Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் சாதியை அழித்து ஒரு Elite சமூகத்தை அமைப்பதுதான் எமது நோக்கம். எமது எண்ணப்படி Elite சமூகம் அமையும்போது சாதிகள் இருக்காது, முட்டாள்கள் இருக்க மாட்டார்கள், படிக்காத பாமரர்கள் இருக்கமாட்டார்கள்.. உயர் குழாம் தொழில்சார் நிபுணர்கள் இருக்கும்போது கற்கால மன்னர்களும் தேவையில்லை.

தேர்தல் முறையை ஒழித்து வலுவான சமூகத்தை எமது "பச்சைப் புத்தகத்தில்" உள்ள விதிகளுக்கு அமைய ஏற்படுத்துவோம்.

சர்வாதிகாரம், பாசிசம், அடக்குமுறை என்று கத்துபவர்கள்தான் அதிகாரத்தைக் கைப்பற்றி சமூகத்தை ஒரு தொய்வான நிலையில் வைத்து தாம் முன்னேற முயல்வார்கள். அவர்கள் எல்லாம் எமது அமைப்பின் கீழ் காணாமல் போவார்கள்..

மேலும் சமூக முன்னேற்றத்திற்கு ஜனநாயகப் பசப்பல்கள் தேவையில்லை. நேர்வழியில் மக்களைக் கொண்டு நடாத்தும் சகல திறமைகளும் மிக்க தொழில்சார் நிபுணர்கள் உள்ள உயர் குழாம் இருக்கும்போது வேறு எதுவும் தேவையில்லை!

தேர்தல் முறைமையை ஒழிப்பது என்பது சீன செஞ்சதுக்க படுகொலைகளை மீண்டும் கொண்டு வரும் முயற்சி.

தொழில்சார் நிபுனர்கள் ஒரு இயந்திர மனிதர்கள், பச்சைபிள்ளைக்கு பசித்தால் முழு பாணை கொடுப்பார்கள், தாயுள்ளம் படைத்த மன்னர்கள் முல்லைக்கு தேரை கொடுதார்கள், யாழ்கள் மன்னர்கள் பக்கத்தில் இருந்து பாலை போச்சியில் ஊட்டி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

தன்மான சிங்கம் ரதி ஒரு போதும் அடிமையாக மாட்டாள் :icon_idea:

எம்முடன் இணைந்து கொள்ளுங்கள் ரதி. ஆண்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் பெண்களுக்கு எமது கட்சியில் உண்டு.விரக்தி நிலையில் உள்ள உங்கள் கட்சி கொள்கையில் இருந்து அடுத்த நிலைக்கு அதாவது "வாழ்க்கை வாழ்வதற்கே" என்ற நிலைக்கு நீங்கள் எடுத்து செல்லப்படுவீர்கள். உங்களோடு இணைந்த தங்காவையும் எமது கட்சிக்கு கொண்டு வருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

எம்மிடம் தூதுப் புறாக்கள் இல்லை. துகிலுரி நங்கைகள் இல்லை. காட்டுச் சர்ப்பங்கள் இல்லை. நனவாக்கும் கனவுகள் மட்டும் உண்டு.

கனவுகள் நனவாவது வெறும் கற்பனையே

ஆனால் இலட்சியங்கள் நிச்சயம் வெற்று பெறும்

அதுக்கு வாழ்க்கையை ரசிக்க தெரிய வேண்டும்; துயரங்களை தூசாக மதிக்க தெரியவேண்டும்

எனவே வாழ்க்கை வாழ்வதற்கேயில் இணைய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான பாடல்,

"மாபெரும சபையினில் நீ நடந்தால், மாலைகள் விழவேண்டும் ஒரு மாசு குறையாத மன்னவன் இவன் என்று, ஊர் சொல்ல வேண்டும்,"

ஆழ்ந்த கருத்துக்கள், அறிவான தேடல்,

மன்னர் கட்சி....... மன்னர்......... கட்சி மன்னர்கட்சி........

:lol: :lol: :lol:

தன்மான சிங்கம் ரதி ஒரு போதும் அடிமையாக மாட்டாள் :icon_idea:

அடிமைகளுக்கு எமது கட்சியில் வேலை இல்லை, ஏனெனில் எல்லோரும் இன்நாட்டு தன்மான சிங்கங்கள், நீங்களும் ஒரு சிங்கம் மன்னிக்கவும் சிங்கி என இந்த உலகுக்கு நிரூபித்து காட்ட இரு கரம் நீட்டி தோழமையுடன் அழைக்கிறோம். :D

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:

மன்னர் சித்திரகுப்தரின் லொள்ளு தாங்கலை..! :lol:

வாழ்க மன்னர் சித்திரகுப்தர்..! :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

யாழ்களத்தில் எஞ்சியிருக்கும் மன்னர்களே.. :wub:எங்கள் கட்சியில் சேர்ந்தால் கலகலப்பாக இருக்கலாம்..! :icon_mrgreen: அழுகுணி ஆட்டக் கட்சி, அழுகாச்சிக் கட்சியில எல்லாம் சேர்ந்தீங்க.. மவனே நாறிடுவீங்க.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களின் கட்சிக்கும் வா வா கட்சிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதால்... நாங்கள் தோழமைக்கட்சியாக இருப்பதற்கான பேச்சு வார்ததைகள் நட்ந்து கொண்டிருக்கிறது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படிப்பார்த்தாலும் சக தோழர்களாகக் கருதவேண்டிய பெண்களை போகப்பொருளாகக் காட்டித்தானே நீங்கள் மன்னர்சபையை வளக்கவேண்டி இருக்கிறது... :icon_mrgreen:

சகோதரி, ஒரு பெண் அவளது இடுப்பை ஆட்டினால் அவள் போகப்பொருள் ஆகிவிடுகிறாள் ஆனால் சூர்யா சிக்ஸ் பாக்கை ஆட்டினால் அவர் ஆண்மையை காட்டுகிறார்

என்று உடனே கறுப்பி படத்தை மாத்திவிடுகிறார்.

