Jump to content

யாரை கடுமையாக விமர்சனம் செய்வது சரி? புலிகளையா அல்லது ஏனைய தமிழ் பிரிவினரையா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கோமகன் நாங்கள் வாழும் பிரான்சில் இந்தப்பிரிவுகள் இல்லையோ?

அவர்கள் பிரான்சினை உடைத்தா வைத்துள்ளார்கள்.?

இன்றும் பரிசுக்கும் (Paris) மார்சேயுக்கும் (Marseille) ஒத்துவராதே???

என் வீட்டை

என் குடும்பத்தை

என் அயலவரை

என் கிராமத்தை

என் தொகுதியை

என் மாவட்டத்தை

என் நாட்டை.....

என்றுதான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்துவமும் அதற்கான உழைப்பும் பொது உணர்வும் ஆரம்பமாக முடிடியுமே அன்றி பிறந்த உடன் தன் இனத்தை அல்லதுது நாட்டை நேசித்தான் என்று எவருமில்லை.

அதைப்புரிந்து கொண்டால் அதுவே எம்மிடமும் இருந்தது இருக்கிறது. இதில் சலித்துக்கொள்ள எதுவுமில்லை.

கிழக்கு மாகாணத்தில் முரளியின் களேபரத்துக்கு பின் நடந்த நிருபர்களின்கேள்விகளுக்கு தலைலவர் சொன்னது.

தனது குடும்பத்தை தனது ஊரை நேசிப்பவனே நாட்டை நேசிப்பான். அதில் எதுவித தப்புமில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 124
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தமக்குள் எடுத்த அத்தனை நடவடிக்கையும் கொடுமை என்றுதான் சொல்ல முற்படுகின்றேன். அது அச்சுறுத்தல் உட்பட ஆளை போட்டுத்தள்ளுதல் ஒரு சமூகத்தையே வெளியேற்றுதல் குழு மோதல்கள் என ஆயிரக்கணக்கான செயல்கள். இவற்றை இந்த ஊரில் இன்ன நபரை மண்டையில் போட்டது என்று சொல்லவும் அதற்கு நபர் துரோகி அதனால் கொல்லப்பட்டார் என்று நியாயம் கற்பிக்கும் பதில்கேட்கவுமாக நான் எந்தக் கருத்தையும் முன்வைக்க விரும்பவில்லை. ஒட்டுமொத்தமகாக எமக்குள் உள்ள முரண்பாடுகள் அவை எங்கே தோன்றுகின்றது அதன் விழைவுகள் என்ன என்பது குறித்து எழுத முற்படுகின்றேன்.

உங்களுடைய கருத்து என்னால் புரியபடுகின்றது............

அதே நேரம் ஒரு அற்பணிப்பை அவதுறு கூறும் அளவிற்கு நாம் போகலாமா என்ற கேள்வியும் உள்ளது.

களவு எடுக்க கூடிய பொருட்களை நீங்கள் வைத்திருந்ததால்தான் அவன் தை திருடினான் என்று பொருட்களை களவு கொடுத்தவனை தண்டிப்பது என்ன நியாஜம்?

களவுக்கு எதிராக சட்டம் கொண்டுவந்தவனை சாடுவதில் என்ன நியாஜம்?

இவைதான் கேள்விகளாக இருகின்றன............. ஒட்டுமொத்த இனமும் எனும் போது இங்கே இந்த இனத்திற்கு தம்மை கொடுத்தவரையும் நாடு சந்தியில் வைத்து சானியடிப்பதில் நாம் கற்றுக்கொள்ள கூடியது என்ன?

ஜேசு கிறீஸ்துவை கூடியிருந்த ஒருவன் காட்டி கொடுக்கவில்லையா? தமிழனிடம் மட்டும்தான் தவறு உள்ளதா? தவறுபவன் எல்லா இடமும்தான் இருக்கிறான்.

Link to comment
Share on other sites

மருதங்கேணி,

தியாகங்களை எனது கருத்துக்கள் சுரண்டிப்பார்க்கவில்லை. அற்பணிப்புகள் எப்போதும் அற்புதமாகவும் நாலு தலமுறை கடந்து நடக்கும் ஒரு எழுச்சிக்கு அடிப்படையாகவும் இருக்கும். ஆனால் இவ்வளவு கடும் உழைப்பு அற்பணிப்பு தியாகம் அத்தனையையும் நாசமாக்கிய ஒரு நச்சுக் கருவை ஏதோ ஒரு வகையில் சிதைக்கவேண்டும் என்பதே நான் முன்வைக்க விரும்பும் கருத்து.

புலிகளின் அதிஉச்ச முயற்சிகள் என்பது தனியே சிங்களத்தை குறிவைத்ததல்ல. இந்த நச்சுக்கருவை குறிவைத்ததுதும் தான்.

எதிரியிடம் பிடிபட்டால் நஞ்சு அருந்தி சாகவேண்டும் என்ற கொள்கை இல்லாத புலிகளை இந்தச் சமூகம் எவ்வாறு அணுகியிருக்கும்?

கரும்புலிகள் இல்லாத புலிகளை எப்படி அணுகியிருக்கும்?

நிதிமோசடிசெய்தால் மரணதண்டனை என்ற நிலை இல்லாத புலிகளை இந்த சமூகம் எப்படி அணுகியிருக்கும்?

ஒழுக்கக் கட்டுப்பாடு. இயக்க விதிகளை மீறிய பாலியல் உறவுக்கு மரணதண்டனை என்ற நிலை இல்லாத புலிகளை இந்த சமூகம் எப்படி அணுகியிருக்கும்?

தற்கொலைத் தாக்குதல்கள் பயங்கரவாதத்தின் தலமைச் சக்தியாக உலக வல்லாதிக்கத்தால் அணுகப்பட்ட காலகட்டங்களில் புலிகளால் அவ்வாறனதொரு படை நடவடிக்கையை கைவிட முடியாததற்கு இந்த சமூகமும் காரணமாகின்றது. படைநிலைகளை சிதைத்தெறிவது குறைந்த உயிரிழப்பில் கூடிய அழிவை ஏற்படுத்துவது என்ற புறக்காரணிகளை விடுத்து இவைகள் உறுதியின் முதுகெலும்பாகவும் புலிகள் மீதான மக்களின் நம்பிக்கையை தக்கவைப்பதற்கான அடிப்படையாகவும் இருந்தது.

புலிகளின் அதி உச்ச நடவடிக்கைகள் இந்த சமூகத்தின் முரண்பாடுகளை கையாழ்வதற்கான உத்தியுடன் கூடியது. அவைகளை இந்த சமூகத்தில் இருப்பில் இருந்த இறுக்கங்களுக்கு ஒரு படி மேலான இறுக்கங்களை முன்வைத்து நகர்வது என்றும் இந்த சமூகத்தை கையாள்வதற்கு அவசியமான நகர்வு என்றும் விரிவாக புரிந்துகொள்ளப்படவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

உலகத்தின் போக்கே அழிவுக்கு காரணம் என்று ஒரு காரணம் பரவலாக முன்வைக்கப்படுகின்றது. இதில் உண்மை இருக்கின்றது. ஆனால் இந்த உலகத்துக்கு முன் நாம் எப்படி இருந்தோம் என்பதே கேள்வி.

உலகம் போராட்டத்தை பயங்கரவாதம் என்கின்றது. ஏன் ? எமக்குள் முப்பத்திரண்டு இயக்கங்களாக குத்துப்படுகின்றோம் ஆளையாள் போட்டுத்தள்ளி கொலைகளை செய்கின்றோம். அதில் முக்கால் வாசி இந்தக்குத்துப்பாட்டின் விழைவாக பல குழுக்கள் அரசுடன் இணைகின்றது. மக்கள் நம்பிக்கை இழக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விரக்தியடைகின்றது. மதப்பிளவுவருகின்றது. இது இனப்பிரச்சனையா மதப்பிரச்சனையா என்ற கேள்வி வருகின்றது. பிரதேசவாதம் வருகின்றது. அரசியல் படுகொலைகள். பெருவாரி மக்கள் போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டு நிற்கின்றார்கள். இது குழு மோதல். பயங்கரவாதம் என்று உலகம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு சிங்களப் பேரினவாதம் என்ற புறநிலைக் காரணத்தை தவிர என்ன அகநிலை பதில் எம்மிடம் இருந்தது??

எனது கருத்துக்கள் புலி சரி மற்ற இயக்கம் பிழை அல்லது புலி செய்தது பிழை என்பதல்ல மாறாக அக நிலையில் நாம் ஐக்கியப்பட்டால் ஒரு சந்தர்ப்பத்தில் பயங்கரவாதம் என்று இனவிடுதலையை அழித்தவர்களே இனவிடுதலைக்கு வழிசமைப்பார்கள். இந்த முரண்பட்ட உலகில் இதற்கான சந்தர்ப்பம் அதிகம். நாம் சிதைந்துபோய் இருப்பதால் எம்மை வைத்து ஒரு மண்ணாங்கட்டிக்கும் பிரயோசனம் இல்லை என்ற முடிவிலே இந்த உலகம் இருக்கின்றது. இதனால் காலகாலம் சிங்களவனையே தஜா பண்ணவேண்டிய தேவை ஏனைய நாடுகளுக்கு இருக்கின்றது.

அணுகுண்டு போட்டதன் பிறகு ஜப்பான் அமரிக்காவை அழிக்க வரிந்துகட்டவில்லை மாறாக தனது பொருளாதரத்தை உலகின் முதன்நிலைக்கு கொண்டுவருவதென முடிவெடுத்தது. அதுதான் சரியான முடிவு. அதுபோல் நாம் எடுக்கவேண்டிய முடிவு எமது முரண்பாடுகளையும் அதுதந்த தனிமனித, சமூக இயல்புகளையும் துவசம் செய்து புதிய ஐக்கியப்பட்ட சமூகமாக உருவெடுப்பதே. இந்த நிலை இது குறித்த கருத்தாடல்கள் தியாகம் செய்தவர்களை அவமதிப்பதல்ல மாறாக மரியாதைசெய்வதே ஆகும்.

