Jump to content

தமிழரின் வாழ்வியல் கருவூலம் [கருத்துக்கள்]

Recommended Posts

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ். 64

தம்முடைய மக்களின் சிறு கைகளால் துழாவப் பெற்ற உணவு , பெற்றோர்க்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும்

எனது பார்வை:

இந்தக் குறளை படிக்க நல்லாய்தான் இருக்கு . ஆனால் , இது வெளிநாட்டுக்கு சரிப்பட்டுவருமா ? எனக்கு இதைப்பாக்க அண்மைல நடந்த

ஞாபகம் வருகின்றது . நோர்வேயில தாய்தகப்பன் பிள்ளைக்கு கையால சாப்பாடு குடுக்க ,

கவுன்சில்காறன் வந்து தூக்கிகொண்டு போட்டான் . இதை பிள்ளை செய்தாலும் தாய்

தகப்பனுக்கு நடக்கும் . ஏனெண்டால் இது சுத்தம் சுகாதாரம் சம்பந்தமானது . இதில

சென்ரிமன்ற் கலக்கிறது நல்லாயில்லை.............. .

இதன் அர்த்தம் வேறு மாதிரியானது என்று நான் நினைக்கின்றேன்.

அவர்களது கையால் எதைச்செய்து தந்தாலும் அது அமுதமே என்ற பொருள்படும். கைகளால் துலாவுதல் என்பது கையில் வைத்து அசுத்தமாக்குதல் என்பதற்குள் வரும் என்று நான் நினைக்கவில்லை. மற்றவர்களின் கருத்தையும் பார்ப்போம்.

மிக்க நன்றிகள் விசுகு , உங்கள் நேரத்திற்கும் கருத்துப் பகிர்வுகளிற்கும் . நீங்கள் எது சொன்னாலும் அதில் எனது வளர்சி என்ற அக்கறையும் , ஓர் மறைமுகச்செய்தியும் உள்ளடங்கி இருக்கும் :icon_idea: . எனக்குத் தெரிந்தளவில் அளைதல் அல்லது துளாவுதல் ஒரு பொருளின் தொடுகையைக் குறிக்கும் :):):unsure: .

Link to comment
Share on other sites

  • Replies 179
  • Created
  • Last Reply

தொடங்குவதற்கு முயற்சிக்கிறேன் கோ. அது வரைக்கும் உங்க வண்டியிலைதான் நம்ம கோடாலியையும் போட்டுக்க வேணும். பரவாயில்லைத்தானே?

Link to comment
Share on other sites

தொடங்குவதற்கு முயற்சிக்கிறேன் கோ. அது வரைக்கும் உங்க வண்டியிலைதான் நம்ம கோடாலியையும் போட்டுக்க வேணும். பரவாயில்லைத்தானே?

உங்களுக்கு முன்னால் நான் ஒரு தூசு மல்லை :) . உங்கள் போன்றோரால் இந்தப்பதிவு பட்டை தீட்டப்படுமானால் அது தான் எனக்குப் பெரிய மனநிறைவையும் , சந்தோசத்தையும் கொடுக்கும் :):):) .

Link to comment
Share on other sites

இத்துடன் அறத்துப்பால் -இல்லறவியல் - புதல்வரைப் பெறுதல் (மக்கட்பேறு) பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டுவருகின்றேன் . மேலும் , கள உறவுகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் . எனது பதிவுகளை வாசித்து விட்டு இதற்கான பகுதியில் பின் ஊட்டங்களைப் போடாது இது சம்பந்தமாக திண்ணையில் கருத்தாடுவது , வீதியில் நின்று பூராயம் கதைப்பதற்குச் சமனானது என்பது எனது தாழ்மையான எண்ணப்பாடாகும் . உங்கள் கருத்துகள் எனது சிந்தனையில் மாற்றத்தையும் , இந்தப்பகுதியை வாசிக்கும் வாசகர்களையும் சென்றடைந்து அவர்களையும் செழுமைப்படுத்தும் அல்லவா ? தொடர்ந்து அதிகரித்துவரும் உங்கள் பேராதரவிற்கு நான் தலைவணங்குகின்றேன் .

நேசமுடன் கோமகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய். 69

தான் பெற்ற மைந்தனை ,அறிவு ஒழுக்கங்கள் நிறைந்த சான்றோன் என்று அறிவுடையோர் புகழ்ந்து கூறக்கேட்ட தாய், அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியினும் பெருமகிழ்ச்சி அடைவாள்.

எனது பார்வை:

ஒரு அம்மா பத்து மாதங்கள் ஒரு குழந்தையைச் சுமந்து தனக்கும் அதற்கும் உயிர்குடுக்கின்றாள் . அந்தக் குழந்தையை இந்தப் பூமிக்கும் , அந்தக் குழந்தை வரக்காரணமானவனுக்கும் அறிமுகப்படுத்துன்றாள் :icon_mrgreen:.

அப்பொழுது அவள் அடைகின்ற மகிழ்ச்சியை விட , அந்தக் குழந்தை கல்வியாலும் , ஒழுக்கத்தாலும் நிறைந்தது என்று அறிவுடையோர் சொல்கின்றபொழுதே அந்தத் தாயின் வயிறு குளிர்கின்றது .( பெரிதும் மகிழ்கின்றாள் ) .இந்தக் குறளில் வள்ளுவர் ஏன் ஆண்மகன்

என்று மட்டும் குறிப்பிடுகின்றார் :o:blink: ????????அப்போ , அவர் பார்வையில் பெண் மகள் என்ன ? ஆராயவேண்டிய விடையம்.......... :unsure::icon_idea: .

