Jump to content

மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!


Recommended Posts

எந்த ஒரு போராட்டத்திலும் முதலாவதாக உயிரிழப்பவர் மாபெரும் தியாகியாக போற்றப்படுவார். அவருக்கு சிலை, நினைவிடம், அருங்காட்சியகம், அவர் பெயரில் விருதுகள் என அவரது நினைவு என்றென்றும் போற்றப்படும். உலக வரலாற்றின் மிகப்பெரிய சனநாயகப் போராட்டமாக கருதப்படுவது மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டம் ஆகும். இப்போராட்டத்தில் முதன்முதலில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர்.

'இறந்தாலும் என்றென்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் வாழ்வார்' என மகாத்மா காந்தியால் புகழப்பட்ட அந்த தியாகி இந்திய வரலாற்றில் இடம் பெறவில்லை. ஒரு மாபெரும் தியாகி மறக்கப்பட்டது ஏன்? அவர் ஒரு தமிழர் என்பதாலா? வஞ்சிக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதாலா? ஏழை என்பதாலா? படிக்காதவர் என்பதாலா?

அந்த மாபெரும் தியாகம் குறித்த முதல் கட்டுரை இதுவாகும்: இதர இரண்டு கட்டுரைகளை இந்த இணைப்புகளில் காணலாம்:

2. தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்

3. தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி

கட்டுரை 1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!

மகாத்மா காந்தி வடிவமைத்த மாபெரும் போராட்ட முறை சத்தியாகிரகம் எனப்படுவதாகும். இந்திய விடுதலைப்போராட்டம், நெல்சம் மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டம், மார்ட்டின் லூதர் கிங்கின் அமெரிக்க கருப்பின உரிமைப் போராட்டம் என உலகின் மிகப்பெரிய போராட்டங்களின் அடிப்படை வடிவம் சத்தியாகிரகம்தான்.சிறீ நாராயண குரு, தந்தை பெரியார் பங்கெடுத்த வைக்கம் சத்தியாகிரகத்தின் முன்னோடியும் அதுதான். அப்படிப்பட்ட தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போருக்காக உயிர்த்தியாகம் செய்த உலகின் முதல் தியாகி "சாமி நாகப்பன் படையாட்சி".

Aimg_54712_padayachee.jpg

ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி படங்கள்உலகின் முதல் சத்தியாகிரக உயிர்த் தியாகம் எனும் அந்த மாபெரும் நிகழ்வு வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்டுவிட்டது.

அறப்போர் அல்லது சத்தியாக்கிரகம் என்பது பொதுவாக உரிமைகளை வென்றெடுப்பதற்காக வன்முறை இன்றி அறவழியில் போராடுவதைக் குறிக்கும். எதிராளிக்குத் தீங்கு விளைவிக்காமல் அவர் மனதை மாற்றி உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதே இதன் அடிப்படையாகும்.

மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் தொடங்கி ஈழத்தில் தியாகி திலீபன், இப்போது இந்தியாவில் அன்னா அசாரே, கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு என எல்லாமும் "அறப்போர்" என்கிற முறையில் நடத்தப்படுகிறது. ஆனால், சத்தியாகிரக போரின் முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியை எவரும் நினைவில் கொள்ளவில்லை. அவர் உயிர்த்தியாகம் செய்து 102 ஆண்டுகள் கடந்துவிட்டன.

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி

குசராத் மாநிலத்தில் பிறந்து லண்டனில் சட்டம் பயின்ற காந்தி, இந்தியாவில் உரிய வேலை அமையாத காரணத்தினால் 1893 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் நேட்டாலில் பணிக்கு சேர்ந்தார்.அப்போது தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள்தான், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்கியது.

220px-Gandhi_costume.jpg

தென் ஆப்பிரிக்காவில் காந்திஅங்குள்ள டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். பிறகொரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நேட்டால் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவரது முயற்சி வெற்றிபெறவில்லை.

மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம்.

1906 ஆம் ஆண்டு டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறும் ஏசியாடிக் பதிவு சட்டத்தை கொண்டுவந்தது. இந்தியர்கள் தமது பெயரையும் கைரேகையையும் பதிவு செய்து கொண்ட ஆவணத்தை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். வேலை, தங்குமிடம் என எல்லா இடத்திலும் இந்தியர்கள் தனியாக பிரித்து வைக்கப்படுவார்கள். புதிதாக இந்தியர்கள் எவரும் டிரான்சுவால் மாகாணத்திற்குள் குடியேறக்கூடாது, மூன்று பவுண்ட் வரி செலுத்த வேண்டும், இந்தியர்களின் திருமணங்கள் சட்டபடி செல்லாது என்று பல விதிமுறைகளை முன்வைத்தது அச்சட்டம்.

இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இச்சட்டம் இந்தியர்களை துன்புருத்துவதாகவும் கண்ணியத்தை குலைப்பதாகவும் இருப்பதாகக் கூறிய காந்தி, விளைவுகள் எதுவானாலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் இந்தியர்கள் இச்சட்டத்தை எதிர்க்க அழைப்புவிடுத்தார்.

1906ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் நகரில் சுமார் மூன்றாயிரம் இந்தியர்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் தனது அறவழிப்போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். அதாவது, இச்சட்டம் செயலுக்கு வந்தால் இந்தியர்கள் தமது பெயரை பதிவு செய்துகொள்ளக்கூடாது. சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார்.

மகாத்மா காந்தியின் வடிவமைப்பில் உருவான உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் இதுதான். 1907 ஆம் ஆண்டு சூலை மாதம் டிரான்சுவால் காலனி அரசாங்கம் ஏசியாட்டிக் பதிவு சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. தனது பெயரை பதிவு செய்யாத இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 1906 ஆம் ஆண்டு தொடங்கி 1914 ஆம் ஆண்டுவரை எட்டு ஆண்டுகள் இப்போராட்டம் நீடித்து கடைசியில் வெற்றி பெற்றது. அந்தவகையில் காந்தி வெற்றி பெற்ற முதல் போராட்டமும் இதுதான்.

காந்தி முதல் முறையாக சிறை சென்றதும் இந்த போராட்டத்திற்காகத்தான். மகாத்மா காந்தி "சத்தியாகிரகம்" என்கிற போராட்டமுறையை வடிவமைத்ததும் இப்போராட்டத்தில்தான். இந்த முதல் சத்தியாகிரக போராட்டமே இந்திய விடுதலைப் போருக்கு வழிகாட்டியாக அமைந்தது. மேலும், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட பலரது அறப்போராட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கியது ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம் என கருதலாம்.

உலகின் முதல் சத்தியாகிரக தியாகி.

ஜொகனஸ்பர்க் சத்தியாகிரக காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். "இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்" என்ற காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு மூன்று பவுண்ட் தண்டம் அல்லது 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. (மூன்று பவுண்ட் என்பது தற்போதைய மதிப்பில் சுமார் 230 ரூபாய்). எனினும், தண்டத் தொகையைக் கட்டாமல் சிறைத் தண்டனையை ஏற்பதே சத்தியாகிரகப் போராட்டம் என்பதால் சிறைக்குச் சென்றார்.

முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. (இதே சிறையில்தான் காந்தியும், பின்னாளில் நெல்சன் மண்டேலாவும் அடைக்கப்பட்டனர். 'கான்சிடியூசன் மலை' என்று அழைக்கப்படும் அந்த இடம் இப்போது ஜொகனெஸ்பர்க் நீதிமன்றமாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கிறது). அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.

img_54692_constitution_hill.jpg

ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறைஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழது மரணத்தை தழுவினார்.

1909 ஆம் ஆண்டு சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் அவர் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

அந்த சமயத்தில் டிரான்சுவால் இந்தியர்களின் போராட்டம் குறித்து பிரச்சாரம் செய்வதற்காகான பிரதிநிதியாக லண்டன் சென்றிருந்தார் காந்தி. சாமி நாகப்பன் படையாட்சி கைது செய்யப்பட்ட சூன் 21 ஆம் நாள் அன்றுதான் காந்தி ஜொகனஸ்பர்க் நகரிலிருந்து லண்டனுக்கு கிளம்பினார். அவர் சூலை 10 அன்று லண்டன் சென்று சேர்வதற்குள் சாமி நாகப்பன் படையாட்சி வீரமரணம் அடைந்துவிட்டார். காந்தியிடம் சூலை 12 ஆம் நாள் தந்தி மூலமாக அவரது தியாக மரணம் தெரிவிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்க இந்தியர்களும் ஜொகனஸ்பர்க் நகரின் வெள்ளையின கிறித்தவ தலைவர்களும் சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது குறித்து பொதுவிசாரணை நடத்தக் கோரினர்.

1909 ஆம் ஆண்டு சூலை 19 அன்று மாஜிஸ்ட்ரேட் மேஜர் டிக்சன் என்பவரது தலைமையில் "சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது" குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை சிறை அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்றது. இதற்கு இந்திய வம்சாவழியினர் திரண்ட ஜொகனஸ்பர்க் பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு காந்தி எழுதிய கடிதத்தில் விசாரணை அறிக்கையில் உள்ள விசயங்களே நாகப்பன் சிறைவாசத்தால் கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக தெரிவித்தார்.

சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. அந்த இளம் வயதில் சம உரிமைக்காக தனது உயிரை தந்தார் அவர்.

