Jump to content

மௌனம் கலைகிறது....நடராஜா குருபரன்


Recommended Posts

கிழக்கில் கருணாவின் பிளவை நியாயப்படுத்திய சமூகப் பிரதிநிதிகள் - மௌனம் கலைகிறது 7 –நடராஜா குருபரன்

17 பெப்ரவரி 2012

lg-share-en.gif

“ எல்லாப் புகழும் இறைவனுக்கும் எல்லாப்பழியும் புலிகளுக்கும் என்று மட்டுமாகி விடக்கூடாது.”

kuru%20new1_CI.JPG

2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கருணாவுக்கும் புலிகளுக்கும் இடையிலான முரண்பாடு மெல்ல மெல்ல உள்ளே வளரத்தொடங்கியிருந்தது. இந்த முரண்பாட்டின் விளைவாக 2001, 2002, 2003 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த முக்கியமான சில சம்பவங்களை முன்னர் குறிப்பிட்டிருந்தேன். 2004ல் கருணாவுக்கும் புலிகளுக்கும் இடையில் இருந்த முரண்பாடு வெளிப்படையான பிளவாக மாறியது. இந்த நிலையில்தான் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர், பேராசிரியர்கள் சிலர், புத்திஜீவிகள் சிலர், ஊடகத்தரப்பினர் சிலர், வர்த்தகர்கள் சிலர் எனப் பல தரப்பினரும் சேர்ந்து கிழக்குத் தொடர்பாக வன்னிப்புலிகள் வெளிக்காட்டும் தொடர் புறக்கணிப்புக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்னும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கருணாவின் கோரிக்கையை நியாயப்படுத்தினர். இதற்குச் சிறந்த உதாரணமாக அந்த நேரத்தில் கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு தங்கராஜா அவர்கள் கருணாவின் பிளவுக்குக் காரணமான சூழலும் அவர் வைத்த கோரிக்கைகளும் நியாயமானவை என BBC சிக்கு வழங்கிய செவ்வியினைக் குறிப்பிடலாம். அதேபோல் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராகக் கருணாஅணியினர் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்புக்கூட்டம் கொடும்பாவி எரிப்பு என்பவற்றில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெயானந்தமூர்த்தி அவர்களும் அன்று பிரசன்னமாகி இருந்தார். சொந்த விருப்பத்தின் பேரிலா அல்லது வற்புறுத்தலின் பேரிலா அவர் அதில் கலந்துகொண்டிருந்தார் என்பது தெளிவில்லை.

ஏற்கனவே நான் குறிப்பிட்டது போன்று சிவராம் மற்றும் கருணாவின் நிலைப்பாட்டை ஆதரித்த குழுவினரது ஆலோசனையின்படி கருணா முக்கியமான சில அறிக்கைகளை வெளியிட்டார். 2004ஆம் ஆண்டு மார்ச் 3 திகதி ஒரு அறிக்கையும் மார்ச் 4 ஆம் திகதியும் இன்னொரு அறிக்கையும் வெளியாகின. இந்த இரண்டு அறிக்கைகளும் அரசியல் ரீதியான நியாயமான கோரிக்கைகள் சிலவற்றைத் தம்மகத்தே கொண்டிருந்தன. இதில் ஒரு அறிக்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டமைப்பில் அடிநிலையில் இருந்து உயர்மட்டம் வரையும் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட மிக முக்கிய பொறுப்புகளில் வடக்கைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டு இருந்தார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. புலிகளுள் வடக்கைச் சேர்ந்தவர்கள் பொறுப்பு வகித்த மிக முக்கியமான 16 துறைகளை அந்த அறிக்கை சுட்டிக் காட்டி இருந்தது. அதுபோல் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு கிழக்கைப் புறக்கணிப்பதாக இருந்தது என்பதனையும் அரசியல் கண்ணோட்டத்துடன் அந்த அறிக்கை தெரிவித்திருந்தது.

மற்றைய அறிக்கையில் குறிப்பாக புலிகளின் தலைவர் ஆயிரம் போராளிகளை (ஆயிரமோ அல்லது இரண்டாயிரமோ ஞாபகம்) இல்லை வன்னிக்கு அனுப்புமாறு கோரியிருந்ததும் கருணா அதனை மறுத்திருந்ததும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கைகள் அப்பொழுது எமக்கும் (சூரியன் FM) அனுப்பப்பட்டு இருந்தன. அவற்றை ஆவணப்படுத்த தவறிவிட்டோம். அந்த அறிக்கைகளை மீளவும் தேடியெடுக்கப் பல முயற்சிகளை எடுத்தேன். ஆனாற் கைகூடவில்லை. அந்த அறிக்கைகளை எவராவது பாதுகாத்து வைத்திருந்தால், அவற்றின் பிரதிகளை அனுப்பி வைத்தால் அவற்றையும் இந்தத் தொடரில் இணைத்துக்கொள்ளலாம். காரணம் கருணா என்ற தனிமனிதனினதும் அவருடன் இணைந்திருந்த சிலரினதும் அரசியற் தெளிவற்ற சுயநலமான நடவடிக்கைகள் காரணமாக அந்த அறிக்கைகளில் இருந்த அரசியற் கோரிக்கைகளின் நியாயங்கள் வலுவிழந்து போயின.

ஆயினும் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் அதனுடன் திருப்தி அடைந்து விடாமல் தமிழ் தேசியம் என்னும் கோட்பாட்டையே அழித்து விடுவதற்குப் பலர் முனைந்து நிற்கின்றனர். தமிழ்தேசியத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிங்களப் பேரினவாத ஆதிக்கம் அசுர பலத்துடன் எழுந்து நிற்பதை தெரிந்தும் கண்டுகொள்ளாமல் தமிழ்தேசியத்தின் மீது ஒருதலைப்பட்சமான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பிற்போக்குத்தனமான சிங்களப் பேரினவாதிகளின் ஆதிக்கமும் மோசமான ஒடுக்குமுறையும் இருக்கும் வரை தமிழ்தேசியவாதம் இதய சுத்தியுடன் கூடிய இணக்க அரசியலுக்குத் தயாராகாது. மேலும் இலங்கையில் தேசிய வாதங்களின் இருப்பை மறுப்பதோ அல்லது சிறுபான்மைத் தேசியங்களை அழித்துவிட நினைப்பதோ முட்டாள்த்தனமானதாகும். ஆனால் தேசியவாதங்களின் பிற்போக்குத்தனங்களையும் அடக்குமுறைக் குணாம்சங்களையும் இல்லாதொழிக்கும் ஒரு முனைப்புக்கான அறிவூட்டலை ஆரம்பிக்கமுடியும். இலங்கையின் சகல சமூகங்களையும் அவற்றின் அடையாளங்களையும் தனித்துவத்தையும் இருப்பையும் அங்கீகரித்துக்கொண்டு அவற்றைச் சனநாயக மயப்படுத்தமுனைவதுதான் இன்றைக்குப் பயன் தரக்கூடியது.

இந்த வகையில் தமிழ்தேசியவாதம் தன்னுள் இருக்கும் சாதிய முரண்பாடுகள் பிரதேசவாதம் இன்னும் பல வலிமையான ஒடுக்கு முறை அம்சங்களைக் கணக்கிலெடுத்து அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். அதுமட்டுமல்ல இலங்கையில் வாழும் ஏனைய இனங்கள் தொடர்பாக தாம் கொண்டுள்ள பிற்போக்கான கொள்கைகளை மாற்றி வெளிப்படையான இதய சுத்தியுடன் கூடிய உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும் . இந்த முறையில் தமிழ்த்தேசியம் தன்னைச் சனநாயகமயப்படுத்த முனையாவிட்டால் பிற்போக்குச் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளின் இராணுவ பொருளாதார மற்றும் கலாசார ஆக்கிரமிப்புக்களுக்கு எதிரான போராட்டத்தில் ஓரங்குலம் கூடத் அதனால் முன்நகர முடியாது. இந்தக் கொள்கையின் அடிப்படையில் எற்கனவே கருணா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விடையங்களின் அடிநாதமாகவிருந்த வடக்கின் மேலாதிக்கம் குறித்து மீளாய்வு செய்வது முக்கியம் எனக் கருதுகிறேன்.

கருணாவின் அறிக்கைகள் வெளியிடப்பட்ட நிலையில் வன்னியில் முக்கியமான ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டுக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்தனர். நானும் அப்பத்திரிகையாளர் மகாநாட்டிற்குச் சென்றிருந்தேன். (மட்டக்களப்பில் இருந்து வவுனியா சென்று அங்கிருந்து வன்னிக்கு போவதா விடுவதா எனக் குழம்பிப் பின் ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு திரு சிவராம் அவர்களும் அந்த பத்திரிகையாளர் மகாநாட்டுக்கு வந்திருந்தார்.) அந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் மற்றும் அவரது ஆங்கில ஊடக மொழிபெயர்பாளர் திரு ஜோசப் ஐயா ஆகியோரைத்தவிர, இருந்த அனைவரும் புலிகளின் கிழக்கின் தளபதிகளாகும். அவர்களுள் இளந்திரையன் (மார்ஸல்), றமேஸ், கௌசல்யன் ஆகியோர் முக்கியமானவர்கள். ஏனையவர்களை ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்த மகாநாட்டில்தான் கருணா புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்படுகிறார் என்ற உத்தியோக பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கருணாவினது பொறுப்புகள் யாவும் பறிக்கப்பட்டு அந்தப் பொறுப்புக்களை நிர்வகிக்கப்போகும் புதியவர்களது பெயர்களும் பதவி நிலைகளும் அறிவிக்கப்பட்டன. றமேஸ் அவர்கள் உடனடியாகவே கேணலாகத் தரமுயர்த்தப்பட்டார். ஏற்கனவே மட்டக்களப்பு அரசியத்துறைப் பொறுப்பில் இருந்து கருணாவின் பிளவின் போது வன்னிக்குத் தப்பிச் சென்ற கௌசல்யனே மீண்டும் அதே பொறுப்பிற் கிழக்கிற்குச் செல்வார் எனவும் அறிவிக்கப்பட்டது.

வன்னியிற் அரசியற்துறை அலுவலகத்தில் பத்திரிகையாளர் மகாநாடு முடிந்தவுடன் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்ரரை சந்திக்கக் கிடைத்தது. பேசுவதற்கும் பழகுவதற்கும் இதமான மனிதர் அவர். சமாதான காலத்தில் ஊடகச் சந்திப்புகளுக்காக வன்னிக்குச் செல்கின்ற போதெல்லாம் எங்களை உபசரிப்பதும் அவரே. இதன் காரணமாக என்னுடன் அவருக்கு ஒரு ஊடகவியலாளனுடன் ஏற்படக்கூடிய நெருக்கமான நட்பும் ஏற்பட்டிருந்தது. தயா மாஸ்ரருடன் உரையாடும் போது அவரிடம் தனியாக கேட்டேன்: 'மாஸ்ரர் உங்கடை முக்கியமான பொறுப்பாளர்களில் இருந்து எல்லாரும் சொல்லினம் கருணா பிரிஞ்சு போறதால புலிகள் அமைப்புக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை இது ஒரு சின்ன விசயம் எண்டு, இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்?'.

அவர் சுற்றும்முற்றும் பார்த்து விட்டு எவரும் அருகில் இல்லை என்பதனை உறுதிப்படுத்தி விட்டு மெதுவாக: 'என்ன விசர்க்கதை கதைக்கிறியள் அதுதானே இப்ப இயக்கத்தில பெரிய பிரச்சனையே! கருணாவும் உவ்வளவு பெடியளும் பிரிஞ்சு போனால் எவ்வளவு தாக்கம் இருக்கும்!! உவை வெளியாலை உப்பிடித்தான் சொல்லிவினம்' எனக்கூறினார்.

கவலை தோய்ந்த தொனியில் மேற்கூறிய வார்த்தைகளைக் கூறியபோதே கருணாவின் பிளவு எவ்வளவு பாரதூரமானதென்பதை என்னால் உணர முடிந்திருந்தது. தயாமாஸ்ரர் இந்தத் தொடரை வாசிக்க நேர்ந்தால் எனக்கும் அவருக்கும் இடையில் நிகழ்ந்த அன்றைய அந்த உரையாடலை நினைவு கூர்வார் என்று நினைக்கிறேன்.

இந்தக் காலக்கட்டத்தில் தான் திருகோணமலையின் தளபதியாக இருந்த பதுமனும் திலக்கும் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு சொர்ணம் எழிலன் ஆகியோர் அப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.

2002 இன் பின் கிழக்கில் இருந்து வன்னிக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் பதுமனும் கருணாவும் ஒன்றாகவே செல்வது வழக்கம் என அறிந்து கொள்ள முடிந்திருந்தது. நான் ஊடகச் சந்திப்புகளுக்கு வன்னி சென்ற சந்தர்ப்பங்களில் இரண்டு சந்தர்ப்பங்களில் இவர்கள் இருவரையும் ஒன்றாகக் கண்டிருக்கிறேன். கருணாவின் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாக பதுமன் அப்போது கருதியிருந்ததாலேயே இந்த நெருக்கம் ஏற்பட்டிருந்ததாகக் கருதப்பட்டது. இதனால் கருணா புலிகள் முரண்பாடு வெளித் தெரியத்தொடங்கிய போது (எனக்கு கால ஞாபகம் இல்லை) பதுமன் தனக்கு நெருக்கமானவர்கள் பலருடன் வாகரையூடாகக் கிழக்கிற்குச் செல்ல முற்பட்ட போது புலிகளால் கைது செய்யப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டார் எனவும் வன்னிக்கு வருமாறு அழைக்கப்பட்டதனால் பதுமன் அங்கு சென்றார் எனவும் இரு வேறு பட்ட முரண்பட்ட தகவல்கள் கசிந்திருந்தன.திலக் பற்றி இன்று வரையும் தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் பதுமன் இலங்கைப் படையினரின் பாதுகாவலில் உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினுள் ஈர்க்கப்பட்டிருந்த கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த போராளிகள் காலத்துக்காலம் பல அவலங்களைச் சந்தித்திருந்தனர். இந்த வகையில் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த போராளிகள் தொடர்பில் என்னை மிகவும் பாதித்த சில விடயங்களையும் நான் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

சமாதானகாலத்தில் (2002...) வன்னியின் எல்லைகளைப் பாதுகாக்கும் பணியில் கிழக்கின்போராளிகளே பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வடக்கைச்சேர்ந்த போராளிகளும் தொடர்செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதும் அவர்கள் தமது வீடுகளுக்குச் சென்று தமது குடும்பத்தாருடன் நாட்களை கழிக்கும் வாய்ப்புக்களும் அதிகளவில் இருந்தன. ஆனால் கிழக்கைச் சேர்ந்த போராளிகளுக்கு இந்த வாய்ப்பு அருகியே இருந்தது. நான் வன்னியின் உட்பிரதேசங்களுக்குச் சென்ற போது இதனை அவதானிக்க முடிந்திருந்தது.

இந்தவிடத்தில் விடுதலைப்புலிகளை மட்டும் குறைசொன்னால் அது வரலாற்றுத்தவறாகும். ஏனேனில் பிரதேசவாதம் என்பது புலிகளின் முதிசமல்ல. அது தமிழர்களின் முதிசம்.

கிழக்கைச் சேர்ந்த போராளிகள் எவ்வாறெல்லாம் கடந்த மூன்று தசாப்தங்களாகப் பந்தாடப்பட்டார்கள் என்பதை நினைக்கும் போது இதயம் வலிக்கிறது. 1986ஆம் ஆண்டு என நினைக்கிறேன். விடுதலைப் புலிகள் ஒவ்வாரு இயக்கமாகத் தடைசெய்து அல்லது அவற்றை அழிக்கத் தொடங்கியிருந்தனர். PLOT இயக்கமும் தடை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்தன. அதே வேளை புளொட் இயக்கத்தினுள் உட்கட்சிப் போராட்டம் வலுத்து இந்தியாவில் உமா மகேஸ்வரன் தலைமையில் ஒரு அணியும் பரந்தன் ராஜன் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகும் நிலை தோன்றி இருந்தது. இந்த நிலையில் புளொட் இயக்கத்தில் இருந்த பெருவாரியான உறுப்பினர்களின் நலன் கருதி இலங்கையில் அதன் செயற்பாடுகளை நிறுத்துவதாக முடிவெடுக்கப்பட்டது. இதன்போது யாழ் மருதனார்மடம் சந்தியில் இருந்த சங்கீதம் றக்கோடிங் பாரினுள் முக்கியமானதொரு சந்திப்பு நிகழ்ந்தது. (இதற்கு முன்பாக வேறு சந்திப்புகளும் நிகழ்ந்நதன) அப்போது ஈழத்தின் தளச் செயற்பாட்டுக் குழுவில் இருந்த சிலரும் புளொட்டின் இராணுவப் பொறுப்பாளராகத் தளத்தில் காண்டீபனுடன் இணைந்து செயற்பட்ட சின்ன மென்டிசும் EPRLF மற்றும் EROS இயக்கங்களின் முக்கியஸ்த்தர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினர்.

