நிற அடையாளத்திலிருந்து (ரோத் (Rot) = சிவப்பு, சைல்ட் (schild) = அடையாளம்) உருவான ரோத்ஸ்சைல்ட் என்ற குடும்பப் பெயர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கிறது.

ஃபோர்ப்ஸ் இதழின் பில்லியனர்கள் பட்டியலில் இந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் தற்போது இடம்பெறவில்லை என்றாலும், சர்வதேச அரசியல் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஒரு அழியாத தடத்தைப் பதித்துள்ளது இந்த குடும்பம்.

குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில், நெப்போலியனுக்கு எதிராகப் போரிடும் ஐரோப்பியப் படைகளுக்கு இந்த குடும்பத்தினர் நிதியுதவி அளித்தனர். அதே போல, பிரதம மந்திரி பெஞ்சமின் டிஸ்ரேலி தலைமையிலான பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சூயஸ் கால்வாயில் மில்லியன் டாலர் பங்குகளை வாங்குவதற்கும் நிதியளித்தனர்.

சமூகத்தில் அவர்களது புகழ் வளர்ந்த அதே நேரத்தில், ரோத்ஸ்சைல்ட்ஸ் குறித்த எண்ணற்ற சதி கோட்பாடுகளும் வளர்ந்தன. அவை மீண்டும் மீண்டும் பொய் என்று நிரூபிக்கப்பட்டாலும், இந்த இரண்டு நூற்றாண்டுகளாக அத்தகைய சதி கோட்பாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.

கடந்த மாத இறுதியில், இந்த குடும்பத்தின் பிரிட்டிஷ் கிளையின் தலைவராகக் கருதப்பட்ட லார்ட் ஜேக்கப் ரோத்ஸ்சைல்ட் தனது 87வது வயதில் இறந்த செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல கட்டுக்கதைகள், சதி கோட்பாடுகள் மீண்டும் உலாவந்தன.

இந்த குடும்பத்தின் வரலாறு என்ன, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்த அவர்கள் உண்மையில் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள்?

 
கெட்டோவிலிருந்து அரச நீதிமன்றம் வரை
ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

குடும்பத் தலைவரான மேயர் ஆம்ஷெல் ரோத்ஸ்சைல்ட், பிராங்பேர்ட்டின் யூத கெட்டோவில் உள்ள இந்த வீட்டில் பிறந்தார்.

1744இல் பிறந்த மேயர் ஆம்ஷெல் ரோத்ஸ்சைல்ட் ஒரு சாதாரண வணிகக் குடும்பத்தின் மகனாவார். அதில் புகழ்பெற்ற ரப்பிகளும் இருந்தனர். அதனால் தான் தங்களது முதல் மகனை ஆன்மிக பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் நினைத்தார்கள்.

ஆனால் 11 வயதாக இருந்தபோது மேயரின் பெற்றோர் மரணமடைந்ததால் ஒரு வேலை தேட வேண்டிய நெருக்கடிக்கு அவர் தள்ளப்பட்டார். ஹனோவரில் உள்ள ஒரு வங்கியில் ஒரு பயிற்சிப் பதவியில் சேர்ந்த அவர் படிப்படியாக வணிகச் சந்தையில் நுழைந்தார்.

அந்த வங்கியில் அவர் பல ஆண்டுகள் பணிபுரிந்தார், போதுமான அளவு கற்றுக்கொண்டு, பணம் சேமித்து, 1770இல் பிராங்பர்ட் திரும்ப முடிவு செய்தார். அங்கு அவர் திருமணம் செய்துகொண்டு, தனது சொந்த நிறுவனத்தை தொடங்கினார்.

ஆரம்பத்தில் மேயர் பழங்கால நாணயங்கள், பொருட்கள் மற்றும் கலைப் படைப்புகள் விற்கும் தொழிலைச் செய்தார். பின்னர் அவருக்கு போதுமான முதலீடு கிடைத்ததும், நிதித்துறையில் நுழைந்தார்.

சில ஆண்டுகளில், அவர் அரசர் வில்லியம் I ஆட்சியின் கீழ் இருந்த லாங்ராவியேட் ஆப் ஹெஸ்ஸே (Landgraviate of Hesse) எனும் சமஸ்தானத்தின் வங்கி நிர்வாகியாக ஆனார்.

இந்த வேலையில் இருந்த போது, அரசரின் கஜானாவை மட்டுமல்லாது, தனது செல்வத்தையும் எவ்வாறு அதிகரிப்பது என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார்.

நெப்போலியன் நடத்திய போர்களால் இது சாத்தியமானது. ஏனென்றால் வில்லியம் I தனது போர் வீரர்களின் சேவைகளை இங்கிலாந்து மற்றும் பிரஷியாவிற்கு விற்ற போது, போர்களுக்கு தேவையான நிதியை அரசாங்கங்களுக்கு கடனாக வழங்கினார் மேயர் ஆம்ஷெல்.

"நெப்போலியனுடனான போர்களுக்கு முக்கிய நிதியாளர்களில் ஒருவராக ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பத்தினர் இருந்தார்கள். அவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு நிதியளித்தனர். நெப்போலியனுக்கு எதிரான கூட்டணிக்கு அவர்கள் கடன்கள் வழங்கினார்கள். தங்கத்தை விற்று அதில் பணம் சம்பாதித்தார்கள்," என்கிறார் அமெரிக்க பத்திரிகையாளர் மைக் ரோத்ஸ்சைல்ட். இவரது கடைசிப் பெயர் ரோத்ஸ்சைல்ட் என இருந்தாலும், இந்த வம்சத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்.

200 ஆண்டுகளாக இந்த குடும்பத்தைச் சுற்றி உருவாக்கப்பட்ட முக்கிய கட்டுக்கதைகளைப் பற்றிய புத்தகத்தின் ஆசிரியர் இவர்.

"போருக்கு அதிக பொருளும் பணமும் தேவைப்பட்டதால், மிக விரைவாக அதிக செல்வத்தை ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தினரால் சம்பாதிக்க முடிந்தது" என்று கூறுகிறார் பத்திரிகையாளர் மைக் .

1887இல் வெளியிடப்பட்ட மற்றொரு படைப்பான 'தி ரோத்ஸ்சைல்ட்ஸ்: தி ஃபைனான்சியல் ரூலர்ஸ் ஆஃப் நேஷன்ஸ்' (The Rothschilds: the Financial Rulers of Nations) நூலில், "ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் (1808-1814) தீபகற்பப் போரின் போது அரசுக்கு தொடர்ந்து நிதி வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

நிதியைக் கொண்டு செல்வதற்கான பொறுப்பை ஏற்க அப்போதைய நிதியாளர்கள் தயக்கம் காட்டினர்.

எனவே ரோத்ஸ்சைல்ட்ஸ் ஒரு நல்ல கமிஷனுக்காக இதைச் செய்ய முன்வந்தார்கள். அது மட்டுமல்லாது தொடர்ந்து எட்டு ஆண்டுகள் இந்த தொழிலை மிகவும் இலாபகரமான முறையில் நடத்தினர்.

இந்த வெற்றியால், ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நட்பு நாடுகளின் இளவரசர்களுக்கு நிதி அனுப்புவதை நிர்வகிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை நியமித்தது." என்கிறார் ஜான் ரீவ்ஸ்.

 
ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குதல்
ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரோத்ஸ்சைல்ட் குடும்ப சின்னம்

ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தைச் சுற்றி பின்னப்பட்ட கட்டுக்கதைகளில் ஒன்று, அந்தக் காலத்தின் பல முக்கிய ஐரோப்பிய தலைநகரங்களில் இந்த குடும்ப நிறுவனத்தின் கிளைகளை நிறுவுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வகையான ஒருங்கிணைந்த திட்டத்தைக் குறிக்கிறது.

உண்மையில், முதலில் பிறந்த ஆம்ஷெல் ஃபிராங்க்ஃபர்ட்டில் தங்கியிருந்தபோது, குடும்பத்தின் மற்ற நான்கு மகன்கள் லண்டன் (நாதன்), பாரிஸ் (ஜாகோப், பின்னர் ஜேம்ஸ்), வியன்னா (சாலமன்) மற்றும் நேபிள்ஸ் (கார்ல்) ஆகிய இடங்களில் நிறுவனத்தின் கிளைகளை நிறுவினர்.