1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள், தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்வை முடித்துக்கொண்டு, காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். அதற்கு மூன்று நாள் முன்னதாக, சாமி நாகப்பன் படையாட்சி இறந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், சூலை 15 அன்று தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர் நகரில் உள்ள பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார் மகாத்மா காந்தி. (அதனுடன் வள்ளியம்மா முனுசாமி முதலியார் நினைவிடத்தையும் அன்று திறந்தார் காந்தி, அதுதான் மகாத்மா காந்தியின் கடைசி தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சி).

braamies_top.jpg

ஜொகனஸ்பர்க் நகரின் பிராம்ஃபோன்டெய்ன் கல்லரைத்தோட்டம்

தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடம் சிதைக்கப்பட்டது, தென் ஆப்பிரிக்காவில் 1994 இல் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 20.4.1997 அன்று மீண்டும் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம் மறுசீரமைக்கப்பட்டது. அதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு மற்றும் இந்திய தூதரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருட்டின காந்தியும் திறந்து வைத்தனர்.

காந்தியின் நிறைவேறாத கனவுகள்!

தனது சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும். தென் ஆப்பிரிக்காவில் காந்தியின் எழுத்தும் பேச்சும் இந்தியன் ஒப்பீனியனில் தொடர்ந்து வெளியானது.

Indian_Opinion.png

இந்தியன் ஒப்பீனியன்தனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்ற போது - நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால், தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்று 14.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

தனது சகோதரர் இறந்த போது - நாகப்பன் உயிரிழப்பு தனக்கு ஏற்படுத்திய மன வலியுடன் ஒப்பிட்டால் தனது சகோதரன் இறப்பால் ஏற்படும் வலி பெரிதல்ல என்று 18.3.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார். முதலாவதாக, 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவில்லை.

padayachee-sn.jpg

சாமி நாகப்பன் படையாட்சிஅடுத்ததாக, நாகப்பன் தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க் நகரில் ஒரு கல்வி உதவித்தொகை நினைவு நிதியை உருவாக்க விரும்பினார். அதற்காக திருமதி.வோகல் என்பவர் நிதிதிரட்ட முன்வந்த போது காந்தி அதனை வரவேற்று ஆதரித்து 9.12.1911 மற்றும் 14.6.1912 தேதிகளில் இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் எழுதினார். அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும் நாகப்பன் நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என்றார் காந்தி. அதுவும் நடக்கவில்லை.

காந்தி இந்தியா திரும்பிய பின்னர் - இந்திய சுதந்திரப் போராட்டம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு - போராட வருவோர் நாகப்பனை முன்னுதாரணமாக கொண்டு அவர் காட்டிய பதையில் பயணிக்க வேண்டும் என்றார் காந்தி.

சென்னை, மதுரை, தூத்துக்குடி, நாகப்பட்டிணம் என தமிழ்நாட்டில் தான் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம் நாகப்பன் தியாகத்தை புகழ்ந்து பேசினார் காந்தி.

(சாமி நாகப்பன் படையாட்சியை புகழ்ந்து காந்தி பேசியுள்ள குறிப்புகளை விரிவாக இங்கே காண்க: தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி)

இத்தனைக்கு பிறகும் விடுதலை அடைந்த இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் வெளியே தெரியாமல் மறைந்து போனது எப்படி?

மறக்கப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சியும் போற்றப்பட்ட வள்ளியம்மா முனுசாமி முதலியாரும்.

சாமி நாகப்பன் படையாட்சியைப் போன்று தென்னாப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்தில் முதன்மை இடத்தை பிடிக்கும் மற்றொரு போராளி, மற்றொரு தமிழர் வள்ளியம்மா முனுசாமி முதலியார். தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று 1913 டிசம்பர் 22 அன்று தனது தாயாருடன் கைது செய்யப்பட்டார். மூன்று மாத சிறைத்தணடனைப் பெற்று காந்தியின் துணைவியார் கசுதூரிபா காந்தியுடன் சிறையில் இருந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் விடுதலை செய்யப்பட்ட போதும் வெளிவர மறுத்தார். எனினும் சத்தியாகிரக போராட்டம் வெற்றி பெற்றதால் 1914 சனவரி 11 அன்று விடுதலை ஆனார். சிறையில் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் 1914 பிப்ரவர் 22 அன்று மரணமடைந்தார். அப்போது வள்ளியம்மா முனுசாமி முதலியாரின் வயது 16. தமிழ்நாட்டில் அவர் 'தில்லையாடி வள்ளியம்மை' என்று அறியப்படுகிறார்.

Thillaiaadi_valliammai.jpg

வள்ளியம்மா முனுசாமி முதலியார்(நாடுகடத்தப்பட்டதால் கப்பலில் அலைகழிக்கப்பட்டு அதனால் இறந்த நாராயணசாமி, முதுமையின் காரணமாக 75 வயதில் சிறையில் இறந்த அர்பத் சிங் ஆகியோரின் மரணம் தென் ஆப்பிரிக்க அரசின் ஆவணங்களில் இடம்பெறவில்லை. காந்தியின் போராட்ட அழைப்பை ஏற்று தியாகம் செய்தவர்கள் பெருபாலும் தமிழர்கள்தான். இதுகுறித்து விரிவாகக் காண்க: தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்).

இருவருக்கும் ஒரு சில வேறுபாடுகள் மட்டுமே உண்டு. சாமி நாகப்பன் படையாட்சி போராட்ட காலத்தில் 1909 ஆம் ஆண்டு, சிறையில் அனுபவித்த கொடுமைகளின் காரணமாக இறந்தார். இவருக்காக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. போராட்டங்கள் நடத்தப்பட்டன. இவர் இறக்கும்போது காந்தி லண்டனில் இருந்தார்.

வள்ளியம்மா முனுசாமி முதலியார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறையிலிருந்து வெளிவர மறுத்தார். போராட்டம் முடிந்ததால் விடுதலை ஆனார். அவர் இறக்கும் முன்பு காந்தி அவரை நேரில் வந்து பார்த்து பேசினார். 1914 ஆம் ஆண்டு வீரமரணம் அடையும் போது தென் ஆப்பிரிக்க சத்தியாகிரக போராட்டம் முடிந்துவிட்டது.

இரண்டு பேருமே பதின் வயதினர். இரண்டுபேருமே சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். இரண்டு பேரின் இறுதி சடங்குகளும் பிராம்ஃபோன்டெய்ன் கல்லரைத் தோட்டத்தில் நடந்தது. இரண்டு பேரின் நினைவு பலகைகளையும் அதே பிராம்ஃபோன்டெய்ன் கல்லரைத் தோட்டத்தில் 1915 ஆம் ஆண்டு காந்தி திறந்து வைத்தார். இரண்டு பேரின் நினைவிடங்களும் 1997 இல் மறுசீரமைக்கப்பட்டு வால்டர் சிசுலு அவர்களால் மீண்டும் திறக்கப்பட்டன.

தென் ஆப்பிரிக்க கான்சிடியூசன் மலை அருங்காட்சியகத்தின் தியாகிகள் பட்டியலில் சாமி நாகப்பன் படையாட்சியின் பெயருக்கு அடுத்த பெயராக வள்ளியம்மா முனுசாமி முதலியாரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சாமி நாகப்பன் படையாட்சியின் படத்திற்கு அடுத்த படமாக வள்ளியம்மா முனுசாமி முதலியாரின் படம் இடம் பெற்றுள்ளது.

img_54712_padayachee.jpg

ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி படங்கள்ஆனால், தமிழ்நாட்டின் வரலாற்று பக்கங்களில் சாமி நாகப்பன் படையாட்சி மறக்கப்பட்டுவிட்டார். வள்ளியம்மா முனுசாமி முதலியார் போற்றப்பட்டுகிறார். தியாகிகளைப் போற்றுவதில் ஏன் இந்த பாகுபாடு?

புதுச்சேரி மாநிலம் டூப்ளே தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி முதலியார். அவரது மனைவி ஜானகி மயிலாடுதுறை அருகில் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள தில்லையாடி கிராமத்தை சேர்ந்தவர். தென் ஆப்பிரிக்காவில் குடியேறிய இவர்களுக்கு பிறந்தவர்தான் வள்ளியம்மா. அவர் தமிழ்நாட்டை பார்த்தது இல்லை. தென் ஆப்பிரிக்காவில் அவர் வள்ளியம்மா முனுசாமி முதலியார் என்றுதான் அழைக்கப்பட்டார்.

தந்தையின் ஊர் புதுச்சேரி மாநிலத்தில் இருப்பதால் அம்மாவின் ஊரான தில்லையாடியை எடுத்துக்கொண்டது தமிழ்நாடு அரசு. வள்ளியம்மா முனுசாமி முதலியார் என்கிற பெயரையும் தில்லையாடி வள்ளியம்மை என்று மாற்றிவிட்டனர்.

2887333360_9d225454e4.jpg

தில்லையாடி வள்ளியம்மை சிலை, தில்லையாடிதில்லையாடி கிராமத்தில் காந்தியடிகள் நூற்றாண்டு விழாவை ஒட்டி அமைக்கப்பட்ட வள்ளியம்மை நகர், வள்ளியம்மை மண்டபம், வள்ளியம்மை உயர்நிலைப்பள்ளி ஆகிய நினைவு கட்டிடங்களை 13.8.1971 அன்று அப்போதைய கல்வி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் இரா.நெடுஞ்செழியன் திறந்து வைத்தார். தில்லையாடி வள்ளியம்மை சிலை அமைக்கப்பட்டது.