காரணம் சான்றோன் என்ற சொல் கல்வியைக் குறிக்கும் என்றால் கண்டிப்பாகக் கல்வி என்ற தனியாக வரும் அதிகாரத்தில் கூறியிருப்பார் திருவள்ளுவர். ஆனால் சான்றோன் என்றச் சொல்லை புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்தில் சொல்லியிருக்க மாட்டார்... எனவே,

திருவள்ளுவர் காலத்தில்

சான்றோன் என்பது கல்வி கற்றவனைக் குறிக்கவி்ல்லை...

சான்றோன் என்பது போரில் கலந்து கொள்பவனைக் குறிக்கும்... புறமுதுகைக் காட்டாதவகைக் குறிக்கும்... போரில் இறந்தவனையும் குறிக்கும்.

அவ்வாறு போரில் கலந்து கொள்வதையும் புறமுதுகைக் காட்டாதவனையும் போரி்ல் இறந்தவனையும் கண்டு திருவள்ளுவர் காலத்தியத் தாய், தான் பெற்றதற்காகப் பெரிய மகிழ்ச்சி - பெருமை அடைந்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது பாட்டி

தொடர்க... :icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

திருவள்ளுவர் காலத்தில் மட்டுமல்ல... நம் மாவீரர்களைப் பெற்றெடுத்த தாய் தந்தையரும் அப்படித்தான்.

அவர்கள் இன்னும் மகிழும் காலம் வெகுவிரைவில் வரும்.

நன்றி நிலா அக்கா!:)

கோ! தங்களின் குறள் பொழிப்புரைகள் சில நாட்களாக கொஞ்சம் சீரியஸாக எழுதப்படுகின்ற மாதிரி தெரிகின்றது.

எல்லோருக்கும் புரியும்படியான வார்த்தைகளினைப் பாவித்து நகைச்சுவைப் பாணியில் எழுதினால் ரசித்தும் படிக்கலாம்.

இல்லாவிட்டால் பழைய வேப்பங்காய் கதைதான். :lol:

குறளின் கருத்தும் புனிதமும் மாறாமல் கலகலப்பாக எழுதுங்கள். நன்றாக அமையும்...!

யாராவது பிழை கண்டுபிடித்து விடுவார்கள் என்று பயமோ? :rolleyes:

கோ! திருவள்ளுவர் திருக்குறளை எழுதி பல வருடங்களுக்குப் பின்னர்தான்.... திருக்குறளின் அருமையே பலருக்கு புரிந்தது.

புதுமைகள் புகுத்தபடுவது எழுத்துக்கு அடையாளத்தினைக் கொடுக்கும்!

வாழ்த்துக்கள்! தொடருங்கள்...! :)

Link to comment
Share on other sites

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய். 69

தான் பெற்ற மைந்தனை ,அறிவு ஒழுக்கங்கள் நிறைந்த சான்றோன் என்று அறிவுடையோர் புகழ்ந்து கூறக்கேட்ட தாய், அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியினும் பெருமகிழ்ச்சி அடைவாள்.

எனது பார்வை:

ஒரு அம்மா பத்து மாதங்கள் ஒரு குழந்தையைச் சுமந்து தனக்கும் அதற்கும் உயிர்குடுக்கின்றாள் . அந்தக் குழந்தையை இந்தப் பூமிக்கும் , அந்தக் குழந்தை வரக்காரணமானவனுக்கும் அறிமுகப்படுத்துன்றாள் :icon_mrgreen:.

அப்பொழுது அவள் அடைகின்ற மகிழ்ச்சியை விட , அந்தக் குழந்தை கல்வியாலும் , ஒழுக்கத்தாலும் நிறைந்தது என்று அறிவுடையோர் சொல்கின்றபொழுதே அந்தத் தாயின் வயிறு குளிர்கின்றது .( பெரிதும் மகிழ்கின்றாள் ) .இந்தக் குறளில் வள்ளுவர் ஏன் ஆண்மகன்

என்று மட்டும் குறிப்பிடுகின்றார் :o:blink: ????????அப்போ , அவர் பார்வையில் பெண் மகள் என்ன ? ஆராயவேண்டிய விடையம்.......... :unsure::icon_idea: .

காரணம் சான்றோன் என்ற சொல் கல்வியைக் குறிக்கும் என்றால் கண்டிப்பாகக் கல்வி என்ற தனியாக வரும் அதிகாரத்தில் கூறியிருப்பார் திருவள்ளுவர். ஆனால் சான்றோன் என்றச் சொல்லை புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்தில் சொல்லியிருக்க மாட்டார்... எனவே,

திருவள்ளுவர் காலத்தில்

சான்றோன் என்பது கல்வி கற்றவனைக் குறிக்கவி்ல்லை...

சான்றோன் என்பது போரில் கலந்து கொள்பவனைக் குறிக்கும்... புறமுதுகைக் காட்டாதவகைக் குறிக்கும்... போரில் இறந்தவனையும் குறிக்கும்.

அவ்வாறு போரில் கலந்து கொள்வதையும் புறமுதுகைக் காட்டாதவனையும் போரி்ல் இறந்தவனையும் கண்டு திருவள்ளுவர் காலத்தியத் தாய், தான் பெற்றதற்காகப் பெரிய மகிழ்ச்சி - பெருமை அடைந்துள்ளார்.