நம் மாண்புமிகு தமிழ் சகோதரிகளுக்கு சொல்லி கொள்வதென்னவென்றால்... எங்களது அரச மனை கவிஞர் பெண்களை புகழ்ந்து ஒவ்வொரு நாளும் ராயல் ப்ளோகில் கவிதை வடிப்பார்.

படிக்காத மேதைகள் ஆடு பிடித்து விளையாடுவதை பற்றி புத்தகம் எழுதி உங்களை அறுப்பார்கள்.

மற்றும் நாம் யாழ் களத்தில் எல்லா தமிழ் சீரியல்களின் லைவ் தொடுப்பையும் பெற்றுத்தருவோம்.

முத்தாரத்தில் அண்ணிக்கு ஜால்ரா அடிக்கும் மச்சாள் தன் தாய் பக்கம் பாய்வாளா என்று தெரியவேண்டுமா? அளியுங்கள் வாக்கை யா. ச. ம. விற்கு.

குளவி, யா.ச. ம. வசன பீரங்கி/ஒன்றரை பரப்பு குறுநில மன்னன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் கட்சி (யா.கா.க) இலட்சனை....

post-553-0-20984900-1321835386_thumb.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் கட்சி (யா.கா.க) இலட்சனை....

post-553-0-20984900-1321835386_thumb.png

நாங்கள் கட்சியின் பரப்புரைக்கு தான் கிளாமர் சேர்ப்போம் ஆனால் இங்கே கட்சியின் சின்னத்தையே.........

வல்வை அக்கா, இதை எல்லாம் எதிர்த்து உங்களது கட்சி அறிக்கை விடாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கட்சியின் பரப்புரைக்கு தான் கிளாமர் சேர்ப்போம் ஆனால் இங்கே கட்சியின் சின்னத்தையே.........

வல்வை அக்கா, இதை எல்லாம் எதிர்த்து உங்களது கட்சி அறிக்கை விடாதா?

எங்கள் சின்னத்தில் என்ன பிழை கண்டீர்கள்? நாங்கள் வெளியால சரியெண்டு தெரியிற மாதிரித்தான் செய்வோம்......;)

------------------------------------------------------------------------------------------------------------------------------

காதல் என்றால்.....

ஒரு வகுப்பறையில் ஆசிரியரிடம் மாணவன் கேட்டான் காதல் என்றால் என்னவென்று?

அதற்கு அந்த ஆசிரியர், உனது கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்பு, அங்கு சோளம் விளைந்திருக்கும் வயலில் சென்று இருப்பதிலேயே மிகப்பெரிய சோளத்தை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு விதிமுறை உள்ளது.

ீ கடந்து விட்டப் பகுதிக்கு திரும்பி வந்து சோளத்தை எடுக்கக் கூடாது. ஒரு முறை கடந்து சென்றுவிட்டால் அவ்வளவுதான். முன்னோக்கிச் செல்லலாமேத் தவிர மீண்டும் பின்னோக்கு வந்து சோளத்தை எடுக்கக் கூடாது.

அதன்படியே அந்த மாணவரும் சோளம் விளைந்திருக்கும் வயலுக்குச் சென்றான்.

முதல் வரிசையிலேயே ஒரு பெரிய சோளத்தைக் கண்டான். ஆனால் அவனுக்குள் ஒரு எண்ணம், உள்ளே இதை விடப் பெரிய சோளம் இருந்தால் என்ற எண்ணத்துடன் உள்ளேச் சென்றான்.

ஆனால் உள்ளே பாதி வயல் வரை தேடிவிட்டான். அவன் கண்ட எந்த சோளமும் முதலில் கண்ட சோளத்தைவிட பெரிதாக இருக்கவில்லை. முதலில் கண்ட சோளம்தான் பெரியது. அதைவிட பெரியது இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்த அவன் வெறுங்கையுடன் வகுப்பிற்குத் திரும்பினான்.

அப்போது ஆசிரியர் கூறினார். காதலும் இதுபோலத்தான். ஒருவரைப் பார்த்ததும் பிடித்து விடும். ஆனால் இதை விடச் சிறந்தவர் கிடைப்பார் என்ற எண்ணத்துடன் நீங்கள் போய்க் கொண்டே இருந்தால் கடைசியாகத்தான் உணர்வீர்கள் உங்களுக்கானவரை ஏற்கனவே நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்பதை.

சுட்டது (நன்றி)...http://tamil.webdunia.com/miscellaneous/romance/tips/0808/04/1080804019_1.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றி நடை போடும் 'வாழ்க்கை வாழ்வதற்கே' கட்சி வரும் அடுத்தடுத்த தினங்களில் யாழில் வாழ்வை ரசிக்க வைக்கவும், வாழ்வை மேம்படுத்தவும் பல திரிகளை உருவாக்கப் போகின்றது. வண்ணத்துப் பூச்சியை தன் கொடியாக கொண்ட இந்த கட்சியின் சிறகசைப்பில் அனைத்து மக்களும் இன்புற போகின்றனர் என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கின்றோம்

monarchbutterflycp36499.jpg

இதே உங்கட கட்சி கானம்?

