Jump to content

தேசிய விடுதலைப் போராட்டமும் அதன் எதிரிகளும்!


Recommended Posts

தேசிய விடுதலைப் போராட்டமும் அதன் எதிரிகளும்!

இலங்கை சுதந்திரம் அடைந்த பிற்பாடு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பல வடிவங்களை எடுத்தது. பின்னர் அது ஆயுதமேந்தி போராடும் ஒரு நிர்பந்ததந்திற்கு தள்ளப்பட்டது. இந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். நான் அது பற்றி இங்கு அலசி ஆராய வரவில்லை. மாறாக இந்த தேசியப் போராட்டத்தை மழுங்கடிக்க காலம் காலமாக சிங்கள பேரின வாதிகள் எவ்வாறு தமது முனைப்புக்களை எடுந்தியம்பினர் என்பது நமக்கு தெரிந்த ஒரு வரலாறே. தென்னிலங்கையை பொறுத்தவரை அவர்களிடம் ஒரே ஒரு நிலைப்பாடு தான் அன்று முதல் இன்று வரை உள்ளது. அதாவது தமிழ் தேசிய விடுதலையை நசுக்க தமிழ் தேசியத்pறகுள் உள்ளவர்களை பாவிப்பது. தமிழ் மக்களின் வாரலாற்றில் ஒற்றுமை என்பது ஒரு பாதகமான சொல். தமிழ் தேசியத்தில் தோன்றிய எந்த ஒரு ஜனநாயக அமைப்பும் ஒற்றுமையாக இருந்ததாக வரலாறு இல்லை. ஒரு தேசிய இனத்தின் விடுதலையை விட தமது சொந்த நலன்களில் அக்கறை கொண்டவர்கள் பொரும்பான்மையாக இந்த அமைப்புகளில் இருந்தமையே இதற்கான முக்கிய காரணி. 1977 தேர்தலின் போது வடக்கு கிழக்கு மக்கள் தமது ஏகோபித்த அங்கீகாரத்தை தமிழ் தேசிய விடுதலைக்கு வழங்கியிருந்தனர். ஆனால் அன்று அந்த அங்கிகாரத்தை வென்ற தமிழ் தேசிய தலைவர்களே அந்த அங்கீகாரத்தை சிங்கள பேரினவாதிகளிடம் பேரம் பேசி விற்றனர். தமது சொந்த நலனில் அக்கறை கொண்ட தலைவர்களின் இந்த சதி தமிழ் தேசிய விடுதலைப் பேராட்டத்தை பின் தள்ளியதுடன் 60 உயிர்களை குடித்த யுத்தத்திற்கான முக்கிய காரணியாகவும் இருந்தது. மக்கள் தனியாக பிரிந்து செல்ல ஆணை வழங்கிய போதும் அதனை குப்பைக் கூடைக்குள் எறிந்த அந்த லைமை விட்ட தவறை யாருமே மன்னிக்க முடியது. ஆனால் இன்று கால் நு}ற்றாண்டு கழிந்த பின்னரும் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு பலமான நிலையில் இருந்தாலும் கூட அதற்கு எதிரான ஒரு பாரிய நிழல் யுத்தம் ஒன்றை நடாத்த தமிழ் தேசியத்தை சேர்ந்வர்களே முன்னெடுத்து நிற்பது தமிழ் மக்கள் மீதான ஒரு சாபமே.

