வல்வை சகாறா

கரிக்காய் பொரித்தேன்

Recommended Posts

வணக்கம் எல்லோருக்கும்..

இந்தப்பகுதியில் கலகலப்பாக தமிழின் பொருளை...., புலவர்களின் கலகலப்பை... தமிழால் விளைவிக்கப்பட்ட கிண்டல் கேலிகளை இணைக்கலாம். எனக்கு அதிகம் தெரியாது இருப்பினும் தேடலின் அவா நிறையவே உள்ளது. அத்தேடலின் அவா கைகொடுக்கும் தருணங்களில் நான் இரசித்த அல்லது இரசிக்க எத்தனிக்கும் தமிழ் மொழியின் பொருள் நிறைந்த நயங்களை பதிவிடலாம் என்று ஒரு சின்ன அடியெடுத்து வைக்கின்றேன்... இது இவளுக்கானது என்று நீங்கள் எவரும் ஒதுக்கி விடாமலும் ஒதுங்கிப் போகாமல் கூட இணைந்து தமிழை நயந்து நடக்கலாம் வாருங்கள்.

“கரிக்காய் பொரித்தேன் கன்னிக்காய் நெய்து வட்டலாக்கினேன்

ரிக்காயைப் பச்சடியாகப் பண்ணினேன்

கொஞ்சம் இதன் பொருளைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.....

என்னடா ஆரம்பமே இப்படி....... :lol: :lol: :D

Edited by வல்வை சகாறா
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

பாடல் இதுதான்

"கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயைத் தீய்த்தாள்

பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் - உருக்கம்உள்ள

அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள்

உப்புக் காண் சீச்சி உமி."

Share this post

Link to post
Share on other sites

கரி என்றால் யானை. அதாவது அப்பெண் யானையைப் பொரியல் செய்தாள் என்று புலவர் கூறியிருக்கிறார். யானைப் பொரியலா? அது எப்படி என்று யோசிப்பதில் ஆச்சர்யம் இல்லை. அதாவது கரி என்றால் யானை; அதேபோல் யானைக்கு அத்தி என்று வேறுஒரு பெயரும் உண்டு. இங்கு அத்திக்காய்ப் பொரியல் என்பதையே கரிக்காய்ப் பொரியல் என்று புலவர் கூறியிருக்கிறார்.

கன்னி என்றால் திருமணம் ஆகாதப் பெண். அப்படியென்றால் பெண்ணையா வறுவல் (தீய்த்தல் என்றால் வாணலியில் இட்டு வறுத்தல் என்று அர்த்தம்) செய்தாள்?. கன்னி என்றால் வாழைக்காய் என்று மற்றும் ஒரு பொருள் உள்ளது. அதாவது வாழைக்காய் வறுவல் என்பதையே கன்னிக்காயைத் தீய்த்தாள் என்று கூறுவதாகப் புலவர் கூறியிருக்கிறார்.

பரி என்றால் குதிரை. குதிரையை அப்பெண் பச்சடி செய்தாள் என்று புலவர் கூறியிருக்கிறார். உண்மையில் அப்பெண் குதிரையைப் பச்சடி செய்தாளா?. இங்கும் புலவர் தன் சொல் விளையாட்டை இலாவகமாகக் கையாண்டுள்ளார். பரி என்றால் மா என்று இன்னும் ஒரு பொருள் உண்டு. அதாவது மாங்காய்ப் பச்சடி செய்தாள் என்று கூறுவதற்குப் பதில் பரிக்காய்ப் பச்சடி பண்ணாள் என்று கூறுவதாகப் புலவர் கூறியுள்ளார்.

அப்பைக்காய் என்றால் அழகிய கத்தரிக்காய் என்று அர்த்தம். அதாவது கத்தரிக்காய் நெய் துவட்டல் செய்திருந்தாள் என்பதையே அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள்(சமைத்தாள்) என்று புலவர் கூறியிருக்கிறார். எதற்க்காக உருக்கம்உள்ள என்ற வார்த்தையைப் புலவர் பயன்படுத்தியிருக்கிறார் என்றால், கிராமப்புறங்களில் கத்தரிக்காயை நெய்வடியும் (உருக்கமுள்ள) காய் என்று கூறுவார்கள்.