1982 இல் சென்னையில் கோ-ஆப் டெக்சின் கட்டடத்திற்கு தில்லையாடி வள்ளியம்மை மாளிகை என பெயரிடப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டியவர் எம்.ஜி.ராமச்சந்திரன். 2008 ஆம் ஆண்டு தில்லையாடி வள்ளியம்மை நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

1.jpg

தில்லையாடி வள்ளியம்மை நினைவு அஞ்சல் தலைதில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் போற்றும் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் போற்றுதலுக்கு உரியவை, வரவேற்கப்பட வேண்டியவை. அதே நேரத்தில் - சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் மறக்கப்பட்டது ஏன்? என்கிற கேள்வி தவிற்க இயலாத கேள்வியாகும்.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் - மறக்கப்பட்டதா? மறைக்கப்பட்டதா?

1970 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் "தென் ஆப்பிரிக்க அறப்போரில் தமிழர்களின் தியாகம்" என்கிற விளம்பரத்துடன் ஒரு தேர் ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. (தென் ஆப்பிரிக்க தமிழர்களின் ஆவணத்தில் இது காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் நோக்கில் அரசாங்கம் மக்கள் மத்தியில் உலவவிட்ட தேர் என குறிப்பிடப்பட்டுள்ளது.)

A.gif

1970 ஆம் ஆண்டு தேர்ஊர்வலம், தமிழ்நாடு"தென் ஆப்பிரிக்க அறப்போரில் தமிழர்களின் தியாகம்" என்கிற இந்த தேரில் "நாகப்பன், நாராயணசாமி. வள்ளியம்மை" என எழுதப்பட்டுள்ளது. கூடவே, மகாத்மா காந்திக்கு அருகில் நாகப்பன், நாராயணசாமி ஆகியோர் நிற்பது போலவும், சிறைக்கம்பிகளுக்கு பின்னால் வள்ளியம்மா நிற்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி 1970 ஆம் ஆண்டு "நாகப்பன், நாராயணசாமி. வள்ளியம்மை" என மூன்று பேரையும் புகழ்ந்தது தமிழ்நாடு அரசு. ஆனால், 1971 ஆம் ஆண்டில் வள்ளியம்மா முனுசாமி முதலியாரை - தில்லையாடி வள்ளியம்மை என பெயர் மாற்றி அவருக்கு நினைவு மண்டபம், சிலை, நினைவு நூலகம் அமைத்துள்ளது. சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் எதற்காக மறக்கப்பட்டது?

1971 ஆம் ஆண்டில் தில்லையாடி வள்ளியம்மை நினைவிடங்கள் அனைத்தையும் அப்போதைய அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் திறந்து வைத்துள்ளார். ஆனால், வள்ளியம்மா முனுசாமி முதலியாருக்கு இணையாக சாமி நாகப்பன் படையாட்சிக்கு நினைவிடங்கள் அமைக்கப்படவில்லை? அப்படியானால், முதலியார் சமூகத்தை சேர்ந்தவரான நாவலர் நெடுஞ்செழியன் முதலியார் சமூகத்தை சேர்ந்த வள்ளியம்மைக்கு மட்டுமே நினைவிடங்கள் அமைத்தார் - வன்னியரான மற்றொரு தியாகியின் தியாகத்தை மறைத்தார் என்று கருதலாமா?

(தியாகத்தில் கூடவா சாதி பார்க்கிறீர்கள் என்று யாராவது கேட்பதாக இருந்தால் - 1970 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அறிந்திருந்த சாமி நாகப்பன் படையாட்சியை, 1971 ஆம் ஆண்டில் மறந்தது எதற்காக என்று கண்டுபிடிக்கவும்.)

1970 ஆம் ஆண்டில் "நாகப்பன், நாராயணசாமி. வள்ளியம்மை" என ஊர்வலம் நடத்திய போதும், 1971 ஆம் ஆண்டில் "வள்ளியம்மைக்கு மட்டும்" நினைவிடங்கள் அமைக்கப்பட்ட போதும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தவர் கலைஞர்.

தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் ஜொகனஸ்பர்கில் சிதைக்கப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் நினைவிடங்கள் 20.4.1997 அன்று மீண்டும் மறுசீரமைக்கப்பட்டன. அதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு திறந்து வைத்தார். அப்போதும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தவர் கலைஞர்தான்.

B.gif

சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம்: 1999இல் வால்டர் சிசுல திறந்து வைக்கிறார்.இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற வகையில் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் கலைஞர். அந்த வாழ்த்துச் செய்தியில் வள்ளியம்மையின் வீரத்தை புகழ்ந்தும் தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் முன்னேற்றங்களை புகழ்ந்தும் எழுதியுள்ளார். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஷீலா ராணி சுங்கத் எழுத்தறிவு இயக்கத்திற்காக "மிதிவண்டி புரட்சி" செய்து வருவதாக அந்த வாழ்த்துச் செய்தியில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், சாமி நாகப்பன் படையாட்சி குறித்து அவர் ஒன்றும் எழுதியதாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் 1997 இல் அந்த நிகழ்ச்சி "சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார்" என இரண்டு பேருக்காகவும்தான் ஜொகனஸ்பர்கில் நடத்தப்பட்டது.

நினைவிடங்களில் மறைக்கப்பட்டு, வரலாற்று பாடநூல்களில் மறைக்கப்பட்டு, இப்போது எல்லா இடங்களிலும் சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் ஒரேயடியாக மறக்கப்பட்டுள்ளது. இப்போதும் தென் ஆப்பிரிக்காவின் விடுதலை வரலாற்றில சாமி நாகப்பன் படையாட்சியும் வள்ளியம்மா முனுசாமி முதலியாரும் இடம் பெற்றுள்ளார்கள். இந்திய விடுதலைக்கும் உலகின் அகிம்சை போராட்டத்திற்கும் வழிகாட்டியான இவர்களில் 'தில்லையாடி வள்ளியம்மை' தமிழ்நாட்டில் அறியப்படுகிறார். சாமி நாகப்பன் படையாட்சியை யாருக்கும் தெரியவில்லை!

மகாத்மா காந்தியால் புகழப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி இந்திய தேசிய போராட்ட தியாகிகளில் ஒருவராக போற்றப்படாமல் போனது எப்படி? உலகப்புகழ் பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த்தியாகியை நாடு மதிக்கும் லட்சணம் இதுதானா?

காந்தியை பின்பற்றிய வட இந்திய தியாகிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டின் பல இடங்களில் சிலைகளும் நினைவிடங்களும் இருக்கும் நிலையில் ஒரு தமிழனின் மாபெரும் தியாகம் மறக்கப்பட்டது எப்படி?

குறிப்புகள்:

1. மகாத்மா காந்தி 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய இடங்களில் இருந்துள்ளார். மயிலாடுதுறை கூட்டத்தில் பேசும்போது "தென் ஆப்பிரிக்காவில் உயிர்த்தியாகம் செய்த இரண்டு பேருடைய விதவை மனைவிகளைக் காண்பதற்காக இங்கு வந்தேன். ஒரு தியாகியின் மனைவியை பார்த்துவிட்டேன். இன்னொரு தியாகியின் மனைவியை நான் சென்னை மாகாணத்தைவிட்டு செல்வதற்கு முன்பு பார்த்துவிடுவேன் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி 3.5.1915 அன்று தி இந்து பத்திரிகையில் வெளியானது. அவர் நாகப்பன், நாராயணசாமி ஆகியோரைக் குறிப்பிட்டிருக்கலாம்.

காந்தி அப்போது மயிலாடுதுறை பகுதியில் எங்கெல்லாம் சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார் என்பது தெரிந்தால் ஒருவேளை சாமி நாகப்பன் படையாட்சியின் தமிழக பூர்வீக ஊர் தெரியவரலாம். அவர் நாகப்பனின் விதவை மனைவியை சந்தித்தார் என்று சிலர் எழுதியுள்ளனர். எனினும் ஆதாரபூர்வமான தகவல் தெரியவில்லை.

2. காந்தியின் பேச்சுகளிலும் எழுத்துகளிலும் சில இடங்களில் சாமி நாகப்பன் படையாட்சி குறித்து தனியாகவும் சில இடங்களில் வள்ளியம்மா முனுசாமி முதலியார், நாராயணசாமி ஆகியோருடன் சேர்த்தும் பேசியிருக்கிறார்.

3. வரலாற்று ஆவணங்களில் சாமி நாகப்பன் படையாட்சி "Swami Nagappen Padayachee, Summy Nagappen, Nagappan" என்கிற பெயர்களிலும், வள்ளியம்மா முனுசாமி முதலியார் "Valliama R Munuswami, Valliamma Munusamy Moodaliar, Valliamma Munusamy Mudliar" என்கிற பெயர்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். (தில்லையாடி வள்ளியம்மை என்கிற பெயர் எங்கும் இல்லை.) நாராயணசாமி "Narayanasamy" என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறார்.

ஆதாரம்:

1. Satyagraha in South-Africa, Mohandas K. Gandhi, Published by Yann FORGET on 26th April 2003

2. GANDHIJI'S VISION OF A FREE SOUTH AFRICA, by E. S. REDDY

3. Gandhi Out of Africa: It is in the details that thespirit of the Mahatma lives on in Johannesburg, by Dilip D’Souza Forbes India Magazine of 26 August, 2011.