டக்ளஸ், கருணா, பிள்ளையான் அல்லது பல இயக்கங்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் பலதரப்பட்டவர்களின் செயற்பாடுகள், இவ்வறு குறுகிய வட்டத்தில் எமது கருத்தாடல்கள் முடங்கமுடியாது. இவைகள் அனைத்தையும் கடந்து ஒரு பொதுவெளிக்குள் நாம் செல்லவேண்டும். நாம் காலகாலம் எமக்குள் உரசிக்கொண்டிருக்கின்றோம், முன்னர் சாதிமதம் பிரதேசம் பின்னர் இயக்கங்கள் குழுக்கள் அதன்பின்னர் அதன் எச்சங்கள். எப்படிப்பார்த்தாலும் எமக்குள்ளாகவே எமது சக்தி விரயப்படுத்தப்படுகின்றது. எமது சக்தியை ஒருமுகப்படுத்தி புறநிலைக்கு கொண்டுசெல்லமுடிந்ததில்லை. இது ஏன் என்று சிந்திக்கும்போது சில விசயங்களை எழுதவேண்டிவருகின்றது தவிர இது யாருக்கும் எதிரானதோ யாரையும் புண்படுத்தும் நோக்கிலானதோ அல்ல.

Link to comment
Share on other sites

தமிழர் இயக்கங்களின் ஒற்றுமைக்கு புலிகள் குறுக்காக நின்றார்கள் என்று அடிக்கடி புலம்பல்கள் வருவதுண்டு. இன்று புலிகளின் பிரசன்னம் இல்லாத நிலையில் டக்ளஸ் தொடக்கம் ஏனையவர்களும் ஒரு கொடியின் கீழ் அல்லது பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு என்ன செய்கிறார்கள் என மக்கள் வாஞ்சையுடன் கேட்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய அளவில் பிரதேச வாதம் என்னும் மனநிலையுடன் தன் இனத்தையே பிரித்துப் பார்க்கும் இந்தச்சமூகம் பிரதேசத்துக்குள் ஊர் ரீதியாகவும் ஊருக்குள் சாதி ரீதியாகவும் குடும்பத்துக்குள் ஆண் ஆதிக்கத்தின் மூலமும் பிரிவினைகளின் வெவேறு வடிவங்களை கட்டமைத்து தனிமனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.எட்டுப்பேர் இருக்கும் சபையில் இருந்து எட்டுக்கோடி பேர் இருக்கும் சமூகம் வரைக்கும் தன்னை உயர்த்திப் பேசுவதற்க்காக மேலானவனாகக் காட்டுவதற்க்காக ஜாதி,மத,ஊர்,பிரதேச பிரிவினைகளை இந்தச்சமூகம் ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறது.வீட்டுக்குள்ளே இது ஆண் என்ற மேலாதிக்க செருக்கு மனநிலையையும் பெண்களை இயலாதவர்களாக ஆண்களுக்குக் கீழ்ப்படிவானவர்கள் என்ற கருத்தையும்,ஊருக்குள்ளே ஜாதிப் பிரிவுகளையும்,பிரதேசத்துக்குள் ஊர்ப்பிரிவினைகளையும்,தேசத்துக்குள் பிரதேசப் பிரிவினைகளையும் கற்றுக்கொடுத்து சமூகப்பிளவுகளை உருவாக்கி இன ஒற்றுமை என்ற ஒன்றை தமிழர்களுக்கு எட்டாக் கனியாக்கி வைத்திருக்கிறது இந்த சமூகக் கட்டமைப்பு.இந்த சமூகம் காலம் காலமாகக் கற்றுக்கொடுத்த பாடங்களே போராட்டம் என்று வந்த போது போராளிக் குழுக்களுக்கிடையேயும் தங்கள் மேலாதிக்கம் மட்டுமே இருக்க வேண்டும் மற்றையவைகள் தங்களுக்குக் கீழானவையாக இருக்கவேண்டும் என்ற மேலாதிக்க மனப்பான்மையை அடக்கி ஆழும் எண்ணத்தை,போட்டி மனப்பானமையை ஏற்படுத்தி அழிவை,பிளவுகளை நோக்கி அவற்றை வழிநடத்தியது.

ஒவ்வொரு தனி மனிதன் மேலும் இந்த சமூகம் கடுமையான அழுத்தங்களையும்,கட்டுப்பாடுகளையும் பிரயோகித்துக்கொண்டிருக்கிறது.இந்த அழுத்தமே சமூகம் மீதான இந்தப் பயமே இந்த இனத்தில் இருக்கும் ஒவ்வொரு தனிமனிதனையும் புரட்ச்சிகரமாகச் சிந்திக்க விடாமல் தடுத்துவைத்திருக்கின்றன.இந்த சமூகத்தில் இருந்த ஒரு குறிப்பிட்ட சதவீதமான இளைஞ்ஞர்களே போராடப் புறப்பட்டார்கள்.அவர்களுக்குள்ளும் மிகச்சிறுவீதமானவர்களே சமூக அடக்குமுறைகளை உடைத்துக்கொண்டு புரட்ச்சிகரமான சிந்தனைகளுடன் போராடப் புறப்பட்டவர்கள்.ஏனையோர் அந்தந்த நேரங்களில் அவர்களின் வீடுகளில் நிலவிய குடும்பச்சூழல்,தனி மனித பிரச்சினைகள்,விரக்திகளில் இருந்து தப்புவதற்க்காகப் போராட்டத்தை ஒரு வழியாகத் தெரிவு செய்தவர்கள்.ஒரு மிகச் சிறு வீதத்தினரைத் தவிர மற்றையவர்களை புரட்ச்சிகரமாகச் சிந்திக்க முடியாதபடி,அப்படிச் சிந்தித்தாலும் அதை நடை முறைப் படுத்த முடியாதபடி அவர்கள் மேல் வெவேறு வடிவங்களில் இந்த சமூகம் மறைமுக அழுத்தங்களை வழங்கிக்கொண்டிருந்தது(உதாரணம் - சாதி மாற்றத்தை எதிர்க்கும் ஒருவன் சாதி குறைந்த பெண்ணைத் திருமணம் செய்தால் சமூகம் எப்படிப் பட்ட அழுத்தங்களை அந்தத் தம்பதிகளுக்கு வழங்கும் என்பது).எமது சமூகம் தனி மனித சுதந்திரத்தை,சுயமாகச் சிந்திப்பதை நடைமுறைப் படுத்தும் சுதந்திரத்தை யாருக்கும் வழங்கவில்லை.இதனால் ஒவ்வொருவரும் ஒருவித சமூக மனநோயுடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.சமூகச் சூழலே ஒரு மனிதனை உருவாக்குவதில் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றன.இப்படிப் பட்ட சிந்தனைகளைக் கற்றுக்கொடுக்கும் சமூகம் எப்படிப்பட்ட மனிதர்களை உற்பத்திசெய்துகொண்டிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.இவ்வித சமூகக் கற்பிதங்களைக் கற்று வளர்ந்தவர்கள் போராடப் புறப்பட்டால் எப்படி ஆகும் என்பதைத்தான் நாங்களே சாட்ச்சியாகவும் குற்றவாளிகளாகவும் நின்று பர்த்துக்கொண்டிருக்கிறோம்..

இந்தக்காரணிகளே போராட்டத்தின் மிகமிக ஆரம்பகாலங்களில் போராட்டத்தின் தோல்விக்குரிய அத்திவாரங்களைப் பலமாகப் போட்டுவைத்தன.பிரிவினை,மேலான்மை கொள்ளும் மற்றும் போட்டி மனப்பான்மை,சமூக வேறுபாடுகளால் நிகழாமல் இருந்த இன ஒற்றுமை என்பவற்றால் இந்த சமூகத்தின் பிரதிநிதிகளாகப் போராடப் புறப்பட்ட போராளிக்குழுக்கள் மிகச்சரியாகப் போராட்டத்திலும் தாங்கள் இந்த சமூகத்தின் பிரதிநிதிகள்தான் என்பதை குத்துப்பாடுகள்,தங்களுக்குள்ளேயே அடிபாடுகள்,பிரிவினைகளின் மூலம் நிரூபித்தனர்.இன ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட பிரிவினைகளைத் தொடர்ந்து சிங்களவர்களுடன் ஒட்டிக்கொண்டு தமிழர்கள் தமது இனவிடுதலைக்கு எதிராகச் செய்த துரோகங்கள்,அதைத்தொடர்ந்து அவர்கள் மேல் நடத்தப்பட்ட கொலைகள்,பொறாமை மற்றும் காழ்ப்புணர்வில் தமிழர்களே தமிழர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் மேற்கொண்ட பரப்புரைகள் என்பவற்ரைத்தொடர்ந்து எமது போராட்டத்தை இனவிடுதலைப் போராட்டமாகக் கருதாமல் குழுமோதலாக உலகின் மனதில் ஏற்பட்ட தப்பான அதிர்வலைகள்,இவற்றின் நீண்டகால விளைவுகளே மூன்றுதசாப்தங்களுக்குப் பின்னர் எம்மை நோக்கிய சர்வதேச எதிர்ப்பை அந்த நேரத்தில் இருந்தே சிறுகச்சிறுகக் கட்டிவந்து இறுதி அழிவிற்கு இட்டுச்சென்றன.இதேவித இன ஒற்றுமையற்ற சமூகவேறுபாடுகளால் நமது சமூகம் நிறைந்திருக்கும் நிலையில் இந்தவித சமூக நோய்களுடன் இப்படியே இன்னொரு போராட்டத்தை ஆரம்பித்தால் அங்கேயும் முன்னர் எமக்குள் நிகழ்ந்த பிரிவுகள்,பிடுங்குப்பாடுகள்,குழுமோதல்கள் முளையிலேயே நிகழ்ந்து மீண்டும் மீண்டும் போராட்டத்தின் பெயரால் எங்களுக்குள்ளேயே மோதி அழிந்து கொண்டிருப்போம்.இறுதியில் இந்த இனம் இருந்த அடையாளமே இன்றி முற்றாக அழிந்து போய்விடுவோம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ்

உங்களது கருத்துக்களை வாசிப்பவன் எவனும் இனி போராடுவது பற்றி சிந்திக்கமாட்டான். தமிழரது குறைகளை மட்டுமே அதிலும் இது தமிழரிடையே மட்டுமே இருப்பது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் இங்கு அல்லது தமிழரது வாழ்வில் எதைச்சாதிக்கப்போகின்றீர்கள் என்று புரியவில்லை.