இவ்வாறு அத்தைமகள் சமைத்த உணவில், உப்பு அதிகமாக உள்ளதாகவும் (உப்புகாண் சீச்சி உமி) ஆகவே சீச்சி என்று கூறி உமிழ்ந்ததாகவும் புலவர் பாடலை நகைச்சுவையுடன் முடித்துள்ளார்.

Edited by BLUE BIRD
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

அதெல்லாம் ஒன்றுமில்லை blue bird... :rolleyes: பொரியல், தீயல், பச்சடி, நெய்துவட்டல் எல்லாம் ஆக்கப்பட்டு இருந்தது, அதை புலவர் சாப்பிடும் நேரத்தில் எதிரே யானை சைசில் அத்தைமகள் உப்போடு வருவதைக் கண்டதும் 'உப்புக்காண் சீச்சி உமி' என்று அலறி அடித்து முடிக்கிறார்... ^_^

Share this post

Link to post
Share on other sites

கரிக்காய் என்று அத்திக்காயை அழைப்பதுண்டு!

கன்னிக்காய் வாழைக்காய் என நினைக்கின்றேன்!

பரிக்காய் என்பதில் நீலமேகத்துடன் உடன்படுகின்றேன்! மாங்காய்!

ஆக நீலமேகம் கூறுவது சரி போல் உள்ளது! :icon_mrgreen:

Share this post

Link to post
Share on other sites

அதை புலவர் சாப்பிடும் நேரத்தில் எதிரே யானை சைசில் அத்தைமகள் உப்போடு வருவதைக் கண்டதும் 'உப்புக்காண் சீச்சி உமி' என்று அலறி அடித்து முடிக்கிறார்... ^_^

:lol: :lol: :lol:

Share this post

Link to post
Share on other sites

எப்பிடி எல்லாம் யோசிக்கின்றீர்கள்!! :lol: அந்தப் புலவர் கேள்விப்படால் :icon_mrgreen:

BLUE BIRD இன் விளக்கம் பொருத்தமாக உள்ளது.

Edited by அலைமகள்

Share this post

Link to post
Share on other sites

எப்பிடி எல்லாம் யோசிக்கின்றீர்கள்!! :lol: அந்தப் புலவர் கேள்விப்படால் :icon_mrgreen:

BLUE BIRD இன் விளக்கம் பொருத்தமாக உள்ளது.

அலைமகள்! எல்லாம் வெட்டி ஒட்டல் தான்

Share this post

Link to post
Share on other sites

தமிழ் மணக்க உண்பது என்பது இதுதானோ.....

Share this post

Link to post
Share on other sites

நீலப்பறவை வெட்டினாலும் ஒட்டினாலும் பொருள் வந்து சேர்ந்துவிட்டது.

சரி அடுத்த காய் பற்றி தமிழின் விளையாடல் எப்படி இருக்கிறது என்று நயக்கலாம்... அநேகமாக இதற்குப் பொருளை வெட்டி ஒட்டத்தேவையில்லாமல் இருக்கலாம்.....எல்லோருக்கும் பிடித்தமான மிகவும் கவர்ச்சியான பாடல் இது

எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

கேளுங்கோ ரசியுங்கள் எல்லாக் காய்களுக்கான பொருளையும் பதிவிடுங்கள்....

முக்கியமாக இந்தப்பாடலில் எத்தனை காய்கள் இடம்பெற்றிருக்கின்றன அக்காய்கள் எவை இந்தப்பாடலில் அந்தக்காய்களின் பொருளைக்கண்டு பிடியுங்கள்

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

உள்ளமெல்லாம் மிளகாயோ

ஒவ்வொரு தேன் சுரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையெனைக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா

Edited by வல்வை சகாறா

Share this post

Link to post
Share on other sites

அண்ணளவாக நாலு.

Share this post

Link to post
Share on other sites

அண்ணளவாக நாலு.

:o :o :o

தப்பிலி நான் பாடல் காட்சியில் வரும் ஆட்களை(காய்களை) கேட்கவில்லை :icon_mrgreen:

பாடும் மொழியில் வெளிப்படும் தாவரக்காய்களை கேட்கிறேன் :D

Share this post

Link to post
Share on other sites

:o :o :o

தப்பிலி நான் பாடல் காட்சியில் வரும் ஆட்களை(காய்களை) கேட்கவில்லை :icon_mrgreen:

பாடும் மொழியில் வெளிப்படும் தாவரக்காய்களை கேட்கிறேன் :D

தாவரக்காய்கள் மூன்று.