80களில் வலுப்பெற்ற ஆயுதப் போராட்டம் நலிவடைய காரணமாக இருந்தது இயக்கங்களுக்குள் வந்த மோதல்கள். இந்த மோதல்கள் உருவாக முக்கிய காரணமாயிருந்தது நமது தேசிய விடுதலை மீது அக்கறையற்ற இந்தியாவும் அதன் உளவுத்துறையுமே. இந்திய உளவுத்துறையை பொறுத்தவரை தமிழ் தேசிய விடுதலைப் பேராட்டம் ஒரு பகடைக்காய். இலங்கை அரசை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் ஒரு பகடைக்காய். தமிழ் தேசிய விடுதலைக்குப் போராடிய இயக்கங்களுக்கு வேறு வேறாக பயிற்சி கொடுத்து ஆயுதங்களை வழங்கிய இந்தியா இந்த அமைப்புகளின் ஒற்றுமை விடயத்தில் மிகவும் கவனமாகவே இருந்தது. இந்தியா இராணுவ பயிற்சி அழித்த நான்கு இயக்கங்களும் தமக்குள் எப்போதும் மோதும் ஒரு முறுகல் நிலையை இருக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. இந்த சதி வலையில் மாட்டாது தப்பிய இரண்டு முக்கிய இயக்கங்கள். ஒன்று விடுதலைப் புலிகள் மற்றது ஈரோஸ். இந்த இரு இயக்தின் தலைவர்களும் இந்த விடயத்தில் தெளிவாகவே இருந்தனர். அது மட்டுமல்லாது விடுதலைப் புலிகளின் தலைவர் திரு மேதகு பிரபாகரன் அவர்களும் ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் உயர்திரு பாலகுமார் அவர்களும் இந்திரா நகரில் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கம். இவர்கள் சந்திப்பு இந்த இரு இயக்கங்களின் நட்புறவை வளர்த்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் இந்திய இராணுவத்துடன் மேத ஆரம்பித்ததும் மிகவும் பலவீனமான நிலையில் இருந்த தனது அமைப்பு புலிகளுடன் இணைத்து தேசிய விடுதலையை பலப்படுத்திய பெருமை உயர்திரு பாலகுமார் அவர்களை சாரும். பாலகுமார் அவர்கள் தன்னை முன்னிலைப்படுத்தும் ஒரு நபாராக இருக்கவில்லை. மிகவும் எளிமையான அந்த மனிதர் தேசிய விடுதலைக்காக இந்த இணைவு அவசியம் என்பதை உணர்ந்தார். ஆனால் மற்றைய இயக்கங்களின் தலைமைப் பீடித்தை எடுத்துக்கொண்டால் அவற்றின் தலைமைத்துவம் எப்படி இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சித்தாந்த ரீதியில் தாம் மிகவும் நம்பிக்கையானவர்கள் என்று மார்க்சிச புத்தகங்கை கையில் எடுத்த இயக்கங்கள்இ சித்தாந்த ரீதியிலேயே தமது தலைமைகளை உருவாக்கின. மத்திய குழு ஒன்றை அமைத்து தலைமை முடிவுகள் எடுக்கும் போது அது புூரண ஜனநாகயகமான ஒரு முடிவாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் மத்திய குழு மைத்த அனைத்து தலைவர்களும் தம்மை தலைவர்களாக தக்கவைக்க செய்த அத்தனை திருகுதாளங்களையும் நாம் அறிவோம். இரண்டு தலைவர்கள் தமது இருப்பை காப்பாற்ற சொந்த தோழர்களேயே மண்ணுக்கள் புதைத்தது வரலாறு. 50வருடகால தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வந்து போன தலைமைகள் அனைத்துமே தம்மை தக்க வைப்பதில் காட்டிய ஆர்வத்தை தேசிய விடுதலைப் போராட்டத்தில் காட்டவில்லை. ஆனால் கியுூபாவின் பிடல் கஸ்ரோ போல, வியட்நாமின் ஹோசிமின் போல கொள்கை பற்றை உறியாக கொண்ட ஒரே ஒரு தலைவன் நமக்கு அமைந்ததால் தான் இன்று தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு உன்னதமான நிலையில் இருக்கிறது. இவரை நாம் தேசிய தலைவர் என்று இனியும் அழைக்காது போனால் வரலர்றில் துரோகமிழைத்தவர்களாவார்கள். 77 தேர்தல் வெற்றியை தேசிய வெற்றியாக மாற்றாத தலைமை தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜெனிவாவரை எடுத்துச் சென்றிருக்காது. வடக்கில தமிழீழமே தாரக மந்திரம் என்று முழங்கிய தலைமைகள் தெற்கிற்கு போனதும் கொந்தாய் மாத்தையா என்ற நிலைமை. இவர்களா தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பாரகள்? ஜனநாகய தலைமைகளோ அல்லது சிந்ததாந்த தலைமைகளே தேசிய விடுதலைப் போராட்டத்தை தமது சொந்த இலாபங்களுக்கே பாவித்தனர். உமா மகேஸ்வரன் ஒரு பொலிட்பீரோ வைத்திருந்தார். கூடவே ஒரு மண் வெட்டியும் வைத்திருந்தார். மத்திய குழுவில் தான் எடுக்கும் முடிவை ஆதரிக்காதவர்கள் மண்ணுக்கள் போக தான் அந்த மண்வெட்டி. சித்தாந்த ரீதியாக தம்மை வழர்க்க முற்பட்ட இயக்கங்கள் தமக்குள் முரண்பட்டு இறுதியில் சிதைந்து போயின. இந்திய உளவுத் துறையின் துணையுடன் புலிகளை அழிக்க முயன்ற அமைப்புகள் அழிக்கப்பட்டன.. நமக்கு ஒரு நல்ல தலைமை அதாவது தேசியத் தலைவர் அவர்கள் இல்லாது போயிருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும். கற்பனை பண்ணி பாருங்கள். பாரிய எண்ணிக்கையான Nபுhராளிகளை ஆரம்பத்தில் கொண்டிருந்த இயக்கம் இன்று எங்கே? இவர்களை புலிகள் அழித்தாக இன்று நீலக் கண்ணீர் வடிப்பவர்களே தமது சொந்த தோழர்களை வெட்டி புதைத்தார்கள். புலிகளால் அழிக்கப்பட்டதாக கூறப்பட்ட ஒரு இயக்கம் புலிகளை அழிக்க திட்டம் தீட்டுகையில் தமக்குள் தாமே மோதி தம்மை நலிவடைந்து போயினர். இந்திய உளவுத்துறையின் அழுத்தம் காரணமாக நலிவடைந்த நிலையில் இருந்த போதும் புலிகளை அழிப்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். இந்த இயக்களின் உட்புசல்கள்ளே எவ்வளவு து}ரம் இவர்கள் தேசியம் மீது அக்றை கொண்டிருந்தார்கள் என்பதை நமக்கு தௌ;ள தெளிவாக தெரிய வைக்கும். விடுதலைப் புலிகளின் தலைமை அன்று முதல் இன்று வரை தேசிய விடுதலையை தவிர வேறு எதற்கும் முன்னுரிமை கொடுக்கவில்லை. இன்று பலாமான ஒரு கட்டமைப்பாக அது மாறியமைக்கான முன்னணி காரணம் அந்த அமைப்பின்; கொள்கைப் பற்றே.