மிக்கநன்றிகள் நிலாமதி உங்கள் நேரத்திற்கும் கருத்துப்பகிர்வுகளுக்கும் . மேலும் , ஐயனுக்குப் பொய்யாமொழிப்புலவர் என்ற பெயரும் உண்டு எனது பார்வையில் பல இடங்களில் பொருள் மயக்கங்கள் வருகின்றது . இயன்றவரையில் தவிர்க்கின்றேன் . ஆன்றோன் அல்லது சான்றோன் , கற்பதனால் கைவரப்பெற்ற அறிவை உடையவன் என்றும் பொருள்படும் . இதற்கு மற்றவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போம் :):):) .

அது பாட்டி

தொடர்க...

மிக்க நன்றிகள் விசுகு உங்கள் நேரத்திற்கும் கருத்துப்பகிர்வுகளிற்கும் :):) .

Link to comment
Share on other sites

திருவள்ளுவர் காலத்தில் மட்டுமல்ல... நம் மாவீரர்களைப் பெற்றெடுத்த தாய் தந்தையரும் அப்படித்தான்.

அவர்கள் இன்னும் மகிழும் காலம் வெகுவிரைவில் வரும்.

நன்றி நிலா அக்கா!

கோ! தங்களின் குறள் பொழிப்புரைகள் சில நாட்களாக கொஞ்சம் சீரியஸாக எழுதப்படுகின்ற மாதிரி தெரிகின்றது.

எல்லோருக்கும் புரியும்படியான வார்த்தைகளினைப் பாவித்து நகைச்சுவைப் பாணியில் எழுதினால் ரசித்தும் படிக்கலாம்.

இல்லாவிட்டால் பழைய வேப்பங்காய் கதைதான்.

குறளின் கருத்தும் புனிதமும் மாறாமல் கலகலப்பாக எழுதுங்கள். நன்றாக அமையும்...!

யாராவது பிழை கண்டுபிடித்து விடுவார்கள் என்று பயமோ?

கோ! திருவள்ளுவர் திருக்குறளை எழுதி பல வருடங்களுக்குப் பின்னர்தான்.... திருக்குறளின் அருமையே பலருக்கு புரிந்தது.

புதுமைகள் புகுத்தபடுவது எழுத்துக்கு அடையாளத்தினைக் கொடுக்கும்!

வாழ்த்துக்கள்! தொடருங்கள்...!

மிக்க நன்றிகள் கவிதை உங்கள் நேரத்திற்கும் கருத்துப்பகிர்வுகளுக்கும் . உண்மைதான் , பொய்யாமொழிப் புலவரின் கருத்துகளுக்கு எனது கருத்தை எழுதும்பொழுது அதிக எச்சரிக்கை தேவைப்படுகின்றது . மேலும் , நீங்கள் கூறிய விமர்சனங்களை உள்வாங்கி இயன்றவரையில் இலகுபடுத்தி பேரீச்சம் பழமாக்குகின்றேன் :D:D:icon_idea: .

Link to comment
Share on other sites

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய். 69

தான் பெற்ற மைந்தனை ,அறிவு ஒழுக்கங்கள் நிறைந்த சான்றோன் என்று அறிவுடையோர் புகழ்ந்து கூறக்கேட்ட தாய், அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியினும் பெருமகிழ்ச்சி அடைவாள்.

எனது பார்வை:

ஒரு அம்மா பத்து மாதங்கள் ஒரு குழந்தையைச் சுமந்து தனக்கும் அதற்கும் உயிர்குடுக்கின்றாள் . அந்தக் குழந்தையை இந்தப் பூமிக்கும் , அந்தக் குழந்தை வரக்காரணமானவனுக்கும் அறிமுகப்படுத்துன்றாள் :icon_mrgreen:.

அப்பொழுது அவள் அடைகின்ற மகிழ்ச்சியை விட , அந்தக் குழந்தை கல்வியாலும் , ஒழுக்கத்தாலும் நிறைந்தது என்று அறிவுடையோர் சொல்கின்றபொழுதே அந்தத் தாயின் வயிறு குளிர்கின்றது .( பெரிதும் மகிழ்கின்றாள் ) .இந்தக் குறளில் வள்ளுவர் ஏன் ஆண்மகன்

என்று மட்டும் குறிப்பிடுகின்றார் :o:blink: ????????அப்போ , அவர் பார்வையில் பெண் மகள் என்ன ? ஆராயவேண்டிய விடையம்.......... :unsure::icon_idea: .

காரணம் சான்றோன் என்ற சொல் கல்வியைக் குறிக்கும் என்றால் கண்டிப்பாகக் கல்வி என்ற தனியாக வரும் அதிகாரத்தில் கூறியிருப்பார் திருவள்ளுவர். ஆனால் சான்றோன் என்றச் சொல்லை புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்தில் சொல்லியிருக்க மாட்டார்... எனவே,

திருவள்ளுவர் காலத்தில்

சான்றோன் என்பது கல்வி கற்றவனைக் குறிக்கவி்ல்லை...

சான்றோன் என்பது போரில் கலந்து கொள்பவனைக் குறிக்கும்... புறமுதுகைக் காட்டாதவகைக் குறிக்கும்... போரில் இறந்தவனையும் குறிக்கும்.

அவ்வாறு போரில் கலந்து கொள்வதையும் புறமுதுகைக் காட்டாதவனையும் போரி்ல் இறந்தவனையும் கண்டு திருவள்ளுவர் காலத்தியத் தாய், தான் பெற்றதற்காகப் பெரிய மகிழ்ச்சி - பெருமை அடைந்துள்ளார்.

