கோமகன்

சொல்லடை ( சொலவடை )

Recommended Posts

எமது வாழ்கையில் தொடர்பாடலில் எமது பெரிசுகள் தாங்கள் சொல்லவந்த செய்தியை நேரடியாகச் சொல்லாது மறைமுகமுகமாக உறைக்கத்தக்க விதத்திலும் , புத்திமதி சொல்வது போலவும் உரையாடுவார்கள் . இதைச் சொல்லடை அல்லது சொலவடை என்று சொல்லுவோம் . ஆனால் , துர்ரதிஸ்டவசமாக இந்த சொல்லடைகள் எம்மிடமிருந்து நாகரீகம் என்ற போர்வையில் மறைந்து கொண்டு போகின்றன . இவை மீண்டும் புதியவேகம் பெற்று எம்மைப் போன்ற இளயவர்களால் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற ஆதங்கத்திலேயே இந்தப் பதிவைத் தொடங்குகின்றேன் . இந்தப் பதிவானது உங்கள் ஒத்துளைப்பும் , ஆதரவும் இல்லாமல் வாசகர்களைச் சென்றடையாது என்பது நிதர்சனமான உண்மை . முதலில் ஆரம்பித்துவைக்க எனக்குத் தெரிந்த சொல்லடைகளைத் தருகின்றேன் , எங்கே உங்கள் கைவண்ணத்தைக் காட்டுங்கள்!!!!!!!!!!!!!!!!!

*************************************************************

1 .அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்

2 . ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும் நடு ஏரியில சண்ட வெலக்கப் போன வெறா மீனுக்கு ஒடஞ்சி போச்சாம் மண்ட.

3 . கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானமேறி வைகுந்தம் போனானாம்.

Edited by கோமகன்
  • Like 3

Share this post

Link to post
Share on other sites

நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.. :wub:

இது ஓக்கேயா கோம்ஸ் அண்ணா??? :rolleyes:

Share this post

Link to post
Share on other sites

நீங்கள் குறிப்பிடும் சொல்லடைக்கும்

பழமொழிகளுக்கும் தொடர்புண்டா கோமகன்???

Share this post

Link to post
Share on other sites

1.சும்மா நடக்க மாட்டாத மூஞ்சூறு விளக்குமாற்றையும் காவிக்கொண்டு போச்சுதாம்

2.ஒருத்தனுக்கு எழும்பி நிக்கவே வக்கில்லையாம் ஆனால் ஒன்பது பெண்டாட்டி கேட்குதாம்

இது சரியோ கோமகன் அண்ணா

Share this post

Link to post
Share on other sites

வயது வந்தவர்கள் மட்டும் ஓ இப்படி எல்லாம் எங்கள் முன்னோர்கள் சொல்லி வைச்சுட்டு போய் இருக்கிறார்களா என்று சந்தோசப்படலாம்..ஆனால் என் அறிவுக்கு எட்டியவரையில் சொல்லப் போனால் மேலைத் தேய நாடுகளில் பிறந்து வளர்ந்து கல்வி கற்றுவரும் பிள்ளைகளுக்கு இந்த சொல்லடை,சொலவடை பற்றி சொல்லிக் கொடுப்பதோ இல்லை புரிய வைப்பதோ கொஞ்சம் கஸ்ரம்..

Edited by யாயினி

Share this post

Link to post
Share on other sites

நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.. :wub:

இது ஓக்கேயா கோம்ஸ் அண்ணா??? :rolleyes:

அதே...................... :D:D .

1.சும்மா நடக்க மாட்டாத மூஞ்சூறு விளக்குமாற்றையும் காவிக்கொண்டு போச்சுதாம் .

2.ஒருத்தனுக்கு எழும்பி நிக்கவே வக்கில்லையாம் ஆனால் ஒன்பது பெண்டாட்டி கேட்குதாம் .

இது சரியோ கோமகன் அண்ணா

இதே கருத்தைத் தழுவி இன்னும் இரண்டு மூன்று சொல்லடைகள் உள்ளன . முயற்சி செய்யுங்கள் வாதவூரான் :):) .

Share this post

Link to post
Share on other sites

நீங்கள் குறிப்பிடும் சொல்லடைக்கும்

பழமொழிகளுக்கும் தொடர்புண்டா கோமகன்???

மேலோட்டமாகப் பார்த்தால் இவையிரண்டும் ஒன்று போலவே தெரியும் விசுகண்ணை . பழமொழிகள் சொல்லவந்த செய்தியினைச் சுருக்கமாகவும் , தெளிவாகவும் , சுவையுடனும் சொல்லப்படுவன . அத்துடன் அது சார்ந்த சமூகத்தின் அனுபவ முதிர்ச்சியையும் , அறிவுக்கூர்மையையும் எடுத்துச் சொல்கின்றன :):):) .