ஆனால் பல உயிர் தியாகங்களின் உரத்தில் வலுப்பெற்றிருக்கம் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயகம், மனத உரிமை என்ற போர்வையில் சில சுயநல விருமபிகள் திசை திருப்ப முனைகிறாரக்ள. யார் இந்த விசமிகள். இவர்களின் வரலாறு என்ன? இவரகள் உண்மையிலேயே மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தை மதிப்பவர்களா? அண்மையில் சுவிசில் கைது செய்யப்பட்ட ராமராசன் என்பவர் மனத உரிமை வாதியாம். ஒரு மனித உரிமை வாதியை இரண்டு வாரத்திற்கு மேல் ஒரு ஜனநாயக நாட்டு சிறையில் வைத்திருப்பது ஏன்? தன் சொந்த தோழர்களை வெட்டிப் புதைத்த தலைமையின் கீழ் வளரந்த மண்வெட்டிதான் இந்த வீரையா ராமராசன். பம்பாயில் புளட் அமைப்பின் முக்கிய நபர். இந்த நபர் இன்று சிறையில் ஆனால் இவரை விட மோசமான வரலாறு கெண்டவர்கள் ஜனநாயகம் பேசுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இந்த தொடரில் இந்த நபர்களை பற்றி மட்டும் இல்லாது இவர்களின் பொய்யான பித்தலாட்டமான பிரச்சாரத்திற்கு ஆப்பு வைக்கும் கருத்துகளையும் இங்கு கொண்டுவரவேண்டிய கட்டாயம் உள்ளது. ஒரு பொய்யை 100 தடவைகள் ஆணித்தரமாக அடித்து சொன்னால் அதை உண்மை என்று நம்புபவர்கள் நம்மவர்கள்.