வடமொழியில் காணப்படும் நான்கு வர்ணகளில் சத்திரியரை தமிழ் நாட்டில் கணவில்லை என்று சிலர் நினைக்கிறார்கள்.(நான் கலிப்பகையார், மருள் நீக்கி போன்ற பெயருடையோர் சத்திரியக் குலம் என்று நினைக்கிறேன்). இதற்குப் பதில் கூறும் சிலர், சத்திரியர் தான் தமிழில் சான்றோர் ஆயிற்று என்கிறார்கள்.

ஆனால் சிவல்வில் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தொடுப்பை அமத்தி வரும் புத்தத்தில் 17 ம் பக்கத்தை படியுங்கள். அது பிரதி எடுக்க முடியாத பகுதி. இந்த புத்தகம் சில காலங்களில் $400 கு விலையாகியிருந்தது.

http://books.google.com/books?id=VF2VMUoY_okC&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false

நாம் தடக்குப் பட்ட தமிழில் சான்றோரும் நல்லோரும் சமாகத்தான் பாவிக்கப் பட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

வடமொழியில் காணப்படும் நான்கு வர்ணகளில் சத்திரியரை தமிழ் நாட்டில் கணவில்லை என்று சிலர் நினைக்கிறார்கள்.(நான் கலிப்பகையார், மருள் நீக்கி போன்ற பெயருடையோர் சத்திரியக் குலம் என்று நினைக்கிறேன்). இதற்குப் பதில் கூறும் சிலர், சத்திரியர் தான் தமிழில் சான்றோர் ஆயிற்று என்கிறார்கள்.

ஆனால் சிவல்வில் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தொடுப்பை அமத்தி வரும் புத்தத்தில் 17 ம் பக்கத்தை படியுங்கள். அது பிரதி எடுக்க முடியாத பகுதி. இந்த புத்தகம் சில காலங்களில் $400 கு விலையாகியிருந்தது.

http://books.google....epage&q&f=false

நாம் தடக்குப் பட்ட தமிழில் சான்றோரும் நல்லோரும் சமாகத்தான் பாவிக்கப் பட்டிருக்கிறது.

மிக்க நன்றிகள் மல்லையூரான் உங்கள் நேரத்திற்கும் கருத்துப்பகிர்வுகளுக்கும் :):):) .

Link to comment
Share on other sites

தமிழ் - வடமொழி வேறுபாடுகள்

1. பழைமையானது - பிறவற்றிலிருந்து மூலமானது பெறப்பட்டது

அனைத்து மொழிகளுமே பிறவற்றிலிருந்து இருந்து பெறப்படுகிறது வடமொழி தமிழ் இவை இதற்கு விதிவிலக்கல்ல . இரண்டும் பழமையானது. தமிழ் சமஸ்கிரித்தை விட பழமையானது, இதனால் சமஸ்க்ரிதம் புதிய மொழியில்லை. சிலப்பதிகாரத்தில் 11% சமஸ்க்ரித வார்த்தைகள் இருப்பதாக கூறுகின்றனர்.

அப்படியானால் தமிழ் மொழி இயற்கை மொழி எனபது?

"அப்பா" இதன் பின்னால் ஒரு காரணம் உள்ளது.

மனித மட்டுமே சொல்ல முடியும். மனித குரல் மொழி மூலம் ஒலி மற்றும் பல்வேறு இணைந்து கூட்டு இயக்கங்களை உருவாக்குகிறது தொண்டை நுரையீரல் மற்றும் பின் குரனாண் மூலம் காற்று ஏற்றுதல் தேவைப்படுகிறது, உதடுகள் மற்றும் தாடைகள் வெவ்வேறு குரல் உருவாக்க முடியும்.

ஒரு குழந்தை ஒரு குரல் செய்ய குறைந்தது ஆற்றல் தேவைப்படுகிறது வார்த்தை "அம்மா" (காற்று மூக்கு வழியாக தப்பித்து மற்றும் உதடுகள் மட்டும் திறந்து மூடி உள்ளது நுரையீரல் வெளியே வந்து) உள்ளது. அத்தகைய குறைந்த ஆற்றல் வார்த்தை தமிழ் மொழியில் அம்மா குறிக்கிறது.

ஒரு குழந்தை ஒரு குரல் செய்ய குறைந்தது இரண்டாவது ஆற்றல் தேவைப்படுகிறது வார்த்தை "அப்பா" (காற்று வாய் வழியாக தப்பித்து மற்றும் உதடுகள் மட்டும் திறந்து மூடி உள்ளது நுரையீரல் வெளியே வந்து) உள்ளது. போன்ற குறைந்தது இரண்டாவது ஆற்றல் வார்த்தை தமிழ் மொழியில் தந்தை குறிக்கிறது.

2. பேச்சு மொழியாகவும் உயிருள்ளது - செயற்கையான கிளை மொழி, பேச்சு வழக்கற்றது

இந்தியாவில் இன்னும் முழு சமஸ்திரத்தில் பேசும் கிராமம் கர்நாடகாவில் உள்ளது. எண்ணிக்கை குறைவு, ஆனால் இது இன்னும் அழிந்து விட வில்லை

3. லெமூரியாவில் தோன்றியது - இந்தியாவில் தோன்றியது.

இதில் என்ன வித்தியாசம், லெமூரியா இன்றைக்கு இல்லை, தமிழ் வாழ்ந்து கொண்டு இருப்பது இந்தியாவில் தான். சிந்து சமவெளி நாகரீகத்தில் கிடைத்தது போல் அல்லாமல் லெமூரியா குறித்த தொல்பொருள் ஆய்வு உண்மைகள் வெகு குறைவு.

