Jump to content

தமிழரின் வாழ்வியல் கருவூலம் [கருத்துக்கள்]


Recommended Posts

மிக்க நன்றிகள் கிருபன் ,உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கும் , உரிமையுடன் சுட்டிக்காட்டிய திருத்தங்களுக்கும் . நான் என்றுமே உங்களுக்குக் கடமைப்பட்டவன் :):):) .

Link to comment
Share on other sites

  • Replies 179
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் இதை இன்னும் வாசிக்கவில்லை வாசித்த பின் எனது கருத்தை எழுதுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol:
Link to comment
Share on other sites

இத்துடன் அறத்துப்பால் பாயிரத்தில் உள்ள கடவுள் வாழ்த்துப் பத்துக் குறள்களும் நிறைவு அடைகின்றன . இனி வருங் குறள்களின் பொழிப்புரைக்குப் பின்பு கோமகனின் ( எனது )பார்வையில் ஒவ்வொரு குறளும் எப்படியிருக்கின்றது ? என்ற பகுதியையும் சேர்க்கின்றேன் . அந்தப் பார்வையானது சிலவேளைகளில் நகைச்சுவையாகவும் , அதேவேளையில் சிந்தனையைத் தூண்டுவதுமாகவும் அமையும் . இது சிலவேளைகளில் ஒருவரியிலும் அல்லது நீண்டும் இருக்கும் . இது எனது சொந்தக்கருத்து மட்டுமே என்றபோதிலும் ,குறளின் சுயங்கள் கெடாதவாறு தொடர்கின்றேன் . உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள் . பதிலிடுகின்றேன் :):):) .

நேசமுடன் கோமகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐஅந்தப் பார்வையானது நகைச்சுவையாகவும் , சிந்தனையைத் தூண்டுவதுமாக அமையும் . இது சிலவேளைகளில் ஒருவரியிலும் அல்லது நீண்டும் இருக்கும் . இது எனது சொந்தக்கருத்து மட்டுமே என்றபோதிலும் ,குறளின் சுயங்கள் கெடாதவாறு தொடர்கின்றேன் . உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள் . பதிலிடுகின்றேன் :):):) .

நேசமுடன் கோமகன்

நகைச்சுவையுடனும் கொஞ்சம் எழுதினால் தான் கொஞ்சம் வாசிக்கவும்,பதில் எழுடவும் மனம் வரும் இல்லை என்றால் இளசுகளைக்கவருவது கொஞ்சம் கஸ்டம் தான். இது எனது கருத்துத் தான்.

தொடருங்கள் அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் கருணாநிதி எழுதிய குறளோவியம் கதைகளுடன் குறளை விளக்குகின்றது. முடிந்தால் குறளோவியத்தையும் படியுங்கள்!

Link to comment
Share on other sites

நான் இதை இன்னும் வாசிக்கவில்லை வாசித்த பின் எனது கருத்தை எழுதுகிறேன்

ஓய்வு கிடைக்கும் பொழுது உன்னிப்பாக வாசித்துவிட்டு , உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள் ரதியக்கா :):):) .

Link to comment
Share on other sites

:lol: :lol:

மிக்க நன்றிகள் , உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்குப் புரட்சிகரத் தமிழ்தேசியன் . மேலும் , உங்கள் முகக்குறி சொல்லவருகின்ற செய்தி எனக்கு விளங்கவில்லை . நீங்கள் அந்தச்செய்தியை விளக்கினால் , நான் உங்களுக்குப் பதில் எழுத வசதியாக இருக்கும் :):):) .

நகைச்சுவையுடனும் கொஞ்சம் எழுதினால் தான் கொஞ்சம் வாசிக்கவும்,பதில் எழுடவும் மனம் வரும் இல்லை என்றால் இளசுகளைக்கவருவது கொஞ்சம் கஸ்டம் தான். இது எனது கருத்துத் தான்.

தொடருங்கள் அண்ணா. :)

உங்கள் எதிர்பார்ப்புகள் ஒருபோதும் வீண்போகாது ஜீவா :):):icon_idea: .

