உலக நடப்பு

சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்: டொனால்ட் ட்ரம்பிற்கு 355 மில்லியன் டொலர்கள் அபராதம்

2 months 3 weeks ago

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு 355 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்து நியூயோர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து தவறான தகவல்களை வழங்கி வந்ததாக ட்ரம்ப் மீது சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் நிறைவில், பெருந்தொகை அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப், அவருடைய இரு மூத்த மகன்கள், அவருடைய நிறுவனம், நிர்வாகிகள் ஆகியோர் திட்டமிட்டு தங்கள் சொத்துகள் பற்றி பொய்யான நிதி விபரங்களை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அளித்து, தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர்.

இந்த தீர்ப்பு காரணமாக ட்ரம்ப் குடும்பத்தினர் நடத்தி வரும் வணிக நிறுவனம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதுடன், நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் செயற்பட வேண்டிய கட்டாயமும் நேர்ந்திருக்கிறது.

மேலும், இதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடக் கூடிய வகையில் முன்னேறிவந்த டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ட்ரம்ப்க்கு அபராதம் 355 மில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ள போதும், அமெரிக்க சட்டப்படி அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதால், அவர் சுமார் 450 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/292285

உலகம் முழுவதும் நடக்கும் விவசாயிகள் போராட்டம் - எதற்காக?

2 months 3 weeks ago
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் நடக்கும் விவசாயிகள் போராட்டம் - எதற்காக?
விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

17 பிப்ரவரி 2024

இந்தியாவில் மீண்டும் ஒருமுறை மத்திய அரசுக்கெதிரான விவசாயிகள் போராட்டம் தொடங்கியுள்ளது. குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இந்த முறை இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் பல்வேறு நாடுகளிலும் விவசயிகள் போராட்டட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள புதிய விதிகள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக போலந்து, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நாடுகள் அனைத்திலும் முக்கிய நகரங்களின் பிரதான சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் விவசாயிகள்.

ஆனால், எதற்காக இந்த விவாயிகள் போராடி வருகின்றனர்? அதற்கான காரணம் என்ன? ஐரோப்பியா மற்றும் இந்திய விவசாயிகளின் கோரிக்கைகள் இரண்டும் ஒன்றா?

 
விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,ERIC LALMAND/BELGA MAP/AFP

படக்குறிப்பு,

பல்வேறு நாடுகளில் விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது.

எந்தெந்த நாடுகளில் விவசாயிகள் போராட்டம் நடக்கிறது?

மேற்கு போலந்தை சேர்ந்த போஸ்னான் நகரின் சாலைகள் முழுதும் 1,400-க்கும் மேற்பட்ட டிராக்டர்களோடு விவாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே போலந்து, ஹங்கேரி, பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி, ருமேனியா ஆகிய நாடுகளில் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அவர்களது போராட்ட முறை ஒரே மாதிரியனதாக இருந்தாலும் கூட, ஒவ்வொரு நாட்டு விவசாயிகளுக்கும் கோரிக்கை வேறு வேறானதாக இருக்கிறது.

ஸ்பெயினை சேர்ந்த விவசாயிகள் சில முக்கிய நகரங்களுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். ஹங்கேரிய விவசாயிகள் யுக்ரேனிலிருந்து ஐரோப்பாவுக்குள் வரும் விவசாய பொருட்களை தடுத்து நிறுத்துவதற்காக டிராக்டர்களோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரான்ஸ் மற்றும் பாரிஸை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், ஐரோப்பா முழுவதிலும் உள்ள விவசாயிகள் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

 
விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,VILLAR LOPEZ/EPA-EFE/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு,

விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு

ஐரோப்பிய விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் என்ன?

ஐரோப்பாவில் உள்ள விவசாயிகள் நான்கு முக்கிய பிரச்னைகளை முன்வைக்கின்றனர்.

  • விவசாயத்தில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு.
  • விவசாயத்தில் அதிகரித்து வரும் அரசின் தலையீடு.
  • பசுமை ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் விவசாயிகள் மீது விதித்துள்ள விதிமுறைகள்.
  • ஐரோப்பா அல்லாத நாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரிப்பதால் உள்நாட்டு விளைபொருட்களின் விலை குறைவு.

ஐரோப்பாவைச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டு விவசாயிகளுக்கும் வெவ்வேறு பிரச்னைகள் உள்ளன. போலந்து மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விவசாயிகளுக்கு உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை விவசாய பொருட்களை தடுக்க வேண்டும்.

அதிக இறக்குமதியின் காரணமாக உள்ளூர் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை என்பதே அவர்களது வாதம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு எதிராக ஸ்பெயினை சேர்ந்த விவசாயிகளும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

 
விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்த விவசாயிகள் பட்டாசு வெடிப்பது மற்றும் குப்பைகளை சாலையில் கொட்டி தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கிரீஸ் நாட்டைச் சேர்ந்த விவசாயிகள், மின்கட்டணம் குறைப்பு, டீசல் வரி ரத்து மற்றும் கால்நடைத் தீவனத்திற்கு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

இத்தாலியை சேர்ந்த விவசாயிகள் வருமான வரியில் இருந்து தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த விதிவிலக்கு ரத்து செய்யப்பட்டுள்ள முடிவை எதிர்த்து போராடி வருகின்றனர்.

போலந்து விவசாயிகள் மொத்தம் 256 இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அங்கு விவசாயிகள் கையில் கொடிகளை ஏந்திக்கொண்டு முக்கியமான சாலைகளை முற்றுகையிட்டுள்ளனர். அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூற்றுப்படி, போஸ்னனில் மட்டும் 6,000 விவசாயிகள் கூடியுள்ளனர்.

இந்த விவசாயிகள் பட்டாசு வெடிப்பது மற்றும் குப்பைகளை சாலையில் கொட்டி தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

 
விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கிரீஸை சேர்ந்த விவசாயிகள் மின்கட்டணம் குறைப்பு, டீசல் வரி ரத்து மற்றும் கால்நடைத் தீவனத்திற்கு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்

ஐரோப்பிய ஒன்றியம் கார்பன் உமிழ்வு மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை 50% குறைக்க முடிவு செய்தது. ஆனால், விவசாயிகளின் எதிர்ப்பால் அந்த முடிவு திரும்ப பெறப்பட்டது. இருப்பினும், 2040-க்குள் கார்பன் உமிழ்வை 90% கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

ஸ்பெயினில் நான்காவது நாளாக பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருவதால், பில்பாவ் போன்ற முக்கிய நகரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது முக்கிய கோரிக்கைகளாக குறைந்தபட்ச ஆதாரவிலை உத்திரவாதம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை முன்வைத்துள்ளனர்.

ஒருவகையில் ஐரோப்பாவில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையில் இருந்து இது மாறுபட்டதாக உள்ளது.

 
விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

இந்திய விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?
  • குறைந்தபட்ச ஆதார விலைக்கான தனிச்சட்டம்.
  • எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.
  • 2020-2021-ஆம் ஆண்டுகளில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும்.
  • லக்கிம்பூர் கேரி வழக்கின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
  • மாசுக்கட்டுப்பாட்டு சட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக் கூடாது.
  • விவசாயிகளுக்கு உடனடி கடன் தள்ளுபடி வழங்க வேண்டும்.
  • 58 வயதுக்கு அதிகமான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

இந்தாண்டு (2024) இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. ஐரோப்பிய நாடுகள் இந்தியா போல விவசாயத்தை சார்ந்த நாடுகள் இல்லையென்றாலும் கூட, அங்கு விவசாயிகளால் அரசியலில் செல்வாக்கு செலுத்த முடியும்.

எனவே உலகம் முழுவதும் போராடி வரும் விவசாயிகளின் அடுத்தகட்டம் என்ன? இதனால் உலக அரசியலில் தாக்கம் ஏற்படுமா?

இந்த போராட்டங்களினால் இந்தியா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பா நாடுகளின் அரசியலில் ஏற்படும் தாக்கம் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

https://www.bbc.com/tamil/articles/cv20e2e217jo

புதினை கடுமையாக எதிர்த்த நஞ்சூட்டபட்ட அலெக்ஸி நவல்னி இறப்பு

3 months ago

புதினின் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டுவர முயன்ற, ரஷ்யாவுக்கு நல்லதை செய்ய முயன்ற  நவல்னி தளது  இலட்சியங்களுக்காக தன்னை தியாகம் செய்துள்ளார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.

காதலர் தினத்தில் திருமண பந்தத்தில் இணைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர்

3 months ago
15 FEB, 2024 | 11:41 AM
image
 

அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தனது நான்குவருடக கால தோழியுடன் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார்.

காதலர் தினத்தன்று  தனது நான்குவருடகால தோழிக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட மோதிரத்தை வழங்கி தான் அவரை திருமணம் செய்ய விரும்புவதை தெரிவித்துள்ளார்.

பதவியிலிருக்கும் போது திருமணபந்தத்தில் இணைந்துகொண்ட முதலாவது அவுஸ்திரேலியபிரதமர் அன்டனிஅல்பெனிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அவள் ஆம் என தெரிவித்தாள் என்ற பதிவுடன் இந்த விடயத்தை அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிர்ந்து கொள்வது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். வாழ்க்கையின் ஏனைய பகுதி முழுவதும் ஒன்றாகயிருப்பது என தீர்மானித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் ஒருவரையொருவர் சந்திக்க முடிந்ததால் நாங்கள் அதிஸ்டசாலிகள் எனவும் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

அல்பெனிசிற்கு 60 வயது அவருடைய வாழ்க்கை துணையான ஹெய்டனிற்கு 40 வயது என்து குறிப்பிடத்தக்கது.

இருவரும் நான்கு வருடங்களிற்கு முன்னர் சந்தித்தனர்.

அவுஸ்திரேலிய நாடாளுமன்ற சகாக்களும் நியுசிலாந்து பிரதமர் உட்பட பலரும் வாழ்த்தியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/176428

நோயாளியை கொன்ற ‘எந்திரன்’; அறுவை சிகிச்சையில் நேரிட்ட விபரீதம்

3 months ago
கேன்சர் நோயாளியை கொன்ற ‘எந்திரன்’; அறுவை சிகிச்சையில் நேரிட்ட விபரீதம்

ரோபோ உதவியுடன் நடத்தப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சையில், அந்த எந்திரனின் தவறான செயல்பாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அமெரிக்காவில் பரிதாபமாக இறந்திருக்கிறார்.

எந்திரன்களின் அனுகூலங்கள் மருத்துவத்துறையிலும் அதிகரித்துள்ளன. மருத்துவ நிபுணரின் வழிகாட்டுதலின் பேரில், அவருக்கு வாய்த்திராத துல்லியம், ஓர்மை ஆகியவற்றுடன், ஓய்வின்றி அறுவை சிகிச்சைகளை நடத்தி முடிப்பதில் எந்திரன்கள் சிறப்பானவை. மேலும் ரிமோட் சிஸ்டம் அடிப்படையில் தொலைவில் இருந்து இந்த எந்திரனை, பயிற்சி பெற்ற மருத்துவர்கள் வழி நடத்துவது எளிது.

இப்படி நேர்மறை சாதகங்களை கொண்டிருந்தபோதும் இந்த எந்திரன்கள், மனித நுணுக்கம் மற்றும் ஆய்ந்தறியும் அறிவு இல்லாததன் காரணமாக விபரீதத்துக்கு வழி செய்கின்றன. அமெரிக்காவை சேர்ந்த ஹார்வி சுல்ட்ஸெர் என்பவர் தனது மனைவியின் பெருங்குடல் புற்று நோய்க்கு சிகிச்சை கோரி பாப்டிஸ்ட் ஹெல்த் போகா ரேடன் மண்டல மருத்துவமனையில் மனைவி சாண்ட்ரா சுல்ட்ஸெரை சேர்த்தார்.

அங்கே அறுவை சிகிச்சை மூலம் கேன்சர் பாதிப்பை அகற்றுவதற்கான மருத்துவம் பரிந்துரை செய்யப்பட்டது. பல்வேறு கரங்கள் கொண்ட ’டா வின்சி’ என்ற மருத்துவ ரோபா மூலம் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி சாண்ட்ராவின் பெருங்குடலில் பீடித்திருந்த கேன்சர், ’டா வின்சி’ எந்திரனின் மூலமாக அகற்றப்பட்டது. ஆனால் அந்த அறுவைசிகிச்சையின்போது எதிர்பாரா விதமாக, சிறுகுடலில் விழுந்த துவாரம் காரணமாக, சாண்ட்ரா மிகவும் பாதிப்புக்கு ஆளானார்.

புற்றுநோய் பாதிப்பு காரணமாக வாழ்நாளை எண்ணி வந்த சாண்ட்ராவை, முந்திக்கொண்டு சாகடித்திருக்கிறது ’டா வின்சி’ ரோபோவின் தவறான அறுவை சிகிச்சை. ஹார்வி தொடுத்திருக்கும் நீதிமன்ற வழக்கில், டா வின்சி ரோபோவின் பாதகங்கள் குறித்தும், அதன் தயாரிப்பு நிறுவனம் ரோபோவை முறையாக இயக்க வாய்ப்பில்லாத மருத்துவமனைகளுக்கும் அதனை விற்றது குறித்தும் தரவுகளோடு விளக்கி இருக்கிறார். மேலும் டா வின்சி இதற்கு முன்னதாக நடத்திய அறுவை சிகிச்சைகளால் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பான விசாரணையும் கோரியிருக்கிறார்.

https://thinakkural.lk/article/291961

அமெரிக்க கன்சாஸ்சிற்றியில் Football Parade இல் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி 20 பேர்வரை காயம்.

3 months ago

கன்சாஸ் சிட்டி சீஃப்ஸின் சூப்பர் பவுல் வெற்றிப் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் புதன்கிழமை குறைந்தது ஒருவர் இறந்தார் மற்றும் குறைந்தது 21 பேர் காயமடைந்தனர், தலைமைகளின் சமீபத்திய NFL பட்டத்தைக் கொண்டாடும் பாரிய கூட்டத்திற்கு ஒரு மகிழ்ச்சியான மதியத்தை உடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

3 பேர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை கண்டறிய அதிகாரிகள் இன்னும் பணியாற்றி வருகின்றனர் என்று கன்சாஸ் நகர காவல்துறை தலைவர் ஸ்டேசி கிரேவ்ஸ் தெரிவித்தார்.

இறப்பைத் தவிர, மேலும் 21 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று கன்சாஸ் நகர தீயணைப்புத் தலைவர் ரோஸ் கிரண்டிசன் தெரிவித்தார்.

https://www.cnn.com/2024/02/14/sport/kansas-city-chiefs-parade-super-bowl-patrick-mahomes-spt-intl/index.html

எஸ்தோனிய பிரதமரை தேடப்படுபவர்கள் பட்டியலில் இணைத்தது ரஸ்யா

3 months ago

Published By: RAJEEBAN   14 FEB, 2024 | 03:09 PM

image

உக்ரைனின் தீவிரஆதரவாளரான எஸ்தோனியாவின்  பிரதமர் காஜா காலசினை ரஸ்யா தேடப்படும் நபர் எனஅறிவித்துள்ளது.

குற்றவியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை ரஸ்யா தேடப்படும் நபராக அறிவித்துள்ளது.

