Jump to content

இணையத்தில் கடன்அட்டைத் திருட்டு!!


Recommended Posts

இணையத்தில் கடன்அட்டைத் திருட்டு Phishing

(Online Credit Card Fraud)

Credit Card பாவிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டிய ஒரு அடிப்படை விடயம்

இலத்திரனியல் உலகில், இமாலயப் பிரச்சனையாக எழுந்துள்ள இந்த கடன் அட்டை குறித்த தரவுகளைத் திருடும் மாபாதகத் திருட்டு, தற்போது சர்வதேச குற்றப்புலனாய்வு துறையினருக்கே சவாலாக விளங்கும் ஒரு கிரிமினல் செயற்பாடாக உருவெடுத்திருக்கிறது.

Spoofing, Carding, Phishing, Phreaking என்று பல பெயர்களில் இந்த தகவல் திருட்டு அறியப்படுகிறது. fishing என்றால் தூண்டில் போட்டு, தூண்டிலைக் கவ்வும் மீன்களைப் பிடிப்பதைக் குறிக்கிறது, Phishing என்றால், அதே பாணியில், தூது அனுப்பி, அந்தத் தூதை உண்மையென்று நம்பும் மனிதர்களைப் பிடிப்பது என்று அர்த்தப்படுத்தப்படுகிறது. இந்தப் பெயர் உருவானதற்கும் இதுவே காரணமாக அமைகிறது.

இப்போது கொஞ்சம் உங்களுக்குப் புரிய ஆரம்பித்திருக்கலாம். வங்கிக் கடன்அட்டைகள் தற்போது பரவலாக மென்வலைச் சஞ்சாரத்தில் பாவிக்கப்படுவதால், அதையே தமக்கான ஒரு வாய்ப்பாக வைத்துக்கொண்டு, இந்த இரகசியத் திருட்டில் தினமும் பல ஆயிரம் திருடர்கள் முழுநேரத் தொழிலாய் இறங்கி நிறையவே சம்பாதிக்கிறார்கள்.

அப்படி என்னதான் நடக்கிறது?

நாங்கள் கொடுக்கும் இரகசியத் தகவல்களைப் பெறும் நிறுவனங்களான வங்கிகள், பணமாற்று நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்கள், ஏனைய கடனட்டைகளை வழங்கும் வர்த்தக நிறுவனங்கள், மென்வலை வர்த்தக நிறுவனங்கள் போன்றன உட்பட அரசகரும விவகாரங்களுக்கான பலவித அமைச்சுக்கள், நிலையங்களுடன் நாம் பரிமாறும் பலவித தனிப்பட்ட தகவல்களை இவர்கள் திருடுகிறார்களா என்று நீங்கள் வியக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. நாம் இவர்களுக்கு வழங்கும் தகவல்கள், தகவல்களாகவே செல்லாமல், அவை திரிக்கப்பட்டு 'encrypted' வடிவில் செல்வதால், அந்தத் தகவல்களை யாரும் திருடுவது அத்தனை எளிதல்ல. அதனால், நாம் 'ஒன்லைன்' அதாவது மென்வலையூடாக பரிமாறும் தகவல்கள் உருவப்படுவது மிகவும் அபூர்வம்.

ஆனால், இப்படி இரகசியமாகப் பரிமாறப்படும் தகவல்களை, பரிமாறுபவர்களிடமிருந்து ஏமாற்றிப் பெற்றுக்கொள்ளுவதற்காக, மென்வலைத் திருடர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாற்றுத் திட்டமே இந்த 'phishing' என்ற சதிவலைத் திட்டம்.

இதை இலகுவாக விளக்குவதற்காக நமக்குப் பரிட்சயமான உதாரணமொன்றை எடுத்துக் கொள்வோம்.