பிரபாகரன் என்கின்ற தலைவன் எங்கு பிறந்தான் எங்கிருந்து நீங்கள் கூறும் அத்தனை தடகைளையும் உடைத்து போராட்டதை நடாத்தினான் என்பதையும் நாம் பார்க்கவேண்டும். அடுத்து வென்றாரா என்பதற்கு போராட்டத்துக்கான அல்லது வெற்றிக்கான கால அளவுகளை கணித்துவிட்முடியாது என்பதனையும் உணர்ந்து எமது போராட்டம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வதற்கான வழிவகைகளை தேடுவதையும் வற்புறுத்துவதையும் விடுத்து

இது போன்று இனிமேல் இந்த இனம் வாழாது விடியாது தேறாது என்பதன் மூலம் நாமும் அந்த இனத்தில் ஒரு புது சாதியாக அதாவது புலம்புவோர் சாதியை கூட்டுவதைத்தவிர வேறெதையும் காணப்போவதில்லை.

இதைத்தொடந்து மேலும்மேலும் மக்களை கிலி கொள்ளவும் போராட்டத்துக்கான வழிகள் அடைபட்டுவிட்டன என்ற தடையைக்கொண்டுவந்த பெருமை தங்களைப்போன்ற இனி வரும் எழுத்தாளர்களினாலேயே செய்யப்படுகின்றன என்பதே எனது அச்சமாகும்.

Link to comment
Share on other sites

யாரையும் தனிப்படக் குறித்தல்ல.. ஆனால் எதிர்மறையான எண்ணங்கள் எப்போதுமே எதிர்மறையான முடிவிலேயே கொண்டுபோய்த் தள்ளும்..! இது வாழ்க்கைப் பாடம்..! ஒரு இனத்திற்கும் இது பொருந்தும்..!

என்னிடம் பணமில்லையே.. கடனாகிட்டுதே என்று எண்ணினால், பணமும் இராது, கடன் மட்டுமே வந்து சேரும்..! :D

உங்களிடம் ஒரு மில்லியன் இருந்தால் ஆகா என்னிடம் ஒரு மில்லியன் இருக்கு என்று சந்தோசமாக இருக்கலாம்.. இல்லாவிட்டால் ஐயோ நூறு மில்லியன் இல்லையே என்று அழுது வடியலாம்..! எப்பிடி வசதி..!? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் எழுதுபவற்றை மிகவும் இனிப்புடனோ உவப்புடனோ எழுதவில்லை....மிகவும் வேதனையுடன் எழுதுகிறேன்...இவைதான்,இந்தக்காரணிகள்தான் எங்கள் தோல்விகளுக்கு அடி அத்திவாரமாக இருந்தன என்பது எங்கள் எல்லோருக்கும் உள்ளத்துக்குள் தெளிவாகத்தெரியும்..ஆனால் யாரும் இவை பற்றிப் பேச விரும்புவதில்லை...எங்களுக்குள் இவற்றைப்பற்றி பேசுவதில்,விவாதிப்பதில்,தெளிவுபடுவதில் என்ன கெளரவக்குறைவை நாங்கள் காண்கிறோம் என்று எனக்குப் புரியவில்லை...போராட்டம் தோற்றுவிடும் என்ற ஒற்றைக்காரணியைச் சொல்லியே போராட்டம் குறித்து உண்மையான இனவிடுதலை வேண்டும் விருப்புடன் எழுந்த விமர்சனங்களையும் கருத்துக்களையும் அன்பாகவும்,மிரட்டியும் தடுத்தும் எதையுமே பேசவிடாமல்,எதையுமே விவாதிக்கவிடாமல் இறுதியில் போராட்டத்தின் தோல்வியில் வந்து நின்றுகொண்டும் பின்னோக்கிப்பார்க்கத் தயாரில்லாமல் நாங்கள் அனேகர் நிற்கிறோம்... என்னால் மேலே எழுதப்பட்ட கருத்துக்களைப் போன்ற கருத்துக்கள் ஒரு போதும் போராட்டத்துக்கு தடையாக இருக்காது...வேற்றுமைகளை மறந்து எங்களுக்குள் இருக்கும் பிரிவினைகளை உணர்ந்து இனத்தின் மேல் உண்மையான பற்றுதலுடன் பல இளைஞ்ஞர்கள் சிந்தித்து ஒன்றுபட,எமது போராட்டத்தினை அடுத்தகட்டத்துக்கு பிழைகளை உணர்ந்து தெளிவுடன் நகர்த்த உதவலாம் அல்லது சமூகத்தின் இறுக்கமான பிற்போக்குத்தனமான கட்டமைப்பில் எந்தவித தாக்கமும் நிகழ்த்தாமல் அமைதியாக அடங்கி விடலாமே அன்றி ஒரு போதும் தெளிவில்லாத ஒரு போராட்டத்தை நிகழ்த்தவோ மக்களைச் சோர்வடையச்செய்யவோ உதவ மாட்டாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என்ற பழைய பேச்சு வழக்கு தமிழில் ஏன் வந்தது என்று யோசித்துப் பார்த்தால்....

சிலருக்கு ஒய்யாரக் கொண்டை இருக்குது என்று பெருமிதம். சிலருக்கு ஈரும் பேனும் இருக்கு என்று கவலை.

சிலருக்கு ஒய்யாரக் கொண்டையில் ஈரும் பேனும் இருப்பது பெரிய விடயமல்ல என்ற நம்பிக்கை..

எல்லாம் பார்வையைத்தான் பொறுத்தது..

Link to comment
Share on other sites

'புலி' என்ற கோட்டிற்கு எந்தப்பக்கம் என்றாலும் நின்று எதையும் விமர்சியுங்கள்.

அதேவேளை இந்தக்கோட்டின் ஒரு பக்கமே நாம் எல்லோரும் நின்று செயல்படுவோம்:

- தாயக உறவுகளின் பொருளாதார மேம்பாடு

- தாயக மக்களின் அரசியல் தீர்வு

இதைத்தான் அவர்கள் இன்று கேட்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சமுகத்தில் இருந்த பிற்போக்கு தனங்கள் அச்சமுகத்தில் இருந்து போராட வந்தவர்களிலும் இருந்தது எனும் வாதம் ஏற்ப்புடையது.ஆயினும் போராட்டத்தில் நிகழ்த்த அனைத்து தவறுகளிற்கும் சமுகத்தை பொறுப்பாக்க முடியாது.இங்கு சமுகம் ஆயுதமுனையில் அடக்கப்பட்டு இருந்தது.

ஆயுதப்போர் என்று வரும்போது, சமூகமும் ஆயுதத்தாலேயே கட்டி ஆளப்படும்..! இது தவிர்க்க முடியாதது..!

பல்லாயிரக்கணக்கானோருக்கு இதனால் எந்தப்பிரச்சினையும் இருக்கவில்லை..! ஒரு சில ஆயிரம் பேருக்குத்தான் பிரச்சினை..! இவர்கள் தமிழீழ இலட்சியத்திற்கு இடையூறாகி நின்றவர்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாவற்றையும் மீறி தமிழன் போராடியே தீரவேண்டுமென்ற சிங்கள பேரினவாத ஆதிக்கமும் அடக்குமுறையும் இனஅழிப்பும் இருந்தது.

தமிழரின்பால் குற்றம் சுமத்துவதன் ஊடாக சிங்கள பேரினவாத ஆதிக்கத்தையும் அடக்குமுறையையும் இனஅழிப்பையும் மறைத்து மறந்துவிடும் நிலையே தற்போது இங்கு கருத்துக்களாகவும் கவிதைகளாகவும் கதைகளாகவும் முன் வைக்கப்படுகிறது.

இங்கு எழுதுபவர்கள் இந்த ஆபத்தை உணரவேண்டும் என்பதையே சுட்டி நிற்கின்றோம்.

யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.

இவை எல்லாவற்றையும் மீறி தமிழன் போராடியே தீரவேண்டுமென்ற சிங்கள பேரினவாத ஆதிக்கமும் அடக்குமுறையும் இனஅழிப்பும் இருந்தது தற்போது முன்னையவிட அதிகமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

ஆயுதப்போர் என்று வரும்போது, சமூகமும் ஆயுதத்தாலேயே கட்டி ஆளப்படும்..! இது தவிர்க்க முடியாதது..!

பல்லாயிரக்கணக்கானோருக்கு இதனால் எந்தப்பிரச்சினையும் இருக்கவில்லை..! ஒரு சில ஆயிரம் பேருக்குத்தான் பிரச்சினை..! இவர்கள் தமிழீழ இலட்சியத்திற்கு இடையூறாகி நின்றவர்கள்..!

சில ஆயிரம் பேரா நாட்டை விட்டு ஓடினவன் .உது எல்லாம் சர்வ சாதாரணம் என்று தப்பி ஓடி வந்தவன் சொல்ல கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் தேசியம் வலுவற்ற அடித்தளத்தைக் கொண்டது. ஒரு மக்கள் கூட்டத்தை ஒன்றிணைக்கக் கூடிய வலுவான காரணம்தான் தேசியத்தைத் தீர்மானிப்பது. 83 கலவரத்தின் பின்னர் சிங்களவர்களின் ஆதிக்கம் தமிழர்களை ஒரு சில வருடங்கள்தான் ஒன்றிணைய வைத்தது. அதன் பின்னர் தமிழர்களுக்குள் இருந்த பல பிரச்சினைகள் மீண்டும் முளைவிட்டன. சுனாமி போன்ற பேரழிவுகள் வந்தபோது கூட, அல்லது முள்ளிவாய்க்காலில் மக்கள் பேரலவத்திற்குள் சிக்கியபோது கூட தமிழர்களால் துணிந்து ஒன்றிணைய முடியவில்லை. புலம் பெயர்ந்தவர்கள் ஒன்றிணைந்தார்கள் என்பதெல்லாம் அந்த அந்த நேரத்தில் அவர்களுக்கு இருந்த உணர்வைப் பொறுத்தது. தாயகத்தில் உயிருக்கு அஞ்சியே இருக்கப் பழகியதால் பெரும்பாலோனோர் எப்போதுமே வெளியே பாயத்தான் தருணம் பார்த்திருந்தார்கள். கிடைத்த சந்தர்ப்பத்தில் அனேகர் போராட்டத்தின் மையப் பகுதியான வட கிழக்குப் பகுதிக்கு வெளியேதான் ஓடினர். எனவே தமிழர்கள் தேசியத்தின் இறுக்கமான பற்றுடையவர்கள் என்பதெல்லாம் வெற்றுக் கோசம்தான்.