Link to comment
Share on other sites

கலைஞர் கருணாநிதி எழுதிய குறளோவியம் கதைகளுடன் குறளை விளக்குகின்றது. முடிந்தால் குறளோவியத்தையும் படியுங்கள்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணியுண்டு கிருபன் . கலைஞர் , அவர் பாணியில் குறளோவியம் செய்தார் . நான் அதைப்படித்திருக்கின்றேன் . மேலும் , நீங்கள் எனக்கு முன்பு தந்த அறிவுரையின்படியே நடப்பேன் . அதாவது , ஆர்வக்கோளாறில் ஆப்பிழுத்த குரங்காவும் மாட்டேன் :lol::D:icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறளும் அதற்கான நகைச்சுவை விளக்கத்துக்கும் நன்றி

Link to comment
Share on other sites

பொய்யா மொழிக் குறள் என்பது இன்னும் பொய்த்துப் போகவில்லை. இன்னும் கோடான கோடிப்பேர் பொருளுரை எழுதினாலும் தகும். யாழில்... தங்களின் இவ்விதமான புதுமையான, இரசித்து இலகுவில் பொருளுணரக் கூடியவாறான விளக்கங்கள் வரவேற்கப்படக் கூடியவை. மிக்க நன்றிகள் கோ. இன்னும் எதிர்பார்க்கின்றோம். புதுமைகள் என்பது எழுத்திலும், கருத்திலும் இருந்தால்தான்... தேடித்தேடி வாசிக்கத் தூண்டும்.

அந்த வகையில் இந்த திருகுறளின் புதுக்கருத்தினையும் நாம் தேடுவோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

தொடருங்கள். வாழ்த்துக்கள். 1

விசுகு கோமகனால் தொடங்கப்பட்ட திரியையும் உஙகளின் செய்தியின் கீழ் இணைத்து விட முடியுமா?நன்றி http://www.yarl.com/forum3/index.php?showtopic=96394

Link to comment
Share on other sites

குறளும் அதற்கான நகைச்சுவை விளக்கத்துக்கும் நன்றி

மிக்க நன்றிகள் நிலாமதியக்கா உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு :):):) .

பொய்யா மொழிக் குறள் என்பது இன்னும் பொய்த்துப் போகவில்லை. இன்னும் கோடான கோடிப்பேர் பொருளுரை எழுதினாலும் தகும். யாழில்... தங்களின் இவ்விதமான புதுமையான, இரசித்து இலகுவில் பொருளுணரக் கூடியவாறான விளக்கங்கள் வரவேற்கப்படக் கூடியவை. மிக்க நன்றிகள் கோ. இன்னும் எதிர்பார்க்கின்றோம். புதுமைகள் என்பது எழுத்திலும், கருத்திலும் இருந்தால்தான்... தேடித்தேடி வாசிக்கத் தூண்டும்.

அந்த வகையில் இந்த திருகுறளின் புதுக்கருத்தினையும் நாம் தேடுவோம். :)

மிக்க நன்றிகள் கவிதை உங்கள் அழகாகன , ஆழமான கருத்துகளுக்கு . ஆம் , கருவின் சுவை கெடாது புதுமை செய்வதற்கு உங்கள் போன்றோரின் தெளிந்த கருத்துக்களே எனக்குச் சிறந்த ஊக்கியாக இருக்கும் :):):) .

Link to comment
Share on other sites

விசுகு கோமகனால் தொடங்கப்பட்ட திரியையும் உஙகளின் செய்தியின் கீழ் இணைத்து விட முடியுமா?நன்றி http://www.yarl.com/...showtopic=96394

நான் நிர்வாகத்திற்குப் பரிந்துரை செய்து கருத்துக்களிற்கு என்றும் , எனது பதிவுகளிற்கு என்றும், இரண்டு வேறுபட்ட திரிகள் திறக்கப்பட்டுள்ளன . ஈழப்பிரியன் மிக்கநன்றிகள் உங்கள் கருத்துப்பகிர்வுகளிற்கு :):):) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சைக்கிள் கேப்பிலை உங்க குடும்பத்தை பத்தியும் எழுதிப்போட்டியளே????? :rolleyes::lol:

அதான் அந்த விதானையாரை பத்தி :lol::icon_idea:

(சும்மா கோவிக்க கூடாது) :)

ஆமா அதென்ன உங்கண்டை தமிழ் ஒரு மாதிரியா கிடக்குது?

