Jump to content

விடுதலைப்புலிகள் - தமிழ்க் கூட்டமைப்பு சந்திப்பு-


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் - தமிழ்க் கூட்டமைப்பு சந்திப்பு- முக்கிய விடயங்கள் ஆராய்வு!

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விடுதலைப் புலிகளினை சந்தித்து சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக கலந்துரையாடினர். விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் மற்றும் யாழ்ப்பாணம், முல்லைத்துPவு, வவுனியா, மன்னார் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர்கள், சமாதான செயலகத்தை சேர்ந்த இளந்திரையன், ஆகியோர் விடுதலைப்புலிகள் தரப்பில் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் சிறிலங்காவின் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாகவும் கடத்தப்பட்டுள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழக பணியாளர்களினை விடுவிப்பது பற்றியும் பிரதானமாக பேசியதாக குறிப்பிட்டார்.

சிறிலங்கா அரசு நடத்தவுள்ள உள்ளுராட்சி தேர்தலை நடத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையாளரைக் கேட்டிருக்கின்றோம் என்று கூறிய மாவை சேனாதிராஜா, சட்ட பிரச்சினைகள் காரணமாக உள்ளுராட்சி தேர்தல் நடந்தால் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் செல்லாமல் தடுப்பதற்காக எமது தேசத்தின் விடுதலையின் மீது பற்றுக் கொண்டவர்களை அந்த தேர்தலில் பங்குபற்ற செய்வதற்குள்ள சாத்தியங்களையும் இன்றைய சந்திப்பில் ஆராய்ந்தோம் என்று தெரிவித்தார்.

கடத்தப்பட்டுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உறுப்பினர்களை விடுவிப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்வது பற்றி ஆராந்தோம். வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் போன்றவர்கள் இதனை கட்டுக்கதை என்று கூறுவதற்கு சரியான பதிலை பாராளுமன்றில் கூறியிருக்கின்றோம். ஆவணப+ர்வமாகவும் ஆதாரப+ர்வமாகவும் பத்திரிகைகளுக்கும் சர்வதேசத்துக்கும் இதனை எடுத்துரைக்கும் நடவடிக்கையினை செய்யவுள்ளளோம்.

ஜெனீவா பேச்சுவார்த்தை புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பாகவே இடம்பெறவுள்ளது. குறிப்பாக ஒட்டுப்படைகளை கலைத்தல், தமிழ் மக்களின் இயல்பு வாழ்வைத் தோற்றுவித்தல் என்பன நடந்தால் தமிழீழ விடுதலைப்புலிகளும் பேச்சுக்களில் கலந்து கொள்ள சாத்தியம் இருப்பதாக கருதுகின்றோம். விடுதலைப்புலிகள் பேசுவதற்கு மாறானவர்கள் அல்லர்@ அரசு தனது நேர்மையை வெளிப்படுத்த வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களுக்கு பதிலாக யாரை தெரிவு செய்வது என்று இரண்டு மூன்று தினங்களில் அறிவிக்கப்படும் என்றார்.

இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி ஜெனீவா பேச்சுக்களில் புரிந்துணர்வு உடன்படிக்கை பற்றியே பேசப்படவுள்ளது. அதனை அமுல்படுத்துவதில் பெரும் பங்கு சிறிலங்கா அரசுக்குதான் உரியது. அதனை செய்ய முடியாது என்ற நிலையில் விடுதலைப்புலிகளை பேச்சுக்களுக்கு வரவிடாமல் தடுக்கும் நோக்குடன் தான் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணியாளர்களை கடத்தியிருக்கின்றது என்று கூறினார்.

தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.