Link to comment
Share on other sites

இதே உங்கட கட்சி கானம்?

நிச்சயம் இல்லை

மக்களே,

எதிர்க்கட்சிகள் தமிழக மலிவு விலை நடிகர்களாம் விக்ரம் மற்றும் பிட்டு நடிகளைகளின் உதவி கொண்டு எம் கொடிச் சின்னமாம் வண்ணாத்தி பூச்சிகள் பற்றி 4 ஆம் தரமான பாடல்களுக்கு நடனமாடவிட்டு இங்கு சொருகின்றார்கள். இப்படியான மலிவு விலை வதந்திகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டு இப்படிப்பட்ட போலிகளை இனம் கண்டு எமக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்

இத்தகைய போக்கு நீடிக்குமானால் எம் அன்புச் சகோதரி ஷகீலாவின் உதவி கொண்டு எம்மை பற்றி தவறாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவிக்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிப் பதிவுகள் நிறைவுக்கு வந்தன.

இதுவரை களமாளுமன்ற அங்கீகாரத்திற்கு வேண்டப்பட்ட ஐந்து கட்சிகள் நிரந்தர பதிவுக்கான அங்கத்துவ ஆதரவைப் பெற்றுள்ளன. அதற்கு மேலதிகமாக அனுமதிக்கப்பட்ட இரண்டு கட்சிகளில் ஒன்றுக்கு நிரந்தர அனுமதி கிடைத்துவிட்டது. அனைவருக்கும்.. யாழ் கள களமாளுமன்ற திட்டமிடல் குழு சார்பில் வாழ்த்துக்கள்.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2) + நிரந்தரப் பதிவு நிலை

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (2) பதியப்பட்டுள்ளது.

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (5) பதியப்பட்டுள்ளது.

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (4) பதியப்பட்டுள்ளது.

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (2) பதியப்பட்டுள்ளது.

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா.) (5) பதியப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்.) (6) பதியப்பட்டுள்ளது.

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா.) (1) நிபந்தனைளுடன் பதியப்பட்டுள்ளது. (நிபந்தனை : தேர்தலுக்கு முன் தேவைப்படும் 2 அங்கத்தவர்களில்.. இரண்டாமவரை இணைத்துக் கொள்ள வேண்டும். இன்றேல் கட்சிப் பதிவு சுயாதீனமாகவே ரத்தாகும். கட்சிப் பெயர் மட்டும் பதிவாகி இருக்கும்.)

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி.) (0) (ஆகக் குறைந்தது ஒரு அங்கத்தவர் ஆதரவு கூட வழங்கப்பட்ட குறித்த கால எல்லைக்குள்.. இல்லாததால் பதிவு வழங்கப்படவில்லை. கட்சிப் பெயர் மட்டும் பதியப்பட்டுள்ளது. தேர்தலில் தனித்து நிற்க முடியாது. ஆட்சிக்கும் தனித்துச் செல்ல முடியாது.)

நிரந்தரப் பதிவு பெற்றுள்ள கட்சிகள்.. தங்கள் அங்கத்துவர் பட்டியலை வெளியிடுவதோடு.. தேர்தல் மற்றும் கட்சி கொள்கை வகுப்புக்கள்.. கட்சிக்கான கொடி.. இலட்சினை.. போன்ற விடயங்களில் கவனம் செலுத்தலாம்.

வழங்கப்பட்ட காலக் கெடு.. கடந்த GMT 22:00 20-11-2011 இல் முடிவடைந்து விட்டதால்.. அனைத்துக் கட்சிப் பதிவுகளும் நிறுத்தப்படுகின்றன. தேர்தல் திகதி அறிவிக்கப்படும். அதற்கு முன் களமாளுமன்ற பொதுவிதிகள் சமர்பிக்கப்பட்டு.. அங்கீகாரம் கோரப்படும்.

அனைத்து பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் அதன் அங்கத்தவர்களுக்கு மதிப்பளித்து.. அங்கத்தவர் பட்டியலை.. வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..! அப்படி செய்யாத கட்சிகள் தேர்தலில் பங்கெடுப்பதில் இருந்து தடுக்கப்படலாம்.

கட்சிகளில் அங்கத்துவம் பெறுவதற்கு எந்தக் காலவரையறையும் இல்லை..!

நன்றி. :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

yarlhouse.jpg

யாழ் கள களமாளுமன்றம்: "Yarliament" - Governing Body.

களமாளுமன்ற விதிகள்.. விதப்புரைகள்.

அடிப்படைக் கட்டமைப்பு:

அ: உறுப்பினர்கள் சபை- Members' council (ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி)

ஆ: மக்கள் சபை - People's Council (யாழ் கள உறுப்பினர்கள் அனைவரும்)

களமாளுமன்ற ஆட்சிக்காலம்: தேர்தலுக்கு தேர்தல்.. ஓராண்டு காலம். இடையில் மக்கள் சபையின் ஏறக்குறைய 60% (அதாவது ஏறக்குறைய 20 பச்சைப் புள்ளிகள்) , ஆளும் கட்சின் 60% வாக்குகள் மற்றும் எதிர்கட்சியின் 50% வாக்குகள் இன்றியோ களமாளுமன்றில் குறித்த கட்சியின் ஆட்சியை அதன் பதவிக்காலம் முடிய முன் கலைக்க முடியாது.

