Jump to content

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 போராளிகளின் வீரவணக்க நாள் அத்தோடு ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் காவியமானோர் வீரவணக்க நாள் மற்றும் 02.11.2000 அன்று முல்லைக்கடலில் காவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 போராளிகளின் வீரவணக்க நாள்

tamilselvan-and1.jpg

கடந்த 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு மாவீரர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 நவம்பர் 2 ஆம் திகதி‌ வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம் :

* பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் என்று அழைக்கப்படும் பரமு தமிழ்ச்செல்வன். (சொந்த முகவரி: யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி: கிளிநொச்சி மாவட்டம்)

* லெப். கேணல் அன்புமணி அல்லது அலெக்ஸ் என்று அழைக்கப்படும் முத்துக்குமாரு சௌந்தரகிருஸ்ணன் (சொந்த முகவரி யாழ். மாவட்டம்)

* மேஜர் மிகுந்தன் என்று அழைக்கப்படுமம் தர்மராசா விஜயகுமார் (சொந்த முகவரி: யாழ். மாவட்டம்)

* மேஜர் கலையரசன் அல்லது நேதாஜி என்று அழைக்கப்படும் கருணாநிதி வசந்தகுமார் (நிலையான முகவரி: யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி: ஜெயந்திநகர், கிளிநொச்சி)

* லெப். ஆட்சிவேல் என்று அழைக்கப்படும் பஞ்சாட்சரம் கஜீபன் (யாழ். மாவட்டம்)

* லெப். மாவைக்குமரன் என்று அழைக்கப்படும் முத்துக்குமாருக்குருக்கள் சிறீகாயத்திரிநாத சர்மா

* மேஜர் செல்வம்.

தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணி செய்தவர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன்.

நாற்பது வயதை எட்டிய சுப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க விடுதலை இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் மரணிக்கும் வரையான பதினான்கு ஆண்டுகளாகத் தனது பணியை செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.

அத்தோடு அவர் யாழ். மாவட்டத் தளபதியாக பணியாற்றிய அக்காலப் பகுதியில் வட போர்முனையின் கட்டளைப்பீடமாகத் திகழும் பலாலி முக்கூட்டுப் படைத்தளத்தின் அச்சுறுத்தலிலிருந்து போராட்டத்தின் மையத்தளமாக திகழ்ந்த யாழ்ப்பாணத்தை பாதுகாப்பதற்கான ஒரு தற்காப்புச் சமருக்கு முகங்கொடுத்த அதேவேளை இவரது தலைமையில் பல வலிந்த தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக

* மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதல்.

* ஆகாயக் கடல் வெளிச்சமரில் கடல் வழியிலான படை இறக்கத்துக்கு எதிரான சமர்.

என்பன பிரிகேடியரின் படைத்துறை ரீதியிலான செயற்பாட்டை வெளிப்படுத்தக் கூடியன.

ஆகாயக்கடல் வெளிச்சமரைப் பொறுத்த வரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்த முதலாவது மிகப்பெரும் மரபுவழிச் சமராக அது அமைந்ததோடு அனைத்துலக ஊடகங்களினதும், படை ஆய்வாளர்களினதும் கவனத்தை ஈர்த்த ஒரு சமராகவும் அது திகழ்ந்தது. இந்தச் சமரில் கடல் வழியிலான படை இறக்கத்துக்கு எதிரான சமருக்கு பிரிகேடியரே பொறுப்பாகச் செயற்பட்டார்.

இந்தச் சமரில் விழுப்புண்ணடையும் வரை அவர் களத்தை வழிநடத்தினார். இக்காலப் பகுதியில் கடற்புலிகளின் உருவாக்கமோ அல்லது கிட்டுப் பீரங்கிப் படையணி மற்றும் குட்டிசிறி மோட்டார் படைப்பிரிவின் உருவாக்கமோ ஏதும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் 1993ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளார்ந்த ரீதியாக ஒரு மிகப்பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்த நிலையில் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளராக பிரிகேடியர் நியமிக்கப்பட்டார்.