இருப்பினும், இந்த கிளைகள் ஒரே நேரத்தில் உருவாக்கப்படவில்லை, 1804இல் லண்டன் அலுவலகத்தை உருவாக்குவதற்கும், 1820களில் வியன்னா மற்றும் நேபிள்ஸில் கிளைகளை நிறுவுவதற்கும் இடையில் 15 ஆண்டுகளுக்கும் மேல் இடைவெளி இருந்தது.

இந்த குடும்பத்தைச் சுற்றியுள்ள மிகப்பெரிய புரளிகளில் ஒன்று, நாதன் ரோத்ஸ்சைல்ட் குறித்தது.

1846இல் வெளியிடப்பட்ட, சாத்தான் என்ற புனைப்பெயருடன் கையெழுத்திட்ட ஒரு துண்டுப் பிரசுரம் ஐரோப்பா முழுவதும் விரைவாக பரவியது. நெப்போலியனுக்கு எதிரான போர் பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி பங்குச் சந்தையில் மில்லியன்களை ஈட்டினார் நாதன் ரோத்ஸ்சைல்ட் என்று அதில் கூறப்பட்டது.

இந்தக் கதையின்படி, வாட்டர்லூ போரில் (பெல்ஜியம்) நெப்போலியன் தோல்வியடைந்ததை வங்கியாளர் நாதன் கண்டார். அங்கிருந்து அவர் விரைவாக, வலுவான புயலையும் பொருட்படுத்தாமல் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து, லண்டனுக்கு வந்தார். போர் குறித்த செய்திகள் வெளியாவதற்கு முன்பே பல பங்குகளை வாங்கினார். பின்னர், போரின் முடிவுகள் பற்றிய செய்தி இறுதியாக நகரத்தை எட்டிய போது, அந்த பங்குகளின் விலை பலமடங்கு உயர்ந்தது.

2015இல், பிரிட்டிஷ் செய்தித்தாள் தி இன்டிபென்டன்ட்டில், பத்திரிகையாளர் பிரையன் கேத்கார்ட், "போர் நடந்த சமயத்தில் நாதன் ரோத்ஸ்சைல்ட் வாட்டர்லூவிலோ அல்லது பெல்ஜியத்திலோ இல்லை, அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் பங்குச் சந்தையில் மகத்தான லாபத்தைப் பெறவில்லை. கூடுதலாக, ஆங்கில கால்வாயில் அப்போது வலுவான புயல் எதுவும் இல்லை" எனக் கூறியுள்ளார். எனவே இந்தக் கதை தவறானது.

இந்த கதை பல தசாப்தங்களாக பரவி வருகிறது. 1910 இல் வெளியிடப்பட்ட என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பதிப்புகளில் கூட இது இடம்பெற்றது.

நெப்போலியன் போர்களால் இந்தக் குடும்பம் பெரும் செல்வத்தை குவித்தது உண்மை தான். ஆனால் அது முன்னர் சுட்டிக்காட்டப்பட்டபடி, அரசாங்கங்கள் மற்றும் இராணுவங்களுக்கு கடனாக நிதி வழங்கியதன் மூலம் கிடைத்தது.

போர்களில் இரு தரப்பினருக்கும் நிதியளிப்பதன் மூலம் ரோத்ஸ்சைல்ட்ஸ் தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள் என்பதும் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் அவ்வாறு நடக்கல்லை என பிபிசியிடம் கூறுகிறார் மைக் ரோத்ஸ்சைல்ட்

"வரலாற்று ரீதியாக கணிசமான ரோத்ஸ்சைல்ட் இருப்பைக் கொண்ட இரண்டு நாடுகள் போரில் ஈடுபட்ட சம்பவங்கள் உண்டு. நெப்போலியன் போர்களில் கூட அதைக் காண முடியும். பாரிஸில் ஒரு ரோத்ஸ்சைல்ட் அலுவலகம் மற்றும் லண்டனில் ஒரு ரோத்ஸ்சைல்ட் அலுவலகம் இருந்தது. போர்களில் இத்தகைய சிக்கலான சூழல்களை சமாளிப்பது கடினம்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

"அவர்கள் இரு தரப்பினருக்கும் நிதியுதவி செய்தார்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் அதைச் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில், அவர்கள் நெப்போலியன் போர்கள் முடியும் வரை பிரான்சின் எதிரிகளுக்கு தொடர்ந்து நிதியுதவி செய்தனர் ," என்று அவர் மேலும் கூறுகிறார்.

மேயர் ஆம்ஷெல் இறக்கும் நேரத்தில், குடும்பம் ஏற்கனவே 'மேயர் ஆம்ஷெல் ரோத்ஸ்சைல்ட் அண்ட் சன்ஸ்' என்ற நிறுவனத்தை நிறுவியிருந்தது, அதன் செல்வம் ஐந்து மகன்களுக்கு சமமாகப் பிரிக்கப்பட்டது. அதை வீணாக்காமல், என்ன நடந்தாலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தந்தை ஆம்ஷெல் அறிவுறுத்தியிருந்தார்.

 
ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்த விளக்கப்படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, வாட்டர்லூவிலிருந்து லண்டனுக்கு பயணித்ததன் மூலம் நாதன் ரோத்ஸ்சைல்ட் பணக்காரர் ஆனார் என்ற பொய் பல நூற்றாண்டுகளாக பரவலாகப் பரப்பப்பட்டது.

ஐரோப்பிய காலனித்துவத்திற்கு நிதி அளித்தவர்கள்
ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நதானியேல் மேயர் டி ரோத்ஸ்சைல்ட் என்பவர் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நுழைந்த முதல் யூதர் ஆவார்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு (1815-1914) காலம் 'உலகின் மிகப்பெரிய வங்கி' என்று அழைக்கப்பட்ட ரோத்ஸ்சைல்ட்ஸ் வங்கியை அந்த குடும்பம் சிறப்பாக பராமரித்தனர்.

ஆனால் அவர்களுடையது ஒரு பாரம்பரிய வங்கி அல்ல. அங்கு மக்கள் தங்கள் சேமிப்புகளை டெபாசிட் செய்து கடன் வாங்கவில்லை, மாறாக அரசாங்க கடன்கள் மற்றும் பத்திரப் பரிவர்த்தனைகளில் கவனம் செலுத்தும் முதலீட்டு வங்கி போன்றது.

"1820களில் ரோத்ஸ்சைல்ட்ஸ், சர்வதேச பத்திர சந்தையாக மாறும் சாத்தியம் கொண்டிருந்த ஐரோப்பிய நிதித்துறையில் ஆதிக்கம் செலுத்தியது" என மைக் ரோத்ஸ்சைல்ட் தனது 'Jewish Space Lasers: The Rothschild and 200 Years of Conspiracy Theories' நூலில் குறிப்பிடுகிறார்.

"அவர்கள் ஐரோப்பிய ராயல்டி, வாட்டிகன், நாட்டின் பிரதம மந்திரிகள் மற்றும் கிங் ஜார்ஜ் IV ஆகியோருக்கு ஆலோசகர்களாகவும் கடன் வழங்குபவர்களாகவும் இருந்தனர். மேலும் அவர்கள் எதிர்கால பிரெஞ்சு சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட உருவான ரஷ்யா, பிரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவின் ஒப்பந்தக் குழுவான புனிதக் கூட்டணிக்கும் வங்கியாளர்களாக இருந்தனர்." என அவர் கூறுகிறார்.

1836இல் இறக்கும் போது, நாதன் உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. செல்வத்துடன் பொது அங்கீகாரமும் வந்தது.

மேயர் ஆம்ஷெலின் ஐந்து மகன்களுக்கும் ஆஸ்திரிய பேரரசின் மதிப்பிற்குரிய பட்டங்கள் கிடைத்தன மற்றும் அவர்களின் சந்ததியினரால் சமூகத்தின் மிக உயர்ந்த அடுக்குகளில் ஒருங்கிணையவும் முடிந்தது.

உதாரணமாக, லியோனல் நாதன் டி ரோத்ஸ்சைல்ட் (1808-1879) பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் முதல் யூத உறுப்பினர் ஆவார்.

1875இல் பிரிட்டிஷ் அரசாங்கம் சூயஸ் கால்வாயில் பங்குதாரராக ஆவதற்கு, குறுகிய அவகாசத்தில் 4 மில்லியன் பவுண்டுகள் கடனை வழங்கியவர்.

அவரது உறவினர் மேயர் அல்போன்ஸ் டி ரோத்ஸ்சைல்ட் (1827-1905), குடும்பத்தின் பிரெஞ்சு கிளையைச் சேர்ந்தவர், 1870களுக்குப் பிறகு பிராங்கோ-பிரஷ்யன் போரில் பிரெஞ்சு அரசாங்கத்திற்குத் தேவையான இழப்பீடுகளைச் செலுத்த வேண்டிய இரண்டு பெரிய கடன்களை சாத்தியமாக்கிய வங்கிகளின் கூட்டணிக்கு தலைமை தாங்கினார்.

