Jump to content

ஞாபகங்களுடன் இன்றும்....


Recommended Posts

ஞாபகங்களுடன் இன்றும்....

மீண்டும் சந்திப்பதாய்

ஒரு மாலைநேர

ஈரக்காற்றின் உவர்ப்போடு

அழுததாய் ஞாபகம்.

தாஜ்மகால் பற்றியும்

தலைசிறந்த

காதல் இலக்கியம் தந்த

ஜிப்ரான் பற்றியும்

நிறையவே பகிர்தல்கள்.

ஒரு தாஜ்மகால்

ஒரு முறிந்த சிறகு

எங்களுக்காயும் எழுதப்படுமெனும்

எண்ணமேயில்லை

கௌரவப் பிரிதலாய் அது

நீண்டதொரு தசாப்தம் நிறைவாகிறது.

என்றாவது நினைவு வரும்

சிறுவயது ஞாபகம் போல்

எப்போதாவது வந்துபோகும்

ஞாபகங்களுடன் இன்றும்....

காதலென்ற சொல்லுக்காய்

செய்து கொண்ட சத்தியங்கள்

நினைவு இடுக்குகளிலிருந்து

கழன்று விழுகிறது.

சத்தியம் ää சபதம்

சாத்தியமில்லாக் கனவுகள்

எல்லா மனசிலும்

காதலின் வலி உணர்வாயும்

நினைவாயும் நிசம் உணர

மனம் மறுத்து

நடிப்புகள் மேலாக....

'காதல் ஒருதரம்தான்"

மறுபடி மறுபடி வரும் காதல்

என்பது கவர்ச்சியென்ற

சத்தியங்களெல்லாம்

சாத்தியமில்லையென்றா சபதமிட....?

12.03.05

Link to comment
Share on other sites

..

'காதல் ஒருதரம்தான்"

மறுபடி மறுபடி வரும் காதல்

என்பது கவர்ச்சியென்ற

சத்தியங்களெல்லாம்

சாத்தியமில்லையென்றா சபதமிட....?

12.03.05

ஆ.... அக்கா கன நாளைக்குப் பிறகு கவிதை எழுதி இருக்கீங்க,

ஆன எனக்கு மேல மேற்கோள் காடினது விளங்கேல்ல,இப்ப முதல் வாற காதல் தான் காதல் என்று சொல்லுறியளா?அப்ப மற்றது எல்லாம் கவர்ச்சி எண்டுறியளா?அல்லது எல்லாமே கவர்ச்சி தான் எண்டு சொல்லுறியளா?இல்லாட்டி உங்களுக்கே குழப்பமா?அதனால் தான கேள்விக் குறி? எனக்கும் இது குழப்பமான விசயம் தான்.காதல் என்று ஒன்று இல்லை, என்று சயந்தன் சொன்னது நாபகம் வருகுது. அது பலதாயும் ஆன ,ஆகக் கூடிய ,ஒன்றும் அல்லாத ஒன்று என்பது சரியா?

Link to comment
Share on other sites

அகம் பிரம்ஸாய்.. என்று உந்த காவிகள் சொல்றமாதிரி ...அத்துவித கோட்பாடு மாதிரிங்களா :)

Link to comment
Share on other sites

'காதல் ஒருதரம்தான்"

மறுபடி மறுபடி வரும் காதல்

என்பது கவர்ச்சியென்ற

சத்தியங்களெல்லாம்

சாத்தியமில்லையென்றா சபதமிட....?

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சாந்தியக்கா உங்கள் கவிதை மிகவும் நன்றாய் இருக்கின்றது. முதல் காதல் என்றுமே மறக்க முடியாது என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலென்ற சொல்லுக்காய்

செய்து கொண்ட சத்தியங்கள்

நினைவு இடுக்குகளிலிருந்து

கழன்று விழுகிறது.

வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.