sathiri

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை. பாகம் 6

Recommended Posts

sathiri    994

இங்கு நான் எழுதப் போவது என்னுடைய சொந்த அனுபவங்கள் மட்டுமே அதுவும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் அனுபவங்கள். தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை பெரும்பாலும் சாதாரணமாக எவரும் எழுதவோ அல்லது மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள்ளவோ விரும்ப மாட்டார்கள். அதுவும் குறிப்பாக எமது தமிழ் சமூகத்தில் அது நாம் சிறந்தவர்கள். உயர்வானவர்கள் மேன்மையானவர்கள் என எம்மை சுற்றி நாமே கட்டியமைத்திருக்கும் ஒரு கட்டமைப்பினை தகர்ந்துவிடுமோ என்கிற ஒரு பயத்தினாலேயே வெளிப்படையாக எழுதுவதோ பேசுவதோ கிடையாது அப்படி யாராவது எழுதினாலும் எழுதும் ஒருவரை சமுதாயத்தை அல்லது கலாச்சாரத்தினை கெடுப்பவன் என்கிற முத்திரையை குத்தி ஒதுக்கி விடுவதே எமது சமூகத்தின் சிந்தனைப்போக்கு. 70 களில் ஆயுதத்தினை சில இளைஞர்கள் கையில் தூக்கியபொழுது ஒட்டுமொத்த தமிழ் சமூகமுமே இது சாத்தியமா?? இவங்களிற்கு தேவையில்லாத வேலை என்று கேலி பேசியபொழுது அந்த ஒரு சிலர் ஒரு ஆயுதப் போராட்டத்தினை நடாத்தி உலகையே திரும்பி பார்க்கவைத்தனர். அதன் சரி பிழைகள் அதன் தோல்வி தோல்வியின் காரணங்கள் பலஇயக்க மோதல்கள் என்பவற்றிக்கும் அப்பால் ஒரு போராட்த்தினை நடாத்தி காட்டியதோடு மட்டுமல்லாமல் பக்கத்து வீட்டிற்கு போவதென்றாலும் பாட்டியின் அல்லது இன்னொருவரின் துணையோடு போய்க்கொண்டிருந்த தமிழ் பெண்கள் கைகளில் ஆயுதங்களோடு காடுகளிலும் கடலிலும் சமரிட்ட சாதனையை நடாத்தி தமிழ்கலாச்சாரம் என்றால் இப்படித்தான் என்கிற பிற்போக்குகளை தகர்த்திருந்தனர்.

ஆனாலும் இத்தனை நடந்து முடிந்தபின்னரும் 30 வருட யுத்தமும். புலம்பெயர் வாழ்வு மேலைத்தேய கலாச்சாரம் மேலைத்தேய சிந்தனைகளாவது தமிழ் சமூகத்தின் பல பிற்போக்குத்தனங்களை மாற்றியிருக்கின்றதா என்று பார்த்தால் அதன் பலாபலன் ஏமாற்றத்தினையே தருகின்றது. இப்படியான தொரு தமிழ் சமுகத்தில் அதுவும் யாழ்ப்பாண குடியில் பிறந்து இதே சமூகத்துடனானதும் ஆயுதத்தை கையில் தூக்கிய ஒரு இயக்கதிலும் ஒரு இலட்சியத்தோடு சேர்ந்து பின்னர் புலம் பெயர்ந்துவாழும் என்னுடைய சொந்த அனுபவத்தின் இன்னொரு தனிப்பட்ட வாழ்வின் பக்ககங்களே இவை. இது யாரையும் குத்திக்காட்டவோ அல்லது நானும் சமூதாயத்தை திருத்தப் போகிறேன் என்கிற பேர்வழியின் எழுத்தோ அல்ல. வெறும் அனுபவப் பகிர்வு மட்டுமே.இந்தத் தொடரை படிக்கும் போது என்னைப் போலவே படிக்கிறவர்களும் அதே பேன்ற சம்பவங்களை சந்தித்திருப்பீர்கள். அவற்றை உங்களால் எழுதவோ அல்லது மற்றவர்களிடம் பகிரவோ முடியாமல் போகலாம் ஆனால் அந்த சம்பவங்கள் உங்கள் மனக்கண்ணில் ஒரு தடைவை நிச்சயம் வந்து போகும். அதே நேரம் நான் என்னுடைய அனுபவங்களை நாவலாகவும் எழுதத் தொடங்கியிருப்பதால். அந்த நாவலில் இந்த விடையங்களும் சேர்ப்பதற்கு இலகுவாகவும் இருக்குமென்பதால் என்னுடைய பெயரிலேயே சிறி என்கிற ஒரு பாத்திரத்தினை உருவாக்கி இந்தத் தொடரில் உலாவ விடுகிறேன். சிறியோடு நீங்களும் பயணியுங்கள்......

பி.கு என்னுடைய மனைவிக்கு ஏற்கனவே என்னைப்பற்றிய விபரங்கள் பெரும்பாலும் தெரிந்திருந்தது பின்னர் என்னைப்பற்றிய சகல விபரங்களையும் அவரிற்கு தெரிவித்த பின்ரே எங்கள் திருமணம் நடந்தது எனவே இதை எழுதுவதும் அவரிற்கு தெரியும் எனவே எங்கள் தனிப்பட்ட வாழ்கையிலும் எவ்வித பிரச்சனைகளும் வராது என்பதை உறுதி செய்தபின்னரே எழுதத் தொடங்குகிறேன்.