துரை என்பவர் 'ஒன்லைன்' வசதியைப் பாவித்து, மென்வலையூடாக தனது வங்கியில் தொடர்பை மேற்கொள்கிறார். முதற்தடவை துரை தனது கணக்கை 'ஒன்லைன்'ல் ஆரம்பிக்கும்போது தனது பிரத்தியேக தகவல்கள் அனைத்தையும், வங்கிக் கடனட்டை இலக்கம், முடியும் காலம் போன்ற அனைத்தையும் 'ஒன்லைன்' பத்திரத்தில் நிரப்புகிறார். இவை அனைத்தும் தங்களுக்குக் கிடைத்து, எல்லாம் சரியாக இருப்பதாக அந்த வங்கியிலிருந்து, துரையின் ஈமெயில் முகவரிக்கு ஒரு பதிலும் வருகிறது. வங்கி அனுப்பிய பதிலைப் பார்த்து, துரை திருப்தியடைகிறார். அன்றிலிருந்து துரை தனது வங்கியுடன் அவ்வப்போது 'ஒன்லைன்' தொடர்பில், பணப்பரிமாற்றம் உட்பட, ஏனைய நிறுவனங்களுக்குப் பணம் செலுத்துவது மற்றும் இதர அனைத்து வங்கி முகாமைத்துவ அலுவல்களையும் மேற்கொள்கிறார்.

இந்த விடயங்களில் எந்தத் தவறும் இல்லை. எந்தப் பாதிப்பும் இதுவரை துரைக்கு ஏற்படவில்லை. துரை மேற்கொண்ட இந்த 'ஒன்லைன்' தொடர்புகளிலும், தகவல் பரிமாற்றத்திலும் ஆபத்து எதுவும் இல்லை. அனைத்தும் சரியாகவும் பாதுகாப்பாகவுமே செய்யப்பட்டுள்ளன.

எல்லாம் இலகுவாக வெற்றியாக பாதுகாப்பாக நடைபெறுவதையிட்டு துரை மகிழ்ச்சியுடன் இருக்கிறார். வழமைபோன்று துரை தனது ஈமெயில்களைப் பார்வையிடுகிறார். வங்கியிலிருந்து ஒரு ஈமெயில் வந்திருக்கிறது. ஏனைய ஈமெயில்களைப் போன்று இந்த ஈமெயிலையும் திறக்கிறார் துரை. வங்கியிலிருந்து வந்துள்ள இந்த ஈமெயிலில், நட்புடன் கூடிய ஒரு அவசர அழைப்பு. என்ன அது? நண்பர் துரை அவர்களே, தங்களது பிரத்தியேக தகவல்களை நாம் மீள உறுதி செய்துகொள்ள விரும்புகிறோம். இன்னும் 5 நாட்களுக்குள் தங்கள் தகவல்களை கீழுள்ள கட்டங்களில் நிறைத்து ஈமெயில் பண்ணவும். 5 நாட்களுக்குள் ஈமெயில் மூலம் பதில் தரத் தவறினால், தங்கள் 'ஒன்லைன்' வங்கிச்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். இவ்வாறு அந்த ஈமெயிலில் கோரப்பட்டிருக்கும்.

மிக இலகுவாக 'ஒன்லைன்' சேவையைப் பாவித்துக்கொண்டிக்கும் துரைக்கு, இந்த இடைநிறுத்தம் பெரும் சிரமமான ஒன்றாக அமைந்துவிடலாம் என்பதால், துரை உடனடியாகவே அந்த ஈமெயில் மூலம் அனைத்து விபரங்களையும் பதில் ஈமெயிலாக அனுப்புகிறார். தற்காலிக இந்த இடைநிறுத்த அறிவிப்பை தனது திறமையால் உடனடியாக பதிலனுப்பி தவிர்த்துவிட்டதாக தன் மனைவியிடம் சொல்லி, கொலரைத் தூக்கிவிடுகிறார்.

ஆனால் பாவம் துரை. இங்கேதான் இந்த 'phishing' என்ற திருட்டு, எந்தப் பாவமும் செய்யாத துரையைப் பதம் பார்த்துவிட்டதை உணர மறந்துவிட்டார்.

நடந்தது என்ன?

வங்கி உண்மையில் அனுப்பும் அதே ஈமெயிலைப் பிரதிசெய்து, அவர்களது 'லோகோ', அவர்களது பெயர், அவர்களது முகவரி உட்பட, அப்படியே அவர்களது கடிதம் போன்று ஈமெயிலில் தயாரித்து, தங்களது இரகசிய ஈமெயில் ஊடாக பல ஆயிரம் பேருக்கு இந்த ஈமெயிலை அனுப்பி விடுகிறார்கள் திருடர்கள். தங்களது ஈமெயில் முகவரியை மறைத்து, வங்கி முகவரி போன்ற ஒரு முகமூடி முகவரியை உருமாற்றி, இந்த ஈமெயில் அனுப்பப்படுவதால், பெறுனர் இந்த ஈமெயில் யாரிடமிருந்து வந்தது என்பதைப் பார்க்க மறந்துவிடுகிறார்.