கட்சிப் பதிவு நிலைகள்.

நிரந்தரப் பதிவு பெற்ற கட்சிகள் மட்டுமே தேர்தலில் நின்று உறுப்பினர் சபைக்கு போட்டி இட்டு ஆட்சி அமைக்கவும்.. எதிர்க் கட்சி வரிசையில் உட்காரவும் முடியும்.

நிபந்தனையுடன் கூடிய நிரந்தரப் பதிவு மற்றும் தற்காலிக பதிவு பெற்ற கட்சிகள் எவையும் தேர்தலில் நிற்க முடியாது. உறுப்பினர் சபையில் இடம்பெற முடியாது.

கூட்டணி: கட்சிகள் தமக்கிடையே கூட்டணி அமைக்க முடியாது. அதேபோல் மக்கள் சபை உறுப்பினர்களுடனும் கூட்டணி வைக்க முடியாது. கட்சி அங்கத்துவம் மட்டுமே உறுப்பினர் சபையில் இடம்பெற வகை செய்யும்.

கட்சிக் கலைப்பு: ஒரு கட்சியை அதனை ஸ்தாபித்தவர் தவிர வேறு எவரும் கலைக்க முடியாது. கட்சியை ஸ்தாபித்தவர் கட்சிக் கலைப்பை செய்ய வேண்டின்.. அது குறித்து சுயாதீன தேர்தல் திணைக்களத்திற்கு தன் நிலைப்பாட்டை அறிவித்து.. அதனை சுயாதீன தேர்தல் திணைக்களம் அங்கீகரித்தால் மட்டுமே அந்தக் கட்சிக் கலைப்பு செல்லுபடியாகும்.

சுயாதீன தேர்தல் திணைக்களமும் கட்சிகளைக் கலைக்க முடியாது. கட்சிகள்.. நிபந்தனைகளை. விதிகளை மீறின்.. அதன் பதிவு நிலையை சுயாதீன திணைக்களம்.. நிரந்தப் பதிவில் இருந்து தற்காலிகமாக மாற்றிக் கொள்ளும். ஆனால் இந்த மாற்றத்திற்கான காரணத்தை சுயாதீன தேர்தல் திணைக்களம்.. ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டும்.

உறுப்பினர் சபை:

ஆளும் கட்சி பதவி நிலைகள்:

பிரதமர் + இரண்டு அமைச்சுக்கள் (மட்டும்) + களமாளுமன்ற சபாநாயகர்+ ஊடகப் பேச்சாளர். (தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சி.. ஆட்சி அமைக்க அழைக்கப்படும். கட்சித் தலைமை பதவி நிலைகளை தீர்மானிக்கும். அதுவே பதவிகளையும் நிரல்படுத்தும். பதவிகள் அனைத்தும் சுழற்சி முறைக்குரியவை. மக்கள் சபை.. பதவிக்குரியவர்களை பெரும்பான்மை கொண்டு நிராகரிப்பின்.. பதவி நிலைகள் மாற்றப்பட வேண்டும். ஒருவர் ஒரே தடவையில் இரண்டு பதவிகளை வகிக்க முடியாது. போதிய உறுப்பினர்கள் இல்லையேல் பதவி வெற்றிடமாக விடப்பட வேண்டும். மக்கள் சபை அந்தப் பதவியை தமக்குள் எடுத்துக் கொண்டு பணி செய்யும்.)

ஆளும் கட்சியில் ஒருவரே ஒரு பதவியை ஒரு குறிப்பிட்ட காலத்தில் வகிக்கலாம்.

எதிர்க்கட்சி பதவி நிலைகள்:

நிழல் பிரதமர் + ஆளும் தரப்பு அமைக்கும் அமைச்சுக்களுக்கு ஒத்த.. இரண்டு நிழல் அமைச்சுக்கள் (மட்டும்) + நிழல் சபாநாயகர்+ நிழல் ஊடகப் பேச்சாளார்+ (எதிர்க்கட்சியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பதவி அளிக்கப்பட வேண்டும். தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் கட்சிகளுக்கான பதவிகள் நிரல்படுத்தப்படும். பதவிகள் அனைத்தும் சுழற்சி முறைக்குரியவை)

(களமாளுமன்றம் 7 (இது குறையலாம்.. ஆனால் கூடாது) கட்சிகளுக்கு மட்டுப்படுத்திய ஒரு மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகக் கட்டமைப்பு என்ற வகையில்.. இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. )

பதவி நிலைகளுக்குரிய அதிகாரங்கள்.

பிரதமர்: களமாளுமன்றத் தலைவர். களமாளுமன்றத்தில் ஆளும் கட்சி கொண்டு வரும் ஒவ்வொரு நிகழ்ச்சித்திட்டத்திற்கும் தலைமை ஏற்றல்.. பொறுப்புக் கூறுதல்.. அமைச்சர்களை பிற பதவி நிலைகளை நியமித்தல்.. அவர்களுக்கான பதவி அதிகாரங்களை மக்கள் சபைக்கு பகிரங்கப்படுத்தல். கள விதிகளை ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஏற்று நடப்பதைக் கண்காணித்தல்.. கண்ணியமான செயற்பாட்டை உறுதி செய்தல்..!