சிறியின் சின்ன வயதுப்பராயம். ஒருவயதாக இருக்கும் போதே சிறுநீரக நோயினால் தாக்கப்பட்டதில் சிறப்பாக கவனிக்கப்படவேண்டிய காரணத்தால் அவனது அம்மம்மாவினால் பொறுப்பெடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றான். நினைவு தெரியாத காலத்திலேயே அம்மம்மாவுடன் வளர்ந்ததால் அவனிற்கு நினைவு தெரிய வந்த காலங்களில் அவன் அம்மம்மாவையே அம்மா என்று அழைக்கத் தொங்கியது மட்டுமல்ல எவ்வித கவலைகளுமற்ற செல்லப்பிள்ளையாக வளர்ந்துவந்த காலங்கள். அவனிற்கு அப்பொழுது ஒன்பது வயது அவனது வீட்டிற்கு அருகிலேயே நகைசெய்யும் ஒருத்தர் இருந்தார்(பத்தர் அல்லது தட்டார்) அவரிற்கு ஒரு நகைக்கடையும் இருந்தது கடையின் பிற புறத்தில் நகை வேலைகள் செய்வார்கள். அவரது மகனிற்கும் சிறிக்கும் ஒரேவயது மட்டுமல்ல இருவரும் ஒரே வகுப்பிலேயே படித்தும் வந்தனர். சிறி மாலை நேரங்களில் அவனுடன் விழையாடப் போவதோடு அங்கு நகை செய்வதையும் வேடிக்கை பார்ப்பான். நகை செய்பவர்கள் துருத்தியில் நெருப்பை பெரிதாக்கி அந்த நெருப்பை வாயில் ஒரு சிறிய குளாயை வைத்து ஊதி நெருப்புச்சுவாலையை வேகமாக ஒரு இடத்தில் குவியவைத்து அதன் நுனியில் தங்கத்தையோ அல்லது வெள்ளியையோ உருக்குவதை மாயவித்தைபோல பார்த்து ரசிப்பது அவனது வழமை. சிலநேரங்களில் அந்த நகை செய்பவர் தன்னுடைய மகனை தன்மடியில் இருத்தி குளாயால் நெருப்பை ஊதவைத்து பொன்னை எப்படி உருக்குவது என்று பழக்குவார் சிறிக்கும் அதைபோல செய்து பார்க்கவேண்டும் போல் இருக்கும். நீண்டநாட்களதாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறியை ஒருநாள் அவர் நீயும் செய்து பாரக்கப்போகின்றாயா என்றதும் சிறிக்கு அளவற்ற சந்தோசம். அவர் சிறியை அழைத்து தனக்கு முன்னால் மடியில் இருத்தி ஒரு மரத்தண்டில் பொற்கம்பியை வைத்து குளாயை அவனது வாயில் வைத்து ஊதச்சொன்னார்.பெற்கம்பி உருகியது. வீட்டிலும் மறுநாள் பாடசாலையிலும் அவன் அதை பெருமையாக சொல்லி ஆனந்தப்பட்டான்.

பின்னர் பலதடைவைகள் அவர் தன்மடியில் அவனை இருத்தி அதேபோல ஊதவிட்டிருக்கிறார். அன்றும் ஒருநாள்மாலை அப்படித்தான சிறி நண்பனைத்தேடி அவன் வீட்டிற்கு சென்றபொழுது நண்பனின் தந்தையைத்தவிர வேறு யாரும் வீட்டில் இல்லை .அன்று லீவுநாள் கடை பூட்டியிருந்தது. அவர் மட்டும் நகை செய்து கொண்டிருந்தார்கடையின் பின்பகுதியில் வழைமைபோல அவரது வேலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவனை தன்னுடைய மடியில் இருத்தியவர் ஊதும் குளாயை கொடுத்தார். சிறியும் ஊதிக்கொண்டிருக்கும் பொழுது அவரது நடவடிக்கைகளில் ஏதோ மாற்றத்தை அவதானித்தான். அவரது கை அவனது தொடைகளை தழுவத் தொடங்கியபெழுது திடுக்கிட்டு எழுந்திருக்முனைந்தபொழுதுதான் பார்த்தான் அவர் உடுத்தியிருந்த வேட்டியை முழுதுமாக விலக்கியிருந்தார். ஓட வெளிக்கிட்டவனை இழுத்து பிடிக்கவே அவன் பலத்தசத்தமாய் சத்தம்போட்டு அழத்தொடங்க இங்கை நடந்ததை வீட்டிலை சொல்லாதை அப்பிடி சொன்னாயெண்டால் கடையிலை மோதிரத்தை களவெடுத்திட்டாயெண்டு எல்லாரிட்டையும் சொல்லுறதோடை மட்டுமில்லாமல் பொலிசிலை பிடிச்சு குடுத்துடுவன் என்று மிரட்டி அனுப்பி விட்டிருந்தார்.

அவன் வீட்டிலும் எதுவும் சொல்லவில்லை எப்படி சொல்வதென்றும் அவனிற்கு தெரிந்திருக்கவில்லை ஆனால் அவன் அன்றிலிருந்து நண்பனுடன் கதைப்பதை நிறுத்திவிட்டிருந்ததோடு மட்டுமல்லாமல். அவரை கண்டாலே அவனிற்கு வெறுப்பும் பயமும் வரும் அவரை பார்ப்தையும் தவிர்த்துவந்தான். ஆனால் அந்த சம்பவத்தின் தாக்கத்திலிருந்து மனநிலை மீண்டுவர நீண்டகாலங்கள் எடுத்தது. இப்பொழுது அவனிற்கு பதினேழு வயது அவர் மீதான பயம் போய் விட்டிருந்தது. ஆனாலும் அந்த சம்பவத்திற்காக அவரை பழிவாங்கவேண்டும் என்கிற எண்ணம் மட்டும் போகவில்லை அதற்கான தருணமும்வந்தது அந்த வருடம் அவர்கள் கோயில் திருவிழா . திருவிழா முடிவதற்கிடையில் பத்தனிற்கு பாடம் படிப்பிப்பது என்று திட்டம் போட்டு அதற்கு உதவியாக இன்னொரு நண்பனையும் சேர்த்துக்கொண்டான். அன்று அவர்களது திருவிழா நாள் அன்றிரவு திருவிழா முடிந்து அவரது மனைவி பிள்ளைகள் எல்லாரும் வீட்டிற்கு போய்விட அவர்மட்டும் கடைசியாக கணக்கு வழக்கு முடித்துவிட்டு தனியாக வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு போகும் வழியில் இருந்த வீதி விளக்கை சிறி ஏற்கனவே கல்லெறிந்து உடைத்துவிட்டு இருட்டில் அவனது நண்பனுடன் பதுங்கியிருந்தான்.

