புங்கையூரன்

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்........

Recommended Posts

crying_buddha.jpg?m=1330419081

கலிகாலம் பிறக்கக்,

காத்திருக்கும் கபோதிகள்!

கண்ணீர்க் குமுறலுடன் ,

கண்ணில் விரிந்தது அவலம்!

காற்றையும் நஞ்சாக்கிய,

கனரக ஆயுதங்களின் குமுறல்!

கார்வண்ணன் தேரோட்டாத,

குருசேத்திரப் போர்க்களம்!

கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,

குருதியில் குளித்தன சருகுகள்!

கூட்டாக நடத்திய கொலைக்களம்..

கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்!

கொஞ்சிக் குலாவுகின்றன,

காந்தீயக் கோழைகள் !

கலிங்கத்து மன்னனின்,

கால் பட்ட தூசியும்,

காந்தீய தேசத்தின்.,,

கதை கேட்டு விலகியோடும்!

கலிங்கத்துப் பரணியில்,

கூழுண்ட பேய்களும்,

கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்!

போதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,

பாவத்தின் சின்னமாகும்!

பூவேந்தி நீ செல்லும்,

புத்தனின் தூபிகள்,

போர்குற்றம் ஏந்தி நிற்கும்!

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில்.

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

  • Like 8

Share this post


Link to post
Share on other sites

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில். (உணர்வில் )

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

உணர்ச்சிக்கு விவேகம்மட்டு . ஆனால் உணர்வுக்கு அதன் செறிவு கூட . ஆக , அந்த இடத்தில் உணர்வே தேவை என்பது எனது தாழ்மையான பிரேரணை .காலத்திற்கு ஏற்ற கவியை வடித்த புங்கைக்குப் பாராட்டுக்கள் :):):) +1 .

Share this post


Link to post
Share on other sites

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில்.

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

அந்த நம்பிக்கையும் உறுதியும் தானே எம்மினத்தை விடிவுப் பாதையில் முன்னேற்றிச்செல்ல அவசியமானவை. நல்லதொரு கவிதைக்குப் பாராட்டுகள், புங்கையூரன் :)

Share this post


Link to post
Share on other sites
shanthy    1,154

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில்.

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

கண்முன் விரிந்து

கனவுவெளியெங்கும்

விதைந்து கிடக்கிற

எங்கள் மீதான வன்மங்கள்

ஒருநாள்

ஓர்மமாய் எழும்.

கவிதைக்கு நன்றிகள் புங்கையூரான்

Share this post


Link to post
Share on other sites

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில். (உணர்வில் )

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

உணர்ச்சிக்கு விவேகம்மட்டு . ஆனால் உணர்வுக்கு அதன் செறிவு கூட . ஆக , அந்த இடத்தில் உணர்வே தேவை என்பது எனது தாழ்மையான பிரேரணை .காலத்திற்கு ஏற்ற கவியை வடித்த புங்கைக்குப் பாராட்டுக்கள் :) :) :) +1 .

கருத்துக்கு நன்றிகள், கோமகன்!

தாழ்மைக்கு என்ன தேவை, இப்போது?

உணர்வு பற்றிய உங்கள் கருத்து, உண்மையானதே!

சில வேளைகளில், கணணி ஒன்று, கவிதை எழுதியமாதிரிப் போய்விடாமலிருக்க அவ்வாறு எழுதினேன்!

இனி எழுதும்போது, கவனத்தில் கொள்கிறேன்!

அந்த நம்பிக்கையும் உறுதியும் தானே எம்மினத்தை விடிவுப் பாதையில் முன்னேற்றிச்செல்ல அவசியமானவை. நல்லதொரு கவிதைக்குப் பாராட்டுகள், புங்கையூரன் :)

நன்றிகள்,மல்லிகை வாசம்!

ஊர் கூடித் தேரிழுப்பதில், இன்னும் நம்பிக்கையுள்ளவன் நான்!

விடிகாலை வானம், எவ்வளவு அழகானது?

கண்முன் விரிந்து

கனவுவெளியெங்கும்

விதைந்து கிடக்கிற

எங்கள் மீதான வன்மங்கள்

ஒருநாள்

ஓர்மமாய் எழும்.

கவிதைக்கு நன்றிகள் புங்கையூரான்

கருத்துக்கு நன்றிகள், சாந்தி!

'கொலைக் களங்கள்' ஒளிநாடாவைப் பார்த்துக்கொண்டிருந்தேன்!

