Jump to content

காரணம் என்ன?


  

11 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

http://www.yarl.com/...ndpost&p=716742 ( புதிய ஆண்டும் யாழும் )

பலர் பலவிதமாக வாக்குறுதி/promise வழங்கினார்கள். 2012ம் வருடத்தின் இரண்டாம் மாதம் நிறைவடையப் போகின்றது. லிங்கில் குறிப்பிட்ட இந்த பகுதியில் பேசப்படும் விடயங்கள் வெற்றி பெறாமைக்கான காரணங்கள் எவை என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

இதுவரை ஒரு விளம்பரத்தைதானும் காணவில்லை. குறிப்பாக யாழ் இணையம் வர்த்தக ரீதியாக முன்னேற்றம் பெறுவதற்கு எவ்விதமான முயற்சிகளை நீங்கள் எடுத்தீர்கள் என்றும் அல்லது எடுக்கவில்லையாயின் அதற்கான காரணங்கள் பற்றியும் உங்கள் பக்க பகுதியை விபரியுங்கள்.

ஒரு வியாபார நிறுவனம் எனும் வகையில் இங்கு நாம் விளம்பரம் செய்யும் போது எமது வளர்ச்சிக்கும் இது உறுதுணையாக அமையும் என நினைப்பதால் இது பற்றி அறிய விரும்புகின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் தனது போதிய தகவல் வழங்கமால்,

ஆண்டுக்கு ஒரு அறிக்கை விட்டு, பஞ்சத்தனம் கொட்டுவதால்... ஒரு பிரயோசனமும் கிடைக்காது.

அறிக்கைக்குப் பின், அதிரடி நடவடிக்கையே.. தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் தனது போதிய தகவல் வழங்கமால்,

ஆண்டுக்கு ஒரு அறிக்கை விட்டு, பஞ்சத்தனம் கொட்டுவதால்... ஒரு பிரயோசனமும் கிடைக்காது.

அறிக்கைக்குப் பின், அதிரடி நடவடிக்கையே.. தேவை.

அப்படி போடுங்கோ அரிவாளை...சந்தா விபரங்களை அறிவித்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் நிர்வாகம்....

Link to comment
Share on other sites

ஒவ்வொருவரும் தங்களின் திறமை வசதிக்கேற்ப பங்களிப்புச் செய்யலாம். வியாபாரத் தொடர்புகள் உள்ளவர்கள் விளம்பரங்கள் எடுத்துத் தர உதவிகள் செய்யலாம். கணணி அறிவுள்ளவர்கள் தொழிநுட்ப உதவிகள் வழங்கலாம்.

முன்பு கூறியதைப் போல சந்தாதாரர் ஆக விரும்புவர்களுக்கு 'pay pal' வசதி செய்து தரப்பட வேண்டும்.

எனக்கு முன்பு நன்றாகத் தெரிந்த இந்திய நண்பர் சிறிது சிறிதாக உருவாக்கிய தளம் இது. இன்று பெரிய வியாபார நிறுவனமாக உள்ளார்கள்.

http://www.redhotcurry.com/

Link to comment
Share on other sites

யாழுக்கு வருவதே பொழுது போக்கத்தான். இஞ்சையும் வேலை செய்ய சொன்னால் எப்படி? ஏதாவது உருப்படியாக இங்கு நடந்ததா?

Link to comment
Share on other sites

எனக்கு முன்பு நன்றாகத் தெரிந்த இந்திய நண்பர் சிறிது சிறிதாக உருவாக்கிய தளம் இது. இன்று பெரிய வியாபார நிறுவனமாக உள்ளார்கள். http://www.redhotcurry.com/

s.gif

நீங்கள் மேலே சொன்ன தளம் 404,230ம் இடத்தை பெற்று பெரிய ஒன்லைன் வியாபார நிறுவனமாக காணப்படும்போது அதேசமயம் யாழ் இணையம் தற்போது 88,399ம் இடத்தில் விளங்கி ஒரு சிறிய அளவிலாவது வர்த்தக ரீதியாக வளர்ச்சியை பெறவிலை என்றால் அதற்கான காரணங்கள் ஆக ஒன்று இரண்டாக இருக்க முடியாது.

yarl.com

s.gif

Link to comment
Share on other sites

யாழுக்கு வருவதே பொழுது போக்கத்தான். இஞ்சையும் வேலை செய்ய சொன்னால் எப்படி? ஏதாவது உருப்படியாக இங்கு நடந்ததா?