இப்போது துரை அனுப்பிய பதில், வேறு யாரிடமோ சென்றுவிடுகிறது. துரையின் தகவல் கிடைத்து, 3 நிமிடங்களுக்குள், துரையின் கடன்அட்டை பதம்பார்க்கப்படுகிறது. கடன் அட்டையில் பெறக்கூடிய ஆகக்கூடிய தொகை, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஏதோ ஒரு சந்தையில் பாவிக்கப்பட்டு விடுகிறது.

யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?

யாரும் கோபிக்க வேண்டாம். இந்தத் திருட்டில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள், ஒன்றுமறியா அப்பாவிகளாக 'நாமுண்டு நம்ம வேலையுண்டு' என்று, காலாகாலத்தில் சரியானவற்றை மட்டும் செய்துவிட்டு, சிவனே என்று இருக்கும் நல்லவர்கள் தான் என்கிறது ஆய்வுகள்.

குறிப்பாக, ஈ-பே (e-bay), பே-பால் (Pay-pal), கனடியன் ரயர் (Canadian Tire), பே (Bay), சனக்கோ (Sunocco) போன்ற பல எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களுடன், 'ஒன்லைன்' தொடர்பு வைத்திருக்கும் அனைவரும், மிக அதிகமாக இவ்விடயத்தில் கவனமெடுக்க வேண்டும். எந்த நிறுவனத்திடமிருந்தும் தகவல் கேட்டு ஈமெயில் வந்தால், உடனே விபரங்களை பதிலாக அனுப்புவதை உடனே நிறுத்திக் கொள்வதுதான் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி. வந்திருக்கும் ஈமெயில் உண்மையானதா இல்லையா என்று தெரியாமல், எப்படி அதை உதாசீனம் செய்வது என்று நீங்கள் கேட்பது ஒரு நியாயமான கேள்விதான். அப்படி நீங்கள் நினைக்குமளவிற்கு அந்த ஈமெயில் உண்மையானதாகப் பட்டால், மாற்றுவழியைப் பயன்படுத்துங்கள். இரண்டு மாற்றுவழிகள் உண்டு. ஒன்று, அந்த நிறுவனத்தின் உண்மையான ஈமெயில் முகவரியை அவர்களது இணையத்தளத்திலிருந்து பெற்று, அதற்கு நேரடியாக விபரங்களை அனுப்புங்கள். அவர்களுக்கு உங்கள் விபரம் தேவைப்படாவிட்டாலும், ஆபத்து எதுவும் இல்லை. இரண்டாவது, அந்த நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு விபரத்தைக் கொடுங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும், கடன்அட்டை பாவிக்கும் நிறுவனங்கள் எதிலிருந்தும் வருகின்ற ஈமெயில் தொடர்புகளுக்கு, விபரங்களுடன்கூடிய பதில் அனுப்பி விடாதீர்கள். கடலில் பல ஆயிரம் மீன்கள் உலாவுகின்றன. நாம் தூண்டில் போடுவது குறிப்பிட்ட ஒரு மீனுக்கு அல்ல, ஏதாவது அகப்படும் ஒன்றை சுண்டி இழுக்கலாம் என்றுதானே! இதே நிலைதான் இணையத்திலும். திருடர்கள் திருட்டு ஈமெயில் தூண்டில்களை ஆயிரமாயிரமாய் வீசிவிட்டு, அகப்பட்டுக்கொள்பவரை சுண்டி இழுப்பதற்காக 'கண்ணில் எண்ணெய் விட்டபடி' காத்துக்கொண்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

கடனட்டை மட்டுமல்ல இப்போது வங்கியட்டைகளும் திருடப்படுகின்றன. அதைவிட பெற்றோல் நிரப்பு நிலையங்களின் மூலமும் வங்கியட்டைகள் திருடப்படுகின்றன.