எஸ்தோனியாவின் கலாச்சார அமைச்சர் உட்பட வேறு சில முக்கிய அதிகாரிகளையும் ரஸ்யா தேடப்படுபவர்களின் பட்டியலில் இணைத்துள்ளது.

வரலாற்று நினைவுகளை அவமதித்தமைக்காகவே இவர்களை தேடப்படுபவர்கள் பட்டியிலில் இணைத்துள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.

சோவியத்யூனியனின் போர்வீரர்களின் நினைவுச் சின்னங்களை அழித்தமை தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டுகளை ரஸ்யா சுமத்தியுள்ளது என ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நடவடிக்கை ஆச்சரியமளிக்கவில்லை என எஸ்தோனிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

நான் சரியான விடயங்களை செய்கின்றேன் என்பதை இது இன்னமும் வலுவாக நிரூபித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் உக்ரைனிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு பெரும்வெற்றி பெற்றுள்ளது. இது ரஸ்யாவிற்கு பாதிப்புகளை  ஏற்படுத்துகின்றது எனவும்தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை என்னை மௌனமாக்கும் என கிரெம்ளின் கருதுகின்றது. ஆனால் அது நடைபெறாது மாறாக இது உக்ரைனிற்கான எனது ஆதரவைமேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176369

உலகெங்கும் தேர்தல் முறைகேடுகள் எப்படியெல்லாம் நடக்கின்றன தெரியுமா?

3 months ago
இந்தியா உள்பட உலகெங்கும் தேர்தல் முறைகேடுகள் எப்படியெல்லாம் நடக்கின்றன தெரியுமா?
ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தேர்தல் முறைகேடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், இசாரியா ப்ரைதாஞ்சியம்
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்த ஆண்டு, உலகின் இந்தியா உள்பட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் 400 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள்.

இந்தியா உள்பட உலகளவில் ஜனநாயகம் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். தேர்தல் நடைமுறைகளில் பல வழிகளில் மோசடிகள் நடக்கலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள், மேலும் அதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நேர்மையான தேர்தல் என்றால் என்ன?
ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தேர்தல் முறைகேடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் அதிகாரியான ரிக்கார்டோ செல்லேரி கூறுகையில், "வாக்காளர்களின் விருப்பங்களையும் அவர்கள் எப்படி வாக்களிக்கப் போகிறார்கள் என்பதையும் ஒரு முழு தேர்தல் செயல்முறை பிரதிபலிக்கும் போது, அதை ஒரு நேர்மையான தேர்தல் என்று அழைக்கலாம்.

அத்தகைய ஒரு தேர்தல் செயல்முறை மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும், அப்போது தான் அவர்கள் தேர்தல் நாளன்று வாக்களிக்க முன் வருவார்கள்" என்கிறார் செலேரி.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறையில், ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு பிரிவில் பணிபுரியும் செலேரி மேலும் கூறுகையில், "தேவையான அனைத்து தகவல்களையும் மக்கள் எளிதாக அணுகுமாறு இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். தேர்தல்கள் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும்" என்கிறார்.

செலேரியைப் பொருத்தவரை, "தேர்தல் என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அது வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிப்பது மட்டுமல்லாது, அனைத்து அரசியல் கட்சிகளும் பாரபட்சமின்றி இதில் பங்கேற்கவும் வன்முறை இல்லாமல் பரப்புரை செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும்" என்கிறார்.

பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஜனநாயகப் பேராசிரியரான டாக்டர். நிக் சீஸ்மேன் கூறுகையில், "வேட்பாளர்களும் குடிமக்களும் சுதந்திரமாகப் பங்கேற்று, பதிவான வாக்குகள் முறையாக எண்ணப்படுவது தான் ஒரு நல்ல தேர்தல். ஆனால் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தேர்தல் செயல்முறையின் தரம் குறைந்து வருகிறது என எனது ஆராய்ச்சியின் முடிவுகள் கூறுகின்றன" என்கிறார்.

தரம் குறைந்த தேர்தல்கள் வழக்கமாகி விடும் அபாயம் உள்ளது என்கிறார் அவர்.

டாக்டர் சீஸ்மேனின் கூற்றுப்படி, "எந்தவொரு தேர்தலும் ஆகச்சிறந்த முறையில் நடப்பதில்லை, ஆனால் நல்ல தரமான தேர்தல்கள் வாக்காளர்களுக்கு அவர்களின் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களின் தலைவர்களைக் கேள்வி கேட்பதற்கான அதிகாரத்தையும் அளிக்கின்றன."

 
தேர்தல் முறைகேடுகள் என்றால் என்ன?
ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தேர்தல் முறைகேடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு தேர்தல் முடிந்து அடுத்த தேர்தலுக்கான தயாரிப்பு வரை தேர்தல் செயல்முறை தொடர்கிறது. இந்த சுழற்சியில் எந்த நேரத்திலும் வாக்காளர்களை ஏமாற்ற முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"புதிதாக வருபவர்களே தேர்தல் நாளன்று மட்டும் மோசடிகளைத் திட்டமிடுகிறார்கள். ஆனால் இதில் வல்லுநர்களாக இருப்பவர்கள், ஒரு வருடத்திற்கு முன்பாகவே இதைத் திட்டமிடுகிறார்கள்" என டாக்டர் சீஸ்மேன் கூறுகிறார்.

தேர்தல் முறைகேடுகள் என்பது ஆளும் அரசு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கு பெரிய அளவில் பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்துவது, எதிர்க்கட்சி செய்திகளைத் தடுக்க ஊடகங்களின் மீதான தணிக்கை மற்றும் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்குப் பதிவு செயல்முறையை மாற்றி அமைத்தல் ஆகியவை இந்த முறைகேடுகளில் அடங்கும்.

"வழக்கமாக நடப்பது என்னவென்றால், ஆளுங்கட்சி நடுநிலை இல்லாத நீதிபதிகளை நியமிக்கிறது. அதனால் இறுதி தேர்தல் முடிவுக்கு எதிரான எந்த மேல்முறையீடுகளும் நீதிமன்றங்களில் ஏற்றுக் கொள்ளப்படாது," என்கிறார் செல்லரி.

இதைப் பற்றிய பரவலான அச்சம் இருந்த போதிலும், அமெரிக்காவில் இது நடக்கவில்லை.

அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில், டொனால்ட் டிரம்ப் உச்ச நீதிமன்றத்திற்கு மூன்று நீதிபதிகளை நியமித்தார். இது உச்ச நீதிமன்றத்தில் 6-3 விகிதத்தில் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மைக்கு வழிவகுத்தது. ஆனால் 2020 ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்ததை எதிர்த்து டிரம்ப் சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது, அந்த வழக்கில் டிரம்பிற்கு உச்ச நீதிமன்றம் அதிக பெரும்பான்மையுடன் தீர்ப்பளித்தது.

ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தேர்தல் முறைகேடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தேர்தல்களில் முறைகேடு செய்வதற்கான மற்றொரு வழி, நியாயமற்ற ஆதாயங்களை அடையும் நோக்கில் தேர்தல் தொகுதிகளை மறுவரையறை செய்வது.

ஆளும் கட்சிகள் அல்லது அரசாங்கங்கள் தங்கள் பிரசாரங்களுக்காகவும், பொய்யான செய்திகளைப் பரப்பி தேர்தல் செயல்முறையை இழிவுபடுத்துவதற்கும், வாக்குகளை விலைக்கு வாங்குவதற்கும் பொது நிதியைப் பயன்படுத்துகின்றன.

"அமெரிக்காவில், தொகுதிகளை மறுவரையறை செய்தல், வாக்காளர்கள் மீதான அடக்குமுறை மற்றும் பொய்யான செய்திகள் பரவுவது ஆகியவை மிகவும் கவலைக்குரிய பிரச்னைகளாக இருக்கின்றன" என்கிறார் டாக்டர் சீஸ்மேன்.

"தேர்தலில் பிரசாரம் கூட இன்னும் தொடங்கப்படாத நிலையில், வாக்களிப்பதைப் பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஜனாதிபதியின் குரலில் ஒரு போலியான டிஜிட்டல் செய்தி வெளியானதை நாங்கள் ஏற்கனவே பார்த்தோம்" என்கிறார் அவர்.

எல் சால்வடார் மற்றும் இலங்கை தேர்தல்களின் போது பொய்யான செய்திகள் பரவுதல் மற்றும் தேர்தல் மோசடிகள், அரசியல் வன்முறைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக டாக்டர் சீஸ்மேன் கூறினார்.

 
தேர்தல் மோசடி என்றால் என்ன?
ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தேர்தல் முறைகேடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாக்களித்த பின் தேர்தல் முடிவை மாற்றும் முயற்சி இது.

வாக்குப்பெட்டியில் முன்பே நிரப்பப்பட்ட வாக்குச் சீட்டுகளை போடுவது, வாக்களித்த பிறகு எண்ணிக்கையை மாற்றுவது அல்லது எதிரணியினரின் வாக்குகளை அழிக்க வாக்குப்பெட்டிகளை அழிப்பது ஆகியவை இதில் அடங்கும்.

ரஷ்யாவின் 2021 நாடாளுமன்றத் தேர்தலின் போது நடந்த மூன்று நாள் வாக்குப்பதிவில், பரவலான தேர்தல் மோசடிகள், முன்பே நிரப்பப்பட்ட வாக்குச் சீட்டுகளை வாக்குப்பெட்டிகளில் போட்டது மற்றும் தேர்தல் பார்வையாளர்களுக்கு எதிரான மிரட்டல் போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

இணையத்தில் பலரால் பகிரப்பட்ட வீடியோக்களில் மக்கள் வாக்குப் பெட்டிகளில் காகிதங்களைத் திணிப்பதைக் காண முடிந்தது.

எவ்வாறாயினும், எந்தவொரு 'தீவிரமான தேர்தல் விதிமீறல்களையும்' பதிவு செய்யப்படவில்லை என்று கூறியது ரஷ்ய அரசாங்கம்.

"ஆனால், முழு தேர்தல் செயல்முறையும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், நீங்கள் எளிதாக 'பொய்' சொல்லலாம் அல்லவா" என்கிறார் 'How to Rig an Election' புத்தகத்தின் இணை ஆசிரியர் டாக்டர் சீஸ்மேன்.

தேர்தல் செயல்முறை மிகவும் சிறப்பாகப் பேணப்படும் நாடுகளில் கூட வாக்கு மோசடிகள் நடக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

இந்த நாடுகளின் பல வாக்குச்சாவடிகளில், வாக்குகள் பதிவாவதை கண்காணிக்கவும், தேர்தல் முடிவுகளை கணக்கிடவும் உள்நாட்டு தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் உள்ளனர்.

கானாவில் 2016இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலைக் குறிப்பிடுகிறார் டாக்டர் சீஸ்மேன், அங்கு எதிர்க்கட்சிகள் தேர்தல் முடிவுகளைக் கண்காணிக்க ஒரு கைப்பேசி செயலியைப் பயன்படுத்தின.

இதற்கிடையில், 2021இல் ஜாம்பியாவில், உள்நாட்டு தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேவாலயக் குழுக்கள் சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஒரு வாக்காளர் பட்டியலைத் தயாரித்தன. இதனால் துல்லியமான தேர்தல் முடிவுகளை வெளியிட தேர்தல் கமிஷனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த முறையை பின்பற்றுவது மிகவும் கடினமாகிவிட்டது என்று டாக்டர் சீஸ்மேன் கூறுகிறார். ஏனெனில் தேர்தலின் போது சிவில் சமூகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த சட்டங்களை இயற்றியுள்ளன சர்வாதிகார அரசாங்கங்கள்.

"தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் செயல்முறையின் கடைசி பகுதியை மட்டுமே கண்காணிக்கிறார்கள், ஆரம்ப கட்ட மோசடிகளை அவர்களால் தடுக்க முடியாது" என்கிறார் செலேரி.

ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தேர்தல் முறைகேடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

2023 டிசம்பரில், காங்கோ மக்களாட்சிக் குடியரசில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

எதிர்க்கட்சிகளால் தேர்தலில் மோசடி செய்ய முடியுமா?

டாக்டர் சீஸ்மேன் கூறுகையில், "எதிர்க்கட்சிகளும் ரகசியமான முறையில் மோசடிகளைச் செய்யலாம், அதிலிருந்து தப்பிக்கவும் அவர்களால் முடியும்.

"தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் டொனால்ட் டிரம்ப் போன்ற ஒருவர், அனைத்து வகையான குற்றச்சாட்டுகளையும் ஆளும் அரசின் மீது சுமத்தலாம். அதில் சில உண்மையானதாகவும், அதிகம் பொய்யானதாகவும் இருக்கலாம். ஆளும் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முயற்சியாக அவர் அதைப் பயன்படுத்தலாம்."

 
ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதா?
ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தேர்தல் முறைகேடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் அதிகாரியான ரிக்கார்டோ செல்லேரி கூறுகையில், "நாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள தேவையில்லை. உலக அளவில் ஜனநாயகத்தின் மோசமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜனநாயகம் சரிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்" என்கிறார்.

பலவீனமான பொருளாதாரம் மற்றும் சதி கோட்பாடுகளை பரப்புவதில் சமூக ஊடகங்களின் எதிர்மறையான தாக்கம் இதற்கு காரணம் என்று அவர் கூறுகிறார்.

ஜனநாயகத்தின் எதிர்காலம் இந்த ஆண்டு தேர்தல் முடிவுகளை சார்ந்துள்ளது என்கிறார் டாக்டர் சீஸ்மேன்.

"தொடர்ந்து தேர்தல் மோசடிகள் நடக்கும் ஒரு ஜனநாயகத்தில் மக்கள் வாழ்ந்தால், விரைவில் அல்லது பின்னர், அதன் மோசமான விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். உண்மையான தேர்தல்களை நடத்துவதற்கான உரிமையை அமைப்பு நமக்கு வழங்கவில்லை என்றால், வாக்களிப்பது அல்லது அரசியல் பங்கேற்பின் பயன் என்ன?" என்று கேள்வியெழுப்புகிறார் சீஸ்மேன்.

https://www.bbc.com/tamil/articles/c4nk4q0dkj7o

இடம்பெயரும் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழியும் அபாயம் - ஐ.நா. அறிக்கை

3 months ago

Published By: DIGITAL DESK 3   14 FEB, 2024 | 04:57 PM

image

காலநிலை மாற்றம் மற்றும் மனித செயற்பாடுகளின் விளைவாக உலகில் இடம்பெயரும் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்து போகும் அபாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின்  இடம்பெயரும் மிருகங்கள் பற்றிய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும்  100 கோடி  விலங்குகள் பாலைவனங்கள், சமவெளிகள் அல்லது பெருங்கடல்கள் வழியாக இனப்பெருக்கம் மற்றும்  உணவுகளை தேடி  இடம்பெயர்வை மேற்கொள்கின்றன.

இந்நிலையில், இடம்பெயரும் உயிரினங்களின் மீது திணிக்கப்படும் நீடிக்க முடியாத அழுத்தங்கள் அவற்றின் எண்ணிக்கையை குறைவடைய செய்வதோடு, உணவு விநியோகத்தை சீர்குலைத்து வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும்,

1979 ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயரும் விலங்குகளை பாதுகப்பதற்கான மாநாட்டில் 1,189 இனங்கள் இருப்பதாக பட்டியலிடப்பட்டது. அதில்  44 சதவீதம் குறைவடைந்துள்ளதோடு, 22  சதவீதம் முற்றிலும் அழிந்துவிடும்.