ரீபீசி வானெலி மற்றும் கொசு, புஸ்வானம் இணையத்தளங்கள் இன்று மேற்கொண்டு வரும் பிரச்சாரம் மக்களிட்ம் எடுபடப் போவதில்லை. அனால் இவர்கள் உதிரிகளாக இல்லாது மக்களை குழப்பும் விதத்தில் ஒரு பொய்யை வேறு வேறு செய்தியாக்கி வேறு Nவுறு ஊடகங்கள் வாயிலாக இவர்கள் செய்யும் போது மக்கள் குளம்பத்தான் செய்வார்கள். இந்த குளப்பத்தை இல்லாது செய்வதும் இந்த தொடரின் ஒரு நோக்கமாகும்.

நான் முதலில் கூறியது வரலாறு. அந்த வரலாற்று பின்னணியில் இத் தொடரை தொடர்கிறேன்..

Link to comment
Share on other sites

மீன் மகளின் கேள்விக்கு ஒரே ஒரு கேள்வி? இந்த கேள்வி உண்டியலானுக்கும் பொருந்தும்.

தேசிய விடுதலைப் போரட்டத்தின் தனி நபர்களின் நலன்கள் என்பதை விட இலட்சியமே எப்போதும் முன் நிற்க வேண்டும். இந்த இலட்சித்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் தேசியப் போராட்ட தலைமைக்கு விடை சொல்ல கடமைப்பட்டவர்கள். தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைபாரகள் சத்தியப்பிரமாணம் எடுத்தே இணைகிறார்கள். தேசியத்pற்கு விசுவாசமாக இருப்போம் என்ற உறுதிமெழியை அவர்கள் எடுப்பார்கள். மீன்மகள் என்ற பெயரில் கருணாவே தனது எரிச்சலை அந்த கடிதத்தில் கொட்டியிருந்தார். தான் போகவேண்டிய இடத்தில் இன்னுமெருவர் இருந்தால் யாருக்கும் பொறமை வரும் தானே. அது தான் கருணாவிற்கும் வந்திருக்கிறது. ஆனால் பாவம் தன் எரிச்சலை கொட்டவந்தவர் தானே அதில் எரிந்து போனது தான் வேடிக்கை. மாத்தையா யார் என்று நமக்க தெரியும். இந்தய அரசுடன் நமது தலைவர கெலை செய்ய சதியும் நமக்கு தெரியும். மாத்தையா அன்று வென்றிருந்தால் நமது தேசியம் இன்று குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும். மாத்தையா இவ்வாறு துரோகம் இழைக்கையில் அவருடன் இருந்த அனைவரும் விசாரிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. தேசியத்தின் மீது பற்று வைத்திருந்த அனைவரும் தாம் மாத்தையாவுடன் இருந்தாலும் தேசிய விடுதலைக்கோ அல்லது அதன் தலைமைக்கோ ஒரு போதும் துரோகம் இளைக்கவில்லை என நிருபித்தார்கள். அவர்கள் அனைவரும் மீண்டும் இயக்தில் உள்வாங்கப்பட்டார்கள். எந்த ஒரு அமைப்பில் உள்ளவர்களும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகையில் தாம் குற்றம் அற்றவர் என்பதை நீருபிக்க சந்தர்பம் கொடுக்கப்படும். ஆனால் குற்றம் சுமத்தப்பட்டதும் ஓடி ஓளிபவர்களை எப்படி அழைப்பது?