Link to comment
Share on other sites

நன்றி இரசிகை

உங்கள் தகவலுக்கு. இங்கு சுவிசில் எடுக்கப்பட்டிருக்கும் சில முறையான நடவடிக்கைகளால் இப்படியான திருட்டுக்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதாவது இணையத்தில் பணப் பரிமாற்றம் செய்ய நாம் நுழையும் ஒவ்வொரு தடவையும் பொதுவான உள்நுழையும் இலக்கத்தை விட இன்னொரு இலக்கத்தையும் நாம் பாவிக்க வேண்டும். இவ்விலக்கம் ஒவ்வொரு முறையும் மாறிக் கொண்டேயிருக்கும். இதனால் இணையத் திருட்டுக்கள் தடுக்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

நன்றி இரசிகை

உங்கள் தகவலுக்கு. இங்கு சுவிசில் எடுக்கப்பட்டிருக்கும் சில முறையான நடவடிக்கைகளால் இப்படியான திருட்டுக்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதாவது இணையத்தில் பணப் பரிமாற்றம் செய்ய நாம் நுழையும் ஒவ்வொரு தடவையும் பொதுவான உள்நுழையும் இலக்கத்தை விட இன்னொரு இலக்கத்தையும் நாம் பாவிக்க வேண்டும். இவ்விலக்கம் ஒவ்வொரு முறையும் மாறிக் கொண்டேயிருக்கும். இதனால் இணையத் திருட்டுக்கள் தடுக்கப்படுகின்றன.

சரியாக சொன்னிக்கள் வசம்பு அண்ணா அது தான் என் உயிர் தோழன் தூள்கிங்கும் உள்ள இருக்கிறாரம்?

என்ன தான் சொன்னாலும் ஜரோப்பவில் சுவிஸ் பொலிசும் ஜேர்மனி பொலிசும் சுப்பெர் தான் நான் சொல்வது சரி தானே வச்ம்பு அண்ணா,,,,,,,,,,,,, :P :P

Link to comment
Share on other sites

துரை என்பவர் 'ஒன்லைன்' வசதியைப் பாவித்து, மென்வலையூடாக தனது வங்கியில் தொடர்பை மேற்கொள்கிறார். முதற்தடவை துரை தனது கணக்கை 'ஒன்லைன்'ல் ஆரம்பிக்கும்போது தனது பிரத்தியேக தகவல்கள் அனைத்தையும், வங்கிக் கடனட்டை இலக்கம், முடியும் காலம் போன்ற அனைத்தையும் 'ஒன்லைன்' பத்திரத்தில் நிரப்புகிறார். இவை அனைத்தும் தங்களுக்குக் கிடைத்து, எல்லாம் சரியாக இருப்பதாக அந்த வங்கியிலிருந்து, துரையின் ஈமெயில் முகவரிக்கு ஒரு பதிலும் வருகிறது. வங்கி அனுப்பிய பதிலைப் பார்த்து, துரை திருப்தியடைகிறார். அன்றிலிருந்து துரை தனது வங்கியுடன் அவ்வப்போது 'ஒன்லைன்' தொடர்பில், பணப்பரிமாற்றம் உட்பட, ஏனைய நிறுவனங்களுக்குப் பணம் செலுத்துவது மற்றும் இதர அனைத்து வங்கி முகாமைத்துவ அலுவல்களையும் மேற்கொள்கிறார்.

இந்த விடயங்களில் எந்தத் தவறும் இல்லை. எந்தப் பாதிப்பும் இதுவரை துரைக்கு ஏற்படவில்லை. துரை மேற்கொண்ட இந்த 'ஒன்லைன்' தொடர்புகளிலும், தகவல் பரிமாற்றத்திலும் ஆபத்து எதுவும் இல்லை. அனைத்தும் சரியாகவும் பாதுகாப்பாகவுமே செய்யப்பட்டுள்ளன.