இந்த தரவினை  1970 முதல் 5,000 க்கும் மேற்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையை ஒருங்கிணைக்கும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையின் நிலையைக் குறிக்கும் லிவிங் பிளானட் இன்டெக்ஸ் (எல்பிஐ)  வழங்கிய மதிப்பீடுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் பிற வகையான அதீத சுரண்டல் உள்ளிட்ட செயல்பாடுகளால், மனிதர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர், இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் பட்டியலில் உள்ள 70 சதவீதமான  உயிரினங்கள் பாதிப்படைகின்றன.

வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வறட்சி அல்லது காட்டுத் தீ போன்றவை வானிலையில் பாதிப்பை ஏற்படுத்திதுகிறது. இதன் காரணமாக  இடம்பெயர்வு காலத்தை சீர்குலைக்கிறது. 

இதேவேளை, வாழ்விடங்கள் அழிந்து வருவதால் 75 சதவீதமான உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தனிமைப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கு இடையே அதிக இணைப்பு தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

அணைகள், குழாய்கள் அல்லது காற்றாலைகள் போன்ற உள்கட்டமைப்பை நிறுவும் போது வாழ்விடங்கள் மற்றும் இடம்பெயர்வு பாதைகளை சீர்குலைப்பதைத் தவிர்க்குமாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய உலகளாவிய உயிர்ப்பல்வகைமை ஒப்பந்தத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகின் 30 சதவீதமான நிலம் மற்றும் கடல் பிரதேசங்களை இயற்கைக்காக ஒதுக்கி வைப்பதற்கான 2022 ஆம் ஆண்டு உறுதிமொழியை மதிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/176365

நான்கே ஆண்டுகளில் 3 மடங்கு வளர்ச்சி கண்ட நாடு - இந்திய வம்சாவளியினர் திடீர் பணக்காரர்களானது எப்படி?

3 months ago
கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL

படக்குறிப்பு,

கயானாவில் எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் பணம் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னெப்போதும் இல்லாத ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், லியாண்ட்ரோ ப்ரேஸரஸ்
  • பதவி, பிபிசி செய்தி பிரேசில்
  • 28 நிமிடங்களுக்கு முன்னர்

சகோதரர்கள் ஷிவ் மற்றும் ஹேமந்த் 1982இல் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான கயானாவை விட்டு வெளியேறி கனடாவுக்குச் சென்ற போது அவர்களது வயது 19 மற்றும் 16. ஒரு நல்ல வாழ்க்கைக்காக ஆயிரக்கணக்கான கயானா இளைஞர்கள் என்ன செய்தார்களோ அதையே அவர்களும் அப்போது செய்தனர்.

வட அமெரிக்கா சென்று தங்களுக்கென குடும்பங்களை உருவாக்கி வாழ்ந்து வந்தனர். வருமானத்திற்கு ரியல் எஸ்டேட் மற்றும் நிதித்துறையில் வேலை செய்தார்கள்.

39 ஆண்டுகளுக்குப் பிறகு 2021இல், அவர்கள் கயானா திரும்ப முடிவெடுத்தனர்.

சமீப காலங்களில் பெட்ரோலியம் மூலம் கிடைத்த வருமானத்தால் கயானாவின் பொருளாதாரம் உயர்ந்தது. இதனால் நாட்டை விட்டு வெளியேறிய சகோதரர்களின் மனம் மாறியது.

அவர்கள் கயானா நாட்டின் தலைநகரான ஜார்ஜ்டவுனில் அதிக மதிப்புள்ள சொத்துகளை விற்பனை செய்வதிலும் வாடகைக்கு விடுவதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை உருவாக்கினர்.

ஷிவ் மற்றும் ஹேமந்த் கயானாவில் புதிதாக உருவாகியுள்ள நடுத்தர வர்க்கத்தின் இரண்டு முக்கிய பிரதிநிதிகள். இந்த புதிய நடுத்தர வர்க்கம் என்பது கயானா நாட்டில் கச்சா எண்ணெய் ஆய்வு தொடங்கியதிலிருந்து மீண்டும் நாட்டிற்கு திரும்பிய மக்களே.

2019 முதல், இந்த கச்சா எண்ணெய் ஆய்வின் காரணமாக உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது, முன்னாள் பிரிட்டிஷ் காலனி நாடான கயானா.

கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL

படக்குறிப்பு,

ஷிவ் மிசிர், தனது 19வது வயதில் கயானாவை விட்டுச் சென்றார்.

வரலாறு காணாத பொருளாதார ஏற்றம்

கயானா என்பது தென் அமெரிக்காவின் வடக்கு பகுதியில், சூரினாம் மற்றும் வெனிசுலா இடையே அமைந்துள்ள ஒரு நாடு.

வெறும் 8,00,000க்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ளது கயானா. ஆரம்பத்தில் கரும்பு உற்பத்திக்காக டச்சு காலனியாக உருவாக்கப்பட்டது.

1966 வரை ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து கயானாவிற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. 2015ஆம் ஆண்டில், அமெரிக்க எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபில் (Exxon Mobil), நாட்டின் கடற்கரையோரம் பொருளாதார ரீதியாக லாபமளிக்கக் கூடிய எண்ணெய் வயல்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது.

அடுத்தடுத்த ஆண்டுகளில், எக்ஸான் மொபில், அமெரிக்கன் ஹெஸ் கார்பரேஷன் மற்றும் சீன சிஎன்ஓஓசி நிறுவனம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பு கயானீஸ் கடற்கரையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் எண்ணெய் கிணறுகளைத் தோண்டியது.

தோராயமாக 1,100 கோடி பீப்பாய்கள் அளவிலான எண்ணெய் இருப்பு இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்திய மதிப்பீடுகள் இந்த அளவு 1,700 கோடி பீப்பாய்கள் அளவை எட்டும் என்று கூறுகின்றன.

இது 1,400 கோடி பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்ட பிரேசிலின் மொத்த எண்ணெய் இருப்பையும் விட அதிகமாக இருக்கும்.

2019 வரை, கயானா மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் விவசாயம், தங்கம் மற்றும் வைரச் சுரங்கம் மற்றும் மரம் வெட்டுதல் ஆகியவற்றைச் சார்ந்து இருந்தது.

அந்த ஆண்டு முதல், எண்ணெய் வருவாய் கயானா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கத் தொடங்கியது.

2020ஆம் ஆண்டில், பிரேசிலின் அப்போதைய பொருளாதார அமைச்சர் பாலோ குடெஸ், கயானா நாட்டை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள நகரங்களில் ஒன்றான துபாயோடு ஒப்பிட்டார். எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் செல்வத்தின் அடையாளமாக திகழ்கிறது துபாய்.

"கயானா, நமது பிராந்தியத்தின் புதிய துபாய்" என குடெஸ் கூறினார். கச்சா எண்ணெய் இருப்பு குறித்த அளவீடுகள் உண்மையில் உலகின் கவனத்தை ஈர்க்கின்றன.

 
நான்கே ஆண்டுகளில் 3 மடங்கு வளர்ச்சி
கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சமீபத்திய ஆண்டுகளில், கயானாவின் பொருளாதாரம் உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது.

2019 மற்றும் 2023க்கு இடையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.17 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து சுமார் 3 மடங்காக அதாவது 14.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது என சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. அதாவது 184% அதிகரித்துள்ளது ஜிடிபி.

2022ஆம் ஆண்டில் மட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 62% ஆக இருந்தது. அதேபோல், தனிநபர் வருமானம் (நாட்டின் செல்வத்தை குடிமக்களின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பது) 2019இல் 6,477 அமெரிக்க டாலரில் இருந்து 2022இல் 18,199 அமெரிக்க டாலராக உயர்ந்தது.

ஒப்பீட்டளவில், அந்த எண்ணிக்கை பிரேசிலின் 2022 தனிநபர் வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும் மற்றும் குவாத்தமாலாவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

“நாட்டிற்கே லாட்டரி அடித்தது போல உள்ளது. வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு இது. நாட்டின் வளர்ச்சி குறித்து மக்களிடம் அதிக நம்பிக்கை தெரிகிறது” என்று கயானா மற்றும் சூரினாமுக்கான உலக வங்கியின் பிரதிநிதி டிலெட்டா டோரெட்டி பிபிசி பிரேசிலிடம் கூறினார்.

எண்ணெய் உற்பத்தியின் விளைவாக, நாட்டின் பொருளாதாரத்தின் பிற துறைகளும் வளர்ச்சியடைந்துள்ளன.

சர்வதேச நாணய நிதிய அறிக்கையின் படி, 2022இல் எண்ணெய் துறையைத் தவிர்த்து ஜிடிபி வளர்ச்சி 11.5% ஆகும். தலைநகர் ஜார்ஜ்டவுன் போன்ற நாட்டின் முக்கிய நகரங்களில் இதன் விளைவுகள் தெரிகிறது.

புதிய மருத்துவமனைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் துறைமுகங்கள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களிலும், அமெரிக்கன் மேரியட் மற்றும் பெஸ்ட் வெஸ்டர்ன் போன்ற சர்வதேச சொகுசு ஹோட்டல்களை நிர்மாணிப்பதிலும் கிரேன்கள் மற்றும் தொழிலாளர்கள் தீவிரமாக வேலை செய்வதைக் காணலாம்.

புதிய நெடுஞ்சாலைகளில் டஜன்கணக்கில் புதிதாக கட்டப்பட்ட கிடங்குகள் காணப்படுகின்றன. நாட்டின் கட்டுமானத் தளங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக டிராக்டர்கள், எஸ்கவேட்டர்கள் மற்றும் பிற கனரக கட்டுமான உபகரணங்களால் இந்த கிடங்குகள் நிரப்பப்பட்ட உள்ளன.

கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL

படக்குறிப்பு,

ஜார்ஜ்டவுனில் உள்ள பெஸ்ட் வெஸ்டர்ன் என்ற அமெரிக்க நட்சத்திர ஹோட்டலை சீன நிறுவனம் ஒன்று கட்டி வருகிறது.

புதிய நடுத்தர வர்க்கம்

இந்த பொருளாதார ஏற்றத்தால்தான் சகோதரர்களான ஷிவ் மற்றும் ஹேமந்த் தற்காலிகமாக கயானாவுக்குத் திரும்ப முடிவு செய்தனர்.

2021 முதல், அவர்கள் இருவரும் தங்கள் புதிய வணிகத்தை கவனித்து கொள்வதற்காக டொராண்டோ (கனடா) மற்றும் ஜார்ஜ்டவுன் இடையே அடிக்கடி பயணம் செய்கிறார்கள்.

எண்ணெய் மூலம் கிடைக்கும் பணம் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்திற்கும், நாட்டின் தற்போதைய பணக்கார வர்க்கத்திற்கும் பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

“மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். பொருளாதார ரீதியில் பயன் தரக்கூடிய ஒரு அமைப்பின் பகுதியாக தாங்கள் இருப்பதாக உணர்கிறார்கள்” என்கிறார் ஷிவ்.

மேலும், "கயானாவில் ரியல் எஸ்டேட்டில் அல்லது எண்ணெய் தொழில் விநியோகச் சங்கிலியில் பணிபுரியும் பல பணக்காரர்கள் உள்ளனர்."

அமெரிக்காவிலோ கனடாவிலோ வசித்துக் கொண்டு, எண்ணெய் வளத்தால் ஆதாயம் பெறும் நம்பிக்கையில் கயானாவில் சொத்து அல்லது நிலத்தில் முதலீடு செய்யும் மற்ற கயானிகளை தனக்குத் தெரியும் என்கிறார் ஷிவ் மிசிர்.

அவர்கள் கயானாவிற்கு வந்ததும், தானாகவே புதிய நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள்.

"நாட்டிற்கு திரும்பி வரும் பல கயானிகள் உள்ளனர். அவர்கள் உயர் சமூகங்களில், தனியார் பாதுகாப்புடன் கூடிய நவீன வீடுகளில், முன்பு இருந்த அனைத்து வசதிகளுடன் வாழ முயற்சி செய்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தவர்கள்." என்கிறார் ஷிவ்.

அதிக பொருள் வாங்கும் திறன் கொண்ட வாடிக்கையாளர்களுடன் பழகியுள்ள ஷிவ், நாட்டின் பணக்கார வர்க்கத்தின் ஒரு பகுதியினர் இன்னும் வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்யும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.அதனால் தான் நாட்டில் இப்போதும் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இல்லை என்று கருத்துத் தெரிவிக்கிறார்.

 
கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எண்ணெய் வளம் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றம் மற்ற துறைகளையும் உயர்த்தியுள்ளது.

துடிப்பான சந்தை

டச்சு மற்றும் ஆங்கிலேயர்களால் காலனித்துவப்படுத்தப்பட்ட போதிலும், கரீபியனில் உள்ள அதன் அண்டை நாடுகளைப் போலவே, அமெரிக்காவுடன் நெருங்கிய வணிக மற்றும் கலாச்சார உறவுகளைப் பேணுகிறது கயானா. வெறும் நான்கு மணி நேர விமான பயணத்தில் அமெரிக்காவை அடையலாம்.

ஷிவ் கூற்றுப்படி, கயானிய பணக்கார வர்க்கத்தின் பெரும் பகுதியினர் தங்கள் குழந்தைகளை அமெரிக்கா, கனடா அல்லது ஐரோப்பாவிற்கு படிக்க அனுப்புகிறார்கள் மற்றும் தங்கள் குழந்தைகளை சந்திக்கச் செல்லும்போது இந்த நாடுகளை சுற்றிப் பார்க்கவும் வாழ்க்கை முறையை அனுபவிக்கவும் செய்கிறார்கள்.

சமீபத்திய ஆண்டுகளில், பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சி, நாட்டின் உயரடுக்கினரை மையமாகக் கொண்ட வணிகங்களைத் திறப்பதை ஊக்குவித்தது என்று தொழிலதிபர் ஷிவ் மிசிர் உறுதிப்படுத்துகிறார்.

"எடுத்துக்காட்டாக, எங்கள் வணிகம் அவற்றில் ஒன்று" என்கிறார்.

மிசிர் சகோதரர்களின் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூவி டவுன் ஷாப்பிங் சென்டரில் ஒரு சிறிய இடத்தில் செயல்படுகிறது, இது ஜார்ஜ்டவுனில் 2019இல் திறக்கப்பட்டது, அதே ஆண்டில் தான் நாட்டில் கச்சா எண்ணெய்க்கான ஆய்வு தொடங்கியது.

ஒரு காலத்தில் நாட்டின் செல்வத்தின் முக்கிய ஆதாரங்களாக விளங்கிய கரும்பு மற்றும் அரிசி பயிரிடப்பட்ட ஜார்ஜ்டவுனின் புறநகர்ப் பகுதிகள், இப்போது ஆடம்பர வீடுகள் மற்றும் உயர் சமூக வாழ்விடங்களுக்கு வழிவகுக்கின்றன.

கயானா நாடு சந்திக்கும் மாற்றங்களையும், புழக்கத்திற்கு வரும் பணம் எப்படி புதிய பழக்கங்களையும் நிலப்பரப்புகளையும் உருவாக்குகிறது என்பதை இது காட்டுகிறது.