4. அறநூல்கள் யாவர்க்குமானவை - தூய நூல்கள் என்பவை ஒரு சிலருக்கு மட்டுமே

இப்படி இல்லை, உபநிசதங்களும், புராணங்களும் அனைவருக்கும் பொதுவானது. அரிச்சந்த்ரா புராணம், மகாபாரதம், ராமாயணம் இதற்குச் சான்று. அர்த்த சாஸ்திரம், விதுர நீதியும் இப்படித்தான்.

தமிழில் சமணர்களுக்கு என்று சில இலக்கியங்கள் இருந்தது. அது அழிக்கப்பட்டு விட்டது என்று வரலாறு கூறுகிறது. நாம் ஐம்பெரும் காப்பியம் என்று இன்று கொண்டாடுவது சமணத்தை தழுவி எழுதியவை. தமிழிலும் சிலருக்கு என்று சில நூல்கள் இருக்கிறது.

5. உலகளாவிய பரந்த நோக்கை வலியுறுத்தல் - பிறப்பின் அடிப்படையில் சாதிப் பாகுபாடு

வர்ண தர்மம் குறித்து தொல்காப்பியமும் பேசுகிறது. பாட்டுப் பாடும் பாணர் இனத்தவர் அரசை ஆண்ட வரலாறு இங்கு இல்லை. அரச பரம்பரையில் பிறந்தவர் தான் அரசை ஆண்டனர்.

6. உயர்நிலைக்கு யாவர்க்கும் ஏற்பளித்தல் - பார்ப்பனருக்கு மட்டுமே உயர்நிலை எனும் நம்பிக்கை

இது பார்ப்பனர்கள் செய்த சதி. இதற்கு வட மொழி எப்படி பொறுப்பாகும்.

7. உயர்கல்வி எல்லோருக்கும் பொது - உயர்கல்வி பார்ப்பனருக்கு மட்டுமே

இது பார்ப்பனர்கள் செய்த சதி. இதற்கு வட மொழி எப்படி பொறுப்பாகும். தாசியின் மகன்களும் படித்து வளர்ந்த கதை வட மொழியில் உண்டு

8. பரிசில்கள் ஏழைகளுக்கும், தேவையானவர்களுக்கும் அளிக்கப்படல் வேண்டும் - பார்ப்பனருக்கு மட்டுமே பரிசில் அளிக்க வேண்டுமென்று புரவலர்களைக் கட்டாயப்படுத்தல்

இது பார்ப்பனர்கள் செய்த சதி. இதற்கு வட மொழி எப்படி பொறுப்பாகும்.

9. உண்மையேல் பற்று - ஏமாற்றுதல், பிறர் எழுதியவற்றைத்திருடித் தமதென்றல்

இதற்கு என்ன ஆதாரம், கம்பனும் வால்மீகியிடம் கடன் வாங்கி இருக்கிறான்.

10. அன்பே எல்லையற்ற மகிழ்ச்சிக்கு அடிப்படை என வலியுறுத்தல் - அறிவே பிரம்மத்தோடு இணைய அடிப்படை எனக்கூறல்

இது மதக் கருத்து, மொழியின் கருத்து இல்லை. தமிழிலும் பிற மத இலக்கியங்கள் உள்ளது. அவை அந்த மதத்தின் கருத்துகளை கூறுகிறது.

அப்படியானால் தமிழ் மொழி அன்பு பற்றி கூறவில்லையா?

11. ஒரே கடவுளை ஏற்றுக் கொள்ளும் சைவ, வைணவச் சமயங்கள் - சிறு தெய்வங்களுக்குப் பலியிடும் சடங்குகளைக் கொண்ட சமயம்

தமிழிலும் இப்படி சிறு தெய்வங்களுக்கு பலியுடும் வழக்கம் உள்ளது. ஐந்திணை தெய்வங்கள் இதற்கு சான்று

ஐந்திணை ஒழுக்கத்தில் வகைப்படுத்தப்பட்ட தெய்வங்களை வழிபடும் வழக்கத்தில் பலியுடும் வழக்கம் இருத்தா?

தெய்வங்களுக்கு பலியுடுவது மொழி வழக்கமா? சமய வழக்கமா?

ஐந்திணைப்பிரிவில் பெண்தெய்வங்கள் முதன்மை பெற்றிருந்தனரா?

தமிழகத்தில் பெண்கள் இறைப்பணிக்கும் இறைவழிபாட்டுக்கும் ஆண்களுக்கு இணையாகச் சம உரிமை பெற்றிருந்தனரா?

சிற்றம்பலம் என்னும் சிதம்பரத்திலும், மதுரையிலும் பெண் தெய்வங்கள் இருந்த கோவில்களில் ஆண்தெய்வங்கள் ஊடுருவல் மூலம் மேன்மை பெற்றது என்று மேலை நாட்டு வரலாற்றுக்குறிப்பு ஏற்புடையதா?

பெண்கள் ஆண்களுக்கு அட்ங்கி நடக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் ஆந்தெய்வங்கள் முதன்மை பெற்றும் பெண் தெய்வங்கள் இரண்டாம் நிலைப்படுத்தப்பட்டதும் பெண் அடிமைக்கு வழிவகுத்தது என்ற ப்ண்ணியத்தின் முன்வைப்பு ஏற்புடைய வாதமா?