Share this post

Link to post
Share on other sites

வயது வந்தவர்கள் மட்டும் ஓ இப்படி எல்லாம் எங்கள் முன்னோர்கள் சொல்லி வைச்சுட்டு போய் இருக்கிறார்களா என்று சந்தோசப்படலாம்..ஆனால் என் அறிவுக்கு எட்டியவரையில் சொல்லப் போனால் மேலைத் தேய நாடுகளில் பிறந்து வளர்ந்து கல்வி கற்றுவரும் பிள்ளைகளுக்கு இந்த சொல்லடை,சொலவடை பற்றி சொல்லிக் கொடுப்பதோ இல்லை புரிய வைப்பதோ கொஞ்சம் கஸ்ரம்..

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் யாயினி . ஆனால் , இங்கும் இடியம்ஸ் ( idioms ) , புறோவேவ் (proverbs ) என்ற பகுதிகள் இளயவர்களுக்கு அந்தந்த மொழிகளில் இருக்கின்றன தானே . முடியாது என்ற நினைத்திருந்தால் இவ்வளவுதூரம் வந்திருப்போமா யாயினி :):):) ?

Share this post

Link to post
Share on other sites

1.உடையார் வீட்டு மோருக்கு அகப்பை கணக்கில்லையாம்

2.ஒளிக்க தெரியாதவன் தலையாரி வீட்டுக்கை ஒளிச்சானாம்

Share this post

Link to post
Share on other sites

ஆடத் தெரியாதவள், கூடம் கோணல் எண்டாளாம்!

உழுகிற மாடு, ஊருக்குள்ள விலை போகும்!

முயல் பிடிக்கிற நாயை, மூஞ்சியில தெரியும்!

போதுமா, கோமகன்? :D

Share this post

Link to post
Share on other sites

செல்லடிக்குப் பயந்து ஓடிப்போனவன்....... சொல்லடைக்கு வந்து சல்லடை போட்டானாம்!

எப்புடி...................... ? :lol: :lol: :lol:

கோ...! இது நம்ம சொந்த வடை! :lol:

ஜாலியாக இருந்த மனநிலையில் மனதில் வந்த சொல்லடை!

தப்பாக நினைக்கவேண்டாம்!

பழைய சொல்லடைகளை...... எத்தனை நாளைக்கு கேட்பது...?!

புதிதாய் நாம் எதையாவது சொன்னால்தானே....... நம் பூட்டப் பிள்ளைகளுக்கும் ஏதாவது மிஞ்சியிருக்கும்! அதனால்தான்...... இப்படி! :)

என்ன கோ? ஓகேதானே? :)

Edited by கவிதை

Share this post

Link to post
Share on other sites

வெல்லம் காய்ச்சுறது ஒருத்தன் விரல் சூப்புறது இன்னொருத்தன்.

முக்கி முக்கி குத்தினவளுக்கு மூண்டாம் எட்டிஎட்டி பாத்தவளுக்கு எட்டாம்.

நாய்க்கு நடுக்கடல் போனாலும் நக்குத்தண்ணிதான்.

கூரை ஏறிக் கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்.

எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

இரும்பு புடிச்ச கையும் சிரங்கு புடிச்ச கையும் சும்மாய் இராது.

இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாளைக்கு.

கிட்ட உறவு முட்டப் பகை.

ஆடு பகை குட்டி உறவு..

Share this post

Link to post
Share on other sites

படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில்....

வேலைக் கள்ளிக்குப் பிள்ளைப் பராக்கு..

ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்கவேணும்

பாடிக்கறக்கிற மாட்டை பாடிக்கறக்கவேணும்

தானாடாவிட்டாலும் தசையாடும்

தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத் தெரியும்..

எட்டாப்பழத்துக்கு கொட்டாவி விடாதை..

கழுதைக்குத் தெரியுமோ கற்பூர வாசனை...?

:D :D

____________________________________________

கோமகன் அண்ணா கலக்கல்த்திரி... தொடருங்கோ...

Share this post

Link to post
Share on other sites

எல்லாரும் ஏறி விழுந்த குதிரயில சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தாரம்

Share this post

Link to post
Share on other sites

3 . கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானமேறி வைகுந்தம் போனானாம்.

கோமகன் இது வைகுண்டம் போனானாம் என்று வர வேண்டும் என நினைக்கிறேன் .எனக்கும் சரியாக தெரியாது .பிழை என்றால் மன்னிக்கவும்

Share this post

Link to post
Share on other sites

கோழி மிதித்துக் குஞ்சு சாவதில்லை!

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை!

மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை!

