Jump to content

"முதல் பிளாஸ்டிக் ஜெட்"


Recommended Posts

"முதல் பிளாஸ்டிக் ஜெட்" விமானம் பறந்தது

போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகவும் இலகுரக பயணிகள் விமானம், 787 ட்ரீம்லைனர், இன்று முதன் முறையாக பயணிகளுடன் விண்ணில் பறந்தது.

“உலகின் முதல் பிளாஸ்டிக் ஜெட்” என்று போயிங் நிறுவனத்தால் வர்ணிக்கப்படும் இந்த விமானத்தின் கட்டுமானப் பொருட்களில் சுமார் அரைப்பகுதி , கார்பன் இழைகள் மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் , எரிபொருளை பயன்படுத்துவதில் மிகவும் சிக்கனமானது என்று கூறப்படுகிறது.

264 இருக்கைகள் மற்றும் இரண்டு இயந்திரங்கள் கொண்ட இந்த விமானம், ஜப்பான் விமான நிறுவனமான, ஆல் நிப்போன் ஏர்லைன்சினால், (ஏ.என்.ஏ) டோக்யோவிலிருந்து ஹாங்காங்குக்கு, இன்று இயக்கப்பட்டது.

இந்த முதல் பயணத்தில், ஆறு பிசினஸ் கிளாஸ் இருக்கைகளை , ஏ.என்.ஏ நிறுவனம் , ஏலத்தில் விற்றது. அதில் ஒரு இருக்கை, சாதாரணமாக பிசினஸ் கிளாஸ் இருக்கை விலையை விட 10 மடங்குக்கும் மேல் அதிகமான விலையில், அதாவது, சுமார் 34,000 டாலர்களுக்கு விற்கப்பட்டது.

இந்த ஏலத்தால் கிடைத்த தொகையை சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நன்கொடையாகத் தரப்போவதாக ஏ.என்.ஏ கூறியிருக்கிறது.

இந்த விமானத்தின் மற்ற டிக்கெட்டுகள் விற்கத் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன.

இந்த விமானத்தை பரீட்சார்த்த முறையில் பறக்கவிட்டதன் அடிப்படையில், அது 20 சதவீதம் குறைவான அளவில் எரிபொருளை பயன்படுத்தும் என்றும் தெரியவருகிறது.

ட்ரீம்லைனர்,அதே அளவு திறனுள்ள பிற ஜெட் விமானங்களை விட அதிக தூரம் பயணிக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களில், விமானம் தரையிறங்க உதவும் கீயர், எரிபொருள் அமைப்பு, சில இருக்கைகள் மற்றும் இயந்திரங்கள் உட்பட சுமார் கால் பகுதி பொருட்கள், பிரிட்டனில் தயாரிக்கப்பட்டவை. மற்ற பொருட்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை. அமெரிக்கவில் தயாரிப்புப் பணிகள் பல்வேறு காரணங்களால் மூன்றாண்டுகள் தாமதமாயின.

இந்த விமானத்தில் ஜன்னல்கள் சற்று பெரிதாக இருக்கும், காற்றின் தரமும், உள்ளே வெளிச்சமும் மேம்பட்டதாக இருக்கும் என்று போயிங் கூறுகிறது.

இதற்கிடையே, பிரெஞ்சு விமான தயாரிப்பு நிறுவனமான, ஏர்பஸ்ஸும், இதே போன்ற ஒரு இலகு ரக விமானத்தை தயாரித்து வருகிறது. இதன் இறக்கையும் பிற வேறு பொருட்களும் பிரிட்டனில் தயாரிக்கபட்டுவருகின்றன. இந்த விமானம் அடுத்த ஆண்டு பரீட்சிக்கப்படும் என்று ஏர் பஸ் நம்புகிறது.

http://www.bbc.co.uk...mlinerjet.shtml

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.