(மழைய பத்தி எழுதின பொழிப்புரையில்?) :icon_idea:

Link to comment
Share on other sites

சைக்கிள் கேப்பிலை உங்க குடும்பத்தை பத்தியும் எழுதிப்போட்டியளே?????

அதான் அந்த விதானையாரை பத்தி

(சும்மா கோவிக்க கூடாது)

ஆமா அதென்ன உங்கண்டை தமிழ் ஒரு மாதிரியா கிடக்குது?

(மழைய பத்தி எழுதின பொழிப்புரையில்?)

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை. 15

இதில் தானே ஜீவா உங்களுக்குச் சந்தேகம் ? உங்களுக்கு வந்த சந்தேகம் போலவே எனக்கும் இந்தக்குறளிலும் , அது கூறும் செய்தியிலும் உண்டு . அதற்காகவே ஒர் எதிர்மறையான கேள்வியைக் கேட்டேன் . சிலவேளைகளில் வள்ளுவர் வாழ்ந்த காலகட்டங்களில் மழை அப்படி இருந்ததோ தெரியவில்லை . விடையந்தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும் . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு :):):) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார் கோமான்

இந்திரனே சாலுங் கரி. 25

எனக்கு இதில

விசு

மற்றும் கோமகன் என்பது மட்டும்தான் தெரியுது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார். 26

சும்மா சாப்பிட்டம் , படுத்தம் , யாழிலை திண்ணைல வந்து ரெண்டு லோ எடுத்தம்

,என்னத்தைச் சொல்ல ஐஞ்சுசதத்துக்கும்உதவாத ( சிறியோர் ) :D:icon_idea: ?

மவனே இனி திண்ணையில ஆளைக்கண்டனெண்டால்...

என்னைக்கொலைகாறனாக்காதேயும்.

:lol::D :D :D

Link to comment
Share on other sites

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார் கோமான்

இந்திரனே சாலுங் கரி. 25

எனக்கு இதில

விசு

மற்றும் கோமகன் என்பது மட்டும்தான் தெரியுது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார். 26

.எனது பார்வை:

, யாழிலை திண்ணைல வந்து ரெண்டு லோ எடுத்தம் . . இதுக்கு எதிர்மாறாய் நிக்கிறதுகள் , என்னத்தைச் சொல்ல ஐஞ்சுசதத்துக்கும்

உதவாத ( சிறியோர் ) கோஸ்ரியள் . இனிமேலாவது பிள்ளையள் ஒரெப்பன் துரும்பையாவது

எடுத்துப்போடப் பாருங்கோ என்ன ?

மவனே இனி திண்ணையில ஆளைக்கண்டனெண்டால்...

என்னைக்கொலைகாறனாக்காதேயும்.

விசுகண்ணை பம்பலுக்குத்தானே எழுதின்னான் இப்பிடி ரென்சன் ஆனால் நான் என்னசெய்யிறது ? கூல் அண்ணை :D:D:lol: .

Link to comment
Share on other sites

இது உண்மைலையே எல்லாருக்கும் ஒரு தேவையான பாடம் பாருங்கோ . சும்மா சாப்பிட்டம் , படுத்தம் , யாழிலை திண்ணைல வந்து ரெண்டு லோ எடுத்தம் எண்டு இருக்காமல் :lol:. எவன் தன்னைச் சுத்தி

இருக்கிற ஆக்கள் தன்னாலை பிரையோசனப்படவேணும் எண்டு நினைச்சு தன்ரை அலுவலுகளைக்

கொண்டு போறானோ அவன் பாருங்கோ சரித்திரத்தில ( பெரியவனாய் ) நிலையா நிக்கிறான்

கண்டியளோ :) . இதுக்கு எதிர்மாறாய் நிக்கிறதுகள் , என்னத்தைச் சொல்ல ஐஞ்சுசதத்துக்கும்

உதவாத ( சிறியோர் ) கோஸ்ரியள் :icon_mrgreen:. இனிமேலாவது பிள்ளையள் ஒரெப்பன் துரும்பையாவது

எடுத்துப்போடப் பாருங்கோ என்ன-

நல்லாத்தான் இருக்கு கோமகன்.