Share this post

Link to post
Share on other sites

சங்கு, சக்கர சாமி வந்து, ஜிங்கு... ஜிங்கு.... எண்டு ஆடிச்சாம். :D

Share this post

Link to post
Share on other sites

நாய்க்கு எதற்கு போர்த் தேங்காய் :lol: [இது சரியோ தெரியவில்லை கேள்விப்பட்ட மாதிரி இருக்குது]

Share this post

Link to post
Share on other sites

மீண்டும் கேட்கின்றேன் என்று தப்பா நினைக்காதீர்கள்

இங்கு எழுதப்படும் கருத்துக்கள் எல்லாமே பழமொழிகளாகவே இருக்கின்றன.

இரண்டுக்கும் விளக்கம் தேவை :(

Share this post

Link to post
Share on other sites

மீண்டும் கேட்கின்றேன் என்று தப்பா நினைக்காதீர்கள்

இங்கு எழுதப்படும் கருத்துக்கள் எல்லாமே பழமொழிகளாகவே இருக்கின்றன.

இரண்டுக்கும் விளக்கம் தேவை :(

இவருக்கு இனி வெள்ளை வான் தான் :lol: :lol:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

இவருக்கு இனி வெள்ளை வான் தான் :lol: :lol:

ஏனப்பா

பேச்சுவார்த்தை இழுக்குதா??? :D

Share this post

Link to post
Share on other sites

செல்லடிக்குப் பயந்து ஓடிப்போனவன்....... சொல்லடைக்கு வந்து சல்லடை போட்டானாம்!

எப்புடி...................... ? :lol:

கோ...! இது நம்ம சொந்த வடை!

ஜாலியாக இருந்த மனநிலையில் மனதில் வந்த சொல்லடை!

தப்பாக நினைக்கவேண்டாம்!

பழைய சொல்லடைகளை...... எத்தனை நாளைக்கு கேட்பது...?!

புதிதாய் நாம் எதையாவது சொன்னால்தானே....... நம் பூட்டப் பிள்ளைகளுக்கும் ஏதாவது மிஞ்சியிருக்கும்! அதனால்தான்...... இப்படி!

என்ன கோ? ஓகேதானே?

கவுத்திட்டியே ராசா :lol::lol: . இதுவரை யாருமே சொல்லாத புலம்பெயர் சொல்லடை . காப்புரிமையை இப்பவே தயார் பண்ணுங்கோ :D:D:icon_idea: .

Share this post

Link to post
Share on other sites

வெல்லம் காய்ச்சுறது ஒருத்தன் விரல் சூப்புறது இன்னொருத்தன்.

முக்கி முக்கி குத்தினவளுக்கு மூண்டாம்  எட்டிஎட்டி பாத்தவளுக்கு எட்டாம். :lol:   :lol::icon_idea: .

   நாய்க்கு நடுக்கடல் போனாலும் நக்குத்தண்ணிதான்.

கூரை ஏறிக் கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்.

எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

இரும்பு புடிச்ச கையும் சிரங்கு புடிச்ச கையும் சும்மாய் இராது.

இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு  நாளைக்கு.

கிட்ட உறவு முட்டப் பகை. ( பழமொழி )

ஆடு பகை குட்டி உறவு..  ( பழமொழி )

மிக்கநன்றிகள் குசா :)   :)  .

Share this post

Link to post
Share on other sites

3 . கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானமேறி வைகுந்தம் போனானாம்.

கோமகன் இது வைகுண்டம் போனானாம் என்று வர வேண்டும் என நினைக்கிறேன் .எனக்கும் சரியாக தெரியாது .பிழை என்றால் மன்னிக்கவும்

நீங்கள் சொன்னது சரியே நிகே தவறுக்கு வருந்துகின்றேன் :):):) .

மீண்டும் கேட்கின்றேன் என்று தப்பா நினைக்காதீர்கள்

இங்கு எழுதப்படும் கருத்துக்கள் எல்லாமே பழமொழிகளாகவே இருக்கின்றன.

இரண்டுக்கும் விளக்கம் தேவை :(

நீங்கள் சொல்வது சரியே விசுகண்ணை பிள்ளைகள் ஆர்வக்கோளாறில் சில பழமொழிகளையும் இணைக்கின்றார்கள் :):) .

Share this post

Link to post
Share on other sites

சொல்லால் சொல்லடை தந்த கள உறவுகளான ஜீவா , விசுகு , வாதவூரான் , யாயினி புங்கையூரான் , கவிதை , குமாரசாமியண்ணை , சுபேஸ் ,யாவரும்நலம் , நிகே , தமிழ் சிறி , ரதி , சஜீவன் , ஆகியோருக்கு மிக்கநன்றிகள் :):):) .

Share this post

Link to post
Share on other sites