4. Rethinking Gender and Agency in the Satyagraha Movementof 1913, by Kalpana Hiralal, University of Kwazulu-Natal, South Africa

5. ABOUT GANDHI IN JOHANNESBURG, Arts, Culture and Heritage Department,Johannesburg City

6. Martyrs graves at Braamfontein, by Romaana Naidoo 08September 2011

7. Valliamma Munusamy Mudliar – Child Martyr, by Yana Pillai, Natal Tamil Vedic Society, South Africa

8. Legacy of struggle, The Hindu, 19.10.2003

9. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 10

10. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 11

11. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 12

12. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 14

13. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 16

14. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 17

மூலம் -

http://arulgreen.blo...g-post_810.html

Link to comment
Share on other sites

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_12.html

கட்டுரை 2. தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்

தென் ஆப்பிரிக்க டிரான்சுவால் காலனி அரசாங்கம் உருவாக்கிய ஏசியாட்டிக் பதிவு சட்டத்தை எதிர்த்து காந்தி 1906 ஆம் ஆண்டில் போராட்டம் அறிவித்தார். காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் இதுதான். காந்தி முதன்முதலாக சிறை சென்றதும் இந்த போராட்டத்திற்காகத்தான். அவரது அறிவிப்பை மீறி 1907 ஆம் ஆண்டு அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் இச்சட்டத்துக்கு எதிராக 1909 ஆம் ஆண்டில்தான் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது .

Gandhi_South-Africa.jpg

தென் ஆப்பிரிக்காவில் காந்தி

இதே காலகட்டத்தில்தான் காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த் தியாகமாக சாமி நாகப்பன் படையாட்சி வீரமரணம் அடைந்தார். கடைசியில் 1914 ஆம் ஆண்டில் காந்திக்கும் செனரல் ஸ்முட்ஸ் என்கிற டிரான்சுவால் அரசின் செயலாளருக்கும் இடையேயான உடன்படிக்கையின் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய நிவாரண சட்டம் என்கிற புதிய சட்டத்தின் படி இந்திய சமூகத்தினரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.

தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் இந்த போராட்டம் வரலாற்று நோக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாக, இரண்டு கண்டங்களில் இருக்கும் இரண்டு நாடுகளின் விடுதலைப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி அதுதான். அகிம்சை முறையிலான இந்திய சுதந்திரப்போராட்டத்தின் வழிகாட்டி இந்த போராட்டம்தான். நெல்சன் மண்டேலா அவர்களின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் வழிகாட்டியும் இந்த போராட்டம்தான்.

இரண்டாவதாக, அமெரிக்க குடியுரிமை போராட்டமான மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் போராட்டம் தொடங்கி, அதற்கு பின் இன்றுவரை உலகெங்கும் நடக்கும் அகிம்சை வழி போராட்டங்கள் அனைத்திற்கும் தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் இந்த போராட்டம்தான் முன்னோடியாகும்.

தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டமே மகாத்மா காந்தியை உருவாக்கியது, அதுவே இந்திய விடுதலைப் போரின் வழிகாட்டி என்பதை காந்தியும் தெளிவாக கூறியிருக்கிறார். "காந்தி இந்தியாவில் பிறந்திருக்கலாம் - ஆனால் தென் ஆப்பிரிக்காதான் காந்தியை 'உருவாக்கியது'" என்றார் அவர்.

1925 ஆம் ஆண்டு கான்பூர் காங்கிரசு மாநாட்டில் பேசிய காந்தி "தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் என்னை உங்களுக்கு (காந்தியை இந்தியாவுக்கு) அளித்ததாகக் கூறுகிறார்கள். அதனை நான் ஒப்புக்கொள்கிறேன். அது முற்றிலும் உண்மை. இப்போது என்னால் இந்தியாவுக்காக என்னென்ன பணிகளை எல்லாம் செய்ய முடிகின்றதோ, அவை எல்லாம் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவை" என்று கூறினார்

எட்டாண்டுகள் நடந்த தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் சத்தியாகிரகப் போரில் இருபதாயிரம் இந்தியர்கள் பங்கேற்றதாக காந்தி தெரிவிக்கிறார். இவர்கள் எல்லோரும் தத்தமது வேலைகளை விட்டுவிட்டு - வருமானத்தை இழந்து - பலநாட்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் நாடுகடத்தப்பட்டனர். எத்தனை துன்பம் வந்தாலும் அதனை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

img_54712_padayachee.jpg

ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி படங்கள்

இப்போராட்டத்திற்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள் என்று நான்கு பேர்களை குறிப்பிடுகிறார் காந்தி.

1. சாமி நாகப்பன் படையாட்சி: காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "ஏசியாட்டிக் பதிவு சட்டத்தின்படி பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு மூன்று பவுண்ட் தண்டம் அல்லது 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், தண்டத் தொகையைக் கட்டாமல் சிறைத் தண்டனையை ஏற்பதே சத்தியாகிரகப் போராட்டம் என்பதால் சிறைக்குச் சென்றார் சாமி நாகப்பன் படையாட்சி.

padayachee-sn.jpg

சாமி நாகப்பன் படையாட்சி

முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.

ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழது மரணத்தை தழுவினார். அப்போது அவரின் வயது 18. சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் சாமி நாகப்பன் படையாட்சியின் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக அடக்கம் செய்தனர்.

C.gif

நாராயணசாமி

2. நாராயணசாமி: 1910 ஆம் ஆண்டு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற இவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தண்டனைக்கு ஆளானார். எனினும் டர்பன் துறைமுகத்தில் கப்பலில் ஏற்றப்பட்ட நாராயணசாமி, அங்கிருந்து போர்ட் எலிசபெத், கேப் டவுன், மீண்டும் டர்பன் என தென் ஆப்பிரிக்க கடல் பகுதியிலேயே ஆறு வாரங்கள் அலைகழிக்கப்பட்டார். கடும் குளிரில் கப்பலின் மேல்தளத்தில் போதுமான அளவு குளிருக்கான உடையோ உணவோ இல்லாமல் வாடிய அவர் கரையிறங்கவும் அனுமதிக்கப் படவில்லை. இதனால் மரணமடந்த நாராயணசாமிக்கு அப்போது வயது 19.

E.gif

அர்பத் சிங்

3. அர்பத் சிங்: சத்தியாகிரகப் போராட்ட காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட போது அர்பத் சிங்கின் வயது 75. முதுமையின் காரணமாக அவர் சிறையில் மரணமடைந்தார்.

Thillaiaadi_valliammai.jpg

வள்ளியம்மா முனுசாமி முதலியார்

4. வள்ளியம்மா முனுசாமி முதலியார்: தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று 1913 டிசம்பர் 22 அன்று தனது தாயாருடன் கைது செய்யப்பட்டார். மூன்று மாத சிறைத்தணடனைப் பெற்று காந்தியின் துணைவியார் கசுதூரிபா காந்தியுடன் சிறையில் இருந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் விடுதலை செய்யப்பட்ட போதும் வெளிவர மறுத்தார். எனினும் சத்தியாகிரக போராட்டம் வெற்றி பெற்றதால் 1914 சனவரி 11 அன்று விடுதலை ஆனார். சிறையில் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் 1914 பிப்ரவர் 22 அன்று மரணமடைந்தார். அப்போது வள்ளியம்மா முனுசாமி முதலியாரின் வயது 16. தமிழ்நாட்டில் அவர் 'தில்லையாடி வள்ளியம்மை' என்று அறியப்படுகிறார்.

இந்த நான்கு பேரின் உயிர்த் தியாகத்தைதான் காந்தி பலமுறை குறிப்பிட்டுள்ளார். பல வரலாற்று ஆவணங்கள் சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் ஆகிய இரண்டுபேரை மட்டுமே உயிர்த் தியாகம் செய்தவர்களாகக் குறிப்பிடுகின்றன. எனினும் வரலாற்று ஆய்வாளர்கள் இன்னும் பலர் உயிர்த்தியாகம் செய்திருக்கக்கூடும் என்று குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக, 1913 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் நாள், மவுண்ட் எட்ச்காமே எனும் இடத்தில் 'சத்தியாகிரகம் முடியும் வரை தோட்ட வேலைக்கு வரமாட்டோம்' என்று கூறிய ஆறு தமிழர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டதாக செய்தி பத்திரிகைகள் தெரிவித்தன. பச்சையப்பன், ராகவன், செல்வன், குருவாடு, சுப்புராய கவுண்டர் மற்றும் பெயர்தெரியாத மற்றொருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

F.gif

பச்சையப்பன் மனைவி

மேற்குறிப்பிட்டவர்களில் செல்வத்தின் மனைவி தமிழ் நாட்டிற்கு திரும்பியதாகவும், செல்வத்தின் மகன் அந்தோணிமுத்து காந்தியின் அகமதாபாத் ஆசிரமத்தில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

D+1.gif

செல்வத்தின் மனைவி, மகன்

உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டமான 'தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் போராட்டம்' என்பது உண்மையில் தமிழர்களின் போராட்டமாகவே நடந்தது. அதிலும் காவிரி வடிநிலப்பகுதியை சேர்ந்த, மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதி தமிழர்கள்தான் தென்னாப்பிரிக்காவில் அதிகம் இருந்தனர். அவர்களே போராட்டத்திலும் பங்கெடுத்தனர். சாமி நாகப்பன் படையாட்சி, நாராயணசாமி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் ஆகிய மூன்று பேருமே மயிலாடுதுறை பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்கள்தான்.

காந்தி தென் ஆப்பிரிக்காவை விட்டு 1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள் லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். 1915 ஆம் ஆண்டு சனவரி 9 ஆம் நாள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். அவரது முதல் இந்திய பயணங்களில் ஒன்றாக 1915 ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை பகுதிக்கு வந்தார் காந்தி.