தற்போது உள்ள சூழலில் சிங்கள அரசு தமிழர்களின் பலவீனமான தேசிய உணர்வைக்கூட விட்டுவைக்கப் போவதில்லை. தேவையான வேலைத்திட்டங்களைத் தங்குதடையின்றிச் செயற்படுத்தித் தமிழர்கள் எப்போதுமே தமது அரசியல் பிரச்சினைகளை முன்வைத்து வீதியில் இறங்காமல் பார்த்துக்கொள்வார்கள்.

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் தாயகத் தமிழர்களுக்கும் கொள்கை ரீதியான, செயற்பாட்டு ரீதியான பிளவுகளை அதிகரிக்கவும் பல வேலைத்திட்டங்கள் மும்முரமாக நடைபெறுகின்றன. எனவே எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக புலம் பெயர் தமிழர்களால் தாயகத் தமிழர்கள் மீது செல்வாக்குச் செலுத்த முடியாது,

இறுதியாக, தாயகத்தில் ஒரு உரிமைப் போராட்டம் ஆரம்பித்தால் அவர்கள் வன்முறை அரசியலோ அல்லது சாத்வீக அரசியலோ (அடி வேண்டுவதுதான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று நம்புவர்கள்) இல்லாத ஒரு புதுவடிவத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். எனினும் தேசிய உணர்வைப் பலப்படுத்தாத எந்தப் போராட்டமும் தோல்வியில்தான் முடியும்!

Link to comment
Share on other sites

ஒட்டு மொத்த தமிழர்களையும். என்னை சேர்த்து குற்றம் சாட்டுகிறேன். இவ்வளவு அழிவிற்கு பின் என்றாலும் எல்லோரும் ஓரணியில் நிற்கிறார்களா? உண்மையாக இருக்குறார்களா தமது இனத்திற்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரை கடுமையாக விமர்சனம் செய்ய வேண்டும் என்டால் யாரை எங்களுக்கு தேவையாக இருக்கிறதோ...யார் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ...யார் எங்களுக்காக கடுமையாக,உண்மையாக,நேர்மையாக உழைத்தார்களோ அவர்களைத் தான் நாம் விமர்சிக்க வேண்டும் ஆனால் அந்த விமர்சனம் சுயநலமற்ற,பக்க சார்பற்ற,நடு நிலையான,உண்மையான விமர்சனமாக இருக்க வேண்டும்...எம் மக்களது தற்போதைய இந் நிலைமைக்கு புலம் பெயர் மக்களாகிய நாமும் ஒர் காரணம்...நாம் அப்பவே உண்மையான விமர்சனத்தை வைத்திருப்போமானால் இன்று இந் நிலை வந்திருக்காது...இனி மேலாவது உண்மையான விமர்சனம் செய்வோம்...விட்ட பிழைகளில் இருந்து பாடம் படிப்போம்.

Link to comment
Share on other sites

ரதி, உங்களுக்கு ஒரு பச்சை. அதேபோல், நாம் பார்வையாளர்களாக மட்டும் நில்லாது பங்காளிகளாகவும் இருக்க வேண்டும். எந்தவொரு அமைப்பிற்குள்ளும் சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றை நாம் அறிய வேண்டுமாயின் அவ்வாறான அமைப்புகளுக்குள் நாம் இருக்க வேண்டும். அப்போதுதான் நடைமுறைச் சிக்கல்கள் தெரிய வரும். எனது அனுபவத்தில் பலர் இன்னும் நாற்காலி அரசியல் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். இந்தத் தலைப்பில் எழுதுபவர்களின் கருத்துக்களை வாசிக்கும்போதுகூட எனக்குப் பலர் அவ்வாறானவர்களாகத்தான் தெரிகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில், தமிழ் சமூகம் திருந்துவதற்கு இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகள் செல்லும்.

எல்லா அமைப்புகளும் ஒரு நல்ல நோக்கத்திற்காகவே தொடங்கப்பட்டன. என்னைப் பொறுத்தவரையில் எல்லா அமைப்பினதும் அனுபவங்களையும் கருத்திற்கொண்டு செயற்படுவதே சிறந்தது. ஆகவே, மேற்கொண்டு, விபரம் தெரிந்தவர்கள் ஒவ்வொரு அமைப்பினதும் கொள்கைகள், அவை தோற்றுப் போனதன் காரணங்கள், அவர்கள் கொள்கைகளிலிருந்து ஏன் விலகினார்கள் அல்லது விலக்கப்பட்டார்கள் போன்றவற்றை விவாதிப்பது நன்மை பயக்கும்.

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைக்கான மீள்கட்டமைப்பின் அவசியம்

தமிழீழ விடுதலைக்கான புதிய மனப்பாங்கையும் புதிய சிந்தனையையும் மீள்கட்டமைப்பையும் வரலாறு கோரி நிற்கிறது.

எங்களுக்கு நாங்களே எஜமானர்களாய் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் நடந்து வந்த பாதையை நாங்களே திரும்பிப் பார்ப்பதுடன் எங்கள் தவறுகளை நாங்களே திருத்திக் கொள்ளவும், எங்களை நாங்களே புதுப்பிக்கவும், எங்களை நாங்களே மீள்கட்டமைப்புச் செய்யவும் தயாராக வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுவோமேயானால் நாங்கள் எதிரிகளின் சேவகர்களாகவே இருக்க நேரும்.

சேவல் கூவி சூரியன் உதிப்பதில்லை. ஆனால் சூரியனின் வரவை சேவலால் முன்னறிவிப்புச் செய்யமுடியும். சூரியன் கிழக்கே உதிக்கும் என்று சொல்ல ஒரு பண்டிதர் தேவையில்லை. ஆனால் சூரியன் ஏன் கிழக்கே உதிக்கின்றது என்பதை விளக்க ஒரு பண்டிதர் தேவை. ஒவ்வொன்றுக்கும் இருக்கக்கூடிய வல்லமையையும், அளவையும் அதனதற்குரிய சரியான அளவில் ஏற்கவும், புரிந்து கொள்ளவும் வேண்டும். ஒன்றைப் பற்றிய மிகை மதிப்பீடும் தவறானது, அதேவேளை ஒன்றைப்பற்றிக் குறைத்து மதிப்பிடுவதும் தவறானது. எப்போதும் சரியானதும், துல்லியமானதுமான மதிப்பீடு நலத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியமானது.

முப்பது வருட சாத்வீகப் போராட்டம் தோல்வியில் முடிவடைந்துவிட்டது என்றும், அதன் பின்பு தொடங்கி நிகழ்ந்த முப்பது வருட ஆயுதப் போராட்டமும் தோல்வியில் முடிந்து விட்டது என்றும் இப்போது எங்கும் பேசிக்கொள்ளப்படுகிறது.

அகிம்சைப் போராட்டம் ஒரு கட்டமைப்பு. ஆயுதப் போராட்டம் இன்னொரு கட்டமைப்பு. அதாவது விடுதலைப் போராட்டம் எனும் பாதையில் இரு கட்டமைப்புக்கள் இருந்தன. தற்போது விடுதலைப் போராட்டம் மூன்றாவதான இன்னொரு மீள்கட்டமைப்பைக் கோரி நிற்கின்றது.

சோசலிசத்திற்கான மார்க்ஸிச முறைமையானது மார்க்ஸ் காலத்துடன் முதலாவது கட்டமைப்பை முடித்துக் கொண்டது. ஆனால் மார்க்ஸ்க்கும் லெனினுக்கும் இடைப்பட்ட காலத்தில் அது ஒரு புதிய கட்டமைப்பிற்கான தேவையைக் கோரி ஊசலாடிக் கொண்டிருந்த காலகட்டமாய் அமைந்தது. லெனின் வருகையுடன் மார்க்ஸிசம் இரண்டாவதான மீள் கட்டமைப்பைச் செய்துகொண்டது. ஒக்டோபர் புரட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மார்க்ஸிசம் மேலும் மீள்கட்டமைப்புச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. லெனின் பதவியில் இருந்தபடியே நடைமுறைத் தவறுகளை உணர்ந்து ஏற்று மீண்டும் மீள்கட்டமைப்புச் செய்தார். அதாவது மார்க்ஸில் இருந்து லெனின் காலம் முடியும் வரை மார்க்ஸிசம் மூன்று கட்டமைப்புக்களுக்கு உள்ளாகி இருந்தது.

1920 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தத்தைத் தொடர்ந்து மார்க்ஸிசம் அடுத்த பெரும் மீள்கட்டமைப்புச் செய்யப்பட வேண்டியதற்கான பெரும் வரலாற்று நிர்ப்பந்தத்திற்கு உள்ளானது. ஆனால் இற்றைவரை அது செய்யப்படவில்லை. அவ்வாறு தொடர் மீள்கட்டமைப்புக்களுக்கு மார்க்ஸிச சோசலிசம் உள்ளாகாததன் விளைவே சோசலிச அரசுகள் உலகப்பரப்பில் வீழ்ந்து நொருங்குண்டு போனதற்கான காரணமாகும்.

அதேவேளை முதலாளித்துவம் தன்னை இடையறாது புதுப்பித்தும், மீள்கட்டமைப்புச் செய்தும் வருகிறது. அதனாற்தான் அது தொடர் வளர்ச்சியுடன் பூமியில் நின்று பிடிக்கிறது.

எல்லாப் போராட்டங்களையும் காலகட்ட நிபந்தனைகளுக்கு உட்படுத்தி அதனதன் அளவிலும், வல்லமையிலும் வைத்து அவற்றைச் சரிவர மதிப்பீடு செய்து காலதேசவர்தமானத்திற்கு பொருத்தமான வகையில் தொடர் மீள்கட்டமைப்புக்களுக்கு உள்ளாக வேண்டும்.