புதிதாக உருவான ஷாப்பிங் சென்டர்களில் ஒன்று அமேசானியா மால் ஆகும். இது டெமராரா ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. நகரின் மையத்திலிருந்து அரை மணி நேர பயணத்தில் இதை அடையலாம்.

இந்த ஷாப்பிங் சென்டரின் முக்கிய கடைகளில் ஒன்று ஸ்டார்பக்ஸ்.

ஏப்ரல் 2023இல் திறக்கப்பட்ட இந்த ஷாப்பிங் சென்டர், 200 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் 50 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது.

பிபிசி பிரேசிலிடம் பேசிய ஸ்டார்பக்ஸ் நிறுவனம், "நாடே இப்போது 'ஒரு துடிப்பான சந்தையாக இருப்பதால்', இங்கு ஸ்டார்பக்ஸ் கடை திறக்கப்பட்டது" என்று கூறியது.

கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL

படக்குறிப்பு,

ஒரு காலத்தில் கரும்பு மற்றும் அரிசியை பயிரிட பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் இப்போது ஆடம்பர வீடுகள் மற்றும் உயர் சமூக வாழ்விடங்கள் கட்டப்படுகின்றன.

பல நாடுகளின் புதிய முதலீடுகள்

புதிய எண்ணெய் வளம் கயானாவிற்குள் எவ்வளவு விரைவாக தாக்கம் செலுத்துகிறது என்பதற்கான மற்ற அறிகுறிகளும் உள்ளன. பல தசாப்தங்களாக நாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பு பணிகள் நடக்கவில்லை. இப்போது அதற்கான ஒப்பந்தங்களை கோரும் பல நாட்டு நிறுவனங்களை கயானா நாடு ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

நாட்டில் வணிக ரீதியான எண்ணெய் ஆய்வு நடத்தப்பட்ட முதல் ஆண்டான 2019ஆம் ஆண்டில், சாலைகள் மற்றும் துறைமுகங்கள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக அரசாங்கம் 187 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2023இல், அந்த எண்ணிக்கை 650 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது, அதாவது 247% அதிகரித்துள்ளது.

“கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நான் இங்கு வசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் வெளிநாடு சென்று, திரும்பி வரும்போது வித்தியாசத்தை கவனிக்கிறேன்,” என்கிறார் உலக வங்கியின் அதிகாரி டிலெட்டா டோரெட்டி.

“புதிய சாலைகள் மற்றும் ஹோட்டல்கள் என பல உள்கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. நாட்டிற்கு வரும் அதிக எண்ணிக்கையிலான வணிகப் பணிகளும் கவனிக்கத்தக்கவை என்கிறார் அவர்.

எதிர்பாராத மூலவளங்கள் கிடைப்பதால், உலகளாவிய கட்டுமானத் தளமாக மாறியுள்ளது கயானா நாடு. நிதி ஒப்பந்ததாரர்களுக்கு கடன் வழங்கும் நாடுகளின் பார்வையும் கயானாவின் மீது உள்ளது.

"எங்களிடம் ஐரோப்பிய கூட்டமைப்பு, சீனா, இந்தியா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் உள்ளன" என்று கயானாவின் பொதுப்பணித் துறை துணை அமைச்சருக்கு இணையான பதவியை வகிக்கும் டியோடாட் இந்தார் பிபிசி பிரேசிலிடம் தெரிவித்தார்.

சீனா அந்த குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராக தோன்றுகிறது. உதாரணமாக, சீன நிறுவனங்களின் கூட்டமைப்பு டெமராரா ஆற்றின் மீது புதிய பாலம் கட்டுவதற்கான டெண்டரை வென்றது. இந்த பணிக்கு சீன வங்கி நிதியளித்தது.

 
கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL

படக்குறிப்பு,

சீன மற்றும் கயானிய தொழிலாளர்கள் டெமராரா ஆற்றின் மீது பாலம் கட்டுகின்றனர்.

இந்த திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக கருதப்படுகிறது, ஏனெனில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள பாலத்தை மாற்றுவது இதன் முக்கிய பணி. ஒரு நாளைக்கு பல முறை கப்பல்கள் இந்த ஆற்றை கடந்து செல்கின்றன.

புதிய பாலம் ஒரு தொங்கு அமைப்பைக் கொண்டிருக்கும். மேலும் கப்பல்கள் கீழே செல்ல அனுமதிக்கும். இந்தத் திட்டத்தின் மதிப்பு 260 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

கயானா அரசாங்கத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் பல மருத்துவமனைகளின் கட்டுமானத்திற்கும் சீன வணிகர்கள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.

ஆனால் சீனாவுக்கு இங்கு போட்டியாளர்கள் உள்ளனர். 2022ஆம் ஆண்டில், நெடுஞ்சாலை அமைப்பதற்கான $106 மில்லியன் டெண்டரை வென்றார் ஒரு இந்திய ஒப்பந்ததாரர்.

கயானா அரசாங்கத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு பொது மருத்துவமனையைக் கட்டுவதற்கு அந்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ஆஸ்திரியா கடன் வழங்கியுள்ளது. திட்டத்தின் மதிப்பு 161 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

சில நிறுவனங்கள் தங்கள் சொந்த நாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்து வருகின்றன. டெமராரா ஆற்றின் மீது பாலம் கட்டும் சீனக் கூட்டமைப்பு இதைத் தான் செய்கிறது. திட்டப் பணிகள் சீன மற்றும் கயானிய தொழிலாளர்களிடையே பிரித்து அளிக்கப்பட்டுள்ளன.

2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில், வெனிசுலாவிற்கும் அந்த நாட்டிற்கும் இடையே எஸ்சிகிபோ பிராந்தியம் தொடர்பாக இருந்த நீண்ட கால பிரச்னை காரணமாக சர்வதேச நாடுகளின் கவனத்திற்குள் வந்தது கயானா.

எஸ்சிகிபோ பிராந்தியம், தோராயமாக 1,60,000 சதுர கிலோமீட்டர்கள் கொண்ட பகுதி. இது கயானாவின் 70% நிலப்பரப்பைக் குறிக்கிறது. இது தங்கம், தாமிரம் மற்றும் வைரம் போன்ற கனிமங்கள் நிறைந்த பகுதியாகும். மேலும் சமீபத்தில் எண்ணெய் மற்றும் பிற ஹைட்ரோகார்பன் வளங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எஸ்சிகிபோ, கயானாவின் 70% நிலப்பரப்பைக் கொண்ட ஒரு பிரதேசம்.

இந்திய வம்சாவளியினர் திடீர் பணக்காரர்களானது எப்படி?

கயானாவைச் சேர்ந்த டேவிட் ஹிண்ட்ஸ், கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக அமெரிக்காவிற்கும் அவரது சொந்த நாட்டிற்கும் இடையே பயணம் செய்து வருகிறார்.

அவர் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் (அமெரிக்கா) பேராசிரியராக உள்ளார். கரீபியன் மற்றும் ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் பற்றிய ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர்.

கயானா மிகவும் குறிப்பிடத்தக்க சமூக மற்றும் வர்க்கப் பிரிவைக் கொண்ட நாடு என்று ஹிண்ட்ஸ் கூறுகிறார்.

17 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், நாடு ஐரோப்பியர்களால் காலனித்துவப்படுத்தப்பட்டது. அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களின் உழைப்பைப் பயன்படுத்தி சர்க்கரையை உற்பத்தி செய்தனர்.

1833இல் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதன் பிறகு, கிழக்கு ஆசியாவில் இருந்து, குறிப்பாக இப்போதைய இந்தியா, சீனா மற்றும் போர்த்துகீசிய பிராந்தியத்திலிருந்து கயானாவிற்கு பணியாளர்களை கொண்டுவரத் தொடங்கியது ஐக்கிய இராஜ்ஜியம்.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, மக்கள் தொகையில் 39.8% இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், 30% ஆப்பிரிக்க வம்சாவளியினர், 10.5% பழங்குடியினர் மற்றும் 0.5% பேர் சீன, டச்சு மற்றும் போர்த்துகீசியம் போன்ற பிற பூர்வீகங்களைக் கொண்டவர்கள்.

அப்போதைய பிரிட்டிஷ் பேரரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள், ஆசிய மற்றும் போர்த்துகீசிய வம்சாவளியைச் சேர்ந்த குடியேறியவர்களை நாட்டின் வர்த்தகம் மற்றும் புதிய தொழில்துறைகளில் வேலை செய்ய ஊக்குவித்ததாக ஹிண்ட்ஸ் கூறுகிறார்.

"இந்தியர்கள் மற்றும் போர்த்துகீசியர்களின் சந்ததியினர் கயானாவின் பொருளாதார உயரடுக்கின் ஒரு பகுதியாக உள்ளனர்" என்று அவர் கூறுகிறார்.

மறுபுறம், அடிமைப்படுத்தப்பட்ட ஆப்ரிக்கர்களின் சந்ததியினர், குறைந்த திறன் வேலைகளில் அல்லது பொது சேவையில் வேலை செய்யத் தொடங்கினர் என்று ஹிண்ட்ஸ் விளக்குகிறார்.

கயானாவின் 'புதிய பணக்காரர்கள்' நாட்டில் குடியேறிய அதே பொருளாதார உயரடுக்கிலிருந்து வந்தவர்கள் என்று பேராசிரியர் உறுதிப்படுத்துகிறார்.

"பொருளாதார ஏற்றத்தை சாதகமாகப் பயன்படுத்துபவர்கள் கயானாவின் உயரடுக்கில் ஏற்கனவே வேரூன்றியவர்கள்" என்கிறார் பேராசிரியர் ஹிண்ட்ஸ்.

நாட்டில் நிலவும் சமூக சமத்துவமின்மை பற்றி கயானிய அரசாங்கத்திடம் பிபிசி பிரேசில் கேட்டது, ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

 
கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

'புதிய துபாய்'

தொழிலதிபர் ரிச்சர்ட் சிங் ஜார்ஜ்டவுனில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்கிறார். நகரின் மையத்தில், தனது டீலர்ஷிப்பில் நிறுத்தப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட கார்களை தனது பணியாளர்கள் கவனமாக மெருகூட்டுவதை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சிறுவயதில் இருந்தே கார் மற்றும் தொழில்நுட்பம் மீது ஆர்வம் கொண்டவர். இவர் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்கிறார், பெரும்பாலும் ஜப்பான் போன்ற நாடுகளில் கார்கள் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்த கார்களில், கயானா கார்களில் உள்ளது போல், வலது பக்கத்தில் ஸ்டீயரிங் உள்ளது.

அவரைப் பொருத்தவரை, எண்ணெய் வளம் மூலம் பொருளாதார மாற்றம் இருந்த போதிலும், நாட்டின் பணக்கார வர்க்கத்தினர் பயன்படுத்தப்பட்ட கார்களை விரும்புகின்றனர். ஏனெனில் புதிய கார்களை இறக்குமதி செய்வதற்கான வரி மிக அதிகமாக உள்ளது. நாட்டில் இன்னும் முறையான திறனுடைய தொழிலாளர்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கான அணுகல் இல்லை. எனவே புதிய வாகனங்களை இறக்குமதி செய்து, பராமரிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது.

ஜப்பானிய உற்பத்தியாளர்களிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மேல் இருந்த வாடிக்கையாளர்களின் கவனம் இப்போது பிஎம்டபிள்யூ கார்கள் மேல் சென்றுவிட்டதாகவும், நாட்டில் எண்ணெய் ஆய்வு தொடங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களிடம் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார் சிங்.

எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்துறையுடன் தொடர்புடைய பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு அடிக்கடி வருகிறார்கள். அந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வாகனங்களைத் இங்கு தேடுகின்றன.

"கயானிய உயரடுக்கின் நுகர்வோர் பழக்கங்களை நன்கு அறிந்த சிங், நாட்டில் ஒருவித 'புதிய நடுத்தர வர்க்கம்' உருவாகி வருவதைக் கவனிக்கிறேன்" என்கிறார் ரிச்சர்ட் சிங்.

"ஆம், ஒரு புதிய நடுத்தர வர்க்கம் உள்ளது. அது கயானாவில் உள்ள பழைய நடுத்தர வர்க்கத்திற்கு சற்று மேலே அமர்ந்திருக்கிறது" என்கிறார் சிங்.

கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL

படக்குறிப்பு,

தொழிலதிபர் ரிச்சர்ட் சிங் ஜார்ஜ்டவுனில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்கிறார்.

தொழிலில் வருவாய் அதிகரிப்பு தனது பிடித்தமான ஒன்றைத் தொடர சிங்கை அனுமதிக்கிறது, அது மோட்டார் ஸ்போர்ட்ஸ். கடந்த ஆண்டு மே மாதம், ஃபார்முலா 1 பார்க்க மயாமிக்குச் சென்றார் சிங்.

ஆனால், நாட்டின் பொருளாதாரம் இன்னும் அதன் உச்சத்தை எட்டவில்லை என்று தொழிலதிபர் சிங் நம்புகிறார்.

"நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். கயானா (பொருளாதார ரீதியாக) மிகப்பெரிய உயரத்தை அடையும் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் சிங்.

துபாயுடன் கயானாவை ஒப்பிடுவதை நம்பிக்கையான தொனியில் சிங் ஒப்புக்கொள்கிறார்.

"நான் எப்பொழுதும் துபாய் பற்றிய கதைகளைப் பார்த்திருக்கிறேன். 90களில் நீங்கள் அங்கு சென்றால், அது வெறும் பாலைவனமாக இருந்தது. இப்போது சென்றால் அதை அடையாளம் காண முடியாது, முற்றிலும் மாறிவிட்டது" என்று அவர் கூறுகிறார்.

"இன்னும் 20 ஆண்டுகளில் மக்கள் இந்த நாட்டைப் பார்த்து, 'இது கயானா என்று என்னால் நம்ப முடியவில்லை' என்று சொல்வார்கள். அத்தகைய மாற்றம் இங்கேயும் நடக்கும் என்று நம்புகிறேன்" என்கிறார் ரிச்சர்ட் சிங்.

https://www.bbc.com/tamil/articles/cq5x22nq5x8o

இலங்கை போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ள கனடா

3 months ago

கனடாவின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கனடாவின் தமிழ் ஊடகங்களுக்கு அவர் அளித்த நேர்காணல்களிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றம் ஆகியவற்றில் ராஜபக்ச ஆட்சியில் நடைபெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளோம்.

திட்டமிடப்பட்ட சதி

மேலும், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தமிழினத்தை அழிப்பதற்கான திட்டமிடப்பட்ட சதி என்பதை ஐ.நா உட்பட சர்வதேச அரங்குகளில் முன்னிறுத்துவோம்.

 

இலங்கை போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ள கனடா | Canadian Politician Against Sri Lankan War Crimes

அத்துடன், குறித்த வழக்கினை நடாத்துவதற்காக கனடாவின் வெளிவிவகார விடயங்களுக்கான வழக்கறிஞர்களை நாங்கள் வழிநடத்தவுள்ளோம்” என தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/article/canadian-politician-against-sri-lankan-war-crimes-1707838457

இன்று உலக வானொலி தினம்!

3 months ago
13-1.jpg

இன்று உலக வானொலி தினமாகும். ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது.

யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகளால் முதன் முதலில் 2011 இல் வானொலி தினம் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2013 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அதற்குத் தங்களின் ஒப்புதல் முத்திரையைக் கொடுத்து, சர்வதேச தினமாக அங்கீகரித்தது.