அமைச்சுக்கள்(2 மட்டும்): பிரதமரின் கட்டளைக்கு பிரகடனத்திற்கு ஏற்ப அமைய அவற்றின் செயற்பாடுகள் இருக்கும். குறிப்பாக களச் செயற்பாடுகளில் மக்கள் சபை உறுப்பினர்களுக்கு புத்துணர்வழிக்கக் கூடிய வழிகளில் கருத்துப் பகிர்வைச் செய்யும் வழிமுறைகள் குறித்துக் கண்டறிதல்.. சிறப்பான தலைப்புகளை மக்கள் சபைக்கு வழங்கல்.. நல்ல தகவல்களைப் பரிமாறல்.. யாழ் களத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப திட்டங்களை முன் வைத்தல்.. பொது சமூக தளத்திற்கு அவசியமான உதவித் திட்டங்களை முன் வைத்தல். மக்கள் சபை உறுப்பினர்களை மகிழ்ச்சி உறுதி செய்தல். சண்டை சச்சரவுகளை தவிர்த்தல். ஒற்றுமையை பேணுதல்.

அமைச்சர்களின் தனிப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் பிரதமரே மக்கள் சபைக்கு பொறுப்புக் கூறுவார். எனவே பிரதமரே அமைச்சர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டும்.

சபாநாயகர்: களமாளுமன்றில் ஆளும் கட்சியின் வழமையான.. மற்றும் விசேட நிகழ்ச்சி நிரல்கள் பற்றி மக்கள் சபைக்கு முன் கூட்டியே அறியத்தருதல். முன் கூட்டிய நிகழ்ச்சிரலில் அடங்காத விடயங்களை களமாளுமன்றில் கதைக்கவோ.. கருத்துப் பகரவோ முடியாது. களமாளுமன்றச் செயற்பாடுகளில்.. ஆளும்.. தரப்பு.. எதிர்த்தரப்பு இருவருக்கும் சம வாய்ப்பளித்து.. களமாளுமன்றச் செயற்பாடுகளால் மக்கள் சபை பயன்பெற உதவுதல்.

களமாளுமன்ற ஊடகப் பேச்சாளர்: களமாளுமன்றில் ஆளும் கட்சியின் செயற்பாடுகள் குறித்த ஊடகச் செய்திகளை தருதல். மக்கள் சபைக்கு களமாளுமன்றச் செயற்பாடு குறித்து பிரதமர்.. அமைச்சர்கள்.. சபாநாயகர்களுக்கு மேலதிகமாக அல்லது அவர்களின் கூட்டு அறிக்கையை சமர்ப்பித்தல். ஆளும் கட்சி சார்பில்.. ஒருவரே ஒரே தடவையில் மக்கள் சபைக்கு பதில் அல்லது பொறுப்புக் கூற வேண்டும். அந்த வகையில் ஊடகப் பேச்சாளரே அதிகம் மக்கள் சபைக்கு முன் தோன்றி மக்கள் சபை முன் வைக்கும் கேள்விகளுக்கு பதிலிறுக்க வேண்டும்.

எதிர்க்கட்சி பதவி நிலைகள்.

நிழல்.. பிரதமர்.. நிழல் அமைச்சர்கள்.. நிழல் சபாநாயகர்.. நிழல் ஊடகப் பேச்சாளர்.. இவர்களின் பதவி என்பது.. எதிர்க்கட்சிகள் சார்பில்.. ஆளும் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில்.. அவர்களுக்கான வழிகாட்டல்களைச் செய்தல்...அவர்களின் திட்டங்கள் கொள்கைகள் தொடர்பில்.. குறை நிறைகளை சுட்டிக்காட்டுதல்.. அவர்களின் உபயோகமாக திட்டங்களுக்கு ஒத்துழைத்து.. மக்கள் சபைக்கு நிறைவான சேவையை வழங்கலை.. எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில்.. ஆளும் கட்சி பதவி நிலைக்கு ஏற்ப இவர்களின் பதவி நிலைகள்.. எதிர்கட்சிகள் சார்பில்.. நிழல் தன்மையோடு இருக்கும்.

தேர்தல்: தேர்தல் திகதி ஆண்டு தோறும்.. எமது உயிரிலும் மேலான மாவீரர்களின் நினைவு நாளான மாவீரர் தினம் (27-11-2011) முடிவடைந்த பின் அறிவிக்கப்படும்.

சுயாதீன தேர்தல் திணைக்களம்.

தேர்தல் சுயாதீன தேர்தல் திணைக்களத்தால் மட்டுமே நடத்தப்படும். இதில் ஆளும் கட்சியோ.. எதிர்க்கட்சியோ செல்வாக்குச் செய்ய முடியாது. மக்கள் சபை அதன் கருத்துக்களை சுயாதீன தேர்தல் திணைக்களம் முன் கூறலாம். அதேபோல்.. உறுப்பினர்கள் சபையும் தங்கள் கோரிக்கைகளை சுயாதீன தேர்தல் திணைக்களத்தின் முன் வைக்கலாம்.