ஏலக்காய், ஜாதிக்காய், வெள்ளரிக்காய் மாத்திரமே.

மற்றைய காய்கள்

அத்திக்காய் - அந்தத் திக்காய்............. என்று பொருள்படுவது போல மற்றைய காய்களையும் வைத்து கவிஞர் வரிகளில் விளையாடியுள்ளார்.

நாலாவது காய்

எனது பார்வையில். :lol:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

தாவரக்காய்கள் மூன்று.

ஏலக்காய், ஜாதிக்காய், வெள்ளரிக்காய் மாத்திரமே.

மற்றைய காய்கள்

அத்திக்காய் - அந்தத் திக்காய்............. என்று பொருள்படுவது போல மற்றைய காய்களையும் வைத்து கவிஞர் வரிகளில் விளையாடியுள்ளார்.

நாலாவது காய்

எனது பார்வையில். :lol:

நாலாவது காயா???? இதில நாலாவது காய் எது தப்பிலி? :unsure:

இந்தப்பாட்டில் உள்ள காயில் ஒன்றா?

"கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயைத் தீய்த்தாள்

பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் - உருக்கம்உள்ள

அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள்

உப்புக் காண் சீச்சி உமி." :icon_mrgreen: :icon_mrgreen:

Edited by வல்வை சகாறா

Share this post

Link to post
Share on other sites

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

உள்ளமெல்லாம் மிளகாயோ

ஒவ்வொரு தேன் சுரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையெனைக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா

1.அத்தி+ காய்= அத்திக்காய் அதை அந்தத் திக்காய்

2.ஆலங்காய்= ஆல் +காய் ஆலங்காயைப் போன்ற வெண்ணிலவே!

3.இத்திக்காய்= இத்தி+ காய் இந்தத் திசையில் காயாதே(ஒளிதராதே)

4.கன்னிக்காய்= கன்னி பாவை ஆகவே பாவற்காய்(பாவை காய்)பாவற்காய் பாகற்காய் 2 ம் ஓன்று.

5. காதல் கொண்ட பாவைக்காய் மீண்டும் (பாகற்காய்)பாவைக்காய்

6.அங்கே காய் அந்தப் பக்கமாகக் காய்

7.அவரைக்காய் அவரை காய்  என்னுடைய காதலனுக்கு(அவரை என்னுடைய காதலைனை)  ஒளி கொடுத்து காதல் வேதனையைக் கொடு.

8.மங்கை எந்தன் கோவைக்காய் கோவை காய் கோவைக்காய் கோ என்றால் காவலன்,கடவுள்,அரசன்,பசு என்று பொருள்படும். இங்கே எனது காவலனாகிய காதலைனைக் காய் என்று பொருள்படுகிறது.

9.மாதுளங்காய்= மாது+ உளம் +காய் ஆனாலும் என் காதலி என்னை இந்த நேரத்தில் விரும்பா விட்டாலும்(அல்லது அவளுக்கு காதல் கனியவில்லை(இன்னும ; வரவில்லை என்றாலும் என்னுடைய உள்ளம் அவளை வெறுக்காது.(கனி காயாகாது.காய்கனியாகலாம் காதலிக்காதவர் காதலிக்கலாம் ஆனால் காதல் கொண்டவர் காதலை மறக்க முடியாது.)

10. இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய் (காய் என்ற சொல் வரும்படி சாதராண சொற்களை சொல் நயத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

11.உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ ஆள் சிறியவளாக இருந்தாலும் அவள் பருவமடையாத பெண்ணல்ல காதலிக்க தகுதியான பெண்னே!(உருவங்காய் என்று இந்தியாவில் ஏதேனும் காய்களைக் அழைக்கிறார்களா என்பது தெரியவில்லை.

12.ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய் ஏலங்காய் வாசனை போல் நீண்ட காலத்திற்கு எங்கள் காதல் உள்ளம் வாழக்காய்.(வாழைக்காய் சிறிது மருவி சொல் நயத்துடன் வாழக்காயாகி இருக்கிறது.