தமிழ் நாட்டிலிருந்து 7100 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஜொகனெஸ்பர்க் நகரில், சூலு எனும் ஒரு ஆப்பிரிக்க மொழியும் ஆங்கிலமும் பேசப்படும் நாட்டில், அதிகம் கல்வி கற்காத ஏழை எளிய தமிழர்கள் காந்தியின் முதல் போராட்டத்தை முந்நின்று நடத்தினர்.

"தமிழர்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாக மற்ற இந்திய சமூகத்தினரை தமிழர்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் இந்த நன்றிக்கடன் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தமிழர்கள் தம்மீதான புகழ் பேரொளியை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் சமூகத்திற்கு இந்தியர்கள் எப்படி இந்த நன்றி கடனை திருப்பியளிக்கப் போகிறார்கள்?

தமிழர்களிடம் இந்திய சமூகத்தினர் பாடம் கற்க வேண்டும். தமிழர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களைப் பின்பற்ற வேண்டும். தாய்நாட்டுக்காக அமைதியாக துன்பத்தை ஏற்பது எப்படி என்பதை இந்தியர்கள் தமிழர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். இதை செய்யத் தவறினால் இந்தியர்கள் தமக்குத் தாமே பழியை சுமப்பார்கள்" என 22.10.1910 அன்று இந்திய ஒப்பீனியன் இதழில் எழுதினார் காந்தி.

1915 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று பர்மாவின் ரங்கூன் நகரில் தி இந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த காந்தி "தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறைக்கு செல்லாவிட்டால் அது தமக்கு அவமானம் என தமிழர்கள் ஒவ்வொருவரும் நினைத்தனர். பொது நோக்கிற்காக சிறை செல்லாமலிருப்பது அவமானம் என்கிற இந்த மனப்பான்மை தமிழ் சமூகத்தைத் தவிர வேறு எந்த ஒரு இந்திய சமூகத்தினரிடமும் இல்லை. நான் முதன்முதலாக தமிழ் சமூகத்தினரை சந்தித்த போது அவர்களை நினைத்து பெருமிதம் அடைந்தேன். அடுத்தடுத்த சந்திப்புகளின் அவர்கள் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது. நான் என்னை வேறு எந்த ஒரு இந்திய சமூகத்தினரை விடவும் தமிழர்களுடன் தான் இணைத்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்தார் காந்தி.

(அன்றைய காந்தி, 'தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்ட இந்தியா, அந்த நன்றிக்கடனை எப்படி தீர்க்கப்போகிறது?' என்று கேட்டார். இன்று???)

மகாத்மா காந்தியால் புகழப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி இந்திய தேசிய போராட்ட தியாகிகளில் ஒருவராக போற்றப்படாமல் போனது எப்படி? உலகப்புகழ் பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த்தியாகியை நாடு மதிக்கும் லட்சணம் இதுதானா?

காந்தியை பின்பற்றிய வட இந்திய தியாகிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டின் பல இடங்களில் சிலைகளும் நினைவிடங்களும் இருக்கும் நிலையில் ஒரு தமிழனின் மாபெரும் தியாகம் மறக்கப்பட்டது எப்படி?

குறிப்புகள்:

1. மகாத்மா காந்தி 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய இடங்களில் இருந்துள்ளார். மயிலாடுதுறை கூட்டத்தில் பேசும்போது "தென் ஆப்பிரிக்காவில் உயிர்த்தியாகம் செய்த இரண்டு பேருடைய விதவை மனைவிகளைக் காண்பதற்காக இங்கு வந்தேன். ஒரு தியாகியின் மனைவியை பார்த்துவிட்டேன். இன்னொரு தியாகியின் மனைவியை நான் சென்னை மாகாணத்தைவிட்டு செல்வதற்கு முன்பு பார்த்துவிடுவேன் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி 3.5.1915 அன்று தி இந்து பத்திரிகையில் வெளியானது. அவர் நாகப்பன், நாராயணசாமி ஆகியோரைக் குறிப்பிட்டிருக்கலாம்.

காந்தி அப்போது மயிலாடுதுறை பகுதியில் எங்கெல்லாம் சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார் என்பது தெரிந்தால் ஒருவேளை சாமி நாகப்பன் படையாட்சியின் தமிழக பூர்வீக ஊர் தெரியவரலாம். அவர் நாகப்பனின் விதவை மனைவியை சந்தித்தார் என்று சிலர் எழுதியுள்ளனர். எனினும் ஆதாரபூர்வமான தகவல் தெரியவில்லை.

2. காந்தியின் பேச்சுகளிலும் எழுத்துகளிலும் சில இடங்களில் சாமி நாகப்பன் படையாட்சி குறித்து தனியாகவும் சில இடங்களில் வள்ளியம்மா முனுசாமி முதலியார், நாராயணசாமி ஆகியோருடன் சேர்த்தும் பேசியிருக்கிறார்.

3. வரலாற்று ஆவணங்களில் சாமி நாகப்பன் படையாட்சி "Swami Nagappen Padayachee, Summy Nagappen, Nagappan" என்கிற பெயர்களிலும், வள்ளியம்மா முனுசாமி முதலியார் "Valliama R Munuswami, Valliamma Munusamy Moodaliar, Valliamma Munusamy Mudliar" என்கிற பெயர்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். (தில்லையாடி வள்ளியம்மை என்கிற பெயர் எங்கும் இல்லை.) நாராயணசாமி "Narayanasamy" என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறார்.

ஆதாரம்:

1. Satyagraha in South-Africa, Mohandas K. Gandhi, Published by Yann FORGET on 26th April 2003

2. GANDHIJI'S VISION OF A FREE SOUTH AFRICA, by E. S. REDDY

3. Gandhi Out of Africa: It is in the details that thespirit of the Mahatma lives on in Johannesburg, by Dilip D’Souza Forbes India Magazine of 26 August, 2011.

4. Rethinking Gender and Agency in the Satyagraha Movementof 1913, by Kalpana Hiralal, University of Kwazulu-Natal, South Africa

5. ABOUT GANDHI IN JOHANNESBURG, Arts, Culture and Heritage Department,Johannesburg City

6. Martyrs graves at Braamfontein, by Romaana Naidoo 08September 2011

7. Valliamma Munusamy Mudliar – Child Martyr, by Yana Pillai, Natal Tamil Vedic Society, South Africa

8. Legacy of struggle, The Hindu, 19.10.2003

9. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 10

10. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 11

11. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 12

12. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 14

13. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 16

14. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 17

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_12.html

Link to comment
Share on other sites

கட்டுரை 3. சாமி நாகப்பன் படையாட்சி: தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி!

DokeHome2.jpg

தென் ஆப்பிரிக்காவில் காந்தி

தென் ஆப்பிரிக்க இந்திய சத்தியாகிரகப் போராட்டத்தில் காந்தியின் கட்டளைக்கு ஏற்ப சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சி: அவர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு மூன்று பவுண்ட் தண்டம் அல்லது 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், தண்டத் தொகையைக் கட்டாமல் சிறைத் தண்டனையை ஏற்பதே சத்தியாகிரகப் போராட்டம் என்பதால் சிறைக்குச் சென்றார் சாமி நாகப்பன் படையாட்சி.

img_54692_constitution_hill.jpg

ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறை

முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.

ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழது மரணத்தை தழுவினார். அப்போது அவரின் வயது 18. சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் சாமி நாகப்பன் படையாட்சியின் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக அடக்கம் செய்தனர்.

தென் ஆப்பிரிக்க இந்திய சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலில் உயிர்நீத்த சாமி நாகப்பன் படையாட்சியை மகாத்மா காந்தி பலமுறை புகழ்ந்து பேசியும் எழுதியும் இருக்கிறார்.

தனது சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகியின் வீரமரணம் காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும். தென் ஆப்பிரிக்காவில் காந்தியின் எழுத்தும் பேச்சும் இந்தியன் ஒப்பீனியனில் தொடர்ந்து வெளியானது.

Indian_Opinion.png

இந்தியன் ஒப்பீனியன்

இந்தியன் ஒப்பீனியன் ஓர் வரலாறு: காந்தி 1894 ஆம் ஆண்டு நேட்டால் இந்தியன் காங்கிரசை தொடங்கினார். அக்கட்சியின் செயலாளரான எம்.எச். நாசர் 1903 ஆம் ஆண்டு தொடங்கிய பத்திரிகைதான் இந்தியன் ஒப்பீனியன். தமிழ், குசராத்தி, இந்தி, ஆங்கில மொழிகளில் வெளியானது - பின்னர் தமிழ், இந்தி பதிப்பு நிறுத்தப்பட்டது. 1920 முதல் காந்தியின் மகன் மணிலால் காந்தி 36 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். மணிலால் காந்தியின் மனைவி - மகாத்மா காந்தியின் மருமகள் - இப்பத்திரிகையின் அச்சுக்கோர்ப்பவராக 20 வயதில் தொடங்கி 34 ஆண்டுகள் அப்பணியை செய்தார். கணவரது மரணத்திற்கு பின் ஆசிரியராகவும் ஆனார். இப்பத்திரிகையின் கடைசி இதழ் 4.8.1961 அன்று வெளிவந்தது. 58 ஆண்டுகாலம் நடத்தப்பட்ட அந்த வரலாற்று சிறப்பு மிக்க பத்திரிகை அதிகபட்சமாக 3500 பிரதிகள்வரை மட்டுமே விற்பனையானது.

