Jump to content

பிரபாகரன் வேடத்தில் சத்யராஜ் – பரபரப்பாக உருவாகும் சினிமா


Recommended Posts

பெரும்பாலான ஹீரோக்கள் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம், சாகுறதுக்குள்ளே ஒரு முக்கியமான கேரக்டரில் நடிச்சுடணும். அதுதான் என் ஆசை என்றெல்லாம் அளப்பார்கள். ஆனால் யாராவது அந்த குறிப்பிட்ட கேரக்டரோடு வந்தால், ‘…ந்தா. சுவிட்சர்லாந்துல டீ குடிச்சுட்டு வந்துடறேன்’ என்று எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

அப்படி எல்லாரையும் ஒரே நேரத்தில் கவர்ந்து, ஒரே நேரத்தில் அலறவும் வைக்கிற கேரக்டர் மாவீரன் பிரபாகரன் வேடம்தான். ஆனால் எவ்வித பதற்றமோ, பயமோ இல்லாமல் இந்த கேரக்டரில் நடிக்கப் போகிறார் சத்யராஜ். நடிகர் நந்தா தற்போது விடுதலைப்புலி திலீபனின் வரலாற்றை படமாக்கிக் கொண்டிருக்கிறார். இடையில் நிறுத்தப்பட்டிருந்த இப்படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டு விட்டது.

இதில்தான் நடிக்க அழைக்கப்பட்டிருக்கிறார் சத்யராஜ். திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோது அவரை நேரில் சந்தித்தாரல்லவா பிரபாகரன்? அந்த ஒரு நிமிட காட்சியில்தான் நடிக்கப்போகிறார் சத்யராஜ்

.http://www.vivasaayi.com/2011/12/blog-post_1179.html

Link to comment
Share on other sites

  • 1 month later...

பிரபாகரனை வைத்து பிளைப்பு நடத்துபவர்கள் கடைசியில் அந்த மனிதனை சினிமாவிற்கும் கொண்டுவந்து நாறடிக்கப் போகிறார்கள். இதனால் உண்மையான உணர்வுகள் சிலசமயம் கேலிக் கூத்தாகிவிடும்.

இதுவரை சேகுவராவாக யாரும் நடித்ததாக நான் கேள்விப்படவில்லை. ஏனென்றால் சேவின் உணர்வுகளையும், இலட்சியங்களையும் யாரும் கேலிக்கூத்தாக்க விரும்பவில்லை என்பதே உண்மை.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யேசு நாதர், ராமன், கிருஷ்ணன், காந்தி என்று பல பாத்திரங்களில் பலர் நடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களால் அந்த உயர்ந்த மனிதர்கள் இழிவுபடுத்தப்பட்டதாக யாரும் நினைக்கவில்லை. மாறாக அவர்கள் பற்றிய அறிவு மக்களிடத்தில் மேலும் பரவ அத்திரைப்படங்கள் உதவியிருக்கின்றன. யாரைப்பற்றி திரைப்படம் எடுக்கிறோம் என்பதைவிட நாம் சொல்ல வருகிற செய்தி என்ன என்பதுதான் முக்கியம். ஒருவரை நாரடிக்க வேண்டும் என்றே படம் எடுத்தால் நிச்சயம் அவரது பெயர் களங்கப்படுத்தப்படும். அதில் சந்தேகமில்லை. ஆனால் ஒருவர் பற்றிய தெளிவான அறிவை மக்களிடத்தில் வளர்க்கும் நோக்குடன் ஒருவர் படமெடுத்தால் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்.

சத்யராஜ் ஒரு தீவிர ஈழ ஆதரவாளர். ஆகவே அவர் நிச்சயம் தேசியத் தலைவரின் பெயரைக் களங்கப்படுத்த மாட்டார் என்றே நினைக்கிறேன். இதே மணிரத்தினமோ அல்லது ஷங்கரோ என்றால் நிச்சயம் ஒன்றிற்கு இருதடவைகள் யோசிக்க வேண்டிய விடயம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை சேகுவராவாக யாரும் நடித்ததாக நான் கேள்விப்படவில்லை??????

Link to comment
Share on other sites

பிரபாகரனை வைத்து பிளைப்பு நடத்துபவர்கள் கடைசியில் அந்த மனிதனை சினிமாவிற்கும் கொண்டுவந்து நாறடிக்கப் போகிறார்கள். இதனால் உண்மையான உணர்வுகள் சிலசமயம் கேலிக் கூத்தாகிவிடும்.

இதுவரை சேகுவராவாக யாரும் நடித்ததாக நான் கேள்விப்படவில்லை. ஏனென்றால் சேவின் உணர்வுகளையும், இலட்சியங்களையும் யாரும் கேலிக்கூத்தாக்க விரும்பவில்லை என்பதே உண்மை.

http://www.yarl.com/...showtopic=93776

Link to comment
Share on other sites

இதுவரை சேகுவராவாக யாரும் நடித்ததாக நான் கேள்விப்படவில்லை

சேகுவாரா பற்றி சென்ற ஆண்டு ஒரு மிகச்சிறந்த ஆங்கிலப்படம் வெளியாகியது. அவரின் வாழ்க்கை வரலாற்கை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.

தமிழ் சொல்வதென்றால் "சட்டப்படி குற்றம்" என்று ஒரு படம் சென்ற ஆண்டு சத்தியரஐின் நடிப்பிலயே வெளிவந்தது. கிட்டத்தட்ட செகுவேரா போன்ற கதாபாத்திரத்திலே நடித்திருக்கிறார். ஆனால் இப்படி அவரை கேவலபடுத்தாமல் விட்டிருக்கலாம்.

பிரபாகரனை வைத்து பிளைப்பு நடத்துபவர்கள் கடைசியில் அந்த மனிதனை சினிமாவிற்கும் கொண்டுவந்து நாறடிக்கப் போகிறார்கள். இதனால் உண்மையான உணர்வுகள் சிலசமயம் கேலிக் கூத்தாகிவிடும்.

உண்மை தான். எவ்வளவு பெரிய ஒரு வீரனின் கதையாக இருந்தாலும் இந்திய சினிமாவில் பல மசாலா விடயங்களை சேர்க்காமல் எடுக்க மாட்டார்கள். தியாகி தீலீபன் பற்றி எடுப்பது தவறில்லை. ஆனால் அதை தமிழ்நாட்டு சினிமா செய்கிறது என்றால் யோசிக்க வேண்டிய விடயம் தான். பாரதி என்று ஒரு படம் வந்தது. அருமையான படம். ஆனால் அது தோல்வி. காரணம் நான் மேலே சொன்ன விடயங்களாக இருக்கலாம் (மசாலா கலவை இல்லாதது என்றே நினைக்கின்றேன்.)

அப்புறம் தலை இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் ஆயுதப்போராட்டம் என்று ஒரு காவியத்தை பார்த்து கண்ணீர் வடித்தேன். நீங்களும் பார்த்து வடிக்கவும். :D

இந்த படத்தொடக்க விழாவிற்க்கு பல பிரபல தயாரிப்பாளர்கள் வந்ததால் நானும் இந்த கா(ன்றா)வியம் நன்றாக இருக்கும் என்று பார்த்தேன்.

மாவீரன் பிரபாகரன்

வை இந்த கொலைவெறி???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.