அப்படியானால் கிராம தெய்வங்களின் வழிபாட்டுமுறைகள் மலயா சிங்கப்பூர் போன்று ஆவணப் படுத்தப்பட்டுள்ளதா?

12. இதன் இலக்கிய வர்ணனை இயல்பானது - இதன் இலக்கிய வர்ணனை கற்பனையானது

தமிழில் இல் பொருள் வைப்பு அணி, உயர்வு நவீர்ச்சி அணி உள்ளது. இவை இரண்டும் முழுக் கற்பனை.

http://www.eegarai.net/t40270p15-topic#723875

Link to comment
Share on other sites

மிக்கநன்றிகள் விஜயகுமார் உங்கள் நேரத்திற்கும் , கருத்துப்பகிர்வுகளுக்கும் :):):) .

Link to comment
Share on other sites

இத்துடன் அறத்துப்பால் -இல்லறவியல் - அன்புடமைப் பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டுவருகின்றேன் . தொடர்ந்து அதிகரித்து வரும் உங்கள் ஆதாரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் :):):) .

Link to comment
Share on other sites

இத்துடன் அறத்துப்பால் -இல்லறவியல் - விருந்தோம்பல் பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . தொடர்ந்து அதிகரித்து வரும் உங்கள் ஆதாரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் :):):) .

Link to comment
Share on other sites

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும். 71

அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் ஏதேனும் உண்டோ ? அன்புடையாரின் சிறிதளவு கண்ணீரே அவர் அன்பைப் பலர் அறிய வெளிப்படுத்திவிடும்

எனது பார்வை:

நாங்கள் ஒருத்தரிலை அன்பு வைத்தால் அந்த அன்புக்கு வானமே எல்லையாயிருக்கும் :). அப்படிப்படவருக்கு வாழ்கையில ஏதாவது சந்தோசமோ , துன்பமோ நடந்திதுதெண்டால் எங்களை அறியாமலே கண்ணில தண்ணி வந்து எங்கடை அன்பை மற்றவைக்குக் காட்டிக்கொடுத்துப்போடும் :icon_idea:.

And is there bar that can even love restrain?

The tiny tear shall make the lover's secret plain.

Y a-t-il une targette pour cacher l’affection? Les douces larmes de ceux qui aiment (en voyant la douleur de l’être chéri) révèlent l’affection intérieure.

இந்த குறளைக்கேட்கும் போது எனக்குப் பார்த்த ஒரு இடைக்காலத்துப் (1984) படம் ஒன்று ஞாபகத்திற்கு வருவதுண்டு.

ஒரு தன்மனதுக்குத்தான் நேர்மையாக வாழ விரும்பும் ஜட்ஜ் தன் மனைவி ஒரு விபத்தில் இறந்து போக இன்னோருபெண்ணை மறுமணம் செய்துகொள்ளுகிறார். ஜட்ஜின் முதல் தாரத்துப் பெண்ணுக்கு அசல் தமிழ் சினிமாச் சித்தியாக வந்து வாய்க்கிறா அந்த பெண். தன்னைத்தான் புதிய மனைவியிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியாத ஜட்ஜ் தனது மகளையும் சித்தியின் பிடிக்குள் இழந்துவிடுகிறார். மகளோ தனக்கு பிடித்தமான ஆடல் கலையைப் பயின்று கொள்ள முயல்கிறாள். சித்தி முடியாது என்று மறுத்துவிடுகிறா. ஒரு தடவை சித்தியை கேட்காமல் நடன ஆட்டத்திற்குப்போய், ஏற்பட்ட விபத்தொன்றில் தன் ஒருகாலை இழந்துவிடுகிறாள் மகள். அதன் மேல் ஜட்ஜுக்கு மகளைச் சித்தியின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியாமல்ப் போய்விடுகிறது.

எல்லாவற்றிலுமிருந்து விடுதலை கிடைக்க ஒரு வழி மட்டும் திறந்திருக்கிறது. அதாவது பெண்ணுக்கு ஒரு திருமணத்தைப் பார்த்து செய்து வைத்துவிடுவது. அவள் அழகாயும் ஒயிலாயும் நடந்து திரிந்த போது அவர் திருமணப்பேச்சை எடுத்திருந்தால் அவளின் கையைப்பிடிக்க ஆயிரம் இழைஞர்கள் அவர்காலை வந்து பிடித்திருப்பார்கள். ஆனால் அவள் இப்பொழுது ஒருகால் இல்லாமல் இந்த இளமையிலேயே நிமிர்ந்து நிற்ககூட தடியூண்டவேண்டியவளாக வந்துவிட்டாள். எப்படியும் தன் பெண்ணுக்கு ஒரு வாழ்கையைக்கண்டு பிடித்து கரையேற்றி வைப்பது தந்தையாகிய தன் கடன் என்பது மனத்தை உறுத்த, ஆக்கி வத்த சோற்றுக்குள் கைவைக்கும் ஆளாக எப்போதும் இருந்துவிட்ட ஜட்ஜ் மகளின் காதலனிடம் சென்று அவளைக் கலியாணம் செய்து கொள்ளும்படி கேட்பது என்று முடிவெடுத்துக்கொண்டு அவன் வீட்டுக்குப் போகிறார். ஜட்ஜின் பெண்ணை அதிர்ஷ்ட்மாக கண்ட பொழுது அவள் பின்னால் திரிந்த அவனோ இப்பொழுது அவளைத் துர்ரதிஷ்டாமாகப் பார்த்து ஒதுங்கி விடுகிறான். கையாலாகாத தந்தையாக இருப்பது, தான் இன்று கணட ஏமாற்றத்தையும்விட இரட்டிப்பாக மனதை வாட்ட, மகளுக்கு என்ன சொல்லப்போகிறேன் என்ற கனத்த மனத்துடன் வீடு வந்தவர், தன்னை அறியாமல் தன் ஏமாற்றத்தையெல்லாம் மகளின் மீது பொரிந்து தள்ளிவிடுகிறார். நொண்டியாகிப் போய்விட்ட தன் வாழ்வை ஏற்க மறுத்து, வீரமான இளம் நெஞ்சுடன் விடுதலையைத் தேடி எதிர்நீச்சல் போட வீட்டை விட்டுப் போய்விடுகிறது அவர் சிறகால் மூடி வளத்த அவரின் சின்னக் குஞ்சு.