அவர்களது கைகளில் தேடித்தேடி சேகரித்த காச்சோண்டி (காஞ்சவண்டி)குளைகளும் நாயுருவி குளைகளையும் சேர்த்து கடிட்டி தயாராக வைத்திருந்தார்கள். தேவாரம் பாடியபடி வந்தவரை பாய்ந்து நிலத்தில் விழுத்தி வேட்டியை உருவிவிட்டு உச்சிமுதல் உள்ளங்காலவரை கையிலிருந்த குளைக்கட்டுக்களால் அடிக்க அவரது ஜயோ சத்தத்தில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ரோச் லைற்றுடன் வரும்பொழுது அவரது வேட்டியையும் எடுத்தக்கொண்டு அங்கிருந்து மறைந்துவிட்டார்கள்.மறுநாள் நேற்று ராத்திரி யாரோ பத்தனுக்கு காஞ்சோண்டியாலை அடிச்சுப்போட்டாங்களாம் உடம்புமுழுக்க வீங்கிபோச்சுதாம் உடம்புமுழுக்க சுடுசாம்பல்தடவி வாழையிலை கிடத்தியிருக்காம். ஊர்சனத்தின்ரை நகையிலை சேதாரம் எண்டு பவுண் உரஞ்சுற உவனுக்கு உது வேணும் எண்டு ஊர்ச்சனங்கள் கதைத்தார்கள். ஆனால் அடிச்சவங்கள் ஏதும் கோபமெண்டால் தடி பொல்லாலை அடிக்காமல் எதுக்கு காஞ்சவண்டியாலை அடிச்சவங்கள் அதுவும் வேட்டியை ஏன் கோயில் மடத்திலை போட்டிருந்தவங்கள் என்கிற ஆராச்சிகளும் நடக்காமலில்லை. ஆனால் அடிவாங்கியவரிற்கு யார் அடித்தார்கள் ஏன் அடித்தார்கள் என்பது தெரியும் அவரும் அதை வெளியில் சொல்லவில்லை.

இங்கு பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவேளை தனக்கு நடந்ததை அன்றே கூறியிருந்தால் பெரியவர்கள் கேட்டிருப்பார்களா?? அவன் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தான் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குமா அல்லது நகைக்கடைக்காரர் மோதிரத்தை களடிவடுத்துவிட்டான் என்பது தான் பெரிதளவும் நம்பப்பட்டிருக்கும். சிறுவன் பாதிக்கப்பட்டிருந்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டாலும் அதை வெளியில் சொல்லாதே என்று அவனை யே மீண்டும் அவனது உறவுகள் மிரட்டிஅடக்கியிருக்கும். அல்லது அவனது வீ¨ட்டிற்கும் நகைக்கடைக்காரரிற்கும் இதுபற்றி பேசாமல் வேறு ஏதாவது தகராறு நடந்திருக்குமே தவிர பாதிக்கப்பட்டவனிற்கான எவ்வித ஆறுதலோ உளவியல் சிகிச்சைகளோ நிச்சயம் நடந்திருக்காதது மட்டுமல்ல குற்றவாளிக்கும் எவ்வித தண்டனையும் கிடைத்திருக்காது ஏனெனில் எமது சமுதாயஅமைப்பே அப்படியானதுதான்.

Edited by sathiri
  • Like 12

Share this post


Link to post
Share on other sites

< இங்கு நான் எழுதப் போவது என்னுடைய சொந்த அனுபவங்கள் மட்டுமே அதுவும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் அனுபவங்கள். தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை பெரும்பாலும் சாதாரணமாக எவரும் எழுதவோ அல்லது மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள்ளவோ விரும்ப மாட்டார்கள். அதுவும் குறிப்பாக எமது தமிழ் சமூகத்தில் அது நாம் சிறந்தவர்கள். உயர்வானவர்கள் மேன்மையானவர்கள் என எம்மை சுற்றி நாமே கட்டியமைத்திருக்கும் ஒரு கட்டமைப்பினை தகர்ந்துவிடுமோ என்கிற ஒரு பயத்தினாலேயே வெளிப்படையாக எழுதுவதோ பேசுவதோ கிடையாது அப்படி யாராவது எழுதினாலும் எழுதும் ஒருவரை சமுதாயத்தை அல்லது கலாச்சாரத்தினை கெடுப்பவன் என்கிற முத்திரையை குத்தி ஒதுக்கி விடுவதே எமது சமூகத்தின் சிந்தனைப்போக்கு. 70 களில் ஆயுதத்தினை சில இளைஞர்கள் கையில் தூக்கியபொழுது ஒட்டுமொத்த தமிழ் சமூகமுமே இது சாத்தியமா?? இவங்களிற்கு தேவையில்லாத வேலை என்று கேலி பேசியபொழுது அந்த ஒரு சிலர் ஒரு ஆயுதப் போராட்டத்தினை நடாத்தி உலகையே திரும்பி பார்க்கவைத்தனர். அதன் சரி பிழைகள் அதன் தோல்வி தோல்வியின் காரணங்கள் பலஇயக்க மோதல்கள் என்பவற்றிக்கும் அப்பால் ஒரு போராட்த்தினை நடாத்தி காட்டியதோடு மட்டுமல்லாமல் பக்கத்து வீட்டிற்கு போவதென்றாலும் பாட்டியின் அல்லது இன்னொருவரின் துணையோடு போய்க்கொண்டிருந்த தமிழ் பெண்கள் கைகளில் ஆயுதங்களோடு காடுகளிலும் கடலிலும் சமரிட்ட சாதனையை நடாத்தி தமிழ்கலாச்சாரம் என்றால் இப்படித்தான் என்கிற பிற்போக்குகளை தகர்த்திருந்தனர். >