சுயாதீன தேர்தல் திணைக்களப் பணிகள்: பதவிக்கால நிறைவுத் திகதி.. தேர்தல் திகதி.. அறிவித்தல். ஆட்சிக்குரிய கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தல்.. களமாளுமன்ற உறுப்பினர் சபையின் பதவி நிலைகளை உறுதி செய்தல்.. களமாளுமன்ற விதிகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று கண்காணித்தல்.. சரியான நேரத்தில்... தேவையின் பொருட்டு செய்யப்படும்.. களமாளுமன்ற ஆட்சிக் கலைப்பை உறுதி செய்தல்...போன்ற செயற்பாடுகள் அமையும். சுயாதீன தேர்தல் திணைக்களம்.. உறுதி செய்யாமல்.. இவை எதுவும் நிகழ்ந்துவிட்டதாக எவருமே கருத முடியாது. சுயாதீன தேர்தல் திணைக்களப் பணியாளராக ஒருவர் மட்டுமே இடம்பெற முடியும். மக்கள் சபையின் ஓர் உறுப்பினராக.. நெடுக்காலபோவன் ஆகிய நான் என் முதற் கடமை செய்வேன். இது ஓராண்டு காலம் வரை நீடிக்கலாம். அதன் பின் இப்பதவிக்கான வெற்றிடம் குறித்து மக்கள் சபைக்கு அறியத்தரப்பட்டு.. அந்தப் பதவிக்கு வர விரும்புவோர் பற்றிய விபரம் அறியப்பட்டு.. அது களமாளுமன்றில்.. மக்கள் சபை.. உறுப்பினர் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு.. அங்கு பெரும்பான்மை பெறும் ஒருவர்.. மக்கள் சபையில் இருந்து அந்தப் பதவிக்கு வர தேர்ந்தெடுக்கப்படுவார்.

தேர்தல் பிரச்சாரம்: தேர்தல் பிரச்சாரங்களுக்கு தேர்தல் திகதிக்கு முன்னராக இரண்டு வாரங்கள் தரப்படும். தேர்தல் தினத்திற்கு 24 மணி நேரங்களுக்கு முன் அனைத்து வடிவ தேர்தல் பிரச்சாரங்களும் நிறுத்தப்பட்டாக வேண்டும். அப்படிச் செய்யாத கட்சிகளின் நிரந்தரப் பதிவு நிலை தற்காலிக பதிவு நிலைக்கு மாற்றப்படும்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது.. தீவிர.. பண ஆசை.. பொன்னாசை.. பெண்ணாசை.. ஆணாசை.. பொருளாசை.. காட்டிப் பிரச்சாரம் செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது. கண்ணியமான பிரச்சாரங்கள் அங்கீகரிக்கப்படும். பிரச்சார வடிவங்கள் நவீன தகவல் தொழில்நுட்பத்தை புகுத்தியதாக இருப்பின் அது வரவேற்கப்படும்.

கட்சிக் கொள்கைகள்.. சின்னங்கள்... கொடிகள்.: கட்சிக் கொள்கைகள்.. கொடிகள்.. சின்னங்கள்.. பெண்களை.. ஆண்களை.. சிறுவர்களை.. பிற உயிரினங்களை எள்ளி நகையாடும் வண்ணமோ.. சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு வகை செய்யும் வண்ணமோ.. பெண்களை.. ஆண்களை.. சிறுவர்களை.. உயிரினங்களை.. வியாபார.. விளம்பரப் பொருளாக கருதும் வகையிலோ.. பிற நிஜக் கட்சிகள்.. மக்கள் மதிப்புப் பெற்ற அமைப்புக்களின் கொள்கைகள்.. கொடிகள்.. சின்னங்கள் சார்ந்தவகையாகவோ இருக்கக் கூடாது. தனி நபர்கள்.. பொது அமைப்புக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகவும் இருக்கக் கூடாது. உங்களின் சுய சிந்தனைக்கு.. உருவடிவம் கொடுக்கும் வகையில் கண்ணியமாக.. சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கலாம். நகைச்சுவை உணர்வை.. அறிவியல் உணர்வை.. சமூக உணர்வை தூண்டுவதாக இருப்பின் வரவேற்கப்படும். எக்கட்டத்திலும்.. எந்த வடிவிலான ஆபாசத்திற்கும். இன உடற் கவர்ச்சிக்கு... இடமளிக்கப்படமாட்டாது.

களமாளுமன்றச் செயற்பாடுகள்.

யாழ் களத்தின் நற்பெயரிற்கு பங்கம் நேரா வண்ணமும்.. கள உறவுகளின் (மக்கள் சபை + உறுப்பினர் சபை) தனிப்பட்ட.. மற்றும் பொது உரிமைகளை பாதிக்கப்படாத வண்ணமும் களமாளுமன்றச் செயற்பாடுகள் இருக்க வேண்டும். மேலும் செயற்பாடுகள்.. மக்கள் சபைக்கு ஏதாவது ஒரு வழியில் உதவுவதாக இருக்க வேண்டும். மக்கள் சபையில் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும். பிரச்சனைகளை சச்சரவுகளை தனிப்பட்ட போட்டி பகைமைகளை எந்த விதத்திலும் தூண்டக் கூடாது.

யாழில் கருத்துப் போட்டிகளை.. சுய ஆக்கங்களைப் படைத்தல் மற்றும் அதற்கான ஆற்றலை வெளிப்படுத்தும் போட்டிகளை நடத்தல்.... நல்ல தலைப்புகளை உருவாக்கும் போட்டிகள்.. என்று மக்கள் சபை உறுப்பினர்களின் செயற்பாடுகளை.. அவர்களோடு கூட நின்று சம நிலை.. சம உரிமை என்ற கொள்கைக்கு ஏற்ப.. நின்று.. ஊக்குவிக்க வேண்டும். நல்ல நகைச்சுவைப் பதிவுகளை தந்து.. இனிய பொழுது போக்கிற்கான ஆக்கங்களை தந்து..பலமான நகைச்சுவை ஆக்கங்களைப் படைத்து தொய்வின்றிய.. நகைச்சுவை உணர்வை அதிகரிக்கச் செய்து.. நலமான.. மன அழுத்தமற்ற.. உயர் இரத்த அழுத்தமற்ற.. வாழ்விற்கு வகை செய்ய வேண்டும்.