"மலர்மிசை ஏகினா"னுக்கும், "நிறை மொழிமாந்த" ருக்கும் எனக்கு மூலக்கருத்துகள் சரியா என்பது சந்தேகம். மலர் மிசை ஏகினான் என்பது கடவுளைக் குறிக்கிறது என்பது மட்டும் ஏற்கப்படலாம். ஆனால் எப்படி மலர்மிசை ஏகினான் என்பது கடவுளுக்காகி வரும் ஆகுபொருள் என்பதற்கு விளக்கங்கள் சரியாத்தெரியவில்லை. இந்தகுறளில் புத்தர் மிகவும் பொருந்துகின்றார் என்றாலும் மற்றவையையும் எடுத்து பார்க்க வேண்டும். நிச்சயமாக சிவனை சுட்டி காட்டி அவர் குறிபிடவில்லை என்பது என்கருத்து.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.

நீத்தார் பெருமையில் திருவள்ளுவர் "நிலத்து மறைமொழி காட்டி விடும்" என்பதை நிலத்தில் மறைந்திருக்கும்- இதன் பொருள் - அதாவது அவர்களால் நிலத்தில் எஞ்சவிட்டுப் போயிருக்கும் (நீத்தரால் அவற்றினுள்ளே உள்ளே) மறைந்திருந்து பேசும் பொருட்களான ( நூல்கள், தத்துவங்கள், சீடர்கள், மேலும் திறமையாக பயிற்றபட்ட பிள்ளைகள் கூட) நீத்த நிறை மொழி மாந்தரின் பெருமைகளை ஒப்புவிக்கும் என்று எடுத்துக்கொள்ளளாம்.

Link to comment
Share on other sites

கோ! திருக்குறள் பொய்யா மொழிதான். ஆனால் பள்ளிக்காலத்தில் இருந்தே எனக்கு அது வேப்பங்காய் கசப்பு. :huh:அது எனக்கு வரா மொழி. :rolleyes: ஆனால் தங்களின் நகைச்சுவையான கருத்துக்கள்... அதனை தேடிப் பார்க்கவைக்கும் அளவுக்கு இருக்கின்றன. நகைச்சுவையோடு படிக்கும் அதே நேரத்தில் உண்மையான கருத்தினையும் பார்த்து... தங்களின் இலகு நகைத் தமிழின் உதவியுடன் திருக்குறளின் பொருளறிந்து பயனடைகின்றேன். :)

தொடர்ந்து..... தொடருங்கள்!

நன்றி கலந்த பாராட்டுக்கள்! :)

Link to comment
Share on other sites

இது உண்மைலையே எல்லாருக்கும் ஒரு தேவையான பாடம் பாருங்கோ . சும்மா சாப்பிட்டம் , படுத்தம் , யாழிலை திண்ணைல வந்து ரெண்டு லோ எடுத்தம் எண்டு இருக்காமல் . எவன் தன்னைச் சுத்தி

இருக்கிற ஆக்கள் தன்னாலை பிரையோசனப்படவேணும் எண்டு நினைச்சு தன்ரை அலுவலுகளைக்

கொண்டு போறானோ அவன் பாருங்கோ சரித்திரத்தில ( பெரியவனாய் ) நிலையா நிக்கிறான்

கண்டியளோ . இதுக்கு எதிர்மாறாய் நிக்கிறதுகள் , என்னத்தைச் சொல்ல ஐஞ்சுசதத்துக்கும்

உதவாத ( சிறியோர் ) கோஸ்ரியள் . இனிமேலாவது பிள்ளையள் ஒரெப்பன் துரும்பையாவது

எடுத்துப்போடப் பாருங்கோ என்ன-

நல்லாத்தான் இருக்கு கோமகன்.