இது நாட்டில் இருந்த வெளிநாட்டு துருப்புகளை திரும்பப் பெறுவதற்கு உதவியது மற்றும் ஜனாதிபதி அடோல்ஃப் தியர்ஸ் அரசாங்கம் அதிகாரத்தில் நிரந்தரமாக இருப்பதற்கு உத்தரவாதம் அளித்தது.

லியோனல் நாதன் டி ரோத்ஸ்சைல்டின் மகனான நதானியேல் மேயர் (நாட்டி) டி ரோத்ஸ்சைல்ட் (1840-1915), பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நுழைந்த முதல் யூதர் மற்றும் முதல் லார்ட் ரோத்ஸ்சைல்ட் ஆனார்.

19ஆம் நூற்றாண்டு முழுவதும், குடும்பத்தின் வணிகங்கள் தொடர்ந்து செழித்து வளர்ந்தன. வங்கி மற்றும் அரசாங்க பத்திர வர்த்தகத்திற்கு அப்பால் அவை பன்முகப்படுத்தப்பட்டன.

அவர்கள் காப்பீட்டு நிறுவனங்களிலும் முதலீடு செய்தனர் மற்றும் தொழில்துறை, உலோகவியல், சுரங்க மற்றும் இரயில்வே நிறுவனங்களில் பங்குகளை வாங்கினார்கள்.

கூடுதலாக, 19ஆம் நூற்றாண்டில், அவர்கள் ஆப்பிரிக்காவில், குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் பல ஐரோப்பிய காலனித்துவ சாகசங்களுக்கு நிதியளித்தனர்.

"அந்த நிலங்களில் வாழ்ந்த மக்களுக்கு எதிராக நடந்த பல துஷ்பிரயோகங்களுக்கு உடந்தையாகவோ அல்லது குறைந்தபட்சம் அதைக் குறித்து தெளிவற்றவர்களாகவோ இருந்தார்கள்" என்று மைக் ரோத்ஸ்சைல்ட் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

அவர்களின் வங்கி வணிகம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தது. ஆனால் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவர்கள் ஏற்கனவே மற்ற பெரிய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க குழுக்களிடமிருந்து போட்டியை எதிர்கொண்டனர். இது நிதித்துறையில் அவர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

 
ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பாரோன் எட்மண்ட் ஜேம்ஸ் டி ரோத்ஸ்சைல்ட் (1845-1934) ஓட்டோமான் பாலஸ்தீனத்தில் யூதக் குடியேற்றங்களை நிறுவுவதற்காக அங்கு நிலம் வாங்க பெரும் நிதியை ஒதுக்கீடு செய்தார்.

சியோனிசம் மற்றும் இஸ்ரேல்
ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

1836 இல் அவர் இறக்கும் போது, நாதன் ரோத்ஸ்சைல்ட் உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்பட்டார்.

பாரம்பரியமாக, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் தலைவர் அந்த நாட்டில் உள்ள யூத சமூகத்தின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறார்.

இஸ்ரேல் நாட்டை உருவாக்கியதில் இந்த குடும்பம் முக்கிய பங்கு வகித்தது.

எட்மண்ட் ஜேம்ஸ் டி ரோத்ஸ்சைல்ட் (1845-1934), மேயரின் பேரன் மற்றும் ஜேம்ஸ் டி ரோத்ஸ்சைல்டின் இளைய மகன். யூத மக்களுக்கு ஒரு தாயகத்தை நிறுவும் யோசனையான சியோனிசத்தின் சிறந்த ஊக்குவிப்பாளர்களில் ஒருவர்.

யூத எதிர்ப்பு மற்றும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் யூதர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களை உணர்ந்த எட்மண்ட், அப்போது ஒட்டோமான் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் நிலம் வாங்குவதற்கு பெரிய வளங்களை ஒதுக்கீடு செய்தார்.

யூத காலனிகளை நிறுவுவதற்கும், அந்த நாடுகளில் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கும் எட்மண்ட் நிதியளித்தார். 1934இல் அவர் இறந்த போது, சுமார் 500 சதுர கிலோமீட்டர் நிலத்திலும் கிட்டத்தட்ட 30 குடியிருப்புகளிலும் பிரதிநிதித்துவம் செய்பவராக இருந்தார்.

அவர் இறந்த பிறகு, பாரிஸில் முதலில் புதைக்கப்பட்டாலும், 1954இல் எட்மண்ட் மற்றும் அவரது மனைவி அட்லிஹெய்டின் உடல்கள் இஸ்ரேலுக்கு ஒரு போர்க்கப்பலில் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவர்கள் உடல்களுக்கு பிரதமர் டேவிட் பென் குரியன் தலைமையிலான அரசு இறுதி மரியாதை செய்தது.

லியோனல் வால்டர் (வால்டர்) ரோத்ஸ்சைல்ட் (1868-1937), இரண்டாவது லார்ட் ரோத்ஸ்சைல்டான இவர், 1917இல் கையெழுத்திடப்பட்ட, புகழ் பெற்ற பால்ஃபோர் பிரகடன ஆவணத்தைப் பெற்றவர் என்பதால், இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு வழிவகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

இதன் மூலம் பாலஸ்தீனத்தில் "யூத மக்களுக்கான தேசிய இல்லத்தை" உருவாக்குவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தனது ஆதரவை அறிவித்தது.

சைம் வெய்ஸ்மேன் - சியோனிசத்தின் சிறந்த ஊக்குவிப்பாளர்களில் ஒருவர், பின்னர் அவர் பிரிட்டிஷ் அரசாங்க உதவியுடன் இஸ்ரேலின் முதல் ஜனாதிபதியாக இருந்தார் .

பால்ஃபோர் பிரகடனம் தொடர்பான பேட்டியில் ஜேக்கப் ரோத்ஸ்சைல்ட் கூறுகையில், "ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் யூதர்களின் வாழ்க்கையில் இது மிகப்பெரிய நிகழ்வு, ஒரு அதிசயம். இது நடக்க 3,000 ஆண்டுகள் ஆனது." என்கிறார்.

டோரதி டி ரோத்ஸ்சைல்ட், 'யாட் ஹனாடிவ்' என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவினார், இது நெசெட் (பாராளுமன்றம்) கட்டிடங்கள், உச்சநீதிமன்றம் மற்றும் மிக சமீபத்தில் இஸ்ரேலின் தேசிய நூலகத்தை கட்டுவதற்கு நிதியளித்தது.

சமீபத்தில் இறந்த ஜேக்கப் டி ரோத்ஸ்சைல்ட் கடந்த சில தசாப்தங்களாக இந்த அறக்கட்டளைக்கு தலைமை தாங்கினார். அவரது வழிகாட்டுதலின் கீழ் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் முயற்சிகள் மற்றும் இஸ்ரேலில் அரபு சிறுபான்மையினருக்கு சம வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது இந்த அறக்கட்டளை.

"இஸ்ரேலில் ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம் இப்போதும் மிகவும் மதிக்கப்படுகிறது. சியோனிச இயக்கத்தின் முக்கிய நிதியாளர்களில் ஒருவராக அவர்கள் உள்ளனர்” என்று மைக் ரோத்ஸ்சைல்ட் பிபிசியிடம் கூறுகிறார்.

அதேநேரத்தில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சியோனிச யோசனையைச் சுற்றி ஒன்றுபடவில்லை என்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார்.

"சில ரோத்ஸ்சைல்ட்ஸ் இஸ்ரேல் தேசத்தை நிறுவுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தாலும், மற்றவர்கள் உண்மையில் அதற்கு எதிராக இருந்தனர்," என்று அவர் குறிப்பிடுகிறார்.

ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் உறுப்பினர்களின் ஆதரவுடன், பாலஸ்தீனத்தில் யூத மக்களுக்கு ஒரு தேசிய இல்லத்தை உருவாக்குவதற்கு ஆதரவை வழங்குமாறு பிரிட்டிஷ் அதிகாரிகளை சாய்ம் வெய்ஸ்மேன் சமாதானப்படுத்தினார்.

ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம் என்ன ஆனது?

முதலாம் உலகப் போருக்குப் பிறகு, ரோத்ஸ்சைல்ட்ஸின் சக்தியும் செல்வமும் குறையத் தொடங்கின, அவர்கள் ஒரு பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த குடும்பமாக இருந்தபோதிலும், அவர்கள் ஒரு காலத்தில் அனுபவித்த வசதி, மரியாதை அவர்களுக்கு இல்லை.