எல்லாம் இலகுவாக வெற்றியாக பாதுகாப்பாக நடைபெறுவதையிட்டு துரை மகிழ்ச்சியுடன் இருக்கிறார். வழமைபோன்று துரை தனது ஈமெயில்களைப் பார்வையிடுகிறார். வங்கியிலிருந்து ஒரு ஈமெயில் வந்திருக்கிறது. ஏனைய ஈமெயில்களைப் போன்று இந்த ஈமெயிலையும் திறக்கிறார் துரை. வங்கியிலிருந்து வந்துள்ள இந்த ஈமெயிலில், நட்புடன் கூடிய ஒரு அவசர அழைப்பு. என்ன அது? நண்பர் துரை அவர்களே, தங்களது பிரத்தியேக தகவல்களை நாம் மீள உறுதி செய்துகொள்ள விரும்புகிறோம். இன்னும் 5 நாட்களுக்குள் தங்கள் தகவல்களை கீழுள்ள கட்டங்களில் நிறைத்து ஈமெயில் பண்ணவும். 5 நாட்களுக்குள் ஈமெயில் மூலம் பதில் தரத் தவறினால், தங்கள் 'ஒன்லைன்' வங்கிச்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். இவ்வாறு அந்த ஈமெயிலில் கோரப்பட்டிருக்கும்.

மிக இலகுவாக 'ஒன்லைன்' சேவையைப் பாவித்துக்கொண்டிக்கும் துரைக்கு, இந்த இடைநிறுத்தம் பெரும் சிரமமான ஒன்றாக அமைந்துவிடலாம் என்பதால், துரை உடனடியாகவே அந்த ஈமெயில் மூலம் அனைத்து விபரங்களையும் பதில் ஈமெயிலாக அனுப்புகிறார்.

நான்குவாரங்களுக்கு முன் இது போன்ற ஈமெயில் எனது வாடிக்கை வங்கியின் பெயரில்(Citi Bank)எனக்கும் வந்தது. இப்படி வங்கி கடனட்டைக்கு நடப்பது போல் இணையத்தின் ஊடாக நாளாந்த பணபரிமாற்றங்களுக்காக தரப்பட்டு இருக்கும் TAN எனப்படும் இலக்கங்களில் 10 இலக்கத்தை என்னிடம் கோரியிருந்தார்கள்.நான் வங்கியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களை கேட்டபோது தங்களுக்கும் அந்த ஈமெயிலுக்கும் தொடர்பு இல்லை என்றும் அதற்கு பதில் அளிக்கவேண்டாம் என்றார்கள். இப்படியான ஈமெயில் வந்தால் உடன் உங்கள் வங்கியுடன் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்வதே நல்லது.

Link to comment
Share on other sites

சரியாக சொன்னிக்கள் வசம்பு அண்ணா......................

என்ன தான் சொன்னாலும் ஜரோப்பவில்

சுவிஸ் பொலிசும் ஜேர்மனி பொலிசும் சுப்பெர் தான்

நான் சொல்வது சரி தானே வசம்பு அண்ணா,,,,,,,,,,,,, :P :P

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ரசிகை..உங்க தகவலுக்கு...

Link to comment
Share on other sites

யப்பா... :shock: எம்.ஜி.ஆர் கேட்டது போல..இப்படி எல்லாம் கூட செய்வார்களா???? :shock:

நன்றிக்கா.தகவலுக்கு

Link to comment
Share on other sites

சரியாக சொன்னிக்கள் வசம்பு அண்ணா அது தான் என் உயிர் தோழன் தூள்கிங்கும் உள்ள இருக்கிறாரம்?

என்ன தான் சொன்னாலும் ஜரோப்பவில் சுவிஸ் பொலிசும் ஜேர்மனி பொலிசும் சுப்பெர் தான் நான் சொல்வது சரி தானே வச்ம்பு அண்ணா,,,,,,,,,,,,, :P  :P

அது என்னவே உண்மைதான். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி ரஸ்

Link to comment
Share on other sites

ஏன் ரசி - இவ்ளோ தகவல் எல்லாம் சொல்லுறீங்க-

அப்புறம்- ஏன் - என்ர விஸா கார்ட் ல -இருந்து களவா காசு அடிச்சு எடுத்தீங்களாம்?

:wink: :wink: :P

Link to comment
Share on other sites

ஏன் ரசி - இவ்ளோ தகவல் எல்லாம் சொல்லுறீங்க-

அப்புறம்- ஏன் - என்ர விஸா கார்ட் ல -இருந்து களவா காசு அடிச்சு எடுத்தீங்களாம்?