சிந்திய கண்ணீர், காய முன்பு எழுதி முடிக்க நினைத்தேன்!

இப்போது பார்க்கும் போது, இன்னும் மெருகூட்டியிருக்கலாம் என்று தோன்றுகின்றது!

Share this post


Link to post
Share on other sites

கலிகாலம் பிறக்கக்,

காத்திருக்கும் கபோதிகள்!

கண்ணீர்க் குமுறலுடன் ,

கண்ணில் விரிந்தது அவலம்!

காற்றையும் நஞ்சாக்கிய,

கனரக ஆயுதங்களின் குமுறல்!

கார்வண்ணன் தேரோட்டாத,

குருசேத்திரப் போர்க்களம்!

கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,

குருதியில் குளித்தன சருகுகள்!

கூட்டாக நடத்திய கொலைக்களம்..

கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்!

கொஞ்சிக் குலாவுகின்றன,

காந்தீயக் கோழைகள் !

நம்மினத்திற்கு நேர்ந்த கொடுமைகள் மனதில் அறைகின்றன. அதை ஒளிபரப்பில் பார்த்தபோது கண்ணீர்தான் பார்வையை மறைத்தன.. மனதில் சூனியம் மட்டும் தான் மிச்சம். அதையும் மீறி கிளர்ந்து அதை கவியாக வடித்த தங்கள் உணர்வுக்கு எனது மிகப் பெரிய பாராட்டுக்கள் புங்கையூரான்.....

Share this post


Link to post
Share on other sites

கலிகாலம் பிறக்கக்,

காத்திருக்கும் கபோதிகள்!

கண்ணீர்க் குமுறலுடன் ,

கண்ணில் விரிந்தது அவலம்!

காற்றையும் நஞ்சாக்கிய,

கனரக ஆயுதங்களின் குமுறல்!

கார்வண்ணன் தேரோட்டாத,

குருசேத்திரப் போர்க்களம்!

கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,

குருதியில் குளித்தன சருகுகள்!

கூட்டாக நடத்திய கொலைக்களம்..

கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்!

கொஞ்சிக் குலாவுகின்றன,

காந்தீயக் கோழைகள் !

நம்மினத்திற்கு நேர்ந்த கொடுமைகள் மனதில் அறைகின்றன. அதை ஒளிபரப்பில் பார்த்தபோது கண்ணீர்தான் பார்வையை மறைத்தன.. மனதில் சூனியம் மட்டும் தான் மிச்சம். அதையும் மீறி கிளர்ந்து அதை கவியாக வடித்த தங்கள் உணர்வுக்கு எனது மிகப் பெரிய பாராட்டுக்கள் புங்கையூரான்.....

உலகத்தின் இயக்கம், ஒரே திசையில் என்றுமே பயணித்ததில்லை!

சுழற்சி முறையிலேயே உலகம் இயங்குகின்றது!

எங்கள் காலமும் விரைவில் வரும் என நம்புவோம்!

அதை விரைவாகக் கொண்டுவர எம்மால் முடிந்ததைச் செய்வோம்!

தங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றிகள், கல்கி!

Share this post


Link to post
Share on other sites
ரதி    1,951

கவிதைக்கு நன்றி புங்கையூரான் வேறு என்னத்தை சொல்ல?

Share this post


Link to post
Share on other sites

crying_buddha.jpg?m=1330419081

கலிங்கத்து மன்னனின்,

கால் பட்ட தூசியும்,

காந்தீய தேசத்தின்.,,

கதை கேட்டு விலகியோடும்!

கலிங்கத்துப் பரணியில்,

கூழுண்ட பேய்களும்,

கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்!

போதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,

பாவத்தின் சின்னமாகும்!

பூவேந்தி நீ செல்லும்,

புத்தனின் தூபிகள்,

போர்குற்றம் ஏந்தி நிற்கும்!

அருமையான வரிகள் ரோமியோ

Share this post


Link to post
Share on other sites
putthan    1,480

நல்ல கவிதை ஒரு பச்சை....

புத்தனின் தூபிகள்,

போர்குற்றம் ஏந்தி நிற்கும்

கள உறவின் பெயர் பாவித்தமையை வன்மையாக கண்டிக்கிறேன்...நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.....சும்மா கிகி.....

Share this post


Link to post
Share on other sites

கவிதைக்கு நன்றி புங்கையூரான் வேறு என்னத்தை சொல்ல?

கருத்துக்கு நன்றிகள், ரதி!