படைத்துறை ரீதியாக களங்களை வழிநடத்திய ஒருவர் ஒரு விடுதலை இயக்கத்தின் கடினம் மிக்க அரசியற் பணியை ஆற்றும் பொறுப்பையேற்றார். இவரது அரசியற்பணியானது இவர் அரசியல் துறைப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற 1993ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி பல்வேறு வகையிலும் முதன்மை பெற்றதாகவுள்ளது.

ஏனெனில் உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமும் சந்தித்திராத மிகப்பெரும் நெருக்கடிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முகங்கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் அரசியற்பணியை முன்னெடுக்க வேண்டிய சூழமைவு அவருக்குக் காணப்பட்டது.

இந்த நிலையிலும் அவர் நெருக்கடிமிக்க பல செயற்றிட்டங்களைச் சீர்செய்யும் வகையிலான வேலைத்திட்டங்களுக்கு தலைமை தாங்க வேண்டியிருந்ததுடன் அதனை வெற்றிகரமாகவும் செயற்படுத்தினார். இப்பணியை நாம் இரண்டு வகையில் நோக்கலாம்.

* இராஜதந்திரத்தளத்தில்

* மக்களின் தளத்தில்

ஒரு விடுதலை இயக்கத்தின் இலட்சியம், கொள்கை என்பவற்றை செவ்வனே மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்கள் ஆதரவுத் தளத்தைக் கட்டியெழுப்பும் பணியை ஆற்றுவது மிகக் கடினமான ஒரு பணியாகும்.

தொடர்ச்சியான போர் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் மக்களிடையே இப் பணியை ஆற்றுவதென்பது மிகப் பெரும் சிரமத்தைக் கொண்டது. ஆயினும் இப்பணியை பல்வேறு நெருக்குவாரங்களுக்குமிடையே அவர் முன்கொண்டு சென்றார்.

விடுதலை அமைப்பின் கொள்கையை முன்னெடுப்பது, மக்களை அணிதிரட்டுவது, விடுதலை இயக்கத்திற்கு எதிரான அனைத் துலகத்தின் இராஜதந்திர சமர்களுக்கு முகம் கொடுக்கின்ற அதேவேளை இலட்சியத்தின் மீது மக்களைத் தொடர்ந்து உறுதி கொள்ளச் செய்வது என்பவற்றோடு ஒரு நடைமுறை அரசிற்கான கட்டுமானங்களை உருவாக்கும் தலைமையின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பது எனப் பரந்துபட்ட வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுக்க வேண்டியிருந்தது.

ஆயினும் இக்காலப்பகுதியில் இவர் ஒரு மிகப் பெரும் போர் இடப்பெயர்வு நெருக்கடிக்கும், இயற்கை அழிவுகளுக்கும் முகம் கொடுத்த மக்களின் புனர்வாழ்வு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்ற வாழ்வியல் நெருக்கடிகளையும் வெற்றிகரமாகக் கையாண்டார்.

* யாழ்ப்பாணஇடப்பெயர்வு

* சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம்

யாழ்ப்பாண இடப்பெயர்வைப் பொறுத்த வரையில் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இரவில் இடம்பெயர்ந்த சூழ்நிலையில் அதற்கு முகம் கொடுத்து வன்னியை நோக்கி இடம்பெயர்ந்த மக்களின் இருப்புக்கு வழிகோலியது அவரது அரசியற்பணிக் காலத்தில் ஈட்டிய மிகப்பெரும் சாதனையாக நோக்கத்தக்கது.