நொண்டியாகப்போயிருந்தாலும் தன் அன்பு மனைவியை எப்போதும் அவர் மனத்தில் நிறைத்து வைத்திருந்த அவரின் மகளும் போய்விட்டபின் மறுதாரம் மனையிலிருந்தாலும் வேலையும், வீடுமாக ஒண்டியாக வாழக்கை நடத்துகிறார் ஜட்ஜ். அப்படியான வெறுமையான வாழ்நாட்களில் ஒருநாள் ஒரு விளம்பரம் அவர் கண்ணைக் கவர்கிறது. நேர்த்தியான ஒரு பாண்ட்சை எடுத்து மாட்டிக்கொள்ளுகிறார். சேட்டை எடுத்து கொளுவிக்கொண்டு வெளியே புறப்படப் போகிறார் ஜட்ஜ். சிவ பூசைக்குள் கரடி வந்த மாதிரி அவரின் மறுதாரம் அப்போது முன்வந்து நிற்கிறா. "ஏங்கே போகிறீர்கள் என்னிடம் சொல்லாமல்?" இது அவவின் கேள்வி. எப்படி சொல்லபோகிறார் இதை அவர் தன் மறுதாரத்திடம்? சொன்னால் ஒத்துக்கொள்வாளா அவள் அவர் போவதை? ஆனால் இதையெல்லாம் எண்ணி பார்க்க முதல் அந்த இடத்தில் அவரின் வாழ்நாளில் என்றுமே வந்திருக்காத ஒரு புதிய தைரிய உணர்வு அவரின் உடலெங்கும் பாய்ந்தது. மறுமொழியையை எடுத்து வீசினார். "உன்னிடம் எதற்காக நான் சொல்லிக்கொள்ளவேணும் வேதா? இது என் அலுவல். நான் இப்போது போயாகவேணும்". திரும்பிப் பார்க்கவில்லை; அவர் போய்விட்டர்.

அவர் வந்து சேர்ந்திருப்பது ஒரு பெரிய ஆடிரோறியத்திற்கு. அன்று அங்கே ஒரு நடன நிகழ்ச்சி. கடைசிப் பென்சுகளிள், அவர் தலைக்கறுப்பை யாரும் கண்டுகொள்ள முடியாத மூலையாக ஒரு பகுதியில் இடம் பிடித்துக்கொள்ளுகிறார். ஆடல் ஆரப்பம்மாகியது. அந்த மங்கை ஒவ்வொரு மெட்டுக்கும் விதம் விதமா எத்தனையோ அபிநயங்கள் பிடித்து ஆடினா. பார்த்து பார்த்து பிரமித்தார் ஜட்ஜ். புளகாங்கிதம் அடைந்தார். அவர் மனதில் கேள்விக்கு மேல் கேள்விகள் பறந்தோடின. எங்கிருந்து பெற்றுகொண்டாள் தன் இழந்து போன காலை? என்ன பாடெல்லாம் பட்டிருப்பாளோ இந்தளவு கலையைக் கற்றுக்கொள்ள? ஆட்டத்தின் மத்தியிலேயே எழுந்து சென்று மேடையில் வைத்தே தன் கேள்விகள் எல்லாவற்றையும் கேட்டுவிட வேண்டும் போலத்தோன்றியிருக்கும் அவருக்கு. ஆனால் அவள்தானே அவரின் கையாலாகத்தனத்திற்காக அவரை தூக்கியெறிந்து விட்டு போய்விடாள். ஆம் அந்த மேடையில் எல்லோரின் கரகோசங்களுக்கு மத்தியில் அற்புத நர்த்தனம் புரிந்துகொண்டிருக்கும் அந்த நங்கைதான் அவர் செல்லமாக வளர்த்த மகள் மயூரி. தன் தந்தையை விட்டுப் பிரிந்துபோனதிலிருந்து எல்லையில்லா வேதனைகளை மனத்திலும் உடம்பிலும் தாங்கி, தன்னந்தனியே விடா முயற்சியாக உழைத்ததால் அன்று அங்கே அவள் தனது கனவை நனவாக்கிச் சாதனை புரிந்து கொண்டிருந்தாள்.