களமாளுமன்றக் கலைப்பு: (களமாளுமன்ற ஆட்சிக் கலைப்பு அல்ல.)

இவை மீறப்படும் பட்சத்தில்.. களமாளுமன்றை நிரந்தரமாகவோ.. அல்லது தற்காலிகமாகவோ கலைத்துவிட.. யாழ் கள நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது. இருந்தாலும்.. யாழ் கள நிர்வாகம்.. மக்கள் சபைக்கு (யாழ் கள உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளடக்கியது மக்கள் சபை) அதன் செயற்பாட்டுக்கான காரணங்களை தெளிவாக முன்வைக்க வேண்டும். அதை மக்கள் சபை.. 15 பச்சைப் புள்ளிகளால் அங்கீகரித்தல் வேண்டும். அதன் பின்னரே.. கள நிர்வாகத்தின் செயற்பாடு நியாயமானது என்று கொள்ளப்படும். களமாளுமன்றம்.. கலைக்கப்பட்டதாக கருத்தப்படும். களமாளுமன்றம் கலைக்கப்பட்டதும்.. அதன் அனைத்து கட்டமைப்புக்களும் தானே இல்லாமல் போகும். அதன் பின்னர் யாரும்... களமாளுமன்றச் செயற்பாட்டை முன்னெடுக்கக் கூடாது. கள நிர்வாகத்தின் மக்கள் சபையின் முடிவுக்கு மதிப்பளித்து.. அதை ஓர் சிநேகித பூர்வ செயலாக மட்டுமே நோக்க வேண்டும்.

மக்கள் சபை: உறுப்பினர் சபை கள அங்கத்தவர்கள் அல்லாத எல்லா கள உறவுகளும்.. இதில் அங்கம் வகிப்பர். உறுப்பினர் சபை அங்கத்தவர்களுக்கு தேர்தல்களின் போது வாக்களிப்பில் மட்டும்.. மக்கள் சபை உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்படும்.

மக்கள் சபை செயற்பாடுகள்:

மக்கள் சபை உறுப்பினர்கள்.. அனைத்து தேர்தல்களிலும் சுய முடிவின் பிரகாரம் வாக்களிக்க முடியும். மக்கள் சபை உறுப்பினர்களின் சுய.. பொது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவை மீறப்படும் போது அவர்கள் அதனைச் சுட்டிக்காட்டி.. தீர்வு தேடலாம். அதனை அவர்கள் உறுப்பினர் சபையில்.. பிரதமர்.. அல்லது நிழல் பிதரமரின் பார்வைக்கு வைக்கலாம். அவர்கள் கண்டு கொள்ளாத பட்சத்தில் கட்சிகள் மீதான குற்றச்சாட்டாக சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் முன் வைக்கலாம். அதுவும் கண்டுகொள்ளவில்லை என்றால்.. கள நிர்வாகத்தின் முன் வைக்கலாம். தீர்வைப் பெற முனையலாம். அந்தளவுக்கு நிலைமைகள் உருவாகாத வண்ணம்.. உறுப்பினர் சபை நடந்து கொள்ளும் என்று நம்புகின்றோம்.

உறுப்பினர் சபை +மக்கள் சபை = களமாளுமன்றம்.

ஆளும் தரப்பு.. எதிர்தரப்பு களமாளுமன்றில்.. கொண்டு வரும்.. புதிய.. நடைமுறையில் இல்லாத திட்டங்கள்.. கொள்கைகள்.. வரைபுகளை அமுலுக்கு கொண்டு வர.. அந்த வரைபுகள் தகுந்த விளக்கங்களுடன் மக்கள் சபையின் முன் கொண்டு வரப்பட்டு.. அதற்கு 60% அதாவது 20 பச்சைப்புள்ளிகள் பெறப்பட்டு அதன் பின்னரே அதை.. அமுலுக்கு வர உறுப்பினர் சபைக்கு வாக்கெடுப்புக்கு கொண்டு வர முடியும். உறுப்பினர் சபையில் 60% ஆளும் கட்சி உறுப்பினர்களினதும் 50% எதிர்க்கட்சி உறுப்பினர்களினதும்.. ஆதரவு இருந்தாலே அது சட்டமாக்கப்பட முடியும்.

உறுப்பினர் சபை.. நிகழ்காலத்தில் உள்ள.. கள விதிக்கு களமாளுமன்ற விதிக்கு உட்பட்ட ஆனால் மெருகூட்டப் பட வேண்டிய திட்டங்களை.. செயல்வடிவங்களை கொண்டு வர நினைத்தால்.. அதனை செயல்படுத்த ஆளும் தரப்பின் 60% வாக்குகளும்.. எதிர்தரப்பின் 50% வாக்குகளும் அவசியம். மக்கள் சபை வாக்கெடுப்பு அவசியம் இல்லை. ஆனால் மக்கள் சபை வழங்கும் பரிந்துரைகளுக்கு வழிசமைக்க வேண்டும். மக்கள் சபை அதனை வாக்கெடுப்புக்கு கேட்டால் அதனை வாக்கெடுப்புக்கு விட்டு அதன் 60% வாக்குகளைப் பெற்ற பின்னர் தான் அமுலுக்கு கொண்டு வர முடியும்.