13.ஜாதிக்காய் சாதிக்காய்

14.சொன்னதெல்லாம் விளங்காயோ= விளா +காய் விளாங்காய்

தூதுவழங்காய்= தூதுவளை +காய் சிறிது மருவி தூது வழங்காய் ஆகி இருக்கிறது.அத்துடன் எனக்காக அவளிடம் (அவரிடம்)தூது செல்ல மாட்டாயா என்பதாகவும் அமைகிறது.

15.உள்ளமெலாம் மிளகாயோ= உள்ளம் +மிளகாய் +உள்ளமிளகாய் உன் உள்ளம் எனக்காக இரங்கமாட்டாதா?அல்லது மிளகாய் போல் மிக காரமான உள்ளத்தைக் கொண்டவளா நீ என்பதாகவும் கொள்ளலாம்.

  ஒவ்வொரு பேச்சுரைக்காயோ ஒரு முறை பேச மாட்டாயா? பேச்சு உரைக்காயோ பேச்சுரைக்காய்= பேச்சு+ உரைக்காய்

16.வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ நேரடியாக பயன் படுத்தப்பட்டுள்ளது.

17.கோதையெனைக் காயாதே கோது+ காய்= கோதைக்காய் (கோதை பெண் என்றும் பொருள்படும் )

(கோது) காயின் கோதைக் காயாதே வெளி அழகை விரும்பாதே எள்ளத்தை விரும்பு

18.கொற்றவரைக் காய் வெண்ணிலா கொற்றவரைக்காய் என்று ஒரு அவரை இனம் இருக்கிறது.

19.இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா இருவரை விட்டு தனியாகச் சென்று எங்களைத் துன்புறுதாதைதையை யிட்டு ஏங்காய் (வருந்துவாயாக,)

இது

வெள்ளரிக்காயா

விரும்புமவரைக்காயா உள்ளமிளகாயா ஒவ்வொரு பேச்சுரைக்காயா என்ற பழம்பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

இதில் பல இலக்கண மீறல்கள் இருந்தாலும் அவை பாடலின் பொருள்பற்றி தந்த வழுக்கள் வழுவமைதி பெற்று விடுகின்றது.

இது நான் எழுதிய பொழிப்புரையாதலால் இதில் பல பிழைகள் இருக்கலாம். தமிழறிஞர்கள் பொறுத்தருள்க.

Edited by புலவர்
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

காரென்று பேர்படைத்தாய் கசனத்துறும் போது

நீரென்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்தபின்

வாரொன்று மென்மயில் நேர்ஆய்ச்சியர் கைவந்த பின்

மோரென்று பேர்படைத்தாய்! முப்பேரும் ஏற்றாயே!

பொருள்

மோர்க்காரியிடம் மோர் வாங்கும் போது அது தண்ணியாக இருக்கிறது. அதனை நகைச்சுவவையாக சொல்ல வந்த கார்மேகம்:

நீர், வானத்திலிருந்தால் அதற்கு கார் என்று பெயர். தரைக்கு வந்தால் ‘நீர்’ என்று பெயர். தரைக்கு வந்தால் ‘நீர்’ என்று பெயர். ஆய்ச்சியர் என்று சொல்லக்கூடிய இடைச்சியரின் மோர் கூடைக்கு வந்தால் அதற்கு ‘மோர்’ என்று பெயர். எனவே, மோர் தண்ணீராக அதாவது கெட்டியாக இல்லாமல், தண்ணீரைக் கலந்து விற்பனை செய்வதால் அதை நகைச்சுவையாக சுட்டிக்காட்டுகிறார் காளமேகப்புலவர். இவ்வாறு காளமேகப் புலவரின் பலப்பாடல்கள், இரட்டை அர்த்தங்கள் நிறைந்த நகைச்சுவைப் பாடல்கள் உண்டு.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

உள்ளமெல்லாம் மிளகாயோ

ஒவ்வொரு தேன் சுரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையெனைக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா

1.அத்தி+ காய்= அத்திக்காய் அதை அந்தத் திக்காய்

2.ஆலங்காய்= ஆல் +காய் ஆலங்காயைப் போன்ற வெண்ணிலவே!

3.இத்திக்காய்= இத்தி+ காய் இந்தத் திசையில் காயாதே(ஒளிதராதே)

4.கன்னிக்காய்= கன்னி பாவை ஆகவே பாவற்காய்(பாவை காய்)பாவற்காய் பாகற்காய் 2 ம் ஓன்று.