அதில் புளொட்டிற்கு புலிகளால் வரும் நெருக்குதல்கள் குறித்தும் ஆயுத உதவி கோரியும் கலந்துரையாடப்பட்ட போது தாம் ஆயுத உதவிகள் எதனையும் செய்ய முடியாது ஆனால் புளொட்டின் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களைப் பாதுகாத்து தர முடியும் எனவும் அதேபோல் தமது முகாம்களிற்கு வந்தால் புளொட் உறுப்பினர்களை பாதுகாக்க முடியும் என EPRLFவும், கிழக்கு மாகாணத் தோழர்களை எங்களிடம் தாருங்கள் என ஈரோசும் கோரியிருந்தன. இந்தச் சம்பவத்தை நான் இங்கே குறிப்பிட்டதன் நோக்கம், 'கிழக்கின் தோழர்களை எங்களிடம் தாருங்கள்' என EROS அமைப்பு அன்றைக்கு கிழக்குப் போராளிகளைப் பண்டமாற்றுப் பொருட்கள் போல் அணுகியிருந்ததை நினைவுகூரவே.

TELO மற்றும் EPRLF இயக்கங்களைப் புலிகள் அழித்த போது அந்தந்த இயக்கங்களின் யாழ்ப்பாணத்திற் செயற்பட்ட கிழக்கின் போராளிகள் தப்பிச் செல்ல வழி இன்றிக் கொல்லப்பட்டனர் அல்லது அனாதரவாக விடப்பட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமான இன்னுமொரு பதிவையும் இங்கு இட்டுச் செல்ல வேண்டும். 86களின் நடுப்பகுதியில் PLOT இயக்கம் புலிகளால் தடைசெய்யப்படவுள்ளது எனத் தகவல் பரவியது.

இது குறித்துத் தளத்தில் (ஈழத்தில்) PLOTன் ஆயுதப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவரான சின்ன மென்டிஸ் புளொட்டின் தள நிர்வாகப் பொறுப்பில் இருந்து பின் விலகியிருந்த PLO ரஜீவ் மற்றும் தொடர் செயற்பாட்டில் இருந்த சிவராம் (SR) ஆகியோரை அணுகி அப்போது புலிகளின் யாழ் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த கிட்டு என அழைக்கப்பட்ட சதாசிவம் கிருஸ்ணகுமாரைச் சந்தித்துத் தடை பற்றிக் கேட்கும்படி கூறியிருந்தார். சிவராமும் ரஜீவும் கிட்டுவைச் சந்திப்பதற்கு கடுமையான மனப்பயத்துடனேயே போயிருந்தனர். கிட்டுவுடனான அந்தச் சந்திப்புக்கு புறப்பட முன்பு அங்கிருந்தவர்களிடம் நாங்கள் திரும்பி வருவோமோ தெரியாது எனவே எங்களை நன்றாக ஒருமுறை பார்த்து விட்டு அனுப்புங்கள் என சொல்லிவிட்டுத்தான் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். காரணம் ரெலோ அமைப்பைத் தடை செய்த போது யாழ்ப்பாணத்தில் கிட்டு ஆடிய இராணுவ வேட்டை யாவரையும் அதிர வைத்திருந்தது. இந்தச் சூழ்நிலையிலேயே சிவராமும் ரஜீவும் கிட்டுவைச்சந்திக்க சென்று புலிகளின் தடைபற்றி உரையாடியிருந்தனர்

அந்த உரையாடலில் சிவராம் ரஜீவ் ஆகியோரின் கேள்விக்குப் பதில் அளித்த கிட்டு விடுதலைப்புலித்தலைமையிடம் இருந்து புளொட்டைத் தடைசெய்யும் உத்தரவு வந்திருக்கிறது என்றும் ஆனால் தளத்தில் என்ன செய்வதென்ற முடிவை தாம் இன்னும் எடுக்கவில்லை எனவும் கூறியிருந்தார். அப்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் கிழக்கின் பெருமளவான தோழர்கள் வடக்கில் இருப்பதாகவும் அவர்களை அவர்களது சொந்த இடத்திற்கோ அல்லது இந்தியாவிற்கோ அனுப்ப வேண்டும் அதற்கு கால அவகாசம் தேவை என ரஜீவும் சிவராமும் கிட்டு அவர்களிடம் கோரி இருந்தனர். அதற்கு உடனடியாகவே இணங்கிய கிட்டு இருவார கால அவகாசம் வழங்குவதாகவும் விரைவாகக் கிழக்குத் தோழர்களை எங்கு வேண்டுமானாலும் அனுப்பும்படியும் கூறியிருந்தார். ஆனால் சின்ன மென்டிசும் அவருடன் நிற்பவர்களும் ஆயுதங்களை ஒப்படைக்கும் வரை எங்கும் செல்லக் கூடாது எனவும் பணித்திருந்தார். இந்த இருவார காலத்துள் புளொட்டின் பெரும்பாலான கிழக்கு தோழர்கள் பாதுகாப்பான முறையில் அவர்கள் விரும்பிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சின்ன மென்டிஸ், சிவராம் பீ.எல்லோ ரஜீவ் உள்ளிட்டவர்களின் முயற்சியாலும் கிட்டுவின் ஒத்துழைப்பினாலும் புளொட் புலிகளால் தடைசெய்யப்பட்ட போது வடக்கில் சிக்கியிருந்த கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த தோழர்கள் பாதுகாக்கப்பட்டனர். ரெலோவுக்கெதிராக இராணுவ நரவேட்டையாடிய கிட்டு புளொட் தடைசெய்யப்பட்ட போது அதனைக் கையாண்ட விதம் சற்று வேறுபாடானதாக இருந்தது. ஆயினும் இறுதிவரை களத்தில் நின்று புளொட்டில் இணைந்திருந்த போராளிகளை வீணான மோதலில் அழியவிடாமல் பாதுகாத்து அனுப்ப முனைந்த சின்ன மென்டிஸ் என்ற விஜயபாலனை புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உத்தரவின் பேரில் கைது செய்து அடித்துக் கொன்ற போது அவர் பழைய கிட்டுவாகியிருந்தார்.

மற்றுமொரு சம்பவம் 1988,1989 காலப்பகுதியென நினைக்கிறேன் (ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை.) ஈழத்தில் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவம் வெளியேற முடிவு செய்த காலப் பகுதியில் அதனுடன் சேர்ந்தியங்கிய ENDLF மற்றும் EPRLF இயக்கங்களும் தமது நடவடிக்கைகளை நிறுத்தி இந்தியப் படையினருடன் இந்தியா புறப்படத் தயாரான போது நிகழ்ந்த சம்பவமொன்றையும் இங்கு கூறவேண்டும்.

சுண்ணாகத்தில் EPRLF இயக்கத்தின் சில முக்கியஸ்த்தர்கள் இந்தியா பயணமாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் என நினைக்கிறேன் வீதியில் ஆயுதம் தாங்கியவர்களாக நின்று வீதியில் செல்பவர்களிடம் பலாத்காரமாகப் பணம் பறித்து உரைப்பையில் நிரப்பிக்கொண்டு தப்பிச் செல்ல முனைந்திருந்தனர். ஆனால் இவர்களால் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டு தமிழ் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பல இளைஞர்கள் குறிப்பாக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எந்த வித உதவிகளும் இன்றி தப்பிச் செல்ல வழியும் தெரியாமல் அல்லல்பட்டனர். இவர்களுள் பலர் பின்னர் புலிகளால் கொல்லவும்பட்டனர். (இந்தக் காலக்கட்டத்தில் தற்போதைய தமிழ்த் தேசியக் கூடமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்ததாக ஞாபகம்.)

அத்துடன் EPRLF, மற்றும் ENDLF இயக்கங்களின் உயர்பீடத்தில் இருந்தவர்களும் அவர்களுக்கு நெருங்கியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களும் இந்திய இராணுவத்தின் உதவியுடன் பாதுகாப்பாக கப்பலில் இந்தியாவுக்கு ஏற்றிச் செல்லப்பட்டனர். இதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மேற்குறித்த இயக்கங்களைச் சேர்ந்த உயர்மட்டத்தினரும் அடங்குவர். அவர்களும் தமது அடிமட்டப் போராளிகளைக் கைவிட்டுவிட்டு இந்தியா சென்று விட்டனர்.

வடக்கின் அல்லது யாழ்ப்பாணத்தின் மேலாதிக்க வாதத்தை விமர்சித்த பெரும்பாலான ஆரம்ப காலக் கிழக்கின் அரசியற் தலைமைகளும், பின்னாளிற் போராளித்தலைமைகளும் வடக்கின் தலைமைகளுடன் தமது சொந்த நலன்களுக்காகவே ஒட்டிக்கொண்டிருந்தார்களே ஒழிய கிழக்கின் அபிவிருத்தி அல்லது விடுதலைபற்றி உண்மையான பற்றுறுதியுடன் கூடிய அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கு தெளிவான உதாரணங்கள் பல உள்ளன. இது தொடர்பாக பிறிதொரு தலையங்கத்தில் எழுதுவேன். எமது அரசியல் வரலாறு நெடுகிலும் கிழக்கின் பாராளுமன்ற அரசியல் வாதிகளும் சரி கிழக்கின் போராளித்தலைவர்களும் சரி தமது சொந்த நலன்கள் பாதிக்கப்படும் போது மட்டுமே வடக்கின் பிரதேசவாதத்தைக் காரணம் காட்டித் தமது தில்லுமுல்லுக்களை மறைக்க முனைந்தார்களே தவிரப் பிரதேச வாதம் எவ்வாறு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சீரழித்து வருகிறது என்பதை கோட்பாட்டு ரீதியாகவோ நடைமுறை ரீதியாகவோ உணர்த்தும் அரசியல் முனைப்பெதுவுமின்றித் தமது சொந்த நலன்களைப்பற்றி மட்டுமே சிந்தித்திருந்தனர். இதனால் தாங்கள் அதுவரைகாலமும் எதிரியாகக் கருதிய சிங்களப் பேரினவாதிகளிடம் சென்று சேர்ந்து தமது நலன்களை பேணும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யுமளவுக்குத் தரம் தாழந்தும் விட்டிருந்தனர்.

பிரதேசவாதம் மற்றும் நான்காவது ஈழப்போரின் போது மக்களின் விருப்புக்கு மாறாகப் புலிகள் செய்த கட்டாய இராணுவச் சேர்ப்பு போன்றவை இன்றைக்குப் புலிகளின் மீது வைக்கப்படும் முக்கியமான விமர்சனங்களாகவுள்ளன.

ஆனால் இந்த விமர்சனங்களுக்குப் புலிகள் மட்டுமல்ல அவர்களுக்கு முன்னரே இவற்றைத் தொடக்கிவைத்த அரசியல் வாதிகளும் போராளிகளும் ஈழத்தில் 'கட்டாய ராணுவச் சேவையைத்' தொடக்கி வைத்த பெருமையைப்பெற்ற EPRLF, ENDLF இயக்கங்களும் கூடவே இந்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லவேண்டும். எல்லாப் புகழும் இறைவனுக்கும் எல்லாப்பழியும் புலிகளுக்கும் என்று மட்டுமாகி விடக்கூடாது.

ஆகத் தமிழ்மக்களிடம் இருந்த எல்லாவிதமான பிற்போக்குத் தனங்களினதும் இடியப்பச்சிக்கலாகவே மூன்று தசாப்தங்களாக முன்னேறிச்சென்ற எமது போராட்டம் முள்ளிவாய்க்காலில் தனது முதலாவது பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

தொடரும்...

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/73728/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

கருணாவின் துரோகத்தை சொல்வதால் எங்கை தானும் தூரோகி ஆக்கபடுவேனோ என்று குருபரன் அண்ணை கொஞ்சம் கிழக்கு போராளிகளும் பதிக்கப்பட்டார்கள் என்ற மாபெரும் உண்மையை சேர்த்து எழுதியுள்ளார்..

கொஞ்சக் காலம் யாழ்ப்பானத்தில் தேவைநிமித்தம் இருந்தேன் அப்போது மாவீரநாள் பராமரிப்புகள் கவனித்துக் கொண்டு இருந்தோம். சில பாடசாலைகளில் ஒரு வார்மாக மாவீரர் குடும்பங்களை ராஜமரியாதையக கவனித்து அவர்களை பராமரிக்கவேண்டும், சிலர் இறுதி 2 நாட்கள் வந்து நிற்ப்பார்கள் சிலர் அதுக்கு கூட வரமாட்டார்கள் எவளவு தான் கெஞ்சிக் கேட்டாலும் வரமாட்டார்கள் இருந்தும் மாவீர்ரர் துயிலும் இல்லங்களுக்கு வாகனங்கள் ஏற்றிச் செல்வேம் அங்கையும் பக்கத்தில் இருப்பவர்கள் யார் என்ன சாதியோ என்ற ஒரு வெறுப்பு பார்வை இருக்கும். இது என்னக்கு யாழ்மக்கள் மீது ஒரு தாழ்வான என்னத்தைவரவைத்து விட்டது. அதன் பின் எந்த ஒரு வீடுகளுக்கு சென்றாலும் உரிமையாக உள்நுழைவது இல்லை வாசலோடு வந்த வேலைகளை முடித்து விட்டு கிழம்பிவிடுவேன்.

Link to comment
Share on other sites

சசி...

கிழக்கின் அமைவிடம் காரணமாக யாழ்பாணத்திடன் ஒப்பிடும் போது சில பாதிப்புகள் இருத்திருக்கலாம். அதற்காக வட பகுதியினர் கிழக்கு பகுதியை பாதிப்படைய செய்தனர் என்பது ஏற்க முடியாத வாதம்.

மேலும் யாழ்ப்பான சாதீய முறையை கண்ணுற்று நீங்கள் அவர்கள் மேல் ஒரு தாழ்வான எண்ணத்தை வைத்தீர்களானால் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு வித்தியாசமும் இல்லை.

Link to comment
Share on other sites

சசி...

கிழக்கின் அமைவிடம் காரணமாக யாழ்பாணத்திடன் ஒப்பிடும் போது சில பாதிப்புகள் இருத்திருக்கலாம். அதற்காக வட பகுதியினர் கிழக்கு பகுதியை பாதிப்படைய செய்தனர் என்பது ஏற்க முடியாத வாதம்.

மேலும் யாழ்ப்பான சாதீய முறையை கண்ணுற்று நீங்கள் அவர்கள் மேல் ஒரு தாழ்வான எண்ணத்தை வைத்தீர்களானால் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு வித்தியாசமும் இல்லை.

அதை நான் ஒரு சம்பவமாக தான் சொன்னேன் .

எங்களது உண்மையான பூர்விகம் கிளிநெச்சிக்கு பக்கத்தில் இருக்கும் கண்டாவளையும் அங்கு வந்து குடியேறியவர்கள் யாழ்ப்பாணத்தில் வரணியில் இருந்து விவசாயத்துக்ககா கண்டாவளை வந்தார்கள்.

Link to comment
Share on other sites

இன்றைக்கும் யாழ்ப்பாணத்துடன் ஒப்பிடும் போது கிழக்கில் பல பாதிப்புகள் குறைபாடுகள் பிரச்சனைகள் இருக்கின்றன.

அதற்கும் புலிகள் தான் காரணமா?

கிழக்கின் அமைவிடம் அப்படி. இதனை மாற்றுவதற்கு கிழக்கு மக்கள் முதலில் முன்வர வேண்டும்.

Link to comment
Share on other sites

இன்றைக்கும் யாழ்ப்பாணத்துடன் ஒப்பிடும் போது கிழக்கில் பல பாதிப்புகள் குறைபாடுகள் பிரச்சனைகள் இருக்கின்றன.

அதற்கும் புலிகள் தான் காரணமா?

கிழக்கின் அமைவிடம் அப்படி. இதனை மாற்றுவதற்கு கிழக்கு மக்கள் முதலில் முன்வர வேண்டும்.

இந்த பதிவில் நான் புலிகளை இழுக்கவில்லை வெறும் சாதியத்தை இழுத்தேன். வன்னியில் மல்லவியில் இருந்தேன் வேற்று ஊர்வனை எப்படி கவனிக்க வேண்டும் என்று அந்த ஊர்மக்களைத் தான் கேட்டு யாழ்ப்பானமக்கள் அறியவேண்டும் ஆனால் அதே 06 95 06ம் ஆண்டு இடப் பெயர்வுக்கு பின் வன்னியில் யாழ்ப்பாணக் கலாச்சாரம் வந்து விட்டது.

இது முழுக்க முழுக்க சமுகம் சார்ந்த பிரச்சனையாக தான் சொன்னேன்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் அல்லது யாழ்ப்பாணத்தின் மேலாதிக்க வாதத்தை விமர்சித்த பெரும்பாலான ஆரம்ப காலக் கிழக்கின் அரசியற் தலைமைகளும், பின்னாளிற் போராளித்தலைமைகளும் வடக்கின் தலைமைகளுடன் தமது சொந்த நலன்களுக்காகவே ஒட்டிக்கொண்டிருந்தார்களே ஒழிய கிழக்கின் அபிவிருத்தி அல்லது விடுதலைபற்றி உண்மையான பற்றுறுதியுடன் கூடிய அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கு தெளிவான உதாரணங்கள் பல உள்ளன. இது தொடர்பாக பிறிதொரு தலையங்கத்தில் எழுதுவேன். எமது அரசியல் வரலாறு நெடுகிலும் கிழக்கின் பாராளுமன்ற அரசியல் வாதிகளும் சரி கிழக்கின் போராளித்தலைவர்களும் சரி தமது சொந்த நலன்கள் பாதிக்கப்படும் போது மட்டுமே வடக்கின் பிரதேசவாதத்தைக் காரணம் காட்டித் தமது தில்லுமுல்லுக்களை மறைக்க முனைந்தார்களே தவிரப் பிரதேச வாதம் எவ்வாறு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சீரழித்து வருகிறது என்பதை கோட்பாட்டு ரீதியாகவோ நடைமுறை ரீதியாகவோ உணர்த்தும் அரசியல் முனைப்பெதுவுமின்றித் தமது சொந்த நலன்களைப்பற்றி மட்டுமே சிந்தித்திருந்தனர். இதனால் தாங்கள் அதுவரைகாலமும் எதிரியாகக் கருதிய சிங்களப் பேரினவாதிகளிடம் சென்று சேர்ந்து தமது நலன்களை பேணும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யுமளவுக்குத் தரம் தாழந்தும் விட்டிருந்தனர்.

குருபரனின் இந்த கருத்து உண்மையிலயே என்னை கவர்ந்துள்ளது..மேலும் நீங்களும் அதேபோல செயல் படுகிறிர்களோ என எண்ணதூண்டுகிறது ..உங்களிடம் ஆயுதமில்லை எழுதுகோல் இருக்கு....ஊடகவியாளர்களும் பிரதேசவாதம் மூலம் பிழைப்பு நடத்தியவர்கள் ....உதாரணத்திற்க்கு சிந்தாமணி பத்திரிகையாளர் 1977 களில் என நினைக்கிறேன்...பாராளமன்றத்தில் த.வி.  கூட்டனி சார்பில் டிக்கட் கிடைக்கவில்லை என்றாவுடன் பல்டி அடித்தவர்  பிரதேசவாத்ததை கையில் எடுத்தவர்இன்னும் புளோட் உறுப்பினர்கள் கற்பனாவாதத்தில் இருக்கின்றார்கள் என்பதை குருபரனின் எழுத்து எடுத்து காட்டுகிறது

Link to comment
Share on other sites

பிரதேசவாதம் வாதம் என்பது வெளிநாடுகளில் இருக்கும் நிறவாதம் போல .உண்மையில் பாதிக்கபடுபவர்களும் இருக்கின்றார்கள் அதை ஒரு சாட்டாகி வாழ்பவர்களும் இருக்கின்றார்கள்.

அலுவலகங்களில் மாற்று இனத்தவருக்கு ஒரு பதவி உயர்வு கொடுப்பதென்றால் ஆயிரம் தடவை யோசித்துதான் கொடுப்பார்கள் .

அதே நேரம் வேலை தெரியாத மாற்று இனத்தவர் தமக்கு பதவி உயர்வு கிடைக்காதற்கு நிற துவேசம் தான் என்று சொல்லி திரிவதும் உண்டு .

நிழலி -Spike Lee யின் படங்கள் பார்க்கவும் ,குறிப்பாக JUNGLE FEVER.

புளோட்டில் உட்கட்சி போராட்டம் உச்சத்தில் இருக்கும் போது கிழக்கு தோழர்கள் சொன்னது "உள்ளதை குழப்பிவிட்டு நீங்கள் ஓடிவிடுவீர்கள் நாங்கள் தான் நடுத்தெருவில நிற்கப்போகின்றோம் என்று" உண்மையில் அதுதான் நடந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனுக்கு எனது பச்சை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கேள்விப்பட்டவரையில் தெரிந்தவரையில் கிழக்கு மக்கள் நிறைய புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் சும்மா ஒன்று ரென்டை சொல்வதால் எல்லாம் பொய்யாகிவிடாது. எமக்குள்ளெயே ஒற்றுமை இல்லததால்தான் எமக்கு இந்த நிலையின்று.

Link to comment
Share on other sites

நான் கேள்விப்பட்டவரையில் தெரிந்தவரையில் கிழக்கு மக்கள் நிறைய புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் சும்மா ஒன்று ரென்டை சொல்வதால் எல்லாம் பொய்யாகிவிடாது. எமக்குள்ளெயே ஒற்றுமை இல்லததால்தான் எமக்கு இந்த நிலையின்று.

இதைத் தான் என்னை ஊற்றுவது என்று சொல்வார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் என்ன சொல்ல வாறயள் என்று விளங்கவில்லை.

அதாவது உன்மையை சொல்வது எண்ணை ஊற்றுவதாகிவிடுமா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேள்விப்பட்டவரையில் தெரிந்தவரையில் கிழக்கு மக்கள் நிறைய புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் சும்மா ஒன்று ரென்டை சொல்வதால் எல்லாம் பொய்யாகிவிடாது. எமக்குள்ளெயே ஒற்றுமை இல்லததால்தான் எமக்கு இந்த நிலையின்று.

அதுசரி இலங்கையில் வடக்கன் கையில்தான் ஆட்சி அதிகாரம் எல்லாம் குவிஞ்சு கிடக்குது அவன் தான் முஸ்லிம்,சிங்களவன்,மலையகத்தவர்,கிழக்கர் எல்லோரின் உரிமைகளையும் பிடுங்கி வைச்சிருக்கிறான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன என்று விளக்கமில்லாமல் கருத்து எழுதப்பட்டிருக்கிறது. நான் இங்கு கதைப்பது வடக்குக் கிழக்குத் தமிழர் பற்றியது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன என்று விளக்கமில்லாமல் கருத்து எழுதப்பட்டிருக்கிறது. நான் இங்கு கதைப்பது வடக்குக் கிழக்குத் தமிழர் பற்றியது..

காலம் போக எனது கிறுக்கல்கள் புரியும்....எல்லாத்துக்கும் வடக்குத்தமிழன் தான் காரணம் என்று சொல்லியிருக்கிறேன்....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வன்னியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மகாநாட்டில் கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேற்றப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டதும் கிழக்கில் நிற்காது வெளிநாடொன்றிற்குச் சென்றுவிட வேண்டுமென்றும் அவ்வாறு செல்லும் பட்சத்தில் அவர் தன்னிடமுள்ள பணமனைத்தையும் கூடவே எடுத்துச் செல்ல முடியுமெனவும் சமாதான முயற்சியில் ஈடுபட்ட இணைத் தலைமை நாடுகளில் ஏதாவதொன்றின் மூலம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் எனவும் புலிகள் கூறியதாகவும் இதற்காகக் கருணாவுக்கு இரண்டு அல்லது மூன்று கிழமைகள் கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அப்போது கசிந்த தகவல்கள் தெரிவித்திருந்தன.

ஆனால் கருணா அந்த ஏற்பாட்டுக்கு இணக்கம் தெரிவித்திருக்கவில்லை. பதிலாகத் தான் தொடர்ந்தும் கிழக்கிலிருந்து செயற்படவுள்ளதாகவும் அதற்குப் புலிகள் இடையூறு செய்யக்கூடாது எனவும் இடையூறு செய்தால் அதனை எதிர்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்திருந்தார். அவரது இந்தத்துணிவுக்கு இலங்கை ராணுவம் புலிகளினால் வரக்கூடிய சவாலை எதிர்கொள்ள உதவும் என்ற அவரின் நம்பிக்கையும் கிழக்கிலங்கையின் ராணுவத் தளபதியான சாந்த கோத்தகொடவுடன் அவர் கொண்டிருந்த மிக நெருக்கமான உறவுமே அடிப்படையாக அமைந்தன. ஆனால் இவை வெறும் பிரமைகளே என்பதைக் கருணா உணர்வதற்கு அதிககால மெடுக்கவில்லை.

prabhkaran_col_karuna_ltte_spl.jpg

புலிகளினால் வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில் கிழக்கைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது படையணிகளைக் கிழக்கிற்கு அனுப்பி வைத்தார். இந்த அணிகளுக்கு கேணல் சொர்ணம் கேணல் பானு கேணல் றமேஸ் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் தலைமை தாங்கி இருந்தனர். பிரிகேடியர் பால்ராஜும் சென்றதாகக் கூறப்பட்ட போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. இவர்களைத்தவிரத் தயாமோகன் கௌசல்யன் றமணன் ஆகியோரும் சிறு அணிகளுடன் மட்டக்களப்பினுள் பிரவேசித்திருந்தனர்.

மட்டக்களப்பு நகரில் இருந்து வடக்காக சுமார் 68 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள வெருகல் ஆற்றின் வடக்கு மருங்கில் புலிகளின் மூத்த தளபதி சொர்ணம் தலைமையிலான சார்ஸ் அன்றனி படைப்பிரிவு தரையிறங்கியது.

ஆனால் புலிகளின் தரையிறங்கலை வெருகல் ஆற்றிற்குத் தெற்காக எதிர்பார்த்த கருணா தனது போராளிகளை அங்கே குவித்திருந்தார். கருணாவின் மூத்த சகோதரரான லெப்டினட் கேணல் ரெஜி தலைமையில் சுமார் 500ற்கும் மேற்பட்ட போராளிகள் பலமான ஆயுதங்களுடன் அன்று அங்கு கருணா தரப்பினால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கருணா அணியினர் வெருகல் ஆற்றைக் குறிவைத்து காத்திருக்க மறுபுறம் கடல் மூலமாகவும் வாவி மூலமாகவும் நகர்ந்த ஜெயந்தன் விஷேட படைப்பிரிவுப் போராளிகள் கருணாவின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களில் ஊடுருவி தம்மை பலப்படுத்தி விட்டிருந்தனர்.

இதேவேளை கடற்புலிகளின் சிறு சிறு வள்ளங்கள் மூலம் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசங்களில் புலிகளின் சில அணிகள் தரையிறங்கின. ஜெயந்தன் படைப்பிரிவின் முக்கிய தளபதிகளான ஜனார்த்தனன் மற்றும் ஜெயமோகன் தலைமையிலான சில படையணிகள் முன்னேறி எந்தவித எதிர்ப்புக்களும் இன்றிக் கஞ்சிகுடியாறு தளத்தை மீட்டார்கள். அதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களும் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அம்பாறை மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் துறை அலுவலகங்களும் புலிகளின் அரசியல் துறையினரால் பொறுப்பேற்கப்பட்டன.

அதேவேளை விடுதலைப் புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் ரமணன் தலைமையிலான படையணி ஒன்று நாவிதன்வெளி வழியாகப் படுவான்கரைப் பிரதேசத்தினுள் நுழைந்தது. அந்த அணி புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகம் கொக்கட்டிச் சோலையில் இருந்த மாவட்டச் செயலகம் தமிழ்அலை பத்திரிகைக் காரியாலயம் தாந்தா மலைப் பிரதேசத்தில் இருந்த சோலையகம் என்பனவற்றை கைப்பற்றியது.

இவ்வாறு புலிகள் கிழக்குமாகாணத்துக்குள் நுழைந்து தம்மை தாக்குவதற்கு இலங்கை அரசபடையினர் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் அவர்கள் தமது பக்கம் நிற்பார்கள் எனவும் கருணா தரப்பினர் நம்பியிருந்தனர். உண்மையில் கருணாவுடன் நின்ற அரச புலனாய்வுப் பிரிவினரும் அரசபடையினரும் புலிகளைத் தடுத்து நிறுத்த விரும்பிய போதும் றணில், கருணா- புலிகள் மோதலில் படையினரைத் தலையிடாது விலகியிருக்கும்படி கிழக்கின் தளபதியான லெப்டினன் கேணல் சாந்த கோத்தகொட ஊடாகத் தெளிவான அறிவித்தலை வழங்கியிருந்தார். அத்துடன் முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவும் அதனை உறுதிப்படுத்தி இருந்தார்.

புலிகளின் தலைமையுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் போது புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை அரசாங்கமோ அல்லது படையினரோ எடுப்பது சமாதானப் பேச்சுவார்த்தையைக் குழப்புவதாக அமைந்துவிடும் என்பதால் புலிகளின் உள்வீட்டுச் சண்டையில் அரசாங்கமோ படையினரோ தலையிடப் போவதில்லையென மிகச் சாதுரியமான பதிலையும் றணில் அப்போது தெரிவித்திருந்தார்.

உண்மையில் றணிலின் அரசாங்கமோ அல்லது ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவோ கருணா அணியினரைப் புலிகளுடன் மோத விடாது தென்பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்து வந்திருக்க முடியும். அல்லது வன்னியில் இருந்து புறப்பட்ட புலிகளைக் கிழக்கிற் தரையிறங்க அனுமதிக்கப் போவதில்லை என றணிலின் அரசாங்கமோ ஜனாதிபதி சந்திரிக்காவோ உறுதியாகத் தெரிவித்திருக்க முடியும். அதற்கப்பாலும் யுத்த நிறுத்த காலத்தில் ஆயுத மோதல்களை அனுமதிக்க முடியாது எனக் கூறியிருக்கவும் முடியும். சமாதான காலத்தில் புலிகள் ஆயிரக்கணக்கான யுத்தநிறுத்தமீறல்களைச் செய்தார்கள் எனப் பட்டியலிட்ட அரசாங்கம் இதற்கு மட்டும் ஏன் அனுமதித்தது?

இந்தவிடத்தில்தான் இரணிலின் இராசதந்திரம் மற்றும் சிங்களப் பேரினவாதத் தலைவர்களின் ஒற்றுமை என்பன மிகத்தெளிவாகத் தெரிந்தன.

புலிகளிடமிருந்து வலிமையான ஒரு இராணுவத் தளபதியை உடைத்து எடுத்தல்

வடக்குக்கும் கிழக்குக்கும் இடையிலான பிளவை இன்னும் ஆழப்படுத்தல்

ஐந்தாயிரம் போராளிகளோடு கிழக்கில் பலமாக இருந்த கருணா அந்தப்பலத்துடனேயே இருந்தால் எதிர்காலத்தில் மீண்டும் தமக்குத் தலையிடியாகலாம் என்பதால் புலிகளையும் கருணாவையும் மோதவைத்துப் போரனுபவம் கொண்ட தமிழ்ராணுவத்தைப் பலமிழக்கச் செய்தல்

கருணா என்னும் பாம்பின் பல்லைப் புலிகளைக் கொண்டே பிடுங்கிப் பின் தேவைப்படும் போது பாவிப்பதற்காக தமது மகுடிப் பேழைக்குள் எடுத்தல்

எனப் பல நோக்கங்களைத் தனது இராசதந்திரத்தின் முலம் ரணில் சாதித்துக் கொண்டிருந்த போது கிழக்கில் ஆயிரக்கணக்கான தமிழ்ப் போராளிகள் தமக்குள் போரிட்டுக் கொண்டிருந்தனர்.

சந்திரிக்காவும் றணிலும் கடுமையானதொரு அதிகாரப்போட்டியில் ஈடுபட்டிருந்தபோதும் தங்களுக்குள் முரண்பாடுகளைக் கொண்டிருந்த போதும் கருணாவும் புலிகளும் தங்களுக்குள் அடிபட்டழிவது சிங்களப் பெருந்தேசியவாத்திற்கு நன்மையே என்பதில் ஒன்றுபட்டனர். ஆனால் புலிகளின் தலைமையோ அல்லது கருணாவோ இந்த ஒற்றுமையையோ அதன் பின்னால் உள்ள சிங்களப் பேரினவாதத்தின் நோக்கங்களையோ புரிந்து கொள்ளும் நிலையில் இருக்க வில்லை. இத்தனை ' ஆத்திரக்காரர்களுக்குப் புத்தி மத்திமம்' எனப்பழமொழியிற் சொல்வார்கள்.

தமிழ்த்தேசியவாதம் அதன் போராட்ட வரலாற்றில் பல தடவைகள் தானே தனது கண்ணில் குற்றிக்கொண்டுள்ளது. டெலோப் போராளிகளைக் கொன்ற போது ஈ.பி.அர். எல் எ·ப் போராளிகளைக் கொன்றபோது இன்னும் சிறிய மாற்று இயக்கங்களையும் மாற்றுக் கருத்தாளர்களையும் கொன்ற போதும் இரத்தம் வடிந்தது தமிழ்தேசியத்தின் கண்களில்தான். அந்த இரத்தம் தேசிய விடுதலை என்ற பெயரால் நியாயப்படுத்தப்பட்டது. சரி இந்த இரத்தம் இனியொரு போதும் வடியாதென்று மக்கள் மாயையில் ஆழ்ந்திருந்த காலத்தில் மீண்டுமொருமுறை தமிழ் தேசியம் தனது கண்ணில் குற்றிக் கொண்டது.

Karuna%20carders1.JPG

(புலிகளுடன் மோதிய கருணாவின் சிறுவர் அணியினர் காயங்களுடன் வைத்தியசாலையில் )

41 நாட்கள் தொடர்ந்த கருணா புலிகள் மோதலில் முன்னூறு வரையான புலிகள் கிழக்கில் கொன்றொழிக்கப்பட்டனர். இதில் கருணாவின் மூத்த சகோதரர் லெப்டினட் கேணல் ரெஜி துரை விசு ஜிம்கலித்தாத்தா ராபர்ட் திருமாள் உள்ளிட்ட முக்கிய தளபதிகளும் அடங்குகின்றனர். இதேபோல் நீலன் என்ற புலனாய்வுப் பொறுப்பாளர் உள்ளிட்ட பல விடுதலைப் புலிகளைச் சேர்ந்த போராளிகளைக் கருணா அணியினர் கொன்றொழித்தனர்.

புலிகள் தமது அதிகாரத்தைக் கிழக்கில் நிலைநிறுத்த தாம் வளர்த்து உருவாக்கிய போராளிகளையே பலியெடுக்கத் துணிந்தனர். கருணாவோ தன்னைப் பாதுகாக்கவும் கிழக்கில் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தவும் தன்னை நம்பிப் புலிகள் அமைப்பில் இணைந்த முன்னூறுக்கும் மேற்பட்ட கிழக்கு போராளிகளைப் பலியாக்கினார்.

Karuna%20carders2.JPG

புலிகளுடன் மோதிய கருணாவின் அணியினர் காயங்களுடன் வைத்தியசாலையில்

இங்கேதான் கிழக்கை வடக்கின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதற்காகவும் கிழக்கை அபிவிருத்தி செய்வதற்காகவும் தான் புலிகளின் தலைமையுடன் முரண்பட்டேன் எனக்கூறிய 'கிழக்கின் மைந்தனான கருணாவின்' கோரிக்கைகள் பற்றி ஆழமான கேள்விகள் எழுகின்றன.

புலிகளின் தலைமையுடன் முரண்பட்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறித் தனியாக இயங்க முடிவெடுத்த கருணா இலங்கை அரசிடம் கிழக்கு தொடர்பாக எந்த அரசியற் கோரிக்கைகளையும் வைத்திருக்கவில்லை. கிட்டத்தட்ட ஐயாயிரம் போராளிகளுடன் கிழக்கில் பலமாக இருந்த கருணா கிழக்கின் அபிவிருத்திக்குத் தேவையான குறைந்த பட்ச அதிகாரங்களையாவது பெறுவதற்கு அரசுடன் பேரம் பேச முற்பட்டிருக்க வேண்டும் அரசு எதையாவது வழங்கியிருக்குமோ என்பது சந்தேகமே. ஆனால் கருணா உண்மையிலும் ஒரு அரசியல் நோக்கோடுதான் புலிகளில் இருந்து பிரிகிறார் என்னும் ஒரு தோற்றப்பாடாவது உருவாகியிருக்கும். அது மட்டுமல்ல விடுதலைப்புலிகள் தம்மீது தாக்குதல்களில் ஈடுபடுவார்கள் எனத் தெரிந்திருந்தும் கிழக்கின் அனைத்துப் போராளிகளையும் சகோதரப் படுகொலைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய எந்த முன்னேற்பாடுகளையோ அரசியல் முனைப்புக்களையோ கருணா செய்யவில்லை. கிழக்கில் இருந்த போராளிகள் அனைவரையும் வைத்துப்பராமரிப்பதில் உள்ள சிக்கல் காரணமாக கணிசமான போராளிகளை விடுகளுக்கு போங்கள் என்றும் கூப்பிடும் பொது வாருங்கள் என்றும் அனுப்பி வைத்த கருணா போரிடும் திறனும் அனுபவமும் கொண்ட ஒரு தொகையான போராளிகளை மட்டும் (500க்கும் 1000க்கும் இடையில்) தன்னுடன் வைத்திருந்ததேன்?

karuna3.bmp

(புலிகளுடனான பிளவின் பின் கருணா)

வன்னியில் இருந்து அனுப்பப்பட்ட புலிகளின் படை அணிகளுடனும் கிழக்கில் வன்னித் தரப்பினருக்கு ஆதரவாக இருந்த தளபதிகளின் அணிகளுடனும் மோதிக் கிழக்கைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அவ்வளவு போராளிகளும் போதுமென்று முன்னொரு காலத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அபிமான தளபதியாகவும் இலங்கை இராணுவத்திற்கு சிம்ம சொற்பனமாகவும் விளங்கிய கருணா அம்மான் கணக்கிட்டிருப்பாரேயானால் அது நம்ப முடியாததாகும். ஆனால் பிற்பாடு நான்கு லட்சம் படைகளுடன் பெரும் எடுப்பில் இலங்கை இராணுவம் வன்னிக்குள் நுழையும் போது எல்லா வளங்கற்பாதைகளும் அடைபட்ட நிலையில் 10000 ஆயிரம் போராளிகளுடன் வன்னியைக் காப்பாற்ற முடியுமென விடுதலைப்புலிகள் சொல்லிக் கொண்டிருந்ததை நினைக்கும் போது கருணாவும் புலிகளும் ஒரேமாதிரியான சிந்தனையையே கொண்டிருந்ததை அறியமுடிகிறது. இது ஒன்றும் வியப்பானதல்ல. எனேனில் கருணாவும் புலிகளும் கொண்டிருந்த இராணுவ அறிவு அரசியலினால் வழிநடத்தப்படாத அறிவாகும். மேலும் இரு தரப்பினரினதும் இராணுவக்கணிப்புகளும் தவறாகிப் போனதற்கான அடிப்படை ஒன்றுதான். இருதரப்புமே நெருக்கடியான சூழ்நிலைகளில் அவர்களின் சொந்த இருப்புக்கு அச்சுறுத்தல் வந்த போது தம்மைப்பாதுகாக்கக் கூடிய வழிகளை மட்டுமே சிந்தித்திருந்தனர். மக்களின் நலன்களில் இருந்து முடிவுகளை எடுக்கக்கூடிய அரசியல் அறிவையோ சிந்தனைப் புலத்தையோ இவர்கள் கொண்டிருக்கவில்லை. புலிகளிடம் பிற்பாடு வெளிப்பட்ட இந்தக் குணாம்சம் முன்னரே கருணாவிடமும் வெளிப்பட்டது.

எந்த விதமான அடிப்படைத் திட்டங்களும் முன்னேற்பாடுகளும் இல்லாமல் கிழக்கில் செயற்படப்போவதாக அறிவித்த கருணா தெரிந்தெடுத்த போராளிகளைத் தனது பாதுகாப்புக்காகக் கிழக்கில் பலியிட்டார். கருணா இந்த மோதல்கள் உருவாவதற்கு முன்பே (புலிகளுடன் முரண்பாடு முற்றிவந்த போதே) தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அரசாங்கத்தின் உதவியுடன் மலேசியா அனுப்பி வைத்துவிட்டார். இதன் போது விடுதலைப் போராட்டத்திற்கெனச் சேகரித்த இலட்சக்கணக்கான் பணத்தையும் தனது மனைவியின் தேவைக்காகக் கொடுத்து விட்டதனை கருணாவுடன் இருந்த போராளிகளே அம்பலப்படுத்தியும் இருந்தனர். கருணா தனது மனைவி பிள்ளைகளை மலேசியாவுக்கு அனுப்புவதற்கு ஐக்கியதேசியக் கட்சியில் அமைச்சராக இருந்தவரும் பின்னாளில் மலேசியத் தூதராக இருந்தவருமான செல்லையா இராஜதுரையின் உதவியையும் பெற்றுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில் புலிகளுக்கும் கருணாவுக்கும் இடையில் நடந்த 41 நாட்கள் மோதலில் கருணாவிடம் இருந்த போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகளும் அதன் தளபதிகளும் கொல்லப்பட்டனர். றணில் அரசாங்கம் எதிர்பார்த்தது போன்றே கிழக்குப் போராளிகளின் பலம் பெருமளவுக்கு அழிக்கப்பட்டது. பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் மார்க்கன் இனியபாரதி போன்ற இளநிலைத் தளபதிகளும் சில அணியினரும் எஞ்சினர்.

இதில் வேதனைப்பட வேண்டிய இன்னொரு விடயம் என்னவெனில் புலிகள் தமக்குள்ளே மோதி நூற்றுக் கணக்கான தமிழ்ப்போராளிகள் இறந்து கொண்டிருந்த போது தங்களது பிள்ளைகளை இப்படியும் இழக்க நேருமென்றெதிர்பாராத பெற்றோர் இரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த போது கிழக்குத் தேசியம் பேசிய சிவராம் உள்ளிட்ட இராணுவ ஆய்வாளர்களும், எழுத்தாளர்களும் இந்தச்சமருக்கு புதிய இலக்கணத்தை அளித்தனர். அதுவரைகாலமும் எதிரிப் படைகளைச் சமரில் வெற்றி கொண்ட புலிகள் தாம் பயிற்றுவித்து வளர்த்து உருவாக்கிய தமது பலம்மிக்க அணிகளையும் எதிர் கொள்ளும் இராணுவப் புலமையைப் பெற்றுள்ளார்கள் என அவர்கள் புகழாரம் சூட்டினர். இது புலிகளின் அடுத்த கட்ட இராணுவ முதிர்ச்சி எனவும் வியந்தனர்.

எதிரியின் அரசியற் காய்நகர்த்தல்கள் இராணுவத்தந்திரங்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து இடித்துரைத்து வழிகாட்ட வேண்டிய மதியுரைஞர்களும் ஆய்வாளர்களும் இவ்வாறு கூழுக்குப் பாடிக் கொண்டிருந்தபோது சிங்களப் பெருந்தேசியவாதம் நான்காவது ஈழப்போருக்குத் தன்னைப்பட்டை தீட்டிக்கொண்டிருந்தது.

விடுதலைப் புலிகளுடன் நிகழ்ந்த அதிதீவிர மோதல்களில் தனது தனது பலத்தை இழந்த ஒரு இரவில் கிழக்கின் மைந்தனான கருணா தனது பால்ய மற்றும் பாடசாலை நண்பர் அலிசாகிர் மௌலானாவின் உதவியுடன் வெறுங்கையோடு சென்று சிங்கத்தின் காலடியில் விழுந்தார்.

லிசாஹிர் மொலானா கொழும்பில் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதி

(சண்டையை கைவிட்டுவிட்டு பின்வாங்குமாறு அவரிடம் கூறினேன். அவரும் அங்கிருந்து தப்பி தொப்பிகலக் காட்டுப்பகுதிக்கு சென்றார். நான் அங்கு சென்று அவரை அழைத்துக்கொண்டு ‐ ஏப்ரல் 12 ஆம் திகதி ‐ கொழும்புக்கு வந்ததாகவும் அலிசாகிர் தனது செவ்வியில் தெரிவித்தார். ஆயுதங்கள் எதுவுமின்றி சாதாரண பயணிகள் போல வாகனத்தில் சென்றதால் வரும்வழியில் சோதனைசாவடிகளில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.

கொழும்புக்கு அழைத்துச் சென்ற கருணாவை முதல்நாள் ஜெய்க் ஹில்ட்டன் ஹோட்டலில் தங்கவைப்பதற்கு சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்ட நான், இது விடயம் சம்பந்தமாக சமாதான செயலக பணிப்பாளர் பேர்னாட் குணத்திலக்கவிடம் எடுத்துக்கூறி, கருணாவை அவரிடம் பொறுப்பளித்ததாக கூறுகிறார். தான் வெறுமனே டக்ஸி ஓட்டுநர் வேலை மட்டும் பார்க்கவில்லை. பொறுப்புடன் இந்த விடயத்தை செய்துமுடிதததாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.)

alizahir_karuna.jpg

அலிசாகிர் மௌலானாவுடன் கருணா

இவ்வாறு அலிசாகிர் மௌலானாவின் உதவியுடன் 2004 ஏப்ரல் 12ஆம் திகதி கருணா கொழும்பு அழைத்து செல்லப்பட்ட செய்தியை அன்றே இரவு 9.15 மணிச் சூரியன் செய்தியில் வெளியிட்டு இருந்தேன். இது எல்லோருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. காரணம் மட்டக்களப்பில் இருந்து புறப்பட்டு கருணா கொழும்பு வருவதற்கு முன்பே சூரியன் எ·ப் எம் வானொலியில் அச் செய்தி ஒலிபரப்பானமை கருணாவின் பயணத்திற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. எனது நிறுவனத்தின் தலைவர் கூட எனது கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எவ்வாறு இந்தச் செய்தியைப் பெற்றாய் என வினவியிருந்தார்.

ஒரு பத்திரிகையாளனாக இவ்வாறான செய்திகளை பெற்றுக்கொள்வதும் உறுதிப்படுத்துவதும் சவாலான விடையங்களாகும். அன்றைய காலப்பகுதியில் சூரியனின் செய்தியாளர்கள் செய்தி ஆசிரியர்கள் மற்றும் எம்மோடு இணைந்திருந்த மக்கள் என அனைவரது உழைப்பாலும் உருவாகியிருந்த ஒரு வலையமைப்பாலேயே அது சாத்தியமாகியிருந்தது. இவை தொடர்பாக பின்னர் வரும் தொடர்களில் பார்ப்போம்.

பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்பாக மாறிய கருணாவுக்கு இருந்த ஒரு தெரிவு இலங்கை அரச ராணுவத்தின் துணைக்குழுத் தலைவராக மாறுவதே. இலங்கை அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்துதல் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரச புலனாய்வு மற்றும் இராணுவப் பிரிவுகளின் செயற்பாடுகளுக்கு உதவுதல் எனக் கிழக்கின் மைந்தனின் வேலைப்பழு அதிகரித்ததே அன்றிக் குறையவில்லை.

2009 இல் நிகழ்ந்த நான்காம் ஈழப்போரில் கருணா, புலிகளின் பலம் தொடர்பாக இராணுவத்திற்கு வழங்கிய தகவல்களும் இராணுவத்தின் வெற்றிக்கு வழிவகுத்திருந்ததாகக் கூறப்பட்டது.

கொழும்பிற்குச் சென்ற கருணா பின்னர் இலங்கை அரசின் முகாம்களில் இருந்து கொண்டு (பானாங்கொடை மற்றும் வேறு சில இரகசிய முகாம்களில் இருந்து) எஞ்சிய தனது போராளிகளை குழுக்களாக்கி வழிநடத்தி வந்தார். இந்தக் குழுக்களுக்கு தற்போதைய கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் களத்தளபதியாக இருக்க மார்க்கன். இனியபாரதி போன்றோர் கீழ்நிலைத் தளபதிகளாகச் செயற்பட்டனர். கருணாவினால் வழிநடத்தப்பட்ட குழுக்களின் முகாம்கள் கிழக்கின் எல்லைப்புறங்களில் இலங்கை அரசின் இராணுவ படைமுகாம்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மீதும் புலிகள் பலமுறை தாக்குதல்களை மேற்கொண்டு கருணா குழுவினரை அழித்துள்ளனர்.

வடக்கைச் சேர்ந்த அரசியல் வாதிகளும் பின்னாளில் வந்த போராளிக்குழுக்களும் குறிப்பாக விடுதலைப் புலிகளும் கிழக்கின் போராளிகளையும் கிழக்கு மக்களையும் தமது நலன்களுக்காக பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருவதும் அதில் பெருமளவு உண்மைகள் இருப்பதும் ஏற்கனவே எனது தொடர்களில் ஒப்புக்கொள்ளப்பட்டு அலசப்பட்டுள்ளன.

மறுபுறத்தில் வடக்கின் அல்லது யாழ்ப்பாணத்தின் மேலாதிக்க வாதத்தை விமர்சித்த பெரும்பாலான ஆரம்ப காலக் கிழக்கின் அரசியற் தலைமைகளும் பின்னாளிற் போராளித் தலைமைகளும் வடக்கின் தலைமைகளுடனோ அன்றி ஆளும் அரசாங்கங்களுடனோ தமது சொந்த நலன்களுக்காகவே ஒட்டிக்கொண்டிருந்தார்களே ஒழிய கிழக்கின் அபிவிருத்தி அல்லது விடுதலைபற்றி உண்மையான பற்றுறுதியுடன் கூடிய அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் முந்தைய தொடரில் வெளிப்படுத்தியிருந்தேன்.

கருணாவின் பிளவை இந்தக்கண்ணோட்டத்தில் இன்னும் சற்று ஆழமாக ஆராய்வோம்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்த அனேகமான இளைஞர்களைப் போலவே பாடசாலைப் பருவத்திலேயே கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து விட்டார். இந்திய அமைதிப்படை இலங்கையில் கால்பதித்தவுடன் குமரப்பா புலெந்திரன் உள்ளிட்ட கிழக்கில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் 1987களில் வடக்கிற்கு அழைக்கப்பட்டார்கள். இந்த நிலையில் கருணா என்கிற வினாயகமூர்த்தி முரளீதரன் அவரது அயராத உழைப்பு அர்பணிப்புடன் கூடிய போராட்டத் திறன் தலைமை மீது கொண்ட அதீத விசுவாசம் என்பன காரணமாக மட்டக்களப்பிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டு பின் கிழக்கின் தளபதியாக உயர்த்தப்பட்டார்.

'சொல்லுறதைச் செய்யிறவனே எங்களுக்குத் தேவை' என்பது புலிகளின் தலைமையினது பிரபல்யமான வாசகம். தலைமை எதனைக் கூறுகிறதோ அல்லது உத்தரவிடுகிறதோ அதனை கேளிவிகளுக்கு அப்பாற்பட்டு நிறைவேற்ற வேண்டுமென்பதே புலிகளுக்குள் நிலவிய அடிப்படைத்தாரக மந்திரம். இந்தக் கோட்பாட்டைக் கருணா அளவுக்குக் கடைப்பிடித்தவர்கள் புலிகள் அமைப்பில் எவருமில்லை என்னுமளவுக்கு கருணா விளங்கியிருந்தார்.

வடக்கில் ஜெயசிக்குறு நடவடிக்கையின் போது இலங்கைப் படையினர் தமிழ்ப் பொதுமக்கள் மீது மேற்கொண்ட ஒரு தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என வன்னியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கருணாவிடம் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டவுடனேயே தனது தொடர்பாடற் கருவி மூலம் மட்டக்களப்பில் இருந்த போராளிகளுக்கு சிங்களக் குடியேற்றமொன்றின் மீதான தாக்குதலுக்கான உத்தரவைக் கருணா வழக்கிவிட்டார். கூட்டத்தின் போக்கில் சற்றுச் சிந்தித்த பின் புலிகளின் தலைவர் பிரபாகரன் கருணாவிடம் இப்போதைக்கு வேண்டாம் அரசியல் சூழல் சரியில்லை பின்னொரு போது பார்க்கலாம் எனக்கூறியிருகிறார் உடனே கருணா கிழக்குப் போராளிகளைத் தொடர்புகொண்டு நிறுத்துங்கள் எனச் சொல்ல முன்பே கருணாவின் உத்தரவின் பேரில் சென்ற அணி எல்லையிற் பலரை வெட்டிச் சரித்தபின் மீண்டு வந்து கொண்டிருப்பதாக கருணாவின் உதவியாளர் மறுமுனையில் பதிலளித்திருக்கிறார். புலிகளின் தலைமை மீது அன்று தான் கொண்டிருந்த விசுவாசம் மற்றும் எந்த நேரத்திலும் தாம் தாக்குதல்களுக்கு தயாராக இருந்தநிலை போன்றவற்றை விளக்க இந்தக்கதையினை கருணாவே சிலரிடம் கூறியிருக்கிறார். எது எப்படியிருப்பினும் புலிகளின் தலைவர் பிரபாகரன் எள் என்றால் எண்ணையாக நின்ற கருணாவின் இயல்பு குறித்ததே இக்கதை.

விடுதலைப்போராட்டம் எழுச்சியடைந்து வந்த காலங்களில் இத்தகைய தாக்குதல்கள் எல்லைப் புறக்கிராமங்களில் அடிக்கடி நிகழ்ந்தன. புலிகளின் இராணுவக் கண்ணோட்டத்தில் கிழக்கின் எல்லைப்புறச் சிங்களக் கிராமங்களைத் தொடர்ச்சியாகத் தாக்கிப் பதட்டத்தை உருவாக்குவதன் மூலம் இலங்கை அரச இராணுவத்திற்கு தனது ஆள் மற்றும் படை உபகரண வலுவை பிரித்து எல்லைப் புறங்களுக்கு அனுப்பவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்க முடியுமென்று கருதினார்கள். இதன் மூலம் அரச படைகளின் பலம் ஒரிடத்தில் திரள முடியாதென்பதுடன் ஆள் மற்றும் வளப்பற்றாக் குறைகளுக்கும் இலங்கை அரசாங்கம் முகம் கொடுக்க நேரிடுமென்றும் கருதினார்கள். ஆனால் சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள் தமிழ் தேசிய விடுதலையின் அரசியல் பரிமாணத்தின் மீது இரத்தக்கறையைப் பூசியதைப்பற்றி அவர்கள் அன்று கவலைப்பட்டிருக்கவில்லை.

பின்னாளில் உலக ஒழுங்கு மாறியபோது புலிகளைப் பயங்கரவாத இயக்கமாகக் காட்டுவதற்கான ஆதாரங்களாக இவையும் அமைந்தன.

இவ்வாறான அரசியற் சிந்தனையற்ற போர் விழுமியங்களுக்குட்படாத மனித்தன்மையற்ற தாக்குதல்களை தொலைதூர அரசியற் சிந்தனை கொண்ட ஒரு விடுதலை அமைப்பு செய்ய முடியாது, செய்யக்கூடாது. இவ்வாறான தாக்குதல்களை அனேகமான தமிழீழவிடுதலை அமைப்புக்களில் இருந்த போராளிகளும் குறிப்பாக விடுதலைப்புலிகளில் இருந்த போராளிகளும் (கருணா உட்பட) இலகுவான முறையில் செய்தே இருந்தனர்.

சிங்கள முஸ்லீம் மக்கள் மீதான கொலைகள் மட்டுமல்ல ஈழப் போராட்ட வரலாறு நெடுகிலும் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகள் மாற்றுக்கருத்தாளர்கள் மீதான கொலைகள் மற்றும் சித்திரவதைகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் செய்த விடுதலை இயக்கங்களில் இருந்தவர்கள் செய்திருந்தனர்.

ஆக விடுதலைப் போராட்டத்தின் இராணுவ உருவாக்கத்தில் அதன் கொள்கை உருவாக்கத்தில் ஏற்பட்ட அடிப்படையான தவறு காரணமாக தமிழ் ஈழ விடுதலை வீரர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மனிதத்துவத்துக்கெதிரான குணாம்சங்களை வெளிப்படுத்தியிருந்தனர் என்பது கண்கூடு.

1987ஆம் ஆண்டின் பின் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட எல்லைப்புறக் கிராமங்கள் மீதான தாக்குதல்கள் முஸ்லீம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் யாவும் கருணாவின் நேரடி உத்தரவிற்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கிழக்கில் புலிகள் மேற்கொள்ளும் எந்தத் தாக்குதல்களையும் குறிப்பாக இராணுவத்தின்மீது மேற்கொள்ளப்போகும் தாக்குதல்களை முதலில் அவர்கள் புலிகளின் தலைமைக்கு தெரியப்படுத்திய பின்பே மேற்கொள்ளும் வழமை இருந்த போதும் எல்லைப்புறக் கிராமங்கள் மீதான தாக்குதல்கள் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட பலவற்றைக் கருணா தன்னுடைய முடிவிற் செயற்படுத்திவிட்டுப் பின்னர் அறிவித்த சந்தர்ப்பங்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

புலிகளின் தலைமையோடு முரண்பாடு முற்றிய ஒரு நிலையிலேயே கிழக்கில் புலனாய்வுத் துறை தவிர்ந்த அனைத்து நடவடிக்கை களையும் தனது கட்டுப்பாட்டின் கீழேயே வைத்திருந்த கருணா புலிகள் அமைப்பின் முக்கியமான 16 துறைகளுக்கான பொறுப்புகளில் வடக்கைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். புலிகளுடன் பாலும் நீரும் போலச் சேர்ந்திருந்த காலத்தில் அவர் இதனை உணராதிருந்தது வியப்பானது.

karuna_addressing.png

(புதிதாக இணைக்கப்பட்ட போராளிகளுடன் கருணா)

கிழக்கின் முடி சூடாமன்னனாக விளங்கிய கருணா பற்றியும் அப்போது கிழக்கில் இருந்த போராளிகளுக்குள் விமர்சனங்கள் எழாமல் இல்லை ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குக் கிழக்கு மாகாணத்தில் போராளிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் விசுவாசமான முகாமையாளனாகக் கருணா விளங்கியமையால் கருணா தொடர்பாக முன்வைக்கப்பட்ட பல விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் விடுதலைப்புலிகளின் தலைமை கண்டும் காணாமலும் விட்டிருந்தது. விடுதலைப்புலிகளின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கருணா தொடர்பான குற்றச்சாட்டுகள் அல்லது விமர்சனங்கள் அடங்கிய பல கடிதங்களை விடுதலைப்புலிகளின் தலைமை கருணாவிடமே கையளித்துமிருக்கிறது. அதனால் அக்கடிதங்களை எழுதிய போராளிகளைக் கருணா பழிவாங்கியும் உள்ளார். கருணா மீது குற்றசாட்டுக்களை முன்வைத்த முக்கியமான தளபதிகளான நிஸாம் ஜீவன் போன்றவர்கள் இந்தவடிப்படையில் கருணாவால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கிழக்கின் போராளிகள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இது தொடர்பாக புலிகளின் தலைமை எந்த நடவடிக்கைகளையும் கருணா மீது எடுக்கவில்லை.

இந்திய அமைதிப்படை காலத்தில் இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஈ.பீ.ஆர்.எல்.எவ் மற்றும் ஈ.என்.டீ.எல்.எவ் அமைப்புகள் தமிழ்த்தேசிய இராணுவம் என்றவொரு கட்டமைப்பை உருவாக்கி அதற்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டனர். அவ்வாறு வடக்கு கிழக்கில் இணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களுள் பல நூற்றுக்கணக்கான கிழக்குமாகாணத்தைச் இளைஞர்களும் அடங்குவர். இந்திய ராணுவம் இலங்கையை விட்டு நீங்கிய போது இந்த இளைஞர்கள் அனாதரவாக விடப்பட்டனர். இவர்கள் அனைவரையும் சுட்டுக் கொல்வதற்கான உத்தரவை எந்தவித அரசியற்சிந்தனையோ மனிதாபிமானமோவின்றிக் கருணா அன்று பிறப்பித்திருந்தார். இந்தக்கொலைச் செயலுக்கு 1990களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிப்போராளியான றேகன் என்பவர் தலைமை தாங்கியிருந்தார். தமிழ்த் தேசிய இராணுவத்தில் பலவந்தமாகச் சேர்க்கப்பட்ட தனது மகனை தேடித் திரிந்த தாய் ஒருவர் கிழக்குமாகாணத்தில் மாமாங்கம், புன்னைச் சோலை, பார்றோட் கள்ளியங்காடு, ரெயில்வே ஸ்ரேசன் ஏரியா கள்ளியங்காடு போன்ற பகுதிகளில் அமைந்திருந்த தமிழ்த் தேசிய இராணுவ முகாம்களில் கைப்பற்றப்பட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் தேசிய இராணுவத்தினர் கள்ளியங்காட்டில் அமைந்திருந்த ஒரு அரிசி ஆலையொன்றினுள் குவிக்கப்பட்டுள்ளனர் என அறிந்து அங்கு சென்று குவிந்திருந்த சடலங்களை ஒவ்வொன்றாக எண்ணி அழுதழுது புரட்டித் தனது மகனை தேடியிருந்தார். ஏறாத்தாள 843 சடலங்களை அவர் எண்ணியிருந்தார். இவர்களும் கிழக்கின் மைந்தர்கள்தான் என்பதனைக் கருணா அன்று அறியவில்லையோ?

புலிகளுக்கு ஆட்களை வழங்கிய போதும் சரி, மற்ற இயக்கங்களில் இருந்த கிழக்குமாகாணப் போராளிகளை மனிதாபிமானமே இல்லாமல் கொன்ற போதும் சரி கிழக்குப்பற்றிய துளி உணர்வு கூட இந்தக்கிழக்கின் மைந்தனுக்கு ஏற்படவேயில்லையே?

Child%20soldiers%20TMVP2%20BBC%20NEWS%20.jpg

(Col Karuna's faction has forced many children into its ranks

Page last updated at 15:15 GMT, Friday, 9 May 2008 16:15 BBC UK )

பாரிய படையெடுப்பை மேற்கொண்டு கிழக்கை இலங்கை இராணுவம் முழுமையாக விடுவித்தபோது கருணாவினது குழுவினர் கிழக்கில் மீண்டும் துணை இராணுவக் குழுவாகத்தானே மாற்றிச் செயற்பட ஆரம்பித்தனர். கருணாவினது இந்தக்குழுக்கள் பலவந்தமான முறையில் சிறுவர்களைத் தம்முடன் இணைத்திருந்தமை குறித்து மனித உரிமைக்குழுக்கள் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தன. விடுதலைப்புலிகள் சிறுவர்களை போராளிகளாக இணைகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சர்வதேச ரீதியில் வலுப்பெற்றுக் கொண்டு இருந்த போது அரசாங்க படைகளின் ஆதரவுடன் கருணாவின் முகாம்களிலும் சிறுவர்கள் துப்பாக்கிகளின் சுமைதாங்காது நின்றார்கள் இவர்களும் கிழக்கின் பிஞ்சுகள்தானே?

பிரபாகரனிடமிருந்தும் வடக்குப் புலிகளிடமிருந்தும் கிழக்கை விடுவிக்கப் புறப்பட்ட விடிவெள்ளி, கிழக்குப் பிஞ்சுகளின் கையில் கையிலும் கொள்ளிக்கட்டையைக் கொடுத்ததேனோ?

இங்குதான் கருணா அரசியல் ரீதியாக அம்பலப்படுகின்றார். கருணாவின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்து புலிகளின் தலைமை அவருக்கெதிராக திரும்பத் தொடங்கிய போதுதான் கிழக்கு பற்றிய அவரது அக்கறை விழித்துக்கொள்கிறது.

அத்துடன் விடுதலைப் புலிகளின் தலைமையுடன் முரண்பட்டுக் கொண்டு தான் அதுவரை காலமும் அனுபவித்துவந்த உயர்நிலையை அனுபவிக்க முடியாது என்று வந்த போது இலங்கை அரசு கருணா என்ற தனிமனிதனுக்கு வழங்க முன்வந்த வசதிகளும் பாதுகாப்பும் சுகபோகமும் முக்கியமானதில் வியப்பேதுமில்லை. கருணா விரும்பினால் அவரிடம் இருக்கும் பணத்துடன் வெளிநாடொன்றுக்குப் போக முடியும் எனப் புலிகள் கூறியிருந்த போதும் அந்தத் தெரிவு ஒரு போதும் தனது உயிருக்கு உத்தரவாதத்தை வழங்காது என்பதையும் அவர் அறிந்தே இருந்தார்.

Karuna%20dance.jpg

ஆகத் தமிழ்த்தேசியவிடுதலைப் போராட்டமென்ற தளத்தில் நிலவிய பிரதேசவாதம் என்னும் பேயை விரட்ட ஒரு வேப்பமிலையைக்கூட எடுக்காத கருணா, புலிகள் கிழக்குமாகாணத்தின் போராளிகள் உற்பத்தித்தொழிற்சாலையின் கணக்கு வழக்குகளையும் நடைமுறைகளையும் கேட்ட போது பிரதேச வாதமென்ற ஒரு சொல்லையே பதிலாக எழுதிக்கொடுத்தது எடுபடவில்லை.

இந்தக் கட்டத்தில் கருணாவின் வெளியேற்றத்தை ஈழ விடுதலைப் போராட்டத்தின் மறுமலர்ச்சி, கிழக்கில் ஏற்பட்ட உதயம் என்றெல்லாம் வாயார வாழ்த்தி அதனை நியாயப்படுத்திப் போற்றித் துதித்த கிழக்கின் புத்திஜீவிகள், சமூகப் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் யாவரும் மௌனித்துப்போயினர்.

கருணா அணியினர் கிழக்கில் செய்த அடாவடித்தனங்களைப் பார்த்த அதிர்ச்சியில் அவர்கள் வாயைமுடிக் கொண்டனர். இதனைவிடப் புலிகளின் தலைமையின் கீழேயே இருந்திருக்கலாம் என்றும் குறைந்தபட்சம் அரச படைகளின் அடாவடித் தனங்களில் இருந்தாவது புலிகள் தம்மைக் காத்திருப்பார்கள் என்ற எண்ண அலை கூட அன்று அவர்களிடம் ஏற்பட்டிருந்தது.

கருணாவினுடைய பிளவு மட்டுமல்ல அதற்கு முன்னர் நிக‌ழந்த தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்தின் உட்பிளவுகள் பலவற்றையும் அவதானிக்கும் போது தமிழ்த்தேசியவிடுதலைப் போராட்டத்தில் நிகழ்ந்த அடிப்படையான தவறு புலப்படுகிற‌து.

விடுதலைப் புலிகளுடன் முரண்பட்ட எவருக்கும் மரணம் அல்லது இலங்கை அரசுடன் சேர்வதென்ற தெரிவே இருந்தது இது விடுதலைப்புலிகள் விட்ட‌ பாரதூரமான தவறாகும்.

மாற்றுக் கருத்துக்களுடன் உயிர் வாழவதற்கான உரிமையை மறுத்திருந்தமை தமிழ்தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு அளவுகடந்த எதிரிகளை உருவாக்கிவிட்டிருந்தது. இந்தத் தூர நோக்கற்ற நடத்தையினால் வெற்று இராணுவக் கண்ணோட்டத்தினால் எதிரியின் ராணுவமே பயன்களைப்பெற்றுக் கொண்டது நான்காவது ஈழப்போரில் நிதர்சனமானது....

இது பற்றி அடுத்த தொடரில்...

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/74191/language/ta-IN/-------8.aspx#.T02kw98-Jj4.facebook

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

அன்றைய காலப்பகுதியில் சூரியனின் செய்தியாளர்கள் செய்தி ஆசிரியர்கள் மற்றும் எம்மோடு இணைந்திருந்த மக்கள் என அனைவரது உழைப்பாலும் உருவாகியிருந்த ஒரு வலையமைப்பாலேயே அது சாத்தியமாகியிருந்தது. .

அடிடா சக்கை என்றானாம்....உங்களுக்கு உளவு பார்த்து செய்தி சொன்னால் அவர்கள் மக்கள் போராளி ...மக்களின்ட தலையில மிளகாய் அரைக்கிறது என்றே 1977 இருந்தே தொடங்கிட்டியள் போல அரையுங்கோ.......

பரபரப்பு ரிஷி புலிகளின் திறமையை மிகைப்படுத்தி எழுதி எம்மை முட்டாள் ஆக்கினார்

இவர் புலிகளின் குறைகளை மிகைப்படுத்தி எழுதி எம்மை முட்டாள் ஆக்குகிறார்

Link to comment
Share on other sites

தொடருங்கள் குருபரன்.

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் வாசிக்க வேண்டிய பதிவுகள் இவை .(வாலுகளை விட்டுவிடுவோம்.அவர்கள் ஒரு போதும் மக்களை பற்றி சிந்தித்ததே இல்லை )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருபர‌ன் உண்மையை எழுதுகிறாரோ,இல்லையோ அவருக்கு சிவராம் மீது கோபம் இருக்குது என்று மட்டும் தெரியுது

Link to comment
Share on other sites

குருபர‌ன் உண்மையை எழுதுகிறாரோ,இல்லையோ அவருக்கு சிவராம் மீது கோபம் இருக்குது என்று மட்டும் தெரியுது

ஏன் தோற்றோம் என்ற ஆதங்கம் தான் எல்லார் மனதிலும்.பிழை சரி விளங்கினாலும் சுத்துமாத்து விளங்காமல் போய் விட்டது .

Link to comment
Share on other sites

குருபர‌ன் உண்மையை எழுதுகிறாரோ,இல்லையோ அவருக்கு சிவராம் மீது கோபம் இருக்குது என்று மட்டும் தெரியுது

குருபரனின் கட்டுரைக்கு முன்னமே( ஏன் கருணா பிரிந்து கொஞ்ச காலத்தில்) சிவராமும் கருணா விடயத்தில் டபில் கேம் விளையாடி இருக்கார் என்று கேள்விப்பாடு இருக்கேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவராம் பிழை விடவில்லை என நான் சொல்லவில்லை அது பற்றி நான் கூட யாழில் எழுதியிருக்கேன் ஆனால் தனிய சிவராமில் மட்டும் பிழையை போட்டு விட்டு[அவர் உயிரோடு இல்லை தன் பக்க நியாயத்தை சொல்வதற்கு] தான் நல்லவன் மாதிரி வந்து எப்படி குருபரனால் எழுத முடிகிறது?...தான் செய்ததையும் எழுதியிருந்தால் தொடர் நடுநிலையாக இருந்திருக்கும்...செய்த பிழைக்கு பிராய சித்தம் செய்வது போலவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

சிவராம் பிழை விடவில்லை என நான் சொல்லவில்லை அது பற்றி நான் கூட யாழில் எழுதியிருக்கேன் ஆனால் தனிய சிவராமில் மட்டும் பிழையை போட்டு விட்டு[அவர் உயிரோடு இல்லை தன் பக்க நியாயத்தை சொல்வதற்கு] தான் நல்லவன் மாதிரி வந்து எப்படி குருபரனால் எழுத முடிகிறது?...தான் செய்ததையும் எழுதியிருந்தால் தொடர் நடுநிலையாக இருந்திருக்கும்...செய்த பிழைக்கு பிராய சித்தம் செய்வது போலவும் இருக்கும்.

இருக்கலாம்,

Link to comment
Share on other sites

  • 1 month later...

புலிகள் தம்மை அழித்துக் கொண்டிருக்க சிங்கங்கள் ஒன்றாகி முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நிகழ்த்த தயாராகின

08 ஏப்ரல் 2012

மௌனம் கலைகிறது

மாற்றுக் கருத்துக்களுடன் உயிர் வாழவதற்கான உரிமையை மறுத்திருந்தமை தமிழ்தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு அளவுகடந்த எதிரிகளை உருவாக்கிவிட்டிருந்தது. இந்தத் தூர நோக்கற்ற நடத்தையினால் - வெற்றுஇராணுவக் கண்ணோட்டத்தினால் எதிரியின் ராணுவமே பயன்களைப்பெற்றுக் கொண்டமை நான்காவது ஈழப்போரில் நிதர்சனமானது என எனது எட்டாவது தொடரிற் குறிப்பிட்டிருந்தேன்.

விடுதலைப்புலிகள் மாற்று இயக்கங்களைத் தடை செய்து அவர்களுட் பலரைக் கொன்றொழித்த போது அதனைத் துரோகிகளை அழிக்கும் ஒருநடவடிக்கையாகவே தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரப்படுத்தினர். புலிகளால் அழிக்கப்பட்ட இயக்கங்கள் உண்மையான விடுதலைக்கு போராடவில்லை எனவும் விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழ்மக்களின் விடுதலைக்காகப் போராடும் அமைப்பு என்ற விம்பமும் ஏற்படுத்தப்பட்டது. எனவே இயக்கங்களுக்கு இடையேயான முரண்பாடுகளில் விடுதலைப் புலிகள் எதேச்சாதிகாரத்துடன் நடந்து கொண்ட போது பெரும்பான்மையான தமிழர்கள் அமைதியாகவே அதற்குத் துணைபோனார்க

விடுதலை இயக்கங்களின் வளர்ச்சி காரணமாகவும் புலிகளின் பரவலான தாக்குதல்கள் காரணமாகவும் இலங்கை இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்படத் தொடங்கியிருந்த காலத்தில் விடுதலைப்புலிகள் மற்ற இயக்கங்களை அழித்து எடுத்துக்கொண்ட முன்னிலை தமிழ் இளைஞர்கள் மத்தியில் அரசியல் அடிப்படையில்லாத ஆயுத கலாசாரத்தை வீரபுருச வழிபாட்டை ஒரு இயக்கம் ஒரு தலைவன் என்கிற கோட்பாட்டை தமிழ் சமூகத்துள் வித்திடுவதற்கான அடித்தளத்தை வழங்கியது. இலங்கை இராணுவத்திடமிருந்து தமிழர்களைக் காப்பவர்களாக விடுதலைப் புலிகள் மட்டுமே இருக்கிற சூழ்நிலை ஏற்பட்டபோது புலிகளுடன் முரண்படுபவர்களை துரோகிகளாக தமிழீழ விடுதலைக்கு எதிரானவர்களாக காட்டக்கூடிய சூழ்நிலை மிக விரைவாகவே ஏற்பட்டு விட்டது.

மற்றைய இயக்கங்களில் இருந்தவர்களை விடுதலைப் புலிகளை விமர்சித்தவர்களை ஏன் மாத்தையாவைக்கூட இந்தத் துரோகிப்பட்டியலுக்குள் அடக்கி விடுதலைப் புலிகளால் இலகுவாக அழிக்க முடிந்த போதும் கருணாவுடனான முரண்பாட்டை மட்டும் புலிகளால் சந்தடியில்லாமல் இலகுவாகக் கையாள முடியவில்லை. இதற்குப் பலகாரணங்கள் உள்ளன. கருணா தமிழீழ விடுதலைப் புலிகளின் நேரடி இராணுவ வளையத்துக்குள் குறிப்பாக வன்னி பெருநிலப் பரப்பின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனக்கென ஒரு தளத்தைக் கிழக்கில் கொண்டிருந்தார். கருணாவினால் பயிற்றுவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகள் விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் அவர்களுக்கு விசுவாசமாகச் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்த போதும் கருணாவின் நேரடி ஆளுகையின் கீழேயே இருந்தனர். இதுமட்டுமன்றிக் கருணா விடுதலைப் புலிகளுள் நிலவிய பிரதேசவாத்தின் காரணமாகவே புலிகளில் இருந்து பிரிந்தார் என்கிற அரசியற் தோற்றத்தை ஏற்படுத்துவதற்குக் கிழக்கின் புத்திசீவிகளும் உதவியிருந்தனர். மேலும் கருணாவின் பிளவு நிகழ்ந்த நேரம் உலகத்தின் கவனமும் அன்று நிகழ்ந்து வந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் காரணமாக இந்த முரண்பாட்டை நோக்கியும் திரும்பியிருந்தது.

LTTE%20CLASH.jpg[

ஆயினும் புலிகள் வழமைபோலவே அரசியல் விளைவுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமின்றிக் கருணா தரப்பையும் அவர்களது ஆதரவாளர்களையும் தேடி அழிப்பதில் முனைப்புக்காட்டியதுடன் அதற்காகாத் தமது பெருமளவு சக்தியையும் செலவிட்டனர். பதிலுக்கு கருணா தரப்பும் புலிகளையும் அவர்களது ஆதரவுத்தரப்பையும் குறிவைத்துப் பழிதீர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடத்தொடங்கியது.

தாங்கள் என்ன விதமான அரசியற் சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதையிட்டு அன்றைக்கு விடுதலைப்புலிகளின் தலைமை நிதானமுடன் சிந்தித்திருக்குமேயானால் பிற்பாடு முள்ளி வாய்க்காலில் மக்களையும் தமது ”மண்ணின் விடுதலையை” மட்டுமே சிந்தித்த பல ஆயிரம் போராளிகளையும் காவு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. கருணாவினது பிளவை அரசியல்ரீதியாகவும் இராசதந்திரரீதியாகவும் எதிர்கொள்வதை புலிகளின் இராணுவவழிப்பட்ட சிந்தனை தடுத்திருந்தது. முரண்பாடுகளுக்கு எப்பொழுது ஆயுதங்களினாலேயே தீர்வைக்கண்டு வந்த கலாசாரத்தின் வன்மப்பிடியுள் புலிகள் மீளமுடியாதபடி சிக்கியிருந்தனர்.

இலங்கை இராணுவமும் சர்வதேசமும் சேர்ந்து தம்மைச் சூழ ஒரு பயங்கரமான இராணுவப் பொறியை உருவாக்கி வருவதை அறியாமல் புலிகள் கருணாகுழுவை வேட்டையாடுவதில் முனைந்து கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்த போது புலிகளால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட கடும்புலி எதிர்ப்பாளர்களையும் உள்ளடக்கிய ஆழ ஊடுருவும் படையணிகளையும் உளவாளிகளையும் பயிற்சியளித்து இலங்கை இராணுவம் வன்னிக்குள் அனுப்பிக்கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து பின்னர்வரும் தொடர்களில் விலாவாரியாக பார்ப்போம்.

இந்த சந்தர்ப்பத்தில் புலிகள் கருணா பிளவின் பின் நிகழ்ந்த உயிர்ப்பலிகள் அவற்றின் பின்னணிகள் அவற்றின் அரசியற்பரிமாணங்கள் குறித்தும் ஆராயவேண்டும்.

Rajan%20Sathyamoorthy.jpg[

ராஜன் சத்தியமூர்த்தியின் மரண வீடு[

இதில் 2004 பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் இணைக்கப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தி கருணாவின் நெருங்கிய ஆதரவாளர் என்பதனால் 2004 மார்ச் 30ஆம் திகதி விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் இவரது உறவினர் கந்தன் கனகசபை என்பவரும் கொல்லப்பட்டதோடு கனகசபை பாபு என்பவர் கடும் காயங்களுடன் உயிர் தப்பினார். இங்கே கவனிக்க வேண்டிய விடையம் என்னவெனில் கருணா புலிகளுடன் இருந்தபோது புலிகளின் முழுச் சம்மதத்தோடேயே 2004 ம் ஆண்டு நிகழவிருந்த பொதுத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் ராஜன் சத்தியமூர்த்தி வேட்பாளராகச் சேர்க்கப்பட்டார். ஆனால் கருணா புலிகளில் இருந்து நிரந்தரமாகப் பிரிந்ததும் திரு ராஜன் சத்தியமூர்த்தி அவர்களை அவர் கருணாவின் ஆதரவாளர் என்பதற்காகப் புலிகள் சுட்டுக் கொன்றனர். தேர்தல் முறை சனநாயகத்தில் பங்கு கொள்வதற்கெனத் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை- தாங்களே தெரிவுசெய்த ஒருவரைப் புலிகள் சுட்டுக்கொன்றமை தேர்தல் வன்முறையாகவும் யுத்தநிறுத்த மீறலாகவும் பதிவுசெய்யப்பட்டது.

Sivageetha.jpg

சிவகீதா பிரபாகரன்

இதுமட்டுமல்ல இச்சம்பவம் வேண்டப்படாத இன்னொரு விளைவையும் ஏற்படுத்தியது. புலிகளின் இச்சிந்தனையற்ற வன்முறையின் காரணமாகச் சத்தியமூர்த்தி குடும்பம் புலிகளின் நிரந்தர எதிரியானது மட்டுமல்ல ராஜன் சத்தியமூர்த்தியின் மகளான சிவகீதா பிரபாகரன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அங்கத்துவத்தைப்பெற்று மட்டக்களப்பு மாவட்ட முதல்வராகி அரச ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டமையும் காண நேர்ந்தது.

இந்த சம்பவத்தை நேரில் விசாரிக்க European Union Election Observation Mission (EU EOM) Chief Observer Mr.John Cushnahan உடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான விசேட குழுவின் தலைவர் (European Union (EU) Sri Lankan delegation head) Mr.Wouter Wilton னும் மட்டக்களப்பிற்கு சென்றிருந்தனர்.

புலிகளின் இந்த அல்லது இத்தகைய நடவடிக்கைகள் பின்னர் சமாதானப் பேச்சுக்களின்போது தமிழர்களுக்கு எதிராக எவ்வாறு பாவிக்கப்பட்டன விடுதலைப்புலிகளின் அரசியல் முகத்திற்கு அதன்வழி தமிழர்களின் அரசியல் நியாயங்களுக்கு எத்தகைய எத்தகைய பாதிப்புக்களை அல்லது தாக்கங்களைக் கொண்டு வந்தனவென்பதைப் பின்னர் பார்க்கலாம்.

2004ம் ஆண்டுத் தேர்தலில் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிட்ட ஓய்வுபெற்ற மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளரான கிங்ஸ்லி ராஜநாயகம் 2004 ஒக்டோபர் 19ஆம் திகதி புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்கழப்பு மாவட்ட இணைப்பாளராக இருந்த இவர் புலிகளின் வற்புறுத்தலிலேயே தேர்தலில் போட்டியிட்டிருந்தார். இவர் புலிகளுக்காகத் தனது தனிப்பட்ட நலன்கள் பலவற்றை இழந்தவர். ஆயினும் தேர்தலில் வெற்றி பெற்ற பின் கருணாவின் ஆதரவாளர் என முத்திரை குற்றப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப் பிரமாணம் எடுக்காமல் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு பதவியை ராஜினாமாச் செய்வதாகக் கடிதம் கொடுக்கும்படி புலிகளால் நிர்பந்திக்கப்படார். இந்தக் கடிதத்தை கௌசல்யனே நிர்ப்பந்தித்துப் பெற்றுக் கொண்டதாக பின்னர் அறிந்தேன்.

வன்னியில் நிகழ்ந்த ஒரு ஊடகச் சந்திப்புக்காக சென்றிருந்த வேளையில் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனின் அலுவலகத்தில் திரு கிங்ஸ்லி ராஜநாயகம் தனது மனைவி மற்றும் மகள் மற்றும் அவரது உறவினர்கள் சிலருடன் ஒரு ஓரத்தில் வேண்டத் தகாதவர்களாகக் காத்திருந்தனர்.

அவர் யார் எனத் தெரியாத போதும் தயா மாஸ்ரர் இவர்தான் கிங்ஸ்லி ராஜநாயகம் எனக் காட்டியது இப்போது ஞாபகம் வருகிறது.

புலிகளின் தலைமையுடன், தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு அந்தச்சந்தர்ப்பத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்க தேர்தலில் வெற்றி பெற்ற கிங்ஸ்லி ராஜநாயகம் புலிகளின் அரசியற் துறை அலுவலகத்தில் ஒரு ஓரத்தில் காத்திருந்தார்.ஆனால் பா. அரியநேந்திரன் சந்திப்புக்கு அழைக்கப்பட்டார். இதற்கு இன்னுமொரு காரணமும் அப்பொழுது புலிகளால் முன்வைக்கப்பட்டது. வன்னித் தரப்பிற்கு ஆதரவாக இருந்த அரியநேந்திரனை தோலிவியுறுச் செய்து கிங்ஸ்லி ராஜநாயகத்தை கருணா தரப்பினர் செயற்கையாக வெல்ல வைத்தனர் என்பதே அது. இந்த நிலையில் வற்புறுத்திக் கடிதத்தை வாங்கிய பின்பும் கூட புலிகள் அவரைச் சுட்டுக் கொன்றனர். இது குறித்து இவரது மரண வீட்டில் இவரது மகள் "நீங்களே பட்டியலில் இணைத்து பின்னர் நீங்களே ராஜினாமாச் செய்யச் சொல்லி பின்னர் நீங்களே கொன்றும் விட்டீர்களே” என வேதனையையுடன் கதறியதாக என் மட்டுநகர் நண்பர் சொன்னதும் இப்பொழுது ஞாபகம் வருகிறது. இதுவும் சமாதான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலை என்பதனால் யுத்த நிறுத்த மீறலாகக் கொள்ளப்பட்டது. (அடிக்குறிப்பு 1)

Thambaiya.jpg[

தம்பையாவின் மரண வீடு

புலிகள் கருணாவின் ஆதரவாளர்களையும் அவரின் போரணிகளையும் இலக்கு வைக்க தானும் புலிகளின் குணாம்சத்தில் இருந்து எள்ளளவும் மாறுபடாதவர் என்பதை நிரூபிக்க கருணாவும் தயாரானார். இதன் பெறுபேறாக வவுனியா ஓமந்தையைப் பிறப்பிடமாகக் கொண்ட பொருளியல் விரிவுரையாளர் தம்பையா 2004 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி மட்டக்களப்பில் அவரது வீட்டில் வைத்துக் கருணாதரப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தம்பையாவை வன்னிப்புலிகளுக்கு ஆதரவானவர் என்ற குற்றச்சாட்டில் கருணாதரப்பினர் சுட்டுக் கொன்ற போது கருணாவை ஆதரித்த கிழக்குப் பல்கலைக்கழக புத்திசீவிகள் எந்தவித எதிர்ப்பையும் காட்டாது மௌனம் காத்தனர் இந்தச்செயலுக்கு இப்போது கிழக்குப்பல்கலைக்கழகத்தில் முக்கிய பதவியில் இருப்பவர் ஒருவர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளிநாடு சென்ற ஒருவர் மற்றும் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் தப்பிய இன்னுமொருவர் என சிலர் துணைபுரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

2004 மே 31 அன்று மட்டக்களப்பு நகரில் தனது வேலைக்கு செல்லும் வழியில் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான ஐயாத்துரை நடேசன் என்பவரையும் கருணா தரப்பினர் பலியெடுத்தனர். இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்று அரை மணிநேரத்தில் சூரியனில் அதுபற்றி அறிவித்தோம். அப்போது எமது மட்டக்களப்பு நிருபராக இருந்த திரு துரைரத்தினம் அவர்களுக்குக் கூடத் தனது நண்பர் சுடப்பட்டது தெரியாது. நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு துயரமான சம்பவம் இடம்பெற்று விட்டது உடனேயே குறித்த இடத்திற்கு செல்லுங்கள் என வேண்டினேன். அதன்பின்னரே அவர் முதலில் அவ்விடத்தை அடைந்து நேரடி ஒலிபரப்பை வானொலிக்குத் தந்தார். இவ்வாறான எமது உடனடிச் செய்திவழங்கலை இட்டு இலங்கை இராணுவப்பிரிவும் கடும் கடுப்பைக்கொண்டிருந்தது. புளொட் மோகன் சுட்டுக்கொல்லப்பட்டதையறிந்து நான் பம்பலப்பிட்டியியில் அந்த இடத்திற்குச்சென்றபோது இராணுவப் புலனாய்வாளர் ஒருவர் “ சுடுகிறவர்கள் சுடுவதற்கு முன் சூரியனுக்கு சொல்லி விட்டா சுடுகிறார்கள் எனக் கடுமையான தொனியில் கேட்டார். உண்மையிலும் இந்த வகையான செய்திவழங்கல் என்பது எமது வானொலி செய்திப் பிரிவு மக்களிடமும் பல்வேறு தரப்பினரிடமும் கொண்டிருந்த தொடர்பாடற் பலம் காரணமாகவே சாத்தியமானது.

Nadesan_2.jpg

ஐயாத்துரை நடேசனின் மரண வீடு

ஐயாத்துரை நடேசனின் கொலையில் அந்நாளில் கருணாவின் அம்பாறை மாவட்டத்தளபதியாக இருந்தவரும் இன்னாளில் “அதி உத்தம ஜனாதிபதி” மகிந்த ராஜபக்ஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராகவும் இருக்கும் இனியபாரதியே நேரடியாகப் பங்கு கொண்டிருந்தார். இந்தப் பலி எடுப்பிற்கு கருணாதரப்புக் கூறிய காரணமும் நடேசன் வன்னிப்புலிகளுக்கு ஆதரவானவர் என்பதாகும்.

இவ்வாறு கருணாவின் பிளவோடு வாகரையில் தொடங்கி கிழக்கில் பரவிய மோதல் கொழும்பிற்கும் வந்து தொலைத்தது. [

குகனேசன், கேசவன், காஸ்ரோ. TMVP[/background

Karuna%20Grouo%202.jpgKaruna%20Grouo%205.jpgKaruna%20Grouo%204.jpg

2004 யூலை 25ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை என நினைக்கிறேன் அதிகாலை 4.15ற்கும் 4.30ற்கும் இடையில் நான் தூக்கத்தில் இருந்த போது எனது கையடக்கத் தொலைபேசி அலறியது. அதனை எடுத்த போது “அண்ணன் கொழும்பில் ஏதாவது பிரச்சனை நடந்ததா” என மறு முனையில் பேசியவர் கேட்டார். “இல்லை தம்பி இப்போ அதிகாலைதானே ஏதாவது நடந்திருந்தால் இனிமேல்தான் தகவல்கள் வரும் எனக் கூறினேன்.

“இல்லை அண்ணன் ஒரு சூட்டிங்கேஸ் ஒண்டு நடந்திருக்கு ஒருக்கா செக் பண்ணிப் பாருங்கோ” எனச் சொல்லி விட்டு அவர் தொடர்பைத் துண்டித்தார

சரி எனக்கூறிவிட்டுத் தூங்கி விட்டேன். சிறிது நேரத்தின் பின் திரும்பவும் அவரே தொலைபேசியில் தொடர்புகொண்டார். “அண்ணன் ஏதாவது தகவல் அறிந்தீர்களா” “இல்லைத் தம்பி எமது செய்திப்பிரிவில் பணிபுரிபவர்கள் காலை ஐந்து மணிக்குத்தான் வருவார்கள் அவர்கள் வந்தவுடன் இது பற்றி விசாரிக்கும்படி சொல்கிறேன். அவ்வாறு நடந்திருக்கும் பட்சத்தில் எமது காலை 6.45 செய்தியில் அது ஒலிபரப்பப்படும்” எனக் கூறினேன்.

சரி அண்ணன் ஆனால் கொழும்புக்குக் கிட்டவாக ஒரு சம்பவம் நடந்திருக்கு உங்கள் செய்தியாளர்கள் மூலம் கேட்டு உறுதிப்படுத்திக் கெதியா பிறேக்கிங் நியூசில் சொல்லுங்கோ எனக் கூறி தொலைபேசியை உரையாடலைத் துண்டித்தார். அந்த அனாமதேய அழைப்பாளரின் விடாப்பிடியான தொல்லைகாரணமாகச் சரி என்னதான் நடந்தது என விசாரிக்கலாம் எனத் தீர்மானித்து காலை 5.10 அளவில் எமது செய்திப்பிரிவிற்கு தொலைபேசி எடுத்து காலைநேரச் செய்தி ஆசிரியரிடம் கொழும்பிற்கு வெளியில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக அனாமதேயத் தகவல் ஒன்று வந்துள்ளது. பொலிசாருக்கு போன் செய்து விசாரியுங்கள் எனக் கூறியதுடன் சிங்கள மொழிச் செய்தி ஆசிரியருக்கும் தகவலைத் தெரிவித்தேன். அவர்கள் தொடர்பு கொண்டு விசாரித்து அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனத்தெரிவித்தனர்

மீண்டும் காலை 6 மணிக்கு அதிகாலை தொடர்புகொண்ட அதே நபர் தொடர்புகொண்டார்: “அண்ணன் ஏதாவது செய்தி வந்ததா” “இல்லைத் தம்பி எமது காலைநேரச் செய்திப்பிரிவு பொலீஸ், குற்றத்தடுப்புபிரிவினர் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் என யாவரையும் அதிகாலையில் தொடர்புகொண்டு விசாரிப்பது வழமை. இன்றும் அவ்வாறு விசாரித்தபோது நீங்கள் குறிப்பிடும்படியான சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்த்தாகத் தெரியவில்லை”

“இல்லை அண்ணன் கொட்டாவவில் கருணா குறுப்பை சுட்டுப் போட்டாங்களாம் பாருங்கள் விசாரியுங்கள்” எனக் கூறித் தொலைபேசியை துண்டித்தா

Karuna%20Grouo%206.jpg

கருணா அணியினர் தங்கியிருந்த கொட்டாவ வீடு

மீண்டும் எமது செய்தி அலுவலகத்தினூடாகப் பொலிசாரை அணுகி விசாரித்த போதும் திரும்பவும் பொலிசார் அவ்வாறு எதுவுமே நடக்கவில்லை என மறுத்திருந்தனர். ஆனால் அந்த அனாமதேயத் தொலைபேசி நபரோ என்னை விடுவதாய் இல்லை. மீண்டும் எடுத்தார்

“என்ன அண்ணன் ஒன்றும் வரவில்லையா” என்றார் “இல்லை” என்றேன்.

“சரி அண்ணன் என்ன எங்கை நடந்தது என விளக்கமாகச் சொல்லுறன் எழுதுங்கள்” என்றார்.

மகரகம கொட்டாவ சந்தியில் இருந்து உட்புறமாக செல்லும்போது வரும் சனசந்தடியில்லாத ஒரு கிராமத்தில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றினுள் கருணா தரப்பைச் சேர்ந்த எட்டு பேர் வரை சுடப்பட்டுள்ளார்கள். இனி விசாரித்து பாருங்கள். சிவராம் அண்ணனுக்கும் இது பற்றிச் சொல்லி இருக்கிறோம், அவரிடம் வேண்டுமானால் கேட்டு உறுதிப் படுத்துங்கள் என்றார்

சற்று நேரத்தில் சிவராமே என் கையடக்கத் தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டார். “இப்படிச் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது கேள்விப்பட்டாயா?” என்றார் .

ஆம் ஆனால் பொலிசாரோ குற்றத்தடுப்புபிரிவினரோ வைத்தியசாலையோ இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தாத படியினால் இதனைச் செய்தியாகப் போட முடியாது எனவும் சொன்னேன்.

என்னடாப்பா சம்பவம் உண்மை என்றால் அதனை நாமாக உறுதிப்படுத்தினால் செய்திப் பிரிவின் பொறுப்பாளர் என்ற வகையில் நீ அதனைச் செய்தியாக வெளியிடலாமல்லவா என்றார்.

“இல்லை எங்காவது குற்றச்சம்பவங்கள் விபத்துக்கள், மோதல்கள், உயிரிழப்புகள் போன்ற விடையங்கள் இடம்பெற்றால் எமது செய்தியாளர்கள் அதனை உறுதிப்படுத்திச் செய்தி அனுப்ப வேண்டும். அல்லது அரசாங்க நிறுவனங்கள், காவற்துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு, அல்லது வைத்தியசாலை என ஏதாவதொன்று அவற்றை உறுதிப்படுத்த வேண்டும் இல்லாவிடில் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தனிப்பட்ட வகையில் நானே பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினேன்.

அத்துடன் உரையாடலை நிறுத்தி மீண்டும் வருகிறேன் எனக் கூறிச் சிவராம் தொடர்பைத் துண்டித்தார். இதற்கிடையில் அன்று காலை சற்று முன்னதாகவே நானும் அலுவலகம் சென்று விட்டேன். மீண்டும் அந்த அனாமதேய நபர் தொடர்புகொண்டு “என்ன அண்ணன் இன்னுமா சம்பவத்தை அறிய முடியவில்லை உங்கள் காலைச் செய்தியில் அதனை கேட்கலாம் என காத்திருந்தோம். சரி மேலும் விபரங்களைச் சொல்கிறேன் இதன்மூலமாவது உண்மையை அறிந்து விரைவில் வானொலியில் கூறுங்கள். சிவராம் அண்ணன் உறுதிப்படுத்தியும் நீங்கள் செய்தியைப் போடமறுப்பதேன்” எனக்கேட்டு என்னில் வெறுப்படைந்து தொடர்பைத் துண்டித்தார்.

மீண்டும் சிவராம் அழைப்பில் வந்தார் “என்னடாப்பா இவங்களுடைய தொல்லை தாங்க முடியவில்லை. சம்பவம் நடந்தது உண்மை. கெதியாக உறுதிப்படுத்திப் போடமுடியாதா” எனக் கேட்டார் நான் சொன்னேன் “சிவராம் சம்பவம் உண்மையானால் நீங்கள் தமிழ்நெற்றில் போடுங்கள் அதனை கோடிட்டு நான் வானொலியில் சொல்கிறேன் பிரச்சனை இலகுவாக முடியும் என்றேன். சரி பார்ப்போம் என கூறிய சிவராம் சற்று நேரத்தில் தமிழ்நெற்றில் புலிகளை ஆதாரம் காட்டி அதனைச் செய்தியாக பிரசுரித்தார். அதன் பின் செய்தி பரபரப்பாகி பொலிசாரும் சம்பவம் நடந்த இடத்தைச் தேடிச் சென்று அதனை உறுதிப்படுத்தினர்.

எனினும் பாதுகாப்புத்தரப்பிற்கோ பொலிசுக்கோ தகவல் தெரிவதற்கு முன்பாகவே தமிழ்நெற்றிற்கு எவ்வாறு செய்தி கிடைத்தது என்பது குறித்து பின்னர் இலங்கைப் புலனாய்வுப்பிரிவு விசாரணைகளை முடுக்கி விட்டதாக ஞாபகம். ஆனால் இது பற்றி சிவராமிடமும் புலனாய்வுப்பிரிவு விசாரித்ததா? என்பது பற்றித் தெரியவில்லை. ]

இந்த நிலையில் பொலிசார் அவ்விடம் செல்வதற்கு முன்பே தமிழ் நெற்றில் வந்த செய்தி பரவியதால் பல ஊடகங்களும் கொட்டாவ்வில் அமைந்திருந்த அந்த வீட்டைத் தேடி சென்றன. கூடவே நானும் சிங்களப் பிரிவின் செய்தி ஆசிரியர் ஒருவரும் அந்த இடத்தை தேடிச் சென்றடைந்தோம்.

அப்பிரதேசத்தின் காவற்துறை அலுவலகத்தினரின் கண்காணிப்புக்குக் கூட அகப்படாதபடிக்கு அந்த வீடு அமைந்திருந்தது அதிர்ச்சியாகவிருந்தது. யாருடைய பார்வையும் படாதபடிக்கு சுற்றிவரச் செடி கொடிகள் படர்ந்திருக்க நடுவே ஒரு அழகான மாடிவீடு. தளப்பகுதியில் ஒரு ஆடம்பரக்கார் நின்றிருந்தது. வீட்டின் சுற்றயலில் அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் குழுமி இருந்தார்கள். ஊடகவியலாளர்களும் மக்களும் அவ்விடத்தை அடைந்த பின்புதான் பொலிசாரும் அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் அவ்விடத்தை வந்தடைந்திருந்தனர். இவர்கள் வருவதற்கு முன்பேயே நாங்கள் அங்குசென்று விட்டதனால் வீட்டினுள்ளே சென்று மாடியில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்த அனைவரையும் காணக் கூடியதாக இருந்தது.

Karuna%20Grouo%203.jpg

மேல் மாடியின் நடுவறையில் வாட்டசாட்டமான நான்கு மனித உடல்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தன. அருகாமையில் உள்ள கொரிடோரில் ஒருவுடலும் மற்றொரு அறையில் இரு உடல்களும் மாடிப்படிக்கு அண்மையில் இன்னுமொரு உடலுமாக எட்டு உடல்கள் இரத்தவெள்ளத்தில் கிடந்தன. கொல்லப்பட்டவர்களுள் மூவர் 17ற்கும் 19ற்கும் இடைப்பட்ட வயதினராக இருக்க வேண்டும் காரணம் அவர்கள் முகத்தோற்றத்திலும் சிறியவர்களாக இருந்தனர். மேல் மாடியில் நடு அறையில் கிடந்த நால்வரில் ஒருவர் கருணாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் எனக் கருதப்பட்டவரும் அவரது நிதிப் பொறுப்பாளராக இருந்தவருமான குகனேசன் ஆவார். மற்றய இருவரில் ஒருவர் கருணாவின் அரசியல் பிரிவைச்சேர்ந்த கேசவன், மற்றவர் தாக்குதல் பிரிவைச்சேர்ந்த காஸ்ரோ. நான்காமவர் இலங்கை இராணுவப்புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்த்தர்.

ஏனைய அறையில் இருந்த இருவரும் ரூபன், அற்பரன் எனவும் மற்றும் கொரிடோரிலும் படிக்கு அருகாமையிலும் இருந்தவர்கள் விக்கி, விமலகாந் எனவும் பிற்பாடு அடையாளம் காணப்பட்டார்கள்.

Karuna%20Grouo%201.jpg

கொல்லப்பட்டவர்களிற் சிலரின் தலையணைகளுக்கு அருகில் சிறிய வாக்மன் றேடியோக்கள் இயங்கிக்கொண்டிருந்தன. சூரியன் வானொலியே அதில் ஒலித்துக்கொண்டிருந்தது. அவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான செய்தி சூரியனில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது இவர்களின் உடல்களுக்கு அருகிலிருந்த வானொலிகளிலும் அது ஒலித்துக்கொண்டிருந்தது.

இதனை விட இவர்களின் படுக்கை அறைகளில் ஆயிரக்கணக்கான கையடக்கத் தொலைபேசிகளுக்குரிய சிம் அட்டைகளும் அவற்றிற்கு பணம் ஏற்றும் பணஅட்டைகளும் காணப்பட்டன.

இவ்வாறு நாம் அங்குள்ள நிலமைகளைப் பார்வையிட்டுச் செய்திகளை சேகரித்துக்கொண்டிருந்த வேளையில் அங்கு வந்து குவிந்த பாதுகாப்புப்படையினர் எம்மை வீட்டிற்கு வெளியில் அனுப்பி விட்டனர். காரணம் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டிருருந்த எட்டாவது நபர் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரியாவார். அவரது கட்டுப்பாட்டிலேயே கருணா குழுவின் இந்த முக்கியஸ்த்தர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த விடயத்தை ஊடகவியலாளர்கள் இனம் கண்டு துருவத் தொடங்கியதும் பாதுகாப்புத்தரப்பு தம்மை விழிப்படைந்து செய்தியாலளர்கள் யாவரையும் வெளியே அனுப்பிவிட்டது. இவற்றையும் மீறி ஊடகங்களில் இந்த விடயம் கசிந்த போது இலங்கைப் புலனாய்வுப்பிரிவு அதனை முழமையாக மறுத்திருந்தது. ஆனால் அங்கு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் புலனாய்வுப்பிரிவின் முக்கியஸ்த்தர் என்பதனை நாம் உறுதிப்படுத்திக் கொண்டோம

கொட்டாவ்வில் இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் யூன் 2004ல் பொலநறுவையை அண்மித்த கிங்குரான்கொட பௌத்த ஆலயத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்ட கருணா தரப்பு உறுப்பினர்களாவார். இவர்கள் குகநேசன் உள்ளிட்ட பதின்நான்கு பேராவார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலையீட்டினால் விடுவிக்கப்பட்டு கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுக் கொட்டாவவில் தடுத்து வைக்கப்பட்டனர். ஆனால் அப்பதின்நான்கு பேரில் புலிகளின் புலனாய்வுக்கட்டமைப்பைச் சேர்ந்த ஆறுபேர்களும் இருந்திருக்கிறார்கள் இவர்கள் சம்பவம் நடந்த இரவு மயக்கமாத்திரைகளை மற்றவர்களுக்கு உணவுடன் பரிமாறியிருக்கிறார்கள். இவ்வாறு மயக்கமருந்துண்ட கருணா விசுவாசிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது ஒலியடக்கித்துப்பாக்கிகளால் அவர்களை இவர்கள் சுட்டுக்கொன்றுவிட்டு அதிகாலையிலேயே அங்கிருந்து புறப்பட்டு அம்பாறை போய்ச் சேர்ந்துவிட்ட்தாக பின்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் குறிப்பாகக் கொலையைப் புரிந்தவர்களே எம்முடன் கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல்களைத் தந்தார்கள் எனவும் பின்னர் அறிந்து கொண்டேன்.

Karuna%20Grouo%207.jpg

யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர்

இந்த சம்பவமும் சமாதான காலத்தில்(2004ல்) நடந்தமையினால் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் சம்பவம்ந் நடந்த இடத்திற்குச் சென்று அதனைப் புலிகளின் யுத்த நிறுத்த மீறலாகப் பதிவு செய்து கொண்டனர்.

இச்சம்பவத்திற்கு பின்னர் (திகதிகள் ஞாபகம் இல்லை) கொழும்பை அண்மித்த நுகேகொடவில் இலங்கை புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்த கருணாகுழுவின் பெண்கள் பிரிவின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச்சேர்ந்த முக்கியஸ்த்தர்களைப் புலிகள் தமது சாமர்த்தியத்தால் ஒரு வாகனத்தில் ஏற்றி அம்பாறைக்கு கடத்திச் சென்று பின்னர் சுட்டுக் கொன்றனர்.

2005 ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி திங்கட் கிழமை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் அரசியற் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் (சமாதானப் பேச்சுக்களில் கலந்து கொள்ள வெளிநாடுகளுக்கு அவர் வந்திருந்த போதும் மட்டக்களப்பிற்கு சென்றிந்த பல தடவைகளிலும் கௌசல்யனோடும் உரையாடி இருக்கிறேன். சமாதான காலத்தில் சூரியன் எவ்.எம்மிற்காகப் பல பேட்டிகளையும் அவரிடம் எடுத்திருக்கிறேன்.) மற்றும் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேரு உள்ளிட்ட நால்வர் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாமல் கம பிள்ளையாரடி என்ற இடத்தில் வைக்கப்பட்ட கிளைமோரில் கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதலையும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் துணையுடன் கருணா தரப்பினரே மேற்கொண்டிருந்தனர்.

2005 டிசம்பர் 25 ஞாயிறு அதிகாலை 1.15 அளவில் கருணா தரப்பின் இரண்டு ஆயுததாரிகள் இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் துணையுடன் கிறிஸ்மஸ் இரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஜோசப் பரராஜசிங்கத்தைச் சுட்டுக் கொன்றனர்.

திரு பரராஜசிங்கம் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முதல்நாள் இரவு சனிக்கிழமை 9 ற்கும் 9.30ற்கும் இடையில் என நினைக்கிறேன் (மரணிப்பதற்கு சுமார் 4 மணிநேரத்திற்கு முன்னர்)அவருடன் மட்டக்களப்பின் பாதுகாப்பற்ற சூழல் குறித்து தொலைபேசியில் உரையாடி இருந்தேன். நான் தொலைபேசி அழைப்பை எடுக்கும்போதெல்லாம் அவரே முதலில் எடுத்து நீங்கள் யாரென்று கேட்பார். பின்னர் குருபரன் லைனில் நிற்கிறார் என்று கூறிக் கணவரிடம் கொடுப்பார். அன்றைக்கும் அவ்வாறு அவருடன் உரையாடிய போது இன்னும் நான்கு மணிநேரத்தின் பின்பு இந்த மனிதரின் மரணத்தையும் அறிவிக்க நேருமென்று நான் நினைத்திருக்கவில்லை. திருமதி சுகுணம் பரராஜசிங்கத்திற்கு அவர்களுக்கு இது நினைவிலிருக்குமோ தெரியவில்லை. மரணங்களை இலக்கச்சட்டத்தில் உள்ள உருளைகளைப்போல் தட்டித்தட்டி எண்ணவும் பின்னர் எதுவுமே நடக்காதது போல் நமது அலுவல்களைப்பார்கவும் பழகிப்போன சமூகமாக தமிழ்சமூகம் மாறிப்போனதைக் கண்டபோது எமது விடுதலைபோராட்டம் என்னவிதமான மனித விழுமியத்தைத் தந்ததென்று திகைக்கிறேன்.

31 January 2006 காலப்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் பணியாற்றிய எட்டுப்பேர் புலிகள் கருணா முரண்பாடு காரணமாகக் கிழக்கை விட்டு நீங்கி வன்னிக்குச் செல்வதற்காக பேருந்தில் புறப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரையும் (இரண்டு பெண்கள் உட்பட்ட எட்டுப் பேரைப்) பொலநறுவைக்கு அண்மையில் வைத்துக் கருணாகுழு கடத்திச்சென்றது. கடத்தப்பட்டவர்களுள் பிறைநிதி என்ற பெண் பாலியல்வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். மற்றைய பெண்ணைக் கருணாகுழுவின் உறுப்பினர் ஒருவர் திருமணம் செய்வதற்காகக் காப்பாற்றிக்கொள்ள மிகுதி ஆறு ஆண்களையும் அவர்கள் கொலை செய்திருந்தனர். இந்தச் செயலுக்கான நேரடி உத்தரவைக் கருணா பிறப்பிக்க அப்போது அவரின் கட்டளைத் தளபதியாக இருந்த பிள்ளையான் என்கிற சிவனேசதுரை சந்திர காந்தனின் தலைமையிலான படை நிறைவேற்றிமுடித்தது. இவை யாவும் சமாதான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட துணை இராணுவக் குழவின் யுத்த நிறுத்த மீறல்கள். புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்களின் கடத்தல் தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்ட குறிப்புக்கள் அடிக்குறிப்பு 2ல் இணைக்கப்பட்டுள்ளது.

Raviraj.jpg

2006 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலையையும் இலங்கைப் புலனாய்வுப்பிரிவின் துணையுடன் கருணா தரப்பே மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறிப்பாக இவரது கொலையுடன் இனியபாரதி சம்பந்தப்பட்டிருந்ததாக அப்போது பரவலாகத் தகவல்கள் கசிந்திருந்தன.

நான் 2006 ஆகஸ்ட் 29 திகதி அதிகாலை கடத்தப்பட்டு பாரிய அழுத்தங்களின் பின்பு விடுவிக்கப்பட்டிருந்த நாட்களில் ஒருநாள் தொலைபேசியில் என்னைத்தொடர்பு கொண்ட

ரவிராஜ் “அண்ணை உனக்கென்ன விசரோ இப்பவும் சூரியனைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு இருக்கிறாய். ஒருமுறை உயிர் தப்பி விட்டாய் இது நெடுகலும் வாய்க்காது. எங்கையாவது வெளியில போய் வாழுற வழியைப்பாருங்கோ. அண்ணை நாங்கள் இந்த பாழாய் போன அரசியலில் இறங்கி விட்டோம். ஏதோ முடிந்தவரை இழுபட வேண்டும் நீங்கள் செய்யக் கூடிய அளவிற்கும் செய்து மயிரிழையில் தப்பி வந்திருக்கிறீர்கள். இது போதும் வெளிநாட்டிற்குச் சென்று செற்றிலாகப் பாருங்கள். விசப்பரீட்சை வேண்டாம் எனக் கூறினார். அன்றைக்கு நீண்ட நேரம் நாங்கள் உரையாடி இருந்தோம்.

திரு ரவிராஜ் கொல்லப்பட்ட போது நான் ஜரோப்பாவில் நின்றிருந்தேன். எனது நண்பர் ஒருவர் என்னுடன் தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்தபோது மிகவும் வேதனை அடைந்து போனேன்.

2006 நவம்பர் 19ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கைச் சேர்ந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொலைபேசி எடுத்து மிரட்டிய கருணாவின் உதவியாளர் குணாளன் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினத்திற்கு முன்னதாக எம்.பி பதவியை விட்டு விலகாவிட்டால் அவர்கள் அனைவரும் மாவீரர்களாகவேண்டிவருமென அம்மான் (கருணா) கூறியதாக மிரட்டியிருந்தார்.

Raveendranath.jpg

[]Raveendranath.jpgProf. Raveendranath addressnig a conference [

(inset) Prof. Raveendranath's wife[

2006 டிசம்பர் 15 வெள்ளிக்கிழமை மாலை 1:15 அளவில் கிழக்குப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ரவீந்திரநாத் காணாமல் போனார். பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தினுள் நடந்த முக்கிய கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளச்சென்ற அவர் அதன் பின்னர் மண்டபத்திற்கு வெளியே வரவில்லை. அவருக்காகக் காத்திருந்த அவரது வாகனச்சாரதி வெற்று வாகனத்துடன் திரும்பநேர்ந்தது. பல புலமைவாதிகள் நிறைந்திருந்த மண்டபத்தினுள் அவரைகடத்தும் துணிச்சலான உத்தரவைக் கருணா அம்மான் அரச ஆதரவுடன் வழங்கப் பிள்ளையான் அவர்கள் திறமையாகச் செய்து முடித்திருந்தார். திரு ரவீந்திரநாத் அவர்கள் காணாமல் போனதிலிருந்து அவரது குடும்பத்தினர் பட்ட துன்பத்தினை நேரடியாக கண்டுணர்ந்தவன் என்ற வகையில் இந்தப்பதிவும் கடுமையான துயரத்தைத் தருவது..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 2007. நவம்பர் 19 ஆம் திகதி நிகழவிருந்த பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட முதல் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடாது. என முற்கூட்டியே( 2007 நவம்பர் 16 ஆம் திகதி) எச்சரிக்கப்பட்டார்கள். அவர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வதைத் தடுக்கும் நோக்குடன் நவம்பர் 17 திகதி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எம்.பி கனகபையின் மருமகன் கழுதாவளையில் வைத்துக் கடத்தப்பட்டார்.

பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் மீதான 2ஆம் கட்ட வாக்களிப்பு 2007 டிசம்பர் 14ஆம் திகதி இடம்பெற்ற போதும் இதே வகையான அச்சுறுத்தும் நடவடிக்கை முன் கூட்டியே நிகழ்ந்தது.2007 டிசம்பர் 11ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனின் சகோதரர், தங்கேஸ்வரியின் செயலாளர், ஜெயானந்த மூர்த்தியின் மருமகன் ஆகியோர் அச் சந்தர்ப்பத்தில் கடத்தப்பட்டு நிர்ப்பந்தம் வழங்கப்பட்டது.. தற்போதய மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்ரரே இந்தக் கடத்தல் சம்பவத்தில் நேரடியாகத் தொடர்பு பட்டிருந்தார். மேற்குறித்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விட்டதன் பின்னர் 15ஆம் திகதி கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கருணா-புலிகள் என்ற முரண்பாட்டின் கோரத்தன்மையைப் பார்க்கிற எவருக்கும் இது எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி எழவே செய்யும். ஆனால் இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விடையம் என்னவெனில் தமிழர்களின் அரசியல் மற்றும் விடுதலை இயக்கங்கள் யாவும் தமது அகமுரண்பாடுகளின் போதும் தமக்கிடையேயான முரண்பாடுகளின் போதும் புலிகள் மற்றும் கருணா குழுவினர் வெளிப்படுத்தியதைப் போன்ற வன்முறையான அணுகுமுறைகளையே வெளிப்படுத்தி இருந்தனர் என்பதையும் நினைவுகூரவேண்டும் இதற்கான ஆதாரங்களைத் தமிழர்விடுதலைக்கூட்டணி காலத்தில் இருந்தே காணமுடியும். எனவே இந்த வன்முறையுணர்வின் வேர்களை நாங்கள் எங்கள் கலாசாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டிலும் தேடவேண்டும் என்பது தெளிவாகிறது இது தொடர்பாகவும் பின்னர் எழுதுவேன்.

இந்த இடத்தில் இடைச்செருகல் என்னினும் முக்கியமானதொரு விடையத்தையும் கவனிக்க வேண்டும்[

கொழும்பின் தெற்காக உள்ள சுற்று வட்ட பிரதேசங்களில் நிகழ்ந்த சில சம்பவங்களை இங்கே தருகிறேன்.[

•கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையானின் உதவியாளர் ரகு காரில் சென்ற போது கருணாவினதும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரதும் இணைந்த முயற்சியால் சுட்டுக் கொல்லப்பட்ட இடம் மகரகமவை அண்மித்த கொட்டாவ. [மிலேனியம் சிற்றி என பலராலும் பேசப்பட்ட இடத்தில் சமாதான காலத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டபோது அவை புலிகளால் வைக்கப்பட்டதாகக் கருதப்படபோதும் பின்னர் அவை இலங்கைப்புலனாய்வுப் பிரிவினரினால் வைக்கப்பட்டவை என உறுதிப்படுத்தப்பட்டதால் சந்திரிக்காவுக்கும் றணிலுக்கும் இடையில் கடும் அரசியலில் சர்ச்சைகளை உருவாக்கிய இடமும் மகரகமவை அண்மித்த கொட்டாவ.

]கருணா குழுவின் முக்கியஸ்த்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடம் மகரகம கொட்டாவ.

]கருணா குழுவினரின் மகளீர் பிரிவினர் தங்க வைக்கப்பட்ட இடம் நுகெகொட,

]சிவராம் கொல்லப்பட்ட இடம் பாராளுமன்றத்தை அண்மித்த பத்தரமுல்ல.

•லசந்த விக்கிரமதுங்க சுட்டுக் கொல்லப்பட்ட இடம் அத்தியடி றோட் றட்மலான.

•வித்தியாரன் அவர்கள் கட்த்தப்பட்டு றோட்டில் தள்ளிவிடப்பட்ட இடம் நுகேகொட

]நான் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட இடமும் நுகெகொடவை அண்மித்த கொகுவல.

[பயங்கரவாத நடவடிக்கைகளோடு தொடர்பு பட்ட பல விடயங்களை கையாளுகின்ற பல புலனாய்வாளர்களைக் கொண்ட இடம் நுகெகொடவை அண்மித்த மீரிகான.

]புலிகளால் கொல்லப்பட்ட ஜெயரட்ணம், தாப்று மற்றும் நிலாப்டீன் ஆகியோர் இயக்கிய பிரதான பொலிஸ் புலனாய்வு மையம் இயங்கியது கல்கிசை.

இவை யாவும் கொழும்பின் தெற்காக உள்ள ஒரு சுற்று வட்ட பிரதேசங்கள்.

இந்தப் பிரதேசங்களிலேயே இராணுவ, பொலிஸ், துணை இராணுவக் குழக்களின் இரகசிய தடுப்பு முகாம்கள், வதை முகாம்கள், விசாரணை மையங்கள், விசேடமாக புலிகளில் இருந்து விலகிய கருணா மற்றும் இனியபாரதி மற்றும் பிள்ளையான் தரப்பினரின் தங்குமிடங்கள் அமைந்திருந்தன. இப்பொழுதும் அமைந்திருக்கின்றன.

முடிவாக நான் மேலே விபரித்தபடிக்கு கருணா தரப்பும் புலிகள் தரப்பும் ஒருவரை ஒருவர் பலி எடுத்துக்கொண்டிருந்த போது சிங்களப்பேரினவாத அரசு தமிழீழ விடுதலைப்போராட்டத்தை நசுக்குவதற்கான மும்முரமான தயாரிப்புக்களில் ஈடுபட்டிருந்தது.

Link to comment
Share on other sites

கடசியில் தெனிந்திய சினிமாவில் வருவது போல் , ஒன்ராக இருந்தவர்கள் ஆலை ஆள் போட்டுதள்ளிவிட்டார்கள் இடையில் சிங்களவன் புகுந்து தன் விளையாட்டை காட்டிவிட்டான்,..

கருணாவை பாக்கும் போது இரத்தாழுத்தம் ஏற்படுகிறது ஆனால் அவனுக்கு கொஞ்சமேனும் கவலை அல்லது குற்ற உணவ்ரு இருக்க தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.