இத்தகையதொரு நிலையிலும் அரசியல்துறைக்கான சிவில் கட்டமைப்புக்கள் குலையாது அவற்றின் மீள் எழுச்சிக்கு பாடுபட்டமையானது முதன்மை மிக்க செயற்பாடாகும். இதேபோன்றுதான் 2004ஆம் ஆண்டு தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தோனேசியாவின் சுமாத்திரா ஜாவா கடற்பரப்பில் ஏற்பட்ட நிலவதிர்வு காரணமாக கரையோரப் பிரதேசங்களில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அழிவிலிருந்து மக்களை துரிதகதியில் மீள்நிலைக்குக் கொண்டுவரும் செயற்றிட்டம் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டபோது அதனை வெற்றிகரமாக செயற்படுத்தி அனைத்துலக சமூகத்தின் பாராட்டு தலையும், கவனத்தையும் தாயகத்தை நோக்கி ஈர்த்தமையானது இவரது திறனிற்குச் சான்றாகும்.

அனைத்துலகத்தின் உதவிகள் முழுமையாக தமிழ் மக்களுக்கு வந்தடைவதை சிறிலங்கா அரசு தடுத்துக் கொண்டிருந்த நிலையில் எட்டக்கூடிய அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி சிறிலங்காவை விஞ்சும் அளவுக்கு செயல்பூர்வமாக அதனை எதிர்கொண்டமையானது அனைத் துலக சமூகத்தின் கவனத்தை ஈர்த்தமைக்குக் காரணமாக இருந்தது.

இச்செயற்றிட்டமானது பாதிக்கப்பட்ட மக்களை துரிதகதியில் இயல்பு நிலைக்கு கொண்டுவர மிகவும் பயனுடையதாக அமைந்திருந்தது. இது பிரிகேடியரின் அரசியற்பணியில் மக்களின் தளத்தில் அவர் ஆற்றிய மகத்தான பணியாக அமைந்தது என்றால் மிகையாகாது.

இதேவேளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இவரது இராஜதந்திரப் பணி வித்தியாசமானதாகும்.

அரசுகளுக்கிடையான இறுக்கமான பிணைப்பினூடாக முன்னெடுக்கப்பட்டு வரும் இராஜீக உறவுகளுக்கு நடுவே விடுதலை அமைப்பொன்றின் புரட்சிகர அரசியலை அனைத்துலக நாடுகளின் ஒத்திசைவுப் போக்கின் நடுவே முன்கொண்டு செல்லுதல் என்பது ஒரு கடினமான பணியாகும்.

விட்டுக் கொடுப்புக்கள் என்ற பேரிலும் இணைந்து செயற்படுதல் என்ற கோதாவிலும் ஒரு விடுதலை அமைப்பை அரசியல் நீரோட்டத்துக்குள் கொண்டுவருதல் என்ற புனிதம் கெட்ட இராஜதந்திர வலைப் பொறிக்குள் வீழ்த்திவிட முயலும் அனைத்துலக இராஜதந்திர முயற்சிகளுக்கு ஈடு கொடுத்து இலட்சியத்தையும், தலைமையின் முடிவுகளையும் பாதுகாக்கின்ற இராஜதந்திரப் பாத்திரத்தை பிரிகேடியர் ஏற்றிருந்தார்.

இன்றைய அனைத்துலக சமூகமானது அனைத்துலக ரீதியாக குருட்டுத்தனப் பார்வையூடாக எல்லா இனங்களின் போராட்டங்கள் மற்றும் முன்னெடுப்புக்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்த முனைந்து வரும் இன்றைய உலக யதார்த்ததில் ஒரு புரட்சிகர இராஜதந்திரப் பணியை பிரிகேடியர் மேற்கொண்டிருந்தார்.

சமாதானம் அடிமைகளை உருவாக்குகிறதென்றால் அதற்குச் சுதந்திரத்தை சாகடிக்கும் வல்லமை இருப்பதானாலேயேயாகும். அந்தச் சாகடிக்கும் வல்லமைக்குச் சவாலாக தமிழினத்தின் அரசியல் பணியை முன்னெடுத்து விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியான காப்பை பெறுவதென்பது மிகக் கடினமான பணியாகும்.

அதிலும் பல்வேறு நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட ஒரு விடுதலை அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவராக நின்று சர்வதேச சமூகத்தின் எதிர் முகத்தை எதிர்கொள்வது இலகுவான காரியமல்ல.