5. காதல் கொண்ட பாவைக்காய் மீண்டும் (பாகற்காய்)பாவைக்காய்

6.அங்கே காய் அந்தப் பக்கமாகக் காய்

7.அவரைக்காய் அவரை காய் என்னுடைய காதலனுக்கு(அவரை என்னுடைய காதலைனை) ஒளி கொடுத்து காதல் வேதனையைக் கொடு.

8.மங்கை எந்தன் கோவைக்காய் கோவை காய் கோவைக்காய் கோ என்றால் காவலன்,கடவுள்,அரசன்,பசு என்று பொருள்படும். இங்கே எனது காவலனாகிய காதலைனைக் காய் என்று பொருள்படுகிறது.

9.மாதுளங்காய்= மாது+ உளம் +காய் ஆனாலும் என் காதலி என்னை இந்த நேரத்தில் விரும்பா விட்டாலும்(அல்லது அவளுக்கு காதல் கனியவில்லை(இன்னும ; வரவில்லை என்றாலும் என்னுடைய உள்ளம் அவளை வெறுக்காது.(கனி காயாகாது.காய்கனியாகலாம் காதலிக்காதவர் காதலிக்கலாம் ஆனால் காதல் கொண்டவர் காதலை மறக்க முடியாது.)

10. இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய் (காய் என்ற சொல் வரும்படி சாதராண சொற்களை சொல் நயத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

11.உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ ஆள் சிறியவளாக இருந்தாலும் அவள் பருவமடையாத பெண்ணல்ல காதலிக்க தகுதியான பெண்னே!(உருவங்காய் என்று இந்தியாவில் ஏதேனும் காய்களைக் அழைக்கிறார்களா என்பது தெரியவில்லை.

12.ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய் ஏலங்காய் வாசனை போல் நீண்ட காலத்திற்கு எங்கள் காதல் உள்ளம் வாழக்காய்.(வாழைக்காய் சிறிது மருவி சொல் நயத்துடன் வாழக்காயாகி இருக்கிறது.

13.ஜாதிக்காய் சாதிக்காய்

14.சொன்னதெல்லாம் விளங்காயோ= விளா +காய் விளாங்காய்

தூதுவழங்காய்= தூதுவளை +காய் சிறிது மருவி தூது வழங்காய் ஆகி இருக்கிறது.அத்துடன் எனக்காக அவளிடம் (அவரிடம்)தூது செல்ல மாட்டாயா என்பதாகவும் அமைகிறது.

15.உள்ளமெலாம் மிளகாயோ= உள்ளம் +மிளகாய் +உள்ளமிளகாய் உன் உள்ளம் எனக்காக இரங்கமாட்டாதா?அல்லது மிளகாய் போல் மிக காரமான உள்ளத்தைக் கொண்டவளா நீ என்பதாகவும் கொள்ளலாம்.

ஒவ்வொரு பேச்சுரைக்காயோ ஒரு முறை பேச மாட்டாயா? பேச்சு உரைக்காயோ பேச்சுரைக்காய்= பேச்சு+ உரைக்காய்

16.வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ நேரடியாக பயன் படுத்தப்பட்டுள்ளது.

17.கோதையெனைக் காயாதே கோது+ காய்= கோதைக்காய் (கோதை பெண் என்றும் பொருள்படும் )

(கோது) காயின் கோதைக் காயாதே வெளி அழகை விரும்பாதே எள்ளத்தை விரும்பு

18.கொற்றவரைக் காய் வெண்ணிலா கொற்றவரைக்காய் என்று ஒரு அவரை இனம் இருக்கிறது.

19.இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா இருவரை விட்டு தனியாகச் சென்று எங்களைத் துன்புறுதாதைதையை யிட்டு ஏங்காய் (வருந்துவாயாக,)

இது

வெள்ளரிக்காயா

விரும்புமவரைக்காயா உள்ளமிளகாயா ஒவ்வொரு பேச்சுரைக்காயா என்ற பழம்பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

இதில் பல இலக்கண மீறல்கள் இருந்தாலும் அவை பாடலின் பொருள்பற்றி தந்த வழுக்கள் வழுவமைதி பெற்று விடுகின்றது.

இது நான் எழுதிய பொழிப்புரையாதலால் இதில் பல பிழைகள் இருக்கலாம். தமிழறிஞர்கள் பொறுத்தருள்க.