வானொலியானது மனிதகுலத்தை அதன் அனைத்து பன்முகத்தன்மையிலும் கொண்டாடுவதற்கான ஒரு சக்திவாய்ந்த ஊடகம் மற்றும் ஜனநாயக சொற்பொழிவுக்கான ஒரு தளமாக அமைகிறது.

உலக அளவில், வானொலி மிகவும் பரவலாக நுகரப்படும் ஊடகமாக உள்ளது. பல்வேறு சர்வதேச அறிக்கைகளின்படி, உலகில் மிகவும் நம்பகமான மற்றும் பயன்படுத்தப்படும் ஊடகங்களில் ஒன்றாக வானொலி திகழ்கிறது. வாழ்வியலோடு ஒன்று பட்ட பல அம்சங்களின் கண்ணாடியாய் வானொலி சேவைகள் திகழ்கின்றன.

https://thinakkural.lk/article/291460

டொனால்ட் ரம் அடுத்த தேர்தலில் வென்றால் நேட்டோவிலிருந்து விலகப் போவதாக அறிவிப்பு.

3 months ago

நேட்டோ பட்ஜெட் பங்களிப்பு இலக்குகளை அடையாவிட்டால் ஐரோப்பிய நட்பு நாடுகளைத் தாக்க ரஷ்யாவை ஊக்குவிக்கும் டொனால்ட் ட்ரம்பின் வார இறுதிக் கருத்துக்களில் இருந்து அமெரிக்க நட்பு நாடுகள் பின்வாங்குவதால், பல முன்னாள் டிரம்ப் ஆலோசகர்கள் எனது வரவிருக்கும் புத்தகத்தில் முன்னாள் ஜனாதிபதி நேட்டோ கூட்டணியில் இருந்து அமெரிக்காவை முறையாக விலக்க முயல்வார் என்று எச்சரிக்கின்றனர்.

அவர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றால். மார்ச் 12 ஆம் தேதி வெளியிடப்படும் "தி ரிட்டர்ன் ஆஃப் கிரேட் பவர்ஸ்" இல், டிரம்ப் மற்றும் பிடென் நிர்வாகங்களில் உயர் மட்டத்தில் பணியாற்றிய முன்னாள் மூத்த அமெரிக்க அதிகாரி என்னிடம் கூறினார், நவம்பரில் டிரம்ப் ஜனாதிபதி ஜோ பிடனை தோற்கடித்தால் "யு.எஸ். நேட்டோவில் இருந்து வெளியேறும்.

"நேட்டோ உண்மையான ஆபத்தில் இருக்கும்" என்று டிரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஒப்புக்கொண்டார். "அவர் வெளியேற முயற்சிப்பார் என்று நான் நினைக்கிறேன்."

அமெரிக்க பாதுகாப்பு கடமைகளை டிரம்ப் இழிவுபடுத்துவது தென் கொரியா மற்றும் ஜப்பானுடனான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று டிரம்பிற்கு வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய ஓய்வுபெற்ற ஜெனரல் ஜான் கெல்லி என்னிடம் கூறினார்.

"புள்ளி என்னவென்றால், அவர் நேட்டோவில் எந்த அர்த்தத்தையும் காணவில்லை" என்று கெல்லி புத்தகத்தில் கூறினார். "தென் கொரியாவில் துருப்புக்களை வைத்திருப்பதற்கு எதிராக அவர் இறந்துவிட்டார், மீண்டும், ஒரு தடுப்புப் படை, அல்லது ஜப்பானில் துருப்புக்கள், ஒரு தடுப்புப் படை."

"அவர் நினைத்தார் (விளாடிமிர்) புடின் ஒரு நல்ல பையன் மற்றும் கிம் (ஜாங் உன்) ஒரு நல்ல பையன் என்று நாங்கள் வட கொரியாவை ஒரு மூலையில் தள்ளினோம்," கெல்லி நினைவு கூர்ந்தார். "அவரைப் பொறுத்தவரை, நாங்கள் இவர்களை ஏமாற்றுவது போல் இருந்தது. "எங்களிடம் நேட்டோ இல்லையென்றால், புடின் இந்த விஷயங்களைச் செய்ய மாட்டார்." இந்த புத்தகத்திற்காக நான் பேசிய நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்கள், ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய பாதுகாப்பின் முக்கிய அடித்தளமான கூட்டணியில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள ட்ரம்ப் எப்படி நெருங்கி வந்தார் என்பதையும் விவரித்தார்.

இரண்டாவது. "ஜனாதிபதி டிரம்பின் கீழ் நான்கு ஆண்டுகள் அமைதியும் செழிப்பும் இருந்தது என்பதை ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஊடக முத்து-கிளட்சர்கள் மறந்துவிட்டதாகத் தெரிகிறது, ஆனால் ஐரோப்பா ஒபாமா-பிடனின் கீழ் மரணத்தையும் அழிவையும் கண்டது, இப்போது பிடனின் கீழ் அதிக மரணத்தையும் அழிவையும் கண்டது" என்று டிரம்ப் பிரச்சார செய்தித் தொடர்பாளர் ஜேசன் மில்லர் கூறினார். சிஎன்என். "ஜனாதிபதி டிரம்ப் எங்கள் கூட்டாளிகளை அவர்கள் நேட்டோ செலவினங்களை அதிகரிக்கக் கோரினார், ஆனால் ஜோ பிடன் அமெரிக்க வரி செலுத்துவோரைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார். உங்கள் பாதுகாப்புச் செலவினங்களை நீங்கள் செலுத்தாதபோது, உங்களுக்கு அதிக போர் வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

https://www.cnn.com/2024/02/12/politics/us-out-nato-second-trump-term-former-senior-adviser/index.html

ரஃபாவில் 100க்கும் அதிகமான பொதுமக்கள் பலி - மசூதிகள் மீதும் இஸ்ரேல்தாக்குதல்

3 months ago

Published By: RAJEEBAN   12 FEB, 2024 | 04:31 PM

image
 

ரஃபாவில்இஸ்ரேல்மேற்கொண்ட வான்வெளி தாக்குதல்காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஃபாவை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தீவிரமான விமானதாக்குதல்கள் எறிகணை தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள் சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது.

நகரின் பல பகுதிகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எல்லை பகுதிகளில் ஹெலிக்கொப்டர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

 

rafa_attacj444.jpg

இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்தவர்கள் கொல்லப்பட்டவர்கள் இடிபாடுகளிற்குள் உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என செம்பிறை சமூகம் அச்சம் வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் குண்டுவீச்சினால்  அதிகளவானவர்கள் காயமடைந்துள்ளனர் அவர்களிற்கு சிகிச்சை வழங்குவதற்கான வளங்கள் இல்லை என அபுயூசெவ் அல் நிஜார் மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ரவா மருத்துவமனைக்குள் குழப்பமான நிலை காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன என சிஎன்என் தெரிவித்துள்ளது.

குழந்தையொன்றை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் போராடுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

யப்னா முகாமில் இரண்டு மசூதிகள்  தாக்கப்பட்டதில் அங்கு தஞ்சமடைந்திருந்த பெருமளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குவைத் மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளிலும் எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

https://www.virakesari.lk/article/176202

சார்லஸ் டார்வின்: கடவுளையும் மத நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்கியது எப்படி?

3 months ago
சார்லஸ் டார்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

1859க்கு முன்பு வரை உலகின் பெரும்பான்மையான மதங்கள், முதல் மனிதன் ஆதாமை கடவுளே படைத்தார் என்றே கூறி வந்தன. உலக மக்களும் தாங்கள் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று தீர்க்கமாக நம்பி வந்தனர்.

அங்கொன்றும் இங்கொன்றும் இறைமறுப்பு, அறிவியல் சார் கருத்துக்கள் முளைத்து வந்திருந்தாலும் அதுவரை கடவுள் தான் மனிதனை படைத்தார் என்ற கோட்பாட்டை அசைக்க முடியவில்லை. திடீரென்று ஒரு தாடிக்கார மனிதன் தனது உயிரினங்களின் தோற்றம் என்ற கொள்கையை உலகின் முன் சமர்ப்பிக்க பிற சித்தாந்தங்கள் ஆடிப் போய்விட்டன.

“மனிதனை கடவுள் படைக்கவில்லை. ஒரே வம்சாவளியில் தோன்றிய வெவ்வேறு இனங்கள் அது வாழ்ந்த சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டு தன்னுடைய தற்போதைய நிலைக்கு வந்துள்ளன” என்ற ‘இயற்கையின் தேர்வில் உயிரினங்களின் தோற்றம்’ என்ற தனது ஆய்வை முன்வைத்தார் சார்லஸ் டார்வின்.

அதற்கு முன் நம்பப்பட்டு வந்த கடவுள், படைப்பு, மனித தோற்றம், உயிர்களின் பரிணாமம் குறித்த அனைத்து சித்தாந்தங்களையும் இந்த ஆய்வு கேள்விக்குட்படுத்தியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்பு கிளம்பினாலும் அதற்கு பின் டார்வினின் கொள்கையை புறந்தள்ளிவிட்டு அறிவியல் உலகத்தால் முன்னேற முடியவில்லை.

அத்தகைய மாபெரும் ஆய்வு முடிவை சார்லஸ் டார்வின் பொது உலகிற்கு கொண்டு வர 20 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். சொல்லப்போனால் அதை அவர் வெளியிடவே இல்லை. உண்மையில் அந்த ஆய்வு புத்தகம் வெளிவர காரணம் யார்? அதனால் ஏற்பட்ட சவால்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

 
சார்லஸ் டார்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சார்லஸ் டார்வின் உலகம் முழுவதும் பயணம் செய்து ஆயிரக்கணக்கான உயிரினங்கள் சார்ந்த மாதிரிகளை சேகரித்தார்.

யார் இந்த சார்லஸ் டார்வின்?

பிரிட்டனின் ஷ்ரூஸ்பரி நகரில் 12 பிப்ரவரி 1809ஆம் ஆண்டு வளமையான குடும்பத்தில் பிறந்தவர் சார்லஸ் ராபர்ட் டார்வின். இவரது தாத்தா ஒரு இயற்கை விஞ்ஞானி, அப்பாவோ மருத்துவர்.

முதலில் தனது தந்தை விருப்பப்படி எடின்பர்க் பல்கலைக்கழகத்தில், மருத்துவம் படிக்க சென்ற டார்வின், அது பிடிக்காமல் அறிவியல் மீது ஆர்வம் கொண்டார். அங்கேயே பேராசிரியர்கள் மூலம் அறிவியல் சார்ந்து பல விஷயங்களையும் கற்றுக் கொண்டுள்ளார்.

பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இறையியல் படிப்பில் சேர்ந்தார். கடவுள் மீது அவ்வளவு பற்றெல்லாம் இல்லாத டார்வினுக்கு தனது உண்மையான அறிவியலை ஆய்வு செய்ய, இந்த இடம் அதிக நேரம் தந்ததால் அங்கேயே படித்து 1831ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.

 
சார்லஸ் டார்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

டார்வின் தனது உறவுக்கார பெண்ணான எம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 10 குழந்தைகள் இருந்தனர்.

டார்வினின் உலகப்பயணம்

1831ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் பரிந்துரைத்ததன் பேரில் தென்னமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருந்த எச்எம்எஸ் பீகிள் கப்பலில் பயணிக்கும் வாய்ப்பு டார்வினுக்கு கிடைத்தது.

இதை தனது ஆய்வுக்கு நல்வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட டார்வின் அடுத்த ஐந்தாண்டுகளில் 4 கண்டங்களுக்கு 3000த்திற்கும் அதிகமான கிலோமீட்டர் பயணம் செய்து ஆயிரக்கணக்கான உயிரினங்கள் சார்ந்த மாதிரிகளை சேகரித்துக் கொண்டார்.

இந்தப் பயணத்தில்தான் உயிரிகளின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த தெளிவான புரிதலை அறிந்துக் கொண்டார். குறிப்பாக உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஒரே இனத்தை சேர்ந்த உயிரிகளுக்கு வெவ்வேறு விதமான உடலமைப்புகள் இருப்பதை அவர் அறிந்துக்கொண்டார்.

1838ஆம் ஆண்டு பயணத்தில் இருந்து திரும்பிய டார்வின் தனது உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தை எழுதத் தொடங்கிவிட்டார். ஆனால், அவர் அதை உடனே வெளியிடவில்லை.

ஆனால் அந்த சமயத்தில் தனது கப்பல் பயணம் குறித்த புத்தகத்தை ‘The Voyage of Beagle’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். இதற்கிடையில் டார்வினின் குடும்பம் அடுத்தடுத்த இறப்புகளால் நிலைகுலைந்து போயிருந்தது.

சார்லஸ் டார்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

1831-ஆம் ஆண்டு தென் அமெரிக்க நாடுகளுக்கு எச்எம்எஸ் பீகிள் கப்பலில் பயணிக்கும் வாய்ப்பு டார்வினுக்கு கிடைத்தது.

நிலைகுலைந்து போன டார்வினின் குடும்பம்

டார்வின் தனது உறவுக்கார பெண்ணான எம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 10 குழந்தைகள் இருந்தனர். ஆனால், 1 மகன் மற்றும் இரு மகள்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து போயினர்.

இதற்கு காரணம் டார்வின் தனது குழந்தைகளை கண்டுகொள்ளாததும், அவர் மத நம்பிக்கைகளை பின் பற்றாததும் தான் என்று எம்மா நம்பினார். இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் உணர்ச்சி போர் நடந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்த இறப்புகளால் டார்வினும் மனம் தளர்ந்து போயிருந்தார்.

இந்நிலையில் புத்தகம் எழுதத் தொடங்கி 20 ஆண்டுகள் ஓடியிருந்தன. இந்த இடைப்பட்ட காலத்தில் ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸ் என்பவரும் இதே கோட்பாட்டை மையமாக கொண்டு தனது ஆய்வை செய்திருப்பது டார்வினுக்கு தெரிய வர இருவரும் ஒரே சமயத்தில் பிரிட்டனின் முன்னணி இயற்கை சார் வரலாற்று அமைப்பான லின்னியன் சொசைட்டிக்கு தங்களது ஆய்வறிக்கையை சமர்பிக்கின்றனர்.

 
சார்லஸ் டார்வின்

பட மூலாதாரம்,VENKATESAN

படக்குறிப்பு,

விஞ்ஞானி வெங்கடேசன்

கண்டுகொள்ளாத லின்னியன் சொசைட்டி

ஆனால், அந்த அமைப்போ இருவது படைப்பையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் முதலில் புறக்கணித்து விட்டதாக தெரிவிக்கிறார். கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் கதிரியக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு முன்னாள் தலைவர் டாக்டர். ஆர். வெங்கடேசன்.

டார்வினின் முதல் புத்தகம் வெளியானது குறித்து அவருடன் பேசிய போது பல புதிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். அவரின் தகவல்படி, “டார்வின் தனது புத்தகத்தை வெளியிடவில்லை. அவர் அந்த ஆய்வு தகவல்களை, தனது மனைவிக்கு ஒரு சிறு குறிப்போடு சேர்த்து ஒரு பழைய பெட்டியில் மூடி வைத்துவிட்டார்”

“அந்த புத்தக குறிப்பின் மீது ‘Origin of Species by Natural Selection I think so’என்று குறிப்பிட்டு, அவரது மனைவிக்கு எழுதிய குறிப்பில், எனது அருமை மனைவியே, இந்த குறிப்புகளை புத்தக நிலையத்திற்கும் , நண்பர்களுக்கும் அனுப்பி விடவும்” என்று எழுதியிருந்தார் என்கிறார் ஆர். வெங்கடேசன்.