இருந்தபோதிலும், தொடர்ந்து கட்டுக்கதைகள் மற்றும் சதி கோட்பாடுகளுக்கு ஆளாகினர். ஏன்?

" ரோத்ஸ்சைல்ட்ஸ் குறித்து தொடர்ந்து மக்கள் பேசுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் மேற்கில் நன்கு அறியப்பட்ட யூத குடும்பங்களில் ஒன்றாக இருக்கிறார்கள். சதி கோட்பாடுகள் மற்றும் யூத எதிர்ப்பு எண்ணங்கள் கைகோர்த்துச் செல்கின்றன" என்கிறார் மைக் ரோத்ஸ்சைல்ட்.

"சதி கோட்பாடுகள் பொதுவாக சில வகையான யூத-விரோத கூறுகளைக் கொண்டுள்ளன, குறிப்பாக அதில் கூறப்பட்டுள்ள திட்டங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள், யார் நிதியளிக்கிறார்கள் என்பது பற்றிய சில கூறுகள்."

"சதி கோட்பாடுகளை நம்புபவர்களில் பலர், யூதர்கள் தான் அவற்றை உருவாக்குகிறார்கள் என்று நினைக்கிறார்கள். யூதர்களைப் பற்றி பேசும்போது, மிகவும் பிரபலமான மற்றும் பணக்கார யூதக் குடும்பத்தை குறிவைப்பது மிகவும் எளிதானது அல்லவா" என்கிறார் மைக்.

https://www.bbc.com/tamil/articles/cxwz8m777mmo

ஹெய்ட்டியில் சிறை மீது ஆயுதகும்பல் தாக்குதல் - 3000க்கும் அதிகமானகைதிகள் தப்பியோட்டம்

2 months 1 week ago

Published By: RAJEEBAN   04 MAR, 2024 | 10:35 AM

image

ஹெய்ட்டி தலைநகரில் உள்ள பிரதான சிறைச்சாலையொன்றின் மீது தாக்குதலை மேற்கொண்ட கும்பலொன்று அங்கிருந்த 4000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்துச்சென்றுள்ளது.

தலைநகரின் பிரதான சிறைச்சாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக 4000க்கும் அதிகமான கைதிகள் தப்பியோடிவிட்டனர் என செய்திகள் வெளியாகின்றன.

2021 இல் ஜனாதிபதி ஜொவெனல் மொஸ்சேயை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களும் சிறையுடைப்பு காரணமாக தப்பிச்சென்றுள்ளனர்.

ஹெய்ட்டியின்  வழமையான நெரிசல் மிகுந்த சிறைச்சாலை வெறுமையாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்றி காணப்படுகின்றது காலணிகளும் ஆடைகளும் கதிரைமேசைகளும் சிதறுண்டு காணப்படுகின்றன என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

haiti_viole1.jpg

சிறைச்சாலை வாயிலில் மூன்று உடல்கள் காணப்படுகின்றன.

இதேவேளை 1400 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த இரண்டாவது சிறைச்சாலையிலும் சிறை உடைப்பு இடம்பெற்றுள்ளது.

எத்தனை கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர் என்பது தெரியாது என குறிப்பிட்டுள்ள மனித உரிமை சட்டத்தரணி 4000 சிறைக்iதிகளில் 100க்கும் குறைவானவர்களே எஞ்சியுள்ளனர் எனவும்  தெரிவித்துள்ளது.

நான் ஒருவன் மாத்திரம் எஞ்சியுள்ளேன் என ஒருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக அவசரகால நிலையை அறிவித்துள்ள ஹெய்ட்டி அரசாங்கம்  இரவு நேர ஊரடங்கு சட்டத்தையும் பிரகடனம் செய்துள்ளது.

https://www.virakesari.lk/article/177839

காசாவை நோக்கி பரசூட்கள் மூலம் உணவுப்பொதிக‍ளை வீசியது அமெரிக்கா

2 months 1 week ago

Published By: RAJEEBAN   03 MAR, 2024 | 12:07 PM

image

காசாவின் மீது அமெரிக்கா வான்வழியாக மனிதாபிமான உதவிகளை வீசியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்று விமானங்கள் பராசூட்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

GHsM1PmWQAAMJdH.jpg

ஜோர்தான் விமானப்படையுடன்  இணைந்து அமெரிக்கா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

உணவுவாகன தொடரணியை சூழ்ந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 110க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து காசாவிற்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையிலேயே அமெரிக்கா இந்த நடவடிக்கையைமேற்கொண்டுள்ளது.

GHsM1PuWEAAg_2b.jpg

சி130 ரக விமானங்கள் 38000 உணவுப்பொதிகளை காசாவிற்குள் பரசூட் மூலம் வீசின என அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் பிரான்ஸ் எகிப்து ஜோர்தான் ஆகிய நாடுகள் முன்னர் காசாவின் மீது இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன எனினும் அமெரிக்கா இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வது இதுவே முதல்தடவை.

GHsM1PfXwAAyqV1.jpg

வியாழக்கிழமை இடம்பெற்ற துன்பியல் நிகழ்வு காசாவில் காணப்படும் மிகமோசமான மனிதாபிமான நிலை காரணமாக அந்த பகுதிக்கான மனிதாபிமான உதவிகள் விநியோகத்தை தொடர்ந்து பேணவேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தியுள்ளது என பைடன் நிர்வாகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/177790

ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் இறுதி நிகழ்வு - புட்டின் இல்லாத ரஸ்யா என கோசம்

2 months 2 weeks ago
ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் - உங்களை நாங்கள் மறக்கமாட்டோம் - புட்டின் இல்லாத ரஸ்யா என கோசம்

Published By: RAJEEBAN   02 MAR, 2024 | 12:43 PM

image

கடும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி ஆயிரக்கணக்கான ரஸ்ய மக்கள் எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர் 

ரஸ்ய ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்த  அலெக்ஸி நவால்னி 16 ம் திகதி சிறையில் உயிரிழந்தார்.

இது தொடர்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது குற்றம் என அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

GHlhjzhXkAA_4O4.jpg

பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த போதிலும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நவால்னியின் பெயரை  குறிப்பிட்டு கோசங்களை எழுப்பினர்.

நவால்னி பல வருடங்களாக வசித்த ரஸ்யாவின் மர்யினோ பகுதியில் நேற்று இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றவேளை ஆயிரக்கணக்கில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கடும் குளிருக்கும் மேல் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் என நவால்னியின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அங்கு காணப்பட்ட மக்கள் அரசியல் ரீதியில் கோசங்களை எழுப்பினர் எனினும் பொலிஸார் அதில் தலையிடவில்லை.

யுத்தம் வேண்டாம், புட்டின் இல்லாத ரஸ்யா, ரஸ்யா சுதந்திரமடையும் என  மக்கள் கோசங்களை எழுப்பினர்.

ஐகோன் ஒவ் அவர் லேடி குயின்ஞ் மை சொரோவ்ஸ் தேவாலயத்தில் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன .

ரஸ்ய அதிகாரிகள் இறுதிநிகழ்வுகளிற்கு பல இடையூறுகளை ஏற்படுத்தினர். பிரேதத்தை கொண்டுசெல்வதற்கான வாகனங்கள் கிடைக்க விடாமல் தடுத்தனர் என  நவால்னியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் காத்திருந்தனர்  ஜேர்மன் பிரான்ஸ் உட்பட பல நாடுகளின் தூதுவர்களும் அப்பகுதிக்கு சென்றிருந்தனர்.

vLuHO0iE.jpg

தேவாலயத்திற்குள் சில நிமிடங்களே ஆராதனைகள் இடம்பெற்றன நவால்னியின் உடலிற்கு பலர் அஞ்சலி செலுத்துவதையும் அவரது தாயார் மனைவி காணப்படுவதையும் காண்பிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதன் பின்னர் தேவாலயத்தின் மணியோசை கேட்டதும் பிரேதப்பெட்டி வெளியே கொண்டுவரப்பட்டது. பூக்களை எறிந்த மக்கள் நாங்கள் உங்களை மறக்கமாட்டோம் என கோசம் எழுப்பினர்.

https://www.virakesari.lk/article/177737

பிளாக்பஸ்டர் பனிப்புயல் கலிபோர்னியாவில் 12 அடி பனிப்பொழிவு சாத்தியம், 100-மைல் வேகத்தில் காற்று வீசுகிறது.