தூக்கல்

< அவர்களது கைகளில் தேடித்தேடி சேகரித்த காச்சோண்டி (காஞ்சவண்டி)குளைகளும் நாயுருவி குளைகளையும் சேர்த்து கடிட்டி தயாராக வைத்திருந்தார்கள். தேவாரம் பாடியபடி வந்தவரை பாய்ந்து நிலத்தில் விழுத்தி வேட்டியை உருவிவிட்டு உச்சிமுதல் உள்ளங்காலவரை கையிலிருந்த குளைக்கட்டுக்களால் அடிக்க அவரது ஜயோ சத்தத்தில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ரோச் லைற்றுடன் வரும்பொழுது அவரது வேட்டியையும் எடுத்தக்கொண்டு அங்கிருந்து மறைந்துவிட்டார்கள்.மறுநாள் நேற்று ராத்திரி யாரோ பத்தனுக்கு காஞ்சோண்டியாலை அடிச்சுப்போட்டாங்களாம் உடம்புமுழுக்க வீங்கிபோச்சுதாம் உடம்புமுழுக்க சுடுசாம்பல்தடவி வாழையிலை கிடத்தியிருக்காம். ஊர்சனத்தின்ரை நகையிலை சேதாரம் எண்டு பவுண் உரஞ்சுற உவனுக்கு உது வேணும் எண்டு வேணும் எண்டு ஊர்ச்சனங்கள் கதைத்தார்கள். ஆனால் அடிச்சவங்கள் ஏதும் கோபமெண்டால் தடி பொல்லாலை அடிக்காமல் எதுக்கு காஞ்சவண்டியாலை அடிச்சவங்கள் அதுவும் வேட்டியை ஏன் கோயில் மடத்திலை போட்டிருந்தவங்கள் என்கிற ஆராச்சிகளும் நடக்காமலில்லை. ஆனால் அடிவாங்கியவரிற்கு யார் அத்தார்கள் ஏன் அடித்தார்கள் என்பது தெரியும் ஆனால் அவரும் அதை வெளியில் சொல்லவில்லை. >

சிகரம்............. பாவம் பத்தர் :lol::lol::D:D:icon_idea: 1.

Share this post


Link to post
Share on other sites

வாசித்தேன் சாத்திரி

அவரவர் சுயசரிதை என்பது வேறு சிலரின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தது. அவரை அது பாதிக்கக்கூடும்.

நிதானமாக எழுதுங்கள். அத்துடன் தொடங்குவதைப்பார்த்தால்..................... தங்கள் வரலாறு நீளும் என்று தெரிகிறது.

குறிப்பு: எனது காதல் பற்றிய ஒரு நிகழ்வை எழுதி முடித்திருந்தேன். அதை இங்கு பிரசுரிக்கமுன்னர் மீண்டும் வாசித்தபோது

அது இன்னொருவரை மாட்டிவிடும் என்பதால் அழித்துவிட்டேன்.

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites

சாத்ஸ்...!!! முதலாவது பாகத்திலயே இவ்வளவு காரமான ஒரு விடயத்தினை தொட்டிருக்கின்றீர்கள். இப்பவே தெரியுது எனக்கு... நீங்கள் போகப்போற தெருவிளக்கு வெளிச்சம்! :D

தொடரட்டும்! :)

ஆவலுடன் அடுத்த பாகத்தையும் எதிர்பார்க்கின்றேன்!

Share this post


Link to post
Share on other sites
sathiri    994

கோ மற்றும் விசுகு தொடருடன் இணைந்திருந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்

Share this post


Link to post
Share on other sites
நிழலி    3,605

..ம்ம்ம்... இந்த திரிக்கு கிடைக்கும் வசை மாரிகளை பொறுத்து என் 'பேரீச்சம் பழம்' தொடரை தொடர்வேன்... ஒரு மட்டுவாக இருந்து கொண்டு தொடரத்தான் கொஞ்சம் யோசனையாக இருக்கு....

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கதையை நீங்களே, ஒளிவு மறைவில்லாமல் எழுதுவதற்கு, அளவில்லாத துணிவு வேண்டும்!

சிறுவயதில் நாங்கள் செய்யும் குறும்புகள், வளர்ந்தபின்பு திரும்பிப் பார்க்கையில் எம்மை வெட்கப்பட வைப்பதுண்டு!

பத்தருக்குத் தண்டனை கொடுத்ததை நான் விமரிசனம் பண்ணவில்லை! அவர் செய்தது தவறேயாயினும், நீங்கள் செய்த செயல் அவரைத் திருத்தியிருக்கும் என நான் நம்பவில்லை!

அவர் செய்தது தவறு தான்! ஆனாலும் பத்து வருடங்களின் பின்பு தண்டனை?

அந்தத் தண்டனை, உங்கள் மனதைச் சாந்தப் படுத்தியிருக்குமெனில் நல்லதே!

ஆனாலும், பத்தருடன் நேருக்கு நேர் கதைத்திருந்தால், அவர் திருந்தியிருக்கச் சந்தர்ப்பம் அதிகம்!

இது எனது பார்வை மட்டுமே, சாத்திரியார்! தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் அனுபவப் பகிர்வு நன்றாக இருக்கின்றது!!!

Share this post


Link to post
Share on other sites
sathiri    994

உங்கள் கதையை நீங்களே, ஒளிவு மறைவில்லாமல் எழுதுவதற்கு, அளவில்லாத துணிவு வேண்டும்!

சிறுவயதில் நாங்கள் செய்யும் குறும்புகள், வளர்ந்தபின்பு திரும்பிப் பார்க்கையில் எம்மை வெட்கப்பட வைப்பதுண்டு!

பத்தருக்குத் தண்டனை கொடுத்ததை நான் விமரிசனம் பண்ணவில்லை! அவர் செய்தது தவறேயாயினும், நீங்கள் செய்த செயல் அவரைத் திருத்தியிருக்கும் என நான் நம்பவில்லை!