ஈழத்தமிழரின் போராட்ட வரலாற்றின் சாத்வீகப் போராட்டம் 1961 ஆம் ஆண்டுடன் முடிவடைந்து விட்டது. 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டம் முழுத்தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து குறிப்பிடக்கூடிய பாரிய சாத்வீகப் போராட்டம் எதனையும் தமிழரசுக் கட்சி முன்னெடுக்கவில்லை. இதன் பின்பு ஆங்காங்கே உள்ளுர் மட்டங்களில் சிறுசிறு அளவில் உண்ணாவிரதப் போராட்டங்களும், கறுப்புக்கொடி காட்டல்களும், சிலவேளை முழுத்தமிழ் மண்ணிலும் அடையாள ஒரு நாள் ஹர்த்தால், கடையடைப்பு போன்ற சம்பவங்களைத் தவிர 1961-ல் இருந்து 1982 வரை பாரிய சாத்வீகப் போராட்டங்கள் எதுவும் நிகழ்ந்ததில்லை. ஆதலால் உண்மையான அர்த்தத்தில் 1961 ஆம் ஆண்டு பாரிய சத்தியாகக்கிரகப் போராட்டத்துடன் சாத்வீகப் போராட்டம் முடிவடைந்து விட்டதென்றே கூறவேண்டும்.

ஒன்றில் 1961 ஆம் ஆண்டுடன் சாத்வீகப் போராட்டம் புதிய உத்வேகத்துடன் புதுப்பரிமாணம் பெறவேண்டியிருந்தது, அல்லது போராட்டம் மீள்கட்டமைப்புச் செய்யப்பட வேண்டியிருந்தது. இங்கு இந்த இரண்டும் நிகழவில்லை.

எப்போதும் அரசியலில் புதுப்பித்தல், மாற்றங்களுக்கு உள்ளாகுதல், இறுதியில் மீள்கட்டமைப்புச் செய்தல் தவிர்க்கப்பட முடியாத முக்கிய அம்சங்கள் ஆகும். மூன்று வயதுச் சட்டையை முப்பது வயதில் அணிய முடியாது. இந்த சின்னஞ் சிறிய உண்மை அரசியலுக்கு மிகவும் அவசியமானது. ஈழத்தமிழர்களின் போராட்டம் இப்பொழுது பலவகைகளிலும் மீள்கட்டமைப்பிற்கு உள்ளாக வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தத்தில் உள்ளது. தக்கன பிழைக்கும், தகாதன அழியும். காலகட்ட வளர்ச்சிச் சூழலுக்கும், குறிப்பாகச் சர்வதேச, பூகோளப், பிராந்திய நிலைமைகளுக்கு பொருத்தமான வகையில் எம்மை நாம் தற்போது மீள்கட்டமைப்புச் செய்தாக வேண்டும்.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னிருந்த சர்வதேச நிலைமை இப்போது இல்லை. செல்லிடச் தொலைபேசிக்கு முன்னிருந்த பூகோள நிலையில் இருந்து செல்லிடத் தொலைபேசி பிரயோகத்திற்கு வந்ததன் பின்னான பூகோள யதார்த்தம் பெரும் புரட்சிகர மாற்றத்தை அடைந்துவிட்டது. இந்த வகையில் சர்வதேச அரசியல் மாற்றங்களும், பூகோள மாற்றங்களும் சமூகவாழ்வை பெரும் மாற்றங்களுக்கு உள்ளாக்கி உள்ளன. இவ்வாறு அனைத்துவகை மாற்றங்களையும் கருத்தில் எடுத்துக்கொண்டு அவற்றுக்கு பொருத்தமான வகையில் எமது அரசியலை நாம் மீள்கட்டமைப்புச் செய்ய வேண்டிய தவிர்க்கப்பட முடியாத அத்தியாவசியத்தில் உள்ளோம்.

'சாத்வீகப் போராட்டமும் தோல்வி', 'ஆயுதப் போராட்டமும் தோல்வி' என்று கூறி வாழாதிருப்பதல்ல எம் தலைவிதி. ஒன்றின் முடிவு இன்னொன்றின் தொடக்கம். இங்கு இரண்டு தொடக்கங்களை வரலாறு முன்வைத்திருக்கிறது.

ஒன்று ஆயுதப் போராட்டத்தின் தோல்வி என்பது சிங்கள இனத்துடன் கரைந்து அழிந்து போவதற்கான தொடக்கத்தைக் கொண்டிருக்கிறது. சிங்கள ஆட்சியாளருடன் இணக்க அரசியல் நடாத்துவது என்ற பதம் இத்தகைய கரைந்தழிவிற்கான தொடக்கத்தையே குறித்து நிற்கிறது.

இரண்டாவது 1,40,000 ற்கு மேற்பட்ட தமிழ் மக்களை கொன்றழித்த இனத்துடன் நாம் ஒரு போதும் இணைந்து வாழ முடியாது என்ற செய்தியின் அடிப்படையில் எமக்கான ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

1,40,000 ற்கு மேற்பட்ட மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதையும்விட அவர்களின் கிராமங்கள். நகரங்கள், வீடுகள், வழிபாட்டு இடங்கள் என்பன அழிக்கப்பட்டதையும்விட மோசமான தவறு அவற்றை ஒப்புக்கொண்டு மனம்வருந்த ஒரு மனச்சாட்சியுள்ள சிங்கள மகனைத்தானும் காணமுடியவில்லை. அதாவது இனப்படுகொலையைவிடவும் மோசமானது அந்த இனப்படுகொலையை நியாயப்படுத்தும் விதமும் அல்லது அதனை மறுக்கின்ற விதமுமாகும். சிங்கள ஊடகங்கள், சிங்களவரால் நடாத்தப்படும் ஆங்கில ஊடங்கள் என்பன எதுவும் நடந்து முடிந்த கோர இனப்படுகொலை பற்றி மனம் வருந்தும் ஒரு செய்தியைத்தானும் வெளியிட்டதில்லை. இது இனப்படுகொலையின் அசிங்கத்தை விடவும் மோசமான அசிங்கமாகும். இப்பட்ட மனநிலையிருக்கும் சிங்கள இனத்தவர்களுடன் இனியும் எவ்வாறுதான் இணைந்து வாழமுடியும். வாழமுடியும் என்று நினைப்பவர்கள் நாய்க்கும் எஜமானுக்கும் இடையிலான உறவைப் போசிப்பவர்களாக மட்டுமே இருக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் நாம் கரைந்து இணைந்து அழிந்துபோக முடியாது. மாறாக இனப்படுகொலையும், அதன் பின்னான இரண்டு வருடகால ஒட்டுமொத்த சிங்கள இனத்தின் மனப்போக்கும், நடைமுறைகளும் பிரிந்து செல்வதைத் தவிர வேறு மார்க்கம் ஈழத்தமிழருக்கு இல்லை என்பதையே காட்டுகின்றது. இந்நிலையில் ஒரு புதிய தொடக்கமும், அதற்கான ஒரு மீள்கட்டமைப்பும் ஈழத்தமிழருக்கு தேவை என்பதே வரலாற்றின் கட்டளையாகும். ஒன்றின் முடிவு இன்னொன்றின் தொடக்கம் என்பதற்கேற்ப நாம் உயிர் உடைமைப் பாதுகாப்பு, ஜனநாயகம், சுதந்திரம், சுயகௌரவம், சமத்துவம், சமூகநீதி, தலைநிமிர்ந்த வாழ்வு என்பன போன்ற அத்தியாவசிய தேவைகளின் பொருட்டு விடுதலை பெற்ற மக்களாக வாழவேண்டிய தேவைக்கான ஒரு மீள்கட்டமைப்பைப் பற்றி அதிகம், அதிகம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

தேசிய இனங்கள் பிரிந்து சென்று விடுதலை அடைந்துவரும் வரலாறு 1905ஆம் ஆண்டு சுவீடனிலிருந்து நோர்வே பிரிந்ததுடன் தொடங்கி 2011 ஆம் ஆண்டு தென்சூடான் பிரிந்தது வரை நீண்டு செல்கிறது. அதாவது இரண்டு நூற்றாண்டுகளைத் தழுவி அதன் வரலாறு நீண்டு செல்கிறது. இந்த வரலாற்றுப் போக்கிற்கு ஒடுக்கப்படும், இனப்படுகொலைக்கு உள்ளாகும் உயிர்ப் பாதுகாப்பற்ற, வாழ்வுரிமையற்ற ஈழத்தமிழர்கள் விதிவிலக்காக முடியாது. உலகளாவிய நீதியும், நியாயமும் எமக்கு மறுக்கப்படக்கூடாது.

- வடிவேற்கரசன்

Link to comment
Share on other sites

நீக்கப்பட்டது -மதராசி ...வேறு ஒரு இடத்தில் முழமையானதை பார்க்க்வும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா

நீங்க யார்???

Link to comment
Share on other sites

துரோகி: ஈழ அரசியலின் பூமறாங்

எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது- அது 1990- விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா எனப்படும் மாத்தையா எனது சொந்தக் கிராமமான தம்பலகாமத்திற்கு வருகிறார். ஊரே திரண்டு அவரை வரவேற்கிறது. வீதிகள் தோறும் நிறைகுடம் சகிதமாக மக்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர். எங்கள் முறையின் போது நான் மாத்தையாவிற்கு சந்தனப்பொட்டு வைத்த நினைவுகள் இப்போதும் பசுமையாகவே இருக்கினறன. அப்போது ’இணக்கம்’ என்ற சொல்லைத் தவிர வேறு ஏதும் அறிந்திராத வயது. தமிழ் தேசியம் என்னும் சொற்தொடரை நான் ஒரு பேச்சுகுத்தானும் கேள்வுற்றிராத காலம் அது. எனது கிராமத்தில் 'இயக்கம்' என்னும் சொல்லைக்கூடப் பெரியளவில் புழக்கத்தில் இருக்கவில்லை. பொதுவாக இயக்கங்களைப் 'பொடியள்' என்றே மக்கள் அழைப்பதுண்டு. பின்னர் காலம் என்னையும் தமிழ் தேசிய பக்கமாக நகர்த்தியது. ஆனால் ஆச்சரியம்- தமிழ் தேசியத்தைச் சொற்களாகக்கூடக் கேள்வியுறாத காலத்தில் மலர் தூவி வரவேற்கப்பட்ட மாத்தையா,நான் தமிழ்த் தேசிய அரசியல் குறித்து அறிந்து கொள்ள முற்பட்டபோது, எனக்கு துரோகியாகவே அறிமுகமானார்.