2 months 2 weeks ago
ஆபத்தான குளிர்கால புயல் கலிபோர்னியாவை வந்தடைந்துள்ளது மற்றும் வார இறுதியில் மலைகளில் பனி, சக்திவாய்ந்த காற்று மற்றும் அரிதான பனிப்புயல் நிலைகளை இறக்கும்.
 
இந்த புயல் கலிபோர்னியாவை இந்த ஆண்டின் மிகப்பெரிய பனிப்பொழிவின் கீழ் புதைக்கும், பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் - ஆனால் மாநிலத்தின் நீர் வழங்கல் மற்றும் சுற்றுலாவிற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கிறது.
 
சியாரா நெவாடாவின் மிக உயர்ந்த சிகரங்களில் வியாழன் அன்று கடும் பனியுடன் 140 மைல் வேகத்தில் காற்று வீசியது. சக்திவாய்ந்த புயல் இந்த தீவிர காற்றையும், வார இறுதியில் கடுமையான பனியையும் இறக்கி, நீண்ட கால பனிப்புயல் நிலைமைகளை உருவாக்கும்.
 
"சியரா பாஸ்களில் பயணம் செய்வது ஏற்கனவே துரோகமாகிவிட்டது, வார இறுதிக்குள் செல்லும்போது அது மோசமடையும்" என்று நெவாடாவின் ரெனோவில் உள்ள தேசிய வானிலை சேவை அலுவலகம் வெள்ளிக்கிழமை எச்சரித்தது. "பதங்குவதற்கான நேரம் நம்மீது உள்ளது."
 
பனிப்பொழிவு விகிதங்கள் வெள்ளி முதல் சனிக்கிழமை வரை ஒரு மணி நேரத்திற்கு 3 முதல் 5 அங்குலங்கள் வரை - குறிப்பாக சியரா நெவாடாவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
நீடித்த கடுமையான பனிப்பொழிவு என்பது 6 முதல் 12 அடி வரை பனிப்பொழிவு என்பது சில நாட்களில் மலைகளின் சில பகுதிகளை புதைத்துவிடும்.

 

லெபானனிற்குள் தரைவழியாக நுழைவதற்கு திட்டமிட்டுள்ள இஸ்ரேல் - அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தகவல்

2 months 2 weeks ago

Published By: RAJEEBAN   29 FEB, 2024 | 04:26 PM

image

ஹெஸ்புல்லா அமைப்பை இஸ்ரேலுடனான வடபகுதி எல்லையிலிருந்து அகற்றுவதற்கான இராஜதந்திர முயற்சிகள்  வெற்றியளிக்காவிட்டால் இஸ்ரேல் வசந்தகாலத்தின் பிற்பகுதியில் அல்லது கோடைகால ஆரம்பத்தில் லெபனானிற்குள் தரைவழியாக நுழைவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டு வருகின்றது என வெளியான தகவல்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் புலனாய்வாளர்கள் மத்தியில் கவலை நிலவுகின்றது.

சிஎன்என் இதனை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு புலனாய்வு பிரிவினர் இஸ்ரேல் லெபனானிற்குள் தரைவழியாக நுழையலாம் என்பது குறித்து  தகவல்களை வழங்கியுள்ளனர்.

கோடைகாலத்தின் ஆரம்பத்தில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை ஆரம்பிக்கும் என புலனாய்வு பிரிவினரின் தகவல்களை பெற்றுக்கொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் இஸ்ரேல் இராணுவநடவடிக்கையில் ஈடுபடலாம் என்ற அடிப்படையிலேயே நாங்கள் செயற்படுகின்றோம் என பைடன் நிர்வாகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

லெபானை இலக்குவைத்து இஸ்ரேல் தரைவழிதாக்குதலை மேற்கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன எனவும் அவர் தெரிpவித்துள்ளார்.

பலமாதங்களாக இஸ்ரேலிற்கும் லெபானனிற்கும் இடையில் இடம்பெறும் நாளாந்த பயங்கரமான மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான லெபான் மற்றும் இஸ்ரேலிய மக்கள் தங்கள் பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

ஹெஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் விமான ரொக்கட் ஆளில்லா தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது .

அதேவேளை ஹெஸ்புல்லா அமைப்பினர் ரொக்கட் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்.

https://www.virakesari.lk/article/177608

காஸா பலி எண்ணிக்கை 30,000 ஐ கடந்தது: பட்டினியாலும் மரணங்கள்

2 months 2 weeks ago

Published By: SETHU   29 FEB, 2024 | 03:43 PM

image

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,000 ஐக கடந்துள்ளது.

இஸ்ரேலில் ஹமாஸ் இயக்கம் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதல்களையடுத்து, பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியம் மீது இஸ்ரேலியப் படைகள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இத்தாக்குதல்கள் ஆரம்பித்த பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  30,000 ஐ கடந்துள்ளது என காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

இதுவரை 30,035 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 70457 பேர் காயமடைந்துள்ளனர் என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, காஸாவின் அல் ஷிபா நகரிலுள்ள வைத்தியசாலையில், மந்தபோஷாக்கு, நீரிழப்பு மற்றும் பட்டினி காரணமாக 6 சிறார்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் மரணங்களைத்   தடுப்பதற்காக சர்வதேச ஸ்தாபனங்கள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் காஸா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா கோரியுள்ளார்.

https://www.virakesari.lk/article/177601

ரஷ்யாவுக்கு எதிராகப் போருக்குத் தயாராகிறதா பிரான்ஸ்?!

2 months 2 weeks ago
ரஷ்யாவுக்கு எதிராகப் போருக்குத் தயாராகிறதா பிரான்ஸ்? நேட்டோ ராணுவக் கூட்டணி என்ன சொல்கிறது?
யுக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பும் பிரான்ஸ் அதிபரின் கருத்துக்கு ஏன் இவ்வளவு எதிர்வினைகள்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இமானுவேல் மக்ரோங்

3 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனை ஆதரிக்க மேற்கு நாடுகள் தங்கள் துருப்புக்களை அனுப்பும் யோசனையை தவிர்க்கக் கூடாது என பேசியிருந்தார். அவருடைய இக்கருத்து ஐரோப்பா முழுவதும் அதனைக் கடந்தும் எதிர்வினைகளை பெற்று வருகிறது.

பிரான்ஸ் அதிபரின் இந்த கருத்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தலைவர்கள், நேட்டோ உறுப்பினர்கள் ஆகியோர், இதுகுறித்து தங்கள் கருத்து வேறுபாடுகளை பரவலாக வெளிப்படுத்த வழிவகுத்தது.

யுக்ரேனுக்கு மேற்கத்திய துருப்புக்களை அனுப்புவது ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையே நேரடி மோதலை ஏற்படுத்தும் என்று ரஷ்யா பலமுறை எச்சரித்துள்ளது .

"இந்த விவகாரத்தில் ‘இது நிகழ்ந்திருக்கலாம்’ என நாம் நினைப்பது குறித்து பேசக்கூடாது. ஆனால், (ஒரு மோதலின்) தவிர்க்க முடியாத தன்மையைப் பற்றி பேச வேண்டும். இதை நாங்கள் இப்படித்தான் மதிப்பிடுகிறோம்,” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பிரான்ஸ் அதிபரின் கருத்து குறித்து கேள்வி எழுப்பியபோது கூறினார்.

 
ரஷ்யா கூறியது என்ன?
யுக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பும் பிரான்ஸ் அதிபரின் கருத்துக்கு ஏன் இவ்வளவு எதிர்வினைகள்?

பட மூலாதாரம்,RUSSIAN PRESIDENTIAL PRESS SERVICE

படக்குறிப்பு,

ரஷ்ய அதிபர் புதின்

மேலும் பேசிய டிமிட்ரி பெஸ்கோவ் "இந்த நாடுகள் (மேற்கு நாடுகள்) அதை மதிப்பீடு செய்து விழிப்புடன் இருக்க வேண்டும். இது (துருப்புக்களை அனுப்புவது) அவர்களின் நலன்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் நாட்டு குடிமக்களின் நலன்களுக்கும் ஏற்றதா என அவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறுகையில், "இதுபோன்ற எண்ணங்களை வெளிப்படுத்துபவர்கள், தங்கள் அறிவை ஐரோப்பாவிற்கு பாதுகாப்பான, பகுத்தறிவு சிந்தனைகளுக்குப் பயன்படுத்த வேண்டும்," என தெரிவித்தார்.