உருப்படியாக ஏதாவது நடக்காமல் எப்படி இந்த நிலைக்கு வர முடியும்?

s.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா ஒரு குழுவைப் பரிந்துரை

செய்திருந்தார். அவர்கள் ஏதாவது செயற்திட்டங்களை

உருவாக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம் :)

Link to comment
Share on other sites

எல்லோரும் நல்லவிடயம் என்று வரவேற்றுவிட்டு தமது வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள் (நானும்தான்).

பூனைக்கு மணிகட்ட ஒரு எலிகளும் தயாராக இல்லைப் போலுள்ளதே! :(

கிருபன் இங்கு பதிவிட்டுவிட்டு காணாமல் போய்விட்டோம் உண்மைதான். யாழ்க்களத்தை முன்னேற்றுவதற்கு எல்லோரும் பேச்சுப்பல்லக்குத்தான் போல் உள்ளது. எவ்வகை உதவிகளைச் செய்வது என்பதை எம்மால் தீர்மானிக்க முடியவில்லை. கருத்துக்கணிப்பை நடாத்தி உருப்படியாக எதனையும் செய்ய முடியாது என்பதை நிர்வாகம் தெளிவாக உணர்ந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நிர்வாகத்தினர் நகர முடியும்.

எவ்வகையான உதவிகளைச் செய்யவேண்டும் என்று மோகனின் எதிர்பார்ப்பு இருக்கிறது என்று புரியவில்லை. உதவி செய்யும் விருப்பு இருந்தாலும் வழிகளைச் சொன்னால்தான் அவ்வகையில் அவற்றை செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

யாழ் இணையம் தனது போதிய தகவல் வழங்கமால்,

ஆண்டுக்கு ஒரு அறிக்கை விட்டு, பஞ்சத்தனம் கொட்டுவதால்... ஒரு பிரயோசனமும் கிடைக்காது.

அறிக்கைக்குப் பின், அதிரடி நடவடிக்கையே.. தேவை.

அப்படி போடுங்கோ அரிவாளை...சந்தா விபரங்களை அறிவித்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் நிர்வாகம்....

நீங்கள் நிர்வாகத்தை தொடர்ச்சியாக உற்சாகப்படுத்துவதன் மூலம் அதை செய்ய அவர்களிற்கு ஆர்வம் ஏற்படலாம். மிக வேகமாக தற்போது இந்த இணையம் (92,045ம் இடம்) தரநிலையில் பின் தள்ளப்படுவது இணைய உலகில் போட்டி எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை காட்டுகின்றது. Front page ஓரளவாயினும் திருத்தம் செய்யப்பட்டால் நல்லது என்று தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாவை பற்றி எங்களுக்கு நல்லா தெரியும் , ஒன்ர சொல்லுவார் ஆனால் அதை செய்ய மாட்டார்.............

யாழுக்கு பிறக்கு வந்த அவியிர மீனை துடிக்கிது என்று சொல்லுற லங்காசிறி தமிழ் வின் இணையதளம் இப்படி இருக்கேக்க எங்கட யாழ் இப்படி இருக்கிறதை நினைக்க மன கஸ்ரமாய் இருக்கு........... :(

Link to comment
Share on other sites

லங்காசிறி, தமிழ் வின் இணைய தளங்கள் வியாபார ரீதியாக சிறந்து உள்ளார்கள் என்றே தெரிகின்றது.

http://www.lankasrihelp.com/index.php?page=home

http://www.lankasrihelp.com/index.php?page=notice

அவர்களின் முயற்சி, உழைப்பு அங்கே தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம்.

Vision: சமூக அரசியல் தளத்தில் மக்களின் கருத்தை மக்களைக் கொண்டே தெரிய வைத்து இயக்கப்படுகின்றன வியாபார இலாப நோக்கற்ற பொழுதுபோக்கு இணையத்தளம்.

Mission: சமூக அரசியல் அறிவியல் விழிப்புணர்வுள்ள ஆக்கங்களை உள்வாங்குவதனூடும்.. மக்களிடையே சகஜமான கலந்துரையாடலுக்கு (கருத்துக்கள அடிப்படை இணையத்தளம்) இடமளிப்பதனூடும் சமூகத்தில் அவர்களினதும் கருத்துக்களை கொண்டு செல்லுதல்.