சாமி நாகப்பன் படையாட்சிக்கு காந்தியின் புகழாரங்கள்

சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் வீரமரணம் அடைந்த போது காந்தி இங்கிலாந்தில் இருந்தார். இச்செய்தி அவருக்கு சூலை 12 ஆம் நாள் தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 1909

1.

நாகப்பன் சிறைச்சாலையில் கொடுமைபடுத்தப்பட்டது குறித்தும் அவர் மரணத்துக்கான காரணங்கள் குறித்தும் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று 14.8.1909 அன்று லார்டு ஆம்பத்ல் என்பவருக்கு லண்டனிலிருந்து கடிதம் எழுதினார் காந்தி.

2.

இந்தியன் ஒப்பீனியன் லீடர், தி டிரான்சுவால் லீடர் பத்திரிகைகளில் வெளியான சாமி நாகப்பன் மரணம் குறித்த செய்திகளை சுட்டிக்காட்டி மீண்டும் 16.8.1909 அன்று லார்டு ஆம்பத்ல் அவர்களுக்கு காந்தி கடிதம் எழுதினார். (8.7.1909 அன்று வெளியான தி டிரான்சுவால் லீடர், 17.7.1909 அன்று வெளியான இந்தியன் ஒப்பீனியன் பத்திகை மாற்றும் அதே காலகட்டத்தில் வெளியான பிரிட்டோரியா நியூஸ், யூதர் க்ரோனிகல் ஆகிய பத்திரிகைகளில் சாமி நாகப்பன் வீரமரணம் குறித்து விரிவாக செய்தி வெளியானது.)

செப்டம்பர் 1909

தென் ஆப்பிரிக்க இந்தியர் போராட்டம் குறித்து இங்கிலாந்திலும் இந்தியாவிலும் பிரச்சாரம் செய்ய பிரதிநிதிக் குழுக்கள் அனுப்பபட்டிருந்தன. அக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்து செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு பின்னர் எழுதினார் காந்தி. அக்கட்டுரையில், பம்பையில் நடந்த கூட்டத்தில் எச்.எசு.போலக் பேச்சின் மூலம் நாகப்பன் வீரமரணம் செய்தியாக பேசப்பட்டதாகக் குறிப்பிட்டா காந்தி. லண்டனிலிருந்து காந்தி எழுதிய இக்கட்டுரை 16.10.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.

அக்டோபர் 1909

1.

இந்தியாவில் பிரச்சாரம் செய்யதுவந்த எச்.எசு.போலக் என்பவருக்கு 6.10.1909 அன்று லண்டனிலிருந்து காந்தி எழுதிய கடிதத்தில் ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்தார்.

padayachee-sn.jpg

சாமி நாகப்பன் படையாட்சி

"நீங்கள் நாகப்பன் நிழற்படம் கிடைக்கப் பெற்றிருப்பீர்கள். அதனை பத்திரிகைகளில் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள். சென்னையிலிருந்து வெளியாகும் இந்தியன் ரிவியூ மற்றும் இதர சென்னை பத்திரிகைகளில் தயவுசெய்து நாகப்பன் புகைப்படத்தை வெளியிட முயலுங்கள்" என்று கேட்டிருந்தார்.

கூடவே, "நாகப்பன் பெயரில் ஒரு கல்வி உதவித்தொகை வழங்கும் நினைவு நிதியைத் ஜொகனஸ்பர்க் நகரில் தொடங்க வேண்டும். அதுபோல பம்பாயிலும் சென்னையிலும் கூட நாகப்பன் நினைவு நிதி தொடங்க முடிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். இதன் மூலம் அப்பழுக்கில்லாத இருபது வயது இளைஞன் இந்த நாட்டுக்காக உயிர்நீத்தான் என்பதை மக்கள் உணரச்செய்ய வேண்டும்" என்று லண்டனிலிருந்து காந்தி குறிப்பிட்டார்.

2.

'சவுத் ஆப்பிரிக்கா' எனும் பத்திரிகை "தென் ஆப்பிரிக்கா மீண்டும் சரிசெய்யப்பட்டது" எனும் தலைப்பில் "சாமி நாகப்பன் மரணம் இயல்பானதுதான்" என்று எழுதியது. இதனைக் கண்டித்து அப்பத்திரிகைக்கு லண்டனிலிருந்தவாறு கண்டனக் கடிதம் எழுதினார் காந்தி.

அக்கடிதத்தில் நாகப்பன் நல்ல உடல் நலத்துடன் சிறைக்கு சென்றார். அங்கு சரியான உணவு இன்மை, கடின உழைப்பு, குளிரைத் தாங்கும் உடை இல்லாமை, உடல்நலப்பாதிப்புக்கு சிகிச்சை மறுப்பு ஆகிய காரணங்களால் இறந்தார். இதுகுறித்து மேஜர் டிக்சன் ஆணையித்திடம் பலர் சாட்சியம் அளித்துள்ளனர். நாகப்பனை கடைசியாக பரிசோதித்த மருத்துவர் காட்ஃப்ரேவும் இதனை சுட்டிக்காட்டியுள்ளார் எனக் கூறியிருந்தார் காந்தி. இக்கடிதம் 16.10.1909 இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.

3.

சாமி நாகப்பன் வீரமரணம் தென் ஆப்பிரிக்கா மட்டுமின்றி லண்டன் மாநகரிலும் எதிரொலித்ததாகவும், லண்டன் மாநகரில் இது குறித்து காந்தி பேசியதாகவும் 16.10.1909 அன்று செய்தி வெளியிட்டது இந்தியன் ஒப்பீனியன்.

நவம்பர் 1909

1.

தென் ஆப்பிரிக்க இந்தியர் போராட்டம் குறித்து இங்கிலாந்திலும் இந்தியாவிலும் பிரச்சாரம் செய்ய அனுப்பபட்டிருந்த குழுக்களின் செயல்பாடுகள் குறித்து நவம்பர் 6 ஆம் தேதிக்கு முன்னர் எழுதினார் காந்தி. அதில் ஒரு முக்கியமான கருத்தை காந்தி தெரிவித்தார்.

அச்சமயத்தில் காந்தியின் மகன் அரிலால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

"பல இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் போது நானும் எனது மகனும் சுதந்திரமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. இப்போது எனது மகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனை எனக்கு தெரிவித்த திருமதி. போலக், என் மனமறிந்து இதற்காக பாராட்டும்கூறி தந்தி அனுப்பியுள்ளார். சிறையில் என் மகன் துன்பப்படுவான் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், அவன் கைதானதை நான் வரவேற்கிறேன். அவன் துன்பப்படுவது நல்லதுதான்.

நாகப்பா, நீயும் ஒரு குழந்தைதான், தாய் நாட்டுக்காக நீ உன் உயிரையே தியாகம் செய்தாய். உனது தியாகம் உன் குடும்பத்திற்கு ஆசீர்வாதமாகும். நீ இறந்தாலும் என்றென்றும் வாழ்கிறாய் என நான் நம்புகிறேன். அப்படி இருக்கும்போது, நான் என்னுடைய மகனின் சிறைவாசத்திற்காக ஏன் வருத்தப்படப் போகிறேன்?" என்று எழுதினார் காந்தி. கூடவே, நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால் தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்பதாக எழுதினார் காந்தி. இக்கடிதம் 4.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.

2.

நாகப்பன் வீரமரணம் குறித்த மேஜர் டிக்சனின் அறிக்கை சிறைத்துறை அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்றது. இதற்கு நாடுமுழுவதும் இந்திய மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அரசாங்கத்தின் அதிகாரிகளே 'அது உண்மையை மூடிமறைக்கும் அறிக்கை' என்று குறிப்பு எழுதினர்.

11.11.1909 அன்று லண்டனிலிருந்து ஆட்சியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் நாகப்பன் வீரமரணம் குறித்த விசாரணை தவராக முடிந்திருப்பதாகக் கூறி மறு விசாரணைக் கோரினார்.சாமி நாகப்பனிடம் குளிரைத்தாங்குவதற்கு ஒரு போர்வை இருந்ததா? இரண்டு போர்வை இருந்ததா? என்று விசாரித்த மாஜிஸ்ட்ரேட் - அவர் ஜொகனஸ்பர்க் சிறையிலிருந்து முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டது ஏன்? கடுமையான வேலைகளைக் கொடுத்தது ஏன்? கடைசியாகப் பரிசோதித்த மருத்துவரின் கருத்து என்ன? - என எதையும் கேட்காமல் விசாரணை முடிக்கப்பட்டுள்ளது என்றார் காந்தி.

3.

இங்கிலாந்திலிருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராஃப் பத்திரிகைக்கு கடிதம் எழுதிய காந்தி, நாகப்பன் வீரமரணத்தை குறிப்பிட்டு, இங்கிலாந்து பத்திரிகைகள் தமது போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று 11.11.1909 அன்று கோரினார்.

4.

25.11.1909 அன்று தூதுக்குழுவினரின் நடவடிக்கைகள் குறித்து லண்டனில் இருந்து கட்டுரை எழுதிய காந்தி, தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கட்டுரையில் கூறும்போது, "போராட்டத்தை கைவிடுவதற்கு பதிலாக மரணத்தை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக்கொண்டிராமல் போராட வேண்டும். ஒவ்வொருவரும் தானும் ஒரு நாகப்பனாக ஆகவேண்டும் என விரும்ப வேண்டும்" என்று கூறினார் காந்தி. இக்கட்டுரை 18.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.