:wink: :wink: :P

ஆஆ நானா? அது நான் இல்லை உங்கள் அம்மாதான் தனக்கு விசா காட் உபயோகிக்க தெரியாது? எப்படி எடுக்கிற என்று சொல்லித் தரச் சொன்னார் அதுதான் அவக்கு உதவி செய்தன். சா எவ்வளவு இளகிய மனது உதவிசெய்ய போன என்னை பார்த்து திருட்டு பட்டம் கட்டிப்போட்டீங்களே. மனதுக்கு கஷ்டமா இருக்கு :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வெப்சைற் debt, credit, loan மற்றும் வங்கி நடைமுறைகளை எவ்வாறு இலகுவாக கையாளாலாம் என்பதையும் உதவி குறிப்புகளையும் வழங்குகிறது http://www.moneylaidbare.info/index.html

Link to comment
Share on other sites

இணையத்தில் நடக்கும் தில்லு முல்லில் நம்மவர்கள் -கடன் அட்டை -வங்கி அட்டை விடயத்தில் எவ்ளோ வீதம் ஏமாறுகிறார்களோ - தெரியல!

கூடுதலாக ஏமாறகூடியது-

சிறு சிறு வியாபார நிலையங்களில் -அருவி சொன்னதுபோல் -

எரிபொருள் நிரப்பு நிலையங்களில்-

மிக முக்கியமா - தமிழர் வியாபார நிலையங்களில் - (எல்லா தமிழர் வியாபார நிலையம் என்றில்லை- ஒரு சிலதில் - ஆபத்து காத்திருக்கு)

அதை விட முக்கியம் - ஏதாவது ஒரு பணம் செலுத்தும் இடங்களில் - சந்தேகத்துக்கு இடமான பிற நாட்டவர் - காசாளரா இருந்தா- அலேட் ஆயிடுங்க -!

இந்த வங்கி அட்டையில் திருடி - வயிறு வளர்க்கும் கூட்டம்- காசாளராய் இருப்பவருக்கு - அவர் வருட வருமானத்துக்கு நிகரான தொகையை லஞ்சமா கொடுத்து- விலைக்கு வாங்கி விடுகிறது-!

பிறகு என்ன - ஒரு கமரா - பிறர் கண்ணுக்கு தெரியாமல் - அவர் அனுமதியுடன் பொருத்தப்படும்- வங்கி அட்டை என்றால் - நீங்க இரகசிய இலக்கம் அழுத்த அப்பிடியே பதிவு செய்யும்-!

உங்க இரகசிய இலக்கம் பிறர்க்கு தெரிந்தால் - நடக்க போவதை பற்றி நான் சொல்லியா தெரியணும்? :wink:

கமரா பொருத்துபவர் - விசேடமாக -"பணிக்கமர்த்தப்படுகிறார்" விசேட கூலியுடன்!

கடனட்டை என்றால் - அதை ஸ்கான் பண்ணவும் - காசாளர் "உதவி" செய்கிறார் -அவர் அமர்ந்து இருக்கும் இடத்தில் - பிறர் கண்ணில் படாமல் - கருவி பொருத்த-!

இது பெரிய நிறுவனங்களில் சாத்தியமில்லை -வேறு-எங்கே என்றால்- முதல் சொன்னதை பார்க்க -மீண்டும் மேலே போங்கள்!

இவ்ளவும்- ஏதும் இதுபற்றி - இன்னும் -அறிந்திராதவர்களுக்கு மட்டுமே- புதிதாய் சொல்லி கிளிச்சிட்டார்னு - ஒண்ணும் சொல்லிடாதீங்க! 8)

Link to comment
Share on other sites

என்ன இது எல்லாரும் ஆளாளுக்கு வெருட்டுறீங்க அப்ப இனி எல்லா இடத்திலும் காசு கொடுக்கிறதுதான் பெட்டர் போல :shock: :lol::lol::lol:

Link to comment
Share on other sites

என்ன இது எல்லாரும் ஆளாளுக்கு வெருட்டுறீங்க அப்ப இனி எல்லா இடத்திலும் காசு கொடுக்கிறதுதான் பெட்டர் போல :shock: :lol::lol::lol:

இல்லாட்டால் ஏதோ கிரடிட் கார்ட்டால காசு குடுக்கிறமாதிரி கதைக்கிறீங்க,,, :evil: :twisted: கிரடிட் கார்டை பார்த்திருக்கிறீயளோ? :oops: :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.