அருமையான வரிகள் ரோமியோ

நன்றிகள், வல்வை!

கீழ்வானம் வெளிக்கும் போது,

காரிருள் கடை கட்டும்! :D

நல்ல கவிதை ஒரு பச்சை....

கள உறவின் பெயர் பாவித்தமையை வன்மையாக கண்டிக்கிறேன்...நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.....சும்மா கிகி.....

போர்குற்றம் ஏந்துகின்ற தூபிகளின் கீழ் அமர்ந்திருக்கும் புத்தர் சிலைகளின் ஆன்மா, எப்போதோ உயிர் விட்டிருக்கும்!

சிங்களத்தின் புத்த கோவில்களும், தாஜ் மகால் கல்லறையும், எனது பார்வையில் ஒன்றே!

கருத்துக்கு நன்றிகள், புத்தன்!

Share this post


Link to post
Share on other sites

crying_buddha.jpg?m=1330419081

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

//கண்ணில் நெருப்பெடுத்து-மதுரையைக்

கண்ணகி எரித்தகதை

இன்னும் சரித்திரத்தில்-படிக்க

இலக்கியப் புத்தகத்தில்

எண்ணுக் கணக்கற்று-கண்ணகிகள்

எங்கள் தேசத்தில்

மண்ணுக்கு இரையானார்-மதுரைகள்

இன்னும் எரியவில்லை

வருசம் விழாஎடுத்து-நேர்த்திக்கு

வளர்த்த கடாவெட்டி

புருசனுக்காய் நோன்பிருந்த-பெண்கள்

பூவிழந்து போயினரே

கொழுத்த அரக்கர்கள்-எங்களை

கொன்று புதைக்கையிலே

பழுத்த தேவர்கள்-ஞானப்

பால் குடிக்கப்போயினரோ

கற்பூரச் சட்டிகளை-கைகளில்

கடவுளர்க்காய் ஏந்தியோர்கள்

கற்பழித்துக் கொல்லப்பட- சாமிகள்

கண்மூடிச் சயனத்திலோ //

எப்பவோ எழுதிய எனது கவிதை ஒன்றில் இருந்து சிலவரிகள் புங்கை அண்ணா...உங்கள் கவிதை இதை நினைவூட்டியது..நன்றி புங்கை அண்ணா அருமையான கவிக்கு...

Share this post


Link to post
Share on other sites
நிழலி    3,605

கலிங்கத்து மன்னனின்,

கால் பட்ட தூசியும்,

காந்தீய தேசத்தின்.,,

கதை கேட்டு விலகியோடும்!

கலிங்கத்துப் பரணியில்,

கூழுண்ட பேய்களும்,

கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்!

வலிமையான வரிகள்

நன்றி புங்கை

Share this post


Link to post
Share on other sites
nunavilan    1,952

கவிதைக்கு நன்றி புங்கையூரான்.எமக்காக வரும் சந்தர்ப்பங்களை நழுவ விடாமல் கொலைக்கூட்டத்தையும்,கொலைக்கு அனுசரணையாக இருந்தவரையும் தண்டிக்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites
nochchi    345

போதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,

பாவத்தின் சின்னமாகும்!

பூவேந்தி நீ செல்லும்,

புத்தனின் தூபிகள்,

போர்குற்றம் ஏந்தி நிற்கும்!

புங்கையூரானே படைப்புக்குப் பாராட்டுகள். வளர்க உங்கள் பணி.

வலிமை நிறை வரிகள்!

இது சிங்கள தேசத்தின் நிரந்தரக் குறியீடாகவே இருக்கப் போகிறது. ஆனால் இனவாத உருவேறிக் கருக்கொண்டு பிறக்கும் புதிய குருத்துகள் கூட நவீன உலகின் நடைமுறைகளை ஏற்குமா? மன்னிப்புக்கோருமா? என்பது விடைகாண முடியா வினாவாகும். ஆனால் எமக்கானதை நாமே அடைய வேண்டும். 'கம்மாலையின் இரும்பாவோம் காலத்தை எமதாக்குவோம்'

Share this post


Link to post
Share on other sites
mathuraj    0

sorry i have not Tamil font

 

Very thank for you.....

This is a our energy...

again thanks

Share this post


Link to post
Share on other sites

புலவர் புங்கையூரானுக்கு நன்றி.

அருமையான கவிதை.

Share this post


Link to post
Share on other sites

அருமையான கவிதை புங்கை.

Share this post


Link to post
Share on other sites