அவர் செய்தது தவறு தான்! ஆனாலும் பத்து வருடங்களின் பின்பு தண்டனை?

அந்தத் தண்டனை, உங்கள் மனதைச் சாந்தப் படுத்தியிருக்குமெனில் நல்லதே!

ஆனாலும், பத்தருடன் நேருக்கு நேர் கதைத்திருந்தால், அவர் திருந்தியிருக்கச் சந்தர்ப்பம் அதிகம்!

இது எனது பார்வை மட்டுமே, சாத்திரியார்! தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் அனுபவப் பகிர்வு நன்றாக இருக்கின்றது!!!

புங்கையூரான் இந்தத் தொடரின் நோக்கமே அதுதானே இருத்தி வைத்து கதைப்பது கதைத்து பிரச்னைக்கான தீர்வை கணுவதென்பது எமது சமூகத்தில் எத்தனை விகிதம் சாத்தியமானது?? அன்று சிறி பத்தனை இருத்திவைத்து கதைக்க நினைத்திருந்தாலும் அதற்கு அவர் உடன்பட்டிருப்பாரா?? ஆனால் வன்முறை மட்டுமே எமது சமூகத்தின் எடுபொருள்

Share this post


Link to post
Share on other sites

சிறுவர்கள் மேல் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள்,அதுவும் உறவினர்கள்,நண்பர்கள்,தெரிந்தவர்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் எமது சமூகத்தில் நிலவும் இறுக்கமான எழுதப்படாத சட்டங்களால் மிகத் தீவிரமாக இருட்டோடு இருட்டாக வெளித்தெரியாமல் புதைக்கப்படுகின்றன..இவற்றால் அந்தச் சிறுவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் மற்றும் உடல்த் தாக்கம்களைப் பற்றி பெற்றோர்கள் உட்பட யாரும் சிந்திப்பதே இல்லை... இவைபற்றி வெளியில் தெரிவித்தால் அந்தக்குடும்பத்துக்கு சமூகம் வழங்கும் அங்கீகாரம் இரத்துச்செய்யப்படும்..அந்தச் சிறுவர்கள் இப்பொழுது மட்டுமல்ல எதிர்காலத்தில் வளர்ந்த பின்னும்கூட அவர்களின் திருமணம் போன்ற முக்கியமான இடங்களில் சமூகத்தால் ஒதுக்கப்படும் நிலையை எதிர்கொள்ளுவார்கள்...இந்த சமூக ஒதுக்கலில் பெண்பிள்ளைகள்தான் மிகமோசமாக பாதிக்கப்படுவார்கள்..கற்பு எனப்படும் மிகமோசமான ஒரு பிற்போக்கு என்னத்தால் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கும் இந்தச் சமூகம் பாலியல் வன்புணர்ச்சிகளின் பின்னாலும்கூடப் பாதிக்கப் பட்டவர்களை கற்பின் பெயரால் ஒதுக்கிவைக்கும் ஒரு வன்மம் பிடித்த சமூகம் இப்படியான விடயங்களை போட்டு உடைக்க எப்படி அங்கீகாரம் வழங்கும்...?இதனால் குற்றவாளிகள் மிக நல்லவர்களாக எமது சமூகத்தில் சுதந்திரமாக உலாவித்திரிகிறார்கள்..அந்தக் குழந்தைகளுக்கு நிகழ்ந்த படுமோசமான பாதிப்புக்களுக்கு எங்காவது ஒன்றிரண்டு சம்பவங்களைத்தவிர பெரும்பாலும் கடைசி வரை நீதி கிடைப்பதே இல்லை...எமது சமூகத்தின் பிற்போக்குத்தனங்கள் உடைக்கப்படும்போது இப்படியான சம்பவங்களை மூடி மறைக்கும் மன நிலை மாறி குற்றவாளிகளை சமூகத்தில் இணங்காட்ட பெற்றோர்கள் தயாராவது மட்டுமன்றி அந்தக் குழந்தைகள் உடல் உள ஆலோசனைகளைப் பெற்று சமூகத்தின் அவர்கள் மேலான பார்வையில் மாற்றம் ஏற்பட்டு எல்லோரையும் போல சாதாரணமாக சமூக வாழ்க்கையில் தொடரக்கூடியதாக இருக்கும்.. சமூகத்தின் பிற்போக்குத்தனங்களை வெளிப்படுத்தும் நல்ல விடயம் ஒன்றுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள்...எங்கள் இறுக்கமான சமூகக் கட்டமைப்பின் உச்சந்தலையில் சம்மட்டியால் அடிக்கவேண்டும்...அதை நாங்கள்தான் செய்யவேண்டும்..தொடருங்கள்...

Edited by சுபேஸ்

Share this post


Link to post
Share on other sites
arjun    1,731

பெண்ணியவாதிகள் போல ஆணியவாதியாக மாறிய சாத்ஸ் இற்கு நன்றிகள்.எப்படி அடக்கபட்டாலும் குமுறித்தானே ஆகவேண்டும் .

எனக்கும் இப்படி ஒருசம்பவம் நடந்தது.O/L PURE MATHS உதவி கேட்டு போன நண்பனின் அண்ணன் ஒருநாள் நகத்தை கடிகடி என்று கடித்துக்கொண்டு ஓரளவு கைகள் நடுங்கியபடி கை போட்டார் .மெதுவாக தட்டிவிட்டு வீடுவந்துவிட்டேன்.பிறகு போகவில்லை .அப்போது அவர் யுனிவர்சிட்டி.கண்டால் ஒரு வித அந்தரத்துடன் கடந்து போவார்.இப்போ அவுஸ்திரேலியாவில் லெக்சரராக இருக்கின்றார் .