SWOT analysis

பலம்: அங்கத்தவர்கள் எண்ணிக்கை,பார்வையிடும் எண்ணிக்கை, பதிவுகளின் எண்ணிக்கை.. பன்முகத்தன்மை, நம்பகத்தன்மை, விதிமுறைகள் அவற்றின் அமுலாக்கம், ஒப்பீட்டளவில் இலகுவான அங்கத்துவப் பதிவு மற்றும் அதன் வயது.

பொதுவாக விரைந்து தரவிறங்கக் கூடிய பக்கங்களும்.. கணணிக் கிருமி தாக்கம் குறைந்த அல்லது இல்லாத இணையம் என்ற நம்பிக்கையைக் பல காலமாக தக்க வைத்திருப்பது.

பலவீனம்: முகப்பு, பக்க வடிவமைப்பு, கருத்துக்கள செய்திகள் தவிர வேறு ஆக்கங்களின் கிரமமான வரவு இன்மை,கருத்துக்கள செய்திகளும் ஆக்கங்களும் கவர்ச்சிகரமான வகையில் dynamic page view வடிவில் முகப்பில் காண்பிக்கப்படாமை. ஒரே கும்பலாக செய்திகள் வந்து குவிந்து கிடக்கின்றமை.

உறுப்பினர்களின் சமூக வலைச் செய்திகளை முகப்பில் காண்பிக்காமை.. விளம்பர பகுதி இன்மை..அங்கத்தவர்களின் துடிப்புக் குறைந்து செல்கின்றனமை. புதிய அங்கத்தவர்களின் பதிவு தொடர்ந்து இருப்பினும்.. செயற்பாடுகள் வெகு குறைவாக உள்ளமை. கருத்துக்களின் பன்முகத் தன்மை குறைகின்றமை. நவீன கையடக்க தகவல்தொடர்பூடகங்கள் மூலம் செய்திகளை தகவல்களை இணைக்கக் கூடிய வசதிகள் குறைவாக உள்ளமை.

தமிழில் எழுத பல உறுப்பினர்களுக்கு சரியாக அறிய முடியாமல் இருத்தல். பிறமொழி கலந்துரையாடல் பகுதி சுருங்கி இருத்தல். தங்கிலிஸ் பகுதி இன்மை.

சில பகுதிகள் அறவே இல்லாமை. உதாரணம்: கல்வி சார்ந்த விடயங்களுக்கு பகுதியே இல்லை..!

வாய்ப்பு: உறுப்பினர்களின் உதவி பெறப்பட்டு பக்கத்தை நவீனத்துவம் கொண்டு மெருகூட்டல், புதிய திட்டங்களை வியாபார நோக்கில் செயற்படுத்த முனைதல், முழு நேர இணையக் கண்காணிப்பு அல்லது மெருகூட்டல் நிபுணத்துவ குழுவை தன்னார்வ அடிப்படையில் அல்லது கூலி அடிப்படையில் அமைக்கவும் அதனை மோகன் அண்ணா நேரம் கிடைக்கும் போது கண்காணிக்கவும் செய்தல். விளம்பரங்களுக்கு உள்ள வாய்ப்பை பயன்படுத்தல். பக்கங்கள் பலதரப்பட்ட வாசகர்களையும் கவரும் வகையில் அமைந்திருந்தல். யாழ் சார்ந்து வருடாந்த சமூக.. சமய.. நூல் வெளியீடுகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு உதவி அதனை மக்கள் மத்தியில் இன்னும் இன்னும் அறிமுகம் செய்தல். யாழை தன்னார்வ அடிப்படையில் விளம்பரப்படுத்த உறுப்பினர்களை ஊக்குவித்தல்.. குறிப்பாக யாழில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு பிரபல்யம் அடைந்தோர்.. தங்கள் நூல் வெளியீடுகளைச் செய்யும் போது.. யாழுக்கான விளம்பரத்தை தன்னார்வ அடிப்படையில் இலவசமாக பதிவு செய்து கொடுத்தல். நன்றிக்கடன் காண்பிப்பது.