டிசம்பர் 1909

1909 நவம்பர் 30 அன்று தனது லண்டன் தூதுப் பயணத்தை முடித்து தென் ஆப்பிரிக்கா வந்துசேர்ந்தார் காந்தி. 5.12.1909 அன்று ஜொகனஸ்பர்க் நகரிலும் 20.12.1909 அன்று டர்பன் நகரிலும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டங்களில் "நாகப்பன் வகுத்துச் சென்ற முன்னுதாரணத்திலிருந்து நாம் எப்படி பின்வாங்க முடியும்? அவரது தியாக நினைவை ஏந்தி, வெற்றி கிடைக்கும் வரை போராடித்தான் ஆக வேண்டும்" என்று பேசினார் காந்தி. அவரது இப்பேச்சு 6.12.1909 அன்று ராண்ட் டெய்லி மெயில், 11.12.1909 மற்றும் 25.12.1909 இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகைகளில் வெளியானது.

அக்டோபர் 1910

1910 ஆம் ஆண்டு நாராயணசாமி எனும் மற்றொரு தமிழர் சத்தியாகிரகப் போரில் உயிர் நீத்தார். நாராயணசாமியின் மரணம் குறித்து 17.10.1910 ஆன்று பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதினார் காந்தி. ராண்ட் டெய்லி மெயில் மற்றும் தி டிரான்சுவால் லீடர் ஆகிய பத்திரிகைகளில் 18.10.1910 அன்றும், இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் 22.10.1910 அன்று இக்கடிதம் வெளியானது. இது குறித்து இந்தியன் ஒப்பீனியனில் தனியாகவும் ஒரு கட்டுரை எழுதினார் காந்தி.

இவற்றில் "நாகப்பனை அரசாங்கம் சட்டபூர்வமாகக் கொலை செய்தது. அதே போன்றுதான் நாராயணசாமியும் கொல்லப்பட்டுள்ளார்" என்று கூறினார். கூடவே, தமிழ் சமூகத்தினரின் வீரத்தை புகழ்ந்து எழுதியிருந்தார்.

நவம்பர் 1911

15.11.1911 அன்று திருமதி. வோகல் என்பவருக்கு பாராட்டு பத்திரம் எழுதினார் காந்தி. இதில் ஜொகனஸ்பர்கின் 14 பெண்மணிகள் கையொப்பமிட்டிருந்தனர். திருமதி. வோகல் 'பசார்' எனும் ஒரு விற்பனை திட்டத்தை ஜொகனஸ்பர்க் நகரில் தொடங்கியிருந்தார். இதன் வருமானத்தின் மூலம் சாமி நாகப்பன் படையாட்சியின் பெயரில் ஒரு கல்வி உதவி நிதியத்தை அமைக்க வேண்டும் என்பதே திருமதி. வோகலின் இலக்காகும். இதனைப் பாராட்டிதான் காந்தியும் ஜொகனஸ்பர்க் பெண்மணிகளும் பாராட்டு பத்திரம் அளித்தனர். (9.12.1911 வரை நாகப்பன் நினைவு நிதிக்காக 138 பவுண்ட் நிதி திரட்டப்பட்டிருந்தது.)

சூன் 1912

நாகப்பன் நினைவு நிதிக்காக திருமதி. வோகல் நடத்திய 'பசார்' திட்டம் வெற்றிகரமாக நடந்ததாகக் கருதப்பட்டது. எனினும் நினைவு நிதி அமைக்க அதிக பணம் தேவை என்பதால் டிரான்சுவால் இந்திய பெண்கள் சங்கத்தின் செயலாளர் செல்வி. செலேசின் இந்தியாவில் வாழும் பெண்கள் தங்களது கைவினைப் பொருட்களை 'பசாருக்கு' அனுப்ப வேண்டும் என்று 14.6.1912 அன்று கடிதம் எழுதினார்.

இதனை ஆதரித்து காந்தி 22.6.1912 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார். நாகப்பனின் மாபெரும் தியாகத்தை நினைவு கூறும் வைகையில் திருமதி. வோகல் இந்த அரும்பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு இங்கிலாந்திலும் இந்தியாவிலும் வாழும் பெண்கள் தாராளமாக உதவ வேண்டும் என்று காந்தி எழுதினார்.

(எனினும், 1912 ஆம் ஆண்டிற்கு பின்னர் 'சாமி நாகப்பன் படையாட்சி நினைவு நிதி' அமைக்கும் முயற்சிகள் என்னவாயின என்பது தெரியவில்லை.)

மார்ச் 1914

1914 ஆம் ஆண்டு காந்தியின் சகோதரர் இந்தியாவில் மரணமடைந்தார். இச்செய்தி கேள்விப்பட்டு தென் ஆப்பிரிக்கா முழுவதுமிருந்து பலர் காந்திக்கு இரங்கல் செய்தி அனுப்பினர். இதற்கு நன்றி தெரிவித்து இந்தியன் ஒப்பீனியனில் 18.3.1914 இல் எழுதினார் காந்தி. அதில் "நாகப்பனின் மரணத்தை விட எனது சகோதரனின் மரணம் எனக்கு அதிக வலிமிகுந்ததாக இல்லை" என்று குறிப்பிட்டார் காந்தி.

சூலை 1914

1.

எட்டாண்டு போராட்டத்திற்கு பிறகு தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் போராட்டம் 1914 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருந்தது. இதுகுறித்து 8.7.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் வெளியான வெற்றிக் கட்டுரையில் நாகப்பன், நாராயணசாமி, அர்பத்சிங், வள்ளியம்மா ஆகியோரின் உயிர்த் தியாகம்தான் போராட்டத்தின் வெற்றிக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது

2.

9.7.1914 அன்று டர்பன் நகரில் நடந்த குசராத் சபா கூட்டத்தில் பேசிய காந்தி - தென் அப்பிரிக்க இந்திய வம்சாவழியனரால் நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் ஏழைகளாலும் சாதாரண மக்களாலும் நடத்தப்பட்டது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆவதிலேயே குறியாக இருந்தனர். எனது சகோதரன் நாகப்பன், எனது சகோதரி வள்ளியம்மா, எனது சகோதரன் நாராயணசாமி ஆகியோரின் காலடித்தடங்களை இந்தியர்கள் பின்பற்றி நடக்க வற்புறுத்துகிறேன், என்று பேசினார். இச்செய்தி 15.7.1914 இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.

3.

காந்தி தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்க்கையை முடித்துக்கொண்டு, நிரந்தரமாக இந்தியாவுக்கு திரும்பும் நிலையில் அவருக்கு வழியனுப்பும் கூட்டம் 14.7.1914 அன்று ஜொகனஸ்பர்க் நகரில் நடத்தப்பட்டது. அங்கு பேசிய காந்தி இந்த ஜொகஸ்பர்க் நகரம்தான் 'நாகப்பன், நாராயணசாமி, வள்ளியம்மா எனும் பதின்வயதினரை தந்தது' என்று பேசினார்.

4.

தென் ஆப்பிரிக்காவில் காந்தி பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி 15.7.1914 அன்று காலை 11.30 மணிக்கு ஜொகனஸ்பர்க் நகரின் பிராம்ஃபோன்டெய்ன் கல்லரைத்தோட்டத்தில் நடந்தது. அங்கு அவர் சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் ஆகிய இருவரது கல்லறைகளில் நினைவுப் பலகைகளைத் திறந்து வைத்தார்.

8100433a.gif

ஜொகனஸ்பர்க் நகரின் பிராம்ஃபோன்டெய்ன் கல்லரைத்தோட்டம்

அங்கு பேசிய காந்தி, "நாகப்பன் முகத்தை என்னால் சரிவர நினைவு கூற முடியாமல் போகலாம். ஆனால், அவர் பட்ட துன்பத்தை என்னால் உணர முடிகிறது. கொடுமையான சிறைக்கொட்டடியில் கடும் குளிரில் அவர் தேவையில்லாமல் அலைகழிக்கப்பட்டார். நாகப்பன் இதயம் இரும்பினால் ஆனது. அவர் சிறையிலிருது உருக்குலைந்து இறக்கும் தருவாயில் வெளியேறினார். ஆனால், அந்த நிலையிலும் - எனக்கு இத்துன்பம் ஒரு பொருட்டே அல்ல, ஒரு முறைதான் சாகப்போகிறேன். இப்போதும் மறுபடியும் சிறைசெல்ல தயாராக இருக்கிறேன் - என்று துணிந்து சொன்னார். அப்படிப்பட்ட கலங்காத மனம் படைத்த நாகப்பன் இறந்துவிட்டார். ஆனாலும், அவர் ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் என்றென்றும் நீங்காது வாழ்வார்" என்றார் காந்தி. இச்செய்தி 27.7.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.

ஆகஸ்ட் 1914

தென் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு பயணப்பட்டார். 4.8.1914 அன்று லண்டனில் காந்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கஸ்தூரிபா, சரோஜினி நாயுடு, லாலா லஜபதி ராய், முகமது அலி ஜின்னா ஆகியோர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அங்கும் 'சென்னை மாகானத்தைச் சேர்ந்த வீரமிக்க நாகப்பன் சிறையில் கொடுமைகள் அனுபவித்து வீரமரணம் அடைந்ததை புகழ்ந்தார். இச்செய்தி 30.9.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.