பேச்சு என்ற சாக்கில் சர்வதேச சாசனங்களின் பொறிக்குள் வீழ்த்தி தமிழினத்தின் விடுதலைக் கனவை கலைத்துவிட முயலும் சூழ்ச்சிக்கு பலியாகாது சுதந்திர இயக்கத்தின் இலட்சியத்தை முன்கொண்டு செல்வதில் பிரிகேடியர் ஆற்றலோடு பணியாற்றினார்.

இதன்போது அனைத்துலக சமூகத்தின் அத்தனை இராஜதந்திரப் பிரயோக வடிவங்களுக்கும் அவர் முகங்கொடுக்க வேண்டியேற்பட்டபோதும் அவர் இலட்சியத்தை எந்தவொரு கட்டத்திலும் சிக்கலுக்கோ, சிரமத்துக்கோ உள்ளாக்க நேரிடும் வகையில் செயற்படவில்லை என்பது நோக்கத்தக்கது.

பிரிகேடியர் அவர்களின் பதின் மூன்றாண்டு கால அரசியற் செயற்பாடுகளின்போது இரண்டு சமாதான பேச்சுக்களை எதிர்கொண்டுள்ளார்.

* யாழ்ப்பாணப் பேச்சுவார்த்தை. (முன்னாள் சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா காலம்)

* நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப் பேச்சுவார்த்தை.

இவ்விரு சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போதும் பலகட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் பிரிகேடியரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

அனைத்துலக சமூகத்தின் இராஜதந்திர சிக்கல்களுக்குள்ளோ, அனைத்துலக ஊடகங்களின் சிக்கலுக்குள்ளோ அகப்படாது அவர் நேர்த்தியாக முன்கொண்டு சென்றிருந்தார். இதில் நோர்வே அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட அமைதியில் எட்டாவது கட்ட சமாதானப் பேச்சுவார்த்தையானது அதாவது ஜெனீவா பேச்சுவார்த்தை பிரிகேடியர் தலைமையேற்று முன்னெடுத்திருந்த மிகச் சிறந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஒன்றாகும்.

பிரிகேடியரின் இராஜதந்திரப் பணிக்காலத்தில் அவர் ஆற்றிய மிகச் சிறந்ததும் மிகவும் பாராட்டப்பட்டதுமான ஒரு இராஜதந்திரப் பணியாகவே ஜெனீவா நோக்கப்படுகிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தீர்வுகளோ இணக்கப்பாடுகளோ ஏதுமற்ற நிலையில் ஐந்தாண்டுகளாகப் பேச்சுக்கள் மட்டுமே நீடித்து வந்த நிலையில் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருந்த ஆகக் குறைந்தளவிலான மனிதாபிமான நெருக்கடிகளைக் கூட களையமுனையாத சிறிலங்கா அரசின் போக்கை ஜெனீவா சமாதானப் பேச்சுவார்த்தையில் அனைத்துலக சமூகத்தின் முன்னிலையில் வெளிப்படுத்தி ஜெனீவா சமாதானப் பேச்சுவார்த்தையின் முழுத்தோல்விக்கும் சிறிலங்கா அரசே பொறுப்பென்பதை அந்தச் சமாதானப் பேச்சின் போது அவர் நிரூபித்திருந்தார்.

அத்தோடு ஜெனீவா- சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தமிழர் தரப்பில் தலைமை தாங்கிய பிரிகேடியர் சிறிலங்கா அரசின் தரப்பில் பேச்சு நாகரிகத்தைக் கூட கடைப்பிடிக்காத அநாகரிகப் போக்கு காணப்பட்ட நிலையிலும் பிரிகேடியர் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் ஜெனீவா- பேச்சுவார்த்தையை கையாண்டிருந்தமையை இராஜதந்திர வட்டாரங்கள் அன்று பாராட்டிப் பேசியிருந்தமை கவனிக்கத்தக்கது.