கருணா தான் ஜெனிவாவிற்கு போக முடியவில்லை என்ற எரிச்சலில் எழுதுகையில் ஒரு விசியத்தை தானே உளறி விட்டார். தான் விசுவாசம் இல்லாது ஒரு நபர் அதனால் தான் விசாரணரக்கு போக வில்லை என்று.

அம்மான் விசுவாசத்துடன் விசாரணகை;கு போய் தேசியப்பற்றை நீருபித்து நீங்களும் குற்றம் அற்றவர் என்று நிருபித்திருந்தால் இப்ப ஜெனிவாவுக்கும் போய் வந்திருக்கலாம். சரி சரி இனி என்ன செய்யறது. அவங்கள் எப்ப பறிப்பாங்கள் எண்ட பயத்தோடை பங்கறுக்கை படுங்கே! ஏலாட்டி எல்லாத்தையும் விட்டு போட்டு லண்டனுக்கு வரலாம். உண்டியலான் துணை உங்களுக்கும் உண்டு. ஏன் என்டால் அவருக்கும் விசாரணைதானே பிரச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித்னுக்கு ஒன்றில் சுய ஒழுக்கம் இருக்கவேண்டும் அல்லது சூழ்நிலை ஒழுக்கம் இருக்கவேண்டும் இது இரண்டும் இல்லாதவன் தான் தேசிய போராட்டத்தின் எதிரிகள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தேசிய விடுதலைப் போராட்டம் இன்று புதிய வடிவம் எடுத்து 5 வருடங்களை நெருங்குகிறது! சர்வதேச அழுத்தங்களை அடுத்து தனி நாட்டு கோரிக்கையை ஒரு புறம் பக்குவமாக வைத்து விட்டு சிறீலங்கா என்ற தேசத்துள் தமிழ் பேசும் மக்களின் நலன்களை காக்க வல்ல ஒரு அரசியலமைப்பை பெறும் நோக்கில் புதிய அரசியல் போராட்டம் ஒன்றை விடுதலைப் புலிகள் முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தில் புலிகள் அரசியல் ரீதியாக குவித்து வரும் வெற்றியை மழுங்கடிக்கும் நோக்கில் சிறீ லங்கா அரசம் அதற்கு சார்பானவர்களும் ஒரு பாரிய பிரச்சார யத்தத்தை நடாத்தி வருகின்றனர். இந்த யுத்தத்திற்கு துரதிஸ்டவசமாக தமிழ் தேசியத்தை சேரந்தவர்களே துணை போவது தமிழ் மக்களின் தலைவிதியாகிவிட்டது. காலகாலமாக ஒற்றுமையாக வேலை செய்யத் தெரியாத, விட்டுக் கொடுக்கும்; மனப்பாங்கற்ற, இரும்பு மனதுடன் தம் சுய நலத்தை மட்டும் முன்வைத்து செயற்படும் நபர்கள் தமிழ் தேசிய இனத்தில் பிறந்து வருவது தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தம். எட்டப்பன், காக்கை வன்னியன் போன்று இன்றும் பலர் நம் மத்தியில் நமது விடுதலையை நசுக்க நலிந்து போனது தான் நமது விதி. இதில் வேதனை என்னவென்றால் இந்த மனிதர்கள் மனித ஜனநாயகம் என்ற முகமூடியை போட்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை. இந்த ஜனநாயக வாதிகளின் புலம்பலில் கண்ணுக்கு புலப்படாத பல மனிதங்கள் அடங்கும். தமிழீழத்தில் பட்டினியால் வாடும் குழந்தைகள், வேலை செய்ய தம் செந்த நில புலன்களை இழந்து அகதிகளாய் நிற்கும் மக்கள். இயற்கை அனர்த்தத்தால் துவண்டுபோயுள்ள மக்கள், இப்படி நான் அடுக்கி கொண்டே போகுமளவிற்கு அனர்த்தங்கள், அனியாயங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கையில், ஒரு சில ஒட்டுண்ணிகள் தங்கள் எசமான விசுவாசத்தை காட்ட இல்லாத பிரச்சனைகளை பூதாகாரமாகக் முயன்று கொண்டிருக்கிறார்கள். இவர்களை நாம் எப்படி அழைப்பது?

ஆனால் இந்த நபர்களை பற்றி நான் கூட்டி கழித்து பார்த்ததில் ஒரு உண்மையை மட்டும் கண்டு பிடித்துள்ளேன். ஒரு காலத்தில் தமிழ் தேசிய விடுதலையை மும்மரமாக குழு தோண்டி புதைக்க வெளிக்கிட்ட ஒரு இயக்கத்தின் அடிவருடிகளே இன்று தமிழ் தேசிய எழுச்சியை அடக்கவும் முனைப்பாக உள்ளனர். கொசு இணையத்தளத்தை பாருங்கள். என்றோ நடந்த சுந்தரம் கொலையை இன்றும் நினைவு கூருகிறார்கள். வேடிக்கையாக இல்லை. சுந்தரம் ஒரு துரோகியா இல்லையா என்பதை வரலாறு நன்கே காட்டி விட்டு சென்ற பின்னரும் அவரின் கொலைக்கு அனுதாபம் தெரிவிப்பதை என்னவென்பது. உமாமகேஸ்வரனும் அன்று சுந்தரம் கொல்ப்பட்டது போல் கொல்லப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான நம் இளைஞர்கள் புதைகுழிக்குள் சொல்லாது காப்பாற்ற பட்டிருக்கலாம் அல்லவா. தம் சொந்த தோழர்களையே குழி தோண்டி புதைத்ததுடன் நம் சகோதரிகளை பம்பாயில் விபச்சார விடுதிகளில் விற்ற உண்மைகளை ஏன் இந்த கொசு தளம் எழுத மறுக்கிறது. புளட் என்ற இயக்கத்திலிருந்து பிரிந்து அந்த இயக்கத்தின் கொடூரமான உண்மைகளை வெளிக் கொணர்ந்த ஒரு ஜனநாயகவாதியான சந்ததியாரையும் கொலை செய்து விட்டு இப்போ சுந்தரத்திற்கு அனுதாபம் தெரிவிக்கிறார்கள். அப்படியானால் ஏன் சந்ததியாருக்கு ஒரு பக்கம் ஒதுக்கவில்லை? உண்மைகள் சுடும் என்பதாலா? புதியதோர் உலகம் செய்வோம் என்று புறப்பட்ட தோழர்கள் இன்று எங்கே? அர்ச்சுனன் என்று பேர் வைப்பதால் ஒன்றும் பெரிய பேர்வீரனாக முடியது. இந்த கோழை அர்சசுனனுக்கு வரலாற்றை நன்கே திரிக்க தெரியும்.

புதியதோர் உலகம் செய்ய புறப்பட்ட புளட் இயக்கம் செய்த ஒரே ஒரு நல்ல விசியம் மக்களிடம் சோத்து பாசல் வாங்கி சாப்பிட்டது மட்டுமே. ஆயிரக்கணக்கில் போராளிகளை உள் வாங்கி கோடிக்கணக்கான நிதியை சேர்த்து தலைவரின் வங்கி கணக்குகளில் போட்டு விட்டு இந்த புளட் கும்பல் தேசிய விடுதலைக்கு என்ன புடுங்கினார்கள்? மாரக்சிசத்தையும் தேசியத்தையும் போட்டு குழப்பி எப்படி போராடுது என்டு மக்களை குழப்பியது தான் இவர்கள் செய்த அரசியல். பொங்கலுக்கு புரட்சி, வருசத்துக்கு புரட்சி என்டு போராளிகளை ஏமாற்றி, பிறகு தெற்குடன் சேரந்து ஐக்கிய புரட்சி எண்டு போட்டு பிறகு அதுகும் சரி வராமல் போக அகில உலகப் புரட்சி என்றார்கள். இடையிலை கேள்வி கேட்ட போராளிகளை உயிருடன் புதைத்து விட்டு இயக்கத்தில் இணைந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததே இந்த உமா கும்பல் செய்த ஒரே ஒரு புரட்சி! ஆனால் இவர்களின் வரலாற்றை ஏனே அர்சசுனன் மறந்தே போனார். எந்த ஒரு இராணுவ முகமையும் தாக்காத இயக்கம் என்ற பெருமை புளட்டுக்கு மட்டுமே! ஒரு பத்துபேரை மட்டும் வைத்திருந்த டெனா இயக்கமே ஆமிக்கு குண்டு வீசியபோதும் ஆயிரக்கணக்கான அங்கதர்தவர்களை வைத்திருந்த புளட் இயக்கம் இராணுவத்pனர் மீது குறைந்த பட்சம் ஏறெடுத்து கூட பார்க்கவில்லை. இராணுவ தாக்குதல் செய்யாமல் எப்படி தளபதியாகலாம். ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது..

தோழனே துப்பாக்கியை எடு எதிரியை சுடு, எதிரி இல்லலாவிட்டால் இருக்கவே இருக்கிறான் உன் சொந்த தோழன்.. இது மானிக் தாசனுக்கு நல்லாக பிடித்த ஒரு கவிதை. அதனால் தான் கொசு அர்சுனனுக்கும் மாணிக்கதாசனை நநல்லாக பிடிக்கும்போலை. வரிக்க வரி சிறந்த தளபதி மாணிக்கதாசனம். அதானால் தானோ என்னவே சொந்த தோழர்களை கொன்றொளித்த மாணிக்கதாசன் இவரின் தளபதியாம்.

புலிகளை மட்டுமே அழிக்க உமாவால் உருவாக்கப்பட்ட அமைப்புதான இந்த புளட் அமைப்பு! விடுதலைப் புலிகளின் தலைவரின் தீரக்க தரிசனத்தை பாருங்கள். இந்த உமாமகேஸ்வனை விட்டு வைத்தால் புலிகள் இயக்கமே அழிந்து விடும் என்ற அந்த தீர்க்க தரிசனேம இன்றைய தேசிய விடுதலைப் போராட்த்தில் விடுதலைப் புலிகளின் வெற்றி! புலிகள் இயகத்தலைமையில் உமாமகேஸ்வரன் நயவஞ்சகமாக வந்த போதும் அதனை தலைமைத்துவ முடிவு என ஆதரித்த தேசியத் தலைவர் உமாவின் போக்கில் ஏற்றபட்ட மாற்றங்களை கண்டு உமாவை புலிகளில் இருந்து கலைத்த போது இரட்டை வேடம் போட்டவர் தான் அர்ச்சுனன் அழுது வடிக்கும் சுந்தரம். மறைமுக கொரில்லா இயக்கமாயிருந்த விடுதலைப் புலிகள் அன்று மேற்கொண்ட நடவடிக்கை சரியானது என்பதை காலம் நமக்கு பதிலாக தந்துள்ளது.

புளட் இயக்கத்தில் ஆரம்பத்தில் உமாமகேஸ்வரனுக்கு விசுவாசியாக இருந்தவர்களே இன்று புலியெதிர்பு போராட்டத்தை முன்நின்று நடாத்தும் விண்ணர்கள். தற்போது சுவிஸ் நாட்டில் சிறையிலிருப்பவர் கூட உமாவின் நெருங்கிய சகா. உமாவிற்காக இவர் செய்த கொலைகள் ஏராளம்.. இயக்க நிதியில் சிங்கபூரில் நகைககை கூட வைதிருந்தவர். இவர் இன்று சிறையில் தற்போது இவரின் புளட் நண்பர்களே புலியெதிர்ப்பு வானொலியை நடாத்;தி வருகிறார்கள். கொசு இணையத்தளம் கூட கொலைகார உமாவின் சகா ஒருவராலேயே நடாத்தப்பட்டு வருகிறது! ஜனநாயகம் பேசும் கொலைகாரக் கும்பல் தமிழ் மக்களிற்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது! இவர்களின் வரலாறு புதியதோர் உலகம் என்ற புத்தகத்தில் வரலாறாக பதியப்பட்டுள்ளது.