எவ்வாறு மாத்தையா துரோகியானார்? எந்த அரசியல் மாத்தையாவை துரோகியாக்கியது? ஏவ்வாறு பல்வேறு இயக்கங்களின் தலைவர்களும் துரோகியானார்கள்? இந்த துரோக வாதங்களை மக்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்? நான் நன்கு அறிவேன்,இது பற்றி வெளிப்படையாக பேசுவதால் என்னையும் இந்தப் பூமாறங் துரத்தும்.ஆனால் இப்போது சில விடயங்கள் குறித்துப் பேசாது விட்டால் பிறகு எப்போதுமே பேச முடியாமல் போய்விடும். இன்று ஒரு போராட்டம் எப்படியிருக்கக் கூடாது என்பதற்கு ஈழ விடுதரைப் போராட்டம் உதாரணமாயிருக்கிறது. ஆகவே நாம் பல்வேறு விடயங்கள் குறித்தும் வெளிப்படையாகவே பேசியாகவேண்டும். இது நமது தலைமுறைக் கடமையாகும்.

ஈழ அரசியலைப் பொறுத்தவரை இன்று யாரெல்லாம் துரோகியல்ல என்பதைக் கண்டுபிடிப்பது தான் கடினமானது. அந்தளவிற்கு துரோகிகள் மலிந்துகிடக்கும் தேசமிது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நேற்று வரை போராளிகளாக இருந்த பலர் துரோகிகளாக்கப்பட்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் துரோகிகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. யுத்தத்தின் தீர்மானகரமான முடிவின்போது. அரச படைகளிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகள் கூட நாளை துரோகப்பட்டியலில் இடம்பெறலாம். ஏலவே சிலர் சேர்க்கப்பட்டும் விட்டனர். இறுதியில் 'துரோகி' அது எவரையும் விட்டுவைக்காது போகலாம்.

ஈழ அரசியலை பொறுத்தவரை எந்தப் பக்கம் திரும்பினாலும்- அவன் துராகி- அவங்கட ஆள்- எங்கடயவல் இல்ல- இவ்வாறான கோஷசங்களைத்தாம் கேட்கமுடிகிறது. உண்மையில் துரோக வாதத்தின் ஊற்று எது? இதை தீர்மானிக்கும் அரசியல் எத்தகையது? இந்தக் கட்டுரை அரசியல் அர்த்தத்தில துரோகி அல்லது துரோகம் என்னும் சொற்களை கட்;டுடைக்க விளைகிறது. இதை விழங்கிக் கொள்வதற்குச் சற்று பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கிறது. ஈழ அரசியல்,தமிழீழ அரசியலாக உருமாறுவதற்கு முற்பட்ட காலத்து மேடை அரசியல் கோஷங்களை இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டிருக்கிறது.ஈழத்து அரசியல் சூழலில் முதல்முதலாக துரோகி அல்லது துரோகம் என்ற சொற்களை அரசியலுக்கு அறிமுகம் செய்தவர்கள் மிதவாத தலைவர்களே தவிர ஆயத இயக்கங்களல்ல.

இலங்கையில் முதலாவது தமிழ் அரசியல் கட்சியான ஜி.ஜி.பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கூட்டத்தில்தான் எங்களது தீர்மானத்துக்கு எதிராக கைகைளை உயர்த்துவோர், கைகளை இழக்க வேண்டிவரும் என்ற எச்சரிக்கை குரல் ஒலித்தது அகில இலங்கை தமிழ் காங்கிரசின் ஊடாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த, தந்தை செல்வா என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம், காங்கிரசிலிருந்து வெளியேறித் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். இப்போது காங்கிரஸ் தரப்பினரை பொறுத்தவரையில் செல்வநாயகம் ஒரு துரோகி. இப்படித்தான் துரோகவாத அரசியல் கருக்கொண்டது.

தமிழரசு கட்சி கூட்டங்களின் போது பாம்பை விடுதல்,கூட்டத்தின்போது பறை மேளமடித்து தெர்ந்தரவு செய்தல், கட்சி பந்தலை இரவோடு இரவாக உடைத்தல் - இப்படித்தான் அன்று (தங்களின்) துரோகிகளான,தமிழசுக் கட்சியினரைக் காங்கிரஸ் பழிதீர்த்தது. மறுபுறமாக செல்வநாயகம் டட்லி சேனநாயகா அரசுடன் கைகோர்த்துக் கொண்டபோது தமிழரசு கட்சியில அங்கம் வகித்த வி.நவரெட்ணம் செல்வநாயத்தை துரோகி என்றார். இதன் தொடர்ச்சியாக நவரெட்ணம் தமிழர் சுயாட்சி கழகத்தை உருவாக்கினார். பின்னர் இடதுசாரிகள் சிறலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து 'தோசே மசாலட வடே அப்பட எப்பா' (தோசையும் மசால் வடையும் எங்களுக்கு வேண்டாம் - தமிழ் மக்களின் உணவு பழக்கத்தை காட்டுவதன் மூலம், தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு எதிரான சுலோகத்தை இவ்வாறு முன்னிறுத்தினர்) என்று பிரச்சாரம் செய்தபோது ஒட்டுமொத்த இடதுசாரிகளும் துரோகியானார்கள்.

பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி மேடைகளில் 'துரோகி'- என்னும் சொல் தராளமாகவே பயன்படுத்தப்பட்டது. அப்போது அரசாங்கத்துடன் இணைந்திருந்த அரசியல் தலைவர்கள் குறிப்பாக அல்பிரட் துரையப்பா ’இயற்கை மரணத்துக்குரியவர் அலல’ என்றே அன்றைய கூட்டணியின் முக்கிய தலைவர்களான காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் போன்றோர் மேடைகளில் முழங்கிக் கொண்டீருந்தனர். இதையே பின்னர் பிரபாகரன் தத்தெடுத்துக் கொண்டார். 1975ம் ஆண்டு பிரபாகரன் அல்பிரட் துரையப்பாவைத் 'துரோகி' என்ற அடைமொழியுடன் படுகொலை செய்தார். ஈழத் தமிழர் அரசியலில் துரோகிகள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்னும் அரசியல் அறிமுகமாகிறது. அல்பிரட் துரையப்பா மீதான படுகொலை நடவடிக்ககையே புலிகளின் முதலாவது தாக்குதலாக பின்னர் பதிவு செய்யப்பட்டது. அல்பிரட் கொலைக்கு எந்தவொரு கூட்டணி தலைவரும் கண்டனம் தொவித்திருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் அதைத்தான் விரும்பியிருந்தனர். ஆனால் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்தைத் ’துரோகி' என்னும் அடைமொழியுடன் புலிகள் படுகொலை செய்யதபோதுதான் தாங்கள் வீசிய ’துரோகி' – பூமாறங் தங்கள் கழுத்தையும் குறிவைக்கிறது என்னும் உண்மை கூட்டணி தலைவர்களுக்கும் உறைக்கத் தொடங்கியது. ஆனால் பிரபாகரனோ அதை விடுவதாக இல்லை. எப்படித் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிமுகப்படுத்திய தமிழீழ சுலோகத்தைப் பிரபாகரன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாரோ அப்படியே 'துரோகி' என்னும் அழித்தொழிப்புவாத அரசியலையும் கெட்டியாகப்பிடித்துக் கொண்டார்.

வுரலாற்றில் எந்தவொரு பெறுமதியுமற்ற 'துரோகி' என்னும் சொற்பிரயோகத்தை ஒரு கருத்தியலாக வளர்த்தவர்கள் மிதவாதத் தலைவர்களே, விடுதலைப்புலிகள் அந்தக் கருத்தியலைத் தங்களது ஏகப்பிரதிநிதித்துவத்துக்குப் பயன்படுத்திக் கொண்டனர். தமது அரசியல் வேலைத் திட்டத்திற்குத் தொந்தரவாக அல்லது இடைஞ்சலாக இருந்தவர்க்ள அல்லது எதிர்காலத்தில் அத்தகைய ஒரு நிலைக்கு வரக் கூடியவர்கள் என்று கருதப்பட்டோர் அனைவரையும் மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்தும் தந்திரோபாயமாகவே இந்தத் 'துரோகி' அல்லது 'துரோகம்' என்னும் சொற்கள் அடுத்தவர்கள் மீது சுமத்தப்பட்டன. மிதவாத அரசியல் தலைவர்களால் முன்தள்ளப்பட்ட அரசியல் சுலோகத்தை அப்பழுக்கில்லாமல் உள்வாங்கிக் கொண்டன. ஆனால் புலிகள் போன்று இதை மிகவும் மூர்க்மாகவும் நுட்பமாகவும் எந்தவொரு இயக்கமும் பயன்படுத்தியிருக்கவில்லை. ஆனால் புலிகள் வீசிய பூமாறங் இப்போது அவர்கள் கழுத்துகளையும் குறிவைத்திருப்பதுதான் இதிலுள்ள முரண்நகை.

புலிகள் டெலோவை தாக்கி அழித்ததிலிருந்து ஏனைய இயக்கஙகளைப் போராட்ட அரசியலிருந்து அப்புறப்படுத்தியது வரை அனைத்தையும்'துரோகம்' என்னும் ஒரு வார்த்தை கொண்டே நியாயபப்டுத்தினர். டெலோவை தாக்கியழித்தமைக்கு புலிகள் சொன்ன காரணம்- அவர்கள் இந்தியாவை இங்கு கொண்டுவர முயல்கின்றனர். டெலோவை புலிகள் தாக்குவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் 'பொதுமக்கள்' என்ற பேரில் பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.டெலோ ஒரு மக்கள் விரோத அமைப்பு என்றவாரான கருத்து வெகுசன மனோநிலை ஆக்கப்பட்டது. பின்னர் புலிகள் டெலோவை அழித்தபோது ஏற்கனவே தயார்படுத்தப்பட்டிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதே போன்று பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப். தாக்கப்ட்டபோதும அதே மக்கள் புலிகளுக்கு இளநீர் வெட்டிக் கொடுத்தனர்.