ஆயினும் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டுமொரு பேச்சுக்கான திகதியை நிர்ணயிக்கும் ஒரு வலுவிழந்த கோரிக்கையை பிரிகேடியரின் முன்னிலையில் அனுசரணையாளர்கள் முன்வைத்த போது அவர் உறுதியாக அக்கோரிக்கையை நிராகரித்து தமிழர் தரப்பின் உறுதியை நிலை நிறுத்தியிருந்தார்.

ஒரு கட்டத்தில் மென்போக்கு இராஜதந்திர அணுகுமுறையிலிருந்து சற்றே விலகி அச்சுறுத்தும் இராஜதந்திர அணுகுமுறையை அனைத்துலக சமூகம் கையாண்டபோது கூட பிரிகேடியர் புலிகளுக்கே உரித்தான உறுதியோடு அவற்றை நிராகரித்திருந்தார்.

அதாவது அடுத்த கட்டப் பேச்சுக்கான திகதி நிர்ணயம் செய்யப்படாது விட்டால் தமிழர் தரப்பு பேச்சுக்குழு கொழும்பினூடாக பயணம் செய்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்ற தொனியில் மிரட்டல் இராஜதந்திரத்தை பிரயோகித்த போது பிரிகேடியர் ஜெனீவாவில் வைத்து சர்வதேச இராஜதந்திரிகளுக்கு புலிக்குணத்தை வெளிப்படுத்தினார்.

அந்தச் சம்பவத்தைப் பிரிகேடியரே பின்னர் பின்வருமாறு தெரிவித்திருந்தார். அதாவது அடுத்த பேச்சுக்கான திகதியை நிர்ணயம் செய்யாது போகும் பட்சத்தில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக பிரயாணம் செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதற்குஸ இதுவொன்றும் எங்களுக்குப் பிரச்சினையில்லை. இந்தியாவினுடைய சமாதான முயற்சியின்போது இந்தியாவின் தவறான செயற்பாடு காரணமாக நாங்கள் அப்போது பன்னிரெண்டு போராளிகளை இழந்தோம். இப்போதும் ஏதேனும் சிக்கலை ஏற்படுத்தினால் மேலும் பதின்மூன்று போராளிகளை எமது விடுதலை இயக்கம் இழக்க நேரிடும். ஆனால் இது நோர்வேயின் சமாதான முயற்சியில் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும் எனச் சாவிற்கு அஞ்சாத புலிகளின் குண இயல்புநிலையில் மிகக் காட்டமாக அனுசரணையாளர்களுக்கு பதிலளித்தார்.

இது எந்தவொரு சூழலிலும், எந்தவொரு தளத்திலும் தளம்பாத பிரிகேடியரின் உறுதிமிக்க இராஜதந்திரப் பணிக்கு மிகப்பெரும் சான்றாகும். பின்னர் தமிழர் பேச்சுக் குழுவினர் பாதுகாப்பாகப் பயணம் செய்வது குறித்து அனுசரணையாளர்கள் வழமையைவிட அதிக சிரத்தையை எடுத்திருந்ததுடன் அதில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தியதாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறுதான் பிரிகேடியரின் இராஜதந்திரப் பணியும் மிகக் காத்திரமானதாக அமைந்தது.

பிரிகேடியர் தனது இருபத்து மூன்று வருடகால விடுதலைப் பயணத்தில் பதின்மூன்றாண்டு காலம் தொடர்ச்சியாக படைத்துறைப் பணியையும் பதினான்காண்டு காலம் அரசியல் தளத்தில் இராஜதந்திரப் பணி, மக்கள் பணியென விடுதலை அமைப்பின் வளர்ச்சிக்கும், மக்களின் மேம்பாட்டுக்குமென அயராது உழைத்த விடுதலை இயக்கத்தின் செயற்பாட்டாளராகத் திகழ்கிறார்.