இன்னும் வரும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது Bond

உப்படியான செய்திகள் மற்றவர்களுக்கு தெரியாதபடியால் தான் இப்பவும் சில பேர் அவர்களின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிகின்றனர். தொடர்ந்து எழுதுங்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி பொன்ட் எழுது ராசா ,என்னத்தை எழுதினாலும் இதுகள் திருந்ததாதுகள்

Link to comment
Share on other sites

எனது நோக்கம் என்ன?

எப்படியாவது தமிழ்ழரை அழிப்பது

எனது மகளே இல்லை மகனோ ஆபிரிகன் பெடியல் கூட என்ன செய்தாலும் பறவாய் இல்லை எனது நோக்கம் புலிகளை அழிப்பது அது எனது கடமை :P

எனது பிள்ளைகள் புலி ஆதரவளர்களாக இருப்பதை விட விபச்சரிகளாய் இருப்பது மேல் :P :P

Link to comment
Share on other sites

கிறிமினல் முஸ்தபாவின்றை வானொலியிலை ராத்திரி ஒருதர் புலம்பினார். அவற்றை பெயர் வந்து நிமோனியா காய்ச்சல்! காரணம் அப்படித்தான் வந்து கத்துவார். இரவு நடந்த உரையாடலிலை ஒரு நேயார் பாவம் கொஞ்சம் புளிகளுக்கு ஆதரவாய் கதைச்சு போட்டார். அவர் கதைத்தது இவ்வளவுதான் மனித உரிமை பற்றி கதைக்கும் நீங்கள் அமரிக்கா ஈராக்கில் செய்யும் மனித உரைமை பற்றி கதைக்கலாம் தானே!!! வந்ததே கோவம் வானொலி அறிவிப்பாளரகள் முதல் இவையின்றை ஆதரவாளர் வரை வந்து விளாசு விளாசு என்டு விளாசிக்கினம். இந்த நிமோ னியாகாரார் வந்தார். தாங்கள் தானம் இந்த வானொலிக்கு காசு குடுக்கிறவை எனவே தாங்கள் என்னவும் கதைக்கலாமாம், மற்றவை மூச்சுக் கூட காட்ட கூடாதாம். உ

இந்த நிமோ னியாவும் முந்தி ஒரு சோத்துப்பாசல் கும்பல் தான். ஆனால் ஒண்டை மட்டும் நான் நினைச்சு உண்மையிலை ஆறுதல் பட்டன். உவங்களிட்டை ரேடியோ ஒண்டை வைச்சே இவ்வளவு ஆட்டம் காட்டிறாஙக்ள என்டால் இவங்கடை கையிலை துவக்கு மட்டும் இருக்க வேணும். நாங்கள் எல்லாம் துலைஞ்சம்!

ஜனநாயகம் எண்டு மூச்சுக்கு மூன்னு}று தரம் சொல்லுறவை தங்கடை கருத்தை எதிர்த்து யாரும் ஒண்டு சொன்னால் அவைக்கு வாற கோவம்! நிமோனிய காச்சலை விட மோசமா எல்லே கோவம் வருகுது! உதுக்கு பேர் ஜனநாயகமே? நல்ல வேளை போராட்டை முன்னெடுத்தச்செல்லும் வங்கு உங்களுக்கு கிடைக்காதது. கிடைச்சிருந்தா தமிழ் இனமே அழிஞ்சுபோயிருக்கும்.

முதலிலை உங்கடை முதுகிலை இருக்கிற ஊத்தையை நல்லா உரஞ்ச கழுவுங்கோ! ஆத்திரக்காறனுக்கு புத்தி மட்டு ஆனால் உங்கள் எல்லாருக்கும் சுத்தமா ஒண்டுமே இல்லை என்டதை நேத்து ராதட்திரியோடை நல்லா அறிய முடிஞ்சது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.