புலிகளே மற்றய இயக்கங்களை தாக்கியழிக்க முயன்றனர். எந்தவொரு இயக்கமும் புலிகளை தாக்கியழிக்க முயன்றதாக சான்றில்லை. ஆங்காங்கே சிறிய சச்சரவுகள் இடம்பெற்றிருப்பினும் புலிகளை அழித்துத் தங்கள் தலைமையை உறுதி செய்துகொள்ள வேண்டுமெனும் முனைப்பில் எந்தவொரு இயக்கமும் செயற்பட்டிருக்கவில்லை. இதை விடயமறிந்த அனைவரும் அறிவர். ஆனால் சகல போராட்ட இயக்கங்கள் மத்தியிலும் தலைமை குறித்த ஈடுபாடும் எதிர்பார்ப்பும் இருந்தததையும் மறுப்பதற்கில்லை. அத்தகைய தலைமை குறித்த எதிர்பார்ப்பே டெலோவை அழிக்க முயலும் புலிகள், நாளை தங்களையும் அழிக்க தயங்கமாட்டார்கள் என்ற உண்மையை விளங்கிக் கொள்ள முடியாத நிலைக்குள் அவர்களை தள்ளியது எனலாம். புலிகள் டெலோவை அழிக்க முற்பட்ட போது ஏனைய இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு புலிகளை எச்சரித்திருந்தால் அல்லது தடுத்திருந்தால் புலிகள் அடங்கியிருப்பர் அல்லது அழிந்திருப்பர். ஆனால் அந்த நேரத்தில் அவ்வாறு எந்தவொரு அமைப்பும் சிந்தித்திருக்கவில்லை.டெலோவை அழிப்பதில் வெற்றிகொண்ட புலிகள், அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்த முடியும் என்ற இறுமாப்பில் ருசி கண்டனர். இதற்கு அந்த நேரத்தில் புலிகள் தவிர்ந்த இயக்கங்கள் இந்தியாவுடன் தொடர்பிலிருந்ததை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆனால் இவ்வாறு புலிகளால் வஞ்சிக்கபட்ட இயக்கங்கள், பிற்காலத்தில் தங்களின் பாதுகாப்புக் கருதிச் ல நடவடிக்கைகளை முன்னெடுத்ததும் உண்மையே அதில் விமர்சனம் இல்லாமல் இல்லை. ஆனால் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராட முன்வந்த பலரையும் அரசின் பக்கமாக சாயவேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியவர்கள் புலிகள்தாம். புலிகள் தமிழ் மக்களுக்காக போராடும் ஏகபோக உரிமையைக் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள முற்பட்டதன் விளைவால், மிக உயர்ந்த இலட்சிய எண்ணத்தோடு வந்த பலர் போராட்ட அரசியலில் இருந்து அன்னியப்பட நேர்ந்தது. இது பற்றப் புலிகளால் தடைசெய்யப்பட்ட ஒரு முன்னணி இணக்கத்தின் மூத்த உறுப்பினருடன் பேசிக்கொண்டீருக்கும் போது அவர் கூறினார்- தமிழ் மக்களுக்காக நீங்கள் போராடக் கூடாது என்று சொல்லுவதற்குப் பிரபாகரனுக்கு என்ன உரிமை இருக்கிறது. அவர் எவ்வாறு அப்படி சொல்ல முடியும். எப்போது புலிகள் ஏனைய இயக்கங்களை அழித்து, தாங்கள் மட்டுமே போராடுவதற்குத் தகுதி உள்ளவர்கள் என்றனரோ அப்போதே தமிழர் விடுதலைப் போராட்ட அரசியல் முற்று பெற்றுவிட்டது, தவிர பிரபாகரனால் ஒரு போதும் எதையும் அடைய முடியாது என்பதும் அப்போதே தெளிவாகிவிட்டது.

இதிலுள்ள இன்னொரு முரண்நகையான விடயம் என்வென்றால்,தங்களுடைய நலனுக்காக அரசுடன் கூட்டுச் சேரும் அரசியலையும் தொடங்கி வைத்தவர்களும் புலிகள்தாம். இது பலரும் தொட்டுக் காட்டாத விடயமாகும். நான் இங்கு புலிகள் என்று குறிப்பிடுவது அதன் தலைமையையே அன்றி, தன்னலமற்றுப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட போராளிகளை அல்ல, இந்தியாவை வெளியேற்றும் நோக்கில் புலிகளே முதன்முதலாக அரசுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டனர்.

இந்திய படைகள் வடகிழக்கில் நிலை கொண்டிருக்கும் வரை தனது ஏகத்தலைமைவாத அரசியலை முன்னெடுக்க முடியாது என்று கருதிய பிராபகரன் பிரேமதாசாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டார். அன்னறைய சூழலில் புலிகளுக்கு எதிர் நிலையில் இருந்த இயக்கங்கள் அரசுடன் சேர்ந்திருக்கவில்லை. அப்போது தங்களது செயல்பாட்டிற்கு வகையில் 'அரசு புலிகள் பேச்ச - புலிகளால் மேற்கொள்ளப்ட்ட ஒரு தந்திரோபாய நடவடிக்கை' எனும் தலைப்பில் சிறு கைநூல் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். நான்கு கேள்விகளுக்குப் பதிலளிப்பது போன்று தொகுக்கப்ட்டிருந்த மேற்படி நூலில் - இனவாத சிறிலங்கா அரசாங்கத்துடன் பேசுவது சரியான ஒன்றாகுமா என்னும் கேள்விக்கு - இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதில தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையே பொது நலன்கள் சந்தித்துக் கொள்கின்றன.எங்கள் நடவடிக்கை,யப்பானைச் சீனாவில் இருந்து வெளியேற்றுவதற்காக மாவோ, சியாங்காய் சியாங்காய் ஷேக்குடன் சமரசம் செய்து கொண்டதற்கு ஒப்பானதாகும் என்று பதிலளித்திருந்தனர்.

இதன் மூலம் தங்களது சொந்தநலன்களுக்காக எதிரியுடன் கூட்டுச் சோந்த புலிகள், மற்றவர்கள் தங்களது அரசியல் தெரிவுக்காக அரசுடனோ அல்லது இந்தியாவுடனோ சேர்ந்திருக்கும்போது அதை துரோகம் என்றனர். இராணுவத்துடன் தங்களது இருப்புக்காகச் சேர்ந்தியங்க முடியும் என்றும் வழிமுறைகளை சொல்லிக் கொடுத்தவர்களும் புலிகள்தாம். மன்னார் முள்ளிக்குளத்தில் அமைந்திருந்த புளெட் இயக்கத்தின் பிரதான முகாமைக் கடற்படையின் உதவியுடனேயே புலிகள் தாக்கி அழித்தனர்.அதில் புளெட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ஈழத் தமிழர் போராட்ட அரசியலில்(சொந்த நலன் கருதிய) எங்கள் இருப்புக்காக இராணுவத்துடன் இணைந்திருப்பதும் தவறல்ல என்னும் தந்ரோபாயத்தை முதலில் அறிமுகம் செய்தவர்கள் புலிகளேயன்றி வேறு எவருமல்லர். தாங்களே முதன்மை பெற வேண்டுமெனும் பிரபாகரனின் பிடிவாதம்தான், இறுதியில் தன்னலமற்று போராடப் புறப்பட்ட பல ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள், பிற்காலங்களில் நாட்கூலிகளாக வேலை செய்ததை நான் கண்டிருக்கிறேன். இப்போது அந்த நிலை புலிகளின் போராளிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. புலிகளின் எதேச்சதிகாரச் செயல்பாடுகளால் ஏற்பட்ட வெறுப்பால்தான், புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் பலவும் அரசில் தஞ்சமடைய நேர்ந்தது. அத்தகையதொரு நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர் என்பதைத்தான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் அரசும் புலிகளின் இராணுவரீதியான செயற்பாடுகளை எதிர்கொள்ளுவதற்கு மற்றைய இயக்கங்களைப் பயன்படுத்திக் கொண்டது.

சுருக்கமாச் சொன்னால் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் எனின் அதில் ஒருவர்தான் இருக்க முடியும்- அது பிரபாகரன் தலைமையிலான புலிகள் மட்டும்தான். பிரபாகரனின் முடிவுக்கு மாறாக எவர் சிந்திப்பினும் அது துரோகம். எனது சிறு பிராயத்தில் மலர் தூவி வரவேற்கப்பட்ட மாத்தையா துரோகியானதும் இந்தப் பின்புலத்தின் விழைவுதான். டெலோவை அழிப்பதற்குப் புலிகள் என்ன பழிளை போதித்தனரோ அதே பழியை மாத்தையா மீதும் சுமத்தினர். மாத்தையா இந்திய உளவுத்துறையான 'றோ' உடன் இணைந்து பிரபாகரனை கொல்லச் சதி செய்தார் என்பதுதான் மாத்தையா மீதான குற்றச்சாட்டு. ஆனால் அது குறித்த எந்தவொரு ஆதாரத்தையும் புலிகள் பகிரங்கபடுத்தவில்லை. ஆனால் புலிகளிடம் அப்படி எந்தவொரு ஆதாரமும் அவர்களிடம் இல்லை என்பதுதான் உண்மை. மாத்தையாவின் குழுவில் இருந்த ஒருவருக்கு இந்திய உளவுத்துறை நடிகையொருவரை செட்பண்ணிக் கொடுத்தே மாத்தையாவை தங்கள் வலையில் வீழ்த்தியதென்றுகூடக் கதை சொல்லப்பட்டது. உண்மையில் பிரபாகரனின் முடிவு என்று வாதிட்டால், அதை செயல்படுத்த எத்தனித்தால் அதன் விளைவு துரோகியாகச் சாவதுதான்.

இன்று ஈழத் தமிழ் மக்கள் தங்களின் தலைவராக அங்கீகரித்திருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஒரு காலத்தில் புலிகளின் துரோக பட்டியலில் இருந்தவர் என்பது பலருக்கும் தெரியாத சங்கதி.சந்திரிகா அரசின் ஊடாகத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு முயன்றதால், சம்பந்தன் 'போட்டுத் தள்ள வேண்டியவர்கள்' பட்டியலில் இணைக்கப்பட்டார். அன்றைய சூழலில் சம்பந்தன் தனது வீட்டிற்கு நூறு மீற்றர் தொலைவிலுள்ள தனது குடும்ப ஆலயத்துக்கூட பாதுகாப்பு இல்லாமல் போக முடியாமல் இருந்தவர் என்பதும் பலருக்கு தெரியாத சங்கதியே! ஏற்கனவே சம்பந்தனின் ஆலோசகராகத் தொழிற்பட்டுக் கொண்டிருந்த கலாநிதி நீலன் திருச்செல்வம் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்த நிலையில்,அடுத்தது சம்பந்தன்தான் என்று வெகுசனப்பரப்பில் பேசப்படுமளவிற்கு நிலைமைகள் இருந்தன. நோர்வேயின் சமாதான முயற்சி சம்பந்தனின் உயிரை காப்பாற்றியது. அன்றைய நிலைமையில் சம்பந்தன் போன்ற ஜனநாயக அரங்கில் தடம்பதித்திருந்த தலைவர்களின் ஆதரவு புலிகளுக்குத் தேவைப்பட்டது. புலிகள்தாம் எல்லாம் என்பதைச் சம்பந்தன் ஒப்புக்கொண்டதால் 'துரோகி' சம்பந்தன் புலிகளின் வட்டத்திற்குள் சிறந்த தலைவரானார். இது பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார். புலிகள் அமிர்தலிங்கத்தை துரோகி என்று சுட்ட போது உடுப்பிட்டி சிவா எனப்படும் சிவசிதம்பரம் காயத்துக்குள்ளானார். பின்னர் அதிஷ்டசவமாக தப்பித்தும் கொண்டார். ஒரு வேளை சிவசிதம்பரம் அன்றே கொல்லப்பட்டிருந்தால் 'துரோகி' ஆனால் பிழைத்துக் கொண்டதால் தம்பிதான் எல்லாம் என்று தியாகி ஆகிவிட்டார்.