பிரிகேடியரின் இறுதிக் காலப்பகுதியானது அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், படைத்துறை ரீதியாகவும் அவர் புடம் போடப்பட்ட ஒரு இளம் தலைவராக, தேசியத் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அமைவாக உருவாகியிருந்தார் என்றால் மிகையாகாது.

http://meenakam.com/news/flashnews/2011/11/02

தாயக கனவுடன் சாவினை தழுவிய அந்த சந்தன பேழைகளுக்கு எனது வீரவணக்கம்.

ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் காவியமானோர் வீரவணக்க நாள் இன்று

cam-logo.gifஓயாத அலைகள் 3 பாரிய படை நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் படைத்தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் இளையவன்(நியூட்டன்) உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

02.11.1999 அன்று தொடங்கப்பட்ட ஓயாத அலைகள் 3 படைநடவடிக்கையின் வெற்றிக்கு அடித்தளமிட்ட ஒட்டுசுட்டான் படைத்தள வீழ்ச்சிக்காக தம்மை ஆகுதியாக்கிய சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் நியூட்டன், மேஜர் சாரங்கன்(ஆறுமுகம் கதீபன்), கப்டன் ஜீவராசா(விசுவலிங்கம் சசிக்குமார்), லெப்.இருதயன்(வில்விறட் சுதேசன்), லெப். தரன்(தர்மு செல்வம்), லெப். செல்லத்தேவன்(பழனியாண்டி விமலன்), 2ம் லெப்.வண்ணன் (நல்லையா ரகுசீலன்), 2ம் லெப்.சூசை(சரவணமுத்து சதீஸ்), 2ம் லெப். புரட்சிமதி(கந்தையா அஜந்தன்), 2ம் லெப். நல்கீரன்(லோகநாதன் தவராசா), வீரவேங்கை இசைவேந்தன்(செல்வராசா நிசாந்தன்) ஆகிய சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி வீரர்கள் உட்பட்ட அனைத்து மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

0211_Ragavan-Newton.jpg

0211_Lt-Col-Raagavan.jpg

0211_Lt-Col-Newton.jpg

http://meenakam.com/news/flashnews/2011/11/02/

தாயக கனவுடன் சாவினை தழுவிய அந்த சந்தன பேழைகளுக்கு எனது வீரவணக்கம்.

02.11.2000 அன்று முல்லைக்கடலில் காவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள்

cam-logo.gif02.11.2000 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கையை முறியடிக்க வந்த சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்.

மாவீரர்கள் விபரம்:

லெப்.கேணல் சல்மான்(இரும்பொறை),

லெப்.கேணல் கதிர்காமரூபன்(பெத்தா),

மேஜர் இலக்கியன், கப்டன் குமாரவேல்,

கப்டன் சதாசிவம்,

கப்டன் வல்லவன் ஆகிய கடற்கரும்புலிகளினதும்,

லெப்.கேணல் சதீஸ்குமார் உட்பட்ட கடற்புலிகளினதும் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாய்மண்ணின் விடியலுக்காய் கடற்தாயின் மடியில் காவியமான இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

0211Salman-Peththa.jpg

0211Lt-Col-Satheeshkumar.jpg

0211BT-Maj-Ilakkiyan.jpg

0211BT-Lt-Col-Salman.jpg

0211BT-Lt-Col-Kathirgamarooban.jpg

0211BT-Capt-Vallavan.jpg

0211BT-Capt-Sathasivam.jpg

0211BT-Capt-Kumaravel.jpg

http://meenakam.com/historical/2011/11/02/02

தாயக கனவுடன் சாவினை தழுவிய அந்த சந்தன பேழைகளுக்கு எனது வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைத் தீயில் விதையாகி விட்டவர்களுக்கு, வீர வணக்கங்கள்!

Link to comment
Share on other sites

தமிழர் தாயக விடுதலையில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துவிட்ட இந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள். !!!

Link to comment
Share on other sites

வீழ்ந்து மக்கள் மனங்களில் விதையாகிய மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

இன்நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Edited by அலைஅரசி
Link to comment
Share on other sites

தமிழ் மக்கள் மனதில் என்றென்றும் குடியிருக்கும் மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.