Jump to content

வருமா வருமா?


Recommended Posts

செவ்விளநீர் மர நிழலில்

மண்ணழைந்து- செம்பருத்தி பூ

இதழ்பிரித்து பொட்டு வைத்து

மெல்லிய காற்றில்

அணிஞ்சில் பழ கோது கொண்டு

விசில் ஊதி..........

ஐஸ் பழ வான் பின்னால் ஓடி

அடித்து பிடித்து

சில்லறை கொடுத்து

நாவில் பனியுருக

நாவால் உதட்டை

துடைத்து துடைத்து

சுவைத்தோமே

வருமா வருமா?

மீண்டும்-அந் நாட்கள் ?

சுகம் தருமா தருமா?

பாட நேரம் வெளியோடி

காளிகோயில் மாமரம் மீதேறி

பறித்து வந்த மாம்பிஞ்சை

ஒளித்து ஒளித்து சாப்பிட்டோமே

அக்காலம் வருமா வருமா?

சுகம் தருமா தருமா?

கள்ளன் பொலிஸ் விளையாடி

கள்ளனுக்கு பொலிஸ்

"ஊண்டி போட "

அவன் அழுதுகொண்டு

வீட்டை -ஓட

அப்பா கிட்ட உதை வாங்கினோமே

வருமா வருமா அந்நாள்?

சுகம் தருமா தருமா?

மாலா புது சைக்கிள்

எடுத்திட்டாளென்று அழ

போனா போகுது என்று

அப்பா "லுமாலா" சைக்கிள்

ஒன்று எடுத்து தர - குறுக்கால போவான்

ஒருவன் பிளேற்றால் சீற்றை

குறுக்கும் மறுக்கும் வெட்டித்தள்ள

வீட்டை எப்பிடி போவதென்று

தெரியாம- விக்கி விக்கி

அழுதோமே- வருமா வருமா?

அந்நாட்கள் சுகம் தருமா தருமா?

Link to comment
Share on other sites

இளநீர் மரம் நிழல் தருமா வர்ணன்?:-)

"செம்பருத்தி பூ

இதழ்பிரித்து பொட்டு வைத்து"

நானும் செய்திருக்கிறன் இந்த விளையாட்டு.

"அணிஞ்சில் பழ கோது கொண்டு

விசில் ஊதி" & "ஊண்டி போட "

கேள்விப்படாதவை.

கவிதை நன்றாகவே வந்திருக்கிறது.என்ன சொல்ல அந்த நாட்கள் மீண்டும் வராது என்பது கசப்பான உண்மை.....அப்பிடியே வந்தாலும் முன்பு அனுபவித்த அதே சந்தோசம் வருமா என்பதும் சந்தேகமே.

Link to comment
Share on other sites

"குறுக்கால போவான்

ஒருவன் பிளேற்றால் சீற்றை

குறுக்கும் மறுக்கும் வெட்டித்தள்ள "

என்ர சைக்கிள் கரியர்ல கூடப் படிச்ச பெடியங்கள் வெடி வச்சவங்கள்.அஞ்சாம் வகுப்பு நேரம் அடிக்கடி வகுப்பில வினாடி வினாப் போட்டி நடக்குறது ...தோத்த கோவத்தில வெடி வச்சவை விடுவமா நாங்கள் பொறுப்பாளற்ற போய் சொல்லி நல்லாத் திட்டு வாங்கினவை.பத்தாததுக்கு அவேன்ர அம்மாவைட்டயும் சொன்னான்.அந்தக் கோவத்தில ஒருத்தன் என்னை மரத்தில இருந்து தள்ளி விழுத்திப்போட்டான்.இப்ப நினைச்சா சிரிப்பா இருக்கு.

Link to comment
Share on other sites

இளநீர் மரம் நிழல் தருமா வர்ணன்?:-)

"செம்பருத்தி பூ

இதழ்பிரித்து பொட்டு வைத்து"

நானும் செய்திருக்கிறன் இந்த விளையாட்டு.

"அணிஞ்சில் பழ கோது கொண்டு

விசில் ஊதி" & "ஊண்டி போட "

கேள்விப்படாதவை.

கவிதை நன்றாகவே வந்திருக்கிறது.என்ன சொல்ல அந்த நாட்கள் மீண்டும் வராது என்பது கசப்பான உண்மை.....அப்பிடியே வந்தாலும் முன்பு அனுபவித்த அதே சந்தோசம் வருமா என்பதும் சந்தேகமே.

இளநீர் மரமில்ல- செவ்விளநீர்

செவ்விளநீர் மரம் அநேகமாக உயரமா வளராது இல்லையா?

சரி நிழல் தருதோ இல்லையோ- வெய்யில் அடிக்க அடிக்க - சின்ன வயசில - மண் விளையாடினது ஒரு சுகம் இல்லையா? 8)

அணிஞ்சில் பழம் தெரியாதா?-சிவப்பா இருக்குமே - :shock:

ஊண்டி தெரியாதா?

"ஊண்டி அடிச்சிட்டான்"

"நேரம் போட்டுது சைக்கிளை ஊண்டி உழக்கு"

"ஊண்டி நுள்ளி போட்டான்"

தமிழீழ வழக்கு மொழி- அது! 8)

Link to comment
Share on other sites

ஹாஹா ஊண்டி அடிச்சிட்டீங்கள் பொலிஸை.....சேர்த்து வாசிச்ச உடனே தெரியாத வார்த்தை என்று நினைச்சிட்டன்.அதோட பாவிக்காத சொற்கள் மறந்து போகுதே என்ன பண்ண.

Link to comment
Share on other sites

அழகான கவிதை வர்ணன்..

என்ன சினேகிதி சொன்னது போல.. திரும்ப காலம் வந்தாலும்..அந்த வயசு இல்லையே..அப்பிடி செய்ய?

அது மட்டுமில்லை..இப்ப அங்க ஐஸ் பழ வான் வருதோ இல்லையோ..அங்கையும் எல்லாம் மாறிட்டுது இலலையா.. :roll:

எல்லோரும் இப்போ ஊர் கவிகள் எழுதுகிறீர்கள்.. கவிதைகளை வாசிக்க..ஊர் அப்பிடியே கண் முன்னால வந்து நிக்குது.... :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

ஆகா சினேகிதி நீங்கள் பொல்லாத ஆள் தான் என்ன? :P

சில வேளைகளில்..ஒரு ஊர்..ஒரு ரோட் என்று ஒற்றுமையாக பெற்றோர்கள் இருப்பார்கள்..நாங்கள் சண்டை பிடிச்சுட்டு போய் கோள் மூட்டினால் சரி..(சிலரை தவிர) பலர்..அவைக்குள்ளும் சண்டை தான்..ஹிஹி..அதை பார்க்கணுமே..பிள்ளைகள் அடுத்த நாள் பென்சில் குடுக்குங்கள்..பட் அம்மாமார் கோவிச்சுண்டு இருப்பாங்க..ஹிஹி :):(:lol::lol:

Link to comment
Share on other sites

வர்ணன் பழைய நினைவுகளை மீட்டி ஒரு கவிதை எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருமா? வருமா?

வர்ணனுக்கு நல்லா வருகுது கவிதை வாழ்த்துக்கள்!

ஆனால் அந்த நாட்கள் நிச்சயம் திரும்ப வராது.

அப்படி வந்தாலும் அவை முன்புபோல இனிப்பாக இருக்காது.

Link to comment
Share on other sites

வர்ணன் மீண்டும் ஒருதரம் ஊர் ஞபகங்களை அசைபோட வைத்துள்ளீர்கள்

இப்ப நினைக்கும் போது மனதில் ஏதொ ஒரு நெருடல் மீண்டும் அவ்வாழ்வு கிடைக்குமா என்று :)

அணிஞ்சில் பழம் சத்தியமாத் தெரியல, அதுக்கு வேறு ஏதும் பெயரும் உண்டா :roll:

Link to comment
Share on other sites

வர்ணன் மீண்டும் ஒருதரம் ஊர் ஞபகங்களை அசைபோட வைத்துள்ளீர்கள்

இப்ப நினைக்கும் போது மனதில் ஏதொ ஒரு நெருடல் மீண்டும் அவ்வாழ்வு கிடைக்குமா என்று :)

அணிஞ்சில் பழம் சத்தியமாத் தெரியல, அதுக்கு வேறு ஏதும் பெயரும் உண்டா :roll:

அந்த மரம் எங்க ஊரில - நிறைய இருக்கு அருவி- வடமராட்சி-! :roll:

Link to comment
Share on other sites

கவிதை என்று நினைச்சு எழுதல்ல- இப்பிடியும் எழுதி பார்த்தால் என்ன என்று ஒரு சின்ன முயற்சி செய்தன் -! 8)

நன்றி சினேகிதி-ப்ரியசகி- ரமா- ஆசிரியர்-அருவி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணன் மீண்டும் ஒருதரம் ஊர் ஞபகங்களை அசைபோட வைத்துள்ளீர்கள்

ஓஒஒ......