"மலர்மிசை ஏகினா"னுக்கும், "நிறை மொழிமாந்த" ருக்கும் எனக்கு மூலக்கருத்துகள் சரியா என்பது சந்தேகம். மலர் மிசை ஏகினான் என்பது கடவுளைக் குறிக்கிறது என்பது மட்டும் ஏற்கப்படலாம். ஆனால் எப்படி மலர்மிசை ஏகினான் என்பது கடவுளுக்காகி வரும் ஆகுபொருள் என்பதற்கு விளக்கங்கள் சரியாத்தெரியவில்லை. இந்தகுறளில் புத்தர் மிகவும் பொருந்துகின்றார் என்றாலும் மற்றவையையும் எடுத்து பார்க்க வேண்டும். நிச்சயமாக சிவனை சுட்டி காட்டி அவர் குறிபிடவில்லை என்பது என்கருத்து.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.

நீத்தார் பெருமையில் திருவள்ளுவர் "நிலத்து மறைமொழி காட்டி விடும்" என்பதை நிலத்தில் மறைந்திருக்கும்- இதன் பொருள் - அதாவது அவர்களால் நிலத்தில் எஞ்சவிட்டுப் போயிருக்கும் (நீத்தரால் அவற்றினுள்ளே உள்ளே) மறைந்திருந்து பேசும் பொருட்களான ( நூல்கள், தத்துவங்கள், சீடர்கள், மேலும் திறமையாக பயிற்றபட்ட பிள்ளைகள் கூட) நீத்த நிறை மொழி மாந்தரின் பெருமைகளை ஒப்புவிக்கும் என்று எடுத்துக்கொள்ளளாம்.

மிக்க நன்றிகள் , உங்கள் நேரத்திற்கும் பக்கச்சார்பில்லாத விமர்சனங்களுக்கும் மல்லையூரான் . திருக்குறளைப் பலர் பல மொழிகளுலும் மொழிபெயர்து விளக்கவுரை எழுதியிருந்தாலும் அதன் பொருள் பல்வேறு கோணங்களில் மிளிர்வது குறளின் சிறப்பு என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை . ஆனாலும் சில இடங்கள் இன்றைய வாழ்வியல் யதார்தங்களுடன் ஒப்பிடுகையில் விமர்சனங்களுக்கு உட்பட்டவையே :unsure: . இதையே எனது பார்வையில் தொட முயற்சிக்கின்றேன் . ஆனாலும் ஒருவித தயக்கத்துடனயே தொடுகின்றேன் . உங்கள் போன்றோரது ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்பார்கின்றேன் :):):) .

Link to comment
Share on other sites

கோ! திருக்குறள் பொய்யா மொழிதான். ஆனால் பள்ளிக்காலத்தில் இருந்தே எனக்கு அது வேப்பங்காய் கசப்பு. அது எனக்கு வரா மொழி. ஆனால் தங்களின் நகைச்சுவையான கருத்துக்கள்... அதனை தேடிப் பார்க்கவைக்கும் அளவுக்கு இருக்கின்றன. நகைச்சுவையோடு படிக்கும் அதே நேரத்தில் உண்மையான கருத்தினையும் பார்த்து... தங்களின் இலகு நகைத் தமிழின் உதவியுடன் திருக்குறளின் பொருளறிந்து பயனடைகின்றேன்.

தொடர்ந்து..... தொடருங்கள்!

நன்றி கலந்த பாராட்டுக்கள்!

மிக்க நன்றிகள் கவிதை உங்கள் நேரத்திற்கும் , கருத்துப்பகிர்வுகளுக்கும் . சிறுவர்களாக இருந்தபொழுது வாத்தியாரின் அடி அகோரத்திற்குத்தான் முக்கியமாகக் குறளை மனப்பாடஞ் செய்தோம் :unsure: . அப்பொழுது வேப்பங்காயாக இருந்தாலும் , அது பதித்த தடம் எம்னதில் உண்டல்லவா :lol: ? அதனால் தானே ஒரளவிற்காகவாவது ஒழுக்கமாக இருக்கின்றோம் :unsure: . எனவே குறளிற்கு நாம் என்றுமே கடமைப் பட்டவர்கள் :D:icon_idea:.

Link to comment
Share on other sites

குறளும் அதற்கான நகைச்சுவை விளக்கத்துக்கும் நன்றி

நிலாமதி அக்கா இனிவருங் காலங்களில் உங்கள் கருத்துக்களை இந்தப் பதிவில் மட்டுமே பதியுங்கள் . மிக்க நன்றிகள் :):):) .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.