Share this post


Link to post
Share on other sites

ஹிஹி.. இதைமாதிரி எனக்கும் ஒரு அனுபவம் இருக்கு..! :unsure: ஆனால் உங்கள் அளவுக்கு மோசமில்லை..! கை சேட்டை தொடங்கின உடனே பின்வாங்கிவிட்டன்..! :lol:

கடி இலை வைத்தியம் குடுக்கிற அளவு வயது வரேக்குள்ளை நான் வேறை நாட்டிலை இருந்தன்..! :blink:

Share this post


Link to post
Share on other sites

-----

அவர் சிறியை அழைத்து தனக்கு முன்னால் மடியில் இருத்தி ஒரு மரத்தண்டில் பொற்கம்பியை வைத்து குளாயை அவனது வாயில் வைத்து ஊதச்சொன்னார்.பெற்கம்பி உருகியது. வீட்டிலும் மறுநாள் பாடசாலையிலும் அவன் அதை பெருமையாக சொல்லி ஆனந்தப்பட்டான்.

பின்னர் பலதடைவைகள் அவர் தன்மடியில் அவனை இருத்தி அதேபோல ஊதவிட்டிருக்கிறார். அன்றும் ஒருநாள்மாலை அப்படித்தான சிறி நண்பனைத்தேடி அவன் வீட்டிற்கு சென்றபொழுது நண்பனின் தந்தையைத்தவிர வேறு யாரும் வீட்டில் இல்லை .அன்று லீவுநாள் கடை பூட்டியிருந்தது. அவர் மட்டும் நகை செய்து கொண்டிருந்தார்கடையின் பின்பகுதியில் வழைமைபோல அவரது வேலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவனை தன்னுடைய மடியில் இருத்தியவர் ஊதும் குளாயை கொடுத்தார். சிறியும் ஊதிக்கொண்டிருக்கும் பொழுது அவரது நடவடிக்கைகளில் ஏதோ மாற்றத்தை அவதானித்தான். அவரது கை அவனது தொடைகளை தழுவத் தொடங்கியபெழுது திடுக்கிட்டு எழுந்திருக்முனைந்தபொழுதுதான் பார்த்தான் அவர் உடுத்தியிருந்த வேட்டியை முழுதுமாக விலக்கியிருந்தார். -------

சாத்திரியாரிலை, பத்தர் கை போட்டாப் பிறகு தான்..... இந்தவிளையாட்டுக்கு , (பொற்)கம்பி என்று பெயர் வந்திருக்க வேணும் :lol: .

கதை சுவராசியமாக உள்ளது சாத்திரியார். :)

யாழ்ப்பாணத்திலை இப்பிடியான ஆட்கள், இலைமறை காயாக... பல இடங்களில் உள்ளார்கள். மண் வாசனையோ தெரியாது. :icon_idea:

சில ஒழுங்கைகளுக்கால்.... உயிரை, கையிலை பிடிச்சுக்கொண்டு தான்... போக வேணும். :D

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

எனது நண்பர்களில் அநேகமானோர் தமது பால்ய வயசுகளில் உறவினரான அல்லது வெளி ஆண்களினால்

பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் இது வீட்டை விட்டு வேறு இடம்களில் தங்க நேரிடும் போதே

அதிகமாக நடந்து இருக்கிறது இதை அவர்கள் சீரியஸ் ஆக எடுக்கவில்லை

சிரிச்சு கொண்டே சொன்னார்கள் சின்னனில

தங்களுக்கும் இப்பிடி நடந்தது எண்டு

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் மச்சி :lol: :lol:

Share this post


Link to post
Share on other sites
shanthy    1,154

பேசாப்போருளை சாத்திரி பேசத்துணிந்ததற்கு முதலில் பாராட்டுக்கள். (பாராட்டினா என்ன பாராட்டாட்டியென்ன சாத்திரி எடுத் காரியத்தை எப்பிடியும் முடிக்கிற தைரியசாலி)

சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் எமது சமூகத்தில் அதிகம். ஆனால் இதனை சொன்னால் யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். மாற்று இனத்தில் இல்லையென சொல்ல வரேல்ல. எங்கள் இறுக்கமான கலாசார பாரம்பாரியம் என்ற சொல்லால் இது வெளித்தெரியாத இரகசியமாகவே இருந்து வருகிறது.

சுபேஸ் சொன்னமாதிரி பெண்பிள்ளைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளில் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு பள்ளியில் இவ்விடயம் தொடர்பாக கற்பிக்கிறார்கள். நிருபா என்ற பெண் எழுத்தாளர் ஒரு சிறுகதையில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் பற்றி எழுதியிருந்தார். அது பெரும் சர்ச்சையை எங்கள் கலாசார காவலர்களால் ஏற்படுத்தப்பட்டது. எதிர்வரும் பதிவுகள் சாத்திரிக்கு சாத்த விழும். ஆனாலும் அஞ்சா நெஞ்சன் சாத்திரி எடுத்தகாரியம் நிறைவேற்ற வாழ்த்துக்கள்.

Edited by shanthy

Share this post


Link to post
Share on other sites

பேசாப்போருளை சாத்திரி பேசத்துணிந்ததற்கு முதலில் பாராட்டுக்கள். (பாராட்டினா என்ன பாராட்டாட்டியென்ன சாத்திரி எடுத் காரியத்தை எப்பிடியும் முடிக்கிற தைரியசாலி)

சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் எமது சமூகத்தில் அதிகம். ஆனால் இதனை சொன்னால் யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். மாற்று இனத்தில் இல்லையென சொல்ல வரேல்ல. எங்கள் இறுக்கமான கலாசார பாரம்பாரியம் என்ற சொல்லால் இது வெளித்தெரியாத இரகசியமாகவே இருந்து வருகிறது.

சுபேஸ் சொன்னமாதிரி பெண்பிள்ளைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளில் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு பள்ளியில் இவ்விடயம் தொடர்பாக கற்பிக்கிறார்கள். நிருபா என்ற பெண் எழுத்தாளர் ஒரு சிறுகதையில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் பற்றி எழுதியிருந்தார். அது பெரும் சர்ச்சையை எங்கள் கலாசார காவலர்களால் ஏற்படுத்தப்பட்டது. எதிர்வரும் பதிவுகள் சாத்திரிக்கு சாத்த விழும். ஆனாலும் அஞ்சா நெஞ்சன் சாத்திரி எடுத்தகாரியம் நிறைவேற்ற வாழ்த்துக்கள்.