 
சார்லஸ் டார்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சார்லஸ் டார்வின்

உயிரினங்களின் தோற்றத்தை டார்வின் வெளியிடவில்லை

அதற்கு காரணம் மேலே சொன்னது போல டார்வினின் குடும்ப நிலை.

இது குறித்து பேசிய வெங்கடேசன், “தொடர்ந்து நிகழ்ந்த குழந்தைகளின் இறப்புக்கு காரணம் டார்வினின் அணுகுமுறை மற்றும் மத பழக்கங்களை கடைபிடிக்காமல் இருந்ததுதான் என்று எம்மா சண்டை போட்டார். ஆனாலும், டார்வின் செய்வதும் சரி என்ற நிலைப்பாட்டில் எம்மா இருந்தார். எனவே நீ சொன்னால் அதை பிரசுரிக்க அனுப்புகிறேன் என்று சொல்லி எம்மாவே அந்த புத்தக குறிப்பை முதன் முதலில் புத்தக நிலையத்திற்கு அனுப்பினார்” என்கிறார்.

அவரது ஆய்வுகளை கண்டு மிரண்டு போன புத்தக நிலையம் 1859ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று அந்த ஆய்வுகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டது. குறிப்பாக அந்த ஆய்வு மக்கள் புரிந்து கொள்ளும்படியான எளிய மொழியில் அறிவியலை கொண்டு சேர்த்தது என்கிறார் வெங்கடேசன்.

இந்த புத்தகம் வெளியான பிறகு பல்வேறு பதிப்புகளை கண்டது. இதன் ஒவ்வொரு பதிப்புகளிலும் விமர்சனங்களுக்கான பதிலையும் சேர்த்து பதிப்பித்தார் டார்வின். அப்படி இப்புத்தகத்தின் 5 வது பதிப்பில் தான் “Survival of the fittest” என்ற பதத்தை கொண்டு வருகிறார் அவர்.

இந்த வாசகம் தத்துவவாதி ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவருடையது. தன்னுடைய புத்தகத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்ற காரணத்தால் இதை கடன் வாங்கி கொண்டார் டார்வின். ஆனாலும், அதன் பொருள் தற்போதைய காலகட்டத்தில் வேறு வகையில் பயன்படுத்தப்படுவதை டார்வின் அறிந்தால் மனமுடைந்திருப்பார்.

 
சார்லஸ் டார்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

டார்வின் எந்த இடத்திலும் இறைமறுப்பை தீவிரமாக கையிலெடுக்கவில்லை

தக்கன பிழைக்கும் (Survival of the fittest) என்பதன் உண்மைப் பொருள் என்ன?

சார்லஸ் டார்வின் கூற்றுப்படி இதன் அர்த்தம், ‘தக்கன பிழைத்துக்கொள்ளும்’ என்பதே ஆகும். அதாவது பூமியின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொண்டு பொருத்திக் கொள்ளும் உயிரினமே தொடர்ந்து வாழும்.

இதுகுறித்து பேசிய ஆர்.வெங்கடேசன், “இது வெவ்வேறு இனங்களுக்கு பொருந்துமே தவிர, ஒரு இனத்திற்குள் இருக்கும் ஒரே உயிரிக்கு பொருந்தாது. உதாரணமாக மனிதர்களில் பலம், பணம், சமூக அந்தஸ்து பொருந்தியவர்களே பிழைப்பார்கள் என்று சொல்வது தவறு. இதை டார்வினே தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு இனம் அது வாழும் இயற்கை சூழலுக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி பெற்று தன்னை தகவமைத்துக் கொண்டால் மட்டுமே வாழ முடியும் என்பதே இதன் அறிவியல் விளக்கம்” என்று கூறுகிறார்.

 
டார்வின் எதிர்கொண்ட மதரீதியான தாக்குதல்கள்

ஏற்கெனவே பின்பற்றி வரும் பழமையான கோட்பாடுகளை எதிர்த்து புதிய கோட்பாடு உருவாகும் போது எதிர்ப்புகள் கிளம்புவது இயல்பு. அப்படி டார்வினின் கோட்பாட்டுக்கும் எதிர்ப்பு எழுந்தாலும், கலீலியோ அல்லது டார்வினுக்கு முந்தைய ஆய்வாளர்களுக்கு நடந்த கொடுமைகள் நடக்கவில்லை என்கிறார் வெங்கடேசன்.

அதற்கு காரணமாக அன்றைய காலத்தில் வளர்ந்து வந்த ஜனநாயகத் தன்மை மற்றும் டார்வினுடைய சமூக நிலை ஆகியவற்றை முன்வைக்கிறார் அவர். டார்வினே தேவாலயத்தை சேர்ந்தவராகவும், இறையியல் படித்தவராகவும் இருந்தார். எனவே அங்கிருந்தே ஒருவர் வெளியே வந்து இந்த கேள்விகளை முன்வைக்கிறார் என்றே பார்க்கப்பட்டதாக தெரிவிக்கிறார் வெங்கடேசன்.

அதே சமயம் டார்வின் எந்த இடத்திலும் இறைமறுப்பை தீவிரமாக கையிலெடுக்கவில்லை. தனது குடும்பத்துடன் தேவாலயத்திற்கு செல்லும்போதும் கூட அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே அமர்ந்து கொள்வாராம். கடவுளை மறுத்து பேசுவதை கையில் எடுக்காமல், தனக்கு முன் இருந்த கோட்பாடுகளை மட்டுமே அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். இதனால், அவருக்கு பெரிதாக எதிர்ப்பு எழவில்லை என்கிறார் வெங்கடேசன்.

அப்படி பொதுவெளியில் டார்வின் கோட்பாடுகள் விமர்சனத்தை சந்தித்த போதெல்லாம் அவரை விட, அதை எதிர்கொண்டு விவாதித்து ஒன்றுமில்லாமல் ஆக்கியவர் உயிரியலாளர் தாமஸ் ஹக்ஸ்லி தான். பல முக்கியமான கூட்டங்களில் டார்வினின் கோட்பாடுகளுக்கு ஆதரவாக பேசி வெற்றி பெற்றுள்ளார் இவர்.

சார்லஸ் டார்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

லண்டனில் உள்ள சார்லஸ் டார்வின் சிலை

டார்வின் ஏன் தேவை?

என்னதான் 170 ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி குறித்த கோட்பாட்டை டார்வின் வெளியிட்டிருந்தாலும் இன்னமும் வெகுமக்கள் மனித பிறப்பு குறித்த பழைய நம்பிக்கைகளையே பின்பற்றி வரும் சமயத்தில் டார்வினின் கோட்பாடு முக்கியமாகிறது என்கிறார் ஆர்.வெங்கடேசன்.

“சமீபத்தில் கூட NCERT பாடப்புத்தகங்களில் இருந்து டார்வினின் பரிணாமக் கோட்பாடு நீக்கப்பட்டுள்ளது. அதற்க்கு காரணமாக அதிக பாடச் சுமை கூறப்படுகிறது. ஆனால், அறிவியலின் அடிப்படையே படிக்காமல் எப்படி அடுத்த கட்டத்தை படிப்பது? அதனால்தான் இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து அந்த பாடங்களை நீக்க கூடாது என்று அந்த துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம்” என்று தெரிவிக்கிறார் விஞ்ஞானி ஆர்.வெங்கடேசன்.

https://www.bbc.com/tamil/articles/cyej7yeer1xo

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 8 இந்திய முன்னாள் கடற்படையினர் விடுதலை

3 months ago
கத்தார் சிறையில் இருந்த 8 இந்திய முன்னாள் கடற்படையினர் விடுதலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தியர்களை தடுத்து வைத்திருப்பதற்கான காரணத்தை கத்தார் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கத்தார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இந்திட வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 8 இந்தியர்கள் விடுதலையை இந்திய அரசு வரவேற்கிறது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், "எட்டு பேரில் ஏழு பேர் இந்தியா திரும்பியுள்ளனர். இந்த இந்திய குடிமக்களை விடுவித்து தாயகம் திரும்ப அனுமதிக்க கத்தார் எமிர் எடுத்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம்," என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் இந்தியக் கடற்படையினர் கத்தாரில் சிறைபிடிக்கப்பட்டிருந்தது இரு நாடுகளுக்கிடையே அரசுமுறை பதற்றத்தை அதிகரித்து வந்தது.

 
கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் ஏன் கைது செய்யப்பட்டனர்?

இந்த இந்தியர்களை தடுத்து வைத்திருப்பதற்கான காரணத்தை கத்தார் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. காரணத்தை உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக அறிக்கைகளின் வாயிலாகவே அறிய முடிகிறது.

அவற்றின்படி, 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி இரவு, கத்தாரில் உள்ள தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 முன்னாள் இந்திய கடற்படையினர், உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இந்த திடீர் நடவடிக்கைப் பிறகு அவர்கள் அனைவரும் தோஹாவில் உள்ள சிறையில் மற்ற கைதிகளிடமிருந்து தனியாக வைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட இந்த இந்தியர்கள், கத்தார் கடற்படைக்காக வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் உயர் பதவிகளை வகித்தவர்கள்.

இந்த இந்தியர்களில் மூன்று பேர் ஓய்வு பெற்ற கேப்டன்கள், நான்கு பேர் கமாண்டர்கள் மற்றும் ஒருவர் மாலுமி. இவர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 'கடும் குற்றவாளிகளைப்' போல தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று ஒரு முன்னாள் இந்திய தூதாண்மை அதிகாரி அப்போது கூறினார்.

கைது செய்யப்பட்ட இந்தியர்கள் தோஹாவில் பணிபுரிந்த போது நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் குறித்து முக்கியமான தகவல்களை இஸ்ரேலுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

கத்தாரில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் உள்ளது. இந்த நிறுவனம் கத்தார் கடற்படைக்காக நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் பணியாற்றி வந்தது. ரேடாரை தவிர்க்கும் ஹைடெக் இத்தாலிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் இந்த நிறுவனத்தை மூட கத்தார் உத்தரவிட்டது. அதன் ஊழியர்களில் சுமார் 70 பேர் மே மாத இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடற்படையின் முன்னாள் பணியாளர்கள்.

கடந்த 2023-ஆம் ஆண்டு, இவர்களது மரண தண்டனை, சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

கத்தார் சிறையில் இருந்த 8 இந்திய முன்னாள் கடற்படையினர் விடுதலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அரசுக்கு மிகப்பெரிய சவால்

கடந்த ஆண்டு டிசம்பரில், துபாயில் நடைபெற்ற சிஓபி28 மாநாட்டின் போது, கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹம்த் அல்தானியை பிரதமர் நரேந்திர மோதி சந்தித்தார். அப்போது, கத்தாரில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் நலம் குறித்தும், இருதரப்பு விவகாரங்கள் குறித்தும் பிரதமர் மோதி கேட்டறிந்தார்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இருதரப்பு உறவுகள் குறித்து இருவருக்கும் இடையே நல்லமுறையில் விவாதம் நடந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்திய அரசு, இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்து அனைத்து சட்ட வாய்ப்புகளிலும் செயல்படுவதாகவும் கூறியிருந்தது.

இதற்கிடையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரும் இந்த 8 இந்தியர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தார். எட்டு முன்னாள் கடற்படை வீரர்களையும் விடுவிக்க மத்திய மோதி அரசுக்கு பெரிய அழுத்தம் எழுந்தது. காங்கிரஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இந்த இந்தியர்களை விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

 
கத்தார் சிறையில் இருந்த 8 இந்திய முன்னாள் கடற்படையினர் விடுதலை

பட மூலாதாரம்,@HARDEEPSPURI

எரிவாயு ஒப்பந்தம்

இந்நிலையில், கடந்த வாரம் இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளுக்கானது. அதன் மொத்த செலவு 78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (6.5 லட்சம் கோடி இந்திய ரூபாய்). இந்தியா 2048-ஆம் ஆண்டு வரை கத்தாரிடம் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி) வாங்குவதற்கான ஒப்பந்தம்தான் இது.

இந்தியாவின் மிகப்பெரிய எல்.என்.ஜி இறக்குமதி நிறுவனமான பெட்ரோநெட் எல்.என்.ஜி லிமிட்டெட் (Petronet LNG Limited - PLL), கத்தாரின் அரசாங்க நிறுவனமான ‘கத்தார் எனெர்ஜி’யுடன் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், கத்தார் ஒவ்வொரு ஆண்டும் 75 லட்சம் டன் எரிவாயுவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cn3nekp853ko

தேநீர், சர்க்கரையை ருசிக்க ஸ்பெயின் நடத்திய அடிமைகள் கடத்தல் ஒழிக்கப்பட்ட வரலாறு

3 months ago
அடிமைமுறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

6 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐரோப்பாவில் காபி மற்றும் தேநீரை இனிமையாக்கும் சர்க்கரையின் இனிப்புச் சுவை, அமெரிக்காவின் கடைசிப் பிரதேசங்களில் பல தசாப்தங்களாக அடிமைத் தனத்தை நீடித்தது.

ஸ்பெயின் அரசு 1820ஆம் ஆண்டில் அடிமை வர்த்தக முறையை நிறுத்த வேண்டும் என்பதை அங்கீகரித்தாலும், 1870ஆம் ஆண்டு வரையிலும் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அடிமைகளாக மக்கள் கடத்தப்படுவது நிறுத்தப்படவில்லை.

அந்த 50 ஆண்டுகளில், வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தில் சர்க்கரை உற்பத்தி முக்கியப் பங்கு வகித்தது. சர்க்கரை உற்பத்தி பெரும் வணிகமானதன் காரணமாக, ஐரோப்பாவில் அடிமை முறையைக் கைவிட்ட கடைசி நாடாக ஸ்பெயின் இருந்தது.

அந்த வணிகமும் அதைக் கட்டுப்படுத்திய குடும்பங்களும் சாக்கரோக்ராசி (saccharocracy) என அழைக்கப்படுவதாக 32 வயதான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜெசஸ் சன்ஜூர்ஜோ, தான் எழுதிய ‘வித் தி ப்லெட் ஆப் அவர் ப்ரதர்ஸ்’ (With the Blood of our brothers) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர் பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப் பாடப்பரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

கரும்பு சாகுபடியைக் கட்டுப்படுத்திய குடும்பங்கள், அட்லாண்டிக் பகுதியில் மிகப்பெரிய பணக்காரர்களாக மாறினர். அவர்கள், அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வருவதைத் தாமதப்படுத்தினர். அவர்களின் செல்வம் பெருகியது. இதனால், கியூபா, ஸ்பெயின் அடிமைத்தனத்தின் கடைசிக் கோட்டையாக இருந்தது.

பிபிசி சார்பில் அந்த நூலின் எழுத்தாளர் முனைவர் ஜெசஸ் சன்ஜூர்ஜோவிடம் பேசினோம். அவரிடம் நாம் முன்வைத்த கேள்விகளையும், அவர் அதற்கு அளித்த பதில்களையும் இந்தக் கட்டுரையில் காண்போம்.

 
ஐரோப்பாவில் கடைசிவரை அடிமை முறையை ஸ்பெயின் கடைப்பிடித்தது ஏன்?
எழுத்தாளர் முனைவர் ஜெசஸ் சன்ஜூர்ஜோ

பட மூலாதாரம்,SAMUEL CRITCHELL

ஸ்பானிய ஏகாதிபத்திய சூழலில் கியூபாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு சர்க்கரையின் பங்கு முக்கியமாக இருந்தது.

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தின் வடக்கில் உள்ள புதிய கனரக தொழிற்சாலை மற்றும் ஜவுளித் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களில் அதிகம் பேர் காபி மற்றும் தேநீர் அருந்தத் தொடங்கினார்கள். அதனால், அவற்றை இனிமையாக்க வேண்டிய அவசியம் எழுந்தது.

தேநீர் அல்லது காபியில் இனிப்பு சேர்ப்பதற்கான பாரம்பரிய வழிகளான தேன் அல்லது இயற்கை சர்க்கரை (பீட் செடிகளில் இருந்து தயாரிக்கப்படுவது) மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. ஆனால், கரீபியன் மற்றும் வடக்கு பிரேசிலின் வெப்பமான காலநிலையில் உற்பத்தி செய்யப்படும் கரும்பு சர்க்கரை, தேன் மற்றும் இயற்கை சர்க்கரைக்கு மலிவான மாற்றாகத் தோன்றியது.

இந்தச் சூழலில்தான், இந்தப் புதிய பொருளாதாரத் தேவைகளுக்கு ஆப்பிரிக்க மக்கள் அடிமைத் தொழிலாளர்களாக இறக்குமதியாகும் சம்பவங்கள் நடைபெறத் தொடங்கின.

 
சாக்கரோக்ராசி என்றால் என்ன? அப்படி அழைப்பது சரியா?
அடிமைமுறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாக்கரோக்ராசி, ஒரு பொருளாதார மற்றும் அரசியல் உயர் வர்க்கமாகப் பார்க்கப்படுகிறது. இது கியூபாவில் சர்க்கரை உற்பத்தியுடன் இணைக்கப்பட்டது.

அந்தக் குடும்பத்தினர்தான் அடிமைகளுக்கும் உரிமையாளர்கள், தோட்டங்களுக்கும் உரிமையாளர்கள். அடிமைத் தொழிலாளர்களை கடத்துவது, அவர்களை இடம் மாற்றுவது, அவர்களுக்கு செலவு செய்வது என அனைத்தையும் அந்தக் குடும்பத்தினரே பார்த்துக்கொள்வார்கள்.

முழு அட்லாண்டிக் பகுதியிலும் அவர்கள்தான் பணக்காரர்களாக இருந்தனர். 1820ஆம் ஆண்டு முதல் அடிமைமுறை சட்டவிரோத செயல் என்றாலும், அந்த முறை தொடர்ந்தது மட்டுமல்லாமல், அந்த முறை மிக வேகமாகவும் வளர்ந்தது.

இந்த அடிமை முறையை ஊக்குவிப்பது, அரசியல், நிர்வாக, ராணுவ, மத மற்றும் பொருளாதார சக்திகளுக்கு இடையே ஒரு கச்சிதமாகப் பிணைக்கப்பட்ட வலையமைப்பாக இருந்தது. இது மிகக் குறைந்த நபர்கள் தங்களின் செல்வத்தைப் பெருக்கி, குவிப்பதற்கான ஏற்பாடாக இருந்தது.

இவை அனைத்தையும் செய்த அந்த நபர்களும், அந்தக் குடும்பங்களுமே சாக்கரோக்ராசி என்று அழைக்கப்படுகின்றனர்.

 
கடத்தப்பட்ட அடிமைகள் என்ன ஆனார்கள்?
அடிமைமுறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோட்டங்கள் மற்றும் அடிமைகளின் உரிமையாளர்களாக ஒரு சில குடும்பங்களே இருந்தாலும், 19ஆம் நூற்றாண்டில் கியூபா எப்படி இருந்தது என்பதைப் பற்றிப் புரிந்துகொள்வதில், அடிமைத்தனம் முக்கியப் பங்கு வகித்தது.

ஒரு பிரிட்டிஷ் தூதரக அதிகாரி தனது துணிகளைத் துவைக்க அடிமைத் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தியதற்காக சக ஊழியரால் கண்டிக்கப்பட்டதைப் பற்றிய ஒரு கதை உள்ளது.

பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளருடனான ஒரு கடிதப் பரிமாற்றத்தில், அந்த வேலையைச் செய்ய விரும்பும் ஒரு பெண்ணை ஹவானாவில் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்று கூறி தன்னை நியாயப்படுத்தினார் அந்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரி.

ஆனால் அது மட்டுமல்ல. ஒரு நவீன நிறுவனத்தைப் போன்று, தொழிலாளர்களை ஏலத்தில் எடுக்கும் முறையும் பயன்படுத்தப்பட்டது.

இதனால், பல முறை ஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாகக் கடத்தப்பட்டபோது, அவர்கள் பல்வேறு வழிகளில் தப்பித்துள்ளனர். ஆப்பிரிக்க மக்கள், கப்பலில் கடத்தப்பட்டபோது, அவர்கள் சண்டையிட்டுத் தப்பித்துள்ளனர், சில முறை, பிரிட்டிஷ் ராணுவம், அடிமைகளாகக் கடத்தப்படும் மக்கள் பயணிக்கும் கப்பலைக் கைப்பற்றி, அவர்களை விடுவித்துள்ளது.

கியூபாவில் மக்கள் அடிமைகளாக ஏலம் விடப்படுவது வெற்றிகரமாக நடந்தது. ஆனால், அவர்கள் பெரிய கடத்தல்காரர்களோ அல்லது அடிமைகளை வைத்திருக்கும் உரிமையாளர்களோ இல்லை. அவர்கள் பணம் மற்றும் கடன் வசதி இல்லாத மக்கள். அவர்களுக்கு மனிதர்களை அடிமைகளாக ஏலம் எடுப்பது ஒரு லாபகரமான வணிகமாக இருந்தது.

 
ஸ்பெயினில் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் பிரிட்டிஷ் அரசு ஆர்வமாக இருந்தது ஏன்?
அடிமைமுறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒருபுறம், 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரிட்டனில் தோன்றிய குவாக்கர் உலகம் - அடிமை வர்த்தகத்திற்கு எதிராகவும் அடிமைத்தனத்திற்கு எதிராகவும், நெறிமுறை, மனிதநேயம் மற்றும் கிட்டத்தட்ட கோட்பாடு சார்ந்த மத நிலைப்பாடுகளில் இருந்து முற்றிலும் தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.

பிரிட்டிஷ் அதிகாரிகள் “எங்கள் காலனிகளான ஜமைக்கா மற்றும் பார்படாஸில் அடிமை வர்த்தகத்தை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வந்தால், எங்கள் ராணுவ மற்றும் அரசியல் கூட்டாளிகளும் அவ்வாறே செய்ய வேண்டும்," எனக் கூறி வந்தனர்.

ஆனால் ஸ்பெயினுக்கு வேறு விதமான சிக்கல்கள் இருந்தன. ஸ்பெயினில் நெப்போலியன் படைகளுக்கு எதிரான போரில், ஆங்கிலேயர்கள், ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீசியர்களுடன் போரிட்டனர். அந்த நேரத்தில் மிக நெருக்கமான அரசியல் மற்றும் ராணுவ உறவு உருவானது. இதனால், ஸ்பெயினின் நிதி நெருக்கடியை பிரிட்டன் அறிந்திருந்தது.

கடன்பட்டிருந்தால், ஸ்பெயினின் உள்நாட்டுக் கொள்கையை அமைப்பதில் தனக்கு அதிக செல்வாக்கு இருக்கும் என பிரிட்டன் கருதியது.

 

எடுத்துக்காட்டாக, 1817இல் ஆங்கிலேயருடன் அடிமை வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதல் சர்வதேச ஒப்பந்தத்தில், மன்னர் ஏழாவது ஃபெர்டினாண்ட், அது ஒரு சமூகவிரோத செயல் என்றும், அது கிறிஸ்தவ மதத்திற்கு முரணானது என்றும், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டார்.

ஆனால், அடிமைமுறை அதுவரையில் ஒரு சட்டபூர்வமான வணிகமாக இருந்ததையும், அதை ஸ்பெயின் அரசு ஆதரித்ததையும் அவர் புரிந்துகொண்டார்.

அதனால்தான், பிரிட்டிஷ் அரசு கியூபாவின் பொருளாதாரத்திற்கும், அடிமைகளாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நான்கு லட்சம் பவுண்டுகள் வழங்க ஒப்புக்கொண்டது.

ஆனால், பணம் வந்தவுடன், மெக்சிகோவை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்துடன், ரஷ்யாவின் முதலாம் ஜார் அலெக்சாண்டரிடம் இருந்து போர்க் கப்பல்களை வாங்கப் பயன்படுத்துகிறார்.

அடிமைகள் கடத்தப்பட்ட கப்பல்களை தாக்கிய ஆங்கிலேயர்கள், ஸ்பானிய கப்பல்களைத் தாக்காதது ஏன்?

பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்தின் பார்வையில், பிரேசில் அதன் பேரரசுடன் ஒப்பிடக்கூடிய தேசம் அல்ல. 19ஆம் நூற்றாண்டில் இருந்த காலனித்துவ, இனவாத மற்றும் ஏகாதிபத்திய தர்க்கத்தில், அது(பிரேசில்) "பெரியவர்களின்" மேசையில் உட்கார அனுமதிக்கும் தார்மீக நியாயத்தன்மை, ராணுவ சக்தி மற்றும் வரலாற்று கௌரவம் ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை.

 
அடிமைமுறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மறுபுறம், பிரிட்டிஷ் அதிகாரிகள் ஸ்பானிய சாம்ராஜ்யத்திற்கு மரியாதை அளித்தனர். ஆனால், அதே மரியாதை ஸ்பானிய அதிகாரிகளுக்கு இல்லை.

ஸ்பானிய அதிகாரிகளைக் குறிப்பிட்டுப் பேசும் இனவெறிப் பேச்சும் இருந்தது. ஆனால், அதை லத்தீன் அமெரிக்க அரசுகள் மீது அவர்கள் கொண்டிருக்கும் தொனியோடு ஒப்பிட முடியாது.

சர்வதேச உடன்படிக்கைகளின் வெளிப்படையான மீறல் காரணமாக ஸ்பானிய பேரரசுடன் போரை அறிவிக்கும் அபாயம் இருந்தது. ஆனால், அது பிரிட்டிஷ் எடுக்கத் தயாராக இல்லாத ஒரு நடவடிக்கை.

அமெரிக்காவிற்கு மிக அருகில் உள்ள கியூபாவின் புவியியல் அமைவு இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் வட அமெரிக்க தலையீடு பற்றிய யோசனை 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இருந்தது.

 
அடிமை வர்த்தகம் இறுதியாக எப்படி முடிவுக்கு வந்தது?
அடிமைமுறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடிமை வர்த்தகம் 1870இல் முடிவடைந்தது என்று தீர்மானிக்கும் அளவிற்குப் பெரிய வரலாற்றுச் சான்று எதுவும் இல்லை. முடிவை அடைய, ஒருபுறம், அமெரிக்காவின் உள்நாட்டுப் போரில் தெற்கிற்கும், வடக்கிற்கும் நடந்த சண்டையில், வடக்கு வெற்றி பெற்றது.

அங்கு, ஒரு சர்வதேச ஒப்பந்தம் கையெழுத்தானது. அது பிரிட்டிஷ் ராயல் கடற்படைக்கும் அமெரிக்க ராணுவத்திற்கும் இடையிலான கூட்டு ராணுவ நடவடிக்கைகள் தொடர்பானது. அந்த ஒப்பந்தம், வட அமெரிக்காவில் அடிமைகளைக் கடத்தும் கடத்தல்காரர்களைத் தடுக்கவும், கியூபாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இயங்கும் கடத்தல் சம்பவங்களை முழுவதுமாகக் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கிறது.

மறுபுறம், ஸ்பெயினில் அடிமை ஒழிப்பு இயக்கம் ஒன்று உருவானது. பின்னர் 1865ஆம் ஆண்டுக்குப் பிறகு அதில் பலரும் தங்களை இணைத்துக் கொண்டனர்.

ஸ்பானிய காலனியில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு பத்திரிகையாளரான ஜூலியோ விஸ்காரோண்டோ இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார்.

இதற்குப் பிறகு, இந்த இயக்கம், முதலில் அடிமை வர்த்தகத்திற்கும் பின்னர் அடிமைத்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க ஸ்பெயின் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது.

https://www.bbc.com/tamil/articles/cy6ep3xwqpzo

இந்து சமுத்திரம் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் என்ன ? செங்கடல் தாக்குதல்களை சுட்டிக்காட்டி சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கருத்து

3 months 1 week ago

செங்கடலில் காணப்படும் ஆபத்தான நிலைமை உட்பட பல காரணங்களால் இந்து சமுத்திர பிராந்தியம் பொருளாதார பலவீனங்களை எதிர்கொள்வதாக சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஏழாவது இந்துசமுத்திரமாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடல்பயண சுதந்திரத்தை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

செங்கடலில் ஹெளத்திகிளர்ச்சியாளர்களின் சமீபத்தைய தாக்குதல்கள் முக்கிய கடல்பாதைகளிற்குஏற்படக்கூடிய ஆபத்தையும் இதன்காரணமாக இந்துசமுத்திரத்தில் எண்ணெய் மற்றும் கப்பல் கொள்கலன்கள் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடிய ஆபத்தையும்  வெளிப்படுத்தியுள்ளன  என சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்துசமுத்திரன் முக்கிய பாதைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எவையும் குறிப்பாக செங்கடல் ஹோர்மஸ் நீரிணையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் உலகின் முக்கிய வர்த்தக மையமான சிங்கப்பூரின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரகடற்பயணத்தின் சட்டரீதியான மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டியுள்ள சிங்கப்பூர் அமைச்சர் அனுமதியின்றி வாடகையின்றி கப்பல்கள் பயணம் செய்ய அனுமதிப்பதன் அவசியத்தையும்  வலியுறுத்தியுள்ளார்.

இந்து சமுத்திரம் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் என்ன ? செங்கடல் தாக்குதல்களை சுட்டிக்காட்டி சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கருத்து | Virakesari.lk

கனடாவில் வாழ முடியாமல் இந்தியர்கள் பலர் நாடு திரும்புவது ஏன்?

3 months 1 week ago
கனடா
படக்குறிப்பு,

கரண்

4 மணி நேரங்களுக்கு முன்னர்

வாய்ப்புகளை தேடி அலையும் குஜராத் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர்களின் விருப்ப நாடாக கனடா நீண்ட காலமாக இருந்து வருகிறது, ஆனால் தற்போது அந்த கனடா கனவு தகர்ந்து போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வளம் மிகுந்த பஞ்சாபின் கிராமப்புறங்களில் பயணித்தால் , அங்கு வெளிநாட்டு பயணங்களுக்கான விளம்பரங்களை அதிகம் பார்க்கலாம்.

அதன் வயல்வெளிகளில் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு எளிதாக செல்ல முடியும் என்று உறுதியளிக்கும் நூற்றுக்கணக்கான விளம்பர பலகைகள் உயர்ந்து நிற்பதை பார்க்கலாம். மாடி வீட்டின் சுவர்கள் தோறும் வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் முகவர்களின் விளம்பரங்கள் ஆக்கிரமித்திருக்கும்.

பதிண்டா நகரின் தெருக்களில் பல முகவர்களும், அவர்களை தேடி வரும் இளைஞர்களின் வெளிநாட்டு கனவினை உடனடியாக சாத்தியப்படுத்துவதாக உறுதியளிப்பார்கள்.

இந்தியாவின் வடமேற்கு மாநிலமான இங்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெளிநாட்டுக் குடியேற்றத்தின் அலை வீசி வருகிறது. அதில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இருந்த சீக்கிய வீரர்கள் கனடாவுக்குச் செல்லும் பயணம் தொடங்கி, சுதந்திரத்திற்குப் பிறகு கிராமப்புற பஞ்சாபியர்களின் இங்கிலாந்து பயணம் வரை அடங்கும்.

 
கனடா
படக்குறிப்பு,

கனடாவில் குடியேறிய பலரும் தங்களது தாய்நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

கனடா மீதான ஏமாற்றம் ஏன்?

ஆனால், தற்போது கனடா செல்வதற்கான கனவு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

கனடாவில் குடியேறிய பலரும் தங்களது தாய்நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

அப்படியானவர்களில் ஒருவர்தான், 28 வயதான பால்கர். கனடாவில் ஒரு வருடம் தங்கியிருந்த அவர் 2023 இன் தொடக்கத்தில் இந்தியா திரும்பினார். கோவிட் -19 தொற்றுநோய் இந்தியாவில் பரவத் தொடங்கியதை அடுத்து அவர் தனது சிறிய கிராமமான பித்தோவை விட்டு வெளியேறினார். அப்போது அவரின் இறுதி இலக்கே கனடாவின் குடியுரிமையை பெறுவது மட்டுமே. எனவே, இவரின் கல்விக்காக இவரது குடும்பம் தங்களது நிலத்தை அடமானம் வைத்துள்ளனர்.

ஆனால், கனடா சென்ற சில மாதங்களில் அவரது கனவு மங்கிவிட்டது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பால்கர், “அங்கு எல்லாமே விலை அதிகம். கல்லூரி முடித்த பிறகு, பிழைப்பிற்காக வாரத்திற்கு 50 மணிநேரம் நான் வேலை செய்ய வேண்டியிருந்தது. பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக பல மாணவர்கள் தங்களது படிப்பை கைவிடுகின்றனர்” என்றார்.

தற்போது பால்கர் தனது பெரிய முற்றம் கொண்ட தனது பாரம்பரிய பஞ்சாபி வீட்டின் ஒரு சிறிய அறையில் எம்ப்ராய்டரி தொழிலை செய்து வருகிறார். மேலும் தனது விவசாயக் குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவி வருகிறார்.

இது போன்ற கிராமப்புறங்களில் மிகக் குறைவான வேலை வாய்ப்புகளே உள்ளன. ஆனாலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த இளைஞர்கள் உயரத்திற்கு செல்கின்றனர். பால்கர் தனது வணிகத்தின் பெரும்பகுதியை இன்ஸ்டாகிராம் மூலம் செய்து வருகிறார்.

இதுகுறித்து பேசுகையில், “ வாழ்க்கை வேடிக்கையாக இருக்கிறது. வீட்டிலேயே தங்கி நல்ல சம்பாத்தியம் பெறும்போது, நான் ஏன் அங்கு சென்று கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்?” என்ற கேள்வியை முன்வைக்கிறார் பால்கர்.

 
கனடா
படக்குறிப்பு,

"கனடாவில் குடியுரிமை பெறுவதற்கான விருப்பம் கிராமப்புறத்தில் உள்ள நடுத்தர மற்றும் கீழ்-நடுத்தர குடும்பங்களிடம் வலுவாக உள்ளது."

கனடாவிற்கு குடிபெயரும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

கனடாவில் இருந்து பஞ்சாப் திரும்பிய சுமார் அரை டஜன் நபர்களிடம் பிபிசி பேசியது. அனைவருமே ஒரே மாதிரியான உணர்வுகளையே பகிர்ந்து கொண்டனர்.

அப்படி கனடாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்குத் திரும்ப முடிவு செய்துள்ள இந்தியர்கள் பலரும் யூடியூபில் பகிர்ந்துள்ள வீடியோக்களில் ஒரே மாதிரியான தொனியை அவர்கள் வெளிப்படுத்தியிருப்பதை காணலாம்.

இதுகுறித்து சமீபத்தில் இந்தியா திரும்பிய நபர் ஒருவர், குடியேற்ற முகவர்களால் (immigration agent) சொல்லப்பட்ட கனடா வாழ்க்கை குறித்த தகவலும், டொராண்டோ மற்றும் வான்கூவரில் குடியேறியவர்களின் உண்மை நிலையும் அப்படியே மாறுபட்டதாக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ராஜ் கரண் ப்ரார் பதிண்டாவை சேர்ந்தவர். இவர் வெளிநாடு செல்வதற்காக உதவும் முகவர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பஞ்சாபியர்கள் நிரந்தர குடியிருப்பு மற்றும் மாணவர் விசாவைப் பெற உதவி வருகிறார்.

அவரிடம் பேசுகையில், கனடா மீதான மோகம் கொஞ்சம் குறைந்துவிட்டது. குறிப்பாக வீட்டிற்கு திரும்பி வருவதற்கான வாய்ப்புள்ள வசதி படைத்த குடியேறிகள் மத்தியில் அந்த ஆசை குறைந்து விட்டதாக தெரிவித்தார்.

இருப்பினும் கூட கனடாவில் குடியுரிமை பெறுவதற்கான விருப்பம் கிராமப்புறத்தில் உள்ள நடுத்தர மற்றும் கீழ்-நடுத்தர குடும்பங்களிடம் வலுவாக உள்ளது. ஆனால், அங்கு சென்று வேலை மற்றும் வீட்டு வசதி கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்கள் வெளியிடும் வீடியோக்கள் இவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார் குடியேற்ற முகவர்.

ஒரு மதிப்பீட்டின்படி, இந்தியாவில் இருந்து கனடாவில் படிப்பதற்கான அனுமதிக்கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் 2023இன் இரண்டாம் பாதியில் 40% குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு ஒரு காரணமாக, சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில் இந்திய ஏஜெண்டுகள் ஈடுபட்டதாகக் கூறி இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் பதற்றம் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னால் இந்தியாவிலிருந்து கனடாவில் குடியேறிய தலைமுறையினரின் கனடா செல்லும் கனவு மங்கி வருவதற்கு, ஆழமான கலாசாரம் சார்ந்த பல காரணங்களும் பங்கு வகிக்கின்றன.

அதில் கனடாவின் சிக்கலான பிரச்னையான பணி அனுபவத் தேவைகள் மீதான தடை, மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில் சலசலப்பு போன்ற பிரச்னைகள் அடங்கும்.

 
கனடா
படக்குறிப்பு,

"பல முதிய இந்திய கனடியர்களும் கனடாவை விட்டு வெளியேற தயாராகி வருகின்றனர்"

கனடாவை விட்டு இந்தியாவுக்கு திரும்பியவரின் கதை

கரண் அவுலாக் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் எட்மண்டனில் வாழ்ந்து, பொருளாதார ரீதியாக தனது வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்து கொண்டவர். இவர் கனடாவில் மேலாளராக இருந்த வேலையை விட்டுவிட்டு, தற்போது பஞ்சாபில் உள்ள தனது பிறந்த ஊரான கான் கி தாப் கிராமத்தில் வசதியான கிராமப்புற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், கனடாவின் LGBT சமூகத்தை உள்ளடக்கிய கல்விக் கொள்கை மற்றும் 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்குவதற்கான முடிவு ஆகியவற்றால் தான் வருத்தத்திற்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.

அவரைப் பொறுத்தவரை, பல முதிய இந்திய கனடியர்களும் கனடாவை விட்டு வெளியேற தயாராகி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், மேற்கத்திய வாழ்க்கை முறையுடன் பொருந்தாத தன்மை, மோசமான சுகாதார அமைப்பு மற்றும் இந்தியாவில் சிறந்த பொருளாதார வாய்ப்புகள் ஆகியவை கூறப்படுகின்றன.

இதுகுறித்து கரண் அவுலாக் கூறுகையில், “ நான் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நாடு திரும்ப விரும்பும் மக்களுக்கு உதவுவதற்காக 'பேக் டு மதர்லேண்ட்' என்ற இணைய ஆலோசனை மையத்தை தொடங்கினேன். குறைந்தது தினமும் இரண்டு மூன்று அழைப்புகளாவது வரும். அவர்களில் பெரும்பாலானோர் கனடாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பஞ்சாபில் வேலை வாய்ப்புகள் குறித்தும், எப்படி நாட்டிற்கு திரும்பி வருவது என்பது பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள்” என்று தெரிவித்தார்.

குடியேற்ற வழக்கறிஞர் குழுவான கனடிய குடியுரிமை நிறுவனத்தைச் சேர்ந்த டேனியல் பெர்ன்ஹார்ட், குடியேற்றத்தை மதிக்கும் ஒரு நாட்டிற்கு இந்த போக்கு "கவலை அளிக்கிறது" என்று கூறுகிறார்.

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் வேகமாக அதிகரிக்கும் வயதானவர்களின் மக்கள் தொகையை தடுப்பதற்காக தாராளவாத குடியேற்றக் கொள்கையை அமல்படுத்தினார்.

கனடிய புள்ளிவிவரங்களின்படி, குடியேற்றம் 2021 இல் கனடாவின் தொழிலாளர் வளர்ச்சியில் 90 சதவீதமும், மக்கள்தொகை வளர்ச்சியில் 75 சதவீதமும் இடம்பிடித்துள்ளது.

 
கனடா
படக்குறிப்பு,

2022 இல் கனடிய குடியேற்றத்தின் முதன்மை ஆதாரமாகவும் இந்தியா இருந்தது.

கனடா சென்றவர்களில் இந்தியர்களே அதிகமானோர்

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாணவர்கள் கனடாவின் பொருளாதாரத்திற்கு 14.7 பில்லியன் டாலர்கள் பங்களிக்கின்றனர். அவர்களில் இந்தியர்களே பெரும்பாலானோர். கனடாவில் குடியேறிய ஐந்தில் ஒருவர் இந்தியர் ஆவார்.

2022 இல் கனடா குடியேற்றத்தின் முதன்மை ஆதாரமாகவும் இந்தியா இருந்தது.

கனடாவில் தற்போது குடியேற்றத்தின் அதிகரிப்பு காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் விகிதம் குறைவாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும், கனடா ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் புதிய குடியேறிகளை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனால் பெர்ன்ஹார்ட் கூறுகையில், “மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்புபவர்களின்(Reverse migration) விகிதம் 2019இல் உச்சத்தை எட்டியது. இது இடம்பெயர்வோர் கனடா மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது” என்கிறார்.

அத்தகைய புலம்பெயர்ந்தோர் அல்லது வெளியேறியவர்கள் குறித்து நாடுகளுக்கான தனித்தனி புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை, ஆனால் ராய்ட்டஸின் அதிகாரபூர்வ தகவல்களின்படி, 2021 மற்றும் 2022 இல் 80,000 முதல் 90,000 குடியேறியவர்கள் கனடாவை விட்டு வெளியேறியதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு அல்லது வேறு இடத்திற்குச் சென்றிருக்கலாம்.

2023 இன் இரண்டாம் பாதியில் சுமார் 42,000 பேர் கனடாவை விட்டு வெளியேறினர்.

கனடா குடியுரிமைக்கான நிறுவனத்தின் மக்கள்தொகை புள்ளிவிவரங்களின்படி, மிகக் குறைவான நிரந்தர குடியிருப்பாளர்களுக்கே கனடாவின் குடியுரிமை வழங்கப்படுகிறது. அப்படி தகுதி பெற்றவர்களில் 75 சதவீதம் பேர் 2001 இல் கனடிய குடிமக்கள் ஆனார்கள். அந்த எண்ணிக்கை இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு 45 சதவீதமாக மாறியது.

 
கனடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கனடாவின் மக்கள்தொகை 2023 இல் பன்னிரெண்டு மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கனடாவில் வீட்டு வசதி, சுகாதாரச் சிக்கல்கள்

அதிகமான மக்களுக்கு இடமளிக்க நினைக்கும் கனடாவின் தீவிர குடியேற்ற இலக்குகளில் இருந்து இந்த பிரச்னை தொடங்குகிறது.

கனடா தேசிய வங்கியின் பொருளாதார நிபுணர்களின் சமீபத்திய அறிக்கை, கனடாவின் வீட்டுவசதி நெருக்கடியில் உள்ளதாகவும், அதன் சுகாதார கட்டமைப்பு அழுத்தத்தில் இருக்கும்போது, கூடுதல் மக்கள்தொகை வளர்ச்சி மேலும் சுமையை அதிகரிப்பதாகவும் எச்சரித்தது.

புதிதாக வரும் மக்களால், கனடாவின் மக்கள்தொகை 2023 இல் 12 லட்சம் அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கு மக்கள் குடியேறும் எண்ணிக்கையை 5 லட்சம் என்ற அளவில் கட்டுப்படுத்தினால் மட்டுமே, வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க அல்லது மேம்படுத்த முடியும் என்று நிபுணர்களின் அறிக்கை கூறப்படுகிறது.

கொள்கை வடிவமைப்பாளர்கள்(Policy Makers) இந்த அறிக்கையை மறைமுகமாக ஏற்றுக்கொண்டது போல தெரிகிறது.

சமீபத்தில் ஜஸ்டின் ட்ரூடோவின் தாராளவாத அரசு சர்வதேச மாணவர்களுக்கான அனுமதிக்கு வரம்புகளை விதித்தது. இது கல்வி விசாக்களில் தற்காலிகமாக 35 சதவீதத்தை குறைக்கும்.

கனடாவில் இருந்து வெளியேறுவதற்கான அலை வீசிக்கொண்டிருக்கும் சூழலில், இந்த குறிப்பிடத்தகுந்த கொள்கை மாற்றம், மேலும் கனடா மீதான விருப்பத்தை குறைக்கும் சிலர் நம்புகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c8vn7nm09qjo

இரும்புத் தளபதியைப் பதவி நீக்கிய உக்ரேன் ஜனாதிபதி!

3 months 1 week ago
இரும்புத் தளபதியைப் பதவி நீக்கிய உக்ரேன் ஜனாதிபதி! 10-7.jpg

இரும்புத் தளபதியென  அழைக்கப்பட்ட உக்ரேனின் ஆயுதப்படை தலைமை தளபதியான  வலேரி ஜலுன்ஸ்யியை அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி  பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

கடந்த சில நாட்களாக ஜனாதிபதி செலன்ஸ்கிக்கும் தளபதி வலேரி ஜலுன்ஸ்யிக்கும் இடையே ஏற்பட்டுவந்த மோதல் காரணமாகவே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவுடனான போரின் போது சிறப்பாக செயற்பட்டமைக்காக வலேரி ஜலுன்ஸ்யி இரும்புத் தளபதியென அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://akkinikkunchu.com/?p=268084

Checked
Thu, 05/16/2024 - 20:57
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe