Jump to content

Recommended Posts

காற்றே நலமா?

என்னை தாங்கி நின்ற

தாய் நிலமே நலமா?

கடலே நலமா?

அலையே நலமா?

கரை தூங்கும்-கட்டுமரமே

நீ- சுகமா?

மரத்தடி பிள்ளையாரே நலமா?

எங்கள் மனங்களில் வாழும்

மறவர் குலமே

நீங்களும் நலமா?

ஒற்றை பனை மரமே - நலமா?

உயிர்வாழ பால் தந்த பசுவே

நீயும் நலமா?

பள்ளிக் கூடமே நீ நலமா?

பாடம் சொல்லி தந்த - குருவே

நீங்களூம் நலமா?

முரட்டு வீதியே

நீ நலமா?

அதில் முக்கி முக்கி போகும்

மாட்டுவண்டிலே நீ நலமா?

தோழர்களே நீங்க நலமா?

தோழியரே நீரும் சுகமா?

முச்சை கயிறு அறுந்து போக

ஓடி போன நான் விட்ட

பட்டமே நீ நலமா?

எங்கு நீ இருந்தாலும்

என்னையும் கேளேன்

"நீ நலமா?"

வயல் வெளியே நலமா?

வரம்புகளே நீங்கள் சுகமா?

ஆழக்கிணறே நீ நலமா?

அதனருகில் நிழல் பரப்பும்

ஆலமரமே நீயும் நலமா?

பத்துதரம் கிழமைக்கு நான்

ஒட்டுபோடும் சைக்கிளே நீ நலமா?

பாதி வழியில் எனை துரத்தும்

ஜிம்மி நாய்குட்டியே நீயும் நலமா?

காற்றே நீ நலமா?

நான் காதலித்த தேசமே

நீ நலமா?

மரமேறும் அணிலே நலமா?

மறைந்திருந்து பாடும்

குயிலே நீ சுகமா?

பூவரசம் மரமே நலமா?

வாடாமல் என்றும் நிற்கும்

வாதராணி மரமே - நீ சுகமா?

வேப்பமரமே சுகமா?

அதன் விரிந்த கிளைகளில் வாழும்

காக்கைகளே நீங்களும் நலமா?

கனவுகள் மட்டும் இங்கிருக்கு

எம் விழிகள் எப்போதும் அங்கிருக்கு

பட்டாம்பூச்சியே பார்த்து சொல்லு

அவை நலமா?

விலை எதுவும் நெருங்கா

தலைவரே நீங்க நலமா?

விடுதலைக்காய் வெடித்து சிதறும்

வேங்கைகளே - நீரும்

"உயிர் பிரிந்திருக்காதெனின்"

சொல்லுங்கள் - சுகமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காற்றில் தொடங்கி கடைசிவரை ஊரிலுள்ள

களத்துப் போராளிகள்வரை நலம் கேட்கும்

வர்ணனே உங்கள் இதயத்து வரிகள்

மணவாசனையை அள்ளியே வீசுகின்றன

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

உங்கள் நலமா கவிதை நன்றாக இருக்கிறது. அதுசரி என்னை கேக்க இல்லை நலமா என்று? :cry: சரி பறவாய் இல்லை. நான் நலம் நீங்கள் நலமா? :wink: :P

Link to comment
Share on other sites

பத்துதரம் கிழமைக்கு நான்

ஒட்டுபோடும் சைக்கிளே நீ நலமா?

பாதி வழியில் எனை துரத்தும்

ஜிம்மி நாய்குட்டியே நீயும் நலமா?

வர்ணன் எல்லோரையும் நலம் கேட்டு உங்கள் கவி வரிகளில் வடித்து இருக்கிறீர்கள். பாரட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனவுகள் மட்டும் இங்கிருக்கு

எம் விழிகள் எப்போதும் அங்கிருக்கு

பட்டாம்பூச்சியே பார்த்து சொல்லு

அவை நலமா?

விலை எதுவும் நெருங்கா

தலைவரே நீங்க நலமா?

விடுதலைக்காய் வெடித்து சிதறும்

வேங்கைகளே - நீரும்

"உயிர் பிரிந்திருக்காதெனின்"

சொல்லுங்கள் - சுகமா?[color=g

உங்க கவிதை வரிகள் ரொம்ப அழகா இருக்கு.....

Link to comment
Share on other sites

நலமாய் தந்த கவிதை

சுகமாய் இருந்தது வர்ணன்.

ஈழத்து நினைவுகளை மீட்டி

நலம் கேக்கும் கவியழகு.

ஆனாலும் சிறு சந்தேகம்:

கவிதை தொடங்கி முடியும் வரை "நலமா" , "சுகமா" என்கிற

வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இவை மீள மீள

வருவதால் வாசிப்பவர்க்கு சோர்வை ஏற்படுத்தாதா? இது

என கேள்வி/சந்தேகம் மட்டுமே. ஏனென்றால் முன்னர் நானும்

இப்படி சில சொற்களை கவிதை முழுதும் மீள மீள பயன்படுத்தி

எழுதியிருக்கிறேன். அதற்கு சிலர் சொன்ன விமர்சனங்களையே

இங்கு கேள்வியாக முன்வைக்கிறேன். இங்கு கவிதை வாசிப்பவர்கள்

யாவருமே உங்கள் வாசிப்பனுபவங்களையும் எழுதுங்களேன்.

பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி

Link to comment
Share on other sites

கனவுகள் மட்டும் இங்கிருக்கு  

எம் விழிகள் எப்போதும் அங்கிருக்கு  

பட்டாம்பூச்சியே பார்த்து சொல்லு  

அவை நலமா?

நினைவுகளை மீட்கும் ஒரு அழகான கவிதை வர்ணன்...

தொடர்ந்தும் எழுதுங்கள்..

Link to comment
Share on other sites

நலம் விசாரிக்கும் கவிதை நல்லா இருக்கு வர்ணன்....சைக்கிள் அடிக்கடி பஞ்சர் ஆகியிருக்குப்போல.....உருட்டிக்

Link to comment
Share on other sites

எனக்கு அப்படி சோர்வை ஏற்படுத்தவில்லை.

சோர்வு ஏற்படுத்துவதும், ஏறபடுத்தாமல் இருப்பதும்...அவரவரின் ரசனையை பொறுத்தது..

அப்படி என்று நான் நினைக்கிறேன்.. :P

Link to comment
Share on other sites

நன்றி உங்கள் கருத்துக்கு இளைஞன் -!

வேறு சொற்களை பயன்படுத்தி இருக்கலாம்தான் - வார்த்தைகளை கோர்ப்பது கஸ்டமாய் போகும் என்று நினைச்சேன் அதனால்தான் மீண்டும் மீண்டும் - இரு சொற்களை மாறி மாறி போட்டேன்!

அத்துடன் கருத்து களத்தில எழுதுறது போல-முன்னேற்பாடு இல்லாமல் உடனயே கவிதையை யோசிச்சு - யோசிச்சு எழுதுவது வழக்கம் -

அதனால்தான் வார்த்தைப் பஞ்சம் அந்த நேரத்தில் ஏற்பட்டு விடுகிறது! :roll:

மிகவும் நன்றி - ப்ரியசகி !

நன்றி சினேகிதி! - கவிதைக்கு ஒரு பொறி போதும் எண்டு சொல்லுறத போல - உங்க நட்சத்திரங்களோடு பேசும் கதையை பார்த்திட்டுத்தான் - இப்பிடி ஒண்டு எழுதினால் என்ன என்று யோசிச்சன்! 8)

Link to comment
Share on other sites

அப்பிடியா வர்ணன்.....உங்கட கவிதையப் பார்த்தவுடனே நானும் சைக்கிள், கொய்யா மரம், வீட்டு மதில்ல ஏறிநின்றுகொண்டு தோட்டத்தில நிக்கிற எல்லாரயும் நலம் விசாரிக்கோணோம் போல இருக்கு.

Link to comment
Share on other sites

வருணன் கவிதை நன்றாக இருக்கிறது.

நலமா என்பது பல பரந்துபட்ட அனுபவங்களை இணைக்கும் கோர்வையாக வருவதால் அலுப்புத் தட்டவில்லை.

எளிய நடை,இலகுவான சொற்கள், ஆனால் பரந்த அனுபவங்களைச் சொல்வதால் நெஞ்சை வருடிச் செல்கிறது.