ரஷ்ய துருப்புக்கள் சமீபத்தில் யுக்ரேன் பிரதேசத்தில் முன்னேறியுள்ளன. அதேநேரத்தில், யுக்ரேனியர்கள் ஆயுதப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஏராளமான பீரங்கி வெடிமருந்துகளுடன் மிகப்பெரும் ரஷ்ய துருப்புக்களுடன் தொடர்ந்து போரிடுவதற்கு, யுக்ரேன் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளிடமிருந்து, குறிப்பாக அமெரிக்காவிடம் இருந்து நவீன ஆயுதங்களை பெரிதும் நம்பியுள்ளது .

ஆனால் அதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு அமெரிக்க பேரவையில் உடன்பாடு இல்லாதது மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து விநியோகத்தில் தாமதம் ஆகியவை யுக்ரேன் ராணுவத்தின் நிலைமையை சிக்கலாக்குகின்றன.

 
பிரான்ஸ் அதிபர் கருத்துக்கு எதிர்வினைகள்
யுக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பும் பிரான்ஸ் அதிபரின் கருத்துக்கு ஏன் இவ்வளவு எதிர்வினைகள்?

பட மூலாதாரம்,PA MEDIA

படக்குறிப்பு,

பிரிட்டன் பிரதமர் ரிஷி சூனக்

பாரிஸில் நடைபெற்ற ஐரோப்பிய தலைவர்கள் கூட்டத்தில், யுக்ரேனின் வெற்றி ஐரோப்பாவின் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானது என்று மக்ரோங் கூறினார். இந்த உச்சி மாநாட்டில் அந்நாட்டுக்கு ராணுவ வீரர்களை அனுப்புவது சாத்தியமா இல்லையா என்பது குறித்து விவாதித்தனர்.

"தற்போது தரைப்படைகளை அனுப்புவதில் ஒருமித்த கருத்து இல்லை. ஆனால் எதையும் நிராகரிக்க முடியாது," என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்தார். "இந்தப் போரில் ரஷ்யா வெற்றி பெறுவதைத் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்வோம். ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ரஷ்யாவின் தோல்வி அவசியம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்," என அவர் கூறினார்.

கடந்த செவ்வாய்கிழமை, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர், ஸ்டீஃபன் செஜோர்ன், அந்நாட்டு அதிபரின் கருத்து குறித்து கூறுகையில், தீவிரமான போரில் துருப்புக்களை ஈடுபடுத்துவதை மக்ரோங் குறிப்பிடவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

"யுக்ரேனை ஆதரிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை நாங்கள் பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக, யுக்ரேனிய பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றுதல், இணைய பாதுகாப்பு, ஆயுதங்கள் உற்பத்தி ஆகியவை குறித்து நான் யோசித்து வருகிறேன்," செஜோர்ன் பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.

யுக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பும் பிரான்ஸ் அதிபரின் கருத்துக்கு ஏன் இவ்வளவு எதிர்வினைகள்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி

'பிரிட்டன் ஏற்கனவே துருப்புகளை அனுப்பியுள்ளது'

எப்படியிருந்தாலும், மக்ரோங்கின் பரிந்துரை உயர்மட்ட உலகத் தலைவர்கள் சிலரால் நிராகரிக்கப்பட்டது.

ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ், "ஒன்று தெளிவாக உள்ளது: ஐரோப்பிய நாடுகள் அல்லது நேட்டோவில் இருந்து தரைப்படைகளை அனுப்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை," என்றார்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சூனக், தனது பங்குக்கு, தனது நாடு "ஏற்கனவே சிறிய எண்ணிக்கையிலான துருப்புக்களை யுக்ரேனுக்கு அனுப்பியுள்ளது," என்று கூறினார்.

“நாங்கள் பெரியளவிலான துருப்புக்களை அனுப்பத் திட்டமிடவில்லை. பிரிட்டன் தனது பிரதேசத்தில் ஏராளமான யுக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. நிச்சயமாக, நாங்கள் யுக்ரேனிய துருப்புக்களுக்கு உபகரணங்கள் மற்றும் பிறவற்றை அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம்,” என தெரிவித்தார்.

 
யுக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பும் பிரான்ஸ் அதிபரின் கருத்துக்கு ஏன் இவ்வளவு எதிர்வினைகள்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 'யுக்ரேனுக்கு அமெரிக்கா துருப்புக்களை அனுப்பாது' என்று தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், யுக்ரேனிய துருப்புக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட ராணுவ உதவியை வழங்குவதுதான் 'வெற்றிக்கான பாதை' என தான் நம்புவதாக பைடன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அலுவலகம், "ஐரோப்பிய நாடுகள் அல்லது நேட்டோவின் துருப்புக்கள் யுக்ரேனிய பிரதேசத்தில் இருப்பதற்கு இத்தாலியின் ஆதரவு இல்லை," என்று கூறியது.

நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் யுக்ரேனுக்கு உடனடியாக துருப்புக்கள் அனுப்பும் யோசனையை நிராகரித்தார். "நேட்டோ போர் துருப்புக்களை யுக்ரேனிய பகுதிக்கு அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

சுவீடன், ஹங்கேரி, போலந்து மற்றும் செக் குடியரசின் தலைவர்களும் படைகளை போர்முனைக்கு அனுப்பும் நோக்கத்தை நிராகரித்துள்ளனர்.

யுக்ரேனுக்கு வீரர்களை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி பேசுவதோடு மட்டுமல்லாமல், மக்ரோங் தனது உரையில் அந்நாட்டு தலைநகர் கீயவ்-க்கு 'நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை' வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் குறிப்பிட்டுள்ளார். இது மோதலுக்கு வழிவகுக்கும் என்ற மேற்கு நாடுகளின் அச்சத்தால் இதுவரை நடக்கவில்லை.

 
மக்ரோங்கின் நோக்கம் என்ன?
யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

போரால் பாதிக்கப்பட்ட யுக்ரேன் கிராமம்

சர்வதேச அரசியல் நிபுணரான உல்ரிச் ஸ்பெக்கைப் பொறுத்தவரை, இத்தகைய கருத்துக்கள் மூலம் மாஸ்கோவை விழிப்புடன் வைத்திருக்கும் 'மூலோபாய நிச்சயமற்ற தன்மையை' ஏற்படுத்துவதுதான் மக்ரோங்கின் நோக்கம் என்றார்.

"ஆனால், இதுபோன்ற விஷயங்கள் முற்றிலும் எதிர்பாராதது அல்ல: யுக்ரேனுக்கு உறுதியான மற்றும் பெரியளவிலான ராணுவ ஆதரவு தேவை. இது, கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரான்ஸ் செய்யாத ஒன்று," என்று சமூக ஊடகமான ‘எக்ஸ்’ தளத்தில் அவர் தெரிவித்தார்.

முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியும் ராணுவ ஆய்வாளருமான நிக்கோலஸ் டிரம்மண்ட், பிரான்ஸ் அதிபர் "சர்வதேச அரங்கில் தனது பிம்பத்தை மேம்படுத்த" ஒரு தந்திரத்தைப் பயன்படுத்துகிறார் என்று நம்புகிறார்.

"பிரான்ஸ் அல்லது வேறு எந்த நேட்டோ நாடும் யுக்ரேன் போர்க்களத்திற்கு துருப்புக்களை அனுப்புவது சாத்தியமில்லை. அந்நாடுகள் ரஷ்யாவிற்கும் புதினுக்கும் எதிராக மறைமுக போரை நடத்தலாம், ஆனால் நேரடியாக பங்கேற்கும் விருப்பம் அவர்களுக்கு இல்லை," என்று அவர் 'எக்ஸ்' தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி ரஷ்ய சேவையின் போர் செய்தியாளர் பாவெல் அக்செனோவின் கருத்துப்படி, "நீண்ட தூர ஏவுகணைகளை அனுப்புவது மற்றும் வீரர்களை நிலைநிறுத்துவது பற்றிய மக்ரோங்கின் கருத்துகள், மேற்கு நாடுகள் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே மறைமுகமான 'சிவப்பு கோடுகளை' மீறுவது போன்று உள்ளது,” என தெரிவித்தார்.

"யுக்ரேனிய போரில் வெளிநாட்டு துருப்புக்களின் பங்கேற்பு பற்றிய மக்ரோங்கின் கருத்துக்கள் இன்னும் இன்னும் தீவிரமான மீறலாகும். அத்தகைய வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் பல்வேறு மட்டங்களில் பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இக்கருத்து தற்போது மிகப்பெரிய ஐரோப்பிய நேட்டோ உறுப்பு நாட்டின் தலைவரால் கூறப்பட்டுள்ளது," என அக்செனோவ் குறிப்பிட்டார்.