சாந்தியக்கா

நல்லா ஏத்தி கொம்பில விடுகின்றீர்கள்?

முன்பு ஒருத்தர இப்படித்தான் ஏத்திவிட்டு கூத்துபார்த்து இன்று ஆளைத்தேடுகின்றோம்.

அடுத்தபலி நம்ம சர்த்தா??? :lol::icon_idea: :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

எழுதுங்கோ சாத்திரி. சில விடயங்களை வெளிப்படையாக பேச சங்கடமாக இருந்தாலும், சமூக விழிப்புணர்வை உண்டாக்க பேசவேண்டியுள்ளது.

இதில் முக்கியமாக கற்க வேண்டிய பாடம், பிள்ளைகளை மற்றவர்களை நம்பி விட்டுச் செல்வது. புலத்திலும் பிள்ளைகளை மற்றவர்களின் பராமரிப்பில் விட்டு விட்டு வேலை செய்யும்

பெற்றோர் இதனைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.

எனக்கு அப்பொழுது பதினாலு வயது. பார்ப்பதற்கு பத்து வயது பெடியன் மாதிரிதான் இருப்பேன். ஆனால் வீட்டு வேலை,தோட்ட வேலை எல்லாம் செய்து இருபது வயது இளைஞனின் பலம் இருந்தது. போதாததிற்கு புரூஸ் லீ யின் படங்களைப் பார்த்து கையால் செங்கற்களை உடைக்க முயற்சித்துக் கொண்டிருந்த காலமது.

ஒரு நாள் அயலில் உள்ள இடத்திற்கு வீட்டு அலுவல் காரணமாக போய்வர நேரமாகி விட்டது. இரவு ஒன்பது மணியளவில் மினிபஸ் ஒன்றில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். எனக்கு பக்கத்து இருக்கையில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்து என்னுடன் நன்றாகப் பேசிக் கொண்டு வந்தார். சிறு நேரத்தில் தூங்கி விட்டேன். ஏதொ மாதிரி இருந்தது, திடுக்கிட்டு விழித்தேன். எனது தொடைப்பகுதியை தடவிக் கொண்டிருந்தார். ஏற்கனவே நண்பனொருவன் இப்படியான தனது அனுபவத்தைக் கூறியிருந்தான். அவரிடம் இங்கு வேணாம் என்று சொன்னேன். எனது சம்மதமான சிக்னலைப் புரிந்து அண்ணை, ஒன்றும் செய்யாமல் பேசாமல் வந்தார். ஊரில் இறங்கி பஸ் நிலையத்திற்கு தள்ளியுள்ள வயல் பக்கம் கூட்டிச் சென்றார். வேட்டியை அவிழ்த்து நிலத்தில் விரித்த பின் என்னை நோக்கித் திரும்பினார். தயாராக இருந்த எனது கால் அவரின் கவட்டை நோக்கி மிகவும் ஆக்ரோஷமாக கிளம்பியது. கத்திக் கொண்டு குனிந்தார். முகத்தில் ஒரு குத்து. கீழே விழுந்தார். பயத்தில் ஒடி விட்டேன். அன்று இரவு முழுவதும் பயத்தில் தூங்கவில்லை. பொழுது புலர்ந்த பின் அங்கு சென்று பார்த்தேன். நல்ல காலம் ஆளைக் காணவில்லை.

Share this post


Link to post
Share on other sites
putthan    1,480

<p>

சாத்திரியாரிலை, பத்தர்  கை போட்டாப் பிறகு தான்..... இந்தவிளையாட்டுக்கு , (பொற்)கம்பி என்று பெயர் வந்திருக்க வேணும் :lol: .

கதை சுவராசியமாக உள்ளது சாத்திரியார். :)  

யாழ்ப்பாணத்திலை இப்பிடியான ஆட்கள், இலைமறை காயாக... பல இடங்களில் உள்ளார்கள். மண் வாசனையோ தெரியாது. :icon_idea:

சில ஒழுங்கைகளுக்கால்.... உயிரை, கையிலை பிடிச்சுக்கொண்டு தான்... போக வேணும். :D

ஜ..ஜ..ஜயோ ...தமிழ்சிறி, இனி வந்து சொல்லபோறாங்கள் யாழ்ப்பாணியின் இந்த மையவாத சிந்தனையால்தான் நாடு கிடைக்கவில்லை என்று...சாத்திரியார் பிற்காலத்தில் மின் கம்பத்தில் இருந்த ...பத்தர் இவர் இல்லைதானே....உண்மையை எழுதிய சாத்திரியாருக்கு பாராட்டுக்கள்

Share this post


Link to post
Share on other sites
shanthy    1,154

சாந்தியக்கா

நல்லா ஏத்தி கொம்பில விடுகின்றீர்கள்?

முன்பு ஒருத்தர இப்படித்தான் ஏத்திவிட்டு கூத்துபார்த்து இன்று ஆளைத்தேடுகின்றோம்.

அடுத்தபலி நம்ம சர்த்தா??? :lol::icon_idea: :icon_idea:

ஐயோ விசுகு அப்பிடியெல்லாம் என்னைப் புகழாதையுங்கோ. :lol: நாங்கள் சாத்திரி கொப்பாலை விழுத்தி சாத்துவிழும் எழுதாதேங்nகோண்டு சொன்னா சாத்து எழுதாமல் விடப்போறாரா ? :icon_idea: இல்லைத்தானே. அஞ்சா நெஞ்சனாய் நிண்டு எழுதத்தான் போறார். ஆக யார் கொப்பை முறிச்சாலும் சாத்திரி கொப்பில நிண்டு சொல்ல வந்ததை எழுதிவிட்டுத்தான் இறங்குவார் என்பதனை கள உறவுகள் அறிவார்கள். :icon_idea::D

யாரது முந்தி ஏத்திவிட்டு விழுத்தினது ? :o (பொது அறிவை வளக்கத்தான் இந்தக் கேள்வி)

Share this post


Link to post
Share on other sites

மேலிடதினர் தமகுவிருபமானவர் எழுதினால்மாடும் அதஅழிகமாடீனமாகும் இதயே நான்க எழுதினா அழின்சுபோய் இருகுமபா :unsure:

Share this post


Link to post
Share on other sites

வெள்ளைக்காரன் கெட்டிக்காரன்.