சவால்: விளம்பர இணையத்தளங்களின் பெருக்கம், போட்டி அதிகரித்துள்ளமை. இணையத்தள மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பம் விரைந்து மாறிச் செல்கின்றமை. இணையத்தளங்கள் மீதான விதி மற்றும் சட்ட அமுலாக்கங்களும் மாற்றங்களும் மேலும் அதிகரித்துச் செல்லும் இணையத் தாக்குதல் (ஹாக்கிங்) வாய்ப்பு.

scenario analysis and strategic report :

1. யாழ் தொடர்ந்து அங்கத்தவர்களின் செயற்பாடுகளைக் கொண்டிருந்தாலும் இன்றைய செயற்பாட்டு நிலை சரியான வகையில் வழிகாட்டப்பட்டு சரியான திசை நோக்கி ஊக்கம் பெறாவிடில்.. அதன் சந்தை நிலை மந்தமாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

2. இன்றைய நிலை தொடர்ந்தால் பார்வைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி தென்படும்.

3. தொடர்ந்து இலாபம் சம்பாதிப்பதில் அக்கறை செய்யவில்லையேல்.. அதன் மெருகூட்டல் என்பது மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும்.

4. யாழினை கண்காணிக்க நிர்வகிக்க கிரமமாக ஒரு நிபுணத்துவ உதவி பெறப்படவில்லையேல் யாழ் தொழில்நுட்ப ரீதியாக போட்டியை சமாளிக்கச் சிரமப்படும் நிலை தொடரும்.

5. ஆக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றின் வகைகளுக்கு ஏற்ப அவை வாசகர்களின் பார்வைக்கு இலகுவாக சென்றடையும் வகையில் முகப்பில் தோற்றமளிக்கச் செய்யப்படின்.. வாசகர்களின் கருத்தை கவனத்தை ஈர்ப்பது அதிகரிக்கும். கருத்துக்களத்தை விட முகப்பில் தகுந்த மாற்றங்கள் அடிக்கடி.. நிகழ்த்தப்பட்டாக வேண்டும். இன்றேல் வாசகர்களின் தாவல் அதிகரிக்கும்.

6. மக்களின் அரசியல் சமூக எண்ணோட்டங்கள் அறிந்து செய்திகளுக்கும் ஆக்கங்களுக்கும் முன்னுரிமை அளிப்பது அவசியம். அநேகம் மக்கள் வெறுக்கக் கூடிய ஆக்கங்களும் சர்ச்சைகளும் தொடரும் நிலை காணப்பட்டால்.. பார்வைகளில் தொடர் வீழ்ச்சி ஏற்படும்.

7. புதிய இணையத்தளங்களின் வரவுகள்.. விளம்பர இணையத்தளங்களின் உக்திகள் கண்காணிக்கப்பட்டு... அதற்கேற்ப யாழும் தன்னை மெருகூட்டிக் கொள்ள வேண்டும்.

8. விளம்பரங்கள் தனித்துவமான இலக்கோடு அமைவது அவசியம். மரண அறிவித்தலுக்கு ஒரு சிலர் அதிக முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்றால் யாழ்.. உல்லாசப் பயணம்.. கல்வி.. பிறந்த நாள்.. பட்டமளிப்பு.. கலை நிகழ்வுகள்.. விளையாட்டு நிகழ்வுகள்.. நூல் வெளியீடுகள்.. நகை மற்றும் உடை வர்த்தகம்.. சர்வதேச இணைய வர்த்தகம் என்று சமூகத்தின் இதர மற்றும் மக்களால் கெளரவம் என்று கருதப்படும் விடயங்கள் சார்ந்த விளம்பரங்களை வரவேற்று உள்வாங்கிக் கொள்வதோடு விளம்பர தாரர்கள் பயனடைவதை உறுதி செய்து கொள்ளின் யாழ் மெருகேற வாய்ப்பு அதிகம் உள்ளது.

9. அங்கத்தவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் கருத்துக்கள செயற்பாடுகள் அவசியம். உ+ம்: போக்குவரத்து போன்ற விளம்பரதாரர்கள் கருத்துக்கக்கள உறுப்பினர்களாகி.. உறுப்பினர் மட்டத்தில் தங்களின் நோக்குகளைக் கொண்டு செல்ல.. அவர்களை ஊக்குவிக்கவும் உற்சாகவும் படுத்தும் தன்மை. இது வெறும் பனர்களை ஒட்டும் விளம்பரதாரர்தளினதை விட மாறுபட்டது. யாழ் போன்ற கருத்துக்கள அடிப்படை இணையத்தளங்களுக்கு போக்குவரத்துப் போன்ற விளம்பர தாரர்களின் வரவு முக்கியம்.