ஆட்டம் முடிந்தது. கூட்டம் முந்தியடித்துக்கொண்டு அவளிடம் ஆட்டோகிறாபுக்கு பாயந்தது. அத்தனை அறியாத முகங்களிலும் அவள் ஒரு முகத்தை மட்டும் தேடினாள். தேடிக் கண்டு கொண்டாள். ஆடிரோரியத்தின் கடைசி மூலையில் அந்த சன நெரிசலிலும் தனியாக நின்று கொண்டிருந்தார் ஜட்ஜ். தலையை நிமிர்த்தி நேராக அவரின் கண்களுக்குள் பார்த்தாள். அந்த பார்வையின் பொருளை ஜட்ஜ் புரிந்து கொண்டார். "நான் என் வாழ்நாள் முழுவதும் தேடிய என் காவல் தெய்வத்தை கண்டுகொண்டுவிட்டேன். இனி என்றும் அவள் என் வாழ்க்கையில் நம்பகமான துணையாக என்னை விட்டு பிரியாமல் என்னுடன் இருப்பாள். கலைவாணி என் பக்கமிருக்க இனி நீ என்னைப் பற்றிக் கவலைப் படாதே. நீ போய் உன்னை நீ காப்பாற்றிக்கொள்" என்பதுதான். மகள் தன் வாழ்க்கையில் அடைந்து கொண்ட திருப்தி அன்புத் தந்தையின் மனதை நிறைக்கிறது. அவளின் திறமையை பாராட்டி கர கோசங்களும், விசில் சத்தங்களும், புகழாரங்களும் இன்னமும் ஆடிரோரியத்தை நிறைத்துக்கொண்டிருக்கிறது. அவரின் உதடுகள் எதை எதையோவெல்லாம் சொல்லத்துடித்தன. ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. எதும் பேச விரும்பவில்லைப்போலும். ஒரு கணம் மூடித்திறந்த அவரின் கண்களில் நின்று இரண்டு பனித்துளிகள் அவர் கன்னத்தின்மீது உருண்டோடியது. இரவில் பிரகாசிக்கும் மின்சார விளக்குகளின் வெளிச்சத்தில் அவை முத்தென மின்னின அவளின் கண்களுக்கு. கையை எடுத்து கன்னத்தை துடைத்து விட்டு வேறு எங்கோ பார்க்கிறார் ஜட்ஜ். அவளின் கவனத்திற்கு அடிபடுவோரால் அவளின் கவனம் திரும்புகிறது. பாரமிறங்கிய இலேசான மனத்துடன் கால் போன போக்கில் நடக்கத்தொடங்குகிறார் அந்த ஜட்ஜ்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்

Link to comment
Share on other sites

கோ: நாங்கள் தாறுமாறாகத்தான் தட்டி தள்ளுகிறோம். ஆனால் திருவள்ளுவர் கொஞ்சம் கவனம். இணையத்தில் பல இடங்களில் இது காணப்படுகிறது முடிந்தால் உங்கள் பகுதியை நீங்கள் திருதப் பாருங்கள்.

மிக்க நன்றிகள் மல்லையூரான் , தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு . நான் பிழையைத் திருத்தியுள்ளேன் :):):) .

Link to comment
Share on other sites

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்

மயூரி படக்கதையை எழுதி குறளுக்கு அழகு சேர்த்த நேர்த்தி கண்டு வியக்கின்றேன் மல்லையூரான் . நன்றிகள் உங்கள் கருத்துகளுக்கு :):):) .

படக்கதையை அப்படியே எழுத முடியவில்லை, ஏனெனில் கடைசியில் படத்தை விட்டு கொஞ்சம் விலத்துவது இனிமையாக இருக்கும் போலிருந்தது. ஆகவே யாவும் கற்பனையில் முடித்துவிட்டேன்.

செம்பாதம் என்ற பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். அதை இணைப்பதற்கு யுடியூப்பில் காண வில்லை.

நன்றி கோ.

Link to comment
Share on other sites

வர வர குறளில் தங்களின் சொந்த விளக்கம் நல்லாத்தான் இருக்கு.

என்னடா வில்லங்கம் வரலையே என்று இவன் கவலைப்படுறான் என்று யோசிக்க வேண்டாம் கோ! :rolleyes: :lol:

தொடர்ந்து ஊக்கமுடன் எழுதுங்கள்! ஆர்வமுடன் வாசித்து வருகின்றேன்!

மிக்க நன்றி! :)

Link to comment
Share on other sites

வர வர குறளில் தங்களின் சொந்த விளக்கம் நல்லாத்தான் இருக்கு.

என்னடா வில்லங்கம் வரலையே என்று இவன் கவலைப்படுறான் என்று யோசிக்க வேண்டாம் கோ!

தொடர்ந்து ஊக்கமுடன் எழுதுங்கள்! ஆர்வமுடன் வாசித்து வருகின்றேன்!

மிக்க நன்றி!

உங்களால் முடிந்ததைத் தானே செய்யலாம் கவிதை :lol::icon_idea: . எந்த மொழியும் எங்களுக்குச் சந்தோசம் தான் :icon_mrgreen: . நன்றி உங்கள் கருத்துகளுக்கு :):) .

Link to comment
Share on other sites

இத்துடன் அறத்துப்பால் -இல்லறவியல் - இனியவைகூறல் பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதாரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் :):):) .

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் கோ! திருக்குறளின் ஒருசில குறள்கள் மட்டுமே எனக்கு அத்துப்படி. ஆனால் தங்களின் குறள் விளக்கத்தில் எனக்கு எல்லாமே அத்துப்படியாய் ஆகிவிடும்போல இருக்கின்றது. :)

அரிதாக முனைப்புக் காட்டப்படும் தொடர்களில் தங்களினது முயற்சியும் இருப்பதற்காக எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்! :)

எதற்கும் அடிவாங்கவும் தயாராக உள்ளேன் கவிதை :icon_mrgreen: . ஏனெனில் நான் கைவைத்திருப்பது பொய்யாமொழிப் புலவரை :lol::D:icon_idea: .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.