ஆனால் இதிலுள்ள சுவாரசியம் என்னவென்றால், பிரபாகரன் யாரையெல்லாம் துரோகி என்று துரத்தினாரோ, அவர்களே இன்று ஈழத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்களாக வெளித் தெரிவதுதான்.

சிவவராம்- இந்தப் பெயர் நான் எழுதத் தொடங்கிய காலத்தில் எனக்கு ஆதர்ஷமான பெயர். ஒரு வகையில் நான் அரசியல் ஆய்வுத்துறைக்குள் வர வேண்டுமென்னும் உத்வேத்தை அளித்த பெயரென்றும் சொல்லலாம். ஆனால் இப்போது வெளிவரும் தகவல்களோ அனைத்தையும் புரட்டிப்போடுவதாக இருக்கிறது. நண்பர் நடராசா குருபரன் எழுதிவரும் 'மௌனம் கலைகிறது' என்னும் தொடரில் 2004 இல் விடுதலைப்புலிகளின் இராணுவ கட்டமைப்பபை நிலை குலையச் செய்த, கிழக்குத் தளபதியும் பிரபாகரனின் நம்பிக்கை நட்சத்திரமுமான கருணாவின் பிளவின் பின்னணியில் செயலாற்றிய மூளை சிவராமே என்று பதிவு செய்திருக்கிறார். கருணா பிளவின் பின்னரான நிலைமைகள் தனக்குப் பாதகம் என்பதை அறிந்ததும், சிவராம் பிரபாகரன் பக்கமாக சாய்ந்து கொண்டு, இராணுவ அர்த்தத்தில் வன்னியின் முக்கியத்துவம் என்ன என்பதை விளக்கும் வகையில் கருணாவுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். பின்னர் விடுதலைப் புலிகள் கருணாவை இராணுவரீரியாக எதிர் கொண்டபோது, அதற்கும் பிறிதொரு விளக்கத்தைக் கொடுத்திருந்தார். இதுவரை சிறிலங்கா இராணுவத்தை எதிர் கொண்டு வந்த புலிகள் தங்களது படைப்பிரிவொன்றையே வெற்றிகரமாக எதிர்கொண்டதன் மூலம் புதியதொரு அனுபத்தைப் பெற்றுக் கொண்டனர் என்பதாக, புலிகள் கிழக்கின் கருணா அணியினரைத் தாக்கியழித்ததை நியாயப்படுத்திருந்தார். வாசித்த நாங்களோ சிவராமின் இராணுவ விஞ்ஞான அறிவையெண்ணி மெச்சிக்கொண்டோம்.ஆனால் அதன் சூத்திரதாரியே சிவராம் எனும்போது என்ன சொல்வது! பபின்னர் சிவராம் படுகொலை செய்யப்பட்டபோது பிரபாகரன் தனது அதியுயர் விருதான ’மாமனிதர்' விருதை வழங்கிக் கௌரவித்தார். புலிகளின் இராணுவ மரியாதையோடுதான் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இப்போது ஈழத் தமிழ் தேசிய அரசியலில் சிவராமின் இடம் என்ன- மாமனிதரா, தேசியவாதியா, துரோகியா, தியாகியா- சிவராம் யார்? எனவே இங்கு ஒரு விடயம் தெளிவாகிறது. பிரபாகரனின் முடிவுகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தால் அவர் தியாகி, சிறந்த தமிழ் தேசியவாதி- எதிர்த்தால் அவர் பக்கம் எத்தகைய நியாயம் இருப்பினும் அவர் ஒரு துரோகியே! கடந்த முப்பது வருட கால அரசியலில் துரோகி- தியாகி எனபது பிரபாகரனை ஆதரித்தல் எதிர்த்தல் என்பதில் தங்கியிருந்தது.

புலிகளின் வீழ்ச்சியை தொடர்ந்து இந்த (துரோக) முத்திரை குத்தும் அரசியல் நகைப்பிற்கிடமாகியது. அதுவரை புலிகளை எதிர்த்து நின்றவர்களையும் புலிகளை நிராகரித்தவர்களையும் மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்தவதற்காக பயன்டுத்தப்பட்ட 'துரோகி' என்னும் வாதம், ஆச்சரியகாரமான வகையில் அதன் மூத்த உறுப்பினர்களுக்கும் பலவருடங்களாகப் புலம்பெயர்ந்த நாடுகளில் பிரபாகரனுக்கு சேவகம் செய்தவர்களுக்கும் எதிராக திரும்பியது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போரின் போது வீரச்சாவடைந்து விட்டார் என்னும் தகவலை வெளியிட்ட புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பி. துரோகியானார். பின்னர் புலிகளின் சொத்துக்களை பதுக்கிக் கொள்வதில் ஏற்பட்ட கோஷ்டி மோதல்களின் காரணமாக பலர் துரோகிகளாக்கப்பட்டனர். காஸ்டோ பிரிவின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள் இருந்ததால் தங்களது செயற்பாடுகளுக்குக் குந்தகமானவர்கள் என்று கருதப்பட்டடோர் மீதெல்லாம் பிரபாகரன் வீசிய துரோகி-பூமாறங் அவரது சகாக்களையே பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

அல்பிரட்துரையப்பா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சபாரத்தினம், மாத்தையா, பத்மநாபா, நீலன்திருச்செல்வம், கருணா இன்னும் நூற்றுக் கணக்கானோருடன் நீண்டு கிடக்கும் பிரபாகரனின் துரோகி பட்டியலில் இப்போது பல புலிகள். இறுதியில் அது பிரபாகரனையாவது விடடுவைக்குமா என்பது சந்தேகமே!

யதீந்திரா

(காலச்சுவடு பிப்ரவரி 2012)

கருணாகரனின் பேட்டி முடிய இப்போ யதீந்திராவின் கட்டுரை .

நான் யாழில் தொடர்ந்து எழுதி வந்ததது நிருபணமாகிக்கொண்டே போகின்றது.

உண்மைகள் உறங்கலாம் சாகாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் மனதில் சுடர் விட்டுக்கொண்டிருந்த இலட்ச்சியம் மிக உயர்வானது...இந்த இனம் அந்த போராளியின் கரங்களை சரிவரப் பற்றிப் பிடிக்கவில்லை..தன் வளிக்குள் அந்த போராளியை கொண்டுவருவதில் அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டிருந்தது..அதில் வெற்றியும் கண்டது...அரசியல் வாதிகள் மீதான தற்கொலைத் தாக்குதல்களை புகழ்ந்து பாடி,அரசியல்ப் படுகொலைகளை மெச்சி,வெல்லப் பட முடியாதவ்ர்கள் என்கிற மாதிரியான ஒரு விம்பத்தை மக்கள் மத்தியில் கட்டமைக்கும்படி புலிகளைத் தூண்டி உள்ளூர் ஊடகங்களை மட்டும் ஊட்டி வளர்த்து சர்வதேச ரீதியில் பிரச்சாரங்களை கோட்டைவிட்டு,சமூக அடக்குமுறைகளைப் பற்றி பெரிதாக வாயைத்திறக்க முடியாத படி புலிகள் மேல் செல்வாக்குச் செலுத்தி என்று நீண்டு செல்லும் பட்டியலில் தனது இரும்புப் பிடிக்குள் இருந்து அந்தப் போராளியை தப்பிவிட முடியாத படி பார்த்துக் கொண்டது இந்தச் சமூகம்...இனிமேல் இந்த ஒட்டு மொத்த சமூகமே இவற்றை உடைத்துக்கொண்டு மிகச்சரியான தீர்க்கமான எண்ணங்களைக் காவிக்கொண்டு,சரி பிழைகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு கிளம்பவேண்டும்...கிளம்பும்...விடுதலைக்கான தேவைகள் முன்னரிலும் பலமாக எம்மினத்தின் முன்னால் இருக்கின்றன...எப்பொழுதும் எமக்கு முன்னால் அந்தத்தேவைகளை சிங்களம் வைத்திருக்கும்...பிரிவுகள் பேசிச் சிதைந்து போய்க் கிடக்கும் எம்மினம் தனக்குள் முதலில் ஒன்றுபடவேண்டும்...சாதி,மத,பிரதேச பிரிவினைகள் ஒரு போதும் எம்மை ஒன்று பட விடாது என்பதை இந்த சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு சாதாரண மனிதனும் உணரவேண்டும்..சமூகப் பிளவுகள்தான் எம்மினத்தில் துரோகம் முளைவிடவும்,துரோகிகள் உருவாகவும் அடிப்படைக் காரணிகளாக இருந்தன,இருக்கின்றன...இனவிடுதலைக்கு தடையாக இருக்கும் சமூக விலங்குகள் உடைபடவேண்டும்..அழிந்து போன போராட்டம் மிகச்சரியான பாதையை தேர்ந்தெடுக்க எம் இளைஞ்ஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும்...தவறுகளைத் திருத்திக்கொள்ளாமல்,முன்னர் தொடரப்பட்ட அதே பல தவறான வழிமுறைகளை காவிக்கொண்டு மீண்டும் எமக்குள் அடிபட்டு முளையிலேயே எமது போராட்டம் இன்னொரு தரம் அழிந்து விடக் கூடாது...அதுதான் உண்மையான இனவிடுதலையை வேண்டுபவர்களின் மனங்களில் ஓயாது எரிந்து கொண்டிருக்கும் பெரும் தீ...

386677_294813680554988_100000790750057_739689_691699718_n.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.