10. யாழ் சர்ச்சை.. குழப்பங்களுக்கு ஆளானாலும்.. அங்கத்தவர்களின் பார்வையாளர்களின் இருப்பை.. தொடர் வரவை அதிகரிக்கும் தன்மையை நிலையை கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். அங்கத்தவர்கள் ஆக்கங்களை எழுதப் பின்நிற்கும் காரணங்களை கண்டறிவதோடு.. அவற்றிற்கு பரிகாரம் தேட வேண்டும். கருத்தெழுத.. ஆக்கங்களைப் படைக்க பயப்படுபவர்களுக்கு.. அதற்கேற்ப தகவல் காப்பு விதிமுறைகள் பலமாக உள்ளன என்பதையும் வாசகர்கள்.. உறுப்பினர்கள் கருத்தெழுத ஆக்கங்களைப் படைக்க பயம் தேவை இல்லை என்பதையும் இனங்காட்ட வேண்டும்.

11. யாழின் vision இல் இலாபம் நோக்கற்ற என்ற நிலை எனியும் தேவையா என்பதையும் அதன் சொந்தக்காரர் விரைந்து தீர்மானிக்க வேண்டும்.

12. நவீன தகவல்தொழில்நுட்பச் சவால்களையும் அதற்கேற்ப மக்களின் தேவைகள் மாறுபட்டுச் செல்வதையும் கருத்தில் எடுத்து யாழ் தன்னை அதற்கு ஏற்ப மக்களிடம் கொண்டு செல்ல முனைய வேண்டும். குறிப்பாக முகப்பில் கருத்துக்களத்தில் வெளியாகும் தரமான.. ஆக்கங்கள்.. மற்றும் கால நேர அடிப்படையில் பொழுதுபோக்கிற்கு ஏற்ப காணொளிகள்.. முந்தோன்றச் செய்யப்படுதல்.

13. அங்கத்தவர்களின் சமூக வலை இணையங்களில் வெளியாகும் யாழில் அல்லாத செய்திகளும் ஆக்கங்களும் முகப்பில் மற்றும் களத்தில் தென்பட சரியான வகையில் வகை செய்தல்.

14. தமிழில் எழுத பல உறுப்பினர்களுக்கு சரியாக அறிய முடியாமல் இருத்தல். பிறமொழி கலந்துரையாடல் பகுதி சுருங்கி இருத்தல். மேலும் தமிழ் ஒலிவடிவ ஆக்கங்களுக்கு தனிப்பகுதி இன்மை. தங்கிலிஸ் பகுதி இன்மை. இவை தமிழ் அறிந்த ஆனால் தமிழில் எழுத வராத.. தமிழை வாசிக்க முடியாத தமிழ் சந்ததிக்கு இங்கு இடமின்றிய நிலை இன்றும் தொடர்கிறது. ஒலி வடிவ ஆக்கங்கள் உ+ம்: தமிழ் மற்றும் பிற மொழி காணொளிகளுக்கு சரியான பகுதிகள் அமைக்கப்பட்டு அவை முகப்பில் dynamic முறையில் தோன்ற வகை செய்யப்படுதல் அவசியம்.

நன்றி.

(இப்படி அறிக்கையை தயாரிக்க.. ஆகும் செலவு ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு என்றால் (கொஞ்சம் அதன் உள்ளக தரவுகளையும் வெளியக தரவுகளையும் ஆராய்ந்து உருப்படியாகச் செய்தால்) சில நூறு பவுண்கள் ஆகும்.) யாழிற்கு இலவசம். :):icon_idea:

Link to comment
Share on other sites

தங்கள் ஆய்வு சிறப்பாக உள்ளது. பொறுப்பில் உள்ளவர்கள் ஆலோசனைகளை உள்வாங்கி தொழிற்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். நிர்வாக கருமங்களில் உள்ள தேக்கத்தை நீக்குவதற்கு அவர்கள் முதலில் முன்வர வேண்டும். இழுத்து அடிக்காமல் சுறுசுறுப்பான காரியங்களை சிந்தித்து செய்யகூடிய தங்களை போன்றவர்களுடன் நிர்வாகத்தினர் வேலை சுமையை பகிர்ந்து கொள்ளலாமே? நன்றி

Link to comment
Share on other sites

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.