ஏப்ரல் 1915

இந்தியாவுக்கு திரும்பிய காந்திக்கு ஏப்ரல் 1915இல் சென்னை நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜி.ஏ.நடேசன், சுப்பிரமணிய அய்யர், அன்னி பெசண்ட், சீனிவாச சாஸ்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் 'நாகப்பன் தியாகத்தை' புகழ்ந்து பேசினார் காந்தி. இச்செய்தி 21.4.1915 அன்று தி இந்து பத்திரிகையில் வெளியானது.

மார்ச் 1918

அகமதாபாத் மில் தொழிலாளர்களை போராட்டத்தில் ஈடுபட ஊக்கப்படுத்தும் வகையில் 'ஏக் தர்மயுத்தா' எனும் குஜராத்தி பத்திரிகையில் எழுதினார் காந்தி. 6.3.1918 அன்று எழுதிய கட்டுரையில் நாகப்பன் தியாகத்தை முன்மாதிரியாக எடுத்துக்காட்டினார்.

மார்ச் 1919

1.

மதுரை: 1919 ஆம் ஆண்டில் ரௌலட் சட்டத்திற்கு எதிராக சத்தியாகிரகப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தார் காந்தி. இதற்காக 26.3.1919 அன்று மதுரையில் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய காந்தி "நாகப்பன் தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தார். அவர் எதற்காக அப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்கு ஒரு காரணமும் இல்லை. சத்தியாகிரகப் போராட்டத்தின் மீது அவர் உள்ளார்ந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதுமட்டும்தான் தீர்வு என நம்பினார்.

தென் ஆப்பிரிக்காவில் நிலவும் காலநிலை இந்திய சமவெளிகளில் நிலவும் காலநிலையைப் போன்றது அல்ல. அந்த நாட்டில் கடும் குளிராக இருக்கும். அதிலும் குளிர்காலத்தில் நாகப்பன் சிறையில் அடைக்கப்பட்டார். கடும் குளிரில் முகாம் சிறையின் திறந்தவெளி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடுமையான வேலை கொடுக்கப்பட்டது.

நாகப்பன் நினைத்திருந்தால் அவர் எப்போது வேண்டுமென்றாலும் தண்டத்தொகையை (3 பவுண்ட்) கட்டிவிட்டு வெளியே வந்திருக்க முடியும். அவ்வாறு வெளியே வர அவர் விரும்பவில்லை. ஏனெனில், சுதந்திரத்தின் வழி சிறைச்சாலையின் உள்ளே போகும் கதவுகளில் இருப்பதாக அவர் நம்பினார். சிறையில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் மற்றும் குளிரால் அவர் இறந்தார்.

நாகப்பன் கல்வியறிவு அதிகம் பெறாதவர். சாதாரண பெற்றோருக்கு பிறந்தவர். ஆனால், அவர் வீர நெஞ்சம் கொண்டிருந்தார். எனவே, ரௌலட் சட்டத்தை எதிர்க்கும் ஒவ்வொருவரும் நாகப்பனை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்" என்று பேசினார் காந்தி. இச்செய்தி 29.3.1919 அன்று தி இந்து நாளிதழில் வெளியானது.

2.

1919 மார்ச் 28 அன்று தூத்துக்குடியிலும், மார்ச் 29 அன்று நாகப்பட்டிணத்திலும் ரௌலட் சட்ட எதிர்ப்பு குறித்து காந்தி பேசினார். அங்கும் நாகப்பன் தியாகத்தை புகழ்ந்தார். இச்செய்தி முறையே 2.4.1919 மற்றும் 3.4.1919 தி இந்து நாளிதழில் வெளியானது.

1928

இந்தியாவின் எரவாடா சிறையில் இருந்த காலத்தில் 'தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகிப் போராட்டம்' எனும் விரிவான நூலை எழுதினார். இந்த நூல் 1928 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அந்த நூலில் நாகப்பன் குறித்து விரிவாகக் கூறியுள்ளார் மகாத்மா காந்தி.

"நாகப்பன் ஒரு இளம் சத்தியாகிரகி. பதினெட்டு வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறையில் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்தார். அதிகாலையில் சாலை அமைக்கும் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இரட்டை நிமோனியாவால் தாக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியானவுடன் 6.7.1909 அன்று வீர மரணம் அடைந்தார்.

நாகப்பன் கடைசி நிமிடம் வரை உயிரோடிருந்த ஒவ்வொரு நிமிடமும் சத்தியாகிரகப் போராட்டத்தை மட்டுமே பேசியதாக அவரோடு இருந்தவர்கள் கூறினார்கள். அவர் ஒருபோதும் சிறைக்கு சென்றதை நினைத்து வருந்தவில்லை. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்வதை அவர் பெருமிதமாகக் கருதினார்.

img_54712_padayachee.jpg

ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி படங்கள்

நம்முடைய தராதரத்தில் பார்த்தால் நாகப்பன் எழுத்தறிவற்றவர். அவர் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலமும் சூலு (தென் ஆப்பிரிக்க) மொழியும் பேசினார். அரைகுறை அங்கிலத்தில் எழுதினார். எப்படிப்பார்த்தாலும் அவர் கற்றறிந்தவர் அல்ல. இருந்தாலும் அவரது தேச பக்தி, அவரது வலிமை, அவரது எதையும் தாங்கும் துணிச்சல், மரணத்தையே எதிர்கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் அவர் எல்லாம் வல்லவராக இருந்தார்.

கற்றறிந்த கல்விமான்களால் தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போர் வெற்றிபெறவில்லை, மாறாக நாகப்பன் போன்ற வீரர்கள்தான் அதனை வெற்றியடைய வைத்தனர்" என்று எழுதியிருக்கிறார் காந்தி.

மகாத்மா காந்தியால் இவ்வாறெல்லாம் புகழப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி இந்திய தேசிய போராட்ட தியாகிகளில் ஒருவராக போற்றப்படாமல் போனது எப்படி? உலகப்புகழ் பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த்தியாகியை நாடு மதிக்கும் லட்சணம் இதுதானா?

காந்தியை பின்பற்றிய வட இந்திய தியாகிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டின் பல இடங்களில் சிலைகளும் நினைவிடங்களும் இருக்கும் நிலையை ஒரு தமிழனின் மாபெரும் தியாகம் மறக்கப்பட்டது எப்படி?

குறிப்புகள்:

1. மகாத்மா காந்தி 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய இடங்களில் இருந்துள்ளார். மயிலாடுதுறை கூட்டத்தில் பேசும்போது "தென் ஆப்பிரிக்காவில் உயிர்த்தியாகம் செய்த இரண்டு பேருடைய விதவை மனைவிகளைக் காண்பதற்காக இங்கு வந்தேன். ஒரு தியாகியின் மனைவியை பார்த்துவிட்டேன். இன்னொரு தியாகியின் மனைவியை நான் சென்னை மாகாணத்தைவிட்டு செல்வதற்கு முன்பு பார்த்துவிடுவேன் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி 3.5.1915 அன்று தி இந்து பத்திரிகையில் வெளியானது. அவர் நாகப்பன், நாராயணசாமி ஆகியோரைக் குறிப்பிட்டிருக்கலாம்.

காந்தி அப்போது மயிலாடுதுறை பகுதியில் எங்கெல்லாம் சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார் என்பது தெரிந்தால் ஒருவேளை சாமி நாகப்பன் படையாட்சியின் தமிழக பூர்வீக ஊர் தெரியவரலாம். அவர் நாகப்பனின் விதவை மனைவியை சந்தித்தார் என்று சிலர் எழுதியுள்ளனர். எனினும் ஆதாரபூர்வமான தகவல் தெரியவில்லை.

2. காந்தியின் பேச்சுகளிலும் எழுத்துகளிலும் சில இடங்களில் சாமி நாகப்பன் படையாட்சி குறித்து தனியாகவும் சில இடங்களில் வள்ளியம்மா முனுசாமி முதலியார், நாராயணசாமி ஆகியோருடன் சேர்த்தும் பேசியிருக்கிறார்.

3. வரலாற்று ஆவணங்களில் சாமி நாகப்பன் படையாட்சி "Swami Nagappen Padayachee, Summy Nagappen, Nagappan" என்கிற பெயர்களிலும், வள்ளியம்மா முனுசாமி முதலியார் "Valliama R Munuswami, Valliamma Munusamy Moodaliar, Valliamma Munusamy Mudliar" என்கிற பெயர்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். (தில்லையாடி வள்ளியம்மை என்கிற பெயர் எங்கும் இல்லை.) நாராயணசாமி "Narayanasamy" என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறார்.

ஆதாரம்:

1. Satyagraha in South-Africa, Mohandas K. Gandhi, Published by Yann FORGET on 26th April 2003

2. GANDHIJI'S VISION OF A FREE SOUTH AFRICA, by E. S. REDDY

3. Gandhi Out of Africa: It is in the details that thespirit of the Mahatma lives on in Johannesburg, by Dilip D’Souza Forbes India Magazine of 26 August, 2011.

4. Rethinking Gender and Agency in the Satyagraha Movementof 1913, by Kalpana Hiralal, University of Kwazulu-Natal, South Africa

5. ABOUT GANDHI IN JOHANNESBURG, Arts, Culture and Heritage Department,Johannesburg City

6. Martyrs graves at Braamfontein, by Romaana Naidoo 08September 2011

7. Valliamma Munusamy Mudliar – Child Martyr, by Yana Pillai, Natal Tamil Vedic Society, South Africa

8. Legacy of struggle, The Hindu, 19.10.2003

9. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 10

10. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 11

11. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 12

12. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 14

13. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 16

14. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 17

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.