நன்றி புலவர் உங்கள் பொழிப்புரை நன்றாக இருக்கிறது. தோண்டத் தோண்ட பொருள் சுரக்கும் அருமையான பாடல் இது. தமிழ் சினிமாவில் இப்பாடலைப் போல் இதுவரை எப்பாடலையும் எந்த கவிஞர்களும் இதுவரை எழுதவில்லை. இந்த இடத்தில் கவியரசு கண்ணதாசன் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

இந்தப்பாடல் பலருக்கு இன்னும் பல அர்த்தங்களை எடுத்தியம்பக்கூடிய அளவுக்கு பன்முகப் பொருள் கொண்டது. எனது சிற்றறிவுக்கு எட்டிய காய்களை இங்கு பதிவிடுகின்றேன். என் கவனத்திற்குத் தவறிய காய்களை நீங்கள் யாராவது அறிந்தால் இங்கு இணைத்துவிடுங்கள்

17 jhtuf;fha;fis rpy ,lq;fspy; xyp kUtpa epiyapy; Ngr;Rtof;Fj; njhdpapy; mikf;fg;gl;bUf;fpwJ ,g;ghly;

1. mj;jpf;fha;

2. Myq;fha;

3. ,j;jpf;fha;

4. fd;dpf;fha;

5. ghitf;fha; (ghfw;fha;)

6. mtiuf;fha;

7. Nfhitf;fha;

8. khJsq;fha;

9. Vyf;fha;

10. thof;fha; (thiof;fha;)

11. ahjpf;fha;

12. tpsq;fha; (tpshq;fha;)

13. JhJtoq;fha; (JhJtsq;fha;)

14. kpsfha;

15. Ruf;fha;

16. nts;supf;fha;

17. nfhw;wtiuf;fha; (nfhj;jtiuf;fha;)

fha; vd;gJ ngauhfTk; tpidahfTk; xNu rkaj;jpy; Njhd;WkhW mikag; ngw;wJjhd; ,e;jg;ghlypd; rpwg;G

ngauhfTk tpidahfTk; Njhd;whj epiyapy; Njhd;Wk; fha; vd;w gjk; Ntw;Wik cUghfTk; mzp nra;fpwJ

fha; vd;gJ ngau;r;nrhy;yhf tUk;NghJ cjhuzj;jpw;F

ntapy; fha;fpwJ vd;why; ntk;ik epiyiaf; Fwpf;Fk;

mijNa epyh fha;fpwJ vd;why; Fspu;ikiaf; Fwpf;Fk;

mJNt tpidahf khWk; NghJ

fbe;J nfhs;sy; my;yJ Nfhgq;nfhs;sy; vd;gjhf nghUs;gLk;

,e;jf; fha; vd;gJ ,lj;jpw;Nfw;g gd;Kfg; nghUs;glf;$ba xU jkpo; nrhy; xU fhyKk; ehq;fs; rpwpJ epd;W ,j;jifa thu;j;ijfisAk; mtw;wpd; gd;Kfg; nghUisAk; Mj;khu;j;jkhf ,urpg;gjpy;iy கல்விச்சாலைfspy; xj;j fUj;Js;s nrhw;fs; vd;w ngaupy; kdg;ghlk; gz;zp vOJtNjhL vq;fs; juTfs; Kw;Wg; ngw;WtpLk; Njly; மேற்nfhs;SksTf;F vq;fSf;F mtfhrNkh my;yJ Mu;tNkh ,Ug;gjpy;iy.

Edited by வல்வை சகாறா
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

நீங்கள் கேட்ட காய்களின் எண்ணிக்கைத் தொகை 29 சகாரா அக்கா.. சரியா இருக்கா என்று எண்ணிப் பாருங்கள்... :D:)

1. அத்திக்காய்

2. ஆலங்காய்

3. இத்திக்காய்

4. கன்னிக்காய்

5. ஆசைக்காய்

6. பாவைக்காய்

7. அங்கேகாய்

8. அவரைக்காய்

9. கோவைக்காய்

10. மாதுளங்காய்

11. என்னுளங்காய்

12. இரவுக்காய்

13. உறவுக்காய்

14. ஏழைக்காய்

15. நீயும்காய்

16. நிதமுங்காய்

17. இவளைக்காய்

18. உருவங்காய்

19. பருவங்காய்

20. ஏலக்காய்

21. வாழக்காய்

22. ஜாதிக்காய்

23. கனியக்காய்

24.விளங்காய்

25. தூதுவழங்காய்

26. மிளகாய்

27. சுரக்காய்

28. வெள்ளரிக்காய்

29. கொற்றவரங்காய்

Share this post

Link to post
Share on other sites

குட்டி என்னுடைய தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி தாவரக் காய்கள் என்று கேட்டிக்கவேண்டும்