Link to comment
Share on other sites

அப்பிடியா வர்ணன்.....உங்கட கவிதையப் பார்த்தவுடனே நானும் சைக்கிள், கொய்யா மரம், வீட்டு மதில்ல ஏறிநின்றுகொண்டு தோட்டத்தில நிக்கிற எல்லாரயும் நலம் விசாரிக்கோணோம் போல இருக்கு.

ஆமா..எனக்கு கூடவே தான்..5 ரூபா ஐஸ் பழம் கூட ஞாபகம் வந்து விட்டது :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

நலமா என்று எல்லாரையும் நலம் விசாரிக்கும் கவி நன்று.... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் வர்ணன்... :P

Link to comment
Share on other sites

நன்றி நாரதர், அனிதா! 8)

ஆமா சினேகிதி எதை பத்தியும் கதையுங்க , ஐஸ்சொக் பத்தி மட்டும் பேசாதீங்க , - கொஞ்சம் தட்டுப்பட்டா குச்சுதான் கையில மிஞ்சும் :lol: :evil:

Link to comment
Share on other sites

நல்ல கவி. வர்ணன்....!

பரிசாக இன்னும் ஒரு கவி... இதை முடித்து வைக்கவேண்டியது உங்கள் பொறுப்பு..... ! :wink: 8) 8)

செடியாய் கருகி

சருகாய் ஆனோம்.

சருகாய் உதிர்ந்து

உரமாய் ஆனோம்.

உரமாய் புகுந்து

மரமாய் ஆனோம்.

மரமாய் காய்ந்து.

விறகாய் ஆனோம்.

விறகாய் எரிந்து

சாம்பலாய் ஆனோம்.

சாம்பலாய் எழுந்து

புகையாய் ஆனோம்.

புகையாய் எழுந்து

முகிலாய் ஆனோம். .... இப்பிடிக்கூட வரலாம்...! :P :P :P

Link to comment
Share on other sites

நன்றி தல.

ஆகா ஆரம்பிச்சிங்களா?

சரி உங்க கவிதயை நானும் முயற்சி பண்ணுறன்

முகிலாய் எழுந்து

மழையாய் விழுந்தோம்!

மழையாய் விழுந்து

பயிராய் எழுந்தோம்!

பயிராய் எழுந்தே

விதையாய் ஆனோம்!

விதையாய் புதைந்து

மீண்டும்- செடியாய் ஆனோம்!

திரும்பி பார்க்கிறோம்

கவி புறப்பட்ட இடத்தில் !

வாழ்க்கை ஒரு வட்டம்!

சொன்னால்-தரணியில்

உள்ளவர் கேட்கிறாரா

இந்த தல கேட்க? :P

Link to comment
Share on other sites

ஆகா.....தல வர்ணன் கவிதை மிகவும் நல்லாயிருக்கு.

சினேகிதி தல செய்த வேலையை பார்க்கேக்க எனக்கு ஒரு விடயம் கிளிக் பண்ணிச்சு

கதை பகுதியில செய்யுறது போல - கவிதை பகுதிலயும் ஆர்வமுள்ளவங்க - இப்பிடி - ஒருவர் தலைப்பை இன்னொருவர் தொடரகூடாதா? :roll: :roll:

சுவாரசியமா இருக்கும் எண்டு நினைக்கிறேன்! 8)

Link to comment
Share on other sites

சுவாரிசயமாத்தானிருக்கும் வர்ணன்....கவிதை எழுதத் தெரிஞ்ச ஆக்களுக்கு.:lol:

எதுக்கும் தொடக்கி வையுங்கோ நானும் எழுத முயற்சி செய்யுறன்.

Link to comment
Share on other sites

ஆஹா அதுக்கு என்னையே மாட்டி விடுறதா?

சரி முயற்சிப்பம்!

மூன்றெழுத்து கனவுதான்!

முடிவென்பது யாரும் கண்டதில்லை!

பிறப்பிலிருந்து இறப்பு வரை

இதை நழுவி சென்றவர் எவருமில்லை!

கனவு வென்றால்

பச்சை வயல் - தோற்றால்

உன் விழிமேல் பூத்த எருக்கலம் பூ...

:arrow: தொடருங்கள் சினேகிதி 8)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.