(ஆளும் தரப்பு 60% என்பது ஆளும் தரப்பு உறுப்பினர்களின் எழுத்துமூல ஆதரவும் அவர்களின் மொத்த எண்ணிக்கையும் என்ற அடிப்படையில் கணக்கிடப்படும். எதிர்தரப்பின் 50% என்பது அவர்களின் எழுத்துமூல ஆதரவு மற்றும் அவர்களின் மொத்த எண்ணிகை என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படும். மக்கள் சபைக்கு மட்டுமே பச்சைப்புள்ளி.) தேர்தல்களின் உறுப்பினர் சபை அங்கத்தவர்களும் பச்சைப்புள்ளியை பயன்படுத்தலாம். ஏனெனில் அவர்கள் அடிப்படையில் மக்கள் சபை உறுப்பினர்களும் கூட.)

(இவை அனைத்தும் களமாளுமன்ற அடிப்படை விதிமுறைகள். இவற்றில் மாற்றமோ திருத்தமோ செய்ய வேண்டின்.. நீங்கள் சுயாதீன் தேர்தல் ஆணையகத்திற்கு அதனை முன் வைக்கலாம். அது சம்பந்தப்பட்ட விடயங்களை ஆராய்ந்து மாற்றங்களை பரிசீலித்து அமுல் படுத்தும்.)

முற்றும்.

இவற்றை கட்சிகளும்.. மக்கள் சபை உறுப்பினர்களும்.. தெளிவாகப் படித்து விளங்கிக் கொண்டு.. மாவீரர் தினம் முடிந்து தேர்தல் தினம் அறிவிக்கப்படும் வரை தங்கள் கட்சிக் கொள்கைப் பரப்புச் செயற்பாடுகளை.. கொடிகள்.. சின்னங்கள்.. கொள்கைகள்.. வகுப்பதை.. மக்கள் சபை உறுப்பினர்களின் வாக்குகளை கவர வகை செய்யலாம்.

(இப்பதிவில் எந்தத் திருத்தங்களும் என்னாலோ.. எவராலுமோ செய்யப்பட மாட்டாது. அப்படி திருத்தம் செய்வது காண்பிக்கப்படின்.. இவ்விதிகள் செல்லுபடியற்றதாகும். திருத்தங்கள்.. மேலதிக இணைப்புக்களாக தொடரப்பட வேண்டுமே தவிர அடிப்படை விதிகளை மாற்ற அது இடமளிக்காது. எனவே எழுத்துப் பிழைகள் இருப்பினும்... அதனை திருத்த முடியாது என்ற காரணத்தால்.. எழுத்துப் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.)

Link to comment
Share on other sites

இது மாவீரர் வாரம். மாவீரர் தினம் முடியும்வரை கட்சி செயற்பாடுகளை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துமாறு அன்புடன் வேண்டுகிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மாவீரர் வாரம். மாவீரர் தினம் முடியும்வரை கட்சி செயற்பாடுகளை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துமாறு அன்புடன் வேண்டுகிறேன். :)

ப.மே.க சார்பிலும் இக்கருத்தை முன்வைக்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனின் கருத்தை களமாளுமன்றின் சுயாதீன தேர்தல் திணைக்களமும்... வரவேற்று அதற்கு கெளரவமளிக்க அனைத்து மக்களையும் கேட்டுக் கொள்வதோடு.. மாவீரர் தினத்தன்று அகவணக்கம் செய்து.. மாவீரர்களின் கனவான தமிழீழ தாயக விடிவுக்கான உங்கள் அர்ப்பணிப்புக்கு சத்தியம் செய்து கொள்ளவும் அதனை காக்கச் செயற்படவும் வேண்டிக் கொள்கிறது.

நன்றி. (மீண்டும் 28-11-2011 அன்று சந்திப்போம்.)

Link to comment
Share on other sites

யாழ் கள காதலர் கட்ச்சில என்னை இணைத்து கொள்ளுறேன்

எனது உடன் பிறப்புக்கள் அந்த கட்ச்சியில் இருப்பதாள் அவர்கள்ளுடன் நானும் இணை...................!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவினின் கருத்துக்கும் தேர்தல் திணைக்களத்தின் பரித்துரைக்கும் மதிப்பளித்து

28.11.2011 வரை மக்களையும் மன்னர்களையும் மாவீரர்களின் நினைவுகளை

மனதில் ஏற்றி அமைதி காக்கும்படி யா ம ச வேண்டிக்கொள்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

28.11.11 வரை மாவீரர்களை துதிக்குமாறு யா கா க வேண்டிக்கொள்கிறது

Link to comment
Share on other sites

எதில இணையலாம்.. ?..

இப்போதைக்கு என் தெரிவு ஏதும் இல்லை... கடைசி நேரத்தில யாருமே என்னை ஏற்காமல் விடினமோ தெரியல

free lunch from babu restaurent

dinner from saravana bavan

Link to comment
Share on other sites

எம் சுதந்திர வாழ்வுக்காக தம்முயிரை கொடையாக்கிய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்து முகமாக வாழ்க்கை வாவதற்கே கட்சியின் அனைத்து செயற்பாடுகளும் இடை நிறுத்தப்பட்டு மீண்டும் 28-11-2011 ஆரம்பிக்கப்படும்

நன்றி

(வா.வா)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு அகவணக்கம் செய்யும் பொருட்டு சுயாதீன தேர்தல் திணைக்களம்.. தனது செயற்பாடுகளை தற்காலிகமாக ஒரு வாரத்துக்கு நிறுத்திக் கொள்கிறது. அது மீண்டும்.. இம்மாத இறுதி வாக்கில் தனது சேவையை ஆரம்பிக்கும்.

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.