தாவரக்காய்கள் 17

நீங்கள் வேற்றுமை உருபிணைந்த காய்களையெல்லாம் இணைத்திருக்கிறீர்கள் சரி இதில் எத்தனை காய்களில் "ஆய்" வேற்றுமை உருபு இணைந்திருக்கிறது சொல்லுங்கள்

மவனே என்னை மாட்டி விட்டா நானும் மாட்டி விடுவனெல்லோ :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் நான் அழுதுடுவேன்... :D^_^

இதில முதல் பாதியும் கடைசிப்பாதியும் நான் பாட்டைக் கேட்டு எழுதினது, நடுவில் உள்ளது இணையத்தில் தேடி எடுத்தது... :D:lol:

Share this post

Link to post
Share on other sites

சகாரா அக்கா, உங்களுக்கு முழுப் பாட்டின் பொருள் விளக்கம் வேணும் என்றால் சொல்லுங்கோ, இணைத்து விடுகிறேன்... :)

Share this post

Link to post
Share on other sites

சகாரா அக்கா, உங்களுக்கு முழுப் பாட்டின் பொருள் விளக்கம் வேணும் என்றால் சொல்லுங்கோ, இணைத்து விடுகிறேன்... :)

:icon_mrgreen:

எனக்குத் தெரியாதா நான் இதற்குப் பொருள் வேணும் என்று கேட்டால் கூகிளில் கொட்டிக் கிடக்கும் அத்தனையையும் இணைத்துவிடுவீர்களே.... பிறகு நான் கரிக்காய் பொரிப்பதில் அர்த்தம் இல்லையே... :lol: :lol: :lol:

Edited by வல்வை சகாறா

Share this post

Link to post
Share on other sites

:icon_mrgreen:

எனக்குத் தெரியாதா நான் இதற்குப் பொருள் வேணும் என்று கேட்டால் கூகிளில் கொட்டிக் கிடக்கும் அத்தனையையும் இணைத்துவிடுவீர்களே.... பிறகு நான் கரிக்காய் பொரிப்பதில் அர்த்தம் இல்லையே... :lol: :lol: :lol:

ஒரு இணைப்பில் மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது... :D^_^

Share this post

Link to post
Share on other sites

சரி உங்களைக்கவர்ந்த அந்த இணைப்பை இங்கு ஒட்டிவிடுங்கள் குட்டி :rolleyes:

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் எல்லோருக்கும்..

இந்தப்பகுதியில் கலகலப்பாக தமிழின் பொருளை...., புலவர்களின் கலகலப்பை... தமிழால் விளைவிக்கப்பட்ட கிண்டல் கேலிகளை இணைக்கலாம். எனக்கு அதிகம் தெரியாது இருப்பினும் தேடலின் அவா நிறையவே உள்ளது. அத்தேடலின் அவா கைகொடுக்கும் தருணங்களில் நான் இரசித்த அல்லது இரசிக்க எத்தனிக்கும் தமிழ் மொழியின் பொருள் நிறைந்த நயங்களை பதிவிடலாம் என்று ஒரு சின்ன அடியெடுத்து வைக்கின்றேன்... இது இவளுக்கானது என்று நீங்கள் எவரும் ஒதுக்கி விடாமலும் ஒதுங்கிப் போகாமல் கூட இணைந்து தமிழை நயந்து நடக்கலாம் வாருங்கள்.

“கரிக்காய் பொரித்தேன் கன்னிக்காய் நெய்து வட்டலாக்கினேன்

ரிக்காயைப் பச்சடியாகப் பண்ணினேன்

கொஞ்சம் இதன் பொருளைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.....

என்னடா ஆரம்பமே இப்படி....... :lol: :lol: :D

என்னுடன் சேர்ந்து நடக்க வந்த உங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் . நிட்சயம் எனக்குத் தெரிந்தவற்ரையும் இணைப்பேன் . தமிழால் இணைவோம் .

Share this post

Link to post
Share on other sites