நீங்கள் அசை போடுவீர்களா? அப்பவே கனபேர் சொன்னவர்கள் நான் தான் நம்பவில்லை!!

ஆக்கத்துக்கு வாழ்த்துக்கள் வர்ணன்!!

Link to comment
Share on other sites

ஓஒஒ......

நீங்கள் அசை போடுவீர்களா? அப்பவே கனபேர் சொன்னவர்கள் நான் தான் நம்பவில்லை!!

எல்லாத்தையும் நம்பாட்டிலும் சிலதையாவது நம்பணும்!!!

Link to comment
Share on other sites

வர்ணன்... கவிதை நல்லாய் இருக்கு. நாம் சிறுவர்களாய் இருக்கும் போது விரைவாக பெரியவர்கள் ஆகிவிடவேண்டும், என்று ஆசையாக இருக்கும். இப்போ பெரியவர்கள் ஆனபின் மீண்டும் துள்ளிதிரிந்த , சின்ன வயதை எண்ணி மனம் ஏங்கித்தவிக்கும்.. மனதின் உணர்வுகளும் ஏக்கங்களும் வினோதமானவைதான்.. இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் நம்பாட்டிலும் சிலதையாவது நம்பணும்!!!

அந்தச் சிலதைக் கண்டு பிடிக்கின்றதே பெரும்பாடாகக் கிடக்குதே!

Link to comment
Share on other sites

எனக்கும் யாழ் கழத்தில் கவிதை எழுத ஆசை. ஆனால் புதிய தலைப்பில் ஆக்கங்களை எழுதவோ,' BBகோட்' ஐ பயன்படுதவோ முடியவில்லை. ஆகவே நன்பர்களே[பிகளே] கீழேநான் தரும் கவிதையை அழகாக தட்டச்சிவிட்டால் என்றென்றும் நன்றியுடயவானாய் இருப்பேன்.[ஒவ்வொரு அடைப்புக்குறிகளும் தனித்தனி வரிகள் என்பதை கவனத்தில் கொள்ளவும்]

Link to comment
Share on other sites

வர்ண் அண்ணா கவிதை நல்லாயிருக்கு

உண்மைதான் அந்த நாள் ஞாபகங்கள் எல்லோருக்கும் இருக்குதான் என்ன செய்வது அவை இனி எமக்கு இனிய நினைவகளாக மட்டுமே

நல்ல கவிதை தொடர்ந்து எழுதுங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழநேசன்

தங்கள் கவிதையை அதிலிருந்த எழுத்துப்பிழைகளைத் திருத்தி "வாழ்க்கையின் வெறுமைகள்" என்ற புதிய தலைப்பில் ஒரு புதிய பக்கத்தில் இணைத்துள்ளேன் பார்க்கவும்.

எனக்கும் யாழ் கழத்தில் கவிதை எழுத ஆசை. ஆனால் புதிய தலைப்பில் ஆக்கங்களை எழுதவோ,' BBகோட்' ஐ பயன்படுதவோ முடியவில்லை. ஆகவே நன்பர்களே[பிகளே] கீழேநான் தரும் கவிதையை அழகாக தட்டச்சிவிட்டால் என்றென்றும் நன்றியுடயவானாய் இருப்பேன்.[ஒவ்வொரு அடைப்புக்குறிகளும் தனித்தனி வரிகள் என்பதை கவனத்தில் கொள்ளவும்]

_________________

[என் இழமைப்புத்தகத்தின்][ இரவுப்பக்கங்கள்][வெறுமையாய்க

Link to comment
Share on other sites

வர்ணன், உங்கள் கவிதை பள்ளி பருவ காலத்தை மீள நினைவூடியது. அவை செல்வமுத்து ஆசிரியர் சொன்னது போல் மீள முடியா நாட்கள், நினைவில் மட்டும் மீட்டகூடிய நாட்கள்.

தொடர்ந்து எழுதுங்கள் நன்றி.

Link to comment
Share on other sites

வருமா வருமா கவிதை நன்றாக இருக்கிறது,. அப்படியே ஊர் ஞபகங்களை அசை போட வைக்கிறது. அந்த நாட்கள் திரும்ப வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி வந்தாலும் பழைய நாட்கள் போல் இருக்காது. இப்ப எல்லாம் ஊருல முந்தின மாதிரி இல்லை., எல்லாம் மாறிவிட்டது.. :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.