இது சிறிய, நுட்பமான நகர்வுகளின் உத்தியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c8vnd3gye77o

அவுஸ்திரேலிய அரசியல்வாதி நாட்டை காட்டிக்கொடுத்தார் - புலனாய்வு பிரிவின் திடுக்கிடும் தகவல்

2 months 2 weeks ago
வெளிநாட்டு புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்ட அவுஸ்திரேலிய அரசியல்வாதி நாட்டை காட்டிக்கொடுத்தார் - அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவின் தலைவர் திடுக்கிடும் தகவல்

Published By: RAJEEBAN    29 FEB, 2024 | 12:15 PM

image

அவுஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதியொருவர் நாட்டை வெளிநாட்டின் புலனாய்வு அமைப்பிற்கு  காட்டிக்கொடுத்தார் என அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளமை அவுஸ்திரேலிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏடீம் என்ற வெளிநாட்டு புலனாய்வு குழுவினருடன் இணைந்து செயற்பட்ட  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், வெளிநாட்டு புலனாய்வாளர்களை பிரதமரின் அலுவலகம் வரை அழைத்துச்சென்றார் என தேசிய புலனாய்வுபிரிவின் தலைவர் மைக்பேர்கெஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரையோ அல்லது அவர் எந்த நாட்டின் சார்பில் பணியாற்றினார் என்பதையோ வெளியிடாத புலனாய்வு பிரிவின் தலைவர் பல வருடங்களிற்கு முன்னர் இது இடம்பெற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கலைக்கப்பட்டுள்ள ஏடீம் ஒரு ஆக்ரோசமான மற்றும் அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்பாகும் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் இது அவுஸ்திரேலியாவை முன்னுரிமைக்குரிய இலக்காக கொண்டுசெயற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் உள்ளுர் அரசாங்க அதிகாரிகள், கல்வியாளாகள் உட்பட பல்வேறு போர்வையில் செயற்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சமூகத்தின் பல தரப்பட்டவர்களை இலக்குவைத்தனர் என  தெரிவித்துள்ள புலனாய்வுபிரிவின் தலைவர் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவற்றிற்கு இடையிலான அவுகஸ் உடன்படிக்கை  அவர்களின் முக்கிய ஆர்வத்திற்குரிய விடயமாக காணப்பட்டது  எனவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின் பிடிக்குள் சிக்குண்டு அவர்களிற்காக செயற்பட்டவர்களில் முன்னாள் அரசியல்வாதியே முக்கியமானவர் என மைக்பேர்கெஸ் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அரசாங்கத்தின் நலன்களை முன்னெடுப்பதற்காக முன்னாள் அரசியல்வாதி நாட்டை கட்சியை நண்பர்களை  விற்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த அரசியல்வாதி பிரதமரின் குடும்பத்தவர்களை வெளிநாட்டு புலனாய்வுபிரிவினரின் வட்டத்திற்குள் கொண்டுவர முயன்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/177583

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - மிசெல் ஒபாமா போட்டியிடவேண்டும் என ஜனநாயக கட்சியினர் விருப்பம்

2 months 2 weeks ago
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - பைடனிற்கு பதில் மிசெல் ஒபாமா போட்டியிடவேண்டும் என ஜனநாயக கட்சியினர் விருப்பம்

Published By: RAJEEBAN    28 FEB, 2024 | 11:29 AM

image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோபைடனிற்கு பதில் மிசெல் ஒபாமா போட்டியிடவேண்டும் என ஜனநாயககட்சியை சேர்ந்த அதிகளவான வாக்காளர்கள் விரும்புவது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக ஜோ பைடன் போட்டியிடகூடாது என பெரும்பான்மையான ஜனநாயக கட்சியினர் கருதுவதும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

மிசெல் ஒபாமா டொனால்ட் டிரம்பிற்கு எதிராக போட்டியிடவேண்டும் என ஜனநாயக கட்சியினர் விரும்புகின்றனர்.

நவம்பர் தேர்தலிற்கு முன்னர் ஜோபைடனிற்கு பதில் கட்சி வேறு ஒரு வேட்பாளரை நியமிப்பதற்கு 48 வீதமான ஜனநாயக கட்சியினர் ஆதரவளித்துள்ளனர்.

38 வீதமானவர்கள் இதனை நிராகரித்துள்ளனர்.

இதேவேளை இந்த தருணத்தில் அவ்வாறான ஒரு விடயம் இடம்பெறலாம் என 33 வீதமான வாக்காளர்களே நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

பைடனிற்கு பதில் யார் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்பது குறித்து ஜனநாயகட்சியினர் மத்தியில் பொதுக்கருத்து காணப்படாத போதிலும் 20 வீதமானவர்கள் மிசெல்  ஒபாமாவை குறிப்பிட்டுள்ளனர்.

ஹமாலா ஹாரிஸ் உட்பட பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் முன்னாள் ஜனாதிபதியின் துணைவியாருக்கு அதிகளவு ஆதரவு காணப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/177482

அவுஸ்திரேலியாவின் இறைமைக்கு சீனாவால் ஆபத்து - முன்னாள் பிரதமர் ஸ்கொட்மொறிசன்

2 months 2 weeks ago
அவுஸ்திரேலியாவின் இறைமைக்கு சீனாவால் ஆபத்து - நாடாளுமன்றத்திற்கான தனது இறுதி உரையில் அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஸ்கொட்மொறிசன்

Published By: RAJEEBAN   27 FEB, 2024 | 12:39 PM

image

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொறிசன் நாடாளுமன்றத்திற்கான தனது பிரியாவிடை உரையில் சீனாவால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவை கட்டாயப்படுத்த அல்லது ஆதாயம்தேட சீனா மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து ஸ்கொட் மொறிசன் தனது நாடாளுமன்ற உரையில்  எச்சரித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் இறைமைக்கு  சீனா ஆபத்தானதாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா 'மோதல் இராஜதந்திரத்தை மூலோபாய அடிப்படையில் தவிர்த்து வருவதை அடிப்படையாக வைத்து' அந்த நாட்டின் நோக்கங்கள் பற்றி குழப்பம் ஏற்படக்கூடாது என தெரிவித்துள்ள ஸ்கொட் மொறிசன் சீனா சுதந்திரத்தை விட அதிகாரத்தை பலத்தை விரும்பும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனா தனதுநோக்கங்கள் என வரும்போது தனது மக்கள் குறித்து அக்கறை கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே எனது அரசாங்கம் சீனாவின் ஆக்கிரமிப்பினை வற்புறுத்தல்களை மிரட்டல்களை  எதிர்ப்பதில் உறுதியாகயிருந்தது எனவும் தெரிவித்துள்ள ஸ்கொட் மொறிசன்  நாங்கள் அடிபணிவோம் என சீனா நினைத்தது எனவும் தெரிவித்துள்ளார்.

2022 தேர்தல் முடிவுகள் காரணமாக சீனா தனது வற்புறுத்தும்  நடவடிக்கைகளை கைவிட்டிருக்கலாம். ஆனால் நாம் ஏமாறக்கூடாது. அவர்களின் தந்திரோபாயங்கள் மாறலாம், ஆனால் மூலோபாயங்கள் மாற்றமடையவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/177416

உக்ரைனிற்கு மேற்குலக படைகள் - சாத்தியம் உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவிப்பு

2 months 2 weeks ago

Published By: RAJEEBAN    27 FEB, 2024 | 09:55 AM

image

உக்ரைனிற்கு மேற்குலக நாடுகள் தங்கள் படையினரை அனுப்பக்கூடும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்  தெரிவித்துள்ளார்.

பாரிசில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் மக்ரோன் இதனை தெரிவித்துள்ளார்

இந்த சந்திப்பில் உக்ரைனிற்கு மேற்குலக நாடுகள் படையினரை அனுப்புவது குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று மாலை வரை படையினரை உக்ரைனிற்கு அனுப்புவது குறித்து எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை ஆனால் இதற்கான வாய்ப்புகளை தவிர்க்க முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரஸ்யா யுத்தத்தில் வெல்வதை தடுப்பதற்காக எங்களால் ஆனா அனைத்தையும் செய்வோம் என தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி நான் இதனை மிகுந்த உறுதிப்பாட்டுடன் தெரிவிக்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குலக படையினரை  ஒருபோதும் உக்ரைனிற்கு அனுப்பகூடாது என்று அன்று சொன்னவர்கள், விமானங்களையும், ஏவுகணைகளையும், டிரக்குகளையும் அனுப்பகூடாது எனவும் சொன்னார்கள். தற்போது உக்ரைனிற்கு அதிகளவு ஏவுகணைகள் டாங்கிகளை அனுப்பவேண்டும் என  தெரிவிக்கின்றனர் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உக்ரைனிற்கு ஏவுகணைகள் குண்டுகளை அனுப்புவதற்கான புதிய கூட்டணியை உருவாக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/177392

ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!

2 months 2 weeks ago
7-9.jpg

ஒருவர் தனிப்பட்ட முறையில் வீட்டிலேயே 3 கஞ்சா செடி வரை வளர்க்கலாம் மற்றும் தினமும் 25 கிராம் வரை உபயோகிக்கலாம் என ஜெர்மனி பாராளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது.

ஜெர்மனியில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய பாராளுமன்றம் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

கஞ்சா உபயோகத்தை சட்டரீதியாக ஒப்புகொள்ளும் இந்த சட்டத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், அரச தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் தனிநபர், சட்டம் கொடுத்த உரிமையுடன் வீட்டிலேயே 3 கஞ்சா செடிகள் வரை வளர்க்கலாம். மேலும், ஒருவர் சுமார் 25 கிராம் வரை கஞ்சாவை தினமும் எடுத்துகொள்ளலாம்.

கஞ்சா எடுத்துகொள்வதற்கு என்று ஒரு குழு அமைக்கப்படும் அதில் உறுபினர்கள் மட்டுமே சட்டபூர்வமாக கஞ்சா எடுத்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் சமீபக்காலமாக கஞ்சா உட்கொள்ளுதல் இளைஞர்களில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கருப்பு சந்தையில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.

அதனை தடுத்து சட்டபூர்வமாக்கும்போது, விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சட்டத்திற்கு நாட்டில் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மால்டா மற்றும் லக்சம்பர்க் நாடுகளை தொடர்ந்து தற்போது ஜெர்மனியும் கஞ்சா உபயோகத்தை சட்டரீதியாக அங்கீகரித்தது பல்வேறு பகுதிகளில் இருந்து எதிர்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நெதர்லாந்து நாடும் கஞ்சாவை சட்டபூர்வமாக அங்கீகரிக்க முனைப்பு காட்டுகிறமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/293213

நான் தொடர்ந்தும்இனப்படுகொலையுடன் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை - இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே அமெரிக்க விமானப்படை வீரர் தீக்குளிக்க முயற்சி

2 months 2 weeks ago

Published By: RAJEEBAN   26 FEB, 2024 | 11:15 AM

image

காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் அமெரிக்க விமானப்படையை  சேர்ந்த ஒருவர் வோசிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தனக்குதானனே தீமூட்டிக்கொண்டார்  என  சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

உடனடியாக தீயை அணைத்த அமெரிக்க இரகசிய சேவையை சேர்ந்தவர்கள் அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தீக்குளிக்க முயற்சித்த நபர் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார் அவர் விமானப்படையை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராணுவசீருடையில் காணப்படும்  அந்த நான் தொடர்ந்தும்இனப்படுகொலையுடன் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை என தெரிவிக்கும் இணையவீடியோவொன்று வெளியாகியுள்ளது.

தன்மேல்எரிபொருளை ஊற்றி தனக்குதானே தீமூட்டிக்கொள்வதற்கு முன்னர் அந்த நபர் சுதந்திர பாலஸ்தீனம் என கோசமிட்டார் என டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் வோசிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்னால் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/177304

குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி

2 months 2 weeks ago
ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இரு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

trump.jpg

இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. இதில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். தெற்கு மாகாணத்தில் நடந்த வாக்குப்பதிவில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஏற்கனவே நியூ ஹாம்ப்ஷையர் மற்றும் லோவா காகசஸ் மாகாணங்களில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/293106

உறவில் கடும் விரிசல் இருந்தும் பருப்பு இறக்குமதிக்கு கனடாவை நம்பியிருக்கும் இந்தியா

2 months 2 weeks ago

சீக்கிய பிரிவினைவாதி படுகொலையை அடுத்து, கனடாவுடன் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டிருந்தாலும் பருப்பு இறக்குமதி அளவை இந்தியா இருமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியாகியுள்ளது.

பருப்பு இறக்குமதி

உற்பத்தியில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக இந்தியாவை வெளிநாட்டு கொள்முதல்களை அதிகரிக்க தூண்டியதாக கூறுகின்றனர். சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் சஜ்ஜர் படுகொலையில் இந்தியாவின் பங்கு தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

உறவில் கடும் விரிசல் இருந்தும் பருப்பு இறக்குமதிக்கு கனடாவை நம்பியிருக்கும் இந்தியா | India Lentil Imports From Canada Surge@reuters

 

தங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் பாதிப்புக்குள்ளானது.

இந்த நிலையில், கனடாவில் இருந்து பருப்பு இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அளவை குறைத்துக் கொண்டது. இந்தியா அல்லது கனேடிய நிர்வாகம் தங்கள் வர்த்தகத்தில் தடைகளை விதிக்கலாம் என்ற அச்சமே காரணமாக கூறப்பட்டது.

ஆனால் அந்த அச்சமும் நீடிக்கவில்லை. கனடாவில் இருந்து இந்தியாவின் பருப்பு இறக்குமதி முந்தைய ஆண்டை விட 2023ல் 120 சதவிகிதம் அதிகரித்து 851,284 மெட்ரிக் டன்னாக இருந்தது என்று அரசு தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

சுமார் 3 மில்லியன் டன்

 

பருப்பு இறக்குமதிக்கு இந்தியா பெருமளவில் கனடாவையே நம்பியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், பருப்பு இறக்குமதிக்கு வணிக நிறுவனங்கள் மாற்று வழியைத் தேடியதாக கூறப்படுகிறது.

உறவில் கடும் விரிசல் இருந்தும் பருப்பு இறக்குமதிக்கு கனடாவை நம்பியிருக்கும் இந்தியா | India Lentil Imports From Canada Surge@reuters

 

2023ல் அதிக விளைச்சல் காரணமாக அவுஸ்திரேலியாவிலிருந்தும் பருப்பு இறக்குமதி மேம்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவின் பருப்பு இறக்குமதி 2023ல் முந்தைய ஆண்டை விட 162 சதவிகிதம் அதிகரித்து, 1.68 மில்லியன் டன்களை எட்டியது.

இதன் மொத்த மதிப்பு 1.25 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது. இந்தியாவில் பருப்பு வகைகளின் தேவை சுமார் 3 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்தி என்பது வெறும் 1.3 மில்லியன் டன் அளவுக்கே இருப்பதாக கூறுகின்றனர். 

https://news.lankasri.com/article/india-lentil-imports-from-canada-surge-1708556576

பிபிசி தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய குடிமகன் தெரிவு., யார் அவர்?

2 months 2 weeks ago

பிபிசியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகனும், ஊடகவியலாளருமான டாக்டர் சமீர் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

இது தொடர்பாக, பிரித்தானிய கலாச்சாரத்துறை செயலர் லூசி பிரேசர் வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் எம்.பி.க்கள் அடங்கிய தேர்வுக் குழு அவரது பெயரை இறுதி செய்யும், இது பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸால் அங்கீகரிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

 

BBC News, BBC New Chairman, British Broadcasting Corporation, Dr Samir Shah BBC, Indian Origin British, பிபிசியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய குடிமகன், சமீர் ஷா

தொலைக்காட்சி தயாரிப்பு மற்றும் பத்திரிகையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள சமீர் ஷா, முன்பு பிபிசியின் நடப்பு விவகாரங்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளின் தலைவராகப் பணியாற்றினார். 

அவர் மார்ச் 2028 வரை (நான்கு ஆண்டுகள்) பிபிசி தலைவராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும், பிபிசியின் தலைவராக (Chairman) சமீர் ஷா ஆண்டுக்கு 160,000 Pounds (இலங்கை பணமதிப்பில் ரூ.6.3 கோடி) சம்பளம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுடனான (Boris Johnson) திரைமறைவு விவகாரம் வெளியானதை அடுத்து ரிச்சர்ட் ஷார்ப் (Richard Sharp) கடந்த ஆண்டு பிபிசி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

https://news.lankasri.com/article/bbcs-first-indian-origin-chairman-in-dr-samir-shah-1708675470

Checked
Thu, 05/16/2024 - 08:53
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe