Jump to content

சாய் பாபாவிற்கு கேக்கு, பிரபாகரனுக்கு திவசம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐம்பதாயிரம் கோடி ஆன்மீக காசு பார்த்தவருக்கு கேக்கு வெட்டினம்,

ஐம்பது இலட்சம் மக்களுக்காக காடு பார்த்தவருக்கு திவசம் கேக்கினம்.

பெறாமகனுக்காக கோடி சொத்து சேர்த்தவருக்கு கேக்கு வெட்டினம்,

தனது மகனை எதிரியை வீழ்த்த அனுப்பியவருக்கு திவசம் கேக்கினம்.

ஸ்ரீ லங்கா தலைமைக்கு தங்க சங்கிலி இட்டவருக்கு கேக்கு வெட்டினம்,

சிங்கள அடிமை சங்கிலியை உலகிற்கு உடைத்தவருக்கு திவசம் கேக்கினம்.

நாமவரி அணிந்து மக்களிடம் தியானவரி கறந்தவருக்கு கேக்கு வெட்டினம்,

புலிவரி அணிந்து மக்களின் மயானவிதியை தடுத்தவருக்கு திவசம் கேக்கினம்.

இறைவனை காட்டுகிறேன் என்ற வழிபோக்கருக்கு கேக்கு வெட்டினம்,

நாற்பதாயிரம் தமிழ் சாமிகளுக்கு வழிகாட்டியவனுக்கு திவசம் கேக்கினம்.

வெறும் கைக்குள்ளால் சுவிஸ் கடிகாரம் எடுத்தவருக்கு கேக்கு வெட்டினம்,

வெற்றி நம் கைகளில் தான் இருக்கிறது என்றவருக்கு திவசம் கேக்கினம்.

=குளவி=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளவி நன்றி பகிர்வுக்கு, இதுதான் எமது வியாபார உலகம் என்ன செய்ய

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உடையார். அண்ணா உயிரோடு இருக்கிறார் என்று நம்பும் எம்மை நக்கல் செய்யும் பல தமிழ் படிப்பாளிகள் உலகறிய இறந்தவருக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவது உறுத்துகிறது.

In the residence, which had been sealed since his death, they inventoried 98 kg of gold ornaments, approximate value Rs 21 crore (US$4.7m), 307 kg of silver ornaments, approximate value Rs 1.6 crore (US$0.36m), and Rs 11.6 crore (US$2.6m) in cash. The cash was deposited into the Sai Trust's account at the State Bank of India with payment of government taxes (thus transferring them from religious gifts to Trust assets.) The gold and other items, accumulated as religious gifts to Sai Baba by devotees from all over the world during his 70 year career, were inventoried, assessed, and placed in secure storage. In July, district authorities found an additional Rs 77 lakh (US$0.17m) in valuables in another 4 rooms, including valuable watches.[32] The total value is believed to exceed 7.8 million US dollars.[33] Also found at Yajurmandir were many articles routinely given away as gifts in various ceremonies to devotees and those who did 'seva' (service), including thousands of pure silk sarees, dhotis, shirts, 500 pairs of shoes, a large number of silver and gold “mangala sutrams”, and precious stones such as diamonds. There were also 750 saffron and white robes of the type Sai Baba wore, and dozens of bottles of perfume and hairspray which he reportedly used before meeting dignitaries.[34]In July 2011, a search of his Bangalore-area ashram found 6kg of gold coins and jewellery, 245kg of silver articles and Rs 80 lakh in cash.[35][36]

http://en.wikipedia.org/wiki/Sathya_Sai_Baba

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளவி நன்றிகள் உங்கள் பகிர்வுக்கு....புலத்திலிருந்து பாபாவுக்கு கு.....டி கழுவுறதுக்கு ரொம்ப பேர் இருக்கிறாங்கள்...யாழ் களத்தில் முற்போக்குவாதிகள் என்று சிலர் இருக்கினம் அவையளும் கருத்து எழுத மாட்டினம் கேட்டா ஆத்மீகம் வேறு போராட்டம் வேறு என்பார்கள்...

புலத்தில குஞ்சு குருமன் எல்லாத்துக்கும் எங்கன்ட சனம் பாபாவின் புகழை பரப்பி பரப்பி வைத்துள்ளார்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலை நம்பும் அளவுக்கு நிஜத்தை நம்ப மறுக்கும் சமூகம் :(

குழவிக்கு ஒரு பச்சை

Link to comment
Share on other sites

புலத்தில குஞ்சு குருமன் எல்லாத்துக்கும் எங்கன்ட சனம் பாபாவின் புகழை பரப்பி பரப்பி வைத்துள்ளார்கள்....

புத்தன் வீட்டிலயும் சாய்பக்கதர்கள் என புத்தன் நீங்களே எழுதியபோல ஞாபகம்.

பணத்தால் வாழ்க்கையை ஓட்டிய பாபாவின் புகழ் உலகமெங்கும் எம்மவர்களால் பரப்பப்பட்டுள்ள அளவுக்கு மாவீர்களுக்கு வாழ்கிற வீடுகளில் ஒரு மூலையையேனும் ஒதுக்கி அவர்களுக்காக ஒரு விளக்கேற்றாத நமது பக்திசாமிகளை எந்த ஜென்மத்திலும் திருத்த முடியாது.

Link to comment
Share on other sites

உலகமே தலைவரைப்பார்த்து வியப்படைகின்றது ஆனால் எம்மில் சிலர் என்னும் அவரின் பெருமையை பேசுவதற்கு தயங்குகின்றனர்

இதுகள் ஒருபோதும் திருந்தாதுகள்.

Link to comment
Share on other sites

குளவி எவ்ளோ அழகா கவிதை எழுதுறீங்க!

ஆனா ஒரு சாபம்... நமக்குள்ளையே உறைஞ்சு கெடக்குது மாப்பு!

ஒருவனை நல்லவன்னு சொல்ல & நிறுவ ,

இன்னொருவரை .கெட்டவன்னு ,,,எடுகோள் காட்டுறதே ,எம்மில் பலபேருக்கு......

பொழைப்பா போச்சு!

இன்னிக்கு சென்னை மக்களின் குடிதாகம் தீர்க்க ஓடிவரும் கிருஸ்ணா நதிக்கு,,

வாய்க்கால் கட்டிகொடுத்து , அவங்க நாக்கு வரண்டுபோகாம காத்தது...

சாய்பாபா கட்டிகொடுத்த வாய்க்கால்கள்தான்!

சென்னைல வாழ்ந்தா மட்டும்தானா ..அவன் தமிழன்?

புட்டபர்த்தி இப்போ மயானம் போல ஆனாலும்...

சொத்தா சேர்த்த காசில , மருத்துவ மனையும், பள்ளியும்.கட்டின இந்த சித்தர் ...

பெரிசா எந்த தப்பையும் பண்ணலையே...

நம்ம நித்தியானந்த ரஞ்சி(தா) சுவாமிகளைவிட!

எம் தேசபிதா பிரபாகரனை.... சாய்பாபா கூட ஒப்பிடாதீங்க..,,குளவி!

அவர் வேறு இவர் வேறு........

கடவுளாய் ...தன்னை காட்டிக்கொண்ட சாய்பாபா............

தன் மறைவுக்கு பின்னாலும்... கோடி சொத்துக்களை விட்டுப்போனார்.....!

எமக்காய் போராடிய எம் தலைவன்...சராசரி மனிதன்.....

தனக்காய் ... தன் குடும்பத்தைகூட... எமக்காய் விட்டுபோகல!

யார்கூடவும் யாரையும் ஒப்பிடாதீங்க...எதுக்கும் குளவி...!!

விட்டா...கொக்கு காலு நீளமா இருக்குது எங்கிறதாலதான் ,,,

அது கொத்தி முழுங்குற நெத்தலியும் ,,,,

நீளமா இருக்குன்னு சொல்லுவீங்களா? :(

உண்மை புத்தன். எனது குடும்பத்திற்குள்ளும் இருக்கிறார்கள்.

புலி என்றால் வன்னி காட்டை பிரித்து மேயும் இந்த சாய் டிவோடீசுகள், சாய் பாபாவை பற்றி கதைத்தால் உடனே நம்பிக்கை என்ற வார்த்தைக்கு பின்னால் ஓடி மறைந்துவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலை நம்பும் அளவுக்கு நிஜத்தை நம்ப மறுக்கும் சமூகம் :(

குழவிக்கு ஒரு பச்சை

நன்றி தமிழ் அரசு.

எங்கட தமிழின தலைவரும் மாவீரர் நாளுக்கு மயிருக்குள்ளால் தோட்டா எடுத்து, தியாகி தீபன் நாளுக்கு வாய்க்குள்ளால் மோதகம் எடுத்து, வெளிநாட்டு அரசியல்வாதிகளுக்கு விரல்களுக்கிடையில் இருந்து கொழும்பு செட்டிதெரு மோதிரம் எடுத்து கொடுத்திருந்தால் எல்லா வெளிநாட்டு ஆன்மீக படித்தவர்களும் இப்போது வல்வைக்கு மடம் கட்ட கிளம்பியிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன் வீட்டிலயும் சாய்பக்கதர்கள் என புத்தன் நீங்களே எழுதியபோல ஞாபகம்.

பணத்தால் வாழ்க்கையை ஓட்டிய பாபாவின் புகழ் உலகமெங்கும் எம்மவர்களால் பரப்பப்பட்டுள்ள அளவுக்கு மாவீர்களுக்கு வாழ்கிற வீடுகளில் ஒரு மூலையையேனும் ஒதுக்கி அவர்களுக்காக ஒரு விளக்கேற்றாத நமது பக்திசாமிகளை எந்த ஜென்மத்திலும் திருத்த முடியாது.

உண்மை சகோதரி. தன்னையும் தன் குடும்பத்தையும் வளர்த்தவருக்கு பாய்ந்து பாய்ந்து உலகெல்லாம் ஈழ தமிழர் மடம் கட்டுகிறார்கள்.

ஆனால் இவர்களுக்காக தங்கள் உயிரை ஒரு காணிக்கையும் கேட்காமல் கொடுத்தவர்களின் குடும்பங்களுக்கு திதியை கொண்டாட கூட ஒரு மடம் இல்லை.

அதுவும் பாபாவின் (இறந்த)பிறந்த நாளுக்கு, அவன் பத்தாயிரம் பவுண்ட்சு குடுத்தவனாம்......நாங்கள் விடக்கூடாது இருபதினாயிரம் பவுண்ட்சு குடுக்கோணும் எண்டு போட்டோ போட்டி போட்டு காசு கொடுக்கிறார்கள்.

அந்த வயித்தெரிச்சலை தான் கவிதை எழுத தெரியாவிட்டாலும் கிறுக்கி குமுற வைத்துவிட்டது.

உலகமே தலைவரைப்பார்த்து வியப்படைகின்றது ஆனால் எம்மில் சிலர் என்னும் அவரின் பெருமையை பேசுவதற்கு தயங்குகின்றனர்

இதுகள் ஒருபோதும் திருந்தாதுகள்.

தலைவரின் பெருமை பேசத்தேவை இல்லை.

எமது தேசத்தின் தெய்வங்களை சிறுமை படுத்துவதை நிறுத்தினாலே போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலை இருக்கிற என்ரை சொந்தபந்தம் கொஞ்சம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாயிபாபாவின்ரை சிலையின்ரை பின்பக்கம் கழுவி பட்டுத்துணி சுத்தாட்டில் நித்திரை வராதாம்.....அதோடை இப்ப அரைச்சைவமாம்.குழவிக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளவி எவ்ளோ அழகா கவிதை எழுதுறீங்க!

ஆனா ஒரு சாபம்... நமக்குள்ளையே உறைஞ்சு கெடக்குது மாப்பு!

ஒருவனை நல்லவன்னு சொல்ல & நிறுவ ,

இன்னொருவரை .கெட்டவன்னு ,,,எடுகோள் காட்டுறதே ,எம்மில் பலபேருக்கு......

பொழைப்பா போச்சு!

== நான் கெட்டவரின் பல கெட்ட விடயங்களை கவிதையில் கொண்டு வரவில்லை.

பல நல்லவர்கள், ஈழத்தமிழ் ஆதரவாளர்களும் பாபா பக்தர்களாக இருப்பதால் மனதை கடுமையாக புண்படுத்துவதை விரும்பவில்லை.

இன்னிக்கு சென்னை மக்களின் குடிதாகம் தீர்க்க ஓடிவரும் கிருஸ்ணா நதிக்கு,,

வாய்க்கால் கட்டிகொடுத்து , அவங்க நாக்கு வரண்டுபோகாம காத்தது...

சாய்பாபா கட்டிகொடுத்த வாய்க்கால்கள்தான்!

== அது சென்னை இருக்கும் தமிழகத்தின் சொத்தை அரசியல் வாதிகளின் பிரச்சினை. பெர்ர்ர்ரிய்ய்ய்யய்ய்ய வல்லரசு அஹிம்சை இந்தியா நான்கு புதிய போர் விமானங்களுக்கு செலவழிக்கும் பணத்தில் வாய்க்காலை கிண்டி விட்டு போயிருக்கலாம். நாட்டுக்கு எது முக்கியம் போர் விமானமா, தண்ணியா?

புட்டபர்த்தி இப்போ மயானம் போல ஆனாலும்...

சொத்தா சேர்த்த காசில , மருத்துவ மனையும், பள்ளியும்.கட்டின இந்த சித்தர் ...

பெரிசா எந்த தப்பையும் பண்ணலையே...

நம்ம நித்தியானந்த ரஞ்சி(தா) சுவாமிகளைவிட!

==

நித்தியானந்த சுவாமிகள் கூட ஒரு நடிகையை தான் கட்டுபிடி ஆன்மீகத்தில் ஈடுபடுத்தினார். ஆனால், நம்மவர் பெரிய புள்ளி.

பிரேமானந்த காலம் தொட்டு. அது சரி, அந்த பள்ளியில் படித்த நாலு மாணவர்களை அந்த புனித புட்டபர்த்தியில் போலீஸ் வருமுன் அடித்து

கொன்றார்களே? அப்போது அது மயானமாக தெரியவில்லையா?

எம் தேசபிதா பிரபாகரனை.... சாய்பாபா கூட ஒப்பிடாதீங்க..,,குளவி!

அவர் வேறு இவர் வேறு........

கடவுளாய் ...தன்னை காட்டிக்கொண்ட சாய்பாபா............

தன் மறைவுக்கு பின்னாலும்... கோடி சொத்துக்களை விட்டுப்போனார்.....!

எமக்காய் போராடிய எம் தலைவன்...சராசரி மனிதன்.....

தனக்காய் ... தன் குடும்பத்தைகூட... எமக்காய் விட்டுபோகல!

யார்கூடவும் யாரையும் ஒப்பிடாதீங்க...எதுக்கும் குளவி...!!

==

இங்கே ஈழத்தமிழரால் கடவுளாக பார்க்கப்படும் இருவரை ஒப்பிடுகிறேன். நீங்கள் கூறுவது போல் கவரிங் நகையை , சுத்த தங்கத்துடன் ஒப்பீடு செய்ய சங்கடமாகத்தான் இருக்கிறது.

விட்டா...கொக்கு காலு நீளமா இருக்குது எங்கிறதாலதான் ,,,

அது கொத்தி முழுங்குற நெத்தலியும் ,,,,

நீளமா இருக்குன்னு சொல்லுவீங்களா? :(

==

நண்பர் அறிவிலி. இந்த கவிதை தங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். ஆனால், நான் உண்மைகளை தான் கூறினேன்.

கொக்கையும், காகத்தையும் எப்படி மீன் பிடிக்கின்றன என்று ஒப்பிடலாம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனிலை இருக்கிற என்ரை சொந்தபந்தம் கொஞ்சம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாயிபாபாவின்ரை சிலையின்ரை பின்பக்கம் கழுவி பட்டுத்துணி சுத்தாட்டில் நித்திரை வராதாம்.....அதோடை இப்ப அரைச்சைவமாம்.குழவிக்கு நன்றி.

குமாரசாமி அண்ணா, எண்ட சொந்தத்திலையும் இருக்கிறதுகள். ஆனால், வியாழன் இரவு பன்னிரண்டு மணிக்கு பின் சில்லி சிக்கன் சாப்பிடலாம்.

நான் வரும் மாவீரர் தினத்திற்கு சிலரை உதவிக்கு நாடினால் அவர்கள் பிசி என்று விட்டு இரண்டாயிரம் பவுண்ட்ஸ் செலவழித்து கேக் செய்து அவரின் முகத்தை அதில் பிரிண்ட் செய்து மடத்திற்கு எடுத்து செல்கிறார்கள்.

இவர்கள் எல்லாம் டாக்குத்தர், என்ஜினீயர், எக்கவுண்டன்ட், பிசினசு புள்ளி என்ற உயர் கூழாம்கள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறுபதுகளில் இவர் பிரபலம் அடைந்து கொண்டிருந்த போது என் தந்தை

இவரின் பெருமைகளைக் கண்டு வியந்தாராம்.

முடிச்சுகள் அவிழத் தொடங்கிய பின்னர்

மனம் வருந்தினார்.குளவிக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறுபதுகளில் இவர் பிரபலம் அடைந்து கொண்டிருந்த போது என் தந்தை

இவரின் பெருமைகளைக் கண்டு வியந்தாராம்.

முடிச்சுகள் அவிழத் தொடங்கிய பின்னர்

மனம் வருந்தினார்.குளவிக்கு நன்றி

சக்கரவர்த்தி, தம்மிடம் இருக்கும் பலம் தெரியாமல் அந்த நம்பிக்கையை பாபா மேல் செலுத்தி சிலர் பயன் பெற்றனர்.

ஆனால் பலர் பந்தா காட்ட தான் தான் வியாழக்கிழமை வருவார்கள். பாபா மண்டையை போட்ட பின் மடங்களில் கலக்சன் குறைந்து அங்கும் அடிதடிகள் வரத்தொடங்கிவிட்டன.

Link to comment
Share on other sites

தங்களின் இந்தக் கவிதையை படித்தவுடன் நான் பதிலெழுத வேண்டும் எனை நினைத்த பொழுது... என்னைத் தடுத்தது... யாழ் கள உறவுகளுக்குள்ளும் சாய்பாபா மேல் நம்பிக்கையும் பக்தியும் உள்ளவர்கள் இருக்கலாம் என்பதுதான்..... எனது அம்மாவினைப் போலவே!(எனது தாயாரும் சாய்பாபாவின் பக்தர்தான்). எனக்கு... தன்னைக் "கடவுள்" என சொல்லிக்கொள்ளும் எவரின் மீதும் அறவே நம்பிக்கை கிடையாது."கடவுள்" என்பதனை மற்றவர்கள் உணர்ந்து சொல்ல வேண்டும்! சிவன், விஷ்ணு,அம்மன், ஜீஸஸ்,அல்லா,புத்தர் என எல்லாருக்கும் அது பொருத்தம்.

நம்பிக்கை என்பது எல்லோருக்கும் உண்டு! அது அவர்களது சுதந்திரம்!

நம்பிக்கைகளினைத் தொடர்தலில்தான் கடவுள்கள் உருவாகின்றனர்.

என்னவோ ஏதோ........ அதைவிடுங்கள்!

நான் விடயத்துக்கு வருகின்றேன்....

எம் தலைவனுக்கு ஈடாக ஒப்பிட எவரும் இல்லை என்பது என் எண்ணம்!

பாபா தன்னைக் காப்பாற்ற தன்னை வளர்த்தார்.! எம் தலைவனோ எம்மைக் காப்பாற்றத்தான் எங்களையும் வளர்த்தார். "தலைவன்" என்ற சொல்லின் நிகருக்கு மேலாக நடந்தவர் அவர்!!!அதுதான் இன்றும் அவர் எண்ணங்களை தொடரச் செய்கின்றது!

ஆனால் புலம்பெயர் நாடுகளில் ...... பாபா பக்திக்குள் மூழ்கிப்போன சில பேர்..... எங்கள் சொந்த மக்களின் அவலங்களை கணக்கில் எடுப்பதில்லை என்பது கவலைக்குரியது.

அருமையான கவிதை........... :)

நன்றி சகோதரா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா, எண்ட சொந்தத்திலையும் இருக்கிறதுகள். ஆனால், வியாழன் இரவு பன்னிரண்டு மணிக்கு பின் சில்லி சிக்கன் சாப்பிடலாம்.

நான் வரும் மாவீரர் தினத்திற்கு சிலரை உதவிக்கு நாடினால் அவர்கள் பிசி என்று விட்டு இரண்டாயிரம் பவுண்ட்ஸ் செலவழித்து கேக் செய்து அவரின் முகத்தை அதில் பிரிண்ட் செய்து மடத்திற்கு எடுத்து செல்கிறார்கள்.

இவர்கள் எல்லாம் டாக்குத்தர், என்ஜினீயர், எக்கவுண்டன்ட், பிசினசு புள்ளி என்ற உயர் கூழாம்கள் தான்.

உண்மைதான் குளவி!ஆக்களைபாத்தால் தாட்டான்குரங்குமாதிரி....ஆனால் சாருக்கான் மாதிரி மேக்கப்பு.......நீங்கள் மாவீரர் எண்ட சொல்லை சொன்னவுடனை உங்களை பட்டிக்காட்டான் மாதிரி பாத்திருப்பினமே???? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கவிதைக்கு நன்றிகள், குழவி!

தங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழவி..

நீங்கள் உணர்வது போன்றே எனது உணர்வும்

நான் வேலை செய்யும் இடத்தில் அநேகமானவர்கள் இந்த ரகம் அவர்களுடன் நாளாந்தம் வாக்கு வாதங்கள் ஏற்பட்டபடிதான் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் குளவி!ஆக்களைபாத்தால் தாட்டான்குரங்குமாதிரி....ஆனால் சாருக்கான் மாதிரி மேக்கப்பு.......நீங்கள் மாவீரர் எண்ட சொல்லை சொன்னவுடனை உங்களை பட்டிக்காட்டான் மாதிரி பாத்திருப்பினமே???? :rolleyes:

அஹ்தே....அஹ்தே.....நீங்களும் அந்த ஏளன பார்வைகளை பல தடவை பார்த்தவர் போல் தெரிகிறது. ;)

என்ன செய்வது...ஆனால் ஒவ்வொரு பார்வையும் தமிழ் ஈழத்தை பெற இருக்கும் துடிப்பை இன்னொரு படி கூட்டிவிடும்.

எங்களுக்கு நம்பிக்கையை செயலில் செய்து காட்டி தந்தவன் எங்கள் கடவுள்.

தங்களுக்கே ஆப்படிக்கும் குரங்குகளிடம் ஏன் வீண் பேச்சு பேசி முகத்தில் விறாண்டல் வேண்டுவான்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னவோ ஏதோ........ அதைவிடுங்கள்!

நான் விடயத்துக்கு வருகின்றேன்....

எம் தலைவனுக்கு ஈடாக ஒப்பிட எவரும் இல்லை என்பது என் எண்ணம்!

பாபா தன்னைக் காப்பாற்ற தன்னை வளர்த்தார்.! எம் தலைவனோ எம்மைக் காப்பாற்றத்தான் எங்களையும் வளர்த்தார். "தலைவன்" என்ற சொல்லின் நிகருக்கு மேலாக நடந்தவர் அவர்!!!அதுதான் இன்றும் அவர் எண்ணங்களை தொடரச் செய்கின்றது!

ஆனால் புலம்பெயர் நாடுகளில் ...... பாபா பக்திக்குள் மூழ்கிப்போன சில பேர்..... எங்கள் சொந்த மக்களின் அவலங்களை கணக்கில் எடுப்பதில்லை என்பது கவலைக்குரியது.

அருமையான கவிதை........... :)

நன்றி சகோதரா!

பாபா குழுக்களில் இருந்து அடிதடி பட்டு பிரிந்து அம்மா, நித்யானந்தா, ஈஷா, ஓஷோ, கட்டிபிடி அம்மா, மகாராஜி, சீரடி பாபா, டென்மார்க் அம்மன் மற்றும் பல குருஜிக்களை பிடித்து, ஒவ்வொரு நாட்டு கொன்றாக்டை அமுக்கி, டி.வி. பார்க்க விடாமல் போட்டு தாக்கி மார்கெடிங் செய்து, ஆன்மீக காசு பார்கிறார்கள்.

உங்களிடம் உள்ள பொன் பாரத்தை தங்களின் காவி கோணி பைக்குள் துறக்க வழிகாட்டுவார்கள்.

இவர்கள் புலி கணக்கு வழக்குகளை பற்றி கதைக்கும்போது குளவியின் ஷார்ட் டெம்பர் ஷார்ட் செர்கிட் ஆகிடும்.

நல்ல ஒரு கவிதைக்கு நன்றிகள், குழவி!

தங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்!

ஊக்கத்திற்கு நன்றி சகோதரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழவி..

நீங்கள் உணர்வது போன்றே எனது உணர்வும்

நான் வேலை செய்யும் இடத்தில் அநேகமானவர்கள் இந்த ரகம் அவர்களுடன் நாளாந்தம் வாக்கு வாதங்கள் ஏற்பட்டபடிதான் இருக்கின்றது.

அக்கா, இவர்களுடன் தர்க்கம் செய்து நேரத்தையும், சக்தியையும் வீணடிக்காதீர்கள். நித்திரை கொள்ளுறது போல நடிக்கிறவையல எழுப்ப முடியாது.

ஆனால் அண்ணனின் பெயருக்கு முன்னால் மற்றோர் எல்லாம் கால் தூசி. பரப்புரை செய்யிறார் சின்னதுரை கதைக்கு ஒரு மாதத்தில் அறூநூற்றி அறுபத்தி எட்டு பார்வைகள் ஆனால் இந்த அண்ணனின் பெயரை பாவித்த கவிதை இரண்டு நாளில் ஆயிரத்து அறுநூற்றி அறுபத்தியெட்டு பார்வைகளை எடுத்து சூடான திரியாகிவிட்டது.

இப்ப தெரியுது ஏன் புலி எதிர்ப்பு இணையத்தளங்கள் எல்லாம், நாள் தோறும் ஏதாவது ஒரு புலி தலைப்பை இயற்றி போடினம் எண்டு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தெரியுது ஏன் புலி எதிர்ப்பு இணையத்தளங்கள் எல்லாம், நாள் தோறும் ஏதாவது ஒரு புலி தலைப்பை இயற்றி போடினம் எண்டு.

குளவி! யானை இருந்தாலும் ஆயிரம் பொன் செத்தாலும் ஆயிரம்பொன் எண்டு ஊர் உலகத்திலை சொல்லுவினம்....அதை ஒழுங்காய் பயன்படுத்துறது உவையள்தான் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளவி எவ்ளோ அழகா கவிதை எழுதுறீங்க!

ஆனா ஒரு சாபம்... நமக்குள்ளையே உறைஞ்சு கெடக்குது மாப்பு!

ஒருவனை நல்லவன்னு சொல்ல & நிறுவ ,

இன்னொருவரை .கெட்டவன்னு ,,,எடுகோள் காட்டுறதே ,எம்மில் பலபேருக்கு......

பொழைப்பா போச்சு!

இன்னிக்கு சென்னை மக்களின் குடிதாகம் தீர்க்க ஓடிவரும் கிருஸ்ணா நதிக்கு,,

வாய்க்கால் கட்டிகொடுத்து , அவங்க நாக்கு வரண்டுபோகாம காத்தது...

சாய்பாபா கட்டிகொடுத்த வாய்க்கால்கள்தான்!

சென்னைல வாழ்ந்தா மட்டும்தானா ..அவன் தமிழன்?

புட்டபர்த்தி இப்போ மயானம் போல ஆனாலும்...

சொத்தா சேர்த்த காசில , மருத்துவ மனையும், பள்ளியும்.கட்டின இந்த சித்தர் ...

பெரிசா எந்த தப்பையும் பண்ணலையே...

நம்ம நித்தியானந்த ரஞ்சி(தா) சுவாமிகளைவிட!

எம் தேசபிதா பிரபாகரனை.... சாய்பாபா கூட ஒப்பிடாதீங்க..,,குளவி!

அவர் வேறு இவர் வேறு........

கடவுளாய் ...தன்னை காட்டிக்கொண்ட சாய்பாபா............

தன் மறைவுக்கு பின்னாலும்... கோடி சொத்துக்களை விட்டுப்போனார்.....!

எமக்காய் போராடிய எம் தலைவன்...சராசரி மனிதன்.....

தனக்காய் ... தன் குடும்பத்தைகூட... எமக்காய் விட்டுபோகல!

யார்கூடவும் யாரையும் ஒப்பிடாதீங்க...எதுக்கும் குளவி...!!

விட்டா...கொக்கு காலு நீளமா இருக்குது எங்கிறதாலதான் ,,,

அது கொத்தி முழுங்குற நெத்தலியும் ,,,,

நீளமா இருக்குன்னு சொல்லுவீங்களா? :(

கவிதை தலைவரை சாய்பாபாவுடன் ஒப்பிடவில்லை.

நீங்கள்தான் அதை ஒபிடுகிண்றீர்கள்.

இங்கே ஒரே மனிதன் தனக்காக வாழ்ந்தவனுக்கு என்ன செய்கிறான்.

அதே மனிதன் தன்னை ஏய்தவனுக்கு என்ன செய்கிறான் என்பதை சுட்டிகட்டியே நிற்கிறது.

ஒன்றோடு ஒன்றை ஒபிடாதிர்கள் எனும் உங்களின் வாதம் புரியவில்லை. எழுத்து உலகில் ஒப்பீட்டு எழுத்து முக்கிய பங்காக இருக்கிறது. ஆங்கிலத்தில் (comparison and contrast ) குறிப்பிட்டு சொல்லலாம்.

அதற்கான காரணம் ஒன்றில் தங்கியே ஒன்று உள்ளது.

இரவை விட்டல் பகலையும் விடவேண்டியதுதான் ............. இரவு ஒன்று இல்லையேல் பகல் என்று ஒன்று இருக்கமுடியாது.

நாட்டை கெடுப்பவன் இருப்பதால்தான் தன்னையே அர்பணித்து ஒருவன் நாட்டுக்காக உழைக்கவேண்டிய தேவை உள்ளது.

சாய்பாபா அடித்த பல கொடிகளை பாதுகாக்க சில நூறுகளை ஈனமாக விட்டார் என்பது உண்மைதான். அனால் பல கொடிகளை தான் கடவுள் என்று கூறி அறியாமையில் இருந்த மக்களிடம் கொள்ளை அடித்தார். அவரிடம் உண்மை இருந்திருந்தால் உழைத்து சாப்பிட்டிருக்கலாமே? பக்தரிடம் தனக்கு எதுவும் வேண்டாம் என்று கூறியிருக்கலாமே?

மேலை நாடில் எயிட்ஸ் நோயால் பாதிக்க பட்ட பல நாய்கள் கற்போடு இருக்கும் பெண்களுடன் உறவு கொண்டால் நோய் விட்டு விலகும் என்ற பொய்யான வதந்தியை நம்பி தமது நோயை தீர்க்க சென்ற இடம் இந்த புடற்பத்தி. இங்கேதான் பதின்மூன்று தொடக்கம் பதினாறு வயது வரை வந்த சிறுமிகளை இலகுவாக அவர்களால் அடையக்கூடியதாக இருந்தது. இந்த வியாபரத்திட்கு பினாலே இருந்தது இந்த புடர்பத்தி.

இப்படி நாட்டை கெடுத்த ஆசாமிக்கு...................? என்று கவிதை சொல்லுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.