சமூகம் தப்பு என்றும் தவறு என்றும் மற்றவர்களுக்குக் கெடுதல் என்றும்

கூவித்திரியும் செயல்களைச் சட்ட ரீதியில் அங்கீகரித்து விட்டுப்

பல மேற்குலக நாடுகள் தப்பிக் கொள்கின்றன.

ஊரில் திருவிழாக்காலம் தேர்முட்டி குளத்தடி அன்னதானமடம்

தொலைக் காட்சியில் நள்ளிரவு வரை திரைப்படம் போடும் இடங்கள்

இப்படியான சம்பவங்கள் தலைதூக்கி நிற்கும்.

பாடசாலைகளில் சில ஆசிரியர்களே மாணவர்களிடமும்

திருச்சபைகோவில்களின் மதகுருமார்கள் உதவிக்குச் செல்லும் இளையோர்களிடமும்

இப்படியான சிலுமிசங்களில் ஈடுபட்டதை நான் அறிவேன்.

அங்கீகரித்தல் என்பது அரச ஆதரவுடன் நடக்கும் விபச்சாரம் போன்றது சாத்திரியாருக்குப் பாராட்டுக்கள்

Edited by வாத்தியார்

Share this post


Link to post
Share on other sites
sathiri    994

சகாரா .கவிதை .அலை.நிழலி உடையார்.சுபேஸ்.அர்ஜ°ன். இசை. தமிழ்சிறி.அபராஜிதன் ஆகியோர் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். :) புத்தன் உங்களிற்கு தனிமடலில் விபரம் இட்டிருக்கிறேன். :icon_idea: சாந்தி நான் பத்தனிற்கு அடிச்ச காஞ்சோண்டி அடியைவிட உங்கடை அடி மோசமாய் இருக்கு. :lol:

எழுதுங்கோ சாத்திரி. சில விடயங்களை வெளிப்படையாக பேச சங்கடமாக இருந்தாலும், சமூக விழிப்புணர்வை உண்டாக்க பேசவேண்டியுள்ளது.

இதில் முக்கியமாக கற்க வேண்டிய பாடம், பிள்ளைகளை மற்றவர்களை நம்பி விட்டுச் செல்வது. புலத்திலும் பிள்ளைகளை மற்றவர்களின் பராமரிப்பில் விட்டு விட்டு வேலை செய்யும்

பெற்றோர் இதனைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.

எனக்கு அப்பொழுது பதினாலு வயது. பார்ப்பதற்கு பத்து வயது பெடியன் மாதிரிதான் இருப்பேன். ஆனால் வீட்டு வேலை,தோட்ட வேலை எல்லாம் செய்து இருபது வயது இளைஞனின் பலம் இருந்தது. போதாததிற்கு புரூஸ் லீ யின் படங்களைப் பார்த்து கையால் செங்கற்களை உடைக்க முயற்சித்துக் கொண்டிருந்த காலமது.

ஒரு நாள் அயலில் உள்ள இடத்திற்கு வீட்டு அலுவல் காரணமாக போய்வர நேரமாகி விட்டது. இரவு ஒன்பது மணியளவில் மினிபஸ் ஒன்றில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். எனக்கு பக்கத்து இருக்கையில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்து என்னுடன் நன்றாகப் பேசிக் கொண்டு வந்தார். சிறு நேரத்தில் தூங்கி விட்டேன். ஏதொ மாதிரி இருந்தது, திடுக்கிட்டு விழித்தேன். எனது தொடைப்பகுதியை தடவிக் கொண்டிருந்தார். ஏற்கனவே நண்பனொருவன் இப்படியான தனது அனுபவத்தைக் கூறியிருந்தான். அவரிடம் இங்கு வேணாம் என்று சொன்னேன். எனது சம்மதமான சிக்னலைப் புரிந்து அண்ணை, ஒன்றும் செய்யாமல் பேசாமல் வந்தார். ஊரில் இறங்கி பஸ் நிலையத்திற்கு தள்ளியுள்ள வயல் பக்கம் கூட்டிச் சென்றார். வேட்டியை அவிழ்த்து நிலத்தில் விரித்த பின் என்னை நோக்கித் திரும்பினார். தயாராக இருந்த எனது கால் அவரின் கவட்டை நோக்கி மிகவும் ஆக்ரோஷமாக கிளம்பியது. கத்திக் கொண்டு குனிந்தார். முகத்தில் ஒரு குத்து. கீழே விழுந்தார். பயத்தில் ஒடி விட்டேன். அன்று இரவு முழுவதும் பயத்தில் தூங்கவில்லை. பொழுது புலர்ந்த பின் அங்கு சென்று பார்த்தேன். நல்ல காலம் ஆளைக் காணவில்லை.

வேட்டியை விரிச்சிட்டு விருந்து சாப்பிட தயாரானவருக்கு நீங்கள் செய்தது அனியாயம் அந்த பாவம் உங்களை சும்மாவிடாது தப்பிலி :lol: :lol:

Edited by sathiri

Share this post


Link to post
Share on other sites
ஆரதி    336

மேலிடதினர் தமகுவிருபமானவர் எழுதினால்மாடும் அதஅழிகமாடீனமாகும் இதயே நான்க எழுதினா அழின்சுபோய் இருகுமபா :unsure:

உம்மட தமிழின் வள்ளலிலை எழுதவும் வெளிக்கிட்டிட்டீரோ :lol:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites