Jump to content

மௌனம் கலைகிறது....நடராஜா குருபரன்


Recommended Posts

மௌனம் கலைகிறது....நடராஜா குருபரன்

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அடைந்தவற்றையும் அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் மௌனமாகச் சுமந்து திரிந்தேன். நித்திய கண்டமென்றாலும் நீண்டு வாழக்கிடைத்த தவத்தால் மௌனம் கலைகிறேன்.

காலத்தடம் என் நினைவுகளுள் பதித்தவற்றை அதுவே மீண்டும் பறித்துக் கொள்வதற்குள் நினைவுகளைத் தூசிதட்டி பலவேளைகளில் சாம்பல்களையும் தட்டி எடுத்து உங்கள் முன் வைக்க வேண்டிய கடமையை ஒரு ஊடகவியலாளனாக உணர்கிறேன்..

எதைச் சொல்லலாம் எதனைச் சொல்லக் கூடாது என மறுகிக் குறுகிக் கிடந்த நாட்கள் போயின. எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்னும் அறிவின் தடத்தில் வந்து நிற்கிறேன்.

எங்கள் காலத்தின் மௌனம் கலைவது துகிலுரிவது போன்றது. துயர் களைவதற்கான முதல் நிலையாக கலையும் என் மௌனமும், உங்கள் ஆதரவு தொடரும் என்ற துணிவில் வெளிக்கிளம்பும் எதிர் வினைகளுக்காகவும் நிமிர்கிறேன்.

வழமையான இளமைப்பருவத்தைத் தொலைத்து 80களில் தங்கள் இலட்சியப்பயணத்தைத் தொடங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்களுள் ஒருவனாக விடுதலைப்போராட்டத்துள் இறங்கிய போது இத்தனை மௌனங்களைச் சுமக்க வேண்டியிருக்கும் என நினைத்திருக்கவில்லை.

மூன்று தசாப்தங்கள்... ஒவ்வொரு தசாப்தமும் ஒவ்வொரு பரிமாணத்தை கொண்டதாக அமைந்தது ஒன்றும் அதிசயமல்ல.

எண்பதுகள் ( விடுதலை இயக்கங்களின் காலம்)

• தமிழீழ மக்கள் விடுதலைக்கழகப் (PLOT) போராளியாக...

• இயக்கங்களுக்கிடையிலான முரண்பாடுகளின் பலிக்கடாவாக மரணத்தின் விழிம்புகளைத் தொட்டவனாக...

• தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (PLOT) உட்கட்சிப் போராட்டத்தில் ஒருவனாக...

• விடுதலைப்புலிகளின் கைதியாக...

• இந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் அகதியாக..

• பல்கலைக்கழக மாணவனாக...

தொண்ணூறுகள் (தனிமனித வாழ்வும் இருப்புமான காலம்)

• அச்சு ஊடக ஊடகவியலாளராக (சரிநிகர்)..

• தனியார் கல்விநிலைய ஆசிரியராக..

• அச்சக உரிமையாளராக..

இருபதாம்நூற்றாண்டு (முழு நேர ஊடகவியலாளனான காலம்)

• சூரியன் FM இல் வானொலிச் செய்தியாளனாக..

2000 ஆண்டில் வானொலிச் செய்தியாளனாகிய எனக்கு, அக்காலப்பகுதியில் தொடங்கிய இலங்கைஅரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளின் செய்திசேகரிப்பாளனாகும் வாய்ப்புக்கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் எனது முயற்சியினால் உருவான வாய்ப்பது.

* டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் மகாநாடு

* இலங்கைப் பிரதமர் றணில் விக்கிரமசிங்கவின் வெள்ளை மாளிகை விஜயம்

* பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கான விஜயம்

என்பவற்றின் போது செய்தி சேகரிப்பாளனாக இருந்தேன்.

2006ல் கொழும்பில் நான் 'இனம்தெரியாதோரால்' கடத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த தொடர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக 2007ன் இறுதிப் பகுதியில் பிரித்தானியாவுக்குப் புலம்பெயர நேர்ந்தது. உடல் பெயர்ந்தபோதும் உள்ளம் பெயரவில்லை. இன்று உலகத் தமிழ் ஊடக வலையமைப்பின் (GLOBAL TAMIL MEDIA NET WORK) பணிப்பாளராக நமக்குத் தொழில் ஊடகமானது.

இயக்க காலம், தனிமனித இருப்புக்கானகாலம், ஊடகக்காலம் என நீளும் கட்டங்களைத் தாண்டி வந்த என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பலதை விழுங்கவும் சிலதை மெல்லவும் ஒன்றிரண்டை மட்டுமே பேசவும் முடிந்தது.

என்னுடையது மட்டுமல்ல கடந்த மூன்று தசாப்தத்தின் தமிழர் வாழ்வின் பல்வேறு கூறுகளைச் சேர்ந்த அனுபவங்களும் பேசப்படவேண்டும். தங்களுடைய மௌனங்களைக் கலைக்கத் துணிபவர்களுக்கு ஆதரவாக துணையாக என் நீண்ட மௌனமும் கலைகிறது... தொடராக நீள்கிறது...

(காலப்பொருத்தம் கருதி 2000 ஆண்டுக்குப் பின்னான அனுபவங்களில் தொடங்கிப்பின் எண்பது தொண்ணூறுகளுக்குச் செல்லலாம் என நினைக்கிறேன்)

இரண்டாயிரமாம் ஆண்டு (ஊடகக்காலம்)

2002ஆம் ஆண்டு இலங்கையின் அரசியலில் பல திருப்பங்களை ஏற்படுத்திய ஆண்டு. இலங்கையின் இரண்டாம் குடியரசு யாப்பு உருவாக்கத்தின் பின் 22 வருட ஆட்சியில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஒரு கட்சியின் தலைவராகவும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்று பிரதமராக பிறிதொரு கட்சியின் தலைவரும் தெரிவு செய்யப்பட்ட ஒரு முக்கிய ஆண்டு.

இந்த ஆண்டில்தான் இலங்கையின் இரண்டு தசாப்தத்திற்கு மேலாக இடம்பெற்ற ஆயுத மோதல் நீண்டதொரு சமாதானத்திற்காக ஓய்வுக்கும் வந்தது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பிரதமராக இருந்த றணில் விக்கிரமசிங்கவும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் சமாதான உடன்படிக்கையில் கையொப்பம் இட்டதும் 2002ஆம் ஆண்டுதான்.

இந்த ஒப்பந்தத்துடன் நோர்வேயின் மத்தியஸ்த்தில் இலங்கைக்கு வெளியில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. இது இலங்கை அரசியலில் மட்டுமல்ல எனது வாழ்விலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இலங்கையின் அரசியல் எல்லைக்குள் மட்டுமே குறுகி இருந்த என் பார்வை உலக அளவில் விரிவடைவதற்கும் ராஜதந்திர மட்டத்திலும், சர்வதேச ஊடக அமைப்புகள் மட்டத்திலும் பல்வேறு தொடர்புகள் கிடைப்பதற்கும் இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் அனைத்திலுமே செய்தியாளனாக கலந்து கொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது காரணமாகியது.

2000 ஆண்டில் சூரியன் FM இல் ஒரு வருட ஒப்பந்தத்தில் செய்தி ஆசிரியராக இணைந்ததுடன் என்வாழ்வு முன்னரை விடவும் சுவாரஸ்யமானதாகவும் சவால்கள் நிறைந்ததாகவும் மாறியது. விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசபடையினருக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் மக்களின் மனதில் நிலையான இடத்தைப் பிடித்திருந்த இலத்திரனியல் ஊடகமான சூரியன் FM இல் இணைந்தமை என் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஆகியது. ஏற்கனவே அச்சு ஊடகத்தில் பணியாற்றிய அனுபவம் இருந்த போதும் இலத்திரனியல் ஊடகப் பணியின் ஆரம்பம் ஒரு புதிய சவாலாகவே இருந்தது.

சூரியனில் இணைந்து 3 ஆவது நாள் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் தலைவரும் பிரபல சட்டத்தரணியுமான குமார் பொன்னம்பலம் வெள்ளவத்தை விவேகானந்த வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த செய்தி எனது நண்பரும் முச்சக்கர வண்டிச் சாரதியுமான காமினி மூலமாக எனது கையடக்கத் தொலைபேசிக்கு உடனடியாகவே வர திரு பொன்னம்பலம் அவர்கள் சுடப்பட்டு ஐந்து நிமிடங்களுக்குள் சூரியன் FM ல் அது உடனடிச் செய்தியாக ( Breaking News ) ஒலிபரப்பாகியது. இந்தச் செய்தி மூலமாகவே தமது தந்தை சுடப்பட்ட செய்தியை அவரது மகன் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் மகளும் மனைவியும் அறிந்தனர்.

இந்தச் சம்பவம் நான் வேலைக்குச் சேர்ந்து மூன்று நாட்களே ஆகியிருந்த போதும் சூரியன் FM நிறுவனம் என்மீது கவனம் கொள்வதற்கான காரணமாகவும் அமைந்தது. (சூரியக் குடும்பத்தின் வாழ்வுக் காலம் குறித்து எனது கடத்தலும் தொடர் உயிர் அச்சுறுத்தலும் என்ற தனியான ஒரு பதிவில் பார்ப்போம்.)

இது போன்ற பல முக்கிய செய்தி சேகரிப்புக்கள் உடனடிச் செய்திகள் காரணமாக ஒரு ஊடகவியலாளனாக எனது பெறுமானம் அதிகரித்தது. எண்பதுகளில் தொடங்கிய எனது அரசியல் வாழ்வு எனக்களித்த எல்லாவிதமான இழப்புக்களுக்கும் நித்திய கண்டங்களுக்கும் பிரதியுபகாரமாக எனக்கொன்றை விட்டுச்சென்றிந்தது. அதுதான் விலைமதிக்க முடியாத அரசியல் மற்றும் தனிமனிதத் தொடர்புகள்.

சமூகத்தின் சகல மட்டங்களிலும் எனக்கிருந்த இந்தத் தொடர்புகள் எனது ஊடகச் செயற்பாடுகளுக்கு வலுச்சேர்த்தன. இந்த வலு என்னை சூரியனுள் பொறுப்பும் கவனமும் நிறைந்த தமிழ்ச் செய்திப்பிரிவின் பொறுப்பாளர் என்ற உயர் நிலைக்கு இட்டுச்சென்றது. இதன்வழி அரசு-புலிகள் சமாதானப்பேச்சு வார்த்தைகளில் ஊடகவியலாளனாகக் கலந்துகொள்ளும் வாய்ப்புத் தோன்றுகிறது.

2000ம் ஆண்டுகளில் எமது வானொலி நிறுவனம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு மெல்லியதான நெருக்கத்தைக் கொண்டிருந்தது. அந்த நெருக்கமும் ஐக்கியதேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் சிலருடன் எனக்கு இருந்த தொடர்பும், சமாதானப் பேச்சுக்கள் அனைத்திலும் செய்தியாளனாக கலந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தின. பிரதானமாக முன்னாள் பிரதமர் றணில் விக்கிரமசிங்கவின் அமரிக்க வெள்ளை மாளிகை விஜயம், பிரித்தானிய பிரதமர் ரொனிபிளையருடனான சந்திப்பு போன்றவற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிடைப்பதற்கு அவை முக்கிய காரணமாகின.

கூடவே 2003 நவம்பருக்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மூன்று கட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்த செய்தி வழங்கல் மூலம் தமிழ்வானொலி கேட்போர் மத்தியில் ஒரு கவனிப்பை எமது வானொலியால் ஏற்படுத்த முடிந்தமையால் எமது நிறுவனமும் எனக்கு முழுமையான ஆதரவை வழங்கியது.

இவையே வெள்ளை மாளிகைக்கு சென்ற றணிலின் பயணத்தில் நான் இணைந்து கொள்ளக் கிடைத்தமைக்கான பின்னணிகள்.

றணில் விக்கிரமசிங்கவின் அமரிக்க வெள்ளைமாளிகை விஜயமும் மறைக்கப்பட்ட உண்மைகளும்

அண்மைய நாட்களில் விக்கிலீக்ஸில் ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் றணில் விக்கிரமசிங்க, அவரது முன்னைய அரசாங்கம், முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முதலானோர் குறித்துப் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாகச் சமாதான காலத்தில் ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கத்தினதும் அதன் முக்கிய தலைவர்களதும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி வருகிறது. ஆனால் அமெரிக்க அரசாங்கத்திற்கும் அதன் உலகளாவிய தூதரகங்களுக்கும் இடையில் கேபிள் ஊடாக இடம்பெற்ற தகவல் பரிமாற்றங்களையே விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்துகிறது. அதற்கு அப்பாலும் நேரடியாக இடம்பெற்ற சந்திப்புக்கள் அதன்போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றிய அன்றைய காலத்தின் திடுக்கிடும் தகவல்கள் பற்றி அதிகம் வெளிவரவில்லை எனவே நினைக்கிறேன். அதனால் இப்போது பரபரப்பாக பேசப்படும் விடயங்களில் தொடங்கி பின்னோக்கிச் செல்லலாம் என நினைக்கிறேன்.

அன்று செய்தி சேகரிப்பிற்குச் சென்றவர்களில் ஒருவர் மூத்த முஸ்லீம் ஊடகவியலாளரான அமீன் மற்றயது நான். நாமிருவர் மட்டுமே தமிழ்பேசும் ஊடகவியலாளர்கள். சுட்டுக்கொல்லப்பட்ட லசந்தவிக்கிரமதுங்க உள்ளிட்ட பல சிங்கள ஊடகவியலாளர்களும் அன்று வந்திருந்தனர். அமீன் லேக்கவுஸில் பணிபுரிந்ததால் அவர்குறித்து எவரும் ஐயம் கொள்ள வில்லை. ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் செய்தியாளராக கலந்துகொண்ட என் மீது சிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியில் சந்தேகம் இருந்தது. றணிலின் அமரிக்க விஜயம் குறித்து அங்கு மேற்கொள்ளப்பட்ட இரகசிய உடன்படிக்கைகள் குறித்து தகவல் வெளிச் சென்றால் சமாதானப் பேச்சில் தாக்கம் ஏற்படுத்தும் என அவர்கள் ஐயுற்றிருந்தார்கள். அதனால் பல முக்கிய சந்திப்புக்களுக்கு தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டனர்.

எனினும் பின்னர் அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் விடுதியில் வந்து உரையாடும் போது கசியும் விடயங்கள் மற்றும் முக்கிய தகவல்கள் மனதில் பதிவு செய்து கொள்ளக் கிடைத்தன. ஆயினும் அந்தப் பதிவுகைளை இப்படி தொடராக எழுத வேண்டும் என்ற நினைப்போ நோக்கமோ அன்று என்மனதில் இல்லாததனால் திகதி வாரியாகவோ அல்லது ஒளிப்படத் தொனுப்பாகவோ அவற்றை பேணத் தவறிவிட்ட துர்பாக்கியத்தை நினைக்கும் போது மனது வலிக்கிறது. என்றாலும் இயன்றவரை மனதுள் உறைந்திருக்கும் பழைய நினைவுகளை மீட்கிறேன்.

அந்த நினைவுகள், மௌனத்தை கலைக்கும் எனது அடுத்த பதிவில்

மகிந்த ராஜபக்ஸ அன்றன்றே கொல்வார் றணில் நின்று கொல்வார்...!. என்பதாக தொடரும்....

நடராஜா குருபரன்

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

ஏறத்தாழ 12 வருடங்களுக்குப் பின்னோக்கி உங்களை அழைத்துச் செல்கிறேன். மகிழ்ச்சியுடன் அல்ல வலி சுமந்த வேதனையோடு. காரணம் நீண்ட யுத்தத்தின் பின், பெருக்கெடுத்த ரத்தத்தின் பின் ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தை பலருக்கும் நின்மதிப் பெருமூச்சை கொடுத்தது. ஆனால் அது கானல் நீராக அமைதிக்குப் பிந்தைய சுனாமியாக மாறும் என பெரும்பான்மையோர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நிலவிய அமைதிக்குப் பின்னால் சம்பந்தப்பட்ட இருதரப்பினருமே திரைமறைவில் எதிர்மறையான செயற்பாடுகளையே மேற்கொண்டனர். அந்த வகையில் சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பித்ததோடு றணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் சர்வதேச காய்நகர்த்தல்களும் ஆரம்பித்திருந்தன. இந்த புதிய அத்தியாயத்தில் நானும் மெதுவாக உலகைநோக்கி ஒரு செய்தி சேகரிப்பாளனாக நகர்ந்தேன். அதில் மிகப் பிரதானமானது அமெரிக்க வெள்ளை மாளிகை விஜயம்.

2001 டிசம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் றணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசிய முன்னணிக் கூட்டு 109 ஆசனங்களைப் பெற்றது. ஆட்சியில் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 77 ஆசனங்களையே பெற்றது.

றணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசிய முன்னணி கூடவே முஸ்லீம் காங்கிரசின் 5 ஆசனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 ஆசனங்கள் என மேலதிக ஆதரவைப் பெற்றுக் கொண்டு இலங்கையின் சட்டவாக்க சபையான பாராளுமன்றத்தைக் கைப்பற்றியது. முன்னர் கூறிய படிக்கு இலங்கையின் வரலாற்றில் சனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராக இருக்கையில் பாராளுமன்றம் இன்னொரு கட்சியின் ஆதிக்கத்தின் கீழ் வந்த நிலைமை தோன்றியது.

2002 பெப்ரவரியில் அரசாங்கத்தாலும் விடுதலைப் புலிகளாலும் யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இலங்கையில் அமைதிக்கான ஆரம்பத்தை ஏற்படுத்திய பெருமையிலும் சட்டவாக்க அதிகாரத்தைக் கைப்பற்றிய மகிழ்வுடனும் றணில் தனது மாமனாரின் வழியைப் பின்பற்றத் தொடங்கினார். தனது திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் றணில் 2002 யூலையிலேயே உடனடியாக அமெரிக்கா பயணித்தார். அங்கு ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்சை சந்தித்ததோடு அந்நாட்டின் உயர் மட்ட அதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார்.

சிங்கப்பூர், தென் கொரியா போல் இலங்கையை மாற்றுவேன் எனக் கூறி அமெரிக்கா மற்றும் மேலைத்தேய சார்பு நிலை எடுத்துக்கொண்டு ஆசியாவில் குறிப்பாக தென்னாசியாவில் பலம்பொருந்திய வல்லரசாக இருந்த இந்தியாவை ஆட்சி செய்த உலகின் பலம் பொருந்திய சீமாட்டி என வர்ணிக்கப்பட்ட முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியையே பகைத்துக்கொண்டு சார்க் அமைப்பில் இருந்து கோலுன்றிப் பாய்ந்து ஆசியான் அமைப்பில் இணைய முற்பட்ட ஜே.ஆர் ஜேவர்த்தனா வழி மருமகன் றணிலும் அமெரிக்காவுடன் கைகோர்த்தார்.

இதுகுறித்து அமெரிக்க காங்கிரசிற்காக அந்நாட்டின் பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவரினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.*1

1984 இற்குப் பிற்பாடு (18 வருடங்களின் பின்) அமெரிக்காவுக்கு மிக முக்கியமான விஜயத்தை மேற்கொண்ட இலங்கையின் முதல் தலைவர் றணில் என அமெரிக்கா அவருக்கு புகழ்மாலை அணிவித்தது.

இந்த விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீள கட்டியெழுப்புவது என்ற முடிவுக்கு ஜோர்ஜ்புஸ் தலைமையிலான அமெரிக்க அரசாங்கமும் றணில் தலைமையிலான இலங்கை அரசாங்கமும் முடிவுக்கு வந்தன.

அதன்படி பாதுகாப்பு, கல்வி, வர்த்தகம், நீதித்துறை மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்களுக்கு அமரிக்கா முழு உதவிகளையும் வழங்கும் எனத் தெரிவித்திருந்தது.

உடனடியாகவே 2002 செப்டம்பர் மாதம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் இணைப்பாளர் ரெயிலர் தலைமையில் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் விசேட ஆய்வுக் குழு ஒன்று இலங்கையில் தரையிறங்கியது.

இந்தக்குழு புலனாய்வு, சட்ட அமுலாக்கம், பயங்கரவாதத்திற்கு எதிரான சட்ட மற்றும் இராஜதந்திர முயற்சிகள் குறித்து எவ்வாறு இணைந்து செயற்படுவது என்பது பற்றி இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினருடன் விசேட கலந்துரையாடல்களை நடத்தியது.

முடிவில் 2003 ஜனவரிக்கும் மார்ச்சிற்கும் இடையில் இருநாடுகளும் இணைந்து ஆயுதப் பரிவர்த்தனை மற்றும் மருத்துவ உத்திகளில் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட ஒன்பது கூட்டு இராணுவப் பயிற்சிகளிலும் ஈடுபட்டன.

"ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவிற்கு சார்பானவர்" என விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலை இங்கு நினைவு கூறலாம். இத் தகவல் நான் இங்கு குறிப்பிடும் விடயங்களுக்கு வலுச் சேர்ப்பதாக அமையும் என நினைக்கிறேன்.

1970 மற்றும் 1980 களில் இலங்கையை ஆட்சி செய்த ஜே.ஆர்.ஜயவர்தன அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வந்தார். ஜே.ஆரை இடதுசாரி தரப்பினர் யான்கீ என அழைத்தனர், யான்கீ என்றால் அமெரிக்கப் பிரஜை என்று பொருள்.

மாமனாரான முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவைப் போன்றே ரணிலும் அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதில் அதிக அக்கறை செலுத்துவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர். றணில் நீண்ட காலமாக அமெரிக்காவுடன் உறவுகளைப் பேணி வருவதாகவும், அது அவர்களது குடும்ப வழக்கம் எனவும் தூதரக அதிகாரிகள் விபரித்துள்ளனர்.

2003ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லி வில்ஸ் அனுப்பி வைத்த குறிப்பில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

செல்வந்த வர்த்தகக் குடும்பத்தில் பிறந்த ரணில் விக்ரமசிங்க, சுதந்திரமான சந்தை நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டவர் எனவும், சோசலிச கொள்கைகளில் நம்பிக்கையற்றவர் எனவும் ஆஷ்லி வில்ஸ் விபரித்துள்ளார்.

மேலும் அமெரிக்க அரசியல் மற்றும் வரலாறு பற்றி ரணில் விக்ரமசிங்கவிற்கு தெளிவு காணப்படுகின்றது எனவும் அமெரிக்க சிவில் யுத்தம், அமெரிக்க இராணுவ வரலாறு மற்றும் அரசாங்க நிர்வாகம் போன்றவை தொடர்பில் கற்றறிந்து கொண்டுள்ளார் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்த சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் குறிப்பாக அமெரிக்காவின் ஒத்துழைப்பு தேவை என்ற நிலைப்பாட்டில் ரணில் விக்ரமசிங்க இருந்தார் எனவும் அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

றணிலின் அமெரிக்க விசுவாசம் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரகத்தின் றணில் பற்றிய நற்சான்றிதழ்கள் பரிந்துரைகள் மற்றும் றணில் விக்கிரமசிங்கவின் முதலாவது விஜயத்தின்போது ஏற்பட்ட பரஸ்பர புரிந்துணர்வு என்பன காரணமாக 2003ல் விசேடமான விருந்தாளியாக அமெரிக்காவுக்கு மீண்டும் றணில் ஜோர்ஜ் புஸ்சினால் அழைக்கப்பட்டார்.

இவ்வாறானதொரு உறுதியான அடித்தளத்தை அமைத்துக்கொண்டே றணில் பிரபாகரனுடன் பேசத் தொடங்கியிருந்தார்.

இந்தப்பேச்சு வார்த்தைகள் ஆறுகட்டங்களைக் கொண்டிருந்தன. றணில் இரண்டாவது முறை அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டபோது ஏற்கனவே விடுதலைப்புலிகளுடனான 6 கட்டப்பேச்சு வார்த்தைகள் முடிவடைந்து விட்டிருந்தன என்பதையும் இங்கு நினைவு கூரவேண்டும்.

• முதலாம் கட்டப் பேச்சுவார்த்தை

2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதியில் இருந்து 18ஆம் திகதிவரை தாய்லாந்தின் கடற்படை தளம் என்று வர்ணிக்கப்பட்ட சொன்பூரி நகரான பட்டாயாவில் நிகழ்ந்தது

• இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை

2002 அக்டோபர் 31ஆம் திகதியில் இருந்து நவம்பர் 02ஆம் திகதிவரை தாய்லாந்தின் நாக்கோம்பத்தோம் றோஸ்காடின் விடுதியில் இடம்பெற்றது.

• மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை

மத்தியஸ்த்த நாடான நோர்வேயின் ஒஸ்லோவில் சாஸ்பிளாஸா விடுதியில் 2002 டிசம்பர் 02ஆம் திகதியில் இருந்து 05ஆம் திகதிவரை இடம்பெற்றது.

(இந்தக் கட்டத்தில் தான் கிழக்கின் சிம்மசொப்பனம் என வர்ணிக்கப்பட்ட கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளீதரனுக்கும் புலிகளின் தலைமைக்கும் இடையில் நீறுபபூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருந்த முரண்பாடுகள் வெளிக்கிளம்ப ஆரம்பித்தன. இவ்முரண்பாட்டில் றணிலின் அரசாங்கம் எவ்வாறு காய்களை நகர்த்தியது என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் இனிவரும் பகுதிகளில் விபரிக்கப்படும்)

நான்காம் கட்டப் பேச்சுவார்த்தை

2003 ஜனவரி 2ஆம் திகதியில் இருந்து 5ஆம் திகதி வரை மீண்டும் தாய்லாந்தின் நாக்கொம்பத்தோம் றோஸ்காடின் விடுதியில் இடம்பெற்றது.

ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தை

2003 பெப்ரவரி 07ஆம் திகதியில் இருந்து 8ஆம் திகதி வரை ஜேர்மனின் பேர்ளின் நகரில் அங்குள்ள நோர்வேத் தூதரகத்தில் இடம்பெற்றது.

ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை

2003 மார்ச் 18ஆம் திகதியில் இருந்து 21ஆம் திகதி வரை இணைத் தலைமை நாடுகளில் ஒன்றான யப்பானின் கொக்கனே நகரில் இடம்பெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் செய்தி சேகரிப்பாளனாக நான் கலந்து கொண்டிருந்தேன்.

ஒரு புறத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டு மறு புறத்தில் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தின் தலைவர் றணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு எதிரான சர்வதேச வலைப்பின்னலை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

ஆறு கட்டப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த போது யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் இருதரப்பாலும் முன்வைக்கப்பட்ட நிலையில் புலிகள் குறித்து இராஜதந்திர ரீதியாக சர்வதேச அளவில் பாரிய எதிர்ப் பிரச்சாரங்களை மிக நுணுக்கமாக றணில் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாகவே றணிலின் இரண்டாம் கட்ட அமெரிக்க விஜயத்தின் போது அமெரிக்காவுடனான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த இடத்தில் அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலர் ஆமிரேஜ் குறிப்பிட்ட விடயம் கவனிக்கத்தக்கது.*2

1997ல் அமெரிக்கா சர்வதேசப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் புலிகளை இணைத்தது. எனினும் 23 பெப்ரவரி 2003 ல் அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலர் ஆமிரேஜ் கூறும் பொழுது

"விடுதலைப்புலிகள் தமது கடந்தகாலப் பயங்கரவாத உத்திகளுக்கு அப்பால் நகர்ந்து தமது நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, ஒரு அரசியல் தீர்வுக்கும் சமாதானத்திற்குமான பற்றுறுதியுடன் செயற்படுவதற்கான விருப்பையும் நடத்தையும் வெளிப்படுத்தினால் வெளிநாட்டு பயங்கரவாத நிறுவனங்களின் பட்டியலில் இருந்து விடுதலை புலிகள் அமைப்பை அகற்றுவதனைப்பற்றி அமெரிக்கா நிச்சயமாகப் பரிசீலிக்கும்" என்றார்.

எனினும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் ஒரு அரசியல் தீர்வை முன்வைத்த பின்பே வன்முறைகளைக் கைவிட முடியும் எனக் கூறிய புலிகள் அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும் அனைத்து அழைப்புகளையும் நிராகரித்து விட்டனர். இதேவேளை பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளின் ஊடாக புலிகளுக்குச் சொந்தமான ஏறத்தாள 4 பில்லியன் டொலர்கள் சர்வதேச அளவில் முடக்கப்பட்டன. இதனால் புலிகள் ஆயுதக் கொள்வனவு உள்ளிட்ட பல இராணுவ நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவைச் சந்தித்தனர். என ஆமிரேஜ் குறிப்பிட்டிருந்தார்

உதாரணத்திற்கு - ஆயுதப்போராட்டத்தில் நீண்ட அனுபவத்தைக் கொண்டிருந்த புலிகள் அரசியல் தளத்தில் தம்மீது விரிக்கப்பட்டிருந்த வலையை அறியவில்லை. மேலும் ஒன்ற‌ன் பின் ஒன்றாக புலிகளின் சர்வதேச இராணுவ வழங்கற்பாதைகள் அடைக்கப்பட்டு விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்ட‌ சமிக்கைகளையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சட்ட ரீதியான அதிகாரத்தைக் கொண்ட சர்வதேச அங்கீகாரத்தை கொண்ட அரசாங்கம் ஒன்றையும் ஆயுதம் தாங்கிப் போராடும் அமைப்பு ஒன்றையும் ஒரே தராசில் வைத்து சர்வதேசம் நோக்காது என்ற யதார்த்தத்தைம் புலிகள் புரிந்திருக்க வேண்டும். மாறாக சமாதானகாலத்தில் மாற்றுக் கருத்துடையோரை இலக்கு வைத்து அவர்களை கொன்றொழித்தமை இணைத்தலைமை நாடுகள் எனக் கூறப்பட்ட நோர்வே, யப்பான், அமரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை பெரிதும் சீற்றம் கொள்ள வைத்தன. இது போன்று பலவிடயங்களை கூறமுடியும் எனினும் அவை சமாதானப் பேச்சுக்கள் குறித்து எழுதும் போது விரிவாக பார்க்கலாம்.

இதேவேளை புலிகளின் சமாதான கால நடவடிக்கைகளை மட்டும் உற்று நோக்கி புலிகள் தொடர்பான இவ்வாறான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்கவில்லை. றணில் விக்கிரமசிங்கவின் நேரகாலமறிந்த இராஜதந்திரமும் இங்கு முக்கிய பங்காற்றியது.

ஜோர்ஜ் புஷ் கொண்டுவந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போரென்ற புதிய உலக ஒழுங்குக்குள் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போரை ஒழிப்பதற்கான ஒளியைக்கண்ட இராசதந்திரம் றணிலிலுடையது. புலிகளின் சர்வதேச இராணுவ மற்றும் நிதி வலையமைப்புகளை ஒடுக்கிக் கொண்டு புலிகளைப் பேசுவார்த்தைப் பொறிக்குள் திட்டமிட்டு வீழ்த்திய அதி உச்ச ராஜதந்திரி றணில் விக்கிரமசிங்கவே.

றணிலினால் வீழ்த்தப்பட்டு பொறிக்குள் சிக்கியிருந்த புலிகளையே மகிந்த சகோதரர்களும் சரத்பொன்சேகாவும் அழித்த பின்னர் சிங்களப்பேரினவாதத்தின் மன்னர்கள் என்ற பொன்முடிக்குச் சண்டையிட்டுக் கொண்டார்கள். அதில் மகிந்த மீண்டும் முடி சூட சரத்பொன் சேகா சிறை சென்றார்.

பாவம் றணில் தனது நாட்டுக்கும் பௌத்த பேரினவாதத்திற்கும், சிங்கள மக்களுக்கும் செய்த "சேவையை" அந்த மக்கள் புரிந்து கொள்ள அவகாசமோ சந்தர்ப்பமோ தரப்படவில்லை.

பொறிக்குள் வீழ்ந்த புலிகள் அதற்குள் இருந்து மீளவும் றணிலைப் பழிவாங்கவும் 2005 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்காமல் தடுத்தனர். அந்த நடவடிக்கை அவர்களை இன்னும் அதள பாதாளத்துள் தள்ள வழிவகுத்தது.

இலங்கையின் இனப்பிரச்சனையின் மூலகாரணமே இலங்கையில் பலமடைந்திருந்த சிங்களப் பேரினவாதமாகும். மகிந்தவின் பின்னால் திரண்டிருந்த சிங்களப் பேரினவாதத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கையாகவே விடுதலைப் புலிகளின் நிலப்பாடு அமைந்து விட்டது. சனாதிபதியாகும் ரணிலின் கனவு அழிந்தது மட்டுமல்ல மிதவாத சிங்களத் தேசியமும் மெல்ல பலம் அழிக்கப்பட்டு கடும்போக்கு சிங்களப் பேரினவாதம் அதிகாரத்துக்கு வந்த துரதிஷ்டமும் நிகழ்ந்தது.

புலிகளை அழிப்பதில் ரணில் மற்றும் ராசபக்ஷ இருவருமே திடமாக இருந்தார்கள். ஆனால் இருவரினது வழிமுறைகள் வேறாக இருந்தன. ரணில் சர்வதேச நிலைமைகளைக் கணக்கெடுத்து ராசதந்திர நகர்வுகளை நகர்த்தி புலிகளின் உட்பகைகளுக்கு தூபமிட்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல புலிகளைப் பலவீனப்படுத்தி நின்றறுக்க முற்பட்டார். ராசபஷ்ச சகோதரர்களோ இந்தியாவின் ஆளும் கட்சியாகவிருந்த காங்கிரஸ் கட்சிக்கும் புலிகளுக்கும் இருந்த தீராப்பகை மற்றும் பிராந்தியத்தில் இருந்த சீன இந்திய முரண்பாடுகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டு கூண்டுக்குள் சிக்கி இருந்த புலியை அன்றே அறுக்க முடிவுசெய்து வெற்றியும் கண்டனர். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே தனது மாவீரர் உரையில் சொன்னது போன்று மகிந்த "யதார்த்தவாதி".

மீண்டும் றணிலுக்கு வருவோம் புலிகளின் போராட்டத்திற்கெதிரான சர்வதேச வலைப்பின்னலை வலுப்படுத்தும் முக்கிய நோக்கத்தைக் கொண்டதாக றணிலின் 2003 நவம்பர் 3தொடக்கம் 5 வரையிலான இரண்டாம் கட்ட அமரிக்க விஜயம் அமைந்தது. இந்த விஜயத்தில் ஐக்கியதேசியக் கட்சிக்கு நெருக்கமான ஊடகவியலாளர்கள் முதலில் இணைக்கப்பட்டார்கள். சன்டே லீடர் லசந்த விக்கிரமதுங்க, ஸான் விஜயதுங்க, தினித், மற்றும் இன்னும் பல சிங்கள ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அமீன் லேக்கவுஸ் நிறுவனத்தின் தமிழ்ப் பிரிவின் முக்கியஸ்த்தராக இருந்ததனால் அழைக்கப்பட்டார். முழுச் செலவுகளையும் அரசாங்கமே ஏற்றுக்கொண்டு தமக்குச் சார்பான ஊடகவியலாளர்களை அழைத்துச்சென்ற அந்த முதலாவது அழைப்பில் நான் சேர்க்கப்படவில்லை. எனினும் எனது தனிப்பட்ட தொடர்புகளின் ஊடாக ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தின் ஊடகப்பிரிவை அணுகியபோது, அமெரிக்க விசாவுக்கான பணம் மற்றும் தங்குவதற்கான விடுதி வசதி என்பன மட்டுமே அரசாங்கத்தால் தரப்படும் எனவும் பயணத்திற்கான ரிக்கற் செலவை எமது ஊடக நிறுவனமே பொறுப்பெடுக்க வேண்டும் எனவும் ஊடகப்பிரிவு கூறிவிட்டது. எனது நிறுவனமோ ஆறு கட்டப் பேச்சுவார்த்தைகளையும் அறிக்கையிடுவதற்கான அனுமதியையும் தொலைபேசிக் கட்டணச் செலவையும் மட்டுமே தருவதென்று தெளிவுபடுத்தியிருந்தது. இந்தப் பயணச் செலவை யார் தருவது...? கோட்டையில் இருந்து கொள்ளுப்பிட்டிக்குப் போவதைப் போன்றதா இந்தப்பயணங்கள்... ஆனாலும் நான் அதிகம் யோசிக்காமல் பயணச்செலவை நானே பொறுப்பெடுப்பதாகக் கூறிவிட்டேன். பயணச்செலவைப் பொறுப்பெடுத்ததால் வந்த துயரக்கதை வேறு.. அது முக்கியமல்ல. (வேண்டுமானால் அதன் சுவாரசியத்தையும் பின்வரும் தொடர்களில் பார்க்கலாம்.) புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் இருக்கையில் தான் கடவுச் சீட்டை அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைத்தேன். அமெரிக்க தூதரகமும் விரைவாகச் செயற்பட்டு பயண அனுமதியைத் தந்தது.

முதலாவது பிரிவு ஊடகவியலாளர்கள் அப்போதைய பிரதமர் றணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்கனவே பயணமாகிவிட்டனர். நான் தனித்து விடப்பட்டிருந்தேன். ஆனால் வாசிங்டன் சென்று அங்கிருந்து அனைவரும் தங்கியிருக்கும் விடுதிக்கு செல்வதற்கான ஒழுங்கை இலங்கை வெளிநாட்டு அமைச்சினூடாக பிரதமரின் ஊடக இணைப்பாளர் செய்திருந்தார்.

வாசிங்டன் சென்று இறங்கியபோது அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகத்தில் இருந்து தூதரக வாகனச் சாரதி வந்து என்னை அழைத்துச் சென்றார். அழைக்க வந்தவர் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் டிரோன் பெனான்டோவின் துரத்து உறவினர் என பின்னர் உரையாடலில் தெரிந்துகொண்டேன். அவரது பார்வையில் நான் அரசாங்கத்தின் முக்கியஸ்த்தர் அதனால் விடுதி செல்லும் வரை அதற்குரிய மரியாதைகள் கிடைத்தன அவ்வளவுதான்.

இந்தக்காலக் கட்டத்தில் அமரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக Devinda R. Subasinghe இருந்தார். அப்போது வெளிநாட்டு ராஜதந்திர சேவையில் இரண்டாம் நிலை அதிகாரியாகவும் தற்போது பிரசில்சிற்கான தூதராகவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாகவும் இருக்கும் ரவிநாத் ஆரியசிங்கவும் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

Ravi%20.Kuru.jpg

றவிநாத் ஆரியசிங்கவுடன் குருபரன்

நான் சென்று சேர்ந்த அடுத்தநாள் முக்கிய சந்திப்புக்கள் தொடங்கின ஆனால் அவை குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கக் கூடாது என்ற "அன்புக்கட்டளை" பிறப்பிக்கப்பட்டது. அரசாங்கத்தின் ஊடகப் பிரிவு வழங்கும் செய்திகளையே நிறுவனங்களுக்கு அனுப்ப முடியும் எனவும் கூறப்பட்டது. சில சிங்கள ஊடகவியலாளர்கள் என்னைப் பார்த்து கிண்டல் செய்வார்கள் இங்கு நடப்பவற்றை குரு புலிகளுக்கு எப்படியாவது அனுப்பிவிடுவார் எனக் கூறுவார்கள்

இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின் முதன் முறையாக அமரிக்காவின் இராசதந்திர மற்றும் இராணுவப் பொருளாதார உள்ளக வட்டத்துள் இலங்கையை அனுமதிக்குமளவுக்கு இந்த விஜயத்தின் போது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டு உடன்பாடு எட்டப்பட்டது.

"உள்ளக வட்டம்" என்ற பிரிவுக்குள் நுழைகின்ற நாடுகள் அமெரிக்காவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய நாடுகளாகவும் அவற்றின் தலைவர்கள் அமெரிக்காவின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். இவ்வந்தஸ்த்து சுதந்திர இலங்கையில் முதன் முதலில் றணில் விக்கிரமசிங்கவுக்கே கிடைத்தது. இந்த அங்கீகாரம் கிடைக்கப் பெற்ற நாடுகளுக்கே அமெரிக்கா நேரடி மற்றும் மறைமுக இராணுவ உதவிகளை அதிகபட்ச அளவில் வழங்கும். இராணுவப் பயிற்சி, இராணுவத் தொழில் நுட்பம், புலனாய்வு, மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த விசேட பயிற்சிகள் ஆயுதத் தளபாட விற்பனை இராணுவ மேம்பாட்டுக்கான நேரடி பண உதவி என அனைத்து உதவிகளும் தேவைப்படும் பட்சத்தில் இந்த உள்ளக வட்டத்துள் உள்ள நாடுகளுக்கு வழங்கப்படும்.

அந்த வகையில் இவை தொடர்பான ஒப்பந்தங்களும் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி குறித்த பல ஒப்பந்தங்களும் றணிலின் இந்த விஜயத்தில் அமெரிக்காவில் கைச்சாத்தாகின. றணிலின் அமெரிக்க விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு இராணுவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே அமெரிக்கா முக்கியமான யுத்தக் கப்பல் ஒன்றை இலங்கைக்கு வழங்க இணங்கியிருந்தது. அதன்படி 2004 யூன் 24ஆம் திகதி இலங்கையின் கடற்படைத் தளபதி தயாசந்தகிரியிடம் அமரிக்கா உத்தியோகபூர்வமாக கையளித்தது. எனினும் கப்பல் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டதனால் 2005 பெப்ரவரி 19 ஆம் திகதியே இலங்கையை நோக்கி புறப்பட்டது. றணில் உறுதியாக அமைத்த மேடை எந்த வகையில் மகிந்த சகோதரர்கள் நடனமாட உதவியது என்பதற்கு இது நல்லதோர் உதாரணம். (*3)

Donation to Sri Lanka

The United States Coast Guard donated Courageous to Sri Lanka on June 24, 2004 and a departure ceremony was held February 19, 2005.She is currently serving the Sri Lankan Navy as P-621 SLNS Samudura.

Link to comment
Share on other sites

என்ன மவுனம் கலைத்தாலும் இல்லாதவர்கள் மேல் தான் குற்றம் சாட்டுவீர்கள் ,சேறு பூசுவீர்கள் செய்ததை தவறு என்று வியாக்கானம் கொடுப்பீர்கள். நாங்களும் கதை நல்லா இருக்கு என்று வாசிப்போம். அவவளவுதான்

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி நிழலி.

நம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது. Martin Luthar King...

Link to comment
Share on other sites

அப்பிடியே ரணிலுக்கு ஆதரவாக சிவராமுடன் இணைந்து கருணாவை புலிகள் அமைப்பில் இருந்து பிரிததெடுப்பதற்கு குருபரன் ஆற்றிய பணியையும் பேச்சு வார்த்தை காலங்களில் செய்து முடித்ததையும் எழுதினால் நல்லது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மொனம் கலைகிறது - 3 - றணிலின் இராசதந்திரமும் கிழக்கின் உடைவும்

றணிலினது சனாதிபதியாகும் தனிப்பட்ட கனவு கலைந்தபோதும் அவரது இராச தந்திரம் எவ்வாறு விடுதலைப்புலிகளை ஒடுக்குவதிற் பங்காற்றியது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குச் சமாந்தரமாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான சர்வதேச வலைப்பின்னலை விரிவாக்கும் நடவடிக்கைகளிலும் றணில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்ததை ஏற்கவே விபரித்திருந்தேன் அக்காலத்தில் றணில் தனது பணிக்கு துணையாக அமெரிக்காவுடன் அப்போது நெருக்கத்தை கொண்டிருந்தவரும் மேலைத்தேச அரசியற் பொருளாதார கொள்கைகளில் மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டிருந்தவருமான மிலிந்த மொறகொடவையும் இணைத்துக் கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்காவின் காலத்தில் விடுதலைப் புலிகளை சர்வதேச ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் வீழ்த்துவதில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் விட்ட இடத்தில் இருந்து றணிலின் ராஜதந்திர நகர்வு ஆரம்பித்தது.

முதலில் சமாதான முயற்சிகளுக்கு பக்க பலமாக நின்ற இணைத் தலைமை நாடுகளையும் அவற்றுடன் முரண்டு பிடித்துக்கொண்டிருந்த இந்தியாவையும் தமது பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளை றணில் சிறப்பாக மேற்கொண்டார்.

இந்த வகையில் நான் ஏற்கனவே விபரித்திருந்த றணிலின் அமெரிக்க விஜயங்களுக்கு ஒப்பானதாக பிரித்தானியாவுக்கும் றணில் விக்கிரமசிங்க விஜயங்களை மேற்கொண்டார். 2002 -2003 இடைப்பட்ட காலத்தில்லவர் பிரித்தானியாவுக்கு இரண்டு விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.

பிரித்தானிய பிரதமர் ரொனி பிளயரை டவுனிங் ஸ்றீற் அலுவலகத்தில் றணீல் சந்தித்த ஒரு விஜயத்திலும் நான் செய்தியாளனாகக் கலந்து கொண்டிருந்தேன்.

(பிரித்தானியாவுக்கான இலங்கையின் தூதரக அதிகாரி மற்றும் அப்போதைய பிரதமரின் ஊடகப் பிரிவின் முக்கியஸ்த்தருடன் குருபரன்)

அமெரிக்க விஜயத்தைப் போன்றே பிரித்தானிய விஜயத்தின் போதும் பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்பு, அபிவிருத்தி என பல விடயங்கள் இருதரப்பாலும் பேசப்பட்டன. இதில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பிரிட்டிஷ் காவற்துறையினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. மெட்ரோ பொலிற்றன் காவற்துறை மற்றும் பிரித்தானியப் புலனாய்வுத்துறை ஆகியவற்றுடன் விசேட சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. முன்னர் அமெரிக்க விஜயத்தின் போது எவ்வாறு பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் ஊடக தரப்பினருக்குத் தெரியாது மறைக்கப்பட்டனவோ அதுபோன்றே இந்த விஜயத்தின்போதும் மேற்கொள்ளப்பட்ட பல இரகசிய உடன்படிக்கைகளும் சந்திப்புகளும் ஊடகவியலாளர்களுக்குத் தெரியாது மறைக்கப்பட்டன. பிரித்தானியக் காவற்துறையுடனான சந்திப்புக் குறித்து எனக்கும் தெரிய வந்ததனால் அவை குறித்து ஊடகங்களில் அறிக்கையிட வேண்டாம் எனக் கேட்கப்பட்டும் இருந்தோம்.

21 டிசம்பர் (ஆண்டு) இந்திய விஜயம் ஒன்றையும் றணில் மேற்கொண்டிருந்தார். அப்போதைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய், துணைப்பிரதமர் அத்வானி, வெளிநாட்டமைச்சர் யஸ்வந்சின்கா, அருண்ஜெட்லி உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். பிரதமர் வாஜ்பாயுடனான சந்திப்பில் பாதுகாப்பு மற்றும் இருநாட்டு வர்த்தகம் தொடர்பில் றணில் உடன்பாடுகளை எட்டியிருந்தார். இது பற்றி டெல்லியில் இருந்து யு.கு.டீ கீழ்க்கண்டவாறு செய்தி வெளியிட்டு இருந்தது.

* PM meets Indian leaders> focus on trade and defence ties

NEW DELHI> (AFP) - Prime Minister Ranil Wickremesinghe began a series of meetings with India's political leadership here yesterday> the first day of an official visit aimed at boosting defence and economic ties.

First to arrive at the Prime Minister's hotel suite was Indian Foreign Minister Yashwant Sinha> who held talks with the Prime Minister for about 40 minutes.

Sinha declined afterwards to divulge the contents of the discussions, merely saying they were part of the "ongoing process of consultations between India and Sri Lanka".

Prime Minister, Wickremesinghe who arrived here late Sunday, then held a 45-minute meeting with Deputy Prime Minister Lal Krishna Advani before setting off for talks with Prime Minister Atal Behari Vajpayee.

Wickremesinghe also met Commerce Minister Arun Jaitley. Today, the last day of his visit, he will hold talks with the civil aviation and petroleum ministers> as well as opposition leader Sonia Gandhi.

Officials in Sri Lanka said at the weekend that the talks with Vajpayee would focus on a Comprehensive Economic Partnership Agreement to upgrade the free trade pact between the two South Asian neighbours. Sri Lanka was expected to request more training opportunities for its military personnel in prestigious Indian defence colleges, while New Delhi has offered to sell more military-related hardware to the island.

Wickremesinghe's visit comes four days after Sinha attended a meeting in Colombo of a joint commission that reviews the entire gamut of bilateral relations.

2002ல் கைச்சாத்தாகிய யுத்த நிறுத்த உடன்பாடு மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு நோர்வே ஏற்பாட்டாளர் அந்தஸ்த்தில் இருக்க ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், அமெரிக்கா ஆகிய இணைத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தன. இந்தவகையில் இந்திய விஜயத்தின் பின் உடனடியாகவே 2002 டிசம்பர் 30 ஆம் திகதி றணில் யப்பானுக்கும் பயணமாகினார்.

றணில் சமாதானப்பேச்சுவார்த்தைகளுக்குச் சமாந்தரமாக இணைத் தலைமை நாடுகளையும், அவற்றோடு முரண்டு பிடித்துக்கொண்டிருந்த இந்தியாவையும் இலாவகமாகக் கையாளும் இராசதந்திரத்தைக் கைப்பிடித்தார்.

அதே நேரம் உள்நாட்டில் விடுதலைப் புலிகள் தாமாகவே சமாதான முயற்சிகளுக்கு எதிரானவர்களாக மாறக்கூடிய களச் சூழ்நிலைகளை உள் நாட்டில் றணில் உருவாக்கினார்.

விடுதலைப்புலிகள் மாற்றுக் கருத்தாளர்கள் மற்றும் மாற்றுத் தமிழ் அரசியற் கட்சிகளின் உறுப்பினர்கள் மீது நடத்தும் தாக்குதல்களைக் கண்டும் காணாது அனுமதித்து வந்தார். இதனால் தமிழ்த்தரப்புகளிடம் இருந்தே நாளாந்தம் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடுகள் செல்லுகின்ற நிலை உருவானது. சமாதானகாலத்தில் விடுதலைப்புலிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரும் சர்வதேச நாடுகளின் தூதரகங்களை நாடி அவர்களிடம் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்த முறைப்பாடுகளைத் தெரிவிக்கத் தொடங்கினார்கள். சமாதானத்தை உருவாக்க முயன்ற சர்வதேசத்திற்குத் தமிழ்த் தரப்பினர் மூலமே புலிகள் வன்முறையாளர்கள் என்பதனை றணில் சொல் லி வைத்தார். இது அவரது மாமனார் ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் இராச தந்திரத்திற்கு ஒப்பான நடவடிக்கையாகும். றணிலின் இராசதந்திரம் புலிகளை இந்திய ராணுவத்துடன் மோத வைத்து புலிகளையும் ஈழத்தமிழர்களையும் இந்தியாவின் நிரந்தர எதிரிகளாக்கிய ஜே. ஆரின் சாமர்த்தியத்திற்கு ஒப்பானது.

சமாதான காலத்தில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் காரணமாகவும் இணைத்தலைமை நாடுகள் விடுதலைப்புலிகள் மீது அவநம்பிக்கை அடைந்திருந்தனர்.

மறுபுறம் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் நீறுபூத்த நெருப்பாக இருந்த முரண்பாடுகள் தொடர்பாகவும் றணில் கவனம் செலுத்தி எண்ணை வார்க்கத் தொடங்கினார்.

யுத்த நிறுத்த உடன்பாடு கைச்சாத்தாவதற்கு முன்பு இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினர் கிழக்கின் அப்போதைய சிம்ம சொப்பனம் எனக் கருதப்பட்ட கருணா அம்மானை கொல்வதற்கான திட்டங்களைப் பூர்த்தி செய்திருந்தனர். இதனை அப்போது சமாதானப் பேச்சில் கலந்து கொண்ட அரச தரப்பினருடன் தனிப்பட்ட வகையில் உரையாடும் போது அறிந்துகொண்டேன். (இது கருணாவுக்கும் தெரியும்) 2002 பெப்ரவரி இறுதிவாரத்தில் கொல்லப்பட இருந்த கருணாவின் விதி யுத்த நிறுத்த உடன்பாட்டால் மாற்றி அமைக்கப்பட்டது. யுத்த நிறுத்த உடன்பாடு காரணமாக அந்தத் திட்டத்தை உடனடியாகவே கைவிடும்படி றணில் விக்கிரமசிங்க கிழக்கின் அப்போதைய தளபதி சாந்தகோத்தாகொடவுக்கு உத்தரவிட்டு இருந்தார். ( இது குறித்து கருணாவுக்கும் இப்போதும் உயிருடன் இருக்கும் புலிகளின் தலைவர்களுக்குத் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.)

இந்த நிலையில் ஏற்கனவே 2001ன் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் பின் தலைமைக்கு தெரியாமல் தனது படையணியுடன் நடந்து மட்டக்களப்பிற்கு சென்ற கிழக்கின் தளபதியான கருணா அம்மானுக்கும் புலிகளின் தலைமைக்கும்; இடையில் ஏற்பட்டு இருந்த கருத்து முரண்பாடுகளைத் துல்லியமாக அறிந்து கொண்ட றணிலும் அவரின் நெருங்கிய உதவியாளர்களும் அதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர். ஆனால் துர்ப்பாக்கியம் இந்த முரண்பாட்டை தீர்த்து பலமான ஒற்றுமையை கட்டி எழுப்புவதில் புலிகள் தோல்வி அடைந்திருந்தனர்.

காரணம்; புலிகளின் தலைமை கருணாவோடு தமக்கு இருந்த முரண்பாட்டை தீர்பதற்கு புலனாய்வின் ஊடான காய்நகர்த்தல்களையே மேற்கொண்டிருந்தனர். அதற்காக தம்மோடு இருந்த முரண்பாட்டைக் கருத்திற்கொண்டு சமாதான பேச்சிற்கு கருணாவை அனுப்பிவிட்டு அவர் வெளிநாட்டில் இருக்கும் வேளையில் அவருக்கும் கரிகாலனுக்கும் பதில் பானு, றமேஸ், கௌசல்யன் போன்ற தமக்கு நெருக்கமான தளபதிகளை கிழக்கில் பலம்பெறச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

ஆனால் கிழக்கை ஏறத்தாள 15 வருடங்களாகத் தனது கிடுக்கிப் பிடியில் வைத்திருந்த கருணாவுக்கு இவை புரியாமலுமில்லை. சமாதானப் பேச்சிற்கு வெளிநாடுகளுக்குச் சென்றாலும் கூட கிழக்கின் கட்டுப்பாட்டைத் தனது கையடக்கத் தொலைபேசியில் வைத்தேயிருந்தார்.

இரண்டாவது தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக்காலத்தின் போது கருணாவுக்கும் விடுதலைப்புலிகளின் தலைமைக்கும் இடையிலான விரிசல் இன்னும் வெளிப்படையாகத்தெரியத் தொடங்கியது.

மூன்றாவது ஒஸ்லோப் பேச்சுவார்த்தையின் போது ஒருநாள் கருணாவோடு உரையாடும் போது எமது வானொலிக்கான சிறப்புப் பேட்டி ஒன்றைத் தருமாறு கேட்டிருந்தேன். (கருணா இதனை வாசித்தால் அவருக்கு ஞாபகம் வரக்கூடும்) அப்பொழுது அவர் சிரித்துக் கொண்டு கூறினார்: 'குருபரன் உங்கள் வானொலி பற்றி நிரம்பக் கேள்விப்பட்டிருக்கிறேன். நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் என்னை ஊடகங்களுக்கு செவ்வி கொடுக்க வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். பாலா அண்ணையிடம் கேளுங்கள். அல்லது தமிழ்ச் செல்வனிடம் கேளுங்கள் எனச் சொன்னார். போர் நிலவிய காலத்தில் வீறு கொண்ட' தமிழ் இளைஞர்களின் ஆதர்ச புருஷனாகக் கருணா இருந்ததை எவரும் மறுக்க முடியாது. கருணாவின் பேட்டி எமது வானோலி நேயர்களை வேகுவாகக் கவர்ந்திருக்குமென்பதில் சந்தேகமற்றிருந்தேன். அதனால் அவரிடம் வற்புறுத்திக் கேட்டதன் பின்பு எமது உரையாடலின் பின்பு சிறு பேட்டி ஒன்றைத் தந்தேயிருந்தார். அது உடனடியாகவே தொலைபேசிவழியாக எமது வானொலியில் ஒலிபரப்பானது.

இந்த உரையாடலின் பின்பு கருணா விரைவில் புலிகளில் இருந்து உடைந்து செல்லக்கூடும் என்ற என் எண்ணம் வலிமை அடைந்திருந்தது. இக்காலத்தில் அரசாங்க படைகளின் அப்போதைய கிழக்கின் தளபதியும் பின்னர் ராணுவத் தளபதியாக இருந்தவருமான சாந்தகோத்தாகொடவும் அரச தரப்பிற் பேச்சில் கலந்து கொண்டிருந்தார்.

மூன்றாவது ஒஸ்லோப் பேச்சுவார்த்தை என நினைக்கிறேன். அமைச்சர் மிலிந்த மொறகொட, கிழக்கின் படைத்தளபதி சாந்தகோத்தாகொட மற்றும் ஊடகவியலாளர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்தோம். அவ்வேளையிற் பலவிடயங்கள் பேசப்பட்ட போதும் உங்களுக்குப் பிடித்தமானவர் யார் என்ற கேள்வி ஒன்றுக்கு அரசாங்க அமைச்சர் மிலிந்த மொறகொடவும் கிழக்கின் தளபதி சாந்தகோத்தாகொடவும் கருணாதான் தமக்கு பிடித்தமானவர் எனப் பதிலளித்திருந்தனர். ஒருகாலத்தில் வன்னிக் களமுனையில் நேருக்கு நேர் மோதிய இருவரும் இப்போ ஒரே மேசையில் பேசுகிறோம். அவரிடம் இராணுவத்திறமைகள் மட்டுமே உண்டு என நினைத்தோம் ஆனால் அவரிடம் நல்ல அரசியல் சிந்தனையும் பார்வையும் ஆற்றலும் இருப்பது வியப்பாக உள்ளது. பேச்சுவார்த்தை மேசையிலும் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசுகிறார் எனக் கூறினார்கள்.

இந்த உரையாடலும் கருணா மெல்ல மெல்லப் புலிகளின் கூண்டில் இருந்து நகருகிறார் அல்லது நகர்த்தப்படுகிறார் என்பதனைத் தெளிவாக்கியது. ஓவ்வாரு பேச்சுவார்த்தகளின் போதும் அரசாங்கத் தரப்பினர் கருணாவுடன் தனியாக பேசுவதற்கு முயன்றனர் அல்லது பேசினர் என்பது உண்மையானது. இதனை இப்பொழுதும் கருணா மறுக்க மாட்டார் என நம்புகிறேன்.

இவை மட்டுமல்லாது மூன்றாவது பேச்சுவார்த்தையின் பின்பு கருணா வன்னி செல்வதனைத் தவிர்த்திருந்தார். ஓவ்வொரு தடவையும் கிழக்கிற்கு செல்லும் உலங்கு வானூர்தி அவரையும் அவரது உதவியாளர்களையும் நேரடியாகவே கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அழைத்து வரும். பேச்சு வார்த்தை முடிந்ததும் கருணா குழுவினரை விமான நிலையத்தில் இருந்து மீண்டும் உலங்கு வானூர்தி மட்டக்களப்பிற்கு அழைத்துச் செல்லும்.

இவ்வாறு அரசாங்க மற்றும் இராணுவத் தரப்பினருடனான பயணங்களும் கருணா சாந்த கோத்தகொட மற்றும் மிலிந்த மொறகொட ஆகியோருக்கிடையில் நட்பு விரிவடைய வளர காரணமாயிருந்தன.

இந்தவிடத்தில் சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளின் நிர்வாகம் நேரிடையாக அல்லது அவர்களின் அனுசரணையுடன் மேற்கொண்ட அபிவிருத்திப்பணிகளில் கிழக்குமாகாணம் புறக்கணிப்புக்களை எதிர் கொண்டிருந்தமையையும் கவனிக்க வேண்டும்.

சமாதான காலத்தில் வன்னியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட சில அபிவிருத்திகள், ஆடம்பரவாழ்வு நோக்கிய நகர்வுகள் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு இருக்கவில்லை. இந்த ஏற்றத்தாழ்வுகளை அரச தரப்பினர் கருணாலுடனான தமது உரையாடல்களின் போது அவ்வப்போது சொல்லிப் பிரதேச வாதத்தை தூண்டும் வேலைகளையும் சிறப்பாக மேற்கொண்டனர்.

இவை ஒருபுறமாக நடந்து கொண்டிருக்கும் போது மறு முனையில் விடுதலைப்புலிகளின் பொருட்கொள்வனவு மற்றும் வியாபாரச் செயற்பாடுகள் தொடர்பாக தராளவாதப் போக்கை றணில் கடைப்பிடித்தார். தாராளவாதம் என்று சொல்லும் போது வன்னிக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் தங்குதடையின்றி அனுப்பினார். சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளால் முன்மொழியப்பட்டவர்கள் அனைத்து வியாபார நடவடிக்கைகளிலும் இறங்கினர். கொக்கோகோலா, பால்மா வகைகள், உரவகைகள், வாகன உதிரிப் பாகங்கள், வாகனங்கள் எனப்பலவகையான, பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களின் நேரடி முகவர்களாகச் செயற்படத் தொடங்கினர். இதனால் சமாதான காலத்தில் வன்னிப்பகுதி ஒரு குட்டிச்சிங்கப்பூராக மாறியிருந்தது என பலரும் கூறத்தலைப்பட்டிருந்தனர். முக்கியமான வீதிகள் யாவும் 'கம்பள' வீதிகளாக மாறின. கொழும்பில் புதிதாக இறக்குமதி செய்யப்படும் புதிய ரக வாகனங்கள் வன்னியிற் புலிகளின் தளபதிகளிடமும் உடனே இருக்கும்.

கொழும்பில் இருக்கும் ஆடம்பர வீடுகளுக்கு ஈடான வீடுகளாக தளபதிகள் தங்கும் வீடுகள் மற்றும் அவர்களின் அலுவலகங்கள் மாற்றம் அடைந்தன. புலிகளின் 90 வீதமான அலுவலகங்களிற் பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் உபயோகத்திற்கு வந்தது. மென்பானங்கள் தாராளமாக கிடைத்தன. புலிகளின் பொறுப்பாளர்களின் அலுவலகங்களில் நவீன மடிக்கணணிகள் பெருமளவுக்கிருந்தன. பணம் கரைபுரண்டோடியது. காரணம் வன்னிக்குச் செல்லும் பொருட்களுக்கும் வன்னியைத் தாண்டி யாழ் செல்லும் பொருட்களுக்கும் புலிகள் விதித்த வரி மூலம் பெருமளவான பணத்தைப் பெற்றுக் கொண்டிருந்தனர்.

இவற்றை நான் இங்கு சொல்வதற்காரணம் அரசியல் ரீதியானது. என்னேனில் ஜே.வீ.பீ உள்ளிட்ட இலங்கையின் கடும் போக்காளர்கள் பலர் றணிலின் இந்தத் தாராளவாதத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தபோதும் றணிலின் இந்தத் தாராளவாதம் 2002ற்கு பின்பு புலிப்போராளிகளிடம் குறிப்பாக படைத் தலைவர்களிடம் முன்பிருந்த போராடும் உணர்வை மழுங்கடிப்பதில் பங்காற்றியது. பல தளபதிகள் திருமணவாழ்வில் நுழைந்திருந்தனர் பெற்றோராகியிருந்தனர். ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட காட்டு வாழ்க்கை திடீரென சகல சௌபாக்கியங்களும் நிறைந்த நகர வாழ்வாக மாறிய போது அதனை எதிர்கொள்ளும் அரசியல் ரீதியான அறிவூட்டல்களோ அல்லது முன்னேற்பாடுகளோ புலிகளிடம் இருந்திருக்கவில்லை.

யுத்தகாலத்தில் கிழக்கு எப்படி மிகவும் பின்தங்கியிருந்ததோ அதே நிலைமைதான் சமாதான காலத்திலும் இருந்தது. வீதிகள் குன்றும் குழியுமாக இருக்க வன்னி வீதிகள் கம்பளத்தரைகளாக மாறி இருந்தன.

இங்கே மிக முக்கியமான பதிவொன்றைச் செய்தாக வேண்டும். சுனாமிப் பேரலையின் பின்பு கனேடியத் தேசிய வானொலி ஒன்றின் செய்தியாளரை வடக்கு கிழக்கிற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பொன்று ஏற்பட்டது. ஒருவாரப் பயணம். முதலில் வடக்கிற்கு சென்றோம் அங்கே அனர்த்த கால அவசர சேவைப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதற்கான பாரிய அலுவலகம் ஒன்று கட்டப்பட்டு நவீன மடிக்கணனிகள் மூலம் தரவுகள் பதியப்பட்டு ஒரு அரசாங்கம் எப்படிச் செயற்படுமோ அந்தத்தரத்திற்கு புலிகள் செயற்பட்டார்கள்.

ஆனால் கிழக்கின் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் மிக வசதியற்ற நிலைமைகளிலேயே பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. சம்பூரில் புலிகளின் அலுவலகத்தில் இருந்த திருமலைத் தளபதி சொர்ணம் மற்றும் எழிலன் ஆகியோருடன் உரையாடும் போது குறிப்பாக சொர்ணத்துடனான உரையாடலின் போது இந்த நிலைமை குறித்து அவர் மிகவும் வேதனையுடன் காணப்பட்டார்.

குறிப்பாக சொர்ணத்துடன் உரையாடும் போது 'வளங்கள் சரியாகப் பகிரப்படாமை என்ற பிரச்சனை வெளியில் மட்டும் அல்ல புலிகளிடமும் இருக்கிறது. இதனைச் சீர்செய்ய முயற்சிக்கிறோம் என்ன செய்வது கிழக்கின் நிலமை இவ்வாறாகத்தான் தொடர்கிறது' எனக் கூறினார். 'இது எனது தனிப்பட்ட கருத்து ஊடகச்செய்தியிடலுக்கு அல்ல' எனவும் அவர் கூறினார். திரு பதுமன் அவர்களுக்குப் பின் நியமிக்கப்பட்ட சொர்ணமும் அவர்களூம் கூடச் அதிருப்திகளைத் தன்னகத்தே கொண்டிருந்தார் என்பதனை அவரது உரையாடல் புலப்படுத்தியிருந்தது.

இதற்கு இன்னும் ஒரு உதாரணத்தை இங்கு சொல்லலாம். திருமலையின் மூதூர் சம்பூர் பகுதியின் உட்கிராமம் ஒன்றின் ஊடாக செல்லும் போது மிகவும் பின்தங்கிய பகுதியின் ஊடாக ஒரு பெண் தனது சிறு குழந்தையை இடுப்பில் சுமந்தபடி ஒரு பொதியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை எமது வாகனத்தில் ஏற்றினோம் அவருடன் உரையாடுகையில் அவர் கூறினார் கிரமத்தில் இருந்து சிறு நகரத்தில் இருக்கும் சிறு வைத்தியசாலைக்கு செல்வதென்றாலோ அல்லது பொருட்களை பெறுவதற்கு செல்வதென்றாலோ 5 கிலோமீற்றர் தூரம் நடக்க வேண்டும். போக்குவரத்து எதுவும் இல்லை என்றார். ஆனால் சமாதான காலத்தில் இப்படியான ஒரு சூழலை வன்னயின் எந்தக் கிராமத்திலும் பார்க்க முடியாது. கல்வி சுகாதாரம், மருத்துவம் சமூக முன்னேற்றம், அபிவிருத்தி என்னபன யுத்தகாலத்தில் எப்படி இருந்தனவோ அதே நிலைதான் சமாதானம் நிலவிய 3வருடகாலத்திலும் நிலவின.

சமாதான காலத்தில் திடீரெனெ ஊதிப்பருத்த வன்னியின் நிலமைகளுக்கு ஈடாக கிழக்கின் நிலமைகளை முன்னேற்றுவதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பு ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுத்திருந்ததாக என்னால் அந்தக்காலத்தில் உணர முடியவில்லை. கிழக்கு தொடர்பாக அவர்கள் அக்கறையற்றிருந்தனரோ என்ற ஆழமான கேள்விக்கும் கருணாவின் பிளவுக்கான சூழ்நிலைகளுக்கும் தொடர்புகள் உள்ளன.

கருணா புலிகளுடன் கொண்டிருந்த முரண்பாட்டிற்கு தனது தவறுகளை மறைப்பதற்கு, காட்டு வாழ்வில் இருந்து நகர வாழ்வுக்கு தன்னை மாற்றுவதற்கு பிரதேச வாதம் என்ற ஒரு அரசியல் முலாத்தை பூச இந்த நிலமைகள் வழிவகுத்தனவேனவும் கூறலாம். இது பற்றி கருணாவின் பிளவின் பின் எமது வானொலி செய்தியில் ஒலிபரப்பான கருணா தரப்பினரின் அறிக்கை ஒன்றில் அடிக் குறிப்பாக 20 வருடம் புலிகளின் தலைமை குறித்தும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் அலட்டிக் கொள்ளாத கருணாவுக்கு இப்போதுதானா தவறுகளாக தெரிகிறது என கேள்வி எழுப்பி இருந்தேன். அன்று மாலை தொலைபேசியில் இணைந்து கொண்ட மார்க்கன் என்ற தளபதி 'அண்ணை புலிகள் மட்டும் தான் கொழும்புக்கு வந்து சுடுவார்கள் என நினைக்காதீர்கள் நாமும் கொழும்பு வந்து சுடுவோம்' என மிரட்டினார்.

இவ்வாறான சூழலிலேயே பிரதேசவாதம் என்பதனைக் கையிலெடுத்த கருணா தனக்கென தனியான சாம்ராஜ்யத்தைக் கிழக்கில் உருவாக்கியிருந்தார். வன்னியில் இருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகளை அவர் 2002ன் பின் ஏற்றதாக எனக்கு தெரியவில்லை. பணச் சேகரிப்பு ஆட்திரட்டல் உள்ளிட்ட யாவுமே கருணாவின் கட்டுப்பாட்டுள் வந்தது. பேச்சுவார்த்தை காலத்தில் அரசாங்கப் படைத்தரப்போடு ஏற்பட்ட நெருக்கமும் அரச தரப்பினரோடு ஏற்பட்ட புரிந்துணர்வும் அவரது தற்துணிச்சலை இன்னும் அதிகரித்தன. இதன் பின்னான அதிர்ச்சிதரும் விடயங்கள் அடுத்த பாகத்தில் தொடரும்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நான் மேலே குறிப்பிட்டிருந்ததைப்போல கருணாவை புலிகள் அமைப்பில் இருந்து பிரிப்பதற்கு சிவராம் ஆற்றிய பங்களிப்பு பற்றியும். சிறிதளவு குருபரன் தன்னுடைய நான்காவது பதிவில் தொட்டிருக்கிறார். ஆனால் ரணிலுடன் இணைந்து இவரும் கருணாவை பிரிப்பதற்கு செய்த வேலைகளை அவரே எழுதுவாரென எதிர்பார்க்க முடியாது

எனது தொடரின் நான்காவது பகுதியை, எனது தொடரின் முன்னைய பகுதிகளை வாசித்த நண்பர் ஒருவர் முன் வைத்த விமர்சனத்தையும் அதற்கான பதிலையும் தந்து தொடர விரும்புகிறேன். ஏனேனில் நீண்டு செல்லவுள்ள தொடர முழவதும் கீழ்க்கண்டவாறான விமர்சனத்தை பலர் முன்வைக்க விரும்புவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் தமிழர்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் யாவரும் இனிவரும் காலத்தில் மரபுவழியான சிந்தனை முறைகளில் இருந்து வெளியே வந்து கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அணுக வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

நண்பரின் விமர்சனம்:

அன்பின் குருபரன்

தங்களின் மௌனம் கலைகிறது தொடரை இரசித்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன்.

சுவாரஸ்யமான தகவல்கள் பலவற்றை எதிர்ப்பார்க்கிறோம்.

ஆனால், ஊடகவியலாளனாய், தேசியத்தை நேசிக்கும் உங்களுக்கு, எல்லா உண்மைகளையும் சொல்வதால், நீண்ட கால அடிப்படையில் ஏற்படும் விளைவுகள் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை

உதாரணமாக தொடர் 3 இல் கிழக்கு புறக்கணிப்பு பற்றி எழுதியிருந்தீர்கள் சில உண்மைகள் இருந்தாலும், அவை பற்றி விபரிப்பது இப்போது பொருத்தமானாதா என்ற கேள்வி என்னுள் எழுகிறது. பிரதேச வாதம் என்கிற விஷ வித்து கருணாவின் சொந்த நலன்களுக்காக எண்ணெய் ஊற்றப்பட்டது (அதற்காக யாழ்ப்பாணத்தவரிடம் பிரதேசவாதம் இல்லை என சொல்ல வரவில்லை) இப்போதும் அவரது அடிபொடிகளால் தொடர்ந்து வளர்க்கப்படுகிறது.

நீங்கள் சொல்லும் சில கருத்துகள் (உண்மையாக இருப்பினும்) தவிர்க்கப்படக்கூடியன என்றே நான் கருதுகிறேன். 'பொய்மையும் வாய்மை இடத்து....'

உதாரணமாக சொர்ணம் அவர்களது கருத்து தவிர்க்கப்ப்ட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.)

நான் அறிந்த வரை வேண்டுமென்று ஒருபோதும் இயக்கம் கிழக்கைப் புறக்கணித்ததில்லை என இன்றும் நம்புகிறேன். பிரதேச வாதம் அங்கும் சில இடங்களில் இருந்தாலும் கூட.

எனது பதில்:

நண்பரே உங்கள் ஆதங்கமும் கவலையும் எனக்குப்புரிகிறது. ஆனால் நீண்ட மனப்போராட்டத்தின் பின்பே எனது மௌனத்தைக் கலைப்பதென்று தீர்மானித்தேன். இப்பொழுது கலையாத மௌனம் பின்னர் எப்போழுது கலைவதிலும் அர்த்தமில்லை பயனுமில்லை.

இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து தொடங்கிய தமிழர்களின் போராட்டம் (30 வருட அகிம்சைப் போராட்டமும் அதன் பின்னரான 30 வருட ஆயுதப் போராட்டமும்) முள்ளிவாய்க்காலில் உலகமெல்லாம் வேடிக்கை பார்க்க கடலோடும் காட்டோடும் சங்கமித்த அந்தத் துயரத்தை, காயத்தை ஆற்றுவதற்குள்ள ஒரே ஒரு வழி தமிழ் மக்கள் தங்கள் கடந்த காலத்தை தயவுதாட்சண்யமற்று மீள் பார்வை செய்வதாகும்.

எமது போராட்டம் இப்படி ஒரு துயர நிலைக்குச் சென்றதற்கான காரணம்கூட உரிய நேரத்தில் நாங்கள் எங்களைச் சுயவிமர்சனம் செய்யாததுதான்.

பிரதேசவாதம், சாதியம் மற்றும் எனைய சிறுபான்மை இனங்கள் குறித்தெல்லாம் கடந்த முப்பது வருடங்களில் கொள்கை ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தவறுகளை விட்டிருக்கிறது. இந்தத்தவறுகளை அலசி ஆராய்வதும் பாடங்களைக் கற்றுக்கொள்வதும் தேவையானது.

தமிழ்தேசியம் இனிமேலும் இவற்றைச் செய்யாவிட்டால்... அது இன்னும் மாயைக்குள்தான் இருக்கிறது என்று அர்த்தமாகும். நாங்கள் மாயைகளில் இருந்து விடுபடாவிட்டால் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு எமக்கு விடிவு இல்லை. என்றென்றைக்கும் அடிமைப்பட்டு அல்லலுறும் இனமாக நாங்கள் மாறிவிடுவோம்.. அதனால் தான் என் மனப்பதிவுகளை அனுபவங்களை என் கண் முன்னே நிகழ்ந்தவற்றைப் புனைவின்றி ஒழிவின்றி மறைவின்றி உள்ளதை உள்ளவாறு சொல்லத் துணிந்தேன்.

சிலவேளை கருத்துச்சுதந்திரத்திலும் சனநாயகத்திலும் நம்பிக்கை அற்றவர்களிடமிருந்து சில இடர்களைச் சந்திக்க நேரிடலாம். ஆனாலும் ஒரு நேர்மையான ஊடகவியலாளன் என்ற வகையிலும், அதற்கும் அப்பால் காலம் காலமாய் ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு வரும் ஒரு இனத்தின் உறுப்பினன் என்ற வகையிலும,; சனநாயகத்திலும் கருத்துச் சுதந்திரத்திலும் நம்மிக்கை கொண்ட உங்களைப் போன்றவர்களின் ஆதரவு தரும் பலத்தினாலும் அவற்றையும் எதிர் கொள்ளத் துணிந்திருக்கிறேன். அதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். என்மீது கொண்ட அக்கறைக்கும் எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்திற்கும் நன்றி.

இனிவரும் தொடர்கள் இன்னும் பல மாயைகளைத் தகர்க்க இருக்கின்றன. அவை குறித்தும் உங்கள் இதயத்திலிருந்து வரும் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன். தமிழர்கள் தங்களைத் தாங்களே விமர்சித்துக்கொள்ளும் போது வரும் கவலை தமிழர்கள் தங்களைத் தாங்களே விமர்சித்துக் கொள்ளாததால் வந்த இழப்புடனும் தோல்வியுடனும் ஒப்பிடும்போது பெரிதில்லை. காயங்களை மூடிக்கட்டுவதல்ல திறந்து விட்டு ஆற்றுவதே நவீன மருத்துவம்.

இந்தப்பதிலின் ஒளியில் இனிவரும் பகுதிகளையும் வாசிக்குமாறு உங்களையும் உங்கள் போன்ற ஏராளமானவர்களையும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

கிழக்கின் உடைவும் கருணாவும் தராக்கியும்:-

கருணா கிழக்கில் தனக்கென உருவாக்கியிருந்த அதிகார மையத்திற்கெனத் தனியான ஊடகம் ஒன்று அவசியம் என அவரைச்சார்ந்த பலரும் வற்புறுத்தியிருந்தனர். அச்சு ஊடகமொன்றும் இணையமொன்றும் ஆரம்பிக்கப்பட வெண்டுமென என அவரின் ஆதரவாளர்களும் ஆலோசகர்களும் விரும்பியதன் விளைவாக மீனகம் என்ற இணையமும் (தற்போது இயங்கும் மீனகம் இணையம் அல்ல) தமிழ் அலை என்ற பத்திரிகையும் அன்று உருவாகின.

இவ்விடத்தில் கருணாவின் அதிகார மையத்துடன் தராக்கி என அழைக்கப்பட்ட பிரபல்யமான ஊடகவியலாளரான அமரர் தர்மரட்ணம் சிவராம் அவர்கள் கொண்டிருந்த வெளி உலகுக்குத் தெரியாத உறவு பற்றிச் சொல்லவேண்டியது எனது வரலாற்றுக் கடமையாகிறது.

ஊடகத்தளத்தில் தனது எழுத்துக்களில் ஒன்றுபட்ட தமிழ்த் தேசியத்தைத் தூக்கிப்பிடித்திருந்த அமரர் திரு சிவராம் அவர்கள் நடைமுறையில் எவ்வாறான தளம்பலைக் கொண்டிருந்தார் என்பதை நான் சொல்லப்போகும் விடயங்கள் தெளிவுபடுத்தும்.

தமிழ்த்தேசியம் தனது விடுதலைக்காகப் போராடுவது என்பது தனக்குள்ளேயுள்ள பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகப் போராடுவதையும் உள்ளடக்கும் என்பது பல ஊடகவியலாளர்களுக்கும் புத்திசீவிகளுக்கும் தெரியாமற்போன அல்லது தெரிந்தும் சுயநலத்தால் அதிகாரங்களுடன் இணைந்து சென்ற துயரத்தை எமது வரலாற்றிலும் காணநேர்ந்தது துரதிஷ்டம். இதற்குச் சிவராம் அவர்களும் விதிவிலக்கல்ல.

விடுதலைப் புலிகளிடம் மத்தியில் குவிந்திருந்த அதிகாரமும் பிரதேசவாதம் குறித்த விழிப்புணர்வின்மையும் கருணா கிழக்கில் தனது தற்காலிக சாம்ராஜ்யத்தைக் கட்டுவதற்குக் களமமைத்துக் கொடுத்திருந்தன. இன்னும் துயரம் என்னவெனில் கருணாவின் சாம்ராஜ்யத்தை தற்போது இலங்கை அரசு முழுவதுமாக எடுத்துக்கொண்டும் விட்டது.

இலங்கைச் சமூகங்களுள் பிரதேச வாதம் நிலவுவது வெள்ளிடை மலை. ஆனால் தமிழ் சமூகத்திற்கிருந்த வாய்ப்பான சூழ்நிலை என்னவெனில் அது விடுதலைக்காக எழுச்சியடைந்த போது பிரதேசவாதம் உட்பட அனைத்துப் பிற்போக்குத் தனங்களுக்கும் எதிராக கொள்கைத் தெளிவுகளையோ ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்களையோ வைத்து மக்களை அறிவூட்டி இருக்க முடியுமென்பதுதான். ஆனால் துரதிஷ்டவசமாக இத்தகைய நிறுவனமயப்பட்ட முன்னெடுப்புக்கள் கடந்த மூன்று தசாப்தத்தில் நிகழவில்லை போரைத்தவிர.

2004 மார்ச் மாதம் 3ஆம் திகதி கருணாபுலிகள் அமைப்பில் இருந்து வெளியேறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதற்கான அறிக்கையை அப்போதைய கிழக்கின் அரசியற்துறைப் பொறுப்பாளர் கரிகாலன் கையொப்பம் இட்டு வெளியிட்டு இருந்தார். ஆனால் இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்கு தனது முழமையான பங்களிப்பை திரு சிவராம் அவர்கள் வழங்கியிருந்தார் என்பது வெறும் வதந்தியன்று என்பதைக் கீழ் வரும் சம்பவத்தை வாசிப்பவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.

இந்த அறிக்கை வெளிவருவதற்கு முந்திய இரவு 10க்கும் 10.30ற்கும் இடையில் சிவராம் என்னுடைய 0777356036 என்ற டயலொக் கையடக்கத் தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு 'கருணா புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்டது. அதற்கான அறிக்கையும் தயாராகிவிட்டது. அதனை நீ நிகழ்ச்சிகளை இடையீடு செய்து வரும் முக்கிய செய்தியாக (டீசநயமiபெ நேறள) சூரியனில் ஒலிபரப்ப வேண்டும்'. எனக்கேட்டார். உடனே நான் என்னால் அவ்வாறு செய்ய முடியாது எனக் கூறினேன். புலிகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக என்னுடன் தொடர்புகொண்டு இதனை அறிவித்தால் அதனை வெளியிட முடியும் எனவும் இது பாரிய சிக்கலுக்குரிய விடயம் இதனை முதலில் தமிழ் ஊடகமொன்றில் வெளியிடுவது மேலும் சிக்கலை உருவாக்கும் எனச் சொன்னேன். உடனே அவர் நீயும் அச்சடித்த யாழ்ப்பாணத்தான் (ரிப்பிக்கல் யாழ்ப்பாணி) போலவே இருக்கிறாய் என விமர்சித்தார். இருவருக்கும் இடையில் தொடர்ந்த வாக்குவாதத்தின் பின் 'நீங்கள் இந்தச் செய்தியை உங்களது தமிழ்நெற்றில் வெளியிடுங்கள் அதனைக் கோடிட்டு நான் இச்செய்தியை ஒலிபரப்புகிறேன் எனக் கூறினேன். 'இல்லை அது முடியாத காரியம் எனச் சிவராம் கூறினார். அப்படியாயின் இதுவும் முடியாத காரியம் என்றேன் நான். சிவராமோ 'நீ எதற்குப்பயம் கொள்கிறாய் நாங்கள் தற்சமயம் தமிழ் அலை பத்திரிகைக் காரியாலத்தில் நிற்கிறோம். கருணா உள்ளிட்டவர்களும் கிழக்கின் ஊடகவியலாளர்களும் கூடவே நிற்கிறோம். அதனால் நீ பயப்படத் தேவையில்லை எனக் கூறினார். எனினும் நான் உடன்படவில்லை. பின்னர் இதுகுறித்து உறுதிப்படுத்தும் முகமாக கிழக்கின் ஊடகவியலாளர்கள் சிலரைத் நான் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் உண்மையிலும் தாங்கள் அன்று அங்கு இருந்திருக்கவில்லை எனவே கூறி இருந்தனர்.

ஓஸ்லோவில் இடம்பெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை சிவராம்-கருணா தொடர்பு தொடர்பாகத் தெளிவான சித்திரமொன்றைத் தந்திருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது சிவராமும் பிரசன்னமாகியிருந்தார். பேச்சு வார்த்தை தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காகவே வந்ததாக கூறிய சிவராம் கருணாவை விசேடமாகச் சந்திப்பதற்காகவே ஒஸ்லோ வந்திருந்தார். அவ்வாறு வந்த சிவராம் கருணாவுடன் தனியாகப் பல தடவைகள் பேசியிருந்ததனையும் ஊடகவியலாளர்களூடாக அறிந்திருந்தேன். ஒருதடவை இருவரும் உரையாடிக் கொண்டு இருந்தததை நேரிடையாகவும் கண்டிருந்தேன். இந்த சந்திப்புகளின் போது கிழக்கிற்கான முக்கியமாகக் கிழக்குப் புலிகளுக்கான தனியான ஊடகம் அவசியம் என்பதனை கருணாவுக்கு சிவராம் வலியுறுத்தி இருந்தார். அது குறித்து என்னிடம் ஒருமுறை பேசும் போதும் 'இவன் மொக்கனுக்கு நான் சொல்லித்தான் சில விடயங்கள் இப்போ புரிகிறது' எனக் கூறியதும் என் நினைவில் இருக்கிறது. அந்த வகையில் கருணா தரப்பினால் முன்னர் நடத்தப்பட்ட மீனகம் இணையம் மற்றும் தமிழ் அலை பத்திரிகையின் ஆரம்பம் என்பவற்றின் பின்னணியில் நின்றவர்களில் அமரர் சிவராம் முக்கியமானவர்.

2001 ஆம் ஆண்டில் ஜெயசிக்குறுவிற்குப் பின் தனது போராளிகளுடன் நடந்தே மட்டக்களப்புக்குத் திரும்பிய கருணாவுக்கு விடுதலைப் புலிகளின் தலைமையுடன் சில முரண்பாடுகள் ஏற்பட்டு இருந்ததனை திரு சிவராம் அவர்கள் நன்கு அறிந்தேயிருந்தார்.

2002ல் யுத்த நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டபோது நீண்ட இடை வெளிக்குப் பிற்பாடு புலிகளின் தலைவர் பிரபாகரன் நேரிடையாகக் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கானா மகாநாட்டில் இந்திய ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். உங்கள் போராட்ட வரலாற்றில் நீங்கள் எதிர் கொண்ட சிக்கலான சந்தர்ப்பம் அல்லது சவால் எது என அவர் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கேட்டிருந்தார். உண்மையில் இதற்குப் பதில், இந்திய அமைதிப்படைக் காலத்தில் புலிகளால் செய்யப்பட நித்திகைக் குள முறியடிப்பு என்பதாக இருக்கும் என அந்தப் பத்திரிகையாளர் எதிர்பார்த்திருந்தார். ஆனால் இந்தியப் பத்திரிகையாளரின் எதிர்பார்ப்புக்கு மாறாக, ஜெயசிக்குறு நடவடிக்கையை எதிர் கொண்டு முறியடிததனையே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சிலாகித்திருந்தார். இதன் போது ஜெயசிக்குறு நடவடிக்கையை வெற்றிகரமாக எதிர்கொண்ட கருணாவையும் அருகில் இருத்தி அவரையும் புகழ்ந்திருந்தார். இது குறித்து சிவராம் நோத் ஈஸ்ற் கரால்ட்டில் எழுதிய கட்டுரை ஒன்று கருணாவை சிவராம் அப்போதே குறி வைத்து விட்டதனை புலப்படுத்தியிருந்தது. புலிகளின் தலைவர் இவ்வாறு கூறியமை கிழக்கு மக்களையும் கருணாவையும் கௌரவப்படுத்தவே என்பதாக கருணாவை மெச்சி சிவராம் அக்கட்டுரையை வரைந்திருந்தார். இதன் தொடர்ச்சியாக மறைமுகமாகக் கருணாவை நாயகனாக கிழக்கின் உன்னத வீரனாக சித்தரிக்கும் வகையில் ஐந்து அல்லது ஆறு கட்டுரைகளை நோத்ஈஸ்ற் கரால்டில் சிவராம் எழுதியிருந்தார்.

2002ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் கருணாவால் ஏற்பாடு செய்யப்பட்ட புலிகளின் உயர் மட்ட உறுப்பினர்களுக்கான கருத்துப் பட்டறையின் பிரதான கருத்தாளராக விளங்கிய சிவராம் கிழக்கின் தனித்துவம் பற்றியும் புலிகளில் கிழக்கு போராளிகளின் இன்றியமையாமை பற்றியும் வலியுறுத்திப் பேசியிருந்ததனைக் கிழக்கின் ஊடகவியலாளர்கள் அறிவர்.

தவிரவும் வடக்கின் மாவீரர் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் கிழக்கின் மாவீரர் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்துடன் எவ்வளவு வேறுபட்டு இருக்கிறது என்ற ஒரு ஆய்வினையும் கருணாவிடம் சிவராம் வழங்கியிருந்ததாக பின்னர் அறிந்து கொண்டேன்.

இது போல் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் ஒரு முறை கிழக்கிற்கு விஜயம் செய்த போது அங்கு இடம்பெற்ற சந்திப்பில் சிவராம் கிழக்கு நிலமைகள் குறித்தும் கிழக்கு குறித்து புலிகளின் பாராமுகம் பற்றியும், கிழக்கின் தனித்துவம் பற்றியும் கூறிக் கடுமையாக விமர்சித்து இருந்தார். பதிலுக்கு சிவராம் குறித்து தமிழ்ச் செல்வன் அவர்கள் கடுமையான அதிருப்தி அடைந்து இருந்தார் எனவும் அந்தக் கருத்துப் பட்டறையில் கலந்து கொண்டவர்கள் என்னிடம் கூறி இருந்தனர்.

இங்கு ஞாபகத்திற்கு வரும் பிறிதொரு விடயத்தையும் பதிவிட வேண்டும். இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலத்தில் கருணாவின் கொலைப் பட்டியலில் சிவராம் இருந்தார். இது தொடர்பாக ஒருமுறை சிவராம் என் நண்பர் ஒருவருடன் உரையாடும் போது இந்திய அமைதிப்படைக் காலத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றைப் பற்றிக் கூறியிருந்தார். அக்காலத்தில் கருணா குழுவினரால் புளொட்டின் மத்திய குழு உறுப்பினரும் படைத்துறைச் செயலருமான கண்ணன் எனப்படும் ஜோதீஸ்வரன், புளொட்டின் மத்திய குழு உறுப்பினரும் அரசியற் துறைச் செயலாளருமான வாசுதேவா ஆகியோர் உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்டவர்கள் பேச்சுவார்தைக்கென அழைக்கப்பட்டுக் குண்டு வைத்தும் சுட்டும் கொல்லப்பட்டதாகவும் அக்குறித்த பேச்சுவார்த்தையில் சிவராமும் கலந்து கொள்ளக்கூடுமென எதிர்பார்த்திருந்த கருணா அந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைப் பார்த்த பின்னர் 'சிவராம் எங்கே' எனக் கேட்டிருந்ததாகவும் கூறிய சிவராம் 'இவனெல்லாம் மனிசனா' என அன்று கருணா குறித்துக் கடும் கோபத்தைக் கொண்டிருந்தார்.

இதற்கான பழிவாங்கலாக புலிகளை உடைக்கச் சிவராம் முயன்றிருப்பாரா எனச் சிவராமுக்கும் எனக்கும் நண்பரான ஒருவர் என்னிடம் கேட்டார்.

அல்லது கருணாவுக்குப் பிரதேசவாதத்தை ஊட்டி அவரைப்புலிகளிடம் இருந்து உடைத்துப் புலிகளைப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் வேறு சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் சிவராம் செயற்பட்டாரா?

இவற்றுக்கான பதிலைத் தேடுவதற்கு இன்னும் சில அனுபவங்களூடாகப் பயணிக்க விரும்புகிறேன்.

காரணம் புளொட் இயக்கம் கோலோச்சிய காலத்தில் அவ்வியக்கத்தில் இருந்த சிவராம் அதன் கிழக்கு பொறுப்பாளர்களுக்கு கிழக்கு மையப்பட்ட சிந்தனைகளை ஊட்டி கிழக்கில் இருந்து தலைமைகள் உருவாக வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில் 80களின் நடுப்பகுதியிலேயே புளோட் அமைப்பினுள் 'கிழக்கு புளொட்' என்ற கருத்தை முன்னிலைப்படுத்த முயன்று தோல்வி கண்டவர். அதனால் அவரை கிழக்கிஸ்த்தான் என நண்பர்கள் கேலி செய்த சந்தர்ப்பங்களும் உண்டு.

நல்ல ஆங்கில அறிவும் செறிந்த தமிழ் இலக்கிய அறிவும் கொண்டு ஒரு புத்துஜீவிக்குரிய பண்புகளை வெளிப்படுத்திய சிவராம் அவர்கள் ஒரு போராளிக்குரிய கடின உழைப்பினூடாக மெலெழுந்து அதிகார நிலைகளுக்கு வரக்கூடிய இயல்பைக் கொண்டிருக்கவில்லை என்பதை புளொட் அமைப்பில் இருந்தவர்கள் அறிவர்.

80களின் ஆரம்பத்தில் புளொட்டின் அதிகார மையத்தையும் தலைவர் உமா மகேஸ்வரனையும் விரைவாக நெருங்க முனைந்த போதும் சிவராம் அவர்களால் புளோட் இயக்கம் பலவீனப்பட்ட 84களின் பிற்பகுதியிலேயே உமாமகேஸ்வரனின் நம்பிக்கையை பெற முடிந்தது. இதன் விளைவாக 1990களில் அவ்வியக்கத்தின் அரசியல் கட்சியின் செயலாளரானார். 1999ன் இறுதிப் பகுதி புளொட்டின் உறுப்பினராக அதன் அரசியல் கட்சியின் செயலாளராக சிவராம் விளங்கியிருந்தார்.

ஆயினும் விடுதலைப்புலிகள் எழுச்சியடைந்தது வந்த காலத்தில் இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ் தேசியம் என்னும் எண்ணக்கருவின் அடிப்படையில் அவர் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியிருந்த இராணுவ ஆய்வுக்கட்டுரைகள் உள்ளிட்ட கட்டுரைகள் காரணமாக பிரபல்யமானார். தமிழ் ஈழப்பிரதேசங்களின் புவியியல் அமைப்பு பற்றிய தெளிவான அறிவு மற்றும் இராணுவ விடையங்களில் பரந்த வாசிப்பின் மூலம் பெற்றுக்கொன்ட நுண்ணறிவு காரணமாக அவரது கட்டுரைகள் வாசிப்பவர்களை ஈர்க்கக் கூடியனவாக இருந்தன. இந்த வகையில் சிவராம் அவர்கள் தனது கட்டுரைகள் மூலம் புலிகளின் முக்கியஸ்த்தர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

முன்னர் புலிகளை விமர்சித்த பல புத்திஜீவிகள் ஆய்வாளர்கள் ஊடகவியலாளர்கள் 2000 ஆண்டின் பின் புலிகள் எழுச்சி அடைந்திருந்த காலத்தில் அந்த அலையினுள் ஈர்க்கப்படிருந்தார்கள். அதற்குச் சிவராமும் விதிவிலக்கல்ல.

யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு அமைதி நிலவிய அந்தக்காலத்தில் முன்னர் புலிகளுடன் முரண்பட்டு இருந்த அல்லது அவர்களின் விரும்பப்படாதவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த பலருக்கு (நான் உட்பட) வன்னிக்குச் சென்று அவர்களுடன் பழகுவதற்கான உரையாடுவதற்கான சூழல் உருவாகிற்று.

இந்தச் சூழலைப் புரிந்துகொண்ட சிவராம் விடுதலைப் புலிகளை இன்னும் நெருங்க முயற்சித்திருந்தார். இயக்கத்தில் சர்வதேசப்பரிட்சயம் கொண்டிருந்த புத்திசீவிகளுக்கு நிலவிய வெற்றிடத்தையும் அவர் அறிந்தே இருந்தார். தனது ஆங்கிலக் கட்டுரைகள் மூலம் இலங்கையில் இருந்த அனைத்துலக இராசதந்திரிகளிடத்தும் அவர் பிரபல்யம் பெற்றிருந்தார்.

இன்றைக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருக்கிற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் முக்கிய பங்கை வகித்த சிவராம் அவர்கள் தமிழ் தேசியக்கூடமைப்பின் மூலம் புலிகளுக்கு சட்ட ரீதியான ஒரு குரலைக் கொழும்பில் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். வன்னிநாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் நெருக்கமான உறவை பேணிக்கொண்ட சிவராம் புளொட்டுடன் கடைசிக் காலத்தில் இருந்த சில முரண்பாடுகளால் புளொட்டைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணையவிடாமல் பாரத்துக்கொண்டார் எனப்பல நண்பர்கள் என்னிடம் கூறியிருந்தனர். புலிகளும் புளொட் தொடர்பாக ஆழமான வெறுப்புணர்வைக் கொடிருந்ததை சிவராம் கணக்கிட்டிருக்கவும் கூடும். ஒரு கட்டத்தில் ஊடகவியலாளர் நடேசனூடாக வீரகேசரியில் அன்ரன் பாலசிங்கம் அவர்களையும் சிவராம் கடுமையாக விமர்சித்தும் இருந்தார். அத்துடன் கிழக்கில் புலிகளின் நன்மதிப்பைப் பெற்றவரும் ஆங்கிலப் புலமை மற்றும் ஊடக அனுபவங்களோடு கூடிய புத்திஜீவித்தனத்தையும் அரசியல் ஆளுமையையும் கொண்டிருந்த ஜோசப் பரராஜசிங்கத்தை கடுமையாக விமர்சித்தும் புலிகளிடத்தில் நன்மதிப்பை குலைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு இருந்hர். இவற்றையெல்லாம் அவதானிக்கும் போது சிவராம் அவர்கள் இலக்கு வைத்து நகர்ந்த புள்ளி ஊகிப்பதற்குக் கடினமானதல்ல...

ஆனாலும் வழமை போலவே சிவராம் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற அந்தஸ்த்து புலிகளிடமும் கிடைக்கவில்லை. புலிகள் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களைத்தவிர எனைய எல்லாப் புதிசீவிகளையும் தமது அமைப்பிற்கு வெளியிலேயே வைத்திருந்தனர். அமரர் அன்ரன் பாலசிங்கம் அவர்களைக் கூட பிறகாலதில் ஒதுக்கி விட்டார்கள் என்ற விமர்சனமும் இப்போது வெளிவருகிறது. எனவே சிவராம் அவர்கள் எவ்வளவு முயன்றபோதும் புலிகள் அவரைத் தமிழ்த் தேசிய ஆதரவாளர், கட்டுரையாளர், ஆய்வாளர், ஊடகவியலாளர் என்ற நிலையிலேயே வைத்திருந்தனர். இது குறித்து சிவராம் அதிருப்தியும் எரிச்சலும் அடைந்திருந்ததை அவருடனான பல உரையாடல்களின் போது உணர முடிந்திருந்தது.

எனினும் விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா பிரிந்தபோது கருணாவுக்குத் தேவைப்பட கொள்கை ரீதியான நியாயப்படுத்தலை வழங்கக் கூடிய அறிவுஜீவியாக விளங்கிய சிவராமால் கருணாவை இலகுவாக நெருங்க முடிந்திருந்தது. நான் முன்பே கூறிய கருணாவை முன்னிலைப்படுத்தி நோர்த் ஈஸ்ற் ஹரால்ட்டில் அவர் எழுதிய கட்டுரைகளும் உதவியிருக்கக் கூடும்.

கிழக்கில் கருணாவை முன்னிலைப்படுத்தி கிழக்கின் தலைவராக அவரை உருவாக்கி அவரின் ஆலோசகராக தான் மாறும் எண்ணத்தை சிவராம் அவர்கள் கொண்டிருந்தார் என்பதைப் பிறிதொரு இடத்தில் மிகத் தெளிவாக அறிந்து கொண்டேன். அதாவது கருணாவின் பிளவு 2004 மார்ச் 3ஆம் திகதி இடம்பெற்ற போது பலரும் பல்வேறு சமரச முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். எனினும் சிவராம் தொலைபேசியில் என்னுடன் உரையாடும் போது புலிகளில் இருந்து கருணா பிளவுபட்டுச் செல்லவில்லை எனவும் சில நிபந்தனைகளை விதித்து அவற்றைப் புலிகளின் தலைவர் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் பிரபாகரனைக் கருணா தனது தலைவராகவும் ஏற்றுக் கொள்கிறார் எனவும் கூறினார். குறிப்பாக கிழக்கில் புலிகளின் அனைத்து நடவடிக்கைகளும் கருணாவின் தலைமையின் கீழ் தனித்தே இடம்பெறும் நிதிக் கட்டுப்பாடு, ஆட்சேர்ப்பு, உள்ளிட்ட விடயங்களில் கிழக்குப் புலிகள் சுயாதீனமாகவே இயங்குவர்; ஆயுத விநியோகம் வன்னியில் இருந்து கிடைக்கப் பெறவேண்டும்; புலிகளின் புலனாய்வுத்துறை, காவற்துறை அரசியல் துறை என எந்தத் துறைகளும் கிழக்குப் புலிகளின் நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது. தலைவர் பிரபாகனுக்கு மட்டுமே கருணா கிழக்குப்புலிகளின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிப்பார். புலனாய்வுத் துறைத் தலைவர் பொட்டு அம்மான், நிதிப்பொறுப்பாளர் புகழேந்தி, காவற்துறைப் பொறுப்பாளர் நடசேன் ஆகியோரை புலிகள் அமைப்பின் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை வன்னித் தலைமைக்கு முன்வைக்க உள்ளோம் அதற்கான அறிக்கைகள் தயாராகி விட்டன. எனவும் சிவராம் கூறியிருந்தார்.

'சில நிபந்தனைகளை விதித்து நாம் பிளவை தவிர்க்க முயல்கிறோம்' என் அவர் கூறியதிலிருந்து கருணாவின் அதிகார மையத்தில் அவரது வகிபாகமும் பதவியும் தெளிவுபட்டிருந்தது. இது புலிகளின் அதிகார மையத்தில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கொண்டிருந்த வகிபாகத்திற்கும் பதவிக்கும் சமனானது. அன்றிருந்த சூழலில் புலிகளின் தலமை இந்த நிபந்தனைகளுக்கு இணங்கும் எனச் சிவராம் உள்ளிட்டவர்கள் நம்பியிருந்தனர். ஆனால் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஏகத்துவத்தலைமைக் கோட்பாட்டின் முன்னே இவை சுக்குநூறாகிப் போகும் என்பது கால்நூற்றாண்டாக அவரது தலைமையின் கீழ் செயற்பட்ட கருணாவுக்கோ புவியியல் சார் இராணுவ ஆய்வாளர் சிவராமுக்கோ புரியாமற்போனது அதிசயம் தான். இந்த நிலையில் புலிகளின் தலைமை கருணாவுக்கு எதிராக எடுத்த கடுமையான நடவடிக்கை மூலம் புலிகளின் கை ஓங்கிய காரணத்தால் கருணா பிரிந்த மூன்றே நாட்களில் சிவராம் அவருக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுவிட்டார். அவருடன் சேர்ந்து முன்பு கருணாவை ஆதரித்த தற்போதய தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் சிலரும் தமது ஆதரவை விலக்கிக் கொண்டுவிட்டனர்.

இந்த நிலையில் சிவராம் அவர்கள் புலிகளால் வன்னிக்கு அழைக்கப்பட்டார். இந்த அழைப்பினால் அச்சமடந்த சிவராம் அவர்கள் சில நாட்கள் குழப்பத்திலிருந்தார். எனினும் வவுனியா சென்று அங்கிருந்து புலிகளிடம் சமரசம் செய்த பின்னர் வன்னி சென்றார். அங்கு விடுதலைப் புலிகள் விடுத்த 'வேண்டுகோளை' ஏற்று கருணாவுக்கு எதிரான காரசாரமான கடிதமொன்றை வீரகேசரிக்கு எழுதினார். அக்கடிதம் வீரகேசரியில் வெளிவரமுன்பும் சிவராம் மட்டக்களப்புக்குச் சென்று சேர முன்பும் கிழக்கில் துண்டுப்பிரசுரமாக புலிகளால் வெளியிடப்பட்டுவிட்டதாக சிவராம் தனது சில நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார்.

இங்கே முக்கியமாகக் இரு கேள்விகள் எழுகின்றன.

கருணாவூடாகச் சிவராமும் கிழக்கின் முக்கியஸ்தர்களும் புலிகளின் தலைமையிடம் வைத்த கோரிக்கைகள் புலிகளின் வன்னி மையப்பட்ட அதிகாரத்திற்கெதிரான கோரிக்கைகள்... அதிகாரத்தை கிழக்கிற்குப் பகிரக் கோரிய அரசியற்கோரிக்கைகள்....

ஆனால் இந்த அரசியற் கோரிக்கைகளை எத்தகைய தலைவரினூடாக (கருணா) வைக்கிறோம் என்ற தெளிவு இந்த கோரிக்கைகளை வைத்தவர்களிடம் இருக்கவில்லையா அல்லது தங்களது நலன்களைப் பற்றி மட்டுமே சிந்தித்தனரா? என்பது முதலாவது கேள்வி.

கிழக்கின் முக்கியத்துவம் குறித்தும் கிழக்குப்பற்றிய புலிகளின் பாராமுகம் குறித்தும் சிவராம் விமர்சித்த போது அந்த விமர்சனங்களில் உள்ள நியாயம் குறித்து ஆராயாமல் சிவராம் மீது தமிழ் செல்வன் அதிருப்தி அடைந்தது போல கருணாவின் பிளவின் போது முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அரசியற் பரிமாணத்தை உணராதிருந்தனரா?

இரண்டாவது கேள்விக்கான பதில் கடினமானதல்ல.

விடுதலைப்புலிகள் ஏக தலைமைத்துவக் கோட்பாடும், நேரிடையாகவும் மறைமுகமாகவும் தொழிற்பட்ட பிரதேச வாதம் என்பன காரணமாக பிரச்சனையின் அரசியற் பரிமாணங்களை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

முதலாவது கேள்விக்கான பதிலும் மேலே இக்கட்டுரையில் சிவராம் புலிகளைப் பழிவாங்கச் செயற்பட்டாரா அல்லது வேறு சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டாரா என்ற கேள்விக்கும் பதில் கீழே உள்ளது.

கிழக்கின் அதிகார மையத்தின் ஆலோசகராகும் ஆசையில் சிவராம் அவர்களும், கருணாவின் ஆசீர்வாதத்துடன் நாடாளுமன்றக் கதிரைகளை அலங்கரிக்கலாம் என்ற ஆசையில் கிழக்கின் சமூகப்பிரதிநிதிகளும், கிழக்கின் பொறுப்பாளர்களாக இருந்த வடக்குப் புலிகள் வன்னிக்குத் திருப்பி அழைக்கப்பட்டால் அவ்விடங்களைக் கைப்பற்றலாம் என்ற ஆசையில் பல மூத்த போராளிகளும் பகற்கனவில் மிதந்து கொண்டிருந்ததனால் கருணா ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தினதும் இராணுவத்தினரதும் மாய வலைக்குள் விழுந்து விட்டிருந்தததை உணரவில்லை. கருணா காட்டு வாழ்வுக்கும் போராட்ட வாழ்வுக்கும் விடை கொடுக்கும் நிலையில் இருந்ததை அவர்கள் அறியவில்லை. விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் கருணாவுக்கும் இடையில் இருந்த முரண்பாட்டுக்கு பிரதேச வாத முலாத்தை தமது சொந்த நலன்கள் காரணமாக பூச முற்பட்ட இவர்கள் அந்த நெருப்புக்கு எண்ணை வார்ப்பதிலேயே கரிசனையாக இருந்தனரே தவிர கருணா அரசாங்கத்துடனும் இராணுவத் தரப்புடனும் கொண்டிருந்த நெருக்கத்தை உணரவில்லை. ஆக புலிகளின் தலைமையிடம் அதிகாரப்பகிர்வைக் கோரிய இவர்களும் தாம் நேசித்த ஒட்டுமொத்த தமிழ்தேசியமும் பலவீனப்படுவதை உணரவில்லை..

ஆனாலும் வன்னியில் களத்தில் இருந்த ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிழக்கு போராளிகளுடன் நடையாகவே கிழக்கு நோக்கிச் செல்லும்படி வன்னியில் அப்பொழுதிருந்த கிழக்குத் தலைவர்களான தயாமோகன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோரிடம் கருணா கூறிய போது அவர்களுட் பலரும் திகைப்படைந்தனர். காரணம் ஆயுதங்களை நிற்கும் இடங்களிலேயே போட்டுவிட்டு வரும்படியும் தேவை ஏற்படும் பட்சத்தில் இராணுவத்திடம் சரணடையும் படியும் இராணுவம் அவர்களை அழைத்து வந்து கிழக்கில் விடும் எனவும் கருணா தெரிவித்திருந்தார். அத்துடன் இப்பொழுது கிழக்கில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இராணுவத் தளபதியிடமே இவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான பொறுப்பையும் கருணா ஒப்படைத்திருந்தார். அந்தக்கணத்தில் தான் கருணா இராணுவத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கிறார் என்பது பலருக்கும் புலப்பட்டது. இந்தத் தகவலை புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானுக்குத் தயாமோகனும் ஜெனார்த்தனனும் வழங்கிய பின்னர் தமிழ்ச் செல்வன் கிழக்கிற்கு சென்று சமரசம் செய்வதற்கான திட்டம் கைவிடப்பட்டுக் கருணா மீதான இராணுவ நடவடிக்கைகளை புலிகள் ஆரம்பித்திருந்தனர்.

இவ்வாறு புலிகள் கருணாவுக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்ததும். புலிகளின் தேசியப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நீலன், மாவை வேந்தன், சத்தியசீலன், இளங்கோ, போன்ற மிகச் சிலரைத் தவிர ரெஜினோல்ட் தலைமையிலான புலனாய்வாளர்கள் அனைவரும் கருணாவுடன் இணைந்தனர். நெல்லியடியைச் சேர்ந்த விடுதலைப்புலிகளின் முக்கிய புலனாய்வுப் பிரிவு உறுப்பினரான அற்புதம் மாஸ்ரர் என்பவரை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களும், புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்த்தரான நீலனைக் கொன்றதும் கருணா ஆதரவுப் புலனாய்வுப்பிரிவே என பின்னர் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் கருணாவின் பிளவை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தும் ஊடகவியலாளர் மகாநாட்டிற்கு வன்னியில் இருந்து ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கிழக்கில் இருந்தும் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் பலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அவ்வூடகவியலாளர் மகாநாட்டில் நிகழ்ந்தவைகள் என்ன அதன் பின் தொடர்ந்தவைகள் என்ன என்பது குறித்து அடுத்த தொடரில்.....

http://www.globaltamilnews.net

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்தவர்கள் போராடப்போவதாக வெளிக்கிட்டு

புளட்டுக்காக,

காத்திருந்து, கணக்குப்போட்டு, முதுகில் குத்தி, எல்லாவற்றையும் அழித்த கொடுமையை

இனிக்கலைத்து என்ன லாபம்???

Link to comment
Share on other sites

படித்தவர்கள் போராடப்போவதாக வெளிக்கிட்டு

புளட்டுக்காக,

காத்திருந்து, கணக்குப்போட்டு, முதுகில் குத்தி, எல்லாவற்றையும் அழித்த கொடுமையை

இனிக்கலைத்து என்ன லாபம்???

ஆனால் மாமனிதரல்லோ?? :lol:

Link to comment
Share on other sites

'கருணா பிரச்சனை' ஆரம்பித்த பொழுது, இந்த விடயத்தை ஒருவர் கூறினார். சிவராமை மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு புலிகள் கூறியதாகவும் சொன்னார். ஆனால் விடயத்தை தெளிவாகக் கூறவில்லை. நிறைய வதந்திகள் வந்துகொண்டிருந்தபடியால் இதையும் வதந்தி என நினைத்தேன்.

Link to comment
Share on other sites

'கருணா பிரச்சனை' ஆரம்பித்த பொழுது, இந்த விடயத்தை ஒருவர் கூறினார். சிவராமை மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு புலிகள் கூறியதாகவும் சொன்னார். ஆனால் விடயத்தை தெளிவாகக் கூறவில்லை. நிறைய வதந்திகள் வந்துகொண்டிருந்தபடியால் இதையும் வதந்தி என நினைத்தேன்.

சிவராமோடு . ஜெயானந்த மூர்த்தியும் தான் கருணாவின் பிரிவிற்கு எண்ணெய் ஊற்றியவர்கள். வாகரைப் பகுதியில் கருணாவிற்கு ஆதரவாக நடந்த புலியெதிர்ப்பு ஆi;பாட்டத்தை முன்நின்று நடத்தியதோடு மட்டுமல்லாமல். பிரபாகரனது படங்களை உடைத்து கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர் ஜெயானந்த மூர்த்தி. இப்பொழுது லண்டனில் தேசியவாதி. கருணா அமைப்பு பலவீனமடைந்ததும். சிவராம் மீண்டும் புலிகள்பக்கம் பல்டியடித்தவர் வெளியிடங்களில் கருணா குழுவினர் தங்கியிருக்கும் இடங்களை காட்டித் தருவதாக புலிகளின் புலனாய்வு பிரிவிற்கு தெரிவித்து பல இடங்களை கட்டியும் கொடுத்திருந்தார். அவரது தகவல்களின் அடிப்படையில்தான் கருணா குழுவின் முக்கியஸ்தர்கள் பலர் சிங்கள பகுதிகளில் கொல்லப்பட்டனர். ஆனால் அதே நேரம் புலிகளின் புலனாய்வு பிரிவினரும் இலங்கையரசால் கைது செய்யப்படும்பொழுதான் சிவராம் இரட்டை உளவாளியென புலிகளிற்கு தெரியவந்தது கடைசியில் மாமனிதரானார்.

Link to comment
Share on other sites

சிவராமோடு . ஜெயானந்த மூர்த்தியும் தான் கருணாவின் பிரிவிற்கு எண்ணெய் ஊற்றியவர்கள். வாகரைப் பகுதியில் கருணாவிற்கு ஆதரவாக நடந்த புலியெதிர்ப்பு ஆi;பாட்டத்தை முன்நின்று நடத்தியதோடு மட்டுமல்லாமல். பிரபாகரனது படங்களை உடைத்து கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர் ஜெயானந்த மூர்த்தி. இப்பொழுது லண்டனில் தேசியவாதி. கருணா அமைப்பு பலவீனமடைந்ததும். சிவராம் மீண்டும் புலிகள்பக்கம் பல்டியடித்தவர் வெளியிடங்களில் கருணா குழுவினர் தங்கியிருக்கும் இடங்களை காட்டித் தருவதாக புலிகளின் புலனாய்வு பிரிவிற்கு தெரிவித்து பல இடங்களை கட்டியும் கொடுத்திருந்தார். அவரது தகவல்களின் அடிப்படையில்தான் கருணா குழுவின் முக்கியஸ்தர்கள் பலர் சிங்கள பகுதிகளில் கொல்லப்பட்டனர். ஆனால் அதே நேரம் புலிகளின் புலனாய்வு பிரிவினரும் இலங்கையரசால் கைது செய்யப்படும்பொழுதான் சிவராம் இரட்டை உளவாளியென புலிகளிற்கு தெரியவந்தது கடைசியில் மாமனிதரானார்.

அப்போ யாருக்குத்தான் மாமனிதர் , அவார்டு ...சரியா தரலாம்?

சரியா சொல்லுங்க....

டைம் ஓடிக்கிட்டு இருக்கா... இல்லியா? :)

Link to comment
Share on other sites

அப்போ யாருக்குத்தான் மாமனிதர் , அவார்டு ...சரியா தரலாம்?

சரியா சொல்லுங்க....

டைம் ஓடிக்கிட்டு இருக்கா... இல்லியா? :)

உங்களிற்கு தரலாம். ரைம் முடிஞ்சுது. :icon_idea:

Link to comment
Share on other sites

உங்களிற்கு தரலாம். ரைம் முடிஞ்சுது. :icon_idea:

அத வச்சி நானு என்ன உப்பு கண்டம் போட்டு , மோட்டில தொங்க விடவா?

அட போங்க நீங்க ஒரே தமாசு..!

ஏற்கனவே இந்த பட்டம் கெடைச்சவங்க பொழைப்பு...

டோட்டலி .......அழிஞ்சு போச்சு! :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வெள்ளை வான் கடத்தல்களும் எரிவாயு அறைகளில் சாம்பராகும் மனிதர்களும்:- மெளனம் கலைகிறது 5

மெளனம் கலைகிறது என்னும் எனது தொடரின் ஐந்தாவது பகுதியை எழுத முனைந்த போது நேற்று ( 23.01.12) ஜனரள என்ற சிங்களப் பத்திரிகையில் வெளியானதொரு செய்தியை வாசிக்க நேர்ந்தது. அதன் தமிழாக்கம்:

"வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்படும் நபர்களைக் கொலை செய்து எரியூட்டும் எரிவாயு அறை வசதிகளை கொண்ட சில வாகனங்கள் நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. பிணங்களை எரியூட்டப் பயன்படுத்தப்படும் எரிவாயு அறைகள், இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளன. கடந்தகாலங்களில் கடத்திச் செல்லப்பட்ட பலர் இவ்வாறு கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொழும்பு, கம்பஹா, கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம், மற்றும் வடக்கு, கிழக்குக்கின் மாவட்டங்களுக்கும் தலா ஒரு வாகனம் என்ற வகையில், இந்த வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மிகவும் ரகசியமான முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த எரிவாயு வசதிகளைக் கொண்ட வாகனங்களில் பிண எரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவத்துடன் நேரடியாகச் சம்பந்தப்படாத துணை ராணுவக் குழுக்களுக்கு விசேடமான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

வெள்ளை வானில் கடத்திச் செல்லப்படுவர்களை நீண்ட காலங்களுக்குத் தடுத்து வைத்திருப்பது ஆபத்தானது என்பதால், அவர்களைக் கடத்தி தமக்கு தேவையான தகவல்களைப் பெற்றபின்னர் அல்லது விசாரணையின் பின்னர் கொலை செய்து அழித்து விடுவதற்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் சாட்சியங்கள் தடயமின்றி அழிக்கப்பட்டு விடுகின்றன.கடத்திச் செல்லப்பட்ட பலரின் நிலைமை என்ன என்பதை அறிந்து கொள்ள முடியாமைக்கான காரணம் அவர்கள் மேற்குறித்த முறையில் கொலை செய்யப்பட்டு, அழிக்கப்பட்டமையே"

இந்தச் செய்தியை படித்தவுடன் எனது மனதுள் வருகிற ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள என்மனம் விரும்புகிறது. எனது தொடரைக் கூடுமானவரை கால அடிப்படையில் குழப்பங்கள் தோன்றாமல் தர முயற்சிக்கின்ற போதும் இது போன்ற சில இடைச் செருகல்களையும் தவிர்க்க முடிவதில்லை. ஞாபகத்திற்கு வருகிற விடையங்களை புறந்தள்ளி விட்டால் அவை என்றேன்றைக்குமாக மறைந்து விடும். மேலும் ஒரு சிங்கள மொழிப்பத்திரிகை துணிந்து ஒரு விடையத்தை அம்பலப்படுத்தும் போது நான் அறிந்தவற்றையும் வெளிக்கொண்டு வருவது கடமையாகிறது. அதனால் கடந்த 4 ஆவது தொடரில் எழுதிய கிழக்கின் உடைவும் கருணாவும் தராக்கியும் - என்பதன் தொடர்ச்சியை 6 ஆவது தொடரரில் தொடர்கிறேன்.

இங்கு இந்த தகவலை என்னுடன் பகிர்ந்து கொண்டவர்களின் பாதுகாப்புக்கருதி தற்போதைக்கு பெயர்களைத் தவிர்த்து விடுகிறேன்

அரசுக்கு ஆதவாகச் செயற்படுகிற அரசியற் கட்சிக்கு ஆதரவளித்து வந்த விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட பெண் அரசியற் செயற்பாட்டாளரும் மனித உரிமை ஆர்வலருமான ஒருவரை "ஜனரள"வின் செய்தி எனக்கு நினைவூட்டியது.

2002ல் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை 2005ன் இறுதிப்பகுதியில் கலைந்தபோது வடக்கில் இலங்கை இராணுவம் பெரும் களை எடுப்பை தனது புலனாய்வுப் பிரிவு மற்றும் தமிழ்த்துணை இராணுவக் குழுக்களின் உதவியுடன் ஆரம்பித்திருந்தது. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அவர்களது ஆதரவாளர்கள் ஆகியோரைக் குறிவைத்தே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது

சமாதான காலத்தில் பொங்குதமிழ் என்னும் எழுச்சி நிகழ்வு விடுதலைப்புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு வடக்கில் உள்ள சாதாரண மக்கள் தொடங்கி சகல பொது அமைப்புகளும், பொங்கு தமிழ் எழுச்சிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முச்சக்கர வாகனச்சாரதிகள் சங்கம், சிகையலங்கரிப்போர் சங்கம், சலவைத் தொழிலாளர் சங்கம், மீனவச் சங்கங்கள், விவசாயச் சங்கங்கள் என அனைத்து அமைப்புக்களும் பொங்குதமிழ் நிகழ்ச்சிகளில் தமது முகங்களைக் காட்ட வேண்டியிருந்தது.

வீதியில் நின்ற படையினர்களைத் தமிழ் இளைஞர்கள் துணிவாகக் கேலி செய்தனர், காறித் துப்பிச் சென்றனர். இவ்வாறான சம்பவங்களினால் கொதிப்படைந்திருந்த படையினர் “இப்போதைக்கு சமாதான காலத்தில் எமது கைகள் கட்டப்பட்டுள்ளன ஆனால் கண்கள் கட்டப்படவில்லை” எனக் கூறியிருந்தனர்.

புலிகளுக்கும் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையிலான பேச்சுக்கள் முறிவடைந்து யுத்தம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவே புலிகளின் முக்கியஸ்த்தர்கள் தமது அரசியல் அலுவலகங்களை மூடிக்கொண்டு வன்னிக்கு சென்று விட்டனர். ஆனால் புலிகளின் செயற்பாட்டாளர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இனம் காணப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் குடாநாட்டில் சிக்கியிருந்தனர். இவர்களில் பலரை புலிகள் சமாதான காலத்தில் வன்னிக்கு அனுப்பி பயிற்சியும் அளித்து குடாநாட்டிற்கு அனுப்பி இருந்தனர்.

இவை இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினருக்கும் புலிகளால் சமாதான காலத்தில் குறிவைக்கப்பட்டு பிஸ்டல் குழுவினால் ஆடிப்போயிருந்த தமிழாயுதக் குழுக்களுக்கும் தெரியாததல்ல. அவர்கள் தமக்கான சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்தனர்.

உண்மையில் 2005 ஆண்டின் பிற்பகுதியில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போதே அரசாங்கத்திற்கு அல்லது இராணுவத்திற்கு எதிராகச் செயற்படக் கூடியவர்கள் யார் என்ற பட்டியலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் உத்தரவுக்கு அமைய இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் தயாரித்திருந்தனர். (இலங்கையில் அரசாங்கத்தின் சட்ட ரீதியான புலனாய்வுப் பிரிவுகளைத் தவிரவும் பாதுகாப்பு செயலாளர் இராணுவத் தளபதி இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தளபதி ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டிலும் வேறு பல புலனாய்வுப் பிரிவுகள் தொழிற்பட்டன என்பதையும் இங்கு நினைவு கூரலாம்.)

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாக இருந்து கொண்டு இரகசியமாகச் சிவில் சமூகத்துடன் வேலை செய்பவர்கள், புலிகளின் வெளிப்படையான ஆதரவாளர்கள், புலி அனுதாப ஊடகவியலாளர்கள், புலிகளின் பொருளாதார ஈட்டங்களுக்கு துணைபுரிபவர்கள், புலிகளின் முதலீடுகளின் பின்னால் இருப்பவர்கள், புலி அனுதாப அரசியல்வாதிகள் எனப்பலவகையாகப் பிரிக்கப்பட்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தயாரிப்பதற்கு அப்போது அரசாங்கப் படைகளுடன் இயங்கிய துணை இராணுவக் குழுக்களும் அரச புலனாய்வாளர்களுடன் இணைந்து செயற்பட்ட தமிழ்த் தரப்புகளும் துணைபுரிந்தனர்.

நான் முன்பு சொன்ன படி இலங்கையில் பல்வேறு புலனாய்வுக்குழுக்கள் இருந்தன. ஒரு பிரிவு மேற்கொள்ளும் கடத்தல் மற்றும் கொலை நவடிக்கை மற்றய பிரிவிற்குத் தெரியாது. ஆனால் இவையாவற்றையும் ஒருங்கிணைத்த பாதுகாப்பு செயலர், மற்றும் புலனாய்வுத்துறைத் தலைவர் ஆகியோருக்கு அனைத்து செயற்பாடுகளும் தெரிந்திருக்கும். இவ்வாறு செயற்படும் பிரிவுகளில் குறைந்தது துணை இராணுவக் குழுக்களைச் சேர்ந்த 3 உறுப்பினர்களாவது இருப்பார்கள். இவர்கள் தமிழர்களாக இருப்பார்கள். இவர்கள் முன்னாள் விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்களாகவோ அல்லது முன்னாள் விடுதலை இயக்கங்களில் இருந்து கொண்டு அவற்றின் தலைமைகளுக்கு தெரியாமல் இரகசியமாக இந்த ஈனச் செயலைச் செய்பவர்களாகவோ அல்லது தலைமைகளுக்கு தெரிந்தும் அதற்கு அனுமதிக்கப்பட்டவர்களாகவோ இருந்தார்கள்.

கடத்தல் மற்றும் கொலைகளைச் செய்ய முனையும் போது அவை அம்பலப்படுமாயின் அவற்றுக்கு காரண கர்த்தாக்களாக மாற்று இயக்கங்களைச் சுட்டி விட்டு அரசு தப்பித்துக் கொள்வதற்காகவே இந்தத் தமிழ்க் கொலைகாரர்களை அரசு கடத்தல் கொலைக் களங்களில் முன்னரங்கங்களில் வைத்திருந்தது. இதனை அறிந்தும் மாற்று இயக்கங்கள் அரசுடன் இணைந்தே இருந்தன. (இந்த இடத்தில் மாற்று இயக்கங்கள் அரச ராணுவத்தின் கட்டுப்பாடுகளுக்குள் செல்வதற்கு புலிகளின் ஜனநாயக மறுப்பும் பங்களித்துள்ளது.)

தமது முன்னரங்கத்தில் இவர்களை வைத்திருந்த போதும். இவர்களைத் தமது பின்னரங்கத்திற்கோ மூலவிடத்திற்கோ அரச புலனாய்வாளர்கள் அழைத்துச்செல்வதில்லை.

தமது நடவடிக்கைகள் முடிந்தவுடன் அவர்களுக்கான தங்குமிடங்களில் இந்தத் துணை இராணுவப் பிரிவு உறுப்பினர்கள் இறக்கி விடப்பட்டு விடுவார்கள். உதாரணமாக ஒருவர் கடத்தப்பட்டு வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றப்பட்ட பின்னர் தமது இரகசிய இடத்திற்கு கொண்டு செல்லும் வழியில் இந்த தமிழ் எடுபிடிகள் கழற்றி விடப்படுவர். கடத்தப்பட்டவருடன் இராணுவப் புலனாய்வாளர்கள் மட்டுமே பிரதான இரகசிய இடத்திற்குச் செல்வர்.

இது இலங்கையில் புலனாய்வுப்பிரிவுகள் எவ்வாறு கடத்தல் செயற்பாடுகளையும் கொலைகளையும் புரிந்தனவென்பதை வெளிப்படுத்துகிறது. வடக்கு கிழக்கிலும் பின்னர் தெற்கிலும் இதே பாணியில்தான் இலங்கைப் புலனாய்வுப் பிரிவுகள் தொழிற்பட்டன.

யுத்தம் ஆரம்பித்தவுடன் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் புலிகள் முனைவதனை முன்பே அறிந்திருந்த படையினர் புலிகளின் ஆதரவாளர்களையும் புலிகளின் மறைமுகமான உறுப்பினர்கள் எனக்கருதப்பட்ட இளைஞர் யுவதிகளையும் கடத்தத் தொடங்கினர். 2005ன் பிற்பகுதியில் தொடங்கி 2009ம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் ஏறத்தாள 2000 தமிழ்ர்கள் யாழ் குடாநாட்டில் காணமல் போயும் கொல்லப்பட்டும் இருந்தனர். இதில் சில ஊடகவியலாளர்களும் உள்ளடங்கியிருந்தனர்.

முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா யாழ்பாணக் கட்டளைத் தளபதியாக இருந்த போது யாழ்ப்பாணத்தில் தமிழ்ர்கள் கடத்தப்படுவது அதிகரிக்கத் தொடங்கியது. பொன்சேகாவின் காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஏறத்தாள 200 பேர் காணாமல் போயிருந்தனர். பின்னர் பொன்சேகாவின் அப்போதைய வாரிசாகக் கருதப்பட்ட (தற்போதைய ஆளுனர்) சந்திரசிறீயின் காலத்தில் மிகுதித் தமிழர்கள் (1800வரையிலானவர்கள்) காணாமல் போயினர்.

இது குறித்து நான் முன்பு குறிப்பிட்ட பெண்மணி எனக்குத் தெரிந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான தனது நண்பர் ஒருவரிடம் சொல்லி உரையாடி வேதனைப்பட்டுள்ளார்.

"ஐயோ வடக்கில் நடக்கும் அக்கிரமங்களை வெளியில் சொல்ல முடியாது. தினம்தோறும் வகை தொகையின்றி இளைஞர்கள் நடுத்தர வயதினர் முன்னர் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள், மற்றும் செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். இவர்களைக் கடத்துவதற்கு நான் சார்ந்திருக்கும் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட ஏனைய தமிழ் ஆயுதக்குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் ஆயுதக் குழுக்களில் இருந்து பிரிந்து படையினருடன் இணைந்து செயற்படும் உதிரித் தமிழ்ர்கள் அனைவரையும் இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினரால் பயன்படுத்தப்படுன்றனர். இது குறித்து எம்மால் எதுவும் செய்ய முடியாது உள்ளது. இவற்றை சகித்துக் கொண்டும் இருக்க முடியவில்லை. தலை வெடித்து விடும் போல் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் கடத்திச் செல்லப்பட்டவர்களை எந்தவித தடயமுமின்றி அழிப்பதற்காக எரிவாயு அறைகளையும், பலாலி உயர் பாதுகாப்பு வலையப் பகுதியினுள் அமைந்துள்ள இரகசிய எரிவாயு அறைகளையும் பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். (ஏற்கனவே வசாவிளான் மத்திய மகா வித்தியாலையத்தில் அமைந்திருந்த சித்திரவதைக் கூடத்தின் படத்துடன் குளோபல் தமிழ்ச் செய்திகள் செய்தி வெளியிட்டு இருந்தது)

இந்தத்தகவலை பெரும்பாமையினத்தைச் சேர்ந்த அந்த மனித உரிமையாளர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் என்னைச் சந்தித்து அப்போதைய அரசியல் நிலை குறித்து உரையாடிக் கொண்டிருந்தபோது எனக்குத் தெரிவித்து கவலைப்பட்டது மட்டுமன்றி அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக இருக்கும் குறித்த அமைப்பின் தலைவரின் அரசியலை நியாயப்படுத்திய அந்தப் பெண்மணியின் கவலையையும் மனிதாபிமானமும் தனக்கு ஆச்சரியமளித்ததாகவும் கூறியிருந்தார்.

குறித்த பெண்மணியுடன் வெளிநாடு ஒன்றில் சரியாக எனக்கு ஞாபகம் இல்லை ஜேர்மனியாக இருக்கலாம் முதலில் உரையாடுவதற்கான சிறிய நேர அவகாசம் கிடைத்தது. குறித்த அரசியற் கட்சியின் தலைவரது வெளிநாட்டு விஜியத்தின் போது குறித்த பெண்மணி அரசாங்கப் பிரதிநிதிகளுடன் அங்கு வருகை தந்திருந்தார். பின்னர் கொழும்பு பம்பலப்பிட்டியில் அவரை ஊடகவியலாளராகவும் சந்தித்திருந்தேன். மிகவும் ஆளுமையுள்ள பெண்ணாக பலவிடயங்களில் தெளிவுடன் சரளமாகப் பேசுகின்ற மனிதாபிமானம் கொண்ட சேராத இடம் சேர்ந்த அதிகாரியாக எனக்கு அவர் தென்பட்டார்.

வாழ்வில் நான் சந்தித்த சில மனிதர்களின் தனிப்பட்ட குணநலன்களை குறிப்பாக அவர்களின் மனிதாபிமான உணர்வு மற்றும் இன உணர்வுகளைப் பார்த்த போது அவர்கள் சார்ந்திருந்த அரசியலுக்கும் அதற்குக் சம்பந்தமிலாதிருந்ததைக் கண்டேன். தமது குறுகிய நலன்களுக்காக தமது உயர்ந்த மனிதாபிமானத்தையும் இன உணர்வையும் அடகு வைத்தமை ஒரு முரணணி.

அந்தப்பெண்மணி வடக்கில் கடத்தப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் எரிவாயு அறைகளில் இட்டு எரிக்கப்பட்டார்கள் என்பதனை 2007 காலப்பகுதியிலேயே தனது சிங்கள நண்பருக்கு சொல்லி இருக்கிறார். அந்தப் பெண்மணிக்கு மனிதத்தன்மை விழித்திருந்த கணங்கள் அவை.

2005ஆம் ஆண்டின் இறுதியில் போர் ஆரம்பிக்கப்பட்ட போது முன்பு பெற்றுக் கொண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கமும் அதன் படைகளும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் தமது புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தலைப்பட்டன.

கடந்த காலங்களில் பல சந்தர்பங்களில் கடத்தப்பட்டவர்களின் தடயங்கள் அகப்பட்டதன் காரணமாக அதில் சம்பந்தப்பட்டவர்கள் அம்பலப்படுத்தப்பட்டார்கள்.

முன்னரை விட வகை தொகையின்றிப் பெருமளவு கடத்தல்களையும் கொலைகளையும் செய்ய வேண்டியிருந்ததால் சடலங்களை மறைப்பதில் புலனாய்வாளர்களுக்கு கடுமையான சிரமங்கள் ஏற்பட்டன எனவும் இதனாலேயே தடயங்கள் எதுவும் எஞ்சாத வகையில் யாவற்றையும் எரியூட்டக்கூடிய எரிவாயு அறைகளை இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு துறை தயார் செய்ததாக கருதப்படுகிறது.

இந்த விடயத்தையே நாடுபூராகவும் எரிவாயு அறைகள் இருப்பதை ஜனரள என்ற சிங்களப் பத்திரிகை இப்போது உறுதிப்படுத்தி உள்ளது.

http://www.globaltamilnews.net

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கனவாகிப் போன சிவராமின் எதிர்பார்ப்பும் இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆட்பட்ட கருணாவும்-மௌனம் கலைகிறது 6

முதலில் கிழக்கின் உடைவு-கருணா-தராக்கி என்ற பகுதி பற்றி வந்த முக்கியமான சில விமர்சனங்களுக்குப் பதிலளித்துத் தொடரவிரும்புகிறேன்..

சிவராம் என்கிற தனிமனிதரைத் தாக்குவதற்காக அல்லது அம்பலப்படுத்துவதற்காகவே நீ உனது மெளனத்தைக் கலைத்ததுபோற் தெரிகிறது எனச் சில நண்பர்கள் விமர்சித்திருந்தார்கள்.

எனது இந்தத் தொடரை ஆரம்பத்தில் இருந்து கவனமாகவும் ஆழமாகவும் வாசித்து வருபவர்கள் இத்தொடர் தனிநபர் மீதான சேறடிப்பை நோக்கமாகக் கொண்டதல்ல என்பதை உணர்வார்கள். மேலும் கடந்த மூன்று வருடங்களாக இயங்கி வரும் எங்களது ஊடக வெளியில் தனிநபர் தாக்குதல்களோ சேறடிப்புக்களோ நிகழ்ந்ததில்லை என்பதை அனைவரும் அறிவர்.

திரு சிவராம் அவர்களின் கொலை புலிகளில் இருந்து கருணா வெளியேறிச் சில வருடங்களின் பின் (2005இல்) நிகழ்ந்தது. நான் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் விடையங்கள் அதற்கு முன்னரான காலப்பகுதியைச் சேர்ந்தவை. ஆயினும் முன்வைக்கப்பட்டிருக்கும் விமர்சனத்திற்கு பொறுப்பான முறையில் பதிலளிக்க வேண்டுமென்பதால் கருணா உடைவு காலத்தில் தொடங்கி 2005 ஆண்டை நோக்கிச் சற்றே செல்வோம்.

கருணாவினது பிளவில் சிவராமினது பாத்திரம் பங்களிப்பு மற்றும் எதிர் பார்ப்புகள் பற்றி முன்னைய தொடர்களில் சொல்லி இருக்கிறேன்.

சிவராமின் கொலைகான – பல காரணங்களுள் ஒன்றாக கருணா- சிவராம் முரண்பாடும் பின்னாளில் அமைந்து விட்டதையும் இங்கு சொல்லி விடவேண்டும்.

உண்மையில் கருணா தனதும் தன் போன்றவர்களினதும் ஆலோசனையின் படியே எதிர்காலத்தில் நடப்பார் எனச் சிவராம் நம்பியிருந்தார். ஆனால் சிவராமினதும் கருணாவை ஆதரித்த கிழக்கின் புத்திஜீவிகளினதும், சமுகப் பிரதிநிதிகளதும் எதிர்பார்ப்பிற்கு மாறாக கருணாவின் போக்கு அமைந்தது.

சமாதானகாலத்தின் ஆரம்பத்திலேயே (இரண்டாவது சுற்றுப்பேச்சின் போதேயே) அன்றைய ஆட்சியாளர்களுடன் குறிப்பாகக் கிழக்கின் அப்போதைய இராணுவத் தளபதி சாந்த கோத்தாகொடவுடன் கருணாவுக்கு நெருக்கம் ஏற்படத் தொடங்கி விட்டது. இதன் காரணமாக அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே கருணா நகரத் தொடங்கியிருந்தார். இந்த நெருக்கத்திற்கு கருணாவின் சிறுபராய நண்பர் அலிசாகீர் மெளலானாவும் துணைபுரிந்திருந்தார். இதனால் கருணாவின் பிளவு குறித்துத் தமிழ் ஊடகங்களில் உத்தியோகபூர்வமாக வெளிவரமுன்பே அரசாங்கத் தரப்புகளினூடாகவும் இராணுவத் தரப்புகளினூடாகவும் கசிந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில மற்றும் சர்வதேச ஊடகங்களில் கருணாவின் இந்தப்பிளவு தொடர்பான தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருந்தன.

கருணாவின் பிளவு உறுதிப்பட்டதும் றணில் அரசாங்கத்தின் ஏற்பாட்டின்படிக்கு விசேட உலங்கு வானூர்தியில் சிமா... என்ற பெண் ஊடகவியலாளர் ஒருவர் மட்டக்களப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண் பத்திரிகையாளர் மூன்று நாட்கள் கிழக்கில் தங்கியிருந்து கருணாவின் ஊடக அறிக்கைகள் செவ்விகள் என்பவற்றைத் தீர்மானிப்பவராக மாறியிருந்தார்.

இதனால் திரு சிவராம் அவர்கள் கடும் ஏமாற்றத்திற்கும் கோபத்திற்கும் ஆளாகியிருந்தார். (இதனைச் சிவராமின் நெருங்கிய நண்பர்கள் எவரும் மறுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.)

கருணாவின் "ஊடகத்தொடர்பாளராக" மாறிய அந்த ஊடகவியலாளர் சமாதானகாலத்தில் பல பேச்சுவார்த்தைகளுக்குச் செய்தி சேகரிப்பாளராக வந்ததுடன் கருணாவுடனும் பேசிப் பழகி ஏற்கனவே கருணாவுக்கு நெருக்கமானவராகியிருந்தார். அது மட்டுமல்ல இந்தப் பெண் ஊடகவியலாளர் கிழக்கின் இராணுவத் தளபதி சாந்தகோத்தாகொடவிற்கும் மிகவும் நெருக்கமான நண்பர் எனச் சிங்கள ஊடகவியலாளர்கள் கூறியதும் எனது ஞாபகத்தில் இருக்கிறது. இந்தப்பத்திரிகையாளர் அன்றைய ஆட்சியாளர்களுடன் எவ்வளவு நெருக்கத்தைக் கொன்டிருந்தார் என்பதற்கு ஒரு உதாரணத்தையும் சொல்ல முடியும்.

ஐந்தாம் கட்டச் சமாதானப் பேச்சுவார்த்தை ஜெனிவாவில் நடந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் ஊடகச்சந்திப்பு இடம்பெற இருந்தது. அதற்கு முன்பதாக ஊடகவியலாளர்கள் எவரும் அரச மற்றும் புலிகளின் பிரதிநிதிகள் குழுமி நின்ற இடத்திற்குச் செல்லமுடியாதபடி தடை போடப்பட்டிருந்தது. நாங்கள் எல்லோரும் தடைக்கு வெளியே காத்திருந்தோம். எங்களுடன் நின்றிருந்த சிமா... அப்போதைய சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் பாலித கோகன்னவை கண்டதும் "திரு பாலித" என அழைத்ததார் அவரும் உடனனே "ஹாய் சிமா... உள்ளே வாருங்கள்" விளித்து அருகில் வந்து தடைக்கு உள்ளே அழைத்துச் சென்றார். இது அங்கு நின்ற ஏனைய சர்வதேச மற்றும் உள்ளுர் ஊடகவியலாளர்களுக்கு எரிச்சலை ஊட்டியிருந்தது. இத்தகைய செல்வாக்கைக் கொண்டிருந்த அப்பெண்பத்திரிகையாளர் கருணாவை நெருங்கியிருந்தது கருணா சென்று கொண்டிருந்த திசையை சிவராமுக்குத் தெளிவாக இனம் காட்டியிருந்தது.

அதுமட்டுமல்ல சிவராமின் ஆலோசனையின் பேரில் கருணா புலிகளிடம் வைத்த கோரிக்கை எடுபடாமல் போய்ப் புலிகளின் கை ஓங்கி வருவதையும் சிவராம் அவர்கள் கண்டுகொண்டார்.

வன்னிக்கு வருமாறு கடுமையான தொனியில் சிவராம் அவர்களுக்குப் புலிகள் அறிவுறுத்தல் அனுப்பிய போது அதனால் அச்சமடைந்து குழம்பிப் பின் வன்னிக்குச் சென்று புலிகளிடம் சரணாகதி அடைந்தது குறித்தும் புலிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய கருணாவின் பிளவை விமர்சித்துக் கட்டுரைகளை வரையத் தொடங்கியது குறித்தும் முன்னைய தொடர்களில் குறிப்பிட்டிருந்தேன்.

சிவராம் ஆரம்பத்தில் கருணாவை ஆதரித்துப் பின்னர் குறுகிய காலத்திலேயே தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது குறித்துக் கருணா கடும் கோபம் கொண்டிருந்ததை அவருக்கு நெருக்கமானவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். "............(தூஷணம்) தண்ட புத்தியைக் காட்டிட்டான்" எனச் சிவராமைப்பற்றித் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார் (எனது கூற்றுத் தவறாகவிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மறுக்க முடியும்)

சிவராமின் மீது கருணா கொண்ட கோபமும் சிவராமின் நாட்கள் எண்ணப்படுவதற்குக் காரணமானது. (எனினும் சிவராமின் கொலையின் பின்னணியில் பல தரப்புகள் சம்பந்தப்பட்டு இருந்தன)

அமரர் சிவராமை நான் புளோட்டில் 1984ஆம் ஆண்டு இணைந்த போதிருந்தே எனக்குத் தெரியும். புளொட் இயக்கத்தில் அவர் எஸ்.ஆர் எனவே அழைக்கப்பட்டார்.

அவரால் புளொட்டில் நடத்தப்பட்ட பல அரசியற் பாசறைகளில் கலந்துகொண்டும் இருக்கிறேன். அப்போழுதிருந்து திரு சிவராம் அவர்கள் இறப்பதற்குச் சில தினங்களுக்குவரையும் அவருடனான தொடர்பும் உரையாடலும் கருத்துப் பகிர்வும் நீடித்திருந்தது. இதனை அவரையும் என்னையும் அறிந்த அனைவருமறிவர்.

அது மட்டும் அல்ல சிவராம் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக நான் ஒரு கனவு கண்டிருந்தேன்.

அந்தக்கனவு திரு சிவராம் அவர்கள் பற்றியதாகும். கனவுகள் குறித்து மதரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் பல்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. இவை குறித்து ஆழமான அறிவு என்னக்கில்லை. ஆயினும் ஒரு சில கனவுகள் எமது மனதில் ஆழமான பதிவுகளை விட்டுச் சென்று விடும்.

கனவுகண்ட மறுநாட் காலை சூரியன் எவ். எம் 6:45 மணிச் செய்தியை முடித்துக் கொண்டு சிவராம் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு "சிவராமைச் சிலர் கடத்திச் சென்று சுட்டுக் கொல்வதாகவும் கொல்லப்பட்ட இடத்திற்கு உடன் நான் சென்று பார்ப்பதாகவும் அவரது மனைவி பிள்ளைகள் என்னிடம் அவரது மரணத்தைச் சொல்லிக் கதறி அழுவததாகவும் கனவு கண்டேன் எனச் சொல்லிக் "கவனமாக இருங்கள்" என்று கூறியிருந்தேன். இதனை சிவராம் அவர்கள் தனது மனைவியிடமும் கூறியிருக்கிறார்.

சிவராம் அவர்கள் கடத்தப்பட்ட இரவு 9.30ற்கும் 10மணிக்கும் இடையில் எனது நண்பர் ஒருவர் அது குறித்துத் தொலைபேசியில் அறியத் தந்தவுடன் உடனடியாக எமது வானொலியில் அதனை அறிவித்தேன். மேலும் அவரது கடத்தல் தொடர்பாக இரவிரவாக அரசியற்தொடர்புடைய எனது பல நண்பர்களுடன் தொடர்புகொண்டு அவரது நிலையை அறிய முயற்சித்துமிருந்தேன். அது பலனளிக்காதபோதும் அவரது கடத்தல் தொடர்பாக வேதனை அடைந்திருந்ததைச் சம்பந்தப்பட்ட நண்பர்கள் அறிவார்கள். இறுதியாக அவர் கடத்தப்பட்ட மறுதினம் பத்தரமுல்லை மாதிவலப் பாராளுமன்றக் குடியிருப்புக்களுக்கு அண்மித்த ஒரு பற்றைப் பகுதியில் சடலமொன்று இருப்பதாகவும் அது சிவராமுடையது என தகவல்கள் வெளியாகி இருப்பதாகவும் எனது நண்பர் ஒருவர் எனது கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு கூறிய போது உடனடியாக நண்பர் சிவகுமாருடன் தொடர்புகொண்டு பேசி நண்பர் சோமிதரனையும் அழைத்துக் கொண்டு எனது வாகனத்தில் அங்கு சென்றோம். சிவராமின் நண்பர் அஜித் சமரநாயக்க மற்றும் வேறு ஒருசில மனிதர்களுக்கு பின் நாமே முதலில் அங்கு சென்றிருந்தோம். அரச புலனாய்வாளர்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அவரது நண்பர்கள் என்ற வகையில் அன்று கொல்லப்பட்டது சிவராமே என்பதை உறுதிப்படுத்து வேண்டிய துர்ப்பாக்கியமான துயர நிலையிலுமிருந்தோம். அது மட்டுமல்ல சிவராமின் மனைவி அந்த இடத்திற்கு சிவராமின் மகளுடன் அழைத்து வரப்பட்டபோது அவர் வாகனத்திலிருந்து இறங்கும் போதே "குரு நீங்கள் கண்ட கனவு பற்றி இவர் என்னிடம் சொன்னபோது நான் கவனமாக இருக்கச் சொன்னேனே இவர் கேட்கவில்லையே ஐயோ!"எனக் கதறியழுதார். சிவராம் என்ற மனிதனொடு கொண்டிருந்த உறவின் தன்மை இது.

nitharsanam11.JPG

இந்த வகையில் சிவராமுடனான உறவு என்பது வேறு, ஒரு காலத்தின் அரசியற்போக்கு மீதான மீள்பார்வை என்பது வேறு என்பதில் நான் மிகவும் தெளிவாகவே இருக்கிறேன். சிவராம் அவர்களின் புலமை மீது எனக்கிருந்த மதிப்பு அவரின் அரசியல் நிலைப்பாடு பற்றிய மதிப்பிலும் வேறுபட்டதாகும்.

மூன்று தசாப்தகாலப் போர்வாழ்வு தந்த அனுபவங்களையும் படிப்பினைகளையும் வெளிக் கொணர்வதற்காக மெளனம் கலையும் போது இங்கு பேசப்படுபவைகள் ஏதோ ஒருவகையில் பலரையும் அசெளகரியங்களுக்கு உள்ளாக்கும் என்பதனை மிகுந்த துயரத்துடன் உணர்கிறேன். ஆனாலும் தனிப்பட்டவர்களின் அசெளகரியங்களுக்கு அப்பால் ஒட்டு மொத்தமாக ஒரு இனத்தின் காயங்களை ஆற்றுவதற்கு ஒவ்வொருவரும் தமது மெளனத்தைக் கலைப்பது தேவையாகிறது. அந்த மெளனத்தை கலைக்கும் நான் சிவராமின் கொலை அதன் பின்னணி, அதனோடு தொடர்புடையவர்கள் பற்றியும் பொறுப்புணர்வோடு அடுத்துவரும் பகுதிகளில் எழுதுவேன்.

எனது தொடர் எவரையும் “வேண்டுமென்றே” காயப்படுத்துவதாக அமைவதாக எவரேனும் கருதினால் அது குறித்து அறியத்தாருங்கள்.

கடந்த தொடரில் கருணாவின் உத்தியோகபூர்வ வெளியேற்றம் நிகழ்வதற்கு முன்பு புலிகளுள் நிகழ்ந்த உள் முரண்பாடுகள் குறித்த காலத் தவணையில் சில தவறுகள் இருப்பதனை நண்பர்களின் விமர்சனங்களில் இருந்து அறிய முடிகிறது. இந்தத் தவறு நிகழ்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று கடந்த காலங்களில் பட்ட அனுபவங்களைக் குறிப்புக்களாக எழுதி வைத்துக் கொள்ள நினைத்ததில்லை காரணம் அவற்றை இடம்பெயரும் போதெல்லாம் பல்வேறு அதிகார சக்திகளுக்கிடையிலும் அகப்படாமல் பாதுகாத்துக் கொள்வதே பெரிய பிரச்சனையாகவிருந்திருக்கும். ஆளைக்காப்பாற்றுவதே அரும்பாடாக இருந்த காலங்களில் எழுதிய குறிப்புக்களையும் பாதுகாத்து வைப்பது என்பது நினைத்துக் கூடப்பார்க்க முடியாதது. மேலும் இப்படியேல்லாம் எழுத நேருமென்று அன்றைக்கே என்னைத் தயாரித்திருக்கவுமில்லை. ஆக ஆழ்மனைதை நம்பி பட்டவற்றைப் புதைய விட்டிருந்தேன். விளைவு மனப்பதிவுகளில் இருந்து கிளறி எடுக்கும் போது கால முரண்கள் ஏற்பட்டு விடுகின்றன. தவறுகளை விமர்சனமாக எழுதுங்கள். அல்லது எனது மின் அஞ்சலுக்குக் குறிப்புகளாக அனுப்பி வையுங்கள் உங்கள் பெயரில் நிட்சயமாகப் பதிவிடுவேன்.

கருணாவின் பிளவு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படுவதற்குப் பல மாதங்களுக்கு முன்னரே இந்த பிளவுக்கான அறிகுறிகள் கிழக்கில் பல்வேறு சந்தர்பங்களில் தெரியத் தொடங்கியிருந்தன. சமாதான ஒப்பந்த காலத்தின் முன்பாகவே குறிப்பாக 2000ஆண்டின் நடுப்பகுதியிலேயே ஆரம்பித்து இருந்தது.

இங்கு முக்கியமான ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் செளந்தரநாயகத்தின் கொலை தொடர்பான உத்தரவைக் கருணாவே வழங்கியிருந்ததாக ஊடக உலகில் அறியப்பட்டிருந்தது. திரு நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் கொலைக்கான காரணமாக நிமலன் சௌந்தர நாயகம் அவர்களின் வாகனச்சாரதியாகப் புலி உறுப்பினர் ஒருவரை நியமனம் செய்யக் கோரியதாகவும் நிமலன் அவர்கள் அதனை மறுத்தனால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது அதுவல்ல எனப் பின்னர் தகவல் கசிந்தது. நிமலன் செளந்தரநாயகம் புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் தரப்பினரோடு நெருக்கத்தை வைத்திருந்ததாகவும் கருணாவின் உத்தரவுகளை புறக்கணித்ததாகவும் அதனால் கோபமுற்ற கருணா அவரைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டது. (இந்தச்சம்பவத்திற்கு வேறு ஏதேனுமொரு பரிமாணம் இருப்பின் உட்தகவல்கள் தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டித் திருத்தமுடியும்)

இதன் தொடர்ச்சியாக 2002ன் பிற்பகுதியில் 2003ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டது. வன்னி என்றும் கிழக்கு என்றும் கிழக்கு மாகாணத்தில் தொழிற்பட்ட புலிகளின் புலனாய்வாளர்களிடையே ஒரு உடைவு ஏற்பட்டது. இந்த உடைவு புலிகள் அமைப்பின் பல முக்கியஸ்தர்களுக்குக் கூடத்தெரியாது

மிகவும் இறுக்கமான கட்டமைப்பினையும், இரகசியமான செயற்பாட்டையும் கொண்டிருந்த, புலிகளின் தேசிய புலனாய்வுப் பிரிவு பொட்டம்மான் பொறுப்பிற் செயற்பட்டு வந்தது யாவருமறிந்ததே. இந்த நிலையில் குறிப்பாக கருணா புலிகள் அமைப்பில் இருந்து பிரிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே புலிகள் அமைப்பினது புலனாய்வுப் பிரிவின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டப் பொறுப்பாளர் றெஜினோல்ட் தலைமையிலான அணி பொட்டம்மானின் நேரடிக் கண்காணிப்பில் இருந்து விலகிக் கருணாவுடன் தம்மை இணைத்துக் கொண்டது. பொட்டு அம்மானுடன் ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக இந்த பிளவு ஏற்பட்டது. சுமார் அறுபது வரையிலான கிழக்கைச் சேர்ந்த புலனாய்வுப் போராளிகள் இந்த பிரச்சனைகளின் பொழுது புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறி, கருணாவின் நேரடித் தலைமையின் கீழ் செயற்பட ஆரம்பித்திருந்தார்கள். அச் சந்தர்ப்பத்தில் கிழக்கைச் சேர்ந்த கீர்த்தி, நீலன், மாவேந்தன், சத்தியசீலன், இளங்கோ உட்பட விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில போராளிகளைத் தவிர மிகுதி அனைவருமே புலிகள் அமைப்பின் தேசியப் புலனாய்வுப் பிரிவில் இருந்து விலகி, கருணாவின் தலைமையின் கீழ்ச் செயற்பட ஆரம்பித்திருந்தார்கள். இவர்கள் பிற்பாடு மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட நிர்வாகப் பிரிவாகச் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.

இந்தச் சந்தர்பத்தில்தான் 2002ன் ஆரம்பத்தில் கிழக்கில் பொட்டம்மானின் நேரடி பிரதிநிதியாகச் செயற்பட்ட அற்புதன் மாஸ்டர் என்கிற ஒரு புலனாய்வுப் போராளி மீது ஒரு பொறிவெடித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அவர் தனது காலை இழந்திருந்தார். யாழ்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த இந்தப் போராளி மீதான தாக்குதல் சிறிலங்காவின் ஆழ ஊடுருவும் படை அணியினராலேயே மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டிருந்த போதிலும், பின்னர் அது கருணா சார்புப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டதாக அறியப்பட்டது. இந்தச்சம்பவம் புலிகள் கருணா மோதலின் ஆரம்பதாக்குதலாகவும் வெளிப்பட்டது.

ஆக கிழக்குப் புலனாய்வாளர்களின் பிளவு, அற்புதன் மாஸ்ரர் மீதான தாக்குதல் என்பன கருணாவின் வெளிப்படையான பிரிவென்னும் நெருப்புக்கு ஒருவருடத்திற்கு முன்னரே வெளிவரத் தொடங்கி விட்ட புகைகள் ஆகும். (எனது மெளனம் கலைகிறது நாலாவது தொடரில் இந்தச்சம்பவங்கள் கருணாவின் பிளவின் பின் நிகழ்ந்தவையாக குறிப்பிடப்பட்டுள்ளன.)

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/73134/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாராக்கியை கொல்லப் போகிறார்கள் என முன் கூட்டியே இவருக்கு தெரிந்திருக்கிறது...கனவு கண்டாராம் அவர் கண்ட கனவு பலித்து விட்டதாம்...யாருக்கு விடுகிறார் கதை ^_^

Link to comment
Share on other sites

காலங்கடந்த காவடிகள்....... எந்த வேள்விக்காக? எந்தக் கடவுளர்க்காக?

மெளனங்கள் காலங்கடந்து பேசுமென்றால்... எமக்குள் உள்ள பல கேள்விகளையும் சரளமாய்க் கேட்கலாம்!

ஆனால்........ பயன் என்ன???

இனி என்ன செய்யப் போகின்றோம்...???

காவடி ஆட்டங்களுக்கும் பறைமேளச் சத்தங்களுக்கும் இனிமேலும் நாமும் ஆடமுடியாது!!!

உண்மையான வழிகாட்டிகள் மெளனமாய் .....இன்னும்! :(

Link to comment
Share on other sites

மாவீரர் குடும்பங்களை புலிகள் எல்லா இடங்களிலும் குறிப்பாக வன்னி மற்றும் கிழக்கு மாகாணங்களில் பேதம் காட்டாமல் தான் கவனித்துக் கொண்டார்கள்.

மூதூhர் நாவலடிச் சந்தியிலிருந்த அலுவலகத்திற்கு திருகோணமலை தம்பலகாமம் மற்றும் பல இராணுவ கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து மாவீரர் குடும்பங்கள் தங்களது கொடுப்பனவை வந்து பெற்றுக் கொண்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் குடும்பங்களை புலிகள் எல்லா இடங்களிலும் குறிப்பாக வன்னி மற்றும் கிழக்கு மாகாணங்களில் பேதம் காட்டாமல் தான் கவனித்துக் கொண்டார்கள்.

மூதூர் நாவலடிச் சந்தியிலிருந்த அலுவலகத்திற்கு திருகோணமலை தம்பலகாமம் மற்றும் பல இராணுவ கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து மாவீரர் குடும்பங்கள் தங்களது கொடுப்பனவை வந்து பெற்றுக் கொண்டார்கள்.

பேதம் காட்டாமல் என்று வரவேண்டும் என்று நினைக்கின்றேன். சரியாயின் திருத்திவிடவும். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நேர‌ங்களில் மிகப் பெரிய ஆயுதம் மெளனம்

Link to comment
Share on other sites

பலரின் மௌனம் கலையாத வரை உண்மைகள் உறங்கிய வண்ணமே இருக்கும்.

சில நேரம் பெரிய தேன்கூடுகளுக்கு கல்லெறிந்து விட்டும் சிலர் மெளனமாக இருப்பார்கள் ஆனால் தேனீயின் குத்துக்களை அப்பாவிகள் தான் அனுபவிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

மௌனம் கலையும் போது, எல்லா விடயங்களும் வெளியில் வரவேண்டும். தணிக்கை செய்யப்பட்டு வரும்போது, அது, பொது நோக்கன்றி தனிநபர் குறித்த சுய விளம்பரம்/தம்பட்டமாக கருதப்பட வாய்ப்புண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.